ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 M.Jagadeesan

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 SK

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 krishnanramadurai

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 ayyasamy ram

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Page 5 of 29 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 17 ... 29  Next

View previous topic View next topic Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Dr.S.Soundarapandian on Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by sundaram77 on Fri Apr 26, 2013 8:32 am


தங்களது தொடர் அருமை ... இன்றைய சூழலுக்கு ஏற்ப விளக்கங்கள் தருவது இன்னும் அருமை ...!
நான் முதல் பக்கத்தை மட்டும் பார்த்து பதிப்பத்ததே ...இது !
மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிக்கும் ,
அன்பன்,
சுந்தரம்

avatar
sundaram77
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 77
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (67)

Post by Dr.S.Soundarapandian on Sun Apr 28, 2013 10:50 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (67)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘புள்ளி மயங்கியல்’ எனில் , ஒரு புள்ளி எழுத்து (மெய்யெழுத்து) இன்னொரு புள்ளி எழுத்து அருகே சென்று சேரும்போது எப்படிச் சேரும் என்பதைக் கூறுவது !

மயங்குதல் – கள் குடித்து மயங்குதல் அல்ல !

மயங்குதல் – இணைதல் ; சேர்தல்

சித்த மருத்துவத்தில் , ‘ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் சேர்த்து’ என்பதைக் கூற ‘மயக்கி’ என்பர் ! அதுதான் பின்பு ‘மசக்கி’ஆனது !

‘அந்தி மயங்கும் நேரம்’ என்றால் , மாலைப் பொழுதும் இரவுப் பொழுதும் சேரும் நேரம் என்பது பொருள் ! இது நமக்குத் தெரிந்ததுதானே?

ஆகவே , தொல்காப்பியரது மயக்கம் என்ற சொல்லைக் கண்டு மயங்க வேண்டாம் !

புள்ளிமயங்கியலில் தொல்காப்பியரின் ணகர ஈற்றுப் புணர்ச்சி விதிகளைப் பார்த்தோம் ! அவற்றைத் தொடர்ந்து அவர் ‘ம்’ஈற்றுச் சொற்கள் புணரும் வகைகளை விவரிக்கிறார் ! அவரைப் பின் தொடர்வோம் ! :-

“மகர இறுதி வேற்றுமை யாயின்
துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே” ! (புள்ளி மயங்கியல் 15)

(துவரக் கெட்டு – முழுவதும் கெட்டு)

அஃதாவது , மகர ஈற்றுப் பெயர்ச் சொற்கள் (Nouns) வேற்றுமைப் பொருளில் புணரும்போது , ‘ம்’ கெட்டு , வருமொழி முதல் வல்லின எழுத்து மிகுந்து முடியும் !

மரம் + கால் = மரக் கால் (வேற்றுமைப் புணர்ச்சி)
உலகம் + பெரிது = உலகப் பெரிது (வேற்றுமைப் புணர்ச்சி)
முகம் + கட்டி = முகக் கட்டி (வேற்றுமைப் புணர்ச்சி)

இளம்பூரணர் இவ்விடத்தில் , “ மகரம் மறைந்து , வல் எழுத்து மிகாத புணர்ச்சி இடங்களும் உண்டு ” என்கிறார் ! அவரின் சான்றுகளை வருமாறு தெளிவுபடுத்தலாம் !

மரம் + ஞாண் = மரஞாண்
மரம் + நூல் = மரநூல்
மரம் + மணி = மரமணி
மரம் + யாழ் = மரயாழ்
மரம் + வட்டு = மரவட்டு
மரம் + அடை = மரவடை
மரம் + ஆடை = மரவாடை
தம் + கை = தங்கை
எம் + கை = எங்கை
எம்+ செவி = எஞ்செவி
எம் + தலை = எந்தலை
நம் + புறம் = நப்புறம்
நும் + கை = நுங்கை என வரும் !

மேல் வந்தவை யாவும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !

‘இந்தப் புணர்ச்சிகளெல்லாம் யாருக்கோ சொன்னவை ’ என்று இருக்கவேண்டாம் ! நீங்கள் பத்திரிகைச் செய்தி போடுபவராக இருந்தால் , ‘உரம் மூட்டை’ என்று எழுதாமல் ‘உரமூட்டை’ என்றுதான் எழுதவேண்டும் ! (இதுவும் வேற்றுமைப் புணர்ச்சிதான் !) .

சில மகர ஈறுகள் வேறுவகையாகவும் புணரும் என்கிறார் தொல்காப்பியர் ! :-

“அகர ஆகாரம் வரூஉங் காலை
ஈற்றுமிசை அகரம் நீடலும் உரித்தே” (புள்ளிமயங்கியல் 16)

இதன்படி ,

மரம் + அடி = மரவடி √ ( வ் – உடம்படு மெய்)
மரம் + அடி = மராஅடி √

குளம் + ஆம்பல் = குளவாம்பல் √ (வ் – உடம்படு மெய்)
குளம் + ஆம்பல் = குளாஅம்பல் √ என வரும் !

இவை நான்குமே வேற்றுமைப் புணர்ச்சிகள்!

சில மகர ஈறுகள் , வல்லினச் சந்தியும் பெறும் , மெல்லினச் சந்தியும் பெறும் என்கிறார் தொல்காப்பியர் !:-

“மெல்லெழுத் துறழும் மொழியுமா ருளவே
செல்வழி அறிதல் வழக்கத் தான ” (புள்ளிமயங்கியல் 17)

அஃதாவது , கீழ்வருமாறு புணரும் :-

குளம் + கரை = குளக் கரை √
குளம் + கரை = குளங் கரை √

குளம் + சேறு = குளச் சேறு √
குலம் + சேறு = குளஞ் சேறு √

குளம் + தாது = குளத் தாது √
குளம் + தாது = குளந்தாது √

குளம் + பூமி = குளப் பூமி √
குளம் + பூமி = குளம் பூமி √

‘இல்லம்’ என்ற மரப் பெயர் , ‘விசை’ என்ற மரப் பெயர் புணர்வதுபோல மெல்லெழுத்துச் சந்தி பெற்றுப் புணரும் என்று அடுத்துக் கூறுகிறார் தொல்காப்பியர் ! :-

”இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே” ! (புள்ளிமயங்கியல் 18)

இல்லம் + கோடு = இல்லக் கோடு ×
இல்லம் + கோடு =இல்லங் கோடு √ (கோடு - கிளை)

இல்லம் + செதிள் = இல்லச் செதிள் ×
இல்லம் + செதிள் = இல்லஞ் செதிள் √ (புதிய மரப்பட்டை தோன்றியதும் பழையது செதிள் செதிளாக நிற்கும்)

இல்லம் + தோல் = இல்லத் தோல் ×
இல்லம் + தோல் = இல்லந் தோல் √ (தோல் - பட்டை)

இல்லம் + பூ = இல்லப் பூ ×
இல்லம் + பூ = இல்லம் பூ √

தொல்காப்பியர் குறித்த ‘இல்லம்’ என்ற மரத்தைக் காண ஆர்வம் உள்ளதா உங்களுக்கு ?

[You must be registered and logged in to see this link.]
Courtesy - westafricanplants.senckenberg.de

இதுவே தொல்காப்பியர் கூறிய இல்லம் எனும் மரம் ; நற்றிணையில் ( 376:5-6) இல்லம் என்ற பெயரிலேயே இம் மரம் சுட்டப்படுகிறது.
சில்லமரம், கதலிக மரம்,தேற்றா மரம் என்பன பிற்காலப் பெயர்கள் .
இதன் ஆங்கிலப் பெயர்- Clearing-nut tree ; தாவரவியல் பெயர் - Strychnos potatorum Linn.
சளி, பித்தம் , நஞ்சு அகியவற்றுக்குச் சித்த மருத்துவ மருந்து இத் தாவரம் !
இம் மரக் காய்களை இடித்து கொட்டை எடுத்த பின் , சக்கையைக் கரைத்துக் குட்டைகளில் இட்டால், மீன்கள் மயங்கிக் கரை ஒதுங்கும் என்பர்.

[You must be registered and logged in to see this link.]
Courtesy- ecoport . org
இல்லம் மரத்து விதைகள் !


மேலே நாம் புணர்ச்சி முறைகள் ஆழ்ந்த ஆய்விற்கு உரியன !

சில இடங்களில் தொல்காப்பியர் , ‘வல்லெழுத்துச் சந்தி வரும்’ என்கிறார் ; சில இடங்களில் ‘மெல்லெழுத்துச் சந்தி வரும்’ என்கிறார் !

ஏன் இப்படி ? ஒரே மாதிரியாக இலக்கணம் வகுக்கக் கூடாதா?

நல்ல கேள்வி !

தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் ,விதிகளை விதித்து , ‘நீங்கள் இப்படித்தான் எழுதவேண்டும்’ என்று சட்டமிடும் நூல் (Prescriptive Grammar) அல்ல !

மாறாக , ‘நீண்ட நெடிய வரலாறுள்ள தமிழில் இதுதான் மரபு ; இப்படித்தான் பெரியோர்கள் எழுதி வருகிறார்கள் ! இதைத் தெரிந்துகொள்ளுங்கள் ! ’ என்று போதிப்பதே தொல்காப்பியம் ! இதனை விளக்கமுறை இலக்கணம் (Descriptive Grammar) என்பர்!

சுருக்கமாகச் சொன்னால் , புணர்ச்சித் தடுமாற்றங்களுக்குக் காரணம் , நீண்ட நெடிய தமிழ் மொழி வரலாறே !

=======


Last edited by Dr.S.Soundarapandian on Sun Apr 28, 2013 10:52 am; edited 1 time in total (Reason for editing : Serial no. wrongly assigned)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by nikky on Sun Apr 28, 2013 11:26 am

தமிழுக்கு பெருமை சேர்த்த தமிழன் ஐயா நீங்கள் .தமிழ் மீது நீங்கள் கொண்டுள்ள பற்றை என்னவென்று பாராட்டுவது..... சூப்பருங்க
avatar
nikky
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 63
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (66)

Post by Dr.S.Soundarapandian on Sun Apr 28, 2013 6:29 pm

நிக்கி அவர்களின் பாட்டுதலுக்கு நன்றி ! ஜி.யூ.போப் போன்ற வெளிநாட்டவர்களையே கட்டிப்போட்டது தமிழ் ! நான் எம்மாத்திரம் ?-

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்.,டிப். (வடமொழி),பி.எச்டி.,
சென்னை-33
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (68)

Post by Dr.S.Soundarapandian on Sat May 04, 2013 6:37 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (68)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“அல்வழிப் புணர்ச்சியில் , மகர ஈற்றுச் சொற்கள் (மகர ஈறு = ‘ம்’ஈறு) , மெல்லெழுத்தாக ஆகும் ” என்று ஒரு விதி கூறுகிறார் தொல்காப்பியர் ! :-

“அல்வழி எல்லாம் மெய்யெழுத் தாகும்” ! (புள்ளி மயங்கியல் 19)

இதற்கு எடுத்துக்காட்டுகள் :-

மரம் + குறிது = மரங் குறிது √
மரம் + குறிது = மரக் குறிது ×


மரம் + சிறிது = மரஞ் சிறிது √
மரம் + சிறிது = மரச் சிறிது ×

மரம் + தீது = மரந் தீது √
மரம் + தீது = மரத் தீது ×

மரம் + பெரிது = மரம் பெரிது √
மரம் + பெரிது = மரப் பெரிது ×

இவ்விடத்தில் இளம்பூரணர் தலையிடுகிறார் ! தலையிட்டுக் , கீழ்வருமாறும் மகர ஈற்றுச் சொற்கள் புணரலாம் என்கிறார் !:-

மரம் + ஞான்றது = மர ஞான்றது √
மரம் + ஞான்றது = மரஞ் ஞான்றது ×

மரம் + நீண்டது = மர நீண்டது √
மரம் + நீண்டது = மரம் நீண்டது ×

மரம் + மாண்டது = மர மாண்டது √
மரம் + மாண்டது = மரம் மாண்டது ×

வட்டம் + தழை = வட்டத் தழை √
வட்டம் + தழை = வட்டந் தழை ×

வட்டம் + பலகை = வட்டப் பலகை √
வட்டம் + பலகை = வட்டம் பலகை ×

கலம் + கொள் = கலக் கொள் √
கலம் + கொள் = கலங் கொள் ×

கலம் + நெல் = கல நெல் √
கலம் + நெல் = கலம் நெல் ×

நீலம் + கண் = நீலக் கண் √
நீலம் + கண் = நீலங் கண் ×

பவளம் + வாய் = பவள வாய் √
பவளம் + வாய் = பவளம் வாய் ×

நிலம் + நீர் = நில நீர் √
நிலம் + நீர் = நிலம் நீர் ×

கொல்லும் + கொற்றன் = கொல்லுங் கொற்றன் √
கொல்லும் + கொற்றன் = கொல்லுக் கொற்றன் ×

பறக்கும் + நாரை = பறக்கு நாரை √
பறக்கும் + நாரை = பறக்கும் நாரை ×

மேற்கண்டவை யாவும் அல்வழிப் புணர்ச்சிகளே !

தொல்காப்பியர் சொல்லாததை யெல்லாம் எப்படி இளம்பூரணரால் சொல்லமுடிகிறது ?

இளம்பூரணர் கி.பி.1100ஐச் சேர்ந்தவர் ! தொல்காப்பியரோ கி.மு.1000ஐச் சேர்ந்தவர் ! இந்த இடைவெளிதான் காரணம் !

இளம்பூரணர் காலத்தில் இலக்கணப் புலவர்கள் கொண்ட நடைமுறை விதிகளை எல்லாம் , தொல்காப்பிய உரையின்போது தக்க இடங்களில் சேர்த்துத் தந்துள்ளார் அவர்! அதனால் நாம் பிழைத்தோம் !

தொல்காப்பியர் காலத்தில் இலக்கணம் கற்றவர்களிடையே ஒரு தகராறு!
அகம் + கை = அங்கை
அகம் + கை = அகங்கை
- இவற்றில் எது சரி?

தொல்காப்பியர் இத் தகராறைத் தீர்த்துவைத்தார் ! :-

“அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே
முதனிலை ஒழிய முன்னவை கெடுதலும்
வரைநிலை இன்றே ஆசிரி யர்க்கு
மெல்லெழுத்து மிகுதல் ஆவயி னான ” (புள்ளிமயங்கியல் 20)

அஃதாவது , “ ‘அகம்’ என்பதோடு ‘கை’ புணர்ந்தால் , முதலில் ‘ம்’ கெடப் புணர்தலும் , பின் ‘கம்’ கெடப் புணர்தலுமாகஇரு வகைகள் உண்டு ! இரு வழிகளிலும் இடையில் ‘ங்’ வரும்!”

அகம் + கை = அங்கை √ (அல்வழிப் புணர்ச்சி)
அகம் + கை = அகங்கை √(அல்வழிப் புணர்ச்சி)

“இரண்டுமே சரிதான் ” என்று தகராறைத் தீர்த்துவைத்தார் தொல்காப்பியர் !

‘அகம் + கை = அகக் கை’ – என்று வராதா ?

நல்ல கேள்வி !

வரும் ! அது வேற்றுமைப் புணர்ச்சியில் !

எனவே , புணர்ச்சி இலக்கணத்தில் முதலில் , அல்வழிப் புணர்ச்சியா வேற்றுமைப் புணர்ச்சியா என்று தீர்மானித்துக் கொள்ளவேண்டும்!

ஒருநாள் தொல்காப்பியரிடம் ஒருவன் ஓடோடிச் சென்றான் ! “இலம்படு – என்பது வேற்றுமைப் புணர்ச்சிதானே ? ‘மகர இறுதி வேற்றுமையாயின் துவரக் கெட்டு வல்லெழுத்து மிகும் ’ என நீங்கள்தானே கூறினீர்கள் ? அதன்படி , ‘ இலம்+படு = இலப்படு’ என்றல்லவா வரும்? ஆனால் பாட்டுகளில் ‘இலம்படு’ என்று வருகிறதே” என்று துளைத்தான் !

அப்போது தொல்காப்பியர் சொன்ன விடை ! :-

“இலமென் கிளவிக்குப் படுவரு காலை
நிலையலும் உரித்தே செய்யு ளான” (புள்ளிமயங்கியல் 21)

அஃதாவது , “வேற்றுமைப் புணர்ச்சி என்பதெல்லாம் சரிதான் ! ஆனால் , பாடல்களில் ‘இலப்படு’ என வராமல் , மெல்லெழுத்துச் சந்தி பெற்று ‘இலம்படு’ என்றுதான் வரும் ! செய்யுள் நடைக்கான ஒரு விதிவிலக்கு இது !” என்று விடை கூறினார் தொல்காப்பியர் !

============

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (69)

Post by Dr.S.Soundarapandian on Sun May 05, 2013 1:03 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (69)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘ம்’ஈற்றுச் சொற்களின் புணர்ச்சி தொடர்கிறது !

‘ஆயிரம்’ – என்ற சொல்லைப் பிடித்துப் பேசுகிறார் தொல்காப்பியர் !:-

“அத்தொடு சிவணும் ஆயிரத் திறுதி
ஒத்த எண்ணு முன்வரு காலை” (புள்ளிமயங்கியல் 22)

இதற்கியைய இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் !:-

ஆயிரம் + ஒன்று = ஆயிரத்தொன்று √
ஆயிரம் + ஒன்று = ஆயிரமே ஒன்று ×

ஆயிரம் + இரண்டு = ஆயிரத்திரண்டு √
ஆயிரம் + இரண்டு = ஆயிரமே இரண்டு ×

ஆயிரம் + மூன்று = ஆயிரத்து மூன்று √
ஆயிரம் + மூன்று = ஆயிரமே மூன்று ×

ஆயிரம் + நான்கு = ஆயிரத்து நான்கு √
ஆயிரம் + நான்கு = ஆயிரமே நான்கு ×

இங்கெல்லாம் , ‘அத்து’ச் சாரியை வந்துள்ளதைக் காண்க !

அஃதாவது , ஆயிரம் + அத்து + ஒன்று = ஆயிரத்தொன்று .

ஆயிரம் – எண்ணுப் பெயர்
அத்து – சாரியை
ஒன்று – எண்ணுப் பெயர்

என்ற முறையில் மேலைப் புணர்ச்சிகளை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும் !

இளம்பூரணர் இந்த இட்த்தில் தம் மாணவர்களுக்குச் சில நுணுக்கங்களைக் கற்றுத்தருகிறார் !

அந் நுணுக்கங்களை அவரது நடையில் படித்தால் யாருக்கும் விளங்காது ! எனவே , கீழ்வருமாறு அவற்றை விளக்கலாம் !:-

ஆயிரம் + குறை = ஆயிரத்துக் குறை √
ஆயிரம் + குறை = ஆயிரக் குறை ×

ஆயிரம் + கூறு = ஆயிரத்துக் கூறு √
ஆயிரம் + கூறு = ஆயிரக் கூறு ×

ஆயிரம் + முதல் = ஆயிரத்து முதல் √
ஆயிரம் + முதல் = ஆயிரமுதல் ×

வெறும் ‘ஆயிரம்’ என்ற சொல்லைக் கொண்டு புணர்ச்சி கூறினார் தொல்காப்பியர் ! ‘பதினாயிரம்’ என்று வந்தால் ? அப்போது ‘ஆயிரம்’ என்பதற்குக் கூறிய விதியே பொருந்துமா ?

நம் ஐயம் !

இதற்குத் தொல்காப்பியர் விடை ! :-

“அடையொடு தோன்றினும் அதனோ ரற்றே” (புள்ளிமயங்கியல் 23)

பதினாயிரம் + ஒன்று = பதினாயிரத் தொன்று
பதினாயிரம் + இரண்டு = பதினாயிரத் திரண்டு
பதினாயிரம் + குறை = பதினாயிரத்துக் குறை
பதினாயிரம் + கூறு = பதினாயிரத்துக் கூறு
பதினாயிரம் + முதல் = பதினாயிரத்து முதல்

‘அடை’ என்ற தொல்காப்பியர் சொல்லாட்சியைக்
கவனியுங்கள் !

ஒரு பெயர்ச்சொல்லுக்கு ‘அடை’வரலாம் என்பது ஈண்டுக் கருத்து !

இந்த ‘அடை’ என்பதைத்தான் ஆங்கிலத்தில் Adjective என்கின்றனர்! ; மொழியியலில் (Linguistics) ‘பெயரடை’ என எழுதுகின்றனர் ! அவ்வளவுதான் !

எனவே , ‘பெயரடை’ , மொழியியலார் (Linguists) கண்டுபிடிப்பல்ல ! தொல்காப்பியருக்கும் முந்தைய தமிழர் கண்டுபிடிப்புதான் !
‘ஆயிரம்’என்பதன் புணர்ச்சியை இதுவரை கூறியிருந்தாலும் அவற்றோடு முடிக்கத் தொல்காப்பியருக்கு மனமில்லை ! விட்டுப்போன ஒன்றைச் சேர்க்கிறார் ! :-

“அளவு நிறையும் வேற்றுமை யியல” (புள்ளிமயங்கியல் 24)

அஃதாவது , ‘கலம்’ போன்ற அளவுச் சொற்களும் , ‘கழஞ்சு’ போன்ற நிறைப் பெயர்களும் (எடை பற்றிய பெயர்களும் ) ‘ஆயிரம்’ என்பதோடு புணர்ந்தால் , வேற்றுமைப் புணர்ச்சியில் , மகரம் மறைந்து , வல்லெழுத்து மிகுந்து வரும் ! :-

ஆயிரம் + கலம் = ஆயிரக் கலம் √
ஆயிரம் + கலம் = ஆயிரத்துக் கலம் ×

ஆயிரம் + சாடி = ஆயிரச் சாடி √
ஆயிரம் + சாடி = ஆயிரத்துச் சாடி ×

ஆயிரம் + தூதை = ஆயிரத் தூதை √
ஆயிரம் + தூதை = ஆயிரத்துத் தூதை ×

ஆயிரம் + பானை = ஆயிரப் பானை √
ஆயிரம் + பானை = ஆயிரத்துப் பானை ×

ஆயிரம் + கழஞ்சு = ஆயிரக் கழஞ்சு √
ஆயிரம் + கழஞ்சு = ஆயிரத்துக் கழஞ்சு ×

ஆயிரம் + தொடி = ஆயிரத் தொடி √
ஆயிரம் + தொடி = ஆயிரத்துத் தொடி ×

ஆயிரம் + பலம் = ஆயிரப் பலம் √
ஆயிரம் + பலம் = ஆயிரத்துப் பலம் ×

ஆயிரம் + பானை = ஆயிரப் பானை √
ஆயிரம் + பானை = ஆயிரத்துப் பானை ×

இளம்பூரணர் இவ்விடத்தில் கூறியுள்ள கூடுதல் செய்தியால் , கீழ்வரும் புணர்ச்சிகளையும் பெறலாம் !:-

ஆயிரம் + நாழி = ஆயிர நாழி √
ஆயிரம் + நாழி = ஆயிரம் நாழி ×

ஆயிரம் + வட்டி = ஆயிர வட்டி √
ஆயிரம் +வட்டி = ஆயிரம் வட்டி ×

ஆயிரம் + அகல் = ஆயிர வகல் √
ஆயிரம் + அகல் = ஆயிரம் மகல் ×

- இம் மூன்று புணர்ச்சிகளிலும் ‘ம்’ கெட்டுள்ளதைக்
காணலாம் !

மேலே பார்த்தவை போன்று அளவுக்கும் நிறைக்கும் ‘ஆயிரம்’ புணர்ந்தது போன்றே , ‘பதினாயிரம்’ என்ற சொல்லும் புணரும் !
மேல் எடுத்துக்காட்டுகளில் வந்துள்ளவற்றில்,

கலம், சாடி, தூதை, பானை, நாழி, படி,வட்டி, அகல் - முகத்தல் அளவுப் பெயர்கள்.
கழஞ்சு , தொடி ,பலம் – நிறுத்தல் அளவுப் பெயர்கள் .

இவையெல்லாம் கற்பனையானவை என எண்ணவேண்டாம் !

‘கழஞ்சு’ – புறநானூற்றில் (11,12) வருகிறது ! (1/6 அவுன்சு எடை கொண்டது என்று குறித்துளர் .); பல தமிழ்க் கல்வெட்டுகளில் வருகிறது !

‘தொடி’ – திருக்குறளில் வந்துள்ளது !

1 வட்டி=1 நாழி = 1 படி ஆகும் !

பலம் , நாழி , படி ஆகியன எனது சிறுவயதில் புழக்கத்தில் இருந்தனையே ! பலசரக்குக் கடைகளில் திராட்சையை இத்தனை பலம் என்று அந்நாளில் விற்று நான் வாங்கியுள்ளேன் !

ஆகவே , தொல்காப்பியம் சில இலக்கணப் புலவர்களுக்கானதுதான் என எண்ணவேண்டாம்! தொல்காப்பியம் மக்களுக்கானது !

======


Last edited by Dr.S.Soundarapandian on Sun May 05, 2013 1:05 pm; edited 1 time in total (Reason for editing : Serial no. wrongly came.)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (70)

Post by Dr.S.Soundarapandian on Sun May 26, 2013 9:07 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (70)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப். (வடமொழி), பி.எச்டி.
சென்னை-33

மகர ஈற்றுப் புணர்ச்சியில் தொல்காப்பியரின் அடுத்த நூற்பாவைக் காண்போம் !

எல்லார் + கையும் = எல்லார் கையும்
-படர்க்கைப் பலர்பால் பெயருடன் நிகழ்ந்த புணர்ச்சி ; வேற்றுமைப் புணர்ச்சி .

எல்லீர் + கையும் = எல்லீர் கையும்
- இது முன்னிலைப் பலர்பால் பெயருடன் நிகழ்ந்த புணர்ச்சி ; வேற்றுமைப் புணர்ச்சி .

‘எல்லார் கையும்’ , ‘எல்லீர் கையும்’ என்பன தொல்காப்பியர் நாளையில் , ‘எல்லார் தங்கையும்’ , ‘எல்லீர் நுங்கையும்’ எனவும் வழங்கலாயின !

அப்போது தொல்காப்பியரின் மாணவர்கள், “ ‘தங்’ , ‘நுங்’ இடையிலே எப்படி வந்தன ? ” என்று கேட்டனர் !

அப்போது எழுதிய நூற்பாதான் –

“படர்க்கைப் பெயரு முன்னிலைப் பெயரும்
தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும்
வேற்றுமை யாயி னுருபிய நிலையும்
மெல்லெழுத்து மிகுத லாவயி னான” (புள்ளி மயங்கியல் 25)

“ ‘எல்லார் தங்கையும்’ , ‘எல்லீர் நுங்கையும்’ என்பன ‘எல்லாரும்’ என்ற பகுதியிலிருந்து வந்தன” - என்று கூறி வருமாறு விளக்கினார் :-

எல்லாரும் + கை = எல்லார் + தம் + கை + உம்= எல்லார் தங்கையும் .
(தம் – சாரியை ; உம் - சாரியை)

தொடர்களில் , ‘எல்லார் தங்கையும் சிறக்க’ , ‘எல்லார் தங்கையும் நன்றே’ என வரும் !

‘தம்’ இடையிலே வந்ததல்லவா ? இதனையே , ‘உருபுப் புணர்ச்சிக்குச் சாரியை வந்தது போல ’ என்று தொல்காப்பியர் கூறினார் ! ; ‘உருபியல் நிலையும்’ என்பதற்கு இதுவே பொருள் !

மேலே பார்த்த புணர்ச்சி ,வேற்றுமைப் புணர்ச்சிதான் எனினும் , ‘தம்’ சாரியை வந்தது உருபுப் புணர்ச்சியில் வந்தது போலாகும் ! ‘வேற்றுமையாயின் ’ என்ற தொல்காப்பியரின் தொடருக்கு இதுவே பொருள் !

உருபுப் புணர்ச்சிக்கும் வேற்றுமைப் புணர்ச்சிக்கும் உள்ள வேறுபாடு யாது ?

கடல் + கரை = கடற் கரை
- இதில் , ‘கடலினது கரை’ என்று ‘அது’ என்ற ஒரு வேற்றுமை உருபைப் போட்டு விரிக்க முடிவதால் , இது வேற்றுமைப் பொருட் புணர்ச்சி !

அஃதாவது , கடலிலிருந்து வேற்றுமைபட்ட கரை என்ற பொருளும் புணர்ந்துள்ளதால் ‘வேர்றுமைப் பொருட் புணர்ச்சி’ !

இவ்வாறு வேற்றுமைப் பொருள் புணராது , வெறும் வேற்றுமை உருபு மட்டும் புணர்ந்தால் அது ‘உருபுப் புணர்ச்சி’ !

கடல் + அது = கடலது
- இஃது உருபுப் புனர்ச்சி ! இங்கே “கடலது … என்ன” என்ற வினா,விடை கூறப்படாமல் நிற்பதைக் கவனியுங்கள் !

மேல் தொல்காப்பியர் நூற்பாவுக்கு இளம்பூரணர் தந்த சுருக்க வடிவ எடுத்துக்காட்டுகளை வருமாறு விரித்துத் தரலாம் !:-

எல்லார் + தம் + செவி+ உம் = எல்லார்தஞ் செவியும்
எல்லார் + தம் + தலை + உம் = எல்லார்தந் தலையும்
எல்லார் + தம் + புறம் + உம் = எல்லார்தம் புறமும்

மேலே ‘எல்லார்தங் கையும்’ வந்ததுபோன்றே , ‘எல்லீர்நுங் கையும்’ வரும் ! :-

எல்லீரும் = எல்லீர் (உ , ம் கெட்டன)
எல்லீர் + நும் + கை + உம் = எல்லீர்நுங் கையும்
நும் – சாரியை ; உம் – சாரியை .

எல்லீர் + நும் + செவி +உம் = எல்லீர்நுஞ் செவியும்
எல்லீர் + நும் + தலை + உம் = எல்லீர்நுந் தலையும்
எல்லீர் + நும் + புறம் + உம் = எல்லீர்நும் புறமும்

‘எல்லீரும் வருக ’ என்றால் , ‘நீங்கள் எல்லோரும் வருக’ என்பது பொருள் !

பின் , தொல்காப்பியர் ‘தாம்’ என்பதை எடுத்துக்கொள்கிறார் !:-

தாம் + கை = தம் +கை (‘தாம்’ , ‘தம்’ ஆகியது)
தம் + கை = தங்கை (sister அல்ல !)
நாம் + கை = நங்கை ( ‘நாம்’ , ‘நம்’ ஆகியுள்ளது)

யாம் + கை = எங்கை ( ‘யாம்’ , ‘எம்’ ஆகியுள்ளது)

‘தம்’ , ‘நம்’ ஆகிய சாரியைகள் பெறாமலும் புணரலாம் என்று விதிவிலக்குக் காட்டுகிறார் இளம்பூரணர் ! :-
எல்லாரும்+கை=எல்லார் கையும்√
எல்லாரும் + செவி =எல்லார் செவியும் √
எல்லாரும் + தலை = எல்லார் தலையும் √
எல்லாரும் + புறம் = எல்லார் புறமும் √

எல்லீரும் + கை = எல்லீர் கையும் √
எல்லீரும் + செவி = எல்லீர் செவியும் √
எல்லீரும் + தலை = எல்லீர் தலையும் √
எல்லீரும் + புறம் = எல்லீர் புறமும் √

மேல் தொல்காப்பிய நூற்பாவில் , ‘தொடக்கம்’ என்ற சொல் வந்ததை நோக்கவேண்டும் !

இந்நாளில் பலரும் ‘துடக்கம்’ , ‘துடங்கியது’ , ‘துடங்கிவைத்தார்’ என்றெல்லாம் எழுதுகின்றனர் ! தவறு இது !
‘தொடக்கம்’ , ‘தொடங்கியது’ , ‘தொடங்கிவைத்தார்’ என்றுதான் எழுதவேண்டும் !

‘எல்லாரும் ’ , ‘எல்லீரும்’ முதலியவற்றிற்கான வேற்றுமைப் புணர்ச்சிகளை மேலே பார்த்தோம் !
இவை அல்வழிப் புணர்ச்சியில் எப்படி வரும் ?

தொல்காப்பியர் விடை !:-

“அல்லது கிளப்பினும் இயற்கை ஆகும்” (புள்ளி மயங்கியல் 26)

அல்லது – அல்வழிப் புணர்ச்சி .

இயற்கை – இயல்பாகச் சாரியை பெறாது முடியும் .

எடுத்துக்காட்டுகள் :-

எல்லாரும் +குறியர் = எல்லாருங் குறியர் .
(புணர்ச்சியில் சாரியை வராவிடினும் , ‘ங்’ என்ற மெல்லெழுத்து வந்ததைக் காண்க .)

எல்லாரும் + சிறியர் = எல்லாருஞ் சிறியர்
எல்லாரும் + தீயர் = எல்லாருந் தீயர்
எல்லாரும் + பெரியர் = எல்லாரும் பெரியர்
எல்லாரும் + குறியீர் = எல்லீருங் குறியீர்
(முன்னிலை விளியாதலின் , ‘குறியர்’ என வராது ‘குறியீர்’ என வந்தது.)

எல்லீரும் + சிறியீர் = எல்லீருஞ் சிறியீர்
எல்லீரும்+ தியீர் = எல்லீருந் தீயீர்
எல்லீரும் + பெரியீர் = எல்லீரும் பெரியீர்

நாம் + குறியம் = நாங் குறியம்
( ‘தாம்’ என்பது வேற்றுமைப் புணர்ச்சியில் ‘தம்’ ஆனதுபோல , அல்வழிப் புணர்ச்சியில் ஆகவில்லை)
நாம் + தீயம் = நாந் தீயம்
நாம் + பெரியம் = நாம் பெரியம்
யாம் + குறியேம் = யாங் குறியேம்
( ‘குறியம்’ – பேசுவோர்களையும் முன்னால் இருப்பவர்களையும் சேர்த்துக் குறிக்கும்;
‘குறியேம்’ – பேசுவோர்களை மட்டும் குறிப்பது;
இதை வைத்துத்தான் திவ்வியப் பிரபந்த உரைகளில் ‘அடியேங்கள்’ என்ற சொல் வரலாயிற்று !
‘அடியேங்கள்’ – அடியவர்களாகிய நாங்கள் .)

யாம் + சிறியேம் = யாஞ் சிறியேம்
யாம் + தீயேம் = யாந் தீயேம்
யாம் + பெரியேம் = யாம் பெரியேம்

ஈண்டு , இளம்பூரணர் மேலும் சில எடுத்துக் காட்டுகளைத் தருகிறார் !:-

எல்லாரும் + நீண்டார் = எல்லாருந் நீண்டார்
எல்லாரும் + நீண்டீர் = எல்லாருந் நீண்டீர்
எல்லாரும் + நீண்டாம் = எல்லாருந் நீண்டாம்
எல்லாரும் + நீண்டேம் = எல்லாருந் நீண்டேம்

இந்தவகைச் சொற்கள் எல்லாம் இன்று வழக்கில் இல்லை !

சற்று வேறுபாடான காரண காரிய இயைபு (Logic) குறைந்த புணர்ச்சிகள் தமிழில் மறைந்த வரலாறு இது !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (71)

Post by Dr.S.Soundarapandian on Sun May 26, 2013 11:00 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (71)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப். (வடமொழி), பி.எச்டி.
சென்னை-33


மகர இறுதிச் சொற்களின் புணர்ச்சியில் ‘எல்லாம்’ எனும் சொல்லை அடுத்ததாக எடுத்துக்கொள்கிறார் தொல்காப்பியர் !

‘எல்லாம்’ எனும் சொல் சற்று வேறுபாடானது !

மனிதர்கள் எல்லாம் வந்தனர் √
மடுகள் எல்லாம் வந்தன √

மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் பொதுவாக ‘எல்லாம்’ வருகிறது பார்த்தீர்களா ?

இவ்வாறு மனிதர்களுக்கும் , விலங்கு இயற்கைகளுக்கும் பொதுவாக வரும் சொல்லை , ‘விரவுச் சொல்’ என்று தமிழில் குறிப்பார்கள் !

தொல்காப்பியர் ‘எல்லாம்’ எனும் விரவுச் சொல்லின் புணர்ச்சியை ,

“அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
எல்லா மெனும்பெயர் உருபியல் நிலையும்
வேற்றுமை அல்வழிச் சாரியை நிலையாது” (புள்ளி மயங்கியல் 27)
என்கிறார் !

இளம்பூரணர் இதற்குக் காட்டும் எடுத்துக்காட்டுகளை வருமாறு விரித்துக் காட்டலாம் ! :-

எல்லாம் + குறியர் = எல்லாக் குறியரும் (உயர் திணை)
எல்லாம் + குறிய = எல்லாக் குறியவும் (அஃறிணை)

எல்லாம் + தீயர் = எல்லாத் தீயரும் (உயர் திணை)
எல்லாம் + தீய = எல்லாத் தீயவும் (அஃறிணை)

எல்லாம் + பெரியர் = எல்லாப் பெரியரும் (உயர் திணை)
எல்லாம் + பெரிய = எல்லாப் பெரியவும் (அஃறிணை)

- இவை அனைத்தும் அல்வழிப் புணர்ச்சிகள் !

எல்லாம் + கோடு = எல்லாவற்றுக் கோடும் (அஃறிணை)
= எல்லாம் + வற்று + கோடு + உம் ; வற்று , உம் – சாரியைகள் .

எல்லாம் + செவி = எல்லாவற்றுச் செவியும் (அஃறிணை)
எல்லாம் + தலை = எல்லாவற்றுத் தலையும்(அஃறிணை)
எல்லாம் + புறம் = எல்லாவற்றுப் புறமும் (அஃறிணை)

- இவை அனைத்தும் வேற்றுமைப் புணர்ச்சிகள் !

அடுத்த நூற்பாவில் ,

“மெல்லெழுத்து மிகினு மான மில்லை” (புள்ளி மயங்கியல் 28)

என்று தொல்காப்பியர் நவின்றதற்கு இளம்பூரணர் தந்த காட்டுகள் !:-

எல்லாம் + குறிய = எல்லாங் குறியவும் √
(சாரியை இலாது புணர்ந்துள்ளதை நோக்குக)

எல்லாம் + சிறிய = எல்லாஞ் சிறியவும் √
எல்லாம் + தீய = எல்லாந் தீயவும் √
எல்லாம் + பெரிய = எல்லாம் பெரியவும் √
எல்லாம் + குறியர் = எல்லாங் குறியரும் √
எல்லாம் + பெரியர் = எல்லாம் பெரியரும் √
எல்லாம் + தீயர் = எல்லாந் தீயரும் √

- இவை அனைத்தும் அல்வழிப் புணர்ச்சிகள் !

‘எல்லாம் பெரியரும்’ என்பதில் ஈற்று ‘உம்’ சாரியை என்றே உரையாசிரியர்களால் காட்டப்பட்டுள்ளது .

இதனை உறுதிப்படுத்தும் வகையில் , இளம்பூரணர் உரை , “உரையிற் கோடல் என்பதனால் இறுதி ‘உம்’மின்றி ‘எல்லாங் குறிய ’ , ‘எல்லாங் குறியர்’ எனவும்படும் ” என அமைகிறது .

அஃதாவது , ‘எல்லாங் குறிய’ என்பதே கூற வந்த செய்தி ! ‘எல்லாக் குறியவைகளும்’ என்பது கூறவந்த செய்தி அல்ல ! ‘எல்லாக் குறியவைகளும்’ என்பது கூறவந்த செய்தியானால் ஈற்று ‘உம்’ , முற்றும்மை ஆகும் ! அப்போது ஈற்று ‘உம்’ சாரியை ஆகாது !
தொல்காப்பியர் நவின்ற ‘எல்லாரும்’ , ‘எல்லாம்’ பற்றிய நுட்பங்களில் பல நமக்கு இன்று நெருக்கமில்லாதவை ! அவற்றை விளங்கிக்கொள்ள மேலே பார்த்த இளம்பூரணர் உரை ஓரளவிற்கு உதவுகிறது !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (72)

Post by Dr.S.Soundarapandian on Sun May 26, 2013 2:02 pmதொடத் தொடத் தொல்காப்பியம் (72)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப். (வடமொழி), பி.எச்டி.
சென்னை-33

அரசு அலுவலகங்களில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காகக் குறிப்பாணை (Memo) தருவார்கள் !
அதில் உள்ள வாசகங்கள் சுவையாக இருக்கும் !

“உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது ?” என்ற வினாவை இதே மாதிரி எழுதமாட்டார்கள் ! “உம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது ? ” என்று ‘உம்’போட்டு எழுதுவார்கள் !

‘உங்கள்’ என்ற மதிப்புத் தரும் சொல்லைத் தவிர்த்து , ‘உம்’ என்ற மதிப்புக் குறைவான சொல்லைப் போட்ட வரலாற்றைக் குடைந்தால் , அது தொல்காப்பியத்தில் , மகர ஈற்றுப் புணர்ச்சி பற்றிய ஒரு நூற்பாவில் போய் முடிகிறது!

அந் நூற்பா !:-

“நும்மென் ஒருபெயர் மெல்லெழுத்து மிகுமே” (புள்ளி மயங்கியல் 30)

இந்த ‘நும்’ , ஒரு விரவுப் பெயர் என்று நமக்குத் தெளிவு படுத்துபவர் இளம்பூரணரே !

இளம்பூரணரின் சுருக்க எடுத்துக்காட்டுகளை நாம் வருமாறு விரித்துக்கண்டால் தொல்காப்பிய நூற்பா விளங்கும் ! :-

நும் + கை = நும்கை ×
நுங்கை √

நும் + செவி = நும் செவி ×
நுஞ் செவி √

நும் + தலை = நும் தலை ×
நுந் தலை √

நும் + புறம் = நுப் புறம் ×
நும் புறம் √

- இவை யாவுமே வேற்றுமைப் புணர்ச்சிகள்தாம் !

இவற்றில் வந்த ‘நும்’ ஓர் விரவுப் பெயர் என முன்பே பார்த்தோம் !

அஃதாவது , ஒரு மனிதனைப் பார்த்து , ‘நும் காது’ என்று சொல்லலாம் ; ஒரு மாட்டைப் பார்த்து , ‘நும் காது’ எனவும் சொல்லலாம் ! “ மாடு புரிந்துகொள்ளுமா ? ” என்று கேட்காதீர்கள் ! விலங்குகளைப் பார்த்துப் பேசுவதும் பாடுவதும் தமிழில் ஒரு மரபுதான் ! “தாரா தாரா வந்தாரா ? அவர் சங்கதி ஏதும் சொன்னாரா ?” என்று தாராவைக் (தாரா- வாத்து) கேட்பது போன்ற பாட்டை நாம் அறிவோம் ! தராவுக்கு அக் கேள்வி புரிந்ததா ?

இளம்பூரணர் உரை முடிவில் , “ஒன்றின முடித்தல் என்பதனால் , ‘உங்கை’ என ‘உம்’ என்பதன் முடிபும் இவ்வீறாகக் கொள்க !” என்று எழுதுகிறார் !

இதில்தான் நாம் கட்டுரைத் தொடக்கத்தில் தேடிய வரலாறு நிற்கிறது !

அஃதாவது , ‘உம்’ என்பதும் ‘எல்லாம்’ , ‘நும்’ என்பன போன்ற ஓர் விரவுப் பெயர்தான் என்பது இளம்பூரணர் உரையால் அறிய முடிகிறது !

அறியப்படவேதான் , ‘உம்’ என்பது மனிதனுக்கும் எழுதலாம் , விலங்குக்கும் எழுதலாம் என்பது விளங்குகிறது ! அப்போதுதான் , குறிப்பாணைகளில் இந்த விரவுச் சொல்லான ‘உம்’மைத் தேர்ந்தெடுத்து , ‘உங்கள் மீது’ என எழுதாமல் ‘உம் மீது’ என்று எழுதிய மர்மமும் விளங்கியது !

‘நும்’ என்பதன் இனமாகவே ‘உம்’மும் உள்ளதால் , ‘ஒன்றினம் முடித்தல்’ என்ற உத்தியைப் பாய்ச்சுகிறார் இளம்பூரணர் !
பொருள் கொள்ளும் உத்திகளில் (Techniques) , ‘ஒன்றினம் முடித்தல்’ என்பதும் ஒன்று !

அஃதாவது , ஓர் இனத்தின் ஓர் உறுப்புக்குப் பொருந்தும் உண்மை , அதே இனத்து இன்னோர் உறுப்புக்கும் பொருந்தும் என்பதே இந்த உத்தியின் அடிப்படை !

இலக்கணம் கூறுவதில் மட்டும்தான் உத்திகள் என்று நினைக்காதீர்கள் ! உரைகளிலும்தான் உத்திகள் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (73)

Post by Dr.S.Soundarapandian on Sun May 26, 2013 2:33 pmதொடத் தொடத் தொல்காப்பியம் (73)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப். (வடமொழி), பி.எச்டி.
சென்னை-33

‘நீங்கள் குட்டையானவர்கள்’ – இன்றைக்கு எழுதுகிறோம்; சிக்கல் இல்லை !

ஆனால் , தொல்காப்பியருக்கு முந்தைய தமிழில் இதனையே , ‘நீயிர் குறியீர்’ எனவும் குறிக்கும் பழக்கம் இருந்தது !

இதிலுள்ள ‘நீயிர்’ என்பது எப்படி வந்தது ?

‘நும்’ என்பதிலிருந்து வந்தது - தொல்காப்பியர் விடை !

‘நும்’ என்பதிலிருந்து ‘நீயிர்’ எப்படி வருமாம் ?

இப்படியாம் !:-

நும் – உகரம் கெட – ந்ம்
ந்ம்- ஈ வர – நீஇம்
நீஇம்- ம் கெட – நீஇ
நீஇ – ரகர மெய் வர – நீஇர்
நீஇர் – யகர உடம்படுமெய் வர – நீயிர்

பிறகு ?

பிறகு , நீயிர் + குறியீர் = நீயிர் குறியீர் ஆகும் !

இஃது அல்வழிப் புணர்ச்சி !

இவ்வாறே ,

நீயிர் + சிறியீர் = நீயிர் சிறியீர்
நீயிர் + தீயீர் = நீயிர் தீயீர்
நீயிர் + பெரியீர் = நீயிர் பெரியீர்

என வரும் என்கிறார் இளம்பூரணர் !

ஓலைச் சுவடிகளில் தொல்காப்பியர் காலத்து மாணவர்கள் ‘நீயிர் பெரியீர் ’ என்பதைச் சரியாக எழுதாது விருப்பப்படி மாற்றி மாற்றி எழுதியிருப்பர் ! அதனைத் திருத்திச் செம்மைப் படுத்தவே தொல்காப்பியர் மறக்காமல் மேலைக் கருத்தை உள்ளடக்கிக் கீழ்வரும் நூற்பாவை எழுதினார் !:-

“அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை
உக்கெட நின்ற மெய்வயின் ஈவர
இஇடை நிலைஇ ஈறுகெட ரகரம்
நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே
ப்பால் மொழிவயின் இயற்கை யாகும்”
(புள்ளிமயங்கியல் 31)

இந் நூற்பாவிற்கு , இளம்பூரணர் நாம் மேலே பார்த்த எடுத்துக்காட்டுகளை எழுதிவிட்டு , “ஞான்றீர், நீண்டீர், மாண்டீர் என இயல்பு கணத்தோடும் ஒட்டுக” என்று முடித்தார் !

இதன் பொருள் ?

வன் கணம் அல்லாத ஏனை மூன்று கணங்களும் இயல்புக் கணங்களே !

அஃதாவது , க,ச,ட,த,ப என்ற ஐந்து வல்லெழுத்துகளே வன்கணம் !
ஏனை , உயிர் எழுத்துகள், மெல்லெழுத்துகள், இடையின எழுத்துகள் ஆகிய மூன்றும் இயல்புக்கணம் !

இளம்பூரணர் காட்டிய ஞான்றீர், மாண்டீர் , நீண்டீர் ஆகிய மூன்று சொற்களும் இயல்புக் கணங்களில் ஒன்றான மெல்லின எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களே !

இளம்பூரணர் ஒட்டச் சொன்னபடி ஒட்டினால் ,

நீயிர் + ஞான்றீர் = நீயிர் ஞான்றீர்
நீயிர் + மாண்டீர் = நீயிர் மாண்டீர்

என வரும் !

இம் மூன்றும் அல்வழிப் புணர்ச்சிகளே !

இடையே சந்தி விகாரம் எதுவும் ஏற்படவில்லை கவனிக்க

‘நீயிர்’ என்பது ‘நும்’மிலிருந்து வந்ததாகத் தொல்காப்பியர் கூறினாரல்லவா ?

இதனை இன்றைய மொழியிலாளர்கள் ஒத்துக்கொள்வதில்லை ! “ஏன் சுற்றிவளைத்து ? நீ + இர் = நீயிர் என்று சொல்லவேண்டியதுதானே ?” என்பது அவர்களுடைய வாதம் !

மொழியியலார் வாதம் , ‘நீயிர்’ வந்த பிறகு கூறப்படும் இலக்கணம் ! தொல்காப்பியர் , ‘நீயிர்’ வருவதற்கு முன்பிருந்த தமிழிலிருந்தல்லவா கொண்டுவரக் கடமைப்பட்டவர் ? அதனால்தான் இருவேறு வாதங்கள் !

தவிர்க்க முடியாதவை இவை !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (74)

Post by Dr.S.Soundarapandian on Thu May 30, 2013 9:54 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (74)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

மகர ஈற்று முதனிலைத் தொழிற் பெயர்களை அடுத்து எடுத்துக்கொள்கிறார் தொல்காப்பியர் !

முதனிலைத் தொழிற்பெயர் என்றால் ?

விகுதி பெறாத தொழிற் பெயரையே முதனிலைத் தொழிற்பெயர்(Verbal roots without suffix) என்கிறோம் !

முதல் + நிலை = முதனிலை

சில எடுத்துக்காட்டுகள் :-

முதனிலைத் தொழிற்பெயர் ------------- விகுதி பெற்ற தொழிற் பெயர்

பம் ----------------------------------- பம்மல்
செம் ------------------------------------ செம்மல்
தும் ----------------------------------- தும்மல்
விம் ----------------------------------- விம்மல்
கம் ----------------------------------- கம்மல்

மகர ஈற்று முதனிலைத் தொழிற் பெயர்கள் அல்வழியில் எப்படிப் புணரும், வேற்றுமையில் எப்படிப் புணரும் என்பதைத் தொல்காப்பியர் –

“தொழிற் பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல” (புள்ளி மயங்கியல் 32)

என்றார் !

இதில் என்ன விளங்குகிறது ?

ஒன்றும் விளங்கவில்லை !

“தொழிற் பெயர் எப்படிப் புணரும் ?” என்று கேட்டால் , “தொழிற் பெயர் போலப் புணரும் ” என்றால் என்ன செய்வது ?

இங்கேதான் உரையாசிரியர் (Commentator) தேவைப்படுகிறார்!

மனப்பாட நோக்கத்திற்காகத் தொல்காப்பியர் அவ்வாறு சுருக்கமாக நூற்பா எழுதினார் ! நாம் இளம்பூரணர் முதலியோர் உரைகொண்டு பொருளைத் துலக்கி அறியவேண்டும் !

இளம்பூரணர் உரைப்படி , ‘செம்’ என்ற முதனிலைத் தொழிற் பெயரானது , அல்வழிப் புணர்ச்சியில் , கீழ்வருமாறு புணரும் ! :-

செம் + கடிது = செம்முக் கடிது (உ- சாரியை ; க்- சந்தி)
செம்+ சிறிது = செம்முச் சிறிது (உ-சாரியை ; க்-சந்தி)
செம்+ தீது = செம்முத் தீது (உ- சாரியை ; த்- சந்தி)
செம் + பெரிது = செம்முப் பெரிது (உ-சாரியை ; ப்- சந்தி)
செம் + ஞான்றது = செம்மு ஞான்றது (உ-சாரியை)
செம் + நீண்டது = செம்மு நீண்டது (உ - சாரியை)
செம் + மாண்டது = செம்மு மாண்டது (உ- சாரியை)
செம் + வலிது = செம்மு வலிது (உ- சாரியை)

இளம்பூரணர் காடிய வழியில் நாம் வேறு சில எடுத்துக்காட்டுகளைத் தரலாம் !:-

தூக்கம் + கடிது = தூக்கங் கடிது (அல்வழிப் புணர்ச்சி)
தூக்கம் + கடுமை = தூக்கக் கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி)

ஆக்கம் + சிறிது = ஆக்கஞ் சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
ஆக்கம் + சிறுமை = ஆக்கச் சிறுமை (வேற்றுமைப் புணர்ச்சி)

தாக்கம் + பெரிது = தாக்கம் பெரிது (அல்வழிப் புணர்ச்சி)
தாக்கம் + பெருமை = தாக்கப் பெருமை (வேற்றுமைப் புணர்ச்சி)


‘நாட்டம்’ என்பதைப் போலவே , இங்கே வந்துள்ள ‘தாக்கம்’ , ‘ஆக்கம்’ ஆகியனவும் ‘அம்’ எனும் தொழிற் பெயர் விகுதி பெற்ற தொழிற் பெயர்களே !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (75)

Post by Dr.S.Soundarapandian on Sat Jun 01, 2013 11:53 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (75)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

மகர ஈற்றுத் தொழிற்பெயர்கள் உகரச் சாரியை (Expletive particle ‘U’) முதலியன பெற்றுப் புணர்ந்ததை முன் கட்டுரையில் பார்த்தோம் !

அடுத்ததாகத் , தொழிற்பெயர் மட்டுமல்லாது , சில பொருட் பெயர்களும் அதே பாங்கில் புணரும் என்கிறார் தொல்காப்பியர் !:-

“ஈமுங் கம்மு முருமென் கிளவியும்
ஆமுப் பெயரு மவற்றோ ரன்ன” (புள்ளி மயங்கியல் 33)

இதற்கு இளம்பூரணர் காட்டிய எடுத்துக்காட்டுகளை வருமாறு விவரிக்கலாம் !:-

ஈம் + கடிது = ஈமுக் கடிது (உ- சாரியை ; க்- சந்தி)
கம் + கடிது = கம்முக் கடிது (உ- சாரியை ; க்- சந்தி)
உரும் + கடிது = உருமுக் கடிது (உ – சாரியை ; க்- சந்தி)

ஈம் + சிறிது = ஈமுச் சிறிது (உ- சாரியை ; ச்-சந்தி)
கம் + சிறிது = கம்முச் சிறிது (உ- சாரியை ; ச்- சந்தி)
உரும் + சிறிது = உருமுச் சிறிது (உ- சாரியை ;ச் - சந்தி)

ஈம் + தீது = ஈமுத் தீது (உ- சாரியை ; த்- சந்தி)
கம் +தீது = கம்முத் தீது (உ- சாரியை ; த்- சந்தி)
உரும் + தீது = உருமுத் தீது (உ-சாரியை ; த்- சந்தி)

ஈம் + பெரிது = ஈமுப் பெரிது (உ-சாரியை ; ப்- சந்தி)
கம் + பெரிது = கம்முப் பெரிது (உ- சாரியை ; ப்- சந்தி)
உரும் + பெரிது = உருமுப் பெரிது (உ- சாரியை ; ப்- சந்தி)

- இப் பன்னிரண்டும் அல்வழிப் புணர்ச்சிகளே !

மேலே வந்தவை வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களுடன் , ஈம் ,கம் , உரும் ஆகிய பெயர்கள் கொண்ட புணர்ச்சி !

இதே பெயர்கள் , மெல்லெழுத்து இடையெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களுடன் புணர்வதையும் சுருக்கமாகக் குறிக்கிறார் இளம்பூரணர் !இதனை வருமாறு விரிக்கலாம் !:-

ஈம்+ ஞான்றது = ஈமு ஞான்றது (உ-சாரியை)
கம் + ஞான்றது = கம்மு ஞான்றது (உ-சாரியை)
உரும் + ஞான்றது = உருமு ஞான்றது (உ- சாரியை)

ஈம் + நீண்டது = ஈமு நீண்டது (உ- சாரியை)
கம் + நீண்டது = கம்மு நீண்டது (உ- சாரியை)
உரும் +நீண்டது = உருமு நீண்டது (உ- சாரியை)

ஈம் + வலிது = ஈமு வலிது (உ- சாரியை)
கம் + வலிது = கம்மு வலிது (உ- சாரியை)
உரும் + வலிது = உருமு வலிது ( உ- சாரியை)

-இவ் வொன்பதும் அல்வழிப் புணர்ச்சிகளே !

இனி, வேற்றுமைப் புணர்ச்சியில் , இதே மூன்று பெயர்களும் புணர்வதை வருமாறு குறித்தார் இளம்பூரணர் ! :-

ஈம் + கடுமை = ஈமுக் கடுமை (உ- சாரியை ; க்- சந்தி)
கம்+ கடுமை = கம்முக் கடுமை (உ- சாரியை ; க்- சந்தி)
உரும் + கடுமை = உருமுக் கடுமை (உ- சாரியை ; க்- சந்தி)

ஈம் + சிறுமை = ஈமுச் சிறுமை (உ – சாரியை; ச் - சந்தி)
கம் + சிறுமை = கம்முச் சிறுமை (உ- சாரியை ; ச் - சந்தி)
உரும் + சிறுமை = உருமுச் சிறுமை (உ- சாரியை ; ச் - சந்தி)

ஈம் + தீமை = ஈமுத் தீமை (உ-சாரியை; த்- சந்தி)
கம் + தீமை = கம்முத் தீமை (உ- சாரியை ; த்- சந்தி)
உரும் + தீமை = உருமுத் தீமை (உ- சாரியை ; த்- சந்தி)

ஈம்+ பெருமை = ஈமுப் பெருமை (உ- சாரியை ; ப்- சந்தி)
கம் + பெருமை = கம்முப் பெருமை (உ- சாரியை ; ப்- சந்தி)
உரும் + பெருமை = உருமுப் பெருமை (உ- சாரியை ; ப்- சந்தி)

வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததை மேலே பார்த்தோம் !

இதைப் போன்றே , மெல்லெழுத்து,இடையெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் ஈம், கம் , உரும் ஆகிய பெயர்களுடன் வந்து புணருமாற்றை , இளம்பூரணர் வழியில் , வருமாறு காட்டலாம் ! :-

ஈம் + ஞாற்சி = ஈமு ஞாற்சி(உ- சாரியை )
கம் + ஞாற்சி = கம்மு ஞாற்சி (உ- சாரியை )
உரும் + ஞாற்சி = உருமு ஞாற்சி (உ- சரியை)

ஈம் + நீட்சி = ஈமு நீட்சி (உ- சாரியை)
கம் + நீட்சி = கம்மு நீட்சி (உ- சாரியை)
உரும் + நீட்சி = உருமு நீட்சி (உ - சாரியை)

ஈம் + வலிமை = ஈமு வலிமை (உ- சாரியை)
கம் + வலிமை = கம்மு வலிமை (உ- சாரியை)
உரும் + வலிமை = உருமு வலிமை ( உ- சாரியை)

- இவ் வொன்பதும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !

மேலே வந்த மூன்று பெயர்களின் பொருள்தான் என்ன ?

ஈம்- சுடுகாடு .
கம் - ‘கம்மியர்’ எனப்படும் விசுவகர்மர்களின் தொழில்களைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயர்.
உரும்- இடி .

இவற்றில் , ‘ஈம்’ என்பது அருஞ்சொல் போலத் தோன்றும் ! ஆனால் , இது நமக்குப் பழக்கமான சொல்தான் !

‘ஈமச் சடங்கு’ – சொல்கிறோ மல்லவா? இதில் வரும் ‘ஈம்’தான் !

விசுவகர்மர்கள் சிலை செய்தாலும் , நகை செய்தாலும் , மரவேலை செய்தாலும் வெட்டிக் குறைக்கும் பணிதான் அவர்களின் முதற் பணி ! ‘கம்மி ரேட்டுக்கு வாங்கினேன்’ – சொல்கிறோ மல்லவா? கம்மி – குறைந்த .
ஆகவே , ‘கம்’ என்ற அடி நமக்குப் பழக்கமான அடி (Stem) அல்லவா?

ஈம், கம், உரும் – ஆகிய பெயர்களை இளம்பூரணர் குறிக்குப்போது , ‘பொருட் பெயர்கள்’ என்ற ஒரு கலைச் சொல்லால் (Technical term) அவற்றைக் குறிக்கிறார் !

பொருட் பெயர் என்றால் என்ன ?

பொருளைக் குறிக்கும் பெயர் பொருட் பெயர் !

ஒரு பொருளைக் குறிக்கும் பெயரும் பொருட் பெயர்தான் ; ஒரு பொருளின் அடியாகப் பிறக்கும் பெயரும் பொருட் பெயர்தான் !

மாங்காய் – ஒரு பொருளைக் குறிப்பது ; பொருட் பெயர் .
பொன்னன் – ‘பொன்’ என்ற பெயர் அடியாகப் பிறந்த பெயர் ; பொருட் பெயர்.

‘மாங்காய் ’ – ஒரு பொருளைக் குறிப்பதால் பொருட் பெயரென்று பார்த்தோம் ! அதுவும் பொருட் பெயர்தான் , ‘தோப்பு’ என்றாலும் அதுவும் பொருட் பெயர்தான் ! இதனால்தான் சுடுகாட்டைக் குறிக்கும் ‘ஈம்’ பொருட் பெயரானது !

தொழிற் பெயரிலிருந்து வேறுபடுத்தவே ‘பொருட் பெயர்’ என்ற கலைச் சொல்லைப் பயன்படுத்தினார் இளம்பூரணர் !

ஈம், கம், உரும் – இந்த உதாரணங்களைத்தான் பொருட் பெயருக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமா? வேறு சொற்களை எடுத்துக்கொள்ளக் கூடாதா?

நிலம் - இஃது ஒரு பொருட் பெயர்தான்; இதனை சோதித்துப் பார்ப்போமே!

நிலம் + கடுமை = நிலக் கடுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
நிலம் + கடுமை = நிலமுக் கடுமை ×

பார்த்தீர்களா? வேற்றுமைப் புணர்ச்சியில் ,உகரச் சாரியையை ‘நிலம்’ என்ற பொருட் பெயர் ஏற்றுக்கொள்ளவில்லை !

அல்வழியில் சோதிப்போமே !

நிலம் + நீண்டது = நில நீண்டது√ (அல்வழிப் புணர்ச்சி)
நிலம் + நீண்டது = நிலமு நீண்டது ×

இங்கும் உகரச் சாரியையை ‘நிலம்’ என்ற பொருட் பெயர் ஏற்றுக்கொள்ளவில்லை !

தொழிற் பெயர்களைப்போன்றே சில பொருட் பெயர்களும் உகரச் சாரியை பெறும் என்ற தொல்காப்பியர் விதிக்கு ஏற்புடைய எடுத்துக்காட்டுகளைத்தான் இளம்பூரணர் தந்துள்ளார் என்பது நமது மொழிச் சோதனைச் சாலையில் (Language lab) தெளிவாகிவிட்டதல்லவா?

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (76)

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 02, 2013 12:29 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (76)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

மகர ஈற்றுச் சொற்களில் வரும் ஈற்று மகரம் அரை மாத்திரை கொண்டது !

கலம் – இதில் ‘ம்’க்கு மாத்திரை - ½

ஆனால், மகர இறுதிச் சொற்களின் முன்னே ‘வ’வை முதலாகக் கொண்ட சொற்கள் வந்தால் , அப்போது , மகர மாத்திரை அரையிலிருந்து கால் ஆகும் ! இதற்கு மகரக் குறுக்கம் (Shortening of ‘m’) என்று பெயர் !

இதற்கு விதி ! :-

“வகார மிசையு மகாரம் குறுகும்” (புள்ளி மயங்கியல் 35)

இளம்பூரணர் , இதற்கு உரை எழுதும்போது தொல்காப்பியர் ஏற்கனவே இரு இடங்களில் மகரக் குறுக்கம் பேசிய இடங்களை நமக்கு நினைப்பூட்டுகிறார் ! (இதுதான் இளம்பூரணர் உரைத்திறன் என்பது) :-

1. ‘நூன் மரபு’ப் பகுதியில் சூத்திரம் 13
2. ‘மொழி மரபு’ப் பகுதியில் சூத்திரம் 19

1. நூன் மரபுச் சூத்திரம் 13 –

“அரையளபு குறுகல் மகர முடைத்தே
இசையிட னருகுந் தெரியுங் காலை”

அஃதாவது , வேறு ஓர் ஓசையுடன் இணைந்து ‘ம்’வரும்போது , ‘ம்’மின் அரை மாத்திரை ஒலி அளபு , கால் மாத்திரை அளபாகக் குறைந்து ஒலிக்கும் !

இதற்கு எடுத்துக்காட்டாக இளம்பூரணர் , ‘போன்ம்’ என்ற சொல்லைக் காட்டுகிறார் !

இதில் , ஈற்று ‘ம்’க்கு மாத்திரை ¼ ஆகும் ! இதுவே மகரக் குறுக்கம் என்பது !

2. மொழி மரபுச் சூத்திரம் 19 –

“ னகார முன்னர் மகாரங் குறுகும்”

இதற்கும் எடுத்துக்காட்டாக இளம்பூரணர் ‘போன்ம்’ என்ற சொல்லையே காட்டுகிறார் ! இங்கும் , மேலே கூறியபடி , ‘ம்’மின் மாத்திரை ¼தான் !

இந்த இரு இடங்களில் மகரக் குறுக்கம் பேசிவிட்ட பிறகும் , மகர ஈற்றுச் சொற்களைப் பேசும் புள்ளி மயங்கியலிலும் , நாம் தொடக்கத்தில் காட்டியபடி , மகரக் குறுக்கம் பேசுகிறார் தொல்காப்பியர் !

இவ்வாறு , ஓரிடத்தில் கூறிய செய்தியைத் திடீரென்று இன்னோர் இடத்தில் இணைத்துப் பேசுவதைத்தான் இளம்பூரணர் , ‘பருந்து விழுக்காடாய்’ என்றார் !

பருந்து வானில் எங்கோ தூரத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கும் ! திடீரென்று தரையில் பாய்ந்து ஒரு கோழிக்குஞ்சைத் தூக்கிக்கொண்டு பறந்துவிடும் !

இதுதான் பருந்து விழுக்காடு !

தொல்காப்பியரின் செய்கையை இதனோடு ஒப்பிட்டு இரசியுங்கள் !

உரைநடைதான் எழுதுகிறார் தொல்காப்பியர் ! ஆனால் , அதனைத் தெளிவாக்க எப்படிப்பட்ட அருமையான – சுவையான- உவமையைத் (Simile) தருகிறார் பார்த்தீர்களா?

‘நிலம் வலிது’ – என்ற இளம்பூரணர் எடுத்துக்காட்டைப் போல மேலும் சில மகரக் குறுக்க எடுத்துக்காட்டுகளை நாம் தரலாம் ! :-

கயம் வந்தது
படம் வரைந்தான்
சூடம் வழங்கினான்
பட்டம் வலிது

‘ம்’ என்பது மூக்கொலி (Nasal) ஆகும் !

‘வ’ என்பது பல்லிதழ் ஒலி (Labio dental) ஆகும்!

இந்த இரண்டும் அடுத்தடுத்து ஒலிக்கும்போது, திணறல் ஏற்படுகிறது ; இதனால் , ஒன்று பணிந்துபோகவேண்டியுள்ளது ! இதுதான் மகரக் குறுக்கத்தின் இரகசியம் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (77)

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 02, 2013 7:11 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (77)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

மகர ஈற்றுப் புணர்ச்சிகளின் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளோம் !

மகர ஈற்றில் முடியும் நாட்பெயர்ச் சொல் வேற்றுமையில் எப்படிப் புணரும் என்று பேசுகிறார் தொல்காப்பியர் ! :-

“நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன
அத்து மான்மிசை வரைநிலை யின்றே
ஒற்றுமெய் கெடுத லென்மனார் புலவர்” (புள்ளி மயங்கியல் 36)

‘மகம்’ – இது ‘ம்’ ஈற்று நாட்பெயர்க் கிளவி ! ‘மக நட்சத்திரம்’ என்று கூறக் கேட்டிருப்பீர்கள் !

இஃது எப்படி வேற்றுமைப் பொருளில் புணருமாம் ?

மகம் நட்சத்திரத்தன்று ஒரு பொருளை வாங்கினால் , அப்போது , ‘மகத்தாற் கொண்டான்’ எனலாம் !

மகம் + கொண்டான் = மகம் + அத்து + ஆன் + கொண்டான்
= மகத்தாற் கொண்டான்.
அத்து – சாரியை; ஆன் -சாரியை.

இது போன்றே ,
மகம் + சென்றான் = மகம் + அத்து + ஆன் + சென்றான்
= மகத்தாற் சென்றான்

மகம் + தந்தான் = மகம் + அத்து + ஆன் + தந்தான்
= மகத்தாற் றந்தான்

மகம் + போயினான் = மகம் + அத்து + ஆன் + போயினான்
= மகத்தாற் போயினான்
என வரும்!

இங்கு ‘ஆன்’ சாரியை வந்தது போன்றே , ‘ஞான்று’ என்ற ஒரு சாரியையும் வரும் என்கிறார் இளம்பூரணர் ! :-

மகம் + கொண்டான் = மகம் + அத்து + ஞான்று +கொண்டான்
= மகத்து ஞான்று கொண்டான் .
அத்து – சாரியை; ஞான்று -சாரியை.

இது போன்றே ,

மகம் + சென்றான் = மகம் + அத்து + ஞான்று +சென்றான்
= மகத்து ஞான்று சென்றான் .

மகம் + தந்தான் = மகம் + அத்து + ஞான்று + தந்தான்
= மகத்து ஞான்று தந்தான் .

மகம் + போயினான் = மகம் + அத்து + ஞான்று + போயினான்
= மகத்து ஞான்று போயினான் .

என வரும்!

‘ஞான்று’ எனும் சாரியையைத் தொல்காப்பியர் கூறவில்லை ! ‘அத்து’, ‘ஆன்’ ஆகிய இரு சாரியைகளை மட்டுமே அவர் கூறினார் ! இளம்பூரணராகச் சேர்த்துக் கொண்டதுதான் ‘ஞான்று’ !

தொல்காப்பியர் கூறாத வேறு ஒரு முடிபையும் இளம்பூரணர் உரைக்கிறார் !

அஃதாவது , “நாட் பெயர்தான் , வேற்றுமையில், இப்படிப் புணரும் என எண்ணவேண்டாம் ! சில பொருட் பெயர்களும் அதே முறையில் புணரும் ” என்கிறார் இளம்பூரணர்!

அவர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விரித்துக் காட்டலாம் !:-

மரம் + கொண்டான் = மரம் + அத்து + ஆன் + கொண்டான்
= மரத்தாற் கொண்டான்.
அத்து – சாரியை; ஆன் -சாரியை.

மரம் + சென்றான் = மரம் + அத்து + ஆன் +சென்றான்
= மகத்தாற் சென்றான் .

மரம் + கொண்டான் = மரம் + அத்து + ஆன் + கொண்டான்
= மரத்தாற் கொண்டான்

மரம் + போயினான் = மரம் + அத்து + ஆன் + போயினான்
= மரத்தாற் போயினான்

- இந் நான்கும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !

மரம் – பொருட் பெயர்;அஃதாவது பொருளின் பெயர் .

மரத்தாற் கொண்டான் - மரத்தினால் கொண்டான் ; இதில் வேற்றுமைப் பொருள் இருப்பதை நோக்கலாம் .

மேல் தொல்காப்பிய நூற்பாவில், ‘முந்து கிளந்தன்ன’ என்பதை நோக்கலாம் !

‘முன்னே சொன்னது போல ’ என்பது இதன் பொருள் !

முன்னே எங்கே சொன்னார் ?

உயிர் மயங்கியலில் சொன்னார் !

உயிர் மயங்கியலில்,

“திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன” (உயிர் மயங்கியல் 84)
என்றார் !

இதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் :-

சித்திரை + கொண்டான் = சித்திரைக்குக் கொண்டான் .
இக்கு – சாரியை .

கேட்டை + கொண்டான் = கேட்டையாற் கொண்டான் .
ஆன் – சாரியை .

- இவ்விரண்டும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !

ஒரு நூற்பாவை எழுதும்போது , அதற்கு முன் கூறிய ஒரு நூற்பாவோடு இணைத்து உரைத்தால் அதனை ‘மாட்டேறு’ என்பர் !

நாம் பார்த்த புள்ளி மயங்கியல் சூத்திரம் 36க்கு மாட்டேற்றுச் சூத்திரம் 84 ஆகும் ! சூத்திரம் 84இல் நாளின் பெயர்களும் , சாரியைகளும் வந்துள்ளதை நோக்கலாம் !

மாட்டி , ஏற்றிக் கூறுவதால் , அது மாட்டேறு ! மாட்டின் மீது ஏறுவதல்ல !

இத்துடன் புள்ளி மயங்கியலில் தொல்காப்பியர் கூறிய மகர ஈற்றுப் புணர்ச்சிகள் முடிவடைந்துள்ளன !

அடுத்ததாக எந்த ஈற்றுப் புணர்ச்சியை அவர் எடுத்துக்கொள்கிறார் எனப் பார்ப்போம் !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (78)

Post by Dr.S.Soundarapandian on Thu Jun 06, 2013 8:57 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (78)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

மகர ஈற்றுச் சொற்களை அடுத்துத் தொல்காப்பியர் எடுத்துக்கொள்வது , னகர ஈற்றுச் சொற்களை !

பல னகர ஈற்றுச் சொற்கள் புணருமாற்றை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம் !

பார்த்தவை போக மீதியை இப்போது காணலாம் !
“மின்னும் பின்னும் பன்னும் கன்னும்
அந்நாற் சொல்லும் தொழிற்பெய ரியல” (புள்ளி மயங்கியல்50)

மின், பின், பன்,கன் – இந்த நான்கு தொழிற்பெயர்களுடன் வேற்றுமையிலும் அல்வழியிலும் எப்படிச் சொற்களோடு புணரும் என்று இதில் கூறுகிறார் !

அஃதாவது , வேற்றுமையில், கீழ்வருமாறு இவை புணரும் :-

மின்+ கடுமை = மின்னுக் கடுமை (உ- சாரியை;க்-சந்தி)
பின் + கடுமை = பின்னுக் கடுமை (”)
பன் + கடுமை = பன்னுக் கடுமை (”)
கன் + கடுமை = கன்னுக் கடுமை (”)

மின்+ சிறுமை = மின்னுச் சிறுமை (உ- சாரியை;ச்-சந்தி)
பின் + சிறுமை = பின்னுச் சிறுமை (”)
பன் + சிறுமை = பன்னுச் சிறுமை (”)
கன் + சிறுமை = கன்னுச் சிறுமை (”)

மின்+ தீமை = மின்னுத் தீமை (உ- சாரியை;த்-சந்தி)
பின் + தீமை = பின்னுத் தீமை (”)
பன் + தீமை = பன்னுத் தீமை (”)
கன் + தீமை = கன்னுத் தீமை (”)

மின்+பெருமை = மின்னுப் பெருமை (உ- சாரியை;ப்-சந்தி)
பின் + பெருமை = பின்னுப் பெருமை (”)
பன் + பெருமை = பன்னுப் பெருமை (”)
கன் + பெருமை = கன்னுப் பெருமை (”)

வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்வதற்கே மேலை எடுத்துக்காட்டுகள் பொருந்தும் !

மெல்லெழுத்து, இடையெழுத்துகள் வந்தால் ?

கீழே காண்போம் !: -

மின்+ஞாற்சி = மின்னு ஞாற்சி (உ- சாரியை)
பின் + ஞாற்சி= பின்னு ஞாற்சி (”)
பன் + ஞாற்சி = பன்னு ஞாற்சி (”)
கன் + ஞாற்சி = கன்னு ஞாற்சி (”)

மின்+நீட்சி = மின்னு நீட்சி (உ- சாரியை)
பின் + நீட்சி = பின்னு நீட்சி (”)
பன் + நீட்சி = பன்னு நீட்சி (”)
கன் + நீட்சி = கன்னு நீட்சி (”)

மின்+மாட்சி = மின்னு மாட்சி (உ- சாரியை)
பின் + மாட்சி = பின்னு மாட்சி (”)
பன் + மாட்சி = பன்னு மாட்சி (”)
கன் + மாட்சி = கன்னு மாட்சி (”)

மின்+வலிமை = மின்னு வலிமை (உ- சாரியை)
பின் + வலிமை = பின்னு வலிமை (”)
பன் + வலிமை = பன்னு வலிமை (”)
கன் + வலிமை = கன்னு வலிமை (”)

மின்+யாப்பு = மின்னு யாப்பு (உ- சாரியை)
பின் + யாப்பு = பின்னு யாப்பு (”)
பன் + யாப்பு = பன்னு யாப்பு (”)
கன் + யாப்பு = கன்னு யாப்பு (”)

- இதுவரை பார்த்த 40 புணர்ச்சிகளும் , வேற்றுமைப் புணர்ச்சிகளே !

அல்வழியில் ?

வருமாறு அமையும் !:-

மின்+கடிது= மின்னுக் கடிது (உ- சாரியை; க்- சந்தி)
பின் + கடிது= பின்னுக் கடிது (”)
பன் + கடிது= பன்னுக் கடிது (”)
கன் + கடிது= கன்னுக் கடிது (”)

மின்+சிறிது= மின்னுச் சிறிது (உ- சாரியை; ச்- சந்தி)
பின் + சிறிது= பின்னுச் சிறிது (”)
பன் + சிறிது= பன்னுச் சிறிது (”)
கன் + சிறிது= கன்னுச் சிறிது (”)

மின்+தீது= மின்னுத் தீது (உ- சாரியை; த்- சந்தி)
பின் + தீது= பின்னுத் தீது (”)
பன் + தீது= பன்னுத் தீது (”)
கன் + தீது= கன்னுத் தீது (”)

மின்+பெரிது= மின்னுப் பெரிது (உ- சாரியை; ப்- சந்தி)
பின் + பெரிது = பின்னுப் பெரிது (”)
பன் + பெரிது = பன்னுப் பெரிது (”)
கன் + பெரிது = கன்னுப் பெரிது (”)

மேலைப் 16 இடங்களிலும் வல்லின எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களே வந்து புணர்ந்தன !

இனி , மெல்லின (மென் கணம்) , இடையின (இடைக் கணம்) எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும் நிலையைக் காணலாம் !:-

மின்+ஞான்றது= மின்னு ஞான்றது (உ- சாரியை)
பின் + ஞான்றது=பின்னு ஞான்றது (”)
பன் + ஞான்றது= பன்னு ஞான்றது (”)
கன் + ஞான்றது= கன்னு ஞான்றது (”)

மின்+நீண்டது= மின்னு நீண்டது (உ- சாரியை)
பின் + நீண்டது= பின்னு நீண்டது (”)
பன் + நீண்டது= பன்னு நீண்டது (”)
கன் + நீண்டது= கன்னு நீண்டது (”)

மின்+மாண்டது= மின்னு மாண்டது (உ- சாரியை)
பின் + மாண்டது= பின்னு மாண்டது (”)
பன் + மாண்டது= பன்னு மாண்டது (”)
கன் + மாண்டது= கன்னு மாண்டது (”)

மின்+வலிது= மின்னு வலிது (உ- சாரியை)
பின் + வலிது= பின்னு வலிது (”)
பன் + வலிது= பன்னு வலிது (”)
கன் + வலிது= கன்னு வலிது (”)

மின்+யாது= மின்னு யாது (உ- சாரியை)
பின் + யாது= பின்னு யாது (”)
பன் + யாது= பன்னு யாது (”)
கன் + யாது= கன்னு யாது (”)

- இதுவரை காட்டிய உதாரணங்கள் இளம்பூரணர் சுருக்கமாகக் குறித்தவை !

இவைதாம் தொல்காப்பியர் குறித்தவை !

கடைசியில் இளம்பூரணர் உள்ளே நுழைகிறார் !

நுழைந்து , “தொழிற் பெயருக்கு மட்டுமல்ல ! பொருட் பெயருக்கும் இந்த வழியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் !” என்று ஒரு விதியைத் தூக்கிப் போடுகிறார் ! ஆனால் எடுத்துக்காட்டு எதனையும் தரவில்லை !

“மின், பின், பன்,கன் ஆகிய நான்குமே தொழிற் பெயர்கள்தாம் ! இந்த நான்கையும் பொருட் பெயர்களாகவும் கொள்ளலாம் !

ஏனெனில் , “மின் என்பது ஒரு தொழில் ! அப்போது அது தொழிற் பெயர்! அதே ‘மின்’என்பது ஒரு பொருளின் பெயர் ! அப்போது அது பொருட் பெயர் !
மின் ,பின் , பன், கன் ஆகிய நான்குமே இப்படித்தான் தொழிற் பெயர்களாகவும் பொருட் பெயர்களாகவும் ஒரே நேரத்தில் செயல்படுகின்றன என்ற விளக்கத்தை அவருக்கே உரிய சுருக்க உரைநடையில் தருகிறார் !

அஃதாவது,

மின் – முதனிலைத் தொழிற் பெயர் (மின்னுதலைக் குறிக்கும்)
மின் – பொருட் பெயர் (மின்னலைக் குறிக்கும்)

பின் _ தொழிற்பெயர் (பின்னும் தொழிலைக் குறிக்கும்)
பின் – பொருட் பெயர் (பின்னிய கூந்தலைக் குறிக்கும்)

பன் – தொழிற் பெயர் (சொல்லுதலைக் குறிக்கும்)
பன் – பொருட் பெயர் ( ‘சொல்’ என்ற பொருளில் வரும்)

கன் – தொழிற் பெயர் (கன்னார் தொழிலைக் குறிக்கும்)
கன் – பொருட் பெயர் (கன்னாரைக் குறிக்கும்)
(கன்னார் – உலோகப் பாத்திரங்கள் செய்யும் விசுவகர்மர்கள்)

இந்த எடுத்துக்காட்டுகளைப் பின்பற்றிக் கண் , மண், புண் முதலிய சொற்களுக்கும் புணர்ச்சிகள் அமைக்கலாமா ?

முடியாது !

னகர ஈற்றுச் சொற்களுக்கு உரிய இலக்கணம் ணகர ஈற்றுச் சொற்களுக்குப் பொருந்தாது!

தொல்காப்பியரின் ‘மின்’ முதலாய சொற்களைப் பார்த்தாலே தொல்காப்பியத்தின் பழமையை விளங்கிக் கொள்ளலாம் !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (79)

Post by Dr.S.Soundarapandian on Sat Jun 08, 2013 7:12 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (79)


-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘கன்னார்’ எனும் விசுவகர்மர்களையும் அவர்தம் தொழிலையும் குறிக்கும் ‘கன்’ எனும் சொற்புணர்ச்சிகளை முன் கட்டுரையில் பார்த்தோம் !

அதே ‘கன்’ எனும் சொல்லுக்கு ஒரு விதி விலக்கைத் தொல்காப்பியர் தொடர்ந்து கூறுகிறார் !:-

“வேற்றுமை யாயின் ஏனை எகினொடு
தோற்றம் ஒக்கும் கன்னென் கிளவி ” (புள்ளி மயங்கியல் 51)

எகின்’ எனும் மரப்பெயர் , அகரச் சாரியையும் வல்லெழுத்தும் பெற்று ,

எகின் + கால் = எகினக்கால்
என்று புணரும் என இதே புள்ளிமயங்கியலில் (நூற்பா 42) , முன்பு காட்டினார் தொல்காப்பியர்!

அதை ஏன் இங்கு நினைவுபடுத்துகிறார் ?

ஏனெனில் , மனப்பாடம் செய்பவர்களுக்கு ஏதுவாக !

அந்தக் காலத்தில் தொல்காப்பியம் படித்தவர் என்றால் 1610 நூற்பாக்களையும் மனப்பாடமாகச் சொல்லக்கூடியவர் என்று பொருள் !

“இது உண்மையா ?” என்று யாரும் புருவத்தை நெளிக்க வேண்டாம் !

தி.ம. நடராசன் ஆச்சாரி என்று ஒருவர் சென்னையில் இருந்தார் ! அவரை நான் சந்தித்திருக்கிறேன்! அவர் சிலப்பதிகாரம் முழுவதையும் , முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை, மனப்பாடமாக ஒப்பிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார் !

1980களிலேயே இந்த நிலை இருந்தது என்றால் , கி.மு.1000த்தில் ? நிச்சயமாகத் தொல்காப்பியத்தை மாணவர்கள் மனப்பாடம் செய்துவைத்திருப்பர் என்று உறுதியாக் கூறிவிடலாம் !

‘கன்’ எனும் சொல் , வேற்றுமைப் பொருட் புணர்ச்சியில் , அகரச் சாரியையும் , வல்லெழுத்தையும் பெற்றுப் புணரும் என்பதே மேல் நூற்பாவின்(புள்ளி மயங்கியல் 51) பொருள் !

இளம்பூரணர் தந்த உதாரணங்களை நாம் வருமாறு பரப்பிக் காணலாம் !:-

கன் + குடம் = கன் + அ+க்+ குடம்= கன்னக் குடம் (அ- சாரியை; க்-சந்தி)
கன் + சாடி = கன் + அ+ ச்+ சாடி =கன்னச் சாடி (அ- சாரியை ; ச்- சந்தி)
கன் + தூதை = கன் + அ+த்+தூதை=கன்னத் தூதை (அ- சாரியை ; த்- சந்தி) கன் +பானை=கன்+அ+ப்+பானை=கன்னப் பானை (அ-சாரியை;ப்-சந்தி)

இதே ‘கன்’ , இதே வேற்றுமைப் புணர்ச்சியில் , மென்கணத்தோடும் (மெல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களோடும் ), இடைக்கணத்தோடும் (இடையெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களோடும் ) புணரும்போது வருமாறு புணரும் என்று இளம்பூரணர் எடுத்துக்காட்டுகளால் அறிகிறோம் ! :-

கன் + ஞாற்சி = கன் + அ+ ஞாற்சி = கன்ன ஞாற்சி (அ- சாரியை ; சந்தி வராது)
கன் + நீட்சி = கன் + அ+நீட்சி=கன்ன நீட்சி (”)

கன்+மாட்சி= கன் +அ+மாட்சி=கன்ன மாட்சி(”)
கன்+வலிமை = கன் +அ+ வலிமை =கன்ன வலிமை (”)

சாடி , தூதை,, பானை ஆகிய சொற்களோடு புணர்ந்த புணர்ச்சி- பொருட் புணர்ச்சி !

ஞாற்சி , நீட்சி ,மாட்சி, வலிமை ஆகிய சொற்களோடு புணர்ந்த புணர்ச்சி – குணவேற்றுமைப் புணர்ச்சி !

வேறுபாடு யாது ?

‘சாடி’ என்பது ஒரு பொருள் ! (இன்று, ‘ஜாடி’!) ; அதனால் அது பொருட் புணர்ச்சி !

‘மாட்சி’ என்பது ஒரு குணம் (பண்பு )!; அதனால் அது குண வேற்றுமைப் புணர்ச்சி !
குணவேற்றுமைப் புணர்ச்சியிலும் , அரிதாக , அகரச் சாரியையும் வல்லெழுத்துச் சந்தியும் வரும் என்று காட்டுகிறார் இளம்பூரணர் ! :-

கன் + கடுமை = கன் +அ+ க்+கடுமை= கன்னக் கடுமை

மேலே ‘கன்’ தொடர்பாகக் கண்ட புணர்ச்சிகள் யாவும் வேற்றுமைப் புணர்ச்சிகள்!

இனி, அல்வழிக்கண் எவ்வாறு வரும் என்று இளம்பூரணர் காட்டுகிறார் !:-

கன் +கடிது= கன்+அ+ங்+கடிது=கன்னங் கடிது(அ-சாரியை;ங்-சந்தி)
கன்+சிறிது= கன்+அ+ஞ்+சிறிது=கன்னஞ் சிறிது(அ-சாரியை;ஞ்-சந்தி)
கன்+தீது= கன்+அ+ந்+தீது=கன்னந் தீது (அ-சாரியை;ந்-சந்தி)
கன்+பெரிது= கன்+அ+ம்+பெரிது=கன்னம்பெரிது (அ-சாரியை;ம்-சந்தி)

இவை வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் புணர்ந்ததற்குச் சான்றுகள் !

இனி, இதே ‘கன்’ ,இதே அல்வழியில் , மெல், இடை எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களுடன் புணருமாறு !:-

கன்+ ஞான்றது = கன்ன ஞான்றது (அ-சாரியை)
கன்+நீண்டது= கன்ன நீண்டது(அ- சாரியை)
கன்+மாண்டது = கன்ன மாண்டது (அ-சாரியை)
கன் +யாது= கன்ன யாது (அ-சாரியை)
கன்+வலிது= கன்ன வலிது (அ-சாரியை)

இவ் வைந்தில் , முதல் மூன்றும் மெல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களுக்கு உதாரணங்கள் !

‘கன்’ என்பது வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் , வேற்றுமையில் , குணவேற்றுமைப் புணர்ச்சி புணர்ந்தபோது , ஆகாரச் சாரியையும் வல்லெழுத்துச் சந்தி வந்ததையும் மேலே கண்டோம் ( ‘கன்னக் கடுமை’)! இதற்கும் ஒரு விதி விலக்கைக் காட்டுகிறார் இளம்பூரணர் !

அஃதாவது, “அகரச் சாரியையுடன் , சிறுபான்மை , மெல்லெழுத்துச் சந்தி வரலும் உண்டு ! ” என்கிறார் அவர் !:-

கன்+கடுமை = கன்னக் கடுமை √(வல்லெழுத்துச் சந்தி)
கன்+கடுமை=கன்னங் கடுமை √(மெல்லெழுத்துச் சந்தி)
கன்+ தீமை = கன்னந் தீமை √ (மெல்லெழுத்துச் சந்தி) கன்+பெருமை= கன்னம் பெருமை√ (மெல்லெழுத்துச் சந்தி)
கன்+சிறுமை = கன்னஞ் சிறுமை √ (மெல்லெழுத்துச் சந்தி)

அப்பாடா !

இஃது என்ன தொல்காப்பியர் ‘கன்’னா , ஆயுதக் ‘கன்’(gun)னா?

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by ராஜு சரவணன் on Sun Jun 09, 2013 8:21 am

ஐயா இந்த பதிவில் வரும் சொற்களை வார்க்கும், அழைக்கும் இலக்கண விதிகளை விவரமாக விளக்கமாக எடுத்து வைக்கும் உங்கள் தொடர் பதிவு நிச்சயம் தமிழை பற்றி ஆழமாக நாங்கள் தெரிந்து கொள்ள பயன்படும் பாடம்.

தொடருங்கள்.
தொடர்கிறோம்

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (80)

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 09, 2013 2:02 pmதொடத் தொடத் தொல்காப்பியம் (80)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘சாத்தனுக்குத் தந்தை’ என்ற பொருளில் ,
‘சாத்தன் + தந்தை ’ என்பதை எப்படிப் புணர்ப்பீர்கள் ?

சாத்தன் + தந்தை = சாத்தன் றந்தை
என்போம் !

இதற்கு விதி யாது ?

தொகை மரபு நூற்பா 7இல் உள்ளது !

அவ் விதி !:-
“லனவென வரூஉம் புள்ளி முன்னர்த்
தநவெ னவரிற் றனவா கும்மே ” (தொகை மரபு 7)

ஆனால், தொல்காப்பியர் காலத்திற்கு முன் பின்னாக இதே சொற்கள் வேறு விதமாகவும் புணர்ந்துள ! :-

சாத்தன் + தந்தை = சாத்தந்தை
கொற்றன் + தந்தை = கொற்றந்தை

‘சாத்தந்தை’, ‘கொற்றந்தை’ – இவற்றுக்கு விதி எங்கே உள்ளது ?

இங்கே !:-

“ இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின்
முதற்கண் மெய்கெட அகர நிலையும்
மெய்யொழித் தன்கெடும் அவ்வியற் பெயரே ” (புள்ளி மயங்கியல் 52)

இயற்பெயர்’ என்றால் , பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு இடும் பெயர் ! ‘சுரேஷ்’, ‘ரீத்து’, ‘ஹர்ஷிணி’ எல்லாம் இயற்பெயர்களே ! (இவை தமிழ்ப்பெயர்களா என்பது வேறு செய்தி !).

மேல் நூற்பாப்படி,

‘முதற்கண் மெய்கெட அகர நிலையும்’-
சாத்தன் + தந்தை = சாத்தன் + அந்தை (‘தந்தை ’ என்பதன் முதல் ‘த்’
கெட்டது ; ‘த’வின் ‘அ’ நிலைத்தது)

‘மெய்யொழித்து அன் கெடும் ’ –
சாத்தன் + அந்தை = சாத்+ த்+ அன்+அந்தை = சாத் + த்+ அந்தை ( ‘தன்’-இல் ‘த்’ தனித்து விடப்பட்டது; ‘அன்’ கெட்டது)

சாத் + த் + அந்தை = சாத்தந்தை

‘சாத்தன் றந்தை’ என்றே எழுதிவிட்டுப் போகவேண்டியதுதானே ? ‘சாத்தந்தைக்கு’ என்ன தேவை ஏற்பட்டது ? ஏன் குழப்ப வேண்டும் ?

நல்ல கேள்வி !

குழப்பத்தைத் தொல்காப்பியர் ஏற்படுத்திவிட்டதாகப் பலர் நினைக்கின்றனர் !

தவறு !

தொல்காப்பியர் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை !

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே ‘சாத்தன் றந்தை’ என்றும் ‘சாத்தந்தை’ என்றும் எழுதும் இரு வகைகள் இருந்தன !

தொல்காப்பியர், அவரது ஆசிரியரிடம் (அகத்தியர்தான் தொல்காப்பியரின் ஆசிரியர்) இலக்கணம் படிக்கும்போதே இரண்டுவகைப் புணர்ச்சிகளையும் படித்திருப்பார் ! அவர் படித்ததைத்தான் நம்மிடம் கூறுகிறார் ! அவ்வளவுதான் !

அஃதாவது , ‘இன்னாருக்குத் தந்தை இவர்’ என்று ஓலைச் சுவடிகளில் எழுதியபோது , ஒரு சுருக்கம் தேவைப்பட்டது !

சாத்தன் றந்தை – விரிவு
சாத்தந்தை – சுருக்கம்

விரிவைச் சுருக்கமாகக் கூறும் மரபு பழங்காலத்தில்தான் இருந்தது என எண்ணவேண்டாம் !

இன்றும் உண்டு !

செட்டி நாட்டில் (காரைக்குடி வட்டாரம்) ‘கண்ணப்பச் செட்டியார்’ என்று கூறமாட்டார்கள் ! ‘கண்ணப்பெட்டியார்’ என்றுதான் பேச்சில் கூறுவார்கள் ! “கண்ணப்பெட்டியார் வீட்டுக் கல்யாணத்தில போட்டாக பாரு அதுதான் சாப்பாடு !” என்று அப்பகுதியில் பேசிக்கொள்வார்கள்!

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by ராஜு சரவணன் on Sun Jun 09, 2013 2:16 pm

செட்டி நாட்டில் (காரைக்குடி வட்டாரம்) ‘கண்ணப்பச் செட்டியார்’ என்று கூறமாட்டார்கள் ! ‘கண்ணப்பெட்டியார்’ என்றுதான் பேச்சில் கூறுவார்கள்

அய்யா இது போல் விளையாட்டு [வினை (செயல்) + ஆடு(ஆட்டம்)] என்ற சொல்லும் உருவானதோ?

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (81)

Post by Dr.S.Soundarapandian on Mon Jun 10, 2013 9:47 pmதொடத் தொடத் தொல்காப்பியம் (81)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

சரி !

‘சாத்தன் + தந்தை = சாத்தந்தை’ என்பதற்குத் தொல்காப்பிய விதியைப் பார்த்தோம் !


அப்படியானால் ,

ஆதன் + தந்தை = ஆத்தந்தை
என்று வருமா?

வராது !

தொல்காப்பியர் நம்மை ஒழுங்குபடுத்துகிறார் ! :-

“ஆதனும் பூதனுங் கூறிய வியல்பொடு
பெயரொற் ரகரந் துவரக் கெடுமே” (புள்ளி மயங்கியல் 53)

‘கூறிய இயல்பொடு’ – முன் புள்ளிமயங்கியல் 52இல் (பார்க்க- கட்டுரை எண்.80)கூறியபடி-

ஆதன் + தந்தை = ஆதன் + அந்தை ( த்- கெட்டது)
ஆதன் + அந்தை = ஆத் + அன் + அந்தை
= ஆத் + அந்தை (அன் - கெட்டது)

‘பெயர் ஒற்று அகரம் துவரக் கெடும்’ என்பதன்படி –
ஆத் + அந்தை = ஆந்தை ( ‘ஆத்’தில் ‘த்’ கெடும்; ‘அந்தை’யில் ‘அ’ கெடும்)
முடிவில் , ஆதன் + தந்தை = ஆந்தை !

இதே முறையில்,
பூதன் + தந்தை = பூந்தை !

இங்கே ஒரு விதி விலக்கு ! தருபவர் இளம்பூரணர் ! :-
ஆதன் + தந்தை = ஆந்தை √
ஆதன் + தந்தை = ஆதந்தை √

பூதன் + தந்தை = பூந்தை √
பூதன் + தந்தை = பூதந்தை √

இளம்பூரணரின் கருத்துப்படி ,

ஆதன் + தந்தை = ஆ + த் +அன் + தந்தை
= ஆ+ தந்தை (த் , அன் - கெட்டன)
= ஆதந்தை

இதே முறையில் , ‘அழான்’ , ‘புழான்’ (பழந் தமிழர்களின் இயற்பெயர்கள் (Proper names) இவை; தொல்காப்பியம் வெறும் இலக்கணக் கருவூலம் மட்டுமல்ல; ஒரு வரலாற்றுக் கருவூலமும்கூட என்பதற்கு இந்த இடம் சான்று !) என்பன ,

அழான் + தந்தை = அழாந்தை
புழான் +தந்தை = புழாந்தை

என வரும் என்கிறார் இளம்பூரணர் தமது உரையில்!

சரி !

‘சாத்தன்’ என்றில்லாமல் , புகழ் அடையுடன் ‘பெருஞ் சாத்தன்’என்று பெயர் இருந்தால் , அவருக்குத் ‘தந்தை ‘யை எப்படிச் சேர்ப்பது?

இதற்குத் தொல்காப்பிய விதி !:-

“சிறப்பொடு வருவழி இயற்கை யாகும்” (புள்ளி மயங்கியல் 54)

அஃதாவது ,

பெருஞ்சாத்தன் + தந்தை = பெருஞ்சாத்தன் றந்தை √
பெருஞ்சாத்தன் + தந்தை = பெருஞ்சாத் தந்தை ×பெருங்கொற்றன் + தந்தை = பெருங்கொற்றன் றந்தை √
பெருங்கொற்றன் + தந்தை = பெருங்கொற்றந்தை ×

என வரும் !

இந் நேரத்தில், தஞ்சைப் பெரிய கோயிலை நிர்மாணித்த விசுவகர்மரின் பெயர் ‘பெருந்தச்சன்’ என்று கல்வெட்டுகளில் (Inscriptions) அடையொடு வருவதைக் நினைக்கலாம்!

‘சாத்தனுக்குத் தந்தை ’ , ‘ஆதனுக்குத் தந்தை’ – தொடர்பான புணர்ச்சிகளைப் பார்த்தோம் !

‘சாத்தனுக்கு மகன்’ , ‘ஆதனுக்கு மகன்’ – இவை எப்படிப் புணரும் ?

சாத்தனுக்கு மகன் கொற்றன் ஆயின்,

சாத்தன் + கொற்றன் = சாத்தங் கொற்றன்
என ஆகுமாம் !

எப்படி ? அதற்கு விதி?

“அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியே
நிற்றலு முரித்தே யம்மென் சாரியை
மக்கண் முறைதொகூஉ மருங்கி னான” ! (புள்ளி மயங்கியல் 55)

‘அப் பெயர் மெய்யொழித்து அன் கெடு வழி’ –

சாத்தன் + கொற்றன் = சாத் + த் + அன் + கொற்றன்
= சாத் + த் + கொற்றன் ( ‘த்’ஐ நிற்கவிட்டு ,
‘அன்’ கெட்டது)

‘நிற்றலும் உரித்தே அம்மென் சாரியை’ –
சாத் + த் + கொற்றன் = சாத் +த் +அம் +கொற்றன்(அம் – சாரியை
சேர்ந்தது)

= சாத்தங் கொற்றன்

இதே முறையில்,

‘கொற்றனின் மகன் கொற்றன்’ (சில தமிழ்ப் பகுதிகளில் தந்தை பெயரையே மகனுக்கும் வைப்பர் !) என்பதை வருமாறு புணர்க்கலாம் !:-

கொற்றன் + கொற்றன் = கொற்றங் கொற்றன் (அம்-சாரியை)

‘சாத்தனின் மகன்’ , ‘கொற்றனின் மகன்’ என்பவற்றுக்குக் கூறிய புணர்ச்சிகளைப் போலவே, ‘சாத்தனின் குடி’ , ‘கொற்றனின் குடி’ என்பனவும் புணரும் என்று இளம்பூரணர் காட்டுகளால் அறிகிறோம் !

சாத்தன் + குடி = சாத்தங் குடி (அம்- சாரியை)
கொற்றன் + குடி = கொற்றங் குடி (”)
என வரும் !

‘குடி’ என முடியும் பல தமிழக இடப்பெயர்கள் (Place names ) உள்ளன! அவற்றை இந் நோக்கில் ஆயலாம் !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (82)

Post by Dr.S.Soundarapandian on Fri Jun 14, 2013 11:27 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (82)


-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
                                      
                                                   ‘ஆதனின் தந்தை ’ என்ற பொருளில் , ‘ஆந்தை’ என்றும்  ‘ஆதந்தை’ என்றும் வரலாம் என்று தொல்காப்பியம்    கூறியதை முன்பு (புள்ளி மயங்கியல் 53) கண்டோம் !
                                      
                                                   அதே முறையில்  ‘தான்’ , ‘பேன்’ , ‘கோன்’ என்ற இயற்பெயர்கள் (Proper names)  புணருமா ?
                                                   
                                                  தொல்காப்பியர் விடை கூறுகிறார் !:-
                                     
                                       “தானும் பேனுங் கோனு மென்னும்
                                       ஆமுறை யியற்பெயர் திரிபிட னிலவே”  (புள்ளி மயங்கியல் 56)
 
                                      திரிபிடன் இலவே – முன்பு கூறிய திரிபு இங்கு இலாது , இயல்பாகப் புணரும் !
                                      
                                          அஃதாவது , ‘தான்’ என்ற ஒரு மனிதனின் பெயருடன் ‘தந்தை’ என்ற சொல்லைச் சேர்த்தால் ,
                                     
                                           தான் + தந்தை = தான்றந்தை
                                                                  = தாந்தை ×
என வரும் !
                                    
                                         இதே முறையில் ,
                                      
                                    பேன் + தந்தை = பேன்றந்தை
                                                           = பேந்தை ×
                                      கோன் + தந்தை = கோன்றந்தை
                                                               = கோந்தை ×
என வரும் !
                                     
                                       ‘தான்’ என்ற பெயருடன் , அவனின் மகன் பெயரான  ‘கொற்றன்’ சேரும்போது ,
                                     
                                       தான் + கொற்றன் = தான் கொற்றன்
                                                                  = தாங் கொற்றன் ×
என வரும் !
                                      
                                      இதே முறையில் ,
                                     
                                      பேன் + கொற்றன் = பேன் கொற்றன்
                                                                   = பேங் கொற்றன் ×
                                      கோன் + கொற்றன் = கோன் கொற்றன்
                                                                   = கோங் கொற்றன் ×
என வரும் !
 
                                      தான், பேன் , கோன் – என்றெல்லாம் பழந் தமிழர்களுக்குப் பெயர்கள் இருந்தன என்பது நமக்குப் புதிய செய்தி ! இப்பெயர்கள் ஈரெழுத்துச் சொற்களாக இருப்பதை நோக்குவீர் ! (தாயன், பேயன் , கோவன் என்ற பெயர்களின் திரிபுதான் இவை என்ற செய்தியும் உண்டு !)
                                      அடுத்ததாகத் ‘தான்’ , ‘யான்’ என்ற இரண்டு பெயர்ச் சொற்களை (Nouns)எடுத்துக்கொள்கிறார் தொல்காப்பியர் !
                                      
                                     தான் – என்பது விரவுப் பெயர் !
                                   
                               அஃதாவது , ‘இராமன் தான் கூறியதை மறுத்தான்’ என்று உயர்திணைக்கும் கூறலாம் , ‘மாடு தான் தின்றதைக் கக்கிற்று’ என அஃறிணைக்கும் சேர்க்கலாம் !  இப்படி உயர் திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாக வரும் பெயரை விரவுப் பெயர் என்ப !
                                      இப்படிப்பட்ட ‘தான்’ என்ற சொல் வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘கை’ என்பதோடு சேரும்போது எப்படிப் புணருமாம் ?
                                      இதைக் கேட்டால் , ‘உருபியலில் சொன்னதுபோலப் புணரும் ’ என்கிறார் தொல்காப்பியர் !:-
                                       “தான்யா னெனும்பெய ருருபிய னிலையும்” (புள்ளி மயங்கியல் 57)
 
                                      தொல்காப்பியராவது ‘நீங்கள் உருபியலைப் பாருங்கள்’ என்று கூறுவதோடு விட்டுவிட்டார் ! இளம்பூரணர் அத்தோடு விடுகிறாரா? “முதலில் தொகை மரபைப் பாருங்கள் ! அதில் கூறியதை நீக்கி , உருபியலில் தொல்காப்பியர் சொன்னதை எடுத்துக்கொள்ளுங்கள் !” என்கிறார் !
                                     
                                      ஆக நாம் தொகை மரபிலிருந்து தொடங்கவேண்டும் !
                                      
                                      தொகை மரபில் தொல்காப்பியர் என்ன சொன்னாராம் ?
                                       
                                           தொகை மரபில் (நூற்பா 13) , ‘சாத்தன்’ எனும் விரவுப் பெயர் , ‘கை’என்பதோடு புணர்ந்தால் ,
                                     
                                            சாத்தன் + கை = சாத்தன் கை
என்றாகும் என ஓதினார் !
                                     
                                            ”இதைக் கண்டுகொள்ளாதீர்கள் ” என ஓரம் கட்டுகிறார் இளம்பூரணர் !
                                      
                                            அஃதாவது , இது தவறு என்பது பொருளல்ல ! விரவுப் பெயர் ‘சாத்தன்’ எந்த வேறுபாடும் இல்லாமல் புணர்வதுபோல , எல்லா விரவுப் பெயர்களும் புணரும் என்று எதிர்பார்க்காதீர்கள் என்பதே இளம்பூரணர் செய்தி !
                                      
                                          அடுத்து , உருபியலில் கூறியது என்ன ?
                                    
                                        உருபியலில், (நூற்பா 20) ,
                                     
                                          தான்+ ஐ = தன்னை
                                என்பதற்கு விதி கூறுகிறார் தொல்காப்பியர் !


                                        “இதைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்கிறார் இளம்பூரணர் !
                                    
                                            பிடித்துகொண்டால் , வருமாறு அமையும் என்கிறார் இளம்பூரணர் ! :-
                                      
                                              தான் + கை = தான் கை ×
                                     
                                                               = தன்கை
 
                                      தான் + செவி = தான் செவி ×
                                                          = தன் செவி
 
                                      தான்+ தலை = தான் தலை ×
                                                         = தன்தலை
 
                                      தான் + புறம் = தான் புறம் ×
                                                          = தன் புறம்
                                     
                                         மேல் நான்கும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !
                                     
                                          அப்படியானால் , உயிரெழுத்து , மெல்லெழுத்து மற்றும் இடையெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தால் ?
                                     
                                          கீழே பார்ப்போம் !:-
                                      
                                        தான் + அடை= தானடை ×
                                      
                                                             = தன்னடை       
 
                                      தான்+ ஆடை = தானாடை ×
                                                          = தன்னாடை
 
                                      தான் + ஞாண் = தான் ஞாண் ×
                                                          = தன் ஞாண்
 
                                      தான் +நூல் = தான் நூல் ×
                                                          = தன்னூல்
 
                                      தான் + மணி = தான் மணி ×
                                                          = தன் மணி
 
                                      தான் + யாழ் = தான் யாழ் ×
                                                          = தன்யாழ்
 
                                      தான் + வட்டு = தான் வட்டு ×
                                                          = தன் வட்டு
 
                                      மேலன யாவும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !
                                    
                                          இனித், தொல்காப்பியர் கூறிய ‘யான்’ !
                                      
                                     ‘யான்’ என்பதும் முன்னே பார்த்த ‘தான்’ போலவே செயற்படும் !
 
                                      யான்+ கை = யான் கை ×
                                                          = என் கை
 
                                      யான் + செவி = யான் செவி ×
                                                          = என் செவி
 
                                      யான் + தலை = யான் தலை ×
                                                          = என் தலை
 
                                      யான்+ புறம் = யான் புறம் ×
                                                          = என் புறம்


-       இவை வேற்றுமைப் புணர்ச்சிகளே !       


இவை வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும் வகைக்கு எடுத்துக்காட்டுகள் !
 
                                        இதே வேற்றுமைப் பொருளில் , உயிர் , மெல் , இடை எழுத்துகளை முதலாகக் கொண்ட   சொற்கள் வந்து ‘யான்’ என்பதுடன் சேரும் வகை !:-
 
                                        யான்+ அடை = யானடை ×
                                                           = என்னடை
 
                                        யான் + ஆடை = யானாடை ×
                                                           = என்னாடை
 
                                        யான் + ஞாண் = யான் ஞாண் ×
                                                             = என் ஞாண்
 
                                        யான் + நூல் = யான் நூல் ×
                                                           = என்னூல்
 
                                        யான்+ மணி = யான் மணி ×
                                                           = என் மணி
 
                                        யான் + யாழ் = யான் யாழ் ×
                                                           = என் யாழ்
 
                                        யான்+ வட்டு = யான் வட்டு ×
                                                           = என் வட்டு
 
                                        முதலில் பார்த்த , ‘தான்’ என்பதுதான் விரவுப் பெயரே அல்லாமல், ‘யான்’ என்பது விரவுப் பெயர் அல்ல!
                                         ‘யான்’ என்பது உயர்திணைப் பெயர் !                 
 
                                       ‘தான்’என்பது ‘தன்’ ஆகும் , ‘யான்’ என்பது ‘என்’ ஆகும் என்பன தொல்காப்பியர் உருவாக்கிய விதிகள் அல்ல! அவர்படித்த விதிகள் ! அஃதாவது தமிழ் வகுத்த விதிகள் !
                                   
                                        தமிழ் ஏன்  ‘தானை’த்  ‘தன்’னாக்கவேண்டும் , ‘யானை ’ ‘என்’ஆக்கவேண்டும் என விதித்தது?
                                    
                                       இங்கே கொஞ்சம் நின்று விளையாடவேண்டும் !
                                      
                                        மிகப் பழைய நிலையில் ,  ‘நான்’ தோன்றியிருக்கவேண்டும் ! நீ , நான் போன்ற சொற்கள் தோன்றிய பின் ,பொருள் உடைமை காரணமாக ‘என்’ போன்ற சொற்கள் தோன்றியிருக்கவேண்டும் !  ‘என்’தோன்றிய பிறகு , ‘என்னை’  , ‘எனக்கு’, ‘எனது’ போன்ற சொற்கள் தோன்றியிருக்க வேண்டும் ; இந்த மூன்றில் ஐ, கு, அது எனும் மூன்று வேற்றுமை உருபுகள் வந்துவிட்டதைப் பாருங்கள் !   ‘நான்’  என்பது வந்தபின் ‘நானை’ என வேற்றுமை ஏற்ற வடிவம் வரவில்லை பாருங்கள்!  ‘என்னை’ என்றுதான் வருகிறது ! அதுபோல ‘நானுக்கு’ என வரவில்லை; ‘எனக்கு’ என்றுதான் வந்துள்ளது ! எனவே , ‘என்’ தோன்றி, வேற்றுமை உருபுகள் அதனோடு மள மளவென்று ஒட்டிச் சொற்கள் வந்துவிட்ட பிறகு , அவ் வேற்றுமை உருபுகள், ‘நான்’ உடன் ஏன் சேரவேண்டும் ?  மொழி மரபானது எப்படி உருவாகிறது பார்த்தீர்களா? இந்த மரபுதான் இலக்கணம் ! வேறொன்றுமில்லை !
                                      
                                   இப்போது  ‘தான் – தன்’ , ‘ யான் – என்’  இரகசியம் விளங்குகிறதல்லவா?
                                      
                                  இன்னும் கொஞ்சம் ஆழமாக ஆயலமா?
                                      
                                ‘நான்’ என்பதிலிருந்து நேரடியாக வேற்றுமை(Declension) வடிவங்கள் தமிழில் கிளைக்கவில்லை என்றோமல்லவா? ஆனால் மிகப் பழங்காலத்தில்ஏன்  ‘நான்என்பதிலிருந்து கிளைக்கக்கூடாது என்று ஒரு சார் தமிழர்கள் (இவர்கள்தான் பின்னாளில் தெலுங்கர்கள், கன்னடர்கள் என்றெல்லாம் அறியப்பட்டவர்கள்!) நினைத்தனர் !;நினைத்து,  ‘நாதி’ (தெலுங்கில்என்னுடையது’),  ‘நன்ன’ ( கன்னடத்தில் ‘ என்னுடைய’ ) என்றெல்லாம் சொற்களை உருவாக்கினார்கள் ! நாம் பார்த்த பெரும்பான்மைத் தமிழிலிருந்து வேறுபாடாகக் கிளைத்த இக் கிளைப்பே நாளடைவில் சில திராவிட மொழிகளை உருவாக்கிவிட்டது ! அதனால்தான் ’’ ‘இலக்கணம் இலக்கணம்’ என்று அடித்துக்கொள்கிறார்கள் ! அன்றே இலக்கண வரம்பு கட்டியிருந்தால் திராவிட மொழிகள் உண்டாகியிரா!
                                                ***


Last edited by Dr.S.Soundarapandian on Sat Jun 15, 2013 4:00 pm; edited 1 time in total (Reason for editing : serial no. should be 82 , not 76)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (83)

Post by Dr.S.Soundarapandian on Sat Jun 15, 2013 4:14 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (83)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
               
                                                  வேற்றுமைப் புணர்ச்சியில் ‘தான்’ என்பது ‘தன்’ ஆகவும் , ‘யான்’ என்பது ‘என்’ ஆகவும் குறுகும் என்று சென்ற கட்டுரையில் கண்டோம் !

                                                  ஆனால் அல்வழிப் புணர்ச்சியில் ?

                                                அதற்கு வழி செய்கிறார் தொல்காப்பியர் ! :-

                                                “வேற்றுமை யல்வழிக் குறுகலும் திரிதலும்
                                                  தோற்ற மில்லை யென்மனார் புலவர்”            (புள்ளி மயங்கியல் 58)

                                                அஃதாவது , ‘தான்’, ‘தன்’னாகவும் ‘யான்’, ‘என்’னாகவும் அல்வழியில்  குறுக வேண்டியதில்லை  ! :-

தான் + குறியன் = தான் குறியன் √
=     தன் குறியன் ×

தான் + சிறியன் = தான் சிறியன் √
=     தன் சிறியன் ×

தான் + தீயன் = தான் தீயன் √
=     தன் தீயன் ×

தான் + பெரியன் = தான் பெரியன் √
=     தன் பெரியன் ×

தான் + ஞான்றான் = தான் ஞான்றான் √
=     தன் ஞான்றான் ×

தான் + நீண்டான் = தான் நீண்டான் √
=     தன் நீண்டான் ×

தான் + மாண்டான் = தான் மாண்டான் √
=     தன் மாண்டான் ×

                                                  மேல் ஏழும் அல்வழிப் புணர்ச்சிகள் !

                                                  வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களும் , மெல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களும் வந்து புணர்ந்துள்ளதை மேல் எடுத்துக்காட்டுகளில் காணலாம் !

                                                  இனி, ‘யான்’ ! :-

யான்+ குறியேன் = யான் குறியேன் √
     =  என் குறியேன் ×  

யான்+ சிறியேன் = யான் சிறியேன் √
     =  என் சிறியேன் ×  

யான்+ தீயேன் = யான் தீயேன் √
     =  என் தீயேன் ×  

யான்+ பெரியேன் = யான் பெரியேன் √
     =  என் பெரியேன் ×

 யான்+ ஞான்றேன் = யான் ஞான்றேன் √
     =  என் ஞான்றேன் ×  

யான்+ நீண்டேன் = யான் நீண்டேன் √
     =  என் நீண்டேன் ×  

யான்+ மாண்டேன் = யான் மாண்டேன் √
     =  என் மாண்டேன் ×  

                                                மேல் ஏழும் அல்வழிப் புணர்ச்சிகளே !

                                               வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களும்  , மெல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களும் வந்து புணர்ந்ததற்கு எடுத்துக்காட்டுகளே மேல் ஏழும் !

                                              இங்கே ‘விதி விலக்கு’ எனும் ஒரு விளக்கை நம் கையில் கொடுக்கிறார் இளம்பூரணர் !

                                                இந்த விதி விலக்கு புள்ளி மயங்கியல் நூற்பா 57க்கு  விலக்கு !

                                                கீழ்வரும் எடுத்துக்காட்டுகள் இதனை விளக்கும் !:-

தான் + கை = தன்கை√      (வேற்றுமைப் புணர்ச்சி)
       = தற்கை ×

யான் + ஞாண் = என்ஞாண்√  (வேற்றுமைப் புணர்ச்சி)
           = எற்ஞாண் ×

                                                -  இவண் திரிபு இல்லை ! அஃதாவது , ‘ன்’, ‘ற்’ ஆகவில்லை !

                                                 ஆனால் , ‘திரிபு’ ஏற்படும் சில இடங்களும் உள்ளன ! :-

தான் + புகழ் = தற்புகழ் √  (வேற்றுமைப் புணர்ச்சி)
        = தன்புகழ் ×

தான் + பகை = தற்பகை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
        = தன்பகை ×

யான் + பறை = எற்பறை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
        = என்பறை ×

யான் + பாடி = எற்பாடி √  (வேற்றுமைப் புணர்ச்சி)
        = என்பாடி ×

                                                  மொழியின் விசித்திரப் போக்குகள் மிக மிக நுட்பமானவை!

                                                  ‘தற்கை’ என்று வராது !
                                                  ஆனால் ‘தற்புகழ்’ என்று வரும் !

                                                    என்ன அளவுகோல் ?

                                            தொடர்களில் ‘கை’ , ‘புகழ்’ எனும் சொற்கள் எப்படிப் பயிலுகின்றன என்று பார்க்கவேண்டும் !

                                            ‘தன் கையே  தனக்குதவி’
                                              ‘தன் கையால் சோறு போட்டாள்’
                                              ‘எதுவும் தன் கையில் இருந்தால்தான்’

என்றெல்லாம் வரும்போது , ‘தன்’ என்பதை நிறுத்திப், பிறகு இடைவெளி விட்டு அடுத்த சொல் வருவதைக் கவனியுங்கள் ! இப்படி வந்தால்தான் பொருள் சிறக்கும் !

                                         அதே நேரத்தில் ,

                                            ‘அவன் தன்புகழ்ச்சிக்காரன்’
                                            ‘தன்புகழ்ச்சி கூடாது’

                                               என்றெல்லாம் வரும்போது , ‘தன்’னுக்கும் ‘புகழ்’ என்பதற்கும் இடையே இடைவெளி இல்லை என்பதைக் கவனியுங்கள் ! இடைவெளி கொடுத்துச் சொல்லிப் பாருங்கள் , பொருள் சிறக்காது !

                                               எனவேதான் , ‘தன்’னையும் ‘புகழ்’ என்பதையும் நெருக்கித் ‘தற்புகழ்’ ஆக்கவேண்டியுள்ளது!

                                                 இந்த மொழி நுட்பங்களைத் தொல்காப்பியரோ இளம்பூரணர் முதலான உரையாசிரியர்களோ எங்கும் வெளிப்படையாகக் கூறவில்லை ! நாம்தான்  ஆராய்ந்து தெளிய வேண்டும் !  

                                                 ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (84)

Post by Dr.S.Soundarapandian on Sat Jun 15, 2013 7:55 pm

 தொடத் தொடத் தொல்காப்பியம் (84)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
 
                                      னகர ஈற்றுச் சொற்களில் அடுத்துத் தொல்காப்பியர் அறிமுகப் படுத்தும் சொல்அழன்’ !
 
                                      அழன் – பிணம்
 
                            “அழனென்  இறுதிகெட  வல்லெழுத்து  மிகுமே”  (புள்ளி மயங்கியல் 59)
 
-       இதுதான் நூற்பா !
 
                                        இளம்பூரணர் , “ இஃது , இவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று ”  என்கிறார் !
 
                                        என்ன பொருள் ?
 
                                        எது எய்தியது ?
                                        
                                       எதை விலக்கவேண்டும் ?
                                        
                                       பிறிது விதி யாது ?
 
                                        எய்தியது – புள்ளி மயங்கியல் நூற்பா 37 !
 
                                        அஃதாவது ,
 
                                         “னகார விறுதி வல்லெழுத் தியையின்
                                        றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே” (புள்ளி மயங்கியல் 37)
என விதி கூறப்பட்டது முன்பு !
                                        
                                       இதுவே ‘எய்தியது’ !
 
                                        எய்தியதன்படி ,
 
                                         ‘அழன் + குடம் = அழற் குடம்’    என ஆகியிருக்கும் !
 
                                        ஆனால் , எய்தியதை விலக்குகிறார் தொல்காப்பியர் !
 
                                        விலக்கிவிட்டுப் , பிறிது விதி (வேறொரு விதி) கூறுகிறார் அவர் !
 
                                        அவ் வெய்தியதுதான் புள்ளி மயங்கியல் நூற்பா 59 , நாம் மேலே பார்த்தது! 
 
                                        அதன்படி ,
 
                                        அழன் + குடம் = அழற் குடம் ×  
                                                             = அழக் குடம்
 
                                        அழன் + சாடி = அழற் சாடி × 
                                                             = அழச் சாடி
 
                                        அழன் + தூதை = அழற் றூதை × 
                                                             = அழத்  தூதை
 
                                        அழன் + பானை = அழற் பானை × 
                                                             = அழப்  பானை
 
என வரும் !
                                        இந் நான்கும்   வேற்றுமைப் புணர்ச்சிகளே !
                                        
                                          பழைய விதிக்கு விலக்குத் தந்து , ‘அழற் குடம்’ என வராது , ‘அழக் குடம்’ என்றுதான் வரும் என்று கூறவேண்டிய தேவை என்ன ? ஏன் ‘அழற் குடம் ’ வராது ?
                                        
                                             இங்கு ஒரு மொழி நுட்பம் உள்ளது !
                                      
                                              அஃதாவது , ‘அழற் குடம்’ என்று கொண்டால் , அதனை ‘அழல் + குடம்’ என்றும் பிரிக்கலாம், ‘அழன் + குடம்’ என்றும் பிரிக்கலாம் ! இரண்டுமே புணர்ச்சி போற்றியவையே ! எனவே ‘அழற் குடம்’ என்று சொன்ன மாத்திரத்தில் , குறிபிடப்படுவது அழலா , அழனா என்ற குழப்பம் ஏற்படும் ! குழப்பத்தைத் தவிர்ப்பதற்கே  ‘அழக்குடம்’ என்றுதான் எழுதவேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டது ! குழப்பம் தவிர்ப்பதே இலக்கணத்தின் தலையாய நோக்கம் !
 
 
                                        இங்கே ஒரு தொல்லியல் ஆய்வும் (Archaeological research) உள்ளது !
                                       
                                       கி.மு.1000த்திலேயே , பிணங்களைப் பானைகளில் இட்டுப் புதைக்கும் முறை  தமிழகத்தில் இருந்தது என்பதற்கு இந்த இடம்  (புள்ளி மயங்கியல்  59)சான்று !
                                       
                                    ஈமக் குடம் , ஈமத் தாழி (Burial Ur n) என்றெல்லாம் இன்றைய தொல்லியல் ஆய்வாளர்களால்  இது கூறப்படுகிறது !
                                        2-3 அடி உயரத்தில் ,1-2 அடி அகலத்தில் இருக்கும் கனமான இத் தாழி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றும் காணப்படுகின்றன !
                                        
                                       காரைக்குடியில் (சிவகங்கை மாவட்டம்) ‘நாட்டான் கண்மாய்’ என்ற பெரிய கண்மாய் ஒன்று உள்ளது ! அதனை ஒட்டிச் சுடுகாடும் உள்ளது ! ; அச் சுடுகாட்டில் இத் தாழிகள் பல புதைந்து கிடந்ததை நானே , சிறு வயதில் , பார்த்திருக்கிறேன் !அப்போது அவை ஈமத் தாழிகள் என்பது தெரியாது ! அத் தாழிகளின் ஓட்டுச் சில்லுகளை எடுத்துக் கண்மாயில் எறிந்து விளையாடுவோம் !
                                        
                                   பழந்தமிழர்களின் ஈமக் குட முறையே , எகிப்தியப் பிரமிடுகளுக்கு (Pyramids of Egypt)  முன்னோடி என மதிப்பிட இடமுள்ளது!
                                       
                                    மிகப் பழங்காலத்திலேயே தமிழர்கள் உலகெங்கும் பரவினார்கள் என்ற கோட்பாட்டின் (Theory)  அடிப்படையில் இந்த ஆய்வை விரிக்கவேண்டும் !
 
                                                                                  ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (85)

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 16, 2013 11:46 am

 தொடத் தொடத் தொல்காப்பியம் (85)


-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
 
                                      னகர ஈற்றுச் சொற்களில் அடுத்தது  ‘முன்’ ! :-
 
                                       “முன்னென் கிளவி முன்னர்த் தோன்றும்
                                      இல்லென் கிளவிமிசை றகர மொற்றல்
                                      தொல்லியன் மருங்கின் மரீஇய மரபே”  (புள்ளி மயங்கியல் 60)
 
                                      இதற்கு இளம்பூரணர் , “இவ் வீற்றுள் இலக்கணத்தோடு பொருந்திய மரூஉக்களுள் ஒன்றற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று” என்றார் !
 
                                       ‘இவ் வீற்றுள்’ –னகர ஈற்றுள்
 
                                       ‘இலக்கணத்தோடு பொருந்திய மரூஉ’ -  ‘கண்கடை’ என்பது , ‘கடைக் கண்’ என்று முன் பின்னாக மருவி வந்தாலும் , இஃது இலக்கணத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது ! ஆகவே ‘கடைக்கண்’ , இலக்கணத்தோடு பொருந்திய மரூஉ !
 
                                        ஆனால் ‘முன்’ ?
 
                                        கீழே பார்ப்போம் ! :-
 
                                         ‘முன் + இல் = முன்னில்’  என்றுதான் வந்திருக்க வேண்டும்? ; இதற்கு விதி – ‘ குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டல்’ (தொகை மரபு 18).
                                        ஆனால், ‘முன்றில்’என்றல்லவா வந்துள்ளது ?
 
                                        முன் + இல் = முன் + ற் + இல் (ற்- புதிதாகச் சேர்ந்துள்ளது)
 
                                        இப்படி வந்தது மிகப் பழங்காலத்தில் ( ‘தொல்லியன் மருங்கின்’) !
 
                                         ‘முன்றில்’ – வீட்டின் முன்புறம் .
 
                                        ஆகவே , இல்லின் முன்புறத்தைக் குறிக்க ‘இல்முன்’ என்றுதானே வந்திருக்க வேண்டும் ?
 
                                        அவ்வாறு வராது , முறை மாறி (மருவி) , ‘முன்னில்’ என வந்திருந்தால் அது இலக்கணத்தோடு பொருந்திய மரூஉ முடிபு !
 
                                        ஆனால் , ‘ற்’ சேர்ந்து ‘முன்றில்’ என வந்துள்ளதால்
 , இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தொல்காப்பியர் மேல் விதியை (புள்ளி. 60) இயற்றினார் !
 
                                         ‘முன்னில்’ என வராது , ‘முன்றில்’ என்று வந்ததற்கு மொழி நுட்பம் ஏதாவது உள்ளதா ?
 
                                        உள்ளது !
 
                                         ‘முன்னில்’ என்றால்  ‘முன்பாக’  (in front) எனப் பொருள் கொள்ளவும் இடம் ஏற்படும் ! அப்போது ‘வீட்டின் முற்பகுதி’  (in front of house)என்ற பொருள் கிடைக்காது !
 
                                        இந்த நிலையைத் தவிர்க்கத்தான் , ‘ற்’றை  இடையே போட்டு , ‘முன்றில்’ ஆக்கியுள்ளது தமிழ் !
 
 
                                        அது சரி !
 
                                        ஏன் ‘ற்’றை  இடையே கொண்டுவரவேண்டும் ? ‘ட்’டைக் கொண்டுவரக் கூடாதா ?
 
                                        நல்ல கேள்வி !
 
                                         ‘ற்’ ஏன் வந்ததென்றால் , ‘ன்’னுக்கு  இன எழுத்து ‘ற்’தான் ! ‘ட்’டோ வேறு எழுத்தோ இன எழுத்து ஆகாது ! இன எழுத்துச் சேர்வதுதானே உச்சரிக்க ஏதுவாகும் ? அதனால்தான் ‘ற்’ !
 
                                        மொழி அதிசயமானது !
 
                                        ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (86)

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 16, 2013 7:27 pm

 தொடத் தொடத் தொல்காப்பியம் (86)


-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
 
                                      இப்போது னகர ஈற்றுச் சொற்புணர்ச்சி ஈற்றுக்கு வந்துள்ளோம் !
                                      அந்த இறுதி நூற்பா !:-
 
                                       “பொன்னென் கிளவி ஈறுகெட முறையின்
                                       முன்னர்த் தோன்றும் லகார மகாரம்
                                       செய்யுள் மருங்கிற்  றொடரிய லான !”  (புள்ளி மயங்கியல் 61)
 
                                      இதில் , ‘பொன்’ எனும் பெயர்ச் சொல் , செய்யுளில் , வேறு சொற்களுடன் புணரும் வகைகளைக் கூறுகிறார் தொல்காப்பியர் ! இதன்படி ,
 
                                       ‘பொன் + படை = பொலம் படை’ என்று வரும் !
 
                                      ஆனால் , இது செய்யுளில்தான்  நடக்கும் என்று தொல்காப்பியர் கூறுவதை ( ‘செய்யுள் மருங்கிற்’) மறக்கக் கூடாது !
 
                                      பொன் -  ‘ஈறு கெட’ – பொ
                                     
                                      பொ – ‘தோன்றும் லகார மகாரம்’ – பொலம்
                                      
                                       பொலம் + படை = பொலம் படை
என்பது மேலை நூற்பா கூறும் முறை !
 
                                      மேலே , ‘தோன்றும் லகார மகாரம் ’ என்பதற்கு  நாம் ‘ல’வையும் , ‘ம்’மையும் சேர்த்துப்  ‘பொலம்’ வந்தது எனக் கண்டோம் ! ஒன்று ‘ல’வானால் , அடுத்து ‘ம’வைத்தானே கொள்ளவேண்டும் ? ‘தோன்றும் லகார மகாரம்’ என்பதுதானே நூற்பா அடி  ?
 
                                      இந்த  ஐயத்தைப் போக்குகிறார் இளம்பூரணர்! :-
                                   
                                   “ ‘முறையின்’  என்றதனால் , லகரம் உயிர் மெய்யாகவும் , மகரம் தனி மெய்யாகவும் கொள்க” !
 
                                      ஐயம் தீர்ந்ததா?
 
                                      மேலே பார்த்தது , பகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் ‘பொன்’ என்பதோடு வந்து புணரும் முறையே !
 
                                      அனால் , இளம்பூரணர் , நூற்பாவை நெகிழ்த்துக் , கீழ் வரும் உதாரணங்களைப் போலவும் புணரலாம் என்கிறார் ! :-
 
                                      பொன் + கலம் = பொலங் கலம்
                                      பொன் + சுடர் = பொலஞ் சுடர்
                                      பொன் + தேர் = பொலந் தேர்
 
                                      வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததற்கே மேல் மூன்றும் சான்றுகள் !
                                      
                                     மேல் மூன்றும் செய்யுள் நடைக்கு மட்டுமே பொருந்தும் !
 
                                      இன்னும் நூற்பாவை நெகிழ்த்துக் , கீழ்வரும் வகைகளையும் கொள்ளலாம் என்கிறார் இளம்பூரணர் ! :-
 
                                      பொன் + நறுந் தெரியல் = பொலநறுந் தெரியல்
                                      பொன் + மலராவிரை = பொலமல ராவிரை
 
                                      மெல்லெழுத்தை (ந, ம) முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்த்தற்கு எடுத்துக்காட்டுகள் மேலே வந்தவை !
                                      இவை யாவும் , செய்யுளுக்கு மட்டுமே பொருந்துவன !
                                     
                                     அது சரி !
                                      
                                     ஏன் ‘பொன்’ என்பது ‘பொலம்’ ஆகிறது ? ‘கண்’ என்பது ‘கலம்’ ஆகவில்லையே ?
                                      
                                     என்ன மொழி நுட்பம் ?
                                      
                                   வேர்ச் சொல்லைப் பார்க்க வேண்டும் !
                                     
                                    பொ – வேர் (Root)
                                      
                                    ‘பொலிவு’ என்ற பொருண்மை (Meaning) இவ் வேருக்கு உண்டு!
                                      
                                    பொலிவுடை உலோகமாதலால் அது ‘பொன்’ !
                                      
                                       பொ – வேர்
                                      ன் – எழுத்துப் பேறு
                                     
                                  இந்த ‘ன்’ எழுத்துப் பேற்றிற்குப் பதில் , ‘ல்’ எழுத்துப் பேறு வந்து சில நேரங்களில் ஒட்டும் ! ‘ன்’னின் இனம் , ‘ல்’  ஆதலால் , இது சாத்தியமே !
                                      
                                   ‘ல்’ எழுத்துப் பேறாக வந்து , ‘பொ’வுடன் ஒட்டும்போது , ‘பொல்’ பிறக்கிறது !
                                      
                                   ‘பொல் என்ற பகுதியுடன் (Stem) , அகரச் சாரியை (  Euphonic extension ‘A’)  சேர்ந்து ‘பொல’ ஆகிறது !
                                     
                                    பிறகுதான் , ‘பொலந் தேர்’ , ‘பொலங் கொடி’ போன்ற சொற்கள் உருவாகின்றன !
                                     
                                    செய்யுள்களில் ஓசைக்காகவே ‘பொலம்’ தேவைப்படும்போது , புலவர்கள் இவ் வடிவைச் சரளமாக ஆளத் தொடங்கினர் !
                                   
                                   நுட்பம் விளங்கியதா ?
 
                                      *** 
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 5 of 29 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 17 ... 29  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum