ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
 ayyasamy ram

போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
 ayyasamy ram

நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
 ayyasamy ram

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பல துறைகளில் சாதனை படைத்து வரும் சகோதரிகள்!

View previous topic View next topic Go down

பல துறைகளில் சாதனை படைத்து வரும் சகோதரிகள்!

Post by அச்சலா on Thu Nov 29, 2012 7:30 pm


ஸ்ரீநிதி சகோதரிகளின் சாதனைப் பக்கங்கள் நிறையவே இருக்கிறது. துப்பாக்கி சுடுதல், குதிரையேற்றம், ஜூடோ, சிலம்பம், நீச்சல், யோகா, செஸ், தடகளம் துவங்கி... பரதநாட்டியம் வரையில் சாதித்து, கோவை நகரை கலக்கலாக வலம் வருகிறார்கள் ஸ்ரீநிதி அபிராமி, ஸ்ரீநிதி மாளவிகா.

கோவையில் உள்ள சுகுணா ரிப் பள்ளியில் ஸ்ரீநிதி அபிராமி 11-ம் வகுப்பும், அதே பள்ளியில் அவரது தங்கை ஸ்ரீநிதி மாளவிகா 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

பள்ளிக்கூடம் சென்று வந்த அவர்களை நாம் சந்தித்தபோது, களைப்பு தெரியாமல் உற்சாகமாகப் பேசினார்கள். முதலில் பேசியவர் ஸ்ரீநிதி அபிராமி...
நன்றி:கூடல்
எப்படி பல துறைகளில் புகுந்து விளையாட முடிகிறது?

"அப்பா வெங்கடேஷ், அம்மா லதா தரும் உற்சாகம்தான் இதற்கெல்லாம் காரணம். சின்ன வயது முதலே அவர்கள் எங்களது விளையாட்டு ஆர்வத்தை கண்டறிந்து, இன்று வரையிலும் எங்களது ஆர்வம் குறைந்து விடாமல் ஊக்கமளித்து வருகிறார்கள்.

முதல் வெற்றி எப்போது?

2003-ம் ஆண்டில்தான் விளையாட்டுத்துறையில் எங்களது சாதனைப் பயணம் துவங்கியது. முதன் முதலாக அதே ஆண்டு மாவட்ட அளவில் நடந்த கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றேன். அதுதான் எனது முதல் வெற்றி.

பிற சாதனைகள்...?

2007-ல் புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றேன். 2009-ல் மதுரையில் நடைபெற்ற மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி மற்றும் கோவையில் நடைபெற்ற மண்டல மற்றும் மாநில சிலம்பம் போட்டி, மாநில செஸ் போட்டி ஆகியவற்றில் தங்கப்பதக்கம் கிடைத்தது. 2010-ல் கரூரில் நடைபெற்ற தேசிய சப்-ஜூனியர் ஜூடோ போட்டி, மாநில சிலம்ப போட்டி, மாவட்ட சிலம்ப போட்டி, மாநில அளவிலான ஜூடோ போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்றேன். 2010-2011-ல் மண்டல அளவிலான சிலம்ப போட்டியில் தங்கப்பதக்கம் கிடைத்தது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 4 தங்கம் உள்பட 10 பதக்கங்கள் வென்றேன். மேலும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மாநில ஜூடோ போட்டியிலும் தங்கம் வென்று திரும்பியுள்ளேன். இப்படியாக, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி குவித்துள்ளேன்.

இவ்வளவு வெற்றிகள் எப்படி சாத்தியமாயிற்று?

தோல்வி வந்தாலும் துவண்டு விடாத முயற்சி இருந்தாலே சாதித்துவிடலாம். இதோடு, சிறந்த பயிற்சியும் அவசியம். என்னைப் பொறுத்தவரை, பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியிலும் தங்கம் வெல்ல வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு தினமும் பயிற்சியில் ஈடுபடுவேன். நாள்தோறும் தவறாது நான் மேற்கொள்ளும் பயிற்சிதான் எனது வெற்றிக்கெல்லாம் மூலக்காரணம்.

வேறு ஏதேனும் விசேஷ பயிற்சிகள் உண்டா?

கண்டிப்பாக. உடல்நிலை ஆரோக்கியமாக இருந்தால்தான் விளையாட்டில் வெற்றி பெற முடியும். அதற்காக தினமும் உடற்பயிற்சிகளும் மேற்கொள்கிறேன். தொடர்ந்து ஒருவர் உடற்பயிற்சி செய்து வந்தால் மனதிற்கு தெளிவும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். உடற்பயிற்சியோடு தினமும் யோகா செய்வதும் என்னுடைய வழக்கம்.

பயிற்சி முறைகளைப் பார்த்தால் படிப்பதற்கு நேரம் இருக்காது போல் தெரிகிறதே...

அப்படியெல்லாம் இல்லை. படிப்பதற்கும் உரிய நேரம் ஒதுக்குகிறேன். பயிற்சி முடிந்த பிறகு நிச்சயமாக படிப்புதான்!

உங்களது லட்சியம்?

தேசிய அளவிலான போட்டிகள் வரை பங்கேற்று விளையாடி பதக்கங்களும் வென்றுள்ளேன். இதேபோல், சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் விளையாடி தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பது எனது லட்சியம். அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். நிச்சயம் என் லட்சியம் நிறைவேறும் என்று நினைக்கிறேன். இதேபோல், இன்னொரு லட்சியமும் இருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி, சேவை செய்ய வேண்டும் என்பதுதான் அது!" என்கிற ஸ்ரீநிதி அபிராமியின் பேச்சில் சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை நிறையவே பளிச்சிடுகிறது.

அக்காவின் சாதனைகளே பெரும் பட்டியல் என்றால், தங்கையின் வெற்றிகளும் அதற்கு சளைத்தது அல்ல என்பதை நிரூபிக்கின்றன.

2009-ல் மதுரையில் நடைபெற்ற மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம், 2010-ல் கரூரில் நடைபெற்ற தேசிய சப்-ஜூனியர் ஜூடோ போட்டி, சத்தீஸ்கரில் நடைபெற்ற தேசிய ஜூடோ போட்டி மற்றும் விழுப்புரத்தில் நடைபெற்ற மாநில சிலம்பம் ஆகிய போட்டிகளில் தங்கப்பதக்கம், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மாநில ஜூடோ போட்டியில் தங்கப்பதக்கம்... என்று, இதுவரை 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்து இருக்கிறார் ஸ்ரீநிதி மாளவிகா.

அக்காவைப் போன்று இவரும் தைரியமாகப் பேசுகிறார்.

"அக்காவைப் பார்த்துதான் நானும் விளையாட ஆரம்பித்தேன். அவர் என்னவெல்லாம் விளையாடுவாரோ அவை அத்தனையும் நானும் விளையாடுவேன். அக்காவைப் போன்று குதிரையில் வேகமாக சவாரி செய்வதும் பிடிக்கும். ஓவியமும் நன்றாக வரைவேன். அதற்காக 'இளம் ஓவியர்' என்ற விருதையும் பெற்றுள்ளேன். அக்காவைப் போன்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகவேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியமும்" என்கிறார், ஸ்ரீநிதி மாளவிகா.

பல துறைகளில் அடியெடுத்து வைத்து சாதித்து வரும் இந்த ஸ்ரீநிதி சகோதரிகளின் பரதநாட்டியம் கோவை பகுதியில் பிரபலம். கலை, இலக்கியப் போட்டிகளுக்காக தமிழக அரசின் 'இலக்கிய செல்வர்', 'கலை இளமணி' ஆகிய விருதுகளை ஸ்ரீநிதி அபிராமி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:கூடல்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: பல துறைகளில் சாதனை படைத்து வரும் சகோதரிகள்!

Post by Guest on Thu Nov 29, 2012 7:55 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு தொடர்ந்து பல சாதனைகளை பெற வாழ்த்துகிறோம் ..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: பல துறைகளில் சாதனை படைத்து வரும் சகோதரிகள்!

Post by அச்சலா on Thu Nov 29, 2012 8:04 pm

புதுமை பெண்கள் கிளம்பிவிட்டார்கள் என்று சொன்னேனே...
பெண்கள் இன்னும் பல துறைகளில் உள்ளனர்..
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum