ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 T.N.Balasubramanian

பூரானை அடிக்காதீர்கள்!
 T.N.Balasubramanian

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

என் அறிமுகம்
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 
T.N.Balasubramanian
 

Admins Online

தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Page 13 of 28 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 20 ... 28  Next

View previous topic View next topic Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by Dr.S.Soundarapandian on Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம் (239)

Post by Dr.S.Soundarapandian on Sat May 31, 2014 5:49 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (239)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

சென்ற ஆய்வுகளில் நாம் உருபியலைப் பார்த்து முடித்தோம் !

இப்போது அதற்கு அடுத்த இயலான உயிர் மயங்கியலைப் பார்க்கவுள்ளோம் !

‘உயிர் மயங்கியல்’ என்றால் என்ன ?

ஓர் உயிர் இன்னொரு உயிருக்காக மயங்கி நிற்பதா?

அல்ல !

உயிர் எழுத்தை ஈற்றிலே கொண்ட சொற்கள் (அவை பெயர்ச் சொற்களாகவோ , வினையெச்சங்களாகவோ இருக்கலாம் !), பெரும்பாலும் வல்லெழுத்துகளைமுதல் எழுத்தாகக்கொண்ட சொற்களுடன் எப்படிப்  புணரும் என விதிகளைக் கூறுவது ! ‘பெரும்பாலும் வல்லெழுத்துகளை’ என்றதால் , சிறுபான்மை மெல்லெழுத்துகளையும் இடை எழுத்துகளையும் முதலாகக் கொண்ட சொற்களோடு ஏற்படும் புணர்ச்சிகளுக்கும் இந்த இயலில் விதிகள் உள்ளன !

 மயங்குவது – புணர்வது .

முதல் நூற்பா ! :-

“அகர இறுதிப் பெயர்நிலை முன்னர்
 வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றின்
தத்த மொத்த வொற்றிடை மிகுமே”  (உயிர்மயங்.1)

‘அகர இறுதிப் பெயர்நிலை முன்னர்’ -  ‘அ’வை முதல் எழுத்தாகக் கொண்ட பெயர்ச் சொற்கள் முன்பாக ,  

‘வேற்றுமை அல்வழிக் க ச த பத்  தோன்றின்’ – அல்வழிப் புணர்ச்சியில் , வருசொற்கள் க ச த ப  ஆகியவற்றை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வந்தால்,
‘தத்தம் ஒத்த ஒற்றிடை மிகுமே !  ’ -  புணர்ச்சி இடையே வரும் முதல் எழுத்திற்கு இனமான ஒற்று மிகும் !

விள + குறிது = விள குறிது×
விள + குறிது = விளக் குறிது√ (க் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

விள + சிறிது = விள சிறிது×
விள + சிறிது = விளச் சிறிது (ச் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

விள + தீது = விள  தீது×
விள + தீது = விளத் தீது√ (த் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

விள + பெரிது = விள பெரிது×
விள + பெரிது = விளப் பெரிது (ப் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

விள – அகர ஈற்றுப் பெயர்ச் சொல்.
விள – விளா மரம் (Wood-apple).


மக + குறிது = மக குறிது ×
மக + குறிது = மகக் குறிது √(க் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

மக + சிறிது = மக சிறிது ×
மக + சிறிது = மகச் சிறிது√ (ச் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

மக + தீது = மக  தீது ×
மக + தீது = மகத் தீது √(த் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

மக + பெரிது = மக பெரிது ×
மக + பெரிது = மகப் பெரிது √(ப் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

மக – அகர ஈற்றுப் பெயர்ச் சொல்.
மக – மகவு – ஆண் அல்லது பெண்பிள்ளை.

“நிலை மொழியாகப் பெயர்ச்சொல் நிற்கும்போது சரி ! உரிச்சொல் , இடைச்சொல் நிற்கும்போது ?” – இளம்பூரணரிடம் மாணவர்கள் கேட்டனர் !

இளம்பூரணர் விடை ! :-

தட + கை = தடங்கை ×
தட + கை = தடக்கை √(க் - மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

தவ + கொண்டான் = தவங்கொண்டான்×
தவ + கொண்டான் = தவக்கொண்டான்√(க் - மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

தட + செவி = தடச்செவி×
தட + செவி = தடஞ்செவி√ (ஞ் - மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

தட + தோள் = தடத்தோள்×
தட + தோள் = தடந்தோள்√(ந் - மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

தட , தவ – இந்த நிலைமொழிகள் , அகரத்தை ஈறாகக் கொண்ட உரிச்சொற்கள்.

இனி இடைச்சொல்லுக்கு எடுத்துக்காட்டு ! :-

மடவ மன்ற + தடவுநிலைக் கொன்றை = மடவ மன்றத் தடவுநிலைக் கொன்றை×
மடவ மன்ற + தடவுநிலைக் கொன்றை = மடவ மன்ற  தடவுநிலைக் கொன்றை√(த் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

மன்ற – அகர ஈற்று இடைச்சொல் ; இது நிலைமொழியாக நின்று புணர்ந்தபோது ஒற்று மிகவில்லை !

இளம்பூரணரின் ‘மடவ மன்ற  தடவுநிலைக் கொன்றை ’ எனும் அடி –   குறுந்தொகை66 இல் உளது!

அ – அகரத்தைச் சுட்டும்போது எப்படிப் புணருமாம் ?
இளம்பூரணர் காட்டுகிறார் ! :-

அ + குறிது = அகுறிது×
அ + குறிது = அக்குறிது√(க் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + சிறிது = அசிறிது×
அ + சிறிது = அச்சிறிது√(ச் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + தீது = அதீது×
அ + தீது = அத்தீது√(த் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + பெரிது = அபெரிது×
அ + பெரிது = அப்பெரிது√(ப் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + யாது = அயாது ×
அ + யாது = அவ்யாது√ (இடையின எழுத்தாகிய ‘வ்’ மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + அழகிது =  அஅழகிது ×
அ + அழகிது = அவ்வழகிது√ (வ் – உடம்படுமெய் மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

இங்கெல்லாம் , ‘அ’ – பெயர்ச்சொல் ! ( ‘அ’ என்ற சொல்லால் அகரமே சுட்டப்படுதல் காண்க !)

மயங்கியது – உயிரா நம் உடலா?

நீங்கள்தான் சொல்லவேண்டும் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (240)

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 15, 2014 11:21 am

***
தொடத் தொடத் தொல்காப்பியம் (240)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

இப்போது உயிர்மயங்கியலில் இரண்டாம் நுற்பா ! :-

“வினையெஞ்சு கிளவியு முவமக் கிளவியும்
எனவெ னெச்சமுஞ் சுட்டி னிறுதியும்
ஆங்க வென்னு முரையசைக் கிளவியும்
ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே” (உயிர்மயங் . 2)

‘வினையெஞ்சு கிளவியும்’ – வினையெச்சச் சொல்லும்,

‘உவமக் கிளவியும்’ -  ‘போல’ என வரும் உவமச் சொல்லும்,

‘என என் எச்சமும்’ – ‘கொள்ளென’ என வரும் எச்சச் சொல்லும்,

‘சுட்டின் இறுதியும்’ -  ‘அ’ என்பதுபோல வரும் சுட்டுச்சொல்லின் ஈறும்,

‘ஆங்க என்னும் உரையசைக் கிளவியும் ’ - ‘ஆங்க’ எனும் உரையசைச் சொல்லும்,

ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே – முன் சூத்திரத்தில் சொன்னபடி , அல்வழிப் புணர்ச்சியில்,  வல்லெழுத்து மிகுதலைக் கொள்ளும் !

உண + கொண்டான் = உணகொண்டான் ×
உண + கொண்டான் = உணக் கொண்டான் √ (உண – வினையெச்சச் சொல்)( அல்வழிப் புணர்ச்சி)

உண + சென்றான் = உணசென்றான் ×
உண + சென்றான் = உணச் சென்றான் √ (உண – வினையெச்சச் சொல்) ( அல்வழிப் புணர்ச்சி)


உண + தந்தான் = உண தந்தான் ×
உண + தந்தான் = உணத் தந்தான் √ (உண – வினையெச்சச் சொல்) ( அல்வழிப் புணர்ச்சி)


உண + போயினான் = உண போயினான் ×
உண + போயினான் = உணப் போயினான் √ (உண – வினையெச்சச் சொல்)( அல்வழிப் புணர்ச்சி)

தின + கொண்டான் = தினகொண்டான் ×
தின + கொண்டான் = தினக் கொண்டான் √ (தின – வினையெச்சச் சொல்) ( அல்வழிப் புணர்ச்சி)


தின + சென்றான் = தின சென்றான் ×
தின + சென்றான் = தினச் சென்றான் √ (தின – வினையெச்சச் சொல்)( அல்வழிப் புணர்ச்சி)


தின + தந்தான் = தின தந்தான் ×
தின + தந்தான் = தினத் தந்தான் √ (தின – வினையெச்சச் சொல்) ( அல்வழிப் புணர்ச்சி)


தின + போயினான் = தினப் போயினான் ×
தின + போயினான் = தினப் போயினான் √ (தின – வினையெச்சச் சொல்)( அல்வழிப் புணர்ச்சி)


புலிபோல + கொன்றான் = புலிபோல கொன்றான் ×
புலிபோல + கொன்றான் = புலிபோலக் கொன்றான் √(போல – உவமக் கிளவி) ( அல்வழிப் புணர்ச்சி)


கொள்ளென + கொண்டான் = கொள்ளென கொண்டான்×
கொள்ளென + கொண்டான் = கொள்ளெனக் கொண்டான்√( கொள்ளென – என என் எச்சச்  சொல்)( அல்வழிப் புணர்ச்சி)


அ + கொற்றன் = அகொற்றன் ×
அ + கொற்றன் = அக் கொற்றன் √ (அ- சுட்டுச் சொல்லின் இறுதி) ( அல்வழிப் புணர்ச்சி)


அ + சாத்தன் = அசாத்தன் ×
அ + சாத்தன் = அச் சாத்தன் √ (அ- சுட்டுச் சொல்லின் இறுதி) ( அல்வழிப் புணர்ச்சி)


அ + தேவன் = அதேவன் ×
அ + தேவன் = அத் தேவன் √ (அ- சுட்டுச் சொல்லின் இறுதி)( அல்வழிப் புணர்ச்சி)


அ + பூதன் = அபூதன் ×
அ + பூதன் = அப் பூதன் √ (அ- சுட்டுச் சொல்லின் இறுதி) ( அல்வழிப் புணர்ச்சி)


ஆங்க + கொண்டான் = ஆங்க கொண்டான் ×
ஆங்க + கொண்டான் = ஆங்கக் கொண்டான் √ (ஆங்க – உரையசைச் சொல்) ( அல்வழிப் புணர்ச்சி)

மேலைப் புணர்சிகளில் , வருசொற்கள் யாவும் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் என்பதைக் கவனிக்க !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (241)

Post by Dr.S.Soundarapandian on Tue Jun 17, 2014 1:48 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (241)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

உயிர் மயங்கியலில் இப்போது மூன்றாம் நூற்பா ! :-

 “சுட்டின் முன்னர்  ஞநமத்  தோன்றின்
ஒட்டிய வொற்றிடை மிகுதல் வேண்டும்  ” (உயிர்மயங் . 3)

- இது சுட்டுகள் – சுட்டு எழுத்துகள்- மெல்லின எழுத்துகளை முதலாகக்கொண்ட சொற்களுடன் புணர்வதைக் கூறுகிறது !

‘சுட்டின் முன்னர்’ – அ,இ,உ எனும் சுட்டு எழுத்துகள் முன்னால்,

‘ஞ ந ம த் தோன்றின்’ – ஞ,ந,ம எனும் மெல்லின எழுத்துகளை முதலாகக்கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தால் ,  

‘ஒட்டிய ஒற்று’ – தத்தமக்குப் பொருந்திய ஒற்று,

‘இடை மிகுதல் வேண்டும்’- இடையிலே மிக்கு வரும் !

அ+ ஞாலம் = அஞாலம் ×
அ+ ஞாலம் = அஞ்ஞாலம் √ (ஞ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ+ நூல் = அநூல் ×
அ+ நூல் = அந்நூல் √ (ந்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ+ மணி = அமணி ×
அ+ மணி = அம்மணி √ (ம்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

இ+ ஞாலம் = இஞாலம் ×
இ+ ஞாலம் = இஞ்ஞாலம் √ (ஞ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

இ+ நூல் = இநூல் ×
இ+ நூல் = இந்நூல் √ (ந்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

இ+ மணி = இமணி ×
இ+ மணி = இம்மணி √ (ம்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

உ+ ஞாலம் = உஞாலம் ×
உ+ ஞாலம் = உஞ்ஞாலம் √ (ஞ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

உ+ நூல் = உநூல் ×
உ+ நூல் = உந்நூல் √ (ந்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

உ+ மணி = உமணி ×
உ+ மணி = உம்மணி √ (ம்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

இங்கு நச்சினார்க்கினியர் ஒரு நுட்பம் கூறுகிறார் !-

அஃதாவது , ‘ஆனா நெளிந்தது’ என்று சொல்லவேண்டுமானால் ,
அ+ ஞெளிந்தது = அ ஞெளிந்தது ×
அ+ ஞெளிந்தது = அஞ்ஞெளிந்தது√ (அல்வழிப் புணர்ச்சி)

‘ஆனா நன்று’ எனக் கூறவேண்டுமானால்,
அ+ நன்று = அநன்று ×
அ+ நன்று = அந்நன்று √ (அல்வழிப் புணர்ச்சி)

‘ஆனா மாண்டது’ எனக் கூறவேண்டுமானால்,
அ+ மாண்டது = அமாண்டது ×
அ+ மாண்டது = அம்மாண்டது √ (அல்வழிப் புணர்ச்சி)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (242)

Post by Dr.S.Soundarapandian on Thu Jun 19, 2014 3:41 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (242)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

சென்ற நூற்பாவில் , சுட்டெழுத்துகள் முன்னே மெல்லின எழுத்துகள் வந்தால் எப்படிப் புணரும் என்று தொல்காப்பியர் காட்டினார் !  
இந்த நூற்பாவில், சுட்டுகளின் முன்னே இடையெழுத்துகள் வந்தால் எப்படிப் புணரும் என்று காட்டுகிறார் ! :-

“யவமுன் வரினே வகர மொற்றும்” (உயிர்மயங். 4)

‘ய வ முன் வரினே’ – சுட்டு எழுத்துகளின் முன்னே யகரத்தை முதலாகக்கொண்ட சொற்களும் , வகரத்தை முதலாகக் கொண்ட சொற்களும் புணரவந்தால் ,

‘வகரம் ஒற்றும்’ – வகர மெய்யெழுத்து இடையே தோன்றும் !

அ + யாழ் = அயாழ் ×
அ+ யாழ் = அவ்யாழ் √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + வளை = அவளை ×
அ+ வளை = அவ்வளை √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

இந்த நூற்பா உரையிலும் நச்சினார்க்கினியர் ஓர் இலக்கண நுட்பம் உரைக்கிறார் ! :-

“வருமொழி முற்கூறிய வதனான் , அகரம் தன்னை யுணர நின்றவழியும்     வகரம் மிகுதல் கொள்க. அவ்வளைந்தது என வரும்”.

அஃதாவது-
 ‘அ’ என்ற எழுத்து வளைந்தது என்று சொல்லவேண்டுமாயின் –
அ + வளைந்தது = அவளைந்தது ×
அ + வளைந்தது = அவ்வளைந்தது √ (வ் - தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (243)

Post by Dr.S.Soundarapandian on Fri Jun 20, 2014 8:35 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (243)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

இந்த நூற்பாவில் , அகரச் சுட்டின் முன் , உயிரெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தாலும் , சந்தியாக , ‘வ்’தோன்றும் என்கிறார் !:-

“உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது” (உயிர்மயங். 5)

‘உயிர் வரினும்’ – அகரச் சுட்டின்முன் உயிர் எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தாலும் ,

‘ஆயியல் திரியாது’ – உயிர்மயங்கியல் நூற்பா 4இல் கூறிய முறைப்படி, ‘வ்’சந்தியாக வரும் !

நச்சரின் எடுத்துகட்டுகளை வருமாறு தரலாம் !:-

அ + அடை = அவடை ×
அ + அடை = அவ்வடை √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + ஆடை = அவாடை ×
அ + அடை = அவ்வாடை √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + இலை = அவிலை ×
அ + இலை = அவ்விலை √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + ஈயம் = அவீயம் ×
அ + ஈயம் = அவ்வீயம் √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + உரல் = அவுரல் ×
அ + உரல் = அவ்வுரல் √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + ஊர்தி = அவூர்தி ×
அ + ஊர்தி = அவ்வூர்தி √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + எழு = அவெழு ×
அ + எழு = அவ்வெழு √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + ஏணி = அவேணி ×
அ + ஏணி = அவ்வேணி √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + ஐயம் = அவையம் ×
அ + ஐயம் = அவ்வையம் √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + ஒழுக்கம் = அவொழுக்கம் ×
அ + ஒழுக்கம் = அவ்வொழுக்கம் √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + ஓடை = அவோடை ×
அ + ஓடை = அவ்வோடை √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

அ + ஔவியம் = அவவௌவியம் ×
அ + ஔவியம் = அவ்வௌவியம் √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

‘ஆனா அழகிது’ என்று சொல்ல-
அ+ அழகிது = அவழகிது ×
அ+ அழகிது = அவ்வழகிது √(வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (244)

Post by Dr.S.Soundarapandian on Sat Jun 21, 2014 7:30 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (244)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொல்காப்பியரிடத்தில் , “ அ+ இருதிணை= அவ்விரு திணை” என்றுதானே வரவேண்டும் ? ஆனால் உங்கள் நூலிலேயே ‘ஆயிருதிணை’ (சொல்.1) என வருகிறதே” என்று ஒரு மாணவன் கேட்டான் !

அதற்குத் தொல்காப்பியர் கூறிய விடை :-

“நீட வருதல் செய்யுளுள் உரித்தே” (உயிர்மயங் . 6)

இளம்பூரணர் தந்த சான்று –

அ+ இருதிணை = ஆயிருதிணை

இதனை அடுத்து, இளம்புரணர் எழுதுகிறார் –
“வருமொழி வரையாது கூறினமையின் , இம் முடிபு வன்கணம் ஒழிந்த கணம் எல்லாவற்றொடும் சென்றது; உதாரணம் பெற்றவழிக் கொள்க” .

தஞ்சை சரசுவதிமகால் நூல்நிலையத் தொல்காப்பிய வெளியீட்டில்(2009) இதற்கான எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன :-

அ + ஐந்தெழுத்தும் = ஆவைந்தெழுத்தும் (தொல்.மொழிமரபு. 28)

அ + முப்பெயரும் = ஆமுப்பெயரும் (தொல்.உயிர்மயங். 27)

அ + வயின் = ஆவயின் (தொல். உயிர்மயங். 48)

செய்யுள் என்பது ஓசைக்குப் பதில் சொல்லவேண்டியது ! இலக்கணத்திற்கு மட்டும் பதில் சொன்னால் போதாது !

அதனால்தான் ‘செய்யுள்’ என்று வரும்போது இலக்கணம் நெகிழ்ந்து கொடுக்கிறது !


     ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (245)

Post by Dr.S.Soundarapandian on Tue Jun 24, 2014 12:34 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (245)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

   ‘சாகுமாறு குத்தினான்’ எனும் பொருளில், ‘சாவக் குத்தினான்’ என்று வரவேண்டியது, சிலபோது , ‘சாக் குத்தினான்’ என வருகிறதே -   ஒரு மாணவனின் ஐயம் !

‘அப்படியும் வரலாம் ’ என்பது தொல்காப்பியர் விடை !:-

“சாவ வென்னுஞ் செயவெ  னெச்சத்
திறுதி வகரம் கெடுதலு முரித்தே” (உயிர் மயங்.7)

(கெடுதலும் – இதிலுள்ள  ‘உம்’, எதிர்மறை உம்மை)

‘சாவ என்னுஞ் செயவென்  எச்சத்து’-  ‘சாவ’ எனும் ‘செய’என் வினையெச்சத்து,

‘இறுதி வகரம் கெடுதலும் உரித்தே’ – ஈற்று ‘வ’ கெட்டுப்போதலும் உண்டு !

சாவ + குத்தினான் = சாவக் குத்தினான் √ (அல்வழிப் புணர்ச்சி)
சாவ + குத்தினான் = சாக் குத்தினான் √(அல்வழிப் புணர்ச்சி)

சாவ + சீறினான் = சாவச்  சீறினான் √ (அல்வழிப் புணர்ச்சி)
சாவ + சீறினான் = சாச் சீறினான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாச் சீறினான்- சாகுமாறு சீறினான்)

சாவ + தகர்த்தான் = சாவத்  தகர்த்தான் √ (அல்வழிப் புணர்ச்சி)
சாவ + தகர்த்தான் = சாத் தகர்த்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாத் தகர்த்தான்- சாகுமாறு தகர்த்தான்)


சாவ + புடைத்தான் = சாவப்  புடைத்தான் √ (அல்வழிப் புணர்ச்சி)
சாவ + புடைத்தான் = சாப் புடைத்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாப் புடைத்தான்- சாகுமாறு அடித்தான்)

நச்சினார்க்கினியர், ‘இயல்புக் கணத்தும் இந் நிலைமொழிக் கேடு கொள்க’
என்றார் !
வன்கணம் இல்லாத அந்தப் பிற கணங்களுக்கு நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் !-

சாவ + ஞான்றான் = சாவஞான்றான் √(அல்வழிப் புணர்ச்சி)
சாவ + ஞான்றான் = சாஞான்றான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாஞான்றான்- சாகுமாறு தூக்குப் போட்டுக்கொண்டான்)

சாவ + நீண்டான் = சாவநீண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
சாவ + நீண்டான் = சாநீண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாநீண்டான்- சாகுமாறு நீண்டநாள் பட்டினி கிடந்தான்)

சாவ + மாண்டான் = சாவமாண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
சாவ + மாண்டான் = சாமாண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாமாண்டான்- உயிரைப் போக்குமாறு மாண்டான்)

சாவ + யாத்தான் = சாவயாத்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
சாவ + யாத்தான் = சாயாத்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாயாத்தான்- சாகுமாறு கட்டினான்)

சாவ + வீழ்ந்தான் = சாவவீழ்ந்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
சாவ + வீழ்ந்தான் = சாவீழ்ந்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாவீழ்ந்தான்- சாகுமாறு வீழ்ந்துபட்டான்)

சாவ + அடைந்தான் = சாவவடைந்தான் √(அல்வழிப் புணர்ச்சி)(வ்- உடம்படு மெய்)
சாவ +அடைந்தான் = சாவடைந்தான் √(அல்வழிப் புணர்ச்சி)( வ்- உடம்படு மெய்)
(சாவடைந்தான்- சாகுமாறு முடிவை அடைந்தான்)

‘அறிய வந்த’ என்பதை ‘அறிவந்த’ எனவும் , ‘செய்யத் தக்க’ என்பதைச்  ‘செய்தக்க’
என்றும் புலவர்கள் எழுதியுள்ளதைப் பார்த்தால்தான் , மேல் தொல்காப்பிய இலக்கணத்தின் தேவை நமக்குப் புலனாகும் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (246)

Post by Dr.S.Soundarapandian on Thu Jun 26, 2014 5:42 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (246)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

வந்து போனான்
வந்துப் போனான் – எது சரி ?

வந்த பையன்
வந்தப் பையன் – எது சரி?
- இதற்கெல்லாம் தொல்காப்பியத்தில் விதி உள்ளதா?

உள்ளது !

கீழே படியுங்கள் ! -

   தொல்காப்பியர் சில சொற்களைப் பட்டியலிடுகிறார் ! பட்டியலிட்டு இவையெல்லாம் வல்லெழுத்தை முதலாக உடைய சொற்கள் முன் நின்றால் எப்படிப் புணரும் என்று காட்டுகிறார் !

அச் சொற்கள் !:-

       1. அன்ன  (உவம உருபு ஆகிய இஃது ஓர் இடைச்சொல்; ‘உவமக் கிளவி’    என்றும்   இதனைக் குறிப்பர்.)                                                                                                            

       
       2 . அண்மை சுட்டிய விளி ( ‘ஊர’ என்பது ஓர் அண்மை விளி;இது பெயர்ச் சொல்)

      3 . செய்ம்மன என்னும் தொழிலிறு சொல் ( ‘உண்மன’ என்பது இதற்கு
                                                 எடுத்துக்காட்டு; இது வினைச் சொல்; உண்மன -     உண்ணும்)                                                                                  
   
          4 . ஏவல் கண்ணிய வியங்கோள் கிளவி ( ‘செல்’ என்பது இதற்கு   எடுத்துக்காட்டு; இது வியங்கோளாகிய வினைச்சொல்)

                                                   

              5 . செய்த என்னும் பெயரெஞ்சு கிளவி ( ‘உண்ட’ என்பது இதற்கு எடுத்துக்காட்டு;
                                              இது பெயரெச்சச் சொல்; ‘பெயரெச்சமாகிய வினைச் சொல் ’ எனவும் கூறுவர் )
                                                                                                                           

               6 . செய்யிய என்னும் வினையெஞ்சு கிளவி  ( ‘உண்ணிய சென்றான்’ என்பது இதற்கு எடுத்துக்காட்டு; உண்ணிய சென்றான்                         -உண்பதற்காகச் சென்றான்; இது வினையெச்சச் சொல்)
                                         
                                                                                                                   

               7 . அம்ம என்னும் உரைப்பொருள் கிளவி  (உரை அசையாக வரும்  ‘அம்ம’ எனும்சொல்; இது இடைச்சொல்.)
                                         

                 8 . பலவற்று இறுதிப் பெயர்க்கொடை ( ‘பல’எனும் பெயர்ச்சொல் ; பெயர்க்கொடை - பெயர்ச்சொல்)
                                           

- இப் பட்டியல்தான் தொல்காப்பியர் தருவது !

இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள் அடிப்படையில் கீழ்வரும் விளக்கங்களைத் தரலாம் !:-

1 . பொன் அன்ன + குதிரை= பொன் அன்னக் குதிரை ×
    பொன் அன்ன + குதிரை= பொன் அன்ன குதிரை √ (இயல்பாய்   முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

                                                                                                 
     பொன் அன்ன + செந்நாய்= பொன் அன்னச் செந்நாய் ×
    பொன் அன்ன + செந்நாய் = பொன் அன்ன செந்நாய் √ (இயல்பாய்
                                                                                                      முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    பொன் அன்ன + தகர்= பொன் அன்னத் தகர் ×
    பொன் அன்ன + தகர் = பொன் அன்ன தகர் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
                                                                                       

    பொன் அன்ன + பன்றி= பொன் அன்னப் பன்றி ×
    பொன் அன்ன + பன்றி = பொன் அன்ன பன்றி √ (இயல்பாய்
                                                                                            முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

2 . ஊர + கொள் = ஊரக் கொள் ×
    ஊர + கொள் = ஊர கொள் √ (இயல்பாய்  முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    ஊர + செல் = ஊரச் செல் ×
    ஊர + செல்= ஊர செல் √ (இயல்பாய்  முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    ஊர + தா = ஊரத் தா ×
    ஊர + தா= ஊர தா√ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
   
      ஊர + போ = ஊரப் போ ×
      ஊர + போ = ஊர போ √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    3 . உண்மன + குதிரை = உண்மனக் குதிரை ×
    உண்மன+ குதிரை = உண்மன குதிரை √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    உண்மன + செந்நாய் = உண்மனச் செந்நாய் ×
    உண்மன+ செந்நாய்= உண்மன செந்நாய் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    உண்மன + தகர் = உண்மனத் தகர்×
    உண்மன+ தகர் = உண்மன தகர் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    உண்மன + பன்றி = உண்மனப் பன்றி ×
    உண்மன+ பன்றி = உண்மன பன்றி √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

 4 . செல்க + குதிரை = செல்கக் குதிரை ×
    செல்க + குதிரை = செல்க குதிரை √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

   செல்க + செந்நாய் = செல்கச் செந்நாய் ×
    செல்க + செந்நாய் = செல்க செந்நாய் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    செல்க + தகர் = செல்கத் தகர் ×
    செல்க + தகர் = செல்க தகர் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    செல்க + பன்றி = செல்கப் பன்றி ×
    செல்க + பன்றி = செல்க பன்றி √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)


   5 . உண்ட + குதிரை = உண்டக் குதிரை ×
    உண்ட+ குதிரை = உண்ட குதிரை √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    உண்ட + செந்நாய் = உண்டச் செந்நாய் ×
    உண்ட+ செந்நாய் = உண்ட செந்நாய் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    உண்ட + தகர் = உண்டத் தகர் ×
    உண்ட+ தகர் = உண்ட தகர் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    உண்ட + பன்றி = உண்டப் பன்றி ×
    உண்ட+ பன்றி = உண்ட பன்றி √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

     உண்ணாத + குதிரை = உண்ணாதக் குதிரை ×
     உண்ணாத+ குதிரை = உண்ணாத குதிரை √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

     உண்ணாத + செந்நாய் = உண்ணாதச் செந்நாய் ×
     உண்ணாத+ செந்நாய் = உண்ணாத செந்நாய் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

     உண்ணாத + தகர் = உண்ணாதத் தகர் ×
    உண்ணாத+ தகர்= உண்ணாத தகர்√ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    உண்ணாத + பன்றி = உண்ணாதப் பன்றி ×
    உண்ணாத+ பன்றி = உண்ணாத பன்றி √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

     நல்ல + குதிரை = நல்லக் குதிரை ×
     நல்ல+ குதிரை =  நல்ல குதிரை √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

     நல்ல + செந்நாய் = நல்லச் செந்நாய் ×
     நல்ல+ செந்நாய் =  நல்ல செந்நாய் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

     நல்ல + தகர் = நல்லத் தகர் ×
     நல்ல+ தகர்=  நல்ல தகர் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

     நல்ல + பன்றி = நல்லப் பன்றி ×
     நல்ல+ பன்றி =  நல்ல பன்றி √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

   6 . உண்ணிய + கொண்டான் = உண்ணியக் கொண்டான் ×
   உண்ணிய + கொண்டான் = உண்ணிய கொண்டான் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

  உண்ணிய + சென்றான் = உண்ணியச் சென்றான் ×
  உண்ணிய + சென்றான் = உண்ணிய சென்றான் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

  உண்ணிய + தந்தான் = உண்ணியத் தந்தான் ×
  உண்ணிய + தந்தான் = உண்ணிய தந்தான் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

 உண்ணிய + போயினான் = உண்ணியப் போயினான் ×
  உண்ணிய + போயினான் = உண்ணிய போயினான் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

7 .  அம்ம + கொற்றா = அம்மக் கொற்றா ×
     அம்ம + கொற்றா = அம்ம கொற்றா √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

     அம்ம + சாத்தா = அம்மச் சாத்தா ×
     அம்ம + சாத்தா = அம்ம சாத்தா √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    அம்ம + தேவா = அம்மத் தேவா ×
     அம்ம + தேவா = அம்ம தேவா √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

     அம்ம + பூதா = அம்மப் பூதா ×
     அம்ம + பூதா = அம்ம பூதா √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

 8 . பல + குதிரை = பலக் குதிரை ×
      பல + குதிரை = பல குதிரை √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)


    பல + செந்நாய் = பலச் செந்நாய் ×
    பல + செந்நாய் = பல செந்நாய் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)


    பல + தகர் = பலத் தகர் ×
    பல + தகர் = பல தகர் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    பல + பன்றி = பலப் பன்றி ×
    பல + பன்றி= பல பன்றி √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)


   சில + குதிரை = சிலக் குதிரை ×
   சில + குதிரை = சில குதிரை √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)


   சில + செந்நாய் = சிலச் செந்நாய் ×
   சில + செந்நாய் = சில செந்நாய் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)


    சில + தகர் = சிலத் தகர் ×
    சில + தகர் = சில தகர் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

    சில + பன்றி = சிலப் பன்றி ×
    சில + பன்றி= சில பன்றி √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

 தொல்காப்பியர் தந்த எட்டு வகைச் சொற்களுக்கும் எடுத்துக்காட்டுகள் சரியாயிற்றா ?

தொல்காப்பியர் தந்த அந்த எட்டுவகைச் சொற்கள் கொண்ட நூற்பா இதோ ! :-

  “ அன்ன வென்னு முவமக் கிளவியும்
    அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும்
    செய்ம்மன வென்னுந் தொழிலிறு சொல்லும்
    ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும்
    செய்த வென்னும் பெயரெஞ்சு கிளவியும்
    செய்யிய வென்னும் வினையெஞ்சு கிளவியும்
    அம்ம வென்னு முரைப்பொருட் கிளவியும்
    பலவற் றிறுதிப் பெயர்க்கொடை யுளப்பட
   அன்றி யனைத்து மியல்பென மொழிப”  (உயிர் மயங் . 8)

என்ன?

தொடக்கத்தில் நாம் பார்த்த வினாக்களுக்கு விடை கிடைத்ததா?

விடை-
வந்து போனான் √
வந்துப் போனான் ×

வந்த பையன்√
வந்தப் பையன் ×

                                  ***


Last edited by Dr.S.Soundarapandian on Thu Jun 26, 2014 5:53 pm; edited 1 time in total (Reason for editing : spacing)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (247)

Post by Dr.S.Soundarapandian on Fri Jun 27, 2014 1:08 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (247)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

வாழிய அருணாசலம் !
வாழி அருணாசலம் !

-   எது சரி ?

இரண்டுமெ சரிதான்
என்கிறார் தொல்காப்பியர் ! :-

“வாழிய வென்னுஞ் சேயென் கிளவி
இறுதி யகரங் கெடுதலு முரித்தே”  (உயிர் மயங்.9)

 ‘வாழிய வென்னும் சேயென் கிளவி’- ‘வாழி’ என்ற ஏவல் அல்லாது , வியங்கோளில் ‘வாழிய’ என்றுகூறும் சொல்லானது ,

‘இறுதி யகரங் கெடுதலும்  உரித்தே ’ – வல்லெழுத்தை முதலாக உடைய சொல் வந்து புணரும்போது, தனது இறுதி ‘ய’வைக் கெடுக்கும் !

வாழிய + கொற்றா = வாழியக் கொற்றா ×
வாழிய + கொற்றா = வாழிய கொற்றா √  (இறுதி ‘ய’கெடாது வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
வாழிய + கொற்றா = வாழி கொற்றா √  (இறுதி ‘ய’கெட்டு வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

வாழிய + சாத்தா = வாழியச் சாத்தா ×
வாழிய + சாத்தா = வாழிய சாத்தா √  (இறுதி ‘ய’கெடாது வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
வாழிய + சாத்தா = வாழி கொற்றா √  (இறுதி ‘ய’கெட்டு வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

வாழிய + தேவா= வாழியத் தேவா ×
வாழிய + தேவா= வாழிய தேவா √  (இறுதி ‘ய’கெடாது வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
வாழிய + தேவா = வாழி கொற்றா √  (இறுதி ‘ய’கெட்டு வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

வாழிய + பூதா = வாழியப் பூதா ×
வாழிய + பூதா = வாழிய பூதா √  (இறுதி ‘ய’கெடாது வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
வாழிய + சாத்தா = வாழி பூதா √  (இறுதி ‘ய’கெட்டு வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

மேலே , வருசொற்கள் யாவும் வல்லெழுத்தை முதலாக உடையன என்பதைப் பர்க்க மறவாதீர் !

இளம்பூரணர் , மெல்லின, இடையின , உயிர் எழுத்துகளை முதலாக உடைய சொற்களுக்கும் இது பொருந்தும் என்று கூறி எடுத்துக்காட்டு ஒன்றைத் தருகிறார் ; அதன்படி -

வாழிய + ஞெள்ளா = வாழியஞ்ஞெள்ளா×
வாழிய + ஞெள்ளா = வாழிய ஞெள்ளா√(இறுதி ‘ய’கெடாது வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

வாழிய + ஞெள்ளா = வாழி ஞெள்ளா√(இறுதி ‘ய’கெட்டு வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

நூற்பாவில் ‘சேயென்’ என்று ஒரு சீர் வந்தது அல்லவா?

இதில் பல தகராறுகள் ! -

‘சேயஎன்’ – இளம்பூரணர் பாடம்
‘சேயஎன்’ – நச்சினார்க்கினியர் பாடம்
‘சேயென்’ – மகாலிங்கையர் பாடம்
‘சேயென்’ – கணேசய்யர் பாடம்
‘சேயென்’ – சுப்பிரமணிய சாத்திரியார் பாடம்
‘செய்யிய’ – வேங்கடராஜுலு ரெட்டியார் பாடம்
‘செய்கென்’ – பலசுந்தரனார் பாடம்
‘சேயென்’ – மு.சண்முகம் பிள்ளை பாடம்
‘சேயென்’ – சொ.சிங்காரவேலன் பாடம்
‘செய்கவென்’ – தி.வே.கோபாலையர் பாடம்
‘செய்வென்’ – திருவனந்தபுரம் பாடம்
‘செயஎன்’ – தமிழண்ணல் பாடம்
‘செயவென்’ – ச.வே.சுப்பிரமணியன்  பாடம்

‘சேயென்’ – என்பதே நூற்பா ஓசைக்கு ஒத்து வருவதால் , இப்போதைக்கு, இப்பாடம் இங்கு கொள்ளப்பட்டுள்ளது !

மேலே பல பாடங்களைப் பார்த்தோமல்லவா? இன்னும் பல பதிப்புகளை நாம் காணவேண்டியுள்ளது !

இவ்வாறு அனைத்துப் பதிப்புகள் மட்டுமல்லாது , அனைத்துச் சுவடிகளையும் (Manuscripts)ஆராய்ந்து , அலசிப் பார்த்து , நீண்ட ஆய்வு நடத்தி, அதன்பின் நாம் ஒரு பாடத்தை நிர்ணயிப்பதே சரியான முறையாகும்! இதனைத்தான் செம்பதிப்பு (Critical edition) என்கிறோம்!

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (248)

Post by Dr.S.Soundarapandian on Sat Jun 28, 2014 1:24 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (248)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

முன் ஆய்வில் , ‘அம்ம + கொற்றா = அம்ம கொற்றா’ என்று இயல்பாகப் புணரும் எனக் கண்டோம் !

இந்த நூற்பாவில் அது தொடர்பாக என்ன கூறுகிறார் என்று பார்ப்போமே? :-

“உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்” (உயிர்மயங் . 10)

 ‘உரைப்பொருள் கிளவி’ – உரை அசைச் சொல்லாகிய ‘அம்ம’ என்பது,
‘நீட்டமும் வரையார்’ – ‘அம்மா’ என்று நீளுதலையும் நீக்கமாட்டார்கள் !

அம்ம + கொற்றா = அம்மக் கொற்றா ×
அம்ம + கொற்றா = அம்ம கொற்றா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
அம்ம + கொற்றா = அம்மா கொற்றா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
(இங்கே ‘அம்மா’ என்பது தாயைக் குறிக்காது; பொருளற்ற ஓர் அசைதான் ! )

அம்ம + சாத்தா = அம்மச் சாத்தா ×
அம்ம + சாத்தா = அம்ம சாத்தா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
அம்ம + கொற்றா = அம்மா சாத்தா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)

அம்ம + தேவா = அம்மத் தேவா ×
அம்ம + தேவா = அம்ம தேவா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
அம்ம + தேவா = அம்மா தேவா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)

அம்ம + பூதா = அம்மப் பூதா ×
அம்ம + பூதா= அம்ம பூதா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
அம்ம + பூதா = அம்மா பூதா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)


தொல்காப்பிய நூற்பா , வல்லெழுத்தை முதலாக உடைய சொற்கள் வந்து புணர்வதற்கே !


ஆனால் இளம்பூரணர், வேறு இன எழுத்தை முதலாக உடை சில சொற்களுக்கும் இது பொருந்தும் என்று கூறி , ஓர் எடுத்துக்காட்டைத் தருகிறார்!:-

அதனை வருமாறு விளக்கிக் கூறலாம் :-

அம்ம + ஞெள்ளா= அம்மஞ் ஞெள்ளா ×
அம்ம + ஞெள்ளா= அம்ம ஞெள்ளா √(இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
அம்ம + ஞெள்ளா= அம்மா ஞெள்ளா √(இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)

  ‘உரையசை’ என்பதை விளங்கிக்கொள்வது கடினமாக உள்ளதா?

சிலர் பேசும்போது , “இந்தாப்பா , காலை 8 மணிக்கெல்லாம் வந்திடணும்!” என்கிறார்கள் அல்லவா? அப்போது ‘இந்தாப்பா’ எனக் கூறி எதையாவது கையில் கொடுக்கிறார்களா? இல்லையே? ‘இந்தாப்பா’ என்பதற்குப் பொருள் இல்லையல்லவா? இதுதான் ‘உரை அசை’ !

எனவே ‘உரையசை’ என்பது பாடலில்தான் வரும் என்று கருதவேண்டாம் ! அது பேச்சு வழக்கிலும் வரும் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (249)

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 29, 2014 11:48 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (249)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

 ‘ பல + குதிரை = பல குதிரை ’ – என்பதற்கான இலக்கணத்தை முன்பு பார்த்தோம் !

அதன் தொடர்ச்சியாக -  

“பலவற் றிறுதி  நீடுமொழி யுளவே
செய்யுள் கண்ணிய  தொடர்மொழி யான ” (உயிர்மயங் . 11)
என்கிறார் தொல்காப்பியர் !

‘பலவற்று இறுதி’ – ‘பல’ எனும் சொல்லின் ஈறு,
‘நீடு மொழி உளவே’ -  ‘ல’ , ‘லா’ ஆதலும் உண்டு !
‘செய்யுள் கண்னிய தொடர்மொழி ஆன’ – பாடலில் தொடர்ச் சொல்லாக வரும்போது !

பல + சில + என்மனார் புலவர்= பலாஅம்  சிலாஅம்  என்மனார் புலவர் = பலாஅஞ்  சிலாஅம்  என்மனார் புலவர்= பலாஅஞ்  சிலாஅ  மென்மனார் புலவர்!

‘பல’ என்ற சொல்லுக்குத்தானே இலக்கணம் உள்ளது நூற்பாவில் ? ‘சில’ எப்படி நீண்டது ?

இளம்பூரணர் விளக்குகிறார் –

“உண்டு என்னாது ‘உள’ என்றதனான் ,  ‘சில’ என்னும் வருமொழி இறுதி நீடலும் கொள்க! ”

மீண்டும் ஒரு வினா!

‘பல’ என்று மட்டும்தானே நூற்பாவில் உள்ளது ? ‘சில’ எங்கிருந்து வந்தது ?

இதற்கும் இளம்பூரணர் விளக்கம் தருகிறார் !-

“ செய்யுள் கண்ணிய மொழி என்னாது , ‘தொடர் மொழி’ என்றதனான் , இப் ‘பல’ என்பது நீளும் வழி , வருமொழியாவது ‘சில’ என்பதே என்று கொள்ளப்படும் !”

‘பலாஅஞ் சிலாஅம் என்மனார் புலவர்’ என்ற எடுத்துக்காட்டைக் காட்டிய இளம்பூரணர் , “இதன் சொல்நிலை பலசில என்னும் செவ்வெண்” என்று குறிக்கிறார் !

என்ன பொருள் ?
‘பலாஅஞ் சிலாஅம் ’என்று வந்தது பாட்டுக்காக ! இதுவே உரைநடையில் வருவதானால் ‘பலசில’ என்றுதான் வரும்!
‘பலசில’ என்று எந்த இடைச்சொல்லும் இன்றி வருகிறதல்லவா? அதுதான் ‘செவ்வெண்’!
செவ்வனே அறிந்துகொண்டீர்களா?

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (250)

Post by Dr.S.Soundarapandian on Mon Jun 30, 2014 5:23 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (250)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

  ‘பற்பல’ – அடிக்கடி பயன்படுத்துகிறாம்!
இஃது எப்படி வந்தது?
‘பல+ பல’ என்பதுதான் இப்படி வந்தது!

இதற்குத் தொல்காப்பிய விதி உள்ளதா?

உள்ளது ! :-

“தொடர  லிறுதி தம்முற்  றாம்வரின்
லகரம்  றகரவொற்  றாதலு முரித்தே” (உயிர்மயங் . 12)

‘தொடர் அல் இறுதி’ – ஈரெழுத்து ஒருமொழியாகிய ‘பல’ எனும் சொல்லின் ஈறு,
‘தம்முள் தாம் வரின்’ – ‘பல’ என்பதன் முன் ‘பல’ வந்து புணர்ந்தால் ,
‘லகரம் றகர ஒற்றாதலும் உரித்தே’ -  ‘ல்’ ஆனது, ‘ற்’ ஆதலும் உண்டு !

‘பல’ என்ற சொல் நூற்பாவில் எங்கே உள்ளது ?

நல்ல கேள்வி !

இதற்கு முந்தைய நூற்பாவில் உள்ளது !

தொல்காப்பியச் சூத்திரங்கள் தொடர்ச்சியாய் எழுதப்படுவன ! சூத்திரமாக உரைப்பதால் அங்கே விரிவை எதிர்பார்க்க முடியாது! மனப்பாடம் செய்வதற்கு ஏற்றது இந்த அமைப்பே (Structure of Tholkappiyam)!
பல + பல =  பலாம் பல ×
பல + பல =  பற்பல √ (அல்வழிப் புணர்ச்சி)

சில + சில =  சிலாஞ் சில ×
சில + சில =  சிற்சில √ (அல்வழிப் புணர்ச்சி)

‘பல’ என்பதன்முன் ‘சில’ சேரும் புணர்ச்சியை ஏன் கொள்ளவில்லை?
‘பல’ என்பதன்முன் ‘பல’ வைத்தான், நூற்பாப்படி, கொள்ளவேண்டுமா?

இளம்பூரணர் இதற்கு விடை தருகிறார் !:-
“தொடரலிறுதி தம்முன் வரின் என்னாது ‘தாம்’ என்றதனான், இம் முடிபின்கண் பலவென்பதன்முன் பல வருக , சிலவென்பதன் முன் சில வருக என்பது கொள்ளப்பட்டது !”

தொடரல் – மூவெழுத்துச் சொல் தவிர்த்து.
 இளம்பூரணர் உரைப்படி – ‘ல்’தான் ‘ற்’ ஆகிறது ! ‘ல’விலுள்ள ஈற்று ‘அ’ கெடுகிறது !-

பல +  பல = பல் + பல (அ- கெட்டது) → பல் + பல = பற்பல (ல், ற் ஆனது)

‘பல’ என்பதன்முன் , ‘பல’ வராது வேறு சொல் வந்தால்?

இதற்கும் விடை இளம்பூரணத்தில் உள்ளது !-

பல + படை = பற்படை×
பல + படை = பல்படை √

பல + யானை = பற்யானை×
பல + யானை = பல்யானை √

சில + படை = சிற்படை×
சில + படை = சில்படை √

சில + கேள்வி = சிற்கேள்வி×
சில + கேள்வி = சில்கேள்வி √

‘தொடரல்’ என்பதன்மூலம் மூவெழுத்துச் சொல்லை விலக்கிவிட்டார் ! அதனால்  ‘பல’என்ற ஈரெழுத்துச் சொல்லைக் கொண்டுள்ளோம் ! சரி ! ஆனால், ‘பல’வின் ஈற்றிலே உள்ள  ‘அ’ , ஓரெழுத்து மொழியாயிற்றே ?அந்த ஆனா என்ற எழுத்தைத் ‘தொடரல் ’ என்ற சொல்லால் தொல்காப்பியர் குறித்திருக்கமாட்டாரா?

இதற்கும் இளம்பூரணர் விடை கூறுகிறார் !-
”தொடலிறுதி  என்பது சுட்டல்லது ஓரெழுத்தொரு மொழி அகரமின்மையின் , ஓரெழுத் தொருமொழிமேற் செல்லாதாயிற்று ”  !

அஃதாவது, ‘அ’என்பது ஓரெழுத்து ஒருமொழிதான் ; ஆனால் ‘சுட்டெழுத்து’என்ற கணக்கில் மட்டும்தான்! ஆகவேதான் ‘தொடரல்’ என்பதால் ஈரெழுத்து ஒருமொழியைத்தான் குறித்தார் தொல்காப்பியர் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by Syed Sardar on Mon Jun 30, 2014 10:34 pm

அருமையான சேவை. தொரட்டும் அய்யா உங்கள் நற்பணி !

Syed Sardar
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by Dr.S.Soundarapandian on Tue Jul 01, 2014 10:41 am

Syed Sardar அவர்களுக்கு நன்றி !

 அன்பு மலர் 
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (251)

Post by Dr.S.Soundarapandian on Tue Jul 01, 2014 10:43 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (251)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

 
பல + பல = பலப் பல -    இது சரியா?

பல + பல = பலபல – இது சரியா?

பல + பல = பல்பல – இது சரியா?

அப்படியானால் இதற்குத் தொல்காப்பிய விதி உள்ளதா?

உள்ளது ! :-

“வல்லெழுத் தியற்கை உறழத் தோன்றும்” !  (உயிர்மயங் . 13)

‘வல்லெழுத்து இயற்கை’ – முன் நூற்பாவில் (உயிர்மயங்.12)  கூறிய ‘ற்’ என்பதன் தன்மை,

‘உறழத் தோன்றும்’ – தோன்றாமல் ,வேறொரு வல்லெழுத்து மிகவும் செய்யலாம் மிகாமலும் வரலாம் !

பல + பல = பலப் பல √(வல்லெழுத்து மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
பல + பல = பல பல√ (வல்லெழுத்து மிகவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

சில + சில = சிலச் சில√ (வல்லெழுத்து மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
சில + சில = சிலச் சில√ (வல்லெழுத்து மிகவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

இந்த எடுத்துக்காட்டுகளைக்கூறிவிட்டு இளம்பூரணர் வேறு சில புணர்ச்சிகளையும்  தெரிவிக்கிறார் ! –
“முன் கூறிய பற்பல , சிற்சில என்னும் முடிபொடு பல்பல , சில்சில என்னும் முடிபு பெற்று உறழ்ச்சியாதல் கொள்க !”

இதன்படி-
பல+ பல = பல்பல √ (அ - கெட்டது) (அல்வழிப் புணர்ச்சி)
சில+ சில = சில்சில √ (அ - கெட்டது) (அல்வழிப் புணர்ச்சி)

இன்னொரு சுவையான புணர்ச்சியையும் காட்டுகிறார் இளம்பூரணர் நமக்கு !:-

“ ‘தோன்றும்’  என்றதனான் , அகரம் கெட லகரம் , ஆய்தமும் மெல்லெழுத்துமாய்த் திரிந்து முடிதல் கொள்க !”

இளம்பூரணரின் இக் கருத்துப்படி –

பல + தானை → பஃ + தானை  (அ, கெட்டது;  ல், ஃ ஆனது )→பஃறானை √(அல்வழிப் புணர்ச்சி)

பல + மரம் → பல் + மரம்  (அ, கெட்டது )→பன்மரம் √ (ல், மெல்லின ஒற்றான ‘ன்’ஆகத் திரிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)


சில + தாழிசை → சிஃ + தாழிசை  (அ, கெட்டது ;  ல், ஃ ஆனது)→சிஃறாழிசை √(அல்வழிப் புணர்ச்சி)

சில + நூல் → சில் + நூல்  (அ, கெட்டது )→சின்னூல் √(ல், மெல்லின ஒற்றான ‘ன்’ஆகத் திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

இளம்பூரணரின் இலக்கணம் தொல்காப்பியரின் இலக்கணத்தை மிஞ்சிவிடும் போல இருக்கிறதே ?

    ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (252)

Post by Dr.S.Soundarapandian on Wed Jul 02, 2014 9:25 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (252)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘இருவிள’ என்பது ஓர் ஊரின் பெயர் !
இந்த ஊரைச்சேர்ந்த ‘கொற்றன்’ என்பவனை,

‘இருவிள கொற்றன்’  என்பதா?
‘இருவிளக் கொற்றன்’  என்பதா?

இதற்குத் தொல்காப்பியத்தில் விதி உள்ளதா?

உள்ளது ! :-

“வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே” !  (உயிர்மயங் . 14)

முன்பு , இதே உயிர்மயங்கியலில் , நூற்பா ஒன்றில் , அல்வழிப் புணர்ச்சியாக இருந்தால் , அகரத்தில் முடியும் பெயர்ச்சொற்கள் , வல்லெழுத்தை முதலாக உடைய சொற்களுடன் புணரும்போது, ஒற்றுமிகும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார் ! (மக + குறிது= மகக் குறிது); நினைவிருக்கிறதா?

 ‘அல்வழிப் புணர்ச்சியாக இருந்தால்’ – என மேலே வந்துள்ளதைக் கவனியுங்கள் !

அப்படியானால் , வேற்றுமைப் புணர்ச்சியாக இருந்தால் ? – வினா எழுகிறதல்லவா?

இதற்கு விடைதான் மேல் நூற்பா! (உயிர்மயங் . 14)

இதன்படி-

இருவிள + கொற்றன் = இருவிள கொற்றன்×
இருவிள + கொற்றன் = இருவிளக் கொற்றன்√ (க் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)

இருவிள + சாத்தன் = இருவிள சாத்தன் ×
இருவிள + சாத்தன் = இருவிளச் சாத்தன் √ (ச் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)

இருவிள + தேவன் = இருவிள தேவன் ×
இருவிள + தேவன் = இருவிளத் தேவன் √ (த் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)


இருவிள + பூதன் = இருவிள பூதன் ×
இருவிள + பூதன் = இருவிளப் பூதன் √ (ப் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)

சாத்தன் , தேவன் – போன்ற இயற்பெயர்ச் சொற்கள்தாம் இப்படிப் புணருமா?- ஐயம் !

போக்குகிறார் இளம்பூரணர் !-

 “விளக்குறுமை எனக் குணவேற்றுமைக் கண்ணும் கொள்க!”
(குணம்- பண்பு)

இதன்படி-
விள + குறுமை = விளகுறுமை ×
விள + குறுமை = விளக்குறுமை √ (க் - மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)
(விளக்குறுமை – விளமரத்தின் குட்டைத்தன்மை )

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (253)

Post by Dr.S.Soundarapandian on Thu Jul 03, 2014 9:42 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (253)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தொல்காப்பியரிடம் மாணவன், “விள – என்பது அகர ஈற்று மரப்பெயர் !   ‘விளத்தின் பூ ’ என்பதைச் சொல்லவேண்டுமானால் , ‘விளப்பூ’ என்பதா? ‘விளம்பூ’  என்பதா?” எனக் கேட்டான் !

அதற்குத் தொல்காப்பியரின் விடை ! :-

“மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே”  (உயிர்மயங் . 15)

 ‘மரப்பெயர்க் கிளவி’ – மரத்தின் பெயரைக்  குறிக்கும் சொல்,
‘மெல்லெழுத்து மிகுமே’ – வேற்றுமைப் புணர்சியில் , மெல்லெழுத்துச் சந்தி பெறும் !

விள + கோடு = விளக்கோடு ×
விள + கோடு = விளங்கோடு √ (ங் – மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(விளங்கோடு – விள மரத்தின் கிளை)

விள + செதிள் = விளச் செதிள் ×
விள + செதிள் = விளஞ் செதிள் √ (ஞ் – மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(விளஞ் செதிள் – விள மரத்தின் வெட்டுத் துண்டு)

விள + தோல் = விளத் தோல் ×
விள + தோல் = விளந் தோல் √ (ந் – மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(விளந் தோல் – விள மரத்தின் பட்டை)

விள + பூ = விளப்பூ ×
விள + பூ = விளம்பூ √ (ம் – மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(விளம்பூ – விள மரத்தின் பூ)

எந்த ஓர் இலக்கணப் புணர்ச்சியாயினும் மரப்பெயர்களுடன் அதனைப் பொருத்திக்காட்டுவது தொல்காப்பியரின் கோட்பாடு
(Theory oy Tholkappiyar)!


ஏன்?

அஃதாவது, சிலர் நினைப்பதுபோலத் தமிழ் இலக்கணம் என்பது புலவர்களுக்கு மட்டும்தான் என்பதில்லை !

தமிழ் இலக்கணம் மக்களுக்கானது !
இந்த உண்மை இங்கே தெரிகிறதல்லவா?

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (254)

Post by Dr.S.Soundarapandian on Fri Jul 04, 2014 11:51 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (254)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

ஆண் பிள்ளையைக் குறிக்க ‘மகன்’ என்றும் , பெண் பிள்ளையைக் குறிக்க ‘மகள்’ என்றும் இன்று சொல்கிறோம் !

ஆனால் தொல்காப்பியர் காலத்தில், ‘மக’ என்று சொல்லால் இருவரையுமே குறித்தனர் !

அதனால்தான் ‘மக’ என்ற இந்த அகர ஈற்றுச் சொல்லைக் கையில் எடுக்கிறார் தொல்காப்பியர் !

‘மக’வின் கை – இதனை எப்படிசொல்லலாம் ?

மகக் கை – இது சரியா?
மகங் கை – இது சரியா?
தொல்காப்பிய விதி யாது ?

இதோ !:-
“மகப்பெயர்க் கிளவிக் கின்னே சாரியை” (உயிர்மயங் . 16)

மக + கை = மகக் கை ×
மக + கை = மகங் கை ×
மக + கை = மக+இன் + கை (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் கை
                                                          (வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)

மக + செவி = மகச் செவி×
மக + செவி = மகஞ் செவி ×
மக + செவி = மக+இன் + செவி (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் செவி
                                                          (வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)

மக + தலை = மகத் தலை ×
மக + தலை = மகந் தலை ×
மக + தலை = மக+இன் + தலை (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் தலை
                                                          (வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)

மக + புறம் = மகப் புறம் ×
மக + புறம் = மகம் புறம் ×
மக + புறம் = மக+இன் + புறம் (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் புறம்
                                                          (வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)

மேல் எடுத்துக்காட்டுகளில் , வருசொற்கள் யாவும் வல்லெழுத்தை முதலாகக் கொண்டவை என்பதைக் கவனியுங்கள் !
அப்படியானால் ,மெல்லெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் புணரவந்தால் ?
இளம்பூரணர் விடை தருகிறார் ! -

 “சரியைப் பேறு வரையாது கூறியவழி நான்கு கணத்துக் கண்ணும் செல்லுமென்பதாகலின் , மகவின் ஞாண்  என இயல்புக் கணத்துக் கணத்தும் கொள்க !”

அஃதாவது-

மக + ஞாண் = மகஞ்ஞாண் ×
மக + ஞாண் = மகஞாண் ×
மக + ஞாண் = மக + இன் + ஞாண் (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் ஞாண்  
                                              (வேற்றுமைப் புணர்ச்சி)

                ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (255)

Post by Dr.S.Soundarapandian on Sat Jul 05, 2014 9:50 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (255)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

 ‘மக’ என்ற சொல்லானது ‘இன்’ சாரியை பெற்று , ‘மகவின் கை’ , ‘மகவின் கால்’ என்றெல்லாம் புணரும் என்று சற்றுமுன் பார்த்தோம் !

அப்போது ஒரு மாணவனின் ஐயம் !-

“ இன் சாரியை பெற்றது சரி ! அதைப்போல அத்துச் சாரியை பெறலாமா?”.

  “ஓ பெறலாமே” – தொல்காப்பியரின் விடை !:

“அத்தவண் வரினும் வரைநிலை யின்றே”  (உயிர்மயங் . 17)

மக + கை = மகக் கை ×
மக + கை = மகங் கை ×
மக + கை = மக+இன் + கை (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் கை √
                                              (வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + கை = மக+அத்து + கை (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துக் கை √
வேற்றுமைப் புணர்ச்சி)

மக + செவி = மகச் செவி×
மக + செவி = மகஞ் செவி ×
மக + செவி = மக+இன் + செவி (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் செவி √
                                                          (வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + செவி = மக+அத்து + செவி (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துச் செவி√
வேற்றுமைப் புணர்ச்சி)

மக + தலை = மகத் தலை ×
மக + தலை = மகந் தலை ×
மக + தலை = மக+இன் + தலை (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் தலை √
                                                          (வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + தலை = மக+அத்து + தலை (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துத் தலை√
(வேற்றுமைப் புணர்ச்சி)

மக + புறம் = மகப் புறம் ×
மக + புறம் = மகம் புறம் ×
மக + புறம் = மக+இன் + புறம் (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின் புறம் √
                                                          (வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + புறம் = மக+அத்து + புறம் (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துப் புறம் √
(வேற்றுமைப் புணர்ச்சி)

இங்கே இளம்பூரணர் ஒரு சமுதாயச் செய்தியைச் சொல்கிறார் !

மகனுக்கோ மகளுக்கோ நல்ல பால்தரும் ஆட்டைக் கொடுத்தால் அந்த ஆடு ‘மகப்பால் யாடு’ எனப்படும் என்கிறார் !

இதனை, “ அவண் என்றதனால் , மகப்பால் யடு என வல்லெழுத்துப் பேறும் , … ‘நிலை’ என்றதனால் ,  ‘மகம்பால் யாடு’ என வல்லெழுத்துப் பேறும் கொள்க !”
என்ற அவரது உரையால் அறிகிறோம் !

மக + பால்யாடு = மக+இன் + பால்யாடு (இன் – சாரியை சேர்ந்தது) = மகவின்
                            பால்யாடு √ (வ் - உடம்படுமெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)
மக + பால்யாடு = மக+அத்து + பால்யாடு (அத்து – சாரியை சேர்ந்தது) = மகத்துப்    
                            பால்யாடு √(ப்-வல்லெழுத்துப் பேறு வந்த்து)(வேற்றுமைப்  
                            புணர்ச்சி)
மக + பால்யாடு = மக+ம் + பால்யாடு  (ம்- மெல்லெழுத்துப் பேறு வந்தது) = மகம்    
                            பால்யாடு √(வேற்றுமைப்  
                            புணர்ச்சி)

 அப்போதைய மக்கள் வழக்காறுகளுக்கு மதிப்புக்கொடுத்துத்தான் இளம்பூரணர் உரை எழுதியுள்ளார் என்ற அவரது உரைக்கோட்பாடு (Ilampuranar’s Theory of Commentary) இதன்மூலம் அறியப்படுகிறதலாவா?

                                                                               ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (256)

Post by Dr.S.Soundarapandian on Sun Jul 06, 2014 4:15 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (256)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘பல’ எனும் சொல் (இது அகர ஈற்றுப் பெயர்ச் சொல்), வல்லெழுத்தை முதலாக உடைய சொற்களோடு புணரும்போது எப்படிப் புணரும் என்று கீழே காட்டுகிறார் !:-

“பலவற் றிறுதி யுருபிய னிலையும்” (உயிர்மயங். 18)

‘பலவற் றிறுதி’ – ‘பல’ எனும் சொல்லின் ஈறு,வல்லெழுத்தை முதலாக உடைய சொற்களோடு சேரும்போது,
‘உருபியல் நிலையும்’ – உருபியலில் (நூற்பா2) கூறியபடி ‘வற்று’ச் சாரியை பெறும் !

பல + கோடு = பலக் கோடு ×
பல + கோடு = பல + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) = பலவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)

பல + செவி = பலச் செவி ×
பல + செவி = பல + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = பலவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)

பல + தலை = பலத் தலை ×
பல + தலை = பல + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = பலவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)

பல + புறம் = பலப் புறம் ×
பல + புறம் = பல + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) = பலவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)

இளம்பூரணர்,  ‘பல’ என்ற ஒரு சொல்லுக்கு மட்டும்தான் எடுத்துக்காட்டுகள் கூறினார் !

நச்சினார்க்கினியர் , சற்றே விரித்துப் , ‘பல்ல’  , ‘உள்ள’, ‘இல்ல’ , ‘சில’ஆகிய அகர ஈற்றுப் பெயர்ச்சொற்களுக்கும் இந்தநூற்பா பொருந்தும் எனக் கருதி இவற்றுக்கும் எடுத்துக்காட்டுகள் கூறியுள்ளார் !-

1.பல்ல + கோடு = பல்லக் கோடு ×
  பல்ல + கோடு = பல்ல + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) =   பல்லவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)

பல்ல + செவி = பல்லச் செவி ×
பல்ல + செவி = பல்ல + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = பல்லவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)

பல்ல + தலை = பல்லத் தலை ×
பல்ல + தலை = பல்ல + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = பல்லவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)

பல்ல + புறம் = பல்லப் புறம் ×
பல்ல + புறம் = பல்ல + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) = பல்லவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)


2 .உள்ள + கோடு = உள்ளக் கோடு ×
உள்ள + கோடு = உள்ள + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) =  உள்ளவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)

உள்ள + செவி = உள்ளச் செவி ×
உள்ள + செவி = உள்ள + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = உள்ளவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)

உள்ள + தலை = உள்ளத் தலை ×
உள்ள + தலை = உள்ள + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = உள்ளவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)

உள்ள + புறம் = உள்ளப் புறம் ×
உள்ள + புறம் = உள்ள + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) = உள்ளவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)

3 . இல்ல + கோடு = இல்லக் கோடு ×
இல்ல + கோடு = இல்ல + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) =  இல்லவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)

இல்ல + செவி = இல்லச் செவி ×
இல்ல + செவி = இல்ல + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) =  இல்லவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)


இல்ல + தலை = இல்லத் தலை ×
இல்ல + தலை = இல்ல + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = இல்லவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)

இல்ல + புறம் = இல்லப் புறம் ×
இல்ல + புறம் = இல்ல + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) =இல்லவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)

.
4. சில + கோடு = சிலக் கோடு ×
சில + கோடு = சில + வற்று + கோடு (வற்று – சாரியை சேர்கிறது) =சிலவற்றுக் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி)

சில + செவி = சிலச் செவி ×
சில + செவி = சில + வற்று + செவி (வற்று – சாரியை சேர்கிறது) = சிலவற்றுச் செவி √(வேற்றுமைப் புணர்ச்சி)


சில + தலை = சிலத் தலை ×
சில + தலை = சில + வற்று + தலை (வற்று – சாரியை சேர்கிறது) = சிலவற்றுத் தலை √(வேற்றுமைப் புணர்ச்சி)

சில + புறம் = சிலப் புறம் ×
சில + புறம் = சில + வற்று + புறம் (வற்று – சாரியை சேர்கிறது) = சிலவற்றுப் புறம் √(வேற்றுமைப் புணர்ச்சி)

 ‘பல’ , ‘சில’ ‘உள்ள’ – ஆகிய மூன்றும் வழக்கில் வருவன!

‘பல்ல’ , ‘சில்ல’ – ஆகிய இரண்டும் செய்யுளில் வருவன!

இதிலிருந்து உரையாசிரியர்கள் பாடற் சொற்களை மட்டுமின்றி வழக்குச் சொற்களையும் கருத்தில்கொண்டே உரை எழுதியுள்ளனர் என்பது புலனாகிறதல்லவா?

இதுவே தொல்காப்பிய உரைக்கோட்பாடு (Commentary Theory of Tholkappiyam)!

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (257)

Post by Dr.S.Soundarapandian on Mon Jul 07, 2014 10:33 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (257)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

  ‘பல’ எனும் அகர ஈற்றுப் பெயர்சொற்களின் புணர்ச்சி விதிகளைப் பார்த்தோம் !

ஒருவழியாக அகர ஈற்றுப் பெயர்களை முடித்த தொல்காப்பியர் , ஆகார ஈற்றுப் பெயர்களைக் கையில் எடுக்கிறார் ! :-

“ஆகார விறுதி யகர வியற்றே ” (உயிர்மயங் . 19)

‘ஆகார இறுதி’ -  ‘ஆ’வை ஈற்றிலே கொண்ட பெயர்ச் சொற்கள் , வல்லெழுத்துச் சொற்களுடன் புணரும்போது ,
‘ அகர இயற்றே’ – ‘அ’வை ஈற்றிலே கொண்ட பெயர்ச் சொற்கள் புணர்ந்ததுபோலப் புணரும் !
   ‘அ’வை ஈற்றிலே கொண்ட பெயர்ச் சொற்கள் புணரும் இலக்கணத்தைத் தொல்காப்பியர் உயிர்மயங்கியல் நூற்பா 1இல் விளக்கியதை நாம் விரிவாகப் பார்த்துள்ளோம் (விள + குறிது = விளக் குறிது)!

ஆகார ஈற்றுச் சொற்களின் புணச்சிகளை இளம்பூரணர் எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில் காண்போம் !-


1. ஆரா + கடிது = ஆரா கடிது ×
  ஆரா + கடிது = ஆராக் கடிது √ (க்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                      புணர்ச்சி)

ஆரா + சிறிது = ஆரா சிறிது ×
ஆரா + சிறிது = ஆராச் சிறிது √ (ச்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                      புணர்ச்சி)

ஆரா + தீது = ஆரா தீது ×
ஆரா + தீது = ஆராத் தீது √ (த்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                      புணர்ச்சி)

ஆரா + பெரிது = ஆரா பெரிது ×
ஆரா + பெரிது = ஆராப் பெரிது √ (ப்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                      புணர்ச்சி)

(ஆரா – பாம்பு)


2 . தாரா + கடிது = தாரா கடிது ×
   தாரா + கடிது = தாராக் கடிது √ (க்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                                புணர்ச்சி)

தாரா + சிறிது = தாரா சிறிது ×
தாரா + சிறிது = தாராச் சிறிது √ (ச்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                      புணர்ச்சி)

தாரா + தீது = தாரா தீது ×
தாரா + தீது = தாராத் தீது √ (த்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                      புணர்ச்சி)

தாரா + பெரிது = தாரா பெரிது ×
தாரா + பெரிது = தாராப் பெரிது √ (ப்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                      புணர்ச்சி)

(தாரா – குள்ள வாத்து)

இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளை மட்டும் இளம்பூரணர் கூற , நச்சினார்க்கினியர் ‘மூங்கா’என்ற இன்னொரு ஆகார ஈற்றுப் பெயரை அறிமுகப்படுத்துகிறார் !-

   மூங்கா + கடிது = மூங்கா கடிது ×
   மூங்கா + கடிது = மூங்காக் கடிது √ (க்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                                புணர்ச்சி)

மூங்கா + சிறிது = மூங்கா சிறிது ×
மூங்கா + சிறிது = மூங்காச் சிறிது √ (ச்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                      புணர்ச்சி)

மூங்கா + தீது = மூங்கா தீது ×
மூங்கா + தீது = மூங்காத் தீது √ (த்- வல்லெழுத்துப் பெற்றது) (அல்வழிப்
                                      புணர்ச்சி)

மூங்கா + பெரிது = மூங்கா பெரிது ×
மூங்கா + பெரிது = மூங்காப் பெரிது √ (ப்- வல்லெழுத்துப் பெற்றது)    
(அல்வழிப் புணர்ச்சி)

(மூங்கா – கீரி)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (258)

Post by Dr.S.Soundarapandian on Tue Jul 08, 2014 8:43 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (258)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 அகர ஈற்றுப் பெயர்ச்சொற்கள், ஆகார ஈற்றுப் பெயர்ச்சொற்கள் , வல்லெழுத்துகளை முதலாகக் கொண்ட வருமொழிகளோ
டு எப்படிப் புணரும் எனக் காட்டினார் தொல்காப்பியர் !

இப்போது , வினையெச்சச் சொற்களைக் கையில் எடுக்கிறார் !

‘உண்ணாது சென்றான்’ என்ற பொருளில் வரும்,

‘உண்ணாச் சென்றான்’ – இது சரியா?
‘உண்ணா சென்றான்’ – இது சரியா?

- தொல்காப்பிய விதி யாது?

விதி –
“செய்யா வென்னும் வினையெஞ்சு கிளவியும்
அவ்வியல் திரியா தென்மனார் புலவர்”  (உயிர்மயங் . 20)

  ‘செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும் ’ – ‘செய்யா’ எனும் வாய்பாட்டில் வரக்கூடிய வினையெச்சச் சொல்லும் ,

‘அவ்வியல் திரியாது  என்மனார் புலவர்’ – முன் நூற்பாவில்  (உயிர்மயங். 19) கூறியபடி , வல்லெழுத்துச் சந்தி பெறுவதில் மாறாது என்று புலவர்கள் கூறுவார்கள்!  

உண்ணா + கொண்டான் = உண்ணா கொண்டான் ×
உண்ணா + கொண்டான் = உண்ணாக் கொண்டான் √ (க்- வல்லெழுத்துச்  
                                      சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)

உண்ணா + சென்றான் = உண்ணா சென்றான் ×
உண்ணா + சென்றான் = உண்ணாச் சென்றான் √ (ச்- வல்லெழுத்துச்  
                                      சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)

உண்ணா + தந்தான் = உண்ணா தந்தான் ×
உண்ணா + தந்தான் = உண்ணாத் தந்தான் √ (த்- வல்லெழுத்துச்  
                                      சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)

உண்ணா + போயினான் = உண்ணா போயினான் ×
உண்ணா + போயினான் = உண்ணாப் போயினான் √ (ப்- வல்லெழுத்துச்  
                                      சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)

இங்கே , இளம்பூரணர் ஓர் உரை நுட்பம் கூறுகிறார் !-

“ செய்யா என்னும் பெயரெச்சமும் அவ்வாறு முடியுமெனக் கொள்க !”

‘சாப்பிடாத கொற்றன்’ என்ற பொருளில் வருவது – ‘உண்ணாக் கொற்றன்’ .

இங்கே ‘உண்ணா’ எனும் சொல்,  ‘செய்யா’ எனும் வாய்பாட்டில் உள்ளது ;அவ்வளவுதன் !

உண்ணா + கொற்றன் = உண்ணா கொற்றன் ×
உண்ணா + கொற்றன் = உண்ணாக் கொற்றன் √(க்- வல்லெழுத்துச்  
                                      சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)

உண்ணா + சாத்தன் = உண்ணா சாத்தன் ×
உண்ணா + சாத்தன் = உண்ணாச் சாத்தன் √(ச்- வல்லெழுத்துச்  
                                      சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)

உண்ணா + தேவன் = உண்ணா தேவன் ×
உண்ணா + தேவன் = உண்ணாத் தேவன் √(த்- வல்லெழுத்துச்  
                                      சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)

உண்ணா + பூதன் = உண்ணா பூதன் ×
உண்ணா + பூதன் = உண்ணாப் பூதன் √(ப்- வல்லெழுத்துச்  
                                      சந்தி பெற்றது) (அல்வழிப் புணர்ச்சி)

 
பார்த்தீர்களா?

தொல்காப்பியர் , வினையெச்சத்தை வைத்து விதி எழுதினால் , உரையாசிரியர்கள் ஒரு படி மேலேபோய் , அந்த விதி பெயரெச்சத்திற்கும் பொருந்துமா எனச் சிந்தித்துள்ளார்களே ?

இதுதான் உரைக்கோட்பாடு (Theory of Commentary) என்பது !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (259)

Post by Dr.S.Soundarapandian on Wed Jul 09, 2014 4:24 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (259)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘இரவும் பகலும்’ என்ற பொருளைத் தெரிவிக்க,
‘இரா பகல்’ – இது சரியா?
‘இராஅப் பகல்’ – இது சரியா?

- தொல்காப்பிய விதி யாது ?

இதோ விதி ! :-

 “உம்மை எஞ்சிய விருபெயர்த் தொகைமொழி
  மெய்ம்மை யாக வகர மிகுமே ”                     (உயிர்மயங். 21)

‘உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகை மொழி’ – ‘உம்’
என்ற சொல் இல்லாது , ஆகர ஈற்று நிலைமொழிச் சொல்லோடு, இன்னொரு  பெயர்ச் சொல்  சேர்ந்து ஒரு தொகைச் சொல்லாக நிற்கும்போது,

‘மெய்ம்மையாக  அகரம் மிகுமே’ – உண்மையில் சந்தியாக ‘அ’ தோன்றும் !

உவா + பதினான்கு = உவாப் பதினான்கு ×
 உவா + பதினான்கு = உவா +அ + பதினான்கு (அ- தோன்றியது) =    
                                  உவாஅப் பதினான்கு √(ப்- சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
[உவா – பௌர்ணிமை (Full moon) யையும் , அமாவாசை(New moon)யையும் குறிக்கும் பொதுச் சொல் ]

இரா + பகல் = இராப் பகல் ×
இரா + பகல் = இரா +அ + பகல் (அ- தோன்றியது) =    
                                  இராஅப் பகல் √(ப்- சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)

இங்கே இளம்பூரணர் , “இம் முடிபு இருபெயரொட்டுப் பண்புத் தொகைக்கும் கொள்க .” என்கிறார் !

என்ன பொருள்?
அரா + குட்டி = அராக் குட்டி ×
அரா + குட்டி = அராஅக் குட்டி √ (அ - தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
‘அராஅக் குட்டி’ = குட்டியாகிய பாம்பு ; இருபெயரொட்டுப் பண்புத் தொகை. ‘ஆகிய’ என்ற பண்பு உருபு மறைந்து வந்ததைக் கவனிக்க !

அடுத்து , இளம்பூரணர் , “எழுவாய் முடிபிற்கும் அகரப் பேறு கொள்க” என்கிறார் !

என்ன பொருள்?
   உவா + கொடிது = உவாக் கொடிது ×
  உவா + கொடிது = உவாஅக் கொடிது √(அ - தோன்றியது) (அல்வழிப்
                                              புணர்ச்சி)
‘உவாஅக்  கொடிது’ என்பதில் ,  ‘உவா’ – எழுவாய் ; ‘உவாஅக்  கொடிது’ – எழுவாய்த் தொடர் .

அடுத்து , இளம்பூரணர் , “பெயரெச்சத்திற்கும்  அகரப்  பேறு கொள்க” என்கிறார் !

என்ன பொருள்?

உவா + காக்கை = உவாக் காக்கை ×
உவா + காக்கை = உவாஅக் காக்கை √(அ - தோன்றியது) (அல்வழிப்
                                              புணர்ச்சி)
உவாஅக் காக்கை – உவா நாளில் வரும் காக்கை ; எனவே,
‘உவாஅக் காக்கை ’ என்பதில் , ‘உவா’ , பெயரெச்சம் !
‘உவாஅக் காக்கை ’ – பெயரெச்சத் தொடர் .

மேலை எடுத்துக்காட்டுகளில் , வருமொழிகள் யாவையும் வல்லெழுத்தை முதலாக உடையன என்பதைக் கவனியுங்கள் !

எனவேதான்  இளம்பூரணர் , “இயல்புக் கணத்துக் கண்ணும் அகரப் பேறு கொள்க” என்றார் !

என்ன பொருள்?
இறா + வழுதுணங்காய் = இறா வழுதுணங்காய் ×
இறா + வழுதுணங்காய் = இறாஅ  வழுதுணங்காய் √(அ - தோன்றியது)
                                          (அல்வழிப் புணர்ச்சி)

இங்கே , ‘வழுதுணங்காய்’ என்ற வருமொழி முதல் எழுத்து, இடையின எழுத்து என்பதைக் கவனியுங்கள் !
(இறாஅ  வழுதுணங்காய் – இறா மீனும் கத்தரிக்காயும்)

‘இராஅப் பகல்’ என்ற தொல்காப்பிய விதியைப்  பார்த்தோம் ! ஆனால் , இன்று இப்புணர்ச்சி இல்லை ! ‘இராப் பகலாக உழைக்கிறாள்’ என்றுதானே இன்று எழுதுகிறோம் ?

இராப் பகல்’ என்றால், ‘இல்லாத பகல்’ என்றொரு பொருளும் ஏற்படுமல்லவா? இதைத் தவிர்க்கவே, தொல்காப்பியர் நாளில், ‘அ’ சேர்த்து எழுதும் முறை தோன்றியது ! ஆனால் எழுதும்போது ‘அ’வைஎழுதிவிடலாமே தவிர சொல்லும்போது தனியாக நிறுத்தி ‘அ’வை மட்டும் உச்சரிக்கமுடியாது ! இதனால்தான்  ‘அ’ சேர்வது வழக்கொழிந்தது !

எனவே ,
இரா பகல் ×
இராஅப் பகல் √
இராப்  பகல் √

    ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (260)

Post by Dr.S.Soundarapandian on Thu Jul 10, 2014 7:15 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (260)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 உயிர் மயங்கியலில் ,  உயிர் எழுத்துகளை ஈற்றிலே  கொண்ட  சொற்கள் பிறசொற்களோடு எப்படிப் புணரும் என்று பார்த்துவருகிறோம் !

சந்தி பெற்றுப் புணரும் சில சொற்களை முன் ஆய்வில் பார்த்தோம் !

இப்போது தொல்காப்பியர் சந்தி எதுவும் பெறாது , இயல்பாகப் புணரும் சொற்களைப் பட்டியல் இடுகிறார் ! :-

1 . பசுவைக் குறிக்கும் ‘ஆ’ என்ற சொல் –

ஆ + குறிது = ஆக் குறிது ×
ஆ + குறிது = ஆ குறிது √  (அல்வழிப் புணர்ச்சி)

ஆ + சிறிது = ஆச் சிறிது ×
ஆ + சிறிது = ஆ சிறிது √  (அல்வழிப் புணர்ச்சி)

ஆ + தீது = ஆத் தீது ×
ஆ + தீது = ஆ தீது √  (அல்வழிப் புணர்ச்சி)

ஆ + பெரிது = ஆப் பெரிது ×
ஆ + பெரிது = ஆ பெரிது √  (அல்வழிப் புணர்ச்சி)


இங்கே தொல்காப்பியர் கூறியுள்ளது ‘ஆ’வை ஈற்றிலே கொண்ட சொல்லுக்கான புணர்ச்சி பற்றியது அல்ல ! ‘ஆ’ என்ற தனிச் சொல்லின் புணர்ச்சி பற்றியதாகும் ! இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது !
’ஆ’வை ஈற்றிலே கொண்ட சொல்லானால், சந்தி வரும் ! தாரா + குறிது = தாராக் குறிது(அல்வழிப் புணர்ச்சி) !

2 .  விலங்கைக் குறிக்கும் ‘மா’ எனும் சொல் !:-

மா + குறிது = மாக் குறிது ×
மா + குறிது = மா குறிது √ (அல்வழிப் புணர்ச்சி)

மா + சிறிது = மாச் சிறிது ×
மா + சிறிது = மா சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)

மா + தீது = மாத் தீது ×
மா + தீது = மா தீது √ (அல்வழிப் புணர்ச்சி)

மா + பெரிது = மாப் பெரிது ×
மா + பெரிது = மா பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)

3. விளித்தலை உடைய பெயர்ச்சொல்லாகிய உயர்திணைச் சொல் !:-

ஊரா + கொள் = ஊராக் கொள் ×
ஊரா + கொள் = ஊரா கொள் √(அல்வழிப் புணர்ச்சி)


ஊரா + செல்= ஊராச் செல் ×
ஊரா + செல் = ஊரா செல் √(அல்வழிப் புணர்ச்சி)


ஊரா + தா = ஊராத் தா ×
ஊரா + தா = ஊரா தா √(அல்வழிப் புணர்ச்சி)

ஊரா + போ = ஊராப் போ ×
ஊரா + போ = ஊரா போ √ (அல்வழிப் புணர்ச்சி)

(ஊரா – ஊரனே; ஊரன் – பெயர்ச் சொல்)

4 . வினாப் பொருளில் வரும் ‘யா’ என்ற பெயர்ச் சொல் !:-

யா + குறிய = யாக் குறிய ×
யா + குறிய = யா குறிய √(அல்வழிப் புணர்ச்சி)

யா + சிறிய = யாச் சிறிய ×
யா + சிறிய = யா சிறிய √(அல்வழிப் புணர்ச்சி)

யா + தீய = யாத் தீய ×
யா + தீய = யா தீய √(அல்வழிப் புணர்ச்சி)

யா + பெரிய = யாப் பெரிய ×
யா + பெரிய = யா பெரிய √ (அல்வழிப் புணர்ச்சி)

      (யா – யாவை ;  யா குறிய – எவை குட்டையானவை ?)

5 .  ‘ஆ’வை ஈற்றிலே கொண்ட , பன்மையை உணர்த்தும், வினை முற்று !:-

உண்ணா + குதிரை = உண்ணாக் குதிரை ×
உண்ணா + குதிரை = உண்ணா குதிரை √ (அல்வழிப் புணர்ச்சி)

உண்ணா + செந்நாய் = உண்ணாச் செந்நாய் ×
உண்ணா + செந்நாய் = உண்ணா செந்நாய் √ (அல்வழிப் புணர்ச்சி)

உண்ணா + தகர் = உண்ணாத் தகர் ×
உண்ணா + தகர் = உண்ணா தகர் √ (அல்வழிப் புணர்ச்சி)

உண்ணா + பன்றி = உண்ணாப் பன்றி ×
உண்ணா + பன்றி = உண்ணா பன்றி √ (அல்வழிப் புணர்ச்சி)

 (உண்ணா – உண்ண மாட்டா; உண்ணா -   ‘ஆ’வை ஈற்றிலே கொண்ட ,           பன்மையை உணர்த்தும், வினை முற்று)

6 . ‘மியா’ என்ற, முன்னிலை வினைச் சொல்லைக் குறித்துவரும் , ஏவல் ,        
                உரையசைச் சொல் !:-

கேண்மியா + கொற்றா = கேண்மியாக் கொற்றா  ×
கேண்மியா + கொற்றா = கேண்மியா கொற்றா  √(அல்வழிப் புணர்ச்சி)

கேண்மியா + சாத்தா = கேண்மியாச் சாத்தா  ×
கேண்மியா + சாத்தா = கேண்மியா சாத்தா  √ (அல்வழிப் புணர்ச்சி)

கேண்மியா + தேவா = கேண்மியாத் தேவா  ×
கேண்மியா + தேவா = கேண்மியா தேவா  √ (அல்வழிப் புணர்ச்சி)

கேண்மியா + பூதா = கேண்மியாப் பூதா  ×
கேண்மியா + பூதா = கேண்மியா பூதா  √ ( அல்வழிப் புணர்ச்சி)

 (கேண்மியா – ‘கேள்’ என்ற வினைச் சொல்லோடு , ‘மியா’ என்ற அசைச் சொல் ஈறாக  வந்துள்ளதைக் கவனிக்க ; ‘மியா’ என்பது  தனிச் சொல்லாக இது வராது !  )

7 .  ‘ஆ’வை ஈற்றிலே கொண்ட , தனது தொழிலைச் சொல்லும், வினா !:-

உண்கா + கொற்றா = உண்காக் கொற்றா ×
உண்கா + கொற்றா = உண்கா கொற்றா √ ( அல்வழிப் புணர்ச்சி)

உண்கா + சாத்தா = உண்காச் சாத்தா ×
உண்கா + சாத்தா = உண்கா சாத்தா √ ( அல்வழிப் புணர்ச்சி)

உண்கா + தேவா = உண்காத் தேவா ×
உண்கா + தேவா = உண்கா தேவா √ ( அல்வழிப் புணர்ச்சி)

உண்கா + பூதா = உண்காப் பூதா ×
உண்கா + பூதா = உண்கா பூதா √ ( அல்வழிப் புணர்ச்சி)

 (உண்கா – உண்பேனோ ? ‘உண்பேனோ’ என்பது தன் வினையைக் குறிக்கும் என்பதைக் கவனிக்க !)

   மேலே  7 சொற்களும் இயல்பாகப் புணர்ந்ததைப் பார்த்தோமல்லவா?

இதைக் கூறும் தொல்காப்பிய நூற்பா !  -

“ஆவு மாவும் விளிப்பெயர்க் கிளவியும்
யாவென் வினாவும் பலவற் றிறுதியும்
ஏவல் குறித்த வுரையசை மியாவும்
தன்றொழி லுரைக்கும் வினாவின் கிளவியோ
டன்றி யனைத்து மியல்பென மொழிப”  (உயிர்மயங் . 22)

 பெயர்ச்சொல், வினைச்சொல்லோடு நிற்காது அசைச்சொல்லையும் கணக்கில் கொண்டு தொல்காப்பியர் விதி கூறியுள்ளது – வியப்பு ! வியப்பு !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (261)

Post by Dr.S.Soundarapandian on Fri Jul 11, 2014 11:23 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (261)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தாரா + குறிது = தாராக் குறிது
- இப் புணர்ச்சியை முன்பே இதே இயலில் பார்த்தோம்! நினைவிருக்கிறதா?

இப் புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி !

இதே  ‘ஆ’ ஈற்றுத் ‘தாரா’ , வேற்றுமைப் புணர்ச்சியில் எப்படிப் புணரும் ?

இதற்கு விடைகூறுவதுதான் நமது அடுத்த நூற்பா !:-

“வேற்றுமைக் கண்ணு  மதனோ ரற்றே” (உயிர்மயங். 23)

‘வேற்றுமைக் கண்ணும்’ – வேற்றுமைப் புணர்ச்சியிலும்,

‘அதனோர் அற்றே’ – முன்னே உருபியல் நூற்பா 19இல் கூறியபடியே வல்லெழுத்துச் சந்தி பெறும் !

1. தாரா + கால் = தாரா கால் ×
   தாரா + கால் = தாராக் கால் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

தாரா + சிறகு = தாரா சிறகு ×
தாரா + சிறகு = தாராச் சிறகு √ (வேற்றுமைப் புணர்ச்சி)

தாரா + தலை = தாரா தலை ×
தாரா + தலை = தாராத் தலை √ (வேற்றுமைப் புணர்ச்சி)

தாரா + புறம் = தாரா புறம் ×
தாரா + புறம் = தாராப் புறம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

(தாரா – குள்ள வாத்து ; இது முன்பும் கூறப்பட்டது)

2. மூங்கா + கால் = மூங்கா கால் ×
   மூங்கா + கால் = மூங்காக் கால் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

மூங்கா + சிறகு = மூங்கா சிறகு ×
மூங்கா + சிறகு = மூங்காச் சிறகு √ (வேற்றுமைப் புணர்ச்சி)

மூங்கா + தலை = மூங்கா தலை ×
மூங்கா + தலை = மூங்காத் தலை √ (வேற்றுமைப் புணர்ச்சி)

மூங்கா + புறம் = மூங்கா புறம் ×
மூங்கா + புறம் = மூங்காப் புறம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

(மூங்கா – கீரி ; இது முன்பும் கூறப்பட்டது)

3. வங்கா + கால் = வங்கா கால் ×
   வங்கா + கால் = வங்காக் கால் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

வங்கா + சிறகு = வங்கா சிறகு ×
வங்கா + சிறகு = வங்காச் சிறகு √ (வேற்றுமைப் புணர்ச்சி)

வங்கா + தலை = வங்கா தலை ×
வங்கா + தலை = வங்காத் தலை √ (வேற்றுமைப் புணர்ச்சி)

வங்கா + புறம் = வங்கா புறம் ×
வங்கா + புறம் = வங்காப் புறம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

(வங்கா – கொக்கு வகை )

‘ஆ’ ஈற்றுச் சொல் என்றால் விலங்குகள் , பறவைகள் மட்டும்தான் எனக் கொள்ளற்க !

பலா + சுவை = பலாச் சுவை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
பலா + சக்கை = பலாச் சக்கை √ (வேற்றுமைப் புணர்ச்சி)

- எனவும் புணரும் !
மேல் ‘வங்கா’ , நச்சினார்க்கினியர் உரையில் உள்ளதாகும் !

நச்சினார்க்கினியர் குறித்த வங்காவைப் பார்க்க ஆசையா?

[You must be registered and logged in to see this image.]

Courtesy –  carolinabirds.org

இதுதான் வங்கா!

இது ‘வக்கா’ எனவும் அறியப்படும் !

இதன் விலங்கியல் பெயர் – Ardea nivea

இதன் வடமொழிப் பெயர் – தாபஸ்

  ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Page 13 of 28 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 20 ... 28  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum