ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போடி, நீ தான் லூசு...!
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 T.N.Balasubramanian

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Page 12 of 28 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 28  Next

View previous topic View next topic Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by Dr.S.Soundarapandian on Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம் (224)

Post by Dr.S.Soundarapandian on Thu Mar 13, 2014 1:10 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (224)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
 
‘ம்’ ஈற்றுப் பெயர்ச் சொற்கள் , வேற்றுமை உருபுகளோடு புணரும்போது எந்தச் சாரியை வரும் என்று விரிவாகப் பேசிவருகிறார் தொல்காப்பியர் ! பார்ப்போம் கீழ்வரும் நூற்பாவில் என்ன வித்தை காட்டுகிறார் அவர் என்று ! : -

”தாம்நா மென்னு மகர விறுதியும்
யமெ  னிறுதியு மதனோ ரன்ன
ஆஎ ஆகும் யாமெ னிறுதி
ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும்
ஏனை யிரண்டு நெடுமுதல் குறுகும் ” (உருபு . 16)

‘தாம் நாம் என்னும்  மகர விறுதியும்,
யாம் என் இறுதியும்’ – ‘தாம்’ , ‘நாம்’ , ‘யாம்’ என்ற மகர ஈற்றுச் சொற்கள் ,

‘அதனோர் அன்ன ’ -  ‘நும்’ ஈற்றுச் சொல் , ‘அத்து’, ‘இன்’ ஆகிய சாரியைகள் பெறாதது போலவே , இவையும் பெறா !

‘ஆ , எ  ஆகும் , ‘யாம்’ என் இறுதி ஆ வயின் யகர மெய் கெடுதல் வேண்டும்’  -  ‘யாம்’ என்ற சொல்லின் முதல் ‘ஆ’ , ‘எ’ ஆகும் ! ‘ய்’ , கெடும் !

 ‘ஏனை இரண்டும் நெடுமுதல் குறுகும்’ –  ‘தாம்’ , ‘நாம்’ எனும் சொற்களின் முதல் சொற்களான ‘தா’ , ‘நா’ ஆகியன ‘த’ , ‘ந’ எனக் குறுகும் !

தாம் + ஐ = தாமத்தை ×

தாம் + ஐ = தாமினை ×

தாம் + ஐ = தம்மை √

தாம் + ஒடு = தாமத்தொடு ×

தாம் + ஒடு = தாமொடு ×

தாம் + ஒடு = தம்மொடு √


நாம் + ஐ = நாமத்தை ×

நாம் + ஐ = நாமினை ×

நாம் + ஐ = நம்மை √


நாம் + ஒடு = நாமத்தொடு ×

நாம் + ஒடு = நாமொடு ×

நாம் + ஒடு = நம்மொடு √

எம் + ஐ = எம்மத்தை ×

எம் + ஐ = எம்மினை ×

எம் + ஐ = எம்மை √

எம் + ஒடு = எம்மத்தொடு ×

எம் + ஒடு = எம்மினொடு ×

எம் + ஒடு = எம்மொடு √

தொல்காப்பியர் , ஒரு நூற்பாக் கருத்தானது மாறுபடும் இடங்களை வெகு துல்லியமாக அறிந்து , அவற்றுக்கேற்ப வேறு சரியான விதிகளை மறக்காமல் தருவதைக் கோட்பாடாகக் கொண்டுள்ளார் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (225)

Post by Dr.S.Soundarapandian on Thu Mar 13, 2014 8:22 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (225)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘எல்லாம்’ எனும் பெயர்ச்சொல்லை எடுத்துக்கொள்கிறார் தொல்காப்பியர் ! :-

“எல்லா மென்னு மிறுதி முன்னர்
வற்றென் சாரியை முற்றத் தோன்றும்
உம்மை நிலையு மிறுதி யான” (உருபு . 17)

‘எல்லாம் எனும் இறுதி முன்னர்’ – ‘எல்லாம்’ எனும் பெயர்ச்சொல்லின் ஈற்றெழுத்தாகிய ‘ம்’ முன்பாக வேற்றுமை உருபு புணர வரும்போது,

‘வற்றென் சாரியை முற்றத் தோன்றும்’ – ‘வற்று’ச் சாரியை முழுவதுமாகத் தோன்றும் !

‘உம்மை நிலையும் இறுதி யான’ – வற்றுச் சாரியை புணர்ந்த பின்னர் ‘உம்’ சாரியை இறுதியிலே வரும் !

எல்லாம் + ஐ = எல்லாவத்தை ×

எல்லாம் + ஐ = எல்லாமினை ×

எல்லாம் + ஐ = எல்லா + வற்று + ஐ + உம் = எல்லாவற்றையும் √  (வற்று – சாரியை ; உம் - சாரியை)

இங்கே இடையிலே சாரியை வந்ததோடு , ஈற்றிலும் ஒரு சாரியை வந்ததைக் கவனியுங்கள் !

 ‘எல்லாம்’ என்று சொல்லிலேயே , ‘இத்தனை’ என்பது தெளிவாகிவிட்ட நிலையில் ஈற்றிலே வந்த உம்மை , முற்றும்மை எனப்படாது , சாரியை எனப்பட்டுள்ளது !இதனைப் போன்றே -


எல்லாம் +ஒடு = எல்லாவற்றொடும் √ (வற்று , உம் - சாரியைகள்)

எல்லாம் +கு  = எல்லாவற்றுக்கும் √ (வற்று , உம் - சாரியைகள்)

எல்லாம் +இன்  = எல்லாவற்றினும் √ (வற்று , உம் - சாரியைகள்)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (226)

Post by Dr.S.Soundarapandian on Fri Mar 14, 2014 12:41 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (226)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘எல்லாம்’ என்னும் பெயர்ச்சொல்லின் புணர்ச்சிபற்றிப் பார்த்தோம் !

அந்த ‘எல்லாம்’ என்ற பெயர்ச்சொல் உயர்திணையைக் குறித்தால் என்ன ஆகும் ?

தொல்காப்பியர் விடை ! :-

“உயர்திணை யாயி னம்மிடை வருமே” (உருபு . 18)

அஃதாவது – ‘எல்லாம்’ என்ற சொல் உயர்திணைச் சொல்லானால் , வேற்றுமை உருபுகளோடு புணரும்போது ‘நம்’ எனும் சாரியை இடையே வரும் என்கிறார் !

எல்லாம் + ஐ = எல்லாமையும் ×
எல்லாம் + ஐ = எல்லாவத்தை ×
எல்லாம் + ஐ = எல்லாமினை ×
எல்லாம் + ஐ = எல்லாம் + நம் + ஐ + உம் = எல்லா நம்மையும் √( நம் – சாரியை ; உம் - சாரியை)

எல்லாம் + ஒடு = எல்லாவொடும் ×
எல்லாம் + ஒடு = எல்லாவத்தொடு ×
எல்லாம் + ஒடு = எல்லாமினொடு ×
எல்லாம் + ஒடு = எல்லாம் + நம் + ஒடு + உம் = எல்லா நம்மொடும் √( நம் – சாரியை ; உம் - சாரியை)

சாரியைகளில்  நம் கவனம் இருக்கும்போது , ‘பகுதிச் சொல்லிலும் கவனம் தேவை’ என்று தொல்காப்பியர் அறைவதை நோக்குவீர் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (227)

Post by Dr.S.Soundarapandian on Sat Mar 15, 2014 1:29 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (227)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘ம்’ஈற்றுப் பெயர்ச்சொற்கள் , சாரியை பெற்று வேற்றுமை உருபுகளுடன் புணரும் வகைகளைக் கூறிவருகிறார் தொல்காப்பியர் !

தொடர்ந்து ஏதோ ஒரு பெரிய நூற்பாவுடன் வருகிறார் , வாருங்கள் பார்க்கலாம் ! :-

“எல்லாரு மன்னும் படர்க்கை யிறுதியும்
எல்லீரு மென்னு முன்னிலை யிறுதியும்
ஒற்று முகரமுங் கெடுமென மொழிப
நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி
உம்மை நிலையு மிறுதி யான
தம்மிடை வரூஉம் படர்க்கை மேன
நும்மிடை வரூஉ முன்னிலை மொழிக்கே !” (உருபு . 19)

‘எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும்
எல்லீரும்  என்னும்  முன்னிலை இறுதியும் ’ -  ‘எல்லாரும்’ என்ற படர்க்கைப் பெயர்ச்சொல்லின் ஈறாகிய ‘ம்’ ;  ‘எல்லீரும்’ என்ற முன்னிலைப் பெயர்ச்சொல்லின் ஈறாகிய ‘ம்’;

‘ஒற்றும் உகரமும் கெடுமென மொழிப
நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி’ -   ஒற்றாகிய ‘ம்’ கெடும் ; ‘ரு’விலுள்ள ‘உ’ கெட்டு,‘ர்’ கெடாது நிற்கும் !

‘தம்மிடை வரூஉம் படர்க்கை மேன’ -  அப்போது ‘தம்’ சாரியை இடையே தோன்றும்  , படர்க்கைப் பெயர்ச்சொல்லைப் பொறுத்தவரை !

‘‘நும்மிடை வரூஉம் முன்னிலை  மொழிக்கே’ -  அப்போது ‘நும்’ சாரியை இடையே தோன்றும்  , முன்னிலைப் பெயர்ச்சொல்லைப் பொறுத்தவரை !

‘உம்மை நிலையும் இறுதி யான’ -  புணர்ச்சி இறுதியில் ‘உம்’ சாரியை வரும் !

எல்லாரும் + ஐ = எல்லாருமை ×
எல்லாரும் + ஐ = எல்லாருமினை ×
எல்லாரும் + ஐ = எல்லார் + தம் + ஐ  + உம் = எல்லார் தம்மையும் √ (தம் – சாரியை ; ‘உம்’சாரியை)

எல்லாரும் + ஒடு = எல்லாருமொடு ×
எல்லாரும் + ஒடு = எல்லாருமினொடு ×
எல்லாரும் + ஒடு = எல்லார் + தம் + ஒடு  + உம் = எல்லார் தம்மொடும் √ (தம் – சாரியை ; ‘உம்’சாரியை)

எல்லீரும் + ஐ = எல்லீருமை ×
எல்லீரும் + ஐ = எல்லீருமினை ×
எல்லீரும் + ஐ = எல்லீர் + நும் + ஐ  + உம் = எல்லீர் நும்மையும் √ (நும் – சாரியை ; ‘உம்’சாரியை)

எல்லீரும் + ஒடு = எல்லீருமொடு ×
எல்லீரும் + ஒடு = எல்லீருமினொடு ×
எல்லீரும் + ஒடு = எல்லீர் + நும் + ஒடு  + உம் = எல்லீர் நும்மொடும் √ (நும் – சாரியை ; ‘உம்’சாரியை)

இவ்விடத்தில் , இளம்பூரணர் ‘சில ரகர ஈற்றுச் சொற்களுக்கும் இவ்விதி பொருந்தும்  ’என்கிறார் ! : -

கரியார் + தம் + ஐ + உம் = கரியார் தம்மையும் √ (தம் , உம் - சாரியைகள்  )
கரியார் – படர்க்கைப் பெயர்ச்சொல்.

சான்றீர் + நும் + ஐ + உம் = சான்றீர் நும்மையும் √ (நும் , உம் - சாரியைகள்  )
சான்றீர் – முன்னிலைப் பெயர்ச்சொல் .

  நூற்பாவில் ‘மேன’ என்று வந்ததல்லவா?

 மேல் → மேன் (திரிபு)
மேன் → மேன (அகரச் சாரியை புணர்ந்தது) !


***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (228)

Post by Dr.S.Soundarapandian on Sun Mar 16, 2014 11:40 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (228)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

ஒரு வழியாக மகர  ஈற்றுச் சொற்கள் முடிந்தன!

இப்போது னகர ஈற்றுச் சொற்கள் ! :-

“தான்யா  னென்னு மாயீ ரிறுதியும்
மேன்முப்  பெயரொடும்  வேறுபா டிலவே” (உருபு . 19)

‘தான்  யான்  என்னும்  ஆயீர் இறுதியும்’ – ‘தான்’ , ‘யான்’ என்பனவற்றின் ‘ன்’ இறுதியானது,

‘மேல் முப் பெயரொடும்’ – உருபியல் நூற்பா 16இல் ( ‘தாம் நாம் …’) கூறப்பட்ட ‘தாம்’ ‘நாம்’  ‘யாம்’  என்ற மூன்று பெயர்ச் சொற்களைப் போலவே,

‘வேறுபாடு இல்லை !’  - வேறுபாடு இல்லாது புணரும் !

 அஃதாவது – ‘தாம்’ என்பது ‘தம்’ எனக் குறுகியது போலவே , ‘தான்’ என்பதும் ‘தன்’ ஆகும் ! ‘யாம்’ என்பது ‘எம்’ ஆனது போலவே , ‘யான்’ என்பது ‘என்’ ஆகும் !

தான் + ஐ = தானை ×
தான் + ஐ = தானினை ×
தான் + ஐ = தன்னை √

தான் + ஒடு = தானொடு ×
தான் + ஒடு = தானினொடு ×
தான் + ஒடு = தன்னொடு ×

யான் + ஐ = யானை ×
யான் + ஐ = யானினை ×
யான் + ஐ = என்னை √

யான் + ஒடு = யானொடு ×
யான் + ஒடு = யானினொடு ×
யான் + ஒடு = என்னொடு ×

மேல் நூற்பாவில் ‘ஈரிறுதியும்’ என வந்ததல்லவா?

‘ இரு ’ என்ற சொல் முன் , ‘இறுதி’ எனும் உயிர் எழுத்தை முதலாகக் கொண்ட சொல் வருவதால் , ‘இரு’ , ‘ஈர்’ ஆனது ! ( இங்கே  ஒரு , ஓர்  மாற்றத்தை ஒப்பிடுக ! )


***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (229)

Post by Dr.S.Soundarapandian on Sun Mar 23, 2014 7:07 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (229)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

உருபியலில் நின்று விளையாடுகிறோம் !

இப்போது –

“அழனே புழனே யாயிரு மொழிக்கும்
அத்து மின்னு முறழத் தோன்றும்
ஒத்த தென்ப வுணரு மோரே” (உருபு . 21)

 ‘அழனே புழனே யாயிரு மொழிக்கும்’ -  ‘அழன் , ‘புழன்’ ஆகிய இரு சொற்களுக்கும் ,

 ‘அத்தும் இன்னும் உறழத் தோன்றும்’ -  அத்துச் சாரியையும் , இன் சாரியையும் இரண்டுமே வரும் !

‘ஒத்த தென்ப உணரு மோரே’ – இரண்டு சாரியைகளும் அவ்வாறு வருதலையுடைய என்று இலக்கணம் கற்றோர் உணர்வர் !

 அழன் + ஐ = அழனை ×  

அழன் + ஐ = அழன் + அத்து + ஐ = அழத்தை  √

அழன் + ஒடு = அழனொடு ×  

அழன் + ஒடு = அழன் + அத்து + ஒடு = அழத்தொடு √  

அழன் + ஐ = அழனை ×  

அழன் + ஐ = அழன் + இன் + ஐ = அழனினை  √

அழன் + ஒடு = அழனொடு ×  

அழன் + ஒடு = அழன் + இன் + ஒடு = அழனினொடு √  
(அழன் - பிணம்)

புழன் + ஐ = புழனை ×  

புழன் + ஐ = புழன் + அத்து + ஐ = புழத்தை  √

புழன் + ஒடு = புழனொடு ×  

புழன் + ஒடு = புழன் + அத்து + ஒடு = புழத்தொடு √  

புழன் + ஐ = புழனை ×  

புழன் + ஐ = புழன் + இன் + ஐ = புழனினை  √

புழன் + ஒடு = புழனொடு ×  

புழன் + ஒடு = புழன் + இன் + ஒடு = புழனினொடு √  

ஈண்டு இளம்பூரணர் கூடுதலாகத் தரும் இலக்கணம்
– “தோன்றல் என்பதனான் , ‘எவன்’ என்றும்  ‘என்’ என்றும் நிறுத்தி ,
‘வற்று’க்  கொடுத்து வேண்டும் செய்கை செய்து , ‘எவற்றை’ , ‘எவற்றொடு எனவும் ‘எற்றை’ , ‘எற்றொடு’ எனவும் முடிக்க !” .

இளம்பூரணரின் இக் கருத்துப்படி –

எவன் + ஐ =  எவனை ×

எவன் + ஐ =  எவன் + வற்று + ஐ = எவற்றை √


எவன் + ஒடு =  எவனொடு ×

எவன் + ஒடு =  எவன் + வற்று + ஒடு = எவற்றொடு √

 இங்கே ‘எவன்’ என்ற பெயர்ச் சொல் ,  ‘எவை’ என்ற வினாப்பெயரில் நிற்கக் காணலாம் !


என் + ஐ =  எனை ×

என் + ஐ =  என் + வற்று + ஐ = எற்றை √


என் + ஒடு =  எனொடு ×

என் + ஒடு =  என் + வற்று + ஒடு = எற்றொடு √

இங்கே ‘என்’ என்ற பெயர்ச் சொல் ,  ‘எது’ என்ற வினாப்பெயரில் நிற்கக் காணலாம் ! ‘என் னுடையரேனு மிலர்’ என்பதை நோக்குக !

மேலும் ஒரு கூடுதல் இலக்கணத்தை இளம்பூரணர் தருகிறார் பாருங்கள் ! :-

“ஒத்தது என்பதனான் ‘எகின்’ என நிறுத்தி , ‘அத்து’ம்  ‘இன்’னும் கொடுத்துச் செய்கை செய்து ‘எகினத்தை’ ‘எகினத்தொடு ’ எனவும் ‘எகினினை’ ‘எகினினொடு’ எனவும் முடிக்க !” .

எகின் + ஐ = எகினை ×

எகின் + ஐ = எகின் + அத்து + ஐ = எகினத்தை √

எகின் + ஒடு = எகினொடு ×

எகின் + ஒடு = எகின் + அத்து + ஒடு = எகினத்தொடு √


எகின் + ஐ = எகினை ×

எகின் + ஐ = எகின் + இன் + ஐ = எகினினை √

எகின் + ஒடு = எகினொடு ×

எகின் + ஒடு = எகின் + இன் + ஒடு = எகினினொடு √

  இளம்பூரணர் , நூற்பா ஓசை பற்றிய நுணுக்கம் ஒன்றையும் தருகிறார் ! :-

 “  ‘அத்து’ முற்கூறிய வதனான் , ‘அத்து’ப் பெற்றவழி இனிது இசைக்கு மெனக் கொள்க !  ”

என்ன பொருள் ?

மேல் நூற்பாவில் அத்து , இன் ஆகிய இரு சாரியைகளைக் கூறினார் அல்லவா தொல்காப்பியர் ? அங்கே ஏன் ‘அத்து’ச் சாரியையை முன்னே கூறி ‘இன்’ சாரியையைப் பின்னே வைத்தார் ?

 இதற்கு விடைதான் மேலே இளம்பூரணர் கூறியது!

அஃதாவது , ஓசை இனிமைக்காக ‘அத்து’ச்  சாரியையை முதலில் எழுதி ‘இன்’ சாரியையைப் பின்னே எழுதினார் தொல்காப்பியர் என்று ஓசை ஆராய்ச்சியை நிறைவு செய்கிறார் இளம்பூரணர் !

இதனால் , நூற்பா யாப்பாக இருந்தாலும் அதற்கும் ஓசைத் திட்பம் இருக்கவேண்டும் என்ற கருத்து ஏற்படுகிறது !

தமிழ் யாப்பியல் (Prosody) நோக்கில் இது குறிப்பிடத் தக்கது !  


***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (230)

Post by Dr.S.Soundarapandian on Sun Apr 06, 2014 8:22 am

                   தொடத் தொடத் தொல்காப்பியம் (230)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
 
                                நாம் பார்த்துவரும் உருபியலில் அடுத்த நூற்பா ! :-
 
 “அன்னென்  சாரியை யேழ  னிறுதி
முன்னர்த்  தோன்று  மியற்கைத் தென்ப”  (உருபு . 22)
 
 
 ‘அன் என்  சாரியை’ -  ‘அன்எனப்படும் சாரியை,
 
 ‘ஏழன்  இறுதி’ -   ‘ஏழ்’ எனும் சொல்லின் இறுதியில்,
 
  ‘முன்னர்த் தோன்றும்  இயற்கைத்து என்ப’ -  முன்பாகத் தோன்றும் இயல்பை உடையது என்பார்கள் !
 
 ஏழ் + ஐ = ஏழ் +இன் + ஐ = ஏழினை ×
ஏழ் + ஐ = ஏழ் +அன் + ஐ = ஏழனை √  (அன் - சாரியை)
 
ஏழ் + ஒடு = ஏழொடு ×
ஏழ் + ஒடு = ஏழ் +இன் + ஒடு = ஏழினொடு ×
ஏழ் + ஒடு = ஏழ் +அன் + ஒடு = ஏழனொடு √(அன் - சாரியை)
 
இளம்பூரணர் தரும் வேறு சில எடுத்துக்காட்டுகள் !:-
 
    பூழ் + ஐ = பூழ் + இன் + ஐ = பூழினை ×
   பூழ் + ஐ = பூழ் + அன் + ஐ = பூழனை √  (அன் - சாரியை)
 
 
    பூழ் + ஒடு = பூழொடு ×
   பூழ் + ஒடு = பூழ் + இன் + ஒடு = பூழினொடு × 
  பூழ் + ஒடு = பூழ் + அன் + ஒடு = பூழனொடு √  (அன் - சாரியை)
 
 
   யாழ் + ஐ = யாழ் + இன் + ஐ = யாழினை ×
  யாழ் + ஐ = யாழ் + அன் + ஐ = யாழனை √  (அன் - சாரியை)
 
  பூழ் + ஒடு = பூழ் + இன் + ஒடு = பூழினொடு × 
  பூழ் + ஒடு = பூழ் + அன் + ஒடு = பூழனொடு √  (அன் - சாரியை)
 
  சாரியைகளைச் சரியாகப் பயன்படுத்துவது அவசியமானது !
 
 இன் , அன் – சாரியைகள் குழப்புகின்றனவா?
 
   கீழ் வரும்  எடுத்துக்காட்டுகளைப்  பாருங்கள் ! :-
 
 காட்டனை அழித்தான்  (அன்  சாரியை வந்துள்ளது) ×
காட்டினை அழித்தான்  (இன்  சாரியை வந்துள்ளது)
 
வீட்டனைக்  கட்டினான்  (அன்  சாரியை வந்துள்ளது) ×
விட்டினைக்  கட்டினான்  (இன்  சாரியை வந்துள்ளது)
 
கண்டினன்  (இன் சாரியை வந்துள்ளது) ×
கண்டனன்  (அன் சாரியை வந்துள்ளது)
 
எட்டின்  உருபு (இன் சாரியை வந்துள்ளது) ×
எட்டன்  உருபு (அன் சாரியை வந்துள்ளது)
 
 
      சாரியை நுணுக்கங்கள், பழம் நூலைச் செம்பதிப்பாக (Critical edition) வெளியிடும்போது மிகவும் தேவைப்படுவதாகும் !
 
         சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், தமிழ்ச் செவ்வியல் (Classical) நூற்களைச் செம்பதிப்பாகக் கொணரும் ஆய்வு நடைபெற்றுவருவது அறியத் தக்கது !
 
                                                ***

 
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (231)

Post by Dr.S.Soundarapandian on Mon Apr 07, 2014 1:14 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (231)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

  பெயர்ச் சொற்களோடு வேற்றுமை உருபுகள் சேரும் தருணத்தில் சாரியைகள் வருவதைப் பார்த்துவருகிறோம் !


குற்றியலுகரம் பெற்ற பெயர்ச் சொற்கள் நிலைமொழியாக நிற்கும்போது ? :-

 “குற்றிய லுகரத் திறுதி முன்னர்
 முற்றத் தோன்று  மின்னென் சாரியை”  (உருபு . 23)

‘குற்றிய லுகரத் திறுதி முன்னர்’ – குற்றியலுகரச் சொற்களின் ஈற்றெழுத்தின் முன்பாக ,

‘முற்றத் தோன்று  மின்னென் சாரியை’ -  இன் சாரியை முழுவதுமாகத் தோன்றும் !

வரகு + ஐ = வரகு + அன் + ஐ = வரகனை ×
வரகு + ஐ = வரகு + இன் + ஐ = வரகினை √

வரகு + ஒடு = வரகு + அன் + ஒடு = வரகனொடு ×
வரகு + ஒடு = வரகு + இன் + ஒடு = வரகினொடு √

(வரகு – உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தை ஈற்றிலே  பெற்ற பெயர்ச் சொல்)


நாகு + ஐ = நாகு + அன் + ஐ = நாகனை ×
நாகு + ஐ = நாகு + இன் + ஐ = நாகினை √

நாகு + ஒடு = நாகு + அன் + ஒடு = நாகனொடு ×
நாகு + ஒடு = நாகு + இன் + ஒடு = நாகினொடு √ (இன் - சாரியை)
(நாகு – நெடில்தொடர்க் குற்றியலுகரத்தை ஈற்றிலே  பெற்ற பெயர்ச் சொல் )


மேல் எடுத்துக்காட்டுகள் தொல்காப்பியர் காலத்துப் புணர்ச்சிகளுக்கு இயைந்தவை !

அஃதாவது , தொல்காப்பியர் படித்ததும் அவர் காலத்தில் இருந்ததும் மேலே பார்த்த புணர்ச்சிதான் !

ஆனால் , இளம்பூரணர் காலத்தில் இலக்கண நெகிழ்ச்சி உண்டாயிற்று !

ஆகவே என்ன சொன்னார் இளம்பூரணர் ? :-

“முற்ற என்றதனால்  பிற சாரியை பெறுவனவும் கொள்க.  ‘வழக்கத்தாற் பாட்டாராய்ந்தான்’,  ‘கரியதனை’ ,‘ கரியதனொடு’ என வரும் ! ”

இதன் விளக்கம் –

வழக்கு + அத்து + ஆல் + பாட்டு + ஆராய்ந்தான் = வழக்கத்தாற்              
பாட்டாராய்ந்தான் √

(வழக்கு – வன்றொடர்க் குற்றியலுகரத்தை ஈற்றிலே பெற்ற பெயர்ச் சொல்; அத்து - சாரியை)

கரியது + அன் + ஐ = கரியதனை √
(கரியது – உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தை ஈற்றிலே பெற்ற பெயர்ச் சொல்; அன் - சாரியை)

கரியது + அன் + ஒடு = கரியதனொடு √ (அன் – சாரியை ; ஒடு – மூன்றாம்    
வேற்றுமை உருபு)


மேலே கண்ட ‘அன்’ சாரியைதான் இளம்பூரணர் சொன்ன ‘பிற சாரியை’ !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (232)

Post by Dr.S.Soundarapandian on Tue Apr 08, 2014 10:54 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (232)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

 முன் ஆய்வில் , நெடில்தொடர்க் குற்றியலுகரப் பெயர்ச் சொல்லோடு வேற்றுமை உருபு புண்ரும் விதியைப் பார்த்தோம் !  (நாகு + இன் + ஐ = நாகினை).

ஆனால் எல்லா இடத்தும் இவ்விதி பொருந்தாது என்று உடனே கூறவருகிறார் தொல்காப்பியர் ! :-

“ நெட்டெழுத்  திம்ப  ரொற்றுமிகத்  தோன்றும்
 அப்பான்  மொழிக ளல்வழி  யான ”                (உருபு . 24)

‘நெட்டெழுத்து   இம்பர்  ஒற்றுமிகத்  தோன்றும்’ – நெடில் தொடர்க் குற்றியலுகரச்    
                                                                                         சொற்கள் வேற்றுமை உருபோடு புணரும்போது ,
                                                                                         அந்த நெடிலை அடுத்துவரும் எழுத்தின் மெய் வடிவம்
                                                                                          இரட்டிக்கும் !

அப்பால்  மொழிகள் ’ – க, ச, த, ப ஆகிய எழுத்துகள்,

‘அல்வழி ஆன’ – இலாதபோது !

  இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்திக் கீழ்வருமாறு விளக்கலாம் ! :-

யாடு + ஐ = யாடை ×
யாடு + ஐ = யாட்டை √ (நெட்டெழுத்தாகிய ‘யா’வை அடுத்துள்ள ‘டு’வின்
                                                          மெய்யான ‘ட்’ ஆனது, இரட்டித்துள்ளதைக் காண்க!)

 
யாடு + ஒடு = யாடொடு ×
யாடு + ஒடு = யாட்டொடு √ (நெட்டெழுத்தாகிய ‘யா’வை அடுத்துள்ள
                                                              ‘டு’வின் மெய்யான ‘ட்’ ஆனது,
                                                               இரட்டித்துள்ளதைக் காண்க!)

காசு + ஐ = காச்சை × (நெட்டெழுத்தாகிய ‘கா’வை அடுத்துள்ள
                                                      ‘சு’வின் மெய்யான ‘ச்’ ஆனது,
                                                       இரட்டிக்கக்  கூடாது என்பதைக்  காண்க!)

காது + ஐ = காத்தை × (நெட்டெழுத்தாகிய ‘கா’வை அடுத்துள்ள
                                              ‘து’வின் மெய்யான ‘த்’ ஆனது,
                                                இரட்டிக்கக்  கூடாது என்பதைக்  காண்க!)

பாகு + ஐ = பாக்கை × (நெட்டெழுத்தாகிய ‘பா’வை அடுத்துள்ள
                                               ‘கு’வின் மெய்யான ‘க்’ ஆனது,
                                                  இரட்டிக்கக்  கூடாது என்பதைக்  காண்க!)

 ‘அப்படியானால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்களிலும் இரட்டித்தல் உண்டா’ ? – உங்கள் ஐயம் !

விடைகூறுகிறார் இளம்பூரணர் ! :-

“ தோன்றும் என்றதனான் , உயிர்த்தொடர் மொழியும் ‘இன்’ பெறாது , இனவொற்று மிகுதல் கொள்க ! ‘முயிற்றை , ‘முயிற்றொடு’ என வரும் !”

அஃதாவது –

முயிறு + ஐ = முயிறை ×
முயிறு + ஐ = முயிறு + இன் + ஐ =  முயிறினை ×
முயிறு + ஐ = முயிற்றை √  (பகுதிச் சொல்லிலுள்ள ‘று’வின் ‘ற்’ , இரட்டியதைக்
                                                                காண்க!  )  

முயிறு + ஒடு = முயிறொடு ×
முயிறு + ஒடு = முயிறு + இன் + ஐ =  முயிறினொடு ×
முயிறு + ஒடு = முயிற்றொடு √  (பகுதிச் சொல்லிலுள்ள ‘று’வின் ‘ற்’ , இரட்டியதைக்
                                                                        காண்க!  )

கயிறு + ஐ = கயிறை ×
கயிறு + ஐ = கயிறு + இன் + ஐ =  கயிறினை ×
கயிறு + ஐ = கயிற்றை √  (பகுதிச் சொல்லிலுள்ள ‘று’வின் ‘ற்’ , இரட்டியதைக்
                                                              காண்க!  )

கயிறு + ஒடு = கயிறொடு ×
கயிறு + ஒடு = கயிறு + இன் + ஒடு =  கயிறினொடு ×
கயிறு + ஒடு = கயிற்றொடு √  (பகுதிச் சொல்லிலுள்ள ‘று’வின் ‘ற்’ , இரட்டியதைக்
                                                                    காண்க!  )

வயிறு + ஐ = வயிறை ×
வயிறு + ஐ = வயிறு + இன் + ஐ =  வயிறினை ×
வயிறு + ஐ = வயிற்றை √  (பகுதிச் சொல்லிலுள்ள ‘று’வின் ‘ற்’ , இரட்டியதைக்
                                                           காண்க!  )

வயிறு + ஒடு = வயிறொடு ×
வயிறு + ஒடு = வயிறு + இன் + ஒடு =  வயிறினொடு ×
வயிறு + ஒடு = வயிற்றொடு √  (பகுதிச் சொல்லிலுள்ள ‘று’வின் ‘ற்’ , இரட்டியதைக்
                                                                       காண்க!  )

இதனால்தான் ‘இளம்பூரணம்’ என்று நாம் அவரது உரையைப் பெருமையாகக் கூறுகிறோம் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

[b] தொடத் தொடத் தொல்காப்பியம் (233)[/b]

Post by Dr.S.Soundarapandian on Fri Apr 11, 2014 11:46 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (233)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

உருபியலில் நாம் பார்த்த நூற்பாவுக்கு ( ‘நெட்டெழுத்…’) விளக்கமாக அடுத்து ஒரு நூற்பாப் போடுகிறார் தொல்காப்பியர் ! : -

“அவைதம்  
இயற்கைய வாகும் செயற்கைய வென்ப” (உருபு . 25)


அஃதாவது , நெட்டெழுத்திற்கு அடுத்துக் குற்றியலுகரம் வரக்கூடிய சொற்கள் , வேற்றுமை உருபுகளோடு புணரும் வேளையில்,  ‘இன்’சாரியை பெறா என்று இதற்கு முன்னே கூறினார் தொல்காப்பியர் !

இன் சாரியை
பெறாவிட்டால் பின் எப்படிப் புணரும் என்று ஒரு வினா எழுகிறது !

அதற்கு விடைதான் நாம் இப்போது பார்த்த நூற்பா!

  ‘இயற்கை  ஆகும்  செயற்கைய  என்ப’  -  சாரியை எதுவுமின்றி இயற்கையாகச் செயற்படும் !
செயற்கைய  - செயற்படும் தன்மையன .

 முன் ஆய்வில்  பார்த்த அதே எடுத்துக்காட்டுகளே இங்கும் வரும் ! -

யாடு + ஐ = யாட்டை √
யாடு + ஒடு = யாட்டொடு √

‘ஆனால் எல்லாச் சொற்களுக்குமே இதனை விதியாகக் கொள்ளமுடியாது ! சில இடங்களில் மாறியும் வரும்’  என்கிறார் இளம்பூரணர் ! –

 யாடு + ஐ = யாடு +இன் + ஐ = யாட்டினை √
யாடு + ஒடு = யாடு +இன் + ஒடு = யாட்டினொடு √

முயிறு + ஐ = முயிறு +இன் + ஐ = முயிற்றினை √
முயிறு + ஒடு = முயிறு +இன் + ஒடு = முயிற்றினொடு √

விதிகளைத் தொல்காப்பியத்தில் படிக்கிறோம் ; விதி விலக்குகளை இளம்பூரணர் உரையில் படிக்கிறோம் !


***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (234)

Post by Dr.S.Soundarapandian on Sat Apr 12, 2014 12:18 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (234)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33


‘ஒன்றனை’  -    ‘ஒன்றினை’ -   எது சரி ?

நாம் பார்க்கப்போகும் நூற்பாவில் இவ் வினாவிற்கு விடை உள்ளது ! :-

“எண்ணி  னிறுதி  யன்னொடு  சிவணும்”  (உருபு . 26)

அஃதாவது , குற்றியலுகர ஈற்றைக் கொண்ட எண்ணுப் பெயர்ச் சொற்கள் , வேற்றுமை உருபை ஏற்கும்போது ,  ‘அன்’ சாரியைதான் பெறும் !-

ஒன்று + ஐ = ஒன்று +இன் + ஐ = ஒன்றினை ×
ஒன்று + ஐ = ஒன்று +அன் + ஐ = ஒன்றனை √

ஒன்று + ஒடு = ஒன்று +இன் + ஒடு = ஒன்றினொடு ×
ஒன்று + ஒடு = ஒன்று +அன் + ஒடு = ஒன்றனொடு √

இரண்டு + ஐ = இரண்டு +இன் + ஐ = இரண்டினை ×
இரண்டு + ஐ = இரண்டு +அன் + ஐ = இரண்டனை √

இரண்டு + ஒடு = இரண்டு +இன் + ஒடு = இரண்டினொடு ×
இரண்டு + ஒடு = இரண்டு +அன் + ஒடு = இரண்டனொடு √

‘ஒன்று’ , ‘இரண்டு’ ஆகிய இரு மென்றொடர்க்  குற்றியலுகர எண்ணுப் பெயர்ச் சொற்களுக்கே இளம்பூரணர் எடுத்துக்காட்டுகள் தந்துள்ளார் .

நாம் மேலும் சில எடுத்துக்கட்டுகளைத் தரலாம் ! :-

ஆறு + ஐ = ஆறு +இன் + ஐ = ஆறினை ×
ஆறு + ஐ = ஆறு +அன் + ஐ = ஆறனை √

ஆறு + ஒடு = ஆறு +இன் + ஒடு = ஆறினொடு ×
ஆறு + ஒடு = ஆறு +அன் + ஒடு = ஆறனொடு √

(ஆறு -  நெடில் தொடர்க் குற்றியலுகரச் சொல்)


எட்டு + ஐ = எட்டு +இன் + ஐ = எட்டினை ×
எட்டு + ஐ = எட்டு +அன் + ஐ = எட்டனை √

எட்டு + ஒடு = எட்டு +இன் + ஒடு = எட்டினொடு ×
எட்டு + ஒடு = எட்டு +அன் + ஒடு = எட்டனொடு √

(எட்டு -  வன்றொடர்க் குற்றியலுகரச் சொல்)

   இவ்வகையில் , பழைய ஓலைச் சுவடிகளை(Palmleaf manuscripts) ஆய்ந்து செம்பதிப்பைத் (Critical edition) தயாரிப்போர் , எத்தகைய பாடங்களை நாம் கொள்ளவேண்டும் என்பதற்கான வழிகாட்டியாகத் (Guide book)தொல்காப்பியம் திகழ்கிறது !


***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (235)

Post by Dr.S.Soundarapandian on Tue Apr 15, 2014 1:07 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (235)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

  உருபியலில் , குற்றியலுகர எண்ணுப்பெயர்களோடு
, வேற்றுமை உருபுகள் சேரும்போது வரக்கூடிய சாரியை பற்றித்தான் கீழ்வரும்  நூற்பாவும் நுவல்கிறது ! :-

“ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉம்
எல்லா வெண்ணுஞ் சொல்லுங் காலை
ஆனிடை வரினு மான மில்லை
அஃதென் கிளவி யாவயிற் கெடுமே
உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே”  (உருபு . 27)

‘ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉம்
எல்லா வெண்ணுஞ் சொல்லுங் காலை’ –  ‘ஒன்று ’ , ‘இரண்டு’ முதான எண்களோடு , ‘பத்து’ என்பதைச் சேர்த்து வரக்கூடிய ‘ஒரு பஃது’ , ‘இருபஃது’ என்பவற்றுடன் , வேற்றுமை உருபுகள் சேரும்போது ,

‘ஆனிடை  வரினும்  ஆனம்  இல்லை’  -  ‘ஆன்’ சாரியை வந்தால் தவறில்லை !

‘அஃதென் கிளவி ஆவயிற் கெடுமே’ – ‘அஃது’ என்ற சொல் அப்போது கெடும் !

‘உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே’ – அப்போது , ‘ப்’ மட்டும் எஞ்சும் !

எடுத்துக்காட்டுகள் –

ஒருபஃது + ஐ = ஒருப் + ஐ ( ‘அஃது’ கெட்டது)
ஒருப் + ஐ  = ஒருப் + ஆன்+ ஐ ( ‘ஆன்’ சாரியை சேர்ந்தது)
ஒருப் + ஆன்+ ஐ = ஒருபானை

இங்கே ‘பானை’ , தண்ணீர்ப் பானை அல்ல !
ஒருபானை – ஒருபஃதை – ஒருபத்தை = பத்தை (பத்தினை)

இருபஃது + ஐ = இருப் + ஐ ( ‘அஃது’ கெட்டது)
இருப் + ஐ  = இருப் + ஆன்+ ஐ ( ‘ஆன்’ சாரியை சேர்ந்தது)
இருப் + ஆன்+ ஐ = இருபானை
[இருபானை – இருபஃதை – இருபத்தை = இருபதை (இருபதினை)]

முப்பஃது + ஐ = முப் + ஐ ( ‘அஃது’ கெட்டது)
முப் + ஐ  = முப் + ஆன்+ ஐ ( ‘ஆன்’ சாரியை சேர்ந்தது)
முப் + ஆன்+ ஐ = முப்பானை
[முப்பானை – முப்பஃதை – முப்பத்தை = முப்பதை (முப்பதினை)]

 மேல் நூற்பாவில் , ‘ஆனிடை வரினும்’ என்ற தொடரைக் கவனியுங்கள் !
இதிலுள்ள ‘உம்’ , எதிர்மறை உம்மை!  நச்சினார்க்கினியர் உரையிலும் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது !

  எதிர்மறை உம்மை என்றால் ?

இங்கே எதிர்மறை உம்மை என்றால்  -  ‘அஃது’ என்பது கெடவும் செய்யலாம், கெடாமலும் இருக்கலாம் !
‘அஃது’ கெட்டதற்கு எடுத்துக்காட்டுகளை மேலே பார்த்தோம் !

‘அஃது’ கெடாமலிருப்பதற்கு எடுத்துக்காட்டுகளைக் கீழே காண்போம் ! :-

ஒருபஃது + அன் + ஐ = ஒருபஃதனை ( ‘அஃது’ கெடவில்லை)
இருபஃது + அன் + ஐ = இருபஃதனை ( ‘அஃது’ கெடவில்லை)
முப்பஃது + அன் + ஐ = முப்பஃதனை ( ‘அஃது’ கெடவில்லை)

  ‘பஃது’ – என்பதெல்லாம் இன்று தமிழில் மறைந்துவிட்டது !

  இப்படிப்பட்ட  மறைந்த தமிழ் வடிவங்கள் (Obsolete Tamil forms) மொழி ஆராய்ச்சிக்கு மிகவும் தேவையாகும் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (236)

Post by Dr.S.Soundarapandian on Thu Apr 17, 2014 11:53 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (236)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

உருபியலில் , அடுத்து ‘யாது’ , ‘அஃது’ ஆகிய இரு பெயர்ச் சொற்களோடும் வேற்றுமை உருபுகள் சேரும்போது எந்தச் சாரியை வரும் என்று காட்டுகிறார் தொல்காப்பியர் ! : -


  “யாதென்  னிறுதியுஞ்  சுட்டுமுத  லாகிய
  வாய்த  விறுதியு  மன்னொடு  சிவணு
   மாய்தங்  கெடுத  லாவயி  னான ”   (உருபு . 28)

‘ யாது  என்  இறுதியும் , சுட்டுமுதல் ஆகிய
                                             ஆய்த இறுதியும்  ’   -        ‘யாது’ எனும் சொல்லின் ஈறாகிய உகரமும் , ‘அஃது’ எனும் சுட்டுமுதல் ஆகிய சொல்லின் ஈறாகிய உகரமும் கெட்டு, அவற்றின் முன் உள்ள ‘த்’ உடன் ,

‘அன்னொடு  சிவணும்’ – அன்  சாரியை  சேரும் !

‘ஆய்தம் கெடுதல் ஆவயின் ஆன’ – அப்போது ஆய்த எழுத்துக் கெடும் !

 யாது + ஐ = யாதை ×    
யாது + ஐ = யாது + அன் + ஐ = யாதனை √

யாது + ஒடு = யாதொடு ×    
யாது + ஒடு = யாது + அன் + ஒடு = யாதனொடு √

அஃது + ஐ = அஃதை ×    
அஃது + ஐ = அஃது + அன் + ஐ = அதனை √

அஃது + ஒடு = அஃதொடு ×    
அஃது + ஒடு = அஃது + அன் + ஒடு = அதனொடு √

இஃது + ஐ = இஃதை ×    
இஃது + ஐ = இஃது + அன் + ஐ = இதனை √

இஃது + ஒடு = இஃதொடு ×    
இஃது + ஒடு = இஃது + அன் + ஒடு = இதனொடு √


உஃது + ஐ = உஃதை ×    
உஃது + ஐ = உஃது + அன் + ஐ = உதனை √

உஃது + ஒடு = உஃதொடு ×    
உஃது + ஒடு = உஃது + அன் + ஒடு = உதனொடு √

  ‘உஃது’என்பதெல்லாம் இப்போது வழக்கில் இல்லை என்பது கூறாமலேயே விளங்கும் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (237)

Post by Dr.S.Soundarapandian on Tue Apr 22, 2014 3:19 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (237)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொல்காப்பியர்
தம்  இலக்கணத்தின் நடுவே எப்படித் தாவரப்பெயர்களைக் கூறத் தவறமாட்டாரோ  அதைப்போலவே திசைப்பெயர்களையும் குறிப்பிடத் தவறமாட்டார் !

 “ஏழ  னுருபிற்குத்  திசைப்பெயர் முன்னர்ச்
  சாரியைக்  கிளவி யியற்கையு மாகும்
  ஆவயி  னிறுதி  மெய்யொடுங்  கெடுமே  ” (உருபு . 29)

‘ஏழன் உருபிற்கு ’  -  ‘கண்’ எனும் எழாம் வேற்றுமை உருபுகள் ,

‘திசைப்பெயர்  முன்னர்’ – ‘கிழக்கு’ , ‘மேற்கு’ , ‘தெற்கு’, ‘வடக்கு’ எனும் திசைப் பெயர்களோடு  சேரும்போது,

‘இயற்கையும் ஆகும்’ – இயற்கையாகப் புணரும் !

‘ஆவயின் இறுதி’ – அப்போது , திசைப்பெயர்களின் ஈற்றெழுத்துகளின் இறுதியாகிய  ‘உ’,

‘மெய்யொடும்   கெடுமே’ -  ‘க்’ என்ற மெய்யெழுத்தோடு கெடும் !

 கிழக்கு + கண் = கிழக்கண்  √  ( கு , கெட்டது ; கண் – ஏழாம் வேற்றுமை உருபு)
கிழக்கு + கண் = கிழக்கின்கண்  √ (இன் – சாரியை இயற்கையாகப் புணர்ந்தது)

மேற்கு + கண் = மேற்கண்  √  ( கு , கெட்டது ; கண் – ஏழாம் வேற்றுமை உருபு)
மேற்கு + கண் = மேற்கின்கண்  √ (இன் – சாரியை இயற்கையாகப் புணர்ந்தது)

தெற்கு + கண் = தெற்கண்  √  ( கு , கெட்டது ; கண் – ஏழாம் வேற்றுமை உருபு)
தெற்கு + கண் = தெற்கின்கண்  √ (இன் – சாரியை இயற்கையாகப் புணர்ந்தது)

வடக்கு + கண் = வடக்கண்  √  ( கு , கெட்டது ; கண் – ஏழாம் வேற்றுமை உருபு)
வடக்கு + கண் = வடக்கின்கண்  √ (இன் – சாரியை இயற்கையாகப் புணர்ந்தது)

கிழக்கு , மேற்கு , தெற்கு , வடக்கு – என்ற வரிசையில் மேலே எடுத்துக்காட்டுகள் வந்துள்ளன அல்லவா?
ஆனால் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் , வடக்கு , கிழக்கு , தெற்கு , மேற்கு என்ற வரிசையில் எடுத்துக்காட்டுகளை எழுதியுள்ளனர் !

இதன் காரணம் விளங்கவில்லை !

இளம்பூரணர் ‘கண்’ என்ற வேற்றுமை உருபு மட்டுமல்லாது , பக்கத்தைக் குறிக்கும் ‘சார்’ , ‘புடை’ போன்ற  பெயர்ச் சொற்கள்கூட , மேலே ‘கிழக்கண்’ எனச் சாரியை பெறாது புணர்ந்தது போலப் புணரும் என்று ஓர் இலக்கண நுணுக்கத்தைத் தெரிவிக்கிறார் ! :-

கிழக்கு + சார் =  கீழ் சார் √            (சாரியை பெறாது திரிந்து முடிந்தது)
கிழக்கு + புடை =  கீழ் புடை √     (,,)

மேற்கு + சார் =  மேல் சார் √         (,,)
மேற்கு + புடை =  மேல் புடை √  (,,)


தெற்கு + சார் =  தென் சார் √        (,,)
தெற்கு + புடை =  தென் புடை √ (,,)


வடக்கு + சார் =  வட சார் √          (,,)
வடக்கு + புடை =  வட புடை √   (,,)

இந்த எடுத்துக்காட்டுகளில் , கிழக்கு , மேற்கு , தெற்கு , வடக்கு – என்ற வரிசையை இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் பின்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (238)

Post by Dr.S.Soundarapandian on Sun May 18, 2014 5:43 pm

                   தொடத் தொடத் தொல்காப்பியம் (238)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
 
                                பண்ணினை
                                பண்ணை
-      இரண்டும் சரியா?
அப்படியானால் தொல்காப்பியத்தில் இதற்கு விதி உள்ளதா?
 
உள்ளது ! :-
 
 “புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியும்
சொல்லிய வல்ல வேனைய வெல்லாம்
தேருங் காலை யுருபொடு சிவணிச்
சாரியை நிலையுங் கடப்பா டிலவே”  (உருபு . 30)
 
 ‘புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும்’ – ஒற்றெழுத்தை ஈற்றிலே கொண்ட பெயர்ச் சொல்லும் , உயிரெழுத்தை இறுதியிலே கொண்ட பெயர்ச் சொல்லும் ,


 ‘சொல்லிய அல்ல ஏனைய எல்லாம்
தேரும் காலை’ – இதுவரை உருபியலில் புணர்ச்சிகளுக்குக் கூறப்படாத  மெய் ஈறுகளான  ண், ய், ர்,ல்,ள் ஆகியவற்றையும் , உயிர் ஈறான ‘இ’யையும் ஆய்ந்து பார்த்தால் ,


‘உருபொடு சிவணிச் சாரியை நிலையும் கடப்பாடு இலவே’ – வேற்றுமை உருபோடு சேரும்போது சாரியை வரலாம் வராமலும் இருக்கலாம் !
 
        மண் + ஐ = மண்ணை (சாரியை பெறவில்லை)
        மண் + ஐ =மண் + இன் +ஐ = மண்ணினை (சாரியை பெற்றுள்ளது)
 
        வேய் + ஐ = வேயை (சாரியை பெறவில்லை)
        வேய் + ஐ =வேய் + இன் +ஐ = வேயினை (சாரியை பெற்றுள்ளது)
 
        நார் + ஐ = நாரை (சாரியை பெறவில்லை)
        நார் + ஐ =நார் + இன் +ஐ = நாரினை (சாரியை பெற்றுள்ளது)
 
        கல் + ஐ = கல்லை (சாரியை பெறவில்லை)
        கல் + ஐ =கல் + இன் +ஐ = கல்லினை (சாரியை பெற்றுள்ளது)
 
        முள் + ஐ = முள்ளை (சாரியை பெறவில்லை)
        முள் + ஐ =முள் + இன் +ஐ = முள்ளினை (சாரியை பெற்றுள்ளது)
 
        கிளி + ஐ = கிளியை (சாரியை பெறவில்லை)
        கிளி + ஐ =கிளி + இன் +ஐ = கிளியினை (சாரியை பெற்றுள்ளது)
 
         இங்கு , இளம்பூரணர் , “எடுத்தோதிய ஈற்றுள் ஒழிந்தனவு மெல்லாம் ஈண்டுக் கொள்ளப்படும்  ” என்கிறார் !
        இதற்கு என்ன பொருள் ?
 
 அஃதாவது,  ‘ன்’ ஈற்றுச் சொற்களில் , ‘தான் , யான் , அழன் , புழன்’
ஆகிய சொற்களுக்கே இதே உருபியலில் (நூற்பா 20,21) புணர்ச்சி விதிகூறினார் !
 
 ஆனால், ‘ன்’ ஈற்றுச் சொல்லான ‘பொன்’ என்பதும் மேல் நூற்பா (உருபு.30) விதிக்குள் வரும் ! :-
பொன் + ஐ = பொன்னை (சாரியை பெறவில்லை)
பொன் + ஐ = பொன் + இன் + ஐ = பொன்னினை (சாரியை பெற்றுள்ளது)
 
இதனைப் போலவே , ‘ழ்’ஈற்றுச் சொற்புணர்ச்சியிலும் முன்பு (உருபு . 22)
, ‘ஏழ்’ என்ற சொல்லுக்கே விதி கூறினார் தொல்காப்பியர் !
ஆனால் , ‘தாழ்’ என்ற சொல் , மேற்கூறிய விதிக்கு (உருபு .30) உட்படும் என்பதை எடுத்துக்காட்டு மூலம் காட்டுகிறார் இளம்பூரணர் ! :-
 
 தாழ் + ஐ = தாழை (சாரியை பெறவில்லை)
தாழ் + ஐ = தாழ் + இன் + ஐ = தாழினை (சாரியை பெற்றுள்ளது)
 
 ‘ஈ’ ஈற்றுச் சொல்லான ‘நீ’ என்பதற்கே உருபியலில் (நூற்பா7) விதி கூறினார் !
ஆனால் , அவ்விடத்தே குறிப்பிடப்படாத ‘ஈ’ ஈற்றுச் சொற்களான ‘தீ’ , ‘ஈ’ , ‘வீ’ ஆகியன   மேற்கூறிய விதிக்கு (உருபு .30) உட்படும் என்பதை எடுத்துக்காட்டு மூலம் காட்டுகிறார் நச்சினார்க்கினியர் ! :-


தீ + ஐ = தீயை (சாரியை பெறவில்லை)
தீ + ஐ = தீ + இன் + ஐ = தீயினை (சாரியை பெற்றுள்ளது)
 
ஈ + ஐ = ஈயை (சாரியை பெறவில்லை)
ஈ + ஐ = ஈ + இன் + ஐ = ஈயினை (சாரியை பெற்றுள்ளது)
 
வீ + ஐ = வீயை (சாரியை பெறவில்லை)
வீ + ஐ = வீ + இன் + ஐ = வீயினை (சாரியை பெற்றுள்ளது)
 
இவை போன்றே , ‘ஐ’ ஈற்றுச் சொல்லான ‘யாவை’ என்பதற்கு மட்டுமே உருபியலில் (நூற்பா 6) விதி கூறினார் ! அச் சொல்நீங்கலான ‘தினை’ , ‘கழை’ ஆகியனவற்றுக்கு நாம் பார்த்த (நூற்பா 30) நூற்பா பொருந்தும் என்கிறார் நச்சினர்க்கினியர் ! :-
 
தினை + ஐ = தினையை (சாரியை பெறவில்லை)
தினை + ஐ = தினை + இன் + ஐ = தினையினை (சாரியை பெற்றுள்ளது)
 
கழை + ஐ = கழையை (சாரியை பெறவில்லை)
கழை + ஐ = கழை + இன் + ஐ = கழையினை (சாரியை பெற்றுள்ளது)
 
இவ்விடத்தே , நச்சினார்க்கினியர் , வேற்றுமை உருபை ஈற்றிலே கொண்ட சொற்கள் எவ்வாறு புணரும் என்று சில எடுத்துக்காட்டுகளைத் தருகிறார்! :-
 
நம்பியை + கொணர்ந்தான் = நம்பியை கொணர்ந்தான் ×
நம்பியை + கொணர்ந்தான் = நம்பியைக் கொணர்ந்தான் ( ‘ஐ’ உருபோடு ஒற்று சேர்ந்தது)
 
மண்ணினை + கொணர்ந்தான் = மண்ணினை கொணர்ந்தான் ×
மண்ணினை + கொணர்ந்தான் = மண்ணினைக் கொணர்ந்தான் (‘ஐ’ உருபோடு ஒற்று சேர்ந்தது)
 
கொற்றனை + கொணர்ந்தான் = கொற்றனை கொணர்ந்தான் ×
கொற்றனை + கொணர்ந்தான் = கொற்றனைக் கொணர்ந்தான் (‘ஐ’ உருபோடு ஒற்று சேர்ந்தது)
 
மலையொடு + பொருதது = மலையொடுப் பொருதது ×
மலையொடு + பொருதது = மலையொடு பொருதது (‘ஒடு’ உருபுடன் இயல்பான புணர்ச்சி)
 
மத்திகையால் + புடைத்தான் = மத்திகையால் புடைத்தான் ×
மத்திகையால் + புடைத்தான் = மத்திகையாற் புடைத்தான் (‘ஆல்’ உருபின் ஈறாகிய ‘ல்’ , ‘ற்’ ஆகத்  திரிந்தது)
 
சாத்தற்கு + கொடுத்தான் = சாத்தற்கு கொடுத்தான் ×
சாத்தற்கு + கொடுத்தான் = சாத்தற்குக் கொடுத்தான் (‘கு’ உருபுடன் ஒற்று சேர்ந்தது)
 
ஊர்க்கு + சென்றான் = ஊர்க்கு சென்றான் ×
ஊர்க்கு + சென்றான் = ஊர்க்குச் சென்றான் (‘கு’ உருபுடன் ஒற்று சேர்ந்தது)
 
காக்கையின் + கரிது = காக்கையின் கரிது ×
காக்கையின் + கரிது = காக்கையிற் கரிது (‘இன்’ உருபின் ஈறாகிய ‘ன்’ , ‘ற்’ ஆகத்  திரிந்தது)
 
காக்கையது + பலி = காக்கையதுப் பலி ×
காக்கையது + பலி = காக்கையது பலி (‘அது ’ உருபுடன் இயல்பான புணர்ச்சி)
 
மடியுள் + பழுக்காய் = மடியுள் பழுக்காய் ×
மடியுள் + பழுக்காய் = மடியுட் பழுக்காய் (‘உள்’ உருபின் ஈறாகிய ‘ள்’ , ‘ட்’ ஆகத்  திரிந்தது)
  (பழுக்காய் – பழுத்த பாக்கு)
 
தடாவினுள் + கொண்டான் = தடாவினுள் கொண்டான் ×
தடாவினுள் + கொண்டான் = தடாவினுட் கொண்டான் ( ‘உள்’ உருபின் ஈறாகிய ‘ள்’ , ‘ட்’ ஆகத்  திரிந்தது)
  (தடா – பானை )
 
       தொல்காப்பிய எழுத்ததிகாரத்து ஆறாவது இயலாகிய  உருபியல் இத்துடன் முடிகிறது !
 

                                        ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (239)

Post by Dr.S.Soundarapandian on Sat May 31, 2014 5:49 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (239)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

சென்ற ஆய்வுகளில் நாம் உருபியலைப் பார்த்து முடித்தோம் !

இப்போது அதற்கு அடுத்த இயலான உயிர் மயங்கியலைப் பார்க்கவுள்ளோம் !

‘உயிர் மயங்கியல்’ என்றால் என்ன ?

ஓர் உயிர் இன்னொரு உயிருக்காக மயங்கி நிற்பதா?

அல்ல !

உயிர் எழுத்தை ஈற்றிலே கொண்ட சொற்கள் (அவை பெயர்ச் சொற்களாகவோ , வினையெச்சங்களாகவோ இருக்கலாம் !), பெரும்பாலும் வல்லெழுத்துகளைமுதல் எழுத்தாகக்கொண்ட சொற்களுடன் எப்படிப்  புணரும் என விதிகளைக் கூறுவது ! ‘பெரும்பாலும் வல்லெழுத்துகளை’ என்றதால் , சிறுபான்மை மெல்லெழுத்துகளையும் இடை எழுத்துகளையும் முதலாகக் கொண்ட சொற்களோடு ஏற்படும் புணர்ச்சிகளுக்கும் இந்த இயலில் விதிகள் உள்ளன !

 மயங்குவது – புணர்வது .

முதல் நூற்பா ! :-

“அகர இறுதிப் பெயர்நிலை முன்னர்
 வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றின்
தத்த மொத்த வொற்றிடை மிகுமே”  (உயிர்மயங்.1)

‘அகர இறுதிப் பெயர்நிலை முன்னர்’ -  ‘அ’வை முதல் எழுத்தாகக் கொண்ட பெயர்ச் சொற்கள் முன்பாக ,  

‘வேற்றுமை அல்வழிக் க ச த பத்  தோன்றின்’ – அல்வழிப் புணர்ச்சியில் , வருசொற்கள் க ச த ப  ஆகியவற்றை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வந்தால்,
‘தத்தம் ஒத்த ஒற்றிடை மிகுமே !  ’ -  புணர்ச்சி இடையே வரும் முதல் எழுத்திற்கு இனமான ஒற்று மிகும் !

விள + குறிது = விள குறிது×
விள + குறிது = விளக் குறிது√ (க் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

விள + சிறிது = விள சிறிது×
விள + சிறிது = விளச் சிறிது (ச் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

விள + தீது = விள  தீது×
விள + தீது = விளத் தீது√ (த் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

விள + பெரிது = விள பெரிது×
விள + பெரிது = விளப் பெரிது (ப் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

விள – அகர ஈற்றுப் பெயர்ச் சொல்.
விள – விளா மரம் (Wood-apple).


மக + குறிது = மக குறிது ×
மக + குறிது = மகக் குறிது √(க் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

மக + சிறிது = மக சிறிது ×
மக + சிறிது = மகச் சிறிது√ (ச் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

மக + தீது = மக  தீது ×
மக + தீது = மகத் தீது √(த் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

மக + பெரிது = மக பெரிது ×
மக + பெரிது = மகப் பெரிது √(ப் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

மக – அகர ஈற்றுப் பெயர்ச் சொல்.
மக – மகவு – ஆண் அல்லது பெண்பிள்ளை.

“நிலை மொழியாகப் பெயர்ச்சொல் நிற்கும்போது சரி ! உரிச்சொல் , இடைச்சொல் நிற்கும்போது ?” – இளம்பூரணரிடம் மாணவர்கள் கேட்டனர் !

இளம்பூரணர் விடை ! :-

தட + கை = தடங்கை ×
தட + கை = தடக்கை √(க் - மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

தவ + கொண்டான் = தவங்கொண்டான்×
தவ + கொண்டான் = தவக்கொண்டான்√(க் - மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

தட + செவி = தடச்செவி×
தட + செவி = தடஞ்செவி√ (ஞ் - மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

தட + தோள் = தடத்தோள்×
தட + தோள் = தடந்தோள்√(ந் - மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

தட , தவ – இந்த நிலைமொழிகள் , அகரத்தை ஈறாகக் கொண்ட உரிச்சொற்கள்.

இனி இடைச்சொல்லுக்கு எடுத்துக்காட்டு ! :-

மடவ மன்ற + தடவுநிலைக் கொன்றை = மடவ மன்றத் தடவுநிலைக் கொன்றை×
மடவ மன்ற + தடவுநிலைக் கொன்றை = மடவ மன்ற  தடவுநிலைக் கொன்றை√(த் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

மன்ற – அகர ஈற்று இடைச்சொல் ; இது நிலைமொழியாக நின்று புணர்ந்தபோது ஒற்று மிகவில்லை !

இளம்பூரணரின் ‘மடவ மன்ற  தடவுநிலைக் கொன்றை ’ எனும் அடி –   குறுந்தொகை66 இல் உளது!

அ – அகரத்தைச் சுட்டும்போது எப்படிப் புணருமாம் ?
இளம்பூரணர் காட்டுகிறார் ! :-

அ + குறிது = அகுறிது×
அ + குறிது = அக்குறிது√(க் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + சிறிது = அசிறிது×
அ + சிறிது = அச்சிறிது√(ச் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + தீது = அதீது×
அ + தீது = அத்தீது√(த் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + பெரிது = அபெரிது×
அ + பெரிது = அப்பெரிது√(ப் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + யாது = அயாது ×
அ + யாது = அவ்யாது√ (இடையின எழுத்தாகிய ‘வ்’ மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + அழகிது =  அஅழகிது ×
அ + அழகிது = அவ்வழகிது√ (வ் – உடம்படுமெய் மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

இங்கெல்லாம் , ‘அ’ – பெயர்ச்சொல் ! ( ‘அ’ என்ற சொல்லால் அகரமே சுட்டப்படுதல் காண்க !)

மயங்கியது – உயிரா நம் உடலா?

நீங்கள்தான் சொல்லவேண்டும் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (240)

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 15, 2014 11:21 am

***
தொடத் தொடத் தொல்காப்பியம் (240)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

இப்போது உயிர்மயங்கியலில் இரண்டாம் நுற்பா ! :-

“வினையெஞ்சு கிளவியு முவமக் கிளவியும்
எனவெ னெச்சமுஞ் சுட்டி னிறுதியும்
ஆங்க வென்னு முரையசைக் கிளவியும்
ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே” (உயிர்மயங் . 2)

‘வினையெஞ்சு கிளவியும்’ – வினையெச்சச் சொல்லும்,

‘உவமக் கிளவியும்’ -  ‘போல’ என வரும் உவமச் சொல்லும்,

‘என என் எச்சமும்’ – ‘கொள்ளென’ என வரும் எச்சச் சொல்லும்,

‘சுட்டின் இறுதியும்’ -  ‘அ’ என்பதுபோல வரும் சுட்டுச்சொல்லின் ஈறும்,

‘ஆங்க என்னும் உரையசைக் கிளவியும் ’ - ‘ஆங்க’ எனும் உரையசைச் சொல்லும்,

ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே – முன் சூத்திரத்தில் சொன்னபடி , அல்வழிப் புணர்ச்சியில்,  வல்லெழுத்து மிகுதலைக் கொள்ளும் !

உண + கொண்டான் = உணகொண்டான் ×
உண + கொண்டான் = உணக் கொண்டான் √ (உண – வினையெச்சச் சொல்)( அல்வழிப் புணர்ச்சி)

உண + சென்றான் = உணசென்றான் ×
உண + சென்றான் = உணச் சென்றான் √ (உண – வினையெச்சச் சொல்) ( அல்வழிப் புணர்ச்சி)


உண + தந்தான் = உண தந்தான் ×
உண + தந்தான் = உணத் தந்தான் √ (உண – வினையெச்சச் சொல்) ( அல்வழிப் புணர்ச்சி)


உண + போயினான் = உண போயினான் ×
உண + போயினான் = உணப் போயினான் √ (உண – வினையெச்சச் சொல்)( அல்வழிப் புணர்ச்சி)

தின + கொண்டான் = தினகொண்டான் ×
தின + கொண்டான் = தினக் கொண்டான் √ (தின – வினையெச்சச் சொல்) ( அல்வழிப் புணர்ச்சி)


தின + சென்றான் = தின சென்றான் ×
தின + சென்றான் = தினச் சென்றான் √ (தின – வினையெச்சச் சொல்)( அல்வழிப் புணர்ச்சி)


தின + தந்தான் = தின தந்தான் ×
தின + தந்தான் = தினத் தந்தான் √ (தின – வினையெச்சச் சொல்) ( அல்வழிப் புணர்ச்சி)


தின + போயினான் = தினப் போயினான் ×
தின + போயினான் = தினப் போயினான் √ (தின – வினையெச்சச் சொல்)( அல்வழிப் புணர்ச்சி)


புலிபோல + கொன்றான் = புலிபோல கொன்றான் ×
புலிபோல + கொன்றான் = புலிபோலக் கொன்றான் √(போல – உவமக் கிளவி) ( அல்வழிப் புணர்ச்சி)


கொள்ளென + கொண்டான் = கொள்ளென கொண்டான்×
கொள்ளென + கொண்டான் = கொள்ளெனக் கொண்டான்√( கொள்ளென – என என் எச்சச்  சொல்)( அல்வழிப் புணர்ச்சி)


அ + கொற்றன் = அகொற்றன் ×
அ + கொற்றன் = அக் கொற்றன் √ (அ- சுட்டுச் சொல்லின் இறுதி) ( அல்வழிப் புணர்ச்சி)


அ + சாத்தன் = அசாத்தன் ×
அ + சாத்தன் = அச் சாத்தன் √ (அ- சுட்டுச் சொல்லின் இறுதி) ( அல்வழிப் புணர்ச்சி)


அ + தேவன் = அதேவன் ×
அ + தேவன் = அத் தேவன் √ (அ- சுட்டுச் சொல்லின் இறுதி)( அல்வழிப் புணர்ச்சி)


அ + பூதன் = அபூதன் ×
அ + பூதன் = அப் பூதன் √ (அ- சுட்டுச் சொல்லின் இறுதி) ( அல்வழிப் புணர்ச்சி)


ஆங்க + கொண்டான் = ஆங்க கொண்டான் ×
ஆங்க + கொண்டான் = ஆங்கக் கொண்டான் √ (ஆங்க – உரையசைச் சொல்) ( அல்வழிப் புணர்ச்சி)

மேலைப் புணர்சிகளில் , வருசொற்கள் யாவும் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் என்பதைக் கவனிக்க !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (241)

Post by Dr.S.Soundarapandian on Tue Jun 17, 2014 1:48 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (241)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

உயிர் மயங்கியலில் இப்போது மூன்றாம் நூற்பா ! :-

 “சுட்டின் முன்னர்  ஞநமத்  தோன்றின்
ஒட்டிய வொற்றிடை மிகுதல் வேண்டும்  ” (உயிர்மயங் . 3)

- இது சுட்டுகள் – சுட்டு எழுத்துகள்- மெல்லின எழுத்துகளை முதலாகக்கொண்ட சொற்களுடன் புணர்வதைக் கூறுகிறது !

‘சுட்டின் முன்னர்’ – அ,இ,உ எனும் சுட்டு எழுத்துகள் முன்னால்,

‘ஞ ந ம த் தோன்றின்’ – ஞ,ந,ம எனும் மெல்லின எழுத்துகளை முதலாகக்கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தால் ,  

‘ஒட்டிய ஒற்று’ – தத்தமக்குப் பொருந்திய ஒற்று,

‘இடை மிகுதல் வேண்டும்’- இடையிலே மிக்கு வரும் !

அ+ ஞாலம் = அஞாலம் ×
அ+ ஞாலம் = அஞ்ஞாலம் √ (ஞ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ+ நூல் = அநூல் ×
அ+ நூல் = அந்நூல் √ (ந்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ+ மணி = அமணி ×
அ+ மணி = அம்மணி √ (ம்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

இ+ ஞாலம் = இஞாலம் ×
இ+ ஞாலம் = இஞ்ஞாலம் √ (ஞ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

இ+ நூல் = இநூல் ×
இ+ நூல் = இந்நூல் √ (ந்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

இ+ மணி = இமணி ×
இ+ மணி = இம்மணி √ (ம்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

உ+ ஞாலம் = உஞாலம் ×
உ+ ஞாலம் = உஞ்ஞாலம் √ (ஞ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

உ+ நூல் = உநூல் ×
உ+ நூல் = உந்நூல் √ (ந்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

உ+ மணி = உமணி ×
உ+ மணி = உம்மணி √ (ம்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

இங்கு நச்சினார்க்கினியர் ஒரு நுட்பம் கூறுகிறார் !-

அஃதாவது , ‘ஆனா நெளிந்தது’ என்று சொல்லவேண்டுமானால் ,
அ+ ஞெளிந்தது = அ ஞெளிந்தது ×
அ+ ஞெளிந்தது = அஞ்ஞெளிந்தது√ (அல்வழிப் புணர்ச்சி)

‘ஆனா நன்று’ எனக் கூறவேண்டுமானால்,
அ+ நன்று = அநன்று ×
அ+ நன்று = அந்நன்று √ (அல்வழிப் புணர்ச்சி)

‘ஆனா மாண்டது’ எனக் கூறவேண்டுமானால்,
அ+ மாண்டது = அமாண்டது ×
அ+ மாண்டது = அம்மாண்டது √ (அல்வழிப் புணர்ச்சி)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (242)

Post by Dr.S.Soundarapandian on Thu Jun 19, 2014 3:41 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (242)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

சென்ற நூற்பாவில் , சுட்டெழுத்துகள் முன்னே மெல்லின எழுத்துகள் வந்தால் எப்படிப் புணரும் என்று தொல்காப்பியர் காட்டினார் !  
இந்த நூற்பாவில், சுட்டுகளின் முன்னே இடையெழுத்துகள் வந்தால் எப்படிப் புணரும் என்று காட்டுகிறார் ! :-

“யவமுன் வரினே வகர மொற்றும்” (உயிர்மயங். 4)

‘ய வ முன் வரினே’ – சுட்டு எழுத்துகளின் முன்னே யகரத்தை முதலாகக்கொண்ட சொற்களும் , வகரத்தை முதலாகக் கொண்ட சொற்களும் புணரவந்தால் ,

‘வகரம் ஒற்றும்’ – வகர மெய்யெழுத்து இடையே தோன்றும் !

அ + யாழ் = அயாழ் ×
அ+ யாழ் = அவ்யாழ் √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + வளை = அவளை ×
அ+ வளை = அவ்வளை √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

இந்த நூற்பா உரையிலும் நச்சினார்க்கினியர் ஓர் இலக்கண நுட்பம் உரைக்கிறார் ! :-

“வருமொழி முற்கூறிய வதனான் , அகரம் தன்னை யுணர நின்றவழியும்     வகரம் மிகுதல் கொள்க. அவ்வளைந்தது என வரும்”.

அஃதாவது-
 ‘அ’ என்ற எழுத்து வளைந்தது என்று சொல்லவேண்டுமாயின் –
அ + வளைந்தது = அவளைந்தது ×
அ + வளைந்தது = அவ்வளைந்தது √ (வ் - தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (243)

Post by Dr.S.Soundarapandian on Fri Jun 20, 2014 8:35 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (243)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

இந்த நூற்பாவில் , அகரச் சுட்டின் முன் , உயிரெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தாலும் , சந்தியாக , ‘வ்’தோன்றும் என்கிறார் !:-

“உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது” (உயிர்மயங். 5)

‘உயிர் வரினும்’ – அகரச் சுட்டின்முன் உயிர் எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தாலும் ,

‘ஆயியல் திரியாது’ – உயிர்மயங்கியல் நூற்பா 4இல் கூறிய முறைப்படி, ‘வ்’சந்தியாக வரும் !

நச்சரின் எடுத்துகட்டுகளை வருமாறு தரலாம் !:-

அ + அடை = அவடை ×
அ + அடை = அவ்வடை √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + ஆடை = அவாடை ×
அ + அடை = அவ்வாடை √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + இலை = அவிலை ×
அ + இலை = அவ்விலை √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + ஈயம் = அவீயம் ×
அ + ஈயம் = அவ்வீயம் √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + உரல் = அவுரல் ×
அ + உரல் = அவ்வுரல் √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + ஊர்தி = அவூர்தி ×
அ + ஊர்தி = அவ்வூர்தி √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + எழு = அவெழு ×
அ + எழு = அவ்வெழு √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + ஏணி = அவேணி ×
அ + ஏணி = அவ்வேணி √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + ஐயம் = அவையம் ×
அ + ஐயம் = அவ்வையம் √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + ஒழுக்கம் = அவொழுக்கம் ×
அ + ஒழுக்கம் = அவ்வொழுக்கம் √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + ஓடை = அவோடை ×
அ + ஓடை = அவ்வோடை √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + ஔவியம் = அவவௌவியம் ×
அ + ஔவியம் = அவ்வௌவியம் √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

‘ஆனா அழகிது’ என்று சொல்ல-
அ+ அழகிது = அவழகிது ×
அ+ அழகிது = அவ்வழகிது √(வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (244)

Post by Dr.S.Soundarapandian on Sat Jun 21, 2014 7:30 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (244)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொல்காப்பியரிடத்தில் , “ அ+ இருதிணை= அவ்விரு திணை” என்றுதானே வரவேண்டும் ? ஆனால் உங்கள் நூலிலேயே ‘ஆயிருதிணை’ (சொல்.1) என வருகிறதே” என்று ஒரு மாணவன் கேட்டான் !

அதற்குத் தொல்காப்பியர் கூறிய விடை :-

“நீட வருதல் செய்யுளுள் உரித்தே” (உயிர்மயங் . 6)

இளம்பூரணர் தந்த சான்று –

அ+ இருதிணை = ஆயிருதிணை

இதனை அடுத்து, இளம்புரணர் எழுதுகிறார் –
“வருமொழி வரையாது கூறினமையின் , இம் முடிபு வன்கணம் ஒழிந்த கணம் எல்லாவற்றொடும் சென்றது; உதாரணம் பெற்றவழிக் கொள்க” .

தஞ்சை சரசுவதிமகால் நூல்நிலையத் தொல்காப்பிய வெளியீட்டில்(2009) இதற்கான எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன :-

அ + ஐந்தெழுத்தும் = ஆவைந்தெழுத்தும் (தொல்.மொழிமரபு. 28)

அ + முப்பெயரும் = ஆமுப்பெயரும் (தொல்.உயிர்மயங். 27)

அ + வயின் = ஆவயின் (தொல். உயிர்மயங். 48)

செய்யுள் என்பது ஓசைக்குப் பதில் சொல்லவேண்டியது ! இலக்கணத்திற்கு மட்டும் பதில் சொன்னால் போதாது !

அதனால்தான் ‘செய்யுள்’ என்று வரும்போது இலக்கணம் நெகிழ்ந்து கொடுக்கிறது !


     ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (245)

Post by Dr.S.Soundarapandian on Tue Jun 24, 2014 12:34 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (245)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

   ‘சாகுமாறு குத்தினான்’ எனும் பொருளில், ‘சாவக் குத்தினான்’ என்று வரவேண்டியது, சிலபோது , ‘சாக் குத்தினான்’ என வருகிறதே -   ஒரு மாணவனின் ஐயம் !

‘அப்படியும் வரலாம் ’ என்பது தொல்காப்பியர் விடை !:-

“சாவ வென்னுஞ் செயவெ  னெச்சத்
திறுதி வகரம் கெடுதலு முரித்தே” (உயிர் மயங்.7)

(கெடுதலும் – இதிலுள்ள  ‘உம்’, எதிர்மறை உம்மை)

‘சாவ என்னுஞ் செயவென்  எச்சத்து’-  ‘சாவ’ எனும் ‘செய’என் வினையெச்சத்து,

‘இறுதி வகரம் கெடுதலும் உரித்தே’ – ஈற்று ‘வ’ கெட்டுப்போதலும் உண்டு !

சாவ + குத்தினான் = சாவக் குத்தினான் √ (அல்வழிப் புணர்ச்சி)
சாவ + குத்தினான் = சாக் குத்தினான் √(அல்வழிப் புணர்ச்சி)

சாவ + சீறினான் = சாவச்  சீறினான் √ (அல்வழிப் புணர்ச்சி)
சாவ + சீறினான் = சாச் சீறினான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாச் சீறினான்- சாகுமாறு சீறினான்)

சாவ + தகர்த்தான் = சாவத்  தகர்த்தான் √ (அல்வழிப் புணர்ச்சி)
சாவ + தகர்த்தான் = சாத் தகர்த்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாத் தகர்த்தான்- சாகுமாறு தகர்த்தான்)


சாவ + புடைத்தான் = சாவப்  புடைத்தான் √ (அல்வழிப் புணர்ச்சி)
சாவ + புடைத்தான் = சாப் புடைத்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாப் புடைத்தான்- சாகுமாறு அடித்தான்)

நச்சினார்க்கினியர், ‘இயல்புக் கணத்தும் இந் நிலைமொழிக் கேடு கொள்க’
என்றார் !
வன்கணம் இல்லாத அந்தப் பிற கணங்களுக்கு நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் !-

சாவ + ஞான்றான் = சாவஞான்றான் √(அல்வழிப் புணர்ச்சி)
சாவ + ஞான்றான் = சாஞான்றான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாஞான்றான்- சாகுமாறு தூக்குப் போட்டுக்கொண்டான்)

சாவ + நீண்டான் = சாவநீண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
சாவ + நீண்டான் = சாநீண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாநீண்டான்- சாகுமாறு நீண்டநாள் பட்டினி கிடந்தான்)

சாவ + மாண்டான் = சாவமாண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
சாவ + மாண்டான் = சாமாண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாமாண்டான்- உயிரைப் போக்குமாறு மாண்டான்)

சாவ + யாத்தான் = சாவயாத்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
சாவ + யாத்தான் = சாயாத்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாயாத்தான்- சாகுமாறு கட்டினான்)

சாவ + வீழ்ந்தான் = சாவவீழ்ந்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
சாவ + வீழ்ந்தான் = சாவீழ்ந்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாவீழ்ந்தான்- சாகுமாறு வீழ்ந்துபட்டான்)

சாவ + அடைந்தான் = சாவவடைந்தான் √(அல்வழிப் புணர்ச்சி)(வ்- உடம்படு மெய்)
சாவ +அடைந்தான் = சாவடைந்தான் √(அல்வழிப் புணர்ச்சி)( வ்- உடம்படு மெய்)
(சாவடைந்தான்- சாகுமாறு முடிவை அடைந்தான்)

‘அறிய வந்த’ என்பதை ‘அறிவந்த’ எனவும் , ‘செய்யத் தக்க’ என்பதைச்  ‘செய்தக்க’
என்றும் புலவர்கள் எழுதியுள்ளதைப் பார்த்தால்தான் , மேல் தொல்காப்பிய இலக்கணத்தின் தேவை நமக்குப் புலனாகும் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (246)

Post by Dr.S.Soundarapandian on Thu Jun 26, 2014 5:42 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (246)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

வந்து போனான்
வந்துப் போனான் – எது சரி ?

வந்த பையன்
வந்தப் பையன் – எது சரி?
- இதற்கெல்லாம் தொல்காப்பியத்தில் விதி உள்ளதா?

உள்ளது !

கீழே படியுங்கள் ! -

   தொல்காப்பியர் சில சொற்களைப் பட்டியலிடுகிறார் ! பட்டியலிட்டு இவையெல்லாம் வல்லெழுத்தை முதலாக உடைய சொற்கள் முன் நின்றால் எப்படிப் புணரும் என்று காட்டுகிறார் !

அச் சொற்கள் !:-

       1. அன்ன  (உவம உருபு ஆகிய இஃது ஓர் இடைச்சொல்; ‘உவமக் கிளவி’    என்றும்   இதனைக் குறிப்பர்.)                                                                                                            

       
       2 . அண்மை சுட்டிய விளி ( ‘ஊர’ என்பது ஓர் அண்மை விளி;இது பெயர்ச் சொல்)

      3 . செய்ம்மன என்னும் தொழிலிறு சொல் ( ‘உண்மன’ என்பது இதற்கு
                                                 எடுத்துக்காட்டு; இது வினைச் சொல்; உண்மன -     உண்ணும்)                                                                                  
   
          4 . ஏவல் கண்ணிய வியங்கோள் கிளவி ( ‘செல்’ என்பது இதற்கு   எடுத்துக்காட்டு; இது வியங்கோளாகிய வினைச்சொல்)

                                                   

              5 . செய்த என்னும் பெயரெஞ்சு கிளவி ( ‘உண்ட’ என்பது இதற்கு எடுத்துக்காட்டு;
                                              இது பெயரெச்சச் சொல்; ‘பெயரெச்சமாகிய வினைச் சொல் ’ எனவும் கூறுவர் )
                                                                                                                           

               6 . செய்யிய என்னும் வினையெஞ்சு கிளவி  ( ‘உண்ணிய சென்றான்’ என்பது இதற்கு எடுத்துக்காட்டு; உண்ணிய சென்றான்                         -உண்பதற்காகச் சென்றான்; இது வினையெச்சச் சொல்)
                                         
                                                                                                                   

               7 . அம்ம என்னும் உரைப்பொருள் கிளவி  (உரை அசையாக வரும்  ‘அம்ம’ எனும்சொல்; இது இடைச்சொல்.)
                                         

                 8 . பலவற்று இறுதிப் பெயர்க்கொடை ( ‘பல’எனும் பெயர்ச்சொல் ; பெயர்க்கொடை - பெயர்ச்சொல்)
                                           

- இப் பட்டியல்தான் தொல்காப்பியர் தருவது !

இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள் அடிப்படையில் கீழ்வரும் விளக்கங்களைத் தரலாம் !:-

1 . பொன் அன்ன + குதிரை= பொன் அன்னக் குதிரை ×
    பொன் அன்ன + குதிரை= பொன் அன்ன குதிரை √ (இயல்பாய்   முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

                                                                                                 
     பொன் அன்ன + செந்நாய்= பொன் அன்னச் செந்நாய் ×
    பொன் அன்ன + செந்நாய் = பொன் அன்ன செந்நாய் √ (இயல்பாய்
                                                                                                      முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    பொன் அன்ன + தகர்= பொன் அன்னத் தகர் ×
    பொன் அன்ன + தகர் = பொன் அன்ன தகர் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
                                                                                       

    பொன் அன்ன + பன்றி= பொன் அன்னப் பன்றி ×
    பொன் அன்ன + பன்றி = பொன் அன்ன பன்றி √ (இயல்பாய்
                                                                                            முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

2 . ஊர + கொள் = ஊரக் கொள் ×
    ஊர + கொள் = ஊர கொள் √ (இயல்பாய்  முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    ஊர + செல் = ஊரச் செல் ×
    ஊர + செல்= ஊர செல் √ (இயல்பாய்  முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    ஊர + தா = ஊரத் தா ×
    ஊர + தா= ஊர தா√ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
   
      ஊர + போ = ஊரப் போ ×
      ஊர + போ = ஊர போ √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    3 . உண்மன + குதிரை = உண்மனக் குதிரை ×
    உண்மன+ குதிரை = உண்மன குதிரை √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    உண்மன + செந்நாய் = உண்மனச் செந்நாய் ×
    உண்மன+ செந்நாய்= உண்மன செந்நாய் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    உண்மன + தகர் = உண்மனத் தகர்×
    உண்மன+ தகர் = உண்மன தகர் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    உண்மன + பன்றி = உண்மனப் பன்றி ×
    உண்மன+ பன்றி = உண்மன பன்றி √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

 4 . செல்க + குதிரை = செல்கக் குதிரை ×
    செல்க + குதிரை = செல்க குதிரை √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

   செல்க + செந்நாய் = செல்கச் செந்நாய் ×
    செல்க + செந்நாய் = செல்க செந்நாய் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    செல்க + தகர் = செல்கத் தகர் ×
    செல்க + தகர் = செல்க தகர் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    செல்க + பன்றி = செல்கப் பன்றி ×
    செல்க + பன்றி = செல்க பன்றி √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)


   5 . உண்ட + குதிரை = உண்டக் குதிரை ×
    உண்ட+ குதிரை = உண்ட குதிரை √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    உண்ட + செந்நாய் = உண்டச் செந்நாய் ×
    உண்ட+ செந்நாய் = உண்ட செந்நாய் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    உண்ட + தகர் = உண்டத் தகர் ×
    உண்ட+ தகர் = உண்ட தகர் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    உண்ட + பன்றி = உண்டப் பன்றி ×
    உண்ட+ பன்றி = உண்ட பன்றி √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

     உண்ணாத + குதிரை = உண்ணாதக் குதிரை ×
     உண்ணாத+ குதிரை = உண்ணாத குதிரை √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

     உண்ணாத + செந்நாய் = உண்ணாதச் செந்நாய் ×
     உண்ணாத+ செந்நாய் = உண்ணாத செந்நாய் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

     உண்ணாத + தகர் = உண்ணாதத் தகர் ×
    உண்ணாத+ தகர்= உண்ணாத தகர்√ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    உண்ணாத + பன்றி = உண்ணாதப் பன்றி ×
    உண்ணாத+ பன்றி = உண்ணாத பன்றி √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

     நல்ல + குதிரை = நல்லக் குதிரை ×
     நல்ல+ குதிரை =  நல்ல குதிரை √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

     நல்ல + செந்நாய் = நல்லச் செந்நாய் ×
     நல்ல+ செந்நாய் =  நல்ல செந்நாய் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

     நல்ல + தகர் = நல்லத் தகர் ×
     நல்ல+ தகர்=  நல்ல தகர் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

     நல்ல + பன்றி = நல்லப் பன்றி ×
     நல்ல+ பன்றி =  நல்ல பன்றி √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

   6 . உண்ணிய + கொண்டான் = உண்ணியக் கொண்டான் ×
   உண்ணிய + கொண்டான் = உண்ணிய கொண்டான் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

  உண்ணிய + சென்றான் = உண்ணியச் சென்றான் ×
  உண்ணிய + சென்றான் = உண்ணிய சென்றான் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

  உண்ணிய + தந்தான் = உண்ணியத் தந்தான் ×
  உண்ணிய + தந்தான் = உண்ணிய தந்தான் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

 உண்ணிய + போயினான் = உண்ணியப் போயினான் ×
  உண்ணிய + போயினான் = உண்ணிய போயினான் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

7 .  அம்ம + கொற்றா = அம்மக் கொற்றா ×
     அம்ம + கொற்றா = அம்ம கொற்றா √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

     அம்ம + சாத்தா = அம்மச் சாத்தா ×
     அம்ம + சாத்தா = அம்ம சாத்தா √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    அம்ம + தேவா = அம்மத் தேவா ×
     அம்ம + தேவா = அம்ம தேவா √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

     அம்ம + பூதா = அம்மப் பூதா ×
     அம்ம + பூதா = அம்ம பூதா √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

 8 . பல + குதிரை = பலக் குதிரை ×
      பல + குதிரை = பல குதிரை √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)


    பல + செந்நாய் = பலச் செந்நாய் ×
    பல + செந்நாய் = பல செந்நாய் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)


    பல + தகர் = பலத் தகர் ×
    பல + தகர் = பல தகர் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    பல + பன்றி = பலப் பன்றி ×
    பல + பன்றி= பல பன்றி √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)


   சில + குதிரை = சிலக் குதிரை ×
   சில + குதிரை = சில குதிரை √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)


   சில + செந்நாய் = சிலச் செந்நாய் ×
   சில + செந்நாய் = சில செந்நாய் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)


    சில + தகர் = சிலத் தகர் ×
    சில + தகர் = சில தகர் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    சில + பன்றி = சிலப் பன்றி ×
    சில + பன்றி= சில பன்றி √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

 தொல்காப்பியர் தந்த எட்டு வகைச் சொற்களுக்கும் எடுத்துக்காட்டுகள் சரியாயிற்றா ?

தொல்காப்பியர் தந்த அந்த எட்டுவகைச் சொற்கள் கொண்ட நூற்பா இதோ ! :-

  “ அன்ன வென்னு முவமக் கிளவியும்
    அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும்
    செய்ம்மன வென்னுந் தொழிலிறு சொல்லும்
    ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும்
    செய்த வென்னும் பெயரெஞ்சு கிளவியும்
    செய்யிய வென்னும் வினையெஞ்சு கிளவியும்
    அம்ம வென்னு முரைப்பொருட் கிளவியும்
    பலவற் றிறுதிப் பெயர்க்கொடை யுளப்பட
   அன்றி யனைத்து மியல்பென மொழிப”  (உயிர் மயங் . 8)

என்ன?

தொடக்கத்தில் நாம் பார்த்த வினாக்களுக்கு விடை கிடைத்ததா?

விடை-
வந்து போனான் √
வந்துப் போனான் ×

வந்த பையன்√
வந்தப் பையன் ×

                                  ***


Last edited by Dr.S.Soundarapandian on Thu Jun 26, 2014 5:53 pm; edited 1 time in total (Reason for editing : spacing)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (247)

Post by Dr.S.Soundarapandian on Fri Jun 27, 2014 1:08 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (247)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

வாழிய அருணாசலம் !
வாழி அருணாசலம் !

-   எது சரி ?

இரண்டுமெ சரிதான்
என்கிறார் தொல்காப்பியர் ! :-

“வாழிய வென்னுஞ் சேயென் கிளவி
இறுதி யகரங் கெடுதலு முரித்தே”  (உயிர் மயங்.9)

 ‘வாழிய வென்னும் சேயென் கிளவி’- ‘வாழி’ என்ற ஏவல் அல்லாது , வியங்கோளில் ‘வாழிய’ என்றுகூறும் சொல்லானது ,

‘இறுதி யகரங் கெடுதலும்  உரித்தே ’ – வல்லெழுத்தை முதலாக உடைய சொல் வந்து புணரும்போது, தனது இறுதி ‘ய’வைக் கெடுக்கும் !

வாழிய + கொற்றா = வாழியக் கொற்றா ×
வாழிய + கொற்றா = வாழிய கொற்றா √  (இறுதி ‘ய’கெடாது வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
வாழிய + கொற்றா = வாழி கொற்றா √  (இறுதி ‘ய’கெட்டு வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

வாழிய + சாத்தா = வாழியச் சாத்தா ×
வாழிய + சாத்தா = வாழிய சாத்தா √  (இறுதி ‘ய’கெடாது வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
வாழிய + சாத்தா = வாழி கொற்றா √  (இறுதி ‘ய’கெட்டு வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

வாழிய + தேவா= வாழியத் தேவா ×
வாழிய + தேவா= வாழிய தேவா √  (இறுதி ‘ய’கெடாது வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
வாழிய + தேவா = வாழி கொற்றா √  (இறுதி ‘ய’கெட்டு வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

வாழிய + பூதா = வாழியப் பூதா ×
வாழிய + பூதா = வாழிய பூதா √  (இறுதி ‘ய’கெடாது வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
வாழிய + சாத்தா = வாழி பூதா √  (இறுதி ‘ய’கெட்டு வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

மேலே , வருசொற்கள் யாவும் வல்லெழுத்தை முதலாக உடையன என்பதைப் பர்க்க மறவாதீர் !

இளம்பூரணர் , மெல்லின, இடையின , உயிர் எழுத்துகளை முதலாக உடைய சொற்களுக்கும் இது பொருந்தும் என்று கூறி எடுத்துக்காட்டு ஒன்றைத் தருகிறார் ; அதன்படி -

வாழிய + ஞெள்ளா = வாழியஞ்ஞெள்ளா×
வாழிய + ஞெள்ளா = வாழிய ஞெள்ளா√(இறுதி ‘ய’கெடாது வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

வாழிய + ஞெள்ளா = வாழி ஞெள்ளா√(இறுதி ‘ய’கெட்டு வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

நூற்பாவில் ‘சேயென்’ என்று ஒரு சீர் வந்தது அல்லவா?

இதில் பல தகராறுகள் ! -

‘சேயஎன்’ – இளம்பூரணர் பாடம்
‘சேயஎன்’ – நச்சினார்க்கினியர் பாடம்
‘சேயென்’ – மகாலிங்கையர் பாடம்
‘சேயென்’ – கணேசய்யர் பாடம்
‘சேயென்’ – சுப்பிரமணிய சாத்திரியார் பாடம்
‘செய்யிய’ – வேங்கடராஜுலு ரெட்டியார் பாடம்
‘செய்கென்’ – பலசுந்தரனார் பாடம்
‘சேயென்’ – மு.சண்முகம் பிள்ளை பாடம்
‘சேயென்’ – சொ.சிங்காரவேலன் பாடம்
‘செய்கவென்’ – தி.வே.கோபாலையர் பாடம்
‘செய்வென்’ – திருவனந்தபுரம் பாடம்
‘செயஎன்’ – தமிழண்ணல் பாடம்
‘செயவென்’ – ச.வே.சுப்பிரமணியன்  பாடம்

‘சேயென்’ – என்பதே நூற்பா ஓசைக்கு ஒத்து வருவதால் , இப்போதைக்கு, இப்பாடம் இங்கு கொள்ளப்பட்டுள்ளது !

மேலே பல பாடங்களைப் பார்த்தோமல்லவா? இன்னும் பல பதிப்புகளை நாம் காணவேண்டியுள்ளது !

இவ்வாறு அனைத்துப் பதிப்புகள் மட்டுமல்லாது , அனைத்துச் சுவடிகளையும் (Manuscripts)ஆராய்ந்து , அலசிப் பார்த்து , நீண்ட ஆய்வு நடத்தி, அதன்பின் நாம் ஒரு பாடத்தை நிர்ணயிப்பதே சரியான முறையாகும்! இதனைத்தான் செம்பதிப்பு (Critical edition) என்கிறோம்!

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (248)

Post by Dr.S.Soundarapandian on Sat Jun 28, 2014 1:24 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (248)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

முன் ஆய்வில் , ‘அம்ம + கொற்றா = அம்ம கொற்றா’ என்று இயல்பாகப் புணரும் எனக் கண்டோம் !

இந்த நூற்பாவில் அது தொடர்பாக என்ன கூறுகிறார் என்று பார்ப்போமே? :-

“உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்” (உயிர்மயங் . 10)

 ‘உரைப்பொருள் கிளவி’ – உரை அசைச் சொல்லாகிய ‘அம்ம’ என்பது,
‘நீட்டமும் வரையார்’ – ‘அம்மா’ என்று நீளுதலையும் நீக்கமாட்டார்கள் !

அம்ம + கொற்றா = அம்மக் கொற்றா ×
அம்ம + கொற்றா = அம்ம கொற்றா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
அம்ம + கொற்றா = அம்மா கொற்றா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
(இங்கே ‘அம்மா’ என்பது தாயைக் குறிக்காது; பொருளற்ற ஓர் அசைதான் ! )

அம்ம + சாத்தா = அம்மச் சாத்தா ×
அம்ம + சாத்தா = அம்ம சாத்தா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
அம்ம + கொற்றா = அம்மா சாத்தா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)

அம்ம + தேவா = அம்மத் தேவா ×
அம்ம + தேவா = அம்ம தேவா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
அம்ம + தேவா = அம்மா தேவா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)

அம்ம + பூதா = அம்மப் பூதா ×
அம்ம + பூதா= அம்ம பூதா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
அம்ம + பூதா = அம்மா பூதா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)


தொல்காப்பிய நூற்பா , வல்லெழுத்தை முதலாக உடைய சொற்கள் வந்து புணர்வதற்கே !


ஆனால் இளம்பூரணர், வேறு இன எழுத்தை முதலாக உடை சில சொற்களுக்கும் இது பொருந்தும் என்று கூறி , ஓர் எடுத்துக்காட்டைத் தருகிறார்!:-

அதனை வருமாறு விளக்கிக் கூறலாம் :-

அம்ம + ஞெள்ளா= அம்மஞ் ஞெள்ளா ×
அம்ம + ஞெள்ளா= அம்ம ஞெள்ளா √(இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
அம்ம + ஞெள்ளா= அம்மா ஞெள்ளா √(இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)

  ‘உரையசை’ என்பதை விளங்கிக்கொள்வது கடினமாக உள்ளதா?

சிலர் பேசும்போது , “இந்தாப்பா , காலை 8 மணிக்கெல்லாம் வந்திடணும்!” என்கிறார்கள் அல்லவா? அப்போது ‘இந்தாப்பா’ எனக் கூறி எதையாவது கையில் கொடுக்கிறார்களா? இல்லையே? ‘இந்தாப்பா’ என்பதற்குப் பொருள் இல்லையல்லவா? இதுதான் ‘உரை அசை’ !

எனவே ‘உரையசை’ என்பது பாடலில்தான் வரும் என்று கருதவேண்டாம் ! அது பேச்சு வழக்கிலும் வரும் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Page 12 of 28 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 28  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum