புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_m10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10 
32 Posts - 56%
heezulia
திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_m10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_m10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_m10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10 
1 Post - 2%
rajuselvam
திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_m10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_m10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_m10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_m10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_m10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10 
17 Posts - 3%
prajai
திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_m10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_m10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10 
9 Posts - 1%
Jenila
திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_m10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_m10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10 
4 Posts - 1%
jairam
திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_m10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_m10திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு


   
   
stamizh87
stamizh87
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 04/08/2009
http://chaarumadhi.blogspot.com

Poststamizh87 Sat Dec 15, 2012 10:51 pm

கிராமத்தில் எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து நான் பார்த்த சுவாரசியமான பல நிகழ்வுகளை ஒரு நேர்க்கோட்டில் அமைத்திருக்கிறேன்.
முதல் முயற்சி ஆங்காங்கே தவறுகள் இருக்கும் சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்.

நண்பரே! சொந்தமாக தட்டச்சு செய்த கதைகளை தான் இந்த பகுதியில் பதியவேண்டும். படமாக தரவேற்றம் செய்த கதைகள் பதிய அனுமதியில்லை


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 15, 2012 10:57 pm

தமிழ் வாழ்த்துகள் உங்கள் முதல் கதைக்கு.

டெக்ஸ்ட் பார்மாட்டில் போட இயலாதா? இது படிக்க சிரமமாக இருக்கு. மற்ற நண்பர்களுக்கும் டெக்ஸ்ட் பார்மில் இருந்தால் படிக்க நன்றாக இருக்கும்.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Dec 15, 2012 11:03 pm

நண்பர் யினியவன் சொன்ன மாதிரி சொந்த தட்டச்சாக பதியுங்கள் நண்பரே!

stamizh87
stamizh87
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 04/08/2009
http://chaarumadhi.blogspot.com

Poststamizh87 Sun Dec 16, 2012 4:12 pm

மன்னித்துவிடுங்கள். இதோ தட்டச்சில் எனது கதை

திண்ணை

"என்னா வாத்தியாரே! அதுக்குள்ள ஒங்க ஊருக்கு பேப்பர் வந்துடுத்தா?" என்று தன் சைக்கிளை நிறுத்தியபடியே கேட்டார் சுந்தரம்.

வீட்டு திண்ணையில் பேப்பரில் மூழ்கியிருந்த ஆசிரியர் கரிகாலன் சற்றே தலையை தூக்கி, "வா சுந்தரம்! இஞ்ஞா இம்மா காலையில".

"கழினியில கீர புடுங்குனோம், போய் வித்துட்டு வாடானு ஊட்டுகாரம்மா சொல்லுச்சு.....எங்க வாத்தியாரம்மா இல்ல! போனவாட்டி வந்தப்ப கீர கேட்டுச்சு?"

"உள்ளதான் இருகாங்க..." வீட்டின் உள் பக்கம் பார்த்து "அம்மா...வடிவாம்பா..." பதில் இல்லாததால் திரும்பி சுந்தரத்திடம், "காது கேக்கலனு நெனைக்கிறேன். தோ இரு.!", என்று எழ முற்ப்பட்டார்.

"அட! நீ இரு நா கூப்பிட்றன்" என்று தன் உரத்த குரலில் "தோ...வாத்தியரூட்டம்மோவ்"

வீட்டிற்க்குள்ளிருந்து "யாருங்க" என்ற குரல் மட்டும் வந்தது.

"நாந்தான் சுந்தரம். இன்னா கீர வேணாமா"

"தோ இரு வரேன்" குரல் மட்டும்.

"சொம்மா வராமா நீராகாரம் இருந்தா எடுதுனு வா, காலைல இருந்து ஒரு டீதண்ணிகூட குடிக்கல".

"சரிடா வரேன்" மறுபடியும் குரல்.

கரிகாலன், "அது இன்னா இன்னோரு கூட"

"இன்னா வாத்தியாரே"

"இன்னோரு கூடைல இன்னான்னேன்"

"தக்காளி. இந்த அணிபுள்ள தொந்தரவு தாங்கல, எல்லா பழத்தையும் கடிச்சி நாசம் பன்னிட்டு பூடுதுங்க, சரினு அதையும் கையோட அறுத்து கொண்டாந்தேன்".

"இன்னா சொல்லுது சுந்தரம்", என்று தன் தோளில்கிடந்த துண்டை உதரியபடியே எதிர்வீட்டு மாசிலாமணி வந்தார்.

"எப்பவும்போலதான்" என்றார் ஆசி¡¢யர்.

மாசிலாமணி, "இன்னா வெல கீர?,"

"ஆமாம்! அப்டியே சொன்னா மட்டும் நீ வாங்க போறியா"

"வாங்கறமோ இல்லியோ சொன்னினா வெலலாசி என்னானு தெரிஞ்சிகலாமே"

"எங்கனா பெசாதகெடயா, கூழாக்கினா மூணுவேலையும் வச்சி குடிச்சிட்டு மாசத்துக்கு ஒருநாள் சோறாக்கற ஒனக்கு வெலவாசிய பத்தி இன்னாகெடக்குது", மாசிலாமணியிடம் கிண்டலடித்தார் சுந்தரம்.

மாசிலாமணி, "பின்ன எல்லாம் வாங்கர வெலதான் சொல்றானா, அழுவிப்போன வெங்காயம்....கிலோ நூறுரூவா சொல்றான், இன்னான்ற"

"யோவ் மனமாற பத்து ஏக்கர்ல பம்புசெட்டு வச்சு வெவசாயம் பண்றமாதிரியா பேசற! இன்னாவோ கஞ்சிக்கே வக்கத்தவன்மாதிரி பேசற! வெங்காயம் கிலோ நூறுரூவா விக்கிதுனு நா கவல படலாம், பென்ஷன் பணம் வாங்கற வாத்தியாரு...கவலபடலாம், ஆனா நீ கவலபடறன்ற பாரு... ஊர்ல நாலு பேர்கிட்ட சொன்னா எவனும் வாயால சிரிக்க மாட்டாங்...", என்று புலம்பி தீர்த்தார் சுந்தரம்.

"பாரான், இப்ப இன்னா கேட்டனு பொலம்பற, நீயே சொல்லு வாத்தியார", என்று பேச்சை ஆசிரியர் பக்கம் திருப்பினார் மாசிலாமணி.

"இன்னாயாபின்ன தெனகூலிக்கி போறவங்கூட வாரம் மூணுனாள் கவிச்சி எடுக்கறான், நீ இன்னாவோ வெங்காயம் வாங்க கஷ்டபட்டுகினு கூழாக்கினேன் கஞ்சிகாச்சினேன்றியே, இது எந்த வகயில நியாயம்னு நீயே சொல்லு வத்தியாரே", என்று சுந்தரமும் தன்பங்கு நியாயத்தை ஆசிரியரிடம் கூறினார்.

"இது ஒந்தப்புமில்ல அவந்தப்புமில்ல, பணம் படச்சவன் ஆடுற ஆட்டம்", கரிகாலன்.

மாசிலாமணி, "சரி பேப்பர்ல இஞ்ஞா சேதி, எலஷன் வருது யார்யார் இன்னான்னா குடுக்குறாங்க"


"நீ அல்லாத்தியும் ஓசிலியே வாங்கி-----, இதமாரி பேசர்தான் வவுதெரிச்ச வருது", சுந்தரம் எகிர

ஆசிரியர், "நீ யேன் கோவபடற, கடங்கொடுக்க ஒலக வங்கியும் வாங்கி செலவுபன்ன நம்ம மத்திய அரசும் இருக்கவர யாரையும் குத்தம் சொல்ல முடியாது".

"மெய்யாலுமா சொல்ற, மத்திகவுருமண்டு எல்லாதியும் கடன்வாங்கிதான் குடுக்குதா?", மாசிலாமணி கேட்க

சுந்தரம், "மொதலமச்சர் இம்மாத்ரம் மந்திரி இம்மாத்ரம்னு வூட்டுக்கு எடுதுனுபோனா கவுருமண்டு கஜானாவுல ----- இருக்கும், பூராம் வெளிநாட்டுல கடன்வாங்கிதான் குடுக்கனும்"

"யோவ்! நீ குளிக்கற சோப்புல இருந்து குண்டிய மறைக்க வாங்குற துணி வரைக்கும் அரசாங்கத்துக்கு வரி கட்ற, ஆனா! பணம் வச்சிகிறவனும் அரசியல்வாதியும் கட்னுமே. எல்லாம் கொன்போய் வெள்நாட்டு பேங்குல பதுக்கி வச்சிகினு இப்ப நாட்ல பணம் இல்ல, அதனால எல்லா செலவெயும் கடன்வாங்கி பண்றோம்னு சொல்றாங்க”, என்று விளக்கமளித்தார் கரிகாலன்.

மாசிலாமணி, "இதுலாம் மத்திகவுருமண்டு இன்னானு கேக்காதா..... அவுங்கலுக்கும் எதுனா போயிருக்கும் ம்..."

"கோடி கோடியா செலவு பன்னி செயிச்சவன், வந்ததும் கொள்ள அடிக்கதான் செய்வான், நீ! யோக்கியனுக்கு ஓட்டு போட்றுக்கனும்" மத்திய அரசை சாடினார் சுந்தரம்.

"டேய்! இன்னாடா காலையிலே இம்மாஞ் சத்தம், வரும்போது ஊத்திகினு வந்திட்டியா", என்று வீட்டிற்குள்ளிருந்து வந்த வடிவாம்பாள் அந்த இடத்தை அமைதிக்கு கொண்டுவற முயன்றார்.

"தே.....இங்க! சரி நாங் கேட்டது இன்னாச்சி?"

"நீராகாரந்தான, இந்தா." கையிலிருந்ததை சுந்தரத்திடம் கொடுத்துவிட்டு சைக்கிளில் இருந்த கீரையை பார்த்து "எம்மாத்ரண்டா கட்டு".

"ஒனக்கு எம்மாத்ரம் வேணுமோ எடுத்துக்க, காசபத்தி ஒனக்கின்னாகீது"

"எனக்கு இந்த கூடையோட வேணும் சொம்மா குடுப்பியா..?"

"எடுத்துகியேன், யாருக்கு குடுக்கிறன் நம்ம வத்தியாருக்குதான"

"போடா புண்ணாக்கு, தோ ஒரு கட்டு எடுதுகினங் போதும்" திட்டியவாரே கீரையை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றார் வடிவாம்பாள்.

"சரி! அந்த எலங்க வெவகாரம் பத்தி இன்னா போட்டுகிறான் பேப்பர்ல", தினசரியை பற்றி கரிகாலனிடம் விசாரித்தார் மாசிலாமணி.

"அந்த கொடுமைய யேன் கேக்குற, எப்பவும்போல சாவுகணக்குதான் போட்ற்றுக்கான் வேற இன்னா போட போறான்", சலிப்படைந்தார் கரிகாலன்.

"சரி! சுந்தரம். வெலவாசிக்கி இம்மா பேச்சி பேசினியே, எத்தினியோ மைல் தாண்டி கீர நாட்ல நெலநடுக்கம்னா அனுதாபம் சொல்ற பெரதம மந்திரி, இந்தா! ராமேஸ்வரத்துல இருந்து டேய்னு கொரல் உட்டா எலங்கையில இருந்து இன்னானு மறுகொரல் வரும். இந்த பிரச்சினக்கி யாரும் எதும் சொல்லலியே ஏன்,,? இப்ப! இதுக்கு பதில் சொல்லேம் பாப்போம்."

"காரணம் இன்னானு ஒனக்குங் தெரியும், எனக்கும் தெரியும்." "சிங்கு கொண்ட போட கூடாதுனு ஏதோ ஒரு நாட்ல சொன்னதுக்கு பூரா பயலுங்கலும் வரிஞ்சிகட்டிகினு போனானுவலே, இதுக்கு ஒருத்தனும் வாயையும் தெரக்கல -----யும் தெரக்கல", சுந்தரம்

மாசிலாமணி, “அதான் இன்னா சமாசாரம்“.

சுந்தரம், "வொன் உசுரவிட அவுங்க மசுரு ஒஸ்தி, அதுமட்டுமில்ல அவுங்க ஒன்னுன்னா ஊரே கெளம்பி போவானுங்க. எவனா தெரு முக்குல டேய்ன்னா, கதவ பூட்டிகினு உள்ள பூடுவியே நீ...."

"அட! அதுக்கிள்ள, அவுங்கலும் தமிழ்தான் பேசறாங்க, நாமளும் தமிழ்தான் பேசறோம், நம்ம மொதலமச்சர் கூட கேக்கலியயே ஏன்..?"

"யோவ் என்ன போலிஸ்ல புடிச்சி குடுக்காம விடமாட்ட போல இருக்கே" முனகலாக "இங்க இத்தினி பேரு சாவும்போது அங்க மாநாடு ரொம்ப முக்கியம், -----பசங்க" அதற்குள் கீரைவாங்க சிவபூஷனம் அங்கு வர.

"சே! இதையெல்லாம் பாக்கும்போது சாமி இருக்கா இல்லியானு சந்தேகம் வருது வாத்யாரே", மாசிலாமணி.

கரிகாலன், கிண்டலாக "சந்தேகமே வேணாம்.......!"

"ஏண்டா வேலு நீயும் உன் பொண்டாட்டியும் அந்த மாட்டு கொட்டாயில இன்னாதாண்டா பண்றீங்க, மாடு மெரளுது பார்றா டேய்", சுந்தரம் எதிர்வீட்டு வேலுவை வம்பிழுத்தார்.

சிவபூஷனம், "இன்னா சுந்தரம் கீர பூரா பூச்சி புடிச்சிகிது".

"தூங்கி யேஞ்சி மூஞ்ச கழிவிகினு வாம்மா, தூக்க கலக்கத்துல பாத்துட்டு எவ்வூட்டு தோட்டத்துல வெலஞ்ச கீரையில பூச்சி கீதுனு சொல்லாத", சுந்தரம்.

சிவபூஷனம், "சரி! சரி! ரெண்டு கட்டு குடு”. “இன்னா பன்னுதுங்க இது ரெண்டும் மாட்டுகொட்டாயில".

"கேட்டேங் இன்னும் பதில் வரலியே. (சத்தமாக) யேய் வேலு", சுந்தரம்.

சத்தம் கேட்டு வெளியே வந்த வேலு, "வா மாமா! சென மாடு...".

சுந்தரம், "அதான் செனயாயிருச்சே அப்ரம் நீ இன்னா பண்ற".

"யோவ், காலையிலே....! மாடு, பச்ச பச்சயா ஒன்னுக்கு போவுதுயான்னா, இன்னானு பாத்துகினு இருந்தேன் அதுக்குள்ள நீ...", கையிலிருந்த சாணியை வைக்கோலில் துடைத்தபடியே சொன்னார் வேலு.

சுந்தரம், "கன்னுகுட்டிக்கு வவுரு கெட்டுபோயி¡¢க்கும். நேத்து மாட்டுக்கு இன்னா தீனி போட்ட".

"எப்பவும்போல வக்கிலும் பில்லியுந்தான், என்ன மல்லாட்ட செடி காஞ்சது கொஞ்சம் இருந்து தின்னுச்சி", வேலு.

"மனமாற சென மாட்டுக்கு வக்கிலும் பில்லியும் போட்டு ஆயகட்றியே...ஏண்டா, ஒன் பொண்டாட்டி மாசமா இருந்தப்ப வெரும் சோத்த மட்டுமா போற்றுப்ப. பழனு பிஸ்கேட்னு வாங்கி குடுத்திருக்கமாட்ட. மாட்டுக்கு மொத செனயாச்சே நல்லபடியா கன்னுபோடனும்னு நல்லதா நாலு செஞ்சி அது முன்னாடி வச்சி கொஞ்சம் கல்பூரம் காட்டி சாப்பட வச்சாதான் இன்னாடா”, சிவபூஷனம்.

சுந்தரம் நக்கலாக "அஞ்சுவக சோறு ஆக்கி குடு".

சுந்தரத்தின் வார்த்தைக்கு லேசாக சிரித்த சிவபூஷனம், வேலுவிடம் “ஏன்! சொம்மாவா செய்யபோற. அது எம்மா வேல ஒன் ஊட்டுக்கு செஞ்சிருக்கு, அதுக்கு கூலி ஆவுமாடா நீ பன்ன போற செலவு. பாறாங் பின்ன...", ஆதங்கமாய் பேசிய பின்னர் "அண்ணி கொஞ்சம் அந்த மாட்டுக்கு கொஞ்சம் நீவி விடேன், தே...ரெண்டும் இன்னோமோ லோல்படுதுங்கலே".

வடிவாம்பா சென்று நீவி விட்டு பின்னர் வேலுவிடம் "நீவி விட்றுகேன் சா¢யாயிடும், மொதல்ல கொஞ்சம் கூழ கரச்சி வையி தன்னியா கரக்காத நல்லா கட்டியாவே இருக்கட்டும். இன்னிக்கி பூராம் வக்க போடாம வேனும்னா கொஞ்சமா பில்லி மட்டும் போடு. பழயது அது இதுனு புளிச்சிபோன எதயும் குடுக்காத. இன்னா!". "இன்னிக்கி அமாசைக்கு படைக்கும்போது இதுங்கிட்டியும் கல்பூர தட்ட காட்டு".

"பெரிமா, நாங்க அமாச இல்ல இன்னிக்கி எப்பிடி படைக்கமுடியும்", வேலுவின் மனைவி சந்தேகத்தை கேக்க.

"அமாச இல்லினா இன்னா எம்மா இதுக்கு மட்டும் கொஞ்சம் ஆரத்தி காட்டு", வடிவாம்பா.

சிவபூஷனம், "யேன் அண்ணி, இன்னிக்கி அமாச எப்ப வருது".

"மணி இன்னா எட்டு இருக்குமா......பொறந்துட்றுக்குமே" மாசிலாமணி பதில் சொல்லிவிட்டு, கரிகாலனிடம் "சரி வத்தியாரே எரப்புக்கு போகனும், கால கெரண்டாச்சே, தர்பூசணியெல்லாம் காய் பெருக்கர நேரம்."

சிவபூஷனம் மெல்லிய குரலில், "இந்த ஆம்பள எங்க கழனிகி கிழினிகி பொயிடுச்சானு தெரியல ஆள காணம், வந்தா குளிச்சிட்டு பூச பன்னலாம்." "சுந்தரம் தக்காளி ஒருகிலோ குடு".

"நீ தக்காளியே இப்பதான் வாங்கற, இனிமேதான் போயி கொழம்பு வக்கனும், அதுக்குள்ள ஆம்பளய காணாம் கண்டுபுடிச்சி குடுனு பஞ்சாயத்து பண்ற", சுந்தரம்.

அதற்குள் சிவபூஷனத்தின் கணவர் குளித்துவிட்டு இடுப்பில் துண்டோடும் துவத்த வேட்டியை தோள்மேல் போட்டுக்கொண்டு வற. சிவபூஷனம், "எங்க போன?".

"ஏன் இன்னா.. கால கெரண்டாச்சே அதாங் கரும்புக்கு தண்ணிகாட்டிட்டு அப்டியே குளிச்சிட்டு வரேன். அமாசன்ற நெனப்பில்லாம பொம்னேட்டியெல்லாம் ஏழு மணிவரைக்கும் இழுத்து போத்திகினு தூங்கறீங்க. ஒங்கல எழுப்பி தண்ணி புடிச்சான்றதெல்லாம் ஆவற காரியாமா அது...", சிவபூஷனத்தின் கணவர். இருவரும் பேசிக்கொண்டே தங்கள் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

"அதான, ஊட்ல கீர பொம்னேட்டி கால்ல ஏஞ்சி நம்மள எழுப்புவாங்கனு பாத்தா, நாம ஏஞ்சி அவுங்கல எழுப்ப வேண்டியதாகீது. கோவத்துல சத்தமா இன்னாடின்னா கெளம்பி ஆத்தா வூட்டுக்கு போயிட்றா, நம்ம ஒண்டியா இந்த கழனிவேல பாக்க முடியலேனு எல்லாத்தியும் மூடிகினு இருக்கவேண்டியதாகீது." சத்தமாக "த யக்கா இன்னா நீ மாட்னு தக்காளி வாங்கினு காசு தறாம போற", சுந்தரம்.

"எடுதுனு வந்து தறண்டா", அவர்களும் சத்தமா.

"இருவத்தஞ்சி ரூவா" என்று கூறிவிட்டு அந்து தின்னையில் அமர்ந்தார் சுந்தரம், "கமிட்டிகி போவனும். விழுப்புரம் கமிட்டியில கெவுரு இன்னா ரேட்டு போவுதுனு ஏதாவது தொ¢யுமா வாத்யாரே?"

"தொ¢யலப்பா, ஆனா போன வருஷத்த விட இந்த வருஷம் கொஞ்சம் கூட போறதா பொட்டுகல்ல சொன்னான், அந்த தெருவுக்குதான போற அவன கேளு சொல்லுவான்."

"சரி வாத்யாரே நானும் கெளம்பறேன், அப்டியே கோயில் தெருவுக்கு போய்ட்டு ஊட்டுக்கு போறேன்."

"சரி பாக்கலாம் போய்ட்டு வா", கரிகாலன்.

சில நிமிடங்களுக்குப் பின்......

வடிவாம்பா வீட்டிற்க்குள்ளிருந்து வெளியே வந்து கரிகாலனிடம் "அய்யா, வாங்க சாப்பிடலாம்".

"படச்சிட்டியாம்மா"

"ஆச்சுங்க, வாங்க"

சாப்பிட்டுவிட்டு ஆசுவாசமாய் உட்கார்ந்திருந்தவர் தன் மனைவியிடம், "வடிவு, இங்க வா.....இப்டி உக்காரு" "உங்கிட்ட ஒன்னு கேக்கனும்"

"என்னய்யா"

"ஆமா, நீ சாமிகிட்ட என்னனு வேண்டிகிட்ட"

"யேன் இம்மாநாள் இல்லாம இப்ப திடீர்னு"

"என்னமோ கேக்கனும்னு தோணுச்சு, சும்மா சொல்லேன்"

"நீங்க போனதுக்கு அப்புறந்தான் நான் போகணும்னு வேண்டிகிட்டேன்"

"யேன், உனக்கு பூமியில ரொம்ப நாள் இருக்கனும்னு ஆசையா! ம்..."

"அதில்லங்க, ஒங்களுக்கு முன்னாடி நான் போய்ட்டா, ஒத்தாசைக்கு ஆளிள்ளாம நீங்க கஷ்டபடுவீங்கள்ள அதான்"

"நான் சீக்கிரம் போய்ட்டு நீ மட்டும் இருந்தியனா, உனக்கு கஷ்டமில்லியா. என் ஒத்தாச ஒனக்கு வேணாமா?"

"அய்யய்யோ, நான் அந்த அர்த்தத்துல சொல்லலீங்க. ஒங்களுக்கு சுடுதண்ணி வச்சி குடுக்ககூட ஆளிள்ளயேனு சொன்னேன்"

"ஒனக்கு மட்டும் யாரு இருக்கா சொல்லு. இந்த மூட்டுவலி மருந்து தடவறதுக்கும், வெள்ளிக்கெழம கோயிலுக்கு கூட்டிட்டு போறதுக்கும், ஒன் புள்ளையா கூட இருக்குது. அவன் எங்கியோ பட்ணத்துல இருகான்."

"ஆமா இல்ல"

கரிகாலன், தழுதழுத்த குரலில் "ஒனக்கு முன்னாடி நான் போயி நீ கஷ்டபட தேவையில்ல, எனக்கு முன்னாடி நீ போயி நானும் கஷ்டபட தேவையில்ல." "ரெண்டுபேரும் ஒண்ணா சேந்தே போயுடுவோம் என்ன?

இருவரின் நீண்ட நெடிய காதல் வாழ்க்கை கண்ணீராய் வெளிவர கண்ணிலிருந்து சமயம் பார்த்துக்கொண்டிருந்தது.

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 16, 2012 4:15 pm

அருமையாக இருக்கு நண்பா.. சூப்பருங்க



திண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Paard105xzதிண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Paard105xzதிண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Paard105xzதிண்ணை _ என் முதல் கதை உங்கள் விமர்சனத்திற்கு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக