ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 M.Jagadeesan

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 SK

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 krishnanramadurai

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 ayyasamy ram

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Page 15 of 29 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 22 ... 29  Next

View previous topic View next topic Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Dr.S.Soundarapandian on Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம் (288)

Post by Dr.S.Soundarapandian on Mon Aug 11, 2014 2:02 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (288)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தொல்காப்பியர் , ‘ஈ’ ஈற்றை முடித்துக்கொண்டு , ‘உ’ ஈற்றுச் சொற்களுக்குத் திரும்புகிறார் ! –

“ உகர விறுதி யகர வியற்றே”  (உயிர்மயங். 52)

‘உகர இறுதி’ – ‘உ’வை ஈறாகக் கொண்ட சொற்கள் ,

‘அகர இயற்றே’ – ‘அ’ஈற்றுச் சொல்போலப் புணரும் !

’அ’ஈற்றுச் சொல் எப்படிப் புணரும் ?

அல்வழியில் , ‘விள + குறிது = விளக்குறிது’ (உயிர்மயங். 1)  என்று பார்த்தோமே , மறந்துவிட்டீர்களா?

இதேபோலத்தான் , அல்வழிப் புணர்ச்சியில்,

1 .கடு + குறிது = கடு குறிது ×
   கடு + குறிது = கடுங் குறிது ×
   கடு + குறிது = கடுக் குறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
                          (கடுக் குறிது – பாம்பு குட்டையானது)

2 .கடு + சிறிது = கடு சிறிது ×
   கடு + சிறிது = கடுஞ் சிறிது ×
   கடு + சிறிது = கடுச் சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
                        (கடுச் சிறிது – பாம்பு சிறியது)

3 .கடு + தீது = கடு தீது ×
   கடு + தீது = கடுந் தீது ×
   கடு + தீது = கடுத் தீது √ (அல்வழிப் புணர்ச்சி)
                     (கடுத் தீது – பாம்பு தீயது)

4 .கடு + பெரிது = கடு பெரிது ×
   கடு + பெரிது = கடும் பெரிது ×
   கடு + பெரிது = கடுப் பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
                      (கடுப் பெரிது – பாம்பு பெரியது)

‘கடு’ , கடுப்பைக் கிளப்புகிறதா?

அப்படியானால் , நமக்குப் பழக்கமான வடுமாங்காயைக் குறிக்கும் ‘வடு’ என்ற சொல்லை எடுத்து ஒரு கடி கடிப்போமே ?-

1 .வடு + குறிது = வடு குறிது ×
   வடு + குறிது = வடுங் குறிது ×
   வடு + குறிது = வடுக் குறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
                        (வடுக் குறிது – மாவடு குட்டையானது)

2 .வடு + சிறிது = வடு சிறிது ×
   வடு + சிறிது = வடுஞ் சிறிது ×
   வடு + சிறிது = வடுச் சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
                        (வடுச் சிறிது – மாவடு சிறியது)

3 .வடு + தீது = வடு தீது ×
   வடு + தீது = வடுந் தீது ×
   வடு + தீது = வடுத் தீது √ (அல்வழிப் புணர்ச்சி)
                       (வடுத் தீது – மாவடு தீயது)

4 .வடு + பெரிது = வடு பெரிது ×
   வடு + பெரிது = வடும் பெரிது ×
   வடு + பெரிது = வடுப் பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
                       (வடுப் பெரிது – மாவடு பெரியது)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (289)

Post by Dr.S.Soundarapandian on Tue Aug 12, 2014 1:49 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (289)
                          -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 ‘உ’  என்பது தமிழில் ஒரு சுட்டு எழுத்து !

இந்தச் சுட்டு எழுத்தானது எப்படிப் புணரும் என்பதற்கு ஒரு நூற்பா! :-

“சுட்டின் முன்னரு மத்தொழிற் றாகும்” (உயிர்மயங். 53)

இங்கு வந்துள்ள ‘அத் தொழிற்றாகும்’ , எத் தொழிற்றாகும் ?

மேல் ஆய்வில் நாம் ‘கடுக் குறிது’ என்ற புணர்ச்சியைப் பார்த்தோமல்லவா? அத் தொழிற்றாகும் !

அஃதாவது –
       
               வல்லொற்றுச் சந்தியைப் பெறும் ! –

1 .உ + கொற்றன் = உகொற்றன் ×
  உ + கொற்றன் = உக் கொற்றன் √ (அல்வழிப் புணர்ச்சி)
                        (உக் கொற்றன் – நடுவிடத்துக் கொற்றன்)

2 .உ + சாத்தன் = உசாத்தன் ×
  உ + சாத்தன் = உச் சாத்தன் √ (அல்வழிப் புணர்ச்சி)
                        (உச் சாத்தன் – நடுவிடத்துச் சாத்தன்)

3 .உ + தேவன் = உதேவன் ×
  உ + தேவன் = உத் தேவன் √ (அல்வழிப் புணர்ச்சி)
                        (உத் தேவன் – நடுவிடத்துத் தேவன்)

4 .உ + பூதன் = உபூதன் ×
  உ + பூதன் = உப் பூதன் √ (அல்வழிப் புணர்ச்சி)
                        (உப் பூதன் – நடுவிடத்துப் பூதன்)

                          மேல் நான்கு எடுத்துக்காட்டுகளிலும் வருமொழிகள் வல்லெழுத்தை முதலாக உடையவை என்பதைக் கவனிக்க !

‘உ’ என்ற சுட்டெழுத்து , தொல்காப்பியர் காலத்தில் வழக்கில் இருந்தது !

வள்ளுவர் காலத்திலும் இருந்தது !

இப்போது மறைந்துவிட்டது !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (290)

Post by Dr.S.Soundarapandian on Wed Aug 13, 2014 11:06 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (290)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 ‘உ’ ஈற்றுச் சொல் தொடர்கிறது !

மேலே , ‘உ’ ஈற்றுச் சொல்லுடன் வல்லெழுத்தை முதலாக உடைய சொல் வந்து புணர்ந்ததைப் பார்த்தோமல்லவா?

இப்போது , மெல்லெழுத்து, இடையெழுத்து , உயிரெழுத்தை முதலாக உடைய
சொற்கள் வந்து புணர்வதற்கு விதி கூறுகிறார் தொல்காப்பியர் ! –

“ஏனவை வரினே மேனிலை யியல்பே” (உயிர்மயங். 54)

             ‘ஏனவை’ - மெல்லெழுத்து, இடையெழுத்து , உயிரெழுத்தை முதலாக உடைய
சொற்கள்,

‘வரினே’ – வந்து புணர்ந்தால் ,

‘மேல் நிலை’ – உயிர்மயங்கியல் நூற்பா 1இல் , ‘அ’ ஈற்றுச் சொல்லானது, தத்தம் இன எழுத்தைச் சந்தியாகப் பெறும் எனக் கூறியதுபோல இங்கும் இன எழுத்துச் சந்தி தோன்றும் ;

‘இயல்பே’ – இதுதான் புணர்ச்சி இயல்பு !  

1. உ + ஞாண் = உஞாண் ×
உ + ஞாண் = உஞ்ஞாண் √  (அல்வழிப் புணர்ச்சி)
(உஞ்ஞாண் – நடுவிடத்துக் கயிறு)

2. உ + நூல் = உநூல் ×
உ + நூல் = உந்நூல் √  (அல்வழிப் புணர்ச்சி)
(உந்நூல் – நடுவிடத்து நூல்)

3. உ + மணி = உமணி ×
உ + மணி = உம்மணி √  (அல்வழிப் புணர்ச்சி)
(உம்மணி – நடுவிடத்து மணி)

4. உ + யாழ் = உயாழ் ×
உ + யாழ் = உய்யாழ் ×
உ + யாழ் = உவ்யாழ் √  (அல்வழிப் புணர்ச்சி)
(உவ்யாழ் – நடுவிடத்து யாழ்)

5. உ + வட்டு = உவட்டு ×
உ + வட்டு = உவ்வட்டு √  (அல்வழிப் புணர்ச்சி)
(உவ்வட்டு – நடுவிடத்து வட்டு)

6. உ + அடை = உவடை ×
உ + அடை = உவ்வடை √  (அல்வழிப் புணர்ச்சி)
(உவ்வடை – நடுவிடத்து அடை; அடை - அடைகல்)

7. உ + ஆடை = உவாடை ×
உ + ஆடை = உவ்வாடை √  (அல்வழிப் புணர்ச்சி)
(உவ்வாடை – நடுவிடத்து ஆடை)

8. உ + ஔவியம் = உவௌவியம் ×
உ + ஔவியம் = உவ்வௌவியம் √  (அல்வழிப் புணர்ச்சி)
(உவ்வௌவியம் – நடுவிடத்துப் பலிப்பொருள் ; ஔவியம் – கடவுளுக்கு இடும் பலிப்பொருள்)

இவற்றின் பின்னே , இளம்பூரணர், “ஊவயினான எனவும் வரும்” என்றார் !

அஃதாவது , பாட்டில் , ‘உ’ , ‘ஊ’வாகத் திரிதல் உண்டு என்கிறார் இளம்பூரணர் !இங்கு , உயிர்மயங்கியல் நூற்பா 6ஐ ( ‘நீட வருதல் செய்யுளுள் உரித்தே’) இணைத்துக் கருதுக!

இதன்படி –

9 . உ + வயினான = உவயினான ×
     உ + வயினான = ஊவயினான √ (அல்வழிப் புணர்ச்சி)
(ஊவயினான – நடுவிடம் ; ஆன - அசைநிலை)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (291)

Post by Dr.S.Soundarapandian on Thu Aug 14, 2014 9:26 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (291)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அது சிறிது
அதுச் சிறிது
- இவற்றில் எது சரி ?

தொல்காப்பியத்தைப் புரட்டுவோமே?

சுட்டெழுத்தின் முன்னே , வல்லெழுத்தை முதலாக உடைய சொல் வந்து புணர்ந்தால் ,
புணர்ச்சியில் ஒற்று மிகும் என்று முன்பு கண்டோம் ! ‘உ + கொற்றன் = உக்கொற்றன்’ எனவும் பார்த்தோம் !

இப்போது வினா - சுட்டெழுத்தை முதலாக உடைய சொல்லின் ஈற்றிலே ‘உ’ வந்தால் , எவ்வாறு புணர்ச்சி இருக்கும் ?

தொல்காப்பியர் கூறுகிறார் –

“சுட்டுமுத லிறுதி யியல்பா கும்மே” (உயிர்மயங். 55)

‘இயல்பாகும்மே’ – என்றால் இயல்பாகும்தான் !

இளம்பூரணர் எடுத்துக்காட்டுகளை விளக்கிக் கண்டால் இன்னும் தெளிவாகும் !-

1 . அது + குறிது = அதுக் குறிது ×
    அது + குறிது = அது குறிது √  (அல்வழிப் புணர்ச்சி)

2 . அது + சிறிது = அதுச் சிறிது ×
    அது + சிறிது = அது சிறிது √  (அல்வழிப் புணர்ச்சி)

3 . அது + தீது = அதுத் தீது ×
    அது + தீது = அது தீது √  (அல்வழிப் புணர்ச்சி)

4 . அது + பெரிது = அதுப் பெரிது ×
    அது + பெரிது = அது பெரிது √  (அல்வழிப் புணர்ச்சி)

5 . இது + குறிது = இதுக் குறிது ×
    இது + குறிது = இது குறிது √  (அல்வழிப் புணர்ச்சி)

6. இது + சிறிது = இதுச் சிறிது ×
    இது + சிறிது = இது சிறிது √  (அல்வழிப் புணர்ச்சி)

7 . இது + தீது = இதுத் தீது ×
    இது + தீது = இது தீது √  (அல்வழிப் புணர்ச்சி)

8 . இது + பெரிது = இதுப் பெரிது ×
    இது + பெரிது = இது பெரிது √  (அல்வழிப் புணர்ச்சி)

9 . உது + குறிது = உதுக் குறிது ×
    உது + குறிது = உது குறிது √  (அல்வழிப் புணர்ச்சி)

10 . உது + சிறிது = உதுச் சிறிது ×
     உது + சிறிது = உது சிறிது √  (அல்வழிப் புணர்ச்சி)

11 . உது + தீது = உதுத் தீது ×
     உது + தீது = உது தீது √  (அல்வழிப் புணர்ச்சி)

12 . உது + பெரிது = உதுப் பெரிது ×
      உது + பெரிது = உது பெரிது √  (அல்வழிப் புணர்ச்சி)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (292)

Post by Dr.S.Soundarapandian on Fri Aug 15, 2014 1:27 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (292)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘அதை’ , ‘இதை’ என்று பாட்டுகளில் வரும் சொற்களின் வரலாற்றை இப்போது தொல்காப்பியர் கூறபோகிறார், கேட்போமே ?

தொல்காப்பியம் ! –

“அன்றுவரு காலை யாவா குதலும்
 ஐவரு காலை மெய்வரைந்து கெடுதலும்
செய்யுண் மருங்கி னுரித்தென மொழிப  ”  (உயிர்மயங். 56 )

‘அன்றுவரு காலை’ – என்றதும் , என்றுவரு காலை ? எனக் கேட்காதீர்கள் !

‘அன்றுவரு காலை’ –  சுட்டெழுத்தை முதலாக உடைய சொல்லின் ஈற்று ‘உ’ முன்பாக, ‘அன்று’ எனும் சொல் வந்து புணருமோது,

‘ஆ ஆகுதலும்’  -  ‘உ’வானது , ‘ஆ’ என்ற எழுத்தாக ஆவதும்,

‘ஐ வருகாலை’ – ‘ஐ’ என்ற சாரியைச் சொல் வந்து புணரும்போது,

‘மெய் வரைந்து கெடுதலும்’ – ’உ’வானது , தான் ஏறியிருந்த மெய்யைத் தனியே விட்டுவிட்டுக் கெட்டுப்போவதும் ,

‘செய்யுள் மருங்கின் உரித்தென மொழிப  ’ – பாட்டுகளில் உண்டாகும் !

1 . அது + அன்று + அம்ம = அதன்றம்ம ×
    அது + அன்று + அம்ம = அதான்றம்ம ×
    அது + அன்று + அம்ம = அதாஅன்றம்ம √  (அல்வழிப் புணர்ச்சி)
                                  (அதாஅன்று - அதுவுமன்றி)

2 . இது + அன்று + அம்ம = இதன்றம்ம ×
    இது + அன்று + அம்ம = இதான்றம்ம ×
    இது + அன்று + அம்ம = இதாஅன்றம்ம √  (அல்வழிப் புணர்ச்சி)
                                                  (இதாஅன்று - இதுவுமன்றி)

3 . உது + அன்று + அம்ம = உதன்றம்ம ×
    உது + அன்று + அம்ம = உதான்றம்ம ×
    உது + அன்று + அம்ம = உதாஅன்றம்ம √  (அல்வழிப் புணர்ச்சி)
                                      (உதாஅன்று – உதுவுமன்றி; சுட்டிக் காட்டப்பட்ட அதுவும் அல்லாமல்)

அதாஅன்று , இதாஅன்று , உதாஅன்று – இவற்றில் வந்துள்ள ‘அ’ , அளபெடை அல்ல ! இந்த
‘அ’, ‘அன்று’ என்பதன் முதல் எழுத்து !

4 . அது + ஐ + மற்று + அம்ம = அதுவைமற் றம்ம ×
    அது + ஐ + மற்று + அம்ம = அதைமற் றம்ம √   (அல்வழிப் புணர்ச்சி)
                                        (அதைமற் றம்ம – அது ; மற்று , அம்ம – அசைநிலைகள் . )

5 . இது + ஐ + மற்று + அம்ம = இதுவைமற் றம்ம ×
    இது + ஐ + மற்று + அம்ம = இதைமற் றம்ம √   (அல்வழிப் புணர்ச்சி)
                               (இதைமற் றம்ம – இது )

6 . உது + ஐ + மற்று + அம்ம = உதுவைமற் றம்ம ×
    உது + ஐ + மற்று + அம்ம = உதைமற் றம்ம √   (அல்வழிப் புணர்ச்சி)
                          (உதைமற் றம்ம – உது )

 இங்கே வந்துள்ள ‘ஐ’ , வேற்றுமை உருபு அல்ல ! இது சாரியை !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by M.M.SENTHIL on Fri Aug 15, 2014 1:55 pm

என் தமிழை தூய தமிழாய் பார்க்கும் போதும், படிக்கும் போதும் ஏற்படும் பரவசத்திற்கு அளவுகோல் கிடையாது. மிக அருமையான பணியை செவ்வனே செய்து வருகிறீர்கள் அய்யா..

நன்றி., நன்றி. நன்றி.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (293)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 17, 2014 12:34 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (293)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உயிர்மயங்கியலில் , ‘உ’ஈற்றுச் சொற்களின் புணர்ச்சிகளைப் பார்த்துவருகிறோம் !

  முன்பு, ‘அது’ என்று ‘உ’வில் முடியும் சொல்லானது , அல்வழிப் புணர்ச்சியில், ஒற்று மிகாமல் புணரும் (அது + குறிது = அது குறிது) எனப் பார்த்தோம் !

நினைவிருக்கிறதா?

இப்போது , அதே வகையான சொல் – அஃதாவது , ‘உ’வில் முடியும் பெயர்ச் சொல் –
வல்லெழுத்தை முதலாக உடைய வருசொல்லுடன் புணரும்போது எப்படிப் புணரும் எனக் காட்டுகிறார் ! :-

“வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே” (உயிர்மயங். 57)  

1 .கடு + காய் = கடுங்காய் ×
   கடு + காய் = கடுக்காய் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(கடுக்காய் – கடு மரத்தின் காய்)

2 .கடு + செதிள் = கடுஞ்செதிள் ×
   கடு + செதிள் = கடுச்செதிள் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(கடுச்செதிள் – கடு மரத்தின் வெட்டுத்துண்டு)

3 .கடு + தோல் = கடுந்தோல் ×
   கடு + தோல் = கடுத்தோல் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(கடுத்தோல் – கடுமரத்தின் பட்டை )

4 .கடு + பூ = கடும்பூ ×
   கடு + பூ = கடுப்பூ √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(கடுப்பூ – கடு மரத்தின் பூ )

நச்சினார்க்கினியர் , வருமொழிகளாகப் பண்புப் பெயர்களையும் காட்டுகிறார் !:-

5 . கடு + கடுமை = கடுங் கடுமை ×
   கடு + கடுமை = கடுக் கடுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(கடுக் கடுமை – கடு மரத்தின் கடிய தன்மை )

6 . கடு + சிறுமை = கடுஞ் சிறுமை ×
   கடு + சிறுமை = கடுச் சிறுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(கடுச் சிறுமை – கடுமரத்தின் சிறுமைப் பண்பு )

7 . கடு + தீமை = கடுந் தீமை ×
   கடு + தீமை = கடுத் தீமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(கடுத் தீமை – கடு மரத்தின் தீய குணங்கள் )

8 . கடு + பெருமை = கடும் பெருமை ×
   கடு + பெருமை = கடுப் பெருமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(கடுப் பெருமை – கடு மரத்தின் பெருமைகள் )

உரையாசிரியர்கள் சொன்ன கடு என்ற மரத்தைக் கண்டு மகிழ்வோம் வருகிறீர்களா?
1.

[You must be registered and logged in to see this image.]
Courtesy - opendata.keystone-foundation.org
2.

[You must be registered and logged in to see this image.]
 
Coutesy - [You must be registered and logged in to see this link.]


3 .
[You must be registered and logged in to see this image.]

Courtesy - [You must be registered and logged in to see this link.]

4.
[You must be registered and logged in to see this image.]
Courtesy - [You must be registered and logged in to see this link.]

மேல் படங்கள் – கடுமரம் , கடுமரப் பூ, கடுமரக் காய், கடுக்காய் ஆகியன !

இதன் தாவரவியல் பெயர்- Terminalia chebula .
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (294)

Post by Dr.S.Soundarapandian on Mon Aug 18, 2014 11:41 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (294)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 பழந் தமிழகத்தில் எருவைக் (மாட்டுச் சாணத்தை) குழியில் கொட்டிவைப்பார்கள் ! அந்தக் குழியைச் சிலர் ‘எருவங் குழி’ என்றனர் ; சிலர் , ‘எருக் குழி’ என்றனர்; வேறு சிலர் , ‘எருங் குழி’என்றனர் !

- இவற்றில் எது சரி ?

இலக்கணம் என்ன சொல்கிறது ?

‘எருவங் குழி’ வடிவம் எவ்வாறு ஏற்படுகிறது என்று தனி ஒரு நூற்பாவே கூறியுள்ளார் தொல்காப்பியர் !
ஏனைய இரு வடிங்களையும் தம் உரையால் ‘அவையும் சரிதான்’ என்கிறார் இளம்பூரணர் !

நூற்பாவிலிருந்து  முறையாகத் தொடங்குவோமே ? :-

“எருவுஞ் செருவு மம்மொடு சிவணித்
திரிபிட  னுடைய தெரியுங் காலை
அம்மின் மகரஞ் செருவயிற் கெடுமே
தம்மொற்று மிகூஉம் வல்லெழுத் தியற்கை ” (உயிர்மயங். 58)

‘எருவும் செருவும் அம்மொடு சிவணி’ – ‘எரு’ என்ற சொல்லும் , ‘செரு’ என்ற சொல்லும் , ‘அம்’ சாரியையுடன் சேர்ந்து ,

‘திரிபிடன்  உடைய தெரியும் காலை’ – முன் நூற்பாவில் (உயிர்மயங்.57) வல்லெழுத்துச் சந்தி
(கடு + காய் = கடுக்காய்) பெறும் என்று கூறிய புணர்ச்சிக்கு மாறாக நடப்பதை ஆராயும்போது,

‘அம்மின் மகரம் செருவயின் கெடுமே’ – ‘அம்’சாரியையின் ‘ம்’ஆனது கெடும் ; ‘செரு’ என்பதன்
முன் வல்லெழுத்து வரும்போது , ‘ம்’கெட்ட அந்த இடத்திலே , அவ் வல்லொற்று சந்தியாகத் தோன்றும் !

இதற்கான நேர் எடுத்துக்காட்டுகளை  இளம்பூரணர் உரையால் அறியப்படும் புணர்ச்சிகளோடு சேர்த்து வருமாறு விளக்கலாம் ! :-

1 . எரு + குழி = எருவங் குழி √ (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58)
   எரு + குழி = எருக் குழி√ (சிறுபான்மை)(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58இளம். உரை)  
               
   எரு + குழி = எருங் குழி√ (சிறுபான்மை)( (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58இளம். உரை)
(எருவங் குழி – எருவைப் போட்டுவைக்கும் பள்ளம்)

2 . எரு + சேறு = எருவஞ் சேறு √ (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58)
    எரு + சேறு = எருச் சேறு√ (சிறுபான்மை)(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58இளம். உரை)                                                                                                                  
   எரு + சேறு = எருஞ் சேறு√ (சிறுபான்மை)( (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58இளம். உரை)
(எருவஞ் சேறு – எருவும் நீரும் கலந்த கலவை)


3 . எரு + தாது = எருவந் தாது √ (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58)
  எரு + தாது = எருத் தாது√  (சிறுபான்மை)(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங்.   58இளம். உரை)
   எரு + தாது = எருந் தாது√ (சிறுபான்மை)( (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58இளம். உரை)
(எருவந் தாது – எருவின் தூள்)

4 . எரு + பூழி = எருவம் பூழி √(அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58)
   எரு + பூழி = எருப் பூழி√  (சிறுபான்மை)(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58இளம். உரை)
   எரு + பூழி = எரும் பூழி√ (சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58இளம். உரை)
(எருவம் பூழி – எருவின் தூள்)

5 . எரு + கடுமை = எருவின் கடுமை √(இன்- சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58இளம். உரை)
(எருவின் கடுமை – எருவின் இறுகிய தன்மை)

6 . எரு + ஞாற்சி = எருவ ஞாற்சி √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58இளம். உரை)
(எருவ ஞாற்சி – எருவின் நாற்றம்)

1 முதல் 5 வரை , வல்லெழுத்தை முதலாக உடைய வருசொற்கள் இருப்பதையும், 6இல் மெல்லெழுத்தை முதலாக உடைய வருசொல் இருப்பதையும் கவனிக்க !

இப்போது ‘செரு’ –

7 . செரு + களம் = செருவங் களம் ×
      செரு + களம் = செருவக் களம் √(அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58)

8 .செரு + சேனை = செருவஞ் சேனை×
 செரு + சேனை = செருவச் சேனை√(அம் - சாரியை)( (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58 )

9 .செரு + தானை = செருவந் தானை×
  செரு + தானை = செருவத் தானை√ (அம் - சாரியை)( (வேற்றுமைப் புணர்ச்சி)    (உயிர்மயங். 58 )

10 .செரு + பறை = செருவம் பறை×
    செரு + பறை = செருவப் பறை√  (அம் - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58 )
(செருவப் பறை – போர்க்களப் பறை)

11.  செரு + களம் = செருக் களம் √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58 இளம்.உரை)
(செருக் களம் - போர்க்களம்)

12 . செரு + கடுமை = செருவின் கடுமை (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
                                                     (உயிர்மயங். 58 இளம்.உரை)
(செருவின் கடுமை – போர்க்களத்தின் கடுமை)

13 . செரு + ஞாற்சி = செருவ ஞாற்சி √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 58இளம். உரை)
(செருவ ஞாற்சி – போர்க்கள வித்தைகள் )

7 முதல் 12 வரை , வல்லெழுத்தை முதலாக உடைய வருசொற்கள் இருப்பதையும், 13இல் மெல்லெழுத்தை முதலாக உடைய வருசொல் இருப்பதையும் கவனிக்க !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (295)

Post by Dr.S.Soundarapandian on Tue Aug 19, 2014 11:53 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (295)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

'உ' ஈற்றுச் சொல் தொடர்கிறது ! :-

“ழகர வுகர நீடிட  னுடைத்தே
 உகரம் வருத லாவயி னான”   (உயிர்மயங். 59)

‘ழகர உகரம்’ – ழு என்ற எழுத்து ,

 ‘நீடு இடன் உடைத்தே ’ – ‘ழூ’ என்ற நீட்டல் வடிவத்தை எடுக்கும் !

‘உகரம் வருதல் ஆவயின் ஆன’ – அவ்விடத்தே , ‘உ’ தோன்றும் !

1 . பழு + பல் = பழுப் பல் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங்.57)
    பழு + பல் = பழூஉப் பல் √ (செய்யுளில் மட்டும்)(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங்.59)

(பழு - பேய் ; பழுப் பல் = பழூஉப் பல் = பேயின் பல் )

2 . எழு + கதவு = எழூஉக் கதவு √ (செய்யுளில் மட்டும்) (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங்.59)
(எழு – எழுச்சி ; முதனிலைத் தொழிற்பெயர்;எழூஉக் கதவு – எழுச்சியைத் தாங்கிய கதவு)

3 . குழு + தோற்றம் = குழூஉத் தோற்றம் ×
    குழு + தோற்றம் = குழுத் தோற்றம் √  (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங்.59 நச்சர் உரை)

4 . பழு + காய்= பழூஉக் காய் ×
    பழு + காய் = பழுக் காய் √  (அல்வழிப் புணர்ச்சி) (உயிர்மயங்.59 நச்சர் உரை)
(பழுக்காய் – பழுத்ததாகிய பாக்கு)

இறுதியாகப் , ‘பேய்’ நம்மைப் பிடிக்கும் முன் நாம் அதனைப் பிடிப்போம் !

‘பேய்’ என்பது ஆவி உலகத்தது அல்ல !

இயல்பு மாறி இருக்கும் நிலையைப் ‘பேய்’ என்று தமிழர்கள் குறித்தார்கள் !

‘பேய்ச் சுரைக்காய்’ என்றால் பேய் சாப்பிடும் சுரைக்காயா ?

அல்ல ! இயல்பான கறிச்சுரைக்காயினின்றும் மாறுபட்ட சுரைக்காய்தான் அது !

‘பேய்க் கரும்பு’ , ‘பேயன் பழம்’ என்றெல்லாம் வரக் காணலாம் !

ஆகவே ‘பேய்ப் பல்’ என்றால் ‘பெரிய பல்’ என்பது பொருள் !
யானையின் நகம் ஒரு பெரிய பல் போல இருந்ததாம் !  குறுந்தொகையில் (பாடல்180) இந்த அற்புதமான உவமை வந்துள்ளது !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (296)

Post by Dr.S.Soundarapandian on Wed Aug 20, 2014 11:59 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (296)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நமது முன் ஆய்வில் , ‘உதி’ என்ற உதிய மரத்தைப் பார்த்தோம் , நினைவிருக்கிறதா?

அந்த ‘உதி’  மரத்தின் கிளையை ‘உதிங்கோடு’ என்று கூறவேண்டும் என்றார் தொல்காப்பியர் !

உயிர்மயங்கியல் நூற்பா 41இல் இதனைப் பார்த்தோம் !

இப்போது ‘ஒடு’ மரத்தின் கிளையையும் அவ்வாறே ‘ஒடுங்கோடு’ என்று கூறுக என்கிறார் அவர் !:-

“ஒடுமரக் கிளவி உதிமர வியற்றே”  (உயிர்மயங். 60)

1 .  ஒடு + கோடு = ஒடுக் கோடு ×
  ஒடு + கோடு = ஒடுங் கோடு √  (வேற்றுமைப் புணர்ச்சி)

2 .  ஒடு + செதிள் = ஒடுச் செதிள் ×
    ஒடு + செதிள் = ஒடுஞ் செதிள் √  (வேற்றுமைப் புணர்ச்சி)

3 .  ஒடு + தோல் = ஒடுத் தோல் ×
    ஒடு + தோல் = ஒடுந் தோல் √  (வேற்றுமைப் புணர்ச்சி)


4 .  ஒடு + பூ = ஒடுப் பூ ×
    ஒடு + பூ = ஒடும் பூ √  (வேற்றுமைப் புணர்ச்சி)

இங்கே நச்சர் ஓர் இலக்கண நுட்பம் உரைக்கிறார் !

நச்சர் கூற்றுப்படி , ஒடு மரக் காட்டை எப்படிக் கூறவேண்டுமாம்?-

5 . ஒடு + காடு = ஒடுக் காடு ×
   ஒடு + காடு = ஒடுவங் காடு √ (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

தொல்காப்பியர் கூறிய ஒடு எனும் மரத்தை இப்போது பார்வையிடலாமா? –


1 .

[You must be registered and logged in to see this image.]
Courtesy - commons.wikimedia.org

2 .

[You must be registered and logged in to see this image.]
Courtesy - commons.wikimedia.org

3 .  
[You must be registered and logged in to see this image.]
Courtesy - commons.wikimedia.org

4 .
[You must be registered and logged in to see this image.]
Courtesy - commons.wikimedia.org

- இவை ஒடு மரத்தின் தோற்றங்கள் !

ஒடு மரம், ‘நிலப்பாலை’ எனவும் அறியப்படும் !

இதன் தவரவியல் பெயர் - Cleistanthus collinus

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (297)

Post by Dr.S.Soundarapandian on Thu Aug 21, 2014 11:07 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (297)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘அதனுடைய கிளை’ என்ற பொருளில் கூற ‘அதன் கிளை’ என்கிறோம் ! ‘அது’ என்பதுதானே பகுதி? அப்படியானால் , ‘அதுக் கிளை’ என்று வரக்கூடாதா? இதற்குத் தொல்காப்பிய விதி உள்ளதா?

உள்ளது ! அதனைக் காண்போம் ! :-

     “சுட்டுமுத  லிறுதி  யுருபிய  னிலையும்
      ஒற்றிடை  மிகாஅ  வல்லெழுத்  தியற்கை ” (உயிர்மயங். 61)

‘சுட்டு முதல் இறுதி ’ – அ,இ,உ ஆகிய சுட்டெழுத்துகளை முதலாக உடைய ‘உ’ ஈற்றுச் சொற்கள் ,

‘உருபியல் நிலையும்’ – உருபியல் நூற்பா 4இல் கூறியவாறு ‘அன்’ சாரியை பெறும் !

‘ஒற்று  இடை  மிகாஅ  வல்லெழுத்து  இயற்கை’ – புணர்ச்சியில் இடையே வல்லொற்று மிகாது !

1 . அது + கோடு = அதுக் கோடு ×
   அது + கோடு = அதன் கோடு √ (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அதன் கோடு – அதனுடைய கிளை)

2 . அது + செதிள் = அதுச் செதிள் ×
   அது + செதிள் = அதன் செதிள் √ (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அதன் செதிள் – அதனுடைய வெட்டுத் துண்டு )

3 . அது + தோல் = அதுத் தோல் ×
  அது + தோல் = அதன் தோல் √ (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அதன் தோல் – அதனுடைய தோல்)

4 . அது + பூ = அதுப் பூ ×
   அது + பூ = அதன் பூ √ (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அதன் பூ – அதனுடைய பூ)

உரை இறுதியில் இளம்பூரணர், சுட்டெழுத்து அல்லாத ‘உ’ ஈற்றுச் சொற்கள் சிலவற்றிற்குப் புணர்ச்சி இலக்கணம் கூறுகிறார் ! –

5 . கடு + குறை = கடுக்குறை ×
   கடு + குறை = கடுவின் குறை √  (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(கடுவின் குறை – கடு மரத்தின் குறை )

6 . ஒடு + குறை = ஒடுக்குறை ×
   ஒடு + குறை = ஒடுவின் குறை √  (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஒடுவின் குறை – ஒடு மரத்தின் குறை )

இனி , நச்சினார்க்கினியர் காட்டும் சில கூடுதல் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கமாகக்  காண்போம் ! –

7 . எழு + புறம் = எழுப்புறம் ×
    எழு + புறம் = எழுவின் புறம் √  (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(எழுவின் புறம் – தூணின் வெளிப்பக்கம்)

8 . கொழு + கூர்மை = கொழுக் கூர்மை ×
    கொழு + கூர்மை = கொழுவின் கூர்மை √  (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(கொழுவின் கூர்மை – ஏர்க்காலில் பொருத்தப்படும் உழு கருவியின் கூர்மை)

9 . உது + காண் = உதுவைக் காண் ×
   உது + காண் = உதுக் காண் √   (வேற்றுமைப் புணர்ச்சி)
(உதுக் காண் – உங்கே கண்பாயாக ; 7ஆம் வேற்றுமைத் தொடர் )

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (298)

Post by Dr.S.Soundarapandian on Fri Aug 22, 2014 10:13 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (298)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உயிர் மயங்கியலில் ‘உ’ ஈற்றுச் சொற்களை முடித்த தொல்காப்பியர் இப்போது ‘ஊ’ ஈற்றுச் சொற்களை நம் கவனத்திற்குக் கொண்டுவருகிறார் ! –

“ஊகார விறுதி யாகார வியற்றே” (உயிர்மயங். 62)

‘ஊகார இறுதி’ -  ‘ஊ’வை ஈற்றிலே கொண்ட  பெயர்ச் சொற்கள் ,

‘ஆகார இயற்றே’ – ‘ஆ’ ஈற்றுச் சொற்களைப் போலப் புணரும் !

அஃதாவது , உயிர்மயங்கியல் நூற்பா 19இல் ‘தாரா + கடிது = தாராக் கடிது’ என்று வல்லெழுத்துச் சந்தி பெற்றுப் புணர்ந்தது போல , அல்வழியில், வல்லெழுத்துச் சந்தியே வரும் !

1 . கொண்மூ + கடிது = கொண்மூ கடிது ×
    கொண்மூ + கடிது = கொண்மூக் கடிது √ (அல்வழிப் புணர்ச்சி)
(கொண்மூ - மேகம் ; கொண்மூக் கடிது – மேகம் கடுமையானது )


2 .  கொண்மூ + சிறிது = கொண்மூ சிறிது ×
    கொண்மூ + சிறிது = கொண்மூச் சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
(கொண்மூச் சிறிது – மேகம் சிறியது )

3 . கொண்மூ + தீது = கொண்மூ தீது ×
    கொண்மூ + தீது = கொண்மூத் தீது √ (அல்வழிப் புணர்ச்சி)
( கொண்மூத் தீது – மேகம் தீயது )

4 .  கொண்மூ + பெரிது = கொண்மூ பெரிது ×
    கொண்மூ + பெரிது = கொண்மூப் பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
(கொண்மூப் பெரிது – மேகம் பெரியது )

இனி , நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டுகளாகச் சில பதிப்புகளில் வந்துள்ளவற்றையும் காண்போம் !

5 . எழு + கடிது = எழு கடிது ×
    எழு + கடிது = எழூஉக்  கடிது √ (அல்வழிப் புணர்ச்சி)
(எழு - தூண் ; எழூஉக்  கடிது – தூண் கடுமையானது )

6 .  எழு + சிறிது = எழு சிறிது ×
     எழு + சிறிது = எழூஉச்  சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
(எழூஉச்  சிறிது – தூண் சிறியது )

7 .  எழு + தீது = எழு தீது ×
     எழு + தீது = எழூஉத்  தீது √ (அல்வழிப் புணர்ச்சி)
(எழூஉத்  தீது – தூண் தீயது )

8 .  எழு + பெரிது = எழு பெரிது ×
     எழு + பெரிது = எழூஉப்  பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
( எழூஉப்  பெரிது – தூண் பெரியது )

9 . கழு + கடிது = கழு கடிது ×
    கழு + கடிது = கழூஉக்  கடிது √ (அல்வழிப் புணர்ச்சி)
(கழு – கழுமரம் ; கழூஉக்  கடிது – கழுமரம் கடுமையானது )

10 .  கழு + சிறிது = கழு சிறிது ×
      கழு + சிறிது = கழூஉச்  சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
(கழூஉச்  சிறிது – கழுமரம் சிறியது )

11 .  கழு + தீது = கழு தீது ×
      கழு + தீது = கழூஉத்  தீது √ (அல்வழிப் புணர்ச்சி)
(கழூஉத்  தீது – கழுமரம் தீயது )

12 .  கழு + பெரிது = கழு பெரிது ×
      கழு + பெரிது = கழூஉப்  பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
( கழூஉப்  பெரிது –  கழுமரம் பெரியது )

‘எழு’ , ‘கழு’ ஆகிய  பெயர்ச் சொற்களோடு நடந்த புணர்ச்சி ஆய்விற்குரியது !

இரு கருத்துகளை இங்கே சிந்திக்கலாம் !-

1.உயிர்மயங்கியல் நூற்பா 21 இளம்பூரணர் உரையால் , ‘அர’ என்பது , ‘அரா’ வாகி , இருபெயரொட்டுப் பண்புத்தொகை அல்வழிப் புணர்ச்சியில் , ‘அ’பெற்று ,  ‘அர + பாம்பு = அராஅப் பாம்பு’ ஆனதுபோல , இங்கும் புணர்ச்சி நடந்துள்ளது !

 ‘அர + பாம்பு = அரப் பாம்பு’ என வந்தால் , ‘பாதிப் பாம்பு’ என்ற பிழைப் பொருள் வந்துவிடும் ! இதைத் தவிர்ப்பதற்காகவே , ‘அராஅ’ !

2 . உயிர்மயங்கியல் நூற்பா 59இல், வேற்றுமைப் புணர்ச்சியாயினும் , பேயைக் குறிக்கும் ‘பழு’ ,  ‘பழூஉ’ ஆகியுள்ளது !
‘பழு + பல் = பழுப்பல்’ என ஆகியிருக்கலாம் ; ஆனால் ஆகவில்லை ! ‘பழூஉப் பல்’ ஆகியுள்ளது !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (299)

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 23, 2014 12:27 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (299)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஊ’ ஈற்றுச் சொற்புணர்ச்சிகளைப் பார்த்துவருகிறோம் !

‘ஊ’ ஈற்றுப் பெயர்களைக்காட்டிவந்த தொல்காப்பியர் இப்போது , ‘ஊ’ஈற்று வினைக்கு வந்துள்ளார் !

“வினையெஞ்சு கிளவிக்கு முன்னிலை மொழிக்கும்
நினையுங் காலை யவ்வகை வரையார் !”  (உயிர்மயங். 63)

‘வினையெஞ்சு கிளவிக்கும்’ – வினையெச்சச் சொல்லுக்கும்,
‘முன்னிலை மொழிக்கும்’ – வருமொழியாகிய வினைசொல்லுக்கும் புணர்ச்சி நடக்கும் போது,
‘நினையுங் காலை’ – ஆராய்ந்து பார்த்தால்  ,
‘அவ்வகை வரையார்’ – முன் நூற்பாவில் (உயிர்மயங். 62) பார்த்ததுபோல , வல்லொற்றுச் சந்தி தோன்றும் ; அதனை ஏற்றுக்கொள்வர் !

1 . உண்ணூ + கொண்டான் = உண்ணூ கொண்டான் ×
    உண்ணூ + கொண்டான் = உண்ணூக் கொண்டான் √  (அல்வழிப்  புணர்ச்சி)
(உண்ணூ  - உண்பதற்காக ;உண்ணூக் கொண்டான் – உண்பதற்காகக் கொண்டான்)

2 . உண்ணூ + சென்றான் = உண்ணூ சென்றான் ×
உண்ணூ + சென்றான் = உண்ணூச் சென்றான் √  (அல்வழிப்  புணர்ச்சி)
(உண்ணூச் சென்றான் – உண்பதற்காகச் சென்றான்)

3 . உண்ணூ + தந்தான் = உண்ணூ தந்தான் ×
உண்ணூ + தந்தான் = உண்ணூத் தந்தான் √  (அல்வழிப்  புணர்ச்சி)
(உண்ணூத் தந்தான் – உண்பதற்காகத் தந்தான்)

4 . உண்ணூ + போயினான் = உண்ணூ போயினான் ×
உண்ணூ + போயினான் = உண்ணூப் போயினான் √  (அல்வழிப்  புணர்ச்சி)
(உண்ணூப் போயினான் – உண்பதற்காகப் போனான்)

5 . கைதூ + கொற்றா = கைதூ கொற்றா ×
   கைதூ + கொற்றா = கைதூக் கொற்றா √ (அல்வழிப்  புணர்ச்சி)
               (கைதூ – கைவிடு ; கைதூக் கொற்றா – கைவிடு கொற்றா)

6 . கைதூ + சாத்தா = கைதூ சாத்தா ×
   கைதூ + சாத்தா = கைதூச் சாத்தா √ (அல்வழிப்  புணர்ச்சி)
          (கைதூச் சாத்தா – கைவிடு சாத்தா)

7 . கைதூ + தேவா = கைதூ தேவா ×
   கைதூ + தேவா = கைதூத் தேவா √ (அல்வழிப்  புணர்ச்சி)
         (கைதூத் தேவா – கைவிடு தேவா)

8 . கைதூ + பூதா = கைதூ பூதா ×
   கைதூ + பூதா = கைதூப் பூதா √ (அல்வழிப்  புணர்ச்சி)
(கைதூப் பூதா – கைவிடு பூதா)

 மேல் புணர்ச்சிகளில் , நிலைமொழியில் , ஏவல் வினைகளே வந்துள்ளன !
இளம்பூரணர் , அல்வழிக்கண் , நிலைமொழிகள் , பெயர்களாகவும் வரலாம் என்று சில எடுத்துக்காட்டுகளைக் காட்டுகிறார்!-

9 . ஆடூஉ + குறியன் = ஆடூஉ குறியன் ×
     ஆடூஉ + குறியன் = ஆடூஉக்  குறியன் √ (அல்வழிப்  புணர்ச்சி)
(ஆடூஉக்  குறியன் – ஆண் குட்டையானவன்)

10 . மகடூஉ + குறியள் = மகடூஉ  குறியள் ×
      மகடூஉ + குறியள் = மகடூஉக்  குறியள் √ (அல்வழிப்  புணர்ச்சி)
(மகடூஉக்  குறியள் – பெண் குட்டையானவள்)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (300)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 24, 2014 9:12 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (300)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஊ’ ஈற்றுச் சொல்லான ‘உண்ணூ’ என்பது, அல்வழியில் எப்படிப் புணரும் என்று சற்றுமுன் பார்த்தோம் !

அப்படியானால் வேற்றுமையில் ?

இதற்குத் தொல்காப்பியர் விடை கூறுகிறார் !:-

“வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே” (உயிர்மயங். 64)

அஃதாவது – வேற்றுமைப் புணர்ச்சியிலும் , ‘உண்ணூஉக் கொற்றா’ என்று வல்லொற்றுச் சந்தி வந்தது போலவே இங்கும் வரும் !

1 . கொண்மூ + குழாம் = கொண்மூ குழாம் ×
     கொண்மூ + குழாம் = கொண்மூக் குழாம் √  (வேற்றுமைப் புணர்சி)
(கொண்மூக் குழாம் – மேகக் கூட்டம்)

2 . கொண்மூ + செலவு = கொண்மூ செலவு ×
     கொண்மூ + செலவு = கொண்மூச் செலவு √  (வேற்றுமைப் புணர்சி)
(கொண்மூச் செலவு – மேகத்தின் ஓட்டம்)

3 .  கொண்மூ + தோற்றம் = கொண்மூ தோற்றம் ×
     கொண்மூ + தோற்றம் = கொண்மூத் தோற்றம் √  (வேற்றுமைப் புணர்சி)
(கொண்மூத் தோற்றம் – மேகத்தின் தோற்றம்)

4 . கொண்மூ + பறைவு = கொண்மூ பறைவு ×
     கொண்மூ + குழாம் = கொண்மூப் பறைவு √  (வேற்றுமைப் புணர்சி)
(கொண்மூப் பறைவு – மேகத்தின் மறைவு)

கொண்மூ – இஃது இப்போது அரிய சொல் !

பறைவு – இதுவும் மறைந்துவிட்ட சொல்தான் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (301)

Post by Dr.S.Soundarapandian on Mon Aug 25, 2014 9:58 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (301)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இன்று நாம் ‘உடு’ என்ற சொல்லால் நட்சத்திரத்தைக் குறிக்கிறோமல்லவா? அது தொல்காப்பியர் காலத்தில் ,   ‘உடூ’ என்றுதான் வழங்கப்பட்டிருந்தது !

இவ்வாறு குற்றெழுத்தை அடுத்து ‘ஊ’ ஈறு அமையுமானால் , அப்படிப்பட்ட சொற்கள் எப்படிப் புணரும் ?

இதுதான் இன்றைய வினா!

விடை தொல்காப்பியத்தில் ! :-

“குற்றெழுத் திம்பரு மோரெழுத்து மொழிக்கும்
நிற்றல் வேண்டு முகரக் கிளவி ” (உயிர்மயங். 65)

‘குற்றெழுத்து  இம்பரும்’ – குறில் எழுத்துக்குப் பின்னும் ,

‘ஓரெழுத்து மொழிக்கும்’ – ஓரெழுத்து ஒருமொழியாகிய ‘ஊ’ ஈற்று மொழிக்குப்
பின்னும்,

‘நிற்றல் வேண்டும் உகரக் கிளவி’ - வேற்றுமைப் புணர்ச்சியில் , வல்லெழுத்துச் சந்தி தோன்றும்போது இடையே ‘உ’ வரும்  !

1 . உடூ + குறை = உடூக்குறை ×
    உடூ + குறை = உடூஉக்குறை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(உடூஉக்குறை – நட்சத்திரத்தின் குறை)

2 . உடூ + செய்கை = உடூச்செய்கை ×
    உடூ + செய்கை = உடூஉச்செய்கை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(உடூஉச்செய்கை – நட்சத்திரத்தின் செயல்)

3 .  உடூ + தலை = உடூத்தலை ×
    உடூ + தலை = உடூஉத்தலை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(உடூஉத்தலை – நட்சத்திரத்தின் தலை)

4 . உடூ + புறம் = உடூப்புறம் ×
    உடூ + புறம் = உடூஉப்புறம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(உடூஉப்புறம் – நட்சத்திரத்தின் பக்கம்)

5 . தூ + குறை = தூக்குறை ×
    தூ + குறை = தூஉக்குறை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூ – இறைச்சி ; தூஉக்குறை – இறைச்சியின் குறை)

6 . தூ + செய்கை = தூச்செய்கை ×
    தூ + செய்கை = தூஉச்செய்கை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூஉச்செய்கை – இறைச்சியின் செயல்)

7 . தூ + தலை = தூத்தலை ×
    தூ + தலை = தூஉத்தலை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூஉத்தலை – இறைச்சியின் தலை )

8 . தூ + புறம் = தூப்புறம் ×
    தூ + புறம் = தூஉப்புறம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூஉப்புறம் – இறைச்சியின் பக்கம்)

இவற்றின் பின்னர் , இளம்பூரணர் , வேறு சில எடுத்துக்காட்டுகளை எழுதுகிறார் !

அவை -  

9 .  ஆடூ + கை = ஆடூக்கை ×
    ஆடூ + கை = ஆடூஉக்கை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆடூஉக்கை – ஆணின் கை)

10 .  ஆடூ + செவி = ஆடூச்செவி ×
       ஆடூ + செவி = ஆடூஉச்செவி √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆடூஉச்செவி – ஆணின் காது)

11 .  ஆடூ + தலை = ஆடூத்தலை ×
      ஆடூ + தலை = ஆடூஉத்தலை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆடூஉத்தலை – ஆணின் தலை)

12 .  ஆடூ + புறம் = ஆடூப்புறம் ×
      ஆடூ + புறம் = ஆடூஉப்புறம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆடூஉப்புறம் – ஆணின் பக்கம்)

13 . மகடூ + கை = மகடூக்கை ×
     மகடூ + கை = மகடூஉக்கை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(மகடூஉக்கை – பெண்ணின் கை)

10 .  மகடூ + செவி = மகடூச்செவி ×
      மகடூ + செவி = மகடூஉச்செவி √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(மகடூஉச்செவி – பெண்ணின் காது)

11 . மகடூ + தலை = மகடூத்தலை ×
      மகடூ + தலை = மகடூஉத்தலை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(மகடூஉத்தலை – பெண்ணின் தலை)

12 .  மகடூ + புறம் = மகடூப்புறம் ×
      மகடூ + புறம் = மகடூஉப்புறம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(மகடூஉப்புறம் – பெண்ணின் பக்கம்)

இங்கே  இரு ஐயங்கள் தோன்றுகின்றன ! –

1. குறிலுக்கு அடுத்த ‘ஊ’ ஈற்றுச் சொல் அல்லது , ஓரெழுத்தில் நிற்கக்கூடிய ‘ஊ’ ஈற்றுச் சொல் பற்றித்தானே நூற்பாவில் கூறப்பட்டுள்ளது ?

2. ‘ஆடூஉ’ , ‘மகடூஉ’ – இவைதாமே சொற்கள் ? இவை எப்படி ‘ஊ’ ஈற்றுச் சொற்களாகும் ?

இதற்குத் தரப்படும் விடைகள் ! –

1 .  ‘உடூ’ எனக் குறிலை அடுத்து வந்த  ‘ஊ’ ஈற்றுச் சொல்போல , ஒருவகையில் ஒப்புமைப்பட்டு ‘ஆடூ’ , ‘மகடூ’ நிற்கின்றன !

2 . புணர்ச்சியில் ‘ஆடூஉ’ , ‘மகடூஉ’ ஆகியவற்றை ‘உ’ ஈறாகக் கொள்ளாமல் ‘ஊ’ ஈறாகவே கொள்ளவேண்டும் ! (ச. பாலசுந்தரம் உரைக்குறிப்பு)

மேல் அனைத்து எடுத்துக்காட்டுகளிலும் வல்லெழுத்தை முதலாக உடைய சொற்கள் வருமொழிகளாக வந்துள்ளதைக் கவனிக்க !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (302)

Post by Dr.S.Soundarapandian on Tue Aug 26, 2014 9:35 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (302)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 ‘தூ’ என்ற ஓரெழுத்து ஒருமொழி , வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘உ’வைச் சந்தியிலே பெற்றுத் , ‘தூஉ + குறை = தூஉக் குறை’ என வரும் என்பதைச் சற்றுமுன் பார்த்தோம் !

அப்படியானால் , ‘பூ’ என்ற ஓரெழுத்து ஒருமொழியும் அதே முறையில்தான் புணருமா ?

விடை வருகிறது !:-

“பூவெ  னொருபெய  ராயியல் பின்றே
  ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே ” (உயிர்மயங். 66)

‘பூவென் ஒருபெயர் ’ – ‘பூ’ எனும் பெயர்ச்சொல்லானது ,

‘ஆ இயல்பு அன்றே’ – அந்த இயல்பின்படிப் புணராது ! அஃதாவது , புணர்ச்சியின்போது , ‘உ’இடையே வராது !

‘ஆ வயின்’ – அப் புணர்ச்சியின்போது ,

‘வல்லெழுத்து மிகுதலும் உரித்தே’ – ‘தூஉக்குறை’ என்பதில் , சந்தியாக ‘க்’ என்ற வல்லொற்று வந்தது போல இங்கு  வருதலும் உண்டு  ; ஆனால்  மெல்லெழுத்து வரலே மிகுதி !

1. பூ + கொடி = பூங் கொடி √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + கொடி = பூக் கொடி √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூங் கொடி , பூக்கொடி – பூவை உடைய கொடி)

2. பூ + செய்கை = பூஞ் செய்கை √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + செய்கை = பூச் செய்கை √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூஞ் செய்கை , பூச்செய்கை – பூவின் செயல்)

3. பூ + தாமம் = பூந் தாமம் √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + தாமம் = பூத் தாமம் √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூந் தாமம் , பூத்தாமம் – பூமாலை)

4. பூ + பந்து = பூம் பந்து √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + பந்து = பூப் பந்து √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூம் பந்து , பூப்பந்து – பூவால் ஆகிய பந்து)

5. பூ + சோலை = பூஞ் சோலை √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + சோலை = பூச் சோலை √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூஞ் சோலை , பூச்சோலை – பூக்கள் நிறைந்த சோலை)

பூ மென்மையானது என்பதற்கேற்பச் சந்தியிலும் மெல்லெழுத்து மிகுதி ஏற்பட்டதோ?

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (303)

Post by Dr.S.Soundarapandian on Thu Aug 28, 2014 9:53 am

                                  தொடத் தொடத் தொல்காப்பியம் (303)
                                                -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
                                      உயிர்மயங்கியலில் , ‘தூ’, ‘பூ’ , ஆகிய ஓரெழுத்து ஒருமொழிகள் , வேற்றுமையில் , வல்லெழுத்துகளை முதலாக உடைய சொற்களோடு எப்படிப் புணரும் என்று பார்த்தோம் !
                                      
அடுத்த ஓரெழுத்து ஒருமொழி – ஊ !
                                      
ஆம் ! ஊ – என்றால் தசை என்பது பொருள் ! ‘கறி’ என்பதும் இதுவே !
 
 இந்த ‘ஊ’ , வேற்றுமையில் , வல்லெழுத்தை முதலாக உடைய வருசொற்களோடு எப்படிப் புணரும் ?
 
விளக்குகிறார் தொல்காப்பியர் ! :-
 
                                       “ஊவெ  னொருபெய ராவொடு சிவணும் ” (உயிர்மயங். 67)
 
                                       ‘ஊ என் ஒரு பெயர் ’ – ‘ஊ’ எனப்படும் அந்தப் பெயர்ச்சொல்லானது ,
                                     
  ‘ஆ  ஒடு சிவணும்’ -  ‘ஆ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழியைப்போலப் புணரும் !
 
             அஃதாவது –
             
 ‘ஆ + கோடு = ஆன் கோடு’ என்ற புணர்ச்சியைத் தொல்காப்பியர் உயிர்மயங்கியல் நூற்பா 29இல் விளக்கினாரல்லவா? அதைப்போலத்தான் ‘ஊ’வும் புணரும்  !
 
1.   + குறை = ஊக்குறை ×
+ குறை = ஊன்குறை (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
                    (ஊன்குறை – தசையில் உள்ள குறை)
 
2.   + செய்கை = ஊச்செய்கை ×
+ செய்கை = ஊன்செய்கை (ன் – எழுத்துப் பேறு)  (வேற்றுமைப் புணர்ச்சி)
                    (ஊன்செய்கை – தசையின் செயல்)
 
3.   + தலை = ஊத்தலை ×
+ தலை = ஊன்தலை (ன் – எழுத்துப் பேறு)  (வேற்றுமைப் புணர்ச்சி)
                    (ஊன்தலை – தசையின் தலைப்பக்கம்)


4.   + புறம் = ஊப்புறம் ×
+ புறம் = ஊன்புறம் (ன் – எழுத்துப் பேறு)  (வேற்றுமைப் புணர்ச்சி)
                    (ஊன்புறம் – தசையின் வெளிப்பக்கம்)
                     
‘ஊ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழி இன்று மறைந்து , ‘ஊன்’ என்ற ஈரெழுத்து மொழியே  நிற்கிறது !


இதுதான் மொழி வளர்ச்சி என்பது !
 

                              ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொல்காப்பியம் (304)

Post by Dr.S.Soundarapandian on Thu Aug 28, 2014 2:43 pm

தொடத்                              தொடத் தொல்காப்பியம் (304)                                                                      
                                                -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
                                      உயிர்மயங்கியலின் ‘ஊ’ ஈற்றுச் சொல்லில் நிற்கிறோம் !
                                    
  முன்னதாக  ‘ஊ + குறை = ஊன் குறை’ என்று ,வேற்றுமைப் புணர்ச்சியில் , வல்லெழுத்துகளை முதலாக உடைய வருசொற்களோடு , ‘ன்’ பெற்றுப் புணரும் எனக் கண்டோம் !
                
    இப்போது, அதே புணர்ச்சி வேறுமாதிரியாகவும் நடக்கலாம் என்கிறார் தொல்காப்பியர் ! :-
 “அக்கென் சாரியை பெறுதலு முரித்தே” (உயிர்மயங். 68)
 
1.   + குறை = ஊன் குறை (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
+ குறை = ஊனக் குறை (ன் – எழுத்துப் பேறு; அக்கு - சாரியை) (வேற்றுமைப்                                                                                                          புணர்ச்சி)
                (ஊனக் குறை – தசையில் உள்ள குறை)
 
2.   + செய்கை = ஊன் செய்கை (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
+ செய்கை = ஊனச் செய்கை (ன் – எழுத்துப் பேறு; அக்கு - சாரியை) வேற்றுமைப் 
                                                                                                      புணர்ச்சி)
                (ஊனச் செய்கை – தசையின் செய்கை)
 
3.   + தலை = ஊன் தலை (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
+ தலை = ஊனத் தலை (ன் – எழுத்துப் பேறு; அக்கு - சாரியை) (வேற்றுமைப் 
                                                                                            புணர்ச்சி)
                (ஊனத் தலை – தசையின் தலை)
 
4.   + புறம் = ஊன் புறம் (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
+ புறம் = ஊனப் புறம் (ன் – எழுத்துப் பேறு ; அக்கு - சாரியை) (வேற்றுமைப் 
                                                                                                      புணர்ச்சி)
                (ஊனப் புறம் – தசையின் வெளிப்பக்கம்)
 
முன்பு ,  ‘கொண்மூ + குறை = கொண்மூக் குறை’ என்ற புணர்ச்சியைப் (உயிர்மயங். 64) பார்த்தோம் ; ‘உடூ + குறை  = உடூஉக்குறை’ (உயிர்மயங். 65) என வந்ததையும்
கண்டோம் ; ‘ஊ + குறை = ஊன் குறை’ என வந்ததையும் (உயிர்மயங். 67), ‘ஊ + குறை
= ஊனக் குறை’ என வந்ததையும் (உயிர்மயங். 68) பார்த்துள்ளோம்!


 மேல் நூற்பா உரையில் நச்சினார்க்கினியர்,  ‘இன்’ சாரியை பெற்றும் இந் நிலைமொழிகள் புணரலாம் என்பதைத்  தெரிவிக்கிறார் ! –


5.கொண்மூ + குழாம் = கொண்மூவின் குழாம் (இன் - சாரியை) (வேற்றுமைப்
                                                                                            புணர்ச்சி)
                (கொண்மூவின் குழாம் – மேகத்தின் கூட்டம்)


6.உடூ + தலை = உடூவின் தலை (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
                (உடூவின் தலை – நட்சத்திரத்தின் தலை)


7.ஊ + குறை = ஊவின் குறை (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
                (ஊவின் குறை – இறைச்சியின் குறை)


 ‘உடூவின் தலை’ என்பதில் நடுவில் ‘உ’ வரவில்லை என்பதைக் கவனிக்க !
               

                         ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (305)

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 30, 2014 1:31 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (305)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது , ‘எ’ , ‘ஒ’ ஆகிய ஈறுகளைப் பேச வருகிறார் தொல்காப்பியர் !  :-

 “எகர வொகரம் பெயர்க்கீ  றாகா
  முன்னிலை மொழிய வென்மனார் புலவர்
 தேற்றமுஞ் சிறப்பு மல்வழி யான” (உயிர்மயங். 70)

  ‘எகர ஒகரம் பெயர்க்கு ஈ றாகா’ -  ‘எ’ ,  ‘ஒ’ ஆகிய இரண்டு எழுத்துகளும் பெயர்ச்சொற்களுக்கு இறுதியிலே வராதவை !

‘முன்னிலை மொழிய என்மனார் புலவர்’ – இந்த இரண்டு எழுத்துகளும் முன்னிலை வினைச் சொற்களுக்கு ஈறாக வரும் !

‘தேற்றமும் சிறப்பும் அல்வழி யான’ – தெளிவுப் பொருளிலும் , சிறப்புப் பொருளிலும் , அல்வழிப் புணர்ச்சியில்,  இடைச்சொற்களாக வருவதானால்  வினையில் இவை ஈறாக வரும் !

 (அ)முன்னிலை வினைக்கு ஈறு –

1 . ஏஎ (முன்னிலை வினைச்சொல்; இதில் ‘எ’ ஈறானமை காண்க !)
     ஏ – இந்த வினைக்கு, ‘எனக்கு ஒரு வேலை இடு ! ’ என்பது பொருள் .
           ஏஎ  எனினும் , ஏ எனினும் பொருள் ஒன்றே !

2 . ஓஒ (முன்னிலை வினைச்சொல் ; இதில் ‘ஒ’ ஈறானமை காண்க !)

     ஓ – இந்த வினைக்கு, ‘இவ்வாறு செய்வதைக் கைவிடு  ! ’ என்பது பொருள் .
              ஓஒ  எனினும் , ஓ எனினும் பொருள் ஒன்றே !

  (ஆ) தேற்றப் பொருளில் வரும் இடைச்சொல்லுக்கு ஈறு-

3. ஏஎ – இது தேற்றப் பொருளில் வரும் இடைச்சொல் ; இங்கே ஈறு ‘எ’ என்பதைக் கவனிக்க!
          தேற்றப் பொருள் – தெளிவுப் பொருள் .

ஏஎ கொண்டான் – அவன் பெற்றான் என்பதில் ஐயம் சிறிதுமில்லை என்பது பொருள் !

ஏஎ + கொண்டான் = ஏஎ கொண்டான்  (அல்வழிப் புணர்ச்சி)

சிறப்புப் பொருளில் வரும் இடைச்சொல்லுக்கு ஈறு-

4 . ஓஒ – இது சிறப்புப் பொருளில் வரும் இடைச்சொல் ; இங்கே ஈறு ‘ஒ’ என்பதைக் கவனிக்க!

ஓஒ கொண்டான் – பெறுவதற்குத் தகுதி உடையவன் ஆதலின் அவன் பெற்றான் !

ஓஒ + கொண்டான் = ஓஒ கொண்டான்  (அல்வழிப் புணர்ச்சி)
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (306)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 31, 2014 10:21 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (306)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உயிர்மயங்கியலில் ‘எ’ , ‘ஒ’ ஈற்றுச் சொற்களைப் பார்த்துவருகிறோம் ! :-

  “தேற்ற வெகரமுஞ் சிறப்பி  னொவ்வும்
    மேற்கூ றியற்கை வல்லெழுத் துமிகா”  (உயிர்மயங். 71)

‘தேற்ற எகரமும் ’ – தெளிவுப் பொருளில் வரும்  ‘எ’ஈற்று இடைசொல்லும் ,

‘சிறப்பின் ஒவ்வும்’ – சிறப்புப் பொருளில் வரும் ‘ஒ’ ஈற்று இடைச்சொல்லும் ,

‘மேற்கூறு இயற்கை’ – மேலே , முன் சூத்திரத்தில் , கூறப்பட்டது போன்றே வல்லொற்று சந்தியாக வராது !

1. யானேஎ + கொண்டேன் = யானேஎக்  கொண்டேன்  ×
யானேஎ + கொண்டேன் = யானேஎ  கொண்டேன்  √  (அல்வழிப் புணர்ச்சி)
(அவன் பெற்றானா இல்லையா என்று ஐயம் வந்து அவனைக் கேட்கும்போது , தெளிவாக , ‘ஐயம் வேண்டாம் நானே (யானேஎ) பெற்றேன்’ எனச் சற்று நீட்டிக் கூறுகிறானல்லவா? இதுதான்
தேற்றப் பொருள் ! இதனைத் தருவதற்காகத்தான்  அந்த ‘எ’ !)

2. நீயேஎ + கொண்டாய் = நீயேஎக்  கொண்டாய்  ×
நீயேஎ + கொண்டாய் = நீயேஎ  கொண்டாய்  √(அல்வழிப் புணர்ச்சி)

3. அன்னேஎ + கொண்டான் = அவனேஎக்  கொண்டான்  ×
அவனேஎ + கொண்டான் = அவனேஎ  கொண்டான்  √(அல்வழிப் புணர்ச்சி)

4. ஓஒ + கொண்டேன் = ஓஒக்  கொண்டேன்  ×
ஓஒ + கொண்டேன் = ஓஒ  கொண்டேன்  √(அல்வழிப் புணர்ச்சி)

5. ஓஒ + கொண்டாய் = ஓஒக்  கொண்டாய்  ×
ஓஒ + கொண்டாய் = ஓஒ  கொண்டாய்  √(அல்வழிப் புணர்ச்சி)

6. ஓஒ + கொண்டான் = ஓஒக்  கொண்டான்  ×
ஓஒ + கொண்டான் = ஓஒ  கொண்டான்  √(அல்வழிப் புணர்ச்சி)

ஏ , ஓ – இடைச் சொற்கள் ; ‘யானே’ என்பதில் ‘யான்’ , பெயர்ச்சொல் !

இதன்பின் , இளம்பூரணர் தரும் கூடுதல் இலக்கணத்தை வருமாறு காட்டலாம் !:-

7. ஏஎ + கொற்றா = ஏஎ கொற்றா ×
ஏஎ + கொற்றா = ஏஎக் கொற்றா √ (அல்வழிப் புணர்ச்சி)

8. ஏஎ + சாத்தா= ஏஎ சாத்தா ×
ஏஎ + சாத்தா = ஏஎச் சாத்தா √ (அல்வழிப் புணர்ச்சி)

9. ஏஎ + தேவா = ஏஎ தேவா ×
ஏஎ + தேவா = ஏஎத் தேவா √ (அல்வழிப் புணர்ச்சி)

10. ஏஎ + பூதா = ஏஎ பூதா ×
ஏஎ + பூதா = ஏஎப் பூதா √ (அல்வழிப் புணர்ச்சி)

ஏ – வினைச் சொல் ; எ – அளபெடை .

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (307)

Post by Dr.S.Soundarapandian on Mon Sep 01, 2014 5:00 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (307)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 ‘எ’ ஈறு முடிந்து , இப்போது ‘ஏ’ ஈறு !-

“ஏகார விறுதி யூகார வியற்றே” (உயிர்மயங். 72)

‘ஏகார இறுதி’ – ‘ஏ’ ஈற்றுச் சொல்,

‘ஊகார இயற்றே’ -  ‘ஊ’ ஈற்றுச் சொல்போலப் புணரும் !

அஃதாவது –
முன்பு உயிர்மயங்கியல் சூத்திரம் 62இல் , ‘கொண்மூ + கடிது = கொண்மூக் கடிது’ என அல்வழிப் புணர்ச்சியில் , வல்லெழுத்துச் சந்தி பெற்றுப் புணர்ந்ததைப் பர்த்தோமல்லவா ? அதுபோல , அல்வழிப்புணர்ச்சியில் , இங்கும் வல்லெழுத்துச் சந்தி வரும் !-

1. சே + கடிது = சே கடிது ×
சே + கடிது = சேக் கடிது √ (அல்வழிப் புணச்சி)
சே என்ற அழிஞ்சில் பற்றி முன்பே பார்த்துள்ளோம் !

2. சே + சிறிது = சே சிறிது ×
சே + சிறிது = சேச் சிறிது √ (அல்வழிப் புணச்சி)

3. சே + தீது = சே தீது ×
சே + தீது = சேத் தீது √ (அல்வழிப் புணச்சி)

4. சே + பெரிது = சே பெரிது ×
சே + பெரிது = சேப் பெரிது √ (அல்வழிப் புணச்சி)
சே என்ற அழிஞ்சில் பற்றி முன்பே பார்த்துள்ளோம் !

5 . ஏ + கடிது = ஏ கடிது ×
         ஏ + கடிது = ஏக்  கடிது √ (அல்வழிப் புணச்சி)
(ஏ – அம்பு  ; ஏக்  கடிது – அம்பானது கடுமையானது)

6 . ஏ + சிறிது = ஏ சிறிது ×
         ஏ + சிறிது = ஏச்  சிறிது √ (அல்வழிப் புணச்சி)
(ஏச்  சிறிது – அம்பானது சிறியது)

7 . ஏ + தீது = ஏ தீது ×
         ஏ + தீது = ஏத் தீது √ (அல்வழிப் புணச்சி)
(ஏத் தீது – அம்பானது தீயது)

8 . ஏ + பெரிது = ஏ பெரிது ×
         ஏ + பெரிது = ஏப்  பெரிது √ (அல்வழிப் புணச்சி)
(ஏப் பெரிது – அம்பானது பெரியது)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by M.Saranya on Mon Sep 01, 2014 5:08 pm

சிறந்த பதிவு ஐயா
பொது தேர்விற்கு முக்கியமானது
நிதானமாக படித்து புரிந்து கொள்வேன்
சந்தேகம் எழுந்தால் நான் கேட்பதற்கு பதிலளியுங்கள் ஐயா
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Dr.S.Soundarapandian on Tue Sep 02, 2014 12:48 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (308)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஏ’ – இந்த இடைச் சொல் புணரும் வகை தொடர்கிறது ! –

“மாறுகொ ளெச்சமும் வினாவு மெண்ணும்
கூறிய வல்லெழுத்  தியற்கை  யாகும்” (உயிர்மயங். 73)


“மாறுகொள் எச்சமும்’ – எதிர்மறைப் பொருளை விடையாகத் தரக்கூடிய, எச்ச இடைச் சொல்லும் ,  

‘வினாவும்’ – வினாப்பொருளைத் தரும் இடைச் சொல்லும் ,

‘எண்ணும்’ – எண்ணுப் பொருளில் வரும் இடைச் சொல்லும் ,

‘கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும்’ – முன் நூற்பாவில் கூறியதுபோன்ற வல்லெழுத்துச் சந்தி பெறாது புணரும் !

1. யானே + கொண்டேன் = யானேக் கொண்டேன் ×
யானே + கொண்டேன் = யானே கொண்டேன் √  (அல்வழிப் புணர்ச்சி)
(யானே கொண்டேன் ? : ‘யானே’ என்பதன் ஈற்றிலுள்ள ‘ஏ’ எதிர்மறை ஏகாரம் ! ‘யான்
கொள்ளவில்லை’ என்ற எதிர்மறை எச்சப் பொருளைதருவது ! இதுவே ‘மாறுகொள் எச்சம்’)

2. யானே + சென்றேன் = யானேச் சென்றேன் ×
யானே + சென்றேன் = யானே சென்றேன் √  (அல்வழிப் புணர்ச்சி)

3. யானே + தந்தேன் = யானேத் தந்தேன் ×
யானே + தந்தேன் = யானே தந்தேன் √  (அல்வழிப் புணர்ச்சி)

4. யானே + போயினேன் = யானேப் போயினேன் ×
யானே + போயினேன் = யானே போயினேன் √  (அல்வழிப் புணர்ச்சி)

5. நீயே + கொண்டாய் = நீயேக் கொண்டாய் ×
நீயே + கொண்டாய் = நீயே கொண்டாய் √  (அல்வழிப் புணர்ச்சி)
(நீயே கொண்டாய் ? : ‘நீயே’ என்பதன் ஈற்றிலுள்ள ‘ஏ’ வினா ஏகாரம் ! ‘நீதானா
கொண்டது ?’ என்ற வினாப் பொருளைதருவது !)

6. நீயே + சென்றாய் = நீயேச் சென்றாய் ×
நீயே + சென்றாய் = நீயே சென்றாய் √  (அல்வழிப் புணர்ச்சி)

7. நீயே + தந்தாய் = நீயேத் தந்தாய் ×
நீயே + தந்தாய் = நீயே தந்தாய் √  (அல்வழிப் புணர்ச்சி)

8. நீயே + போயினாய் = நீயேப் போயினாய் ×
நீயே + போயினாய் = நீயே போயினாய் √  (அல்வழிப் புணர்ச்சி)

9. கொற்றனே , சாத்தனே , தேவனே , பூதனே – இவ்வாறு அடுக்கிவரும்போது , ஒவ்வொரு சொல்லின் ஈற்றிலும் உள்ள ‘ஏ’ என்பது , எண்ணேகாரம் எனப்படும் !

10. அவனே + கொண்டான் = அவனேக் கொண்டான் ×
    அவனே + கொண்டான் = அவனே கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
(அவனே கொண்டான் : ‘அவனே’ என்பதிலுள்ள ‘ஏ’, பிரிநிலை ஏகாரம் ! ‘அவன்தான் ; வேறு எவரும் கொள்ளவில்லை’ என்ற பொருளைத் தருவது ! இவ்விளக்கத்தை இளம்பூரணர் உரையால் பெறுகிறோம் !)

11. கடலே + பாடெழுந் திசைக்கும் = கடலேப் பாடெழுந் திசைக்கும் ×
    கடலே + பாடெழுந் திசைக்கும் = கடலே பாடெழுந் திசைக்கும் √ (அல்வழிப் புணர்ச்சி)
(கடலே : இதிலுள்ள ‘ஏ’, பொருளற்ற அசை ;  ‘ஈற்றசை’எனப்படும் ! இவ்விளக்கத்தை இளம்பூரணர் உரையால் பெறுகிறோம் !)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (309)

Post by Dr.S.Soundarapandian on Wed Sep 03, 2014 8:22 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (309)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 ‘ஏ’ ஈறு தொடர்கிறது ! –

“வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே”  (உயிர்மயங். 74)

‘வேற்றுமைக் கண்ணும்’ – வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும்,

‘அதனோர்  அற்றே’ – முன்பு ‘ஊ’ ஈற்றுச் சொல் ,அல்வழியில், வல்லெழுத்துச் சந்தி பெற்றதுபோல இங்கும் வல்லெழுத்துச் சந்தியே பெறும் !

 ‘கொண்மூ’ என்ற ‘ஊ’ ஈற்றுப் பெயர்ச்சொல் , அல்வழியில் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட வருசொல் வந்து புணரும்போது, ‘க்’ பெற்றுக், ‘கொண்மூக் கடிது’ (உயிர்மயங்.62)ஆனதல்லவா? அதே புணர்ச்சிமுறைதான் ‘ஏ’ ஈற்று வேற்றுமைப் புனர்ச்சிக்கும் !

1. வே + குடம் = வேங்குடம் ×
வே + குடம் = வேக்குடம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(வேக்குடம் – வேதலையுடைய குடம்; பச்சைமண் குடமல்ல , சுட்ட குடம் என்பது பொருள்.)

2. வே + சாடி = வேஞ்சாடி ×
வே + சாடி = வேச்சாடி √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(வேச்சாடி – வேதலையுடைய சாடி)

3. வே + தூதை = வேந்தூதை ×
வே + தூதை = வேத்தூதை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதை – சிறு மண் பாண்டம்;வேத்தூதை – வேதலையுடைய சிறு மண்பாண்டம்)

4. வே + பானை = வேம்பானை ×
வே + பானை = வேப்பானை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(வேப்பானை – வேதலையுடைய பானை)

5. ஏ + கடுமை = ஏகடுமை ×
ஏ+ கடுமை = ஏக்கடுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏக்கடுமை – அம்பினது கடுமை)

6. ஏ + சிறுமை = ஏசிறுமை ×
ஏ+ சிறுமை = ஏச்சிறுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏச்சிறுமை – அம்பினது சிறுமை)

7. ஏ + தீமை = ஏதீமை ×
ஏ+ தீமை = ஏத்தீமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏத்தீமை – அம்பினது தீமை)

8. ஏ + பெருமை = ஏபெருமை ×
ஏ+ பெருமை = ஏப்பெருமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏப்பெருமை – அம்பினது பெருமை)

மேல் இளம்பூரணர் எடுத்துக்காட்டில் , ‘சாடி’ என்ற சொல் வந்ததைக் கவனியுங்கள் !

ஆம் ! ‘சாடி’ தமிழ்ச் சொல்தான் ! வடசொல் அல்ல ! ‘ஜாடி’ என்று ஒலி மாற்றம்
பெற்றது ; அவ்வளவுதன் !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (310)

Post by Dr.S.Soundarapandian on Thu Sep 04, 2014 6:04 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (310)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஏ’ ஈற்றுச் சொல் , வேற்றுமையில் , வல்லொற்றுப் பெற்றுப் முடிவதைச் சற்றுமுன் பார்த்தோம் !

அந்த விதிக்குச் சிறப்பு விதியை அடுத்து நுவல்கிறார்! –

“ஏயெ  னிறுதிக்  கெகரம் வருமே”  (உயிர்மயங். 75)

‘ஏ என் இறுதிக்கு’ – ‘ஏ’ ஈற்றுப் பெயர்ச்சொற்களுக்கு

‘எகரம் வருமே’ – புணர்ச்சியில் , வல்லெழுத்துச் சந்தியுடன் ‘எ’ என்ற எழுத்தும் தோன்றும் !

1. ஏ + கொட்டில் = ஏக்கொட்டில் ×
ஏ + கொட்டில் = ஏஎக்கொட்டில் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎக்கொட்டில் – அம்புகளை வைத்திருக்கும் வில்வித்தை பயிற்றும் இடம்)


2. ஏ + சாலை = ஏச்சாலை ×
ஏ + சாலை = ஏஎச்சாலை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎச்சாலை – அம்புகளை வைத்திருக்கும் வில்வித்தை பயிற்றும் இடம்)

3. ஏ + துளை = ஏத்துளை ×
ஏ + துளை = ஏஎத்துளை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎத்துளை – அம்பினால் ஏற்பட்ட  துளை)

4. ஏ + புழை = ஏப்புழை ×
ஏ + புழை = ஏஎப்புழை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎப்புழை – அம்பு ஏற்படுத்திய   துளை)

நச்சினார்க்கினியர் உரைப்படி
க் கீழ்வரும் எடுத்துக்காட்டுகளையும் தரலாம் !-

5. ஏ + நெகிழ்ச்சி = ஏநெகிழ்ச்சி ×
ஏ + நெகிழ்ச்சி = ஏஎநெகிழ்ச்சி √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎநெகிழ்ச்சி – அம்பின் நெகிழ்ச்சி)

6. ஏ + நேர்மை = ஏநேர்மை ×
ஏ + நேர்மை = ஏஎநேர்மை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏநேர்மை – அம்பின் நேரிய தன்மை)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 15 of 29 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 22 ... 29  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum