ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜமுத்திரை -சாண்டில்யன்
 sukumaran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

உடல் காட்டும் அறிகுறிகள்!
 ayyasamy ram

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by Muthumohamed on Sat Nov 17, 2012 5:55 pm

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

உடனே நம்மவர்கள் "முட்டாள்" என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரண பெயர் சொல்.

சரி முட்டாள் என்பதன் பெயர்க்காரணம் தான் என்ன...?

அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு கோவில்களிலேயே சாப்பாடும் உண்டு, தங்க இடமும் உண்டு. திருவிழா காலங்களில் சப்பரம் தூக்கி கொண்டு,
போகும் போது மக்கள் தரிசனம் செய்வதற்கு வேண்டி நடுவில் சப்பரம் சற்று நேரம் நிற்கும். அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு எடுப்பதற்காக, சில பேர் முட்டு எடுத்துக் கொண்டு கூடவே வருவார்கள். அவர்கள் சப்பரம் நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை
நிப்பாட்டுவார்கள். அதனால் அவர்களை "முட்டு ஆள்" என்பர்.

சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.

எனவே! அறிவாளிக்கு எதிர்பதம் "முட்டாள்" இல்லை "அறிவிலி" என்பதாகும்.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by றினா on Sat Nov 17, 2012 6:00 pm

நன்றி.

முட்டாளுக்கே விளக்கம் கொடுத்தவர்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by அகிலன் on Sat Nov 17, 2012 11:38 pm

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் அறிவிலி என்பதாகும்.
முட்டாள் என்பது ஒரு காரணப்பெயர் என்று இப்பொழுதுதான் அறிகிறேன்.
நன்றி.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by ச. சந்திரசேகரன் on Sun Nov 18, 2012 3:37 am

அறிவாளி அறிவிலி முட்டாள் பெயர் காரணம் நன்று. நன்றிகள்.
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by சிவா on Sun Nov 18, 2012 8:50 am

அறிவாளிக்கு எதிர்ப்பதம் அறிவிலி என்பது சரி, ஆனால் முட்டாளுக்கான விளக்கம் இதுதான் சரியென்பதில் எனக்கு உடன்பாடில்லை!

* கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு முன்னரே மொழி தோன்றிவிட்டது.

* தினமும் சப்பரம் தூக்குவதில்லை, வருடத்தில் சில தினங்களே அந்நிகழ்வு கோவிகளில் உண்டு.

* அவ்வாறு முட்டுக் கொடுப்பவர்கள் இந்த வேலையை மட்டும் நம்பி இருந்தால் மற்ற நாட்களில் பட்டினி கிடந்தே சாக வேண்டியதுதான்.

* மூடன், முட்டாள் இவற்றிற்கும் முட்டுக் கொடுப்பவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது என் கருத்து!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by அசுரன் on Sun Nov 18, 2012 8:59 am

அப்போ மூடன் என்றால் மூடு அவன் என்று சொல்லலாமே? நல்ல விளக்கம்.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by றினா on Sun Nov 18, 2012 10:24 am

@சிவா wrote:அறிவாளிக்கு எதிர்ப்பதம் அறிவிலி என்பது சரி, ஆனால் முட்டாளுக்கான விளக்கம் இதுதான் சரியென்பதில் எனக்கு உடன்பாடில்லை!

* கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு முன்னரே மொழி தோன்றிவிட்டது.

* தினமும் சப்பரம் தூக்குவதில்லை, வருடத்தில் சில தினங்களே அந்நிகழ்வு கோவிகளில் உண்டு.

* அவ்வாறு முட்டுக் கொடுப்பவர்கள் இந்த வேலையை மட்டும் நம்பி இருந்தால் மற்ற நாட்களில் பட்டினி கிடந்தே சாக வேண்டியதுதான்.

* மூடன், முட்டாள் இவற்றிற்கும் முட்டுக் கொடுப்பவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது என் கருத்து!

இந்தக் கருத்தில் நானும் உடன்படுகிறேன்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by gnsenthil on Sat Dec 15, 2012 12:55 pm

அருமையான விளக்கம்....

gnsenthil
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by இ.பு.ஞானப்பிரகாசன் on Thu Jun 08, 2017 3:25 pm

@Muthumohamed wrote:அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

உடனே நம்மவர்கள் "முட்டாள்" என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரண பெயர் சொல்.

சரி முட்டாள் என்பதன் பெயர்க்காரணம் தான் என்ன...?

அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு கோவில்களிலேயே சாப்பாடும் உண்டு, தங்க இடமும் உண்டு. திருவிழா காலங்களில் சப்பரம் தூக்கி கொண்டு,
போகும் போது மக்கள் தரிசனம் செய்வதற்கு வேண்டி நடுவில் சப்பரம் சற்று நேரம் நிற்கும். அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு எடுப்பதற்காக, சில பேர் முட்டு எடுத்துக் கொண்டு கூடவே வருவார்கள். அவர்கள் சப்பரம் நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை
நிப்பாட்டுவார்கள். அதனால் அவர்களை "முட்டு ஆள்" என்பர்.

சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.

எனவே! அறிவாளிக்கு எதிர்பதம் "முட்டாள்" இல்லை "அறிவிலி" என்பதாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 869858

மிகவும் தவறான விளக்கம்! இதை முதலில் யார் எழுதினாரோ தெரியவில்லை; வலைப்பூக்கள், மடலாடற் குழுக்கள், சமூக ஊடகங்கள் என இணையத்தில் எங்கு பார்த்தாலும் இந்த விளக்கம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

‘மூடம்’ எனும் சொல் நாம் அனைவரும் கேள்விப்பட்டதே. இதை வேர்ச் சொல்லாகக் கொண்டு எழுந்ததே ’முட்டாள்’ எனும் சொல். மூடத்தனம் கொண்ட ஆள் ’முட்டாள்’ அவ்வளவுதான். வேர்ச்சொல் என்றால் என்ன, ஒரு சொல்லை முறையாக எப்படிப் பிரித்தறிய வேண்டும் என்பவையெல்லாம் தெரியாமல் சொல்லாராய்ச்சியில் இறங்குவது மிகவும் தவறு! தவிர, தனக்கு ஒரு கருத்துத் தோன்றினால் அதற்குச் சப்பைக்கட்டாகத் தானே ஒரு கதையையும் உருவாக்கி உலவ விடுவது பொறுக்க முடியாத குற்றம்!

இப்படிப்பட்ட ஆர்வக்கோளாறுகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக உயர்ந்து வருவதால், புகழ் பெற்ற தமிழறிஞர்களாக அறியப்பட்டவர்கள் தவிர வேறு யாருடைய இலக்கண - இலக்கிய - வரலாற்று விளக்கங்களையும் நம்பவோ பரப்பவோ வேண்டா எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! உடனடியாக இத்தகவலை அழிக்குமாறு எழுதியவரை வேண்டுகிறேன்!
avatar
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34
மதிப்பீடுகள் : 28

View user profile http://agasivapputhamizh.blogspot.com

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by T.N.Balasubramanian on Thu Jun 08, 2017 5:53 pm

அறிவாளி எதிர்ப்பதம் அறிவிலியே.
இடப்பட்ட பதிவுகளில் மாற்று கருத்தே இல்லை.
"முட்டாள் "  என்பதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கும் மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ .பு .ஞானப்பிரகாசன் wrote:இப்படிப்பட்ட ஆர்வக்கோளாறுகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக உயர்ந்து வருவதால், புகழ் பெற்ற தமிழறிஞர்களாக அறியப்பட்டவர்கள் தவிர வேறு யாருடைய இலக்கண - இலக்கிய - வரலாற்று விளக்கங்களையும் நம்பவோ பரப்பவோ வேண்டா எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் !
பரப்புவதற்கு முன் ஆராய்ந்துப் பார்த்து பதிவிடல் நன்று.
தவறான தகவலுக்கு  மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. படிப்பவர்களுக்கு ,தெரிவிக்கப்பட்ட செய்தி.

ஆகவே ,பதிவை அழிக்கவேண்டிய அவசியம் இல்லை.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by T.N.Balasubramanian on Thu Jun 08, 2017 6:00 pm

இ .பு .ஞானப்பிரகாசன். அவர்களே ,
உங்களை ஈகரை அன்புடன் வரவேற்கிறது.:நல்வரவு: :நல்வரவு:
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும்.
தொடர்ந்து பயனுள்ள கருத்துக்களை பதிவிடவும்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by இ.பு.ஞானப்பிரகாசன் on Thu Jun 08, 2017 6:13 pm

@T.N.Balasubramanian wrote:அறிவாளி எதிர்ப்பதம் அறிவிலியே.
இடப்பட்ட பதிவுகளில் மாற்று கருத்தே இல்லை.
"முட்டாள் "  என்பதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கும் மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ .பு .ஞானப்பிரகாசன் wrote:இப்படிப்பட்ட ஆர்வக்கோளாறுகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக உயர்ந்து வருவதால், புகழ் பெற்ற தமிழறிஞர்களாக அறியப்பட்டவர்கள் தவிர வேறு யாருடைய இலக்கண - இலக்கிய - வரலாற்று விளக்கங்களையும் நம்பவோ பரப்பவோ வேண்டா எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் !
பரப்புவதற்கு முன் ஆராய்ந்துப் பார்த்து பதிவிடல் நன்று.
தவறான தகவலுக்கு  மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. படிப்பவர்களுக்கு ,தெரிவிக்கப்பட்ட செய்தி.

ஆகவே ,பதிவை அழிக்கவேண்டிய அவசியம் இல்லை.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1244049

நல்லது ஐயா! மதித்து விளக்கமளித்தமைக்கு நன்றி!
avatar
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34
மதிப்பீடுகள் : 28

View user profile http://agasivapputhamizh.blogspot.com

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by இ.பு.ஞானப்பிரகாசன் on Thu Jun 08, 2017 6:13 pm

@T.N.Balasubramanian wrote:இ .பு .ஞானப்பிரகாசன். அவர்களே ,
உங்களை ஈகரை அன்புடன் வரவேற்கிறது.:நல்வரவு: :நல்வரவு:
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும்.
தொடர்ந்து பயனுள்ள கருத்துக்களை பதிவிடவும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1244050

வரவேற்புக்கு மிக்க நன்றி ஐயா! விரைவில் என் அறிமுகத்தைப் பதிகிறேன். வணக்கம்!
avatar
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34
மதிப்பீடுகள் : 28

View user profile http://agasivapputhamizh.blogspot.com

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by ayyasamy ram on Fri Jun 09, 2017 1:02 pm

:நல்வரவு:
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10757

View user profile

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by இ.பு.ஞானப்பிரகாசன் on Fri Jun 09, 2017 2:41 pm

மேற்கோள் செய்த பதிவு: 1244099

தங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி ஐயா!
avatar
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34
மதிப்பீடுகள் : 28

View user profile http://agasivapputhamizh.blogspot.com

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by சிவனாசான் on Fri Jun 09, 2017 7:14 pm

அன்பரின் விளக்கத்தை ஏற்காத நண்பர்கள்
தம்விளக்கத்தை தயங்காமல் அளிக்கலாம்.
திருக்குறளுக்கு பலபேர் கருத்து சொல்லி
வருகிறார்கள் எல்லாம் ஏற்புடையதாகவே
இருக்கிறது>>>அதுபோல் >>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2729
மதிப்பீடுகள் : 986

View user profile

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by இ.பு.ஞானப்பிரகாசன் on Fri Jun 09, 2017 9:51 pm

@சிவனாசான் wrote:அன்பரின்  விளக்கத்தை ஏற்காத நண்பர்கள்
தம்விளக்கத்தை  தயங்காமல் அளிக்கலாம்.  
திருக்குறளுக்கு  பலபேர்  கருத்து சொல்லி
வருகிறார்கள் எல்லாம் ஏற்புடையதாகவே
இருக்கிறது>>>அதுபோல்  >>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1244131

ஐயா! தவறான, பொய்யான ஒரு கட்டுக்கதையைக் கண்டிப்பதற்கும் திருக்குறளுக்கு விளக்கம் தருவதையும் ஒப்பிடலாமா? இது மிக மிகத் தவறான கண்ணோட்டம். அப்படியானால் நாட்டில் எது பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கைக்கு வந்தபடி எழுதலாம். எல்லாரும் அதற்கு விளக்கமளித்துக் கொண்டிருக்க வேண்டுமா? தவறான போக்கு இல்லையா இது? உங்கள் கருத்து கண்டு திகைக்கிறேன்!
avatar
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34
மதிப்பீடுகள் : 28

View user profile http://agasivapputhamizh.blogspot.com

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by M.Jagadeesan on Fri Jun 09, 2017 10:26 pm

ஐயா !

அறிவாளி என்னும் சொல்லுக்கு எதிர்ச்சொல் திருக்குறளில் இருக்கலாம் என்று சிவனாசான் சொல்கிறார்.
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by krishnaamma on Sat Jun 10, 2017 12:09 am

திரி நன்றாக உள்ளது, வாதங்கள் அருமை .......புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by T.N.Balasubramanian on Sat Jun 10, 2017 3:26 am

சிவனாசான் wrote:அன்பரின் விளக்கத்தை ஏற்காத நண்பர்கள்
தம்விளக்கத்தை தயங்காமல் அளிக்கலாம்.

1 எந்த அன்பரின் விளக்கத்தை என்று முதலில் கூறுங்கள் சிவனாசான் அவர்களே ., முதலில் திரி ஆரம்பித்த திரு muthumohamed விளக்கத்தையா? அல்லது
2 . திரு ஞானப்பிரகாசன் கூறியுள்ள "அறிவாளிக்கு எதிர்பதம் முட்டாள் இல்லை " என்பதற்கு விளக்கமா?
3 . மற்றவர்கள் கருத்து ஒரு பக்கம் இருக்கட்டும், இதில் உங்கள கருத்து என்ன? முட்டாள் என்பது சரியா தவறா?
4 .
@siva wrote:அறிவாளிக்கு எதிர்ப்பதம் அறிவிலி என்பது சரி, ஆனால் முட்டாளுக்கான விளக்கம் இதுதான் சரியென்பதில் எனக்கு உடன்பாடில்லை!

* கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு முன்னரே மொழி தோன்றிவிட்டது.

* தினமும் சப்பரம் தூக்குவதில்லை, வருடத்தில் சில தினங்களே அந்நிகழ்வு கோவிகளில் உண்டு.

* அவ்வாறு முட்டுக் கொடுப்பவர்கள் இந்த வேலையை மட்டும் நம்பி இருந்தால் மற்ற நாட்களில் பட்டினி கிடந்தே சாக வேண்டியதுதான்.

* மூடன், முட்டாள் இவற்றிற்கும் முட்டுக் கொடுப்பவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது என் கருத்து!

உங்கள் கருத்து என்ன ? அறிய ஆவலாக உள்ளோம்.

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by T.N.Balasubramanian on Sat Jun 10, 2017 3:33 am

@M.Jagadeesan wrote:ஐயா !

அறிவாளி என்னும் சொல்லுக்கு எதிர்ச்சொல் திருக்குறளில் இருக்கலாம் என்று சிவனாசான் சொல்கிறார்.
மேற்கோள் செய்த பதிவு: 1244139

அப்பிடி சொல்கின்ற மாதிரி தெரியவில்லையே ,அய்யா.

sivanaasaan wrote:திருக்குறளுக்கு பலபேர் கருத்து சொல்லி
வருகிறார்கள் எல்லாம் ஏற்புடையதாகவே
இருக்கிறது>>>அதுபோல் >>>>>>

அதாவது திருக்குறளுக்கு பலர் பதவுரை எழுதி உள்ளார்கள் .அவை ஏற்புடையாவையாகவே உள்ளது என்கிறார். அறிவாளிக்கு எதிர்ப்பதம் திருக்குறளில் இருக்கும் என்று சொல்கின்றமாதிரி எனக்கு படவில்லை அய்யா.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by prajai on Sat Jun 10, 2017 12:22 pm

@Muthumohamed wrote: சப்பரம் நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை
நிப்பாட்டுவார்கள். அதனால் அவர்களை "முட்டு ஆள்" என்பர்.

சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.

.
மேற்கோள் செய்த பதிவு: 869858

@இ.பு.ஞானப்பிரகாசன் wrote:[b]

‘மூடம்’ எனும் சொல் நாம் அனைவரும் கேள்விப்பட்டதே. இதை வேர்ச் சொல்லாகக் கொண்டு எழுந்ததே ’முட்டாள்’ எனும் சொல். மூடத்தனம் கொண்ட ஆள் ’முட்டாள்’ அவ்வளவுதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1244043

முட்டாள்’ எனும் சொல் எப்படித் தோன்றிற்று என்று அகராதி கூறுவதை அறியும் ஆர்வமுள்ளவர்கள்    
http://www.eegarai.net/t130775p125-topic#1212533 மற்றும் http://www.eegarai.net/t130775p125-topic#1212567 ஆகிய பதிவுகளைப் பார்க்கலாம். அருமையான பள்ளி ஆசிரியர் அமையப்பெற்ற மூர்த்திக்குப் பாராட்டுக்கள்!
avatar
prajai
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 128
மதிப்பீடுகள் : 69

View user profile

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by இ.பு.ஞானப்பிரகாசன் on Sat Jun 10, 2017 2:03 pm

@M.Jagadeesan wrote:ஐயா !

அறிவாளி என்னும் சொல்லுக்கு எதிர்ச்சொல் திருக்குறளில் இருக்கலாம் என்று சிவனாசான் சொல்கிறார்.
மேற்கோள் செய்த பதிவு: 1244139

ஐயா! மேலே திரு.ரமணியன் அவர்கள் கூறியிருப்பதே என் கருத்தும். திருக்குறளுக்கு அனைவரும் அவரவர் பாணியில் விளக்கம் அளிப்பது போல, இந்த ‘முட்டாள்’ எனும் சொல்லுக்கும் அவரவர் தங்களுக்குத் தெரிந்த விளக்கத்தை அளிக்கலாமே என்றுதான் சிவனாசான் அவர்கள் கூறியிருக்கிறார். ‘அறிவாளி’ எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் திருக்குறளில் இருக்கும் என அவர் சொல்ல விரும்பியிருந்தால் அதை அவர் நேரிடையாகவே சொல்லியிருப்பார். இப்படிப் பூடகமாகச் சொல்ல வேண்டிய தேவை இல்லையே!

மேலும், திருக்குறளுக்கு விளக்கம் எழுதும்பொழுது யார் எது எழுதினாலும் உலகம் அதை ஏற்றுக் கொண்டு விடாது. சரியாக இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். எடுத்துக்காட்டாக, "தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்" என்பது ஒரு குறள். இதன் பொருள் "ஒருவர் போற்றுவதற்குத் தகுதி உள்ளவரா இல்லையா என்பது அவர் போன பிறகு அவருக்குள்ள நல்ல பெயர் அல்லது கெட்ட பெயர் மூலமாகத்தான் தெரியும்" என்பது. இதே கருத்தைக் கொஞ்சம் முன்பின்னாக மாற்றி வேறு வேறு சொற்களில் அவரவர் பாணியில் கூறலாம், தவறில்லை. ஆனால், கருத்தின் அடிப்படையையே மாற்றும் அளவுக்கு, "ஒருவர் தகுதி உள்ளவரா இல்லையா என்பது அவர் பிள்ளைகள் மூலமாகத்தான் தெரியும்" என விளக்கம் சொன்னால் ஏற்க முடியுமா? வெளிநாட்டிலிருந்து தமிழ் கற்க வந்த ஆங்கிலேயர் ஒருவர் இப்படிச் செய்யப் போக, அவருக்கு அதுவரை பாடம் கற்பித்து வந்த புகழ் பெற்ற தமிழறிஞர் ஒருவர் "இனி என் முகத்திலேயே விழிக்காதே" எனக் கடிந்து திருப்பி அனுப்பிய நிகழ்வு வரலாற்றில் உண்டு.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், கண்ணோட்ட வேறுபாடு எனும் பெயரில் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாது. கண்ணோட்டம் மாறுபடலாம். ஆனால், இது சரி, இது தவறு என்பது மாறாது. தவறான கருத்துக்களை, தவறான விளக்கங்களை, வேண்டுமெனவே உள்நோக்கத்தோடு பரப்பி விடப்படும் கட்டுக்கதைகளைக் கண்ணோட்ட வேறுபாடு எனும் பெயரால் ஏற்றுக் கொள்ளவோ, விவாதத்துக்கு உட்படுத்தவோ முடியாது, கூடாது. நான் திரு.முத்து மொஹமது அவர்களைக் குறை சொல்லவில்லை. இந்தக் கதை இணையத்தில் ஏராளமான இடங்களில் காணப்படுகிறது. அதையே நம்பி அவரும் இங்கே பகிர்ந்திருக்கிறார். ஆனால், தவறான கருத்துக்களை நாம் ஆதரிக்கக்கூடாது! அது தவறு செய்பவர்களை மேலும் ஊக்குவிப்பதாக அமையும்.

சொல்லப் போனால், இந்தக் கருத்துக்கு இந்தளவுக்கு முதன்மை கொடுத்து நாமெல்லாரும் விவாதிப்பதே தவறு. இது இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு இன்னும் முதன்மைத்தனத்தைக் கூட்டி, மென்மேலும் இப்படிப் புரளி கிளப்பினால் என்ன என்கிற குறுகுறுப்பைத் தூண்டும். எனவே, இதை இத்தோடு விட்டுவிட்டு வேறு எதையாவது விவாதிப்போம். இந்தத் திரியை இத்துடன் மூடி விடுவது நல்லது.

நன்றி! வணக்கம்!
avatar
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34
மதிப்பீடுகள் : 28

View user profile http://agasivapputhamizh.blogspot.com

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by M.Jagadeesan on Sat Jun 10, 2017 4:56 pm

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும் . ( 114 )

பரிமேலழகர் உரை :
====================

தக்கார் தகவிலர் என்பது - இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம்; அவரவர் எச்சத்தால் காணப்படும் - அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும். (தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒரு தலையாகலின், இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின. இதனால் தக்காரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.).

திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மருள்ளும் , பரிமேலழகரின் உரை தனித்து விளங்குவது .
மேலேகண்ட குறளுக்கு அவர் கொண்ட உரையைத் தவறு என்று நாம் சொல்லமுடியாது .

"எச்சம்" என்னும் சொல்லுக்கு  " புகழ் ' என்ற பொருளும் உண்டு.. பொதுவாக " எச்சம்" என்னும் சொல்லுக்கு "விட்டுச் சென்றது " என்று பொருள் கொள்ளலாம் .

"விட்டுச் சென்றது " புகழாக  இருக்கலாம் அல்லது மக்களாக இருக்கலாம் அல்லது ஏதேனும் ஒருபொருளாகக்கூட இருக்கலாம் .

எனவே "எச்சம் " என்னும் சொல்லுக்கு " மக்கள் " என்று பரிமேலழகர் பொருள் கொண்டது தவறு என்று நாம் சொல்லமுடியாது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

Post by இ.பு.ஞானப்பிரகாசன் on Sat Jun 10, 2017 5:09 pm

@M.Jagadeesan wrote:தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும் . ( 114 )

பரிமேலழகர் உரை :
====================

தக்கார் தகவிலர் என்பது - இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம்; அவரவர் எச்சத்தால் காணப்படும் - அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும். (தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒரு தலையாகலின், இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின. இதனால் தக்காரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.).

திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மருள்ளும் , பரிமேலழகரின் உரை தனித்து விளங்குவது .
மேலேகண்ட குறளுக்கு அவர் கொண்ட உரையைத் தவறு என்று நாம் சொல்லமுடியாது .

"எச்சம்" என்னும் சொல்லுக்கு  " புகழ் ' என்ற பொருளும் உண்டு.. பொதுவாக " எச்சம்" என்னும் சொல்லுக்கு "விட்டுச் சென்றது " என்று பொருள் கொள்ளலாம் .

"விட்டுச் சென்றது " புகழாக  இருக்கலாம் அல்லது மக்களாக இருக்கலாம் அல்லது ஏதேனும் ஒருபொருளாகக்கூட இருக்கலாம் .

எனவே "எச்சம் " என்னும் சொல்லுக்கு " மக்கள் " என்று பரிமேலழகர் பொருள் கொண்டது தவறு என்று நாம் சொல்லமுடியாது .
மேற்கோள் செய்த பதிவு: 1244235

ஐயா! தங்களுடைய அருமையான விளக்கத்துக்கு முதற்கண் நன்றி! பரிமேலழகரையே குறை சொல்லும் அளவுக்குச் சிறியேன் திமிர் பிடித்தவன் அல்லேன். நான் சொல்ல வந்தது ஓர் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே! அதையே நீங்கள் வாதப்பொருளாக்குவது நம் விவாதத்தின் மையப்பொருளையே விட்டு விலகிச் செல்ல வைக்கிறது.

உடனே நீங்கள், ‘முட்டாள்’ எனும் சொல் பற்றிய மேற்படி விளக்கம் குறித்து விவாதிக்காமல் வேறு எதைப் பற்றியாவது பேசலாம் என்று நீதானே சொன்னாய் என என்னைக் கேட்கலாம். நான் சொன்னது இந்த விதயத்தை இத்துடன் முடித்து விட்டு வேறு திரியில், வேறு எதைப் பற்றியாவது பேசலாம் என்ற பொருளில்தான்.

பரிமேலழகர், எச்சம் என்பதற்கு மக்கள் எனும் பொருளும் உண்டு என்று கூறியிருக்கிறார். ஆனால், நான் குறிப்பிட்ட ஆங்கிலேயர் மேற்படி குறளையே அவ்வாறு திருத்தி எழுதினார். அதனால்தான் தமிழறிஞருக்குச் சீற்றம் எழுந்தது. எனவே, நான் சொன்ன அப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பதும் உண்மையே! சான்று: பெரியோர் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - வானதி பதிப்பகம்.
avatar
இ.பு.ஞானப்பிரகாசன்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34
மதிப்பீடுகள் : 28

View user profile http://agasivapputhamizh.blogspot.com

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum