ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போடி, நீ தான் லூசு...!
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 T.N.Balasubramanian

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Page 16 of 28 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 22 ... 28  Next

View previous topic View next topic Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by Dr.S.Soundarapandian on Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம் (302)

Post by Dr.S.Soundarapandian on Tue Aug 26, 2014 9:35 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (302)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 ‘தூ’ என்ற ஓரெழுத்து ஒருமொழி , வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘உ’வைச் சந்தியிலே பெற்றுத் , ‘தூஉ + குறை = தூஉக் குறை’ என வரும் என்பதைச் சற்றுமுன் பார்த்தோம் !

அப்படியானால் , ‘பூ’ என்ற ஓரெழுத்து ஒருமொழியும் அதே முறையில்தான் புணருமா ?

விடை வருகிறது !:-

“பூவெ  னொருபெய  ராயியல் பின்றே
  ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே ” (உயிர்மயங். 66)

‘பூவென் ஒருபெயர் ’ – ‘பூ’ எனும் பெயர்ச்சொல்லானது ,

‘ஆ இயல்பு அன்றே’ – அந்த இயல்பின்படிப் புணராது ! அஃதாவது , புணர்ச்சியின்போது , ‘உ’இடையே வராது !

‘ஆ வயின்’ – அப் புணர்ச்சியின்போது ,

‘வல்லெழுத்து மிகுதலும் உரித்தே’ – ‘தூஉக்குறை’ என்பதில் , சந்தியாக ‘க்’ என்ற வல்லொற்று வந்தது போல இங்கு  வருதலும் உண்டு  ; ஆனால்  மெல்லெழுத்து வரலே மிகுதி !

1. பூ + கொடி = பூங் கொடி √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + கொடி = பூக் கொடி √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூங் கொடி , பூக்கொடி – பூவை உடைய கொடி)

2. பூ + செய்கை = பூஞ் செய்கை √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + செய்கை = பூச் செய்கை √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூஞ் செய்கை , பூச்செய்கை – பூவின் செயல்)

3. பூ + தாமம் = பூந் தாமம் √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + தாமம் = பூத் தாமம் √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூந் தாமம் , பூத்தாமம் – பூமாலை)

4. பூ + பந்து = பூம் பந்து √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + பந்து = பூப் பந்து √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூம் பந்து , பூப்பந்து – பூவால் ஆகிய பந்து)

5. பூ + சோலை = பூஞ் சோலை √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + சோலை = பூச் சோலை √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூஞ் சோலை , பூச்சோலை – பூக்கள் நிறைந்த சோலை)

பூ மென்மையானது என்பதற்கேற்பச் சந்தியிலும் மெல்லெழுத்து மிகுதி ஏற்பட்டதோ?

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (303)

Post by Dr.S.Soundarapandian on Thu Aug 28, 2014 9:53 am

                                  தொடத் தொடத் தொல்காப்பியம் (303)
                                                -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
                                      உயிர்மயங்கியலில் , ‘தூ’, ‘பூ’ , ஆகிய ஓரெழுத்து ஒருமொழிகள் , வேற்றுமையில் , வல்லெழுத்துகளை முதலாக உடைய சொற்களோடு எப்படிப் புணரும் என்று பார்த்தோம் !
                                      
அடுத்த ஓரெழுத்து ஒருமொழி – ஊ !
                                      
ஆம் ! ஊ – என்றால் தசை என்பது பொருள் ! ‘கறி’ என்பதும் இதுவே !
 
 இந்த ‘ஊ’ , வேற்றுமையில் , வல்லெழுத்தை முதலாக உடைய வருசொற்களோடு எப்படிப் புணரும் ?
 
விளக்குகிறார் தொல்காப்பியர் ! :-
 
                                       “ஊவெ  னொருபெய ராவொடு சிவணும் ” (உயிர்மயங். 67)
 
                                       ‘ஊ என் ஒரு பெயர் ’ – ‘ஊ’ எனப்படும் அந்தப் பெயர்ச்சொல்லானது ,
                                     
  ‘ஆ  ஒடு சிவணும்’ -  ‘ஆ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழியைப்போலப் புணரும் !
 
             அஃதாவது –
             
 ‘ஆ + கோடு = ஆன் கோடு’ என்ற புணர்ச்சியைத் தொல்காப்பியர் உயிர்மயங்கியல் நூற்பா 29இல் விளக்கினாரல்லவா? அதைப்போலத்தான் ‘ஊ’வும் புணரும்  !
 
1.   + குறை = ஊக்குறை ×
+ குறை = ஊன்குறை (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
                    (ஊன்குறை – தசையில் உள்ள குறை)
 
2.   + செய்கை = ஊச்செய்கை ×
+ செய்கை = ஊன்செய்கை (ன் – எழுத்துப் பேறு)  (வேற்றுமைப் புணர்ச்சி)
                    (ஊன்செய்கை – தசையின் செயல்)
 
3.   + தலை = ஊத்தலை ×
+ தலை = ஊன்தலை (ன் – எழுத்துப் பேறு)  (வேற்றுமைப் புணர்ச்சி)
                    (ஊன்தலை – தசையின் தலைப்பக்கம்)


4.   + புறம் = ஊப்புறம் ×
+ புறம் = ஊன்புறம் (ன் – எழுத்துப் பேறு)  (வேற்றுமைப் புணர்ச்சி)
                    (ஊன்புறம் – தசையின் வெளிப்பக்கம்)
                     
‘ஊ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழி இன்று மறைந்து , ‘ஊன்’ என்ற ஈரெழுத்து மொழியே  நிற்கிறது !


இதுதான் மொழி வளர்ச்சி என்பது !
 

                              ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொல்காப்பியம் (304)

Post by Dr.S.Soundarapandian on Thu Aug 28, 2014 2:43 pm

தொடத்                              தொடத் தொல்காப்பியம் (304)                                                                      
                                                -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
                                      உயிர்மயங்கியலின் ‘ஊ’ ஈற்றுச் சொல்லில் நிற்கிறோம் !
                                    
  முன்னதாக  ‘ஊ + குறை = ஊன் குறை’ என்று ,வேற்றுமைப் புணர்ச்சியில் , வல்லெழுத்துகளை முதலாக உடைய வருசொற்களோடு , ‘ன்’ பெற்றுப் புணரும் எனக் கண்டோம் !
                
    இப்போது, அதே புணர்ச்சி வேறுமாதிரியாகவும் நடக்கலாம் என்கிறார் தொல்காப்பியர் ! :-
 “அக்கென் சாரியை பெறுதலு முரித்தே” (உயிர்மயங். 68)
 
1.   + குறை = ஊன் குறை (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
+ குறை = ஊனக் குறை (ன் – எழுத்துப் பேறு; அக்கு - சாரியை) (வேற்றுமைப்                                                                                                          புணர்ச்சி)
                (ஊனக் குறை – தசையில் உள்ள குறை)
 
2.   + செய்கை = ஊன் செய்கை (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
+ செய்கை = ஊனச் செய்கை (ன் – எழுத்துப் பேறு; அக்கு - சாரியை) வேற்றுமைப் 
                                                                                                      புணர்ச்சி)
                (ஊனச் செய்கை – தசையின் செய்கை)
 
3.   + தலை = ஊன் தலை (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
+ தலை = ஊனத் தலை (ன் – எழுத்துப் பேறு; அக்கு - சாரியை) (வேற்றுமைப் 
                                                                                            புணர்ச்சி)
                (ஊனத் தலை – தசையின் தலை)
 
4.   + புறம் = ஊன் புறம் (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
+ புறம் = ஊனப் புறம் (ன் – எழுத்துப் பேறு ; அக்கு - சாரியை) (வேற்றுமைப் 
                                                                                                      புணர்ச்சி)
                (ஊனப் புறம் – தசையின் வெளிப்பக்கம்)
 
முன்பு ,  ‘கொண்மூ + குறை = கொண்மூக் குறை’ என்ற புணர்ச்சியைப் (உயிர்மயங். 64) பார்த்தோம் ; ‘உடூ + குறை  = உடூஉக்குறை’ (உயிர்மயங். 65) என வந்ததையும்
கண்டோம் ; ‘ஊ + குறை = ஊன் குறை’ என வந்ததையும் (உயிர்மயங். 67), ‘ஊ + குறை
= ஊனக் குறை’ என வந்ததையும் (உயிர்மயங். 68) பார்த்துள்ளோம்!


 மேல் நூற்பா உரையில் நச்சினார்க்கினியர்,  ‘இன்’ சாரியை பெற்றும் இந் நிலைமொழிகள் புணரலாம் என்பதைத்  தெரிவிக்கிறார் ! –


5.கொண்மூ + குழாம் = கொண்மூவின் குழாம் (இன் - சாரியை) (வேற்றுமைப்
                                                                                            புணர்ச்சி)
                (கொண்மூவின் குழாம் – மேகத்தின் கூட்டம்)


6.உடூ + தலை = உடூவின் தலை (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
                (உடூவின் தலை – நட்சத்திரத்தின் தலை)


7.ஊ + குறை = ஊவின் குறை (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
                (ஊவின் குறை – இறைச்சியின் குறை)


 ‘உடூவின் தலை’ என்பதில் நடுவில் ‘உ’ வரவில்லை என்பதைக் கவனிக்க !
               

                         ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (305)

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 30, 2014 1:31 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (305)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது , ‘எ’ , ‘ஒ’ ஆகிய ஈறுகளைப் பேச வருகிறார் தொல்காப்பியர் !  :-

 “எகர வொகரம் பெயர்க்கீ  றாகா
  முன்னிலை மொழிய வென்மனார் புலவர்
 தேற்றமுஞ் சிறப்பு மல்வழி யான” (உயிர்மயங். 70)

  ‘எகர ஒகரம் பெயர்க்கு ஈ றாகா’ -  ‘எ’ ,  ‘ஒ’ ஆகிய இரண்டு எழுத்துகளும் பெயர்ச்சொற்களுக்கு இறுதியிலே வராதவை !

‘முன்னிலை மொழிய என்மனார் புலவர்’ – இந்த இரண்டு எழுத்துகளும் முன்னிலை வினைச் சொற்களுக்கு ஈறாக வரும் !

‘தேற்றமும் சிறப்பும் அல்வழி யான’ – தெளிவுப் பொருளிலும் , சிறப்புப் பொருளிலும் , அல்வழிப் புணர்ச்சியில்,  இடைச்சொற்களாக வருவதானால்  வினையில் இவை ஈறாக வரும் !

 (அ)முன்னிலை வினைக்கு ஈறு –

1 . ஏஎ (முன்னிலை வினைச்சொல்; இதில் ‘எ’ ஈறானமை காண்க !)
     ஏ – இந்த வினைக்கு, ‘எனக்கு ஒரு வேலை இடு ! ’ என்பது பொருள் .
           ஏஎ  எனினும் , ஏ எனினும் பொருள் ஒன்றே !

2 . ஓஒ (முன்னிலை வினைச்சொல் ; இதில் ‘ஒ’ ஈறானமை காண்க !)

     ஓ – இந்த வினைக்கு, ‘இவ்வாறு செய்வதைக் கைவிடு  ! ’ என்பது பொருள் .
              ஓஒ  எனினும் , ஓ எனினும் பொருள் ஒன்றே !

  (ஆ) தேற்றப் பொருளில் வரும் இடைச்சொல்லுக்கு ஈறு-

3. ஏஎ – இது தேற்றப் பொருளில் வரும் இடைச்சொல் ; இங்கே ஈறு ‘எ’ என்பதைக் கவனிக்க!
          தேற்றப் பொருள் – தெளிவுப் பொருள் .

ஏஎ கொண்டான் – அவன் பெற்றான் என்பதில் ஐயம் சிறிதுமில்லை என்பது பொருள் !

ஏஎ + கொண்டான் = ஏஎ கொண்டான்  (அல்வழிப் புணர்ச்சி)

சிறப்புப் பொருளில் வரும் இடைச்சொல்லுக்கு ஈறு-

4 . ஓஒ – இது சிறப்புப் பொருளில் வரும் இடைச்சொல் ; இங்கே ஈறு ‘ஒ’ என்பதைக் கவனிக்க!

ஓஒ கொண்டான் – பெறுவதற்குத் தகுதி உடையவன் ஆதலின் அவன் பெற்றான் !

ஓஒ + கொண்டான் = ஓஒ கொண்டான்  (அல்வழிப் புணர்ச்சி)
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (306)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 31, 2014 10:21 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (306)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உயிர்மயங்கியலில் ‘எ’ , ‘ஒ’ ஈற்றுச் சொற்களைப் பார்த்துவருகிறோம் ! :-

  “தேற்ற வெகரமுஞ் சிறப்பி  னொவ்வும்
    மேற்கூ றியற்கை வல்லெழுத் துமிகா”  (உயிர்மயங். 71)

‘தேற்ற எகரமும் ’ – தெளிவுப் பொருளில் வரும்  ‘எ’ஈற்று இடைசொல்லும் ,

‘சிறப்பின் ஒவ்வும்’ – சிறப்புப் பொருளில் வரும் ‘ஒ’ ஈற்று இடைச்சொல்லும் ,

‘மேற்கூறு இயற்கை’ – மேலே , முன் சூத்திரத்தில் , கூறப்பட்டது போன்றே வல்லொற்று சந்தியாக வராது !

1. யானேஎ + கொண்டேன் = யானேஎக்  கொண்டேன்  ×
யானேஎ + கொண்டேன் = யானேஎ  கொண்டேன்  √  (அல்வழிப் புணர்ச்சி)
(அவன் பெற்றானா இல்லையா என்று ஐயம் வந்து அவனைக் கேட்கும்போது , தெளிவாக , ‘ஐயம் வேண்டாம் நானே (யானேஎ) பெற்றேன்’ எனச் சற்று நீட்டிக் கூறுகிறானல்லவா? இதுதான்
தேற்றப் பொருள் ! இதனைத் தருவதற்காகத்தான்  அந்த ‘எ’ !)

2. நீயேஎ + கொண்டாய் = நீயேஎக்  கொண்டாய்  ×
நீயேஎ + கொண்டாய் = நீயேஎ  கொண்டாய்  √(அல்வழிப் புணர்ச்சி)

3. அன்னேஎ + கொண்டான் = அவனேஎக்  கொண்டான்  ×
அவனேஎ + கொண்டான் = அவனேஎ  கொண்டான்  √(அல்வழிப் புணர்ச்சி)

4. ஓஒ + கொண்டேன் = ஓஒக்  கொண்டேன்  ×
ஓஒ + கொண்டேன் = ஓஒ  கொண்டேன்  √(அல்வழிப் புணர்ச்சி)

5. ஓஒ + கொண்டாய் = ஓஒக்  கொண்டாய்  ×
ஓஒ + கொண்டாய் = ஓஒ  கொண்டாய்  √(அல்வழிப் புணர்ச்சி)

6. ஓஒ + கொண்டான் = ஓஒக்  கொண்டான்  ×
ஓஒ + கொண்டான் = ஓஒ  கொண்டான்  √(அல்வழிப் புணர்ச்சி)

ஏ , ஓ – இடைச் சொற்கள் ; ‘யானே’ என்பதில் ‘யான்’ , பெயர்ச்சொல் !

இதன்பின் , இளம்பூரணர் தரும் கூடுதல் இலக்கணத்தை வருமாறு காட்டலாம் !:-

7. ஏஎ + கொற்றா = ஏஎ கொற்றா ×
ஏஎ + கொற்றா = ஏஎக் கொற்றா √ (அல்வழிப் புணர்ச்சி)

8. ஏஎ + சாத்தா= ஏஎ சாத்தா ×
ஏஎ + சாத்தா = ஏஎச் சாத்தா √ (அல்வழிப் புணர்ச்சி)

9. ஏஎ + தேவா = ஏஎ தேவா ×
ஏஎ + தேவா = ஏஎத் தேவா √ (அல்வழிப் புணர்ச்சி)

10. ஏஎ + பூதா = ஏஎ பூதா ×
ஏஎ + பூதா = ஏஎப் பூதா √ (அல்வழிப் புணர்ச்சி)

ஏ – வினைச் சொல் ; எ – அளபெடை .

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (307)

Post by Dr.S.Soundarapandian on Mon Sep 01, 2014 5:00 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (307)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 ‘எ’ ஈறு முடிந்து , இப்போது ‘ஏ’ ஈறு !-

“ஏகார விறுதி யூகார வியற்றே” (உயிர்மயங். 72)

‘ஏகார இறுதி’ – ‘ஏ’ ஈற்றுச் சொல்,

‘ஊகார இயற்றே’ -  ‘ஊ’ ஈற்றுச் சொல்போலப் புணரும் !

அஃதாவது –
முன்பு உயிர்மயங்கியல் சூத்திரம் 62இல் , ‘கொண்மூ + கடிது = கொண்மூக் கடிது’ என அல்வழிப் புணர்ச்சியில் , வல்லெழுத்துச் சந்தி பெற்றுப் புணர்ந்ததைப் பர்த்தோமல்லவா ? அதுபோல , அல்வழிப்புணர்ச்சியில் , இங்கும் வல்லெழுத்துச் சந்தி வரும் !-

1. சே + கடிது = சே கடிது ×
சே + கடிது = சேக் கடிது √ (அல்வழிப் புணச்சி)
சே என்ற அழிஞ்சில் பற்றி முன்பே பார்த்துள்ளோம் !

2. சே + சிறிது = சே சிறிது ×
சே + சிறிது = சேச் சிறிது √ (அல்வழிப் புணச்சி)

3. சே + தீது = சே தீது ×
சே + தீது = சேத் தீது √ (அல்வழிப் புணச்சி)

4. சே + பெரிது = சே பெரிது ×
சே + பெரிது = சேப் பெரிது √ (அல்வழிப் புணச்சி)
சே என்ற அழிஞ்சில் பற்றி முன்பே பார்த்துள்ளோம் !

5 . ஏ + கடிது = ஏ கடிது ×
         ஏ + கடிது = ஏக்  கடிது √ (அல்வழிப் புணச்சி)
(ஏ – அம்பு  ; ஏக்  கடிது – அம்பானது கடுமையானது)

6 . ஏ + சிறிது = ஏ சிறிது ×
         ஏ + சிறிது = ஏச்  சிறிது √ (அல்வழிப் புணச்சி)
(ஏச்  சிறிது – அம்பானது சிறியது)

7 . ஏ + தீது = ஏ தீது ×
         ஏ + தீது = ஏத் தீது √ (அல்வழிப் புணச்சி)
(ஏத் தீது – அம்பானது தீயது)

8 . ஏ + பெரிது = ஏ பெரிது ×
         ஏ + பெரிது = ஏப்  பெரிது √ (அல்வழிப் புணச்சி)
(ஏப் பெரிது – அம்பானது பெரியது)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by M.Saranya on Mon Sep 01, 2014 5:08 pm

சிறந்த பதிவு ஐயா
பொது தேர்விற்கு முக்கியமானது
நிதானமாக படித்து புரிந்து கொள்வேன்
சந்தேகம் எழுந்தால் நான் கேட்பதற்கு பதிலளியுங்கள் ஐயா
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by Dr.S.Soundarapandian on Tue Sep 02, 2014 12:48 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (308)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஏ’ – இந்த இடைச் சொல் புணரும் வகை தொடர்கிறது ! –

“மாறுகொ ளெச்சமும் வினாவு மெண்ணும்
கூறிய வல்லெழுத்  தியற்கை  யாகும்” (உயிர்மயங். 73)


“மாறுகொள் எச்சமும்’ – எதிர்மறைப் பொருளை விடையாகத் தரக்கூடிய, எச்ச இடைச் சொல்லும் ,  

‘வினாவும்’ – வினாப்பொருளைத் தரும் இடைச் சொல்லும் ,

‘எண்ணும்’ – எண்ணுப் பொருளில் வரும் இடைச் சொல்லும் ,

‘கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும்’ – முன் நூற்பாவில் கூறியதுபோன்ற வல்லெழுத்துச் சந்தி பெறாது புணரும் !

1. யானே + கொண்டேன் = யானேக் கொண்டேன் ×
யானே + கொண்டேன் = யானே கொண்டேன் √  (அல்வழிப் புணர்ச்சி)
(யானே கொண்டேன் ? : ‘யானே’ என்பதன் ஈற்றிலுள்ள ‘ஏ’ எதிர்மறை ஏகாரம் ! ‘யான்
கொள்ளவில்லை’ என்ற எதிர்மறை எச்சப் பொருளைதருவது ! இதுவே ‘மாறுகொள் எச்சம்’)

2. யானே + சென்றேன் = யானேச் சென்றேன் ×
யானே + சென்றேன் = யானே சென்றேன் √  (அல்வழிப் புணர்ச்சி)

3. யானே + தந்தேன் = யானேத் தந்தேன் ×
யானே + தந்தேன் = யானே தந்தேன் √  (அல்வழிப் புணர்ச்சி)

4. யானே + போயினேன் = யானேப் போயினேன் ×
யானே + போயினேன் = யானே போயினேன் √  (அல்வழிப் புணர்ச்சி)

5. நீயே + கொண்டாய் = நீயேக் கொண்டாய் ×
நீயே + கொண்டாய் = நீயே கொண்டாய் √  (அல்வழிப் புணர்ச்சி)
(நீயே கொண்டாய் ? : ‘நீயே’ என்பதன் ஈற்றிலுள்ள ‘ஏ’ வினா ஏகாரம் ! ‘நீதானா
கொண்டது ?’ என்ற வினாப் பொருளைதருவது !)

6. நீயே + சென்றாய் = நீயேச் சென்றாய் ×
நீயே + சென்றாய் = நீயே சென்றாய் √  (அல்வழிப் புணர்ச்சி)

7. நீயே + தந்தாய் = நீயேத் தந்தாய் ×
நீயே + தந்தாய் = நீயே தந்தாய் √  (அல்வழிப் புணர்ச்சி)

8. நீயே + போயினாய் = நீயேப் போயினாய் ×
நீயே + போயினாய் = நீயே போயினாய் √  (அல்வழிப் புணர்ச்சி)

9. கொற்றனே , சாத்தனே , தேவனே , பூதனே – இவ்வாறு அடுக்கிவரும்போது , ஒவ்வொரு சொல்லின் ஈற்றிலும் உள்ள ‘ஏ’ என்பது , எண்ணேகாரம் எனப்படும் !

10. அவனே + கொண்டான் = அவனேக் கொண்டான் ×
    அவனே + கொண்டான் = அவனே கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
(அவனே கொண்டான் : ‘அவனே’ என்பதிலுள்ள ‘ஏ’, பிரிநிலை ஏகாரம் ! ‘அவன்தான் ; வேறு எவரும் கொள்ளவில்லை’ என்ற பொருளைத் தருவது ! இவ்விளக்கத்தை இளம்பூரணர் உரையால் பெறுகிறோம் !)

11. கடலே + பாடெழுந் திசைக்கும் = கடலேப் பாடெழுந் திசைக்கும் ×
    கடலே + பாடெழுந் திசைக்கும் = கடலே பாடெழுந் திசைக்கும் √ (அல்வழிப் புணர்ச்சி)
(கடலே : இதிலுள்ள ‘ஏ’, பொருளற்ற அசை ;  ‘ஈற்றசை’எனப்படும் ! இவ்விளக்கத்தை இளம்பூரணர் உரையால் பெறுகிறோம் !)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (309)

Post by Dr.S.Soundarapandian on Wed Sep 03, 2014 8:22 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (309)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 ‘ஏ’ ஈறு தொடர்கிறது ! –

“வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே”  (உயிர்மயங். 74)

‘வேற்றுமைக் கண்ணும்’ – வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும்,

‘அதனோர்  அற்றே’ – முன்பு ‘ஊ’ ஈற்றுச் சொல் ,அல்வழியில், வல்லெழுத்துச் சந்தி பெற்றதுபோல இங்கும் வல்லெழுத்துச் சந்தியே பெறும் !

 ‘கொண்மூ’ என்ற ‘ஊ’ ஈற்றுப் பெயர்ச்சொல் , அல்வழியில் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட வருசொல் வந்து புணரும்போது, ‘க்’ பெற்றுக், ‘கொண்மூக் கடிது’ (உயிர்மயங்.62)ஆனதல்லவா? அதே புணர்ச்சிமுறைதான் ‘ஏ’ ஈற்று வேற்றுமைப் புனர்ச்சிக்கும் !

1. வே + குடம் = வேங்குடம் ×
வே + குடம் = வேக்குடம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(வேக்குடம் – வேதலையுடைய குடம்; பச்சைமண் குடமல்ல , சுட்ட குடம் என்பது பொருள்.)

2. வே + சாடி = வேஞ்சாடி ×
வே + சாடி = வேச்சாடி √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(வேச்சாடி – வேதலையுடைய சாடி)

3. வே + தூதை = வேந்தூதை ×
வே + தூதை = வேத்தூதை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதை – சிறு மண் பாண்டம்;வேத்தூதை – வேதலையுடைய சிறு மண்பாண்டம்)

4. வே + பானை = வேம்பானை ×
வே + பானை = வேப்பானை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(வேப்பானை – வேதலையுடைய பானை)

5. ஏ + கடுமை = ஏகடுமை ×
ஏ+ கடுமை = ஏக்கடுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏக்கடுமை – அம்பினது கடுமை)

6. ஏ + சிறுமை = ஏசிறுமை ×
ஏ+ சிறுமை = ஏச்சிறுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏச்சிறுமை – அம்பினது சிறுமை)

7. ஏ + தீமை = ஏதீமை ×
ஏ+ தீமை = ஏத்தீமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏத்தீமை – அம்பினது தீமை)

8. ஏ + பெருமை = ஏபெருமை ×
ஏ+ பெருமை = ஏப்பெருமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏப்பெருமை – அம்பினது பெருமை)

மேல் இளம்பூரணர் எடுத்துக்காட்டில் , ‘சாடி’ என்ற சொல் வந்ததைக் கவனியுங்கள் !

ஆம் ! ‘சாடி’ தமிழ்ச் சொல்தான் ! வடசொல் அல்ல ! ‘ஜாடி’ என்று ஒலி மாற்றம்
பெற்றது ; அவ்வளவுதன் !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (310)

Post by Dr.S.Soundarapandian on Thu Sep 04, 2014 6:04 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (310)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஏ’ ஈற்றுச் சொல் , வேற்றுமையில் , வல்லொற்றுப் பெற்றுப் முடிவதைச் சற்றுமுன் பார்த்தோம் !

அந்த விதிக்குச் சிறப்பு விதியை அடுத்து நுவல்கிறார்! –

“ஏயெ  னிறுதிக்  கெகரம் வருமே”  (உயிர்மயங். 75)

‘ஏ என் இறுதிக்கு’ – ‘ஏ’ ஈற்றுப் பெயர்ச்சொற்களுக்கு

‘எகரம் வருமே’ – புணர்ச்சியில் , வல்லெழுத்துச் சந்தியுடன் ‘எ’ என்ற எழுத்தும் தோன்றும் !

1. ஏ + கொட்டில் = ஏக்கொட்டில் ×
ஏ + கொட்டில் = ஏஎக்கொட்டில் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎக்கொட்டில் – அம்புகளை வைத்திருக்கும் வில்வித்தை பயிற்றும் இடம்)


2. ஏ + சாலை = ஏச்சாலை ×
ஏ + சாலை = ஏஎச்சாலை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎச்சாலை – அம்புகளை வைத்திருக்கும் வில்வித்தை பயிற்றும் இடம்)

3. ஏ + துளை = ஏத்துளை ×
ஏ + துளை = ஏஎத்துளை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎத்துளை – அம்பினால் ஏற்பட்ட  துளை)

4. ஏ + புழை = ஏப்புழை ×
ஏ + புழை = ஏஎப்புழை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎப்புழை – அம்பு ஏற்படுத்திய   துளை)

நச்சினார்க்கினியர் உரைப்படி
க் கீழ்வரும் எடுத்துக்காட்டுகளையும் தரலாம் !-

5. ஏ + நெகிழ்ச்சி = ஏநெகிழ்ச்சி ×
ஏ + நெகிழ்ச்சி = ஏஎநெகிழ்ச்சி √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎநெகிழ்ச்சி – அம்பின் நெகிழ்ச்சி)

6. ஏ + நேர்மை = ஏநேர்மை ×
ஏ + நேர்மை = ஏஎநேர்மை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏநேர்மை – அம்பின் நேரிய தன்மை)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (311)

Post by Dr.S.Soundarapandian on Fri Sep 05, 2014 9:37 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (311)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சில ‘ஏ’ஈற்றுச் சொற்கள் , வல்லெழுத்துச் சந்தி பெற்றுப் புணர்ந்ததை முந்தைய இரு ஆய்வுகளில் பார்த்தோம் !

இங்கு ஒரு வினா எழுகிறது !

அப்படியானால் , எல்லா ‘ஏ’ ஈற்றுப் பெயர்களுமே வல்லெழுத்துச் சந்தி பெற்றுத்தான் புணருமா?

இதற்கு விடைதான் அடுத்த நூற்பா ! –

“சேவென் மரப்பெய ரொடுமர வியற்றே” (உயிர்மயங். 76)

‘சே  என் மரப்பெயர் ’ -  ‘சே’ எனும் மரத்தைக் குறிக்கும் பெயர்,

‘ஒடுமர இயற்றே’  -   ‘ஒடு’ எனும் மரப்பெயர் புணர்ந்ததுபோலப் புணரும் !

‘ஒடு’ எப்படிப் புணர்ந்தது ?

ஒடு + கோடு = ஒடுங் கோடு (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 60)

இதைப்போலச் ‘சே’ புணர்வதைப் பார்ப்போம் ! –

1. சே + கோடு = சேக்கோடு ×
  சே + கோடு = சேங்கோடு √ (வேற்றுமைப் புணர்ச்சி)

2. சே + செதிள்  = சேச்செதிள் ×
  சே + செதிள் = சேஞ்செதிள் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

3. சே + தோல் = சேத்தோல் ×
  சே + தோல் = சேந்தோல் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

4. சே + பூ = சேப்பூ ×
  சே + பூ = சேம்பூ √ (வேற்றுமைப் புணர்ச்சி)

                                                                          ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (312)

Post by Dr.S.Soundarapandian on Sat Sep 06, 2014 5:03 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (312)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

முன் ஆய்வில் ‘அடச் சே’ என்று விட்டுவிடாமல் , மரத்தைக் குறிக்கும் சொல்லான ‘சே’ , வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘சேங்கோடு’ எனப் புணரும் என்று பார்த்தோம் !

அதே ‘சே’ என்ற சொல் பெற்றத்தைக் குறித்தால்?

விடைதான் கீழ்வரும் விதி –

         “ பெற்ற மாயின் முற்றவின்  வேண்டும்” (உயிர்மயங். 77)
(பெற்றம் – பசு, காளை , எருமை மூன்றுக்கும் பொதுவான பெயர் )

‘பெற்றம்  ஆயின்’ – ‘சே’ என்ற சொல் பெற்றத்தைக் குறித்தால் ,

‘முற்ற இன் வேண்டும்’ – வேற்றுமைப் புணர்ச்சியில் ‘இன்’ , சாரியையாக வரும் !

1. சே + கோடு = சேங்கோடு ×
சே + கோடு = சேவின்கோடு √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின்கோடு – எருமையின் கொம்பு)

2. சே + செவி = சேஞ்செவி ×
சே + செவி = சேவின்செவி √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின்செவி – எருமையின் காது)

3. சே + தலை = சேந்தலை ×
சே + தலை = சேவின்தலை √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின்தலை – எருமையின் தலை)

4. சே + புறம் = சேம்புறம் ×
சே + புறம் = சேவின்புறம் √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின்புறம் – எருமையின் முதுகு)

இளம்பூரணர் உரையால் , ‘சே’ என்பது மரத்தைக் குறித்தாலும் ‘இன்’ சாரியை
வரும் ; அம்பைக்குறிக்கும் ‘ஏ’ யும் ‘இன்’சாரியை பெறும் என்று அறியவருகிறோம் !-

5 . சே + கோடு = சேவின் கோடு √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின் கோடு – சே மரத்தின் கிளை)

6 . சே + செதிள் = சேவின் செதிள் √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின் செதிள் – சே மரத்தின் வெட்டுத்துண்டு)

7 . சே + தோல் = சேவின் தோல் √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின் தோல் – சே மரத்தின் பட்டை)

8 . சே + பூ = சேவின் பூ √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின் பூ – சே மரத்தின் பூ)

9 . ஏ + கடுமை = ஏவின் கடுமை √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏவின் கடுமை – அம்பின் கடிய தன்மை)

10 . ஏ + சிறுமை = ஏவின் சிறுமை √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏவின் சிறுமை – அம்பின் சிறிய தன்மை)

11 . ஏ + தீமை = ஏவின் தீமை √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏவின் தீமை – அம்பின் தீமை)

12 . ஏ + பெருமை = ஏவின் பெருமை √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏவின் பெருமை – அம்பின் பெருமை)

‘ஏ’ , வகர உடம்படுமெய் பெற்று , இன் சாரியையுடன், ‘ஏவின்’ என வந்துள்ளது காண்க !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (313)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 07, 2014 9:02 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (313)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உயிர்மயங்கியலில் ‘ஏ’ ஈற்றுச் சொற்களின் புணர்சிகளை முடித்தோம் !

இப்போது , ‘ஐ’ ஈறு !

‘ஐ’ ஈற்றுப் பெயர்ச்சொற்கள் , அல்வழிப் புணர்ச்சியில், எப்படிப் புணரும் எனத் தொகைமரபு ஆய்வில் நாம் முன்பே பார்த்துள்ளோம் ! அதை நினைவுக்குக் கொணர்க !

தொகை மரபு நூற்பா 16இல் , ‘தினை + குறிது = தினை குறிது’என்ற அல்வழிப் புணர்ச்சியைப் பார்த்தோம் !
இப்போது அதே ‘ஐ’ ஈற்றுப் பெயர்ச்சொல் , வேற்றுமைப் புணர்ச்சியில் எப்படிப் புணரும் எனக் காட்டுகிறார் தொல்காப்பியர் !-

“ஐகார விறுதிப் பெயர்நிலை முன்னர்
 வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே” (உயிர்மயங். 78)

‘ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர்’ – ‘ஐ’யை ஈற்றிலே கொண்ட பெயர்ச்சொற்களின் முன்பாக ,

‘வேற்றுமை  ஆயின்’ – வேற்றுமைப் புணர்ச்சி எனில்,

‘வல்லெழுத்து மிகுமே’ – சந்தியாக வல்லொற்றுத் தோன்றும் !

1. யானை + கோடு = யானை கோடு ×
யானை + கோடு = யானைக் கோடு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
[யானைக் கோடு – யானையின் கொம்பு (தந்தம்)]

2. யானை + செவி = யானை செவி ×
யானை + செவி = யானைச் செவி √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(யானைச் செவி – யானையின் காது)

3. யானை + தலை = யானை தலை ×
யானை + தலை = யானைத் தலை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(யானைத் தலை – யானையின் தலை)

4. யானை + புறம் = யானை புறம் ×
யானை + புறம் = யானைப் புறம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(யானைப் புறம் – யானையின் முதுகு)

மேலை எடுத்துக்காட்டுகளில் , வருமொழி எல்லாம் வல்லெழுத்தை முதலாகக் கொண்டவை
என்பதைக் கவனிக்க !

நச்சினார்க்கினியர் கூடுதல் இலக்கணம் ஒன்றை இங்கே நமக்குத் தருகிறார் !

மேல் நான்கு எடுத்துக்காட்டுகளிலும் , வேற்றுமைப் புணர்ச்சியே எனினும், அவை யாவும் , உருபற்ற பொருள் புணர்ச்சிகளே என்பதையும் கவனிக்க!

அப்படியனால், வேற்றுமை உருபு சேர்ந்த ‘ஐ’ ஈற்றுப் பெயர் எப்படிப் புணரும் ?

இதுதான் நச்சரின் கூடுதல் இலக்கணம் !

அதன்படி –

5. யானையை + கொணர்ந்தான் = யானையை கொணர்ந்தான் ×
யானையை + கொணர்ந்தான் = யானையைக் கொணர்ந்தான் √  (வேற்றுமைப் புணர்ச்சி)

6. யானையை + தேய்த்தான் = யானையை தேய்த்தான் ×
யானையை + தேய்த்தான் = யானையைத் தேய்த்தான் √  (வேற்றுமைப் புணர்ச்சி)

7. யானையை + கண்டான் = யானையை கண்டான் ×
யானையை + கண்டான் = யானையைக் கண்டான் √  (வேற்றுமைப் புணர்ச்சி)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (314)

Post by Dr.S.Soundarapandian on Wed Sep 10, 2014 5:19 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (314)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உருபியல் ஆய்வில் (நூற்பா 5) , ‘அவை’ என்ற சுட்டுப் பெயர் , ‘ஐ’உருபுடன் சேர்ந்து , ‘அவையற்றை’ , ‘அவற்றை’ என  ‘வற்று’ச்  சாரியை பெற்றுப்   புணரும் என்று பார்த்தோம் !
இப்போது , அதே ‘அவை’ வேற்றுமைப் பொருள் புணர்ச்சியில் எப்படிப் புணரும் என்று கட்டுகிறார் –

“சுட்டுமுத  லிறுதி  யுருபிய  னிலையும்” ( உயிர்மயங். 79)

‘சுட்டுமுதல் இறுதி’ – சுட்டெழுத்து ‘அ’வை முதலாகக் கொண்ட ‘ஐ’ ஈற்றுச் சொல்லான ‘அவை’ என்ற பெயர்ச்சொல் ,
‘உருபியல் நிலையும்’ – உருபியல் நூற்பா 5இல் கூறியவாறு , ஈற்று ‘ஐ’ கெட்டும் கெடாதும் ,‘வற்று’ச் சாரியை பெற்று முடியும் !
நிலைமொழி ஈற்று ‘ஐ’ கெடாமல் , ‘வற்று’ப் பெற்றதற்கு எடுத்துக்காட்டுகள் !-
1. அவை + கோடு = அவைக் கோடு ×
  அவை + கோடு = அவை + வற்று + கோடு = அவையற்றுக் கோடு  √ (வற்று – சரியை; ய் – உடம்படு
                                                          மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அவையற்றுக் கோடு – அவைகளின் கிளை )

2. அவை + செவி = அவைச் செவி ×
 அவை + செவி = அவை + வற்று + செவி = அவையற்றுச் செவி  √ (வற்று – சரியை; ய் – உடம்படு
                                                          மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அவையற்றுச் செவி – அவைகளின் காது )


3. அவை + தலை = அவைத் தலை ×
 அவை + தலை = அவை + வற்று + தலை = அவையற்றுத் தலை  √ (வற்று – சரியை; ய் – உடம்படு
                                                             மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அவையற்றுத் தலை – அவைகளின் தலை )


4. அவை + புறம் = அவைப் புறம் ×
 அவை + புறம் = அவை + வற்று + புறம் = அவையற்றுப் புறம்  √ (வற்று – சரியை; ய் – உடம்படு
                                                          மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அவையற்றுப் புறம் – அவைகளின்  புறப்பகுதி )

5. இவை + கோடு = இவைக் கோடு ×
  இவை + கோடு = இவை + வற்று + கோடு = இவையற்றுக் கோடு  √ (வற்று – சரியை; ய் – உடம்படு
                                                          மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(இவையற்றுக் கோடு – இவைகளின் கிளை )

6. இவை + செவி = இவைச் செவி ×
  இவை + செவி = இவை + வற்று + செவி = இவையற்றுச் செவி  √ (வற்று – சரியை; ய் – உடம்படு
                                                   மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(இவையற்றுச் செவி –  இவைகளின் காது )


7. இவை + தலை = இவைத் தலை ×
 இவை + தலை = இவை + வற்று + தலை = இவையற்றுத் தலை  √ (வற்று – சரியை; ய் – உடம்படு
                                                            மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(இவையற்றுத் தலை – இவைகளின் தலை )


8. இவை + புறம் = இவைப் புறம் ×
  இவை + புறம் = இவை + வற்று + புறம் = இவையற்றுப் புறம்  √ (வற்று – சரியை; ய் – உடம்படு
                                                            மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(இவையற்றுப் புறம் – இவைகளின்  புறப்பகுதி )

9. உவை + கோடு = உவைக் கோடு ×
 உவை + கோடு = உவை + வற்று + கோடு = உவையற்றுக் கோடு  √ (வற்று – சரியை; ய் – உடம்படு
                                                                மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(உவையற்றுக் கோடு – உவைகளின் கிளை )

10. உவை + செவி = உவைச் செவி ×
   உவை + செவி = உவை + வற்று + செவி = உவையற்றுச் செவி  √ (வற்று – சரியை; ய் – உடம்படு
                                                                  மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(உவையற்றுச் செவி – உவைகளின் காது )


11. உவை + தலை = உவைத் தலை ×
    உவை + தலை = உவை + வற்று + தலை = உவையற்றுத் தலை  √ (வற்று – சரியை; ய் – உடம்படு
                                                      மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(உவையற்றுத் தலை – உவைகளின் தலை )


12. உவை + புறம் = உவைப் புறம் ×
உவை + புறம் = உவை + வற்று + புறம் = உவையற்றுப் புறம்  √ (வற்று – சரியை; ய் – உடம்படு
         மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(உவையற்றுப் புறம் – உவைகளின்  புறப்பகுதி )

இனி , நிலைமொழி ஈற்று ‘ஐ’  கெட்டு , ‘வற்று’ப் பெற்றதற்கு எடுத்துக்காட்டுகள் ! -  

13. அவை + கோடு = அவைக் கோடு ×
   அவை + கோடு = அவை + வற்று + கோடு = அவற்றுக் கோடு  √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
                                                                            (வேற்றுமைப் புணர்ச்சி)
(அவற்றுக் கோடு – அவைகளின் கிளை )

14. அவை + செவி = அவைச் செவி ×
     அவை + செவி = அவை + வற்று + செவி = அவற்றுச் செவி  √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)    
                                                                         (வேற்றுமைப் புணர்ச்சி)
(அவற்றுச் செவி – அவைகளின் காது )


15. அவை + தலை = அவைத் தலை ×
   அவை + தலை = அவை + வற்று + தலை = அவற்றுத் தலை  √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
                                                                                       (வேற்றுமைப் புணர்ச்சி)                                                
(அவற்றுத் தலை – அவைகளின் தலை )


16. அவை + புறம் = அவைப் புறம் ×
   அவை + புறம் = அவை + வற்று + புறம் = அவற்றுப் புறம்  √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
                                                                                 (வேற்றுமைப் புணர்ச்சி)                                
(அவற்றுப் புறம் – அவைகளின்  புறப்பகுதி )

17. இவை + கோடு = இவைக் கோடு ×
   இவை + கோடு = இவை + வற்று + கோடு = இவற்றுக் கோடு  √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
                                                                           (வேற்றுமைப் புணர்ச்சி)
(இவற்றுக் கோடு – இவைகளின் கிளை )

18. இவை + செவி = இவைச் செவி ×
இவை + செவி = இவை + வற்று + செவி = இவற்றுச் செவி  √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
        (வேற்றுமைப் புணர்ச்சி)
(இவற்றுச் செவி –  இவைகளின் காது )


19. இவை + தலை = இவைத் தலை ×
   இவை + தலை = இவை + வற்று + தலை = இவற்றுத் தலை  √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
                                                                                        (வேற்றுமைப் புணர்ச்சி)                                                          
(இவற்றுத் தலை – இவைகளின் தலை )


20. இவை + புறம் = இவைப் புறம் ×
   இவை + புறம் = இவை + வற்று + புறம் = இவற்றுப் புறம்  √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
                                                                                  (வேற்றுமைப் புணர்ச்சி)
(இவற்றுப் புறம் – இவைகளின்  புறப்பகுதி )

21. உவை + கோடு = உவைக் கோடு ×
    உவை + கோடு = உவை + வற்று + கோடு = உவற்றுக் கோடு  √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
                                                                                      (வேற்றுமைப் புணர்ச்சி)
(உவற்றுக் கோடு – உவைகளின் கோடு )

22. உவை + செவி = உவைச் செவி ×
    உவை + செவி = உவை + வற்று + செவி = உவற்றுச் செவி  √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
                                                                                      (வேற்றுமைப் புணர்ச்சி)
(உவற்றுச் செவி – உவைகளின் செவி )


23. உவை + தலை = உவைத் தலை ×
    உவை + தலை = உவை + வற்று + தலை = உவற்றுத் தலை  √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
                                                                                       (வேற்றுமைப் புணர்ச்சி)
(உவற்றுத் தலை – உவைகளின் தலை )


24. உவை + புறம் = உவைப் புறம் ×
    உவை + புறம் = உவை + வற்று + புறம் = உவற்றுப் புறம்  √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
                                                                                                                (வேற்றுமைப் புணர்ச்சி)                                                                                                                                                  
(உவற்றுப் புறம் – உவைகளின்  புறப்பகுதி )

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (315)

Post by Dr.S.Soundarapandian on Sat Sep 20, 2014 10:22 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (315)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 ‘ஐ’ ஈற்றுச் சொற்களில் இப்போது , மூன்று மரப் பெயர்களை எடுத்துக்கொள்கிறார் !

அவை – விசை , ஞெமை , நமை !

இந்த மூன்று பெயர்ச்சொற்களும் ,வேற்றுமைப் புணர்ச்சியில் , எப்படிப் புணரும் ? இதுதான் வினா!

விடை !:-

“விசைமரக் கிளவியு ஞெமையு நமையும்
  அவைமுப் பெயருஞ் சேமர வியல”  (உயிர்மயங். 80)

என்ன சொல்கிறார் தொல்காப்பியர் ?

‘சே’ மரம் எப்படிப் புணர்ந்த்தோ அப்படிப் புணரும் ! அதற்குமேல் பேச்சில்லை என்கிறார் !

‘சே’ மரம் எங்கே புணர்ந்தது ?எப்படிப் புணர்ந்தது ?

‘சே’ மரம் , உயிர்மயங்கியல் நூற்பா 76இல் புணர்ந்தது !

அங்கே , ‘சே + கோடு = சேங் கோடு ’ , என மெல்லெழுத்துச் சந்தி பெற்றுப் புணர்ந்தது !

அதன்படி –

1. விசை + கோடு = விசைக் கோடு ×
  விசை + கோடு = விசைங் கோடு√  (வேற்றுமைப் புணர்ச்சி)
(விசைங் கோடு – விசை மரத்தின் கிளை )

2. விசை + செதிள் = விசைச் செதிள் ×
  விசை + செதிள் = விசைஞ் செதிள்√  (வேற்றுமைப் புணர்ச்சி)
(விசைஞ் செதிள் – விசை மரத்தின் வெட்டுத் துண்டு )

3. விசை + தோல் = விசைத் தோல் ×
  விசை + தோல் = விசைந் தோல்√  (வேற்றுமைப் புணர்ச்சி)
(விசைந் தோல் – விசை மரத்தின் பட்டை )

4. விசை + பூ = விசைப் பூ ×
  விசை + பூ = விசைம் பூ√  (வேற்றுமைப் புணர்ச்சி)
(விசைம் பூ – விசை மரத்தின் பூ )

5. ஞெமை + கோடு = ஞெமைக் கோடு ×
  ஞெமை + கோடு = ஞெமைங் கோடு√  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஞெமைங் கோடு – ஞெமை மரத்தின் கிளை )

6. ஞெமை + செதிள் = ஞெமைச் செதிள் ×
  ஞெமை + செதிள் = ஞெமைஞ் செதிள்√  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஞெமைஞ் செதிள் – ஞெமை மரத்தின் வெட்டுத் துண்டு )

7. ஞெமை + தோல் = ஞெமைத் தோல் ×
  ஞெமை + தோல் = ஞெமைந் தோல்√  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஞெமைந் தோல் – ஞெமை மரத்தின் பட்டை )

8. ஞெமை + பூ = ஞெமைப் பூ ×
  ஞெமை + பூ = ஞெமைம் பூ√  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஞெமைம் பூ – ஞெமை மரத்தின் பூ )

9. நமை + கோடு = நமைக் கோடு ×
  நமை + கோடு = நமைங் கோடு√  (வேற்றுமைப் புணர்ச்சி)
(நமைங் கோடு – நனை மரத்தின் கிளை )

10. நமை + செதிள் = நமைச் செதிள் ×
   நமை + செதிள் = நமைஞ் செதிள்√  (வேற்றுமைப் புணர்ச்சி)
(நமைஞ் செதிள் –நமை மரத்தின் வெட்டுத் துண்டு )

11. நமை + தோல் = நமைத் தோல் ×
   நமை + தோல் = நமைந் தோல்√  (வேற்றுமைப் புணர்ச்சி)
(நமைந் தோல் – நமை மரத்தின் பட்டை )

12. நமை + பூ = நமைப் பூ ×
     நமை + பூ = நமைம் பூ√  (வேற்றுமைப் புணர்ச்சி)
(நமைம் பூ – நமை மரத்தின் பூ )

மேல் புணர்ச்சிகள் யாவற்றிலும் , வருமொழியானது , வல்லெழுத்தை முதலாக உடையன
என்பதைக் கவனிக்க !

மேல் மரங்களில் , ‘விசை’ ஆய்வுக்குரியதாக உள்ளது !

‘ஞெமை’ , ‘நமை’ இரண்டும் ஒன்றுதான் என எழுதியுள்ளனர் !

 ஞெமை , நமை , ஓமை மூன்றுமே ஒரே மரத்தைத்தான் குறிக்கின்றன எனவும் அதன்
தாவரவியல் பெயர் ‘Anogeissus latifolia’என்றும் குறித்துளர் !

நமை என்பதற்கு இன்னொரு பெயராக ‘வெக்காலி’ என்பதையும் தந்துளர் !

இப்போது , ஞெமை , நமை , ஓமை  என்ற பெயர்களால் குறிக்கப்படும் அந்த மரத்தைக் காண்போமா?
(1)


[You must be registered and logged in to see this image.]
 

Courtesy – Flowers of India
(2)

[You must be registered and logged in to see this image.]

Courtesy – Wikipedia
(3)
 [You must be registered and logged in to see this image.]
Courtesy – Wikipedia
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (316)

Post by Dr.S.Soundarapandian on Tue Sep 23, 2014 2:44 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (316)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உயிர்மயங்கியலில் தொல்காப்பியர் இப்போது , ‘பனை’ , ‘அரை’ , ‘ஆவிரை’ எனும் மூன்று ‘ஐ’ ஈற்றுப் பெயர்ச் சொற்களை அறிமுகப் படுத்துகிறார் ! –

“பனையு மரையு மாவிரைக் கிளவியும்
 நினையுங் காலை யம்மொடு சிவணும்
ஐயெ  னிறுதி யரைவரைந்து கெடுமே
மெய்யவ ணொழிய வென்மனார் புலவர் ”  (உயிர்மயங். 81)

 ‘பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்’ – ‘பனை ’ , ‘அரை’ , ‘ஆவிரை’ எனும் மூன்று பெயர்ச்சொற்களும் ,

‘நினையும் காலை அம்மொடு சிவணும் ’ – புணர்ச்சியில் , ‘அம்’ சாரியை பெறும் !

‘ஐயென்  இறுதி அரைவரைந்து கெடுமே’ –  ‘ஆவிரை’யின்  ‘ஐ’ ஈறானது , கெடும் !

‘மெய் அவண்  ஒழிய என்மனார் புலவர்’ -  அப்படி ‘ஐ’ கெடும்போது , அது ஏறிநின்ற மெய்யான ‘ர்’ , கெடாது நிற்கும் !

1. பனை + காய் = பனைக் காய் ×
  பனை + காய் = பனங் காய் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பனங் காய் – பனை மரத்தின் காய்)

2. பனை + செதிள் = பனைச் செதிள் ×
  பனை + செதிள் = பனஞ் செதிள் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பனஞ் செதிள் – பனை மரத்தின் வெட்டுத் துண்டு )

3. பனை + தோல் = பனைத் தோல் ×
  பனை + தோல் = பனந் தோல் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பனந் தோல் – பனை மரத்தின் பட்டை )

4. பனை + பூ = பனைப் பூ ×
  பனை + பூ = பனம் பூ √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பனம் பூ – பனை மரத்தின் பூ )

5. அரை + கோடு = அரைக் கோடு ×
  அரை + கோடு = அரையங் கோடு √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அரையங் கோடு – அரச மரத்தின் கிளை)

6. அரை + செதிள் = அரைச் செதிள் ×
 அரை + செதிள் = அரையஞ் செதிள் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அரையஞ் செதிள் – அரச மரத்தின் வெட்டுத் துண்டு )

7. அரை + தோல் = அரைத் தோல் ×
 அரை + தோல் = அரையந் தோல் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அரையந் தோல் – அரச மரத்தின் பட்டை )

8. அரை + பூ = அரைப் பூ ×
  அரை + பூ = அரையம் பூ √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அரையம் பூ – அரச மரத்தின் பூ )

9. ஆவிரை + கோடு = ஆவிரைக் கோடு ×
  ஆவிரை + கோடு = ஆவிரங் கோடு √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆவிரங் கோடு  - ஆவிரைச் செடியின் கிளை)

10. ஆவிரை + செதிள் = ஆவிரைச் செதிள் ×
  ஆவிரை + செதிள் = ஆவிரஞ் செதிள் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆவிரஞ் செதிள் – ஆவிரைச் செடியின் வெட்டுத் துண்டு )

11. ஆவிரை + தோல் = ஆவிரைத் தோல் ×
  ஆவிரை + தோல் = ஆவிரந் தோல் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆவிரந் தோல் – ஆவிரைச் செடியின் பட்டை )

12. ஆவிரை + பூ = ஆவிரைப் பூ ×
  ஆவிரை + பூ = ஆவிரம் பூ √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆவிரம் பூ – ஆவிரச் செடியின் பூ )

இளம்பூரணர் , தம் உரையில் ,  ‘தூதுணை’ , ‘வழுதுணை’ , ‘தில்லை’ , ‘ஓலை’
ஆகிய சில ‘ஐ’ ஈற்றுப் பெயர்ச்சொற்களைத் தந்து இவையும் மேலனபோன்றே புணரும்  என்றார் ! –

13. தூதுணை + காய் = தூதுணைக் காய் ×
  தூதுணை + காய் = தூதுணங் காய் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதுணங் காய் – தூதுவளைச் செடியின் காய்)

14. தூதுணை + செதிள் = தூதுணைச் செதிள் ×
  தூதுணை + செதிள் = தூதுணஞ் செதிள் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதுணஞ் செதிள் – தூதுவளைச் செடியின் வெட்டுத் துண்டு)

15. தூதுணை + தோல் = தூதுணைத் தோல் ×
  தூதுணை + தோல் = தூதுணந் தோல் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதுணந் தோல் – தூதுவளைச் செடியின் பட்டை)

16. தூதுணை + பூ = தூதுணைப் பூ ×
   தூதுணை + பூ = தூதுணம் பூ √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதுணம் பூ – தூதுவளைச் செடியின் பூ)

17. வழுதுணை + காய் = வழுதுணைக் காய் ×
    வழுதுணை + காய் = வழுதுணங் காய் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(வழுதுணங் காய்  – கத்தரிக் காய் )

18. வழுதுணை + செதிள் = வழுதுணைச் செதிள் ×
   வழுதுணை + செதிள் = வழுதுணஞ் செதிள் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(வழுதுணஞ் செதிள்  – கத்தரிச் செடியின் வெட்டுத் துண்டு )

19. வழுதுணை + தோல் = வழுதுணைத் தோல் ×
வழுதுணை + தோல் = வழுதுணந் தோல் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(வழுதுணந் தோல்  – கத்தரிச் செடியின் பட்டை )


20. வழுதுணை + பூ = வழுதுணைப் பூ ×
   வழுதுணை + பூ = வழுதுணம் பூ √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(வழுதுணம் பூ  – கத்தரிப் பூ )

21. தில்லை + காய் = தில்லைக் காய் ×
   தில்லை + காய் = தில்லங் காய் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தில்லங் காய் – தில்லை மரத்தின் காய் )

22. தில்லை + செதிள் = தில்லைச் செதிள் ×
   தில்லை + செதிள் = தில்லஞ் செதிள் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தில்லஞ் செதிள் – தில்லை மரத்தின் வெட்டுத் துண்டு )

23. தில்லை + தோல் = தில்லைத் தோல் ×
   தில்லை + தோல் = தில்லந் தோல் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தில்லந் தோல் – தில்லை மரத்தின் பட்டை)

24. தில்லை + பூ = தில்லைப் பூ ×
    தில்லை + பூ = தில்லம் பூ √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தில்லம் பூ – தில்லை மரத்தின் பூ )

25. ஓலை + போழ் = ஓலைப் போழ் ×
ஓலை + போழ் = ஓலம் போழ் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஓலம் போழ் – ஓலை நறுக்கு )

இளம்பூரணர் குறித்த ‘தில்லை’ மரத்தைப் பார்க்க ஆவலாக உள்ளீர்களா?

(1)
[You must be registered and logged in to see this image.]
Courtesy - wiki.trin.org.au

(2)
[You must be registered and logged in to see this image.]
Courtesy -  [You must be registered and logged in to see this link.]

(3)

[You must be registered and logged in to see this image.]
Courtesy -  wiki.trin.org.au

இம் மூன்றும் தில்லை மரப் படங்கள் !

தில்லை மரத்தின் தாவரவியல் பெயர் – Excoecaria agallocha

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by M.Saranya on Tue Sep 23, 2014 3:33 pm

அற்புதம் ஐயா
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by M.Saranya on Tue Sep 23, 2014 3:38 pm

அற்புதம் ஐயா
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by Dr.S.Soundarapandian on Wed Sep 24, 2014 10:54 am

நன்றி எம்.சரண்யா !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (317)

Post by Dr.S.Soundarapandian on Fri Sep 26, 2014 1:32 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (317)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பனங்காய் பற்றிச் சற்றுமுன் பார்த்தோம் !

‘பனாட்டு’ என்றால் தெரியுமா?

பனம் பழத்தின் தோலை நீக்கிவிட்டுச் சதையையெடுத்து அதில் நீர்  விட்டுக் கூழாக்கி , அக்கூழை , ஓலைப் பாயில் ஆறவிட்டுப் பிறகு , ஆறிவந்த கட்டிகளைக் கட்டி அடுப்புப் புகை எழும்பும் இடத்தில் தொங்க விடுவார்களாம் ! மழைக்காலங்களில் இப் பனாட்டுகளை உண்பார்களாம் ! நான் பார்த்ததில்லை !
இதுதான் ‘பனாட்டு’ !

தொல்காப்பியர் காலத்தில் ‘பனாஅட்டு’ என்று எழுதப்பட்டது ! (இடையிலே ஓர் ‘அ’ வந்துள்ளதைக் கவனிக்க !)
இதற்குச் சான்று ?

இதோ ! :-

“பனையின் முன்ன ரட்டுவரு காலை
 நிலையின் றாகு மையெ னுயிரே
ஆகாரம் வருத லாவயி னான” (உயிர்மயங். 82)

‘பனையின் முன் அட்டு வருகாலை’ – ‘பனை’ என்ற பெயர்ச் சொல்லை அடுத்து ‘அட்டு’என்ற சொல் வரும்போது,

‘நிலையின்று  ஆகும் ஐயென்  உயிரே’ – ‘பனை’ என்ற சொல்லின் ஈற்று ‘ஐ’ ஓடிவிடும் !

‘ஆகாரம் வருதல் ஆவயின் ஆன’ – ‘ஐ’ இருந்த அந்த இடத்தில் , ‘ஆ’ வந்து உட்காரும் !

1. பனை + அட்டு = பனையட்டு ×
 பனை + அட்டு = பனாட்டு ×
 பனை + அட்டு = பனாஅட்டு √  (வேற்றுமைப் புணர்ச்சி)

நச்சர் , தம் உரையில் சில எடுத்துக்காட்டுகளைக் காட்டுகிறார்! அவற்றை வருமாறு பட்டியலாகத்
தரலாம் ! –

2. ஓரை + நயம் = ஓரை நயம் ×
  ஓரை + நயம் = ஓரா நயம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஓரா நயம் – ஓரை எனும் இராசியின் நன்மை )

3. விச்சை + வாதி = விச்சை வாதி ×
 விச்சை + வாதி = விச்சா வாதி √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(விச்சா வாதி – வித்தை வாதி – வித்தையால் வாது செய்வோன் ; வித்தை – கல்வி ;வாது - argument )

4. கேட்டை + மூலம் = கேட்டை  மூலம் ×
  கேட்டை + மூலம் = கேட்டா மூலம் √  (அல்வழிப்  புணர்ச்சி)
(கேட்டா மூலம் – கேட்டை நட்சத்திரமும் மூல நட்சத்திரமும் )

5. பாறை + கல் = பாறைக் கல் ×
   பாறை + கல் = பாறாங் கல்  √  (அல்வழிப்  புணர்ச்சி)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by M.Saranya on Fri Sep 26, 2014 1:49 pm

அருமை ஐயா!!!

avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by Dr.S.Soundarapandian on Fri Sep 26, 2014 1:59 pm

நன்றி சரண்யா !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (318)

Post by Dr.S.Soundarapandian on Tue Sep 30, 2014 12:24 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (318)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘பனங்காய்’ , ‘பனாஅட்டு’ ஆகியவற்றைக் காட்டிய தொல்காப்பியர் இப்போது ‘பனைக்கொடி’யைத் தூக்கிப் பிடிக்கிறார் ! –

“கொடிமுன் வரினே யையவ ணிற்பக்
  கடிநிலை  யின்றே வல்லெழுத்து மிகுதி”  (உயிர்மயங். 83)

‘கொடிமுன் வரினே’ -  ‘கொடி’ என்பதற்கு முன்னே ‘பனை’ என்ற சொல் வருமானால்,

‘ஐ அவண் நிற்பக்’ -    ‘பனை’ என்பதன் ஈற்று ‘ஐ’ கெடாது நிற்க,

‘கடிநிலை  இன்றே வல்லெழுத்து மிகுதி’ – வேற்றுமைப் புணர்ச்சியில் , சந்தியாக, வல்லொற்று வரும் !

1. பனை + கொடி = பனங் கொடி×
பனை + கொடி = பனைக் கொடி √ (வேற்றுமைப் புணர்ச்சி)

இளம்பூரணர் , இங்கே உரை எழுதும்போது, வேறு சில நுணுக்கமான புணர்ச்சிகளை இயைக்கிறார் ! அவற்றை வருமாறு பிரித்துக் காட்டலாம் !–

2. பனை + காய் = பனங் காய் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
பனை + காய் = பனையின் காய் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

3. பனை + செதிள் = பனஞ் செதிள் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
பனை + செதிள் = பனையின் செதிள் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

4. பனை + தோல் = பனந் தோல் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
பனை + தோல் = பனையின் தோல் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

5. பனை + பூ = பனம் பூ √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
பனை + பூ = பனையின் பூ √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

6. அரை + கோடு = அரையங் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
அரை + கோடு = அரையின் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

7. அரை + செதிள் = அரையஞ் செதிள் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
அரை + செதிள் = அரையின் செதிள் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

8. அரை + தோல் = அரையந் தோல் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
அரை + தோல் = அரையின் தோல் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

9. அரை + பூ = அரையம் பூ √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
அரை + பூ = அரையின் பூ √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

10. ஆவிரை + கோடு = ஆவிரங் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
ஆவிரை + கோடு = ஆவிரையின் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

11. ஆவிரை + செதிள் = ஆவிரஞ் செதிள் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
ஆவிரை + செதிள் = ஆவிரையின் செதிள் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

12. ஆவிரை + தோல் = ஆவிரந் தோல் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
ஆவிரை + தோல் = ஆவிரையின் தோல் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

13. ஆவிரை + பூ = ஆவிரம் பூ √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
ஆவிரை + பூ = ஆவிரையின் பூ √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

14. வழை + கோடு = வழையின் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)

15.வழை + பூ = வழையின் பூ √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

    16.ஆவிரை + பூ = ஆவிரம் பூ √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
        ஆவிரை + பூ = ஆவிரையின் பூ √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

17.பனை + திரள் = பனைத் திரள் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)
(பனைத் திரள் – பனை மரங்களின் கூட்டம்)

மேல் ‘வழை’ என்பது சுரபுன்னைதான் ! கபிலர் தம் குறிஞ்சிப்பட்டில் குறித்துள்ளார் !

இளம் பூரணர் சுட்டிய ‘வழை’ மரத்தைப் பார்க்க ஆசையா?

(1)

[You must be registered and logged in to see this image.]
Courtesy – flowerspicture.org
(2)
[You must be registered and logged in to see this image.]
Courtesy – flora nellore .org

இவையே வழை மரத் தோற்றங்கள் !

‘வழை’ மரம் தாவரவியலில் Ochrocarpos longifolius எனக் குறிக்கப்படுகிறது !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (319)

Post by Dr.S.Soundarapandian on Mon Oct 06, 2014 12:49 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (319)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஐ’ ஈற்றுச் சொல் தொடர்கிறது !

இப்போது தொல்காப்பியர் , மாதத்தைக் குறிக்கும் ’சித்திரை’ முதலான சொற்களையும் , நாளைக் குறிக்கும் ‘கேட்டை’ முதலான சொற்களையும் எடுத்துக்கொள்கிறார்  !
-

       “திங்களு நாளு  முந்துகிளந் தன்ன” (உயிர்மயங். 84)

     அஃதாவது –

‘ஐ’யை  ஈற்றிலே கொண்ட திங்களைக் குறிக்கும் சொல் , ‘ஐ’யை ஈற்றிலே கொண்ட நாளைக் குறிக்கும் சொல் ஆகியன  முன்னே கூறியது போலப் புணரும் !

முன்னே கூறியதுதான் என்ன ?

உயிர்மயங்கியல் நூற்பா 45, 46 ஆகியவற்றில் ‘பரணியாற் கொண்டான்’ , ‘ஆடிக்குக் கொண்டான்’ என முறையே ‘ஆன்’ சாரியையும் , ‘இக்கு’ச் சாரியையும் வந்ததல்லவா? அதுபோல இங்கும் வரும் !

1. சித்திரை + கொண்டான் = சித்திரைக் கொண்டான் ×  
சித்திரை + கொண்டான் = சித்திரைக்குக்  கொண்டான் √   (இக்கு - சாரியை)  (வேற்றுமைப் புணர்ச்சி)
(சித்திரைக்குக்  கொண்டான் – சித்திரை மாதத்தில் பெற்றான்)

2. சித்திரை + சென்றான் = சித்திரைச் சென்றான் ×  
சித்திரை + சென்றான் = சித்திரைக்குச்  சென்றான் √   (இக்கு - சாரியை)  (வேற்றுமைப் புணர்ச்சி)
(சித்திரைக்குச்  சென்றான் – சித்திரை மாதத்தில் போனான்)

3. சித்திரை + தந்தான் = சித்திரைத் தந்தான் ×  
சித்திரை + தந்தான் = சித்திரைக்குத்  தந்தான் √   (இக்கு - சாரியை)  (வேற்றுமைப் புணர்ச்சி)
(சித்திரைக்குத்  தந்தான் – சித்திரை மாதத்தில் கொடுத்தான் )

4. சித்திரை + போயினான் = சித்திரைப் போயினான் ×  
சித்திரை + போயினான் = சித்திரைக்குப்  போயினான் √   (இக்கு - சாரியை)  (வேற்றுமைப் புணர்ச்சி)
(சித்திரைக்குப்  போயினான் – சித்திரை மாதத்தில் போனான் )

5. கேட்டை + கொண்டான் = கேட்டைக் கொண்டான்  ×  
கேட்டை + கொண்டான் = கேட்டையாற் கொண்டான் √   (ஆன் - சாரியை)  (வேற்றுமைப் புணர்ச்சி)
(கேட்டையாற் கொண்டான் – கேட்டை நாளில் பெற்றான் )

6. கேட்டை + சென்றான் = கேட்டைச் சென்றான்  ×  
கேட்டை + சென்றான் = கேட்டையாற் சென்றான் √   (ஆன் - சாரியை)  (வேற்றுமைப் புணர்ச்சி)
(கேட்டையாற் சென்றான் – கேட்டை நாளில் போனான் )

7. கேட்டை + தந்தான் = கேட்டைத் தந்தான்  ×  
கேட்டை + தந்தான் = கேட்டையாற் றந்தான் √   (ஆன் - சாரியை)  (வேற்றுமைப் புணர்ச்சி)
(கேட்டையாற் றந்தான் – கேட்டை நாளில் கொடுத்தான் )

8. கேட்டை + போயினான் = கேட்டைப் போயினான்  ×  
கேட்டை + போயினான் = கேட்டையாற் போயினான் √   (ஆன் - சாரியை)  (வேற்றுமைப் புணர்ச்சி)
(கேட்டையாற் போயினான் – கேட்டை நாளில் போனான் )

நச்சர் இவ்விடத்தில் ,  ‘இதே தொல்காப்பியர் சூத்திரத்தில் அடக்கிக் கொள்க ’ எனக் கூறிச் சில ‘ஐ’
ஈற்றுச் சொற்புணர்ச்சிகளை நமக்கு அள்ளித் தருகிறார் ! -

9. உழை + கோடு = உழைங் கோடு √  (மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(உழைங் கோடு – மான் கொம்பு; உழை - மான்)

10. அமை + கோடு = அமைங் கோடு √  (மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அமைங் கோடு – மூங்கில் மரக் கிளை; அமை - மூங்கில்)

11. உடை + கோடு = உடைங் கோடு √  (மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(உடைங் கோடு – உடைமரக் கிளை; உடைமரம் – குடைவேல் மரம்)

12. கலை + கோடு = கலைக் கோடு √  (வல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(கலைக் கோடு – மான் கொம்பு; கலை - மான்)
கலை + கோடு = கலைங் கோடு √  (மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(கலைங் கோடு – மான் கொம்பு)

13 .கரியவை + கோடு = கரியவற்றுக் கோடு √  (வற்று – சாரியையும் வல்லெழுத்துச்  சந்தியும்)
                                                                                                            (வேற்றுமைப்  புணர்ச்சி)
(கரியவற்றுக் கோடு – கரிய பொருள்களின் தண்டு)

14 .நெடியவை + கோடு = நெடியவற்றுக் கோடு √  (வற்று – சாரியையும் வல்லெழுத்துச்  சந்தியும்)
                                                                                                            (வேற்றுமைப்  புணர்ச்சி)
(நெடியவற்றுக் கோடு – நெடிய பொருள்களின் தண்டு)

15 .அவை + கொண்டான் = அவையத்துக் கொண்டான் √  (அத்து – சாரியையும் வல்லெழுத்துச்  சந்தியும்)
                                                                                                            (வேற்றுமைப்  புணர்ச்சி)
(அவையத்துக் கொண்டான் – சபையிடத்துப் பெற்றான்)

அவை + கொண்டான் = அவையிற் கொண்டான் √  (இன் – சாரியை)
                                                                                                            (வேற்றுமைப்  புணர்ச்சி)
(அவையிற் கொண்டான் – சபையில் பெற்றான்)

15. பனை + மாண்பு = பனையின் மாண்பு  (இன் – சாரியை (வேற்றுமைப் புணர்ச்சி)
(பனையின் மாண்பு  - பனை மரத்தின் மேன்மை)

நச்சினார்க்கினியர் கூறிய ‘உடை’ மரத்தைப் பார்க்க ஆசையா?
(1)
[You must be registered and logged in to see this image.]
Courtesy – alibaba.com

(2)
[You must be registered and logged in to see this image.]
Courtesy - agritech.tnau.ac.in

இவையே ‘உடை’ மரத் தோற்றங்கள் !

இதன் தாவரவியல் பெயர்- Acacia planifrons .

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by M.Saranya on Mon Oct 06, 2014 12:54 pm

அருமை அருமை !!!!
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

Page 16 of 28 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 22 ... 28  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum