ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 M.Jagadeesan

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 SK

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 krishnanramadurai

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 ayyasamy ram

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Page 6 of 29 Previous  1 ... 5, 6, 7 ... 17 ... 29  Next

View previous topic View next topic Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Dr.S.Soundarapandian on Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம் (87)

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 16, 2013 9:39 pm

  தொடத் தொடத் தொல்காப்பியம் (87)


-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
 
                                      இதுவரை னகர ஈற்றுச் சொற்கள் ( ‘ன்’ஈற்றுச் சொற்கள்) புணர்ந்த வகைகளைப் பார்த்தோம் !
                                      
                                     அடுத்ததாகத் தொல்காப்பியர் யகர ஈற்றுச் சொற்களை எடுத்துக்கொள்கிறார் !
                                      
                                    முதற்கண் ,
 
                                       “யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின்
                                       வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே” (புள்ளி மயங்கியல் 62)
என்கிறார் !
 
                                      அஃதாவது , வேற்றுமைப் பொருளில் , யகர ஈற்றுச் சொற்கள் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களுடன் புணரும்போது , கீழ்வருமாறு புணரும் ! :-
 
                                      நாய் + கால் = நாய்க் கால்
                                                         =நாய் கால் ×
 
                                      நாய் + செவி = நாய்ச்  செவி
                                                         =நாய் செவி ×
 
                                      நாய் + தலை = நாய்த் தலை
                                                         =நாய் தலை ×
 
                                      நாய் + புறம் = நாய்ப் புறம்
                                                         =நாய் புறம் ×


-       எல்லா இடத்தும் வல்லெழுத்துச் சந்திகள் வந்ததைப் பாருங்கள் !
 
-       இந்த நான்கும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !
 
                                      மேலை நூற்பாவை எழுதிய கையோடு விதிவிலக்கு  (Exception) நூற்பா ஒன்றையும் எழுதிவிட்டார் தொல்காப்பியர் ! :-
                                       “தாயென் கிளவி இயற்கை யாகும் (புள்ளி மயங்கியல் 63)
 
                                      இதற்கு இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகளை வருமாறு எழுதலாம் !:-
 
                                      தாய் + கை = தாய் கை
                                                      = தாய்க் கை ×
 
                                      தாய் + செவி = தாய் செவி
                                                         = தாய்ச்  செவி ×
 
                                      தாய் + தலை = தாய் தலை
                                                      = தாய்த் தலை ×
 
                                      தாய் + புறம் = தாய் புறம்
                                                      = தாய்ப்  புறம்×
 
                                       ‘தாய்’ என்பது விரவுப் பெயர் !
                                    
                                      மனிதனுக்கும்  ‘தாய்’ பொருந்தும் ; விலங்குக்கும்  ‘தாய்’ பொருந்தும் !
                                     
                                      ‘பொன்னியின் தாய் வந்தாள்’
                                       ‘தாய்க் கரடி ஓடிவிட்டது’


-       என்று வரல் காணலாம் !


அது சரி !
                                        
                                           ‘நாய்க் கை’ என்று வந்தது போலத் , ‘தாய்க் கை’ என ஏன் வரவில்லை ?
                                       
                                          என்ன மொழி நுட்பம் ?
                                       
                                           ‘தாய்க் கை’ என்றால் , கைகளுக்கு எல்லாம் மூலமான பெரிய கை என்று பொருள்படும் !
                                       
                                          இப்படித் தவறான பொருள் வருவதைத் தடுப்பது எப்படி ? ‘தாயின் கை’ என்றும் கூறியாகவேண்டும் !
                                         
                                           இந் நிலையில்தான் , ‘க்’ போடாதே என்று இலக்கணம் வகுத்தனர் !
                                         
                                        ‘தாய் கை’ என்றால் ‘தாயின் கை’ என்று மட்டும் பொருள்படும் ! அப்போது குழப்பம் ஏதும் வராது !
                                        
                                        எனவே , புணர்ச்சிகளைப் பொறுத்தவரை , கண்ணை மூடிக்கொண்டு ‘க்’, ‘ச்’களை இடையே சேர்த்துவிடக் கூடாது என்பது தெளிவாகிறதல்லவா ?
 
                                                                                     ***


Last edited by Dr.S.Soundarapandian on Sun Jun 16, 2013 9:42 pm; edited 1 time in total (Reason for editing : IN 'post tititle' bar, title incorrect)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (88)

Post by Dr.S.Soundarapandian on Mon Jun 17, 2013 9:14 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (88)


-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
 
                                      
                                     வேற்றுமையில் ‘தாய்’ எனும் சொல் எவ்வாறு புணரும் என்பதை முன்னே பார்த்தோம் !
                                      
                                    அதே ‘தாய்’ எனும் சொல்லில்  சிறு விளக்கம் எழுதுகிறார் தொல்காப்பியர் !:-
 
                                       “மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே !” (புள்ளி மயங்கியல் 64)
 
                                      மகன் வினை – மகன் தாயுடன் பகைத்துக் கொண்ட செயல் !
 
                                      முதனிலை (முதல் நிலை) – முன்னே சொன்னபடி (புள்ளிமயங்கியல் 62) , வல்லெழுத்துச் சந்தி வரும் !
 
                                      மேல் நூற்பாவிற்கு (64) , இளம்பூரணர் கூறிய எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! :-
 
                                       ‘மகன் + தாய் = மகன்றாய் ’ என முதலில் ஆகிப் பின்,
                                      
                                        மகன்றாய் + கலாம் = மகன்றாய்க் கலாம்
ஆகும் !
                                      கலாம் – பூசல் ! (அப்துல் கலாம் அல்ல!)
 
                                      இங்கே , தொல்காப்பியர் கூறிய ‘முதனிலை இயற்றே’என்பதற்கு இணங்க வல்லெழுத்துச் சந்தி ‘க்’ வந்தது காண்க !
                                       ‘தாய் + கை = தாய்கை ’ என்று சந்தி இலாது அமைந்தது போல , ‘மகன்றாய் + கலாம் = மகன்றாய் கலாம்’ என வராது என்பதே தொல்காப்பியர் கூறவந்தது !
                                      
                                       இதே பாங்கில் ,
                                     
                                      மகன்றாய் + செரு= மகன்றாய்ச் செரு
                                                                 =   மகன்றாய் செரு ×
 
                                                மகன்றாய் + தார்= மகன்றாய்த் தார்
                                                                 =    மகன்றாய் தார் ×
 
                                                மகன்றாய் + படை= மகன்றாய்ப்  படை
                                                                 =    மகன்றாய்  படை ×
என வரும் !
 
                                       ‘ய்’ ஈற்றுச் சொற் புணர்ச்சிகளில் வல்லெழுத்துச் சந்தி வந்ததையும் (நாய்க்கால்) , சந்தியே வராததையும் ( ‘தாய்கை’) , பார்த்தோம் !
                                     
                                      தொடர்ந்து , “வல்லெழுத்துச் சந்தியும் வரலாம் ; மெல்லெழுத்துச் சந்தியும் வரலாம் என்ற நிலையில் சில யகர ஈற்றுச் சொற்புணர்ச்சிகள்  உள்ளன ; அதையும் தெரிந்துகொள்ளுங்கள் !”  என்கிறார் தொல்காப்பியர் ! :-
 
                                       “மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே” (புள்ளி மயங்கியல் 65)
                                     
                                      இதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் !:-
 
                                      வேய் + குறை = வேய்க் குறை  
                                                          = வேய்ங் குறை  
 
                                      வேய் + சிறை = வேய்ச் சிறை  
                                                          = வேய்ஞ் சிறை
 
                                      வேய் + தலை = வேய்த்  தலை  
                                                          = வேய்ந்  தலை
 
                                                வேய் + புறம் = வேய்ப் புறம்  
                                                          = வேய்ம் புறம்   
 
                                       ‘உறழும்’ என்றொரு சொல்லை மேலை நூற்பாவில் பார்த்தோம் !
                                     
                                        உறழ்ச்சி – இப்படியும் வரும் அப்படியும் வரும் என்ற நிலை !
                                      
                                       ‘மெல்லெழுத்து உறழும்’ என்றால் , ‘மெல்லெழுத்தும் வரும் , வல்லெழுத்தும் வரும்’ என்பது பொருள் !
                                      
                                       ‘உறழ்’ என்ற சொல் தொல்காப்பியத்தில் பல இடங்களில் வருவதால் , இவ் விளக்கம் இங்கு தேவையாகிறது !
                                      
                                         அது சரி!
                                     
                                       ஏன் உறழ வேண்டும் ?
                                     
                                          ‘உறழ்ச்சி’ ஒரு பெரிய  மொழி நுட்பத்தைச் சுமந்துகொண்டுள்ளது !
                                     
                                            என்ன நுட்பம் ?
                                   
                                           இலக்கண வழக்கிற்கும் மக்கள் வழக்கிற்கும் உள்ள வேறுபாடே உறழ்ச்சிக்குக் காரணம் !
                                      
                                          பசு தரும் பால் , பசுப் பால் !
                                    
                                          பசுப் பால் – இலக்கண வழக்கு !
                                     
                                         பசும் பால் – உலக வழக்கு !
                                      
                                         உலக வழக்கே வென்றது !
 
                                     
                                       புளி மரம் தரும் காய் , புளிக்காய் !
                                     
                                      புளிக்காய் – இலக்கண வழக்கு !
                                     
                                     புளியங்காய் – உலக வழக்கு !
                                      
                                      உலக வழக்கே வென்றது !
 
                                      உலக வழக்கு என்பது எளிய வழக்கு ! மெல்லோசை கொண்டது !
                                     
                                    இதே முறையில்தான் ,
                                     
                                     வேய்க் குறை – இலக்கண வழக்கு .
                                      
                                    வேய்ங் குறை – உலக வழக்கு !
 
                                      உலக வழக்கின் வலிமை தொல்காப்பியருக்கு நன்கு தெரியும் ! அதனால்தான் , அதைத் தள்ளிவிடாமல் ‘ “உறழும்” என்ரு நூற்பா எழுதினார் !
 
                                                                                            ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (89)

Post by Dr.S.Soundarapandian on Thu Jun 20, 2013 8:47 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (89)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

இப்போது காணப்போகும் நூற்பா , புல்ளிமயங்கியலில் யகர ஈர்றுச் சொற்புணர்ச்சிகள் பற்றிய நூற்பாக்களில் இருதி நூற்பா! :-

“அல்வழி யெல்லா மியல்பென மொழிப” (புள்ளி மயங்கியல் 66)

அஃதாவது , யகர ஈற்றுச் சொற்புணர்ச்சிகளில் இதுவரை நாம் பார்த்த நான்கு (உயிர்மயங்.62,63,64,65) நூற்பாக்களும் வேற்றுமைப் புணர்ச்சிகள் கொண்டவை !

மேலே காணும் இறுதி நூற்பா ஒன்று மட்டும் (66) அல்வழிப் புணர்ச்சிக்கானது !

அல்வழியில் யகர ஈற்றுச் சொற்கள் இயல்பாகப் புணரும் என்கிறார் தொல்காப்பியர் ! :-

நாய் + கடிது = நாய் கடிது √
= நாய்க் கடிது ×

நாய் + சிறிது = நாய் சிறிது √
= நாய்ச்  சிறிது ×

நாய் + தீது = நாய் தீது √
= நாய்த்  தீது ×

நாய் + பெரிது = நாய் பெரிது √
= நாய்ப் பெரிது ×

‘ நாய் + கால் = நாய்க் கால்’ என வந்தது வேற்றுமைப் புணர்ச்சி என்றும் , ‘நாய் + கடிது = நாய் கடிது’ என வந்துள்ளது அல்வழிப் புணர்ச்சி என்றும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்க !

                                                  இளம்பூரணர் இங்கு மேலும் சில இலக்கணங்களைத்
தருகிறார் !:-

“ இவ்வீற்று உருபு வாராது , உருபின் பொருள்பட வந்த இடைச்சொல் முடிபும் , வினையெச்ச முடிபும் , இருபெயரொட்டுப் பண்புத் தொகை முடிபும் , அல்வழி யுறழ்ச்சி முடிபும் கொள்க ” என்று கூறிச் சில எடுத்துக்காட்டுகளை அடுக்குகிறார் இளம்பூரணர் !

இளம்பூரணர் எழுதியது உரைதான் ! ஆனால் அந்த உரைக்கு இன்னொரு உரை தேவைப்படுகிறது !

                                             ‘ இவ்வீற்று உருபு’ – யகர ஈற்று உருபு ; அஃதாவது ‘வாய்’ ; இஃது                              
              ஏழாம்    வேற்றுமை உருபு.

‘உருபின் பொருள்படவந்த இடைச்சொல் ’-

அவ்வாய்’; இது  ‘அங்கு’ என்ற பொருள்பட
வந்த இடைச் சொல்.

‘இடைச்சொல் முடிபு ’(இதற்குப் புணர்ச்சி எடுத்துக்காட்டுகள்) –

அவ்வாய்+கொண்டான்=அவ்வாய்க் கொண்டான்
இவ்வாய்+கொண்டான்=இவ்வாய்க் கொண்டான்
உவ்வாய்+கொண்டான்=உவ்வாய்க் கொண்டான்

அவ்வாய்+சென்றான்=அவ்வாய்ச் சென்றான்
இவ்வாய்+ சென்றான் =இவ்வாய்ச் சென்றான்
உவ்வாய்+ சென்றான் =உவ்வாய்ச் சென்றான்

அவ்வாய்+தந்தான்=அவ்வாய்த் தந்தான்
இவ்வாய்+ தந்தான் =இவ்வாய்த் தந்தான்
உவ்வாய்+ தந்தான் =உவ்வாய்த் தந்தான்

அவ்வாய்+போயினான்=அவ்வாய்ப் போயினான்
இவ்வாய்+ போயினான் =இவ்வாய்ப்  போயினான்
உவ்வாய்+ போயினான் =உவ்வாய்ப்  போயினான்

‘வினையெச்சம் ’ – யகர ஈற்று வினையெச்சச் சொல் ‘தாய்’; ‘தாவி’
என்பது பொருள்; இன்னொரு சொல் , ‘கூய்’;
‘கூவி’என்பது பொருள்; கூய் அழைத்தான் - கூவி
அழைத்தான்.

‘வினையெச்ச முடிபு’

  தாய் +கொண்டான்= தாய்க் கொண்டான்
தாய் +சென்றான்= தாய்ச் சென்றான்
தாய் +போயினான்= தாய்ப் போயினான்
இம்மூன்றும் அல்வழிப் புணர்ச்சிகளே.

‘இருபெயரொட்டுப் பண்புத் தொகை முடிபு’ –

    பொய்+ சொல்= பொய்ச் சொல்
மெய்+ சொல்= மெய்ச் சொல்

‘அல்வழி உறழ்ச்சி முடிபு’ – யகர ஈற்றுச் சொற்களைப்                    
பொறுத்தவரை,அல்வழிப் புணர்ச்சி ,சந்தி பெற்றும்
சந்தி பெறாதும் வருவதுண்டு:-

வேய்+கடிது=வேய் கடிது√
        = வேய்க் கடிது√

வேய்+சிறிது=வேய் சிறிது√
        = வேய்ச் சிறிது√

வேய்+தீது=வேய் தீது√
= வேய்த் தீது√

வேய்+பெரிது=வேய் பெரிது√
          = வேய்ப் பெரிது√

‘வேய் கடிது’ (= மூங்கிலானது கடிது) என்பதும் அல்வழிப் புணர்ச்சிதான் !
‘வேய்க் கடிது’ (= மூங்கிலானது கடிது என்ற அதே பொருள்தான்)              
என்பதும் அல்வழிப் புணர்ச்சிதான் !
ஒன்றில் ‘க்’ வரவில்லை ; இன்னொன்றில்
‘க்’வந்துள்ளது ! இவ்வாறு வருவதால்தான்
‘அல்வழி உறழ்ச்சி முடிபும் கொள்க’
என்றார் இளம்பூரணர் ! இதுபோன்று
எப்போதாவதுதான் வரும் !

அது எப்போதாவதுதான் வரும் ; நமக்குத் துன்பம் இப்போது வந்துவிட்டதே !

                                                                   ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (90)

Post by Dr.S.Soundarapandian on Sat Jun 22, 2013 2:17 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (90)

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

அடுத்ததாக  ‘ர்’ ஈற்றுச் சொற்களைத் தொல்காப்பியர் எடுத்துக்கொள்கிறார் !

புள்ளிமயங்கியலில் மொத்தம் நான்கு நூற்பாக்களை ஒதுக்குகிறார் தொல்காப்பியர் !

முதலாவது –

“ரகர இறுதி யகர இயற்றே” (புள்ளி மயங்கியல் 67)

“ரகர ஈற்றுச் சொற்கள் எப்படிப் புணரும் ?” என்று கேட்டால் , நான் முன்பு விளக்கியபடி , மனப்பாட வசதிக்காக, ‘யகர ஈற்றுப் புணர்ச்சி போல’ என்கிறார் தொல்காப்பியர் !

எதைக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர் ?

வேறு ஒன்றுமில்லை , ‘நாய்க்கால்’ (புள்ளி மயங்கியல் 62) வந்ததல்லவா ? அதுபோபோலப் புணருமாம் !

அஃதாவது ?

அஃதாவது , வேற்றுமைப் புணர்ச்சியில் , ரகர ஈற்றுச் சொற்கள் வல்லெழுத்துச் சந்தி பெற்றுப் புணரும் !

தேர் + கால் = தேர்க் கால் (வேற்றுமைப் புணர்ச்சி)
தேர் + செய்கை = தேர்ச் செய்கை (வேற்றுமைப் புணர்ச்சி)
தேர் + தலை = தேர்த் தலை (வேற்றுமைப் புணர்ச்சி)
தேர் + புறம் = தேர்ப் புறம் (வேற்றுமைப் புணர்ச்சி)

‘தேர்க் கால்’ என்பதை விரியுங்கள் ! ‘தேரின் கால்’ என ஆகுமல்லவா ? ‘தேரின் கால்’ என்பதில் ஓர்  ‘இன்’ ஒளிந்திருக்கிறது அல்லவா? அந்த ‘இன்’ ஒரு வேற்றுமை உருபு ! (5ஆம் வேற்றுமை உருபு) ; இந்த வேற்றுமை உருபால்தான் , இதனை வேற்றுமைப் புணர்ச்சி என்கிறோம் !

மேல் நூற்பாவை எழுதிய கையோடு , ஒரு விதி விலக்கையும் அவசரம் அவசரமாகத் தொல்காப்பியர் எழுதுகிறார் ! :-

“ஆரும் வெதிரும் சாரும் பீரும்
மெல்லெழுத்து மிகுதன் மெய்பெறத் தோன்றும்”  (புள்ளி மயங்கியல் 68)

‘ தேர் + கால் =  தேர்க் கால்’ என வந்ததுபோல், ‘ஆர் + கால் =ஆர்க்கால்’ என வரும் என நினைக்காதீர்  என்கிறார் தொல்காப்பியர் !
தொல்காப்பியர் தந்த விதி விலக்குகள் !:-

ஆர் + கோடு = ஆர்க் கோடு ×
= ஆர்ங் கோடு √

ஆர் + செதிள் = ஆர்ச் செதிள் ×
= ஆர்ஞ் செதிள் √

ஆர் +தோல் = ஆர்த் தோல் ×
= ஆர்ந் தோல் √

ஆர் + பூ = ஆர்ப் பூ ×
= ஆர்ம் பூ √

வெதிர் + கோடு = வெதிர்க் கோடு ×
= வெதிர்ங் கோடு √

வெதிர் + செதில் = வெதிர்ச் செதிள் ×
= வெதிர்ஞ் செதிள் √

வெதிர் + தோல் = வெதிர்த் தோல் ×
= வெதிர்ந் தோல் √

வெதிர் + பூ = வெதிர்ப் பூ ×
= வெதிர்ம் பூ √

சார் + கோடு = சார்க் கோடு ×
= சார்ங் கோடு √

சார் + செதிள் = சார்ச் செதிள் ×
= சார்ஞ் செதிள் √

சார் + தோல் = சார்த் தோல் ×
= சார்ந் தோல் √

சார் + பூ       = சார்ப் பூ ×
= சார்ம் பூ √

இங்கே , ‘குதிர்’ , ‘துவர்’ என்ற பெயர்ச் சொற்களுக்கும் இதே விதிதான்  என்று ஒட்டுகிறார் இளம்பூரணர் !
அதன்படி ,

குதிர் + கோடு = குதிர்க் கோடு ×
= குதிர்ங் கோடு √

குதிர் + செதிள் = குதிர்ச் செதிள் ×
= குதிர்ஞ் செதிள் √

குதிர் + தோல் = குதிர்த் தோல் ×
= குதிர்ந் தோல் √

குதிர் + பூ    = குதிர்ப் பூ ×
= குதிர்ம் பூ √


துவர் + கோடு = துவர்க் கோடு ×
= துவர்ங் கோடு √

துவர் + செதிள் = துவர்ச் செதிள் ×
= துவர்ஞ் செதிள் √

துவர் +தோல் = துவர்த் தோல் ×
= துவர்ந் தோல் √

துவர் + பூ = துவர்ப் பூ ×
     = துவர்ம் பூ √

மேலே , ‘பீர்’ எனும் சொற்புணர்ச்சியைப் பார்த்தோமல்லவா? அதிலும் ஓர் ஒட்டு ஒட்டுகிறார் இளம்பூரணர் ! :-

பீர் + கோடு = பீர்ங் கோடு √
= பீரங் கோடு √ (அம்- சாரியை)

பீர் + செதிள் = பீர்ஞ் செதிள் √
= பீரஞ் செதிள் √ (அம்- சாரியை)

பீர் + தோல் = பீர்ந் தோல் √
= பீரந் தோல் √ (அம்- சாரியை)

பீர் + பூ = பீர்ம் பூ √
 = பீரம் பூ √ (அம்- சாரியை)

மேலே கண்ட அனைத்துப்  புணர்ச்சிகளும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !

அது சரி !

‘தேர்க் கால்’ என்று ‘க்’ வருகிறது ; ஏன் ‘ஆர்ங்கோடு’ என ‘ங்’ வருகிறது ? ‘ஆர்க் கோடு’ என வரவேண்டியதுதானே ?

இதில் ஏதாவது மொழி நுட்பம் உள்ளதா ?

உள்ளது !

‘தேர்’ , தனி ஒரு பொருள் ! அதற்குச் சில உறுப்புகள் (parts) உள்ளன ! எனவே  அவற்றைச் சுட்ட  ‘க்’தான் உதவுகிறது !  ‘தேர்க் கால்’ என்றால் ‘தேர்’ என்ற பொருளுக்குக் காலான வேறு ஓர் உறுப்பு என்பது விளங்குகிறது !

அதே நேரத்தில் , ‘ஆர்’ என்பது ஒரு மரம் ! கழற்றக் கூடிய தனி உறுப்புகளைக் கொண்டதல்ல ! எனவே , ‘தேரு’க்குக் கூறிய இலக்கணம் ‘ஆரு’க்குப் பொருந்தாது !தேருக்குச் சொன்ன வகையில் ஆருக்கும் புணர்ச்சி சொன்னால் பொருள் குழப்பம் ஏற்படும் ! ஆகவேதான் , வேறுபாட்டை உருவாக்கத்தான் , தேருக்கு ‘க்’ ,  ஆருக்கு ‘ங்’ !

மொழி நுட்பம் இதுதான் !

தொல்காப்பியர் மேலே குறித்த ‘ஆர்’ மரத்தைப் பர்க்க ஆசையாக உள்ளதா ?

[You must be registered and logged in to see this link.]
(Courtesy- J.M. Garg , Commons. Wikimedia.org)

இதுதான் தொல்காப்பியர் கூறிய ஆர் மரம் !

ஆத்தி என்பதும் இதுதான் ! ( ‘ஆத்தி , இதுதனா ஆர்’ என்கிறீர்களா?)

வெள்ளை மந்தாரை என்பதும் இதுதான் !

பீடி சுற்ற இலையை வாரிவழங்கிய மரமும் இதுதான் ! சிறந்த மருந்துகளை அளிப்பதும் இதுவே!

‘ஆத்தி சூடி’ என்று சிவனுக்குப் பெயர் தந்த மரமும் இதுதான் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

[b] தொடத் தொடத் தொல்காப்பியம் (91)[/b]

Post by Dr.S.Soundarapandian on Sat Jun 22, 2013 10:06 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (91)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

ரகர ஈற்றுப் புணர்ச்சியில் அடுத்தது  ‘சார்’ !

இதைப் பார்ப்போமா சார் ?

“சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும்” ! (புள்ளி மயங்கியல் 69)

- என்பது தொல்காப்பியம் !

காழ் வயின் – ‘காழ்’ எனும் சொல்லோடு

வலிக்கும் – வல்லொற்று மிக்குப் புணரும் !

அஃதாவது ,

சார் + காழ் = சார்க் காழ் √  
= சார்ங் காழ் ×

- இதுவும் வேற்றுமைப் புணர்ச்சியே !

காழ்  -  பருப்பு

சாரக் காழ் – சாரப் பருப்பு

சார்க் காழ் – இலக்கண வழக்கு  (தொல்காப்பியர் காலம்)

சாரக் காழ் – இலக்கண வழக்கு (பிற்காலம்)

சாரப் பருப்பு (மக்கள் வழக்கு)

மக்கள் வழக்கே வென்றது !

தொல்காப்பியரின் ‘சார் ’ – மரத்தைப் பார்க்க ஆசையா?

[You must be registered and logged in to see this link.]

Courtesy – thewesternghats.indiabiodiversity.org

இதுதான் தொல்காப்பியம் பேசிய சார் மரம் !

புளிமா எனப்படுவதும் இம்மரமே !

இதன் தாவரவியல் பெயர் -  Buchanania axillaris  

இந்த மரத்தின் தோற்றமே தமிழகமும் சிலோனும்தான் என ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (92)

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 23, 2013 10:17 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (92)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

அடுத்தது ‘ல்’ ஈறு !

‘ல்’ ஈற்றுச் சொற்கள் எப்படிப் புணரும் என்று புள்ளி மயங்கியலில் 12  நூற்பக்கள் பகர்கின்றன !

முதல் நூற்பா ! :-

“லகார இறுதி னகார இயற்றே”  (புள்ளி மயங்கியல் 71 )

லகர ஈற்றுச் சொற்கள் , னகர ஈற்றுச் சொற்களை போல ப் புணரும் !

அஃதாவது , வேற்றுமைப் பொருளில் , ‘ல்’ ஆனது , ‘ற்’ ஆக மாறும் !:-

கல் + குறை = கற்குறை  (வேற்றுமைப் புணர்ச்சி)

கல் + சிறை = கற்சிறை  (வேற்றுமைப் புணர்ச்சி)

கல் + தலை = கற்றலை  (வேற்றுமைப் புணர்ச்சி)

கல் + புறம் = கற்புறம்  (வேற்றுமைப் புணர்ச்சி)

மேல் நான்கும் வல்லெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து சேர்ந்ததற்கு உதாரணங்கள் !

அப்படியானால் , மெல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து சேர்ந்தால் எப்படிப் புணரும் ? :-

“மெல்லெழுத் தியையி  னகார மாகும்” ( புள்ளி மயங்கியல் 72)

இதன்படி ,

கல் + ஞெரி = கன்ஞெரி (வேற்றுமைப் புணர்ச்சி)

கல் + நுனி = கன்னுனி (வேற்றுமைப் புணர்ச்சி)

கல் + முறி = கன்முறி (வேற்றுமைப் புணர்ச்சி)

இவ்விடத்தில் இளம்பூரணர் ஒரு விதி விலக்கை வைக்கிறார் ! :-

“இச் சூத்திரத்தினை வேற்றுமையது ஈற்றுக்கண் சிங்க நோக்காக வைத்தமையான் , அல்வழிக்கும் இம் முடிபு கொள்க .”

எப்படிப் பார்த்தீர்களா?

மேல் நூற்பா(71) வேற்றுமை பற்றி எழுதப்பட்டதாம் ! அதனால் அடுத்தது அல்வழி பற்றி எழுதப்படக்கூடிய இடமாம் ! இதைத்தான் ,  ‘அல்வழியது எடுத்துக்கோடற்கண்’ என்றார் இளம்பூரணர் !

இப்படி , முன்னேயும் பின்னேயும் ஒரு தொடர்புபடப் பார்ப்பதுதான்  ‘சிங்க நோக்கு’ !    

சிங்கம் என்ன செய்யுமாம் , நடக்கும்போது நேரே பார்த்தபடி விடுவிடு என்று  நடக்காதாம் ! திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடக்குமாம் ! இதுதான் சிங்க நோக்கு !

இப்போது , மேல் இளம்பூரணர் விதி விலக்கு உரைப்படி எடுத்துக்காட்டுகளைக் காண்போம்!:-

கல் + ஞெரிந்தது = கன்ஞெரிந்தது  (அல்வழிப் புணர்ச்சி)

கல் + நீண்டது = கன்னீண்டது   (அல்வழிப் புணர்ச்சி)

கல் + மாண்டது = கன்மாண்டது  (அல்வழிப் புணர்ச்சி)

 ஞெரிந்தது -  முறிந்தது

இச் சொல்லை இன்று யாரும் பயன்படுத்துவதில்லை ! வழக்கொழிந்த தமிழ்ச் சொற்களில் இதுவும் ஒன்று !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (93)

Post by Dr.S.Soundarapandian on Mon Jun 24, 2013 9:40 pm

 தொடத் தொடத் தொல்காப்பியம் (93)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

லகர ஈற்றுச் சொற்கள் சில அல்வழியில் , மெல்லெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போது ‘கல்+நீண்டது= கன்னீண்டது’ என்பதுபோல, ‘ல்’ , ‘ன்’ஆகிப் புணரும் என்று இளம்பூரணரின் உரையால் அறிந்தோம் !

இனி , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் லகர ஈற்றுச் சொற்களோடு வந்து புணரும்போது , இருவகைப்பட்ட முறைகளில் புணரும் என்கிறார் தொல்காப்பியர் !:-

 “அல்வழி யெல்லா முறழென மொழிப” (புள்ளி மயங்கியல் 73)

அஃதாவது ,

கல் + குறிது = கல் குறிது √    (அல்வழிப் புணர்ச்சி)
       = கற் குறிது √      (   ”  ஜாலி

கல் + சிறிது = கல் சிறிது √   (அல்வழிப் புணர்ச்சி)
       = கற் சிறிது √    (   ”  ஜாலி

கல் + தீது = கல் தீது √      (அல்வழிப் புணர்ச்சி)
       = கற் றீது √   (   ”  ஜாலி

கல் + பெரிது = கல் பெரிது √     (அல்வழிப் புணர்ச்சி)
       = கற் பெரிது √         (   ”  ஜாலி
என வரும் !

மேலே பார்த்தவாறு ‘உறழ்’ என்று வருமிடங்களில் கவனமாக இருக்கவேண்டும் !
ஏனெனில் , ஒரு பாட்டில் ‘கல் குறிது’ என்று வந்தால் , “இது தவறு ! கற்குறிது என்று வரவேண்டும்” என்பார் ஒருவர் ! “கல் குறிது என்பது சரிதானே ?” என்பார் இன்னொருவர் ! அப்படிப் பட்ட நேரத்தில் உங்களுக்குக் கைகொடுப்பது இந்த (73)நூற்பாதான் !

இது குறிப்பாகச் சுவடியியலில் (Manuscriptology) இன்றியமைகையாத கருத்து !
ஓலைச் சுவடியிலிருந்து ஒரு நூலைச் செம்பதிப்பாக (Critical edition) உருவாக்கும்போது மேலே குறிப்பிட்ட சிக்கல் அடிக்கடி எழும் !
அது சரி !
நாம் ‘கல் குறிது’ என்பதை எடுப்பதா, ‘கற் குறிது’ என்பதைக் கொள்வதா ?
‘கற் குறிது’ தான் !
எப்படி ?
‘லகார இறுதி னகார இயற்றே’ (புல்ளி மயங்கியல் 71) என்ற சட்டத்தைப் பிடித்துக்கொள்ளவேண்டும் !  ‘ன்’ , ‘ற்’ ஆகும் என்று வேற்றுமைப் புணர்ச்சிக்குக் கூறினாலும்,  ன் –ற்  போல ல்-ற் ஐயும் கொள்வதே பொருத்தமாகும் !

இங்கே ஒரு விதி விலக்கு !
கூறுபவர் நம் இளம்பூரணர் !

மேல் நான்கு புணர்ச்சிகளும் ( ‘கல் குறிது’ முதல் ‘கற் பெரிது’ வரை மேலே கண்டவை) அல்வழிக்குத்தானே ?
ஆனால் ,  “குணம்பற்றி வந்த வேற்றுமைக்கும் இவ்வுறழ்ச்சி கொள்க ” என்பதே அவ் விதி விலக்கு !

இவ் விதிப்படி ,

கல்+ குறுமை = கல் குறுமை √    (வேற்றுமைப் புணர்ச்சி)
= கற் குறுமை  √    (வேற்றுமைப் புணர்ச்சி)
என வரும் !

‘குறுமை’ – பண்புப் பெயர் ; இதனைத்தான் ‘குணம் பற்றிவந்த’ எனக் குறித்தார் இளம்பூரணர் !

மேலே வந்த ‘கல்’ , பெயர்ச் சொல் !

இளம்பூரணர் இதற்கும் ஒரு விதிவிலக்குக் கூறுகிறார் ! :-

“இவ்வீற்று வினைச்சொல்லீறு திரிந்தனவும் கொள்க ”.

இதற்கு ‘வந்தானாற் கொற்றன்’ என எடுத்துக்காட்டும் தந்தார் !

இதனை விரித்தால் ,
வந்தானால்  + கொற்றன் = வந்தானாற் கொற்றன்
என வரும் !

ஆல் – அசைநிலை .
வந்தானாற் கொற்றன் – வந்தான் கொற்றன் .

                                மேலும் , இளம்பூரணர் , “உருபு வாராது உருபின் பொருள்பட வந்தவற்றின்

முடிபும் ஈண்டே கொள்க ” என்கிறார் !

இதற்கு அவர் தந்த எடுத்துக்காட்டுகள் – ‘அக்காற் கொண்டான்’ முதலியன !

அஃதாவது ,
அக்கால் + கொண்டான் = அக்காற் கொண்டான் (அல்வழிப் புணர்ச்சி)

அக்காற் கொண்டான் – அவ்விடத்துக் கொண்டான் .
அக்கால் – அவ்விடத்து .
அக்கால் – ஒரு சொல் ; பிரிக்கக் கூடாது; இதுவே 7ஆம் வேற்றுமை உருபுப் பொருளில்  ( ‘உருபின் பொருள்பட’)வந்த சொல் !

இதே பாங்கில் , இளம்பூரணர் தந்த பிற எடுத்துக்காட்டுகளை வருமாறு எளிமைப்படுத்தி உணரலாம் !:-

இக்கால் + கொண்டான் = இக்காற் கொண்டான் (அல்வழிப் புணர்ச்சி)

உக்கால் + கொண்டான் = உக்காற் கொண்டான் (அல்வழிப் புணர்ச்சி)

எக்கால் + கொண்டான் = எக்காற் கொண்டான் (அல்வழிப் புணர்ச்சி)


அக்கால் + சென்றான் = அக்காற் சென்றான் (அல்வழிப் புணர்ச்சி)
இக்கால் + சென்றான் = இக்காற் சென்றான் (அல்வழிப் புணர்ச்சி)
உக்கால் + சென்றான் = உக்காற் சென்றான் (அல்வழிப் புணர்ச்சி)
எக்கால் + சென்றான் = எக்காற் சென்றான் (அல்வழிப் புணர்ச்சி)


அக்கால் + தந்தான் = அக்காற் றந்தான் (அல்வழிப் புணர்ச்சி)
இக்கால் + தந்தான் = இக்காற் றந்தான் (அல்வழிப் புணர்ச்சி)
உக்கால் + தந்தான் = உக்காற் றந்தான் (அல்வழிப் புணர்ச்சி)
எக்கால் + தந்தான் = எக்காற் றந்தான் (அல்வழிப் புணர்ச்சி)

அக்கால் + போயினான் = அக்காற் போயினான் (அல்வழிப் புணர்ச்சி)
இக்கால் + போயினான் = அக்காற் போயினான் (அல்வழிப் புணர்ச்சி)
உக்கால் + போயினான் = உக்காற் போயினான் (அல்வழிப் புணர்ச்சி)
எக்கால் + போயினான் = எக்காற் போயினான் (அல்வழிப் புணர்ச்சி)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (94)

Post by Dr.S.Soundarapandian on Thu Jun 27, 2013 9:02 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (94)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘ல்’ ஈற்றுப் புணர்ச்சி தொடர்கிறது !

‘ல்’லை ஈறாக உடைய சொல் முன் , ‘த’வை முதலாகக் கொண்ட  சொல் வந்து புணர்ந்தால், எப்படிப் புணரும் ?

தொல்காப்பியர் விடை ! :-

“தகரம் வரும்வழி யாய்த நிலையலும்
புகரின் றென்மனார் புலமை யோரே ”  (புள்ளி மயங்கியல் 74)

புகரின்று – குற்றமில்லை .

இதன்படி ,

கல் + தீது = கற்றீது √      (அல்வழிப் புணர்ச்சி)
     = கஃறீது  √    (அல்வழிப் புணர்ச்சி)
என வரும் !

இங்கு கூடுதல் செய்தி ஒன்றை வழங்குகிறார் இளம்பூரணர் !

அஃதாவது , கீழ்வரும் முறைகளிலும் சில ‘ல்’ ஈற்றுச் சொற்கள் புணரும் என்கிறார் இளம்பூரணர் ! : -

வேல் + தீது = வேறீது √                (அல்வழிப் புணர்ச்சி)
            = வேற்றீது √ (அல்வழிப் புணர்ச்சி)

மேலை எடுத்துக்காட்டில் , ‘வே’ , நெடில்தானே ? அதனை அடுத்தது ‘ல்’தானே ? அப்படியானால் , ‘வேல் + தீது’ புணர்ந்த அதே முறையில்தானே ‘பால் + தீது’ ம்   புணரவேண்டும் ? இரண்டுமே அல்வழிப் புணர்ச்சிகள்தானே ?

“ஏமாறாதீர்கள் !” என்கிறார் தொல்காப்பியர் ! :-

“நெடியத  னிறுதி  யியல்புமா ருளவே”  (புள்ளி மயங்கியல் 75)

அஃதாவது , சில சொற்கள் , வேறு மாதிரியாக , இயல்பாகப் , புணரும் என்கிறார் தொல்காப்பியர் !

இதற்கு இளம்பூரணர் தந்த  எடுத்துக்காட்டுகளை வருமாறு வரையலாம்  !:-

பால் + கடிது = பால் கடிது √    (அல்வழிப் புணர்ச்சி)
= பாற் கடிது ×

பால் + சிறிது = பால் சிறிது √    (அல்வழிப் புணர்ச்சி)
= பாற் சிறிது ×

பால் + தீது = பால் தீது √             (அல்வழிப் புணர்ச்சி)
= பா றீது ×

பால் + பெரிது = பால் பெரிது √    (அல்வழிப் புணர்ச்சி)
= பாற் பெரிது ×

சிலர்  ‘பாற் கடிது’ம்  வரலாம் என்று எழுதியுளர் ! இதற்குத் தொல்காப்பிய மூலத்திலும் இளம்பூரணர் உரையிலும் இடமில்லை ! இளம்பூரணர் ‘பால் கடிது’ என்பதை மட்டும் உதாரணம் தந்தாரே தவிர , ‘பாற் கடிது’ என்பதைத் தரவே இல்லை !
‘பாற் கடல்’ என வருகிறதே ?- கேட்கலாம் !

 ‘பாற் கடல்’ – வேற்றுமைப் புணர்ச்சி ! நாம் பேசிக்கொண்டிருப்பது அல்வழிப் புணர்ச்சி !

மேலைச் சூத்திரத்தில் (75) , ‘இயல்புமா ருளவே’ ( = இயல்பும் உள்ளன) என்றாரல்லவா ? அப்படியானால் , ‘இயல்பு’  அல்லாது ‘திரிந்து’ வருவதையும் கொள்ளலா மல்லவா ?

“கொள்ளலாம்” என அனுமதிக்கிறார் இளம்பூரணர் !

அஃதாவது , அல்வழியில் , இயல்பாகவும் , திரிந்தும் ஒரே சொல் புணரும் நிலையும் உண்டு.; இதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள்  ! :-

வேல் + கடிது = வேல் கடிது  √   (அல்வழிப் புணர்ச்சி)
= வேற் கடிது  √   (அல்வழிப் புணர்ச்சி)

  ‘ல்’ ஈற்றுப் புணர்ச்சியில் அடுத்து என்ன கூறுவாரோ தொல்காப்பியர் ?

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (95)

Post by Dr.S.Soundarapandian on Fri Jun 28, 2013 9:11 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (95)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொல்காப்பியர் இப்போது , ‘நெல்’ , ‘செல்’ ,  ‘கொல் ’ ,‘சொல்’ ஆகிய லகர ஈற்றுச் சொற்களைக் கையில் எடுக்கிறார் ! :-

“நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும்
அல்லது கிளப்பினும் வேற்றுமை யியல”  (புள்ளி மயங்கியல் 76)

அல்லது – அல்வழிப் புணர்ச்சி .

அஃதாவது , ‘நெல்’ , ‘செல்’ ,  ‘கொல் ’ ,‘சொல்’ ஆகிய நான்கு சொற்களும் , அல்வழிப் புணர்ச்சியில் இருந்தாலும் , வேற்றுமைப் புணர்ச்சியிற் போல , ‘ல்’ ஆனது ‘ற்’  ஆகும் !

இதற்கு இளம்பூரணரின் உதாரணங்களை  வருமாறு விரித்துரைக்கலாம் !:-

நெல் + கடிது = நெல் கடிது ×
= நெற் கடிது √     (அல்வழிப் புணர்ச்சி)

நெல் + சிறிது = நெல் சிறிது ×
= நெற் சிறிது √     (அல்வழிப் புணர்ச்சி)

நெல் + தீது = நெல் தீது ×
= நெற் றீது √     (அல்வழிப் புணர்ச்சி)

நெல் + பெரிது = நெல் பெரிது ×
= நெற் பெரிது √     (அல்வழிப் புணர்ச்சி)


செல் + கடிது = செல் கடிது ×
= செற் கடிது √     (அல்வழிப் புணர்ச்சி)

செல் + சிறிது = செல் சிறிது ×
= செற் சிறிது √     (அல்வழிப் புணர்ச்சி)

செல் + தீது = செல் தீது ×
= செற் றீது √     (அல்வழிப் புணர்ச்சி)

செல் + பெரிது = செல் பெரிது ×
= செற் பெரிது √     (அல்வழிப் புணர்ச்சி)


கொல் + கடிது = கொல் கடிது ×
= கொற் கடிது √     (அல்வழிப் புணர்ச்சி)

கொல் + சிறிது = கொல் சிறிது ×
= கொற் சிறிது √     (அல்வழிப் புணர்ச்சி)
கொல் + தீது = கொல் தீது ×
= கொற் றீது √     (அல்வழிப் புணர்ச்சி)

கொல் + பெரிது = கொல் பெரிது ×
= கொற் பெரிது √     (அல்வழிப் புணர்ச்சி)


சொல் + கடிது = சொல் கடிது ×
= சொற் கடிது √     (அல்வழிப் புணர்ச்சி)

சொல் + சிறிது = சொல் சிறிது ×
= சொற் சிறிது √     (அல்வழிப் புணர்ச்சி)

சொல் + தீது = சொல் தீது ×
= சொற் றீது √     (அல்வழிப் புணர்ச்சி)

சொல் + பெரிது = சொல் பெரிது ×
  = சொற் பெரிது √     (அல்வழிப் புணர்ச்சி)

செல் – மேகம் ; பெயர்ச் சொல் .
கொல் – விசுவகர்மர்தம்  கொல்லுத் தொழில் ; பெயர்ச் சொல் .


இந்த நூற்பாவுக்கு இளம்பூரணர் எதனையும் ஒட்டவும் இல்லை வெட்டவும் இல்லை !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (96)

Post by Dr.S.Soundarapandian on Sat Jun 29, 2013 9:18 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (96)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33


‘இல்’ என்றால் ‘இல்லை’ என்றும் ஒரு பொருள் உண்டு .

இல் – குறிப்பு வினைமுற்று .

ஏன் குறிப்பு ?

காலத்தைத் தெளிவாகக் கூறாததால் !

இந்த ‘இல்’ பற்றிய தொல்காப்பியரின் புணர்ச்சி விதி !:-

“இல்லென்  கிளவி  இன்மை  செப்பின்
வல்லெழுத்து  மிகுதலு  மையிடை  வருதலும்
இயற்கை  யாதலு  மாகாரம் வருதலும்
கொளத்தகு  மரபி  னாகிட   னுடைத்தே”    (புள்ளி மயங்கியல் 77)

‘இல்லென் கிளவி இன்மை செப்பின்’ என ஏன் தொடங்கவேண்டும் ?

ஏனெனில் , ‘இல்’ என்பதற்கு ‘வீடு’ என்றொரு பொருளும் உண்டு ! அதனைத் தவிர்ப்பதற்காகத்தான் , “நான்  ‘இல்’லுக்கு இங்கே கொண்ட பொருள் ‘இல்லை’ என்பதாகும்” என்று எடுத்த எடுப்பிலேயே தெளிவாக்கிவிடுகிறார் !

இதுபோன்ற தொல்காப்பியரின் எழுத்து நுணுக்கங்களைப் பார்த்துக்கொண்டே வாருங்கள் ! இவற்றைத்தான் ஆய்வுநெறிமுறை (Research methodology) என்று இன்று கூறுகிறோம் !  முன்னோடி (Pioneer) யார் என்பது விளங்குகிறதா?

இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள் மேல் நூற்பாவை இனிதே விளக்குகின்றன ! அவற்றை வருமாறு பிரித்துப் பார்க்கவேண்டும் ! :-  

இல்+ கல் =  இல் + ஐ + கல் = இல்லைக் கல் √
(‘வல்லெழுத்து மிகுதல்’)

இல்+ கல் =  இல் + ஐ + கல் = இல்லை கல் √

(‘ஐ’ இடை  வருதல்)

இல்+ கல் =   இல் கல் √

(‘இயற்கை ஆதல்’)

இல்+ கல் =  இல் + ஆ + கல் = இல்லாக் கல் √

(‘ஆகாரம் வருதல்’ ; க் - சந்தி)

இவற்றைச் சிறிது விலக்கவேண்டும் ! :-

‘வல்லெழுத்து மிகுதல்’ – ‘இல்’லுக்கும் ‘கல்’லுக்கும் இடையே ‘க்’ ஆகிய வல்லின எழுத்து மிகவேண்டும் என்றால் , ஒரு சாரியை வந்தே ஆகவேண்டும் ! அதுதான் ‘ஐ’
!

‘ஐயிடை வருதல்’ – ‘இல்’லுக்கும் ‘கல்’லுக்கும் இடையே ‘ஐ’ இடை வரவேண்டுமானால் , புணர்ச்சி , மேலே காட்டியுள்ளதுபோல் , ‘இல்லை கல்’தான் !

‘இயற்கை ஆதல்’ – ‘இல்’லுக்கும் ’கல்’லுக்கும் இடையே ஒன்றும் வரக்கூடாது ! அதுதான் ‘இல் கல்’ !

‘ஆகாரம் வருதல்’ – ஆகாரம் எந்த ஓட்டலிலிருந்து வருகிறது என்று கேட்காதீர்கள் !

‘இல்’லுக்கும் ‘கல்’லுக்கும் இடையே ஆகாரம் ( ‘ஆ’) வந்தால் , மேலே எழுதியுள்ளபடி , ‘இல்லாக்கால்’ என்றுதான் ஆகும் !

இளம்பூரணர் சொன்ன வேறு உதாரணங்களையும் வருமாறு பிரித்து எழுதலாம் ! :-

இல் + சுனை = இல்லைச் சுனை √

                        இல் + சுனை = இல்லை சுனை √

இல் + சுனை = இல் சுனை √

இல் + சுனை = இல்லாச் சுனை √


இல் + துடி = இல்லைத் துடி √

இல் + துடி = இல்லை துடி √

இல் + துடி = இல் துடி √

இல் + துடி = இல்லாத் துடி √


இல் + பறை = இல்லைப் பறை √

இல் + பறை = இல்லை பறை √

இல் + பறை = இல் பறை √

இல் + பறை = இல்லாப் பறை √


‘இல்’ தொடர்பான மேலைப் புணர்ச்சிகள் யாவுமே அல்வழிப் புணர்ச்சிகளே !

உரை இறுதியில் இளம்பூரணர், “இல் என்பது எதிர்மறை வினைக் குறிப்பு முற்று விரவு வினை” என்றார் !

என்ன பொருள் ?

‘இல்’ என்பது இன்மைப் பொருள் கொண்டதால் , ‘எதிர்மறை’ !

‘வினைக் குறிப்பு முற்று’ என்றாலும் , ‘குறிப்பு வினை முற்று’ என்றாலும் ஒன்றுதான் ! ‘இல்லை’ என்பதில் காலம் பற்றிய செய்தி இல்லை ! ‘இல்லை’ என்று அங்கேயே நின்றுவிடுவதால் , எச்சமும் இல்லை ! எச்சம் ஆகாததால் அது ‘முற்று’ ! ‘இல்லை’ என்பதில் பெயர்த்தன்மை இலாது , வினைத்தன்மை இருப்பதால் , மொத்தத்தில் ‘குறிப்பு வினை முற்று’ !

‘விரவு வினை’  (Common class)– ‘இல்லை’ என்ற சொல்லை உயர் திணைக்கும் (personal class)ஆளலாம்; அஃறிணைக்கும்(Impersonal class) ஆளலாம் !

‘அவள்  இல்லை’ √
‘மாடு இல்லை’  √

எனவே, ‘இல்லை’ என்பதை ‘விரவு வினை’ என்கிறோம் !

இந்த ‘விரவு’ என்ற சொல் நமக்குப் பழக்கமான சொல்தான் !

“தண்ணீர் கொதிக்குது ! பச்சத் தண்ணி விலாவிக் கொண்டு வா” – மாமியர் மருமகளைப் பார்த்து அலறுவாள் !

இந்த ‘விலாவி’ என்பது , ‘விரவி’யிலிருந்து வந்ததுதான் !

விரவி – விலவி – விலாவி !

‘இல்லை’ என்ற சொல் ,செம்பதிப்பு (Critical edition) நோக்கில் இன்றியமையாத சொல் !  

பாடலில், நூற்பாவில் , ‘இல்லை’ என்ற சொல்லை அடுத்து ஒற்று வருமா வராதா என்ற குழப்பம் அடிக்கடி வரும் !
“கடிசொல் இல்லைக் காலத்துப் படினே” (எச்சவியல் 56)- என்பதில் , ‘இல்லை’ என்றுதான் போடவேண்டும் என்பார் ஒருவர் ; ‘இல்லைக் ’ என்பதுதான் சரி என்பார் இன்னொருவர் !

எது சரி ?

இங்கேதான் மேலை ஆய்வு நமக்குக் கைகொடுக்கிறது !

தொல்காப்பியர்தான் ‘க்’ வரலாம், வராமலும் இருக்கலாம் எனக் கூறிவிட்டாரே ?

எனவே ,
“கடிசொல் இல்லைக் காலத்துப் படினே” √
“கடிசொல் இல்லை காலத்துப் படினே”   √

ஆனால், நூற்பாவுக்கு ஏற்ற ‘கிண்’ணென்ற ஓசையை ‘க்’ தருவதால் ,‘இல்லைக்’ என்று போடுவதே சிறந்தது என்பது என் கருத்து !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (97)

Post by Dr.S.Soundarapandian on Sat Jul 06, 2013 7:35 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (97)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொல்காப்பியத்து எழுத்ததிகாரத்துப் புல்ளிமயங்கியலின்அடுத்த  லகர ஈற்றுச் சொல்  ‘வல்’ !

“ வல்லென் கிளவி தொழிற்பெய ரியற்றே” (புள்ளி மயங்கியல் 78)

‘தொழிற்பெய ரியற்றே’ – தொழிற்பெயர் போல .

எந்தத் தொழிற்பெயர் ?

அந்தத் தொழிற் பெயர் , இளம்பூரணர் உரையால் , ‘ஞ்’ஈற்றுத் தொழிற் பெயர் என அறிகிறோம் !
அது எங்கே கூறப்பட்டது ?

“ஞகாரை யொற்றிய தொழிற்பெயர் முன்னர்
அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே
உகரம் வருத லாவயி னான”                (புள்ளி மயங்கியல் 1)
என வந்தது !

இதில் , ‘உரிஞுக் கடிது’ (அல்வழி) , ‘உரிஞுக் கடுமை’ (வேற்றுமை) என இரு வழிகளிலும் தொழிற்பெயர் புணர்வது கூறப்பட்டது !

அதைப் போன்றே , ‘வல்’லும் வரும் என்பதே மேலை நூற்பாவின் (புள்.78) கருத்து !
ஆனால் , ‘உரிஞ்’ தொழிற்பெயர் ; ‘வல்’ , சூதாடு கருவியைக் குறிக்கும் ஒரு பெயர்ச் சொல் !

மேல் நூற்பாவுக்கு (புள் 78) இளம்பூரணர் தரும் உதாரணங்களை வருமாறு பிரித்துக் காணலாம் !:-

வல் + கடிது = வல்லுக் கடிது (அல்வழிப் புணர்ச்சி)
(உ - சாரியை)

வல் + சிறிது = வல்லுச் சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
(உ - சாரியை)

வல் + தீது = வல்லுத் தீது (அல்வழிப் புணர்ச்சி)
(உ - சாரியை)

வல் + பெரிது = வல்லுப் பெரிது (அல்வழிப் புணர்ச்சி)
(உ - சாரியை)

மேல் நான்கும் வல்லெழுத்தை (வன்கணம்) முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததற்குச் சான்றுகள் !

இனி , மெல்லெழுத்தை (மென்கணம்) முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்வதற்குச் சான்றுகள் !:-

வல் + ஞான்றது = வல்லு ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி)
(உ- சாரியை)

வல் + நீண்டது = வல்லு நீண்டது (அல்வழிப் புணர்ச்சி)
(உ- சாரியை)

வல் + மாண்டது = வல்லு மாண்டது (அல்வழிப் புணர்ச்சி)
(உ- சாரியை)

இடையினத்தை (இடைக் கணம்) முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததற்குச் சான்று ! :-

வல் + வலிது = வல்லு வலிது (அல்வழிப் புணர்ச்சி)
(உ- சாரியை)

மேலே  ‘வல்’லின் அல்வழிப் புணர்ச்சிகளுக்கான சான்றுகளைப் பார்த்தோம் ! இனி , வேற்றுமைப் புணர்ச்சிகளுக்கான சான்றுகளைக் காண்போம் ! :-

வல் + கடுமை = வல்லுக் கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி)
(உ - சாரியை)

வல் + சிறுமை = வல்லுச் சிறுமை (வேற்றுமைப் புணர்ச்சி)
(உ - சாரியை)

வல் + தீமை = வல்லுத் தீமை (வேற்றுமைப் புணர்ச்சி)
(உ - சாரியை)

வல் + பெருமை = வல்லுப் பெருமை (வேற்றுமைப் புணர்ச்சி)
(உ - சாரியை)

இப்போது பார்த்த நான்கும் வன்கணத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததற்குச் சான்றுகள் !

மென்கணத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்த சான்றுகள் ! :-

வல் + ஞாற்சி = வல்லு ஞாற்சி (வேற்றுமைப் புணர்ச்சி)
(உ - சாரியை)

வல் + நீட்சி = வல்லு நீட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)
(உ - சாரியை)

வல் + மாட்சி = வல்லு மாட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)
(உ - சாரியை)

இடைக் கணத்துச் சொல்லான ‘வ’வை முதலாகக் கொண்ட சொல் வந்து புணர்வதற்குச் சான்று!:-

வல் + வலிமை = வல்லு வலிமை (வேற்றுமைப் புணர்ச்சி)
(உ - சாரியை)

‘வல்’ , ஒரு சூதாடு கருவி என்று முன்பே பார்த்தோம் !

சூதாட்டத்திலும் தமிழகம் முன்னணியில் இருந்தது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் !

இன்றும் , தழகத்தில் எங்காவது அகழ்வாய்வு (Excavation) நடத்தினால் , நிச்சயம்  ‘வல்’ காணக்கிடைக்கிறது !இது மண்ணால் ஆகியிருக்கும் ; மரம் , தந்தம், உலோக வல்லுகளும் பயன்பட்டிருக்கவேண்டும் !  தொல்காப்பியம் பேசும் ‘வல்’ , சங்ககாலத்திலும் குறிப்பிடப்படுகிறது ! பெண்ணின் முலைக்கு உவமையாகச் சங்க இலக்கியங்களில் ‘வல்’ வருகிறது !

‘வல் + கடிது = வற் கடிது’ என்று எழுதத்தான் யாரும் முனைவர் ! “அது தவறு” என்று காட்டத்தான் , தொல்காப்பியருக்கு நூற்பா எழுதும் தேவை ஏற்பட்டது !  

இதில் ஒரு மொழி நுட்பம் உளது ! –

‘வற்கடிது’ என்றால் , அதில் ‘வல்’ மறைந்துபோகிறது ! ‘கடிது’ என்பது குறிப்பு வினைமுற்று ! எனவே அக்குறிப்பு வினைமுற்றுதான் சொல்லில் மேலோங்குகிறதே தவிர , ‘வல்’ காணாமல் போகிறது ! ‘வல்’லை இழுத்து வெளியே நீட்டவேண்டியுள்ளது ! அதனால்தான், உகரச் சாரியையைப் பயன்படுத்தி , ‘வல்லுக் கடிது’ , ‘வல்லுக் கடுமை’ என்ற வடிவங்கள் வரலாயின !

இதே வல்லுக்காக இன்னொரு நூற்பாவையும் செலவிடுகிறார் தொல்காப்பியர் ! :-

“நாயும் பலகையும் வரூஉங் காலை
ஆவயி னுகரங் கெடுதலு முரித்தே
உகரங் கெடுவழி யகர நிலையும்”  (புள்ளி மயங்கியல் 79)

‘உகரம் கெடுதலும் உரிதே’ என்பதில் உள்ள உம்மை எதிர்மறை உம்மை ! இதனால் ‘உகரம் கெடாமையும் உரித்தே ’என்ற பொருளைக் கொள்ளவேண்டும் !இப்படித்தான் நச்சினார்க்கினியர் கொண்டுள்ளார் !
எனவே இளம்பூரணர் , நச்சினார்க்கினியர்தம் உரைகளின்படியான
எடுத்துக்கட்டுகளை வருமாறு வருமாறு விளக்கலாம் ! :-

வல் + நாய் = வல்லு நாய் √     (வேற்றுமைப் புணர்ச்சி) (உ - சாரியை)

= வல்ல நாய் √   (வேற்றுமைப் புணர்ச்சி) (அ - சாரியை)

வல் + பலகை = வல்லுப் பலகை √     (வேற்றுமைப் புணர்ச்சி) (உ - சாரியை)

= வல்லப் பலகை √   (வேற்றுமைப் புணர்ச்சி) (அ - சாரியை)

இளம்பூரணர் இந்த நூற்பா (79) ,மற்றும் சென்ற (78)நூற்பாக்களுக்குத் தந்த  வேறு எடுத்துக்காட்டுகளை வருமாறு தொகுத்துக் காட்டலாம் !:-

வல் + கடுமை = வல்லுக் கடுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)(உ- சாரியை)
= வல்லக் கடுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)(அ- சாரியை)

வல் + சிறுமை = வல்லுச் சிறுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)(உ- சாரியை)
= வல்லச் சிறுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)(அ- சாரியை)

வல் + தீமை = வல்லுத் தீமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)(உ- சாரியை)
= வல்லத் தீமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)(அ- சாரியை)

வல் + பெருமை = வல்லுப் பெருமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)(உ- சாரியை)
= வல்லப் பெருமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)(அ- சாரியை)

இந்த நான்கு எடுத்துக்காட்டுகளில் உகரமும் அகரமும் தம்முள் பகிர்ந்துகொள்ளும் பாங்கினவாக உள்ளன ! இதைத்தான் மொழியியலில் ( Linguistics), தடையிலா மாற்றம் (Free variation) என்கின்றனர் !

மேலை எடுத்துக்காட்டுகளில் வந்த  ‘நாய் ’ , நாலுகால் நாயல்ல !

சூதாட்டக் கட்டங்களில் வைத்து நகற்றும் காய் ! ‘காய்’ என்பது மரத்துக்காய் அல்ல ! கல் , சோழி , மரத்துண்டு இப்படி ஏதாவது நகர்த்தக்கூடிய சிறு பொருள் ! இதுதான் ‘நாய்’ !
‘வல் ’ என்பது இந்தக் காய்தான் !
வலுவாக இருப்பதால் ‘வல்’ ; ‘வல்லுட்டி’ என்று வழக்கிலும் வரக்காண்கிறோம் !
இறுகிக் காய்த்து இருப்பதால் ‘காய்’ ! ‘கை காய்த்துவிட்டது’ – சொல்கிறோமல்லவா?
கட்டங்களில் அங்குமிங்கும் நகர்த்தப்படுவதால் (அலைவதால்) காயை ‘நாய்’ என்றனர் !
சூதாட்டக் கட்டங்களில் வைத்து நகர்த்தப்படும் காயைத்தான் தொல்காப்பியம் ‘வல்’ என்றது !  “இதற்கு என்ன பொருள் ?” என்று மற்றவர்களிடம் நீங்கள் கேட்டு அவர் வல்லென்று விழுந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல !
‘வல் – சூதாடு கருவி’ என எழுதி , ‘Dice’ என்று ஆங்கிலத்தில் தந்துள்ளனர்; ‘Dice’ என்பது பகடை ஆகும். ‘தாயப் பசு’ , ‘தாயக் கட்டை’ என்றெல்லாம் கூறப்படுவதுதான் ‘Dice’; ‘Die’ என்பது ஒருமை; Dice – பன்மை. ஆனால் ‘வல்’ என்பது உருட்டப்படுவது அல்ல! கட்டங்களில் நகர்த்தப்படுவது; ‘வல்’லை முலைக்கு உவமிக்கின்றன இலக்கியங்கள்; படத்தில் உள்ள காய்களைப் பார்த்தால் முலை நுனியைத்தான் அப்படி உவமித்துள்ளனர் என்பது விளங்குகிறது!

‘வல்லப் பலகை’ எனபது வேறு ஒன்றுமில்லை ! சூதாட்டத்தில்  காய் உருட்டப் பயன்படும் அடிப்பலகை !
தொல்காப்பியம் பேசிய ‘வல்’ஐப் பார்க்க ஆசையாக இருக்கிறதா ?
[You must be registered and logged in to see this link.]
(K. ashok vardhan shetty,Editor, Excavations at Mangudi, Dept.of Archaeology, Chennai,2003, p.ix ).

மொஹஞ்சதோராவில் கிடைத்த ‘காய்’களைக் கீழே காணலாம் .
[You must be registered and logged in to see this link.]
Chess pieces from Mohenjo-daro. Photo: bennylin0724, Flickr .
pasthorizonspr.com
நல்ல வளர்ச்சி அடைந்தவை இவை; தமிழர்கள்  வடக்கே பரவி வாழ்ந்ததற்கான தடயம் இது !  
இவ்வாறு , தொல்காப்பியம் என்பது இலக்கண நூல் மட்டுமல்லாது பழந்தமிழர் விளையாட்டு , பழந்தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள் முதலியவற்றைத் தெரிவிக்கும் அரிய கருவூலமாக மிளிர்கிறது !


Last edited by Dr.S.Soundarapandian on Sat Jul 06, 2013 7:49 pm; edited 1 time in total (Reason for editing : Courtesy not incised)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (98)

Post by Dr.S.Soundarapandian on Mon Jul 08, 2013 8:32 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (98)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

லகர ஈற்றுச் சொற்புணர்ச்சி தொடர்கிறது !

இப்போது தொல்காப்பியர் எடுத்துக்கொள்ளும் சொற்கள் – ‘பூல்’, ‘வேல்’ , ‘ஆல்’ !

இம் மூன்றும் மரங்கள் !

வேற்றுமைப் பொருளில் , இவை கீழ் வருமாறு புணரும் என்பதை இளம்பூரணரின் சான்றுகளால் உணர்கிறோம் ! :-

பூல் + கோடு = பூலங் கோடு (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)

பூல் + செதிள் = பூலஞ் செதிள் (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)

பூல் + தோல் = பூலந் தோல் (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)

பூல் + பூ = பூலம் பூ (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)


வேல் + கோடு = வேலங் கோடு (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)

வேல் + செதிள் = வேலஞ் செதிள் (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)
வேல் + தோல் = வேலந் தோல் (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)

வேல் + பூ = வேலம் பூ (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)


ஆல் + கோடு = ஆலங் கோடு (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)
ஆல் + செதிள் = ஆலஞ் செதிள் (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)
ஆல் + தோல் = ஆலந் தோல் (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)
ஆல் + பூ = ஆலம் பூ (வேற்றுமைப் புணர்ச்சி) (அம்-சாரியை)

மேல் புணர்வுகளுக்குத் தொல்காப்பிய விதி ! :-

“பூல்வே லென்றா வாலென் கிளவியோ
டாமுப் பெயர்க்கு மம்மிடை வருமே”  (புள்ளி மயங்கியல் 80)

இந் நூற்பாவில் ‘பூல்வேல் என்றா’ என வந்ததல்லவா ? இந்த ‘என்றா’வை  ‘எண்ணிடைச் சொல்’ (Middling word used to counting) என்பர் !
‘இராமனும் சோமனும் கந்தனும்’ – என்று அடுக்கிக்கொண்டே (எண்ணிக் கொண்டே) போகும்போது ‘உம்’மானது அடுக்குவதற்குப்(என்ணுவதற்கு) பயன்படுகிறது அல்லவா ? அதனால் அது எண்ணும்மை ! இதுவும் ஒரு எண்ணிடைச்சொல்தான் !
தொல்காப்பியர் நாளையில் பயன்பட்ட ஓர் எண்ணிடைச்சொல் ‘என்றா’!

தொல்காப்பியர் கூறிய ‘பூல்’ மரத்தைப் பார்க்க ஆசையா ?
[You must be registered and logged in to see this link.]

(Courtesy- thelovelyplants.com )
இதுதான் ‘பூல்’ மரம் ! பூலா மரம் என்பதும் இதுவே !
இதன் ஆங்கிலப் பெயர் -  Red silk-cotton tree .
இதன் தாவரவியல் பெயர் – Bombax malabaricum .

தொல்காப்பியர் கூறிய ‘வேல்’ மரத்தைப் பார்க்க ஆசையா ?

[You must be registered and logged in to see this link.]
(Courtesy -holistic-herbalist.com)
இதுதான் ‘வேல்’ மரம் ! ‘ஆலும் வேலும் பல்லுக் குறுதி ’ என்பார்களே , அந்த வேல் இதுதான் !

இதன் ஆங்கிலப் பெயர் – Babul  .
இதன் தாவரவியல் பெயர் -  Gens acacia  .
ஓலைக் கொட்டைகளில் வெள்ளைத் துணியை இணைப்பதற்கு அந்தக்காலத்தில் குண்டூசியாக வேலம் முள்ளைத்தான் பயன்படுத்துவர் !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by sivarasan on Mon Jul 08, 2013 8:40 pm

:afro:  ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 
avatar
sivarasan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 135
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (99)

Post by Dr.S.Soundarapandian on Mon Jul 08, 2013 8:46 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (99)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

புள்ளிமயங்கியலில் , ‘ல்’ ஈற்றுச் சொற் புணர்ச்சியில் ,
“தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல” (புள்ளி மயங்கியல் 81)
என்கிறார் தொல்காப்பியர் !

அஃதாவது , அல்வழி , வேற்றுமைகளில் , ‘கல்’ என்ற முதனிலைத் தொழிற்பெயரை எடுத்துக்கொண்டால் , இத் தொழிற்பெயர் ,முன்புகூறிய ஞகர ஈற்றுத் தொழிற்பெயர்போலப் புணரும் என்பது நூற்பாக் கருத்து !

புள்ளி மயங்கியல் நூற்பா 1இல் , ‘உரிஞ்’ என்ற தொழிற்பெயர் , ‘உ’ , ‘க்’ பெற்று , ‘உரிஞுக் கடிது’ என்று அல்வழியிலும் , ‘உருஞுக் கடுமை’ என வேற்றுமையிலும் புணரும் என்று தான் சொன்னதை இங்கு இணைத்துக் கூறுகிறார் தொல்காப்பியர்!

இதன் அடிப்படையில் , இளம்பூரணர் தந்த சான்றுகளை வருமாறு பிரித்தறியலாம் ! :-

கல் + கடிது = கல்லுக் கடிது (அல்வழிப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + சிறிது = கல்லுச் சிறிது (அல்வழிப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + தீது = கல்லுத் தீது (அல்வழிப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + பெரிது = கல்லுப் பெரிது (அல்வழிப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + ஞான்றது = கல்லு ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + நீண்டது = கல்லு நீண்டது (அல்வழிப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + மாண்டது = கல்லு மாண்டது (அல்வழிப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + வலது = கல்லு வலது (அல்வழிப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + கடுமை = கல்லுக் கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + சிறுமை = கல்லுச் சிறுமை (வேற்றுமைப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + தீமை = கல்லுத் தீமை (வேற்றுமைப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + பெருமை = கல்லுப் பெருமை (வேற்றுமைப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + ஞாற்சி = கல்லு ஞாற்சி (வேற்றுமைப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + நீட்சி = கல்லு நீட்சி (வேற்றுமைப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + மாட்சி = கல்லு மாட்சி (வேற்றுமைப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல் + வலிமை = கல்லு வலிமை (வேற்றுமைப் புணர்ச்சி) (உ - சாரியை)

கல்       -   முதனிலைத் தொழிற்பெயர் .
கல்லுதல் –  விகுதி பெற்ற தொழிற் பெயர் .
கல்லுதல் – தோண்டுதல் .

‘மலையைக் கல்லி எலியைப் பிடித்தானாம் !’ – தமிழ்ப் பழமொழி (Proverb)!

மேலை நூற்பாவிற்கு விதி விலக்கும் உண்டு !

உகரச் சாரியை பெறாது , சில தொழிற்பெயர்கள் , கிழ்வருமாறும்  புணரும் என்று காட்டுகிறார் இளம்பூரணர் ! :-

பின்னல் + கடிது = பின்னல் கடிது (அல்வழிப் புணர்ச்சி)

துன்னல் + கடிது = துன்னல் கடிது (அல்வழிப் புணர்ச்சி)

பின்னல் + கடுமை = பின்னற் கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி)

துன்னல் + கடுமை = துன்னற் கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி)


மென்கணம் வந்து புணர்ந்தால் , வருமாறு அமையும் என்கிறார் இளம்பூரணர் ! :-

பின்னல் + ஞான்றது = பின்னன் ஞான்றது √ (அல்வழிப் புணர்ச்சி)
                = பின்னல் ஞன்றது ×

பின்னல் + ஞாற்சி = பின்னன் ஞாற்சி √ (அல்வழிப் புணர்ச்சி)    
                    = பின்னல் ஞாற்சி ×இப் புள்ளி மயங்கியலில் லகர ஈற்றுப் புணர்ச்சியின் ஈற்று நூற்பா ! :-

“வெயிலென் கிளவி மழையிய னிலையும்” (புள்ளி மயங்கியல் 82)

தொல்காப்பியரைக் கரடுமுரடான மனிதர் எனப் பார்க்காதீர் ! நூற்பாவில் எவ்வளவு நகைச் சுவை போட்டிருக்கிறார் பாருங்கள் !

‘வெயில்’ எப்படிப் புணரும் ? – என்று கேட்டால் , ‘மழை போலப் புணரும் !’ என்கிறார் !

மழையைப் பற்றி எங்கே சொன்னார் ?

உயிர் மயங்கியலில் (எழுத்ததிகாரம்தான்) சொன்னார் ! (நூற்பா 85)

அஃதாவது , அத்துச் சாரியையும் , இன் சாரியையும் புணர்ச்சியில் வரும் என்று அங்கே (நூ. 85) சொன்னார் !

அதன்படி , ‘வெயில்’ புணரும் முறை ! :-

வெயில் + கொண்டான் = வெயிலத்துக் கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி) (அத்து - சாரியை)

வெயில் + சென்றான் = வெயிலத்துச் சென்றான் (வேற்றுமைப் புணர்ச்சி) (அத்து - சாரியை)

வெயில் + தந்தான் = வெயிலத்துத் தந்தான் (வேற்றுமைப் புணர்ச்சி) (அத்து - சாரியை)

வெயில் + போயினான் = வெயிலத்துப் போயினான் (வேற்றுமைப் புணர்ச்சி) (அத்து - சாரியை)

வெயில் + கொண்டான் = வெயிலிற் கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி) (இன் - சாரியை)

வெயில் + சென்றான் = வெயிலிற் சென்றான் (வேற்றுமைப் புணர்ச்சி) (இன் - சாரியை)

வெயில் + தந்தான் = வெயிலிற் றந்தான் (வேற்றுமைப் புணர்ச்சி) (இன் - சாரியை)

வெயில் + போயினான் = வெயிலிற் போயினான் (வேற்றுமைப் புணர்ச்சி) (இன் - சாரியை)


மேலே வந்த ‘அத்து’ என்பதைச் ‘ சாரியை’என்று எழுதினால் பலர் அஞ்சுகின்றனர் !

அத்துச் சாரியையை நாம் பேச்சில் , எழுத்தில் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம் !

‘உள்ளத் துணர்ச்சி’
‘பள்ளத்து நீர்’

- இங்கெல்லாம் வந்துள்ளது ‘அத்து’ச் சாரியைதான் !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (100)

Post by Dr.S.Soundarapandian on Mon Jul 08, 2013 8:55 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (100)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

புள்ளி மயங்கியலில் இப்போது புது ஈறு !

அது ‘வ்’ ஈறு !

ஐந்து நூற்பாக்கள் இதற்காக நிற்கின்றன !

முதல் நூற்பா !:-

“சுட்டுமுத லாகிய வகர விறுதி
முற்படக் கிளந்த வுருபிய னிலையும்”  (புள்ளி மயங்கியல் 83)

சுட்டு   -    அ  , இ  ,  உ
சுட்டு முதலாகிய வகர இறுதி – அவ், இவ் , உவ் ஆகிய மூன்றும் !

முற்படக் கிளந்த உருபியல் – உருபியல் நூற்பா 11இல்  ‘அவை + ஐ = அவற்றை ’என்று காட்டியபடி!

நிலையும் – புணரும் !

இதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு பிரிக்கலாம் !:-

அவ் + கோடு = அ + வற்று + கோடு (வற்று - சாரியை)
அ + வற்று + கோடு = அவற்றுக் கோடு  (வேற்றுமைப் புணர்ச்சி)

இவ் + கோடு = இ + வற்று + கோடு (வற்று - சாரியை)
இ + வற்று + கோடு = இவற்றுக் கோடு  (வேற்றுமைப் புணர்ச்சி)

உவ் + கோடு = உ + வற்று + கோடு (வற்று - சாரியை)
உ + வற்று + கோடு = உவற்றுக் கோடு  (வேற்றுமைப் புணர்ச்சி)அவ் + செவி = அ + வற்று + செவி (வற்று - சாரியை)
அ + வற்று + செவி = அவற்றுச் செவி (வேற்றுமைப் புணர்ச்சி)

இவ் + செவி = இ + வற்று + செவி (வற்று - சாரியை)
இ + வற்று + செவி = இவற்றுச் செவி  (வேற்றுமைப் புணர்ச்சி)

உவ் + செவி = உ + வற்று + செவி (வற்று - சாரியை)
உ + வற்று + செவி = உவற்றுச் செவி  (வேற்றுமைப் புணர்ச்சி)

அவ் + தலை = அ + வற்று + தலை (வற்று - சாரியை)
அ + வற்று + தலை = அவற்றுத் தலை  (வேற்றுமைப் புணர்ச்சி)

இவ் + தலை = இ + வற்று + தலை(வற்று - சாரியை)
இ + வற்று + தலை = இவற்றுத் தலை  (வேற்றுமைப் புணர்ச்சி)

உவ் + தலை = உ + வற்று + தலை(வற்று - சாரியை)
உ + வற்று + தலை = உவற்றுத் தலை  (வேற்றுமைப் புணர்ச்சி)

அவ் + புறம் = அ + வற்று + புறம்(வற்று - சாரியை)
அ + வற்று + புறம் = அவற்றுப் புறம் (வேற்றுமைப் புணர்ச்சி)

இவ் + புறம் = இ + வற்று + புறம் (வற்று - சாரியை)
இ + வற்று + புறம் = இவற்றுப் புறம்  (வேற்றுமைப் புணர்ச்சி)

உவ் + புறம் = உ + வற்று + புறம் (வற்று - சாரியை)
உ + வற்று + புறம் = உவற்றுப் புறம்  (வேற்றுமைப் புணர்ச்சி)

கோடு – கொம்பு .
புறம் – முதுகு .
இந்த வற்றுச் சாரியை நாம் நாள்தோறும் பயன்படுத்துவதுதான் !

‘பலவற்றை’
‘அரியவற்றை’
‘தெரிந்தவற்றை’
- இங்கெல்லாம் வந்துள்ளது ‘வற்று’ச் சாரியைதான் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (101)

Post by Dr.S.Soundarapandian on Mon Jul 08, 2013 9:04 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (101)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33


‘வ்’ ஈறு தொடர்கிறது !

‘அவ்’ என்பது வேற்றுமைப் புணர்ச்சியில் எவ்வாறு வரும் என்பதை இதற்கு முன் பார்த்தோம் !

அதனைத் தொடர்ந்து ,

“வேற்றுமை  யல்வழி  யாய்த  மாகும்”  (புள்ளி மயங்கியல் 84)

வேற்றுமை அல்வழி – அல்வழிப் புணர்ச்சியில் ‘அவ்’ முதலியன !

ஆய்தம் ஆகும் -  ‘வ்’ ஆனது ஆய்தமாக மாறும் !

அஃதாவது ,

அவ் + கடிய = அஃ + கடிய
அஃ + கடிய = அஃகடிய (அல்வழிப் புணர்ச்சி)

இவ் + கடிய = இஃ + கடிய
இஃ + கடிய = இஃகடிய (அல்வழிப் புணர்ச்சி)

உவ் + கடிய = உஃ + கடிய
உஃ + கடிய = உஃகடிய (அல்வழிப் புணர்ச்சி)

அவ் + சிறிய = அஃ + சிறிய
அஃ + சிறிய = அஃசிறிய (அல்வழிப் புணர்ச்சி)

இவ் + சிறிய = இஃ + சிறிய
இஃ + சிறிய = இஃசிறிய (அல்வழிப் புணர்ச்சி)

உவ் + சிறிய = உஃ + சிறிய
உஃ + சிறிய = உஃசிறிய (அல்வழிப் புணர்ச்சி)

அவ் + தீய = அஃ + தீய
அஃ + தீய = அஃதீய (அல்வழிப் புணர்ச்சி)

இவ் + தீய = இஃ + தீய
இஃ + தீய = இஃதீய (அல்வழிப் புணர்ச்சி)


உவ் + தீய = உஃ + தீய
உஃ + தீய = உஃதீய (அல்வழிப் புணர்ச்சி)


அவ் + பெரிய = அஃ + பெரிய
அஃ + பெரிய = அஃபெரிய (அல்வழிப் புணர்ச்சி)

இவ் + பெரிய = இஃ + பெரிய
இஃ + பெரிய = இஃபெரிய (அல்வழிப் புணர்ச்சி)

உவ் + பெரிய = உஃ + பெரிய
உஃ + பெரிய = உஃபெரிய (அல்வழிப் புணர்ச்சி)

மேலை எடுத்துக்காட்டுகள் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததற்கே !

அப்படியானால் , மென்கணம் வந்து புணர்ந்தால் ? :-

“மெல்லெழுத்  தியையி னவ்வெழுத் தாகும்” (புள்ளி மயங்கியல் 85)

மெல்லெழுத்து இயையின் – ஞ , ந் , ம் என்ற மெல்லின எழுத்துகள் வந்து சேர்ந்தால் !

அவ்வெழுத்து ஆகும் -  ‘வ்’ ஆனது , ஞ் , ந் , ம் என மாறும் !

சான்றுகள் ! :-

அவ் + ஞாண் = அஞ் + ஞாண்
அஞ் + ஞாண் = அஞ்ஞாண்  (அல்வழிப் புணர்ச்சி)

இவ் + ஞாண் = இஞ் + ஞாண்
இஞ் + ஞாண் = இஞ்ஞாண்  (அல்வழிப் புணர்ச்சி)

உவ் + ஞாண் = உஞ் + ஞாண்
உஞ் + ஞாண் = உஞ்ஞாண்  (அல்வழிப் புணர்ச்சி)


அவ் + நூல் = அந் + நூல்
அந் + நூல் = அந்நூல்  (அல்வழிப் புணர்ச்சி)

இவ் + நூல் = இந் + நூல்
இந் + நூல் = இந்நூல்  (அல்வழிப் புணர்ச்சி)

உவ் + நூல் = உந் + நூல்
உந் + நூல் = உந்நூல்  (அல்வழிப் புணர்ச்சி)


அவ் + மணி = அம் + மணி
அம் + மணி = அம்மணி  (அல்வழிப் புணர்ச்சி)

இவ் + மணி = இம் + மணி
இம் + மணி = இம்மணி  (அல்வழிப் புணர்ச்சி)

உவ் + மணி = உம் + மணி
உம் + மணி = உம்மணி  (அல்வழிப் புணர்ச்சி)

அவ் ,இவ் ,உவ் – மூன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு !

இவற்றை ஒருமைக்கும் எழுதலாம் , பன்மைக்கும் எழுதலாம் !

அவ் வீடு √
அவ் வீடுகள் √

இவ் வீடு √
இவ் வீடுகள் √

உவ் வீடு √
உவ் வீடுகள் √

மேல் எடுத்துக்காட்டுகளில்  உஃகடிய , உஞ்ஞாண் முதலிய உகரச் சுட்டைக் கொண்ட சொற்கள் இன்று முற்றிலுமாக வழக்கொழிந்துவிட்டன !

அண்மைச் சுட்டும் (இவ்) , சேய்மைச் சுட்டும் (அவ்)  மட்டுமே இன்று வழக்கில் உள்ளன !

இடைமைச் சுட்டு (உவ்)  வழக்கில் இல்லை !

நல்ல வேளையாகத் தொல்காப்பியத்தில் பதிவுகள் இருந்ததால் , இந்த வழக்கொழிந்த வரலாற்றையாவது தெரிந்துகொள்ள முடிகிறது !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (102)

Post by Dr.S.Soundarapandian on Tue Jul 09, 2013 9:07 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (102)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘வ்’ ஈற்றுப் புணர்ச்சியில் அடுத்ததாக ,

“ஏனவை புணரி னியல்பென மொழிப”  (புள்ளி மயங்கியல் 86)
என்றார் தொல்காப்பியர் !

ஏனவை – வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களையும் , மெல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களையும் நீக்கி , ஏனைய இடையெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களும் உயிரெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களும் !

புணரின் – வந்து சேர்ந்தால் !

இயல்பு என மொழிப -  ‘அவ்’ , ‘இவ்’ , ‘உவ்’களில் , ‘வ்’வில்  திரிபு இலாது , இயல்பாகச் சேரும் என்று கூறுவார்கள் !

அவ் + யாழ் = அவ் யாழ்  (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + யாழ் = இவ் யாழ்  (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + யாழ் = உவ் யாழ்  (அல்வழிப் புணர்ச்சி)

அவ் + வட்டு = அவ் வட்டு  (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + வட்டு = இவ் வட்டு  (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + வட்டு = உவ் வட்டு  (அல்வழிப் புணர்ச்சி)

அவ் + வடை = அவ் வடை  (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + வடை = இவ் வடை  (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + வடை = உவ் வடை  (அல்வழிப் புணர்ச்சி)

அவ் + ஆடை = அவ் வாடை  (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + ஆடை = இவ் வாடை  (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + ஆடை = உவ் வாடை  (அல்வழிப் புணர்ச்சி)

மேலைக் காட்டுகளில் , ‘அவ்’ , ‘இவ்’  , ‘உவ்’ ஆகியவற்றிலுள்ள ‘வ்’வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதைக் காணலாம் !

‘வ்’  ஈற்றின் இறுதிச் சூத்திரம் ! :-

“ஏனை வகரந் தொழிற்பெய ரியற்றே” (புள்ளி மயங்கியல் 87)

ஏனை வகரம் – மொழி மரபில் (நூற்பா 48) , ‘வ்’ ஈற்றுச் சொற்கள் மொத்தம் நான்கு என்றார் தொல்காப்பியர் ! அவற்றில் , அவ் , இவ் , உவ் என்ற மூன்றையும் தவிர்த்துத் ‘தெவ்’ என்பதிலுள்ள ‘வ்’ !  

தொழிற் பெயர் இயல்பு – ‘ஞ்’ ஈற்றுத் தொழிற் பெயர் , வன்கணம் வரும்போது , உகரச் சாரியையும் வல்லெழுத்துச் சந்தியும் பெறும் எனவும் , ஏனைய இடைக்கணம் , உயிர்க்கணம் , மென்கணம் வந்து புணரும்போது உகரச் சாரியை மட்டும் சேரும் என்றும் புள்ளி மயங்கியல் நூற்பா 1 , 2  ஆகியவற்றில் கூறியபடி!

தெவ் + கடிது = தெவ்வுக் கடிது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + சிறிது = தெவ்வுச் சிறிது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + தீது = தெவ்வுத் தீது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + பெரிது = தெவ்வுப் பெரிது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)


தெவ் + ஞான்றது = தெவ்வு ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + நீண்டது = தெவ்வு நீண்டது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + மாண்டது = தெவ்வு மாண்டது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + வலிது = தெவ்வு வலிது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)

தெவ் + கடுமை = தெவ்வுக் கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + சிறுமை = தெவ்வுச் சிறுமை (வேற்றுமைப் புணர்ச்சி; உ - சாரியை)
தெவ் + தீமை = தெவ்வுத் தீமை (வேற்றுமைப் புணர்ச்சி; உ - சாரியை)
தெவ் + பெருமை = தெவ்வுப் பெருமை (வேற்றுமைப் புணர்ச்சி; உ - சாரியை)

தெவ் + ஞாற்சி = தெவ்வு ஞாற்சி (வேற்றுமைப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + நீட்சி = தெவ்வு நீட்சி (வேற்றுமைப் புணர்ச்சி; உ - சாரியை)
தெவ் + மாட்சி = தெவ்வு மட்சி (வேற்றுமைப் புணர்ச்சி; உ - சாரியை)
தெவ் + வலிமை = தெவ்வு வலிமை (வேற்றுமைப் புணர்ச்சி; உ - சாரியை)

தொல்காப்பியர் பாட்டுக்கு ஒற்றை வரியில் ஒரு நூற்பாவைச் சொல்லிவிட்டு ஓலையை மூடிவிட்டார் !

அதனை விளங்கிக் கொள்ள நாம் இளம்பூரணர் உதவியோடு , எத்தனை முன் நூற்பாக்களைத் தழுவிப் பிடிக்க வேண்டியுள்ளது பார்த்தீர்களா?

இதுதான் ’சூத்திரம்’ என்பது !

சுருக்கமாகக் கூறுதல் !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (103)

Post by Dr.S.Soundarapandian on Wed Jul 10, 2013 9:15 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (103)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33


தொல்காப்பியர் புள்ளி மயங்கியலில் கூறிய சொற் புணர்ச்சிகளை வரிசையாகப் பார்த்து வருகிறோம் !

கடைசியாக ‘வ்’ ஈற்றுச் சொற்களை முடித்தோம் !

இப்போது , ‘ழ்’ ஈற்றுச் சொற்களைத் தொடங்குகிறார் தொல்காப்பியர் ! :-

“ழகார விறுதி ரகார வியற்றே”  (புள்ளி மயங்கியல் 88)

ழகார விறுதி  -  ‘ழ்’ ஈற்றுச் சொற்கள் !

ரகார இயற்றே – புள்ளி மயங்கியல் 62 மற்றும் 67இல்  ‘ர்’ ஈற்றுச் சொற்களுடன் வல்லெழுத்துச் சொற்கள் வந்து புணர்ந்தால் , வல்லெழுத்துச் சந்தி தோன்றும் எனக் கூறிய அதே பாங்கின்படி !

இதன்படி , வருமாறு புணர்ச்சிகள் அமையும் !:-

பூழ் + கால் = பூழ்க் கால்  (வேற்றுமைப் புணர்ச்சி ; க் - சந்தி)

பூழ் + சிறகு = பூழ்ச் சிறிது  (வேற்றுமைப் புணர்ச்சி ; க் - சந்தி)

பூழ் + தலை = பூழ்த் தலை  (வேற்றுமைப் புணர்ச்சி ; க் - சந்தி)

பூழ் + புறம் = பூழ்ப் புறம்  (வேற்றுமைப் புணர்ச்சி ; க் - சந்தி)


பூழ் – ஒரு பறவையின் பெயர் !

இளம்பூரணர் குறித்த ‘பூழ்’  பார்க்க ஆசையா ?

[You must be registered and logged in to see this link.]
(Courtesy – en.wikipedia.org)

இதுதான் பூழ்ப் பறவை !

இது காடை வகை எனப்படுகிறது !

Quail – இதன் ஆங்கிலப் பெயர் !

இதன் விலங்கியல் பெயர் – Coturnix  ypsilophora

இது ‘Phasianidae’  குடும்பத்தைச் சேர்ந்தது என்பர்.

காடையைச் சமைத்து உண்பதுபோல இதனையும் சமைத்து உண்ணலாம் !

தொல்காப்பியம் நமக்கு விருந்துதான் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (104)

Post by Dr.S.Soundarapandian on Sat Jul 13, 2013 2:13 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (104)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

புள்ளி மயங்கியலில் , ‘ழ்’ ஈற்றுச் சொற் புணர்ச்சிகளில் தொல்காப்பியரது இரண்டாம் நூற்பா ! :-

“தாழென் கிளவி கோலொடு புணரின்
அக்கிடை வருத லுரித்து மாகும்”  (புள்ளி மயங்கியல் 89)

அஃதாவது , வேற்றுமைப் புணர்ச்சியில் ,

தாழ் + கோல் = தாழ் + அக்கு + கோல் (அக்கு - சாரியை)

தாழ் + அக்கு + கோல் = தாழக் கோல் (க் - சந்தி)

என வரும் !

மேல் நூற்பாவில் வந்த உம்மை , எதிர்மறை உம்மை !

அதனால் , ‘அக்கு’ வராமலும் , இதே வேற்றுமைப் புணர்ச்சியில் ,புணர்ச்சி ஏற்படும் என்பதே தொல்காப்பியம் ! :-

தாழ் + கோல் = தாழ்க் கோல் √ ( ‘அக்கு’ வரவில்லை)
= தாழக் கோல் √( ‘அக்கு’ வந்து , திரிந்துள்ளது)


தாழ் – பூட்டு (Lock)
தாழக் கோல் – சாவி (key)
‘தாழக் கோல்’ , வழக்கில் ‘தாக் கோல்’ என்று ஆங்காங்கே வழங்குகிறது !

பூட்டில் ,மறு நுனியைக் குழிக்குள் இறக்கிப் பிணைப்பதால் (பூட்டுவதால்) ,அது பூட்டு !
அதேபோல , பூட்டில் , மறு நுனியைக் குழிக்குள் இறக்கிப் (தாழ்த்து) பிணைப்பதால் , அது தாழ் !

‘தாழ்’ – பூட்டைக் குறித்தது , பழைய வழக்கு ! இதனை இழக்கக் கூடாது !

‘தாழ்’ – கணைய மரத்தைக் குறித்தது , அடுத்த கால வழக்கு !

கணைய மரம் – அடைத்த கதவில் போடும் குறுக்குக் கட்டை (Latch) .

இப்போது சுவையான ஒரு வினா !

தொல்காப்பியத்தில் ‘தமிழ்’ என்ற சொல் வந்துள்ளதா ?

வந்துள்ளது !

‘ழ்’ ஈற்றுப் புணர்ச்சியில் அடுத்ததாக நாம் காணவிருக்கும் நூற்பாவில்தான் ‘தமிழ்’ வருகிறது !

“தமிழென் கிளவியு மதனோ ரற்றே”  (புள்ளி மயங்கியல் 90)

அதனோர் அற்றே -  ‘தாழக் கோல்’ போலத் ‘தமிழ்’ எனும் சொல்லும் , வேற்றுமைப் புணர்ச்சியில் , புணரும் !

தமிழ் + கூத்து  = தமிழக் கூத்து √  ( ‘அக்கு’ வந்து திரிந்துள்ளது)
தமிழ் + கூத்து  = தமிழ்க் கூத்து √  ( ‘அக்கு’ வரவில்லை)

தமிழ் + சேரி  = தமிழச் சேரி √  ( ‘அக்கு’ வந்து திரிந்துள்ளது)
தமிழ் + சேரி  = தமிழ்ச் சேரி √  ( ‘அக்கு’ வரவில்லை)


தமிழ் + தோட்டம்  = தமிழத் தோட்டம் √  ( ‘அக்கு’ வந்து திரிந்துள்ளது)
தமிழ் + தோட்டம்  = தமிழ்த் தோட்டம் √  ( ‘அக்கு’ வரவில்லை)தமிழ் + பள்ளி  = தமிழப் பள்ளி √  ( ‘அக்கு’ வந்து திரிந்துள்ளது)
தமிழ் + பள்ளி  = தமிழ்ப் பள்ளி √  ( ‘அக்கு’ வரவில்லை)


மேல் புணர்ச்சிகளில் ஆழமான ஒரு மொழி நுட்பம் உள்ளது !

‘தாழ்’ என்பதுடன் அகரச் சாரியை சேர்ந்து , ‘தாழக் கோல்’ என்று வந்தது என விதி வகுத்திருக்கலாம் ! ‘தமிழச் சேரி’யில் , ‘அச்சு’ச் சாரியை வந்தது எனக் கூறியிருக்கலாம் ! ‘தமிழப் பள்ளி’யின் நடுவே வந்தது ‘அப்பு’ச் சாரியை என்றும் ஓதியிருக்கலாம் !

ஆனால் ஏன் கூறவில்லை ?

ஏனெனில் , ‘தாழக் கோல்’ , ‘தமிழக் கூத்து ’ , ‘தமிழச் சேரி’ , ‘தமிழத் தோட்டம்’ , ‘தமிழப் பள்ளி’ என்பவற்றில் , ‘அக்’ , ‘அச்’,’அத்’ , ‘அப்’ ஆகியன இடையே வந்துள ! இப்படி ஒவ்வொரு புணர்ச்சிக்கும் தனித் தனிச் சாரியை கூறுவதானால் , ‘அக்கு’ச் சாரியை , ‘அச்சு’ச் சாரியை , ‘அத்து’ச் சாரியை , ‘அப்பு’ச் சாரியை என்று பல சாரியைகளைக் கூறவேண்டிவரும் !

பழந்தமிழ் இலக்கணத்தின் கோட்பாடுகளில் ஒன்று – பொதுமைப் படுத்தல் (Generalisation) !
‘அக்கு’ என்று ஒரே ஒரு சாரியையைக் கூறி , இதன் திரிபுகள் பலவாறாகும் என்று பொதுமைப் படுத்திப் , பலவாறான புணர்ச்சிகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் !

‘அக்’கைத் தவிர்த்து , வெறும் அகரச் சாரியையை மட்டும் கூறி , ‘தமிழ் + அ + பள்ளி = தமிழப் பள்ளி’ எனக் கூறுவதில் என்ன சிக்கல் ?

‘தமிழ் + பள்ளி’ என்றவுடன் , ‘தமிழ்ப் பள்ளி’ என்ற புணர்ச்சிக்கே இடம் வரும் ! ‘அ’ நேரடியாக நுழைய வாய்ப்பே இல்லை ! இதற்கான விதியை முன் கட்டுரையில் (புள்ளி மயங்கியல் 88) பார்த்தோம் ! எனவேதான் , ‘அக்கு’ வந்து , அதன் ‘க்கு’க் கெட்டு , ‘அ’ மிஞ்சித் , ‘தமிழ’ என்றாகிப் , பின் ‘ப்’ சந்தி சேர்ந்து , ‘தமிழப் பள்ளி’ ஆகிறது என்ற விளக்கத்தைத் தரவேண்டியுள்ளது !

தமிழர்தம் நீண்ட சொல் வரலாற்றுக்கு இயைய இச் செயல் முறை (Process) அமைந்துள்ளது என்பதே வியப்பான மொழி இரகசியம்  (Secret of Language) !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (105)

Post by Dr.S.Soundarapandian on Sat Jul 13, 2013 9:45 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (105)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘ழ்’ – ஈற்றில் நாம் இப்போது காணப் போவது , ‘குமிழ்’ !

குமிழைப் பற்றிப் பிறகு பார்ப்போம் !

முதலில் நூற்பா !:-
“குமிழென் கிளவி மரப்பெய ராயின்
பீரென் கிளவியோ டோரியற் றாகும்” (புள்ளி மயங்கியல் 91)

‘குமிழ்’ என்பது மரத்தைக் குறிக்கும்போது , ‘பீர்’ என்பதோடு ஒத்துப் புணரும் !

‘பீர்’ என்பது எப்படிப் புணரும்?
‘அம்’ சாரியையையும் மெல்லெழுத்துச் சந்தியையும் பெற்றுப் புணரும் !

இதனைப்  புள்ளி மயங்கியல் நூற்பா 70இல் கூறியுள்ளார் !

அதன்படிக் ‘குமிழ்’ வருமாறு புணரும் ! :-

குமிழ் + கோடு = குமிழங் கோடு (அம் – சாரியை; ங் – மெல்லெழுத்துச் சந்தி)

குமிழ் + செதிள் = குமிழஞ் செதிள் (அம் – சாரியை; ஞ் – மெல்லெழுத்துச் சந்தி)

குமிழ் + தோல் = குமிழந் தோல் (அம் – சாரியை; ந் – மெல்லெழுத்துச் சந்தி)

குமிழ் + பூ = குமிழம் பூ (அம் – சாரியை; ம் – மெல்லெழுத்துச் சந்தி)


இவை நான்கும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !

இளம்பூரணர் , “   ‘குமிழ்’ என்பதற்குத்தான் தொல்காப்பியர் விதி கூறினார் என்பதால், அத்தோடு விட்டுவிடாதீர்கள் ! ‘மகிழ்’ போன்ற ‘ழ்’ ஈற்று மரங்களுக்கும் இதே விதியைக் கொள்க ! ” என்ற கருத்துப்பட  உரை எழுதியுள்ளார் !
இதன்படி –

மகிழ் + கோடு = மகிழங் கோடு (அம் – சாரியை; ங் – மெல்லெழுத்துச் சந்தி)

மகிழ் + தோல் = மகிழந் தோல் (அம் – சாரியை; ந் – மெல்லெழுத்துச் சந்தி)

மகிழ் + செதிள் = மகிழஞ் செதிள் (அம் – சாரியை; ஞ் – மெல்லெழுத்துச் சந்தி)

மகிழ் + பூ = மகிழம் பூ (அம் – சாரியை; ம் – மெல்லெழுத்துச் சந்தி)
இந் நான்கும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !

கோடு – கிளை (branch)

செதிள் – பட்டை (bark)

தொல்காப்பியர் கூறிய ‘குமிழ்’ மரம் எப்படி இருக்கும் ?

இதோ இப்படி ! –
[You must be registered and logged in to see this link.]
(Courtesy-- [You must be registered and logged in to see this link.]

கீழே குமிழ் மரத்தின் இலையைக் காணலாம் ! :-

[You must be registered and logged in to see this link.]
(Courtesy- m.inmagine.com)

கீழுள்ளவை குமிழம் பழங்கள் !:-
[You must be registered and logged in to see this link.]

(Courtesy- flickrhivemind.net)

‘குமிழ்’ என்பது வேறு ஒன்றுமில்லை ! வெண் தேக்கு (White teak)மரம்தான் !

குமிழின் தாவரவியல் பெயர் -  Gmelinaarborea

தமிழில் கூம்பல் , பெருங்குமிழ் , குமுதை என்று அறியப்படுவன இந்த வெண் தேக்குதான் !

இதன் தாயகம் இந்தியா , சீனா , மலேசியா , பிலிப்பைன்ஸ் என்று கூறுகிறார்கள்!
முதலில் தமிழகத்திலிருந்துதான் இது பரவியதா என்று மேலாய்வு செய்ய வேண்டும் !

குமிழம் பூ குட்ட நோயைத் (Leprosy) தீர்க்கவல்லது என்பர் ! பட்டையும் வேரும் மூலத்திற்கு (Piles)மருந்து என்றும் கூறுவர் !

இளம்பூரணர் சொன்ன ‘மகிழ்’ ?

பார்த்து மகிழ இதோ  ‘மகிழ்’ மரம்!
[You must be registered and logged in to see this link.]

(Courtesy- Shivatemples.com)
கீழே இருப்பது மகிழம் பூ ! :-

[You must be registered and logged in to see this link.]
(Courtesy- mooligaikal.blogspot.com)

‘மகிழ்’தான் , ‘வகுளம்’ எனப்படுகிறது !

மகிழ் மரத்தின் தாவரவியல் பெயர் – Mimusops .
மகிழம் பூவிற்குக் காமம் பெருக்கும் தன்மை உள்ளது என்கின்றனர் ! மகிழம் பட்டைக்குக் கருப்பைப் பலவீனத்தைப்  (Uterus weakness)போக்கும் குணம் உண்டு என்பர் !
ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும் !  தமிழில் எந்த ஆராய்ச்சியைச் செய்தாலும் அது சித்த மருத்துவத்தில் போய் நிற்கிறது !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by கவிஞர் கே இனியவன் on Sat Jul 13, 2013 10:09 pm

உண்மையில் தமிழில் மேற்படிப்பு ,,படிப்பவர்களுக்கு ..அற்புத பதிவு ..!!!
avatar
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1455
மதிப்பீடுகள் : 564

View user profile http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Aathira on Sat Jul 13, 2013 10:41 pm

தமிழின் சிறப்பு தொல்காப்பியம். இப்போது ஈகரையின் சிறப்பும் அதுவே.
ஈகரையில் ஒரு மையில் கல்லான பதிவு இது. அருமையிருக்கு தொடர வாழ்த்துகள் முனைவர் எஸ். செளந்திர பாண்டியன் அவர்களே.அன்பு மலர் 


[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (106)

Post by Dr.S.Soundarapandian on Sun Jul 14, 2013 1:34 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (106)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘ழ்’ ஈற்றில் அடுத்தது ,  ‘பாழ்’ !

பாழாகவிடாமல் இதனைப் பார்ப்போம் !

“பாழென் கிளவி மெல்லெழுத் துறழ்வே” (புள்ளி மயங்கியல் 92)

அஃதாவது , ‘பாழ்’ எனும் சொல்லுடன் , வேற்றுமைப் புணர்ச்சியில் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போது , வல்லெழுத்துச் சந்தியும் வரலாம், மெல்லெழுத்துச் சந்தியும் வரலாம் ! :-

பாழ் + கிணறு = பாழ்க் கிணறு √  (வல்லெழுத்துச் சந்தி)  
பாழ் + கிணறு = பாழ்ங் கிணறு √  (மெல்லெழுத்துச் சந்தி)  

பாழ் + சேரி = பாழ்ச் சேரி √  (வல்லெழுத்துச் சந்தி)  
பாழ் + சேரி = பாழ்ஞ் சேரி √  (மெல்லெழுத்துச் சந்தி)

பாழ் + தோட்டம் = பாழ்த் தோட்டம் √  (வல்லெழுத்துச் சந்தி)  
பாழ் + தோட்டம் = பாழ்ந் தோட்டம் √  (மெல்லெழுத்துச் சந்தி)    

பாழ் + பாடி = பாழ்ப் படி √  (வல்லெழுத்துச் சந்தி)  
பாழ் + பாடி = பாழ்ம் பாடி √  (மெல்லெழுத்துச் சந்தி)  

மேலைச் சொற்கள் – பாழ்பட்ட கிணறு, பாழ்பட்ட சேரி,பாழ்பட்ட தோட்டம் ,பாழ்பட்ட பாடி ஆகியவற்றைக் குறிக்கும் !
பாடி – திருப்பூர்ப் பாடி அல்ல ! முல்லை நிலத்து  ஊரைக் (Pastoral village) குறிக்கும் !

மேலே வந்தவாறு ,  ‘வல்லெழுத்துச் சந்தியும் வரலாம் , மெல்லெழுத்துச் சந்தியும் வரலாம்’
என்பதைத்தான் ‘உறழும்’ என்கிறார்கள் !

அது சரி , ஏன் உறழணும் ?

‘ழ்’ – உச்சரிப்பதற்குக் கடினமான ஒலி !

பொதுமக்கள் நாவில் அவ்வளவாக வராத ஒலி !

பிறப்பியல் நூற்பா 13இல் ‘ழ்’ ஆனது எப்படிப் பிறக்கும் என்று தொல்காப்பியர் எழுதுகிறார் !

நுனி நாக்கானது , மேல் அண்ணத்தை (Palate) வருடிக் கொடுக்கும்போதுதான் ‘ழ்’பிறக்கும் என்கிறார் தொல்காப்பியர் !

மொழியியலார்  ‘ழ்’ழின் பிறப்பை -  Voiced retroflex palatal lateral என்பர் !

எனவேதான் , பொதுமக்களிடம் வரும்போது , ‘ழ்’ழை அடுத்து மற்றொரு வல்லொலி ( ‘க்’ ,’ச்’  போல்வன ) வருவது இடராக உள்ளது !

இந்த இடரைத் தவிர்ப்பதற்காகவே , ‘ழ்’ழை அடுத்துவரும் சந்தியை மெல்லெழுத்துச் சந்தியாக மக்களே மாற்றிக் கொண்டனர் !

இந்த மாற்றம் மக்களால் ஏற்படுவது !

புலவர்கள் கூடித் தீர்மானம் போட்டு நிறைவேற்றுவது இல்லை !

இதுதான் ‘உறழ்ச்சி’ இரகசியம் !

அடுத்து ‘ஏழ்’! :-

“ஏழென் கிளவி யுருபிய னிலையும்” (புள்ளி மயங்கியல் 93)

ஏழென் கிளவி – ‘ஏழ்’ எனும் சொல் !

உருபியல் நிலையும் – உருபியல் நூற்பா 22இல் , ‘ஏழனை’ என்று
‘அன்’ சாரியை பெறுதலை உரைத்த வண்ணம் , இங்கும் ‘அன்’வரும் !

அஃதாவது , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போது , வேற்றுமைப் புணர்ச்சியில் , வருமாறு புணரும் ! :-

ஏழ் + காயம் = ஏழ் காயம் ×
= ஏழன் காயம் √

ஏழ் + சுக்கு = ஏழ் சுக்கு ×
= ஏழன் சுக்கு √

ஏழ் + தோரை = ஏழ் தோரை ×
= ஏழன் தோரை √

ஏழ் + பயறு = ஏழ் பயறு ×
= ஏழன் பயறு √

காயம் – வெண் காயம் ; பெருங்காயம் ; வெள்ளைப் பூண்டு.
சுக்கு – காய்ந்த இஞ்சி
தோரை – மலை நெல்
பயறு – தட்டைப் பயறு , மொச்சைப் பயறு முதலியன‘ஏழன் சுக்கு’ என்றால் ?

ஏழாவது சுக்கா? ஏழு சுக்குகளா?

நச்சினார்க்கினியர் சிக்கலைத் தீர்த்துவைக்கிறார் !

‘ஏழன் சுக்கு’ என்றால் , ‘ஏழு பணத்திற்கு வாங்கும் சுக்கு ’  என்பது நச்சினார்க்கினியர் விளக்கம் !

‘ஏழன் காயம்’ என்பது ‘ஏழற் காயம்’ என வராதா ?

இந்தச் சிக்கலைத் தீர்ப்பவர் இளம்பூரணர் !

அஃதாவது , “இயல்பு வல்லெழுத்து இவ்வோத்தின் புறனடையான் வீழ்க்க” என்றார் அவர்!

இவ்வோத்து – இந்தப் புள்ளி மயங்கியல் !

புறனடை – புள்ளி மயங்கியல் நூற்பா 110இல் ‘விழன் குளம்’என்று , வேற்றுமைப் புணர்ச்சியில், திரியாது இயல்பாகப் புணர்ந்த அதே முறை !  

அஃதாவது ,  ‘விழன் குளம்’ , ‘விழற் குளம்’ ஆகாதவாறுபோல , ‘ஏழன் காயம்’ , ‘ஏழற் காயம்’ ஆகாது என்கிறார் இளம்பூரணர் !

இந்த ‘ஏழ்’ என்பது ஒரு சமுதாயப் பிறழ்ச்சியைஉண்டாக்கிவிட்டது !

மதுரை அருகே வெள்ளலூரில் ‘ஏழைக் காத்த அம்மன்’ கோயில் உள்ளது ! இங்கு என்ன செய்கிறார்கள் , குறிப்பிட்ட நாளில் 7  சிறுமிகளைத் தேர்ந்தெடுத்துப் 15 நாட்கள் கோயிலுக்குள்ளேயே விரதம் இருக்குமாறு செய்கின்றனர் ! ‘ஏழைக் காத்த அம்மன்– ஏழுபேர்களைக் காத்த அம்மன்தானே  ?’ என்பது அவர்களது வாதம் !

ஓர் இலக்கணப் பிழையால் அவர்கள் ஏமாந்தார்கள் !

அம்மனின் பெயர் ‘ஏழை காத்த அம்மன்’ !! இரண்டாம் வேற்றுமைத் தொகைச் சொல் இது ! நடுவே ‘க்’ போடக் கூடாது

ஏழை காத்த – ஏழையைக் காத்த ! ஏழு பேர்களை அல்ல!  

‘ஏழு பேர்களைக் காத்த அம்மன்’ என்றால் , மீதிப் பேர்கள் என்னாவது ? - யாரும் கேட்கவில்லை !

இலக்கணம் என்பது புலவர்களின் இடுப்பில் செருகியிருப்பது என்ற எண்ணம் தவறு என்பதற்கு ஏழை காத்த அம்மனே சாட்சி !
இறுதியாக, மேலே வந்த மலை நெல்லைப் பார்க்க ஆசையா ?
[You must be registered and logged in to see this link.]

 Courtesyhttp://nagalpoonai.blogspot.in/

இதுதான் மலை நெல் ! இது ‘ஒட்டடையான்’ என்ற வகையைச் சேர்ந்தது என்கின்றனர் ! இளம்பூரணர் குறித்த ‘தோரை’ இதுதானா என்பது நமக்குத் தெரியாது ! ஒட்டடையான் மலை நெல் மிக மிக ருசியாக இருக்கும் என்கின்றனர் ! உண்டால் பசியே எடுக்காதாம் !
***


Last edited by Dr.S.Soundarapandian on Sun Jul 14, 2013 5:09 pm; edited 2 times in total (Reason for editing : Imageadded)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Dr.S.Soundarapandian on Sun Jul 14, 2013 1:42 pm

ஆதிரா , கவிஞர் கே. இனியவன் ஆகியோர்க்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் ! பாராட்டுகள் அனைத்தும் ஈகரைக்கே சேரும் !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by கவிஞர் கே இனியவன் on Sun Jul 14, 2013 2:09 pm

ஐயா தமிழ் கடல் ...பலர் ..
அதில் உங்கள் பணி சிறப்பு ...
இதில் பல சொற்கள் நாங்கள் பேசும் பேச்சு வழக்கு ...
இப்போடு தான் அறிகிறேன் ..தொல்காப்பிய தமிழ் கதைக்கிறோம் என்று ...
avatar
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1455
மதிப்பீடுகள் : 564

View user profile http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 6 of 29 Previous  1 ... 5, 6, 7 ... 17 ... 29  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum