ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போடி, நீ தான் லூசு...!
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 T.N.Balasubramanian

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Page 10 of 28 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 19 ... 28  Next

View previous topic View next topic Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by Dr.S.Soundarapandian on Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம் (183)

Post by Dr.S.Soundarapandian on Thu Dec 19, 2013 8:00 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (183)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

ஞ , ந , ம , ய , வ – ஆகிய எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களும் , உயிரெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களும் , 24 எழுத்துகளை ஈறாகக் கொண்ட  வெவ்வேறு நிலைமொழிகளுடன் புணர்ந்தால் , அப் புணர்ச்சி இயல்பான புணர்ச்சியாகும் !

இதுதான் தொகைமரபில் அடுத்து நாம் காணும் நூற்பாவின் கருத்து ! அந் நூற்பா ! :-

“ஞநம யவவெனு முதலாகு மொழியும்
உயிர்முத லாகிய மொழியு முளப்பட
அன்றி யனைத்து மெல்லா வழியும்
நின்ற சொன்மு  னியல்பா கும்மே”   (தொகை . 2)

‘எல்லா வழியும்’ – வேற்றுமைப் புணர்ச்சியிலும் , அல்வழிப் புணர்ச்சியிலும் !

இளம்பூரணர் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! :-

விள + ஞான்றது = விள ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி)  
விள + ஞாற்சி = விள ஞாற்சி (வேற்றுமைப் புணர்ச்சி)

  விள + நீண்டது = விள நீண்டது (அல்வழிப் புணர்ச்சி)  
 விள + நீட்சி = விள நீட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)  

  விள + மாண்டது = விள மாண்டது (அல்வழிப் புணர்ச்சி)  
விள + மாட்சி = விள மாட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)  

விள + யாது = விள யாது (அல்வழிப் புணர்ச்சி)  
விள + யாப்பு = விள யாப்பு (வேற்றுமைப் புணர்ச்சி)

  விள + வலிது = விள வலிது (அல்வழிப் புணர்ச்சி)  
விள + வலிமை = விள வலிமை (வேற்றுமைப் புணர்ச்சி)

விள + அடைந்தது = விள வடைந்தது (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய் ;   உடம்படு மெய் வந்தாலும் அஃது இயல்புப் புணர்ச்சியே !)  
விள + அடைவு = விள வடைவு (வேற்றுமைப் புணர்ச்சி)

  விள + ஆடிற்று = விள வாடிற்று (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + ஆட்டம் = விள வாட்டம் (வேற்றுமைப் புணர்ச்சி)  

விள + இடிந்தது = விள விடிந்தது (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + இடிவு = விள விடிவு (வேற்றுமைப் புணர்ச்சி)

விள + ஈரிற்று = விள வீரிற்று (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + ஈட்டம் = விள வீட்டம் (வேற்றுமைப் புணர்ச்சி)  

விள + உடைந்தது = விள வுடைந்தது (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + உடைபு = விள வுடைபு (வேற்றுமைப் புணர்ச்சி)

  விள + ஊறிற்று = விள வூறிற்று (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + ஊற்றம் = விள வூற்றம் (வேற்றுமைப் புணர்ச்சி)

  விள + எழுந்தது = விள வெழுந்தது (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + எழு = விள வெழு (வேற்றுமைப் புணர்ச்சி)  

விள + ஏறிற்று = விள வேறிற்று (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + ஏணி = விள வேணி (வேற்றுமைப் புணர்ச்சி)  

விள + ஐது = விள வைது (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + ஐயம் = விள வையம் (வேற்றுமைப் புணர்ச்சி)

விள + ஒடிந்தது = விள வொடிந்தது (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + ஒடுக்கம் = விள வொடுக்கம் (வேற்றுமைப் புணர்ச்சி)

 விள + ஓடிற்று = விள வோடிற்று (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + ஓக்கம் = விள வோக்கம் (வேற்றுமைப் புணர்ச்சி)

   விள + ஔவியத்தது = விள வவ்வியத்தது (அல்வழிப் புணர்ச்சி) (வ் – உடம்படு மெய்)  
விள + ஔவியம் = விள வவ்வியம் (வேற்றுமைப் புணர்ச்சி)

  விள + நுந்தையது = விள நுந்தையது (அல்வழிப் புணர்ச்சி)  
விள + நுந்தை = விள நுந்தை (வேற்றுமைப் புணர்ச்சி)  

இதுவரை ‘விள’ என்ற உயிரீற்றுச் சொல்லுடன் , தொல்காப்பியர் கூறிய ஞ , ந , ம , ய , வ  , 12 உயிர்கள் , மொழிமுதல் குற்றியலுகரம் ‘ நு’ ஆகியவற்றைச் சொல் முதலில் பெற்ற சொற்கள் புணர்ந்ததைப் பார்த்தோம் !

இனி , ‘தாழ்’ என்ற மெய்யீற்றுச் சொல்லுடன் இவை புணரும் வகை ! :-

தாழ் + ஞான்றது = தாழ் ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி)  
தாழ் + ஞாற்சி = தாழ் ஞாற்சி (வேற்றுமைப் புணர்ச்சி)

  தாழ் + நீண்டது = தாழ் நீண்டது (அல்வழிப் புணர்ச்சி)  
 தாழ் + நீட்சி = தாழ் நீட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)  

  தாழ் + மாண்டது = தாழ் மாண்டது (அல்வழிப் புணர்ச்சி)  
தாழ் + மாட்சி = தாழ் மாட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)  

தாழ் + யாது = தாழ் யாது (அல்வழிப் புணர்ச்சி)  
தாழ் + யாப்பு = தாழ் யாப்பு (வேற்றுமைப் புணர்ச்சி)

தாழ் + வலிது = தாழ் வலிது (அல்வழிப் புணர்ச்சி)  
தாழ் + வலிமை = தாழ் வலிமை (வேற்றுமைப் புணர்ச்சி)

தாழ் + அடைந்தது = தாழடைந்தது (அல்வழிப் புணர்ச்சி) ( மெய் மீது உயிர் ஏறினாலும்  அஃது இயல்புப் புணர்ச்சியே !)  
தாழ் + அடைவு = தாழடைவு (வேற்றுமைப் புணர்ச்சி)

  தாழ் + ஆடிற்று = தாழாடிற்று (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  
தாழ் + ஆட்டம் = தாழாட்டம் (வேற்றுமைப் புணர்ச்சி)  (மெய் மீது உயிர் ஏறியது)  

தாழ் + இடிந்தது = தாழிடிந்தது (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  
தாழ் + இடிவு = தாழிடிவு (வேற்றுமைப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  

தாழ் + ஈரிற்று = தாழீரிற்று (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)   தாழ் + ஈட்டம் = தாழீட்டம் (வேற்றுமைப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)    

தாழ் + உடைந்தது = தாழுடைந்தது (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  
தாழ் + உடைபு = தாழுடைபு (வேற்றுமைப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  

  தாழ் + ஊறிற்று = தாழூறிற்று (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)   தாழ் + ஊற்றம் = தாழூற்றம் (வேற்றுமைப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  

  தாழ் + எழுந்தது = தாழெழுந்தது (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)   தாழ் + எழு = தாழெழு (வேற்றுமைப் புணர்ச்சி)   (மெய் மீது உயிர் ஏறியது)  

தாழ் + ஏறிற்று = தாழேறிற்று (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)   தாழ் + ஏணி = தாழேணி (வேற்றுமைப் புணர்ச்சி)  (மெய் மீது உயிர் ஏறியது)  

தாழ் + ஐது = தாழைது (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  
தாழ் + ஐயம் = தாழையம் (வேற்றுமைப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  

தாழ் + ஒடிந்தது = தாழொடிந்தது (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  
தாழ் + ஒடுக்கம் = தாழொடுக்கம் (வேற்றுமைப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  

 தாழ் + ஓடிற்று = தாழோடிற்று (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)   தாழ் + ஓக்கம் = தாழோக்கம் (வேற்றுமைப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  

   தாழ் + ஔவியத்தது = தாழௌவியத்தது (அல்வழிப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  
தாழ் + ஔவியம் = தாழௌவியம் (வேற்றுமைப் புணர்ச்சி) (மெய் மீது உயிர் ஏறியது)  

தாழ் + நுந்தையது = தாழ் நுந்தையது (அல்வழிப் புணர்ச்சி)  
தாழ் + நுந்தை = தாழ் நுந்தை (வேற்றுமைப் புணர்ச்சி)  

இயல்புப் புணர்ச்சி ஒரு தொகுப்பாக வந்துள்ளது அல்லவா? இதனால்தான் இது தொகை மரபு !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (184)

Post by Dr.S.Soundarapandian on Fri Dec 20, 2013 10:41 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (184)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

  இயல்புப் புணர்ச்சி பற்றி முன்னே பார்த்தோம் !

அதற்கு ஒரு விதி விலக்கு !

அஃதாவது , சில மெல்லின எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போது , இயல்புப் புணர்ச்சி ஏற்படலாம், ஏற்படாமல் ஒற்று மிகவும் செய்யலாம்!

கதிர் + ஞெரி = கதிர் ஞெரி √  (வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
கதிர் + ஞெரி = கதிர்ஞ் ஞெரி √ (வேற்றுமைப் புணர்ச்சி) (ஞ் - மிகுந்தது)

கதிர் + நுனி = கதிர் நுனி √ (வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
கதிர் + நுனி = கதிர்ந் நுனி √ (வேற்றுமைப் புணர்ச்சி) (ந் - மிகுந்தது)

கதிர் + முரி = கதிர் முரி √ (வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
கதிர் + முரி = கதிர்ம் முரி  √ (வேற்றுமைப் புணர்ச்சி) (ம் - மிகுந்தது)

ஒற்று மிகுந்தும் , ஒற்று மிகாதும் மேலே புணர்ந்ததைப் பார்த்தோமல்லவா?
இவ்வாறு இருவாறாகப் புணர்வதே – ‘உறழ்ச்சி’!

இளம்பூரணர் ஒரு செய்தியை இது தொடர்பாகத் தருகிறார் !

அஃதாவது , ஓரெழுத்து , ஈரெழுத்துச் சொற்கள் சிலவற்றோடு , மெல்லின எழுத்துகளை முதலாகக் கொண்ட  சொற்கள் வந்து புணரும்போது , ஒற்று கட்டாயம் மிகவேண்டும் என்கிறார் இளம்பூரணர் !

இதற்கு அவர் தந்த காட்டுகள் :-

கை + ஞெரித்தார் = கைஞ் ஞெரித்தார் √  (வேற்றுமைப் புணர்ச்சி) (ஞ் - மிகுந்தது)
=  கை ஞெரித்தார் ×

கை + நீட்டினார் = கைந் நீட்டினார் √  (வேற்றுமைப் புணர்ச்சி) (ந் - மிகுந்தது)
=  கை நீட்டினார் ×

கை + மடித்தார் = கைம் மடித்தார் √  (வேற்றுமைப் புணர்ச்சி) (ம் - மிகுந்தது)
=  கை மடித்தார் ×

மெய் + ஞானம் = மெய்ஞ் ஞானம் √  (வேற்றுமைப் புணர்ச்சி) (ஞ் - மிகுந்தது)
=  மெய் ஞானம் ×

மெய் + நூல் = மெய்ந் நூல் √  (வேற்றுமைப் புணர்ச்சி) (ந் - மிகுந்தது)
=  மெய் நூல் ×

மெய் + மறந்தார் = மெய்ம் மறந்தார் √  (வேற்றுமைப் புணர்ச்சி) (ம் - மிகுந்தது)
=  மெய் மறந்தார் ×


இக் கருத்துகளைத் தாங்கிய தொல்காப்பிய நூற்பா ! :-
“அவற்றுள்
மெல்லெழுத்  தியற்கை யுறழினும் வரையார்
சொல்லிய தொடர்மொழி யிறுதி யான” (தொகை . 3)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (185)

Post by Dr.S.Soundarapandian on Sat Dec 21, 2013 5:15 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (185)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘ஞா’வை முதல் எழுத்தாகக் கொண்ட வினைச் சொற்கள் , ‘யா’வை முதல் எழுத்தாகக் கொண்ட வினைச் சொற்கள் ஆகியன ‘ண்’ , ‘ன்’ ஆகிய எழுத்துகளை ஈற்றிலே கொண்ட வினைச் சொற்களோடு புணர்ந்தால்?

இப்படிப் புணரும் என்கிறார் தொல்காப்பியர் ! :-

மண் + யாத்த = மண் யாத்த (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
மண் + ஞாத்த = மண் ஞாத்த (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

பொன் + யாத்த = பொன் யாத்த (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
பொன் + ஞாத்த = பொன் ஞாத்த (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

இதற்கு நூற்பா !:-
“ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும்
வினையோ ரனைய வென்மனார் புலவர்” (தொகை . 4)

இதன் உரையில் நச்சினார்க்கினியர் , ‘யா , ஞா ஆகிய சொற்களோடு என்றால் , வினைச்சொற்களோடுதான் ! பெயர்ச் சொற்களுக்குப் பொருந்தாது !’என்கிறார் !

இதன்படி –

மண் + யாமை = மண் யாமை × (யாமை – பெயர்ச் சொல்)
மண் + ஞாமை = மண் ஞாமை × (ஞாமை – பெயர்ச் சொல்)

இளம்பூரணர் இன்னும் ஓர் இலக்கண நுட்பம் தருகிறார் ! – “யா முதன் மொழிக்கண் ஞா வருமாறு கொள்க!”

ஒன்றும் விளங்கவில்லை !
இதற்கு நச்சினார்க்கினியர் உரை கூறுகிறார் !- “ஞாச் சென்ற வழி யாச் செல்லாது, யாச் சென்ற வழி ஞாச் செல்லும் என்று கொள்க !”

சற்று விளங்குவது போல உள்ளது , ஆனால் விளங்கவில்லை !

சூத்திரம் மட்டுமல்ல அந்தக்கால உரைகளும் இரத்தினச் சுருக்கமாகவே இருந்தன என்பதற்கு இவ்விடங்கள் சன்றுகள் !

தொடர்ந்து நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டுகளை நாடுவோம் ! – “மண் ஞான்றது என்றவழி , மண் யான்றது என்று வாராமை உணர்க !”

இப்போது விளங்கிவிட்டது !

அஃதாவது –
மண் + ஞான்றது = மண் ஞான்றது √ (அல்வழிப் புணர்ச்சி)

இதைப்போல , ‘மண் + யான்றது = மண் யான்றது’ (அல்வழிப் புணர்ச்சி) என்றுதானே வரவெண்டும் ? ஆனால் ‘வராது’என்கிறார்கள் உரையாசிரியர்கள் !

அஃதாவது , ‘ஞா’வை முதலாகக் கொண்ட சொல் , ‘ண்’ , ‘ன்’முன் சேர்ந்து புணர்வதுபோல , ‘யா’வை முதலாகக் கொண்ட சொல் புணரும் என்று நீங்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்பதே கருத்து !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (186)

Post by Dr.S.Soundarapandian on Sat Dec 28, 2013 9:06 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (186)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘ண்’ , ‘ன்’  ஆகிய இரு  ஈறுகளைக் கொண்ட சொற்புணர்ச்சி தொடர்கிறது !

ண் , ன்  - ஈறுகளைக் கொண்ட பெயர்ச் சொற்களை நிறுத்தி , மொழிக்கு முதலாக வரக்கூடிய எல்லா எழுத்துகளையும்  முதலாகக் கொண்ட சொற்களைப் புணர்த்தினால் , அல்வழிப் புணர்ச்சியில் ,  ‘ண்’ , ‘ன்’ திரிபு பெறாது இயல்பாகப் புணரும் ! :-

”மொழிமுத லாகு மெல்லா வெழுத்தும்
வருவழி நின்ற வாயிரு  புள்ளியும்
வேற்றுமை  யல்வழித்  திரிபிட னிலவே” (தொகை . 5)

 ‘மொழிமுதல் ஆகும்  எல்லா எழுத்தும்
வரும்வழி’ – சொல்லின் முதல் எழுத்தாக வரத்தக்க எல்லா எழுத்துகளையும் உடைய சொற்கள் வந்து புணரும்போது,
 ‘நின்ற ஆயிரு புள்ளி’ – ‘ண்’ , ‘ன்’ ஆகியவற்றை ஈற்றிலே கொண்ட பெயர்ச்சொற்கள் ,
‘வேற்றுமை  யல்வழித்  திரிபிடன் இலவே’ – அல்வழிப் புணர்ச்சியில் , திரிதல் இலாது , இயல்பாகப் புணரும் !

உரையாசிரியர்கள் தரும் எடுத்துக்காட்டுகளை வருமாறு காட்டலாம் ! :-

மண் + கடிது = மட் கடிது ×
மண் + கடிது = மண் கடிது √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + கடிது = பொற் கடிது ×
பொன் + கடிது = பொன் கடிது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + சிறிது = மட்  சிறிது ×
மண் + சிறிது = மண் சிறிது √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + சிறிது = பொற் சிறிது ×
பொன் + சிறிது = பொன் சிறிது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + தீது = மட்  டீது ×
மண் + தீது = மண் டீது √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + தீது = பொற் றீது ×
பொன் + தீது = பொன் தீது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + பெரிது = மட்  பெரிது ×
மண் + பெரிது = மண் பெரிது √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + பெரிது = பொற்  பெரிது ×
பொன் + பெரிது = பொன் பெரிது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + நெகிழ்ந்தது = மண்ணெகிழ்ந்தது √  (அல்வழிப் புணர்ச்சி)பொன் + நெகிழ்ந்தது = பொன்னெகிழ்ந்தது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + நீண்டது = மண்ணீண்டது √  (அல்வழிப் புணர்ச்சி)

பொன் + நீண்டது = பொன்னீண்டது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + மாண்டது = மண் மாண்டது √  (அல்வழிப் புணர்ச்சி)

பொன் + மாண்டது = பொன் மாண்டது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + யாது = மண் யாது √  (அல்வழிப் புணர்ச்சி)

பொன் + யாது = பொன் யாது √  (அல்வழிப் புணர்ச்சி)
மண் + வலிது = மண் வலிது √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + வலிது = பொன் வலிது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + நுந்தையது = மண்ணுந்தையது √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + நுந்தையது = பொன்னுந்தையது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + அடைந்தது = மண் அடைந்தது ×
மண் + அடைந்தது = மண்ணடைந்தது  √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + அடைந்தது = பொன் அடைந்தது   ×
பொன் + அடைந்தது = பொன்னடைந்தது √  (அல்வழிப் புணர்ச்சி)


மண் + ஆயிற்று = மண் ஆயிற்று ×
மண் + ஆயிற்று = மண்ணாயிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + ஆயிற்று = பொன் ஆயிற்று   ×
பொன் + ஆயிற்று = பொன்னாயிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + இல்லை = மண் இல்லை ×
மண் + இல்லை = மண்ணில்லை √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + இல்லை = பொன் இல்லை   ×
பொன் + இல்லை = பொன்னில்லை √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + ஈண்டிற்று = மண் ஈண்டிற்று ×
மண் + ஈண்டிற்று = மண்ணீண்டிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + ஈண்டிற்று = பொன் ஈண்டிற்று   ×
பொன் + ஈண்டிற்று = பொன்னீண்டிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)


மண் + உண்டு = மண் உண்டு ×
மண் + உண்டு = மண்ணுண்டு √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + உண்டு = பொன் உண்டு   ×
பொன் + உண்டு = பொன்னுண்டு √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + ஊட்டிற்று = மண் ஊட்டிற்று  ×
மண் + ஊட்டிற்று = மண்ணூட்டிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + ஊட்டிற்று = பொன் ஊட்டிற்று   ×
பொன் + ஊட்டிற்று = பொன்னூட்டிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)


மண் + எவ்விடத்தது = மண் எவ்விடத்தது ×
மண் + எவ்விடத்தது = மண்ணெவ்விடத்தது √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + எவ்விடத்தது = பொன் எவ்விடத்தது   ×
பொன் + எவ்விடத்தது = பொன்னெவ்விடத்தது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + ஏறிற்று = மண் ஏறிற்று ×
மண் + ஏறிற்று = மண்ணேறிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + ஏறிற்று = பொன் ஏறிற்று   ×
பொன் + ஏறிற்று = பொன்னேறிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)


மண் + ஐது = மண் ஐது ×
மண் + ஐது = மண்ணைது √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + ஐது = பொன் ஐது   ×
பொன் + ஐது = பொன்னைது √  (அல்வழிப் புணர்ச்சி)

மண் + ஒழுகிற்று = மண் ஒழுகிற்று ×
மண் + ஒழுகிற்று = மண்ணொழுகிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + ஒழுகிற்று = பொன் ஒழுகிற்று   ×
பொன் + ஒழுகிற்று = பொன்னொழுகிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)


மண் + ஓங்கிற்று = மண் ஓங்கிற்று ×
மண் + ஓங்கிற்று = மண்ணோங்கிற்று √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + ஓங்கிற்று = பொன் ஓங்கிற்று   ×
பொன் + ஓங்கிற்று = பொன்னோங்கிற்று  √  (அல்வழிப் புணர்ச்சி)


மண் + ஔவியது = மண் ஔவியது ×
மண் + ஔவியது = மண்ணௌவியது √  (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + ஔவியது = பொன் ஔவியது   ×
பொன் + ஔவியது = பொன்னௌவியது √  (அல்வழிப் புணர்ச்சி)

இறுதியாக இளம்பூரணரின் ஒரு விதிவிலக்கு !

இளம்பூரணர் – ‘ண்’ஈற்றுச் சொற்கள் சிலவற்றுக்குச்  சிறுபான்மை திரிபு ஏற்படுவதும் உண்டு என்கிறார் !

சாண் + கோல் = சாண் கோல்  √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
சாண் + கோல் = சாட் கோல்  √  (அல்வழிப் புணர்ச்சி) (ண் - திரிந்தது)

மேலே தொகுத்துக் கூறிய புணர்ச்சி விதிகளுக்கு மாறாகவும் உள்ளே , வேறு இயல்களில் ,சில புணர்ச்சி விதிவிலக்குகள் வரலாம் ! மொத்தமாகத் தொகுத்துக் கூறுவது மனப்பாடம் செய்து வைத்துக்கொள்வதற்கே !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (187)

Post by Dr.S.Soundarapandian on Sat Dec 28, 2013 9:16 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (187)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

முந்தைய ஆய்வில் , அல்வழிப் புணர்ச்சியில் , நிலைமொழி ஈறுகள் மாற்றமின்றிப் புணர்ந்ததைப் பார்த்தோம் !

தொடர்ந்து , வேற்றுமைப் புணர்ச்சியாக இருந்தாலும் , வல்லின எழுத்து அல்லாத எழுத்துகள்  சொல்லின் முதலிலே நின்று  ‘ண்’ , ‘ன்’ ஈறுகளைக் கொண்ட சொற்களோடு புணர்ந்தால் , இவ்வீறுகளில் திரிபு இராது என்கிறார் தொல்காப்பியர் ! :-

“வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்  தல்வழி
மேற்கூ  றியற்கை  யாவயி   னான” (தொகை . 6)

’மேற்கூறு இயற்கை’ – நிலைமொழித் திரிபின்மையைக் குறிக்கும் !
தொகை மரபு நூற்பா 5இல் இதற்கே விதி கூறப்பட்டது !

இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! :-

மண் + ஞாற்சி = மண் ஞாற்சி (வேற்றுமைப் புணர்ச்சி)
பொன் + ஞாற்சி = பொன் ஞாற்சி (வேற்றுமைப் புணர்ச்சி)

மண் + நீட்சி = மண்ணீட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)
பொன் + நீட்சி = பொன்னீட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)

மண் + மாட்சி = மண்மாட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)
பொன் + மாட்சி = பொன்மாட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)

மண் + யாப்பு = மண்யாப்பு (வேற்றுமைப் புணர்ச்சி)
பொன் + யாப்பு = பொன்யாப்பு (வேற்றுமைப் புணர்ச்சி)

மண் + வன்மை = மண்வன்மை (வேற்றுமைப் புணர்ச்சி)
பொன் + வன்மை = பொன்வன்மை (வேற்றுமைப் புணர்ச்சி)

மண் + அழகு = மண்ணழகு (வேற்றுமைப் புணர்ச்சி)
பொன் + அழகு = பொன்னழகு (வேற்றுமைப் புணர்ச்சி)

மண் + ஆக்கம் = மண்ணாக்கம் (வேற்றுமைப் புணர்ச்சி)
பொன் + ஆக்கம் = பொன்னாக்கம் (வேற்றுமைப் புணர்ச்சி)

மண் + இன்மை = மண்ணின்மை (வேற்றுமைப் புணர்ச்சி)
பொன் + இன்மை = பொன்னின்மை (வேற்றுமைப் புணர்ச்சி)

எந்த இடத்தும் நிலைமொழி ஈற்றிலே மாற்றம் எதுவும் இல்லை என்பதைக் காண்க !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (188)

Post by Dr.S.Soundarapandian on Sat Dec 28, 2013 11:45 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (188)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

சொல் + நன்று = சொன்னன்று
மான் + நன்று = மானன்று
- இந்தப் புணர்ச்சிகளுக்குத் தொல்காப்பியர் விதி உள்ளதா?

எங்கே உள்ளது ?

இதே தொகைமரபில்தான் !

இதோ அவ் விதி ! :-

“லனவென வரூஉம் புள்ளி முன்னர்த்
தந  வெனவரிற் றனவா கும்மே ” (தொகை . 7)

‘ல ன என வரும் புள்ளி முன்னர்’ – ‘ல்’ ,’ன்’ ஆகிய எழுத்துகளை ஈற்றிலே கொண்ட சொற்களின் முன்னர்’ ,
‘த ந என வரின்’ – ‘த’ , ‘ந’ ஆகிய எழுத்துகளை முதற்கண் கொண்ட சொற்கள் வந்தால் ,
‘ற ன ஆகும்’ –  ‘த’ , ‘ந’  ஆகியன ‘ ற’ , ‘ ன’  ஆகத் திரியும் !  

எடுத்துக்காட்டுகள் ! : -

கல் + தீது = கஃறீது (அல்வழிப் புணர்ச்சி)
கல் + நன்று = கன்னன்று (அல்வழிப் புணர்ச்சி)
பல் + நன்று = பன்னன்று (அல்வழிப் புணர்ச்சி)
பொன் + நன்று = பொன்னன்று (அல்வழிப் புணர்ச்சி)

அடுத்து வரும் புணர்ச்சி :-

“ணளவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும்”  (தொகை . 8)

அஃதாவது –
அதே த , ந  இரண்டும் ,  ‘ண்’ , ‘ள்’ ஆகிய எழுத்துகளின் முன் வந்தால் , ட , ண ஆகியனவாக மாறும் ! –
மண் + தீது = மண்டீது ( த் , ட் ஆனது) (அல்வழிப் புணர்ச்சி)
மண் + நன்று = மண்ணன்று ( ந , ண ஆனது) (அல்வழிப் புணர்ச்சி)
முள் + தீது = முஃடீது ( த் , ட் ஆனது) (அல்வழிப் புணர்ச்சி)
முள் + நன்று = முண்ணன்று ( ந , ண ஆனது) (அல்வழிப் புணர்ச்சி)

இதே முறையில் ,

பண் + தீது = பண்டீது (த் , ட் ஆனது) (அல்வழிப் புணர்ச்சி)
கண் + தீது = கண்டீது (த் , ட் ஆனது) (அல்வழிப் புணர்ச்சி)
பண் + நன்று = பண்ணன்று (ந , ண ஆனது) (அல்வழிப் புணர்ச்சி)
தாள் + நன்று = தாணன்று (ந , ண  ஆனது) (அல்வழிப் புணர்ச்சி)

என வரும் !


***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (189)

Post by Dr.S.Soundarapandian on Sat Dec 28, 2013 12:56 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (189)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

முன் நூற்பாக்களில் (தொகை .1-8 ) நிலைமொழிகள் பெயர்ச்சொற்களாக இருந்ததைக் கவனித்திருப்பீர்கள் !

இந்த நூற்பாவில் , வினையை நிலைமொழியாக்கிப் புணர்ச்சி விதி கூறுகிறார் தொல்காப்பியர் !

வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் , முன்னிலை வினைச் சொற்களுடன் புணர்ந்தால் கீழ்வருமாறு புணருமாம் ! :-

எறி + கொற்றா = எறிகொற்றா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
எறி + சாத்தா = எறிசாத்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
எறி + தேவா = எறிதேவா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
எறி + பூதா = எறிபூதா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

கொணா + கொற்றா = கொணாகொற்றா √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
கொணா + கொற்றா = கொணாக்கொற்றா× (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

கொணா + சாத்தா = கொணாசாத்தா √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
கொணா + சாத்தா = கொணாச்சாத்தா× (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

கொணா + தேவா = கொணாதேவா √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
கொணா + தேவா = கொணாத்தேவா × (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)


கொணா + பூதா = கொணாபூதா √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
கொணா + பூதா = கொணாப்பூதா× (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

(கொணா - கொண்டுவா)

எறி , கொணா – ஆகியன முன்னிலை வினைச்சொற்களாகும் .

இயல்புப் புணர்ச்சிகளை மேலே பார்த்தோம் !

இனி,இளம்பூரணர் சில  உறழ்வுப் புணர்சிகளைக் காட்டுகிறார் !  :-

(1) நட + கொற்றா = நட கொற்றா√ (அல்வழிப் புணர்ச்சி)
நட + கொற்றா = நட க்கொற்றா√ (அல்வழிப் புணர்ச்சி)

( க் – சந்தி தோன்றாதும் தோன்றியும் வந்துள்ளதால் , ‘உறழ்ச்சி’)

(2) ஈர் + கொற்றா = ஈர் கொற்றா√ (அல்வழிப் புணர்ச்சி)
ஈர் + கொற்றா = ஈர்க்கொற்றா√ (அல்வழிப் புணர்ச்சி)

இதற்குத் தொல்காப்பிய விதி ! :-

”உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும்
புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும்
இயல்பா குநவு முறழ்பா குநவுமென்
றாயீ ரியல வல்லெழுத்து வரினே”  (தொகை . 9)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (190)

Post by Dr.S.Soundarapandian on Sat Dec 28, 2013 6:54 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (190)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

எறி , உண் ,தின் முதலிய முன்னிலை  வினைச்சொற்களின் புணர்ச்சிகளை இதற்கு முந்தைய ஆய்வில் பார்த்தோம் !

ஆனால் , முன்னிலை வினையானாலும் , சில சொற்கள் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களோடு புணரும்போது , இயல்பாகவோ உறழ்ந்தோ வராமலும் இருக்கும் என்கிறார் தொல்காப்பியர் !

அப்படிப்பட்ட  முன்னிலை வினைகளை அவர் வாக்கில் கேட்போம் ! :-

“ஔவென வரூஉ  முயிரிறு சொல்லும்
ஞநமவ  வென்னும் புள்ளி யிறுதியுங்
குற்றிய  லுகரத்  திறுதியு முளப்பட
முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே ” (தொகை . 10)

இயல்பாகவும் ஒற்றுப் பெற்றும் புணராத முன்னிலை வினைகள்
, இளம்பூரணரை ஒட்டி –

1 . கௌ கொற்றா ×   ,  கௌக் கொற்றா ×

2 . உரிஞ் கொற்றா ×  ,  உரிஞ்க் கொற்றா ×

3 . பொருந் கொற்றா × , பொருந்க் கொற்றா ×

4 . திரும் கொற்றா × , திரும்க் கொற்றா ×

5 . தெவ் கொற்றா × ,  தெவ்க் கொற்றா ×

ஆனால், இம் முன்னிலை வினைகளை ( ‘கௌ’முதலியன) , வல்லெழுத்தை முதலாக உடைய சொற்களுடன் புணர்த்துவதற்கு ஒரு வழி இருக்கிறது என்கிறார் இளம்பூரணர் !

இளம்பூரணர் கூறிய வழியின்படி –

1 . கௌ + வ் + உ + கொற்றா = கௌவு கொற்றா √(உகரச் சாரியை சேர்க்கப்பட்டுள்ளது ; வ் – உடம்படு மெய்) (அல்வழிப் புணர்ச்சி)
கௌ + வ் + உ + கொற்றா = கௌவுக் கொற்றா √(உகரச் சாரியை சேர்க்கப்பட்டுள்ளது ; க் – சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)

இதே முறையில் ,
2 . உரிஞ் + உ + கொற்றா = உரிஞு கொற்றா √(அல்வழிப் புணர்ச்சி)
உரிஞ் + உ + கொற்றா = உரிஞுக் கொற்றா √(அல்வழிப் புணர்ச்சி)

3 . பொருந் + உ + கொற்றா = பொருநு கொற்றா √(அல்வழிப் புணர்ச்சி)
பொருந் + உ + கொற்றா = பொருநுக் கொற்றா √(அல்வழிப் புணர்ச்சி)

4 . திரும் + உ + கொற்றா = திருமு கொற்றா √(அல்வழிப் புணர்ச்சி)
திரும் + உ + கொற்றா = திருமுக் கொற்றா √(அல்வழிப் புணர்ச்சி)

5. தெவ் + உ + கொற்றா = தெவ்வு கொற்றா √(அல்வழிப் புணர்ச்சி)
தெவ் + உ + கொற்றா = தெவ்வுக் கொற்றா √(அல்வழிப் புணர்ச்சி)

6 . கூடு + கொற்றா = கூடு கொற்றா √ (குற்றியலுகரத்தை ஈற்றிலே கொண்டுள்ளதால் , உகரச் சாரியை இயையாது ) √(அல்வழிப் புணர்ச்சி)
கூடு + கொற்றா = கூடுக் கொற்றா √(அல்வழிப் புணர்ச்சி)

தொல்காப்பிய நூற்பாவையும் , இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளையும் ஆழ்ந்து நோக்கினால் , ஒரு பெரிய உண்மை தெளிவாகிறது ! அஃதாவது , தொல்காப்பியர் நூற்பாவை எழுதும்போதே அதற்கான எடுத்துக்காட்டுகளை மனதிற்கொண்டே எழுதியிருப்பார் ! தொல்காப்பியர் தம் மாணவர்களுக்கு அந்த எடுத்துக்காட்டுகளைத்தான் கூறியிருப்பார் ! அந்த எடுத்துக்காட்டுகள் மாணவப் பரம்பரையாக வந்து  ,  இளம்பூரணர் கூறியவற்றிலும்  தங்கியிருக்கும் !  

இந்த அடிப்படையில் ஆயும்போது , மேலே நாம் பார்த்த வினைகள் தொல்காப்பியருக்கும் முற்பட்ட தமிழ் வினைகள் (Tamil verbs before Tholkappiyar) என்று கூற இடம் ஏற்படுகிறது !


***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (191)

Post by Dr.S.Soundarapandian on Sat Jan 04, 2014 4:20 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (191)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

 ‘அவன் + கை = அவன் கை’ – இது சரியா?
 ‘அவன் + கை = அவற் கை’ – இது சரியா?
எது சரி?
தொல்காப்பிய விதி யாது?


இதோ :-

“உயிரீ றாகிய வுயர்திணைப் பெயரும்
புள்ளி யிறுதி யுயர்திணைப் பெயரும்
எல்லா வழியு மியல்பென மொழிப” (தொகை . 11)

இதன் சுருக்கப் பொருள் – உயிர் எழுத்தை அல்லது மெய் எழுத்தை ஈற்றிலே கொண்ட உயர்திணைசப் பெயர்ச்சொற்களாக சொற்களாக இருந்தால், வேற்றுமையானாலும் அல்வழியானாலும் , அச் சொற்களின் புணர்ச்சி இயல்புப் புணர்ச்சி ஆகும் !

மேலே பார்த்த ‘அவன்’ என்பது உயர்திணைச் சொல்தான் !

எனவே , அவன் + கை = அவன் கை √ (அல்வழிப் புணர்ச்சி)
அவன் + கை = அவற் கை ×

மேலைச் சூத்திரத்திற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! :-

நம்பி + குறியன் = நம்பிக் குறியன் ×
நம்பி + குறியன் = நம்பி குறியன் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + சிறியன் = நம்பிச் சிறியன் ×
நம்பி + சிறியன் = நம்பி சிறியன் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + தீயன் = நம்பித்  தீயன் ×
நம்பி + தீயன் = நம்பி தீயன் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + பெரியன் = நம்பிப் பெரியன் ×
நம்பி + பெரியன் = நம்பி பெரியன் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + ஞான்றான் = நம்பிஞ் ஞான்றான் ×
நம்பி + ஞான்றான் = நம்பி ஞான்றான் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + நீண்டான் = நம்பிந் நீண்டான் ×
நம்பி + நீண்டான் = நம்பி நீண்டான் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + மாண்டான் = நம்பிம் மாண்டான் ×
நம்பி + மாண்டான் = நம்பி மாண்டான் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + குறியன் = நம்பிக் குறியன் ×
நம்பி + குறியன் = நம்பி குறியன் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + யாவன் = நம்பிய் யாவன் ×
நம்பி + யாவன் = நம்பி யாவன் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + வலியன் = நம்பிவ்  வலியன் ×
நம்பி + வலியன் = நம்பி வலியன் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + அடைந்தான் = நம்பி அடைந்தான் ×
நம்பி + அடைந்தான் = நம்பி யடைந்தான் √  (அல்வழிப் புணர்ச்சி)(யகர உடம்படு மெய் வந்தாலும் அஃது இயல்புப் புணர்சியே !)

நம்பி + ஔவியத்தான் = நம்பி  ஔவியத்தான் ×
நம்பி + ஔவியத்தான் = நம்பி யௌவியத்தான் √  (அல்வழிப் புணர்ச்சி)

நம்பி + கை = நம்பிக் கை ×
நம்பி + கை = நம்பி கை √  (வேற்றுமைப் புணர்ச்சி)

நம்பி + செவி = நம்பிச் செவி ×
நம்பி + செவி = நம்பி செவி √  (வேற்றுமைப் புணர்ச்சி)

நம்பி + தலை = நம்பித் தலை ×
நம்பி + தலை = நம்பி தலை √  (வேற்றுமைப் புணர்ச்சி)

நம்பி + புறம்= நம்பிப் புறம் ×
நம்பி + புறம் = நம்பி புறம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)

நம்பி + ஞாற்சி = நம்பிஞ் ஞாற்சி ×
நம்பி + ஞாற்சி = நம்பி  ஞாற்சி √  (வேற்றுமைப் புணர்ச்சி)

நம்பி + நீட்சி = நம்பிந் நீட்சி ×
நம்பி + நீட்சி = நம்பி நீட்சி √  (வேற்றுமைப் புணர்ச்சி)

நம்பி + யாப்பு = நம்பிய் யாப்பு ×
நம்பி + யாப்பு = நம்பி யாப்பு √  (வேற்றுமைப் புணர்ச்சி)

நம்பி + வலிமை = நம்பிவ் வலிமை ×
நம்பி + வலிமை = நம்பி வலிமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)

நம்பி + அடைபு = நம்பி அடைபு ×
நம்பி + அடைபு = நம்பி யடைபு √  (வேற்றுமைப் புணர்ச்சி)

நம்பி + ஔவியம் = நம்பி ஔவியம் ×
நம்பி + ஔவியம் = நம்பியௌவியம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)

- மேலே ‘நம்பி’ எனும் உயிரெழுத்தை ஈற்றிலே கொண்ட உயர்திணைச் சொல்லின் புணர்ச்சிகளைப் பார்த்தோம் !
இனி ,  ‘அவன்’ எனும் மெய்யெழுத்தை ஈற்றிலே கொண்ட உயர்திணைச் சொல்லின் புணர்சிகளைப் பார்ப்போம் ! :-

அவன் + குறியன் = அவற் குறியன் ×
அவன் + குறியன் = அவன் குறியன் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + சிறியன் = அவற் சிறியன் ×
அவன் + சிறியன் = அவன் சிறியன் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + தீயன் = அவற்  றீயன் ×
அவன் + தீயன் = அவன் தீயன் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + பெரியன் = அவற் பெரியன் ×
அவன் + பெரியன் = அவன் பெரியன் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + ஞான்றான் = அவன்ஞ் ஞான்றான் ×
அவன் + ஞான்றான் = அவன் ஞான்றான் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + நீண்டான் = அவந் நீண்டான் ×
அவன் + நீண்டான் = அவன் நீண்டான் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + மாண்டான் = அவன்ம் மாண்டான் ×
அவன் + மாண்டான் = அவன் மாண்டான் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + குறியன் = அவற் குறியன் ×
அவன் + குறியன் = அவன் குறியன் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + யாவன் = அவன் யாவன் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + வலியன் = அவன்வ்  வலியன் ×
அவன் + வலியன் = அவன் வலியன் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + அடைந்தான் = அவன் அடைந்தான் ×
அவன் + அடைந்தான் = அவனடைந்தான் √  (அல்வழிப் புணர்ச்சி)(மெய் மீது உயிர் ஏறினாலும் அஃது இயல்புப் புணர்சியே !)

அவன் + ஔவியத்தான் = அவன்  ஔவியத்தான் ×
அவன் + ஔவியத்தான் = அவனௌவியத்தான் √  (அல்வழிப் புணர்ச்சி)

அவன் + கை = அவற் கை ×
அவன் + கை = அவன் கை √  (வேற்றுமைப் புணர்ச்சி)

அவன் + செவி = அவற் செவி ×
அவன் + செவி = அவன் செவி √  (வேற்றுமைப் புணர்ச்சி)

அவன் + தலை = அவற் றலை ×
அவன் + தலை = அவன் தலை √  (வேற்றுமைப் புணர்ச்சி)

அவன் + புறம்= அவற் புறம் ×
அவன் + புறம் = அவன் புறம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)


அவன் + ஞாற்சி = அவன்  ஞாற்சி √  (வேற்றுமைப் புணர்ச்சி)

அவன் + நீட்சி = அவன் நீட்சி √  (வேற்றுமைப் புணர்ச்சி)

அவன் + யாப்பு = அவன் யாப்பு √  (வேற்றுமைப் புணர்ச்சி)

அவன் + வலிமை = அவன் வலிமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)

அவன் + அடைபு = அவன் அடைபு ×
அவன் + அடைபு = அவனடைபு √  (வேற்றுமைப் புணர்ச்சி)

அவன் + ஔவியம் = அவன் ஔவியம் ×
அவன் + ஔவியம் = அவனௌவியம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒருவேன் + குறியன் = ஒருவேற்  குறியேன் ×
ஒருவேன் + குறியன் = ஒருவேன்  குறியேன் √ (அல்வழிப் புணர்ச்சி)

ஒருவேன் + சிறியன் = ஒருவேற்  சிறியேன் ×
ஒருவேன் + சிறியன் = ஒருவேன்  சிறியேன் √ (அல்வழிப் புணர்ச்சி)

ஒருவேன் + கை = ஒருவேற்  கை ×
ஒருவேன் + கை = ஒருவேன்  கை √ (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒருவேன் + செவி = ஒருவேற்  செவி ×
ஒருவேன் + செவி = ஒருவேன்  செவி √ (வேற்றுமைப் புணர்ச்சி)மேற் சூத்திரத்திற்கு (தொகை .11) விதி விலக்குகளை இளம்பூரணர் வரைகிறார் ! அவற்றை விரித்துக்காட்டலாம் ! :-

பலர் + சான்றார் = பல் சான்றார் √  ( ‘பலர்’ , ‘பல்’ ஆகத் திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
பலர் + சான்றார் = பல் சான்றார் ×


கபிலர் + பரணர் = கபில பரணர் √   (அல்வழிப் புணர்ச்சி)
கபிலர் + பரணர் = கபிலர் பரணர் ×

 இறைவன் + நெடுவேட்டுவர் = இறைவ நெடுவேட்டுவர் √ (அல்வழிப் புணர்ச்சி)

பலர் + அரசர் = பல்லரசர் √ (அல்வழிப் புணர்ச்சி)
 பலர் + அரசர் = பலர் அரசர் ×

கோலிகன் + கருவி = கோலிகக்  கருவி √ (வேற்றுமைப் புணர்ச்சி)


வண்ணார் + பாடி = வண்ணாரப் பாடி  √(வேற்றுமைப் புணர்ச்சி)

ஆசீவகர் + பள்ளி = ஆசீவகப்  பள்ளி √ (வேற்றுமைப் புணர்ச்சி)

குமரன் + கோட்டம் = குமரக்  கோட்டம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
குமரன் + கோட்டம் = குமர  கோட்டம்  √(வேற்றுமைப் புணர்ச்சி)

பிரமன் + கோட்டம் = பிரமக்  கோட்டம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
பிரமன் + கோட்டம் = பிரம  கோட்டம்  √(வேற்றுமைப் புணர்ச்சி)

உண்ப + சான்றார் = உண்பச் சான்றார்×
உண்ப + சான்றார் = உண்ப சான்றார் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ர்ச்சி)
உண்டார் + சான்றார் = உண்டார்ச் சான்றார்×
உண்டார் + சான்றார் = உண்டார் சான்றார் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ர்ச்சி)

உண்பேன் + பழம் = உண்பேற் பழம் ×
உண்பேன் + பழம் = உண்பேன் பழம் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ர்ச்சி)

பார்ப்பேன் + காட்சி = பார்ப்பேற் காட்சி×
பார்ப்பேன் + காட்சி = பார்ப்பேன் காட்சி √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ர்ச்சி)

உண்டேம்  + நாம் = உண்டே நாம் (அல்வழிப் புணர்ச்சி) (திரிபுப் புணர்ச்சி)

உண்டேம்  + சான்றேம் = உண்டேஞ்  சான்றேம் (அல்வழிப் புணர்ச்சி) (திரிபுப் புணர்ச்சி)

உண்டனெம்  + சான்றேம் = உண்டனெஞ்  சான்றேம் (அல்வழிப் புணர்ச்சி) (திரிபுப் புணர்ச்சி)

     நச்சினார்க்கினியர் தரும் சில கூடுதல் குறிப்புகளை வருமாறு காட்டலாம் ! :-

1 . உண்ப + சான்றார் = உண்ப சான்றார் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
உண்ப + சான்றார் = உண்பச்  சான்றார் ×
(உண்ப – படர்க்கை வினை முற்று)

2 . உண்ப + பர்ப்பார் = உண்ப பார்ப்பார்√ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
உண்ப + பர்ப்பார் = உண்பப்  பார்ப்பார் ×

3. உண்டார் + சான்றார் = உண்டார் சான்றார் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
உண்டார் + சான்றார் = உண்டார்ச் சான்றார் ×
(உண்டார் – படர்க்கை வினைமுற்று)

4 . உண்டார் + பார்ப்பார் = உண்டார் பார்ப்பார் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
உண்டார் + பார்ப்பார் = உண்டார்ப் பார்ப்பார் √(

5. உண்டீர் + சான்றீர் = உண்டீர் சான்றீர்√(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
உண்டீர் + சான்றீர் = உண்டீர்ச்  சான்றீர்×
(உண்டீர் – முன்னிலை வினைமுற்று)

6 . உண்டீர் + பார்ப்பீர் = உண்டீர் பார்ப்பீர் (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

7 . உண்பல் + சாத்தா = உண்பல்  சாத்தா√ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
உண்பல் + சாத்தா = உண்பற்  சாத்தா ×
(உண்பல் – தன்மை வினைமுற்று)

8. உண்டேன் + சாத்தா = உண்டேன் சாத்தா√ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
உண்டேன் + சாத்தா = உண்டேற் சாத்தா×
(உண்டேன் – தன்மை வினைமுற்று)

9 . உண்பேன் + சாத்தா = உண்பேன் சாத்தா √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
உண்பேன் + சாத்தா = உண்பேற் சாத்தா ×
(உண்பேன் – தன்மை வினைமுற்று)

10 . உண்கு + வருது = உண்கு வருது √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

(உண்கு வருது – உண்ண  வருவேன்)

11 . உண்டு + வருது = உண்டு வருது √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

(உண்டு வருது – உண்டு  வருவேன்)

12 . உண்கு + சேறு = உண்கு சேறு √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
உண்கு + சேறு = உண்குச் சேறு ×

(உண்கு சேறு – உண்ணச் செல்வேன்)

13 . உண்டு + சேறு = உண்டு சேறு √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
உண்டு + சேறு = உண்டுச் சேறு ×

(உண்டு சேறு – உண்டு செல்வேன்)

நச்சினார்க்கினியர் , “நீ , நீயிர் என்பன முன்னிலை விரவுப் பெயர் ஆதலின் ஈண்டைக்கு ஆகா ” என்கிறார் ! ஆகா !

அஃதாவது – ‘நீ’ , ‘நீயிர்’ ஆகியன , உயர்திணைக்கு மட்டுமின்றி அஃறிணைக்கும் வருமாதலால் , உயர்திணைச் சொற்கள் பற்றிய இந் நூற்பாவிற்கு இவை  பொருந்தா என்கிறார் நச்சினார்க்கினியர் !

நச் என்றுதான் கூறியுள்ளார் !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (192)

Post by Dr.S.Soundarapandian on Sun Jan 05, 2014 5:41 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (192)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

உயர்திணைப் பெயர்களின் இயல்புப் புணர்ச்சிகளை முந்தைய ஆய்வில் பார்த்தோம் !

அடுத்த நூற்பாவில் , அதற்கு ஒரு விதி விலக்கைக் கூறவருகிறார் தொல்காப்பியர் ! :-

“அவற்றுள்
இகரவீற்  றுப்பெயர்  திரிபிட  னுடைத்தே” (தொகை . 12)

என்ன விதி விலக்கு?

பெயர்ச்சொல்லாக இருந்தாலும் , ‘இ’யில் முடியும் சில பெயர்கள் , திரிந்து முடியும் புணர்ச்சிகளையும் நாம் காணலாம் !
இதுவே தொல்காப்பியர் கூறிய விதி விலக்கு !


இதற்குச் சான்றுகள் !:-
எட்டி + பூ = எட்டிப் பூ (வேற்றுமைப் புணர்ச்சி)(தோன்றல் புணர்ச்சி)
எட்டி + புரவு = எட்டிப் புரவு (வேற்றுமைப் புணர்ச்சி)(தோன்றல் புணர்ச்சி)
காவிதி + பூ = காவிதிப் பூ (வேற்றுமைப் புணர்ச்சி)(தோன்றல் புணர்ச்சி)
காவிதி + புரவு = காவிதிப்  புரவு (வேற்றுமைப் புணர்ச்சி)(தோன்றல் புணர்ச்சி)
நம்பி + பூ = நம்பிப் பூ (வேற்றுமைப் புணர்ச்சி)(தோன்றல் புணர்ச்சி)
நம்பி + பேறு = நம்பிப் பேறு (வேற்றுமைப் புணர்ச்சி)(தோன்றல் புணர்ச்சி)

இங்கே , ஓர் இலக்கணக் குறிப்பு ! தருபவர் இளம்பூரணர் !

இளம்பூரணர் கருத்துப்படி , இகர ஈற்றுப் பெயர்கள் மட்டுமல்லாது , ஐகார ஈற்றுப் பெயர்கள் சிலவும் திரிந்து முடியும் !
சான்றுகள் –
தினை + பூ = தினை பூ ×
தினை + பூ = தினைப்  பூ √ (வேற்றுமைப் புணர்ச்சி)(தோன்றல் புணர்ச்சி)

தினை + புரவு = தினை புரவு ×
தினை + புரவு = தினைப்  புரவு √ (வேற்றுமைப் புணர்ச்சி)(தோன்றல் புணர்ச்சி)

சரி ! உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொருந்தக்கூடிய பெயர் (இதுவே விரவுப் பெயர்) வந்தால் , புணர்ச்சி எப்படி இருக்கும் ?
தொல்காப்பியர் விடை ! –
“அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே” (தொகை . 13)

அஃதாவது , விரவுப் பெயராக இருந்தால் , இயல்புப் புணர்ச்சியும் வரும் , திரிபுப் புணர்ச்சியும் வரும் என்கிறார் தொல்காப்பியர் !
இயல்புப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டுகள் !-
சாத்தன் + குறியன் = சாத்தற் குறியன் ×
சாத்தன் + குறியன் = சாத்தன் குறியன்√ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

சாத்தன் + குறிது = சாத்தற் குறிது ×
சாத்தன் + குறிது = சாத்தன் குறிது√ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

சாத்தன் + கை = சாத்தற் கை ×
சாத்தன் + கை = சாத்தன் கை√ (வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

‘சாத்தன் குறியன்’ எனும்போது , ‘சாத்தன்’ , ஆளைக் குறிக்கும் ! ‘சாத்தன் குறிது’ எனும்போது , ‘சாத்தன்’ என்பது மாட்டையோ வேறு விலங்கையோ குறிக்கும் !

இந் நூற்பாவிற்கு (தொகை . 13)நச்சினார்க்கினியர் தந்த  சுருக்க எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கிக் காட்டலாம் ! :-
1 . சாத்தன் + சிறியன் = சாத்தற் சிறியன் ×
 சாத்தன் + சிறியன் = சாத்தன்  சிறியன் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

2 . சாத்தன் + தீயன் = சாத்தற் றீயன் ×
 சாத்தன் + தீயன் = சாத்தன்  தீயன் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

3 . சாத்தன் + பெரியன் = சாத்தற் பெரியன் ×
 சாத்தன் + பெரியன் = சாத்தன்  பெரியன் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

4. கொற்றன் + குறியன் = கொற்றற் குறியன் ×
 கொற்றன் + குறியன் = கொற்றன்  குறியன் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

5. கொற்றன் + சிறியன் = கொற்றற் சிறியன் ×
 கொற்றன் + சிறியன் = கொற்றன்  சிறியன் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

6. கொற்றன் + தீயன் = கொற்றற் றீயன் ×
 கொற்றன் + தீயன் = கொற்றன்  தீயன் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

7. கொற்றன் + பெரியன் = கொற்றற் பெரியன் ×
 கொற்றன் + பெரியன் = கொற்றன்  பெரியன் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

8. சாத்தி + குறியள் = சாத்திக் குறியள் ×
 சாத்தி + குறியள் = சாத்தி  குறியள் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

9. சாத்தி + சிறியள் = சாத்திச் சிறியள் ×
 சாத்தி + சிறியள் = சாத்தி  சிறியள் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

10. சாத்தி + தீயள் = சாத்தித் தீயள் ×
 சாத்தி + தீயள் = சாத்தி  தீயள் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

11. சாத்தி + பெரியள் = சாத்திப் பெரியள் ×
 சாத்தி + பெரியள் = சாத்தி  பெரியள் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

12. கொற்றி + குறியள் = கொற்றிக் குறியள் ×
 கொற்றி + குறியள் = கொற்றி  குறியள் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

13. கொற்றி + சிறியள் = கொற்றிச் சிறியள் ×
 கொற்றி + சிறியள் = கொற்றி  சிறியள் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

14. கொற்றி + தீயள் = கொற்றித் தீயள் ×
 கொற்றி + தீயள் = கொற்றி  தீயள் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

15. கொற்றி + பெரியள் = கொற்றிப் பெரியள் ×
 கொற்றி + பெரியள் = கொற்றி  பெரியள் √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

16. சாத்தன் + ஞான்றான் = சாத்தஞ்  ஞான்றான் ×
சாத்தன் + ஞான்றான் = சாத்தன்  ஞான்றான் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

17. சாத்தன் + நீண்டான் = சாத்தந்  நீண்டான்×
சாத்தன் + நீண்டான் = சாத்தன்  நீண்டான் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

18. சாத்தன் + மாண்டான் = சாத்தம்  மாண்டான்×
சாத்தன் + மாண்டான் = சாத்தன்  மாண்டான் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

19. சாத்தன் + யாவன் = சாத்தனி  யாவன் ×
சாத்தன் + யாவன் = சாத்தன் யாவன் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

20. சாத்தன் + வலியன் = சாத்த  வலியன்×
சாத்தன் + வலியன் = சாத்தன்  வலியன் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

21. கொற்றன் + ஞான்றான் = கொற்றஞ்  ஞான்றான் ×
கொற்றன் + ஞான்றான் = கொற்றன்  ஞான்றான் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

22. கொற்றன் + நீண்டான் = கொற்றந்  நீண்டான் ×
கொற்றன் + நீண்டான் = கொற்றன்  நீண்டான் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

23. கொற்றன் + மாண்டான் = கொற்றம்  மாண்டான் ×
கொற்றன் + மாண்டான் = கொற்றன்  மாண்டான் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

24. கொற்றன் + யாவன் = கொற்றனி  யாவன் ×
கொற்றன் + யாவன் = கொற்றன்  யாவன் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

25. கொற்றன் + வலியன் = கொற்றவ்  வலியன் ×
கொற்றன் + வலியன் = கொற்றன்  வலியன் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

26. சாத்தி + ஞான்றாள் = சாத்திஞ்  ஞான்றாள் ×
சாத்தி + ஞான்றாள் = சாத்தி  ஞான்றாள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

27. சாத்தி + நீண்டாள் = சாத்திந்  நீண்டாள் ×
சாத்தி + நீண்டாள் = சாத்தி  நீண்டாள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

28. சாத்தி + மாண்டாள் = சாத்திம்  மாண்டாள் ×
சாத்தி + மாண்டாள் = சாத்தி  மாண்டாள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

29. சாத்தி + யாவள் = சாத்திய்  யாவள் ×
சாத்தி + யாவள்= சாத்தி  யாவள்√(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

30. சாத்தி + வலியள் = சாத்திவ்  வலியள் ×
சாத்தி + வலியள் = சாத்தி  வலியள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

31. கொற்றி + ஞான்றாள் = கொற்றிஞ்  ஞான்றாள் ×
கொற்றி + ஞான்றாள் = கொற்றி  ஞான்றாள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

32. கொற்றி + நீண்டாள் = கொற்றிந்  நீண்டாள் ×
கொற்றி + நீண்டாள் = கொற்றி  நீண்டாள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

33. கொற்றி + மாண்டாள் = கொற்றிம்  மாண்டாள் ×
கொற்றி + மாண்டாள் = கொற்றி  மாண்டாள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

34. கொற்றி + யாவள் = கொற்றிய்  யாவள் ×
கொற்றி + யாவள்= கொற்றி  யாவள்√(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

35. கொற்றி + வலியள் = கொற்றிவ்  வலியள் ×
கொற்றி + வலியள் = கொற்றி  வலியள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

36. சாத்தன் + அடைந்தான் = சாத்தன்  அடைந்தான் ×
சாத்தன் + அடைந்தான் = சாத்தனடைந்தான் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

37. சாத்தன் + ஔவியத்தான் = சாத்தன்  ஔவியத்தான் ×
சாத்தன் + ஔவியத்தான் = சாத்தனௌவியத்தான் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

38. கொற்றன் + அடைந்தான் = கொற்றன்  அடைந்தான் ×
கொற்றன் + அடைந்தான் = கொற்றனடைந்தான் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

39. கொற்றன் + ஔவியத்தான் = கொற்றன்  ஔவியத்தான் ×
கொற்றன் + ஔவியத்தான் = கொற்றனௌவியத்தான் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

40. சாத்தி + அடைந்தாள் = சாத்தி  அடைந்தாள்×
சாத்தி + அடைந்தாள் = சாத்தியடைந்தாள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)(உடம்படு மெய் பெற்றாலும் இயல்புப் புணர்ச்சியே)

41. சாத்தி + ஔவியத்தாள் = சாத்தி  ஔவியத்தாள் ×
சாத்தி + ஔவியத்தாள் = சாத்தியௌவியத்தாள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

42. கொற்றி + அடைந்தாள் = கொற்றி  அடைந்தாள் ×
கொற்றி + அடைந்தாள் = கொற்றியடைந்தாள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

43. கொற்றி + ஔவியத்தாள் = கொற்றி  ஔவியத்தாள் ×
கொற்றி + ஔவியத்தாள் = கொற்றியௌவியத்தாள் √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

44. சாத்தன் + கை = சாத்தற் கை ×
சாத்தன் + கை = சாத்தன் கை √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

45.  சாத்தன் + செவி = சாத்தற் செவி ×
சாத்தன் + செவி = சாத்தன் செவி √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

46. சாத்தன் + தலை = சாத்தற் றலை ×
சாத்தன் + தலை = சாத்தன் தலை √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

47. சாத்தன் + புறம் = சாத்தற் புறம் ×
சாத்தன் + புறம் = சாத்தன் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

48. சாத்தன் + ஞாற்சி = சாத்தஞ் ஞாற்சி ×
சாத்தன் + ஞாற்சி = சாத்தன் ஞாற்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

49. சாத்தன் + நீட்சி = சாத்தந் நீட்சி ×
சாத்தன் + நீட்சி = சாத்தன் நீட்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

50. சாத்தன் + மாட்சி = சாத்தம் மாட்சி ×
சாத்தன் + மாட்சி = சாத்தன் மாட்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

51. சாத்தன் + யாப்பு = சாத்தனி யாப்பு ×
சாத்தன் + யாப்பு = சாத்தன் யாப்பு √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

52. சாத்தன் + வன்மை = சாத்த வன்மை ×
சாத்தன் + வன்மை = சாத்தன் வன்மை √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

53. சாத்தன் + அழகு = சாத்தன் அழகு ×
சாத்தன் + அழகு = சாத்தனழகு √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

54. சாத்தன் + ஔவியம் = சாத்தன் ஔவியம் ×
சாத்தன் + ஔவியம் = சாத்தனௌவியம் √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

55. கொற்றன் + கை = கொற்றற் கை ×
கொற்றன் + கை = கொற்றன் கை √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

56.  கொற்றன் + செவி = கொற்றற் செவி ×
கொற்றன் + செவி = கொற்றன் செவி √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

57. கொற்றன் + தலை = கொற்றற் றலை ×
கொற்றன் + தலை = கொற்றன் தலை √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

58. கொற்றன் + புறம் = கொற்றற் புறம் ×
கொற்றன் + புறம் = கொற்றன் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

59. கொற்றன் + ஞாற்சி = கொற்றஞ் ஞாற்சி ×
கொற்றன் + ஞாற்சி = கொற்றன் ஞாற்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

60. கொற்றன் + நீட்சி = கொற்றந் நீட்சி ×
கொற்றன் + நீட்சி = கொற்றன் நீட்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

61. கொற்றன் + மாட்சி = கொற்றம் மாட்சி ×
கொற்றன் + மாட்சி = கொற்றன் மாட்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

62. கொற்றன் + யாப்பு = கொற்றனி யாப்பு ×
கொற்றன் + யாப்பு = கொற்றன் யாப்பு √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

63. கொற்றன் + வன்மை = கொற்ற வன்மை ×
கொற்றன் + வன்மை = கொற்றன் வன்மை √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

64. கொற்றன் + அழகு = கொற்றன் அழகு ×
கொற்றன் + அழகு = கொற்றனழகு √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

65. கொற்றன் + ஔவியம் = கொற்றன் ஔவியம் ×
கொற்றன் + ஔவியம் = கொற்றனௌவியம் √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

66. சாத்தி + கை = சாத்திக் கை ×
சாத்தி + கை = சாத்தி கை √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

67.  சாத்தி + செவி = சாத்திச் செவி ×
சாத்தி + செவி = சாத்தி செவி √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

68. சாத்தி + தலை = சாத்தித் தலை ×
சாத்தி + தலை = சாத்தி தலை √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

69. சாத்தி + புறம் = சாத்திப் புறம் ×
சாத்தி + புறம் = சாத்தி புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

70. சாத்தி + ஞாற்சி = சாத்திஞ் ஞாற்சி ×
சாத்தி + ஞாற்சி = சாத்தி ஞாற்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

71. சாத்தி + நீட்சி = சாத்திந் நீட்சி ×
சாத்தி + நீட்சி = சாத்தி நீட்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

72. சாத்தி + மாட்சி = சாத்திம் மாட்சி ×
சாத்தி + மாட்சி = சாத்தி மாட்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

73. சாத்தி + யாப்பு = சாத்திய் யாப்பு ×
சாத்தி + யாப்பு = சாத்தி யாப்பு √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

74. சாத்தி + வன்மை = சாத்திவ் வன்மை ×
சாத்தி + வன்மை = சாத்தி வன்மை √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

75. சாத்தி + அழகு = சாத்தி அழகு ×
சாத்தி + அழகு = சாத்தியழகு √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

76. சாத்தி + ஔவியம் = சாத்தி ஔவியம் ×
சாத்தி + ஔவியம் = சாத்தியௌவியம் √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

77. கொற்றி + கை = கொற்றிக் கை ×
கொற்றி + கை = கொற்றி கை √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

78.  கொற்றி + செவி = கொற்றிச் செவி ×
கொற்றி + செவி = கொற்றி செவி √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

79. கொற்றி + தலை = கொற்றித்  தலை ×
கொற்றி + தலை = கொற்றி தலை √( வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

80. கொற்றி + புறம் = கொற்றிப் புறம் ×
கொற்றி + புறம் = கொற்றி புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

81. கொற்றி + ஞாற்சி = கொற்றிஞ் ஞாற்சி ×
கொற்றி + ஞாற்சி = கொற்றி ஞாற்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

82. கொற்றி + நீட்சி = கொற்றிந் நீட்சி ×
கொற்றி + நீட்சி = கொற்றி நீட்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

83. கொற்றி + மாட்சி = கொற்றிம் மாட்சி ×
கொற்றி + மாட்சி = கொற்றி மாட்சி √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

84. கொற்றி + யாப்பு = கொற்றிய் யாப்பு ×
கொற்றி + யாப்பு = கொற்றி யாப்பு √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

85. கொற்றி + வன்மை = கொற்றிவ் வன்மை ×
கொற்றி + வன்மை = கொற்றி வன்மை √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

86. கொற்றி + அழகு = கொற்றி அழகு ×
கொற்றி + அழகு = கொற்றி யழகு √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

87. கொற்றி + ஔவியம் = கொற்றி ஔவியம் ×
கொற்றி + ஔவியம் = கொற்றி யௌவியம் √(வேற்றுமைப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)


மேல் 87 எடுத்துக்காட்டுகளிலும் , வல்லெழுத்து , மெல்லெழுத்து , இடையெழுத்து , உயிரெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததைக் கவனியுங்கள் !

மேல் 87 காட்டுகளில் , உயர்திணை ஆண்பால் பெயர்களுக்கு மட்டுமல்லாது பெண்பால் பெயர்களுக்கும் பொருத்தம் காட்டியுள்ளார் நச்சினார்க்கினியர் என்பதையும் கவனியுங்கள் !

சாத்தன் , கொற்றன் – உயர்திணை ஆண்பால் பெயர்ச் சொற்கள் .
சாத்தி , கொற்றி – உயர்திணைப் பெண்பால் பெயர்ச்சொற்கள் .

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (193)

Post by Dr.S.Soundarapandian on Sat Jan 11, 2014 10:39 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (193)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

செயப்பாட்டுவினை பழந் தமிழில் உண்டா?


‘இல்லை’ என்று மொழியியலாளர் சிலர் எழுதியுள்ளனர் !

அது தவறு என்பதற்குத் தொல்காப்பியமே ஆதாரம் !

நாம் கீழே பார்க்கப்போகும் நூற்பாவில் அந்த ஆதாரம் உள்ளது ! :-

“புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியும்
வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையால்
தம்மி னாகிய தொழிற்சொல் முன்வரின்
மெய்ம்மை யாகலு முறழத் தோன்றலும்
அம்முறை யிரண்டு முரியவை யுளவே
வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும் ”  (தொகை . 14)

‘புள்ளி இறுதி உயிர் இறு கிளவியும்’ – மெய்யெழுத்தையும் உயிர் எழுத்தையும் ஈற்றிலே கொண்ட சொற்கள் முன்பு ,

‘தம்மின்  ஆகிய தொழிற் சொல் முன் வரின்’ – ‘படுதல்’ என்பதைப் பெற்ற வினைச் சொற்கள் வந்தால் ,

‘வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையால் மெய்ம்மை ஆகலும் உறழத் தோன்றலும் அம்முறை இரண்டும் உரியவை உளவே’ – வல்லெழுத்துச் சந்தி பெற்றும்  பெறாதும்  வரக்கூடிய அந்த இரு முறைகளும் உள்ளன ,

‘வேற்றுமை மருங்கில் போற்ற வேண்டும்’ – வேற்றுமைப் புணர்ச்சிகளில் !

இளம்பூரணர் எடுத்துக்காட்டுகளை வருமாறு விரிக்கலாம் ! :-

நாய் + கோட்பட்டான் = நாய்கோட் பட்டான் (வேற்றுமைப் புணர்சி) (இயல்புப் புணர்ச்சி)

நாய் + சாரப் பட்டான் = நாய்சாரப் பட்டான் (வேற்றுமைப் புணர்சி) (இயல்புப் புணர்ச்சி)

நாய் + தீண்டப் பட்டான் = நாய்தீண்டப்  பட்டான் (வேற்றுமைப் புணர்சி) (இயல்புப் புணர்ச்சி)

நாய் + பாயப் பட்டான் = நாய்பாயப்  பட்டான் (வேற்றுமைப் புணர்சி)(இயல்புப் புணர்ச்சி)

புலி + கோட்பட்டான் = புலிகோட் பட்டான் (வேற்றுமைப் புணர்சி) (இயல்புப் புணர்ச்சி)

புலி + சாரப் பட்டான் = புலி சாரப் பட்டான் (வேற்றுமைப் புணர்சி)
(இயல்புப் புணர்ச்சி)

புலி + தீண்டப் பட்டான் = புலி தீண்டப்  பட்டான் (வேற்றுமைப் புணர்சி)
(இயல்புப் புணர்ச்சி)
புலி + பாயப் பட்டான் = புலி பாயப்  பட்டான் (வேற்றுமைப் புணர்சி) (இயல்புப் புணர்ச்சி)

ஆனால் செயப்பாட்டு வினைப் புணர்ச்சிகளிலும் உறழ்ச்சி உண்டு என்கிறார் இளம்பூரணர் !

சூர் + கோட்பட்டான் = சூர்கோட் பட்டான் √(வேற்றுமைப் புணர்சி)
(இயல்புப் புணர்ச்சி)
சூர் + கோட்பட்டான் = சூர்க்கோட் பட்டான் √(வேற்றுமைப் புணர்சி)
(தோன்றல் புணர்ச்சி)

வளி + கோட்பட்டான் = வளிகோட் பட்டான் √(வேற்றுமைப் புணர்சி)
(இயல்புப் புணர்ச்சி)
வளி + கோட்பட்டான் = வளிக்கோட் பட்டான் √(வேற்றுமைப் புணர்சி)
(தோன்றல் புணர்ச்சி)
(வளி - காற்று)
‘நாய்’ , ‘சூர்’  ஆகியன புல்ளி ஈறு பெற்ற சொற்கள் ; ‘புலி’ , ‘வளி’ ஆகியன உயிர் ஈறு பெற்ற சொற்கள் . இவை ‘புள்ளி இறுதியும் உயிரிறு கிளவியும்’ என்ற தொல்காப்பியர் விதிக்கு இயைய அமைந்துள்ளன என்பதைக் கவனியுங்கள் !

‘பேய் கோட்பட்டான்’ – பற்றிப் பார்த்தோமல்லவா?

இதற்கு ஒரு விதி விலக்குக் காட்டுகிறார் இளம்பூரணர் ! அதன்படி –

பேய் + கோட்பட்டான் = பேஎய்கோட் பட்டான் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (எ – அளபெடை)

பேய் + கோட்பட்டான் = பேஎய்க்கோட் பட்டான் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (எ – அளபெடை; க்- சந்தி)

இன்னும் , இளம்பூரணர் தரும் கூடுதல் செய்தியால் , கீழ்வரும் வகைகளையும்
பெறுகிறோம் ! :-

பாம்பு + கோட்பட்டான் = பாம்புகோட் பட்டான் √ வேற்றுமைப் புணர்சி)
(இயல்புப் புணர்ச்சி)
பாம்பு + கோட்பட்டான் = பாப்புக்கோட் பட்டான் √ வேற்றுமைப் புணர்சி)
(நிலைமொழியான ‘பாம்பு’ என்பதிலுள்ள  ‘ம்’ , ‘ப்’ஆனதைக் கவனிக்க!)

‘தீண்டப் பட்டான்’ , ‘பாயப் பட்டான்’ என்ற தொடர்களால் , பழந்தமிழில் செயப்பாட்டுவினை வடிவம் இருந்தமை தெளிவாகிறதல்லவா?

இவற்றில் வந்த ‘படு’ என்பது துணை வினை (Auxiliary verb) எனப்படும்!

அது சரி !

‘உறழ்ச்சி’ ஏன் ஏற்படுகிறது ?
உறழ்ச்சி ஏற்படும் சில காரணங்களில் ஒரு காரணம் –
மக்கள் வழக்குக்கும் புலவர் வழக்குக்கும் உள்ள இடைவெளியானது உறழ்ச்சிகளுக்கு வித்திடுகிறது !

நாய் கோட்பட்டான் , புலி கோட்பட்டான் – இவற்றில் உறழ்ச்சி இல்லை !
ஏன் ?

ஏனெனில் , மக்களாலும் புலவர்களாலும் இவை ஒருசேர வழங்கப்பட்டு , ‘நாய் கோட்படு’  என்பது பகுதியக நின்றதுதான் காரணம் !
இதே முறையில் , ‘சூர்கோட் பட்டான்’ என்பது மக்கள் வழக்காகப் பரவவில்லை ! ; ‘சூர்’ என்ற அருஞ்சொல் , மக்கள் பயன்படுத்தும் சொல் அல்ல ! புலவர்கள் பயன்படுத்தும் சொல்! ‘சூர்’ என்றால் ‘கொடுந் தெய்வம்’ (Malign deity) என்பது பொருள் ! எனவே , ‘சூர்க் கோட்பட்டான்’ என்ற வடிவே சரியானது என்ற ஒரு கருத்தைப் புலவர்கள் தெரிவித்துள்ளனர் !   அதனால் ‘உறழ்ச்சி’! இங்கே பகுதி ‘சூர்’ !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (194)

Post by Dr.S.Soundarapandian on Tue Jan 14, 2014 10:27 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (194)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

வேற்றுமைப் புணர்ச்சியில் , இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி விதிகளை உயிர்
மயங்கியல் , புள்ளி மயங்கியல் முதலான இயல்களில் தொல்காப்பியர் கூறுகிறார் . நாம் பார்த்துவரும் தொகை மரபில் அவ்வியல்களில் கூறுவனவற்றைத் தொகுத்துக்கூறுகிறார் ; அத்துடன் தொகை மரபில் சில விதிவிலக்குகளையும் தெரிவிக்கிறார் அவர் !

சான்றாக , வேற்றுமைப் புணர்சியில் , “மரப்பெயர்க் கிளவிக்கு வல்லெழுத்து மிகுமே”
(உயிர் மயங் . 15) எனக்கூறி ,  ‘விள + கோடு = விளங் கோடு ’என்ற புணர்ச்சிக்கு வழிவகுத்தார் தொல்காப்பியர் !

அப்படியானால் ,  விள + குறைத்தான் = விளங் குறைத்தான் ’ என்று , வேற்றுமைப் புணர்ச்சியில் , வருமா?

நியாயமான கேள்விதானே?

இதுபோன்ற வினாக்களுக்கு , இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சியைப் பொறுத்தவரை,
தொகுத்துக் கூறுவதுதான் கீழ்வரும் நூற்பா ! :-

“மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும்
வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும்
இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும்
உயிர்மிக வருவழி யுயிர்கெட வருதலுஞ்
சாரியை உளவழிச் சாரியை கெடுதலுஞ்
சாரியை யுளவழித் தன்னுருபு நிலையலுஞ்
சாரியை யியற்கை யுறழத் தோன்றலும்
உயர்திணை மருங்கி னொழியாது வருதலும்
அஃறிணை விரவுப்பெயர்க் கவ்விய நிலையலும்
மெய்பிறி தாகிடத் தியற்கை யாகலும்
அன்ன பிறவுந் தன்னியன் மருங்கின்
மெய்பெறக் கிளந்து பொருள்வரைந் திசைக்கும்
ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப ! ”   (தொகை . 15)


‘மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் ’ -  ‘விளக்குறைத்தான் ’ என்பது , மெல்லெழுத்து வரவேண்டிய புணர்ச்சியில் , அவ்விதம் வராது , வல்லெழுத்துச் சந்தி
பெற்றுள்ளது; எடுத்துக்காட்டை மேலே பார்த்தோம் !

‘வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் ‘ – ‘மகர இறுதி வேற்றுமை யாயின்,
துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே !  ’ (புள்ளிமயங் . 15) என்று தொல்காப்பியர்
கூறியுள்ளார் !
அப்படியானால் , வல்லெழுத்துச் சந்தி பெற்று , ‘மரம்’ என்ற சொல்லும் , இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘மரம் + குறைத்தான் = மரக் குறைத்தான்’ எனப் புணருமா?
இந்த ஐயத்தைப் போக்குகிறார் தொல்காப்பியர் !
அஃதாவது –
மரம் + குறைத்தான் = மரங் குறைத்தான் √  (ஐகார வேற்றுமைப் புணர்ச்சி)  , என வரும் !

‘இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் ’ -  ‘தாய் என் கிளவி இயற்கை ஆகும்’
(புள்ளி . 63) என்று சூத்திரம் ஓதித் ’தாய் + கை = தாய் கை’ என்று வேற்றுமைப் புணர்ச்சி விதி கூறினார் தொல்காப்பியர் ! இங்கு , அதற்கு விதிவிலக்குக் கூறுகிறார் அவர் !

அஃதாவது , ஐகார வேற்றுமைப் புணர்ச்சியில் வரவேண்டியது –
தாய் + கொலை = தாய்க் கொலை √  
தாய் + கொலை = தாய் கொலை ×  

மிகற்கை – ஒற்று மிகுதல் .  

‘உயிர்மிக வருவழி உயிர்கெட வருதலும் ’ -  குற்றெழுத்தின் பின்னே ஆகாரம் வந்தால் ,
வேற்றுமைப் புணர்ச்சியில் ,  ‘அ’ இடையே தோன்றும் (உயிர் மயங் . 24)என ஒரு விதி கூறினார் தொல்காப்பியர் !  ‘பலா + கோடு = பலாஅக்  கோடு ’ என வரும் !

ஆனால் ஐகார வேற்றுமைப் புணர்ச்சியில் வரவேண்டியது கீழ் வருமாறு என்கிறார் தொல்காப்பியர் ! _

பலா + குறைத்தான் = பலாஅக்  குறைத்தான் ×
பலா + குறைத்தான் = பலாக்  குறைத்தான் √

‘சாரியை உளவழிச் சாரியை கெடுதலுஞ் , ‘சாரியை உளவழித் தன்னுருபு நிலையலும் ’ -
 -  ‘வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும்’ (குற்றியலு .15) என விதி கூறி ,
வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘வண்டு + கால் = வண்டின்
கால்’ என்ற புணர்சிக்கு அடிகோலினார் தொல்காப்பியர் !

ஆனால் , ஐகார வேற்றுமைப் புணர்ச்சியில் அப்படி இன் சாரியை வரலாம் , வராமலும் இருக்கலாம் என்கிறார் தொல்காப்பியர்!

அஃதாவது இப்படி வரும் என்கிறார் , ஐகார வேற்றுமைப் புணர்ச்சியில் ! :-

வண்டு + கொணர்ந்தான் = வண்டு கொணர்ந்தான் √
வண்டு + கொணர்ந்தான் = வண்டினைக் கொணர்ந்தான் √

‘சாரியை இயற்கை உறழத் தோன்றலும்’ – வேற்றுமைப் புணர்ச்சியில் ‘புளி’ என்ற
இகர ஈற்றுச் சொல் புணரும்போது , ‘புளி + கோடு = புளியங் கோடு’ என ‘அம்’ சாரியை பெற்றுப் புணர்வதற்கு விதி கூறினார் தொல்காப்பியர் – ‘புளிமரக் கிளவிக்கு அம்மே
சாரியை’  (உயிர் மயங் . 42)!

அனால் ஐகார வேற்றுமைப் புணர்ச்சியில் , இயல்பாகவும் , சந்தி பெற்றும் புணரும்
என இங்கே பேசுகிறார் !

இதன்படி –

புளி + குறைத்தான் = புளி குறைத்தான் √
புளி + குறைத்தான் = புளிக்  குறைத்தான் √   என உறழும் என்கிறார்
தொல்காப்பியர் !


இதைப் போலவே , ‘ஆல்’ எனும் சொல்லும் , வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘அம்’
சாரியை பெறும் (புள்ளி மயங் . 80) என்றார் தொல்காப்பியர் !

ஆனால் ஐகார வேற்றுமைப் புணர்ச்சியில் , இயல்பாகவும் , நிலை மொழி ஈற்றெழுத்து
திரிந்தும் இருவகையாக  வரும் என்று இங்கே நுவல்கிறார் !

இதன்படி –

ஆல் + குறைத்தான் = ஆல் குறைத்தான் √
ஆல் + குறைத்தான் = ஆற் குறைத்தான் √

‘உயர்திணை மருங்கின்  ஒழியாது வருதலும்’ – வேற்றுமைப் புணர்ச்சியில் உயிர்
எழுத்தை ஈறாகக் கொண்ட உயர்திணைப் பெயரானது  , இயல்பாகப் புணரும்
(தொகை . 11) என்றார் தொல்காப்பியர் !

ஆனால் ஐகார வேற்றுமையில் , ’ஐ ’ வெளிப்படையாக வரும் என இங்கே பேசுகிறார் !

இதன்படி –

நம்பி + கொணர்ந்தான் = நம்பியைக் கொணர்ந்தான் √  என ஆகும் !

‘அஃறிணை விரவுப்பெயர்க் கவ்வியல்  நிலையலும் ’ – உருபியலில் (நூ . 30) , ‘புள்ளி
இறுதியு ..’ என்ற நூற்பாவில்  , மெய்யெழுத்தை ஈற்றிலே கொண்ட சொல்லானது , வேற்றுமைப் புணர்ச்சியில் , சாரியை பெற்றும் பெறாதும்  ‘மன்ணினை’ , ‘மண்ணை’
என்று புணரும்  என்றார் !

ஆனால் ஐகார ஈற்றுப் புணர்ச்சியில் , விரவுப் பெயருக்குச் ,சாரியை வரும் என்கிறார் தொல்காப்பியர் !

இதன்படி –
கொற்றன் +ஐ + கொணர்ந்தான் = கொற்றனைக் கொணர்ந்தான்

என வரும் !
இங்கே ‘கொற்றன்’ என்பது ஓர் ஆளையும் குறிக்கலாம் ; மாட்டையும்
குறிக்கலாம் !

‘மெய்பிறிதாகு  இடத்து  இயற்கை ஆகலும்’ -  ‘ண்’ஈற்றுச் சொற்கள் , வேற்றுமைப்
பொருளில் புணரும்போது , ‘ண்’ ஆனது ‘ட்’ ஆக மாறும்  (புள்ளி . 7) என்றார்
தொல்காப்பியர் !
ஆனால் , இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘ண்’ ஆனது ‘ட்’ ஆகாமல்
இயற்கையாக வரும் என்கிறார் !
இதன்படி –
மண் + கொணர்ந்தான் = மண் கொணர்ந்தான் √
மண் + கொணர்ந்தான் = மட் கொணர்ந்தான் ×

தொல்காப்பியரின் இக் கருத்துகளின் பின் இளம்பூரணர் , ‘கழி குறைத்தான்’ , ‘பனை பிளந்தான்’ என்ற இரு எடுத்துக்காட்டுகளை முன் வைக்கிறார் !

இவற்றை விளக்கலாம் !

(1)உயிர் மயங்கியலில் (நூ . 33) , “இகர இறுதிப் பெயர்நிலை முன்னர் , வேற்றுமை
யாயின் வல்லெழுத்து மிகுமே” என்றார் ! அஃதாவது , ‘கிளி + கால் = கிளிக்கால்’ என
வரும் !

ஆனால் ஐகார வேற்றுமைப் புணர்ச்சியில் ,
கழி + குறைத்தான் = கழி குறைத்தான் √
கழி + குறைத்தான் = கழிக் குறைத்தான் ×     என்றே வரும் என்கிறார் அவர் !

(2) அதே உயிர் மயங்கியலில் (நூ .78) , “ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர் , வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே” என்றார் தொல்காப்பியர் ! அஃதாவது , ‘யானை + கோடு = யானைக் கோடு’ என வேற்றுமை ப் புணர்ச்சியில் வரும் !
ஆனால் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சியில் ,

பனை + பிளந்தான் = பனை பிளந்தான் √
பனை + பிளந்தான் = பனைப்  பிளந்தான் ×    என வரும் என்கிறார் இங்கு !

இந்த இரண்டு நுட்பங்கள் தவிர வேறு சில புணர்ச்சிகளையும் நமக்குக் காட்டுகிறார் இளம்பூரணர் _

1 . ‘அவரைக் கண்டு’ என்ற பொருளில் ‘அவர்க் கண்டு’ என எழுதலாம் !

2 .  ‘மகனைப் பெற்றான்’ எனும் பொருளில் ‘மகற் பெற்றான்’ என எழுதலாம் !

3 . ‘மகளைப் பெற்றான்’ எனும் பொருளில் ‘மகட் பெற்றான்’ என எழுதலாம் !

4 . மை + கொணர்ந்தான் = மை கொணர்ந்தான் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
 மை + கொணர்ந்தான் = மைக்  கொணர்ந்தான் √(வேற்றுமைப் புணர்ச்சி)

5 . வில் + கோள் = வில் கோள் √(வேற்றுமைப் புணர்ச்சி)
வில் + கோள் = விற் கோள் √(வேற்றுமைப் புணர்ச்சி)

6 . கடு + குறைத்தான் = கடுக் குறைத்தான் √(வேற்றுமைப் புணர்ச்சி)

7 . செப்பு + கொணர்ந்தான் = செப்புக் கொணர்ந்தான் √(வேற்றுமைப் புணர்ச்சி)

8 . “மகர இறுதி வேற்றுமை யாயின் துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே” (புள்ளி . 15) என்ற நூற்பாப் படி  ‘மரம் + கால் = மரக் கால்’ என ஆகும் ! அஃதாவது ‘ம்’ , கெட்டு ‘க்’ ஆகும் !
ஆனால் ஐகார வேற்றுமைப் புணர்ச்சியில் அவ்விதம் வராமையை இளம்பூரணர் காட்டுகிறார் -  
புலம் + புக்கனனே = புலம் புக்கனனே  √
புலம் + புக்கனனே = புலப் புக்கனனே  ×

இவை , தொல்காப்பியரும் இளம்பூரணரும் தரும் புணர்ச்சி
நுட்பங்கள் ! தமிழுக்கு அடிப்படையானவை !மொழியியலில் Marpho phonemic changes
என்று இதனைத்தான் குறிப்பிடுகின்றனர் !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (195)

Post by Dr.S.Soundarapandian on Tue Jan 14, 2014 1:52 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (195)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

ஆய்வு எண் 194இல் வேற்றுமைப் புணர்ச்சிகளையே பார்த்தோம் !

அடுத்ததாக அல்வழிப் புணர்ச்சிகளைத் தருகிறார் தொல்காப்பியர் ! :-

“வேற்றுமை யல்வழி இஐ  யென்னும்
ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைஇய
அவைதாம்
இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும்
உறழா குநவு மென்மனார் புலவர் ”  (தொகை . 16)

அஃதாவது –  ‘பருத்தி ’ என்ற இகர ஈற்றுச் சொல்லையும் , ’தினை ’ என்ற ஐகார ஈற்றுச் சொற்களையும் எடுத்துக்கொண்டால் , அல்வழியில் , எப்படிப் புணரும் ?

இதுதான் இப்போது கேள்வி !

இதற்கு விடைதான் மேலே பார்த்த சூத்திரம் !

“சில சொற்கள் இயல்பாகப் புணரும் , சில சொற்கள் வல்லொற்றுப் பெற்றுப் புணரும் ,
சில சொற்கள் இயல்பாகவும்  வல்லொற்றுப் பெற்றும் புணரும் !”  - இதுதான் தொல்காப்பியரின் விடை !

தலை சுற்றுகிறதா?

எடுத்துக்காட்டுகளைப் பார்த்தால் உங்களுக்கு விளங்கும் !
-
1 . பருத்தி + குறிது = பருத்திக் குறிது ×
    பருத்தி + குறிது = பருத்தி குறிது  √  (அல்வழிப் புணர்ச்சி)

2 . பருத்தி + சிறிது = பருத்திச் சிறிது ×
    பருத்தி + சிறிது = பருத்தி சிறிது  √  (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

3 . பருத்தி + தீது = பருத்தித் தீது ×
    பருத்தி + தீது = பருத்தி தீது  √  (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

4 . பருத்தி + பெரிது = பருத்திப் பெரிது ×
    பருத்தி + பெரிது = பருத்தி பெரிது  √  (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

5 . கரை + குறிது = கரைக் குறிது ×
   கரை + குறிது = கரை குறிது  √  (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)6 . கரை + சிறிது = கரைச் சிறிது ×
   கரை + சிறிது = கரை சிறிது  √  (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

7 . கரை + தீது = கரைத் தீது ×
கரை + தீது = கரை தீது  √  (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

8 . கரை + பெரிது = கரைப் பெரிது ×
   கரை + பெரிது = கரை பெரிது  √  (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

9 . அலி + கொற்றன் = அலிக் கொற்றன் √(அல்வழிப் புணர்ச்சி) (மிகுதிப் புணர்ச்சி)

10 . புலி + கொற்றன் = புலிக் கொற்றன் (அல்வழிப் புணர்ச்சி) (மிகுதிப் புணர்ச்சி)

11 . கிளி + குறிது = கிளி குறிது √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

12 . கிளி + குறிது = கிளிக்  குறிது √(அல்வழிப் புணர்ச்சி) (மிகுதிப் புணர்ச்சி)

13 . தினை + குறிது = தினை குறிது √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)

14 . தினை + குறிது = தினைக்  குறிது √(அல்வழிப் புணர்ச்சி) (மிகுதிப் புணர்ச்சி)

15 . தில் +  சொல் = தில்லைச் சொல் √ (அல்வழிப் புணர்ச்சி) (ஐ – சாரியை ; தில் - இடைச்சொல்) (மிகுதிப் புணர்ச்சி)

16 . மன் + சொல் = மன்னைச் சொல் √ (அல்வழிப் புணர்ச்சி) (ஐ – சாரியை ; மன் – இடைச் சொல்) (மிகுதிப் புணர்ச்சி)

17 . கடி + கா = கடிகா √(அல்வழிப் புணர்ச்சி) (கடி - உரிச்சொல்)(இயல்புப் புணர்ச்சி)
    (கடி கா – கடிதாகிய தோட்டம்)

18 . பணை + தோள்= பணைத் தோள் √(அல்வழிப் புணர்ச்சி) (பணை - உரிச்சொல்)(மிகுதிப் புணர்ச்சி)
    (பணைத் தோள் – பருத்ததாகிய தோள்)

 11, 12 ,13 , 14 – ஆகியவற்றில் இயல்புப் புணர்ச்சியும் மிகுதிப் புணர்ச்சியும் அனுமதிக்கப்பட்டுள்ளது அல்லவா? இதுதான் ‘உறழ்ச்சி’ !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (196)

Post by Dr.S.Soundarapandian on Thu Jan 16, 2014 8:03 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (196)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

முன் ஆய்வில் ’பருத்தி’ என்ற இகர ஈற்றுசொல் , ‘தினை’ என்ற
ஐகார ஈற்றுச் சொல் ஆகியவற்றின் புணர்ச்சி வகைகளைப் பார்த்தோம் !

அடுத்ததாகவும்   இதே இரண்டு ஈறுகளைக் கொண்ட சொற்களைப்பற்றிப் பேச
வேண்டியுள்ளது  தொல்காப்பியருக்கு !

தொல்காப்பியர் இந்த இரு ஈறுகளைப்பற்றிக் கூறுவதைக் கேட்போமே? :-

“சுட்டுமுத லாகிய விகர விறுதியும்
எகரமுதல் வினாவி  னிகர விறுதியுஞ்
சுட்டுச்சினை நீடிய வையெ னிறுதியும்
யாவென் வினாவி  னையெ  னிறுதியும்
வல்லெழுத்து மிகுநவு முறழா குநவுஞ்
சொல்லிய மருங்கி  னுளவென மொழிப   ” (தொகை . 17)

‘சுட்டுமுதல்  ஆகிய இகர இறுதியும் ’ -  ‘அதோளி’ , ‘இதோளி’  , ‘உதோளி’ ஆகிய
சொற்களும் ,

‘எகரமுதல் வினாவின்   இகர இறுதியும் ’ -  ‘எதோளி’ என்ற சொல்லும்,  

‘சுட்டுச்சினை நீடிய ஐயென்  இறுதியும் ’ -  ‘ஆண்டை’ , ‘ஈண்டை’ ‘ஊண்டை’ ஆகிய சொற்களும் ,

‘யாவென் வினாவின்  ஐயென்  இறுதியும் ’ -  ‘யாண்டை’ எனும் சொல்லும் ,

‘வல்லெழுத்து மிகுநவும்  உறழா குநவும் ,
சொல்லிய மருங்கின்  உளவென மொழிப ’  -   அல்வழிப் புணர்ச்சிகளில் , வல்லெழுத்துச்
சந்தி பெற்றுப் புணர்வதும் ,  வல்லெழுத்துச் சந்தி பெற்றும் பெறாமல் புணர்வதுமான
இரு வகைகள் உள்ளன !  


அ ,இ , உ – மூன்றும் சுட்டு எழுத்துகள் என்பதையும் , எ – வினா எழுத்து என்பதையும்   மறவாதீர் !

சுட்டுச் சினை  எழுத்துகள் – அ, இ ,உ  

இவை நீடிய எழுத்துகள் – ஆ , ஈ , ஊ  

அதோளி – அங்கே
இதோளி – இங்கே
உதோளி – இரண்டுக்கும் நடுவே
எதோளி – எங்கே ?

மேல் நூற்பாவிற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விவரிக்கலாம் ! :-

1 . அதோளி + கொண்டான் = அதோளிக் கொண்டான்√ (அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
அதோளி + கொண்டான் = அதோளி கொண்டான் ×

2. இதோளி + கொண்டான் = இதோளிக் கொண்டான்√ (அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
இதோளி + கொண்டான் = இதோளி கொண்டான் ×

3 . உதோளி + கொண்டான் = உதோளிக் கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
உதோளி + கொண்டான் = உதோளி கொண்டான் ×

4 . எதோளி + கொண்டான் = எதோளிக் கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
எதோளி + கொண்டான் = எதோளி கொண்டான் ×

5 . அதோளி + சென்றான் = அதோளிச்  சென்றான் √(அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
அதோளி + சென்றான் = அதோளி  சென்றான் ×

6. இதோளி + சென்றான் = இதோளிச் சென்றான் √(அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
    இதோளி + சென்றான் = இதோளி சென்றான் ×

7. உதோளி + சென்றான் = உதோளிச் சென்றான்√ (அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
   உதோளி + சென்றான் = உதோளி சென்றான் ×

8 . எதோளி + சென்றான் = எதோளிச் சென்றான் √(அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
   எதோளி + சென்றான் = எதோளி சென்றான் ×

9 . அதோளி + தந்தான் = அதோளித் தந்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
   அதோளி + தந்தான் = அதோளி தந்தான் ×

10. இதோளி + தந்தான் = இதோளித் தந்தான் √ (அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
    இதோளி + தந்தான் = இதோளி தந்தான் ×

11 . உதோளி + தந்தான் = உதோளித் தந்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
     உதோளி + தந்தான் = உதோளி தந்தான் ×

12. எதோளி + தந்தான் = எதோளித் தந்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
எதோளி + தந்தான் = எதோளி தந்தான் ×

13 . அதோளி + போயினான் = அதோளிப் போயினான்√ (அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
     அதோளி + போயினான் = அதோளி போயினான் ×

14. இதோளி + போயினான் = இதோளிப் போயினான் √(அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
    இதோளி + போயினான் = இதோளி போயினான் ×

15 . உதோளி + போயினான் = உதோளிப் போயினான்√(அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
     உதோளி + போயினான் = உதோளி போயினான் ×

16. எதோளி + போயினான் = எதோளிப் போயினான் √(அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
    எதோளி + போயினான் = எதோளி போயினான் ×

17 . ஆண்டை + கொண்டான் = ஆண்டைக் கொண்டான்√ (அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
ஆண்டை + கொண்டான் = ஆண்டை கொண்டான் ×

18. ஈண்டை + கொண்டான் = ஈண்டைக் கொண்டான்√ (அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
ஈண்டை + கொண்டான் = ஈண்டை கொண்டான் ×

19 . ஊண்டை + கொண்டான் = ஊண்டைக் கொண்டான்√ (அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
ஊண்டை + கொண்டான் = ஊண்டை கொண்டான் ×

20 . யாண்டை + கொண்டான் = யாண்டைக் கொண்டான்√ (அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
யாண்டை + கொண்டான் = யாண்டை கொண்டான் ×

மேல் இருபதும் வல்லெழுத்து மிகுந்து வந்த புணர்ச்சிகள் !

வல்லெழுத்து மிகுந்தும் மிகாமலும் வரக்கூடிய உறழ்ச்சிப் புணர்ச்சிகளை வருமாறு விரித்துக் காட்டலாம் ! :-

21 . அவ்வழி + கொண்டான் = அவ்வழி கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
      அவ்வழி + கொண்டான் = அவ்வழிக் கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)

22 . இவ்வழி + கொண்டான் = இவ்வழி கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
      இவ்வழி + கொண்டான் = இவ்வழிக் கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)

23. உவ்வழி + கொண்டான் = உவ்வழி கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
      உவ்வழி + கொண்டான் = உவ்வழிக் கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)

24 . எவ்வழி + கொண்டான் = எவ்வழி கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
      எவ்வழி + கொண்டான் = எவ்வழிக் கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)


25 . ஆங்கவை + கொண்டான் = ஆங்கவை கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
      ஆங்கவை + கொண்டான் = ஆங்கவைக் கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)

26 . ஈங்கிவை + கொண்டான் = ஈங்கிவை கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
      ஈங்கிவை + கொண்டான் = ஈங்கிவைக் கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)

27. ஊங்கவை + கொண்டான் = ஊங்கவை கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
      ஊங்கவை + கொண்டான் = ஊங்கவைக் கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)

28 . யாங்கவை + கொண்டான் = யாங்கவை கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
      யாங்கவை + கொண்டான் = யாங்கவைக் கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)

29 . பண்டை + சான்றார் = பண்டைச் சான்றார் (அல்வழிப் புணர்ச்சி)

30 . ஒரு திங்கள் + குழவி = ஒரு திங்களைக் குளவி (அல்வழிப் புணர்ச்சி)

29 , 30 – ஆகியவற்றைப் பொறுத்தவரை , ‘பண்டைய காலத்தவராகிய சான்றார்’ ,  ‘ஒரு திங்கள் ஆகிய குழவி’ என்று  விரிக்கவேண்டும் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (197)

Post by Dr.S.Soundarapandian on Sat Jan 18, 2014 12:28 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (197)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தாள் + சுவடி = தாட் சுவடி (வேற்றுமைப் புணர்ச்சி)

நூல் + கண்டு = நூற் கண்டு(வேற்றுமைப் புணர்ச்சி)

பால் + சோறு = பாற் சோறு   (வேற்றுமைப் புணர்ச்சி)

மண் + கலம் = மட் கலம்(வேற்றுமைப் புணர்ச்சி)

பல் + பசை = பற் பசை (வேற்றுமைப் புணர்ச்சி)

கண் + ஆடி = கண்ணாடி (வேற்றுமைப் புணர்ச்சி)

கண் + அகலம் = கண்ணகலம் (வேற்றுமைப் புணர்ச்சி)

-  இப் புணர்ச்சிகளுக்கெல்லாம் தொல்காப்பியத்தில் விதி உள்ளதா?

உள்ளது ! அதைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம் ! :-

“நெடியதன் முன்ன ரொற்றுமெய் கெடுதலுங்
குறியதன் முன்னர்த் தன்னுரு பிரட்டலும்
அறியத் தோன்றிய நெறியிய லென்ப”  (தொகை . 18)

‘நெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும்’ – நெட்டெழுத்தின் முன்னே வரும் மெய்யானது கெட்டுப்போதலும் ,

‘குறியதன் முன்னர்த் தன்னுருபு இரட்டலும் ’ – குற்றெழுத்தின் அருகே நிற்கும் மெய்யெழுத்தானது இரட்டித்து வருதலும் ,

‘அறியத் தோன்றிய நெறியியல் என்ப’ – தொன்றுதொட்டு அறியப்படும் முறையாகும் !

அஃதாவது –

கோல் + தீது = கோறீது  (அல்வழிப் புணர்ச்சி) (நெட்டெழுத்தை அடுத்துள்ள மெய்யான ‘ல்’ கெட்டதைக் காண்க !)

கோல் + நன்று = கோனன்று  (அல்வழிப் புணர்ச்சி) (நெட்டெழுத்தை அடுத்துள்ள மெய்யான ‘ல்’ கெட்டதைக் காண்க !)

தம் + ஐ = தம்மை  (வேற்றுமைப் புணர்ச்சி) (குற்றெழுத்தை அடுத்துள்ள மெய்யான ‘ம்’ இரட்டித்ததைக் காண்க !)

நம் + ஐ = நம்மை  (வேற்றுமைப் புணர்ச்சி) (குற்றெழுத்தை அடுத்துள்ள மெய்யான ‘ம்’ இரட்டித்ததைக் காண்க !)

(தாம் , நாம் – இவையே குறுகித் ‘தம்’ , ‘நம்’ ஆயின  என்பவர் இளம்பூரணர் !)

இங்கே நச்சினார்க்கினியர் ஏதோ சொல்கிறார் கேட்போம் ! –

‘  ‘த’ , ‘ந’ ஆகிய எழுத்துகளை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தால் , அப்போது நிலைமொழி நெட்டெழுத்தின் பின்னே வரும் ஒற்றெழுத்து கெட்டும் வரும் கெடாதும் வரும் ! ’

இவ்விளத்திற்கு அவர் (நச்சினார்க்கினியர்) தரும் சன்றுகள் –

தேன் + தீது = தேன் றீது (அல்வழிப் புணர்ச்சி) (நிலைமொழியை அடுத்த ஒற்றெழுத்து ‘ன்’ கெடாததைக் காண்க ! )

நாண் + தீது = நண் டீது (அல்வழிப் புணர்ச்சி) (நிலைமொழியை அடுத்த ஒற்றெழுத்து ‘ண்’ கெடாததைக் காண்க ! )

தேன் + நன்மை = தேனன்மை  (அல்வழிப் புணர்ச்சி) (நிலைமொழியை அடுத்த ஒற்றெழுத்து ‘ன்’ கெட்டதைக் காண்க ! )

நாண் + நன்மை = நாணன்மை (அல்வழிப் புணர்ச்சி) (நிலைமொழியை அடுத்த ஒற்றெழுத்து ‘ண்’ கெட்டதைக் காண்க ! )

அடுத்து , இளம்பூரணர் இன்னொரு நுணுக்கம் சொல்கிறார் – ‘நிலைமொழியின் ஈற்று மெய்யெழுத்துதான் இரட்டும் என்று நினைக்காதீர்கள் ! புணர்ச்சி இலக்கணத்தால் வந்துசேரும் மெய்யெழுத்தும்கூட இரட்டும் !’

இதற்கு அவர் (இளம்பூரணர்) தந்த காட்டு –

அ+ அடை = அவ்வடை  (அல்வழிப் புணர்ச்சி)

இங்கே ‘வ்வ்’ என்ற இரட்டல் வந்துள்ளதல்லவா? அஃது எப்படி வந்தது ?

அ + அடை = அவ் + அடை (இதற்கு இலக்கணம் – உயிர்மயங்கியல் நூற்பா 4 – ‘யவமுன் வரினே வகர மொற்றும்!’)

அவ் + அடை  = அவ்வடை ! (புணர்ச்சி இலக்கணத்தால் வந்த ‘வ்’இரட்டியதைக் காண்க !)

 ‘அ+ அடை = அவ்வடை ’ ஆனதில் , இடையே வந்த ‘வ்’வை உடம்படுமெய் என்று கருதுதல் கூடாது !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (198)

Post by Dr.S.Soundarapandian on Sat Jan 18, 2014 8:44 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (198)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

  முன் ஆய்வில் ,  ‘தாம்’ என்பது குறுகித் ‘தம்’ ஆனால் , அது ‘ஐ’யுடன் சேரும்போது
‘தம்மை’ என்று , ‘ம்ம்’இரட்டல் ஏற்படும் எனப் பார்த்தோம் !

‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமைக்குப் பொருந்தும் இந் நியாயம்  ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபுக்கும் ‘கு’ எனும் நான்காம் வேற்றுமை உருபுக்கும் பொருந்தாது என்று அடுத்துக் கூறவருகிறார் தொல்காப்பியர் ! : -

“ஆற  னுருபினு நான்க  னுருபினுங்
கூறிய குற்றொற்  றிரட்ட  லில்லை
ஈறாகு புள்ளி யகரமொடு  நிலையும்
நெடுமுதல் குறுகு மொழிமுன்  னான”  (தொகை . 19)


‘நெடுமுதல் குறுகும்  மொழிமுன்  னான’ – நிலைமொழியானது நெடிலாயிருந்து
குறுகினால்,

‘ஆறன் உருபினும் நான்கன் உருபினும்’ – ஆறாம் வேற்றுமை உருபு மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகள் வந்து புணரும்போது ,

‘கூறிய குற்றொற்று இரட்டல் இல்லை’ – முன் நூற்பாவில் (தொகை . 18) கூறப்பட்டதுபோல நிலைமொழி ஈற்று மெய் இரட்டாது !

‘ஈறாகு புள்ளி அகரமொடு நிலையும்’ – நிலைமொழி ஈற்று மெய்யோடு ‘அ’  சேரும் !

இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு  தரலாம் ! :-

1 .  தாம் → நெடுமுதல் குறுகித் → தம் →  ‘அ ’  சேரும்போது → தம் +அ →தம → ஆறாம் வேற்றுமை உருபு  சேரும்போது → தம +  அது → தமது √
தம் + அது → தம்மது × ( ‘ம்’ இரட்டியதால், தவறு  எனக் கூற முடிகிறது !)


2 . தாம் → நெடுமுதல் குறுகித் → தம் →  ‘அ ’  சேரும்போது → தம் +அ →தம → நான்காம் வேற்றுமை உருபு  சேரும்போது → தம + கு → தமக்கு √ ( க் - சந்தி)
தம் + கு → தம்மக்கு ×  ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு  எனக் கூற முடிகிறது !)

3 . நாம் → நெடுமுதல் குறுகி → நம் →  ‘அ ’  சேரும்போது → நம் +அ →நம → ஆறாம் வேற்றுமை உருபு  சேரும்போது → நம + அது → நமது √
நம் + அது → நம்மது ×  ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு  எனக் கூற முடிகிறது !)

4. நாம் → நெடுமுதல் குறுகி → நம் →  ‘அ ’  சேரும்போது → நம் +அ →நம → நான்காம் வேற்றுமை உருபு  சேரும்போது → நம + கு → நமக்கு √ ( க் - சந்தி)
நம் + கு → நம்மக்கு ×  ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு  எனக் கூற முடிகிறது !)

அது சரி !

நெடுமுதல் குறுகாத சாரியைகள் – ‘தம்’ , ‘நம்’ ஆகியவை புணர்ந்தாலும் இதே விதிதானா? – வினா!

 ‘இதே விதிதான் ’ என்கிறார் இளம்பூரணர் !

எடுத்துக்காட்டுகளுடன் இதனைக் கீழே விளக்கலாம் ! –

1 . எல்லார்+தம் + அது = எல்லார் + தம + அது = எல்லார் தமது √
எல்லார் + தம் + அது = எல்லார் தம்மது × ( ‘ம்’ இரட்டியதால் தவறு எனக் கூற முடிகிறது)

2. எல்லார்+நம் + அது = எல்லார் + நம + அது = எல்லார் நமது √
எல்லார் + நம் + அது = எல்லார் நம்மது × ( ‘ம்’ இரட்டியதால் தவறு எனக் கூற முடிகிறது)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (199)

Post by Dr.S.Soundarapandian on Sat Jan 18, 2014 10:25 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (199)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

“தமக்கு , நமக்கு – என்றெல்லாம் புணர்ச்சிகள் வரும் என்றீர்களே , அப்படியானால்
நுமக்கு , நுமது என வருமா? இல்லை நும்மக்கு , நும்மது என்று வருமா?” – ஒரு
மாணவன் தொல்காப்பியரைக்  கேட்டிருக்கிறான் !

அவனுக்கு விடை கூற அடுத்த நூற்பா! :-


“நும்மெ  னிறுதியு மந்நிலை திரியாது ! ”  (தொகை . 20)

அஃதாவது , முன் நூற்பாவில் (தொகை .19) கூறியபடி ,நிலைமொழி ஈற்றிலே குற்றெழுத்து இரட்டாமல் வரும் , ‘அது’ , ‘கு’ ஆகிய
வேற்றுமை உருபுகள் புணரும்போது !

எடுத்துக்காட்டுகள் –

1 . நும் →   ‘அ ’  சேரும்போது → நும் +அ →நும  → ஆறாம் வேற்றுமை உருபு  சேரும்போது → நும + அது → நுமது √
நும் + அது → நும்மது ×  ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு  எனக் கூற முடிகிறது !)

2. நும் →   ‘அ ’  சேரும்போது → நும் +அ →நும → நான்காம் வேற்றுமை உருபு  சேரும்போது → நும + கு → நுமக்கு √ ( க் - சந்தி)
நும் + கு → நும்மக்கு ×  ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு  எனக் கூற முடிகிறது !)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (200)

Post by Dr.S.Soundarapandian on Sun Jan 19, 2014 12:04 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (200)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொகை மரபில் நாம் நின்று விளையாடுகிறோம் !

அடுத்த நூற்பா! :-

“உகரமொடு புணரும் புள்ளி யிறுதி
யகரமு முயிரும் வருவழி யியற்கை”  (தொகை . 21)

‘உகரமொடு புணரும் புள்ளி இறுதி’ -   ‘உருஞு ’ , ‘பொருநு’ என்ற சொற்கள் ,

‘யகரமும் உயிரும் வருவழி ’ – யகரத்தையும் உயிர் எழுத்துகளையும் முதலாகக் கொண்ட சொற்களுடன் புணரும்போது ,

‘இயற்கை’ -  இயற்கையாக, அஃதாவது , ‘உரிஞ்’ , ‘பொருந்’ என்ற வடிவங்களில் நின்றே புணரும் !

நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! :-

உரிஞ் + யானா = உரிஞ் யானா (அல்வழிப் புணர்ச்சி)

உரிஞ் + அனந்தா = உரிஞனந்தா(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி ; மெய் மீது உயிர் ஏறுதலும் இயல்புப் புணர்ச்சியே !)

உரிஞ் + ஆதா = உரிஞாதா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

உரிஞ் + இகலா = உரிஞிகலா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

உரிஞ் + ஈந்தா = உரிஞீந்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

உரிஞ் + உழுந்தா = உரிஞுழுந்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

உரிஞ் + ஊரா = உரிஞூரா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

உரிஞ் + எயினா = உரிஞெயினா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

உரிஞ் + ஏறா = உரிஞேறா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

உரிஞ் + ஐயா = உரிஞையா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

உரிஞ் + ஒழுக்கா = உரிஞொழுக்கா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

உரிஞ் + ஓதா = உரிஞோதா(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

உரிஞ் + ஔவியா = உரிஞௌவியா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

(உரிஞ் – தேய் )

பொருந் + யானா = பொருந் யானா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + அனந்தா = பொருநனந்தா(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + ஆதா = பொருநாதா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + இகலா = பொருநிகலா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + ஈந்தா = பொருநீந்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + உழுந்தா = பொருநுழுந்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + ஊரா = பொருநூரா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + எயினா = பொருநெயினா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + ஏறா = பொருநேறா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + ஐயா = பொருநையா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + ஒழுக்கா = பொருநொழுக்கா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + ஓதா = பொருநோதா(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + ஔவியா = பொருநௌவியா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

(பொருந் – போரிடு )

அனந்தனை  ‘அனந்தா’ , ஆதனை  ‘ஆதா’  , இகலனை  ‘இகலா’ , ஈந்தனை  ‘ஈந்தா’ ,
உழுந்தனை  ‘உழுந்தா’ , ஊரனை  ‘ஊரா’ , எயினனை ‘எயினா’ , ஏறனை ‘ஏறா’ , ஐயனை ‘ஐயா’ , ஒழுக்கனை ‘ஒழுக்கா’ , ஓதனை ‘ஓதா’ , ஔவியனை ‘ஔவியா’ என்று விளிக்கப்பட்டுள்ளன !
பழந் தமிழகத்தில் மக்களின் பெயர்கள்  (Names of Ancient Tamils)எவ்வாறு அமைந்திருந்தன என்பதைக் கண்ணுறும் அரிய இடம் இது !

 “ஞநமவ  என்னும்  புள்ளி இறுதியும் , …  முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே  ”
(தொகை . 10) எனும் சூத்திரத்தில் முன்னிலை மொழிக்கண் ‘உரிஞ்’ , ‘பொருந்’ ஆகியன  இயல்பாக வருவதற்குத் தடை உள்ளதா?

இல்லை !

இயல்பாயும் உறழ்ச்சியாயும் வருவதற்கே ஆண்டுத் தடை உள்ளது ! இயல்பாக மட்டும் வருவதை இங்கு சொல்லியுள்ளார் தொல்காப்பியர் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (201)

Post by Dr.S.Soundarapandian on Sun Jan 19, 2014 10:15 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (201)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொல்காப்பியம் எப்போதுமே வாழ்க்கையை ஒட்டியே செல்லும் !
இதுதான் தொல்காப்பியத்தின் தனிச் சிறப்பு !


புணர்ச்சிகள் பற்றிப் பேசிவந்த தொல்காப்பியர் மக்களை மறக்காமல் எடைப் பெயர் முதலியவற்றையும் பேசுகிறார் ! : -
 
“உயிரும் புள்ளியு மிறுதியாகி
அளவு நிறையு மெண்ணுஞ் சுட்டி
உளவெனப் பட்ட வெல்லாச் சொல்லுந்
தத்தங் கிளவி தம்மகப் பட்ட
முத்தை வரூஉங் காலந் தோன்றின்
ஒத்த  தென்ப வேயென் சாரியை”  (தொகை . 22)

‘உயிரும் புள்ளியும் இறுதி ஆகி’ – நிலைமொழி ஈறு உயிரெழுத்தாகவோ மெய்யெழுத்தாகவோ இருந்தால்,

‘அளவு நிறையும் எண்ணும் சுட்டி’ - அவை அளவு , நிறை , எண் ஆகியவற்றைக் குறித்துநின்றால்,

‘உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும்’ – அப்படி வரும் சொற்கள் எல்லாம் ‘

‘தத்தம் கிளவி  தம் அகப்பட்ட முத்தை வரூஉம் காலம் தோன்றின்’  -  தன்னை விடக் குறைந்த அளவைக் குறிக்கும்
சொல்லுடன் புணர நேர்ந்தால் ,

‘ஒத்த தென்ப ஏ என் சாரியை’ – புணர்ச்சி இடையே சாரியை ‘ஏ’ தோன்றும் !

‘முந்தை’ என்பது , ‘தத்தம்’ என்ற எதுகை நோக்கி  ‘முத்தை ’
ஆனது !

இலக்கியங்களில் மட்டுமின்றி இலக்கணங்களிலும் எதுகை எப்படிப் பேணப்படுகிறது பாருங்கள் !

 ‘முந்தை’ என்றால் ஓர் அளவுக்கு முன்னுள்ள குறைந்த அளவு !

 ‘அடி’ க்கு முந்தை ‘அங்குலம்’ !

‘படி’க்கு முந்தை   ‘ஆழாக்கு ’ !

சுருங்கச் சொன்னால் ஒரு பெரிய அளவுக்கு முன்னுள்ள சின்ன அளவே ‘முந்தை’ !

முந்தி நிற்பதால் , முந்தை !

ஒரு கலைச்சொல்லைப் (Technical term)பழந் தமிழர்கள் எப்படி உருவாக்குகிறார்கள் பாருங்கள்!

தொல்காப்பியரின் சொல்லாக்கக் கோட்பாடு இங்கே தெளிவாகிறது !

‘அகப்பட்ட’ என்ற சொல்லும் கருதத்தக்கது !

 ‘இந்த நான்கெல்லைக்குள் அகப்பட்ட மாவடை மரவடை உள்பட’ – என்று கல்வெட்டுகளில் அடிக்கடி வரும் !

இந்தச் சொல் தொல்காப்பியர் காலச் சொல் என்பது இன்று தெளிவாகிறது !

மேல் நூற்பாவிற்கு இளம்பூரணர் தந்த காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! :-

1 . உழக்கு + ஆழாக்கு = உழக்கே யாழாக்கு  (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)

2 . கலன் + பதக்கு = கலனே பதக்கு  (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)

  ‘உழக்கு’ , ‘கலன்’ இரண்டும் முகத்தல்அளவுப் பெயர்கள் !

‘கலன்’ என்பதும் ‘கலம்’ என்பதும் ஒன்றுதான்!

3 . தொடி + கஃசு = தொடியே  கஃசு  (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)

4 . கொள் + ஐயவி = கொள்ளே  ஐயவி  (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
‘தொடி’ , ‘ஐயவி’ இரண்டும் எடைப் பெயர்கள் !

5 . காணி + முந்திரிகை = காணியே முந்திரிகை  (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)

6 . கால் + காணி = காலே  காணி  (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
‘காணி’ , ‘கால்’ – எண்ணுப் பெயர்கள் !
‘முந்திரி’ என்பதும் ‘முந்திரிகை’ என்பதும் ஒன்றுதான் !
 
   வழக்கம் போல ஒரு விதிவிலக்கையும் இளம்பூரணர் நமக்காகச்   சொல்கிறார் !-

குறுணி + நானாழி = குறுணி நானாழி ((அல்வழிப் புணர்ச்சி) (சாரியை வரவில்லை என்பதைக் கவனியுங்கள்!)

மேலே இளம்பூரணர் காலத்தில் இருந்த அளவுகளை இன்றைய முறையில் வருமாறு தரலாம் ! :-

ஒரு ஆழாக்கு = 168 மில்லி லிட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.
1 நாழி= 1344 மி.லிட். (1 லிட்டரும் 344 மில்லி லிட்டரும்)
1 குறுணி = 10752 மி.லிட். (10 லிட்டரும் 752 மில்லி லிட்டரும்)
1 காணி = 1/80
1 முந்திரி =1/320
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (202)

Post by Dr.S.Soundarapandian on Mon Jan 20, 2014 8:42 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (202)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

சென்ற ஆய்வில் ‘உழக்கே ஆழாக்கு’ என்று சாரியை ‘ஏ’ பெற்ற புணர்ச்சி விதியைப் பார்த்தோம் !

ஒரு மாணவனுக்கு  ஐயம் வந்தது !

‘அப்படியானால் , ‘உழக்கே அரை’ என்று வருமா? ’ – கேட்டான் !

‘வராது !’ என்ற தொல்காப்பியர் அதற்குத் தனி விதி எழுதினார் ! :-  

“அரையென வரூஉம் பால்வரை கிளவிக்குப்
புரைவ தன்றாற் சாரியை யியற்கை”  (தொகை . 23)

பால்வரை கிளவி – பொருளின் பகுதியை (கூற்றை) உணர்த்தும் சொல் ! ‘அரை’ , ‘கால்’  போன்றன  பால்வரை கிளவிகளே !  ‘பாலது ஆணை’ என்றால் ‘ஊழ்வினை’ ! பொருள் வேறுபாட்டை அறிந்துகொள்க !

மேல் நூற்பாவிற்கு இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள் –

1 . உழக்கு + அரை = உழக்கே யரை ×
   உழக்கு + அரை = உழக்கரை √  (அல்வழிப் புணர்ச்சி)

2 . தொடி + அரை = தொடியே யரை ×
   தொடி + அரை = தொடியரை √  (அல்வழிப் புணர்ச்சி)

3 . ஒன்று + அரை = ஒன்றே  யரை×
ஒன்று + அரை = ஒன்றரை√  (அல்வழிப் புணர்ச்சி)

இதே நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் கூடுதலாகச் சில எடுத்துக்காட்டுகளைத் தருகிறார் ! அவற்றையும் காண்போமே ! -

1 . செவிடு + அரை = செவிடே யரை ×
செவிடு + அரை = செவிடரை √
செவிடு + அரை = செவிட்டரை√  (அல்வழிப் புணர்ச்சி)

2 . மூவுழக்கு + அரை = மூவுழக்கே யரை ×
மூவுழக்கு + அரை = மூவுழக்கரை √  (அல்வழிப் புணர்ச்சி)

3 . கஃசு + அரை = கஃசே யரை ×
கஃசு + அரை = கஃசரை √  (அல்வழிப் புணர்ச்சி)

4 . பத்து + அரை = பத்தே யரை ×
பத்து + அரை = பத்தரை √  (அல்வழிப் புணர்ச்சி)

5 . கலம் + அரை = கலமே யரை ×
கலம் + அரை = கலவரை √  (அல்வழிப் புணர்ச்சி)

‘பத்தரை ’மாற்றுத் தங்கம் தமிழ்ப் புணர்ச்சி !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (203)

Post by Dr.S.Soundarapandian on Wed Jan 22, 2014 8:30 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (203)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

  அளவுப் பெயர்களுடன்  ‘குறை’ என்ற சொல் வந்து புணர்ந்தால் எப்படிப் புணரும்
எனக் காட்டுகிறார் தொல்காப்பியர் ! :-

“குறையென் கிளவி முன்வரு காலை
நிறையத் தோன்றும் வேற்றுமை யியற்கை”  (தொகை . 24)

இதன்படி –

1 . உரி + குறை = உரிக் குறை (அல்வழிப் புணர்ச்சி)

2 . கலம் + குறை = கலக் குறை (அல்வழிப் புணர்ச்சி)

3. தொடி + குறை = தொடிக் குறை (அல்வழிப் புணர்ச்சி)

4 . கொள் + குறை = கொட்  குறை (அல்வழிப் புணர்ச்சி)

5. காணி + குறை = காணிக் குறை (அல்வழிப் புணர்ச்சி)

6 . கால் + குறை = காற் குறை (அல்வழிப் புணர்ச்சி)

‘குறை’ வந்து புணர்வதற்குத்தானே இலக்கணம் சொன்னார் தொல்காப்பியர் ?

இளம்பூரணர் . ‘அதனால் என்ன ? ஏதாவது ஒரு பொருளின் பெயரைக்
கொண்டுவந்து அளவுப் பெயர்களுடன் புணர்த்தினாலும் இதே விதிதான் !’ என்கிறார் !

இதன்படி –
கலம் + பயறு = கலப் பயறு (அல்வழிப் புணர்ச்சி)

‘கூறு’ என்ற சொல் வந்து புணர்ந்தாலும் இதுதான் விதி என்கிறார் இளம்பூரணர் ! –
நாழி + கூறு = நாழிக் கூறு (அல்வழிப் புணர்ச்சி)
(நாழிக் கூறு – நாழியின் பகுதி)

 இவ்விடத்தில் நச்சினார்க்கினியர் உரை நமக்கு விளக்கம் தருவதாக உள்ளது ! : -

“உரிக் குறை : உரி நெல்லும் குறை நெல்லும் என்க ! ‘வேற்றுமை இயற்கை’ எனவே இவை வேற்றுமை அல்ல ஆயின . ஆகவே , உரிக்குறை என்பதற்கு  உரியும் உழக்கும் எனப் பொருளாயிற்று !”

ஐயம் தீர்ந்ததா ?
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (204)

Post by Dr.S.Soundarapandian on Sat Jan 25, 2014 11:04 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (204)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘குறை’ என்ற சொல் , அளவுப் பெயர்களுடன் சேரும்போது எப்படிப் புணரும் என்று இதற்கு முந்தைய ஆய்வில் பார்த்தோம் !

அதே ‘குறை’ ,குற்றியலுகரச் சொற்களுடன் புணரும்போது என்ன விதி என்று அடுத்துக் காட்டுகிறார் தொல்காப்பியர் ! :-

“குற்றிய லுகரக் கின்னே சாரியை” (தொகை . 25)
குற்றியலுகரக்கு – குற்றியலுகரச் சொற்களுக்கு

‘அளவுப் பெயர்கள் குற்றியலுகரச் சொற்களாக இருந்தால் , ‘இன்’ சாரியை
சேரும் ’ – இதுதான் கருத்து !

இதன்படி –
1 . உழக்கு + குறை = உழக்குக் குறை ×
உழக்கு + குறை = உழக்கிற் குறை ×
   உழக்கு + குறை = உழக்கின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

(உழக்கு – வன்றொடர்க் குற்றியலுகரம் பெற்றுள்ளது; உழக்கின் குறை –  ‘உழக்கும் குறையும்’ என்பது பொருள் !

உழக்கிற் குறை – வேற்றுமைப் புணர்ச்சி ; இதற்கு ‘உழக்கில் குறை’ என்பது பொருள் ! இங்கே வரும் ‘இன்’ , சாரியை அல்ல ; வேற்றுமை உருபு !)

2 . கழஞ்சு + குறை = கழஞ்சுக் குறை ×
கழஞ்சு + குறை = கழஞ்சிற் குறை ×
   கழஞ்சு + குறை = கழஞ்சின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

(கழஞ்சு – மென்றொடர்க் குற்றியலுகரம் பெற்றுள்ளது; கழஞ்சின் குறை –  ‘கழஞ்சும் குறையும் ’என்பது பொருள் !

கழஞ்சிற் குறை – வேற்றுமைப் புணர்ச்சி ; இதற்குக் ‘கழஞ்சில் குறை’ என்பது பொருள் ! இங்கே வரும் ‘இன்’ , சாரியை அல்ல ; வேற்றுமை உருபு !)

3 . ஒன்று + குறை = ஒன்றுக் குறை ×
ஒன்று + குறை = ஒன்றிற் குறை ×
   ஒன்று + குறை = ஒன்றின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

(ஒன்று – மென்றொடர்க் குற்றியலுகரம் பெற்றுள்ளது; ஒன்றின் குறை – ‘ஒன்றும் குறையும் ’என்பது பொருள் !

ஒன்றிற் குறை – வேற்றுமைப் புணர்ச்சி ; இதற்கு ‘ஒன்றில் குறை’ என்பது பொருள் !இங்கே வரும் ‘இன்’ , சாரியை அல்ல ; வேற்றுமை உருபு !)

  இங்கு வந்துள்ள புணர்ச்சி நுட்பங்கள் தமிழ் இலக்கண உலகில் குறிப்பிடத் தக்கவை !

இந்த நுணுக்கங்கள் நச்சினார்க்கினியரை அடியொற்றியவையாம்  !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (205)

Post by Dr.S.Soundarapandian on Sat Jan 25, 2014 7:56 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (205)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொகை மரபில்  ‘குறை’ என்ற சொல் அளவுப் பெயர்களுடன் எப்படிப் புணரும் என்று காட்டிவருகிறார் தொல்காப்பியர் !

இப்போது –

“அத்திடை  வரூஉம்  கலமென்  னளவே” (தொகை . 26)

அத்து – சாரியையாகிய ‘அத்து’ .

‘கலம்’ என்னும் சொல் அளவுப் பெயர்களுடன் புணரும்போது அத்துச் சாரியை வரும் என்பது தொல்காப்பியம் !

கலம் + குறை  = கலத்துக் குறை  (அத்து – சாரியை ) (அல்வழிப் புணர்ச்சி)

கலத்துக் குறை – ‘கலமும் குறையும் ’ என்று பொருள்படுவதால் ‘அல்வழிப் புணர்ச்சி’ ! வேறு ஒன்றுமில்லை !

தொல்காப்பியத்தில்  ‘கலம்’ என்ற சொல்தான் வந்துள்ளது ! இங்கே இளம்பூரணர் என்ன எழுதுகிறாரென்றால்  ,  ‘கலன்’ என்றசொல் வந்திருந்தாலும்  ‘அத்தே வற்றே’ என்ற நூற்பாப்படி [புணரியல் 31]  ‘கலத்துக் குறை’ என்றுதான் வரும் என்கிறார் !

அப்படியானால் , நூற்பாவில் ‘கலனென் னளவே’ என்று போட்டிருக்கலாமே ?

இதற்கு இளம்பூரணரின் விடை – செய்யுள் இன்பம் நோக்கி அவ்வாறு ‘கலம்’ என்ற சொல்லை ஆண்டிருக்கவேண்டும் !

நூற்பா யாப்பாக இருந்தாலும் அதற்கும் செய்யுள் இன்பம் வேண்டும் என்ற இளம்பூரணர் காட்டும் செய்யுள் கோட்பாடு நமக்கு விளங்குகிறது !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (206)

Post by Dr.S.Soundarapandian on Sun Jan 26, 2014 10:45 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (206)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொகை மரபில்
நாம் காணவேண்டிய அடுத்த நூற்பா ! :-

“பனையெ  னளவுங் காவெ னிறையும்
 நினையுங் காலை யின்னொடு சிவணும்”  (தொகை . 27)

 ‘பனை’ , ‘ கா’ – இரு அளவுப் பெயர்ச் சொற்களும் (Nouns denoting measurements) ‘குறை’ எனும் சொல்லோடு புணரவேண்டுமானால் , ‘இன்’ சாரியை இடையே வரும் ! – இதுதான் தொல்காப்பியக் கருத்து !

இதன்படி –

1 . பனை + குறை = பனையின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

பனையின்  குறை – ‘பனையும் குறையும்’ ; இப்பொருள் உள்ளதால்தான் நம்மால்      ‘அல்வழிப் புணர்ச்சி’ எனக் கூற முடிகிறது !

2 . கா + குறை = காவின் குறை  √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

  காவின்  குறை – ‘காவும் குறையும்’ ; உம்மைத் தொகை .

 ‘பனை’யை அளவுப் பெயர் என்றும் , ‘கா’வை  நிறைப் பெயர் என்றும் இளம்பூரணர்    தெரிவிக்கிறார் !

இந்த நூற்பாவுக்கும் விதிவிலக்குக் கூறுகிறார் இளம்பூரணர் ! :-

“  ‘நினையுங் காலை ’ என்றதனான் , வல்லெழுத்துப் பேறும் சிறுபான்மை கொள்க ! ‘பனைக் குறை’ , ‘காக் குறை’ என வரும் !” .

இளம்பூரணரின் இவ் விதி விலக்குப் படி –

1 . பனை + குறை = பனைக் குறை √ (அல்வழிப் புணர்ச்சி) (இன் சாரியை பெற வில்லை)
பனைக் குறை – உம்மைத் தொகை .

2 . கா + குறை = காக் குறை √ (அல்வழிப் புணர்ச்சி) (இன் சாரியை பெற வில்லை)
காக் குறை – உம்மைத் தொகை .

அது சரி ! ‘குற்றிய லுகரக் கின்னே சாரியை’ என முன்னே (தொகை . 25) கூறினாரே , அங்கேயே பனை , கா இரண்டும்கூட இன் சாரியை பெறும் எனச் சேர்த்துச் சொல்லியிருக்கலாமே ?

நல்ல கேள்வி !

விடை – மனப்பாடத்திற்காக அவ்வாறு செய்தார் !

‘குற்றிய லுகரக் கின்னே சாரியை’ – என்று தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூட மாணவன் ஒப்பிக்கவேண்டும் ! அதில் வேறொன்றைச் சேர்க்கக் கூடாது !

தொல்காப்பியக் கட்டமைப்பே (Structure of Tholkappiyam) இப்படித்தான் செல்கிறது !அஃதாவது பழந்தமிழ்க் கல்விமுறையை (Education System of Ancient Tamils) ஒட்டிச் செல்கிறது !
 
பனை-  ‘தினை ’ என்பதற்கு எதிர்நிலையாக இச் சொல் வந்துள்ளது என்பர் !

1கா = 100 பலம் = 3500 கிராம் .
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (207)

Post by Dr.S.Soundarapandian on Sun Jan 26, 2014 7:04 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (207)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

அளவு , நிறைப் பெயர் சொற்கள் தொடர்பாக எல்லாவற்றையும் தொல்காப்பியர் கூறிவிட்டார் என நாம் நினைக்கும் நேரத்தில் ‘இருங்கள் !இருங்கள்! கடைசியாக ஒன்று சொல்லவேண்டியுள்ளது ! ’ என்று கூறுவதுபோல இந்த நூற்பாவைத் தருகிறார் ! :-

“அளவிற்கு நிரையிற்கு மொழிமுத லாகி
உளவெனப் பட்ட  வொன்பதிற்  றெழுத்தே
அவைதாம்
கசதப வென்றா நமவ வென்றா
அகர உகரமோ  டவையென  மொழிப”   (தொகை . 28)

அளவு , நிறைப் பெயர்ச் சொற்கள் இன்னின்ன முதல் எழுத்துகளைக் கொண்டுதான் எழுதப்படும் என்று வரையறுக்கிறார் தொல்காப்பியர் !

அந்த முதல் எழுத்துகள் – க , ச , த , ப , ந , ம , வ , அ , உ  (9)

க – முதலாகச் சொல்லியிருந்தாலும்  இவற்றின் வரிசை எழுத்துகளையும் நாம் கொள்ளவேண்டும் !

எடுத்துக்காட்டாக - ‘க’ முதல் எழுத்தாக வரலாம் என்று சொல்லியுள்ளதால் , ‘கா’ , ‘கீ’ என்று தொடங்கும் எழுத்துகளும் வரலாம் என்பதே பொருளாம் !

எடுத்துக்காட்டுகள் –

1 . கலம் ; கழஞ்சு

2 . சாடி ; சீரகம்

3 . தூத ; தொடி

4 . பானை ; பலம்

5 . நாழி ; நிறை

6 . மண்டை ; மா

7 . வட்டில் ; வரை

8 . அகல் ; அந்தை

9 . உழக்கு

- இவற்றில் 1 . முகத்தல் அளவைப் பெயர்கள் : கலம் , சாடி , தூதை , பானை , நாழி , மண்டை , வட்டி , அகல் , உழக்கு .

              2 . நிறுத்தல் அளவைப் பெயர்கள் : கழஞ்சு , சீரகம் , தொடி , பலம் ,
நிறை , மா , வரை , அந்தை .

மேலே சொல்லப்பட்ட எழுத்துகள் தவிர வேறு சில எழுத்துகளையும் கொண்டு அளவைப் பெயர்கள் வரும் என்கிறார் இளம்பூரணர் ! – இம்மி , ஓரடை , ஓராடை .

மேலே வந்துள்ள ‘அந்தை’ என்பதும் ‘ஐந்தை’ என்பதும் ஒன்றுதான் என்றும் இவை ‘சிறுவெண்கடு’கைக் குறிக்கும் என்றும் குறித்துளர் !

இளம்பூரணர் குறித்த ‘இம்மி’, வழக்கிலும் உள்ளதை நோக்கலாம் ! ‘என்ன ,
இம்மிக் கணக்குப் பார்க்கிறியே ?’ என்று கூறக் கேட்கலாம் !

                                         ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Page 10 of 28 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 19 ... 28  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum