ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 ayyasamy ram

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 T.N.Balasubramanian

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

ஆதார் காட்டுங்க....!!
 SK

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பருத்தி ஆடையாகக் காய்க்கிறது!

View previous topic View next topic Go down

ஈகரை பருத்தி ஆடையாகக் காய்க்கிறது!

Post by GOPIBRTE on Sun Jan 06, 2013 9:50 pm

பருத்தி ஆடையாகக் காய்க்கிறது!

எம். செந்தில் குமார்


டி.கல்லுப்பட்டி. மழை காணாத மானாவாரி நிலங்கள் நிறைந்த பகுதி. இப்பகுதி நிலங்கள் தண்ணீர் தேங்காத, மண் வளம் மிக்க நெக் கரிசல் மண் கொண்டவை. பொதுவாக மானாவாரி நிலங்களில் பருத்தியுடன் ஊடுபயிராக துவரை, பாசிப்பயறு, உளுந்து, காய்கறிகள் பயிரிடுவார்கள். காலப்போக்கில் பருத்தி செடிகளைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத விவசாயிகள் மக்காச் சோளத்திற்கு மாறிவிட்டார்கள்.


இந்நிலையில் வேளாண் விஞ்ஞானியான பாமயன் முயற்சியால் டி.கல்லுப்பட்டி பகுதியில் இயற்கை விவசாயம் சிறிது சிறிதாக உயிர் பெறத் துவங்கியது. இந்தப் பகுதியின் முக்கியப் பயிரான பருத்தியை பயிரிடச் செய்வது, அதை நேரடியாக சந்தையில் விற்காமல் மதிப்புக் கூட்டி விவசாயிகளுக்குப் போதிய லாபத்தைப் பெற்றுத் தருவது என்ற இவரின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.


பருத்தியை எந்த விதத்தில் மதிப்புக் கூட்டலாம் என யோசித்தபோது, இத்தாலியை சேர்ந்த நெசவாளர் ஆலெக்சாண்ட்ரா என்பவர், பருத்தியை சட்டையாக மாற்றும் ஐடியாவை கொடுத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சோதனை முயற்சியாக இரண்டு விவசாயிகள் மூலம் ரசாயன உரங்கள் எதையும் பயன்படுத்தாமல், பருத்தியை விளைவித்து இயற்கை சட்டைகளை உருவாக்கினோம்" என்கிறார், துகில் (TUGIL) அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான பாமயன். துகில்? Textile from United Group Initiative for Landed groom என்பதன் சுருக்கம். துகில் இயற்கை சட்டைகள், பருத்தி நூல் கைத்தறி மூலம் துணியாக நெய்யப்பட்டு, இயற்கை சாயங்களால் வண்ணம் பெறுகின்றன. ‘துகில்’ சட்டைகளில் பித்தான்கள் கூட பிளாஸ்டிக் இல்லாமல், தேங்காய் சிரட்டையினால் (கொட்டாங்கச்சியால்) ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.


பருத்தியை விளைவிப்பதோடு இவர்களின் பணி முடிந்து விடுவதில்லை. விளைந்த பருத்தியை கொட்டை நீக்கி, நூலுக்குத் தகுந்த பஞ்சாக மாற்ற இராஜபாளையம் அனுப்பப்படுகிறது. பஞ்சு, காந்தி கிராமத்தில் நூலாக மாற்றப்படுகிறது. இந்த நூல் இராமச்சந்திரபுரம் பகுதியில் கைத்தறியால் நெய்யப்படுகிறது. அதன்பின் கடுக்காய், அவரி, மஞ்சிஷ்டம், வேம்பாடம் பட்டை, வெல்லம் போன்ற 20 வகை இயற்கைப் பொருட்களால் இயற்கை சாயம் ஏற்றப்படும் துணிகள் சட்டையாக தைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.


நெசவுத் தொழில் அழிந்து வரும் சூழலில் இயற்கை சட்டைகள் தயாரிப்பதன் மூலம் வேலை வாய்ப்பை அவர்களுக்கு தர முடிகிறது" என்கிறார் பாமயன். தற்போது 20 விவசாயிகளின் மூலம் 40 ஏக்கரில் மானாவாரி பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. சந்தை விலையை விட 15% அதிகமாக விலை கொடுத்து விவசாயிகளிடம் பருத்தியை வாங்குவதோடு, நிலத்திற்கான இயற்கை கரைசல்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை இலவசமாக தருகின்றனர். நெசவாளர்களுக்கு 2 மடங்கு கூலி கிடைக்கிறது.


முன்னெல்லாம் ரசாயன உரம் போட்டாதான் விளையும்னு நினைச்சோம். இப்ப அதெல்லாம் உபயோகிக்கிறது இல்லை. திரும்ப பருத்தி போட ஆரம்பிச்சிட்டோம். பருத்தி மூலம் கிடைக்கிற லாபத்தோட உளுந்து, பாசிப்பயறு, தட்டான் பயறு, காய்கறியெல்லாம்கூட ஊடுபயிராய் போடுறோம்" என்கிறார், விவசாயி லெட்சுமி.


துகில் சட்டைகள் மிகவும் மெல்லியதாக இருப்பதால், சட்டை போட்டிருப்பது போலவே தோணாது. வேர்வையை மிக விரைவில் உறிஞ்சுவதால் வெயில் காலத்திற்கு ஏற்றது. இதுபோன்ற முயற்சிகளுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்" என்கிறார், நன்னலம் இயற்கை அங்காடியின் உரிமையாளர் ஸ்ரீவத்சன்.


தற்போது ஒரு துகில் சட்டையின் விலை 600 ரூபாய். இயற்கை சாயம் இல்லாத வெள்ளைச் சட்டைகள் 500 ரூபாய் விலைக்கு கிடைக்கின்றன. குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் இயற்கைத் துணி ஏற்றது என்பதால், அவர்களுக்கான ஆடைகள் நெய்வதில் இறங்கியுள்ளோம். பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடிந்தால், விலை இன்னும் குறையலாம். எங்களுடைய நோக்கம், மானாவாரி விவசாயிகளைக் காப்பதே தவிர, பணம் சம்பாதிப்பது அல்ல.


10 மானாவாரி விவசாயிகள் ஒன்று சேர்ந்து இதுபோல் முயற்சிகள் எடுத்தால், அவர்களுக்கு எங்களுடைய ஆலோசனைகளையும் தொழில்நுட்பத்தையும் கற்றுத்தர தயாராய் உள்ளோம். ஆடம்பரப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் மக்கள், விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்றும் சிறு உதவியாக துகில் சட்டைகளை வாங்க முன்வர வேண்டும். இது உங்கள் உடல்நலத்தை மட்டுமின்றி, விவசாயிகளின் வாழ்வையும் முன்னேற்றும்" என்கிறார் பாமயன்
avatar
GOPIBRTE
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 78
மதிப்பீடுகள் : 31

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum