ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 ayyasamy ram

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 பழ.முத்துராமலிங்கம்

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 ayyasamy ram

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 ayyasamy ram

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 ayyasamy ram

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 Meeran

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அத்வைத நெறி !!

View previous topic View next topic Go down

அத்வைத நெறி !!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sun Nov 18, 2012 12:02 pm

அத்வைத நெறி !!

அத்வைத நெறியை ஞானமார்க்கம் என்றும் கடவுளை உள்ளேயே வைத்துக்கொண்டு ஏன் வெளியே தேடுகிறாய் என பலவகையான சித்தர் பாடல்களை உதாரணம் காட்டுவது பிரபலமாக உள்ளது !

அகம் பிரம்யஸ்யாமி --  எனக்குள் பிரம்மம் இருக்கிறது !
தத்துவமஸி         -- அது நீயாகவே இருக்கிறாய் !

இவை உண்மையே ! ஆனால் புரிதலிலும் அப்பியாசிப்பதிலும் கோளாறு வருகிறது ! அது உயிரை புரிந்து கொள்ளூவதில் உண்டாகும் குழப்பமே !

நான் என்பது உயிரல்ல ! எனது உயிர் என்று அதன் மீது நான் உரிமைபாராட்டமுடியாது ! நான் இறந்த பிறகு நானாக எனது ஆத்துமா மட்டுமே நிலைத்திருக்கும் ! ஆத்துமா அழிவற்றது ! அது பல பிறவிகள் எடுத்து ஒன்று ஞானமடைகிறது அல்லது அஞ்ஞானத்தில் மூழ்குகிறது ! நியாயத்தீர்ப்பு நாளன்று மட்டுமே அடுத்த யுகத்திற்குள்ளோ அல்லது நரகத்தில் அழிவுக்கேதுவாகவோ கடவுள் செய்வார் !

ஒத்த தாய்தகப்பனின் கர்ப்பத்தில் ஒரு ஆத்துமா ஜனித்தவுடன் தாயின் உயிர் மூலமாகவே ஆத்துமாவின் புற தோற்றமாக உடல் உருவாக்கபடுகிறது ! உடல் ஆத்துமாவின் வெளிப்பாடு ! உடலும் ஆத்துமாவும் ஒன்றைஒன்று ஆளுமை செய்யக்கூடியது ! இந்த உடலும் ஆத்துமாவும் இயங்க அதற்கு ஊக்க சக்தியாக கடவுள் தனது ஆவியை ஊதுகிறார் ! அவர் அனுமதிக்கும் வரை அந்த ஆவி உயிராக உடலில் இருக்கும் !

திருகுரான் :23:14. பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.

22:5. மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்ஜாலி நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.


உயிரின் சக்தி கிடைத்தவுடன் ஆத்துமாவின் பாவபுண்ணிய பதிவுகளின் தொகுதியிலிருந்து மனமானது பிரகிருதியாகி ஓயாது இயங்குகிறது ! ஆனாலும் ஆத்துமாவில் எது உள்ளதோ அதுதான் வெளி வரும் ! உள்ளே அனுபவமாய் இல்லாத ஒன்று அதை விட்டு வரப்போவதில்லை ! உள்ளே இல்லாத ஒன்று புதிய வாழ்வு நிகழ்வாய் அதற்கு வரப்போவதில்லை ! புலண்கள் உலகில் தொடர்பு கொள்ளூவதை பொருத்து உள்ளே இருப்பதே எண்ணமாக உதயமாகிறது ! ஒரே பொருளை இரண்டு மனிதர்கள் பார்த்தாலும் அவர்களுக்குள் இருப்பதை பொருத்து இருவரும் அந்த ஒரு பொருளைப்பற்றி வெவ்வேறு சிந்தனை செய்கின்றனர் !

எதை நினக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது உபதேசம் !

உண்மை என்னவென்றால் உனக்குள் எது இருந்ததோ அதுவே நினைப்பாக வெளிப்பட்டு அதனையே மேலும் உனக்குள் வளர்த்து அதுவாகவே உன் ஆத்துமா ஆகிவிடுகிறது !
அந்த எண்ணத்தை நல்ல எண்ணமாக மாற்றினால் அதுவாகவும் மாற முடியும் ! இந்த பாவபுண்ணீய வளர்சிதை மாற்றம் உனது ஆத்துமாவில் நிகழ்வதுதானே தவிர உயிரில் எந்த பாதிப்பும் உண்டாவதில்லை ! அது உன்னை தாங்கினாலும் உன்னால் மாசுபடுவதில்லை !உனக்குள்ளேயே இருந்தாலும் தாமரையிலையில் தண்ணீர் இருப்பது போல அது பாதிப்பிலாமலேயே இருக்கிறது ! ஏனென்றால் அது கடவுளின் ஆவி !அந்த ஆவி கடவுளால் எடுக்கபடும்போது உனக்கும் அதற்கும் சம்பந்தம் ஏதுமில்லை ! அடுத்த பிறவி நீ எடுக்கும் போது அதே ஆவி உனக்கு அருளப்படவேண்டிய அவசியமுமில்லை !

எது கொடுக்கபட்டதோ அது இங்கிருந்தே கொடுக்கபட்டது ; எது எடுக்கபட்டதோ அது இங்கிருந்தே எடுக்க பட்டது என்ற கீதையின் உபதேசம் அதுவே !

நானாகிய ஆத்துமாவில் கூட வருவது அதன் ஞானம் ஒன்றைத்தவிர வேறெதுவுமில்லை !

இன்று ஆணாக பிறந்த ஓர் ஆத்துமா அடுத்த பிறவியில் பெண்ணாகவும் பிறக்கலாம் ! ஏன் திருனராக பிறந்து துன்பம் அனுபவிக்காது என்பதற்கு உத்திரவாதம் உள்ளதா ? இன்று பணக்காரர் அதிகாரி அடுத்த பிறவியில் வருமையில் வாடமாட்டாரா ? இன்று உயர் ஜாதியில் பிறந்து பெருமை பாராட்டுகிறவர் அடுத்த பிறவியில் தாழ்ந்த ஜாதியில் பிறக்கமாட்டர் என்பது என்ன நிச்சயம் ? ஆத்துமா பிறந்துபிறந்து அனுபவித்துக்கொண்டு உள்ளது ! அதன் ஞானம் மட்டுமே கூட வருகிறது ! இப்போது எங்கு உள்ளதோ அதனையே தானாக நினைத்துக்கொள்ளுகிறது ! உடலின் மூலமாக உலகமும் தீமைகளும் இச்சைகளை தூண்டிவிடும் அசுர ஆவிகளும் ஆத்துமாவை ஆளுகை செய்து அதில் இருளை நிறப்புகின்றன !

உலகம் உடலின் வழியாக ஆத்துமாவை ஆளுமை செய்வது போல கடவுள் உயிரின் மூலமாக அந்த ஆத்துமாவை ஆளுமை செய்யமுடியும் ! ஆனால் ஆத்துமா உயிரில் நிலைத்து நின்று பழகினால் மட்டுமே இது சாத்தியமாகும் ! புற புலண்கள் ஆத்துமாவை எளிதில் ஆட்சி செய்துவிடும் ! ஏனென்றால் உடல் ஆத்துமாவின் புற வெளிப்பாடு அதிலிருந்து உண்டாகி அதனை ஆட்சி செய்வது ! ஆத்துமா விளிப்படைந்து அக புலண்கள் மூலமாக தன்னை இயக்கினாலும் அலட்டாமல் சாட்சியாக உள்ள உயிரில் ஒன்றி தியானிக்க பழகவேண்டியுள்ளது !இந்த உள்னோக்கு -- உள்சார்பு நிலையே ஆன்மீக வாழ்வு -- ஆன்ம ஈக வாழ்வு என்பது !

மனிதனிடம் கடவுளோடு நெருக்கமுள்ள ஒரு பொருள் அவனது உயிரே ! அந்த உயிரும் கடவுளும் வேறல்ல என்பதுவே அத்துவைதம் ! 

அது நீயாக இருக்கிறாய் ! ஆனால் நீ அல்ல ! உன்னைப்போல உனக்குள்ளாக இருக்கும் உனது உயிர் ! அந்த உயிர் உன்னைப்போல மேற்போக்காக தெரிந்தாலும் உன்னிடம் பற்றற்றே இருக்கிறது ! அந்த உயிர் நீயாக இருக்கிறது !உன்னை இயக்குகிறது ; உன்னால் எவ்வித பாதிப்பும் சலனமுமில்லாமல் நிற்விகர்ப நிலையில் உள்ளது ! அது பிரம்மமாய் உள்ளது ! அகம் பிரமஸ்யாமி !

இந்த புரிதலை தவறாக வியாக்கியானம் செய்வது இன்றைய ஞானமார்க்க யோகா வியாபாரிகளின் வாடிக்கை ஆகிவிட்டது ! அவர்கள் காணாததை கண்டுபிடித்துவிட்டோம் `` நீதான் கடவுள் `` என்கிறார்கள் ! நான் கடவுள் என்றால் மற்றவர்கள் யார் ?
திறமையாக உன்னை நீ உணர்ந்து கொள்ளாமல் இருப்பதால் நீ கடவுளென்று உனக்கு தெரியவில்லை ! உன்னை நீ உணர்ந்து விட்டால் நீ தான் கடவுள் என்று சொன்னவுடன் பல சாதகர்கள் என்னை நான் உணராமலிருக்கிறேன் என்று திருப்தியடைந்து விடுகிறார்கள் !

அல்லது கடவுள் எனக்குள்ளாக இருக்கிறார் ; அவரை வெளியே தேடுவதற்கு நான் முட்டாளாக இல்லை : ஞானம் அடைந்துவிட்டேன் என்கிறார்கள் ! கடவுள் உங்களுக்குள் மட்டும் இருந்தால் மற்றவர்களுக்குள் யார் இருக்கிறார்கள் ? இந்த உலகையே உங்களுக்குள் மட்டும் இருக்கிற கடவுள் இயக்குகிறாரா ? அதாவது இந்த உலகையே நீங்கள் தான் நிர்வகிக்கிறீர்களா ?

நானும் கடவுளாக இருக்கிறேன் என்பதை ஞானமார்க்க வியாபாரிகளிடம் தெரிந்து கொண்ட பலர் அதை சுயபெருமைக்காக -- தன்முணைப்பு அகம்பாவமாக பாவிக்கும் அவல நிலை பெருகி வருகிறது ! நவீன நாத்திகவாதிகள் பலர் ஆன்மீக போர்வையில் கடவுள் மறுப்பை பரப்பி வருகிறார்கள் ! துணைக்கு ரெண்டு சித்தர் பாடல்களை சுட்டிகாட்டி தங்களை ஆன்மீகவாதிகள் ; ஞானமார்க்கிகளாக பகட்டுகின்றனர் !ஞானத்திற்கு அஞ்ஞான விளக்கம் கொடுக்கிறார்கள் ! மாயை மாயை !!

அப்படியானால் அத்வைதத்தின் சரியான அளவுகோல் என்ன ?

எங்கும் நிறைந்த ஏகாந்தர் எனக்குள்ளாகவும் இருக்கிறார் என்பதுவே !
எனக்குள்ளாக மட்டுமே இருக்கிறார் என்பதற்கும் எனக்குள்ளாகவும் இருக்கிறார் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது ! கடவுளின் முற்றுயிர் எனக்குள் சிற்றுயிராக இயங்கிக்கொண்டுள்ளது ! அது கடவுள் ஆனால் அதுவே கடவுளல்ல ! எனக்குள்ளும் எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் உயிராக இயங்கிக்கொண்டுள்ளது கடவுளின் ஆவியே ! ஆதியில் ஆவி மட்டுமே இருந்தது ! அந்த ஆவியே குளிர்ந்து ஜலமாக மாறியது ! அந்த ஜலமே குளிர்ந்து ஜடப்பொருளாக மாறியது ! பின் ஜீவராசிகள் தோன்றின ! கடவுளின் ஆவியாலேயே சகலமும் உண்டாகி கடவுளுக்குள் நிலைத்துள்ளன ! ஏகம் பிரமஸ்யாமி ! சர்வம் பிரமஸ்யாமி !

சற்குரு- யுகபுருஷன் இயேசு சொல்வதை கேளுங்கள் :

யோவான் 4:23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.

யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

கடவுள் ஆவியாய் இருக்கிறார் ! ஆதியிலே அவர் ஆவியாய் மட்டுமே இருந்தார் ! படைப்பு தொடங்கியபோது ஜலமாகி , ஜடமாகி , புல்லாகி பூண்டாகி இருப்பவையாகவும் இல்லாதவையாகவும் அந்த ஆவியே ஆனது ! சர்வம் பிரமஸ்யாமி !


அவரை தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளூவதே சரியானது ! ஒரு மனிதனுக்கு ஆவியாய் உள்ள அவனது உயிரில் அவனது ஆத்துமா ஒன்றவேண்டும் ! உண்மை ; ஞானம் என்பது அவனது ஆத்துமாவின் உள்ளொளியாகும் ! அந்த முழு ஆத்துமாவோடு உனது உயிராகிய ஆவியில் ஒன்றி தியானித்து முற்றுயிராக உள்ள ஏக இறைவனிடம் பிரார்த்தித்து தொழவேண்டும் !

இங்கு இரண்டு யோகம் சுட்டப்பட்டுள்ளது ! முதலாவது உனது உயிரில் ஒன்றுக ! அடுத்து அந்த நிலையில் முற்றுயிரில் ஒன்றுக ! இந்த இரண்டும் செய்யபட்டாலேயே அது முழுமையான தொழுகை !

இந்திய தத்துவ ஞானத்தில் மூன்று படியை நம் முன்னோர்கள் காட்டியுள்ளனர் !

1) துவைதம் -- முதலில் வெளியே உள்ள கடவுள் நம்மை தண்டித்து விடுவார் என பயம் காட்டி சாதாரண மனைதர்களையும் சரியை வழிபாடு செய்ய வைப்பது ! அதில் வளர்ந்தவர்கள்

2)அத்வைதம் -- உள்ளே உரையும் கடவுளின் ஆவியாகிய உயிரிலே ஒன்றி தியானித்து பழகுவது ! இந்த நிலையில் ஆத்துமா உடலின் ஆதிக்கத்திலிருந்து படிப்படியே விடுபட்டு உயிரின் ஆதிக்கத்தில் அதாவது கடவுளின் ஆதிக்கத்தில் வளரத்தொடங்கும் ! அப்போது ஆத்துமா விளிப்படைந்து உடலின் இச்சைகளை கட்டுப்படுத்தவும் வெல்லவுமான பக்குவம் அல்லது உலகிலேயே இருந்தாலும் அதில் பற்றுகளை அற்ற நிலைக்குள்ளாக வளரும் ! இவ்வாறு செயல்பாடுகளில் நுண்ணறிவு உண்டாவதே கிரியை எனப்படும் ! அதில் வளர்ந்தவர்கள்

3) மனித முயற்சியால் மட்டுமே அல்லது கிரியை ஞானத்தால் மட்டுமே நாம் முழுமை அடையமுடியாது என்பதை உணர்வார்கள் ! ஞானம் வளர்ந்தபிறகு தாழ்மையடைந்து மீண்டும் கடவுளிடம் சரணடைவார்கள் ! தனக்குள் மட்டுமல்ல எங்கும் நிறைந்து ஏகாந்தமாகவும் இருப்பவரும் விரவியிருந்தாலும் தனித்தும் இருப்பவரான ஏக இறைவனை உணர்ந்து அவனிடம் முழுசரணாகதி அடையும் நிலை உருவாகும் ! சிற்றுயிரில் யோகம் சித்தித்து அந்த வெளிச்சத்தில் முற்றுயிரின் தொடர்பு யோகம் சித்திக்கும் ! சிற்சபை ; பொற்சபை ரகசியம் வள்ளலாருக்கு வெளிப்பட்டது போல ! அந்த தொடர்பால் ஆவியோடும் உண்மையோடும் கடவுளை தொழுதுகொள்ளும் நிலை சித்திக்கும் ! அதுவே முழுமையான யோகம் என்பது !

அதையே இறுதி படியாக `` விசிஸ்ட்டாத்வைதம் `` என்றார்கள் !


அத்வைதத்தின் வளர்சியில் அதனுடன் மீண்டும் துவைதத்தை இணைத்துக்கொள்ளுவது !
ஞானம் வளர்ந்ததால் உண்டான முற்றறிவால் முற்றுயிரை சரணடைவது !

சத், சித், ஆனந்தம் என்பதன் விளக்கமும் இதுவே !

சத்      -- உடலின் பின் செல்லுவது -- சரியை !
சித்   --   ஆத்துமா விழிப்படைந்து உயிரின் பின் செல்லுவது -- கிரியை!
ஆனந்தம்-- உயிரில் யோகம் கைகூடி ஏக இறைவனிடம் யோகம் சித்தித்தல் !

கேட்க காதுள்ளவன் கேட்கக்கடவன் !!

ஏக இறைவன் தமது அளப்பரிய ஞானத்தால் நம்மை நிரப்புவாராக !!


Last edited by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sun Nov 18, 2012 8:42 pm; edited 3 times in total
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: அத்வைத நெறி !!

Post by றினா on Sun Nov 18, 2012 12:12 pm

தெரியாத தகவல்கள்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum