ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 M.Jagadeesan

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 SK

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 krishnanramadurai

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 ayyasamy ram

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Page 7 of 29 Previous  1 ... 6, 7, 8 ... 18 ... 29  Next

View previous topic View next topic Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Dr.S.Soundarapandian on Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம் (121)

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 24, 2013 8:31 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (121)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

குற்றியலுகரப் புணரியலில் ,அடுத்துத் தொல்காப்பியர் கூறுவது:-

“யகரம் வருவழி யிகரங் குறுகும்
உகரக் கிளவி துவரத் தோன்றாது”  (குற்றியலு. 5)

‘யகரம் வரும் வழி’ -  ‘ய’வை முதலாகக் கொண்ட சொல் வந்து, குற்றியலுகரத்தை ஈறாகக் கொண்ட சொல்லுடன் புணரும்போது ,

‘இகரம் குறுகும்’ – அங்கே தோன்றும் இகரம், குற்றிய லிகரமாகும்!

‘உகரக் கிளவி’ – குற்றியலுகரம்

‘துவரத் தோன்றாது’ – குற்றியலுகரமானது அங்கே இராது !

துவர – முற்றிலும் ; வினையெச்சம் (Verbal participle)

‘துவர’  என்பதிலுள்ள ஈற்று ‘அ’ , எச்ச விகுதி ;  ‘Participle marker’ எனப்படும்.

மேல் நூற்பாப்படி ,

நாகு + யாது =  நாகியாது  ( ‘கி’யின் இகரம் குற்றியலிகரம்)
(நாகு – இதிலுள்ள உகரம் நெடில்தொடர்க் குற்றியலுகரம்)

வரகு + யாது = வரகியாது ( ‘கி’யின் இகரம் குற்றியலிகரம்)
(வரகு – இதிலுள்ள உகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்)

எஃகு + யாது = எஃகியாது ( ‘கி’யின் இகரம் குற்றியலிகரம்)
(எஃகு – இதிலுள்ள உகரம் ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்)

கொக்கு + யாது = கொக்கியாது ( ‘கி’யின் இகரம் குற்றியலிகரம்)
(கொக்கு – இதிலுள்ள உகரம் வன்றொடர்க் குற்றியலுகரம்)

குரங்கு + யாது = குரங்கியாது ( ‘கி’யின் இகரம் குற்றியலிகரம்)
(குரங்கு – இதிலுள்ள உகரம் மென்றொடர்க் குற்றியலுகரம்)

இந்த இடத்தில் இளம்பூரணர் தன் பாடசாலை மாணவர்களுக்குக் கூடுதலாக ஒரு கருத்தைச்  சொல்கிறார் !

உயிர் மயங்கியலில் (நூ. 24) ,  ‘பலா’ என்பதுபோன்ற , குறிலை அடுத்த நெடில் அமைந்த சொல், புணர்ச்சிகளில் ‘அ’ பெற்றுப் , ‘பலா + கோடு = பலாஅக் கோடு’ என வருவது போலத்தான் ,இங்கும் குற்றியல் உகரத்தைத் தொடர்ந்து இகரம் வந்தது என்று கருதிக்கொள்ளுங்கள்  என்கிறார் !

தமிழ் ஒலிப்பு முறையில் (Articulation of Tamil sounds) ஒரு மொழியியல் நுட்பத்தைச் சொல்லியுள்ளார் இளம்பூரணர் !

ஓர் உயிரை ஒலிக்கையில் , நிலைமைக்கு ஏற்றவாறு, இன்னோர் உயிர் தோன்ற வாய்ப்பு உண்டு என்பதே அந்த மொழியியல் நுட்பம் (Linguistic nuance)!

குற்றியலிகரம் பற்றி மேலும் சிறிது காணலாம் !

முள்ளு + யார் = முள்ளியார் (இ- குற்றியலிகரம் அல்ல)

‘ளி’ ஒலி நன்கு , முழுதாகக் காதில் கேட்கிறதா இல்லையா? முழுதாகக் கேட்கும் இகரம் எப்படிக் குற்றியலிகரமாகும் ?உங்கள் காதை முதலில் நம்புங்கள் ! அடுத்தவர் ஓதிய விளக்கம் அப்புறம் !

மேல் ‘ளு’ முற்றியலுகரம் ஆதலின் , குற்றியலிகரம் தோன்றவில்லை !

பற்று + யாது = பற்றியாது (இ- குற்றியலிகரம்)
‘று’ குற்றியலுகரமாதலின் , குற்றியலிகரம் தோன்றிற்று !
‘இ’ முற்றியலிகரமாயின் , சொல்லின் இறுதி ,‘ஈயாது’என்பதுபோல ஒலிக்கும் !

பட்டு + யார் = பட்டியார் (இ - குற்றியலிகரம்)
‘டு’ குற்றியலுகரமாதலின் , குற்றியலிகரம் தோன்றிற்று !
‘இ’ முற்றியலிகரமாயின் , சொல்லின் இறுதி ,‘ஈயார்’என்பதுபோல ஒலிக்கும் !

வடு + யார் = வடியார் (இ - முற்றியலிகரம்)
‘டு’ முற்றியலுகரமாதலின் , குற்றியலிகரம் தோன்றவில்லை !

வட்டு + யார் = வட்டியார் (இ - குற்றியலிகரம்)
‘டு’ குற்றியலுகரமாதலின் , குற்றியலிகரம் தோன்றிற்று !

‘வடியார்’ என்பதையும் ‘வட்டியார்’ என்பதையும் உச்சரித்துப் பாருங்கள் !

‘வடியார்’ என்பதில் ‘டி’ முழுமையாக ஒலிக்கும்; ‘வட்டியார்’ என்பதில் ‘டி’பாதிதான் ஒலிக்கும் !  இடை இகரம் ,முழுமையாக ஒலித்தால் அது முற்றியலிகரம்; பாதியாக ஒலித்தால் அது குற்றியலிகரம் ! அவ்வளவுதான் !

‘குடியார்’ – இகரம் முற்றியலிகரம் !

‘குட்டியார்’ – இகரம் குற்றியலிகரம் !

எனவே , இளம்பூரணர் உரையில் எந்தப் பிழையும் இல்லை !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (122)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 25, 2013 10:35 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (122)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

குற்றியலுகரப் புணரியலில் அடுத்த நூற்பா!:-

“ஈரெழுத்து மொழியு முயிர்த்தொடர் மொழியும்
 வேற்றுமை யாயி னொற்றிடை யினமிகத்
தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி”          (குற்றியலு. 6)

‘ஈரெழுத்து மொழி’ – நெடில் தொடர்க் குற்றியலுகரம்

‘உயிர்த்தொடர் மொழி’ -  உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

‘வேற்றுமை யாயின்’  -   வேற்றுமைப் பொருட் புணர்ச்சிகளில்

‘ஒற்றிடை இனமிக’   -   வருமொழி முதல் எழுத்தின் இன எழுத்து மிக

‘தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி’ – நிலைமொழி ஈறு இரட்டிக்கும் !

யாடு + கால் = யாட்டுக் கால் ( பகுதி ஒற்று இரட்டித்தது; இன எழுத்து  ‘க்’மிகுந்தது)
                 (யாடு – உகரம் , நெடில்தொடர்க் குற்றியலுகரம்) (வேற்றுமைப் புணர்ச்சி)

யாடு + செவி = யாட்டுச் செவி ( பகுதி ஒற்று இரட்டித்தது; இன எழுத்து ‘ச்’மிகுந்தது)
                                                             (வேற்றுமைப் புணர்ச்சி)

யாடு + தலை = யாட்டுத் தலை ( பகுதி ஒற்று இரட்டித்தது; இன எழுத்து ‘த்’ மிகுந்தது)
        (வேற்றுமைப் புணர்ச்சி)
யாடு + தலை = யாட்டுத் தலை ( பகுதி ஒற்று இரட்டித்தது; இன எழுத்து‘த்’ மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)

யாடு + புறம் = யாட்டுப் புறம் ( பகுதி ஒற்று இரட்டித்தது; இன எழுத்து‘ப்’ மிகுந்தது) )
(வேற்றுமைப்  புணர்ச்சி)

நெடில்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் புணர்ச்சிகளை மேலே பார்த்தோம் ! கீழே உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் புணரும் வகை ! :-

முயிறு + கால் = முயிற்றுக் கால் (பகுதி ‘ற்’இரட்டித்தது; இன எழுத்து ‘க்’ மிகுந்தது)
(முயிறு – உகரம் ,உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்) (வேற்றுமைப் புணர்ச்சி)

முயிறு + சினை = முயிற்றுச் சினை (பகுதி ‘ற்’இரட்டித்தது; இன எழுத்து ‘ச்’ மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)

முயிறு + தலை = முயிற்றுத் தலை (பகுதி ‘ற்’இரட்டித்தது; இன எழுத்து ‘த்’ மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)

முயிறு + புறம் = முயிற்றுப் புறம் (பகுதி ‘ற்’இரட்டித்தது; இன எழுத்து ‘ப்’ மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)

இதுவரை , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததையே பார்த்தோம் !

மற்ற கணங்கள் ?

இளம்பூரணர் இவற்றுக்கும் குறிப்புத் தருகிறார் ! ‘இயல்புக் கணத்து முடிபு கொள்க’என்பது அவரின் உரைச் சூத்திரம் !
‘வன்கணம்’ தவிர்த்த ஏனைய மூன்று கணங்களும் இயல்புக் கணங்களே !

உயிர்க்கணம் (உயிரெழுத்து) , இடைக்கணம்(இடையெழுத்து), மென்கணம் (மெல்லெழுத்து) ஆகியவை இயல்புக் கணங்களே !

இவை புணருமாறு !:-

யாடு + ஞாற்சி = யாட்டு ஞாற்சி  (பகுதி ‘ட்’ இரட்டித்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)

யாடு + நீட்சி = யாட்டு நீட்சி  (பகுதி ‘ட்’ இரட்டித்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
யாடு + மாட்சி = யாட்டு மாட்சி  (பகுதி ‘ட்’ இரட்டித்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
யாடு + யாப்பு = யாட்டி யாப்பு  (பகுதி ‘ட்’ இரட்டித்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
யாடு + வலிமை = யாட்டு வலிமை  (பகுதி ‘ட்’ இரட்டித்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
யாடு + அடைவு = யாட் டடைவு  (பகுதி ‘ட்’ இரட்டித்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
யாடு + ஆட்டம் = யாட்  டாட்டம்  (பகுதி ‘ட்’ இரட்டித்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)

மேலே யான் தந்துள்ளவை இளம்பூரணர் சுருக்கமாகத் தந்ததன் விரிவே !

இவை ஒவ்வொன்றும் ஒரு ‘சூத்திரம்’தான் ! புணர்ச்சிகளில் ஐயம் வரும்போதெல்லாம் இவற்றை நினைத்துக்கொள்ளவேண்டும் !

இளம்பூரணர் ‘முயிறு’ என ஒன்றைச் சொன்னாரல்லவா?
என்ன அது ?  கண்ணா ‘முயிறு’ பார்க்க ஆசையா ?

[You must be registered and logged in to see this link.]
Courtesy-jameswhiteants.com
இதுதான் முயிறு ! ‘முசுறு’ என்பதும் இதுவே ! ‘உறவி’ என்று சங்க இலக்கியத்தில்(அகம்399) குறிப்பிடப்படுவது எல்லா வகை எறும்புகளையும் குறிக்கும். முயிறின் விலங்கியல் பெயர் -  Oecophylla smaragdina ; பொதுப் பெயர்- Weaver ants ; கூடு கட்டும் இயல்பு கொண்டது முயிறு! முதலில் ராணி முயிறு ஒரு கொத்து முட்டைகளை ஓரிடத்தில் இடுமாம்; அம் , அக் குட்டி முயிறுகளே கூடு கட்டுமாம் ! கூட்டுப் பணிக்கு முயிறு சரியான உதாரணம் என்று வியக்கின்றனர் எறும்பு ஆய்வாளர்கள் !

முயிறு கட்டிய கூட்டைப் பார்க்க ஆசையா?
[You must be registered and logged in to see this link.]
படம் – முனைவர் சு . சௌந்தரபாண்டியன்  

இவ்வளவையும் படித்துவிட்டு ‘ஆள் சரியான முசுடு’ என்று கூறமாட்டீர்களே ?

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (123)

Post by Dr.S.Soundarapandian on Mon Aug 26, 2013 9:40 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (123)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘யாடு + கால்’ என்பது , பகுதி ஒற்று இரட்டித்து , இன எழுத்துச் சந்தி பெற்று ‘யாட்டுக் கால்’ என ஆகும் என்று முன் கட்டுரையில் பார்த்தோம் !

இதைச் சொல்லிய கையோடு , ‘இதற்கு விதி விலக்கும் உண்டு !’ என்கிறார் தொல்காப்பியர் ! :-

“ஒற்றிடை யினமிகா மொழியுமா ருளவே
அத்திறத் தில்லை வல்லெழுத்து மிகலே”   (குற்றியலு.7)

‘விதி விலக்கு’ என்றால், ‘பகுதி ஒற்று இரட்டிக்கக் கூடாது , இன எழுத்துச் சந்தி மிகக் கூடாது’ இல்லையா?

பார்ப்போம் , இதற்கு என்ன எடுத்துக்காட்டுகளை இளம்பூரணர் தருகிறார் என்று ! :-

நாகு + கால் = நாகு கால் (வேற்றுமைப் புணர்ச்சி) (பகுதியும் இரட்டவில்லை, சந்தியும்  
மிகவில்லை)
(நாகு – உகரம் , நெடில்தொடர்க் குற்றியலுகரம்)

நாகு + சினை = நாகு சினை (வேற்றுமைப் புணர்ச்சி)
நாகு + தலை = நாகு தலை (வேற்றுமைப் புணர்ச்சி)
நாகு + புறம் = நாகு புறம் (வேற்றுமைப் புணர்ச்சி)

வரகு + கதிர் = வரகு கதிர் (வேற்றுமைப் புணர்ச்சி) (பகுதியும் இரட்டவில்லை, சந்தியும்  
மிகவில்லை)
(வரகு – உகரம் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்)

வரகு + சினை = வரகு சினை (வேற்றுமைப் புணர்ச்சி)
வரகு + தலை = வரகு தலை (வேற்றுமைப் புணர்ச்சி)
வரகு + புறம் = வரகு புறம் (வேற்றுமைப் புணர்ச்சி)

‘வரகு கதிர்’ என இடைச் சந்தி இல்லாமல் வருவதை ஏற்றுக்கொள்வது சற்றுக் கடினமே ! ஆனால் ‘விதி விலக்கு’ என்றுதானே தொல்காப்பியரும் அனுமதித்திருக்கிறார்?

தவிரவும் , பழந்தமிழர்கள் உச்சரித்த முறையையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் !
‘நாகு கால்’ என்று இடைவிடாமல் அன்று உச்சரித்துள்ளனர் !

‘வரகு கதிர்’ என்று  இடைவிடாமல் அன்று உச்சரித்துள்ளனர் !
      கிராமப் புறங்களில் இன்றும் இத்தகைய உச்சரிப்பைக் கேட்கலாம் !

தவிரவும் , ‘வரகு கதிர்’ என இடைச்சந்தி வராமல் இருப்பதில் உள்ள குழப்பத்தை நீக்க,இளம்பூரணர் உரையிலேயே ஒரு வழி உள்ளது !

அதன்படி, ‘இன்’ சாரியை சேர்ந்தால் குழப்பம் தீரும் !

வரகு + கால் = வரகின் கால்  (வேற்றுமைப் புணர்ச்சி)
நாகு + கால் = நாகின் கால் (வேற்றுமைப் புணர்ச்சி)
இந்த இடம் ஆழ்ந்து நோக்குதற்கு உரியது !
‘வரகு கதிர்’ என்ற சந்தியில்லாப் புணர்ச்சி ஒரு விதி விலக்குதான் !
உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் எல்லாமே இப்படித்தான் சந்தியில்லாமல் புணரும் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது ! அப்படி எடுத்தால் , ‘முயிறு + கால் = முயிறு கால்’ என்றுதானே வரும் ? ‘முயிறு’விலுள்ள உகரமும் உயிர்த்தொடர்க் குற்றியலுகம்தானே ?
விதிவிலக்கை விதியாக எடுத்துக்கொண்டு பலர் துன்புறுகின்றனர் !
துன்புற்றுப் , ‘பரிசு சீட்டு’ , ‘அரசு செயலர்’ , ‘அரசு பேருந்து’ என்றுதான் சந்தியில்லாது எழுதவேண்டும் என வாதிடுகின்றனர் !
தவறு இது !

பரிசு சீட்டு ×
பரிசுச் சீட்டு √

அரசு செயலர் ×
அரசுச் செயலர் √

அரசு பேருந்து ×
அரசுப் பேருந்து √      என்றுதான் வரவேண்டும் !

உகர ஈற்றுப் பெயர் ,  வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லெழுத்துச் சந்தி பெறும் என்பதற்கு விதி – உயிர் மயங்கியல் நூ.57 ( ‘வேற்றுமைக் கண்ணும் …’)
கடு + காய் = கடுக்காய் (வேற்றுமைப் புணர்ச்சி)
இன்னொரு விதி – உயிர் மயங்கியல் நூ- 57 ( ‘எருவுஞ்…’) .
செரு + களம் = செருக்களம் (வேற்றுமைப் புணர்ச்சி)
கடு , செரு – இவைகளில் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் இல்லை எனலாம் ! பொது விதிக்காகவே இவை காட்டப்பட்டன !  
சுருக்கமாகச் சொன்னால் , ‘உயிர்தொடர்க் குற்றியலுகரத்திற்கு அடுத்து ஒற்று வராது’ என்போர் கீழ்வரும் வடிவங்களுக்கு என்ன கூறுவர் ? :-

அழகு + பெண் = அழகுப் பெண் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(அழகு – உகரம், உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்)

தரிசு + பட்டா = தரிசுப் பட்டா √ (வேற்றுமைப் புணர்ச்சி)
பரசு + காம்பு = பரசுக் காம்பு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
துருசு + கட்டி = துருசுக் கட்டி √ (வேற்றுமைப் புணர்ச்சி)
சுளகு + காது = சுளகுக் காது √ (வேற்றுமைப் புணர்ச்சி)
பரிசு + பெட்டி = பரிசுப் பெட்டி √ (வேற்றுமைப் புணர்ச்சி)

இளம்பூரணர் குறித்த ‘வரகு கதிர்’ எப்படி இருக்கும் , பார்த்திருக்கிறீர்களா?
[You must be registered and logged in to see this link.]
Courtesy- icrisat.org

இதுதான் ‘வரகு கதிர்’ ! வரகுதான் ‘வரகரிசி’ எனப்படுகிறது! வரகின் தாவரவியல் பெயர் - Paspalum scrobiculatum ; இதன் பொதுப்பெயர் – Common millet ; வரகின் தாயகம் இந்தியா எனப் போனால் போகிறதென்று ஒத்துக்கொண்டுள்ளனர் ! இதைச் சற்று விரித்து ‘இந்தியாவில் எங்கே ? தமிழகமா?’என்று தமிழர்கள் கேட்க வேண்டும் ! 3000 ஆண்டு வரலாறு வரகுக்கு இருக்கிறது என்கின்றனர் ! தமிழர் நாகரிகம் தொன்மையானது என்ற கருத்தை இங்கு இணைத்து ஆயவேண்டும் ! வரகு வேறு , கேழ்வரகு வேறு ! கேழ்வரகு , கேப்பை , ராகி எல்லாம் ஒன்று!

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (124)

Post by Dr.S.Soundarapandian on Thu Sep 05, 2013 9:28 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (124)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொல்காப்பிய நூற்பாவில் ‘இடையொற்றுத் தொடர்’ என்பது, இடைத்தொடர்க் குற்றியலுகரத்தைக் குறிக்கும் !
‘ஆய்தத் தொடர்’ என்பது , ஆய்த்த் தொடர்க் குற்றியலுகரத்தைக் குறிக்கும் !

இந்த இருவகைக் குற்றியலுகரங்களும் , வேற்றுமையில் ,மெய்யெழுத்துச் சந்தி பெற்றும் வரும் ,பெறாமலும் வரும் என்கிறார் தொல்காப்பியர் ! :-

“இடையொற்றுத் தொடரு மாய்தத் தொடரும்
நடையா யியல வென்மனார் புலவர்” (குற்றியலு.8)

‘நடை ஆயியல’ என்பது கவனிக்கத் தக்கது !

”இடைத்தொடர்க் குற்றியலுகரமும் , ஆய்தத் தொடர்க் குற்றியலுகரமும் , புணர்ச்சியில் வல்லெழுத்துச் சந்தி பெறாது” என்று தொல்காப்பியர் கூறவில்லை !

“இந்த இரு குற்றியலுகரங்களும் , விதி விலக்காகப், புணர்ச்சியில் சந்தி பெறாமலும் வரும் ” என்பதே தொல்காப்பியர் கூறியது !

‘ஆ’ – என்ற சுட்டுப் பெயர் (Demonstrative pronoun) , ‘அந்த’ எனும் பொருள் கொண்டது. அகரத்தின் நீட்சிதான் ‘ஆ’!

‘அந்த’ என்பது முன் நூற்பாவைச் சுட்டும் !

முன் நூற்பாவில் (குற்றியலு.7),  ‘ஒற்றிடை இனம் மிகா மொழியுமார் உளவே’
என்று கூறியதிலுள்ள , ‘மொழியும்’என்பது நோக்கற்பாலது ! இதிலுள்ள உம்மை , எதிர்மறை உம்மை ! பொருள் யாதெனில் , ‘ஒற்றிடை வராத புணர்ச்சிகளும் உள’ என்பதே ! அப்படியானால் , ஒற்று இடையே வருவதுதான் இயல்பு என்பதுதானே கருத்து ?

நாம் எடுத்துக் கொண்ட நூற்பாவுக்கு வருவோம் !

தொல்காப்பியர் கூறிய விதிவிலக்கை உரியவகையில் நோக்காது ,    ‘இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள்  , வேற்றுமைப் புணர்ச்சியில் , ஒற்றெழுத்துச் சந்தி பெறா’ என்ற கருத்து நிலைநாட்டப்பட்டுவிட்டது !

விதிவிலக்கை விதியாக இப்படி நிலைநாட்டியவர் நன்னூலார்தான் !

நன்னூலைப் (உயிரீற்றுப் புணரியல் 32) பின்பற்றி இன்று பரவலாக ‘இயல்பு புணர்ச்சி’ என்றே எழுதுகின்றனர் !

‘வேற்றுமைப் புணர்ச்சி’ , ‘அல்வழிப் புணர்ச்சி’ என்று சொல்லிய கையோடு ‘இயல்புப் புணர்ச்சி’ எனச் சொல்லிப்பாருங்கள் , உண்மை விளங்கும் !

‘இயல்புப் புணர்ச்சி’ என்று எழுதுவதில் எந்த இலக்கணப் பிழையும் வராது ! ஒலிப்புமுறை (Articulation) நோக்கிலும் பிழை வராது!

சில இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் புணர்வதைப்  பார்ப்போம் ! :-

மார்பு + கூடு = மார்புக் கூடு (வேற்றுமைப் புணர்ச்சி)
(மார்பு – உகரம் , இடைத்தொடர்க் குற்றியலுகரம்)

மார்பு + சளி = மார்புச் சளி (வேற்றுமைப் புணர்ச்சி)

மார்பு + தசை = மார்புத் தசை (வேற்றுமைப் புணர்ச்சி)

மார்பு + சங்கிலி = மார்புச் சங்கிலி (வேற்றுமைப் புணர்ச்சி)

மார்பு + கவசம் = மார்புக் கவசம் (வேற்றுமைப் புணர்ச்சி)

இயல்பு + குணம் = இயல்புக் குணம் (வேற்றுமைப் புணர்ச்சி)
இயல்பு + பண்பு = இயல்புப் பண்பு (வேற்றுமைப் புணர்ச்சி)

தொடர்பு + கடிதம் = தொடர்புக் கடிதம் (வேற்றுமைப் புணர்ச்சி)

கதழ்பு + செயல் = கதழ்புச் செயல் (வேற்றுமைப் புணர்ச்சி)
(கதழ்பு – விரைவு)

கேழ்பு + பண்பு = கேழ்புப் பண்பு (வேற்றுமைப் புணர்ச்சி)
(கேழ்பு – நன்மை ,blessing)

கீழ் வருவன உயிர்த்தொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சிகள் ! :-

உருபு + தொகை = உருபுத் தொகை (வேற்றுமைப் புணர்ச்சி)

வெருகு + கால் = வெருகுக் கால் (வேற்றுமைப் புணர்ச்சி)
(வெருகு – ஆண் பூனை )

உருது + புலவர் = உருதுப் புலவர் (வேற்றுமைப் புணர்ச்சி)

விருது + தேர்வு = விருதுத் தேர்வு (வேற்றுமைப் புணர்ச்சி)

விருது + சான்றிதழ் = விருதுச் சான்றிதழ் (வேற்றுமைப் புணர்ச்சி)

விருது + பட்டியல் = விருதுப் பட்டியல் (வேற்றுமைப் புணர்ச்சி)


கொலுசு + கால் = கொலுசுக் கால் (வேற்றுமைப் புணர்ச்சி)

வயது + பெண் = வயதுப் பெண் (வேற்றுமைப் புணர்ச்சி)

அறுகு + குப்பை = அறுகுக் குப்பை (வேற்றுமைப் புணர்ச்சி)
(அறுகு – புல் வகை)

அறுகு + குடிநீர் = அறுகுக் குடிநீர் (வேற்றுமைப் புணர்ச்சி)
(குடிநீர் – கஷாயம்)

மேலே கண்டவாறு ,இடைத்தொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சியாயினும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சியாயினும் மெய்யெழுத்துச் சந்தி பெறுதலே தமிழ் நாவின்  மரபு !

‘வயசுப் பெண்ணை வைத்துக்கொண்டு , இந்த ஆம்பிளைக்குக் கொஞ்ச மாவது பொறுப்பிருக்கா?’- முதியோள் வீட்டில் இரைவதை இலக்கணப் புலவர்கள் தடுக்கமுடியாது ! அவள் நாவில்  ‘வயசுப்’ என  ‘ப்’ ஒற்றெழுத்து வருகிறதே அதுதான் தமிழ் மரபு ! அதுதான் தமிழ் இலக்கணத்திற்கு அடிப்படையே ! (வயசு- உகரம் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்).

தமிழ்ப் பாட்டி எப்படிச் சொல்வாள்? ‘கருதுக் கம்பி’ என்றுதானே சொல்வாள்? (கருதுக் கம்பி – குத்துக் கம்பி). ‘கருது கம்பி’ என்றால் வினைத் தொகையாக அல்லவா நிற்கும் ? இலக்கண முரண் இல்லையா இஃது ? ! ‘கருதுக் கம்பி ’ என்றால்தானே பெயர்ச்சொல் கிடைக்கும் ? கருதுக் கம்பி – கூட்டுப் பெயர் (Compound noun ). இதை நாம் கருதக்கூடாதா? (கருது- உகரம் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்).


இடைத் தொடர்க் குற்றியலுகரச் சொல், புணர்ச்சியில், ஒற்றுப் பெறாது என்பதற்கு இளம்பூரணர் ‘தெள்கு கால்’ என்பதை எடுத்துக்காட்டாகத் தந்தார் ! ‘தெள்குக் கால்’என்றால் ‘தெள்கு’ என்ற பெயர்ச் சொல்லுக்கு  ஒரு வினைப் பண்பு (Verbal sense)  வரக் காணலாம் ! ‘நொண்டிக் கால் ’ என்பதுபோலத்  ‘தெள்குக் கால்’ அமைவதால் அதனைத் தவிர்ப்பதற்காகத் ‘தெள்கு கால்’ கொள்ளப்படுகிறது !  இது விதி விலக்கு ! விதி அல்ல !

அச்சில் உள்ள இளம்பூரணர் , நச்சினார்க்கினியர் உரைகளில் எல்லாம் ‘இயல்பு புணர்ச்சி’, ‘உருபு புணர்ச்சி’ என்றுதானே  உள்ளது ?

நல்ல கேள்வி !


உரையாசிரியர்கள் எழுதிய அதே சொல்லாட்சிகள்தாம் அச்சிட்ட பதிப்புகளில் வந்துள்ளன என்று யாராலும் கூற இயலாது ! நமக்குக் கிடைக்கும் உரையாசிரியர் நடை பதிப்பாசிரியரின் நடை கலந்ததுதான் !எனவே , பதிப்புகள் நமக்குச் சான்றாக அமையா!
இப்போது ஆய்தத் தொடர்க் குற்றியலுகரத்திற்கு வருவோம் !

இதுவும் , விதி விலக்காக , ‘ ஒற்றுச் சந்தி பெறாமலும் வரும்’என்றுதான் தொல்காப்பியர் கூறியுள்ளார் ! ‘எஃகு கால்’ என்ற இளம்பூரணரின் எடுத்துக்காட்டு ,விதிவிலக்கு எடுத்துக்காட்டுதான் !       ஆய்தம், அதனை அடுத்த குகரம், அதனைத் தொடரும் ககர நெடில் என மூன்று சிக்கலான ஒலிக்கூட்டத்தில் நான்காவதாக ‘க்’ சேர்வது பொருத்தமில்லைதான் ! எனவே ‘எஃகு கால்’ என்பதில் இடையொற்று வராது என்பதை விதிவிலக்காக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் ! இதற்குத்தான் தொல்காப்பியரும் நூற்பா யாத்தார் !

கீழ்வரும் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரப்  புணர்ச்சிகளைப் பாருங்கள் !:-

எஃகு + சட்டி = எஃகுச் சட்டி (வேற்றுமைப் புணர்ச்சி)

எஃகு + துறை = எஃகுத் துறை (வேற்றுமைப் புணர்ச்சி)

எஃகு + கம்பி = எஃகுக் கம்பி (வேற்றுமைப் புணர்ச்சி)

எஃகு + சட்டம் = எஃகுச் சட்டம் (வேற்றுமைப் புணர்ச்சி)

- இங்கெல்லாம் ஒற்று வரத்தானே வேண்டும் ?

‘இரும்புச் சட்டி’ என்று உச்சரித்த கையோடு ‘எஃகுச் சட்டி’ என உச்சரித்துப் பாருங்கள் ! உண்மை விளங்கும் !

‘எஃகு சட்டம் கொண்டுவந்தாள் ’ – என்றால் , அவள் கொண்டு வந்தது , எஃகா? சட்டமா?அல்லது இரண்டுமா? ‘எஃகுச் சட்டம் கொண்டு வந்தாள்’ என்றால் பொருளில் எந்தக் குழப்பமும் இல்லை !  ‘எஃகாலாகிய சட்டத்தைக் கொண்டுவந்தாள்’ என்ற ஒரு பொருள்தான் அங்கே வருகிறது ! மொழியின் அடிப்படை விதியே குழப்பம் இருக்கக்கூடாது என்பதுதானே ?

இன்னும் குழப்பம் தீரவில்லையா?

மேலும் ஆய்வோம் !

1 .   இயல்புப் புணர்ச்சியில் ஒரு மாணவி பிழை செய்துள்ளாள் ; இதைத் தொடரில் எழுதுங்கள் என்றால் நீங்கள் எப்படி எழுதுவீர்கள் ?

‘ இயல்பு புணர்ச்சிப் பிழை செய்தாள்’ – என எழுதுவீர்களா?
இப்படி எழுதினால் , ‘இயல்பு என்ற பெண் , புணர்ச்சியில் பிழை செய்தாள் ’ என்றுதானே ஆகும் ? இது பிழையானது ஆயிற்றே ?

நாம் பார்த்ததுபோல , ‘இயல்புப் புணர்ச்சிப் பிழை செய்தாள்’ என எழுதினால் , ஒரு குழப்பமும் வராது !
இப்போது நாம் பார்த்தது , இடைத்தொடர்க் குற்றியலுகரத்திற்கு ; இனி, உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தைப் பார்ப்போம் !

2 . உருபுப் புணர்ச்சியில் ஒரு மாணவி பிழை செய்துள்ளாள் ; இதை எப்படி எழுதுவீர்கள் ?

‘உருபு புணர்ச்சிப் பிழை செய்தாள்’ – என எழுதுவீர்ளா?

இப்படி எழுதினால் , ‘உருபு என்ற பெயர் உள்ள பெண் புணர்ச்சியில் பிழை செய்தாள்’என்றுதானே ஆகும் ? பொருளே மாறிவிடுகிறதே ?

நாம் பார்த்தது போல ‘உருபுப் புணர்ச்சியில் பிழை செய்தாள்’ என எழுதிப் பாருங்கள் ; எந்தப் பிழையும் வராது !

இவற்றிலிருந்து நமது ஆய்வு சரிதான் என ஆகுமல்லவா?
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by ராஜு சரவணன் on Thu Sep 05, 2013 9:40 pm

நன்றி அய்யா... தொடர்கிறோம் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by mohu on Fri Sep 06, 2013 7:43 am

அருமையான விளக்கம் , நன்றி
avatar
mohu
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 125
மதிப்பீடுகள் : 35

View user profile http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by பூவன் on Fri Sep 06, 2013 11:12 am

புணர்ச்சிகள் பற்றி அறிய தந்தமைக்கு நன்றி ஐய்யா
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (125)

Post by Dr.S.Soundarapandian on Sat Sep 07, 2013 1:57 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (125)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

குரங்கு + கால் = குரங்குக் கால் √
குரங்கு + கால் = குரக்குக் கால் √

இஃதெப்படி ? இரண்டுமா சரி ? தொல்காப்பிய விதி  இதற்கு உள்ளதா?

இதோ உள்ளது !:-

“வன்தொடர் மொழியும் மென்தொடர் மொழியும்
வந்த வல்லெழுத்து ஒற்றிடை மிகுமே
மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற்று எல்லாம்
வல்லொற்று இறுதிக் கிளையொற்று ஆகும் ”  (குற்றியலு. 9)


‘வன்தொடர் மொழியும்’ – வன்றொடர்க் குற்றியலுகரமும்

‘மென்தொடர் மொழியும்’ – மென்றொடர்க் குற்றியலுகரமும்

‘வந்த வல்லெழுத்து’ – வரு சொல்லின் முதலெழுத்து வல்லின எழுத்தாகும்போது

‘ஒற்றிடை மிகுமே’ – நின்ற சொல்லுக்கும் , வரு சொல்லுக்கும் இடையே , வருசொல்லின் முதல் வல்லின எழுத்தின் மெய்யானது தோன்றும்

‘மெல்லொற்றுத் தொடர்மொழி’ – மென்றொடர்க் குற்றியலுகரம்

‘மெல்லொற்று எல்லாம்’ – இதிலுள்ள (மென்றொடர்க் குற்றியலுகரத்திலுள்ள) மெல்லின மெய் எல்லாம்

‘வல்லொற்று இறுதி ‘ – நிலைமொழி இறுதியில் வல்லொற்றுப் பெறும்

‘கிளையொற்று ஆகும்’ – அந்த மெல்லெழுத்தானது அதன் கிளையெழுத்து (இன எழுத்து) ஆகும் !

இவ்வுரைக் கேற்ப இளம்பூரணர் தந்துள்ள எடுத்துக்காட்டுகள் !:-

(1) கொக்கு + கால்  =  கொக்குக் கால் (வல்லெழுத்து  ‘க்’ இடை மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(கொக்கு – ஈற்று உகரம், வன்றொடர்க் குற்றியலுகரம்)

கொக்கு + சிறகு  =  கொக்குச் சிறகு (வல்லெழுத்து  ‘ச்’ இடை மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)

கொக்கு + தலை  =  கொக்குத் தலை (வல்லெழுத்து  ‘த்’ இடை மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)

கொக்கு + புறம்  =  கொக்குப் புறம் (வல்லெழுத்து  ‘ப்’ இடை மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)

மேல் நான்கும் வன்றொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சிகள் !

இனி , மென்றொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சிகள் !:-

(2)குரங்கு + கால்  =  குரங்குக் கால் (வல்லெழுத்து  ‘க்’ இடை மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(குரங்கு – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம்)

குரங்கு + செவி  =  குரங்குச் செவி (வல்லெழுத்து  ‘ச்’ இடை மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)

குரங்கு + தலை  =  குரங்குத் தலை (வல்லெழுத்து  ‘த்’ இடை மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)

குரங்கு + புறம்  =  குரங்குப் புறம் (வல்லெழுத்து  ‘ப்’ இடை மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)

(3)குரங்கு + கால்  =  குரக்குக் கால் (  ‘ங்’கின் கிளையான ‘க்’ வந்தது;வல்லெழுத்து  ‘க்’ இடை மிகுந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
(குரங்கு – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம்)

குரங்கு + செவி  =  குரக்குச் செவி(  ‘ங்’கின் கிளையான ‘க்’ வந்தது;வல்லெழுத்து  ‘ச்’ இடை மிகுந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)

குரங்கு + தலை  =  குரக்குத் தலை (  ‘ங்’கின் கிளையான ‘க்’ வந்தது;வல்லெழுத்து  ‘த்’ இடை மிகுந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)

குரங்கு + புறம்  =  குரக்குப் புறம் (  ‘ங்’கின் கிளையான ‘க்’ வந்தது;வல்லெழுத்து  ‘ப்’ இடை மிகுந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)


எண்கு + குட்டி  =  எட்குக் குட்டி (‘ண்’ணின் கிளையான ‘ட்’ வந்தது;வல்லெழுத்து  ‘க்’ இடை மிகுந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
(எண்கு – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம்)

எண்கு + செவி  =  எட்குச் செவி (‘ண்’ணின் கிளை ‘ட்’ வந்தது;வல்லெழுத்து  ‘ச்’ இடை மிகுந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)

எண்கு + தலை  =  எட்குத் தலை (‘ண்’ணின் கிளை ‘ட்’ வந்தது;வல்லெழுத்து  ‘த்’ இடை மிகுந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
எண்கு + புறம்  =  எட்குப் புறம் (‘ண்’ணின் கிளை ‘ட்’ வந்தது;வல்லெழுத்து  ‘ப்’ இடை மிகுந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)

எண்கு – கரடி .

கொக்கை விடமுடியவில்லை இளம்பூரணரால் ! மேலும் தொடர்கிறார் பாருங்கள் ! :-
“இவ்விரண்டு ஈற்றிற்கும் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கு எய்திய வழி , இயைபு வல்லெழுத்து வீழ்க்க !”

தொல்காப்பிய மூலம் நமக்கு விளங்கினாலும் விளங்கும் , உரையாசிரியர்களின் உரை விளங்காது !

‘இவ்விரண்டு ஈற்றிற்கும்’ – ‘கொக்கு’ , ‘குரங்கு’ ஆகிய இரு சொற்களின் இறுதிக்கும்

‘உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கு எய்திய வழி’ – ‘கொக்கினது’ என்பதில் உள்ள ‘இன்’ சாரியை எதற்கு வந்தது ?  ‘அது’ என்ற வேற்றுமை உருபிற்காக வந்தது ! (இதுதான் ‘உருபிற்குச் சென்ற சாரியை’) ; அவ்வாறு வந்த ‘இன்’சாரியை , தானே வேற்றுமைப் பொருளைத் தந்து  ‘அது’வைத் தேவையற்றதாக்கிக்  ‘கொக்கினது’ என்பதற்குப் பதில் , ‘கொக்கின்’ என்று அதே பொருளில் நின்றுகொள்கிறது! (இதுவே ‘பொருட்கு எய்திய வழி’)

‘இயைபு வல்லெழுத்து வீழ்க்க’ – ‘கொக்குக் கால்’ என்றுதானே சற்றுமுன் பார்த்தோம் ? இதிலுள்ள இரண்டாம் ‘க்’கை நீக்குக !

இதன்படி ?

இதன்படி ! :-

(4) கொக்கு + கால் = கொக்கின் கால் (இன் சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

குரங்கு + கால்  =  குரங்கின் கால் (இன் சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

மேலே ,மென்றொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சியில் ,   ‘குரங்கு + கால் = குரக்குக் கால் ’ என வந்ததைப் பார்த்தோமல்லவா ? இதற்கு ஒரு விதிவிலக்கைக் கூறுகிறார் இளம்பூரணர் ! :-

(5) பரம்பு  + பாரி = பரப்புப் பாரி ×
= பரம்பிற் பாரி √ (இன் சாரியை வந்துள்ளது)(வேற்றுமைப் புணர்ச்சி)
(பரம்பு – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம்)

‘குரங்கு + கால் = குரக்குக் கால்’ என்பதில் , வருமொழியானது, வல்லெழுத்தை முதலாகக் கொண்டது ( ‘கால்’ என்பதன் முதல் எழுத்து ‘க்’) ; இப்படியின்றி , வருமொழியானது, உயிரெழுத்தை , மெல்லெழுத்தை , இடையெழுத்தை முதலாகக் கொண்டாலும் ‘குரங்கு’ என்பது ‘குரக்கு’ என ஆகும் என்றொரு செய்தியைக் கூடுதலாகத் தருகிறார் இளம்பூரணர் ! :-

(6) குரங்கு  + ஞாற்சி  = குரக்கு ஞாற்சி (வேற்றுமைப் புணர்ச்சி)

குரங்கு  + நீட்சி  = குரக்கு நீட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)

குரங்கு  + மாட்சி  = குரக்கு மாட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)

குரங்கு  + யாப்பு  = குரக்கி யாப்பு (வேற்றுமைப் புணர்ச்சி)

குரங்கு  + வலிமை  = குரக்கு வலிமை (வேற்றுமைப் புணர்ச்சி)

குரங்கு  + அடைவு  = குரக்கடைவு (வேற்றுமைப் புணர்ச்சி)
குரங்கு  + ஆட்டம்  = குரக்காட்டம் (வேற்றுமைப் புணர்ச்சி)

சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்  (வேற்றுமைப் புணர்ச்சி)

மேலே கண்ட சில புணர்ச்சிகள் நமக்கு அந்நியம்போலத் தோன்றும் ! ஆனால் அந்நியமல்ல !

கரும்பு + கட்டி = கருப்புக் கட்டி (வேற்றுமைப் புணர்ச்சி) ; இதுதான் ‘கருப்பட்டி’ ஆனது !  (கரும்பு – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம்).

ஈச்சம் பழம் நீங்கள் சாப்பிட்டதுதானே ? வாருங்கள் இதிலொரு வாணவேடிக்கை !

ஈந்து + பழம் = ஈத்தம் பழம் (வேற்றுமைப் புணர்ச்சி) (மெல்லின ‘ந்’ , கிளை எழுத்தாகிய ‘த்’ ஆனது ; அம் சாரியை தோன்றியது ; ஈந்து – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம் ).

ஈஞ்சு + பழம் = ஈச்சம் பழம்  (வேற்றுமைப் புணர்ச்சி) (மெல்லின ‘ஞ்’ , தன் கிளை எழுத்தாகிய ‘ச்’ ஆனது ; அம் சாரியை தோன்றியது ; ஈஞ்சு – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம் ).
(ஈஞ்சம் பாக்கம் என்ற சென்னைப் பகுதியை இங்கு நினைவு கூர்க)

‘ஈந்துப் பழம்’ , ‘ஈஞ்சுப் பழம்’ என்றெல்லாம் வரவில்லை என்பதைப் பார்த்து மகிழ்க !

மொழியியலில் ,  ‘குரங்குக் கால் ’ என்பதை ‘Noun Dative + Noun ’ எனக் குறிப்பர் ! மொத்தத்தில் , NP (Noun Phrase) என்பர் ; மெய் (Consonant) , உயிர் (Vowel) அமைப்பில் , ‘CVCVCCVC  CVC ’ என எழுதுவர் (C- Consonant, V- Vowel; ‘கு’ என்பதில்  ‘க் + உ’ உள்ளதால் ,  ‘CV ’ எனக் குறிக்கவேண்டும் !)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by ராஜு சரவணன் on Sat Sep 07, 2013 2:08 pm

சிலப்பதிகாரம், கருப்பட்டி, ஈச்சம் பழம் பற்றிய புணர்ச்சி விளக்கங்கள் அருமை அய்யா புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (126)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 08, 2013 5:39 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (126)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

குற்றியலுகரப் புணரியலில் நாம் நின்று விளையாடுகிறோம் !

குருந்து – மென்றொடர்க் குற்றியலுகரச் சொல் !

வல்லெழுத்தை முதலாகக் கொண்ட  சொற்களுடன் ‘குருந்து’  புணரும்போது , எப்படிப் புணரும் ?

குருந்து + கோடு = குருந்துக் கோடு ×
   = குருத்துக் கோடு ×
  = குருந்தங் கோடு √(அம்- சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
(குருந்து – ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம்)

பார்த்தீர்களா?  ‘குரங்கு’ என்பதும் மென்றொடர்க் குற்றியலுகரச் சொல்தான் ! ஆனால் அஃது , ‘குரங்குக் கால்’ , ‘குரக்குக் கால்’ எனப் புணர்ந்தது போலக் ‘குருந்து’ புணரவில்லை !  

ஏன் ?

எனெனில் ‘குருந்து’ ஒரு மரம் !

மரத்தின் பெயராதலால் , மென்றொடர்க் குற்றியலுகரமாக இருந்தாலும் வேறு விதி தேவைப்படுகிறது , புணர்ச்சிக்கு!

அதைத்தான் தருகிறார் தொல்காப்பியர் ! :-

“மரப்பெயர்க்  கிளவிக் கம்மே சாரியை”  (குற்றியலு. 10)

அஃதாவது, வேற்றுமைப் புணர்ச்சியில், வன்றொடர் , மென்றொடர் இருவகைக் குற்றியலுகரங்களை ஈற்றிலே கொண்ட  மரப்பெயர்கள்  ‘அம்’ சாரியை பெற்றே  வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களுடன் புணரும் ! :-

தேக்கு + கோடு = தேக்குக் கோடு  ×
  =  தேக்கங் கோடு √ (அம்- சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தேக்கு- ஈற்று உகரம் , வன்றொடர்க் குற்றியலுகரம்)

தேக்கு + செதிள் = தேக்கஞ் செதிள் (அம்- சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

தேக்கு + தோல் = தேக்கந் தோல் (அம்- சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

தேக்கு + பூ = தேக்கம் பூ (அம்- சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

- மேல் நான்கும் வன்றொடர்க் குற்றியலுகர மரப்பெயர்ச் சொற்புணர்ச்சிகள் !

இனி, மென்றொடர்க் குற்றியலுகர மரப்பெயர்ச்  சொற்புணர்ச்சிகள் !:-

வேம்பு + கோடு = வேம்புக் கோடு ×
  = வேப்புக் கோடு ×
  = வேப்பங் கோடு √ (அம்- சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(வேம்பு- ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம்)

வேம்பு + செதிள் = வேப்பஞ் செதிள் √ (அம்- சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

வேம்பு + தோல் = வேப்பந் தோல் √ (அம்- சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

வேம்பு + பூ = வேப்பம் பூ √ (அம்- சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

அது சரி ! ஏன் மரப்பெயருக்குத் தனி விதி ?

இதில் என்ன மொழி நுட்பம் ?

இருக்கிறது !

புளிய மரத்தைப் பிடித்து ஆட்டினால் உண்மை தன்னைப் போல விழும் !

புளிய மரத்தின் தண்டைப் (இதுதான் ‘கோடு’) , ‘புளிக்கோடு’ என்று கூறினால் என்ன ஆகும் ?  ‘அந்தத் தண்டு புளிப்புச் சுவை உடையது’ என்றல்லவா ஆகும் ? எனவே , புணர்ச்சியை மாற்றவேண்டும் ! அங்கே கை கொடுப்பது சாரியை ! ‘அம்’சாரியை சேர்த்துப் ‘புளியங் கோடு’ என்றால் , ‘புளிய மரத்தின் தண்டு’ என்ற தெளிவான பொருள் வந்துவிடுகிறது !

இதுதான் மரப்பெயர்ப் புணர்ச்சிகளுக்கு ‘அம்’ சாரியை வந்த இரகசியம் !  

‘சாரியைகளுக்கு நுட்பப் பொருள் உண்டு ’ (Subtle Semantic value) என்ற மொழியியல் உண்மை இங்கு பெறப்படுகிறது !

எனவே சாரியைகளை ‘Euphonic extention’ (ஒலி நீட்டிப்பான்) என்று மொழியியலார் குறிப்பது பொருத்தமில்லை !

ஒரு மரத்து எடுத்துக் காட்டைக் கூறினீர்கள் ! அதைக்கொண்டு எல்லா மரப்பெயர்களுக்கும் விதி கூறிவிடுவதா ?

- நல்ல கேள்வி !
தமிழ்ச் சொற்களின் அமைப்பு அடிப்படைகளில்  (Basic principles of Tamil word making) இது  குறிப்பிடத் தக்கது! அஃதாவது , ஒரு புணர்ச்சி எனில் , அது எல்லாச் சொற்களுக்கும் பொருந்திவரவேண்டும் ! இதுதான் தமிழ்ச் சொற்களின் சட்டம் ! ‘புளியங் கோடு’ என ‘அம்’ சாரியை போட்டுக் கூறவேண்டும் என்ற விதியைக்  ‘குருந்து’ என்ற மரப் பெயருக்குப் பயன்படுத்தினால் கேடு ஒன்றும் இல்லை  என்பதை நோக்குவீர் ! எனவேதான் ‘அம்’சாரியை போட்டு மரப் பெயர்களைப் புணர்க்கலாம் என்ற விதி ஏற்பட்டது !

இப்படி ஏற்படும் விதிகளுக்குக் கட்டுப்படாமல் , அங்கு மிங்குமாகச் சில புணர்ச்சிகள் நெருடும்போது , அதற்கு விதிவிலக்குத் தரவேண்டியுள்ளது ! தொல்காப்பியத்தில் நாம் பார்க்கும் பல விதிவிலக்குகளின் இரகசியம் இதுதான் !

மேலே பார்த்த எடுத்துக்காட்டில் , ‘வேம்பு’ எனபது ,  ‘வேப்பு’ என வந்ததைக் கவனித்தீர்களா?

மென்றொடக் குற்றியலுகரச் சொல் ‘வேம்பு’ , ‘வேப்பு’ ஆனதுபோல எல்லா மென்றொடர்க் குற்றியலுகர மரப்பெயர்ச்  சொற்களிலும் மெல்லெழுத்து வல்லெழுத்தாகுமா?

ஆகாது என்கிறார் தொல்காப்பியர் !:-

“மெல்லொற்று வலியா மரப்பெயரு முளவே” (குற்றியலு.11 )

இதற்கு எடுத்துக்காட்டுகள் ! :-

புன்கு + கோடு = புற்குக் கோடு ×
= புன்கங் கோடு √  (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(புன்கு – ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம்)

புன்கு + செதிள் = புன்கஞ் செதிள்   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

புன்கு + தோல் = புன்கந் தோல்   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

புன்கு + பூ = புன்கம் பூ   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

இங்கு இளம்பூரணர் விளக்கக்(?) குறிப்பு ஒன்றைத் தருகிறார் ! :-


“மற்று , இது நிலைமொழித் தொழிலை நிலைமொழி விலக்குமாதலின் சாரியை வகுப்பவே முடியும் பிற எனின் , இது நிலைமொழியின் உள் தொழிலாதலின் அவ்வாறு விலக்குண்ணா தென்பது கருத்து .”

எதாவது விளங்குகிறதா ?

கீழ்வருமாறு விளக்கலாம் ! :-

முதல் நிலைமொழித் தொழில் – ‘அம்’ சாரியை வருவதை ஏற்றல் .
இரண்டாம் நிலைமொழித் தொழில் –  ‘வேம்பு’ , ‘வேப்பு’ஆதல் .
‘நிலைமொழித் தொழிலை நிலைமொழி விலக்குதல்’ – முதல் நிலைமொழித் தொழிலை இரண்டாம் நிலைமொழித்தொழில் விலக்குதல் ; அஃதாவது,சாரியை ‘அம்’மின் தாக்கத்தை ‘வேம்பு’, ‘வேப்பு’ஆன செய்கை  விலக்கும் .
ஏனெனில் , இது நிலை மொழியின் உள் தொழில் – அஃதாவது, ‘வேம்பு’ , ‘வேப்பு’ ஆன செய்கை .
ஆதலின் விலக்குண்ணா – அதனால் (உள் தொழிலின் செயலால்) , ‘அம்’ வருவது நீங்காது !

சுருக்கமாக?

சுருக்கமாக – சாரியை வருவதால்தான் மரப்பெயரின் மெல்லெழுத்து , வல்லெழுத்தாக ஆகிறது என எண்ணவேண்டாம் ; நிலைமொழியின் உள் தொழிலைப் பொறுத்தே அது நடக்கிறது !
இதுதான் இளம்பூரணர் கூறவந்தது ! அந்தக்கால நடையில் , அதுவும் ஓலைச் சுவடியில் , கி.பி.11ஆம் நூற்றாண்டில் அவர் எழுதிய உரைநடை அது !

சரி !  ‘உள் தொழில்’ என்றாரே , ஏன் ‘புன்கு’ , ‘புற்கு’ஆகவில்லை , ‘குருந்து’ , ‘குருத்து’ஆகவில்லை ?

‘புன்கு + கோடு = புற்குக் கோடு’ என்று வருகிறது என வைத்துக்கொள்வோம் ! ‘புற்கு’ என்பது ஓர் ஒலிக்குறிப்புச் சொல் ! ‘புற்கென்று’ என்றெல்லாம் இஃது எழுதப்படும் ; மரப்பெயரில் ஒலிக்குறிப்பு வருவது பொருந்தாது ; எனவேதான் ‘புன்கம்’ ஆகிறது !

இதைப்போலவே ‘குருத்துக் கோடு’ என்று புணர்ச்சி வந்தால் , ‘குருத்து’ என்பது இளம் (tender) என்ற பொருளைத் தந்துவிடும் !

இதுவே  ‘புற்குக் கோடு’ , ‘குருத்துக் கோடு’ என்றெல்லாம் வராததன் இரகசியம் !

இளம்பூரணர் குறித்த குருந்த  மரத்தைப் பார்க்க ஆசையா ?

[You must be registered and logged in to see this link.]
  Courtesy - [You must be registered and logged in to see this link.]
இதுதான் குருந்தமரம் ! கண்ணன் சிறுவயதில் விளையாடிய மரம் இதுதான் !
இதன் தாவரவியல் பெயர்- Atalantia monophylla ; பொதுப்பெயர் -: Wild Lime;தமிழில் ‘காட்டு எலுமிச்சை’ , ‘காட்டு நாரங்கம்’ என்றெல்லாம் அறியப்படுவது;நாள்பட்ட மூட்டு வலிகளுக்கு இதன் எண்ணெய் மருந்தாகிறது; பழங்கள் ஊறுகாய்க்கும் பயன்படுகிறது.

கீழே குருந்தங்காய்கள் ! :-
[You must be registered and logged in to see this link.]
 Courtesy - opendata.keystone-foundation.org

கீழே குருந்தம் பூக்கள் !:-
[You must be registered and logged in to see this link.]

Courtesy - pitchandikulamforest.org -

இளம்பூரணர் குறித்த புன்க மரத்தைப் பார்க்க ஆசையா ?
[You must be registered and logged in to see this link.]
 
Courtesy-bioweb. uvlax.edu
இதுதான் புன்க மரம் ! புங்க மரம் என்பதும் இதுவே ! ‘தேவடியாள் வீடும் புங்க மரத்து நிழலும் ஒன்று’ என்று ஒரு பழமொழியே உண்டு ! குழந்தை இடுப்பில் கட்டிவிவார்களே ஒரு காய் அது புன்கங் காய்தான் !இதன் தாவரவியல் பெயர் - Pongamia glabra ; நெல் மூட்டைகளை அடுக்கிப் பூச்சி வராமல் இருக்கப் புன்கம் இலைகளைப் போட்டுவைப்பார்கள் !புன்கம் எண்ணைதான் Karanja oil !  இது சிறந்த கிருமிக்கொல்லி !  ‘Leucoderma’ எனப்படும் தோல் நிற மாறுபாட்டிற்கு இது மருந்தாகிறது.
கீழே உள்ளது புன்கம் பூ ! :-
[You must be registered and logged in to see this link.]

Courtesy -hcms.org.in
      ***


Last edited by Dr.S.Soundarapandian on Sun Sep 08, 2013 5:43 pm; edited 1 time in total (Reason for editing : Title no. not given)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by ராஜு சரவணன் on Mon Sep 09, 2013 7:32 am

நன்றி அய்யா புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (127)

Post by Dr.S.Soundarapandian on Fri Sep 13, 2013 10:09 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (127)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

“மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை” (குற்றியலு.10)
என்ற தொல்காப்பியர் ஆணையை முன்பே கேட்டோம் !

ஒரு மாணவன் அப்போது தொல்காப்பியரைக் கேட்டான் – “மரப்பெயருக்கு மட்டும்தான் அம் சாரியை வருமா?”.

அப்போது சொன்னார் தொல்காப்பியர் ! :-

“ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும்
அம்மிடை வரற்கு முரியவை யுளவே
அம்மர பொழுகு மொழிவயி னான”       (குற்றியலு . 12)

அஃதாவது , ஈறெழுத்து ஒரு மொழியான ‘ஏறு’ போன்ற நெடில்தொடர்க் குற்றியலுகரச் சொற்களும், ‘வட்டு’ போன்ற வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்களும்கூட ‘அம்’ சாரியை பெறலாம் !

ஏறு + கோள் = ஏறங்கோள் (அம் - சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏறு – உகரம் , நெடில்தொடர்க் குற்றியலுகரம்)
ஏறு – காளை ; ஏறு கோள் – சல்லிக்கட்டு .
வட்டு + போர் = வட்டம் போர் (அம் - சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)
(வட்டு – ஈற்று உகரம் ,வன்றொடர்க் குற்றியலுகரம்)

வட்டு – சூதாடு கருவி ; வட்டம் போர் – சூதாட்டத்தால் வரும் போர் ; மகாபாரதம் காண்க.

பின்னாளில் ,இவற்றை ஓலைச் சுவடியில் படித்த மாணவன் ஒருவன் இளம்பூரணரைக் கேட்டான் – “அப்படியானால் , நெடில்தொடர்,வன்றொடர் அல்லாத வேறு குற்றியலுகரச் சொற்களுக்கு ‘அம்’ வரவே வராதா ?”

“அப்படியில்லை ! மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்கும் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்கும்கூட  அம் சாரியை வரலாம் !” என்றார் இளம்பூரணர் ! :-

தெங்கு + காய்  =  தெங்கங் காய்  (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தெங்கு – ஈற்று உகரம் , மென்றொடர்க்  குற்றியலுகரம் )

தெங்கங் காய் – தேங்காய்.


பயறு + காய்  =  பயற்றங் காய்  (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பயறு – ஈற்று உகரம் , உயிர்த்தொடர்க்  குற்றியலுகரம் )

“இன்னும் கேளப்பா , ‘அத்து’ச் சாரியை வரும் குற்றியலுகரப் புணர்ச்சிகளும் உள” – தொடர்ந்தார் இளம்பூரணர் ! :-

இருட்டு + கொண்டான் = இருட்டத்துக் கொண்டான் (அத்து - சாரியை) (வேற்றுமைப்
புணர்ச்சி)
(இருட்டு – ஈற்று உகரம் , வன்றொடர்க்  குற்றியலுகரம் )

“ அன் சாரியை பெறும் குற்றியலுகரச் சொல்லைக் காட்டவா ?” – அடுக்கினார் இளம்பூரணர் ! :-

கரியது + அன்  + கோடு = கரியதன் கோடு(அன் - சாரியை) (வேற்றுமைப்
புணர்ச்சி)
(கரியது – ஈற்று உகரம் , உயிர்த்தொடர்க்  குற்றியலுகரம் )

மேல் நூற்பாவில் (குற்றியலு . 12) , கடைசியாக வன்றொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சி பற்றிக் கூறி , அது ‘அம்’சாரியை பெறும் என்றும் தெரிவித்தாரல்லவா தொல்காப்பியர்?

இப்போது ,  “வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள் மட்டுமல்ல  மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்களும்கூட ஏற்ற சாரியைகளைப் பெறும்! ” என்று நுவல்கிறார் ! :-

“ஒற்றுநிலை திரியா தக்கொடு வரூஉம்
அக்கிளை மொழியும் உளவென மொழிப”  (குற்றியலு. 13)

‘ஒற்றுநிலை திரியா’ – ‘வேம்பு’ என்பது ‘வேப்பு’ ஆனதில் ஒற்றுநிலை ( ‘ம்’) , திரிந்தது (’ப்’ஆனது) ; அப்படித் திரியாது,

‘அக்கொடு வரும் ’ – ‘அக்கு’ எனும் சாரியை பெறும்;

‘அக்கிளை மொழியும்’ – வன்றொடருக்குக் கிளை மென்றொடர் ; எனவே , மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள்,

‘உளவென மொழிப ’ – உள்ளன என்று கூறுவர் !

இதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் ! :-

குன்று + கூகை = குன்றுக் கூகை ×
= குற்றக் கூகை ×
= குன்றக் கூகை √ (அக்கு - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(குன்று – ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம் ; இதன் நடுவிலுள்ள ‘ன்’ , ‘ற்’ஆகத் திரியவில்லை )


கூகை – கோட்டான் ; ஆந்தை . குன்றக் கூகை – மலையிலே இருக்கும் ஆந்தை .

மன்று + பெண்ணை = மன்றப் பெண்ணை (அக்கு - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

பெண்ணை – பனை மரம் ; மன்றப் பெண்ணை – ஊர்ப் பொது மன்றத்தில் இருக்கும் பனை மரம்.

நூற்பாவின் (குற்றியலு . 13) நேர் பொருள் முடிந்தது !

ஆனால் இளம்பூரணர் , மேலும் சில புணர்ச்சி நுட்பங்களைக் காட்டுகிறார் ! :-

(1) கொங்கு + அத்து + உழவு = கொங்கத் துழவு (அத்து - சாரியை) (வேற்றுமைப்
                                                                                                                                புணர்ச்சி)
(கொங்கு- ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம்)

கொங்கத்து உழவு  – கொங்கு நாட்டு உழவாக இருக்கலாம்.

வங்கு + அத்து + வாணிகம் = வங்கத்து வாணிகம் (அத்து - சாரியை) (வேற்றுமைப்
                                                                                                                                புணர்ச்சி)
(வங்கு- ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம்)

வங்கம் – கப்பல் ; வங்கத்து வாணிகம் – கப்பல் வாணிகம் ;தமிழ் நாட்டு வாணிகம்தான் ; வங்காள தேசத்து வாணிகம் அல்ல !

(2) இளம்பூரணர் , “நிலை என்றதனான் , ஒற்றுநிலை திரியா அதிகாரத்துக்கண் இயைபு வல்லெழுத்து வீழ்க்க” என்கிறார் !  ஆனால் எடுத்துக்காட்டுகள் தரவில்லை !

இதன் பொருளை உணரச் சரசுவதிமகால் நூலகப் பதிப்பு உதவியது!

‘ஒற்றுநிலை திரியா’ என்பதற்குக் குற்றியலுகரப்புணரியல் நூற்பா 11ஐப் புரட்டவேண்டும் ! அங்கு ‘அன்’ சேர்ந்தது போல இங்கு ‘இன்’ சேர்க்கவேண்டும் !

அஃதாவது ,

புன்கு + இன் + கோடு = புன்கின் கோடு
( ‘புன்கு’ ஆனது, ‘புற்கு’ என  ஒற்றுநிலை  திரியவில்லை; ‘புன்கிற் கோடு’என அமைக்காமல், இயைபு வல்லெழுத்தை வீழ்த்தியுள்ளது !)

இயைபு வல்லெழுத்து – சந்தியாக வரும் வல்லெழுத்து.

(3) பார்ப்பு + அன் + அக்கு + கன்னி = பார்ப்பனக் கன்னி (அன் , அக்கு - சாரியைகள்)
                                                                                       (வேற்றுமைப் புணர்ச்சி)


சாரியைகளை மொழியியலார் , பொதுவாகப்  ‘ Particles ’ என்ற பிரிவில்  குறிப்பர்.

மேலே ‘அக்கு’ச் சாரியை பார்த்தோமல்லவா?

இது தொல்காப்பியர் நாளைய சாரியை !

 ‘மன்று + அக்கு + பெண்ணை = மன்றப் பெண்ணை ’ ஆனதல்லவா ? இதிலே , ‘க்கு’ எங்கே போயின ?

மண்டை காய்ந்தது பலருக்கு !

அதனால் என்ன செய்தார்கள்?

‘அக்கு’ச் சாரியை எனக் கொள்ளவேண்டாம் ; ‘அ’வை மட்டும் சாரியையாகக் கொள்ளலாமே என்று முடிவெடுத்தனர் !

அதனால்தான் , நன்னூலில் , ‘அக்கு’ இடம்பெறாமல் , அகரச் சாரியை மட்டும் (உருபுப் புணரியல் 5) இடம் பிடித்தது!

தமிழ்ப் புணர்ச்சி வரலாற்றில் (History of Tamil Morphophonemic rules) இது குறிப்பிடத் தக்கது !

தொல்காப்பியர் நாளையில் ‘அக்கு’ போட்டுத்தான் சில சொற்களை மாணவர்களுக்கு விளக்க வேண்டியிருந்தது ! தமிழ்ச் சொற்களஞ்சியம் பெருகப் பெருக அதற்குத் தேவை இல்லாது, ‘அ’வே போதும் என்ற நிலை ஏற்பட்டது !

இலக்கணத்திற்கு ஒரு பரிணாம வளர்ச்சி உண்டு என்ற மெய்ம்மை இங்கு திரளுதல் காணலாம் !

இளம்பூரணர் குறித்த வட்டைப் பார்க்க ஆசையா?
[You must be registered and logged in to see this link.]
Courtesy – history.chess.free.fr

இவைதாம்  வட்டுகள் !  ‘வட்டு’ என்பதும் , ‘வல்’ என்பதும் ஒன்றுதான் ! படத்தில் உள்ளவை தாயக்கட்டத்துக் காய்கள்தாம் ! வேறு ஒன்றுமில்லை ! கருப்பட்டி வட்டைப் படத்தில் உள்ள ஒரு வடிவில் ஒப்பிடுங்கள்!  ‘வட்டு’ விளங்கும் ! படத்தில் காணும் வடிவங்களை ஒத்த வேறு வடிவங்களிலும் ‘வல்’ அல்லது ‘வட்டு’ இருந்துளது ! படத்தில் உள்ளவை கி.பி.14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ! மண்ணால் ஆனவை !பர்மாவில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளவை; ஆர்.பொஸ்ஸி (R.Pozzi) என்பாரது சேகரிப்பு !

இளம்பூரணர் பேசிய கூகையைக் காண ஆசையா?
[You must be registered and logged in to see this link.]
Courtesy -  tolweb . org
இதுதான் கூகை ! ‘ஆக்கங் கெட்ட கூகை’ என்பார்களே, அந்தக் கூகைதான் ! கோட்டான் என்பதும் கூகை என்பதும் ஒன்றுதான் ! கோடு – கிளை ;கோட்டில் வசிப்பதால்,  ‘கோட்டான்’ ! மரக் கிளையில்தான் இது எப்போதும் வசிக்கும் !ஏனென்றால் இதற்குக் கூடு கட்டத் தெரியாது ! முட்டையைக் கூடத் தரையில்தான் இடும் ! ‘ஆந்தை’ என்பதும் இதுதான் ! இதன் விலங்கியல் பெயர் – Bubo  bengalensis ; ஆங்கிலப் பொதுப்பெயர் – Rock horned owl .பல மூடக் கதைகள் கூகையைச் சுற்றி உள்ளன! ஒரு மாநிலத்து மூடக் கதை – “ஆந்தையைச் சில நாட்கள் பட்டினி போட்டு அடித்தால் , அது மனிதன் குரலில் பேச ஆரம்பிக்கும் ! அப்போது அடித்தவனின் எதிர்காலத்தைப் புட்டு புட்டு வைக்கும் !” மூடக் கதைகளுக்கு நம் நாட்டில் பஞ்சமே இல்லையப்பா!
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by பாலாஜி on Sat Sep 14, 2013 1:55 pm

நல்ல தொடர் பதிவு ...

தொல்காப்பியம் பற்றி தெரிந்து கொள்ள சிறப்பான வழிகாட்டல் பதிவு .

பகிர்வுக்கு நன்றி   


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (128)

Post by Dr.S.Soundarapandian on Sat Sep 14, 2013 6:17 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (128)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘ஒன்று’ , ‘இரண்டு’ என்பன எண்ணுப் பெயர்கள் (Count nouns) !

இவற்றின் ஈற்றிலே நிற்கும் உகரம் – குற்றியலுகரம் !

ஒன்று – ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம் !

இரண்டு – ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம் !

இவை எப்படிப் பிற சொற்களுடன் புணரும் ?

இதற்கு ஒரு சூத்திரம் ! :-

“எண்ணுப்பெயர்க் கிளவி  உருபியல் நிலையும் !” (குற்றியலு. 14)

அஃதாவது , உருபியலில் எண்ணுப் பெயர்ச் சொற்களுக்கு என்ன புணர்ச்சி முறை கூறப்பட்டதோ அதே முறைதான் இங்கும் என்கிறார் தொல்காப்பியர் !

உருபியலில் எங்கே என்ன கூறினார் ?

உருபியல் நூற்பா 26இல்  ( “எண்ணின் இறுதி அன்னொடு சிவணும் ”) , ஒன்றுமுதல் உள்ள எண்ணுப் பெயர்கள் வேற்றுமை உருபுகளுடன் புணரும்போது ,  ‘அன்’ சாரியை பெறும் என்றார் !

அங்கு வேற்றுமை உருபுகள் புணர்ந்ததைக் கூறினார் ! இங்கு அதே ‘அன்’னுடன்
பொருட் பெயர்கள் புணர்வதைக் கூறுகிறார் !

‘அன்’ கொடுத்து இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு காட்டலாம் ! :-

ஒன்று + காயம் = ஒன்றன் காயம் (அன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒன்று + சுக்கு = ஒன்றன் சுக்கு (அன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒன்று + தோரை = ஒன்றன் தோரை (அன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒன்று + பயறு = ஒன்றன் பயறு (அன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)


இரண்டு + காயம் = இரண்டன் காயம் (அன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)

இரண்டு + சுக்கு = இரண்டன் சுக்கு (அன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)
இரண்டு + தோரை = இரண்டன் தோரை (அன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)

‘காயம்’ முதலான சொற்கள்  பொருள்களைத்தானே குறிக்கின்றன ? எனவேதான் இவை பெறும் புணர்ச்சிகள் , பொருட்புணர்ச்சிகள் !

இளம்பூரணர் காட்டிய ‘காயம்’ முதலான சொற்கள் யாவும் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் !  

“அப்படியானால் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்தால்தான் , ‘ஒன்று’ முதலிய குற்றியலுகர எண்ணுப் பெயர்கள் ‘அன்’ பெறுமா? – ஒரு மாணவன் நச்சினார்க்கினியரைக் கேட்டான் ! ”

அதற்கு நச்சினார்க்கினியர் , “அப்படியில்லை ! தொல்காப்பியர் வருமொழி முதல் எழுத்து பற்றிக் கூறினாரா? இல்லையல்லவா? எனவே , மெல்லின , இடையின எழுத்துகளைக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தாலும் , ‘அன்’ சாரியை வருவது உண்டு !” என விளக்கம் தந்தார் !
நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டுகள் !:-

ஒன்று + ஞாண் = ஒன்றன் ஞாண் (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒன்று + நூல் = ஒன்றன் நூல் (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒன்று + மணி = ஒன்றன் மணி (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒன்று + யாழ் = ஒன்றன் யாழ் (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒன்று + வட்டு = ஒன்றன் வட்டு (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

‘ஒன்றன் காயம்’ , ‘ஒன்றன் மணி’ என்றால் என்ன பொருள் ?

‘ஒன்றனால் கொண்ட பொருள்’ என்று நச்சினார்க்கினியர் பொருள் எழுதுகிறார் !

அஃதாவது, ஒரு குறிப்பிட்ட நாணயம் அல்லது பண்டத்தைக் கொடுத்துப் பெறும் காயம் ‘ஒன்றன் காயம்’.
காயம் – மிளகு.
நூற்பாவில் ‘நிலையும்’ என்று வந்ததல்லவா ? வினை முற்றான இது , பயனிலையாகத் தொடரில் வந்துள்ளது ! இதனால் , இம்மாதிரியான சொற்களை மொழியியலார் Predicatives
என்று குறிக்கலாயினர் (Predicate – பயனிலை) !

தொல்காப்பியர் தன் நூற்பாவில் (குற்றியலு. 14) , ‘உருபியல்’ என அவர் வகுத்த இயலின் பெயரையே குறிப்பிட்டார் பாருங்கள் !

இதிலிருந்து ?

இதிலிருந்து , அவர் ஒரு வரிசைப்படிதான் இலக்கணம் எழுதிவருகிறார் ; தான் எழுதியது என்ன , பின் எழுதுவது என்ன என்ற திட்டத்தோடுதான் செல்கிறார் என்பது புலனாகிறது அல்லவா ?

தொல்காப்பிய அமைப்புமுறை (Structure of Tholkappiyam) ஆய்வில் இது குறிப்பிடத் தக்கது !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by yarlpavanan on Sat Sep 14, 2013 9:25 pm

தெளிவான தொல்காப்பிய விளக்கம்...
தொடருங்கள் ஐயா!
avatar
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 746
மதிப்பீடுகள் : 238

View user profile http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (129)

Post by Dr.S.Soundarapandian on Tue Sep 17, 2013 8:59 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (129)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள் சில ‘அக்கு’ச் சாரியை பெறுவதையும் (‘குன்றக் கூகை’ , குற்றியலு. 13) , சில ‘அன்’ சாரியை பெறுவதையும் ( ‘ஒன்றன் காலம்’ , குற்றியலு. 14) முன் கட்டுரைகளில்  ஆய்ந்தோம் !

சில மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள் , ‘இன்’ சாரியை பெறுதலை அடுத்துக் கூறுகிறார் தொல்காப்பியர் ! :-

“வண்டு பெண்டு மின்னொடு சிவணும்” (குற்றியலு. 15)

இதற்கு இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகள் !:-

வண்டு + கால் = வண்டின் சாரியை (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(வண்டு – ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம்)
பெண்டு + கால் = பெண்டின் கால் (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பெண்டு – ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம்)
‘வண்டின் கால்’ என்றால் வண்டது கால்தானே ? அப்போது ‘இன்’ என்பது வேற்றுமை உருபு ஆகாதா ?
நல்ல கேள்வி !
இங்கு ‘இன்’ வேற்றுமை உருபா சாரியையா என்பதை அறிய ஒரு சூட்சுமம் உள்ளது !
அஃதாவது , ‘அது’ எனும் ஒரு வேற்றுமை உருபை எடுத்துக்கொள்ளுங்கள் ! ‘வண்டினது கால்’ ஆகும் ; பொருளிலும் குழப்பமில்லை ! ‘அது’ எனும் வேற்றுமை உருபை ‘இன்’ ஏற்றுள்ளதால் , அந்த ‘இன்’னானது சாரியைதான் என முடிவுகட்டுங்கள் ! அந்த ‘இன்’ உருபாக இருந்தால் , இன்னொரு வேற்றுமை உருபை ( ‘அது’வை)  ஏற்காதல்லவா?

‘அவரின் பண்புகள்’ – இங்கே ‘இன்’ வேற்றுமை உருபு ! சாரியை அல்ல ! ஏனெனில் , ‘அவரினது பண்புகள்’ என வராது !

‘பெண்டு’ என்பது ‘இன்’ சாரியை பெறும் ; ஆனால் , இது ‘அன்’ சாரியையும் பெறும்  என அடுத்துக் கூறவருகிறார் தொல்காப்பியர் ! :-

“பெண்டென் கிளவிக் கன்னும் வரையார்”  (குற்றியலு. 16)

அஃதாவது ,  பெண்டு + கை = பெண்டன் கை (அன் - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
மேல் நூற்பாவில் ‘அன்’னும் என்பதிலுள்ள உம்மை எச்ச உம்மை !
‘உம்’மையை , மொழியியலில் ‘Particles’ என்ற பிரிவில் பேசுவர் !
‘பெண்டென் கிளவி’ – என நூற்பாவில் வந்ததல்லவா ?
இதிலுள்ள  ‘என்’னை ‘Referential Particle’ என்று மொழியியலில் குறிப்பர் ! தமிழ் மரபிலக்கணத்தில் ‘என்ற எனும் பொருளில் வரும் ஓர் இடைச் சொல்’ !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (130)

Post by Dr.S.Soundarapandian on Fri Sep 20, 2013 10:27 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (130)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

யாது – நெடில்தொடர்க் குற்றியலுகரம் !
அஃது – ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் !
- இரண்டும் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களுடன் எப்படிப் புணருமாம் ?

தொல்காப்பியம் கூறுகிறது !:-

“யாதெ னிறுதியுஞ் சுட்டு முதலாகிய
ஆய்த விறுதியு முருபிய  னிலையும்”  (குற்றியலு. 17)

‘யாதென் இறுதியும்’ – ‘யாது’ எனும் குற்றியலுகர ஈற்றுச் சொல்லும் ,

‘சுட்டு முதலாகிய ஆய்த இறுதியும்’ – ‘அஃது’ என்ற ஆய்தத் தொடர்க் குற்றியலுகரச் சொல்லும் ,

‘உருபியல் நிலையும்’ – உருபியலில் (குற்றியலு. 26) கூறியபடி , ‘அன்’ சாரியை பெறும் !

இந் நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டுகள் ! :-

யாது + கோடு = யாதன் கோடு (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

யாது + செவி = யாதன் செவி  (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

யாது + தலை = யாதன் தலை  (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

யாது + புறம் = யாதன் புறம்  (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

அஃது + கோடு = அஃதன் கோடு ×
    = அஃது கோடு ×
   = அதன் கோடு √ (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
அஃது + செவி = அதன் செவி √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
அஃது + தலை  = அதன் தலை √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
அஃது + புறம் = அதன் புறம் √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

இஃது + கோடு = இதன் கோடு √ (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
இஃது + செவி = இதன் செவி √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
இஃது + தலை  = இதன் தலை √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
இஃது + புறம் = இதன் புறம் √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

உஃது + கோடு = உதன் கோடு √ (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
உஃது + செவி = உதன் செவி √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
உஃது + தலை  = உதன் தலை √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
உஃது + புறம் = உதன் புறம் √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

இத் தொல்காப்பிய நூற்பா (குற்றியலு. 17) ஆழ்ந்து எண்ணற் குரியது !

‘அதன்’ என்ற சொல்லைப் பார்த்த மாத்திரத்தில் அதற்குள் ‘அஃது’ இருப்பதை ஊகிக்க முடியாது ! தொல்காப்பியர் காலத்திற்குப் போனால்தான் உண்மை தெரிய வருகிறது !

‘அது’ என்ற சொல் இருக்கும்போது ‘அஃது’ ஏன் வருகிறது ?

புணர்ச்சிதான் காரணம் !
  ‘அது + ஆவது = அதுவாவது ’ என வந்தால் ஒரு உடம்படு மெய் வருகிறது ! உடம்படுமெய்யைத் தவிர்க்க ,  ஆய்தத்தைப் போட்டு ‘அஃதாவது’ ஆகிக்கொள்கிறது ! ‘அது’ எனும் முற்றியலுகரச் சொல் தன்னைக் குற்றியலுகரச் சொல்லாக –  ‘அஃது’வாக – ஆக்கிக் கொண்டால்தான்  இப் புணர்ச்சி சாத்தியமாகும் ! திருக்குறளில் ‘அஃதொருவன்’ என்று வருகிறதல்லவா? இதை ‘அதுவொருவன்’ என மாற்றிப் பாருங்கள் ! வெண்பாவிற்குரிய ஓசையே கவிழ்ந்துவிடும் ! எனவே புணர்ச்சி நோக்கில்தான் ‘அது’ , ‘அஃது’வாக மாறுகிறது என்பது புலனாகிறது !
‘அதன்’ என்ற சொல்லில்  , ‘அன்’ என்பது வேற்றுமை உருபு போலத் தோன்றலாம் ! ஆனால் தொல்காப்பியர்  அந்த ‘அன்’ என்பது , சாரியைதான் என்று தெளிவாக்கியுள்ளார் !

சாரியையை மொழியியலில்  ‘Augment ’என்றும் எழுதுவர் .
யாது – Interrogative pronoun .
‘யாது’ என்பதில் , யா – Proclitic எனப்படும்.
Clitic என்பதைப்  ‘பிந்து ஒட்டு ’ என்பர் !
 ‘வந்ததுவோ’ – என்பதில் ‘அது’ , விகுதி ; ஓ , ‘பிந்து ஒட்டு’ ; சொல்லின் ஈற்றில் வந்துள்ளதால் , இது Enclitic எனப்படும்!

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (131)

Post by Dr.S.Soundarapandian on Sat Sep 21, 2013 4:43 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (131)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

அஃது , இஃது, உஃது – சுட்டுப் பெயர்கள் ! ஆய்தத் தொடர்க் குற்றியலுகரத்தை ஈற்றிலே கொண்ட  சொற்கள் !

இவற்றின்  வேற்றுமைப் புணர்சிகளை முன் கட்டுரையில் பார்த்தோம் !

அல்வழிப் புணர்ச்சியில் இவை எப்படிப் புணரும் ?

தொல்காப்பியர் விடை கூறுகிறார் ! :-

“முன்னுயிர் வருமிடத்  தாய்தப்  புள்ளி
மன்னல் வேண்டு மல்வழி யான”      (குற்றியலு .18)

‘முன்னுயிர் வருமிடத்து’  - புணர்வதற்கு வரும் சொல்லின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் ,

‘ஆய்தப் புள்ளி மன்னல் வேண்டும்’  - அஃது, இஃது, உஃது ஆகிய சொற்களின் இடையே உள்ள ஆஃத எழுத்து கெடாது நிற்க வேண்டும் ;
‘அல்வழி யான’ – அல்வழிப் புணர்ச்சியில் !
ஆய்த எழுத்தை , ‘ஆய்தப் புள்ளி’ என்று தொல்காப்பியர் எழுதினார் பாருங்கள் ! ‘புள்ளி’ என்ற சொல் தொல்காப்பியர் நாளையில் எழுத்தையும் குறித்திருக்கிறது !
ஆய்தப் புள்ளி – இருபெயரொட்டுப் பண்புத் தொகை  ;  ஆய்தமாகிய புள்ளி என விரியுங்கள் , உங்களுக்கு விளங்கும் !

நச்சினார்க்கினியர் இதற்குத் தரும் எடுத்துக்காட்டுகளை வருமாறு விரித்தெழுதலாம் ! :-

அஃது + அடை = அதனடை ×
  = அஃதடை √ (அல்வழிப் புணர்ச்சி)

அஃது + ஆடை = அஃதாடை √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + இலை = அஃதிலை √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + ஈயம் = அஃதீயம் √         (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + உரம் = அஃதுரம் √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + ஊர்தி = அஃதூர்தி √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + எழு = அஃதெழு √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + ஏணி = அஃதேணி √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + ஐயம் = அஃதையம் √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + ஒடுக்கம் = அஃதொடுக்கம் √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + ஓக்கம் = அஃதோக்கம் √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + ஔவியம் = அஃதௌவியம் √ (அல்வழிப் புணர்ச்சி)

எழு – தூண் ; ஓக்கம் – உயரம் ; ஔவியம் – வஞ்சகம் (fraud) .

‘அஃது’ என்ற ஆய்தத் தொடர்க் குற்றியலுகரச் சொல், அ முதல் ஔ வரையான 12 உயிர் எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களுடன் வந்து புணர்ந்த முறையை மேலே பார்த்தோம் !

     சிறு வயதில் நாம் படித்த ‘அணில் , ஆமை’ப் பாடம் நமக்கு நினைவுக்கு வரவேண்டும் !

     ‘ஔ’வை முதலாகக் கொண்ட சொல்லுக்கு நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டைப் பார்த்தீர்களா? – ஔவியம் !

       ‘அவ்வியம்’ என  இதனை எழுதக் கூடாது என்பது நச்சினார்க்கினியரின் ஆணை !

    ‘ஔ’வும் ‘அவ்’வும் ஒன்றல்ல !

      ‘ஔ’வை உச்சரித்துப் பாருங்கள் ; உங்கள் அழகிய இதழ்கள் எப்படி அமைகின்றன? பிறகு ‘அவ்’ என்று சொல்லிப்பாருங்கள் ; இதழ் அமைவது வேறுமாதிரியாக இருக்கும் ! ஒலிப்பு முறையிலேயே வேறுபாடு இருக்கும்போது ‘ஔ’வை ‘அவ்’வென்று எழுதலாமா? நுண்ணிய ஒலி நுட்பத்தைத்  தமிழ் உலகுக்கு அறிவித்திருக்கும்போது , ‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது’ என்று சொல்லப் போகிறீர்களா?

‘அஃது’ புணர்ந்ததை மேலே பார்த்தோம் ! அதே முறையில் ‘இஃது’ ,‘ உஃது’ புணர்வதைக் கீழே கண்போம் ! : -

    இஃது + அடை = இதனடை ×
  = இஃதடை √ (அல்வழிப் புணர்ச்சி)

இஃது + ஆடை = இஃதாடை √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + இலை = இஃதிலை √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + ஈயம் = இஃதீயம் √         (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + உரம் = இஃதுரம் √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + ஊர்தி = இஃதூர்தி √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + எழு = இஃதெழு √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + ஏணி = இஃதேணி √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + ஐயம் = இஃதையம் √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + ஒடுக்கம் = இஃதொடுக்கம் √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + ஓக்கம் = இஃதோக்கம் √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + ஔவியம் = இஃதௌவியம் √ (அல்வழிப் புணர்ச்சி)

உஃது + அடை = உதனடை ×
  = உஃதடை √ (அல்வழிப் புணர்ச்சி)

உஃது + ஆடை = உஃதாடை √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + இலை = உஃதிலை √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + ஈயம் = உஃதீயம் √         (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + உரம் = உஃதுரம் √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + ஊர்தி = உஃதூர்தி √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + எழு = உஃதெழு √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + ஏணி = உஃதேணி √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + ஐயம் = உஃதையம் √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + ஒடுக்கம் = உஃதொடுக்கம் √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + ஓக்கம் = உஃதோக்கம் √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + ஔவியம் = உஃதௌவியம் √ (அல்வழிப் புணர்ச்சி)

மேல் நூற்பாவுக்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ஒரு விதி விலக்கைத் தருகிறார்கள் !

  உயிர் எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போது , அல்வழிப் புணர்ச்சியில் மட்டுமல்லாது , வேற்றுமைப் புணர்ச்சியிலும், சிலபோது ,அஃது , இஃது , உஃது ஆகியவற்றின் நடுவே உள்ள ஆய்தம் கெடாது நிற்கும் ! – இதுதான் அந்த உரையாசிரியர்கள் தரும் விதிவிலக்கு !
இதற்கு நச்சினார்க்கினியர் தரும் சான்றுகளை வருமாறு தரலாம் ! :-

அஃது + அடைவு = அதனடைவு ×
= அஃதடைவு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
அஃது + ஒட்டம் = அஃதொட்டம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

இஃது + அடைவு = இஃதடைவு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
இஃது + ஒட்டம் = இஃதொட்டம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

உஃது + அடைவு = உஃதடைவு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
உஃது + ஒட்டம் = உஃதொட்டம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

அஃதடைவு(இரண்டாம் வேற்றுமைத் தொகை) – அதனை அடைதல் .
அஃதொட்டம் (இரண்டாம் வேற்றுமைத் தொகை) – அதனை ஒட்டுதல் .

    ஒட்டுதல் - பந்தையப் பொருளாக வைத்தல் . 1950 களில் இச்சொல் வழக்கில் இருந்தது ! இன்று அருஞ்சொல்லாகிவிட்டது !நாங்கள் விளையாடியபோது ‘நான் பத்துத் தீப்பெட்டிப் படம் ஒட்டியுள்ளேன்; நீ எவ்வளவு ஒட்டுகிறாய் ?’ என்று கேட்டது என் நினைவுக்கு வருகிறது ! தீப்பெட்டிப் படம்தான் பந்தயப் பொருள் !

நூற்பா இறுதியில் ,  ‘அல்வழி யான’ என்று இரு சீர்கள் வந்ததைப் பாருங்கள் !  

‘அல்வழிக்கு’ என வரவேண்டியதுதான் ‘அல்வழியான’ என்று வந்துள்ளது !

அஃதவது , ‘கு’ என்ற நான்காம் வேற்றுமை உருபு வரவேண்டிய இடத்தில் , ‘ஆன்’ எனும் மூன்றாம் வேற்றுமை உருபு வந்துள்ளது ! இதுதான் ‘வேற்றுமை மயக்கம்’ (Antiptosis)!

‘ஆன’ என்ற சீரை , ‘ஆன் + அ’ எனப் பிரிக்க வேண்டும் !
‘ஆன்’ என்பதற்கு விளக்கம் மேலே பார்த்துவிட்டோம் !
ஈற்று  ‘அ’ ?

ஈற்று ‘அ’வைச் சாரியை எனல் வேண்டும் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by ராஜு சரவணன் on Sat Sep 21, 2013 9:23 pm

விளக்கங்கள் அருமை ஐயா புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (132)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 22, 2013 10:00 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (132)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

அஃது , இஃது , உஃது – ஆகிய சொற்கள் , அல்வழிப் புணர்ச்சியில் , ஆய்தத்தை இழக்காமல் புணரும் என்பதை முன் கட்டுரையில் பார்த்தோம் !

நாம் பார்த்த எடுத்துக்காட்டுகள் , உயிரெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் ( ‘அடை’முதலானவை) வந்து புணர்ந்ததற்கே !

அப்படியனால் , மெல்லின , இடையின , வல்லின எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தால் ?

தொல்காப்பியரின் விடை ! :-

“ஏனைமுன்  வரினே  தானிலை  யின்றே” (குற்றியலு.19)

‘ஏனைமுன் வரினே’ – உயிர் எழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் தவிர , ஏனைய , மெல்லின , இடையின , வல்லின எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தால் ?

‘தான் நிலையின்றே’ – அஃது ,இஃது , உஃது ஆகியவற்றின் இடையிலே உள்ள ஆய்தம் நிலைக்காது !

இதற்கு இளம்பூரணர் காட்டிய எடுத்துக்காட்டுகளை வருமாறு பட்டியலிடலாம் ! :-

அஃது + கடிது = அது கடிது (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + சிறிது = அது சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + தீது = அது தீது (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + பெரிது = அது பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

மேல் நான்கும் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததற்குச் சான்றுகள் ! கீழே , மெல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்வதற்குச் சான்றுகள் !:-
அஃது + ஞான்றது = அது ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + நீண்டது = அது நீண்டது (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + மாண்டது = அது மாண்டது (அல்வழிப் புணர்ச்சி)

இனி , இடையெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்வதற்குச் சான்றுகள் !:-

அஃது + யாது = அது யாது (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + வலிது = அது வலிது (அல்வழிப் புணர்ச்சி)

மேல் ஒன்பது சான்றுகள் ‘அஃது’க்கு வந்தது போல ‘இஃது’க்கும் , ‘உஃது’க்கும் வருமாறு முறையே காட்டியுள்ளார் இளம்பூரணர் ! : -

இஃது + கடிது = இது கடிது (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + சிறிது = இது சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + தீது = இது தீது (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + பெரிது = இது பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

இஃது + ஞான்றது = இது ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + நீண்டது = இது நீண்டது (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + மாண்டது = இது மாண்டது (அல்வழிப் புணர்ச்சி)

இஃது + யாது = இது யாது (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + வலிது = இது வலிது (அல்வழிப் புணர்ச்சி)

உஃது + கடிது = உது கடிது (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + சிறிது = உது சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + தீது = உது தீது (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + பெரிது = உது பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

உஃது + ஞான்றது = உது ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + நீண்டது = உது நீண்டது (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + மாண்டது = உது மாண்டது (அல்வழிப் புணர்ச்சி)

உஃது + யாது = உது யாது (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + வலிது = உது வலிது (அல்வழிப் புணர்ச்சி)

உஃது – இந்த வடிவம் இப்போது இல்லை !
தொல்காப்பியம் மிகப் பழமையான நூல் என்பதற்கு இதுவே சான்று ! ‘அஃது’ம் ‘இஃது’ம் இறக்கும் தருவாயில் மருத்துவ மனையில் உள்ளன ! நம் கண் முன்னே பழஞ் சொற்கள் மறைவதைப் பார்த்தீர்களா ?

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by சதாசிவம் on Sun Sep 22, 2013 1:23 pm

பயனுள்ள பதிவு,,,, அருமையான விளக்கங்கள்...... தொடருங்கள் அய்யா
வி.பொ.பா ..
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (133)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 22, 2013 4:11 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (133)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

குற்றியலுகரப் புணரியலில் நங்கூரம் பாய்ச்சியுள்ளோம் !

இப்போது நாம் காணப்போகும் நூற்பா ! :-

“அல்லது கிளப்பி னெல்லா மொழியும்
சொல்லிய பண்பி னியற்கை யாகும்”!    (குற்றியலு. 20)  

‘அல்லது கிளப்பின்’ – அல்வழிப் புணர்ச்சியில்,

‘எல்லா மொழியும்’ – வன்றொடர்க் குற்றியலுகரம் நீங்கலாகப் பிற நெடில்தொடர்க் குற்றியலுகரம் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம் , ஆய்தத்தொடர்க் குற்றியலுகரச் சொற்களும்,

‘சொல்லிய பண்பின்’ -  முன் (குற்றியலு.19) சொன்னவாறு,

‘இயற்கை யாகும்’ – சந்தியாகப் புதிய எந்த எழுத்தும் தோன்றாது முடியும் !

இதற்கு இளம்பூரணர் தரும் சான்றுகள் ! :-

நாகு + கடிது = நாகு கடிது (அல்வழிப் புணர்ச்சி) (சந்தி வரவில்லை!)
(நாகு – ஈற்று உகரம், நெடில்தொடர்க் குற்றியலுகரம்)

நாகு + சிறிது = நாகு சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
நாகு + தீது = நாகு தீது (அல்வழிப் புணர்ச்சி)
நாகு + பெரிது = நாகு பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

வரகு + கடிது = வரகு கடிது (அல்வழிப் புணர்ச்சி) (சந்தி வரவில்லை!)
(வரகு – ஈற்று உகரம், உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்)

வரகு + சிறிது = வரகு சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
வரகு + தீது = வரகு தீது (அல்வழிப் புணர்ச்சி)
வரகு + பெரிது = வரகு பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

தெள்கு + கடிது = தெள்கு கடிது (அல்வழிப் புணர்ச்சி) (சந்தி வரவில்லை!)
(தெள்கு – ஈற்று உகரம், இடைத்தொடர்க் குற்றியலுகரம்)

தெள்கு + சிறிது = தெள்கு சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
தெள்கு + தீது = தெள்கு தீது (அல்வழிப் புணர்ச்சி)
தெள்கு + பெரிது = தெள்கு பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

எஃகு + கடிது = எஃகு கடிது (அல்வழிப் புணர்ச்சி) (சந்தி வரவில்லை!)
(எஃகு – ஈற்று உகரம், ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்)

எஃகு + சிறிது = எஃகு சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
எஃகு + தீது = எஃகு தீது (அல்வழிப் புணர்ச்சி)
எஃகு + பெரிது = எஃகு பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

குரங்கு + கடிது = குரங்கு கடிது (அல்வழிப் புணர்ச்சி) (சந்தி வரவில்லை!)
(குரங்கு – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம்)

குரங்கு + சிறிது = குரங்கு சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
குரங்கு + தீது = குரங்கு தீது (அல்வழிப் புணர்ச்சி)
குரங்கு + பெரிது = குரங்கு பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

இவற்றின் பின் தொல்காப்பியர் சொல்லாமல் விட்ட சில இலக்கணக் கூறுகளை மொழிகிறார் இளம்பூரணர் ! :-


1 . “வினைச் சொல்லும் , வினைக் குறிப்புச் சொல்லும் இயல்பாய் முடிந்தன கொள்க”.
இளம்பூரணரின் இக்கருத்துக்கு அவரே சில சான்றுகளைத் தருகிறார் :-

கிடந்தது + குதிரை = கிடந்தது குதிரை (அல்வழிப் புணர்ச்சி)
(கிடந்தது – வினைச் சொல் ; ஈற்று உகரம் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்)

கரிது + குதிரை = கரிது குதிரை (அல்வழிப் புணர்ச்சி)
(கரிது – வினைக்குறிப்புச் சொல் ; ஈற்று உகரம் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்)

2 . “இருபெயரொட்டுப் பண்புத்தொகை முடிபு கொள்க”.

இளம்பூரணரின் இக் கருத்திற்கு நச்சினார்க்கினியர் சிறு விளக்கம் தருகிறார் ! – “இருபெயரொட்டுப் பண்புத்தொகை வன்கணத்துக்கண் இனவெழுத்து மிக்கு , வல்லெழுத்துப் பெற்று முடிதலும் , இயல்புக் கணத்துக்கண் இனவொற்று மிக்கு முடிதலும் கொள்க !”
நச்சினார்க்கினியர் அவரது கருத்திற்கு ஏதுவான சான்றுகளையும் தருகிறார் !:-

கரடு + கானம் = கரட்டுக் கானம் (வல்லெழுத்து மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
(கரடு – பெயர்ச் சொல்; ஈற்று உகரம் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்)
( ‘கரடாகிய கானம்’ என விரித்தால் , ‘இருபெயரொட்டுப் பண்புத்தொகை’ ஆவதைச் சுகமாகக் காண்பீர் !)
‘கரடு’ என்பது, ‘கரட்டு’ ஆனதில்  ‘ட்’ இரட்டித்துள்ளதைக் காண்கிறோமல்லவா? இதைத்தான் நச்சினார்க்கினியர் ‘இனவெழுத்து மிக்கு’ , ‘இனவொற்று மிக்கு’ என்றார் !வேறு ஒன்றும் அஞ்ச வேண்டாம் !

இதே முறையில் கீழ்வரும் நச்சினார்க்கினியரின் காட்டுகளையும் நோக்குக :-

குருடு + கோழி = குருட்டுக் கோழி (வல்லெழுத்து மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
திருடு + புலையன் = திருட்டுப் புலையன் (வல்லெழுத்து மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
களிறு + பன்றி = களிற்றுப்  பன்றி (வல்லெழுத்து மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
வெளிறு + பனை = வெளிற்றுப்  பனை (வல்லெழுத்து மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
எயிறு + பல் = எயிற்றுப் பல் (வல்லெழுத்து மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

வறடு + ஆடு = வறட்டாடு (வல்லெழுத்து மிகவில்லை)(அல்வழிப் புணர்ச்சி)
குருடு + எருது = குருட்டெருது (வல்லெழுத்து மிகவில்லை)(அல்வழிப் புணர்ச்சி)

3 . “ ஐ என்னும் சாரியை பெற்று வரும் அல்வழி முடிபும் கொள்க”!

இதற்கு அவரே , இளம்பூரணரே , காட்டும் சான்றுகளை வருமாறு விரிக்கலாம் ! :-

அன்று + கூத்தன் = அற்றைக் கூத்தன் ( ஐ - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
(அன்று – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம்)

பண்டு + சான்றார் = பண்டைச் சான்றார் ( ஐ - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
(பண்டு – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம்)

ஓர் யாண்டு + யனை = ஓர் யாட்டை யானை ( ஐ - சாரியை) (அல்வழிப்
புணர்ச்சி)
(யாண்டு – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம்)

மற்று + யானை = மற்றை யானை ( ஐ - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
(மற்று – ஈற்று உகரம், வன்றொடர்க் குற்றியலுகரம்)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (134)

Post by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:51 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (134)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

அல்வழிப் புணர்ச்சியில், நெடில்தொடர்க் குற்றியலுகரம் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம் , இடைத்தொடர்க் குற்றியலுகரம் , ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் , இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களோடு புணரின் , இயல்பாய் ( ‘நாகு கடிது’) முடியும் என்று கண்டோம்  (குற்றியலு. 20)!

மேல் பட்டியலில் , வன்றொடர்க் குற்றியலுகரம் விடுபட்டதை நீங்கள் பார்க்கவேண்டும் !

அல்வழிப் புணர்ச்சியில் , விடுபட்ட வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள் எவ்வாறு முடியும் என்பதை விளக்குகிறார் தொல்காப்பியர் ! :-

“வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே” (குற்றியலு. 21)

‘வல்லொற்றுத் தொடர்மொழி’ – வன்றொடர்க் குற்றியலுகரச் சொல் ,

‘வல்லெழுத்து மிகுமே’ – வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொல்லுடன் புணரும்போது , வல்லெழுத்து மிக்கு முடியும் ! :-

கொக்கு + கடிது = கொக்குக் கடிது  (க்- மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

கொக்கு + சிறிது = கொக்குச் சிறிது  (ச்- மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

கொக்கு + தீது = கொக்குத் தீது  (த்- மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

கொக்கு + பெரிது = கொக்குப்  பெரிது  (ப்- மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

‘நாகு கடிது’ என்பதும் அல்வழிப் புணர்ச்சிதான்; ‘கொக்குக் கடிது’ என்பதும் அல்வழிப் புணர்ச்சிதான் ! இப்படி இருக்க , ஒன்றில் வல்லெழுத்து மிகவில்லை ; மற்றதில் மிகுகிறது ! என்ன இரகசியம் ?

வெல்லப் பாகு காய்ச்சுகிறீர்கள் ! அது கெட்டியாக உள்ளது ; அதை  எப்படிச் சொல்வீர்கள் ?

‘பாகு கடிது’ – எனக் கூறலாம் ! ‘பாகு கெட்டியாக உள்ளது’ – என்றுதான் கூறுவர் ! ஒற்று வரவில்லை இடையே ! தொல்காப்பியர் இதைத்தானே கூறினார் ?

ஆனால் , ‘கொக்கு’ என்ற வன்றொடர்க் குற்றியலுகரச் சொல் வரும்போது மட்டும் , அந்தக் கொக்கானது சிறிதாக இருந்தால், ‘கொக்குச் சிறிது’ என்று கூறவேண்டும் !

இது நமக்குக் கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது !

ஆனால் , கிராமங்களில் நம் தமிழர்கள் எப்படிப் பேசுகிறார்கள் ?

‘மூக்குப் பெரிசு அவளுக்கு’ !

‘சாக்குச் சின்னதா இருக்கு’ !

‘வாக்குச் சுத்தம் அவருக்கு’! – இந்த மூன்றும் அல்வழிப் புணர்ச்சிதான் ! மூக்கு , சாக்கு, வாக்கு மூன்றுமே வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள்தாம் !  

தமிழர்கள் நாவில் இயல்பாகப் புழங்குவதற்கு மதிப்பளிப்பது தொல்காப்பியம் !

தொல்காப்பியத்திற்கு முந்தைய அகத்தியமும் இப்படித்தான் இருந்திருக்கும் !

ஒலிப்புமுறை (Articulation) அடிப்படையிலும்  இதனை ஆராய்வோம் !

‘குரங்கு ’ என்று கூறிவிட்டுச் சிறிது இடைவெளி கொடுத்துச் ‘சிறிது’ என்று கூறும்போது, ‘குரங்கு சிறிது’ ஆகிக் கருத்தும் தெளிவாகிறது !

ஆனால் , அதே பிராணியான குரங்கைக்  ‘குரக்கு’ என்று எழுதினால் , அப்போதும் ‘குரக்கு’ என்று சொல்லிவிட்டு ஓர் இடைவெளியைத் தர உந்துதல் (Urge) ஏற்படுகிறது ! அதைச் செய்துமுடிப்பதற்குத்தான், ஒரு ‘க்’கை அண்டக்கொடுக்கிறோம் ! நாம் எதிர்பர்த்த இடைவெளி கிடைத்துவிடுகிறது !

‘பாகு கடிது’ , உதாரணத்தில், ஈற்று எழுத்துக்கு( ‘கு’விற்கு) முன் (இடப்புறம்) உயிர் எழுத்தாகிய  ‘ஆ’உள்ளது;  இந்த உயிருடன் ஈற்றுக் ‘கு’வை உச்சரிக்கும்போது , வேகம் குறைந்து , ஓர் இடைவெளி உண்டாகிறது ! இந்தக் காரணத்தால்தான் , இங்கு வல்லெழுத்து மிகவில்லை !

இந்த ஒலிப்பு முறையோடு , நாம் மேலே பார்த்த தமிழர்தம் இயல்புப் பேச்சும் ஒத்துவரக் காணலாம் !

இப்போது , ‘கொக்குக் கடிது’ என்பதில் ஏன் சந்தியாக ‘க்’ வருகிறது என்ற இரகசியம் விளங்கியதா ?
நீங்கள் வாழ்க !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by ராஜு சரவணன் on Sat Sep 28, 2013 5:07 pm

தமிழர்கள் நாவில் இயல்பாகப் புழங்குவதற்கு மதிப்பளிப்பது தொல்காப்பியம் !
புணர்ச்சி விதிகள் பற்றிய விளக்கங்கள் அருமை புன்னகை தொடர்கிறோம்  

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (135)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 29, 2013 5:21 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (135)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘ஆங்கு சென்றான்’

‘ஆங்குச் சென்றான்’

- இவற்றில் எது சரி ?
தொல்காப்பியத்தில் விதி இருக்கிறதா?


இருக்கிறது ! :-

“சுட்டுச்சினை நீடிய மென்றொடர் மொழியும்
யாவினா முதலிய மென்றொடர் மொழியும்
ஆயிய றிரியா வல்லெழுத் தியற்கை”       (குற்றியலு. 22)

‘சுட்டுச் சினை’ – ‘சினை’ என்றால் ‘உறுப்பு’;சொல்லுக்கு உறுப்பாகச் சுட்டெழுத்து நிற்பதால், சுட்டெழுத்தைக் குறிக்கச் ‘சுட்டுச் சினை’ என்கிறார் தொல்காப்பியர் ! ‘அ இ உ  அம்மூன்றும் சுட்டு’ (நூன் மரபு.31) என ஏற்கனவே அவர் கூறியுள்ளதை நினைக்க !

‘நீடிய’ – ‘அ’ நீண்டால் ‘ஆ’ ; ‘இ’  நீண்டா  ‘ஈ’ ; ‘உ’  நீண்டால் ‘ஊ’ !

‘மென்றொடர் மொழியும்’ -  ‘ஆ’வைக் கொண்ட மென்றொடர்க் குற்றியலுகரச் சொல் ‘ஆங்கு’ ; இதே போல  ‘ஈ’யைக் கொண்டது  ‘ஈங்கு’ ; ‘ஊ’வைக் கொண்டது ‘ஊங்கு’ ! இம் மூன்றும் ,

‘யா வினா முதலிய மென்றொடர் மொழி’ -  வினாப் பொருள் தரும் ‘யா’ என்ற எழுத்தை அடியாகக் கொண்ட ஒரு மென்றொடர்க் குற்றியலுகரச் சொல் ‘யாங்கு’ம் ,

‘ஆயியல்’ -  முன் நூற்பாவில் (குற்றியலு.21) கூறிய இயல்பு – ‘கொக்குக் கடிது’; அல்வழிப் புணர்ச்சியில் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வரும்போது , வல்லொற்று மிகும் இயல்பு ,
‘திரியா வல்லெழுத்து இயற்கை’ – ‘கொக்குக் கடிது’ – என்பதில் வல்லொற்றுச் சந்தி வந்ததுபோலப் புணரும் !

இதன்படி நடக்கும் புணர்ச்சிகளை இளம்பூரணர் காட்டும் எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில் வருமாறு தரலாம் ! :-

ஆங்கு + கொண்டான் = ஆங்குக் கொண்டான் (க் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
ஈங்கு + கொண்டான் = ஈங்குக் கொண்டான் (க் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
ஊங்கு + கொண்டான் = ஊங்குக் கொண்டான் (க் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
யாங்கு + கொண்டான் = யாங்குக் கொண்டான் (க் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)


ஆங்கு + சென்றான் = ஆங்குச் சென்றான் (ச் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
ஈங்கு + சென்றான் = ஈங்குச் சென்றான் (ச் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
ஊங்கு + சென்றான் = ஊங்குச் சென்றான் (ச் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
யாங்கு + சென்றான் = யாங்குச் சென்றான் (ச் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)


ஆங்கு + தந்தான் = ஆங்குத் தந்தான் (த் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
ஈங்கு + தந்தான் = ஈங்குத் தந்தான் (த் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
ஊங்கு + தந்தான் = ஊங்குத் தந்தான் (த் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
யாங்கு + தந்தான் = யாங்குத் தந்தான் (த் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)

ஆங்கு + போயினான் =ஆங்குப் போயினான் (ப் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
ஈங்கு + போயினான் =ஈங்குப் போயினான் (ப் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
ஊங்கு + போயினான் =ஊங்குப் போயினான் (ப் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
யாங்கு + போயினான் =யாங்குப் போயினான் (ப் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)

‘ஆங்கு’ என்பதை  “ஏழாம் வேற்றுமை இடப் பொருளுணர  நின்ற இடைச் சொல்’’ எனக் குறிக்கிறார் இளம்பூரணர் !

இஃது இன்றியமையாத குறிப்பு !

‘அங்கு’ வேறு ; ‘ஆங்கு’ வேறு !

அங்கு – சுட்டுப் பெயர் (Demonstrative pronoun) !
ஆங்கு –  ‘அவ்விடத்து’ எனும் பொருளில் வரும் ஓர் இடைச் சொல் (Particle) !
சுட்டிக் கூறும் பொருள் கொண்டது , ‘அங்கு’!
இடப் பொருள் கொண்டது , ‘ஆங்கு’ !
காரைக்குடி நல்ல ஊர் ; ஆங்குப் பெறும் கல்வி சிறந்தது ! √
காரைக்குடி நல்ல ஊர் ; அங்குப் பெறும் கல்வி சிறந்தது ! ×

காரைக்குடி நல்ல ஊர் ; அங்குச்  சென்றேன் ! √
காரைக்குடி நல்ல ஊர் ; ஆங்குச்  சென்றேன் !  ×

இப்போது , ‘அங்கு’ , ‘ஆங்கு’களுக்குள்ள வேறுபாடு விளங்கியிருக்கலாம் !

இந் நூற்பா உரையில் , இளம்பூரணர் தரும் கூடுதல் இலக்கணம் – “அக் குற்றுகர ஈற்று வினையெச்ச முடிபு கொள்க !” .

இதற்கு விளக்கம் , அவரது எடுத்துக்காட்டுகளில் உளது ! :-

செத்து + கிடந்தான் = செத்துக் கிடந்தான் ( க்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இருந்து + கொண்டான் = இருந்து கொண்டான் ( க்- மிகாது) (அல்வழிப் புணர்ச்சி)

செத்து – வன்றொடர்க் குற்றியலுகரம் பெற்ற வினையெச்சச் சொல் !
இருந்து – மென்றொடர்க் குற்றியலுகரம் பெற்ற வினையெச்சச் சொல் !

பலருக்கும் வினையெச்சத் தொடர்கள் எழுதுவதில் தகராறு ! ஒற்றுப் போட வேண்டுமா ? வேண்டாமா?
இங்கே இளம்பூரணர் தீர்த்துவைத்துள்ளார் !

‘யாங்குக் கொண்டான்’ எனும் வடிவத்தை மேலே பார்த்தோம் !

‘யாங்கு கொண்டான்’ – என்பதுதானே சரி ? – நீங்கள் தலையைச் சொறிகிறீர்கள் !

உங்கள் ஐயம் நியாயமானதுதான் !

‘யாங்கு கொண்டான்’ √
‘யாங்குக்  கொண்டான்’√   -   இரண்டுமே சரிதான் !

சொல்பவர் தொல்காப்பியர் ! :-

“யாவினா மொழியே யியல்பு மாகும்”  (குற்றிய . 23)

‘யாவினா மொழி’ – ‘யாங்கு’

‘இயல்பு மாகும் ’ – முன் சொன்னதுபோல ஒற்றுப் பெற்றும் வரும் , பெறாதும் வரும் !

இதற்கு இளம்பூரணர் தந்த சான்றுகள் ! :-

யாங்கு + கொண்டான் = யாங்குக் கொண்டான் √ (க்- மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
= யாங்கு  கொண்டான் √ (க்- மிகவில்லை) )(அல்வழிப் புணர்ச்சி)

யாங்கு + சென்றான் = யாங்குச் சென்றான் √ (ச்- மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
= யாங்கு  சென்றான் √ (ச்- மிகவில்லை) )(அல்வழிப் புணர்ச்சி)

யாங்கு + தந்தான் = யாங்குத் தந்தான் √ (த்- மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
= யாங்கு  தந்தான் √ (த்- மிகவில்லை) )(அல்வழிப் புணர்ச்சி)

மேல் ‘யாங்கு’ என்ற சொல்லுக்குப் பொருள் – ‘எப்படி’ என்கிறார் நச்சினார்க்கினியர் ! (குற்றியலு . 23 நச். உரை)
அப்படியானால் , குற்றியலு . 22 இன் கீழ் வந்த ‘யாங்கு’க்கு வேறு பொருளா ?

நமக்குப் பொறி தட்டுகிறது !

ஆம் !
‘யாங்கு’  =  எங்கே ? (குற்றியலு. 22)
‘யாங்கு’  =  எப்படி ? (குற்றியலு . 23)

‘எங்கே?’ என்ற பொருளில் ‘யாங்கு’ வந்தால் , ஒற்று மிகும் ! – ‘யாங்குச் சென்றாள் ?’ = ‘எங்கே சென்றள் ?’

‘எப்படி ?’ என்ற பொருளில் ‘யாங்கு’ வந்தால் , ஒற்று மிகாது ! – ‘யாங்கு சென்றாள் ?’ = ‘எப்படிச் சென்றாள் ?’
ஆகவே ‘யாங்கு’ என்ற வடிவத்தைப் பயன்படுத்தும்போது , இந்த வேறுபாட்டை அறிந்து பயன்படுத்துவோமாக !

ஆளைக் காணவில்லையே , யாங்கு சென்றாள் ? ×
ஆளைக் காணவில்லையே , யாங்குச் சென்றாள் ? √

வண்டி ஓட்டத்தெரியாதே ,   யாங்கு சென்றாள் ? √
வண்டி ஓட்டத்தெரியாதே ,   யாங்குச்  சென்றாள் ? ×

‘யாங்கு’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘எப்படி’ என்ற பொருளைக் காட்டியதால் நமக்கு மேலைக் கருத்துகள் தெளிவாயின !

நமக்கு முன்பும் இதனைத் தொட்டுக் காட்டியுள்ளார் ச . பாலசுந்தரனார் – “யாங்ஙனம் எனப் பண்புப் பொருட்டாக வருங்காலையே இயல்பாம்; இடப் பொருளாயின் மிகுமென அறிக !”.

இவற்றை அடுத்த நூற்பா ! :-

       “அந்நான் மொழியும் தந்நிலை திரியா !”  (குற்றியலு . 24)

‘அந் நான் மொழி’ – எந்நான் மொழி ?

விளக்கம் எந்த உரையாசிரியர்களிடமும் காணப்படவில்லை !

உரையாசிரியர்கள் தந்த எடுத்துக்காட்டுகளிலிருந்து நாம் பொருளை வருவிக்க வேண்டும் !

தொல்காப்பிய ஆய்வில் குறிப்பிடத்தக்கது இது !

இளம்பூரணர் இந்த நூற்பாவிற்கு (குற்றியலு. 24), ‘அங்குக் கொண்டான்’ , ‘எங்குக் கொண்டான்’ என்றெல்லாம் தந்த சான்றுகளைக் கொண்டு கீழ் வரும் விளக்கத்தை நாம் எட்டலாம் !
அஃதாவது , குற்றியலு.22இல் வந்த ‘சுட்டுச் சினை நீடிய’ ,  ‘யா வினா’ முதலியன நிலை திரிந்தவை என்பதைக் கவனிக்க வேண்டும் !
அப்படியனால் , சுட்டுச் சினை (சுட்டெழுத்து) நீடாது வருகின்றதையும் ,  ‘யா’வை முதலாகக் கொள்ளாத ,அதற்கு முந்தைய வடிவத்தையும் நாம் கொள்ள வேண்டும் ! அவை – அங்கு ,இங்கு , உங்கு, எங்கு !
மேல் நூற்பாவில்  (குற்றியலு. 24), வந்த  ‘அந் நான் மொழி’ – அங்கு , இங்கு . உங்கு , எங்கு !

‘தந்நிலை திரியா’ – அங்கு , இங்கு , உங்கு , எங்கு என்று இதே நிலை திரியாது ( அக்கு , இக்கு என்றெல்லாம் ஆகாது), வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களுடன் புணரும்போது , வல்லொற்றைச் சந்தியாகப் பெறும் !

இதற்கு இளம்பூரணரின் சான்றுகள் ! :-

அங்கு + கொண்டான் = அங்குக் கொண்டான் (க்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இங்கு + கொண்டான் = இங்குக் கொண்டான் (க்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
உங்கு + கொண்டான் = உங்குக் கொண்டான் (க்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
எங்கு + கொண்டான் = எங்குக் கொண்டான் (க்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

அங்கு + சென்றான் = அங்குச் சென்றான் (ச்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இங்கு + சென்றான் = இங்குச் சென்றான் (ச்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
உங்கு + சென்றான் = உங்குச் சென்றான் (ச்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
எங்கு + சென்றான் = எங்குச் சென்றான் (ச்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

அங்கு + தந்தான் = அங்குத்  தந்தான் (த்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இங்கு + தந்தான் = இங்குத் தந்தான் (த்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
உங்கு + தந்தான் = உங்குத் தந்தான் (த்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
எங்கு + தந்தான் = எங்குத் தந்தான் (த்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

அங்கு + போயினான் = அங்குப் போயினான் (ப்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இங்கு + போயினான் = இங்குப் போயினான் (ப்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
உங்கு + போயினான் = உங்குப் போயினான் (ப்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
எங்கு + போயினான் = எங்குப் போயினான் (ப்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

‘ஆங்குக் கொண்டான்’ , ‘அங்குக் கொண்டான்’ என்று மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள்  புணரும் இதே முறையில்தான் எல்லா மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்களும் புணருமா ?

‘அல்ல !’ என்பவர் இளம்பூரணர் !

வல்லொற்றுச் சந்தி பெறாது , இயல்பாய் முடியும் மென்றொடர்க் குற்றியலுகரச்  சொற்களை இளம்பூரணர் காட்டுகிறார் ! :-

முந்து + கொண்டான் = முந்துக் கொண்டான் ×
முந்து + கொண்டான் = முந்து கொண்டான் √  (அல்வழிப் புணர்ச்சி )

பண்டு + கொண்டான் = பண்டுக் கொண்டான் ×
பண்டு + கொண்டான் = பண்டு கொண்டான் √  (அல்வழிப் புணர்ச்சி )

இன்று + கொண்டான் = இன்றுக் கொண்டான் ×
இன்று + கொண்டான் = இன்று கொண்டான் √  (அல்வழிப் புணர்ச்சி )

அன்று + கொண்டான் = அன்றுக் கொண்டான் ×
அன்று + கொண்டான் = அன்று கொண்டான் √  (அல்வழிப் புணர்ச்சி )

மேலே கண்ட முந்து , பண்டு , அன்று , இன்று ஆகிய நான்கும் பெயர்ச் சொற்களே (Nouns)
இவற்றை நச்சினார்க்கினியர் எப்படிக் கூறினார் ?

“எழாவதன் காலப் பொருட்டாய சொற்கள்”!

அஃதாவது , ஏழாம் வேற்றுமை உருபாகிய ‘கண்’ என்பதற்கு இடப் பொருளும் உண்டு , காலப் பொருளும் உண்டு !
வீட்டின்கண் அது காணப்பட்டது ! ( கண் – இடப் பொருள்)
சென்ற மாதத்தின்கண் அது  நடந்தது ! ( கண் – காலப் பொருள்)

இதன் அடிப்படையில் ,
முந்து  - முற்காலத்தின்கண் (கண் – காலப் பொருளில்)
பண்டு  - பண்டைக் காலத்தின்கண் (கண் – காலப் பொருளில்)
இன்று  - இற்றைநாளின்கண் (கண் – காலப் பொருளில்)
அன்று  - அற்றைநாளின்கண் (கண் – காலப் பொருளில்)

நச்சினார்க்கினியர் கணக்கு நேர் !

இந்த ஆய்வில் பெறும் ஒரு மொழியியல் உண்மையை (Linguistic truth) நாம் குறித்தாக வேண்டும் !
‘அங்கு’ என்பதிலிருந்தே ‘ ஆங்கு’ வந்தது !
‘எங்கு’ என்பதிலிருந்தே  ‘யாங்கு’ வந்தது !

அங்கு >  ஆங்கு
எங்கு > யாங்கு

ஓலைச் சுவடிகளிலிருந்து செவ்வியல் (Classical) நூற்களைப் பதிப்பிக்கும் முயற்சிகள் அண்மைக்காலத்தில் எழுந்துள்ளதால் , அப் பணிக்கும் இம் முடிபு பயனாகும் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 7 of 29 Previous  1 ... 6, 7, 8 ... 18 ... 29  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum