ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போடி, நீ தான் லூசு...!
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 T.N.Balasubramanian

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Page 11 of 28 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 19 ... 28  Next

View previous topic View next topic Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by Dr.S.Soundarapandian on Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம் (198)

Post by Dr.S.Soundarapandian on Sat Jan 18, 2014 8:44 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (198)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

  முன் ஆய்வில் ,  ‘தாம்’ என்பது குறுகித் ‘தம்’ ஆனால் , அது ‘ஐ’யுடன் சேரும்போது
‘தம்மை’ என்று , ‘ம்ம்’இரட்டல் ஏற்படும் எனப் பார்த்தோம் !

‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமைக்குப் பொருந்தும் இந் நியாயம்  ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபுக்கும் ‘கு’ எனும் நான்காம் வேற்றுமை உருபுக்கும் பொருந்தாது என்று அடுத்துக் கூறவருகிறார் தொல்காப்பியர் ! : -

“ஆற  னுருபினு நான்க  னுருபினுங்
கூறிய குற்றொற்  றிரட்ட  லில்லை
ஈறாகு புள்ளி யகரமொடு  நிலையும்
நெடுமுதல் குறுகு மொழிமுன்  னான”  (தொகை . 19)


‘நெடுமுதல் குறுகும்  மொழிமுன்  னான’ – நிலைமொழியானது நெடிலாயிருந்து
குறுகினால்,

‘ஆறன் உருபினும் நான்கன் உருபினும்’ – ஆறாம் வேற்றுமை உருபு மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகள் வந்து புணரும்போது ,

‘கூறிய குற்றொற்று இரட்டல் இல்லை’ – முன் நூற்பாவில் (தொகை . 18) கூறப்பட்டதுபோல நிலைமொழி ஈற்று மெய் இரட்டாது !

‘ஈறாகு புள்ளி அகரமொடு நிலையும்’ – நிலைமொழி ஈற்று மெய்யோடு ‘அ’  சேரும் !

இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு  தரலாம் ! :-

1 .  தாம் → நெடுமுதல் குறுகித் → தம் →  ‘அ ’  சேரும்போது → தம் +அ →தம → ஆறாம் வேற்றுமை உருபு  சேரும்போது → தம +  அது → தமது √
தம் + அது → தம்மது × ( ‘ம்’ இரட்டியதால், தவறு  எனக் கூற முடிகிறது !)


2 . தாம் → நெடுமுதல் குறுகித் → தம் →  ‘அ ’  சேரும்போது → தம் +அ →தம → நான்காம் வேற்றுமை உருபு  சேரும்போது → தம + கு → தமக்கு √ ( க் - சந்தி)
தம் + கு → தம்மக்கு ×  ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு  எனக் கூற முடிகிறது !)

3 . நாம் → நெடுமுதல் குறுகி → நம் →  ‘அ ’  சேரும்போது → நம் +அ →நம → ஆறாம் வேற்றுமை உருபு  சேரும்போது → நம + அது → நமது √
நம் + அது → நம்மது ×  ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு  எனக் கூற முடிகிறது !)

4. நாம் → நெடுமுதல் குறுகி → நம் →  ‘அ ’  சேரும்போது → நம் +அ →நம → நான்காம் வேற்றுமை உருபு  சேரும்போது → நம + கு → நமக்கு √ ( க் - சந்தி)
நம் + கு → நம்மக்கு ×  ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு  எனக் கூற முடிகிறது !)

அது சரி !

நெடுமுதல் குறுகாத சாரியைகள் – ‘தம்’ , ‘நம்’ ஆகியவை புணர்ந்தாலும் இதே விதிதானா? – வினா!

 ‘இதே விதிதான் ’ என்கிறார் இளம்பூரணர் !

எடுத்துக்காட்டுகளுடன் இதனைக் கீழே விளக்கலாம் ! –

1 . எல்லார்+தம் + அது = எல்லார் + தம + அது = எல்லார் தமது √
எல்லார் + தம் + அது = எல்லார் தம்மது × ( ‘ம்’ இரட்டியதால் தவறு எனக் கூற முடிகிறது)

2. எல்லார்+நம் + அது = எல்லார் + நம + அது = எல்லார் நமது √
எல்லார் + நம் + அது = எல்லார் நம்மது × ( ‘ம்’ இரட்டியதால் தவறு எனக் கூற முடிகிறது)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (199)

Post by Dr.S.Soundarapandian on Sat Jan 18, 2014 10:25 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (199)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

“தமக்கு , நமக்கு – என்றெல்லாம் புணர்ச்சிகள் வரும் என்றீர்களே , அப்படியானால்
நுமக்கு , நுமது என வருமா? இல்லை நும்மக்கு , நும்மது என்று வருமா?” – ஒரு
மாணவன் தொல்காப்பியரைக்  கேட்டிருக்கிறான் !

அவனுக்கு விடை கூற அடுத்த நூற்பா! :-


“நும்மெ  னிறுதியு மந்நிலை திரியாது ! ”  (தொகை . 20)

அஃதாவது , முன் நூற்பாவில் (தொகை .19) கூறியபடி ,நிலைமொழி ஈற்றிலே குற்றெழுத்து இரட்டாமல் வரும் , ‘அது’ , ‘கு’ ஆகிய
வேற்றுமை உருபுகள் புணரும்போது !

எடுத்துக்காட்டுகள் –

1 . நும் →   ‘அ ’  சேரும்போது → நும் +அ →நும  → ஆறாம் வேற்றுமை உருபு  சேரும்போது → நும + அது → நுமது √
நும் + அது → நும்மது ×  ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு  எனக் கூற முடிகிறது !)

2. நும் →   ‘அ ’  சேரும்போது → நும் +அ →நும → நான்காம் வேற்றுமை உருபு  சேரும்போது → நும + கு → நுமக்கு √ ( க் - சந்தி)
நும் + கு → நும்மக்கு ×  ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு  எனக் கூற முடிகிறது !)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (200)

Post by Dr.S.Soundarapandian on Sun Jan 19, 2014 12:04 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (200)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொகை மரபில் நாம் நின்று விளையாடுகிறோம் !

அடுத்த நூற்பா! :-

“உகரமொடு புணரும் புள்ளி யிறுதி
யகரமு முயிரும் வருவழி யியற்கை”  (தொகை . 21)

‘உகரமொடு புணரும் புள்ளி இறுதி’ -   ‘உருஞு ’ , ‘பொருநு’ என்ற சொற்கள் ,

‘யகரமும் உயிரும் வருவழி ’ – யகரத்தையும் உயிர் எழுத்துகளையும் முதலாகக் கொண்ட சொற்களுடன் புணரும்போது ,

‘இயற்கை’ -  இயற்கையாக, அஃதாவது , ‘உரிஞ்’ , ‘பொருந்’ என்ற வடிவங்களில் நின்றே புணரும் !

நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! :-

உரிஞ் + யானா = உரிஞ் யானா (அல்வழிப் புணர்ச்சி)

உரிஞ் + அனந்தா = உரிஞனந்தா(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி ; மெய் மீது உயிர் ஏறுதலும் இயல்புப் புணர்ச்சியே !)

உரிஞ் + ஆதா = உரிஞாதா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

உரிஞ் + இகலா = உரிஞிகலா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

உரிஞ் + ஈந்தா = உரிஞீந்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

உரிஞ் + உழுந்தா = உரிஞுழுந்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

உரிஞ் + ஊரா = உரிஞூரா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

உரிஞ் + எயினா = உரிஞெயினா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

உரிஞ் + ஏறா = உரிஞேறா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

உரிஞ் + ஐயா = உரிஞையா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

உரிஞ் + ஒழுக்கா = உரிஞொழுக்கா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

உரிஞ் + ஓதா = உரிஞோதா(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

உரிஞ் + ஔவியா = உரிஞௌவியா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

(உரிஞ் – தேய் )

பொருந் + யானா = பொருந் யானா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + அனந்தா = பொருநனந்தா(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + ஆதா = பொருநாதா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + இகலா = பொருநிகலா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + ஈந்தா = பொருநீந்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + உழுந்தா = பொருநுழுந்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + ஊரா = பொருநூரா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + எயினா = பொருநெயினா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + ஏறா = பொருநேறா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + ஐயா = பொருநையா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + ஒழுக்கா = பொருநொழுக்கா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + ஓதா = பொருநோதா(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

பொருந் + ஔவியா = பொருநௌவியா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )

(பொருந் – போரிடு )

அனந்தனை  ‘அனந்தா’ , ஆதனை  ‘ஆதா’  , இகலனை  ‘இகலா’ , ஈந்தனை  ‘ஈந்தா’ ,
உழுந்தனை  ‘உழுந்தா’ , ஊரனை  ‘ஊரா’ , எயினனை ‘எயினா’ , ஏறனை ‘ஏறா’ , ஐயனை ‘ஐயா’ , ஒழுக்கனை ‘ஒழுக்கா’ , ஓதனை ‘ஓதா’ , ஔவியனை ‘ஔவியா’ என்று விளிக்கப்பட்டுள்ளன !
பழந் தமிழகத்தில் மக்களின் பெயர்கள்  (Names of Ancient Tamils)எவ்வாறு அமைந்திருந்தன என்பதைக் கண்ணுறும் அரிய இடம் இது !

 “ஞநமவ  என்னும்  புள்ளி இறுதியும் , …  முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே  ”
(தொகை . 10) எனும் சூத்திரத்தில் முன்னிலை மொழிக்கண் ‘உரிஞ்’ , ‘பொருந்’ ஆகியன  இயல்பாக வருவதற்குத் தடை உள்ளதா?

இல்லை !

இயல்பாயும் உறழ்ச்சியாயும் வருவதற்கே ஆண்டுத் தடை உள்ளது ! இயல்பாக மட்டும் வருவதை இங்கு சொல்லியுள்ளார் தொல்காப்பியர் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (201)

Post by Dr.S.Soundarapandian on Sun Jan 19, 2014 10:15 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (201)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொல்காப்பியம் எப்போதுமே வாழ்க்கையை ஒட்டியே செல்லும் !
இதுதான் தொல்காப்பியத்தின் தனிச் சிறப்பு !


புணர்ச்சிகள் பற்றிப் பேசிவந்த தொல்காப்பியர் மக்களை மறக்காமல் எடைப் பெயர் முதலியவற்றையும் பேசுகிறார் ! : -
 
“உயிரும் புள்ளியு மிறுதியாகி
அளவு நிறையு மெண்ணுஞ் சுட்டி
உளவெனப் பட்ட வெல்லாச் சொல்லுந்
தத்தங் கிளவி தம்மகப் பட்ட
முத்தை வரூஉங் காலந் தோன்றின்
ஒத்த  தென்ப வேயென் சாரியை”  (தொகை . 22)

‘உயிரும் புள்ளியும் இறுதி ஆகி’ – நிலைமொழி ஈறு உயிரெழுத்தாகவோ மெய்யெழுத்தாகவோ இருந்தால்,

‘அளவு நிறையும் எண்ணும் சுட்டி’ - அவை அளவு , நிறை , எண் ஆகியவற்றைக் குறித்துநின்றால்,

‘உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும்’ – அப்படி வரும் சொற்கள் எல்லாம் ‘

‘தத்தம் கிளவி  தம் அகப்பட்ட முத்தை வரூஉம் காலம் தோன்றின்’  -  தன்னை விடக் குறைந்த அளவைக் குறிக்கும்
சொல்லுடன் புணர நேர்ந்தால் ,

‘ஒத்த தென்ப ஏ என் சாரியை’ – புணர்ச்சி இடையே சாரியை ‘ஏ’ தோன்றும் !

‘முந்தை’ என்பது , ‘தத்தம்’ என்ற எதுகை நோக்கி  ‘முத்தை ’
ஆனது !

இலக்கியங்களில் மட்டுமின்றி இலக்கணங்களிலும் எதுகை எப்படிப் பேணப்படுகிறது பாருங்கள் !

 ‘முந்தை’ என்றால் ஓர் அளவுக்கு முன்னுள்ள குறைந்த அளவு !

 ‘அடி’ க்கு முந்தை ‘அங்குலம்’ !

‘படி’க்கு முந்தை   ‘ஆழாக்கு ’ !

சுருங்கச் சொன்னால் ஒரு பெரிய அளவுக்கு முன்னுள்ள சின்ன அளவே ‘முந்தை’ !

முந்தி நிற்பதால் , முந்தை !

ஒரு கலைச்சொல்லைப் (Technical term)பழந் தமிழர்கள் எப்படி உருவாக்குகிறார்கள் பாருங்கள்!

தொல்காப்பியரின் சொல்லாக்கக் கோட்பாடு இங்கே தெளிவாகிறது !

‘அகப்பட்ட’ என்ற சொல்லும் கருதத்தக்கது !

 ‘இந்த நான்கெல்லைக்குள் அகப்பட்ட மாவடை மரவடை உள்பட’ – என்று கல்வெட்டுகளில் அடிக்கடி வரும் !

இந்தச் சொல் தொல்காப்பியர் காலச் சொல் என்பது இன்று தெளிவாகிறது !

மேல் நூற்பாவிற்கு இளம்பூரணர் தந்த காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! :-

1 . உழக்கு + ஆழாக்கு = உழக்கே யாழாக்கு  (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)

2 . கலன் + பதக்கு = கலனே பதக்கு  (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)

  ‘உழக்கு’ , ‘கலன்’ இரண்டும் முகத்தல்அளவுப் பெயர்கள் !

‘கலன்’ என்பதும் ‘கலம்’ என்பதும் ஒன்றுதான்!

3 . தொடி + கஃசு = தொடியே  கஃசு  (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)

4 . கொள் + ஐயவி = கொள்ளே  ஐயவி  (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
‘தொடி’ , ‘ஐயவி’ இரண்டும் எடைப் பெயர்கள் !

5 . காணி + முந்திரிகை = காணியே முந்திரிகை  (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)

6 . கால் + காணி = காலே  காணி  (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
‘காணி’ , ‘கால்’ – எண்ணுப் பெயர்கள் !
‘முந்திரி’ என்பதும் ‘முந்திரிகை’ என்பதும் ஒன்றுதான் !
 
   வழக்கம் போல ஒரு விதிவிலக்கையும் இளம்பூரணர் நமக்காகச்   சொல்கிறார் !-

குறுணி + நானாழி = குறுணி நானாழி ((அல்வழிப் புணர்ச்சி) (சாரியை வரவில்லை என்பதைக் கவனியுங்கள்!)

மேலே இளம்பூரணர் காலத்தில் இருந்த அளவுகளை இன்றைய முறையில் வருமாறு தரலாம் ! :-

ஒரு ஆழாக்கு = 168 மில்லி லிட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.
1 நாழி= 1344 மி.லிட். (1 லிட்டரும் 344 மில்லி லிட்டரும்)
1 குறுணி = 10752 மி.லிட். (10 லிட்டரும் 752 மில்லி லிட்டரும்)
1 காணி = 1/80
1 முந்திரி =1/320
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (202)

Post by Dr.S.Soundarapandian on Mon Jan 20, 2014 8:42 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (202)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

சென்ற ஆய்வில் ‘உழக்கே ஆழாக்கு’ என்று சாரியை ‘ஏ’ பெற்ற புணர்ச்சி விதியைப் பார்த்தோம் !

ஒரு மாணவனுக்கு  ஐயம் வந்தது !

‘அப்படியானால் , ‘உழக்கே அரை’ என்று வருமா? ’ – கேட்டான் !

‘வராது !’ என்ற தொல்காப்பியர் அதற்குத் தனி விதி எழுதினார் ! :-  

“அரையென வரூஉம் பால்வரை கிளவிக்குப்
புரைவ தன்றாற் சாரியை யியற்கை”  (தொகை . 23)

பால்வரை கிளவி – பொருளின் பகுதியை (கூற்றை) உணர்த்தும் சொல் ! ‘அரை’ , ‘கால்’  போன்றன  பால்வரை கிளவிகளே !  ‘பாலது ஆணை’ என்றால் ‘ஊழ்வினை’ ! பொருள் வேறுபாட்டை அறிந்துகொள்க !

மேல் நூற்பாவிற்கு இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள் –

1 . உழக்கு + அரை = உழக்கே யரை ×
   உழக்கு + அரை = உழக்கரை √  (அல்வழிப் புணர்ச்சி)

2 . தொடி + அரை = தொடியே யரை ×
   தொடி + அரை = தொடியரை √  (அல்வழிப் புணர்ச்சி)

3 . ஒன்று + அரை = ஒன்றே  யரை×
ஒன்று + அரை = ஒன்றரை√  (அல்வழிப் புணர்ச்சி)

இதே நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் கூடுதலாகச் சில எடுத்துக்காட்டுகளைத் தருகிறார் ! அவற்றையும் காண்போமே ! -

1 . செவிடு + அரை = செவிடே யரை ×
செவிடு + அரை = செவிடரை √
செவிடு + அரை = செவிட்டரை√  (அல்வழிப் புணர்ச்சி)

2 . மூவுழக்கு + அரை = மூவுழக்கே யரை ×
மூவுழக்கு + அரை = மூவுழக்கரை √  (அல்வழிப் புணர்ச்சி)

3 . கஃசு + அரை = கஃசே யரை ×
கஃசு + அரை = கஃசரை √  (அல்வழிப் புணர்ச்சி)

4 . பத்து + அரை = பத்தே யரை ×
பத்து + அரை = பத்தரை √  (அல்வழிப் புணர்ச்சி)

5 . கலம் + அரை = கலமே யரை ×
கலம் + அரை = கலவரை √  (அல்வழிப் புணர்ச்சி)

‘பத்தரை ’மாற்றுத் தங்கம் தமிழ்ப் புணர்ச்சி !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (203)

Post by Dr.S.Soundarapandian on Wed Jan 22, 2014 8:30 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (203)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

  அளவுப் பெயர்களுடன்  ‘குறை’ என்ற சொல் வந்து புணர்ந்தால் எப்படிப் புணரும்
எனக் காட்டுகிறார் தொல்காப்பியர் ! :-

“குறையென் கிளவி முன்வரு காலை
நிறையத் தோன்றும் வேற்றுமை யியற்கை”  (தொகை . 24)

இதன்படி –

1 . உரி + குறை = உரிக் குறை (அல்வழிப் புணர்ச்சி)

2 . கலம் + குறை = கலக் குறை (அல்வழிப் புணர்ச்சி)

3. தொடி + குறை = தொடிக் குறை (அல்வழிப் புணர்ச்சி)

4 . கொள் + குறை = கொட்  குறை (அல்வழிப் புணர்ச்சி)

5. காணி + குறை = காணிக் குறை (அல்வழிப் புணர்ச்சி)

6 . கால் + குறை = காற் குறை (அல்வழிப் புணர்ச்சி)

‘குறை’ வந்து புணர்வதற்குத்தானே இலக்கணம் சொன்னார் தொல்காப்பியர் ?

இளம்பூரணர் . ‘அதனால் என்ன ? ஏதாவது ஒரு பொருளின் பெயரைக்
கொண்டுவந்து அளவுப் பெயர்களுடன் புணர்த்தினாலும் இதே விதிதான் !’ என்கிறார் !

இதன்படி –
கலம் + பயறு = கலப் பயறு (அல்வழிப் புணர்ச்சி)

‘கூறு’ என்ற சொல் வந்து புணர்ந்தாலும் இதுதான் விதி என்கிறார் இளம்பூரணர் ! –
நாழி + கூறு = நாழிக் கூறு (அல்வழிப் புணர்ச்சி)
(நாழிக் கூறு – நாழியின் பகுதி)

 இவ்விடத்தில் நச்சினார்க்கினியர் உரை நமக்கு விளக்கம் தருவதாக உள்ளது ! : -

“உரிக் குறை : உரி நெல்லும் குறை நெல்லும் என்க ! ‘வேற்றுமை இயற்கை’ எனவே இவை வேற்றுமை அல்ல ஆயின . ஆகவே , உரிக்குறை என்பதற்கு  உரியும் உழக்கும் எனப் பொருளாயிற்று !”

ஐயம் தீர்ந்ததா ?
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (204)

Post by Dr.S.Soundarapandian on Sat Jan 25, 2014 11:04 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (204)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘குறை’ என்ற சொல் , அளவுப் பெயர்களுடன் சேரும்போது எப்படிப் புணரும் என்று இதற்கு முந்தைய ஆய்வில் பார்த்தோம் !

அதே ‘குறை’ ,குற்றியலுகரச் சொற்களுடன் புணரும்போது என்ன விதி என்று அடுத்துக் காட்டுகிறார் தொல்காப்பியர் ! :-

“குற்றிய லுகரக் கின்னே சாரியை” (தொகை . 25)
குற்றியலுகரக்கு – குற்றியலுகரச் சொற்களுக்கு

‘அளவுப் பெயர்கள் குற்றியலுகரச் சொற்களாக இருந்தால் , ‘இன்’ சாரியை
சேரும் ’ – இதுதான் கருத்து !

இதன்படி –
1 . உழக்கு + குறை = உழக்குக் குறை ×
உழக்கு + குறை = உழக்கிற் குறை ×
   உழக்கு + குறை = உழக்கின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

(உழக்கு – வன்றொடர்க் குற்றியலுகரம் பெற்றுள்ளது; உழக்கின் குறை –  ‘உழக்கும் குறையும்’ என்பது பொருள் !

உழக்கிற் குறை – வேற்றுமைப் புணர்ச்சி ; இதற்கு ‘உழக்கில் குறை’ என்பது பொருள் ! இங்கே வரும் ‘இன்’ , சாரியை அல்ல ; வேற்றுமை உருபு !)

2 . கழஞ்சு + குறை = கழஞ்சுக் குறை ×
கழஞ்சு + குறை = கழஞ்சிற் குறை ×
   கழஞ்சு + குறை = கழஞ்சின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

(கழஞ்சு – மென்றொடர்க் குற்றியலுகரம் பெற்றுள்ளது; கழஞ்சின் குறை –  ‘கழஞ்சும் குறையும் ’என்பது பொருள் !

கழஞ்சிற் குறை – வேற்றுமைப் புணர்ச்சி ; இதற்குக் ‘கழஞ்சில் குறை’ என்பது பொருள் ! இங்கே வரும் ‘இன்’ , சாரியை அல்ல ; வேற்றுமை உருபு !)

3 . ஒன்று + குறை = ஒன்றுக் குறை ×
ஒன்று + குறை = ஒன்றிற் குறை ×
   ஒன்று + குறை = ஒன்றின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

(ஒன்று – மென்றொடர்க் குற்றியலுகரம் பெற்றுள்ளது; ஒன்றின் குறை – ‘ஒன்றும் குறையும் ’என்பது பொருள் !

ஒன்றிற் குறை – வேற்றுமைப் புணர்ச்சி ; இதற்கு ‘ஒன்றில் குறை’ என்பது பொருள் !இங்கே வரும் ‘இன்’ , சாரியை அல்ல ; வேற்றுமை உருபு !)

  இங்கு வந்துள்ள புணர்ச்சி நுட்பங்கள் தமிழ் இலக்கண உலகில் குறிப்பிடத் தக்கவை !

இந்த நுணுக்கங்கள் நச்சினார்க்கினியரை அடியொற்றியவையாம்  !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (205)

Post by Dr.S.Soundarapandian on Sat Jan 25, 2014 7:56 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (205)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொகை மரபில்  ‘குறை’ என்ற சொல் அளவுப் பெயர்களுடன் எப்படிப் புணரும் என்று காட்டிவருகிறார் தொல்காப்பியர் !

இப்போது –

“அத்திடை  வரூஉம்  கலமென்  னளவே” (தொகை . 26)

அத்து – சாரியையாகிய ‘அத்து’ .

‘கலம்’ என்னும் சொல் அளவுப் பெயர்களுடன் புணரும்போது அத்துச் சாரியை வரும் என்பது தொல்காப்பியம் !

கலம் + குறை  = கலத்துக் குறை  (அத்து – சாரியை ) (அல்வழிப் புணர்ச்சி)

கலத்துக் குறை – ‘கலமும் குறையும் ’ என்று பொருள்படுவதால் ‘அல்வழிப் புணர்ச்சி’ ! வேறு ஒன்றுமில்லை !

தொல்காப்பியத்தில்  ‘கலம்’ என்ற சொல்தான் வந்துள்ளது ! இங்கே இளம்பூரணர் என்ன எழுதுகிறாரென்றால்  ,  ‘கலன்’ என்றசொல் வந்திருந்தாலும்  ‘அத்தே வற்றே’ என்ற நூற்பாப்படி [புணரியல் 31]  ‘கலத்துக் குறை’ என்றுதான் வரும் என்கிறார் !

அப்படியானால் , நூற்பாவில் ‘கலனென் னளவே’ என்று போட்டிருக்கலாமே ?

இதற்கு இளம்பூரணரின் விடை – செய்யுள் இன்பம் நோக்கி அவ்வாறு ‘கலம்’ என்ற சொல்லை ஆண்டிருக்கவேண்டும் !

நூற்பா யாப்பாக இருந்தாலும் அதற்கும் செய்யுள் இன்பம் வேண்டும் என்ற இளம்பூரணர் காட்டும் செய்யுள் கோட்பாடு நமக்கு விளங்குகிறது !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (206)

Post by Dr.S.Soundarapandian on Sun Jan 26, 2014 10:45 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (206)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொகை மரபில்
நாம் காணவேண்டிய அடுத்த நூற்பா ! :-

“பனையெ  னளவுங் காவெ னிறையும்
 நினையுங் காலை யின்னொடு சிவணும்”  (தொகை . 27)

 ‘பனை’ , ‘ கா’ – இரு அளவுப் பெயர்ச் சொற்களும் (Nouns denoting measurements) ‘குறை’ எனும் சொல்லோடு புணரவேண்டுமானால் , ‘இன்’ சாரியை இடையே வரும் ! – இதுதான் தொல்காப்பியக் கருத்து !

இதன்படி –

1 . பனை + குறை = பனையின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

பனையின்  குறை – ‘பனையும் குறையும்’ ; இப்பொருள் உள்ளதால்தான் நம்மால்      ‘அல்வழிப் புணர்ச்சி’ எனக் கூற முடிகிறது !

2 . கா + குறை = காவின் குறை  √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

  காவின்  குறை – ‘காவும் குறையும்’ ; உம்மைத் தொகை .

 ‘பனை’யை அளவுப் பெயர் என்றும் , ‘கா’வை  நிறைப் பெயர் என்றும் இளம்பூரணர்    தெரிவிக்கிறார் !

இந்த நூற்பாவுக்கும் விதிவிலக்குக் கூறுகிறார் இளம்பூரணர் ! :-

“  ‘நினையுங் காலை ’ என்றதனான் , வல்லெழுத்துப் பேறும் சிறுபான்மை கொள்க ! ‘பனைக் குறை’ , ‘காக் குறை’ என வரும் !” .

இளம்பூரணரின் இவ் விதி விலக்குப் படி –

1 . பனை + குறை = பனைக் குறை √ (அல்வழிப் புணர்ச்சி) (இன் சாரியை பெற வில்லை)
பனைக் குறை – உம்மைத் தொகை .

2 . கா + குறை = காக் குறை √ (அல்வழிப் புணர்ச்சி) (இன் சாரியை பெற வில்லை)
காக் குறை – உம்மைத் தொகை .

அது சரி ! ‘குற்றிய லுகரக் கின்னே சாரியை’ என முன்னே (தொகை . 25) கூறினாரே , அங்கேயே பனை , கா இரண்டும்கூட இன் சாரியை பெறும் எனச் சேர்த்துச் சொல்லியிருக்கலாமே ?

நல்ல கேள்வி !

விடை – மனப்பாடத்திற்காக அவ்வாறு செய்தார் !

‘குற்றிய லுகரக் கின்னே சாரியை’ – என்று தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூட மாணவன் ஒப்பிக்கவேண்டும் ! அதில் வேறொன்றைச் சேர்க்கக் கூடாது !

தொல்காப்பியக் கட்டமைப்பே (Structure of Tholkappiyam) இப்படித்தான் செல்கிறது !அஃதாவது பழந்தமிழ்க் கல்விமுறையை (Education System of Ancient Tamils) ஒட்டிச் செல்கிறது !
 
பனை-  ‘தினை ’ என்பதற்கு எதிர்நிலையாக இச் சொல் வந்துள்ளது என்பர் !

1கா = 100 பலம் = 3500 கிராம் .
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (207)

Post by Dr.S.Soundarapandian on Sun Jan 26, 2014 7:04 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (207)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

அளவு , நிறைப் பெயர் சொற்கள் தொடர்பாக எல்லாவற்றையும் தொல்காப்பியர் கூறிவிட்டார் என நாம் நினைக்கும் நேரத்தில் ‘இருங்கள் !இருங்கள்! கடைசியாக ஒன்று சொல்லவேண்டியுள்ளது ! ’ என்று கூறுவதுபோல இந்த நூற்பாவைத் தருகிறார் ! :-

“அளவிற்கு நிரையிற்கு மொழிமுத லாகி
உளவெனப் பட்ட  வொன்பதிற்  றெழுத்தே
அவைதாம்
கசதப வென்றா நமவ வென்றா
அகர உகரமோ  டவையென  மொழிப”   (தொகை . 28)

அளவு , நிறைப் பெயர்ச் சொற்கள் இன்னின்ன முதல் எழுத்துகளைக் கொண்டுதான் எழுதப்படும் என்று வரையறுக்கிறார் தொல்காப்பியர் !

அந்த முதல் எழுத்துகள் – க , ச , த , ப , ந , ம , வ , அ , உ  (9)

க – முதலாகச் சொல்லியிருந்தாலும்  இவற்றின் வரிசை எழுத்துகளையும் நாம் கொள்ளவேண்டும் !

எடுத்துக்காட்டாக - ‘க’ முதல் எழுத்தாக வரலாம் என்று சொல்லியுள்ளதால் , ‘கா’ , ‘கீ’ என்று தொடங்கும் எழுத்துகளும் வரலாம் என்பதே பொருளாம் !

எடுத்துக்காட்டுகள் –

1 . கலம் ; கழஞ்சு

2 . சாடி ; சீரகம்

3 . தூத ; தொடி

4 . பானை ; பலம்

5 . நாழி ; நிறை

6 . மண்டை ; மா

7 . வட்டில் ; வரை

8 . அகல் ; அந்தை

9 . உழக்கு

- இவற்றில் 1 . முகத்தல் அளவைப் பெயர்கள் : கலம் , சாடி , தூதை , பானை , நாழி , மண்டை , வட்டி , அகல் , உழக்கு .

              2 . நிறுத்தல் அளவைப் பெயர்கள் : கழஞ்சு , சீரகம் , தொடி , பலம் ,
நிறை , மா , வரை , அந்தை .

மேலே சொல்லப்பட்ட எழுத்துகள் தவிர வேறு சில எழுத்துகளையும் கொண்டு அளவைப் பெயர்கள் வரும் என்கிறார் இளம்பூரணர் ! – இம்மி , ஓரடை , ஓராடை .

மேலே வந்துள்ள ‘அந்தை’ என்பதும் ‘ஐந்தை’ என்பதும் ஒன்றுதான் என்றும் இவை ‘சிறுவெண்கடு’கைக் குறிக்கும் என்றும் குறித்துளர் !

இளம்பூரணர் குறித்த ‘இம்மி’, வழக்கிலும் உள்ளதை நோக்கலாம் ! ‘என்ன ,
இம்மிக் கணக்குப் பார்க்கிறியே ?’ என்று கூறக் கேட்கலாம் !

                                         ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (208)

Post by Dr.S.Soundarapandian on Fri Jan 31, 2014 10:21 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (208)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொகை மரபின் இறுதிக்கட்டத்தில் நிற்கிறோம் !

‘சரி! நூற்பாக்களில் பல புணர்ச்சி விதிகளைச் சொன்னீர்கள் ! இந்த விதிகளின்படி வராவிட்டால் ? அப்போ என்ன செய்வது ?’ – ஒரு மாணவன் தொல்காப்பியரைக் கேட்டிருக்கிறான் !

அப்போது தொல்காப்பியர் எழுதியது ! :-

“ஈரியல் மருங்கி னிவையிவற் றியல்பெனக்
கூறிய கிளவிப் பல்லா றெல்லாம்
மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி
ஒத்தவை யுரிய புணர்மொழி நிலையே” !  (தொகை . 29)

 ‘ஈரியல் மருங்கின் ’ – உயிரெழுத்தை ஈற்றிலே கொண்ட சொல்லானாலும் , மெய்யெழுத்தை ஈற்றிலே கொண்ட சொல்லானாலும் ,

‘வழக்கொடு சிவணி ஒத்தவை உரிய’ -  சொல்லப்பட்ட புணர்ச்சி இலக்கணங்களுக்கு ஏற்ப வராவிடில் , வழக்கைப் பாருங்கள் ! வழக்கு எப்படியோ அப்படியே கொள்ளுங்கள் !

இந் நூற்பா உரையில் இளம்பூரணரும் ,நச்சினார்க்கினியரும்  இன்னின்ன நூற்பாக்களிலிருந்து , இந்த இந்தப் புணர்ச்சிகளை  எடுத்துக்கொள்க  என்று ஒரு பட்டியல் தருகின்றனர் ! :-

1 .   ‘விள ஞான்றது’ – இங்கே நிலைமொழி – பெயர்ச் சொல் ! இப்புணர்ச்சி , தொகை மரபு நூற்பா இரண்டின்படி வந்தது !
ஆனால் ‘ஞான்ற ஞான்றது’ என்று புறநானூற்று வழக்கில் உள்ளதே ? இங்கே ‘ஞான்ற’ என்பது  பெயர்ச்ச்சொல் இல்லையே? வினை ஆயிற்றே ?– நம் வினா!
‘ அப்படி இருந்தாலும் , வழக்கில் உள்ளதால், இதே நுற்பாவின்  (தொகை . 2) நீட்சியாகக் கொள்க!’ – இளம்பூரணர் விடை !

2 .  மண் + கொற்றா = மண்ணு கொற்றா √
மண் + கொற்றா = மண்ணுக் கொற்றா √

 மன் + கொற்றா = மன்னு கொற்றா √
மன் + கொற்றா = மன்னுக் கொற்றா √

உள் + கொற்றா = உள்ளு கொற்றா √
உள் + கொற்றா = உள்ளுக் கொற்றா √

கொல் + கொற்றா = கொல்லு கொற்றா √
கொல் + கொற்றா = கொல்லுக் கொற்றா √
- இந்தப் புணர்ச்சிகளையெல்லாம் தொகை மரபு 10இன்படிக்  ( ‘ஔவென வரூஉம் ...’)கொள்க என்பவர் நச்சினார்க்கினியர் !

3 .   ‘காவிக்கண் ’ , ‘குவளைக் கண்’ – இரண்டுமே வேற்றுமைப் புணர்ச்சிகளாக இருந்தாலும் , அல்வழிப் புணர்ச்சிக்கு ஓதிய ( ‘வேற்றுமை அல்வழி ....’ தொகை . 16)  நூற்பாவிலிருந்து இதற்கு இலக்கணம் கொள்க என்பவர் இளம்பூரணர் !

நச்சினார்க்கினியர் சில வழக்குகளைச் சொல்லி , ‘இந்தப் புணர்ச்சிகளையெல்லாம் இந்த (தொகை . 29)  நூற்பாவையே  அடிபடையாகக்கொண்டு ஏற்றுக்கொள்க !’ என்கிறார் ! அப்படி நச்சினார்க்கினியர் கூறிய புணர்ச்சிகள் :-

1 . பதக்கு + நானாழி = பதக்கே நானாழி ×
பதக்கு + நானாழி = பதக்க நானாழி √

2 . பதக்கு + முந்நாழி = பதக்கே முந்நாழி ×
பதக்கு + முந்நாழி = பதக்க முந்நாழி √

3 .சீரகம் + அரை = சீரகமரை ×
சீரகம் + அரை = சீரகரை √

4 . ஒருமா + அரை = ஒருமாவரை ×
ஒருமா + அரை = ஒருமாரை √

5 . கலம் + அரை = கலமரை ×
கலம் + அரை = கலரை √

6 . நாகம் + அரை = நாகமரை ×
நாகம் + அரை = நாகரை √

7 . நில் +கொற்றா = நில் கொற்றா √
நில் +கொற்றா = நிற் கொற்றா √

வழக்கிற்கு நல்ல மதிப்புத் தருவது தொல்காப்பியக் கோட்பாடு  (Theory of Tholkappiyam)!
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (209)

Post by Dr.S.Soundarapandian on Sun Feb 02, 2014 10:09 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (209)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொகை மரபின் கடைசி நூற்பாவுக்கு வந்துள்ளோம் ! :-

“பலரறி சொன்முன் யாவ ரென்னும்
பெயரிடை  வகரங் கெடுதலு மேனை
ஒன்றறி சொன்முன்  யாதென் வினாவிடை
ஒன்றிய வகரம் வருதலு மிரண்டும்
மருவின் பாத்தியிற்  றிரியுமன் பயின்றே” (தொகை . 30)

பலரறி சொல் -  ‘அவர்’.

‘யாவர் என்னும் பெயரிடை’ – ‘யாவர்’ என்ற சொல் வந்து புணர்ந்தால் ,
‘வகரம் கெடுதலும்’ – இடையில் உள்ள ‘வ’ கெடும் !

ஒன்றறி சொல் – ‘அது’ .
‘ஒன்றறி சொல் முன் யாது என் வினா இடை’ – ‘அது’ என்ற சொல் முன் , ‘யாது’ எனும் வினாச்சொல் வந்தால்,

‘ஒன்றிய வகரம் வருதலும்’ – வகரம் இடையே வரும் !
‘இரண்டும் மருவின் பாத்தியில் திரியும்’ – இப்படி இரண்டும் புணர்வது ‘மரூஉ’ ஆகும் !

அஃதாவது –

அவர் + யாவர் = அவர் யார்? ( ‘யாவர்’ → ‘யார்’ என வந்தது மரூஉ !)
(அல்வழிப் புணர்ச்சி)
அது + யாது  = அது யாவது  ? ( ‘யாது’ → ‘யாவது’ என வந்தது மரூஉ !)
(அல்வழிப் புணர்ச்சி)

இளம்பூரணர் , ‘யார்’ , ‘யாவது’ இரண்டும் நிலைமொழியாக
நிற்கும் போதும் இதே வடிவில் நிற்கலாம் என்கிறார் –

யாவர்யாவர் + கண்டு = யார்யார்க் கண்டு (வேற்றுமைப் புணர்ச்சி)

யாது + நன்றென = யாவது நன்றென (அல்வழிப் புணர்ச்சி)

யாவர் + அவர் = யாரவர் (அல்வழிப் புணர்ச்சி)

யாது + அது = யாவதது (அல்வழிப் புணர்ச்சி)
 
 ‘மரூஉ’ பற்றிப் பார்த்தோம் !

மரூஉ எப்படி உண்டாகிறது?

வழக்கால் (Usage) உண்டாகிறது !

மக்கள் பேசும்போது உற்றுக் கவனியுங்கள் ! பல மரூஉக்களைக் காணலாம் ! சிலவற்றைத்தான் தொல்காப்பியரும் உரையாசிரியர்களும் சொல்லியுள்ளார்கள் ! மீதியை நாம்தான் காணவேண்டும் !

மரூஉவில் என்ன வேடிக்கையென்றால் , ஏற்கனவே ஒரு சொல் மருவித்தான் நம்மிடம் நின்றுகொண்டிருக்கும் ! அது மேலும் மருவும் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by myimamdeen on Sun Feb 02, 2014 4:25 pm

   
avatar
myimamdeen
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 392
மதிப்பீடுகள் : 130

View user profile http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by myimamdeen on Sun Feb 02, 2014 4:26 pm

   
avatar
myimamdeen
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 392
மதிப்பீடுகள் : 130

View user profile http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (210)

Post by Dr.S.Soundarapandian on Tue Feb 04, 2014 7:56 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (210)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

சென்ற ஆய்வில் தொகை மரபை முடித்தோம் !

அடுத்தது  -  உருபியல் !

இது வேற்றுமை உருபு இத்தனை என்றெல்லாம் கூறும் இயல்
அல்ல !


வேற்றுமை உருபுகள் வந்துபெயர்ச் சொற்களோடு  புணர்ந்தால் சாரியை முதலியன எப்படி இடையே வரும் என்பதை விளக்கும் இயல் இது !

முதலாவது சூத்திரம் ! –

“அஆ  உஊ  ஏஔ  வென்னும்
அப்பா  லாற  னிலைமொழி முன்னர்
வேற்றுமை யுருபிற் கின்னே சாரியை”  (உருபு . 1)

அஃதாவது –

பெயர்ச் சொற்கள் , அ , ஆ , உ , ஊ , ஏ , ஔ எனும் எழுத்துகளை ஈற்றிலே
பெற்றுவந்தால் , அப் பெயர்ச்சொற்களோடு வேற்றுமை உருபு வந்து புணரும்போது ,
‘இன்’ சாரியை இடையே வரும் !

இதற்கு நச்சினார்க்கினியர் தரும் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கி எழுதலாம் ! :-

1 . விள + ஐ = விளவினை ( இன் – சாரியை ; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(விள – அகர ஈற்றுச் சொல்)

2. விள + ஒடு = விளவினொடு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)

3 . விள + கு = விளவிற்கு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

4 . விள + அது = விளவினது ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)

5. விள + கண் = விளவின்கண் ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)

1 . பலா + ஐ = பலாவினை ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(பலா – ஆகார ஈற்றுச் சொல்)

2 . பலா + ஒடு = பலாவினொடு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)

3. பலா + கு = பலாவிற்கு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

4. பலா + அது = பலாவினது ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)

5 . பலா + கண் = பலாவின்கண் ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)

1 . கடு + ஐ = கடுவினை ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(கடு – உகர ஈற்றுச் சொல்)

2 . கடு + ஒடு = கடுவினொடு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)

3. கடு + கு = கடுவிற்கு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

4. கடு + அது = கடுவினது ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

5 . கடு + கண் = கடுவின்கண் ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)

1 . தழூஉ + ஐ = தழூஉ வினை ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(தழூஉ – உகர அளபெடை பெற்றாலும், இச் சொல் ஊகார
ஈற்றுச் சொல்லாகவே கருதப்படும் !)

2 . தழூஉ + ஒடு = தழூஉவினொடு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)

3. தழூஉ + கு = தழூஉவிற்கு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
வேற்றுமைப் புணர்ச்சி)

4. தழூஉ + அது = தழூஉவினது ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)

5 . தழூஉ + கண் = தழூஉவின்கண் ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(தழூஉ – குரவைக் கூத்து)

1 . சே + ஐ = சேவினை ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சே – ஏகார ஈற்றுச் சொல்)

2 . சே + ஒடு = சேவினொடு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)

3. சே + கு = சேவிற்கு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

4. சே + அது = சேவினது ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

5 . சே + கண் = சேவின்கண் ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)

1 . வௌ + ஐ = வௌவினை ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(வௌ – ஔகார ஈற்றுச் சொல்)

2 . வௌ + ஒடு = வௌவினொடு ( இன் - சாரியை; வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)        

3. வௌ + கு = வௌவிற்கு ( இன் - சாரியை ;வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

4. வௌ + அது = வௌவினது ( இன் - சாரியை ;வ்- உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

5 . வௌ + கண் = வௌவின்கண் ( இன் - சாரியை ;வ்- உடம்படு மெய்)
(வேற்றுமைப் புணர்ச்சி)

மேல் வேற்றுமை உருபுகளை வருமாறு குறிக்கலாம் ! :-

1 . ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு

2 . ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு

3 . கு – நான்காம் வேற்றுமை உருபு

4 . அது – ஆறாம் வேற்றுமை உருபு

5 . கண் – ஏழாம் வேற்றுமை உருபு  

மேலே வந்ததே இன் சாரியை , அது ஏன் வரவேண்டும் ?

அதிலே ஏதாவது மொழி நுட்பம் உள்ளதா ?

உள்ளது !

 முதலில் ‘விள’வை எடுத்துக்கொள்வோம் !

‘விள + ஐ = விளவை ’ என வரலாம்தான் ! பொருளும் மாறாது !

‘விள + ஒடு = விளவொடு’ என வரலாம்தான் ! பொருளும் மாறாது !

‘விள + கு = விளக்கு’ – வரமுடியாதே? பொருள் மாறுகிறதே ?

இந்த நேரத்தில்தான் சாரியை உதவிக்கு வருகிறது !

‘இன்’ சாரியை போட்டுப் பாருங்கள் ! ‘விள + இன் + கு = விளவிற்கு’

- பொருள் மாறவில்லை !

இப்போது புரிகிறதா
சாரியை இரகசியம் ?

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (211)

Post by Dr.S.Soundarapandian on Fri Feb 07, 2014 10:24 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (211)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

முந்தைய ஆய்வில் ‘அ’ ஈற்றில் முடியக்கூடிய பெயர்ச் சொற்கள் , வேற்றுமை உருபோடு புணரவேண்டுமானால் ‘இன்’சாரியை இடையே வரும் என்று தொல்காப்பியர் கூறினார் !
(உருபு . 1)

ஒரு மாணவன் , “அப்படியானால் எல்லா அகர ஈற்றுப் பெயர்களுமே இப்படித்தான் இன் சாரியை பெறவேண்டுமா?” எனக் கேட்டான் !

அதற்குத் தொல்காப்பியர் எழுதிய நூற்பா! :-

“பல்லவை நுதலிய  வகர விறுபெயர்
 வற்றொடு சிவண லெச்ச மின்றே” (உருபு . 2)

‘பல்லவை நுதலிய  வகர விறுபெயர்’ – பன்மைப் பொருளை உடைய அகர ஈற்றுப் பெயர்ச்சொற்கள் ,

 ‘வற்றொடு சிவண லெச்ச மின்றே ’ –  ‘வற்று ’ச்  சாரியை கொள்வதில் தவறா !

1 . பல்ல + ஐ = பல்லவற்றை (வற்று – சாரியை ; ) (வேற்றுமைப் புணர்ச்சி)
    பல்ல – அகர ஈற்றுப் பெயர்ச் சொல் (Noun) ; ‘பல’ என்பது பொருள் .
   ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு .

2 . பல்ல + ஒடு = பல்லவற்றொடு (வற்று – சாரியை ; ) (வேற்றுமைப் புணர்ச்சி)
       ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு .


3 . உள்ள + ஐ = உள்ளவற்றை (வற்று – சாரியை ; ) (வேற்றுமைப் புணர்ச்சி)
உள்ள- உள்ளவை என்பது பொருள்; பெயர்ச்சொல்.

4 . உள்ள + ஒடு = உள்ளவற்றொடு (வற்று – சாரியை ; ) (வேற்றுமைப் புணர்ச்சி)

5 . இல்ல + ஐ = இல்லவற்றை (வற்று – சாரியை ; ) (வேற்றுமைப் புணர்ச்சி)
இல்ல- இல்லாதவை என்பது பொருள்; பெயர்ச்சொல்.

6 . இல்ல + ஒடு = இல்லவற்றொடு (வற்று – சாரியை ; ) (வேற்றுமைப் புணர்ச்சி)

7 . சில + ஐ = சிலவற்றை (வற்று – சாரியை ; ) (வேற்றுமைப் புணர்ச்சி)
சில - பெயர்ச்சொல்.

8 . சில + ஒடு = சிலவற்றொடு (வற்று – சாரியை ; ) (வேற்றுமைப் புணர்ச்சி)

இந்த இடத்தில் இளம்பூரணர் முதல் நூற்பாவுக்கு ஒரு விதிவிலக்கை எழுதுகிறார் !

அஃதாவது , அகர , ஆகார  ஈற்றுப் பெயர்ச்சொற்களுக்கு ‘இன்’ சாரியை வரும்
என்றுதானே பார்த்தோம் ?  

சில இடங்களில் இன் சாரியையும் வரும் ,வேறு சாரியையும்
வரும் என்கிறார் இளம்பூரணர் ! –

1 . மக + ஐ = மகத்தை (அத்து - சாரியை) (ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)

2 . நிலா + ஐ = நிலாத்தை (அத்து - சாரியை) (,,)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (212)

Post by Dr.S.Soundarapandian on Sat Feb 08, 2014 10:30 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (212)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

முன் ஆய்வு ஒன்றில் (உருபியல்) ,  ‘பலா’ என்ற பெயர்ச்சொல் ‘இன்’ சாரியை
பெற்றுப் ‘பலாவினை’ என்று ஆனதைப் பார்த்தோம் !

ஆனால் எல்லா ஆகார ஈற்றுச் சொற்களும் இவ் விதிக்குள் அடங்கா என்று
தெளிவுபடுத்துகிறார் தொல்காப்பியர் ! :-

“யாவென்  வினாவு  மாயிய  றிரியாது” (உருபு . 3)

யா – ஆகார ஈற்றுப் பெயர்ச்சொல்; வினாப் பெயர்.

இந்த ‘யா’வும்  ‘ஆயியல் ’ படி நடக்கும் !

‘ஆயியல் ’ – வற்றுச் சாரியை பெறுதல் (உருபு . 2இன் படி) .

யா + ஐ = யாவற்றை (வற்று - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு.

யா + ஒடு = யாவற்றொடு (வற்று - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஒடு – மூன்றாம் வேற்றுமை  உருபு.

முதலில் பொதுவான இலக்கணத்தைச் சொல்லுவது; பிறகு அப் பொது இலக்கணத்திற்கு அடங்காத இடங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு , அவற்றுக்குத் தனி இலக்கணம் வகுப்பது !  ஆனால் எல்லாப் புணர்ச்சிகளுக்குமே இலக்கியத்தில் அல்லது வழக்கில் சான்று இருக்கவேண்டும் ! – இதுதான்
தொல்காப்பிய விதிகளின் கட்டமைப்பு (Structure of Tholkappiyam) !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by அனுராகவன் on Sat Feb 08, 2014 10:31 am

நல்ல பதிவுகள்..
avatar
அனுராகவன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 224
மதிப்பீடுகள் : 68

View user profile

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (213)

Post by Dr.S.Soundarapandian on Sun Feb 09, 2014 8:46 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (213)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

அதனை , இதனை – இந்தச் சொற்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் சொற்கள்!

இவற்றைப்பற்றியே இப்போது பார்க்கப்போகிறோம்!

முன் நூற்பாவில் (உருபு .1) , உகர ஈற்றுப் பெயர்ச் சொல்லானது வேற்றுமை உருபோடு புணரும்போது இன் சாரியை இடையே வருவதைக் காட்டினார் !

அப்படியானால் எல்லா உகர ஈற்றுச் சொற்களுமே இதே முறையில் புணருமா?- கேள்வி

தொல்காப்பியரின் விடை! :-

“சுட்டுமுத  லுகர மன்னொடு சிவணி
ஒட்டிய  மெய்யொழித்  துகரங் கெடுமே ”  (உருபு . 4)

‘சுட்டுமுதல் உகரம்’ -  ‘அது’ , ‘இது’ , ‘உது’ ஆகிய சொற்கள் ,

‘அன்னொடு சிவணி’ – அன் சாரியை பெறும்போது,

 ‘ஒட்டிய மெய் ஒழித்து உகரம் கெடுமே’ – ஈற்று உகரமானது ,தான் நின்ற மெய்யை அங்கேயே விட்டுவிட்டுத் தான் மட்டும் கெடும் !


அது + ஐ = அதனை (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

அது + ஒடு = அதனொடு (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

இது + ஐ = இதனை (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

இது + ஒடு = இதனொடு (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

உது + ஐ = உதனை (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

உது + ஒடு = உதனொடு (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

இவற்றில் ‘உது’ என்ற சொல் நமக்குப் பழக்கமில்லாதது ! மறைந்துபோன
தமிழ்ச் சொற்களில் ( Obsolete words in Tamil ) இதுவும் ஒன்று !


‘உதுக்காண்’ என ஐங்குறுநூற்றிலும் , ‘உப்பக்கம்’ என்று திருக்குறளிலும்
உகரம் இடைமைச் சுட்டாக வந்துள்ளது ! இது இந்த இரு நூற்களின் பழமைக்குச்
சான்று !


***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (214)

Post by Dr.S.Soundarapandian on Sun Feb 09, 2014 3:14 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (214)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

 ‘அது’ , ‘இது’ ஆகிய சொற்களோடு எப்படி வேற்றுமை உருபுகள் சேரும் என்பதைச்
சற்று முன்பு பார்த்தோம் !

இதைப் போன்றே , ‘அவை’ , ‘இவை’ புணர்வதை அடுத்துக் காட்டுகிறார்
தொல்காப்பியர் ! :-

“சுட்டுமுத லாகிய வையெ னிறுதி
வற்றொடு சிவணி நிற்றலு முரித்தே” (உருபு . 5)

‘சுட்டுமுதல்  ஆகிய ஐ என்  இறுதி ’ -  ‘அவை’ , ‘இவை’ , ‘உவை’ ஆகிய சொற்கள் ,

‘வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே’ – ‘வற்று’ச் சாரியை பெற்றுப் புணரும்போது
ஈற்று ஐகாரம் நிற்றலும் உரித்து , நில்லாமையும் உரித்து!

நிற்றலும் – உம்மை எதிர்மறை உம்மை !

உருபியல் முதல் நூற்பாவில் என்ன சொன்னார்?

ஐகார ஈற்றுப் பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபுகளோடு சேரவேண்டுமானால் ‘இன்’சாரியை வரும் என்றாரல்லவா?

அதற்கு விதிவிலக்குத்தான் இப்போது நாம் பார்க்கும் நூற்பா!

இங்கே இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகளை வருமாறு காட்டலாம் ! :-

1 . அவை + ஐ =  அவை + வற்று +ஐ =  அவையற்றை (வற்று – சாரியை; ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

இங்கே யகர உடம்படுமெய் எப்படி வந்தது ?

புணரியல் நூற்பா 20இல் ( ‘வஃகான் மெய்கெட ...’ )  ஐகார ஈற்றின்முன்னர் வரும் ‘வ்’
கெடும் எனச் சொல்லியுள்ளார் தொல்காப்பியர் !

அதன்படி -  அவை + வற்று + ஐ = அவை + ய் + அற்று + ஐ = அவையற்றை √ (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

இதே முறையில்தான் –
2 . அவை +ஒடு = அவை + வற்று + ஒடு = அவை + ய் + அற்று + ஒடு =அவையற்றொடு
(வற்று – சாரியை; ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

இம் முறைப்படியே -

3 .  இவை + ஐ =  இவை + வற்று +ஐ = இவை + ய் + அற்று + ஐ = இவையற்றை
(வற்று – சாரியை; ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

4 . இவை + ஒடு =  இவை + வற்று +ஒடு = இவை +  ய்+ அற்று + ஒடு = இவையற்றொடு (வற்று – சாரியை;
ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)


5 . உவை + ஐ =  உவை + வற்று +ஐ =  உவை +ய் + அற்று +ஐ =உவையற்றை
(வற்று – சாரியை; ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

6 . உவை + ஒடு =  உவை + வற்று +ஒடு =  உவை + ய் + அற்று + ஒடு =உவையற்றொடு (வற்று – சாரியை; ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

 இவ்விடத்தில்  இளம்பூரணர் , நிலைமொழி ஈற்று ‘ஐ’ கெட்டு , ‘வற்று’ச் சாரியை
கொண்டு புணர்தலும் உண்டு என எடுத்துக்காட்டுகளை முன் வைக்கிறார் ! : -

1 . அவை + ஐ = அவை + வற்று + ஐ =அ + வற்று + ஐ =  அவற்றை (வற்று - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
இங்கே ‘அவை’ என்பது ‘அ’ஆனது எப்படி ? அதற்கு விதி உண்டா?
உண்டு !

புணரியல் நூற்பா 31இல் ( ‘அத்தே வற்றே …’), ‘அவை’ எனபதன் முன் ‘வற்று’ வந்தால் ,
‘வை’ கெடும் என்பதற்கு விதி உள்ளது ! அதனை இங்கு கொள்ளவேண்டும் !

இதே முறைப்படி-

2 . அவை + ஒடு = அவை + வற்று + ஒடு = அ + வற்று + ஒடு =அவற்றொடு √

3 . இவை + ஐ = இவை + வற்று + ஐ = இ + வற்று + ஐ = இவற்றை √

4 .  இவை + ஒடு = இவை + வற்று + ஒடு = இ + வற்று + ஒடு =இவற்றொடு √

5 . உவை + ஐ = உவை + வற்று + ஐ = உ + வற்று + ஐ =உவற்றை √

6 . உவை + ஒடு = உவை + வற்று + ஒடு = உ + வற்று + ஒடு =உவற்றொடு √

இவற்றில் , ‘அவையற்றை’ , ‘இவையற்றை’ , ‘உவையற்றை’ ஆகியன வழக்கிழந்த
(Obsolete) சொற்களாகிவிட்டன!


***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (215)

Post by Dr.S.Soundarapandian on Thu Feb 13, 2014 8:36 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (215)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘யாவை’ – இது வினாப் பெயர் !

இது வேற்றுமை உருபை எப்படி ஏற்கும்? –

“யாவென் வினாவி  னையெ னிறுதியும்
ஆயிய றிரியா தென்மனார் புலவர்
ஆவயின் வகரம் மையொடுங் கெடுமே ” (உருபு . 6)

‘யாவென் வினாவின் ஐ என் இறுதியும் ’ -  ‘யாவை’ என்ற சொல்லின் ஈற்று ஐ ,வேர்றுமை உருபோடு புணரும்போது ,

‘ஆயியல் திரியாது’ -  ‘வற்று’ச் சாரியை தப்பாது வரும் !

‘ஆவயின் வகரம் ஐயொடும் கெடும்’ – அப்போது ‘வ்’ , ‘ஐ’யுடன் கெடும் !

யாவை + ஐ = யா + வ் + ஐ  + வற்று + ஐ = யாவற்றை  (முதல் ‘ஐ’ , ‘வை’யின் ஐ , இரண்டாம் ‘ஐ’ , இரண்டாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)

இங்கு ,  ‘வகரம் ஐயொடுங் கெடுமே ’ என்பதற்கு ஏற்ப , ‘வ்’, ‘ஐ’ இரண்டும் கெட்டுள்ளதைக் காண்க !

யாவை + ஒடு = யா + வ் + ஐ  + வற்று + ஒடு = யாவற்றொடு  ( ‘ஐ’ , ‘வை’யின் ஐ ; ஒடு-  மூன்றாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)

  ‘யா’வை அடுத்த  ‘ஐ’யென் இறுதிக்குத்தானே தொல்காப்பியர் விதி கூறினார்?  அப்படியானால் ‘யாவை’ என்ற அந்த ஒரு சொல்லுக்குத்தான் அவர் விதி பொருந்துமா?

 ‘அப்படி நினைக்காதீர்கள்’ என்கிறார் இளம்பூரணர் !

  ‘கரியவை ’, ‘செய்யவை’ – என  ‘ஐ’யை ஈற்றிலே கொண்ட பிற சொற்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்கிறார் இளம்பூரணர் !

கரியவை + ஐ = கரியவை + வற்று + ஐ = கரியவற்றை (வேற்றுமைப் புணர்ச்சி)

கரியவை + ஒடு = கரியவை + வற்று + ஒடு = கரியவற்றொடு (வேற்றுமைப் புணர்ச்சி)

செய்யவை + ஐ = செய்யவை + வற்று + ஐ = செய்யவற்றை (வற்று- சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

செய்யவை + ஒடு = செய்யவை + வற்று + ஒடு = செய்யவற்றொடு (வற்று- சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)

மேலைப் புணர்ச்சிகள் – ‘கரியவையை’ , ‘செய்யவையை’ என்றெல்லாம்  ‘வற்று’ச் சாரியை இல்லாமற் புணர்ந்தால் , பொருள் தெளிவு இருக்குமா?

இராது !

எனவேதான் சாரியை தமிழ்ப் புணர்ச்சிகளுக்குத் தேவையாகிறது !

சில வேற்றுமை உருபுகளுக்குக் கட்டாயம் சாரியை தேவை என ஆகும்போது , அதே விதிக்கட்டு (Formula) பிற வேற்றுமை உருபுகளுக்கும் பொருத்தப்படுகிறது !

இதுதான் சாரியை இரகசியம்(Secret of Euphonic extention) !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by ayyasamy ram on Thu Feb 13, 2014 8:40 pm

 
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30540
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (216)

Post by Dr.S.Soundarapandian on Sat Feb 15, 2014 7:37 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (216)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘நின்னை’ – இச் சொல்லை நாம் அறிவோம் !

இவ்வடிவம் எப்படி ஏற்பட்டது?

இதற்குத் தொல்காப்பிய விதி உள்ளதா?

உள்ளது ! : -

“நீயெ  னொருபெயர் நெடுமுதல் குறுகும்
ஆவயி  னகர மொற்றா கும்மெ ”  (உருபு . 7)

‘நீ என் ஒரு பெயர்’ – ‘நீ’ என்ற பெயர்ச்சொல் ,

‘நெடுமுதல் குறுகும்’ – ‘நீ’ , என்பது ‘நி’ எனக் குறுகும் !

‘ஆவயின் னகரம் ஒற்றா கும்மே’ – அந்த இடத்தில் , ‘ன்’ வரும் !

நீ + ஐ = நி + ன் + ஐ = நின் + ஐ (நீ- குறுகியது ;ன் - எழுத்துப்பேறு) = நின் + ன் + ஐ =நின்னை (ன் - இரட்டித்தது ) (வேற்றுமைப் புணர்ச்சி)

நீ + ஒடு = நி + ன் + ஒடு = நின் + ஒடு (  நீ- குறுகியது ;ன் – எழுத்துப்பேறு வந்தது) = நின் + ன் + ஒடு =நின்னொடு (ன் - இரட்டித்தது ) (வேற்றுமைப் புணர்ச்சி)

அது சரி ! ‘இன்’சாரியை , ‘வற்று’ச் சாரியை கூறிவந்தவர் , எழுத்துப்பேற்றுக்கு வருவானேன்?

மூன்றாம் வேற்றுமைதான் காரணம் !

அஃதாவது-
‘நீ + ஆல் ’ என்ற புணர்ச்சிக்கு ‘இன்’ சாரியை சேர்த்து  ‘நீயினால்’ என எழுத முடியுமா?
முடியாதல்லவா?

எனவேதான் ‘ன்’ எழுத்துப்பேறு ! ‘நின்னால்’ என அப்போது ஆகும் !

எழுத்துப்பேறு வந்த இரகசியம் இதுதான் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (217)

Post by Dr.S.Soundarapandian on Sun Feb 16, 2014 10:54 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (217)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘இன்’ சாரியை  ‘வற்று’ச் சாரியை முதலியவற்றை நாம் அறிவோம் !

இவை நமக்குப் பழக்கமானவை ! இவற்றைப் பெற்ற சொற்களும் நமக்குப் பழக்கமானவையே !

ஆனால் ‘ஒன்’என்று ஒரு சாரியையைத் தொல்காப்பியர் காட்டுகிறார் ! (அவர் புதிதாகக் காட்டுவது இது one தானா?)

தொல்காப்பிய நூற்பா ! :-

“ஓகார விறுதிக் கொன்னே சாரியை” (உருபு . 8)

 ‘ஓகார இறுதிக்கு’ – ‘ஓ’வை ஈறாகக் கொண்ட சொற்கள் ,

‘ஒன்னே சாரியை’ -  வேற்றுமை உருபுகளுடன் புணரும்போது, ‘ஒன்’என்ற சாரியையைப் பெறும் !

1 .கோ + ஐ = கோ + ஒன் + ஐ = கோஒனை (ஒன் – சாரியை; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)(வேற்றுமைப் புணர்ச்சி)

2 . கோ + ஐ = கோ + ஒன் + ஒடு = கோஒனொடு (ஒன் – சாரியை; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)(வேற்றுமைப் புணர்ச்சி)


‘கோஒனை’ , ‘கோஒனொடு’ – இச் சொற்களை உச்சரிப்பதற்கே நாம் பெரு முயற்சி எடுக்க வேண்டுமே !

இந்தக் காரணத்தால் , நடுவே உள்ள ‘ஒ’ , பிற்காலத்தில் மறையலாயிற்று !

நேரடியாகவே ‘கோனை’ , ‘கோனொடு’ என்று கூறும் மரபு தோன்றிவிட்டது !

இம் மரபு தோன்றவே , நன்னூலார் அதற்கேற்ப விதியை எழுதிவிட்டார் !

நன்னூலில் , “ஆமா  கோனவ்  வணையவும்  பெறுமே” (248) என்றுளது.

‘ஆ , மா , கோ    னவ் அணையவும் பெறுமே’ -  ஆ , மா , கோ  ஆகிய    எழுத்துகளில் முடியும் சொற்கள் , வேற்றுமை உருபுகளோடு புணரும்போது ,  ‘ஒன்’ சாரியையின்  ‘ஒ’ மறைந்து, ‘ன்’மட்டும்  பெறுதலும் உண்டு !

நன்னூலின் இக்கருத்துப்படி –

கோ + ன் + ஐ = கோனை (ன் –  ‘ஒன்’னின்  ‘ஒ’கெட்டதால் வந்தது)

இந்த ‘ஒன்’சாரியை, நமக்குத் தொல்காப்பியத்தின் பழமையைத் தெளிவாகக் காட்டுகிறதல்லவா?


இங்கே ஒரு சுவடியியல் (Manuscriptology) நுட்பத்தை நான் கூறவேண்டும் !

அஃதாவது , ஓலைச் சுவடிகளில் , ‘கோ’வை அடுத்து எழுத வேண்டிய  ‘ஒ’வை எழுதமாட்டார்கள் ! அது ‘தெரிந்ததுதான்’ (understood) என்று விட்டுவிடுவார்கள் ! அவ்வாறு விட்டுவிடவே ‘கோஒனை’ என்பது நாளடைவில்  ‘கோனை’என்றே நின்றுவிட்டது !

ஆக , ஒலிப்புத் துன்பம் , ஓலை எழுத்து மரபு ஆகியவற்றால் ‘ஒன்’சாரியை மறைந்தது !

இதுதான் ‘ஒன்’சாரியை மறைந்த இரகசியம் !


இங்கே நச்சினார்க்கினிய
ர் ,அவர் கால மரபை ஒத்துக்கொண்டு,  ‘ஓகார இறுதிக்கு இன் சாரியையும் வரும்’ஒரு விதி விலக்கை அளிக்கிறார் ! :-

அவ் விதி விலக்கின்படி-

1 .கோ + ஐ = கோ + இன் + ஐ (இன் – சாரியை; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)= கோ + வ் + இன் + ஐ = கோவினை (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)

2 .சோ + ஐ = சோ + இன் + ஐ (இன் – சாரியை; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)= சோ + வ் + இன் + ஐ = சோவினை (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)

3 . ஓ + ஐ = ஓ + இன் + ஐ (இன் – சாரியை; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)= ஓ + வ் + இன் + ஐ = ஓவினை (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப்
புணர்ச்சி)

4 . கோ + ஒடு = கோ + இன் + ஒடு (இன் – சாரியை; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)= கோ + வ் + இன் + ஒடு = கோவினொடு (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)

5 .சோ + ஒடு = சோ + இன் + ஒடு (இன் – சாரியை; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)= சோ + வ் + இன் + ஒடு = சோவினொடு (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)

6. ஓ + ஒடு = ஓ + இன் + ஒடு (இன் – சாரியை; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)= ஓ + வ் + இன் + ஒடு = ஓவினொடு (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)

கோ – அரசன்(பெயர்ச் சொல்)

சோ - அரண்(பெயர்ச் சொல்)

ஓ – மதகு நீரைத் தாங்கும் பலகை (பெயர்ச் சொல்)      

                                                          ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (218)

Post by Dr.S.Soundarapandian on Tue Feb 18, 2014 9:26 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (218)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

 ‘அ’, ‘ஆ’க்களில் முடியும் பெயர்சொற்கள் , வேற்றுமை உருபுகளை ஏற்கவேண்டுமாயின்
‘இன்’சாரியை வரும் என்று தொல்காப்பியர் சொல்லியுள்ளார் ! (உருபு .1)

அதற்கு ஒரு சிறப்பு விதியை இப்போது கூறுகிறார் ! : -

“அஆ  வென்னு  மரப்பெயர்க்  கிளவிக்
கத்தொடுஞ்  சிவணு  மேழ  னுருபே  ” (உருபு . 9)

விள + கண் = விள + அத்து + கண் = விளவத்துக் கண் (அத்து – சாரியை ; வ் – உடம்படு மெய் ; கண் – ஏழாம் வேற்றுமை உருபு)

பலா + கண் = பலா + அத்து + கண் = பலாவத்துக் கண் (அத்து – சாரியை ; வ் – உடம்படு மெய் ; கண் – ஏழாம் வேற்றுமை உருபு)

எந்த விதியானாலும் மரங்களின் பெயர்களோடு பொருத்தி விதி சொல்வது தொல்காப்பியக் கோட்படு !

பழந்தமிழர் வாழ்வு இயற்கையோடு இயைந்தது ! எனவே பழந்தமிழ் இலக்கணமும் இயற்கைக்குச் சிறப்பிடம் தந்துள்ளது !

மரங்களின் பெயர்களோடு ‘அத்து’ , ‘கண்’ எல்லாம் சேர்த்துக் கூறும் மரபு தொல்காப்பியர் காலத்துத் தமிழில் மிகுதியாக இருந்திருக்கவேண்டும் !

இப்போது இவ்வழக்கு பெரும்பாலும் மறைந்துவிட்டது !

இப்படிப்பட்ட ஆய்வுகள் , மீண்டும் மீண்டும் தொல்காப்பியத்தின் பழமையைத்தான் நமக்குக் காட்டுகிறது !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Page 11 of 28 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 19 ... 28  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum