ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 T.N.Balasubramanian

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 SK

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 SK

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 பழ.முத்துராமலிங்கம்

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருப்புகழ் - 107

View previous topic View next topic Go down

திருப்புகழ் - 107

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sat Nov 10, 2012 11:56 pmஅபகார நிந்தைபட் ...... டுழலாதே
அறியாத வஞ்சரைக் ...... குறியாதே

உபதேச மந்திரப் ...... பொருளாலே
உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ

இபமாமு கன்தனக் ...... கிளையோனே
இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா

ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா
திருவாவி னன்குடிப் ...... பெருமாளே.பிறர்க்கு தீமைகள் செய்தால் ஆத்துமாவில் பாவம் பெருகும் அதனால் பதில் விளைவாக வரும் துன்பத்தில் நாம் தவிக்க நேரிடும்
என்பதை உணரும் பக்குவம் இல்லாமல் வஞ்சனை செய்யும் துன்மார்க்கத்தில் நான் விழுந்து விடாமல்
எனக்கு வரும் உபதேச மந்திரத்தின் பொருளை உள்வாங்கத்தெரிந்து
உபதேசமெல்லாம் சற்குருவாகிய உம்மாலே பலர் மூலமாக வருகிறது என உணர்ந்து உன் திருவருளைப் பெற மாட்டேனோ?

மன்னிலிருந்து உருவாக்கபட்ட ஆதிமனிதன் வாரீசாக பிந்திய ஆதாமாக வருகிறவனே
ஆதாமின் பாதியாள் பார்வதியைப்போன்ற உத்தமியின் கர்ப்பப்பிறப்பாய் பூமிக்கு வருகிறவரே
பக்தி , பிரார்த்தனை என்ற இயல்பை மனிதருக்கு தரும் சற்குரு நாதனே
கடவுளின் ஆவி உயிராக குடி இருப்பதால் ஜீவனோடு இயங்கும் சரீரங்கள் ; படைப்பிணங்கள் யாவற்றிர்க்கும் தலைவராகிய யுகப்புருஷனே !


அபகார நிந்தைபட் ...... டுழலாதே
அறியாத வஞ்சரைக் ...... குறியாதே


ஆத்துமாவுக்கு தேவையான நல் உபதேசம் என்னவாக இருக்கமுடியும் ?
ஒரு பிறவி முடிந்து ஆத்துமா கடந்து செல்லும்போது அதன் கூட வருவது எது ?
அதன் குலப்பெருமை கூட வருமா ? சென்ற பிறவியில் என்ன ஜாதியில் பிறந்திருந்தோம் என்பது யாருக்காவது தெறியுமா ? ஜாதி துவேசம் ; பெருமை ; வெறி உடைய பலரை கடவுள் அடுத்த பிறவியில் ஜாதிக்கொடுமையை அணுபவிக்கும் படி பிறக்க வைத்து விடமாட்டரா ? இனவாதம் பேசி ஒரு இனத்தையே கொண்று குவித்து கொடூரம் செய்கிறவர்கள் அடுத்த பிறவியில் அதே இனத்தில் பிறப்பார்களா ?

குடிப்பெருமையாவது கூட வருமா ? பணக்காரராய் பிறந்து பணத்தால் ஏழைகளை கண்ணீர் விடும்படி வாட்டி வதக்கியவர்கள் அடுத்த பிறவியில் ஏழையாய் கஸ்ட்டப்பட் நேரிடாதா ?

பதவிபட்டங்களாவது கூட வருமா ? உலகையே வெல்ல புறப்பட்ட அலெக்சாண்டர் வெரும் பிணமாக வீடு கொண்டுவரப்படவில்லையா ?
உலக பெருந்தலைவர்கள் அடுத்த பிறவியில் என்னவாய் பிறந்தார்கள் ? அரசு அதிகாரிகளுக்கு உலக வழக்கின் படி தங்களின் கீழ் உள்ளவர்களை ஆணவமாய் நடத்தும் புரோட்டாகால்கள் அடுத்த பிறவியில் கைகொடுக்குமா ? பணமாவது கொஞ்சம் கூட வருமா ?

சரி ! பிறவி ஞாபகமாவது யாருக்காவது இருக்கிறதா ? உறவிணர்களாவது அடையாளம் தெரியுமா ? எதுவுமே கூட வரப்போவதில்லை ! ஆனால் பாவங்கள் - பிற மனிதர்களுக்கு நம்மால் உண்டான நியாயமான நிந்தைகள் அபகாரங்களாக ஆத்துமாவில் பதிந்து கூட வருகின்றன ! அது பிறவிகள் எடுத்து அபகார நிந்தைகளை பட்டு உழலும் படியாக நம்மை வைத்து விடுகிறது !

சரி ! நாம் செய்த பாவங்கள் மட்டும் தான் நம்மை உறுத்துகிறதா ? பிறர் செய்யும் பாவங்களுக்கு அறிந்தும் அறியாமலும் ஒத்தாசை செய்த அல்லது கூட இருந்த பாவங்களும் நம்மை பிடித்துக்கொள்ளுகிறது !

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்வு ! குழாயில் தண்ணீர் பிடிப்பதில் வந்த ஒரு பிரச்சினைக்காக தம்பி ஒருவன் இரவு குடித்து விட்டு தன் நண்பன் ஒருவனுடன் வந்து அண்ணனை வெட்ட வருகிறான் ! கர்ப்பமாக இருந்த அண்ணனின் மனைவியும் பெற்றெடுத்த தாயும் காலில் விழுந்து கெஞ்சியும் கேட்காமல் அண்ணனை துண்டுதுண்டாக வெட்டி எறிந்தான் ! தண்ணீர் பிரச்சினைக்காக எவ்வளவு கொடூரம் பாருங்கள் ! தம்பியாவது தன் சண்டைக்காக வெட்டினான் ! கூட ஒருவன் குடித்து விட்டு வந்து வெட்டினானே அவனும் இப்போது கம்பி எண்ணுகிறான் ! அவன் எதற்க்காக வந்து வெட்டினான் ! ஒசி சாரயத்துக்கு கொலை செய்வது கூலிக்காகவாவது ஆகுமா ? கூடா நட்பு என்ற பாதகமும் -- நட்பு முதல் காதல் வரை பல ஆத்துமாக்களை இப்பிறவியில் துன்ப துயரங்களுக்கு ஆட்படுத்தி விடுகிறது ! நட்பு என்பது உணர்வு பூர்வமானது ! ஆனால் அதில் உண்டாகும் பாவங்கள் குடும்ப உறவில் கணவன் மனைவி பிளைகளுக்கு மத்தியில் பேதங்களை உண்டாக்கி இப்பிறவியில் பலர் சோக கீதம் இசைப்பதை காணமுடியும் !

மனிதன் சமூகப்பிராணி ! அதனால் குழு உணர்வு அவனுக்கிருக்கிறது ! அது மேலோட்டமாக நண்மை செய்தாலும் பரிசுத்தம் அடையும் ஆத்துமாவுக்கு ஒரு கட்டத்தில் நட்பும் நட்பால் உண்டான பாவங்களும் தடையாய் இருப்பதை உணர்ந்து தனித்திரு விழித்திரு என்றொரு நிலை உருவாகும் ! நட்புகளால் ஆன்மீக முன்னேற்றம் தடைபடுவதாக சூழ்னிலை எழும்பி தாமரை இலை தண்ணீரில் இருப்பது போல சுற்றுப்புரத்தாரோடு வாழுகிற ஒரு பக்குவம் உண்டாகும் ! கடவுள் ஒருவரைத்தவிர தனக்கு உதவி செய்வார் யாருமே இல்லை என்பதான ``சதிபதி`` பாசத்திற்குள்ளாக ஆத்துமா நிலைக்கும்படியாக கடவுளே கற்பித்து விடுகிற சூழ்னிலையும் உண்டாகும் ! நிலைக்கிற உறவு அது ஒன்று மட்டுமே ; மற்றதெல்லாம் மாயையே !

பாவபுண்ணியங்கள் பற்றிய ஞானம் ; ஆத்தும விழிப்பு நிலை அடைந்த ஆத்துமாக்கள் அத்தகைய விழிப்பு நிலையடையாத ஆத்துமாக்களுடன் அல்லது இறைபயம் இல்லாததால் தன்னால் முடியுமானால் எதையும் செய்துவிட தயங்காத ஆத்துமாக்களுடன் அல்லது ரஜோ குணம் உள்ளோருடன் உறவு கலப்பது என்பது எவ்வகையிலும் கேடு பயப்பதாகவே முடியும் !

வள்ளல் பெருமாணும் கூட :
``ஒருமையுடன் நினது திருவடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் ``
என்று வேண்டுகிறார் ! வளர்கிற சாதகனுக்கு சத்சங்கம் முக்கியமானதே !
ஏனென்றால் உலகம் உலகத்தாரை நேசிக்கும் ! ஆனால் அவ்வுலக நாட்டம் உள்ளோர் மீது வெளியே தெரியாத ஒரு பகை உலகத்தார் ஆழ்மனதில் இருக்கும் ! அவர்கள் கிண்டல்கேலி முடிந்தால் கெடுதல் செய்ய தயங்க மாட்டார்கள் ! இதை பொருட்படுத்தாத அல்லது ஏற்றுக்கொள்கிற பக்குவம் உண்டானால்தான் அதே உலகம் முன்னேறிய சாதகனை -- அல்லது கடவுளால் பயன்படுத்தப்படுகிற சாதகனை துதிபாடி காலில் விழும்போதும் அதே கூட்டத்தை கண்டு மயங்கிவிடாமல் கடவுளில் நிலைத்திருக்கிற பக்குவம் உண்டாகும் ! எல்லாபுகழும் இறைவன் ஒருவருக்கே என சமர்பிக்கிற பக்குவம் உண்டாகும் !

உலகம் வளரும் போது இம்சைகள் செய்து பிண்ணோக்கி இழுக்கும் ! வளர்ந்த பிறகோ துதிபாடி கடவுளுக்கு இணைவைத்து கெடுக்கும் !

சற்குருனாதர் -- யுக புருஷன் இயேசு பரமேறு முன் சீடர்களுக்காக செய்த பிரார்த்தனை கவணத்தில் கொள்ளவேண்டுவது :

யோவான் 15:19 நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.


உபதேச மந்திரப் ...... பொருளாலே
உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ


ஆத்துமாக்கள் அனைத்தும் மேல்னோக்கி வளர்க்கபடுகின்றன ! அதற்கு படைக்கபட்ட அனைத்தும் யார் மூலமாக படைக்கபட்டதோ அந்த யுகபுருஷனே -- சர்குருவாக இருந்து ஆத்துமாக்களை வளர்க்கிறார் ! கடவுளோடு ஒப்புறவு செய்கிறார் ! ஆதிமனிதர்களான லெமூரியா கண்டத்து தமிழர்கள் ஆதாமும் ஏவாளும் இயற்கையின் மூலமாக ஏக இறைவனையே வழிபட்டனர் ! ஆனாலும் கடவுளோடு ஒப்புறவாக்கும் சற்குரு மூலமாகவே கடவுளை அடைய முடியும் என்பது முருகன் அல்லது ஸ்கந்தனாக சிவனால் பார்வதிக்கு உபதேசிக்க பட்டது ! ஸ்கந்தபுராணம் அதிலுள்ள குருகீதை என்ற படலம் சற்குருவின் மகத்துவத்தை போதிப்பதாகும் ! ஆதிமனிதனான ஆதாம் ( அவரே குலதெய்வ வழிபாட்டின் படி சிவனாக மாற்றப்பட்டவர் ) தன்னில் பாதியாளான பாரியாள் -- பார்வதிக்கு உபதேசித்ததே குருகீதையாகும் !

தமிழர் வழிபாட்டு முறை வரலாறு அறிந்தவர்களுக்கு தெரிந்த விசயம் :

முதலாவது வழிபாடுமுறை : செளரம் - இயற்கை வழிபாடு
இரண்டாவது வழிபாடுமுறை: கெளமாரம் -- முருகப்பெருமாண் மூலம் கடவுளை வழிபடுவது
மூன்றவது வந்ததே : சைவம்
நான்காவது : வைணவம்
அடுத்து சாக்தம்
மிண்டும் சைவமும் வைணவமும் தலையெடுத்தன !
உலகில் மனிதர்களில் வந்த ஆதிவழிபாட்டுமுறை கெளமாரம் -- தொல்காப்பியத்திலும் உள்ள ஒரே வழிபாட்டு முறையாகும் ! கடல் கொண்ட தென்மதுரையில் இருந்த முதலாம் தமிழ்சங்க நூல்களான திருமுருகாற்றூப்படை ; பரிபாடல் ஆகியவை முருகனை சிறப்பித்து இயற்றப்பட்டவை இந்த சங்கத்தில் சிவனும் உறுப்பிணராக இருந்ததாக வரலாறு உள்ளது ! ஆனால் சிவனை பாராட்டி எந்த நூலும் இல்லை ! முருகன் செந்தமிழ் நூல் விரித்தோன் என்று பாரட்டபடுகிறார் ! ஞானத்தை அளிப்பவர் - கடவுளோடு இணைப்பவர் -- சற்குருனாதர் - யுகபுருஷன் அவரே !

இவரே மனிதர்களுக்கு பட்டறிவின் மூலமாக சிறுசிறு உபதேசம் செய்து ஞானத்தை ஆத்துமாவில் வளர்ப்பவர் ! உலகில் அதர்மம் மிகும்போதெல்லாம் அவதாரெமெடுத்து ராமராக - கிருஸ்ணராக -- இயேசுவாக வந்தவர் ! உபதேச மந்திரம் என்றால் ரகசியம் அதனை தீட்சையாக மடாதிபதிகள் -- சாமியார்கள் கொடுப்பது என்று உலகத்தார் தவறாக அர்த்தம் செய்து `` ஜங்க்புங்க் `` என்றெல்லாம் உளறி அதனை உருக்குத்தினால் நீ முன்னேறிவிடுவாய் என ஏமாற்றிவருகிறார்கள் ! இந்த மந்திரங்களே சக்தி வாய்ந்தவை என்றும் அதனை 108 தடவை ஜபித்துவிட்டால் அதற்கு சக்தி உண்டாகி கடவுளின் அவசியமில்லாமல் கடவுளைப்போல அதுவேலை செய்வதாக திசைதிருப்பி வருகிறார்கள் ! மந்திரம் என்ன என்றால் அது ரகசியம் வெளியே சொல்லக்கூடாது என்பார்கள் ! சரி நீங்கள் தீட்சை பெற்ற மந்திரத்தின் பொருளையாவது கூறுங்கள் என்றால் அதை சொன்னால் அதற்கு சக்தியில்லாமல் போய் விடும் என்று மழுப்புவார்கள் ! உபதேச மந்திரம் என்பது அதுவல்ல ! வாழ்வில் யார் மூலமாகவேனும் நம் ஆத்துமாவை கடைத்தேற்றுகிற ஒரு வார்த்தை -- அறிவுரை பளிச்சிடும் ! அந்த சூழ்னிலைக்கு ஒருவனின் வாழ்வை திருப்புமுனையாக திருப்புகிற வார்த்தையாக இருக்கும் ! அந்த வார்த்தை அந்த மனிதனுக்குள்ளிருந்து சிப்பிக்குள் முத்து வளர்வதுபோல வளர்ந்து அவனை பக்குவப்படுத்தும் ! உலகியலிலும் அரசியலிலும் கூட இப்படி வார்த்தைகள் பெரும் புரட்சியை உருவாக்கியுள்ளன ! சுட்டபழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என அவ்வைக்கு கடந்து வந்ததைப்போல ! அருணகிரினாதர் வாழ்விலும் கூட முதலாவது அவரது அக்காவின் வார்த்தை அவரை தொட்டது 1 செல்வமெல்லாம் தொலைந்தும் குட்டரோகமே வந்தும்தீராத காமவேட்கை அவரது அக்காவின் ஒரு சொல் அவரை தொட்டபோது வெருத்துப்போனது ! அதனால் குத்தப்பட்டவராக அவர் பிறவியெடுக்க காரணமான ஒரேஒரு பாவத்தை கடந்தபோது சற்குருவால் ஆட்கொள்ளப்பட்டு `` சும்மாயிரு `` என உபதேசிக்கபட்டார் ! அதனால் அவருக்கு நிஸ்ட்டாங்க யோகம் கைகூடி சமாதி கிட்டி பலமாதங்கள் இருந்து தூய்மையடைந்தார் ! அதன் பிறகே அருணகிரினாதராக பரிணமித்தார் ! இத்தகைய திருப்புமுனை வாசகங்கள் எல்லார் வாழ்விலும் வந்துகொண்டுதான் உள்ளது ! இந்த உபதேச மந்திரங்களை நமக்கு அணுப்புகிறவர் சற்குருனாதரே என்பதை உணரவேண்டும் ! உபகுருக்கள் யார் மூலமாக வந்தாலும் நாம் சற்குருவை உணர்ந்து அவரோடு ஐக்கியப்பட கற்றுக்கொள்ள வேண்டும் ! அப்படியில்லாமல் ஒரேஒரு உபகுருவை பிடித்துக்கொண்டு காணாததை கண்டு விட்டதுபோல அவரை துதிபாடிக்கொண்டு அவரை கடவுளுக்கு இணையாக்குகிற வேலையையும் அவருக்கு ஏஜெண்டுகளாக காட்டிக்கொள்கிற வேலையையும் செய்து திருப்தியடைகிற போக்கால் நிறைய ஆத்துமாக்கள் முன்னேற்றமில்லாமல் தேங்கிப்போய் விடுகின்றனர் ! சற்குருவை உணர்ந்து அவரை பிடிக்க கற்றுக்கொள்பவர்களுக்கே கடவுளின் பரிபூரண அருள் கிட்டும் !

இபமாமு கன்தனக் ...... கிளையோனே
இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா


இபமாமுகன் என்பது மண்ணிலிருந்து உண்டாக்கபட்ட மனிதர்களில் மகத்துவமானவன் ! யாரென்றால் படைக்கபட்ட போது தூய்மையானவனாகவும் தேவதூதர்களையும் விட கடவுளால் மகிமைப்படுத்தப்பட்டு ; தேவதூதர்களும் பணி செய்யும் படி ஒப்புகொடுக்கபட்ட முதல் மனிதன் ஆதாம் என்ற மண்ணு -- மணு !

ஏனென்றால் கடவுளின் சாயலில் உண்டாக்கபட்டவன் மனிதன் !

ஆதியாகமம் :1 அதிகாரம்

26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
திருக்குரான் :
2:29. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.
2:30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான்.
2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, "நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்" என்றான்.
2:32. அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.
2:33. "ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!" என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது "நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?" என்று (இறைவன்) கூறினான்.
2:34. பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, "ஆதமுக்குப் பணி(ந்து வணக்கம் செய்)யுங்கள்" என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் அசுரனாகி விட்டான்.

தேவதூதர்களை ஆற்றல் மிக்கவர்களாக படைத்தாலும் ; உலகையும் உலகிலுள்ள சகல படைப்புகளையும் மனிதனுக்காகவே உண்டாக்கி அதனை ஆண்டுகொள்ளவும் அதிகாரம் கடவுள் கொடுத்தார் ! அதுமட்டுமல்ல தேவதூதர்களும் மனிதனுக்கு கீழ் படிந்து வேலை செய்யும்படியாகவே கடவுளின் உத்தரவாயிற்று ! அந்த முதல் மனிதனை ஒரே ஒரு தேவதூதனும் பின்னாளில் அவனால் கெடுக்கபட்ட தேவதூதர்களும் தவிற அனைவரும் பணிந்து கொண்டனர் ! அவருக்கு கீழ் படிந்தே வந்தனர் ! ஆதமுக்கு பணிவிடை செய்த தேவதூர்களே ``சிவகணங்கள் `` ஆதமை பணிய மட்டோம் என்று ஆணவம் கொண்டு கடவுளை எதிர்த்தவர்களே ``அசுரர்கள்`` ! இங்கு கவணிக்கவேண்டிய முக்கியமான விசயம் ; தேவதூதர்களாய் கடவுளோடு ஒப்புறவாக இருந்த தேவதூதர்கள் மத்தியில் பிளவும் அல்லது கடவுளுக்கு எதிர்ப்பான போக்கும் மனிதன் நிமித்தமாக -- ஆதாமுக்கு பணிய மாட்டோம் என்பதால் உண்டானதே ! இலாவிட்டால் தேவதூதர்களில் ஒரு கூட்டம் அசுரர்களாக -- கடவுளின் எதிர்ப்பாளர்களாக மாறியிருக்க மாட்டார்கள் ! அப்போது நடந்த வாக்குவாதத்தை கவணியுங்கள் :
திருக்குர்ஆன் :
7:12. "நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?" என்று அல்லாஹ் கேட்டான்; "நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்" என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
7:13. "இதிலிருந்து நீ இறங்கி விடு; நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்" என்று அல்லாஹ் கூறினான்.
7:14. "(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக" என அவன் (இப்லீஸ்) வேண்டினான்.
7:15. (அதற்கு அல்லாஹ்) "நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்" என்று கூறினான்.
7:16. (அதற்கு இப்லீஸ்) "நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்" என்று கூறினான்.
7:17. "பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்" (என்றும் கூறினான்).
7:18. அதற்கு இறைவன், "நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்" என்று கூறினான்.
7:19. (பின்பு இறைவன் ஆதமை நோக்கிபுன்னகை "ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்" (என்று அல்லாஹ் கூறினான்).
7:20. எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, "அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை" என்று கூறினான்.
7:21. "நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்" என்று சத்தியம் செய்து கூறினான்.
7:22. இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான்.
7:23. அதற்கு அவர்கள்: "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்.
7:24. (அதற்கு இறைவன், "இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு" என்று கூறினான்.
7:25. "அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்" என்றும் கூறினான்.
7:26. ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.
7:27. ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதபோதே; மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.

மனிதன் நிமித்தமாகவே கடவுளுக்கும் அசுரர்களுக்கும் பகை ஏற்பட்டது ! நியாயத்தீர்ப்பு நாள் வரை முடிந்த அளவு மனிதர்களுக்கு துர்ப்போதனை அல்லது தீமையில் நாடம் உண்டாக்க அசுரர்களுக்கு உரிமையும் வழங்கப்பட்டது !

ஆனாலும் அசுரனால் ஆதாமும் ஏவாளும் வழிகெடுக்க படுமுன் சொர்க்கவாசிகளாக தேவதூர்களும் ஏவல் செய்ய சகல செளபாக்கியங்களுடன் வாழ்ந்தனர் ! ஒரே ஒரு பழ விசயத்திற்காகவா கடவுளுக்கும் மனிதனுக்கும் பிணக்கு ஏர்பட்டது ? சின்ன பழத்திற்காகவா கடவுள் சபித்தார் ?

ஆதியாகமம் : 2 அதிகாரம்

16. தேவன் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.

17. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.!

மனிதனுக்கு சகல வசதிகளையும் கொடுத்து தேவதூர்களும் பணிவிடை செய்ய சொன்ன கடவுள் எதற்காக நண்மை தீமை அறிகிற அறிவைத்தரும் கனியை விலக்கிவைக்கவேண்டும் ?

அது மனிதன் சுயத்தை சார்ந்து தனது அறிவை நம்பி கடவுளின் சார்பு இல்லாமல் தானாகவே வாழ்ந்து கொள்ளும் நிலையை குறிக்கிறது ! சுயத்தை சாராமல் தனது அறிவை நம்பாமல் கடவுளையே சார்ந்து வாழும் `` சரணாகதி `` வாழ்வு ஒரு மனிதன் கைக்கொண்டால் அவனுக்கு கடவுள் சகலமும் செய்து தேவதூதர்களும் பணி செய்ய வைப்பார் ! யார் தன்னை துருத்தாதவனோ அவனுக்கு சகலமும் கீழ் படியும் !

மத்தேயு 16:24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்

மத்தேயு 18:4 ஆகையால் சிறு பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.

மத்தேயு 23:12 தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.

இன்றைக்கு அறிவு ; தன்னம்பிக்கை ; திட்டமிடல் சாதனை என்றெல்லாம் பேசுகிறார்களே அது எல்லாம் ஆன்மீக விசயத்தில் தலைகீழாகிப்போய்விடும் ! இதற்கு அர்த்தம் அறிவை ஓரங்கட்டுவது சோம்பேறியாய் இருப்பது என்பதல்ல ! எவ்வளவு அறிவும் திறமையும் வசதி வாய்ப்பும் இருந்தாலும் அதில் நம்பிக்கை வைக்காமல் கடவுளை மட்டும் சார்ந்து வாழுகிற மன துறவு நெறி !

மனிதாபிமானம்,அஹம்பாவமின்மை,அஹிம்சை,சகிப்புதன்மை, எளிமை உடையவனாய் இறைதண்மை உணர்ந்த குரு ஒருவரை அண்டி சுயகட்டுப்பாடு,நிலைத்தமனம்,பரிசுத்தம் கற்று புலனிண்பங்களை விட்டவனும் ;பிறப்பு இறப்பு முதுமை வியாதி என்கிற பயத்தை கடந்து நான் என்கிற சுயத்தை அழித்தவனும் வீடு மனைவி பிள்ளைகள் செல்வம் என்கிற பந்தங்களில் தவிக்காதவனும் விருப்பு வெறுப்பு இரண்டிலும் மனசம நிலையை அடைந்தவனும் உள்ளார்ந்த பக்தியில் நிலைத்தவனும் தன்னை உணர்வதிலும் எல்லா தத்துவங்களையும் விசாரம் செய்து முற்றறிவை பெறுவதிலும் சலிப்பில்லாதவனுமாகிய இவைஅணைத்தையும் செய்கிறவனே ஞானி --இதில் ஒன்று குறைந்தாலும் அவன் அஞ்ஞானத்தில் உழல்பவனே!---கீதை 13:8

அந்த உண்ணதமான வாழ்வை அணுபவித்த ஆதாமும் ஏவாளும் அக்கனியை உண்டதன் நோக்கமே `` நண்மை தீமை அறிகிற அறிவைப்பெற்றால் நீங்களும் கடவுளாகி விடுவீர்கள் ; அவரின் அவசியமில்லாமலும் அவருக்கு அடிமையாய் இருக்கவேண்டிய அவசியமில்லாமலும் வாழலாம் என அசுரன் உபதேசித்ததை கேட்டு கடவுளாக நப்பாசை பட்டார்கள் ! அதுதான் மனிதனின் அடிப்படை பாவம் ! மனிதனின் உயிராக கடவுளின் ஆவிதான் இயங்கி வருகிறது ! அதனை தியானித்தால் ஆத்துமாவில் இறையருள் பெருகும் அஞ்ஞானம் அகலும் என்ற அளவில் மட்டுமே மனிதனுக்குள்ளாக கடவுளை தேடு என்பது ஞானோபதேசம் ! ஆனால் அதனையே எனக்குள்தான் கடவுள் இருக்கிறார் ; அதாவது நான் தான் கடவுள் வெளியே அப்படி ஒருவர் இல்லை என்று நைச்சியமாக சாத்தான் ஞானத்தை அஞ்ஞானமாக்கி விடுகிறான் ! அசுரன் எங்கும் நுழைந்து வேதத்தை திரித்து ஓதிவிடுவான் !

ஆதியாகமம் : 3 அதிகாரம்

1. தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.

2. ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்;

3. ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.

4. அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;

5. நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.

6. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

7. அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.

இன்றைக்கும் மனித இனத்தின் பெரும்பகுதி நேரத்தை பிடித்துக்கொள்ளுவது இந்த ஆண்பெண் மாயையே ! இண்பமும் துன்பமும் பிரச்சினைகளும் விதவிதமாய் கிளம்புகிறது ! ஒரு பக்கம் காதல் கவிதைகளாய் எழுதிக்குவிக்கிறார்கள் ; மறுபக்கம் வேதனையில் தவிக்கிறார்கள் ! காமம் மனிதர்களை தின்றுகொண்டிருக்கிறது ! ஆனால் விலங்குகளை பாருங்கள் ; இனப்பெருக்க காலம் தவிற மற்ற காலங்களில் அவை நிர்வாணமாகவே இருந்தாலும் அவை உணர்வு வயப்படுவதில்லை ! நின்று ரசிப்பதில்லை ! சண்டை சச்சரவுகள் இல்லை ! இனப்பெருக்க காலத்தில் ஒரு பெண் விலங்கு சினை பிடித்து விட்டால் அடுத்த ஆண் விலங்கை அணுமதிக்காது ! அங்கு குடும்பம் இல்லை உறவுமுறைகள் தெரியாது ஆனாலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது ! நோவுகள் இல்லை ! மனிதன் சமூகப்பிராணி ! ஆனாலும் ஒருவேளை அந்த கனியை உண்ணாதிருந்தால் நோவு இல்லாத ஒரு நெறி மனித இனத்திற்கும் இருந்திருக்கும் !

அந்த கனியை உண்டது என்பது சுயத்தை மனிதனுக்கு கொடுத்தது ; கடவுளை ஓரங்கட்டியது ! ஆண்பெண் மாயைகள் உண்டாகி சகல நோவுகளையும் உண்டாக்கிகொண்டது ! அதன்மூலமாக அசுரன் மனித சிந்தனையை ஆட்கொண்டு வழிகெடுக்க ஊற்றுக்கண்ணாயிற்று !

இறைவனது பிரதினிதியாய் - குமாரனாய் இருந்த ஆதாம் ; தேவதூதர்களால் பணிவிடை செய்யப்பட்ட ஆதாம் அசுரனின் உபதேசத்தால் வழிகெட்டு பாவத்தில் விழுந்தான் ! மனுக்குலம் விதவிதமான பாவத்தில் அசுரர்களால் வழிகெடுக்க பட்டுக்கொண்டே இருக்கிறது ! பூமியில் அதர்மம் மிகும்போதெல்லாம் அதனை சீர்படுத்த தேவதூதன் என்ற நிலையிலிருந்து மனிதனாக மாறி வருகிற முருகன்-- கந்தன் -- ரசூலாக -- ரட்சகராக ஒருவர் பூமியில் அவதரிக்கிறார் ! அவர் மனுக்குலத்தின் பாவங்களை சமப்படுத்த அதனை தானே சுமக்க வேண்டியுள்ளது ! அதனால் மனிதனாக -- பிந்தய ஆதாமாக வரவேண்டியுள்ளது !

கீதை 4:6 நான் பிறப்பற்றவனாகவும்; அழிவற்ற எனது ஆத்துமசரீரம் நித்தியஜீவனுள்ளதாகவும் இருந்தாலும் நான் அதனை தாழ்த்தி யுகங்கள் தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்! எனென்றால் நானே இப்பூமிக்கு கடவுளின் பிரதிநிதியும்; பூமியில்உள்ள அனைத்து உயிரிணங்களின் யுகபுருஷனும் ஆவேன்!!

கீதை 4:7 எப்போதெல்லாம் எப்போதெல்லாம் ஆண்மீக மதிப்பீடுகள் தொய்வடைந்து அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ அப்போதெல்லாம் நான் பூமிக்கு இறங்கி வருகிறேன்!!

கீதை 4:8 பக்தர்களை ரட்சிக்கவும் தீமை புரிந்து பூமியில் குழப்பம் செய்வோரை அழிக்கவும் மீண்டும் தர்மத்தை நிலைநாட்டவும் யுகங்கள்தோறும் யுகங்கள்தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்!!

I கொரிந்தியர் 15:45 அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது, பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.

கடவுள் படைக்கும் போது ஆகுக என்று பேசினார் ! அந்த வார்த்தை மூலமாகவே சகலமும் படைக்கபட்டது ! அந்த வார்த்தையே யுகபுருஷன் ! அதர்மம் மிகும்போதெல்லாம் கடவுளின் வார்த்தையே மனிதனாக அவதரிக்கிறது ! மனிதன் என்ற தன்மைக்காக ஒரு பரிசுத்த பெண்ணின் கர்ப்பத்தில் ஆன்பெண் சேர்க்கையில்லாமல் அவதரிக்கிறது !

திரேதா யுகத்தில் குழந்தை பேறு இல்லை என்று இல்லறத்தில் துறவற வாழ்வு மேற்கொண்டிருந்தவர் தசரதன் ! அவர் யாகம் செய்த போது தீயிலிருந்து வெளிப்பட்ட அமிர்தத்தை உண்டதால் கோசலை கர்ப்பமுற்று ராமர் அவதரித்தார் !

துவாபார யுகத்தில் எட்டாவது குழந்தை தன்னை கொண்று விடும் என்பதை அறிந்த கம்சன் சிறைச்சாலையில் தேவகியையும் அவளது கணவர் வசுதேவரையும் செர்ந்து வாழ விட்டுருப்பானா ? பிரித்து சிறையில் வைத்த நிலையில் கடவுளின் ஆவியால் கர்ப்பமுற்று கிருஷ்ணர் அவதரித்தார் !

கலியுகத்தில் கண்ணீப்பெண்ணான மேரியிடம் கடவுளின் வாக்கு இறங்கியதால் கர்ப்பமுற்று இயேசு அவதரித்தார் !

2:117. (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் "குன்" - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.

3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்த
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum