ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போடி, நீ தான் லூசு...!
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 T.N.Balasubramanian

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Page 2 of 28 Previous  1, 2, 3 ... 15 ... 28  Next

View previous topic View next topic Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by Dr.S.Soundarapandian on Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by ராஜா on Fri Jan 25, 2013 11:23 am

[You must be registered and logged in to see this link.] wrote:தமிழ் களஞ்சியம் என்பது இது போன்ற பதிவுகளில் அறிய முடிகிறது. நன்றி அய்யா. தொடருங்கள். தொடர் 16 இரண்டு முறை இடம் பெற்றுள்ளது.
நன்றி தொடருங்கள் நண்பரே ,உங்களை போன்றோரின் ஊக்கங்கள் தான் சான்றோர்களின் பங்களிப்பை இன்னும் அதிகரிக்கும்
(நான் வெறும் அரட்டை குருப் தான் சோகம் )


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.] உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை [You must be registered and logged in to see this link.] படிக்கவும்.
[You must be registered and logged in to see this image.] ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத்[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப்[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] என்னைத் தொடர்பு கொள்ள[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Fri Jan 25, 2013 11:39 am

அருமையான பதிப்பு. சேவையும் கூட. வாழ்த்துக்கள்.
avatar
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3794
மதிப்பீடுகள் : 575

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (18)

Post by Dr.S.Soundarapandian on Fri Jan 25, 2013 1:07 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (18)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“எவ்வயின் பெயரும் வெளிப்படத் தோன்றி
அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப” (வேற்றுமையியல் 7)

- இந் நூற்பாவிற்கு முன் இரு நூற்பாக்களில் , தனிப் பெயரையும், தொகைப் பெயரையும் எழுவாய்’ என அறிமுகப்படுத்தினார்.

அது, இது,அவள்,அவர்கள் – தனிப் பெயர்கள்

நரிப் பல், ஆட்டு வால் , யானத் தந்தம் – தொகைப் பெயர்கள்


இப் பெயர்களை எழுவாயாக அமைத்துத் தொடர்களை எழுதும்போது ,இவைகளைத் தனியாக எடுத்துப் பார்த்தாலும் எழுவாய் இலக்கணத்திற்கு உட்பட்டே நிற்கவேண்டும்! இதுவே ‘செவ்விது’ என்கிறார் தொல்காப்பியர்!

1. ‘அது வந்தது’ –இதிலுள்ள ‘அது’ என்ற எழுவாய் ,எழுவாய்க்குரிய ‘வேற்றுமை ஏற்கவேண்டும்’என்ற விதிக்கு உட்பட்டு , ‘அதனை’ , ‘அதற்கு’ என்றெல்லாம் ,தனியே (‘வெளிப்படத் தோன்றி’)வேற்றுமை வேர்றுமை ஏற்கும்!

2. ‘அவர்கள் வந்தார்கள்’ –இதிலுள்ள ‘அவர்கள்’ என்ற எழுவாய், ‘அவர்களை’, ‘அவர்களுக்கு’ என்றெல்லாம் தனியாக நின்று வேற்றுமை ஏற்கும்!

3. ‘நரிப்பல் அரியது’- இதிலுள்ள எழுவாயான ‘நரிப்பல்’ தனியே ‘நரிப்பல்லை’,‘நரிப்பல்லுக்கு’ என்றெல்லாம் வேற்றுமை ஏற்கும்!

மேல் மூன்று எடுத்துக்காட்டுக்களிலும் எழுவாய் பயின்றது ‘செவ்விது’!

ஈகரை படித்தேன்’ –இதில் ‘நான்’ என்ற எழுவாய் மறைந்து வருகிறது! இது செவிக்கு வந்தாலும் ,கருத்துக்குப் புலப்படுகிறது! இங்கே ‘நான்’ என்பதும், எழுவாய் இலக்கணப்படி ,தனியே, வேற்றுமை எற்கும்:-

நான் + ஐ = என்னை (நான் - என் + ஐ = என்னை )

நான் +கு = எனக்கு (நான் - என் + கு = எனக்கு)

நான் + ஆல் = என்னால் (நான்- என் +ஆல் = என்னால்)

எனவே தோன்றா எழுவாயும் ‘செவ்விது’!

தோன்றா எழுவாய் செவ்விது அல்ல எனச் சிலர் கூறுவர்! தோன்றா எழுவாயை ஒதுக்கினால் தமிழின் கட்டமைப்பே போய்விடும்! தொடர்களை நம் விருப்பப்படிக் கையாளமுடியாது!

இங்கே நமக்கு ஓர் ஐயம் எழுகிறது ! - ‘எல்லா எழுவாயுமே தனிநிலையில் வேற்றுமை ஏற்கத்தானே செய்யும்?’

இதற்கு விடை தருகிறார் இளம்பூரணர் !

சில எழுவாய்களை வேற்றுமைப்படுத்த முடியாது என்கிறார் அவர்!

‘நீயிர் +ஐ = நீயிரை ’ என வராது என்கிறார் அவர்.

‘நீயிர்’ என்பதே ‘நும்’மிலிருந்து வந்ததாகையால் ,வேறொரு திரிபை அது ஏற்காது என்பது அவர் கருத்து .

* * *.
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (19)

Post by Dr.S.Soundarapandian on Sat Jan 26, 2013 10:31 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (19)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுள் பயின்றவை நாடுங் காலை” (அகத்திணையியல் 3)

- இதில் கூறப்பட்டுள்ள ,

முதல் – நிலம் , பொழுது முதலியன.

கரு – பறவை , உணவு முதலியன.

உரி – ஊடல் ,புணர்தல் முதலியன .

இந்த மூன்றும் ‘முறைசிறந்தனவே’ என்று தொல்காப்பியர் கூறுவதால், ‘முதலைவிடக் கரு சிறந்தது ,கருவைவிட உரி சிறந்தது ’என்று ஆகிறது.

எதைவைத்து இப்படிச் சொல்கிறீர்கள்?- என்று தொல்காப்பியரிடம் கேட்டால் , “பாடல்களை வைத்துச் சொல்கிறேன் !” என்கிறார்.

‘பாடலுள் பயின்றவை நாடுங் காலை’ என்பதற்கு இதுதானே பொருள்?

தொல்காப்பியருக்கு முன்பே பல அக நூற்கள் இருந்தன என்பதற்கு இந்த இடம் சான்று!

அகப் பாடல்களை எடுத்துக்கொண்டால்,அதற்கு உயிர் நாடி எது?

பாடல் யார் குரலாக வருகிறதோ அவரின் மன எழுச்சிதான் உயிர் நாடி!

அம் மன எழுச்சிதான் உரிப்பொருள் !

பல்வேறு வட்டார மக்களின் சிறப்பான மன எழுச்சிகளை யெல்லாம் தொகுத்து வகுத்தால் , ஊடல் , பிரிதல் , புணர்தல் , இரங்கல் , இருத்தல் என்ற ஐந்திற்குள் அவை அடங்கிவிடுகின்றன !

அஃதாவது,

முதற் பொருள் – எல்லோர்க்கும் பொது ; அடிப்படை (முதல்)

கருப் பொருள் – எல்லோர்க்கும் பொது (solid substances)

உரிப்பொருள் – குறிப்பிட்ட அந்தத் தலைவன் தலைவியருக்கு என்று தனியாக அமைந்த (உரிமை பூண்ட) ,பொருள் (matter of concern) .

ஆகவே, ‘உரிப்பொருள் ’ என்றால் என்னவோ ஏதோ என்று நினைத்துவிடாநீர்கள்!

“சரி ! குறிஞ்சி நிலத்தின் உரிப்பொருள் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் என்கிறார்கள்! அப்படியானால் மற்ற நிலத்தவர்கள் புணரமாட்டார்களா? ” –உங்கள் வினா!

நல்ல கேள்வி!

மலையும் மலை சார்ந்த இடமும் கொண்ட அந்த மலைப்பாங்கான நிலத்தில் பல்வேறு மன எழுச்சிச் செயல்கள் நடக்கும்தான்! ஆனால் புலவனைப் பாடத்தூண்டும் மன எழுச்சி , குறிஞ்சியைப் பொறுத்தவரை,புணர்தலும் அதனைச் சார்ந்தவைகளுமே!

தலைவியைப் பிரிந்துபோகும் தலைவன் பாலை நிலத்தின் வழியே போவது ,பிற நிலத்து வழியே போவதினும் குறிப்பிடத் தக்கதுதானே? எனவேதான் பாலையின் உரிப்பொருள் ‘பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ என்றனர்!

இதனைப்போலவே, பிற நிலங்களின் உரிப்பொருள்களும் சிறப்பு கருதியே வகுக்கப்பட்டுள்ளன!
விடை கிடைத்ததா?

* * *.
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (20)

Post by Dr.S.Soundarapandian on Sun Jan 27, 2013 9:40 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (20)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘செல்வி படிக்க விரும்புகிறாள்’ – இத் தொடரின்படிப், படிக்க விரும்பியது செல்வியா? அவளுடைய தாயா?

‘செல்வி ,தான் படிக்க விரும்புகிறாள்’ – என்றும் பொருள் கொள்ள முடிகிறது;செல்வி படிக்கவேண்டுமென்று அவளின் தாய்தான் விரும்புகிறாள் எனவும் பொருள் கொள்ள முடிகிறதே?

எது சரி?

தொல்காப்பியரிடம் கேட்டால் ,“ இரண்டுமே சரிதான் ” என்கிறார் ! :-


“இதுசெயல் வேண்டும் என்னும் கிளவி
இருவயின் நிலையும் பொருட்டா கும்மே
தன்பா லானும் பிறன்பா லானும் ” (வினையியல் 46)

‘இதுசெயல் வேண்டும் என்னும் கிளவி’ – ‘படிக்க வேண்டும்’ , ‘படிக்க விரும்புகிறார்’ என்பன போன்ற சொற்கள். ‘தன்பாலானும் பிறன்பாலானும்’- கூறுவோன் கூற்றாகவும், வேறொருவன் கூற்றாகவும் .

மேற்கண்டவாறு இரு வகைகளிற் பொருள் கொள்ள இடந்தந்த இலக்கண நுட்பத்தை விளக்குகிறார் நச்சினார்க்கினியர்!

அவர் கருத்துப்படி,

1. ‘செல்வி ’ எனும் எழுவாய் ,நேரே சென்று ‘விரும்புகிறாள்’ என்ற பயனிலை கொள்வதால் – தன்வினைப் பொருள் ஏற்படுகிறது.

2. ‘செல்வி ’ எனும் எழுவாயோடு படித்தல் எனும் தொழிற்பெயர் சேர்ந்துகொண்டு, அதன்பிறகு ‘விரும்புகிறாள்’ என்ற பயனிலை கொள்வதால் –பிறவினைப் பொருள் ஏற்படுகிறது.

இவ்வாறு தமிழில் சில சிக்கலான இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன!

தமிழில் மட்டுமல்ல! உலகத்து எல்லா மொழிகளிலும் இதுபோன்ற சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன!

ஏன் ?

ஏனெனில், மொழி என்பது பல்வேறு காலக்கட்டங்களில் ,பல்வேறு உணர்ச்சி அடிப்படைகளில் மொழியப்படுவதாகும்! யாரும் உட்கார்ந்து ஆலோசித்து , “ நான் இந்த மொழியை உருவாக்கிவிட்டேன்; நாளைக் காளை பத்து மணிக்கு இதனை வெளியிடுகிறேன்! ” என்று கூறமுடியாது!எனவேதான் எந்த மொழியிலும் சிறு சிறு இடைவெளிகள் இருக்கும் என்று கூறமுடிகிறது !* * *.
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (21)

Post by Dr.S.Soundarapandian on Mon Jan 28, 2013 8:18 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (21)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“ பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்
பொருள்வேறு படாஅது ஒன்றா கும்மே ” (கிளவியாக்கம் 33)

- இந் நூற்பாவை எடுத்துக்காட்டுகள்வழி விளக்கலாம்.

‘பப்பாளி வாங்கி வந்தார் ; அது சுவையாக இருந்தது’ – இங்கே‘அது’ என்பது பப்பாளியைச் சுட்டுகிறதல்லவா? அதனால் ‘அது’ என்பது ‘சுட்டுப்பெயர்’.

தொல்காப்பியர் ‘பொருளொடு புணராச் சுட்டுப் பெயர்’ என்றல்லவா கூறுகிறார்?

‘பொருளொடு புணர்ந்த சுட்டுப் பெயர்’ எனத் தனியாக ஒன்று உள்ளதா?


‘அந்தப் புத்தகம்’ – இங்கு ‘அந்த’, பொருளொடு புணர்ந்த சுட்டுப் பெயர்; ‘அந்த’ என்பதுடன் அருகிலேயே ‘புத்தகம்’ ஒட்டிக்கொண்டு நிற்பதைப் பாருங்கள்!

‘ஊரிலிருந்து மாடு வாங்கி வந்தார் ; அது பால் கறக்கவில்லை’ –இங்கு ‘அது’ பொருளொடு புணராச் சுட்டுப் பெயர்.‘அது’ என்பதற்கு அருகில் மாட்டைக் காணோம்; மாடு எங்கோபோய் நிற்கிறது!

பொருளொடு புணராச் சுட்டுப் பெயராக இருந்தாலும் ,வேறு ஒரு பொருளை அது குறிக்காது; தொடரில் முன் வந்த பொருளையே (மாட்டையே) குறிக்கும்.இதனைத்தான் மேல் நூற்பாவில் தொல்காப்பியர் விளக்கினார்.

சுட்டுப் பெயரைப் pronoun என்பர்.

தமிழில், ‘பிரதி பெயர்ச் சொல்’, ‘பதிலிப் பெயர் ’என்றெல்லாம் குறிப்பர்.

இந்த நூற்பாவிற்கு அடுத்து,

“ இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க் கிளவியும்
வினைக்கொருங் கியலுங் காலந் தோன்றின்
சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்
இயற்பெயர் வழிய என்மனார் புலவர் ” (கிளவியாக்கம் 34)

- என்கிறார் தொல்காப்பியர்.

இதன்படி,

‘ சுமதி திறமையானவள்; அவள் தேர்வில் வெற்றி பெறுவாள் ’ √

‘அவள் தேர்வில் வெற்றி பெறுவாள்;சுமதி திறமையானவள்’ ×

- என்று ஆகும்.

அஃதாவது , இயற்பெயரை முன்னே சொல்லிவிட்டுப் பின்வரும் இடத்தில்தான் சுட்டுப் பெயரைக் கூறவேண்டும் என்று ஆகிறதல்லவா?

இந்தத் தொடர் நுட்பங்களைத்தான் மொழியியலார் (Linguists), SYNTAX
என்று இன்று புதிதாகக் கண்டுபிடித்துள்ளதுபோல ஓதுகிறார்கள் !

தொல்காப்பியப் புதையலை நாம் வெளிக் கொணராம லிருப்பதே இதற்குக் காரணம்! எனவேதான் ‘ தொடத் தொடத் தொல்காப்பியம்’!

* * *
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (22)

Post by Dr.S.Soundarapandian on Tue Jan 29, 2013 8:54 pmதொடத் தொடத் தொல்காப்பியம் (22)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“ ... ... ... ...
ஊரது சார்வும் செல்லும் தேயமும்
ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும்
புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமொடு
அழிந்துஎதிர் கூறி விடுப்பினும் ஆங்குஅத்
தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும்
... ... ... ...
கண்டோர் மொழிதல் கண்டது என்ப ” (அகத்திணையியல் 40)

- இதில் ஓர் உருக்கமான சித்திரம் உள்ளது!

காதலர் இருவர் வீட்டைவிட்டுப் பிரிந்து வேற்றூர் நோக்கி நடந்து செல்கின்றனர் ! அப்போது வழியில் சிலர் அவர்களைக் காணுகின்றனர்!
அவர்களிடம் காதலர் ,வழிபற்றிக் கேட்கவே ,நிலையைப் புரிந்துகொண்ட அவர்கள் ,“ இன்னின்ன பாதையில் போனால் இன்னது வரும் ; நீங்கள் இந்த வழியாகப் போகலாம்! கொஞ்ச தூரத்தில் வருவது இன்ன ‘ஊர்’! அது இன்ன‘தேயத்’தைச் சேர்ந்தது! ” என்று அவர்களது நிலைக்குத் தாமும் வருந்திக் கூறினர்! காதலர் சில வினாக்களைக் கேட்க, அவற்றுக்கு அப் பெரியோர் ‘எதிர்’கூறினர்! காதலர் அவர்கள் வழியில் சென்றபின், காதலியின் தாய் பதறிக்கொண்டு அங்கு வந்தாள்! அத் தாய்க்கு நடந்ததைக் கூறி ,“இனிமேல் நீங்கள் விரட்டிச் சென்று பயனில்லை ! அவர்கள் மணம் முடித்துக்கொண்டு உங்கள் வீடு திரும்புவர்! நீங்கள் அமைதியாகப் போங்கள்!”என்று திருப்பி அனுப்பினர் அப்பெரியோர்!

இவையெல்லாம் பிரிந்து செல்லும் காதலரைக் ‘கண்டோர் ’மொழிதல் ஆகும்!

இந்தச் சித்திரத்தைக் காட்டிவிட்டுத் தொல்காப்பியர் ,“ இவையெல்லாம் இலக்கியங்கள் கண்டவை!” என முடிக்கிறார் !

இலக்கியங்களை அவர் மேற்கோள் காட்டினாலும் ,அவர் வரைந்த ஓவியம் கற்பனை அல்ல! கதலர் நடந்து சென்றதைப் பார்த்தோமல்லவா? அது கற்பனையல்ல என்பதற்கு நானே சான்று! 1970 இல் சிவகாசியைவிட்டுக் காதலர் இருவர் மதுரைக்குப் பேருந்தில் வந்துவிட்டனர்; அதற்கு மேல் செல்வதற்குக் காசில்லை! வேறு வழியில்லாமல் ,கரைக்குடி உறவினர் வீட்டுக்குப் போகலாம் என்று மதுரையிலிருந்து காரைக்குடிக்கு மேலூர் ,திருப்பத்தூர், குன்றக்குடி வழியாக நடந்தே வந்துவிட்டனர்!1970இலேயே இப்படி என்றால், கி.மு.1000இல்?

எனவேதான், கி.மு.1000க்கு முற்பட்ட தமிழக நிலவியல் (Geography) வரலாற்றையும் சமுதாய வரலாற்றையும் தாங்கிநிற்கும் அரிய ஆவணமாக இதனைப் பார்க்கவேண்டும்!

மேல் நூற்பாவில் ‘செல்லும் தேயமும்’ என்கிறார் தொல்காப்பியர் !

தேயம் – நாடு

இன்று ‘நாடு’ என்றால் Country ; பழந் தமிழகத்தில் இப்பொருள் இல்லை ! இன்றும் ‘செட்டிநாடு’, ‘வருஷநாடு’ என்றெல்லாம் பேசுகிறோம் !இது கி.மு.1000க்கு முன்பிருந்தே வரும் மரபு என்பதற்கு மேல் நூற்பா சான்று!

‘எதிர்கூறி’ என்றொரு ஆட்சியையும் மேல் நூற்பாவில் பார்த்தோம்!

எதிர்கூறி – பதில் கூறி ; ‘எதிர்த்துக் கூறி’ என்பது பொருளல்ல!

தொல்காப்பியர் காலத்துத் தமிழ்ச் சொற்கள் பல பொருள் மாறி இன்று வழங்குகின்றன என்பதற்கு இந்த இடம் ஒரு சான்று!

‘பதில் என்ற சொல்லே தொல்காப்பியத்தில் வரவில்லை!

‘எதிர்’ என்ற சொல் பல இடங்களில் தொல்காப்பியத்தில் வருகிறது; ஆனால், எல்லா இடங்களிலும் பதில் என்ற பொருள்தான் இருக்கிறதா என்றால் இல்லை ! ‘முன்னே’ , ‘பொருந்துகின்ற’, ‘மறுபாடு’, ‘எதிர்காலம்’ ,‘எதிர்ப்படுதல்’ என்ற பொருள்களில்தான் வருகின்றன! ஓரிரு இடங்களில்தான் ‘எதிர்’ என்ற சொல் தொல்காப்பியத்தில் ‘பதில்’ என்ற பொருளில் வருகிறது!

மேல் நூற்பாவைப் படித்ததும் , “தொல்காப்பியத்தை இலக்கணத்திற்காகப் படிப்பதா? இலக்கியத்திற்காகப் படிப்பதா?” என்ற வியப்பு ஏற்படுகிறதல்லவா?
* * *.
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (23)

Post by Dr.S.Soundarapandian on Wed Jan 30, 2013 8:26 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (23)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

ஒருவர் உள்ளங்கையில் ஒரே ஒரு கடுகை வைத்துக்கொண்டு ,“கடுகுதானே இது ?” என்கிறார்!

இன்னொருவர் ஒரு மூட்டைக் கடுகை வாங்கிவிட்டுக் “கடுகு வாங்கிவந்தேன்” என்கிறார்!

முதல் தொடரில், ஒரே ஒரு கடுகு ! அதற்கும் ஒருமையில்தான் ‘கடுகு’ என்ற சொல் வந்தது !

இரண்டாம் தொடரில் ஒரு மூட்டைக் கடுகு ! அதற்கும் ஒருமையில்தான் ‘கடுகு’தானா?

ஒருமை , பன்மை என்ற கணக்கு இல்லையா?

தொல்காப்யத்தில் ஒருமை, பன்மை வேறுபாடு இல்லாமல் கூறுவதற்கு விதி இருக்கிறதா?

உள்ளது! :-

“ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி
பன்மைக்கு ஆகும் இடனுமா ருண்டே” (எச்சவியல் 65)

இந்த விதிப்படியேதான் மேல் ‘கடுகு’த் தொடர்கள் அமைந்தன !

கீழ்வரும் தொடர்களைப் பாருங்கள் :-

1. இன்றைய மாணவன் எங்கே போகிறான்?

2. பெண்ணுக்கு இன்று என்ன தேவை?

3. மீனவன் இன்று அல்லாடுகிறான் !

-இவற்றில் எல்லாம் ஒருமைச் சொற்கள் , பன்மைப் பொருளைக் குறித்தன எனில் , இது நாம் மேலே கண்ட தொல்காப்பிய விதிக்கு உட்பட்டதுதான் என அறிகிறோம்!

‘இடனுமா ருண்டே’ – என்ற தொல்காப்பிய ஆட்சி வந்ததல்லவா? இதிலுள்ள ‘இடன்’ என்ற சொல்லைக் கவனித்தீர்களா?


‘இடன்’ என்பதா? ‘இடம்’ என்பதா?

இரண்டுமே சரிதான் !


‘இடன்’ – பழைய வழக்கு ; ‘இடம்’ – புதிய வழக்கு ; பொருள் ஒன்றுதான்!

‘இடம்பட வீடெடேல்’- என்ற மொழி , ‘இடம்’ என்ற சொல் செல்வாக்குப் பெற்றபின் வரையப் பெற்றதே !

‘இடன் - இடம் ’அமைப்பில், ‘கடன் – கடம் ’ என்ற சொற்களும் வந்துவிட்டன !

‘கடம்’ என்ற பிந்தைய வழக்கிலிருந்தே, ‘கடமை’ ,‘கடப்பாடு’ போன்ற சொற்கள் எழுந்தன!

பழைய வழக்கு அருகவே , புதிய வழக்கிலிருந்து காலத்திற்கு ஏற்பப் புதுச் சொற்கள் கிளைக்கின்றன!

* * *.
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (24)

Post by Dr.S.Soundarapandian on Thu Jan 31, 2013 10:36 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (24)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“உய்த்துணர்வு இன்றித் தலைவரு பொருண்மையின்
மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும்”


- இது தொல்காப்பியம் !

ஒருவர் ஒரு செய்யுளை எழுதினால் ,“ இவர் என்ன கூறவருகிறார் ?” என்று படித்தவர் குழம்பக்கூடாது!

கூறவருவது பளிச்செனத் தெரிய வேண்டும்! ;கூறவந்த பொருள்தான் ‘தலைவரு பொருண்மை’ ! ‘ஆய்ந்து கண்டுபிடிக்க வேண்டிய நிலைக்குப் பாட்டு எழுதக் கூடாது’ என்கிறார் தொல்காப்பியர் !

இது முதலாவது !

இரண்டாவது ,‘மெய்ப்படச்’ செய்யுளை முடிக்கவேண்டும் !

மெய்ப்பட என்றால் ?

இளம்பூரணர் விளக்குகிறார் :-

“ செய்யுள் செய்வார் மெய்ப்பாடு தோன்றச் செய்தல் வேண்டும்!” (செய்.196இளம்.உரை)

அஃதாவது , மெய்ப்பட = மெய்ப்பாடு தோன்ற

‘மெய்ப்பாடு தோன்ற’ என்றால்?

செய்யுளைப் படித்ததும் ஒரு மெய்ப்பாடு – உணர்ச்சி – நம்மிடம் கொப்பளிக்க வேண்டும் !

அஃதாவது , சீற்றத்திற்குரிய பொருளை மையமாக வைத்துப் பாட்டு எழுதினால் , படிக்கும் நம்மிடம் சீற்றம் எழவேண்டும் !

நகைச்சுவைபடச் செய்யுள் எழுதினால் , அதைப் படித்தவர் குறைந்தது ஒரு புன்முறுவலாவது பூக்கவேண்டும்!

இதுவே ‘மெய்ப்பாடு தோன்றல்’!

“எல்லை நீத்த உலகங்கள் யாவையும் என் சொல்லினால் சுடுவேன் !” – என்று சீதை சீறியதாகக் கம்பர் பாடினாரே , அப்போது , சீதையின் மனநிலை நம்முள் இறங்குகிறதா இல்லையா ? இறங்குகிறது என்றால் ,நம்மிடம் மெய்ப்பாடு தோன்றுகிறது என்பது பொருள்! அப்படித்தான் மெய்ப்பாடு தோன்றச் (‘மெய்ப்பட’) செய்யுள் எழுதவேண்டும் என்பதே தொல்காப்பியர் பாடம் !

தொல்காப்பியர் ,‘ மெய்ப்படச் செய்யுளை எழுதவேண்டும் ’என்றாரல்லவா? இதுவே மேனாட்டாரின் இலக்கியத் திறனாய்வுக்கு (Literary criticism) முன்னோடி!

அஃதாவது , ஓர் இலக்கியம் எப்படி இருக்கவேண்டும் என்பதைக் கி.மு. ஆயிரத்திலேயே தொல்காப்பியர் வரையறுத்துவிட்டார் ; அதனை விரித்து ஆங்கிலேயர் நூல் எழுத , அதனை வாங்கி நாம் பாடமாக வைத்துவிட்டோம்!

* * *.
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (25)

Post by Dr.S.Soundarapandian on Fri Feb 01, 2013 10:16 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (25)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின்
அங்குஅதன் முதல்வன் கிழவ னாகும்” (களவியல் 49)

-இதில் வரும் ‘அம்பல்’ என்பது வேறொன்றுமில்லை ! “தெரியுமா சேதி? கோடி வீட்டுப் பையனுக்கும் இந்த லதாவுக்கும் தொடர்பாமே?” – என்று ‘குசுகுசு’ என்று சத்தம் வெளியே வராமல் காதோடு காதாக முணுமுணுக்கிறார்களல்லவா அதுதான் ‘அம்பல்’!

‘அலர்’ என்பது?

‘அலர்’ என்பது வெளிப்படையாக ஆங்காங்கே பலர், ஒருவன்-ஒருத்தியின் காதல் பற்றிப் பேசுதல்!

தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே தமிழகத்தில் இப் பழக்கம் இருந்துவருகிறது !

முதலில் அம்பலாக உருவாகும் பேச்சுப் பின்னர் அலராக மாறும் !

‘அம்பல்’ தோன்றாது ‘அலர்’ கிளம்பாது ! எப்படிச் செடியிலிருந்து மரம் உண்டாகுமோ அதுபோல அம்பலிலிருந்தே அலர் உண்டாகும் ! தொல்காப்பியர் நூற்பாவைப் பாருங்கள்! இச் சொற்களை அடுத்தடுத்து இதே வரிசையில் எழுதியிருக்கிறார் அவர் !

தொல்காப்பியர் கூறிய முதல் நுட்பம் இது !

காதலர் இருவரிடையே எழுந்த காதல் அலராலும் அம்பலாலும் வெளிப்படுகிறதல்லவா ? அதற்கு மூலக் காரணம் காதலன்தான் என்று தொல்காப்பியர் கூறுகிறார்!
கிழவன் – காதலன்.

தொல்காப்பியர் கூறிய இரண்டாம் நுட்பம் இது !

அஃதாவது , காதலன் தன் காதலியைப் பார்க்கப் ,பிறருக்குச் சந்தேகம் தட்டும் இடத்தில் நிற்பது , காதலியின் தம்பிக்கு மிட்டாய் வாங்கித்தருவது, முதலில் வாரத்திற்கு ஒருநாள்
காதலியைப் பார்க்க வருபவன் பிறகு ஒருநாளைக்கு இரண்டுமுறை மூன்றுமுறை என்று வரத்தொடங்குதல் முதலிய அவனது செயல்களால் அவர்தம் காதல் ஊரார்க்குத் தெரிந்துவிடும்!

ஏன்? காதல் வெளிப்படுவதற்குக் காதலி காரணமாக இருக்கக் கூடாதா?

இதற்கு இளம்பூரணர் விடை கூறுகிறார் !

ஆண்மீது சந்தேகம் கொள்ளுமளவுக்குப் பெண்மீது எடுத்த எடுப்பிலேயே சமுதாயம் சந்தேகம் கொள்ளாது !

இதுதான் இளம்பூரணர் விளக்கம்!

தொல்காப்பியர் ,மேலே பார்த்தவாறு,நுட்பமாகப் பாடுவதற்கும் இளம்பூரணர் அதைவிட நுணுக்கமாக உரை எழுதுவதற்கும் என்ன காரணம் ?

மக்களுக்கு அறிவு ஊட்டுவதுதான் ! மக்கள் எப்படி முறையாக வாழவேண்டும் என்று அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள்! வாழ்க்கைப் பாடம் கற்றுத்தருவதற்காகவே மனிதர்களிடையே நடக்கும் ஒவ்வொரு அசைவையும் தொல்காப்பியர் பாடினார் என நாம் அறிதல் வேண்டும்!

இறுதியாகத், தொல்காப்பியர் பயன்படுத்திய ‘முதல்வன்’ என்ற சொல் பற்றிச் சிறிது காணலாம்.

நூற்பாவில் , முதல்வன் = மூலக் காரணன்

இன்று ‘முதல்வன்’ என்றால் ‘முதலமைச்சர்’ , ‘முதல் ஆள் (first man)’, ‘முதன்மையானவன் (chief or principal person)’ ஆகியோரையே குறிக்கும் ; ஆனால் தொல்காப்பியர் காலத்தில் ‘மூலக் காரணன்’ என்ற பொருள் இருந்தது ! இது தொல்காப்பியத்தின் தொன்மையைக் காட்டும்!

‘முழுமுதல் கடவுள்’ என்பதில் , ‘முதல்’என்பதற்கு ‘மூலக் காரணன்’என்ற பொருள் இருப்பதைக் காணலாம் ! இத் தொடரும் மிகப் பழைய தொடர் என்பது நமது இந்த ஆய்வால் தெளிவாகிறதல்லவா?* * *.
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (26)

Post by Dr.S.Soundarapandian on Sat Feb 02, 2013 5:36 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (26)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“இசைதிரிந்து இசைப்பினும் இயையுமன் பொருளே
அசைதிரிந்து இயலா என்மனார் புலவர்” (பொருளியல் 1)

-இது தொல்காபியரின் குறிப்பு !

ஒரு பாடலில் எழுவாய் ,பயனிலை, செயப்படுபொருள் முறையானது முன்பின்னாக இடம் மாறி வரலாம்! எனினும் மொத்தப் பொருளில் மாற்றம் வராது ! ஆனால் பாடலில் வரும் சொற்கள் பாட்டிற்குரிய செறிவோடு வரவேண்டும் ! இல்லையெனில் பாடல் , உரைநடையாகிவிடும் !

-இதுதான் நூற்பாவின் திரள்பொருள் !

இசைதல் – சேருதல்

ஒரு சொல் அடுத்த சொல்லோடு சேருதல், இசைதல்!

உரைநடையில் இச் சேர்க்கை கட்டாயம் !

‘குமணன் நேற்று வந்தான் ’ – இசை திரியவில்லை ;ஆனால் பாடலுக்குரிய அசை திரிந்துள்ளது ! அஃதாவது , அசைச் செறிவு இல்லை ! இதனால் இஃது உரைநடை .

என்ன செய்யவேண்டும் ?

‘ வந்தானே குமணன் நேற்று ’- இசை திரிந்துவிட்டது ! சொற்கள் இடம் மாறிவிட்டன !ஆனால் அசை திரியவில்லை ; பாடலுக்குரிய அசை இறுக்கம் வந்துவிட்டது ! பொருளிலும் மாற்றம் இல்லை .இதனால் இது பாடல் !

‘சிலர் பிழைத்தனர் , விழுந்தனர் பலர் ’ –இசை திரிந்துள்ளது ;உரைநடை இலக்கணம் இல்லை ! காரண காரியத் தொடர்பு இல்லை ! எனவே இஃது இலக்கணமுள்ள உரைநடை இல்லை . அசையும் திரிந்துள்ளது; பாடலுக்குரிய அசை இறுக்கம் இல்லை ;எனவே இது பாடலும் இல்லை !

‘சிலரே பிழைத்தனர் , விழுந்தனர் பலரே !’ – பாடலுக்குரிய அசைகள் வந்து சேர்ந்துவிட்டன ! ‘அசைநிலை’ திரியவில்லை ! எனவே ,இது பாடல் அடியாயிற்று ! முதற் சொல்லே ‘சிலர்’ என்று எவ்விதக் காரண காரியத் தொடர்பும் இல்லாமல் வந்திருந்தாலும் (இசைநிலை திரிந்திருந்தாலும்), அடியின் மொத்தப் பொருள் இனிதே விளங்குகிறது !

பாட்டுக்கும் உரைநடைக்கும் உள்ள வேறுபாட்டைச் சவையாக உணர்த்திவிட்டார் தொல்காப்பியர் !

பொருளியலின் முதல் நூற்பாவில் ‘அசை’, ‘இசை’, ‘பொருள்’ பற்றிச் சிறிது உரைத்துவிட்டு மேலே செல்லலாம் என்ற தொல்காப்பியர் திட்டம் நமக்கு விளங்குகிறது !

......................................
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (27)

Post by Dr.S.Soundarapandian on Sun Feb 03, 2013 9:01 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (27)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“ வாரா மரபின வரக்கூ றுதலும்
என்னா மரபின எனக்கூ றுதலும்
அன்னவை எல்லாம் அவற்றவற்று இயலான்
இன்ன என்னும் குறிப்புரை ஆகும்” (எச்சவியல் 25)

-இதன் பொருளைப் பார்ப்போம் !

‘வாரா மரபின வரக்கூ றுதல்’ = நகர்ந்து வராத பொருட்களை நகர்ந்து வருவதுபோலப் பாவித்துக் கூறுதல் !

“தேங்காய் ஐந்து ரூபாய்க்கு வருமா?” – கேட்கிறோம் ! உடனே , “தேங்காய் நடந்து வருமா?” என்று கேட்கக் டாது ! தொடரின் பொருள்தான் கேட்போனுக்கும் விற்போனுக்கும் தெரிகிறதே?

‘என்னா மரபின எனக்கூ றுதல்’ = பேசாத பொருள் பேசுவதாகப் பாவித்துக் கூறுதல் !

‘இந்த மருந்து காய்ச்சலைக் கேட்கும் ’ – சித்த மருத்துவர் சொல்கிறார் ;உடனே , “மருந்துக்கு வாய் உள்ளதா?” என்று கேட்கக் கூடாது ! மருத்துவர் கூறுவது மக்களுக்குப் புரிந்ததுதானே?

எதனால் மக்களுக்கு மேலே பார்த்த தொடர்கள் குழப்பம் தராது விளங்குகின்றன?

தொல்காப்பியர் விடை கூறுகிறார் – ‘அவ்வவற்று இயலான்’!

இயலான் = மரபான் = மரபால் !

தொடர் மரபுகள் தொன்றுதொட்டு வந்தவை ! தொல்காப்பியருக்கு முன்பே இருந்தவை ! அதனை யாரும் மாற்ற முடியாது ! அரசாணை போட்டு ,“ நாளையிலிருந்து இப்படித்தான் பேசவேண்டும்” என்று உத்தரவிடமுடியாது !

மரபுதான் மொழிக்கு வளமே !

தமிழ் மொழி மரபைப் போற்றுவதில் தொல்காப்பியருக்கு இருந்த அக்கறை நம்மை வியக்கவைக்கிறது !
......................................
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (28)

Post by Dr.S.Soundarapandian on Mon Feb 04, 2013 7:39 pmதொடத் தொடத் தொல்காப்பியம் (28)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்தல்
நன்னயம் உரைத்தல் நகைநனி உறாஅ
அந்நிலை அறிதல் மெலிவு விளக்குறுத்தல்
தன்னிலை உரைத்தல் தெளிவகப் படுத்தல்என்று
இன்னவை நிகழும் என்மனார் புலவர் ” (களவியல் 10)

-இதன் சொற்காட்சி வருமாறு ! :-

காதலனும் காதலியும் காதல் வலையில் வீழ்ந்துவிட்டனர் !

அவர்கள் இன்னும் உடலுறவில் ஈடுபடவில்லை !

அதற்குமுன் காதலன் என்ன செய்வான் என்று உளவியல் நுட்பம் (psychological nuance) காட்டுகிறார் தொல்காப்பியர் !

இக்காலச் சூழலில் கீழ்வருமாறு இதனை விளக்கலாம் !

காதலன் முதலில் காதலியை ‘முன்னிலைப் படுத்து’வான்! “நேற்றுப் போனில் பேசும்போது ......நல்ல சொல் ....lofty … என்றாயே என்ன அது ?” – இதுதான் காதலியை ‘முன்னிலைப் படுத்துதல்’ !

இதன்மூலம் தன் சொல்லை அவள் கவனித்துக் கேட்குமாறு செய்கிறான் காதலன் !

பிறகு அவளைப் புகழ ஆரம்பிப்பான் !இதுவே ‘நன்னயம் உரைத்தல்’!

“காலணி வாங்குவதில் உன்னை மிஞ்ச முடியாது! என்னா கச்சிதம் !” – இப்படிக் கூறியதும் அவள் உதட்டில் ஒரு புன்னகை வரும் ! அது அவர்களை நெருக்கமாக்கும் ! இதுவே ‘நகைநனி உறாஅ அந்நிலை அறிதல்’ !

பின் , “நான் இரண்டு நாட்களாகச் சாப்பிடவே இல்லை; சாப்பாடு இறங்கவே இல்லை !” –என்று தன் உடல் வாட்டத்தை உரைப்பான் அவன் ! தன்மீது இரக்கம் வருமாறு செய்ய அவன் கையாளும் உத்தி அது !இவையே ‘மெலிவு விளக்குறுத்தல், தன்னிலை உரைத்தல், தெளிவகப் படுத்தல்’ !

இவ்வாறு காதலியிடம் தான் கொண்டுள்ள அன்பையும் உறுதிப்பாட்டையும் தெளிவுபடுத்துவான் அவன்!

இதுதான் தொல்காப்பியர் வரைந்த ஓவியம் !

எந்தக் குறிப்பிட்ட கட்டத்தில் காதலியிடமிருந்து உதட்டுப் புன்னகை வரும் என்ற நுணுக்கம்கூடத் தொல்காப்பியத்தில் உள்ளதே?

அதிசயமான நூல் தொல்காப்பியம் !
......................................
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (29)

Post by Dr.S.Soundarapandian on Tue Feb 05, 2013 9:01 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (29)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப” (புறத்திணையியல் 19)

-வாகைத் திணைக்கு விளக்கமான நூற்பா இது !

போர் வெற்றியை மட்டும் வாகைத் திணையில் தொல்காப்பியர் பாடியுள்ளதாகப் பலரும் நினைக்கின்றனர் !

தவறு அது !

வாழ்க்கை வெற்றியையும் ‘வாகைத்திணை’யில் தொல்காப்பியர் பாடியுள்ளார் !

மேலைச் சூத்திரம் , போர் வெற்றிக்கும் வாழ்க்கை வெற்றிக்கும் பொதுவானதுதான் !

“அப்பழுக்கற்ற கொள்கைகளை உடையவர்கள் தத்தம் துறைகளில் ,மற்றவர்களைவிட முன்னேற்றம் காட்டித், தம்மை உயர்த்துதல் வாகையாகும் !” –இதுவே மேலே வந்த சூத்திரத்தின் பொருளாகும் !

தாவில் கொள்கை = குற்றமற்ற கோட்பாடு

தாவில் = குற்றமற்ற

தாவிலை = குற்றமில்லை ; இதுவே மருவித் ‘தேவலை’ ஆனது என்று எழுதியுள்ளார்கள் !

கூற்றை = பிரிவை ; துறையை.

’தோழி கூற்று’ , ‘தலைவி கூற்று’ என்ற தொகைச் சொற்களில் வரும் ‘கூற்று’ வேறு ! அது ‘கூறுதல்’ என்ற பொருளில் வருவது !


கூறுவதால் அது ‘கூற்று’! ; காரணப் பெயர்ச் சொல் .

மேல் நூற்பாவில் வந்த ‘கூற்றை’என்பது ,
கூறு + ஐ = கூற்றை என ஆகும் .

இங்கே ‘கூறு’ , ஏவல் வினை அல்ல ; ‘பிரிவு’ என்ற பொருளில் வந்த பெயர்ச்சொல் . கத்தரிக்காயைக் கூறுகட்டி விற்பார்களே , அந்தக் ‘கூறு’ !

போரில் அடைந்த வெற்றியின்போது வாகைப் பூவைச் சூடியதால் ,நாளடைவில் எத்துறையானாலும் ‘வெற்றி பெற்றான்’ என்பதை ‘வாகை சூடினான்’ எனக் கூறும் மரபு ஏற்பட்டது !

நீங்கள் அவ்வளவாக விரும்பாத துறையில் பணி புரிபவரா? கவலையை விடுங்கள் ! அதே துறையில் மற்றவர்களைவிட முன்னேறி , ‘வாகை’ சூடுங்கள் ! தொல்காப்பியர்தான் கூறிவிட்டாரே ? நீங்கள் கேட்கமாட்டேன் என்றால் , அதற்கு நான் என்ன செய்வது ?
......................................

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (30)

Post by Dr.S.Soundarapandian on Wed Feb 06, 2013 9:54 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (30)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

தொல்காப்பியர் ,செய்யுளியலை ,‘மாத்திரை’ என்ற சொல்லால் தொடங்கியுள்ளார் ; இயல் முடிவுச் சூத்திரத்தைச் ‘செய்யுள்’ என்று தொடங்கியுள்ளார் அவர்!

அஃதாவது , ‘மாத்திரையில்’ தொடங்கிச் ‘செய்யுள்’வரை செய்யுளியலை விரிவாகப் பாடியுள்ளார் அவர் !

அவ்வியலில் ஒரு நூற்பா :-

“ மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே ” (செய்யுளியல் 91)

மொழி = சொல் ; தொல்காப்பியத்தில் ‘மொழி’ , ‘சொல்’என்ற பொருளில் 55க்கு மேற்பட்ட நூற்பாக்களில் ஆளப்பட்டுள்ளது !

பழமொழி = பழஞ்சொல் ; இங்கும் ‘மொழி’ , ‘சொல்’ என்ற பொருளில் வந்துள்ளதைக் காணலாம் !

மேல் நூற்பாவில் தொல்காப்பியர் ,‘சொல்லாலும் பொருளாலும் முரணி வந்தால் அது முரண்தொடை’ என்கிறார் !

சொல்லால் முரணுவன :-

1. நீளம் × குட்டை
2. குண்டு × ஒல்லி
3.சிறிய × பெரிய
4. உண்டு × இல்லை
5. வட்டம் × சதுரம்
6. உயர்வு × தாழ்வு
7. காய் × பழம்
8. ஓடி × படுத்து
9. கருமை × வெண்மை
10. குவிந்தது × விரிந்தது


பொருளால் முரணுவன :-

1. மான் × புலி
2. மீன் × கொக்கு
3. யானை × பூனை
4. மலை × மடு
5.மனிதன் × மாடு
6. பாம்பு × கருடன்
7. பொன் × இரும்பு
8. வீடு × காடு
9. நீர் × தீ
10. கல் × மண்

இப்போது முரண்தொடை நமக்குத் தெளிவனாலும் ,இதனை எவ்வாறு அழகாகப் பயன்படுத்துவது என்பதற்குச் சங்க இலக்கியமும் தொல்காப்பிய உரைகளும் வழிகாட்டுகின்றன!

‘கருங்கால் வெண்குருகு’ - இதில் எவ்வளவு அழகாகச் சொல் முரண் விழுந்துள்ளது பார்த்தீர்களா?

‘முரண்தொடை’ செய்யுளுக்கு மட்டும்தானா ?

அல்ல ! வழக்கில் எவ்வளவோ முரண்தொடை நயம் உள்ளன !

‘ஏற்றத் தாழ்வு’ , ‘நல்லது கெட்டது’, ‘மேடு பள்ளம்’ , ‘இன்ப துன்பம்’ – இவற்றில் சொல் முரண் வந்துள்ளதைக் காணலாம் !

‘முரண்’ என்பதைத் தொடை நயத்திற்காகப் பார்ப்பது ஒருபுறம் இருக்க,வாழ்க்கையோடு இயைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கும் !

அது தனித் தலைப்பு !

.............................
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (31)

Post by Dr.S.Soundarapandian on Thu Feb 07, 2013 10:04 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (31)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“அவன்சோர்பு காத்தல் கடன்எனப் படுதலின்
மகன்தாய் உயர்பும் தன்உயர் பாகும்
செல்வன் பணிமொழி இயல்பாக லான” (கற்பியல் 33)

-இந் நூற்பாச் சொற்களுக்கு , இளம்பூரணர் உரைப்படி , இவையே பொருள் :-

அவன் சோர்பு = கணவனின் குறைகள்
கடன் = கடமை
மகன் தாய் = காமக் கிழத்தி
செல்வன் = தலைவன் (கணவன்)
பணிமொழி = கணவன் இடும் ஆணைகள்
இயல்பாக லான = முறை மனைவியும் காமக் கிழத்தியும் இருவருமே தலைவன் சொல்லைத் தட்டாமலிருப்பது இயல்பாதலால் .

அஃதாவது , முறை மனைவியானவள் , கணவனின் காமக் கிழத்தியை இழிவுபடுத்த நினைக்கமாட்டாள் ! – இதுதான் சுருக்கம் !

தலைவனின் காமத்திற்குத் தீனி போட அமைந்தவளே ‘காமக் கிழத்தி’! ஆனால் இவள் பரத்தை அல்லள் ! காமக் கிழத்தி வேறு , பரத்தை வேறு! பரத்தைக்குப் பலருடன் ‘தொடர்பு’ இருக்கும் ;காமக் கிழத்திக்கு ஒருவனுடன் மட்டும்தான் !

காமக் கிழத்திக்குச் சரியான எடுத்துக் காட்டு மாதவி !

தலைவனுக்கும் முறை மனைவிக்கும் பிறந்த மகனுக்கு, ஒரு வகையில் தாயாகவே காமக்கிழத்தி நடந்துகொண்டுள்ளாள் அந்தக் காலத்தில் ! இதற்குச் சான்று இத் தொல்காப்பிய நூற்பாவே !

சரி ! கணவனுக்கு ஒரு காமக் கிழத்தி இருக்கிறாள் என்று தெரிந்தும் மனைவி ஏன் பேசாது இருக்கிறாள் ?

‘அவன் சோர்பு காத்தல் கடன் எனப்படுதலின்’ – என்பது தொல்காப்பியர் விடை !

காமக்கிழத்தியை இழிவுபடுத்தினால் அது தன் கணவை இழிவுபடுத்தியது போல ஆகுமாம் !

என்னதான் கணவன் மீது குறைகள் இருந்தாலும் , அவனை விட்டுக்கொடுக்காதவள் மனைவி ! கணவனை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பது மனைவியின் கடமையாகப் பழந்தமிழகத்தில் கருதப்பட்டது ! சமுதாயத்தின் முன் கணவனைத் தாழ்வானவனாக நிறுத்தக் கூடாது என்பது மனைவியின் கோட்பாடு !

இஃது ஏதோ நடந்து முடிந்துபோன வரலாறு என எண்ணவேண்டாம் ! இன்றும் பல வீடுகளில் மனைவி இந்தக் ‘கடமையை’ச் செய்துகொண்டுதான் இருக்கிறாள் !

இன்றுகூடக் கள்ள நோட்டு அடித்தவனாக இருந்தாலும் , பல கொலைகள் செய்தவனாக இருந்தாலும் மனைவியானவள் கணவனை ஆதரிக்கத்தானே செய்கிறாள் ? சிறையிலிருந்து வந்த கணவனை வீட்டில் அமர்த்திச் சோறுபோட்டுச் , சாப்பிடும்போது விசிறிவிடுகிறாளே மனைவி இன்றும் ?

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்த இப்பழக்கம் இன்றும் தொடர்வதைத்தானே இது காட்டுகிறது?

இது சரியா தவறா என்பது வேறு ஆய்வு !

.............................
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (32)

Post by Dr.S.Soundarapandian on Sat Feb 09, 2013 9:41 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (32)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“நிலம்தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிபுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்” (மரபியல் 90)

-பன்னெடுங் காலத்திற்கு முன்பே உலகத்துப் பொருட்களை அறிவியல் முறைப்படி பகுத்துக் கண்டவர்கள் தமிழர்கள் என்பதற்கு இந்த நூற்பா சான்று !

அஃதாவது, “உலகத்திலுள்ள எதை எடுங்கள் !அவற்றைப் பிரித்து ஆராயுங்கள் ! உங்களுக்கு மிஞ்சுவது ஐந்துதான் ! நிலம் ,தீ, நீர் , காற்று ,ஆகாயம் ஆகிய ஐந்து பொருட்களின் சேர்க்கையாகத்தான் எந்தப் பொருளும் இருக்கும் ! அப்படிப்பட்ட தன்மைதான் மனிதர்கள் உட்பட எல்லாப் பொருட்களுக்கும் !அப்படி உருவான பொருட்களைத்தான் உயர்திணை , அஃறிணை , ஆண்பால் , பெண்பால் , பலர்பால் , ஒன்றன்பால் , பலவின்பால் என்றெல்லாம் பிரித்துள்ளோம் ! அவை அனைத்தையுமே ஒரு மரபுப்படிப் பெயர் கூறிக், குழப்பம் நேராதபடி வழங்கவேண்டும் !” – என்பதே தொல்காப்பியர் கருத்தாகும் !

விசும்பு = ஆகாயம் ; வெட்ட வெளி (space)

“சரி ! அனைத்துமே இந்த ஐந்துக்குள் அடங்கும் என்கிறீர்களே , இதோ ஒரு பிளேட் இட்லி இருக்கிறது , இதற்குள் எங்கே ஐந்து உள்ளன ?” – கேட்கிறீர்களா?

சொல்கிறேன் !

இட்டலி எங்கிருந்து வந்தது ?
மாவிலிருந்து !

மாவு எங்கிருந்து வந்தது ?

அரிசியிலிருந்து !

அரிசி ?

அரிசி , மண்ணில் விளைந்ததுதானே !

வித்து மண்ணில் (நிலத்தில்) நீருடன் சேர்ந்து நாற்றை உருவாக்க , அது சூரிய வெப்பம் ( தீ) முதலியவற்றின் சேர்க்கையால் சத்துக்களைப் பெற்று வளர்ந்து ,காற்று (வளி)மூலமாக மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்தித் ,தேவையான இடைவெளிகளுடன் (ஆகாயம்) உள் அணுக்களை உருவாக்கிப் பின் நெல் மணியை உருவாக்குகிறது!

இப்போது தொல்காப்பியர் கூறிய ஐந்து ஆதாரப் பொருட்களும் வந்துவிட்டனவா இல்லையா ?

“ சரி ! இரும்பு ? அது தனி உலோகம்தானே ? அது எப்படி ஐந்தின் சேர்க்கை ?” – கேட்கலாம் !

இரும்புத் தாது நிலத்திலிருந்து வருகிறது ; உருக்குவதற்குத் தீ வருகிறது ;குளிர்விக்க நீரும் , காற்றும் (வளியும்) வருகின்றன ; இரும்பு அணுக்களுக்குள் இடைவெளி (ஆகாயம்) அமைகிறது !

மூலங்கள் (Elements) எல்லாம் சேர்ந்ததுதான் நிலம் ! மூலங்கள் சேராது எந்தப் பொருளும் உருவாகாது ! ‘நிலம்’ என்பதை இப்படித்தான் பார்க்கவேண்டும் ! ஒவ்வொரு பொருளிலும் புல் பூண்டு உள்ள மண்ணைத் தேடிக்கொண்டிருக்கக் கூடாது !

இதனைப் போலவே ‘வளி’ என்பதையும் காற்று மட்டும்தான் என்பதுபோல எடுத்துக்கொள்ளக் கூடாது ! ‘இயங்கு சக்தி ’ (Motional force)என்று எடுத்துக்கொள்ள வேண்டும் !

இப்படிப் பார்த்தால்தான் கண்ணாடி , பிளாஸ்டிக் போன்ற பொருட்களும் தொல்காப்பியர் கூறிய ஐந்து பொருட்களால் ஆனவையே என்பது நமக்கு விளங்கும் !

ஐந்து ! – சரிதானா ?

.............................
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (33)

Post by Dr.S.Soundarapandian on Sun Feb 10, 2013 1:09 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (33)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
வெறுப்ப வந்த வெகுளி நான்கே ” (மெய்ப்பாட்டியல் 10)

- ‘வெகுளி’ எனும் மெய்ப்பாடு இந்த நான்கு காரணங்களால் தோன்றும் என்கிறார் தொல்காப்பியர் !

வெகுளி = சினம் ; சீற்றம்

என்னென்ன நான்கு காரணங்கள் ?

1. உறுப்பறை - கை , கால் முதலிய உறுப்புகளுக்கு ஊறு விளைவித்தல் .

2. குடிகோள் – குடிகளை வருத்தல் .

3. அலை – தடியால் அடித்தல் .

4. கொலை – கொல்லுதல் .

1. உறுப்பறை = உறுப்பு + அறை

அறை = அறு + ஐ ; அறு – முதனிலைத் தொழிற்பெயர் ; ஐ – உடைமைப் பொருள் விகுதி .

மூக்கு அறுபட்டவனை ‘மூக்கறையன்’ என்பதுண்டு .

2. குடிகோள் – ஒருவனது குடிக்குக் கேடு விளைவித்தல்.

பேராசிரியர் என்ற உரையாசிரியர் இதனை விளக்குகிறார் –“தாரமுஞ் சுற்றமும் குடிப்பிறப்பும் முதலாயவற்றுக்கட் கேடு சூழ்தல்”

தாரம் – மனைவி ; சுற்றம் –உறவினர்.

‘குடி ’ என்ற குழுக் கட்டுக்கோப்பு இன்று மெதுவாக மறைந்து வருகிறது;‘உலகமய மாக்கல் (globalisation)’ இதற்குக் காரணம் ; தவிர்க்க முடியாதது !

குடிக்குக் ‘கோள்’ செய்வது ‘குடி கோள்’ .

‘கோள்’ – என்ற அடிச் சொல்லிற்கு , ‘ஒழுங்கின்மை’ ,‘சரியின்மை’, ‘சீர்கேடு’ என்றெல்லாம் பொருள் உண்டு !

‘அவள் வயிற்றில் ஏதோ கோளாறு’- சொல்கிறார்கள் அல்லவா ? ‘கோள்’இங்கு அடிச்சொல் .

‘அவன் கோள்மூட்டுகிறான் ’ = அவன் ஏதோ தீங்கை மூட்டுகிறான் .

இவற்றில் வந்த ‘கோள்’தான் தொல்காப்பியரின் ‘குடிகோள்’ என்பதில் வந்துள்ளது !

3.அலை – கழி முதலியன கொண்டு தாக்குதல் ; கையால் நம்மைத் தள்ளி அடிப்பதினும் கோலால் (கழியால்) அடிப்பது மிகுந்த சீற்றத்தைத் தரும் !வெளிப்படையான ,தூக்கலான ‘வெகுளி’மெய்ப்பாடு அப்போதுதான் வெளிவரும் !

4.கொலை – ‘ஒருவனைக் கொன்றால் அவனுக்கு வெகுளி பிறக்கும்’ என்று பொருள் கொள்ள இயலாது ; அவன்தான் இறந்துவிட்டானே? இறந்தவனுக்கு எப்படி வெகுளி பிறக்கும் ?

இதற்கும் பேராசிரியர் உரையையே நாடவேண்டும் - “கொலையென்பது ,அறிவும் புகழும் முதலாயினவற்றைக் கொன்றுரைத்தல்”.

புகழைக் கொன்றால் வெகுளி வருமா ?

இந்தக் கேள்விக்கு ‘Defamation’ பிரிவில் வழக்குத் தொடுக்கிறார்களே,அவர்களைக் கேட்டால் தக்க விடை கூறுவார்கள் !

“சரி ! என்னுடைய சாதிப் பெயரைச் சொல்லி ஒருவன் திட்டிவிட்டான் ! அப்போ எனக்குச் சீற்றம் வராதா ? அதைச் சொன்னாரா தொல்காப்பியர் ?” –வினா !

பேராசிரியர் சொன்ன விளக்கப்படி இது ‘கொலை’யில் அடங்கும் !

இதுவரை நாம் பார்த்த ‘வெகுளி’க்கு நேர் மாறான பொருளும் இச் சொல்லுக்கு இருக்கிறது !

“அந்தப் பெண் சுத்த வெகுளியாக இருக்கிறாள்; அடுத்தவீட்டுப் பையனுடன் சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள் !” – சொல்கிறார்கள் அல்லவா ?

இந்த ‘வெகுளி’க்கு, வெள்ளை மனம் ( plain-hearted) என்பது பொருள் !

வெகுளி – வெ + கு +ளி
கு – எழுத்துப் பேறு ; ‘வெளி’ என்பதே சொல் !

ஏதோ , படிக்கும் உங்களுக்கு வெகுளி வராமல் இருந்தால் சரிதான் !


.............................
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by ச. சந்திரசேகரன் on Sun Feb 10, 2013 6:40 pm

31. மனைவியின் மாண்பு,
32. பஞ்ச பூதம்
33. வெகுளி
மூன்றும் படித்தேன். முக்கனியாய் சுவைத்தன.
மிக்க நன்றி ஐயா.
தொடருங்கள். நாங்கள் பின்தொடர்கிறோம்.
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (34)

Post by Dr.S.Soundarapandian on Tue Feb 12, 2013 8:41 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (34)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

தொல்காப்பியர் , ஆறாம் வேற்றுமை எத்தகையது என்பதை ,

“ஆறா குவதே
அதுஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
தன்னினும் பிறிதினும் இதனது இதுஎனும்
அன்ன கிளவிக் கிழமைத் ததுவே” (வேற்றுமையியல் 18)

-என விளக்குகிறார் .

‘இதனது இது’ என்ற கட்டமைப்பில் (pattern) ஆறாம் வேற்றுமை வரும் என்கிறார் !

அஃதாவது,
‘எனது வீடு ’

ஊரது அமைதி’

- இவைகள் ‘இதனது இது’ என்ற அமைப்பில் ( வாய்பாட்டில்) உள்ளதைக் காணலாம் !

ஏதாவது ஒன்றைக் கூறி , ‘இதனது ’ என்று கூறத் தொடங்கி ‘இது’என்று இன்னொன்றை வைத்து முடிக்கிறோமல்லவா ? அதுவே ‘இதனது இது’!

இதில் இரு வகைகள் :-

1. தற்கிழமை

2.பிறிதின் கிழமை

‘எங்கே ஞாயிறு, திங்கள் கிழமைகள் ?எனக் கேட்காதீர்கள் !

தற்கிழமை – அந்தப் பொருளுக்கு உரியது

பிறிதின் கிழமை – அந்தப் பொருளினும் வேறானது

பாரியது இளமை – தற்கிழமை
பாரியது தேர் – பிறிதின் கிழமை


வீட்டது அகலம் – தற்கிழமை
வீட்டது காவலன் – பிறிதின் கிழமை

செல்வியின் உயரம் –தற்கிழமை
செல்வியின் சங்கிலி – பிறிதின் கிழமை


“சரி ! இப்படி யெல்லாம் அடுக்குகிறீர்களே , இவற்றை ‘இத்தனை’ என்று வரையறுக்கக் கூடாதா ?” – கேள்வி !

தொல்காப்பியர் வரையறுத்துள்ளார் !

அவர் 17 வகைகளுக்குள் பெருமளவுக்கு அடக்கிவிடலாம் என்கிறார் ! :-

1.இயற்கை – ‘மரத்தது பச்சை நிறம்’ (தற்கிழமை)
2. உடைமை – ‘அவளது மெட்டி’ (பிறிதின் கிழமை)
3. முறைமை – ‘ஆட்டது குட்டி’ (பிறிதின் கிழமை)
4. கிழமை (உரிமை) – ‘சோமனது நிலம்’ (பிறிதின் கிழமை)
5. செயற்கை – ‘மண்ணது உருண்டை’ (தற்கிழமை)
6. முதுமை - ‘பேச்சது முதிர்ச்சி’ (தற்கிழமை)
7. வினை – ‘சுந்தராம்பாளது பாட்டு’ (தற்கிழமை)
8. கருவி – ‘எனது கணினி’ (பிறிதின் கிழமை)
9. துணை – ‘ கந்தனது மனைவி’ (பிறிதின் கிழமை)
10 . கலம் – ‘வீட்டது பத்திரம்’ (பிறிதின் கிழமை)
11. முதல் – ‘சாந்தியது ஆடு’ (பிறிதின் கிழமை)
12. ஒருவழி உறுப்பு – ‘ஆட்டது வால்’ (பிறிதின் கிழமை)
13. குழு – ‘மானது கூட்டம்’ (தற்கிழமை)
14. தெரிந்துமொழிச் செய்தி – ‘வள்ளுவரது குறள்’ (பிறிதின் கிழமை)
15. நிலை – ‘குசேலரது வறுமை’ (தற்கிழமை)
16. வாழ்ச்சி - ‘கடலது ஆமை’ (பிறிதின் கிழமை)
17. திரிந்து வேறுபடுவது – கடலையது மாவு (தற்கிழமை)

அப்பாடா ! நமக்கு மூச்சு முட்டுகிறது !

எவ்வளவு நுணுக்கமாகப் பொருட்களையும் அவற்றின் பல்வேறு உறவுகளையும் அலசி ஆராய்ந்துள்ளார் தொல்காப்பியர் பார்த்தீர்களா?

இதன் இரகசியம் என்ன ?

இரகசியம் – தமிழின் தொன்மைதான் !.............................
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by ச. சந்திரசேகரன் on Tue Feb 12, 2013 10:33 pm

34. ஆறாம் வேற்றுமை
என்னது புத்தி - தற்கிழமை
என்னது மூளை - பிறிதின் கிழமை

சரிதானே ஐயா?
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Tue Feb 12, 2013 11:23 pm

ஐயா தொல்காப்பியத்தில் இறை வழிபாடு பற்றி கூறப்பட்டதை எழுதுங்களேன் ?
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (35)

Post by Dr.S.Soundarapandian on Wed Feb 13, 2013 10:27 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (35)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“மன்னாப் பொருளும் அன்ன இயற்றே” (கிளவியாக்கம் 34)

அஃதாவது , இல்லாத பொருளைத் தெரிவிக்கும்போது , ‘உம்’மை சேர்த்துக் கொள்ளவேண்டும் !

‘மன்னா’ –இல்லாத ; ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் .

1. ‘மாட்டைத் தேடினேன் ; எங்கு இல்லை’ ×
‘மாட்டைத் தேடினேன்; எங்கும் இல்லை’ √

2. ‘அறை திறந்துதான் இருந்தது ; யார் வரவில்லை’ ×
‘அறை திறந்துதான் இருந்தது ; யாரும் வரவில்லை’ √

3. ‘திருட்டு நடந்துள்ளது ; ஒருவர் பார்க்கவில்லை’ ×
‘திருட்டு நடந்துள்ளது ; ஒருவரும் பார்க்கவில்லை’ √

மேல் மூன்று எடுத்துக்காட்டுகளிலும் ‘இல்லை’ப் பொருளில் ‘உம்’மை வந்து பொருளைத் தெளிவுபடுத்தல் காணலாம் .

இதே அமைப்பில் ,வேற்றுமை பற்றியும் நம் ஐயத்தைப் போக்க ஒரு நூற்பா வரைந்துள்ளார் தொல்காப்பியர்.

“எதிர்மறுத்து மொழியினும் தத்தம் மரபின்
பொருள்நிலை திரியா வேற்றுமைச் சொல்லே ” (வேற்றுமை மயங்கியல் 46)

அஃதாவது ,

‘மரத்தை அறுத்தான் ’-இரண்டாம் வேற்றுமைத் தொடர்.

‘மரத்தை அறுக்கவில்லை’ –இதுவும் இரண்டாம் வேற்றுமைத் தொடர்தான் !
(அறுப்பதும் அறுக்காததும் அவன்விருப்பம்;
நமக்கு என்ன வந்தது?)

‘வாளால் வெட்டினான்’ – மூன்றாம் வேற்றுமைத் தொடர் .
‘வாளால் வெட்டவில்லை’- இதுவும் மூன்றாம் வேற்றுமைத் தொடர்தான் !

மேலே நாம் பார்த்த இரு நூற்பாக்களிலும் மிக நுட்பமான ஐயங்களைக் கூடத் தொல்கப்பியர் போக்கியுள்ளாரே ,அஃது எப்படி முடிந்தது ?

அதன் பின்னணி என்ன ?

தொல்காப்பியர் மாணவர்களுக்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்தவர்! அதுதான் பின்னணி !
தன் மாணவர்களின் ஐயத்தைப் போக்க முயன்றுள்ளார் தொல்காப்பியர் !

சில ஓலைச் சுவடிகளில் , “இது அண்ணாசாமி உபாத்தியாயர் எழுதியது” என்று எழுதியிருப்பதை நான் படித்திருக்கிறேன் !

நான் சொல்லும் ஓலைச் சுவடியின் காலம் கி.பி. 17,18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது!

ஆனால் தொல்காப்பியரின் கைச்சுவடி கி.மு. 3000க்கும் முற்பட்டது !


அதனுடைய வழிவழிப் படிகளே (copies) இப்போது நம்மிடம் இருக்கின்றன !
…………………
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (33)

Post by Dr.S.Soundarapandian on Wed Feb 13, 2013 10:44 pm

ச. சந்திரசேகரன் ,கிருபானந்தன் பழனிவேலுச்சா ஆகியோர்க்கு நன்றி! ஈகரை நல்ல சமுதாயத்தை வளர்த்துவருகிறது !

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (36)

Post by Dr.S.Soundarapandian on Thu Feb 14, 2013 9:11 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (36)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“வினைவயின் பிரிந்தோன் மீண்டுவரு காலை
இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை
உள்ளம் போல உற்றுழி உதவும்
புள்இயல் கலிமா உடைமை யான” (கற்பியல் 53)

கணவன் வேற்றூர் சென்றான் ; போன வேலை முடிந்தது ; திரும்புகிறான் ! அப்படித் திரும்பும்போது எங்குமே தங்கமாட்டானாம் ! (தவிர்தல் - தங்குதல்)

ஏனாம் ?

அவனது உள்ளம் முழுவதும் எப்போது மனைவியைப் பார்ப்போம் என்ற ஆசை உள்ளதுதான் !

அந்த நேரத்தில் அவனுக்கு உற்ற நண்பனாக அவனை இல்லாளிடத்தே கொண்டு சேர்ப்பது அவனது குதிரை !

அக் குதிரையை வருணிக்க இரண்டு வரிகளைச் செலவிடுகிறார் தொல்காப்பியர் ! :-

“உள்ளம் போல உற்றுழி உதவும்
புள்இயல் கலிமா உடைமை யான” !

அக் குதிரை , ‘சும்மா சிட்டய்ப் பறக்கு’மாம்!

புள் இயல் – பறவை போலப் பறக்கும் இயல்புள்ள அவனது உள்ளம் அவனுக்கு எவ்வாறு உதவுமோ அதைப் போல அக் குதிரையும் உதவுமாம் !

இந்த உவமை நம் சிந்தனைக் குதிரையைத் தட்டி எழுப்புகிறது !

‘காற்று வேகம் மனோ வேகம்’ - என்றொரு சொல் உண்டு !

மனமானது எங்கும் நொடிப் பொழுதில் பறந்து வரும் !

இது நமக்குத் தெரிந்ததுதான் !

ஆனால் , தொல்காப்பியர் இப் பொருளில் கூறியதாகத் தெரியவில்லை !

‘உள்ளம் போல உற்றுழி உதவும் ’ –என்றல்லவா கூறுகிறார் ! ‘உள்ளம் போலப் பறக்கும் ’ என்று கூறவில்லையே ?

ஒரு மனிதன் தொய்ந்துபோகும் போது அவனுக்குப் புத்துயிர் கொடுப்பது அவனது உள்ளம்தான் ! இதைத்தான் தொல்காப்பியர் ‘உற்றுழி உதவுதல்’என்றார் !

ஒரு போர் வீரன் குதிரை மீது அமர்ந்திருந்தான் ! அப்போது எதிரிகளின் பலம் காரணமாக அவன் கால் நடுங்கியதாம் ! அப்போது அவன் என்ன சொன்னான் ? “ஏய் , காலே ! என்ன நடுங்குகிறாய்? நீ நடுங்குவதால் நான் ஒன்றும் பின்வாங்கப் போவதில்லை ! நான் சென்று தொடர்ந்து போரிடத்தான் போகிறேன் !” என்றானாம் !

அவனது உள்ளம்தான் ‘உற்றுழி உதவும்’ உள்ளம் !


…………………
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Page 2 of 28 Previous  1, 2, 3 ... 15 ... 28  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum