ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
 ayyasamy ram

நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
 ayyasamy ram

‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
 ayyasamy ram

ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
 ayyasamy ram

பெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்
 SK

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
 ayyasamy ram

சவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்
 ayyasamy ram

இலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி
 ayyasamy ram

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….!!
 பழ.முத்துராமலிங்கம்

பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
 SK

லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
 SK

நானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்
 SK

மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
 SK

கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
 SK

* "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
 SK

காஜல் அகர்வால் கொந்தளிப்பு!-
 SK

சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
 பழ.முத்துராமலிங்கம்

`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்..!! ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..!!!
 பழ.முத்துராமலிங்கம்

வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி
 பழ.முத்துராமலிங்கம்

அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
 பழ.முத்துராமலிங்கம்

`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்!’ - டர்பனுடன் பதவியேற்றார்
 பழ.முத்துராமலிங்கம்

வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை…!
 ayyasamy ram

செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
 ayyasamy ram

அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
 SK

திண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா? நியூட்ரினோ ஆய்வா?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

நலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்
 பழ.முத்துராமலிங்கம்

மரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..!
 பழ.முத்துராமலிங்கம்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04
 Raju_007

வருங்காலப் பொறியாளன்
 ayyasamy ram

கற்றுக்கொள்! – கவிதை
 ayyasamy ram

பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது
 ராஜா

வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

கன்னட மொழி படத்தில் சிம்பு!
 ayyasamy ram

ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
 ayyasamy ram

மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
 ayyasamy ram

மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
 ayyasamy ram

கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
 ayyasamy ram

பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
 ayyasamy ram

இப்படி செய்து பாருங்க... "இட்லி" பஞ்சு போல் இருக்கும்.
 பழ.முத்துராமலிங்கம்

ஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும் - தொடர் பதிவு
 ayyasamy ram

​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு!
 Dr.S.Soundarapandian

பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
 Dr.S.Soundarapandian

சுஜாதா நாவல்கள்
 தமிழ்நேயன் ஏழுமலை

பதவியை ராஜினமா செய்தார் தமிழிசை!? தொண்டர்கள் அதிர்ச்சி!
 பழ.முத்துராமலிங்கம்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி

View previous topic View next topic Go down

இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி

Post by ரா.ரமேஷ்குமார் on Sat Nov 24, 2012 7:02 am

மும்பை டெஸ்ட் போட்டியில் புஜாரா- அஸ்வின் பொறுப்பான ஆட்டம்: இந்தியா 266 ரன்
மும்பை, நவ. 23-

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த டெஸ்டில் இந்திய அணி 3 சுழற்பந்து வீரர்களுடன் களமிறங்கியது. காயம் அடைந்த வேகப்பந்து வீரர் உமேஷ் யாதவுக்கு பதிலாக சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் இடம் பெற்றார். ஏற்கனவே சுழற்பந்தில் அஸ்வின், ஒஜா இடம் பெற்று இருந்தனர். ஹர்பஜன் சிங் 16 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.

இங்கிலாந்து அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய இயன்பெல், பிரெஸ்னென் ஆகியோருக்கு பதிலாக பேர்ஸ்டோவ், பனேசர் இடம் பெற்றனர்.இந்திய அணி கேப்டன் டோனி டாஸ் வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ஷேவாக்கும், காம்பீரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரில் முதல் பந்தில் காம்பீர் பவுண்டரியுடன் கணக்கை தொடங்கினார். ஆனால் 2-வது பந்தில் அவர் ஆட்டம் இழந்தார். எம்.பி.டபிள்யூ முறையில் அவர் அவுட் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு ஷேவாக்குடன் புஜாரா ஜோடி சேர்ந்தார்.

ஷேவாக்குக்கு இது 100-வது டெஸ்ட் என்பதால் அவர் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய அவர் 30 ரன்களிலே ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய சச்சின் தெண்டுல்கர் 8 ரன்னிலும் அவுட் ஆனார்.

60 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, உணவு இடைவேளைக்குப் பிறகும் ரன் எடுக்க திணறியது. இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த புஜாரா அரைசதம் கடந்தார். இருப்பினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. முக்கிய விக்கெட்டுகளான கோலி (19 ரன்), கேப்டன் டோனி (29 ரன்) ஆகியோரை பனேசர் பெவிலியனுக்கு அனுப்பி அதிர்ச்சி அளித்தார். முன்னதாக யுவராஜ்சிங், ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஸ்வான் பந்தில் போல்டு ஆனார்.

இதையடுத்து புஜாராவுடன், அஸ்வின் ஜோடி சேர்ந்து, இங்கிலாந்து பவுலர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். மறுமுனையில் டெஸ்ட் போட்டிக்கே உரித்தான நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, 81-வது ஓவரில் சதம் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த தொடரில் அவர் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும். அதன்பின்னர் அஸ்வினும் அரைசதம் அடித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்க உதவினார்.

இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 114 ரன்களுடனும், அஸ்வின் 60 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சாளர் பனேசர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆண்டர்சன், ஸ்வான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

-மாலை மலர் நன்றி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4215
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி

Post by அச்சலா on Sat Nov 24, 2012 9:08 am

வெற்றி பாடகன் தொடரட்டும்....
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

மும்பை டெஸ்ட்: இங்கிலாந்து வீரர்கள் குக், பீட்டர்சன் அரைசதம்

Post by ரா.ரமேஷ்குமார் on Sat Nov 24, 2012 5:56 pm

மும்பை, நவ. 24-

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

முதல் நாளான நேற்று இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்து இருந்தது. முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்த புஜாரா நேற்று அபாரமாக ஆடி 2-வது டெஸ்டிலும் தொடர் சதம் அடித்தார். காம்பீர் (4), தெண்டுல்கர் (8), யுவராஜ்சிங் (0) சொற்ப ரன்னில் அவுட் ஆனதால் அணி சரிவுக்குள்ளானது.பின்னர் வந்த புஜாரா அஸ்வின் ஜோடி அபாரமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தது. நேற்று ஆட்டநேர இறுதியில் புஜாரா 114 ரன்களுடனும், அஸ்வின் 60 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்

இன்று 2-ம் நாள் ஆட்டம் நடந்தது. புஜாரா-அஸ்வின் ஜோடி தொடர்ந்து பேட் செய்தது. இன்றும் அவர்கள் நிலைத்து நின்று விளையாடி தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடியை எப்படியாவது பிரித்துவிட வேண்டும் என்பதில் இங்கிலாந்து வீரர்கள் மாறி மாறி பந்து வீசினார்கள்.

நேற்று இந்திய அணியின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய பனேசர், ஒரு விக்கெட் எடுத்த ஆண்டர்சன் தொடர்ந்து பந்து வீசினார்கள். 68 ரன்களுடனும் விளையாடிக் கொண்டு இருந்த அஸ்வின், பனேசர் பந்தில் அஸ்வின் எல்.பி.டபிள்யூ ஆனார். அவர் 68 ரன்கள் எடுத்து இருந்தார்.

தொடர்ந்து ஹர்பஜன்சிங் , புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். ஹர்பஜன்சிங் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்வான் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அதன் பின் ஜாகிர்கான் புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். 135 ரன்களில் புஜாரா ஆட்டம் இழந்தார். 11 ரன்களில் ஜாகிர்கான் ஆட்டம் இழந்தார். இறுதியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் எடுத்தது.

பின்னர் முதல் இன்னிங்சை இங்கிலாந்து அணி தொடங்கியது. இங்கிலாந்து அணியின் கேப்டன் குக்கும், காம்டனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். காம்ட்ன் 29 ரன் எடுத்த நிலையில் ஓஜா பந்தில் ஆட்டம் இழந்தார். ஆடத்து வந்த ட்ரோட் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இவரது விக்கெட்டையும் ஓஜா கைப்பற்றினார்.

அடுத்து குக்குடன், பீட்டர்சன் ஜோடி சேர்ந்தார். முதல் டெஸ்டில் சொதப்பிய பீட்டர்சன் இப்போட்டியில் சிறப்பாக விளையாடினார். இந்த ஜோடியை 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை இந்திய பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை.

முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்கில் சதம் அடித்த குக் இப்போட்டியில் அரை சதம் அடித்தார். அவருடன் பீட்டர்சனும் அரை சதம் அடித்தார்.

இன்றை ஆட்டத்தின் முடிவில் குக் 87 ரன்னுடனும், பீட்டர்சன் 62 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

-மாலை மலர் நன்றி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4215
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி

Post by அச்சலா on Mon Nov 26, 2012 2:30 am

அடுத்து என்ன?
கண்ணடி
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

மும்பை டெஸ்ட்: தோல்வி முகத்தில் இந்தியா

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Nov 26, 2012 10:29 am

மும்பை, நவ. 25-

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன் எடுத்தது. புஜாரா 135 ரன்னும், அஸ்வின் 68 ரன்னும் எடுத்தனர். பனேசர் 5 விக்கெட்டும், சுவான் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் குக் 87 ரன்னும், பீட்டர்சன் 62 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து சிறப்பாக ஆடினார்கள். குக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். 236 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் அவர் 100 ரன்னை தொட்டார். 85-வது டெஸ்டில் விளையாடும் குக்குக்கு இது 22-வது சதம் ஆகும்.ஏற்கனவே அவர் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டிலும் செஞ்சூரி (176 ரன்) எடுத்து இருந்தார்.குக்கை தொடர்ந்து பீட்டர்சனும் சதம் அடித்தார். அவர் 126 பந்துகளில் 15 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். 90-வது டெஸ்டில் விளையாடும் பீட்டர்சனுக்கு இது 22-வது சதமாகும்.

சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த குக் 122 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோ 9 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து படேல், பீட்டர்சனுடன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி சற்று நிலைத்து நின்று ஆடியது. 26 ரன்கள் எடுத்த நிலையில் படேலும் வெளியேற, அவரைத்தொடர்ந்து பீட்டர்சனும் 186 ரன்களில் வெளியேறினார். இந்த மூன்று விக்கெட்டுகளையும் ஓஜா கைப்பற்றினார்.

அதன்பிறகு களமிறங்கிய பிரைர் (26), பிராட் (6), ஆன்டர்சன் (2), பனேசர் (4) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேற, இங்கிலாந்து அணி 413 எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.

இந்தியா தரப்பில், ஓஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஹர்பஜன் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்தியாவைவிட இங்கிலாந்து 86 ரன்கள் அதிகமாக எடுத்திருந்தது.

இதைத்தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை இந்தியா தொடங்கியது. பனேசர், ஸ்வான் சுழலில் இந்தியாவின் விக்கெட் மளமளவென சரிந்தது.

சேவாக் (9), புஜாரா (6), தெண்டுல்கர் (8), வீராட் கோலி (7), யுவராஜ் சிங் (8), டோனி (6), அஸ்வின் (11) ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் காம்பீர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.

4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. தற்போது வரை இங்கிலாந்து அணியை விட இந்தியா 31 ரன்கள் மட்டுமே அதிகமாக உள்ளது.

1 நாள் முழுவதும் மீதமுள்ள நிலையில் இந்தியா கைவசம் 3 விக்கெட் மட்டுமே உள்ளதால் இங்கிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

-மாலை மலர் நன்றி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4215
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Nov 26, 2012 10:34 am

தற்போதுய நிலவரப்படி இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து இங்கிலாந்து அணிக்கு 57 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணைத்து உள்ளது...
இங்கிலாந்து அணி 3 ஓவர் முடிவில் 21/0
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4215
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Nov 26, 2012 10:37 am

@அச்சலா wrote:அடுத்து என்ன?
கண்ணடி
இங்கிலாந்து அணி இமலாய வெற்றி... ஜாலி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4215
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Nov 26, 2012 10:59 am

இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி...
4 போட்டிகளை கொண்ட தொடர் 1- 1என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4215
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி

Post by யினியவன் on Mon Nov 26, 2012 11:20 am

அடுத்த இரண்டையும் வென்று தொடரை வெல்ல வாழ்த்துகள்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி

Post by அருண் on Mon Nov 26, 2012 1:59 pm

என்னாச்சு இந்திய அணிக்கு - சொந்த மண்ணில் மோசமான ஆட்டம்.! என்ன கொடுமை சார் இது
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி

Post by அச்சலா on Tue Nov 27, 2012 11:43 am

என்ன இது ..சமன் ஆச்சு... என்ன கொடுமை சார் இது
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: இந்தியா-இங்கிலாந்து:இரண்டாவது டெஸ்ட் போட்டி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum