ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 ayyasamy ram

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 ayyasamy ram

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

வரிசையாய் எறும்புகள்
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

மலைகளின் நகரம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 பழ.முத்துராமலிங்கம்

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் ஒப்பந்தம்
 பழ.முத்துராமலிங்கம்

நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் !

View previous topic View next topic Go down

அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் !

Post by சாமி on Sun Oct 21, 2012 1:31 pm

கல்விக்கு அடிப்படை ஒழுக்கம். பளபளப்பிலும், படாடோபத்திலும் கிடைப்பதல்ல கல்வியொழுக்கம். அது எப்படி இருக்க வேண்டும் என்பதை அதே தலைப்பிலே அருளி இருக்கிறார் ஒளவை மூதாட்டி. ஒளவையின் தமிழ் நூல்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டதாகும். ஆனால், ஏழெட்டு நூல்களே இப்போது முழுமையாக இருப்பவை.

ஒளவையின் இந்தக் "கல்வியொழுக்கம்' நூலானது நூறாண்டு காலம் காணாமல் போய், "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.யால் தேடிப் பதிப்பிக்கப் பெற்றதாகும்.

"கல்வியொழுக்கம் வரிவரியாக அகர வரிசைப்படி பாடப்பட்டதாகும். இலண்டன் பிரதியில் மொத்தம் 86 வரிகள் உள்ளன. "அஞ்சு வயதில் ஆதியை யோது'' என்பதை முதல் வரியாகக் கொண்டு நூல் தொடங்குகிறது. இலண்டன் மியூசியத்திலிருந்து எனக்குக் கிடைத்த பிரதி முழுமையானதில்லை. 85-வது வாக்கியம் வரை மூலமும், தமிழ் உரையும், ஆங்கில மொழிபெயர்ப்பும் முழுமையாக உள்ளன. 86-வது வாக்கியத்திற்குத் தமிழ் உரையோ, ஆங்கில மொழிபெயர்ப்போ இல்லை. "வெளவிப் படிக்க வாழ் வுண்டாமே!'' என்ற மூலம் மட்டுமே இருக்கின்றது. கிடைத்த பிரதியின் அமைப்பைப் பார்க்குமிடத்து,

86-க்கு மேலும் வாக்கியங்கள் இருக்க வேண்டுமென்று நினைக்கத் தோன்றுகிறது. பதிப்பாசிரியர் கே.எஸ். அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ள முன்னுரையில் 94-வது வாக்கியம் பற்றி விமர்சிக்கப்படுகிறது. இதனாலும், 94-க்கு மேற்பட்ட வாக்கியங்கள் கொண்டதாக நூல் அமைந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது'' எனக் கல்வியொழுக்கம் நூலின் முன்னுரையில் "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி. குறிப்பிட்டுள்ளார்.

உலகில் கல்வியும், கல்வியோடு சேர்ந்த ஒழுக்கமும் காலமெல்லாம் நிலைக்கட்டும்!

1. அஞ்சு வயதில் ஆதியை ஓது
2. ஆதியை ஓத அறிவுண்டாமே
3. இனியது கொடுத்தே எழுத்தை அறி
4. ஈட்டிய நற்பொருள் எழுத்தே ஆகும்
5. உடைமை என்பது கல்வி உடைமை

6. ஊமை என்பவர் ஓதாதவரே
7. எழுதப் படுவது எழுத்தே ஆகும்
8. ஏழை என்பவர் எழுத்தறியாதவர்
9. ஐயம் ஏற்கினும் அறிவது எழுத்தே
10. ஒரு பொழுதாகிலும் ஓதி நன்கு அறி

11. ஓதல் உடைமை வேதவித்தை
12. ஒüவியம் இல்லாதவர் ஆமெழுத்து அறிந்தவர்
13. கண் உடையவர்கள் கற்றவர் தாமே
14. காவலன் எனினும் கணக்கை ஓர்ந்து அறி
15. கிடையாவுடமை கல்வியுடைமை

16. கீர்த்தியும் பெருமையும் கிடைப்பது கல்வி
17. குறைவறக் கற்றவன் கோடியில் ஒருவன்
18. கூர்மை என்பது குன்றாக் கல்வி
19. கெடுப்பினும் கல்வி கேடுபடாது
20. கேள்வியுடைமை தாழ்விலாச் செல்வம்

21. கைப்பொருள் என்பது கசடறு கல்வி
22. கொற்றவன் தன்னிலும் கற்றவன் உயர்ந்தவன்
23. கோதறு கல்வி குவலயந் தருமே
24. சகல கலைக்கும் தலைமை எழுத்தே
25. சாத்திரங் கற்றவன் தன்னையறிந்தவன்

26. சிறுமையில் கல்வி சிலையில் எழுத்தே
27. சீரிய தமிழைத் தெளிய ஓது
28. சுற்றம் என்பது துகளது கல்வி
29. சூட்சமும் தூலமும் தோன்றும் கல்வி
30. சென்ற இடமெல்லாம் சிறப்பே கல்வி

31. சேயன் என்பவன் தீங்கறக் கற்றவன்
32. சைகையும் சமர்த்தும் தந்திடும் கல்வி
33. சொல்லும் பொருளும் தோன்றக் கற்றறி
34. சோம்பர் என்பவர் சொல் எழுத்தறியார்
35. தகும் எழுத்தை அறிந்தவன் தலைவனாவான்

36. தான் கற்றவற்றைச் சபையினில் ஓது
37. திருந்த ஓதிடில் திருவுண்டாமே
38. தீரக் கற்றவன் தேசிகனாவான்
39. துறவோர் என்பவர் துரிசறக் கற்றவர்
40. தூர்த்தர் என்பவர் சொல் எழுத்து அறியார்

41. தெளிய ஓதத் திறமுண்டாமே
42. தேசமும் நாடும் திருந்த ஓது
43. தைக்கக் கற்றவன் சமர்த்தனாவான்
44. தொன்னூல் முழுவதும் தோன்றக் கற்றறி
45. தோழன் ஆவது தோர்விலாக் கல்வி

46. நற்பொருள் கொடுத்து நன்றாய் ஓது
47. நானிலம் முழுவதும் நயந்தருங் கல்வி
48. நில்லாது எதுவும், நிலையே கல்வி
49. நீச்சு அரிதாயினும் கற்பது நிலைமை
50. நுண்பொருள் கொடுத்து நூல் பல அறி

51. நூறாண்டாயினும் கல்வியை நோக்கு
52. நெடுங்கடல் ஓடினும் நிலையே கல்வி
53. நேராக் கல்வி நிலையாகாதே
54. நையக் கற்பினும் நொய்ய நன்குரை
55. நொந்து அறியாதவர் செந்தமிழ் கற்றோர்

56. நோகாது உண்பவர் நும்பொருள் அறிந்தோர்
57. பலகலை கற்றவ(னி)ன் பகையைக் கைவிடு
58. பாவலர் என்பவர் பழுதறக் கற்றோர்
59. பிழையறக் கற்பவர் பெரியவராமே
60. பூடும் செல்வமும் பெறத் தரும் கல்வி

61. புரையறக் கற்றவன் புவி ஆள்பவனே
62. பூமியில் செல்வம் புகழ் பெருங்கல்வி
63. பெருமை பெறுவது பேசருங் கல்வி
64. பேதை என்பவர் பெருநூல் அறியார்
65. பையப் பையப் படித்தே ஒழுகு

66. பொருள் மிகக்கொடுத்துப் போதக் கற்றறி
67. போதக் கற்றவன் புண்ணியஞ் செய்தவன்
68. மன்னராயினும் மறைகளை ஓது
69. மாசறக் கற்றோர் மாநிலம் ஆள்வர்
70. மிகப் பெருஞ்செல்வம் விளைத்திடும் கல்வி

71. மீசுரம் கொடுத்து வித்தையை விரும்பு
72. முத்தமிழ் தமக்கு மூப்பு இல்லை
73. மூதறிவை உயர்த்தும் தீதில்லாக் கல்வி
74. மெலியர் ஆயினும் வேண்டுவது எழுத்தே
75. மேலோரென்ன வித்தையைக் கற்றறி

76. மையறு கல்வி கைவிடாது ஓது
77. மொழிவது அகார முதல் எழுத்தாமே
78. மோக விகாரர் முன்னூல் பாரார்
79. வழக்கறிவுறுத்தும் மாசறு கல்வி
80. வாட்டம் தராது மறவாக் கல்வி

81. வித்தை கல்லாதவர் வெறியராவார்
82. வீரியம் பேசார் வித்தை அறிந்தோர்
83. வெண்பா முதலாக விளங்கவே ஓது
84. வேதம் முதலாய் விரைந்து அறிந்தது ஓது
85. வையகமெல்லாம் வாழ்ந்தவே ஓது


("சுடர்மணிக் கவிஞர்' வேம்பத்தூர் கிருஷ்ணன் பதிப்பித்த "கல்வியொழுக்கம்' நூலிலிருந்து...) நன்றி - தினமணி
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் !

Post by அசுரன் on Sun Oct 21, 2012 2:04 pm

வித்தை கல்லாதவர் வெறியர் ஆவார்... அருமையான அவ்வையின் மொழிகள்.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் !

Post by சதாசிவம் on Sun Oct 21, 2012 5:30 pm

அரிய தகவல் அறியச் செய்தமைக்கு நன்றி சாமி.

இன்றைய மக்கள் அறிய வேண்டியது தமிழ் கூறும் நன்னூல்களைத் தான்,,,,பகிர்விக்கு மிக்க நன்றி
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் !

Post by கரூர் கவியன்பன் on Sun Oct 21, 2012 5:35 pm

தங்களின் அரிய செயலுக்கு மிக்க நன்றியும் பாராட்டுகளும். நீங்கள் கொடுத்திருக்கிற பாடலை பார்க்கும் போது இது வெறும்85 க்கு மேலேயே அல்லது 95 மேலேயே இருக்கும் என்ற எண்ணம் தோன்றவில்லை எனக்கு .மாறாக இதன் அகர வரிசை அமைந்திருப்பதை பார்க்கும் போது தமிழ் மொழியில் உள்ள அனைத்து எழுத்துகளுக்கும் நிச்சயமாக பாடல் வரிகள் அமையப்பெற்றிருக்க வேண்டும் என்பது மட்டும் உறுதி
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் !

Post by மாணிக்கம் நடேசன் on Mon Oct 22, 2012 6:15 am

அழகான ஒளவைமொழியை

அருமையாக பகிர்ந்திட்ட சாமிக்கு

அன்பான நன்றி.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: அவ்வை பாட்டியின் 'கல்விஒழுக்கம்' நூல் !

Post by சாமி on Mon Nov 05, 2012 3:18 pm

பதிப்புகள்
கல்வியொழுக்கம் தமிழில் முதன்முறையாக யாழ்ப்பாணம் கரவெட்டி கிழக்சைச் சேர்ந்த க.பொன்னம்பலம் என்பவரால் 1926}ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. சுவடி கிடைத்த விபரம் எதுவும் கூறப்படவில்லை. மீண்டும் முதல் பதிப்பை வெளியிட்ட க.பொன்னம்பலத்தின் தம்பி மருத்துவர் க.குழந்தைவேலு யாழ்ப்பாணம் சுன்னாகம் திருமகள் அச்சகத்தில் 1968-ஆம் ஆண்டு வெளியிட்டார்.

÷பெரும் புலவர் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் 1953-ஆம் ஆண்டு ஈரோடு செங்குந்தர் உயர்நிலைப் பள்ளி ஆண்டு மலரில் கல்வியொழுக்கத்தை வெளியிட்டு, பின் அதைத் தனி நூலாகவும் வெளியிட்டார்.

÷1966-ஆம் ஆண்டு தாம் எழுதிய "அவ்வையார்' என்னும் நூலில் கல்வியொழுக்கம் பற்றிக் குறிப்பிட்ட "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி., பின் கல்வி ஒழுக்கத்தைத் தனி நூலாகவும் வெளியிட்டார்.

÷1995-ஆம் ஆண்டு "அருட்செல்வர்' டாக்டர் நா.மகாலிங்கம் அவர்களின் நாண்மங்கல நாளில் திருவிடை

மருதூரில் கல்வியொழுக்கம் நூல் என்னால் வெளியிடப்பட்டது.

÷தாயம்மாள் அறவாணன் எழுதிய "அவ்வையார்' நூலில் கல்வியொழுக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலின் சிறப்பறிந்த மேனாட்டவர்கள் ஆங்கிலத்திலும், ஜெர்மானிய மொழியிலும் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்கள். ஜெர்மானிய மொழியில் வெளியிட்டவர் வான் ரூதீன் என்பவர்.

÷"உரைவேந்தர்' அவ்வை துரைசாமிப்பிள்ளை, "அவ்வையார் கல்வியொழுக்கம்' என்றொரு நூல் செய்திருப்பதாகக் கேள்வி; அன்றி அதனைக் கண்டதில்லை. அதனை மேல் நாட்டறிஞர்கள் மொழி பெயர்த்திருப்பதாகவும் அறிய முடிகிறது.

ஓலைச் சுவடிகள்
தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக ஓலைச்சுவடித் துறையில் எட்டு கல்வியொழுக்கம் ஓலைச்சுவடிகள் உள்ளன. ஈரோடு கலைமகள் கல்வி நிலைய அருங்காட்சியகத்தில் இரண்டு கல்வியொழுக்கம் ஓலைச்சுவடிகள் உள்ளன. ஈரோடு அரசு அருங்காட்சியகத்திலும், பேரூர் சாந்தலிங்கர் திருமடத்திலும் பல கல்வியொழுக்கம் ஓலைச் சுவடிகள் உள்ளன. சில ஏடுகள் தனியார் வசமும் உள்ளன.

கொடுமணலில் படிப்பு
மேற்கண்ட சுவடிகள் அனைத்தும் தொல்பொருள் சிறப்புமிக்க கொடுமணலில் கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது. கொடுமணலில் கல்வி கற்ற மாணவர்கள் கல்வியொழுக்கம் நூலை ஓலைச் சுவடியில் எழுதிவைத்து ஆசிரியர் மூலமாகப் படித்திருக்கின்றனர்.

÷பல ஓலைச்சுவடிகளில் "யிது கனகசபாபதி ஏடு, "யிது பொன்னையன் ஏடு' என்று அறியவும் "யிது சுப்பிரமணியன் ஏடு', "எடுத்தவன் குடுக்கவும், குடாதொழியில் நரகத்துக்கு ஏது', "யிது றாமசாமி ஏடு எடுத்த இடத்தில் வைக்கவும்' என்று பலவாறு எழுதப்பட்டுள்ளன. எனவே, கொடுமணலில் கல்வியொழுக்கம் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது.

சில புலவர்கள் மாணவர்கட்கு கல்வியொழுக்க ஏட்டுச் சுவடியை எழுதித் தந்துள்ளனர். "யிது குப்புசாமி குமாரன் தம்பணன் ஏடு எழுதியது வெள்ளோடு ரத்தினாசலப் புலவன்' என்று ஒரு சுவடியில் காணப்படுகிறது.

பாடபேதம்
பல காலங்களில் பயிலப்பட்ட கல்வியொழுக்கம் பலரால் எழுதப்பட்டதால் பல பாடபேதங்கள் ஏற்பட்டுள்ளன.

""நூறாண் டாயினும் கல்வியை நோக்கு'' என்ற தொடர், ""நூற்றுண் டாயினும் நூல்பல கல்'' என்றும், ""கைப்பொருள் என்பது கசடறு கல்வி'' என்ற தொடர், ""கைப்பொருள் தன்னிலும் மெய்ப்பொருள் கல்வி'' என்றும், ""தெளிய ஓதத் திறமுண்டாமே'' என்ற தொடர் ""தெளிய ஓதத் திருவுண் டாமே'' என்றும் சில ஏடுகளில் எழுதப்பட்டுள்ளன. வேறு சில பாடபேதங்களும் உள்ளன.

சில மாற்றங்கள்
சில தொடர்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன. ""பூமியில் செல்வம் புகழ்பெருங் கல்வி'' என்ற தொடருக்குப் பதிலாக ""பூலோ கத்தின் பொருளே கல்வி'' என்ற தொடர் எழுதப்பட்டுள்ளது. கொடுமணலில் கிடைத்த இரண்டு ஓலைச் சுவடிகளில்,

""அஞ்சு வயதில் ஆதியை ஓது''

""ஆதியை ஓத அறிவுண் டாமே''

என்பதற்குப் பதிலாக

""அஞ்சு வயதில் ஆரியம் ஓது''

""ஆரியம் ஓத அறிவுண் டாமே''

என்று எழுதப்பட்டுள்ளது. ஐந்து வயதில் கல்வி தொடங்குவதுதான் அக்கால வழக்கம். இராசிபுரம் முத்துக்காளிப்பட்டியில் ஓய்வு பெற்ற சார்பதிவாளர் நா.குமாரசாமி தமிழ்மணி (21.10.12-இல் வெளியான) கட்டுரை பார்த்து தன்னிடம் உள்ள கல்வியொழுக்கம் ஓலைச் சுவடியில் ""ஆதி'' என்பதற்குப் பதிலாக ""ஆரியம்'' என்று இருப்பதாகத் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடக்கம்
பல ஏடுகளிலும், ""அரகரா அவ்வையார் அருளிச் செச கல்வியொழுக்கம்'' என்று ஏட்டின் மையத்தில் எழுதப்பட்டுள்ளது. நூல் தொடக்கத்தில் ""கல்வி யொழுக்கம் கருத்துடன் கற்கச்; செல்வம் மிகுத்துச் சிறப்புண் டாமே'' என்றும் எழுதப்பட்டுள்ளது. இத்தகு பல சிறப்புகள் பெற்ற கல்வியொழுக்கம் என்ன காரணத்தாலோ நாட்டில் பயிலப்படாமல் குடத்தினுள் இட்ட விளக்காக அதன் சிறப்பு வெளிப்படாமல் இருக்கிறது.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum