ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 ayyasamy ram

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 ayyasamy ram

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 ayyasamy ram

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அக்டோபர் மாதத்திற்கான துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!

View previous topic View next topic Go down

அக்டோபர் மாதத்திற்கான துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!

Post by சிவா on Wed Oct 10, 2012 3:45 pm


மேஷம் - அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்


இந்த மாதம் ராசிநாதன் செவ்வாயை குரு பார்வையிடுவதால் உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகளை அடைவர். உயர் அதிகாரிகளின் ஆதரவு இருந்து வரும். அலுவலகச் சூழல் உற்சாகமாக இருக்கும்.

தொழிற்பிரிவினர் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும். வியாபாரிகள் குதூகலம் அடையக்கூடிய வகையில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

கலைஞர்கள் பிரபல நிறுவனங்களின் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சிலர் பரிசுகள், பாராட்டுகள் எனப் பெறவும் இடமுண்டு. மாணவர்கள் தேர்வுகளில் முன்னணி இடம் பெறத் தகுந்த சுறுசுறுப்புடனும் துடிப்புடனும் விளங்குவார்கள்.

பெண்களுக்கு குறை என்று சொல்லுமளவில் எதுவுமே இல்லாததால் மகிழ்ச்சிக்குக் குறைவிராது. குடும்பநிலையில் கணவன்-மனைவியிடையே குதூகலம் நிரம்பிக் காணப்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பித் திரும்பி வருவார்கள். பயணம் ஒன்றை மேற்கொள்ள நேருமாயினும் அதனால் பயன் எதுவும் இராது.

பரிகாரம்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கைக்கு விளக்கேற்றி வணங்கி வாருங்கள். உங்கள் சிரமங்கள் நீங்கி, சுபிட்சம் உண்டாகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அக்டோபர் மாதத்திற்கான துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!

Post by சிவா on Wed Oct 10, 2012 3:45 pm

ரிஷபம் - கார்த்திகை 2,3,4ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்

இந்தமாதம் ராசிநாதன் சுக்ர பகவான் பத்தாம் இடத்தைப் பார்வையிடுவதால் தொழில் ரீதியான நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம். வடதிசையிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றில் முயற்சி செய்வதை விட அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவது நல்லது. தொழிற்பிரிவினர் ஓரளவு திருப்திகரமான வளர்ச்சியையும் வருமானத்தையும் பெறக்கூடும்.

மாணவர்கள் நினைவாற்றல் குறைவினால் சிறிது தொல்லைப்பட நேர்ந்தாலும் படிப்பில் பெரும் அக்கறை கொண்டு செயல் படுவீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். வியாபாரிகள் மாத முற்பகுதியில் சிறப்பான வியாபாரத்தை எதிர்பார்க்க இயலுமாயினும், மாத இறுதியில் மந்த நிலை காணப்படும்.

குடும்ப நிர்வாகத்தில் சில பிரச்னைகள் தலைதூக்கினாலும் அவற்றைப் பெற்று மகிழ்வீர்கள். கணவன்-மனைவியிடையே இனிய போக்கே நிலவி வரும். அரசு வழியில் சில நன்மைகள் எதிர்பார்க்கலாம்.

பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்குத் தீபமேற்றி வைத்து வணங்கி வாருங்கள். உங்கள் இன்னல்கள் யாவும் மறைந்து இன்பம் பெருகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அக்டோபர் மாதத்திற்கான துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!

Post by சிவா on Wed Oct 10, 2012 3:46 pm

மிதுனம் - மிருகசீர்ஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்

இந்த மாதம் ராசிநாதன் புதன், சனி பகவானுடன் சஞ்சரிப்பதால் நல்ல திருப்பங்களே ஏற்படும். நீண்ட காலக் கனவுகள் நனவாகும். தெய்விகப் பெரியவர் ஒருவரைச் சந்திப்பீர். சிலருக்குக் குலதெய்வ கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு தள்ளிப் போக நேரும். வியாபாரம் நல்லமுறையிலேயே நடைபெற்ற வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியூட்டும். தொழிற்பிரிவினர் சுமாரான அளவில் முன்னேற்றத்தைக் காண இடமுண்டு.

கலைஞர்கள் மிகப்பெரிய வாய்ப்புகளைப் பெறப் பிரபலமான மனிதர்கள் உதவுவார்கள். வெளியூர்களுக்கு அடிக்கடி போய் வர நேரும்.

மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள சிறப்பான முறையில் ஆயத்தமாவீர்கள். பெண்களுக்கு வெளிப்படையாக பிரச்னைகள் ஏதுமில்லையாயினும் சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும்.

கணவன்-மனைவியிடையே பாசமும், பரிவும் நிரம்பிக் காணப்படும். உடல் அசதி தொல்லை தரக்கூடும். கவனம் தேவை.

பரிகாரம்: தினமும் லலிதா சகஸ்ரநாமம் ஸ்தோத்திரத்தைச் சொல்லி வருவதன் மூலம் உங்கள் பிரச்னைகள் யாவும் நீங்கி, சுபிட்சம் உண்டாகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அக்டோபர் மாதத்திற்கான துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!

Post by சிவா on Wed Oct 10, 2012 3:47 pm

கடகம் - புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்

இந்த மாதம் கீர்த்தி ஸ்தானாதிபதி புதபகவான் சதுர்த்தக் கேந்திரத்தில் சஞ்சரிப்பதால் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளோருக்குப் பட்டம், பதவி தேடி வரும்.

உத்தியோகஸ்தர்கள் எல்லாவிதமான நன்மைகளையும் பெறுவீர்கள். உங்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றிருப்பதன் மூலம் தொல்லைகள் குறையும். தொழிற்பிரிவினர் தொழிலில் முன்னேற்றத்தையும் வருவாயையும் பெற்று மகிழ்வீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னணி நிலையை எட்டி பெற்றோரை மகிழ்விப்பர். வியாபாரிகள் முழுத் திருப்தியடையும் வகையில் வியாபாரம் நடைபெறுமாயினும் வேலையாட்களின் மீது உங்கள் நேரடிக் கண்காணிப்பு இருப்பது அவசியம்.

கலைஞர்களின் முயற்சிகளின் பேரில் புதிய வாய்ப்புகள் அமையக்கூடும். குடும்ப நிர்வாகம் சிக்கலின்றிச் செல்லும் என்பதால் பெண்கள் மகிழ்வர். கணவன் - மனைவியிடையேயான உறவு சுமுகமாகவே இருந்து வரும். நீண்டதூரப் பிரயாணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். பெண்கள் உடல்நலத்தில் அக்கறை தேவை.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து, வணங்கி வருவதன் மூலம் சுபிட்சம் பெருகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அக்டோபர் மாதத்திற்கான துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!

Post by சிவா on Wed Oct 10, 2012 3:47 pm

சிம்மம் - மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம்

இந்த மாதம் பாக்யாதிபதி அங்காரக பகவானும், ராகுவும் சேர்ந்து சஞ்சரிப்பதால் உங்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். தொழிற்பிரிவினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பர். வருவாயும் ஓரளவு திருப்திகரமாக அமையும். மாணவர்கள் படிப்பில் தீவிரமான அக்கறையுடன் செயல்படுவீர்கள். சகமாணவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது.

கலைஞர்கள் பிரகாசமான எதிர்காலத்தைக் காணக்கூடிய வகையில் புதிய வாய்ப்புகள் திடீரென்று கிடைத்து மகிழ்ச்சியூட்டும். வியாபாரிகள் ஓரளவு திருப்தி ஏற்படும் வகையில் வியாபாரம் நடைபெறும். குடும்ப நிர்வாகத்தில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் சாமர்த்தியமாகச் சமாளித்து பெண்கள் நற்பெயர் பெறுவீர்கள்.

கணவன்-மனைவியிடையே சுமுகமான போக்கே இருந்து வரும். புதிய நண்பர்கள் சிலர் அமைவார்கள். பணப்புழக்கமுள்ள பணியில் இருப்போர் கவனமாக இருப்பது அவசியம். நல்ல தகவல் ஒன்றைத் தாங்கிய கடிதம் ஒன்று வந்து சேர வாய்ப்புண்டு.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு எள்ளன்னம் நைவேத்தியம் செய்து அதை ஏழைகளுக்கு விநியோகம் செய்வதன் மூலம் உங்கள் துன்பங்கள் யாவும் நீங்கி சௌபாக்யங்கள் உண்டாகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அக்டோபர் மாதத்திற்கான துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!

Post by சிவா on Wed Oct 10, 2012 3:48 pm

கன்னி - உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்

இந்த மாதம் தனஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதபகவானால் பொருளாதார மேம்பாடு உண்டாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த பணம் வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு பெற்று மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் வருமானம் பெருக வழியுண்டு. தொழிற் பிரிவினர் உற்சாகத்துடன் செயல்பட்டு தொழிலில் முன்னேற்றத்தையும் வருவாய்ப் பெருக்கத்தையும் காண்பீர்கள். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் உங்கள் பெயர் கலையுலகில் பிரபலமாகப் பேசப்படும் நிலை உருவாகும்.

மாணவமணிகள் படிப்பு மட்டுமல்லாமல் போட்டிப் பந்தயங்களிலும் கலந்து கொண்டு பரிசுகளும், பாராட்டுகளும் கிடைக்கப் பெற்று மகிழ்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகுவதுடன் வியாபாரமும் நல்ல முறையில் நடைபெறுவதால் வியாபாரிகள் திருப்தி அடைவீர்கள். குடும்ப நிர்வாகத்தைச் சீராக நடத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுக் களிப்படைவீர்கள்.

பரிகாரம்: தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதுடன், ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்து வாருங்கள். உங்கள் பிரச்னைகள் யாவும் கதிரவனைக் கண்ட பனி போல விலகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அக்டோபர் மாதத்திற்கான துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!

Post by சிவா on Wed Oct 10, 2012 3:49 pm

துலாம் - சித்திரை 3,4ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதங்கள்

இந்த மாதம் ஜன்மராசியில் சஞ்சரிக்கும் பாக்யாதிபதி புதபகவான் அருளால் வேற்று மொழி பேசுவோரின் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்று இடமாற்றம், பதவி உயர்வு, போன்ற நன்மைகளைப் பெறுவீர்கள். தொழிற்பிரிவினர் இதுவரை இருந்து வந்த சிக்கல்களைக் கடந்து தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் சிலவற்றைப் பெற்று மகிழ்வீர்கள்.

பெற்றோரும் மற்றவர்களும் பரவசப்படக் கூடிய நிலையில் மாணவமணிகள் படிப்பில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். மாத தொடக்கத்தில் சிறிது மந்த நிலை காணப்பட்டாலும் பிறகு சுறுசுறுப்பான வியாபாரம் நடைபெறும் என்பதால் வியாபாரிகள் கவலைப் படத் தேவையில்லை. சம்பவங்கள் யாவும் இனிதாகவே நடந்து முடிவதால் பெண்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் கொண்டிருக்கலாம்.

கணவன்-மனைவியிடையே இணக்கமான போக்கு இருந்து வரும். சகோதர வழியில் உதவிகளும் ஒத்தாசைகளும் கிடைக்க வழியுண்டு. பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

பரிகாரம்: “சௌந்தர்யலஹரி’ ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து வருவதன் மூலம் உங்கள் சிக்கல்கள் யாவும் விலகி சுமுகமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அக்டோபர் மாதத்திற்கான துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!

Post by சிவா on Wed Oct 10, 2012 3:49 pm

விருச்சிகம் - விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை

இந்தமாதம் ராசிநாதன் செவ்வாய், ராகுவுடன் சேர்ந்து லக்னகேந்திரத்தில் சஞ்சரிப்பதால் வாடகை வீட்டில் இருப்பவர்கள் சில தொல்லைகளை சந்திப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகள் இப்போது எதிர் பார்ப்பதற்கில்லை. தொழிற்பிரிவினர் அளவான முன்னேற்றம் காண்பர். வருவாய் ஓரளவு போதுமானதாகவே இருந்து வரும். புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்காகக் கலைஞர்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெற்றோர் பெருமகிழ்ச்சி அடையும் வகையில் மாணவமணிகளின் படிப்பார்வம் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று வருவதன் மூலம் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைவர். கஷ்டங்கள் எதுவும் இல்லாமல் எல்லா விஷயங்களும் இனிதாகவே நிறைவேறி விடுவதால் பெண்கள் குதூகலம் அடைவர்.

குடும்ப நிலையில் கணவன்-மனைவி இடையே இணக்கமானப் போக்கே நிலவி வரும். கல்பதித்த நகைகளை வாங்கி அணியும் வாய்ப்பு சில பெண்களுக்கு உண்டாகும். திருமணம் தொடர்பான கடிதத் தொடர்பு ஏற்படும். பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ளோர் ஓரளவு ஆதாயம் அடைய முடியும்.

பரிகாரம்: தினமும் “காயத்ரி மந்திர’த்தை 108 முறை ஜபித்து வருவதுடன் ஸ்ரீராமஜெயம் எழுதி வருவதும் சிறப்பான பலன்களைத் தந்து செழிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அக்டோபர் மாதத்திற்கான துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!

Post by சிவா on Wed Oct 10, 2012 3:50 pm

தனுசு - மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்

இந்த மாதம் ஜீவனாதிபதி புதபகவான் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சொந்தத் தொழில், கூட்டுத் தொழில் செய்வோருக்கு அதிக ஏற்றங்கள் உண்டு.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகம் தொடர்பான எல்லா விஷயங்களிலும் முன்னேற்றமான பலன்களை எதிர்பார்க்கலாம். நட்பு வட்டாரங்கள் பலம் பெறும். சிலருக்கு எதிர்பாராத பண வரவு கிட்டும்.

கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளைப் பெற இயலாத சூழ்நிலை இருப்பினும் உங்கள் வழக்கமான வாழ்க்கை வசதிகளில் குறை ஏற்படாது.

மாணவர்கள் படிப்பில் துடிப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரிகளுக்குத் திருப்தி ஏற்படக்கூடிய அளவில் வியாபாரம் நல்ல முறையிலேயே நடைபெறும். குடும்ப நிர்வாகத்தைச் சிறப்பாகவே செய்து வந்தாலும் பெண்களின் மனத்தை ஏதோ ஒரு கவலை வாட்டி வரும்.

குடும்ப நிலையில் கணவன்-மனைவியிடையே இனிமையான சூழ்நிலை இருந்து வரும். திடீர் பிரயாணங்கள் அமையும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆடை ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.

பரிகாரம்: வியாழக் கிழமைகளில் குரு பகவானை அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். உங்கள் துன்பங்கள் அகன்று மகிழ்ச்சி பெருகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அக்டோபர் மாதத்திற்கான துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!

Post by சிவா on Wed Oct 10, 2012 3:50 pm

மகரம் - உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதங்கள்

இந்த மாதம் ஜீவனாதிபதி சுக்ரன், அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்கள், இடமாற்றம், பதவி உயர்வுக்கான முயற்சியில் தடங்கல் ஏற்படும்.

தொழிற்பிரிவினர் உழைப்புக்கேற்ற வருவாய் கிடைக்கவில்லையே என வருந்துவீர்கள். வியாபாரத்தில் சுமாரான போக்கே காணப்படும்.

கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் சில கிடைக்கக்கூடும். சிலருக்கு பட்டங்கள், பரிசுகள் போன்றவை கிடைக்கவும் சந்தர்ப்பமுண்டு. பழைய நண்பர்களின் சந்திப்பு நல்ல திருப்பத்தை உண்டு பண்ணும்.

மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை காட்டி வருவீர்கள்.

குடும்ப நிர்வாகத்தில் சிறு குழப்பங்கள் இருக்குமானாலும் அதைச் சரிப்படுத்தி பெண்கள் நற்பெயரைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கணவன்-மனைவியிடையே பரிவும், பாசமும் காணப்படும். மற்றவர்களால் சிறு சச்சரவும் தோன்றி மறையும். விருந்தினர் வருகையால் குதூகலம் நிறைந்து காணப்படும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெயும், துளசி மாலையும் அணிவித்து வணங்கி வாருங்கள். உங்கள் பிரச்னைகள் யாவும் விலகி, இனிய சூழ்நிலை ஏற்படும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அக்டோபர் மாதத்திற்கான துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!

Post by சிவா on Wed Oct 10, 2012 3:51 pm

கும்பம் - அவிட்டம் 3,4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்

இந்த மாதம் பூர்வபுண்யஸ்தானாதிபதி புதன், பாக்யஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு பெறுவீர்கள். தொழிற்பிரிவினர் வளர்ச்சிப் பாதையில் நடைபோடுவீர்கள். நிலுவையில் இருந்த தொகையை வசூலிப்பதில் நிதானம் தேவை.

கலைஞர்கள் ஓரிரு புதிய வாய்ப்புகளைப் பெற்று மகிழ்வீர்கள். மாணவர்களின் படிப்பார்வத்தைக் கண்டு பெற்றோர் பரவசமடைவார்கள்.

வியாபாரிகள் ஓரளவு திருப்தியடையக்கூடிய வகையில் வியாபாரம் சுமாராக நடைபெறும். இருப்பினும் வாடிக்கையாளர்களிடையே ஆதரவு கூடும். குடும்பத்தில் சில சலசலப்புகள் ஏற்பட்டாலும் பெண்கள் அதைத் திறமையாகச் சமாளித்து விடுவீர்கள்.

குடும்ப நிலையில் கணவன் - மனைவியிடையே சுமுகமான போக்கு இருந்து வரும். மங்களகரமான பொருட்கள் வாங்கும் வாய்ப்பைப் பெறுவீர். ஒரு சுபகாரியத்தைப் பற்றி முடிவு செய்யக்கூடிய சந்தர்ப்பம் உண்டாகும்.

பரிகாரம்: சனீஸ்வரப் பகவானுக்கு சனிக்கிழமை தோறும் எள்தீபம் ஏற்றி வைத்து வணங்குவதுடன், எள்ளன்னம் நைவேத்தியம் செய்து அதை ஏழைகளுக்கு தானம் செய்து வாருங்கள். உங்கள் இன்னல்கள் அகன்று, இனிய வாழ்வு மலரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அக்டோபர் மாதத்திற்கான துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!

Post by சிவா on Wed Oct 10, 2012 3:52 pm

மீனம் - பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

இந்த மாதம் ஆறாம் பாவாதிபதி சூரியன், ஜன்மராசியைப் பார்வையிடுவதால் உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற முயற்சிகள் பயன் தராது. உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவதிலேயே கவனம் செலுத்துங்கள். தொழிற்பிரிவினர் ஓரளவு வளர்ச்சியையும் வருமானப் பெருக்கத்தையும் காண்பீர்கள். பணபரிவர்த்தனையில் நிதானப்போக்கு அவசியம். மாணவர்கள் படிப்பில் தீவிர கவனம் செலுத்தவேண்டும். தேவையற்ற சச்சரவுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

கலைஞர்கள், சக கலைஞர்களின் போட்டிகளைக் கடந்து சில புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும் என்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைய வாய்ப்பில்லை.

ஆடை, ஆபரணங்களை வாங்கி அணிவதால் பெண்கள் மகிழ்ச்சி கொள்வர். குடும்ப நிர்வாகத்திலும் நற்பெயர் பெறுவீர்கள். குடும்ப நிலையில் கணவன்-மனைவியிடையே இணக்கமான போக்கு நிலவி வரும். பழைய நண்பர்கள் சிலரைத் திடீரென்று சந்திப்பீர்கள். அரசு வழியில் சில ஆதாயங்களை அடைவீர்கள். உல்லாசப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்: “சண்முகக் கவசம்’ தினமும் பாராயணம் செய்து வருவதுடன் சிவப்பு மலர்களால் முருகப் பெருமானை அர்ச்சித்து வாருங்கள். உங்கள் துன்பங்கள் விலகி, செழிப்பு கூடும்.

கணித்தவர்: கண்ணன் பட்டாச்சார்யா!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அக்டோபர் மாதத்திற்கான துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum