ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 T.N.Balasubramanian

பூரானை அடிக்காதீர்கள்!
 T.N.Balasubramanian

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

என் அறிமுகம்
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 
T.N.Balasubramanian
 

Admins Online

தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Page 19 of 28 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 23 ... 28  Next

View previous topic View next topic Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by Dr.S.Soundarapandian on Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by Dr.S.Soundarapandian on Thu Apr 02, 2015 3:54 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (359)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபின் சென்ற நூற்பாவில் (8) , ‘ஆ’வுக்கு அளபெடை எழுத்து ‘அ’ என்றும் ,  ‘ஈ’ க்கு அளபெடை எழுத்து ‘இ’ என்றும் பார்த்தோம் !

அப்படியானால் , ‘ஐ’ , ‘ஔ’ ஆகியவற்றுக்கு ?

தொல்காப்பியரின் விடை ! –
“ஐஔ வென்னு மாயீ ரெழுத்திற்
கிகர வுகர மிசைநிறை வாகும் !”  (மொழி. 9)

இதன்படி-
‘ஐ’க்கு அளபெடை எழுத்து – ‘இ’  !
‘ஔ’வுக்கு அளபெடை எழுத்து – ‘உ’  !

இந் நூற்பாவிற்கு இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு தரலாம் ! –

1 . ஐஇ
‘ஐ ’க்கு அளபெடை எழுத்தாக ‘இ’!
‘ஐ’ என்ற எழுத்தையும் ‘இ’ என்ற எழுத்தையும் உச்சரித்துப் பாருங்கள் ! ‘ஐ’க்கு இன எழுத்து ‘இ’ என்பது சரிதான் என்பது விளங்கும் !

2. ஔஉ
‘ஔ ’வுக்கு அளபெடை எழுத்தாக ‘உ’!
‘ஔ’ என்ற எழுத்தையும் ‘உ’ என்ற எழுத்தையும் உச்சரித்துப் பாருங்கள் ! ‘ஔ’க்கு இன எழுத்து ‘உ’ என்பது சரிதான் என்பது விளங்கும் !

‘காரிகை’ என்பதைக் கூத்துக் கலைஞர் ‘காரிகைஇ இ இ இ’ என்று காதைப் பொத்திக்கொண்டு நீட்டுவார் ! அப்போது ஆர்மோனியக்காரக் மேசை மீது ஏறிக்கொண்டு ஆர்மோனியப்பெட்டிக் கட்டைகளை அழுத்து அழுத்து என்று அழுத்துவார் !

அதே கலைஞர் , ‘கௌமாரி’ என்பதைக் ‘கௌஉ உ உ உ உ மாரி’ என்பார் !
இந்த இரு எடுத்துக்காட்டுகளிலும் இன உயிர்கள் , ஓசையைக் கூட்டுவதற்காக , அளபெடை எழுத்துகளாக வந்துள்ளதைக் காண்க !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (360)

Post by Dr.S.Soundarapandian on Fri Apr 03, 2015 1:49 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (360)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஓரெழுத்து  ஒருமொழி – கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இதைப் பற்றியதுதான் கீழ்வரும் நூற்பா ! –
“நெட்டெழுத்  தேழே ஓரெழுத் தொருமொழி !” (மொழி. 10)

இதனை மேலோட்டமாகப்  பார்க்கும்போது , ஏழு நெடில் எழுத்துகள் மட்டுமே  ‘ஓரெழுத்து ஒருமொழி ’ என்று கூறத் தக்கவை என்று பொருள் ஆகிறது !

அப்படியானால் தமிழில் மொத்தமே 7 ஓரெழுத் தொருமொழிகள்தாமா உள்ளன?
நாம் ‘மேலோட்டமாகப்’ பார்த்ததில் ஏதோ பிழை உள்ளது என்று தோன்றுகிறது ; இல்லையா?

என் கையைப் பிடித்துக்கொண்டு வாருங்கள் நூற்பாவை ஆய்வோம் !

‘நெட்டெழுத்து   ஏழே’ – ஏழு நெடில் உயிர்கள் மட்டுமே ,
‘ஓரெழுத்து  ஒருமொழி’ – ஓர் எழுத்தால் அமையும் சொல்லாகும் !

இப்போதும் தெளிவில்ல!

இளம்பூரணர், “ ஆ  ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என வரும் ” என்று உரை எழுதுகிறார் !
நெடில் ஏழு யாவை என்பதுதான் நமக்குத் தெரியுமே ?

எனவே இபோதும் தெளிவில்லை !

இளம்பூரணர் உரையைப் பின் தொடர்வோம் !

“இதுவும் உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது  ” என்கிறார் இளம்பூரணர் !
அஃதாவது , ‘நெட்டேழுத்து  ஏழு’ என்பதை , மெய்மீது ஏறிய 7 நெடில்கள் என்றும் பொருள் கொள்ளவேண்டும் ! ‘உயிர் மெய்க்கும் பொது’ என இளம்பூரணர் சொன்னதன் பொருள் இதுதான் !

இப்போது தெளிவு பிறக்கிறது !

அஃதாவது-

1 .ஆ – இஃது ஓரெழுத்து ஒருமொழிதான் ! தனி நெடிலாக நின்று ஒரு மொழி (சொல்) ஆகிறது ! ஆ =  பசு .

இனி இந்த உயிர் ஏறிய சொல்லைப் பார்ப்போம் !

க் + ஆ = கா
கா – இதுவும் ஓரெழுத்து ஒருமொழிதான் ! கா= சோலை

இப்போது இளம்பூரணர் உரை நமக்குத் தெளிவாகி விட்டதல்லவா?

2 . ஈ – ஓரெழுத்து ஒருமொழி ! ஈ = பறக்கும் ஈ.
   த் + ஈ = தீ
தீ – இதுவும் ஓரெழுத்து ஒருமொழிதான் ! தீ = நெருப்பு

3. ஊ - ஓரெழுத்து ஒருமொழி ! ஊ = தசை
ப் + ஊ = பூ
பூ – இதுவும் ஓரெழுத்து ஒருமொழிதான் ! பூ = ஏமாந்தவர் காதில் சுற்றுவது!

4. ஏ – ஓரெழுத்து ஒருமொழி ! ஏ = அம்பு
   ந் + ஏ = நே
நே – இதுவும் ஓரெழுத்து ஒருமொழிதான் ! நே = அன்பு

5 .  ஓ – ஓரெழுத்து ஒருமொழி ! ஓ = மதகு நீர் தாங்கும் பலகை
  ச் + ஓ = சோ
சோ – இதுவும் ஓரெழுத்து ஒருமொழிதான் ! சோ = அரண்

6 . ஔ – ஓரெழுத்து ஒருமொழி அல்ல !
     இளம்பூரணர் எழுதுகிறார் – “ஔகாரத்தில் உயிர் மெய்யையே கொள்க !”

ஔ எனும் நெடில் உயிரைப் பொறுத்தவரையில் , தனி ‘ஔ’ ஆக நின்று ஒரு தனிச்சொல்லாக அமைவது இல்லை ! மெய்யோடு சேர்ந்துதான் தனிச்சொல்லாக- ஓரெழுத்து ஒருமொழியாக -  வரும் !
   க் + ஔ = கௌ
கௌ –  ஓரெழுத்து ஒருமொழி ! கௌ = கொள்ளு (Horsegram)

மேலே காட்டிய இந்த ஓரெழுத்து ஒருமொழிகள்தாம் தமிழின் மொத்த ஓரெழுத்து ஒருமொழிகள் என எடுத்துக்கொள்ளவேண்டாம் ! வேறு பலவும் உள !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by ayyasamy ram on Fri Apr 03, 2015 4:24 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30596
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by Dr.S.Soundarapandian on Fri Apr 03, 2015 8:17 pm

நன்றி அய்யாசாமி அவர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (361)

Post by Dr.S.Soundarapandian on Sat Apr 04, 2015 10:26 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (361)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

முன் ஆய்வில் ஏழு நெடில்களுகும் ஓரெழுத்து ஒருமொழிக்கும் உள்ள தொடர்பைப் பார்த்தோம் !

அப்படியானால் ஐந்து குறில் உயிர்கள்?

அது பற்றியதுதான் இந்த நூற்பா! –

“குற்றெழுத்  தைந்து  மொழிநிறை  பிலவே” (மொழி. 11)
‘குற்றெழுத்து   ஐந்தும் ’ – அ , இ , உ , எ , ஒ  ஆகிய ஐந்தும் ,
‘மொழிநிறைபு  இலவே’ – தனித்து நின்று ஓரெழுத்து ஒருமொழி ஆவதில்லை !

இங்கு இளம்பூரணர் ஒரு தெளிவைத் தருகிறார் !

  அ , இ , உ , எ – ஆகிய நான்கும் சுட்டெழுத்தாகவும் வினா எழுத்தாகவும் தனித்து நின்று பொருள் தருமே என்றால் , இந்த நான்கும் ‘இடைச்சொல்’ என்ற பிரிவிலேதான் வருமே அல்லாது , ‘சொல்’ என்ற வகையில் அடங்காது என விளக்குகிறார்  இளம்பூரணர்!

ஒ – சுட்டெழுத்தாகவோ  வினா எழுத்தாக வோ தனித்து வருதல் இல்லை !

ஆனால் ‘உ’ , ‘ஒ’ ஆகிய குறில் உயிர்கள் ,  மெய்மீது ஏறி , ஓரெழுத்து ஒருமொழி ஆவது உண்டு என்கிறார் இளம்பூரணர் !

இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள் –
1 . து
த் + உ = து ; இஃது ஓரெழுத்து ஒருமொழி !
து = உணவு
து – பெயர்ச் சொல்

2 . நொ
ந் + ஒ = நொ ; இஃது ஓரெழுத்து ஒருமொழி !
நொ = துன்பம்
நொ – பெயர்ச் சொல்

தொல்காப்பிய நூற்பாவை மீண்டும் பாருங்கள் !

ஐந்து குறில்கள் ஓரெழுத்து ஒருமொழிகளைத் தரமாட்டா என்ற செய்திதானே உள்ளது ?

பின்னர் எப்படி இளம்பூரணர் ‘து’  , ‘நொ’ ஆகிய ஓரெழுத்து ஒருமொழிகளைக் காட்டினார் ?

இங்கேதான் நாம் தொல்காப்பியத்தைப் படிக்கும் நுட்பத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் ! அது தான் ‘தொல்காப்பிய நடை’!

தொல்காப்பிய நூற்பாவின் நடையை வைத்துத்தான் இளம்பூரணரால் , சில குறில்களும் ஓரெழுத்து ஒருமொழிகளைத் தரமுடியும் என்று உரை எழுத முடிந்தது !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (362)

Post by Dr.S.Soundarapandian on Tue Apr 07, 2015 6:16 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (362)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தொல்காப்பியர் தமிழ்ச் சொற்களை  ‘மொழி’ நோக்கில் 3  வகைகளாகப் பகுக்கிறார் ! –

1 . ஓரெழுத்து  ஒருமொழி
2 . ஈரெழுத்து ஒருமொழி
3 . இரண்டுக்கும் மேற்பட்ட எழுத்துகளால் ஆன தொடர்மொழி

இவற்றுக்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் வருமாறு –

1 .  ஓரெழுத்து  ஒருமொழி : ‘ஆ’ போல்வன ;  ஆ = பசு

2. ஈரெழுத்து ஒருமொழி : ‘மணி’ போல்வன; மணி = ‘டாண்’ணு பொருள் சொல்லிவிடுவீர்கள்!

3. தொடர்மொழி :
i.  ‘வரகு ’ போல்வன ; வரகு = தானியங்களில் ஒன்று (Common millet)
ii. ‘கொற்றன்’ போல்வன ; கொற்றன் – இயற்பெயர்

‘கொற்றன்’ என்ற சொல்லில் ஒற்றெழுத்துகளை நீக்கிவிட்டால் நிற்பவை இரு எழுத்துகளே ! சொற்களில் எழுத்தை எண்ணும்போது மெய்யெழுத்துகளைக் கணக்கில் சேர்க்கக் கூடாது எனில் , ’ஈரெழுத்து ஒருமொழிக்கு அல்லவா எடுத்துக்காட்டாக  அமையும் ? ஆனால் இளம்பூரணர் ‘இரண்டு எழுத்துகளைவிடக் கூடுதலான எழுத்துக்களல் அமைந்த தொடர்மொழி’க்கு  அல்லவா  ‘கொற்றனை’ நிறுத்தியுள்ளார் !  

எனவே இளம்பூரணர் கருத்துப்படிச் சொற்களில் எழுத்தை எண்ணும் போது ஒற்றெழுத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும் !

ஆனால் நச்சர் இதில் மாறுபடுகிறார் !

நச்சர் கருத்துப்படிச் சொற்களில் எழுத்தை எண்ணும் போது ஒற்றெழுத்தையும் குற்றியலுகரத்தையும்   கணக்கில் கொள்ளக்கூடாது !

நச்சினார்க்கினியரின் உரைப்படி-
1 . ஆ , கா , நா – ஓரெழுத்து ஒருமொழிகள்.

2 .மணி , வரகு , கொற்றன் – ஈரெழுத்து ஒருமொழிகள்.
(வரகு என்பதன் ஈற்றெழுத்துக் குற்றியலுகரமாக இருப்பதால் நச்சர் ‘கு’வைக் கணக்கில் கொள்ளவில்லை ! )

3. குரவு , அரவு – மூவெழுத்து ஒருமொழிகள் !
( ‘வு’ , குற்றியலுகரமல்ல என்பதால் நச்சர் அதனைக் கணக்கில் சேர்த்துக்கொண்டார் !)

4. கணவிரி – நாலெழுத்து ஒருமொழி .
(கணவிரி =- செவ்வலரி)

5 . அகத்தியனார் – ஐந்தெழுத்து ஒரு மொழி.

(இரு மெய்யெழுத்துகளையும் கணக்கில் எடுக்காமல் ஒதுக்கிவிட்டார் நச்சர் என்பதைக் கவனிக்க !)

6 . திருச்சிற்றம்பலம் – ஆறெழுத்து ஒரு மொழி.

(நான்கு மெய்யெழுத்துகளையும் கணக்கில் எடுக்காமல் ஒதுக்கிவிட்டார் நச்சர் என்பதைக் கவனிக்க !)

6 . பெரும்பற்றப் புலியூர் – ஏழெழுத்து ஒரு மொழி.

(நான்கு மெய்யெழுத்துகளையும் கணக்கில் எடுக்காமல் ஒதுக்கிவிட்டார் நச்சர் என்பதைக் கவனிக்க !)

நச்சர் கூறிய  ‘ஒற்றைக் கணக்கில் எடுக்கவேண்டாம்’ என்பது யாப்பில் பொருந்துவது !

எனவே,
நாம் மேலே பார்த்த இளம்பூரணர் உரையே சிறந்ததாகக் காணப்படுகிறது !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (363)

Post by Dr.S.Soundarapandian on Fri Apr 10, 2015 6:57 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (363)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழி மரபில் அடுத்தது-

“மெய்யி  னியக்க  மகரமொடு  சிவணும்” (மொழி. 13)

மெய்யெழுத்தானது இயங்வேண்டும் என்றால்  ‘அ’ தேவை! – இப்படித்தானே பொருள் வருகிறது ?

அப்படியானால் ‘இ’யுடன் சேர்ந்து ‘கி’ ஆகிறதே அது? அதுவும் இயக்கம் தானே ?

எனவே நாம் பொருள் கொண்டதில் ஏதோ தவறு இருக்கிறது !

இளம்பூரணர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம் ! –

“ ட  ற  ல  ள என்னும் புள்ளி முன்னர் என வரும் ” .

இதுதான் இளம்பூரணர் சொன்னது !

‘ட   ற  ல  ள’ போன்ற மெய்களைச்  சுட்டிக்காட்டத்தான் நமக்கு ‘அ’ தேவைப் படுகிறது ! இளம்பூரணர் உரை இதைத்தன் கூறுகிறது !

அஃதாவது ‘ட் எனும் புள்ளி எழுத்து ’ என்று கூறுவது அந்நாளில் மரபில்லை !
‘ட  எனும் புள்ளி’ என்றுதான் கூறுவர் !

இன்றுகூட , ‘டகர  மெய்’ என்று நாம் எழுதுவதைக் கவனிக்க ! ‘ட’ என வந்துவிட்டாலே , ‘ட்’டுடன் ‘அ’ சேர்கிறது என்பதைத்தானே குறிக்கிறது?

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by monikaa sri on Fri Apr 10, 2015 7:53 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் அருமை!
avatar
monikaa sri
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 235
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (364)

Post by Dr.S.Soundarapandian on Mon Apr 13, 2015 8:42 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (364)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழி மரபில் அடுத்த நூற்பா !: -

“தம்மியல் கிளப்பின் எல்லா எழுத்தும்
மெய்ந்நிலை மயக்கம்  மானம் இல்லை” (மொழி. 14)

’ எல்லா எழுத்தும்’ – எல்லா மெய்யெழுத்துகளையும்,

‘தம்மியல் கிளப்பின்’ – குறிப்பிட வேண்டுமாயின்,

‘மெய்ந்நிலை மயக்கம்  ’ – மெய்யாகவோ உயிர் மெய்யாகவோ குறிப்பிடலாம் ;

‘மானம் இல்லை’ – அதில் ஒன்றும் தவறில்லை !

‘இடையெழுத் தென்ப  யரல வழள’ – இஃது இலக்கணம் .
இவை,   ய் ர் ல் வ் ழ் ள் ஆகிய  மெய்களைத்தான் குறிக்கின்றன ; ஆனாலும் ’ யரல வழள’ என்ற உயிர் மெய்களால்  அந்த மெய்கள் சுட்டப்படுகின்றன !

இவ்வாறு சொல்லலாம் என்பதுதான்  தொல்காப்பியரின் மேலை விதி !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (365)

Post by Dr.S.Soundarapandian on Tue Apr 14, 2015 3:59 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (365)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஒரே சொல்லில் இரு மெய்கள் அடுத்தடுத்து வரும் மெய்ம்மயக்கத்தை  நூன்மரபில் பார்த்தோம் !

அதன் நீட்சியாக மொழிமரபில் தொல்காப்பியர் உரைப்பது –

“யரழ  வென்னு  மூன்றுமுன்  னொற்றக்
கசதப  ஙஞநம  வீரொற்  றாகும்” (மொழி. 15)

‘யரழ  என்னும்   மூன்றும் முன்  ஒற்றக்’- ய்  , ர் , ழ்  ஆகிய மூன்று மெய்கள் சொற்களில் முதற்கண் நிற்க ,
‘கசதப  ஙஞநம  ஈரொற்று   ஆகும்’ – க்  ச்  த்  ப், இவைகளில்  ஒன்று அல்லது  ங் ஞ்  ந்  ம் எனும் இவைகளில் ஒன்று அதன் அருகே நிற்கலாம் !

இளம்பூரணர் எடுத்துக்காட்டை முதலில் பார்போம் ! –
1 . வேய்க்குறை
    ’ய்’யை அடுத்து  ‘க்’ வந்தது !

2 . வேய்ச்சிறை
    ’ய்’யை அடுத்து  ‘ச்’ வந்தது !

3 .வேய்த்தலை
    ’ய்’யை அடுத்து  ‘த்’ வந்தது !

4 . வேய்ப்புறம்
    ’ய்’யை அடுத்து  ‘ப்’ வந்தது !

5 . வேய்ங்குறை
    ’ய்’யை அடுத்து  ‘ங்’ வந்தது !

6 . வேய்ஞ்சிறை
       ‘ய்’யை  அடுத்து ‘ஞ்’ வந்தது!

7 . வேய்ந்தலை
   ’ய்’யை அடுத்து  ‘ந்’ வந்தது !

8 . வேய்ம்புறம்
   ’ய்’யை அடுத்து  ‘ம்’ வந்தது !

9 . வேர்க்குறை
    ’ர்’ரை அடுத்து  ‘க்’ வந்தது !

10 . வேர்ச்சிறை
       ‘ர்’ரை  அடுத்து ‘ச்’ வந்தது!

11 . வேர்த்தலை
   ’ர்’ரை அடுத்து  ‘த்’ வந்தது !

12 . வேர்ப்புறம்
   ’ர்’ரை அடுத்து  ‘ப்’ வந்தது !

13 . வேர்ங்குறை
    ’ர்’ரை அடுத்து  ‘ங்’ வந்தது !

14 . வேர்ஞ்சிறை
       ‘ர்’ரை  அடுத்து ‘ஞ்’ வந்தது!

15 . வேர்ந்தலை
   ’ர்’ரை அடுத்து  ‘ந்’ வந்தது !

16 . வேர்ம்புறம்
   ’ர்’ரை அடுத்து  ‘ம்’ வந்தது !

17 . வீழ்க்குறை
    ’ழ்’ழை அடுத்து  ‘க்’ வந்தது !

18 . வீழ்ச்சிறை
       ‘ழ்’ழை  அடுத்து ‘ச்’ வந்தது!

19 . வீழ்த்தலை
   ’ழ்’ழை அடுத்து  ‘த்’ வந்தது !

20 .வீழ்ப்புறம்
   ’ழ்’ழை அடுத்து  ‘ப்’ வந்தது !

21 . வீழ்ங்குறை
    ’ழ்’ழை அடுத்து  ‘ங்’ வந்தது !

22 . வீழ்ஞ்சிறை
       ‘ழ்’ழை  அடுத்து ‘ஞ்’ வந்தது!

23 . வீழ்ந்தலை
   ’ழ்’ழை அடுத்து  ‘ந்’ வந்தது !

24 . வீழ்ம்புறம்
   ’ழ்’ழை அடுத்து  ‘ம்’ வந்தது !

இனி இதே  நூற்பாவிற்கு நச்சர் தரும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம் ! –
1 . வேய்க்க
    ‘ய்’யை அடுத்து ‘க்’ வந்தது !

2 . வாய்ச்சி
    ‘ய்’யை அடுத்து ‘ச்’ வந்தது !

3 . பாய்த்தல்
    ‘ய்’யை அடுத்து ‘த்’ வந்தது !

4 .வாய்ப்பு
    ‘ய்’யை அடுத்து ‘ப்’ வந்தது !

5 . பீர்க்கு
    ‘ர்’ரை அடுத்து ‘க்’ வந்தது !

6 . தேர்ச்சி
    ‘ர்’ரை அடுத்து ‘ச்’ வந்தது !

7 . வார்த்தல்
    ‘ர்’ரை அடுத்து ‘த்’ வந்தது !

8 . ஆர்ப்பு
    ‘ர்’ரை அடுத்து ‘ப்’ வந்தது !

9 . வாழ்க்கை
    ‘ழ்’ழை அடுத்து ‘க்’ வந்தது !

10 .தாழ்ச்சி
    ‘ழ்’ழை அடுத்து ‘ச்’ வந்தது !

11 . தாழ்த்தல்
    ‘ழ்’ழை அடுத்து ‘த்’ வந்தது !

12 . தாழ்ப்பு
    ‘ழ்’ழை அடுத்து ‘ப்’ வந்தது !

13 . காய்ங்கனி
    ‘ய்’யை அடுத்து ‘ங்’ வந்தது !

14 .தேய்ஞ்சது
    ‘ய்’யை அடுத்து ‘ஞ்’ வந்தது !

15 .காய்ந்தனம்
    ‘ய்’யை அடுத்து ‘ந்’ வந்தது !

16 . காய்ம்புறம்
    ‘ய்’யை அடுத்து ‘ம்’ வந்தது !

17 .நேர்ங்கல்
        ‘ர்’ரை அடுத்து ‘ங்’ வந்தது !

18 . நேர்ஞ்சிலை
        ‘ர்’ரை அடுத்து ‘ஞ்’ வந்தது !

19 .நேர்ந்திலை
        ‘ர்’ரை அடுத்து ‘ந்’ வந்தது !

20 . நேர்ம்புறம்
        ‘ர்’ரை அடுத்து ‘ம்’ வந்தது !

21 . வாழ்ந்தனம்
        ‘ழை’ அடுத்து ‘ந்’ வந்தது !

22 . தாழ்ங்குலை
        ‘ழ்’ழை அடுத்து ‘ங்’ வந்தது !

23 . தாழ்ஞ்சினை
        ‘ழ்’ழை அடுத்து ‘ஞ்’ வந்தது !

24 . தாழ்ந்திரள்
        ‘ழ்’ழை அடுத்து ‘ந்’ வந்தது !

25 . வீழ்ம்படை
        ‘ழ்’ழை அடுத்து ‘ம்’ வந்தது !

மேல் எடுத்துக்காட்டுகளில் பெயர்ச்சொல் , வினையாலணையும் பெயர் , வினை முற்று , தொகைச் சொல்  ஆகியன வந்துள்ளதைக் கவனிக்க !

மேலை எடுத்துக்காட்டுகள் யாவுமே நெட்டெழுத்தை முதலாகக் கொண்டு அதன்பின் அடுத்தடுத்து  இரு மெய்கள் மயங்கிய  சொற்கள் !

அப்படியானால்  சில எழுத்துகள் தொடர்ந்தபின் இரு மெய்கள் அடுத்தடுத்து வரல் ஆகாதா?

இந்த ஐயத்திற்கு விடை கூறுகிறார் நச்சர் ! –
1 . வேந்தர்க்கு
     இதில் , முதல் மூன்று எழுத்துகளை அடுத்துத்தான் ‘ர்க்’ என இரு மெய்கள் மயங்கி நிற்கின்றன !

2 .  அன்னாய்க்கு
     இதிலும் , முதல் மூன்று எழுத்துகளை அடுத்துத்தான் ‘ய்க்’ என இரு மெய்கள் மயங்கி நிற்கின்றன !

ஆகவே , சில எழுத்துகள் தொடர்ந்தபின் இரு மெய்கள் அடுத்தடுத்து வரல் ஆகும்!
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (365)

Post by Dr.S.Soundarapandian on Tue Apr 14, 2015 4:03 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (365)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஒரே சொல்லில் இரு மெய்கள் அடுத்தடுத்து வரும் மெய்ம்மயக்கத்தை  நூன்மரபில் பார்த்தோம் !

அதன் நீட்சியாக மொழிமரபில் தொல்காப்பியர் உரைப்பது –

“யரழ  வென்னு  மூன்றுமுன்  னொற்றக்
கசதப  ஙஞநம  வீரொற்  றாகும்” (மொழி. 15)

‘யரழ  என்னும்   மூன்றும் முன்  ஒற்றக்’- ய்  , ர் , ழ்  ஆகிய மூன்று மெய்கள் சொற்களில் முதற்கண் நிற்க ,
‘கசதப  ஙஞநம  ஈரொற்று   ஆகும்’ – க்  ச்  த்  ப், இவைகளில்  ஒன்று அல்லது  ங் ஞ்  ந்  ம் எனும் இவைகளில் ஒன்று அதன் அருகே நிற்கலாம் !

இளம்பூரணர் எடுத்துக்காட்டை முதலில் பார்போம் ! –
1 . வேய்க்குறை
    ’ய்’யை அடுத்து  ‘க்’ வந்தது !

2 . வேய்ச்சிறை
    ’ய்’யை அடுத்து  ‘ச்’ வந்தது !

3 .வேய்த்தலை
    ’ய்’யை அடுத்து  ‘த்’ வந்தது !

4 . வேய்ப்புறம்
    ’ய்’யை அடுத்து  ‘ப்’ வந்தது !

5 . வேய்ங்குறை
    ’ய்’யை அடுத்து  ‘ங்’ வந்தது !

6 . வேய்ஞ்சிறை
       ‘ய்’யை  அடுத்து ‘ஞ்’ வந்தது!

7 . வேய்ந்தலை
   ’ய்’யை அடுத்து  ‘ந்’ வந்தது !

8 . வேய்ம்புறம்
   ’ய்’யை அடுத்து  ‘ம்’ வந்தது !

9 . வேர்க்குறை
    ’ர்’ரை அடுத்து  ‘க்’ வந்தது !

10 . வேர்ச்சிறை
       ‘ர்’ரை  அடுத்து ‘ச்’ வந்தது!

11 . வேர்த்தலை
   ’ர்’ரை அடுத்து  ‘த்’ வந்தது !

12 . வேர்ப்புறம்
   ’ர்’ரை அடுத்து  ‘ப்’ வந்தது !

13 . வேர்ங்குறை
    ’ர்’ரை அடுத்து  ‘ங்’ வந்தது !

14 . வேர்ஞ்சிறை
       ‘ர்’ரை  அடுத்து ‘ஞ்’ வந்தது!

15 . வேர்ந்தலை
   ’ர்’ரை அடுத்து  ‘ந்’ வந்தது !

16 . வேர்ம்புறம்
   ’ர்’ரை அடுத்து  ‘ம்’ வந்தது !

17 . வீழ்க்குறை
    ’ழ்’ழை அடுத்து  ‘க்’ வந்தது !

18 . வீழ்ச்சிறை
       ‘ழ்’ழை  அடுத்து ‘ச்’ வந்தது!

19 . வீழ்த்தலை
   ’ழ்’ழை அடுத்து  ‘த்’ வந்தது !

20 .வீழ்ப்புறம்
   ’ழ்’ழை அடுத்து  ‘ப்’ வந்தது !

21 . வீழ்ங்குறை
    ’ழ்’ழை அடுத்து  ‘ங்’ வந்தது !

22 . வீழ்ஞ்சிறை
       ‘ழ்’ழை  அடுத்து ‘ஞ்’ வந்தது!

23 . வீழ்ந்தலை
   ’ழ்’ழை அடுத்து  ‘ந்’ வந்தது !

24 . வீழ்ம்புறம்
   ’ழ்’ழை அடுத்து  ‘ம்’ வந்தது !

இனி இதே  நூற்பாவிற்கு நச்சர் தரும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம் ! –
1 . வேய்க்க
    ‘ய்’யை அடுத்து ‘க்’ வந்தது !

2 . வாய்ச்சி
    ‘ய்’யை அடுத்து ‘ச்’ வந்தது !

3 . பாய்த்தல்
    ‘ய்’யை அடுத்து ‘த்’ வந்தது !

4 .வாய்ப்பு
    ‘ய்’யை அடுத்து ‘ப்’ வந்தது !

5 . பீர்க்கு
    ‘ர்’ரை அடுத்து ‘க்’ வந்தது !

6 . தேர்ச்சி
    ‘ர்’ரை அடுத்து ‘ச்’ வந்தது !

7 . வார்த்தல்
    ‘ர்’ரை அடுத்து ‘த்’ வந்தது !

8 . ஆர்ப்பு
    ‘ர்’ரை அடுத்து ‘ப்’ வந்தது !

9 . வாழ்க்கை
    ‘ழ்’ழை அடுத்து ‘க்’ வந்தது !

10 .தாழ்ச்சி
    ‘ழ்’ழை அடுத்து ‘ச்’ வந்தது !

11 . தாழ்த்தல்
    ‘ழ்’ழை அடுத்து ‘த்’ வந்தது !

12 . தாழ்ப்பு
    ‘ழ்’ழை அடுத்து ‘ப்’ வந்தது !

13 . காய்ங்கனி
    ‘ய்’யை அடுத்து ‘ங்’ வந்தது !

14 .தேய்ஞ்சது
    ‘ய்’யை அடுத்து ‘ஞ்’ வந்தது !

15 .காய்ந்தனம்
    ‘ய்’யை அடுத்து ‘ந்’ வந்தது !

16 . காய்ம்புறம்
    ‘ய்’யை அடுத்து ‘ம்’ வந்தது !

17 .நேர்ங்கல்
        ‘ர்’ரை அடுத்து ‘ங்’ வந்தது !

18 . நேர்ஞ்சிலை
        ‘ர்’ரை அடுத்து ‘ஞ்’ வந்தது !

19 .நேர்ந்திலை
        ‘ர்’ரை அடுத்து ‘ந்’ வந்தது !

20 . நேர்ம்புறம்
        ‘ர்’ரை அடுத்து ‘ம்’ வந்தது !

21 . வாழ்ந்தனம்
        ‘ழை’ அடுத்து ‘ந்’ வந்தது !

22 . தாழ்ங்குலை
        ‘ழ்’ழை அடுத்து ‘ங்’ வந்தது !

23 . தாழ்ஞ்சினை
        ‘ழ்’ழை அடுத்து ‘ஞ்’ வந்தது !

24 . தாழ்ந்திரள்
        ‘ழ்’ழை அடுத்து ‘ந்’ வந்தது !

25 . வீழ்ம்படை
        ‘ழ்’ழை அடுத்து ‘ம்’ வந்தது !

மேல் எடுத்துக்காட்டுகளில் பெயர்ச்சொல் , வினையாலணையும் பெயர் , வினை முற்று , தொகைச் சொல்  ஆகியன வந்துள்ளதைக் கவனிக்க !

மேலை எடுத்துக்காட்டுகள் யாவுமே நெட்டெழுத்தை முதலாகக் கொண்டு அதன்பின் அடுத்தடுத்து  இரு மெய்கள் மயங்கிய  சொற்கள் !

அப்படியானால்  சில எழுத்துகள் தொடர்ந்தபின் இரு மெய்கள் அடுத்தடுத்து வரல் ஆகாதா?

இந்த ஐயத்திற்கு விடை கூறுகிறார் நச்சர் ! –
1 . வேந்தர்க்கு
     இதில் , முதல் மூன்று எழுத்துகளை அடுத்துத்தான் ‘ர்க்’ என இரு மெய்கள் மயங்கி நிற்கின்றன !

2 .  அன்னாய்க்கு
     இதிலும் , முதல் மூன்று எழுத்துகளை அடுத்துத்தான் ‘ய்க்’ என இரு மெய்கள் மயங்கி நிற்கின்றன !

ஆகவே , சில எழுத்துகள் தொடர்ந்தபின் இரு மெய்கள் அடுத்தடுத்து வரல் ஆகும்!
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by monikaa sri on Tue Apr 14, 2015 5:15 pm

தொட தொடத் தொல்க்காப்பியம் அருமை அய்யா!இது போன்று நன்னூலுக்கு விளக்கம்

எழுதி உள்ளீர்களாஅய்யா?-
avatar
monikaa sri
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 235
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by Dr.S.Soundarapandian on Thu Apr 16, 2015 8:18 pm

நன்றி மோனிகா ஸ்ரீ !
நன்னூலுக்கு விளக்கம் எழுதவில்லை.
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (366)

Post by Dr.S.Soundarapandian on Thu Apr 16, 2015 8:30 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (366)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மேலை நூற்பாவில்  ‘ய்’ , ‘ர்’ , ‘ழ்’ ஆகிய மெய்கள் எப்படிப் பிற மெய்களுடன் வரும் என்றூ ஓதினார் தொல்காப்பியர் !

இப்போது அவற்றிலிருந்து ‘ர்’ , ‘ழ்’ ஆகியவற்றைப் பிரித்து இவற்றுக்கு உரிய சில பண்புகளை எழுதுகிறார் !-

“அவற்றுள்
ரகார ழகாரங் குற்றொற் றாகா” (மொழி. 16)

‘அவற்றுள்’ – ய , ர , ழ ஆகியவற்றுள்,
‘ரகார ழகாரம்’ -  ‘ர்’ , ‘ழ்’ ஆகிய இரண்டும்,
 ‘குற்றொற்று  ஆகா ’ – குறில் எழுத்துக்கு அருகிலே மெய்யெழுத்தாக நிற்கமாட்டா !

இந்த உண்மையை முன் ஆய்வில் நாம் கண்ட எடுத்துக்காட்டுகளிலும் நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் !

இளம்பூரணர் தரும் எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம் !-
1 . தார்
 ‘ர்’ ஆனது ஒரு நெடில் எழுத்தின்(தா), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !  

2 . தாழ்
 ‘ழ்’ ஆனது ஒரு நெடில் எழுத்தின்(தா), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !

3 . கரு
 ‘ரு’ ஆனது ஒரு குறில் எழுத்தின்(க), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !

4 . மழு
 ‘ழு’ ஆனது ஒரு குறில் எழுத்தின்(ம), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !

இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளால், தொல்காப்பியர் சொன்னது , ‘ர்’, ‘ழ்’ஆகிய மெய்கள் பற்றியது மட்டுமல்ல , ரகர ழகர உயிர்மெய்கள் (ரு , ழு போல) பற்றியதும் ஆகும் என்பது புலனாகிறது !

தொல்காப்பியரின் இந்த நூற்பாவைக் கொண்டு இன்னொரு இலக்கணத்தையும் எடுக்கிறார் இளம்பூரணர் ! அதன்படி –

1. பொய்
‘ய்’ஆனது ஒரு குறிலின்  (பொ) அருகேயும் நிற்கும் !

2. நோய்
‘ய்’ஆனது ஒரு நெடிலின்  (பொ) அருகேயும் நிற்கும் !

முன்னே, ‘ர்’, ‘ழ்’ ஆகியன குறிலின் அருகே நிற்கமாட்டா என்று பார்த்ததை இங்கு ஒப்பிட்டுக்கொள்க !
                                             ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (366)

Post by Dr.S.Soundarapandian on Thu Apr 16, 2015 8:43 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (366)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மேலை நூற்பாவில்  ‘ய்’ , ‘ர்’ , ‘ழ்’ ஆகிய மெய்கள் எப்படிப் பிற மெய்களுடன் வரும் என்று ஓதினார் தொல்காப்பியர் !

இப்போது அவற்றிலிருந்து ‘ர்’ , ‘ழ்’ ஆகியவற்றைப் பிரித்து இவற்றுக்கு உரிய சில பண்புகளை எழுதுகிறார் !-

“அவற்றுள்
ரகார ழகாரங் குற்றொற் றாகா” (மொழி. 16)

‘அவற்றுள்’ – ய , ர , ழ ஆகியவற்றுள்,
‘ரகார ழகாரம்’ -  ‘ர்’ , ‘ழ்’ ஆகிய இரண்டும்,
 ‘குற்றொற்று  ஆகா ’ – குறில் எழுத்துக்கு அருகிலே மெய்யெழுத்தாக நிற்கமாட்டா !

இந்த உண்மையை முன் ஆய்வில் நாம் கண்ட எடுத்துக்காட்டுகளிலும் நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் !

இளம்பூரணர் தரும் எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம் !-
1 . தார்
 ‘ர்’ ஆனது ஒரு நெடில் எழுத்தின்(தா), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !  

2 . தாழ்
 ‘ழ்’ ஆனது ஒரு நெடில் எழுத்தின்(தா), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !

3 . கரு
 ‘ரு’ ஆனது ஒரு குறில் எழுத்தின்(க), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !

4 . மழு
 ‘ழு’ ஆனது ஒரு குறில் எழுத்தின்(ம), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !

இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளால், தொல்காப்பியர் சொன்னது , ‘ர்’, ‘ழ்’ஆகிய மெய்கள் பற்றியது மட்டுமல்ல , ரகர ழகர உயிர்மெய்கள் (ரு , ழு போல) பற்றியதும் ஆகும் என்பது புலனாகிறது !

தொல்காப்பியரின் இந்த நூற்பாவைக் கொண்டு இன்னொரு இலக்க
ணத்தையும் எடுக்கிறார் இளம்பூரணர் ! அதன்படி –

1. பொய்
‘ய்’ஆனது ஒரு குறிலின்  (பொ) அருகேயும் நிற்கும் !

2. நோய்
‘ய்’ஆனது ஒரு நெடிலின்  (பொ) அருகேயும் நிற்கும் !

முன்னே, ‘ர்’, ‘ழ்’ ஆகியன குறிலின் அருகே நிற்கமாட்டா என்று பார்த்ததை இங்கு ஒப்பிட்டுக்கொள்க !
                                             ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by monikaa sri on Fri Apr 17, 2015 4:04 am

ஈகரைக்குள் வந்ததிலிருந்து நான் தொடத் தொட தொல்காப்பியம் படித்துவருகிறேன்.மிகவும் புரியும்
படியான விளக்கம் அய்யா!இவை போன்று நீங்கள் பிற இலக்கணங்களுக்கும் எழுத வேண்டும்
என்பது எங்களின்  அவா!
avatar
monikaa sri
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 235
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (367)

Post by Dr.S.Soundarapandian on Sat Apr 18, 2015 12:07 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (367)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

முன் ஆய்வில் ‘தார்’ , ‘தாழ்’ என்றாங்கு ,நெடிலை அடுத்து  ‘ர்’, ‘ழ்’ ஒற்றுகள்  வருதலையும் , ‘பொய்’ எனக் குறிலை அடுத்து ’ய்’ஒற்று வருதலையும் கண்டோம் !

இங்கே ஒரு கேள்வி எழுகிறது !

அப்படியானால் , தொடர்மொழி ஈற்றில் , இந்த மெய்கள் வந்தால் ?

இதற்கு விதியை இப்போது கூறுகிறார் தொல்காப்பியர்! -
 “குறுமையு  நெடுமையு மளவிற்  கோடலிற்
 றொடர்மொழி யெல்லா நெட்டெழுத் தியல” (மொழி. 17)

‘குறுமையும்   நெடுமையும்  அளவிற்  கோடலின்’ – உயிர் எழுத்துகளில் குற்றெழுத்துக்கு ஒரு மாத்திரை , நெட்டெழுத்துக்கு இரு மாத்திரைகள்  என்று மாத்திரைக் கணக்குகள் உள்ளதால் ,
‘தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து  இயல’ –  குறில்களின் பின்னே நிற்கும் ‘ர்’ , ‘ழ்’ ஆகிய மெய்கள் , ஒரு நெடிலின் அருகே நிற்கும் மெய் போலச் செயற்படும் !

இளம்பூரணரின் எடுத்துக் காட்டுச் சொற்கள் –
1 . அகர்
2 .புகர்
3 .அகழ்
4 . புகழ்
5 . புலவர்

இவற்றின் ஈறுகளான ‘ர்’ , ‘ழ்’ மெய்கள் , நெடில் எழுத்து ஒன்றின்பின்னே நிற்பதுபோலவே கொள்ளப்படும் !

எங்கே கொள்ளப்படும் ?

புணர்ச்சிகளில்  கொள்ளப்படும் !

இன்னொரு ஐயம் !

அஃதாவது , ‘ர்’ , ‘ழ்’ ஆகிய இரு மெய்களுக்கு மட்டும்தான் இந்த விதி பொருந்துமா ?

இதற்கு இளம்பூரணரின் விடை – “ரகார ழகாரங்களே யன்றிப் பிற ஒற்றுக்களும் நெடிற் கீழ் ஒற்று எனப்படும் !”

இந்தக் கருத்துக்கு விளக்கமாக மேலும் இளம்பூரணர் – “இதனானே , விரல் தீது என்புழி லகரம் நெடில்கீழ் ஒற்று என்று கெடுக்கப்படும் !”

இளம்பூரணரின் இந்த விளக்கத்திற்கு மேலும் ஒரு விளக்கம் தேவப்படுகிறது !

அஃதாவது-
விரல் + தீது = விரற்றீது ×
விரல் + தீது = விரறீது √
இந்தப் புணர்ச்சிக்கு விதி சொல்வதுதான் நாம் பார்த்த இந் நுற்பா !

‘வி , ர’ ஆகிய இரு குறில்கள் இணைந்து ஒரு நெடிலாகிறது ! (வி = 1 மாத்திரை ; ர = 1 மாத்திரை; மொத்தம் 2 மாத்திரை); பின்னர் ஒரு நெடிலருகே இருக்கும் ஒற்று என்ற நிலையில் புணர்ச்சி நடக்கிறது !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (368)

Post by Dr.S.Soundarapandian on Sat Apr 18, 2015 10:28 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (368)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் , இரு மெய்கள் அடுத்தடுத்து இடம்பெறுதல் பற்றிப் பார்த்துவருகிறோம் !

பாட்டின் இறுதியில் ‘போலும்’ என்ற சொல்  , ‘போன்ம்’ என்று அடுத்தடுத்து இரு மெய்களைப் பெறும் என்பதை இப்போது சொல்கிறார் தொல்காப்பியர் ! –

“செய்யு ளிறுதிப் போலு மொழிவயின்
  னகார மகார மீரொற்  றாகும்  ” (மொழி. 18)

‘செய்யுள் இறுதி ’ – பாடலின் இறுதியில்,
‘போலு மொழிவயின்’ – ‘போலும்’ என்ற சொல்லிடத்து .
‘னகாரம்  மகாரம்  ஈரொற்று   ஆகும்  ’ – ‘ன்’னும் ‘ம்’மும் அடுத்தடுத்து  ஈரொற்று மெய்களாக  நிற்கும் !

சரி!

‘ன்’ அருகே ‘ம்’ வந்தாயிற்று !

இப்போது அதன் மாத்திரை ? அரையா? காலா?

விடைகூறுகிறார் தொல்காப்பியர் !-
“னகார  முன்னர்  மகாரங்  குறுகும்” (மொழி. 19)

அஃதாவது – ‘ன்’ அருகே உள்ள ‘ம்’மின் மாத்திரை , குறுகி ஒலிக்கும் !

‘போன்ம் ’ என்பதில் ‘ம்’மின் மாத்திரை கால் !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (369)

Post by Dr.S.Soundarapandian on Mon May 04, 2015 7:50 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (369)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழி மரபில் அடுத்த நூற்பா-
“மொழிப்படுத்  திசைப்பினும் தெரிந்துவே  றிசைப்பினும்
 எழுத்திய  றிரியா  வென்மனார் புலவர்”  (மொழி. 20)    

‘மொழிப்படுத்து   இசைப்பினும்’ –  உயிர் எழுத்து , ஒரு சொல்லில் , அதன் வடிவு மாறாமல்  வந்தாலும்,
‘தெரிந்துவேறு   இசைப்பினும்’ – அந்த உயிரனாது பிற மெய்களுடன் சேர்ந்து வேறு வடிவில் வந்தாலும் ,
‘எழுத்தியல்  திரியா  என்மனார் புலவர்’ – அப்போதும் அதற்கென்று இருக்கும் மாத்திரை மாறாது !

இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகளை வருமாறு தரலாம் ! –

1 . அஃகல்
இதிலுள்ள ‘அ’வுக்கு மாத்திரை – 1

2 . கடல்
இதிலுள்ள ‘அ’ , ‘க்’ மீது ஏறி நிற்கிறது ; வெறும் ‘அ’வுக்குத்தானே மாத்திரை ஒன்று, இது ‘க்’ மீது ஏறிக்  ‘க’ எனன நிற்கிறதே , அப்போது அதன் (க வின்) மாத்திரை ஒன்றுதானா ? வேறா?

அப்போதும் ‘க’வின் மாத்திரை ஒன்றுதான் என்பதே தொல்காப்பியர் இங்கு கூறும்  விடை !

3 . ஆல்
இதிலுள்ள ‘ஆ’வுக்கு மாத்திரை – 2

4 . கால்
இதிலுள்ள ‘ஆ’ , ‘க்’ மீது ஏறி நிற்கிறது ; வெறும் ‘ஆ’வுக்குத்தானே மாத்திரை  இரண்டு, இது ‘க்’ மீது ஏறிநிற்கிறதே , அப்போது ‘கா’வின்  மாத்திரை இரண்டுதானா ? வேறா?

அப்போதும் ‘கா’வின் மாத்திரை இரண்டுதான் என்பதே தொல்காப்பியர் இங்கு கூறும்  விடை !

‘அஃகல்’ – இதிலுள்ள ‘அ’ = மொழிப்படுத் திசைத்தல்

அஃதாவது , சொல்லில்  வைத்து (படுத்து) உச்சரித்தல்.
‘கடல்’ – இதிலுள்ள ‘க்’ மீது உள்ள  ‘அ’ = தெரிந்து வேறு இசைத்தல்

அஃதாவது , வேறு எழுத்தோடு சேர்த்து   வைத்துக் ‘க’ என  உச்சரித்தல்.

இளம்பூரணர் கூறும் இன்னொரு நுட்பம் !

‘அன்பு’ – என எவ்வளவு மெதுவாக உச்சரித்தாலும் அதன் மாத்திரை ஒன்றுதான் !

 ‘அது’ – என எவ்வளவு கத்தி உச்சரித்தாலும் அதன் மாத்திரை ஒன்றுதான் !

‘ஆடு’ – என எவ்வளவு மெதுவாக உச்சரித்தாலும் ‘ஆ’வின் மாத்திரை இரண்டுதான் !

‘ஆடி’ – என எவ்வளவு கத்தி உச்சரித்தாலும் ‘ஆ’வின் மாத்திரை இரண்டுதான் !

கீழ்வரும் இளம்பூரணர் உரைக்கு இதுவே பொருள் !-
 “வேறு என்றதனான் , எடுத்தல் , படுத்தல் முதலிய ஓசை வேற்றுமைக்  கண்ணும் எழுத்தியல் திரியா வென்பது கொள்க .”

இங்கே தமிழர் இசை நுணுக்கம் உள்ளது !

அஃதாவது –
கீழ் தாயி , மத்திமத் தாயி , உச்சத் தாயி என மூன்று தாயிகளில்  ‘அ’ வை உச்சரித்தாலும்  அதன் மாத்திரை ஒன்றுதான் !

இசை நூற்களுக்கு ஏற்புடைய  கருத்துதான் இது !

இந்த இடம், ‘கர்நாடக’ இசை தமிழர் கண்டது எனக் கூறப் போதுமானது !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (370)

Post by Dr.S.Soundarapandian on Fri May 08, 2015 9:05 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (370)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் இப்போது நாம் காணப்போகும் இரு நூற்பாக்கள் இன்றியமையாதன !

ஏனெனில் பலரும் தவறான பொருளையே  இந் நூற்பாக்களுக்குப்  பொருளாக  விளக்கியுள்ளனர் !:-

1 .  “அகர  இகர  மைகார  மாகும்” (மொழி.21 )

‘அகரம்  இகரம்’ -  அ , இ என்ற இரு எழுத்துகளும் அருகருகே நின்றால்,
‘ஐகாரம் ஆகும்’ – ‘ஐ’ போல ஒலிக்கும் !

இளம்பூரணர் – “இது போலி எழுத்து ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று ” என்றார் !

நம் காலத்து இலக்கண அறிஞர் எவரும் இந்த உரையை விளங்கிக் கொள்ளவில்லை !

‘போலி’ என இளம்பூரணர் சொன்னது இலக்கணப் போலியை அல்ல !

‘போல’ ஒலிப்பதால் ‘போலி’ என்றார் இளம்பூரணர் !

ஓலைச் சுவடியில் ஊறியவன் நான் ஆதலால் தொல்காப்பியமும் இளம்பூரணர் உரையும் எனக்கு நன்கு விளங்கியது !

அஃதாவது –
அந்தக் காலத்தில் ,  ஆசான் நூற்பாவைச் சொல்ல மாணாக்கன் அதனை ஓலையில் எழுத்தாணியால் எழுதிக்கொள்வான் ! அப்படி எழுதும்போது அவன் காதில் எப்படி ஒரு சொல்லானது விழுகிறதோ அப்படித்தான் அவன் எழுதிக்கொளவான் ! இதனால் பல சுவடிப்பிழைகள் ஏற்படும் ! எண்ணற்ற சுவடிப்பிழைகளை நான் பார்த்தவன் !

இப்படிப்பட்ட சூழலில்தான் தொல்காப்பியருக்கு மேற்கண்ட நூற்பாவை எழுதும் தேவை ஏற்பட்டது !

தொல்காப்பியர் என்ன சொல்கிறார் என்றால் -  ‘அ’வையும் , ‘இ’யையும் அருகருகே நிறுத்தி ,  ‘அ இ ’ என்று உச்சரித்தால் , காதில் ‘ஐ’ என்றுகேட்கும் !  இதனை உணர்ந்துகொண்டு , ‘ஐ’ என நான் உச்சரித்தால்   நீ சுவடியில்  ‘அ இ’ என எழுதிக்கொள்ளாதே ; ‘ஐவனம்’ என நான் உச்சரித்தால் ‘அ இவனம்’ என நீ எழுதிக்கொள்ளாதே !

இதுதான் ‘அகரம் இகரம் ஐகரம் ஆகும்’ என்பதன் பொருள் !

2 . இதே பொருளைத்தான் அடுத்த  நூற்பாவுக்கும்  கொள்ளவேண்டும் !

 “அகர உகரம் ஔகார மாகும் ” (மொழி . 22)

அஃதாவது , தொல்காப்பியர் என்ன சொல்கிறார் என்றால் -  ‘அ’வையும் , ‘உ’வையும் அருகருகே நிறுத்தி ,  ‘அ உ ’ என்று உச்சரித்தால் , காதில் ‘ஔ’ என்றுகேட்கும் !  இதனை உணர்ந்துகொண்டு , ‘ஔ’ என  நான் உச்சரித்தால்   நீ சுவடியில்  ‘அ உ’ என எழுதிக்கொள்ளாதே ; ‘ஔவியம்’ என  நான் உச்சரித்தால் ‘அஉவியம்’ என நீ எழுதிக்கொள்ளாதே !

சுவடியியல் (MANUSCRIPTOLOGY) நோக்கில் எனது தீர்மானமான உரை இதுதான் !

இந்த நூற்பாவின் உரையில் இளம்பூரணர் ‘அது கொள்ளற்க’ என்ற தொடரை எழுதியுள்ளது நம் கருத்துக்கு அரணாகும் !

அஃதாவது ‘ போல ஒலிக்கும் போலியைச் சுவடி எழுதும்போது எடுத்துக் கொள்ளாதீர்கள்’ என்பதே  இளம்பூரணரின் ‘அது  கொள்ளற்க’ என்ர தொடரின் பொருளாகும் ! வேறு எப்பொருள் கொண்டாலும் அது பொருந்தாது !
வேறு பல உண்மைகள் இந்த நமது ஆய்வில் வெளிப்படுகின்றன !
தொல்காப்பியம் அவருடைய மாணவர்களுக்காக எழுதப்பட்ட நூல் என்ற உண்மை அவற்றில் ஒன்று !


***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (371)

Post by Dr.S.Soundarapandian on Wed May 13, 2015 8:48 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (371)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது நாம் பார்க்கப்போகும் நூற்பாவும் முன் இரு நூற்பாக்களின் தொடர்ச்சியே !

ஆனால் ஆய்வாளர்கள் எவரும் இதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை !

ஓலைச் சுவடித் துறையில் அனுபவமின்மை இதற்குக் காரணமாக இருக்கலாம் !

‘ஐ’ என்று உச்சரித்தால் அது ‘அய்’ எனக் காதில் விழலாம் ! ஆனால் ஏமாந்துவிடாதே !

இதுபோன்றே ‘ ஔ’ என உச்சரித்தால் ‘அவ்’ என அதை எழுதிவிடாதே ! –

இதுதான் தொல்காப்பியர் கூறவந்தது !

 நூற்பாவைப் பாருங்கள் !-
 “அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
 ஐயெ  னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்”  (மொழி.23 )

நூற்பவை அடுத்து இளம்பூரணர் ‘இதுவுமது’ என்று எழுதியிருப்பதை ஒருவரும் கவனிக்கவில்லை !

‘இதுவும் அது’ என்றால் , இந்த நூற்பாவும் முன்னிரு நூற்பாக்களைப் போன்றே ‘போல உச்சரிக்கப்படும் ’ எழுத்துகளைப் பற்றியது என்பது பொருள் !

‘அகரத்து  இம்பர் யகரப் புள்ளியும்’ –  ‘அ’ வும் , அதன் பக்கத்தே  ‘ய்’ என்ற எழுத்தும்  ‘ஐயென்  நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்’  - சேர்ந்து ஒலிக்கும்போது ‘ஐ’ என்ற ஒலி எழலாம் !

இந்தக்கருத்தை முன் நூற்பாக்களோடு சேர்த்து எண்ணினால் , ‘ஐ’ , வேறு , ‘அய்’ வேறு இரண்டு ஒன்றல்ல என்பது புலப்படும் !

மாத்திரைக் கணக்கை வைத்தே இந்த நமது ஆய்வுதான் சரி என்பதை நீங்கள் உணரலாம் !
ஐ = 2 மாத்திரை
அய் = 1½  மாத்திரை

இரண்டும் எப்படி ஒன்றாகும் ?

இந்த நூற்பா உரையில் இளம்பூரணர் ‘வகரப் புள்ளியும் ஔகாரம் போல வரும் எனக் கொள்க’ என்றார் !

இதற்குப் பொருள் – ‘ஔ என்பதைச் சரியாகக் காதில் வாங்கி எழுத வேண்டும் ! ‘ஔ’ என்ற உச்சரிப்பைக் கேட்டு , அது ‘அவ்’ போலக் காதில் விழுமாதலால் ‘அவ்’ என எழுதிவிடாதே  ’ என்பதுதான் !

மேலே சொன்னது போன்றே, மாத்திரைக் கணக்கை வைத்தே இந்த நமது ஆய்வும் சரிதான் என்பதை நீங்கள் உணரலாம் !
ஔ = 2 மாத்திரை
அவ் = 1½  மாத்திரை

இரண்டும் எப்படி ஒன்றாகும் ?

தொல்காப்பிய நூற்பாவில் ‘மெய்பெறத் தோன்றும்’ என்பதற்கு , ‘உண்மை போலத் தோன்றும் ; அது தோற்றந்தான் ; உண்மையல்ல’ என எடுத்துக்கொள்ள வேண்டும் !

தொல்காப்பிய நடை என்பது இன்றியமையாதது !

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது ஒன்று ; இலக்கணச் சூத்திர நடை என்பது மற்றொன்று !இந்த இரண்டும் நமக்கு அவ்வளவாகப் பிடிபடாததே சிக்கலுக்குக் காரணம் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (372)

Post by Dr.S.Soundarapandian on Sun May 17, 2015 2:49 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (372)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் அடுத்தது மாத்திரை பற்றியது !

‘ஐ’ – இதற்கு இரண்டு மாத்திரை !

’ஆனால்  எல்லா இடத்தும் இரண்டு மாத்திரைதான் என எண்ணாதீர் ’  - தம் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார் தொல்காப்பியர் !-
“ஓரள  பாகு மிடனுமா ருண்டே
தேருங் காலை  மொழிவயி  னான”  (மொழி. 24)

 ‘ஓரளபு  ஆகும் இடனுமார்  உண்டே’ – ஒரு மாத்திரை என்ற கால அளவில் ஒலிக்கும் இடமும் உண்டே,
‘தேரும் காலை  மொழிவயின்  ஆன’ – ஆராயும்போது  சில சொற்களில் இவ்வாறு
நடக்கும் !

எந்த இரண்டு மாத்திரை  எழுத்துக்கு இலக்கணம் கூறுகிறார் தொல்காப்பியர் என்ற விவரம் நூற்பாவில் இல்லை ! ஆனால் இளம்பூரணர் , அதனை வெளிப்படுத்துகிறார் ! அந்த எழுத்து ‘ஐ’தான் என்று தெளிவாக்குகிறார் இளம்பூரணர் !

தொல்காப்பியம் படிக்கும் முறை இதுதான் !

இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால் , சிலர் கரட்டுவாதமாக ‘அப்படி எங்கே தொல்காப்பியத்தில் உள்ளது ? உரையாசிரியர்கள் சொல்வதை யெல்லாம் நாம் ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும் ?’  என வாதிடுகின்றனர் ! அவர்களுக்காகச் சொன்னேன் !

‘ஐ’க்கு ஒரு மாத்திரையாக வரும் இரண்டு இடங்களைக் காட்டுகிறார் இளம்பூரணர் !
1 . இடையன்
இதில் ‘டை’க்கு ஒரு மாத்திரைதான் !

அஃதாவது, இந்தச் சொல் ‘இடயன்’ என்றுதான் ஒலிக்கிறது ! உச்சரித்துப் பார்த்தால் தொல்காப்பியர் சொன்னதும் , இளம்பூரணர் விளக்கியதும் சரிதான் என்பது உங்களுக்கு விளங்கும் !

2 . மடையன்
இதிலும் ‘டை’க்கு ஒரு மாத்திரைதான் !
அஃதாவது, இந்தச் சொல் ‘மடயன்’ என்றுதான் ஒலிக்கிறது ! உச்சரித்துப் பார்த்தால் உங்களுக்கு விளங்கும் !

இன்னொன்றும் உரைக்கிறார் இளம்பூரணர் ! – “தேருங்காலை என்றதனான் முதற்கண் சுருங்கா தென்பது கொள்க”.

அஃதாவது , சொல்லின் முதலில் வரும்  ‘ஐ’க்கு எப்போதும் மாத்திரை இரண்டுதான் ! அது ஒன்று ஆவதில்லை !
 ‘கைச்செலவு’ , ‘பைய’ , ‘வைப்பு’ – இவை போன்ற சொற்களில் எல்லாம் ‘ஐ’க்கு மாத்திரை இரண்டுதான் !

இவற்றை உச்சரித்துப் பார்த்தாலே உங்களுக்குத் தொல்காப்பியர் குறித்த – இளம்பூரணர் விளக்கிய - உண்மை விளங்கும் !

தொல்காப்பியரும் இளம்பூரணரும் ‘ஔ’ பற்றி இந்த இடத்தில் எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது !

இந்த நூற்பாவிற்குப் பிற்கால ஆய்வாளர்கள் உரை கூறுவதில் தடுமாறியுள்ளனர் !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by M.Jagadeesan on Sun May 17, 2015 9:26 pm

ஐயா !

முள் + தீது = முட்டீது என்று எழுதலாமா ? புணர்ச்சி விதியை விளக்கவும் .

கம்ப ராமாயணத்தில்

கடல் தாவுபடலம் என்பதைக் கடறாவு படலம் என்று சில புத்தகங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன . அது சரியா என்பதை விளக்கவும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4653
மதிப்பீடுகள் : 2174

View user profile

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (373)

Post by Dr.S.Soundarapandian on Wed May 20, 2015 7:18 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (373)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது நாம் காணப்போவதும் சுவையான நூற்பாதான் ! –

“இகர  யகர  மிறுதி விரவும்” (மொழி . 25)

‘இகரம் யகரம் இறுதி விரவும்’ – சொல்லின் ஈற்றில் ‘இ’யும் ‘ய்’யும் இடம்பெறுவதில் தடுமாற்றம் ஏற்படும் !

‘இறுதி விரவும்’ என்பதற்குப் பலரும் ,‘  ‘இ’ வரலாம் அல்லது ‘ய்’ வரலாம்’ என்பதுபோலப் பொருள் எழுதியுள்ளனர் !

இப்படிப்பொருள் சொன்னவர்கள் , ஒரே ஒரு கல்வெட்டைச் சான்றாகக் காட்டுகின்றனர் ! அக்கல்வெட்டில் , ‘நாய்’ என்பது ‘நாஇ’ என எழுதப்பட்டுள்ளது !

கல்வெட்டில் உள்ளது பிழை வடிவம் ! கல்வெட்டானது எழுத்துப் பிழைகள் நிறைந்தது ! ‘சமுதாய நோக்கில் கல்வெட்டுகள்’ என்று நானே ஒரு நூல் எழுதியுள்ளேன் !
இளம்பூரணர் எடுத்துக்காட்டிலும் இதே  ‘நாய் – நாஇ ’ எடுத்துக்காட்டுகள்தாம் வந்துள்ளன !  ‘இவற்றைக் கொள்ளற்க’ என்பதே இளம்பூரணர் சொல்லவந்தது !

நச்சினார்க்கினியர் உரையால் இது தெளிவாகிறது !

நச்சினார்க்கினியர் , “ இகரமும் யகரமும் ஒரு மொழியின் இறுதிக்கண் ஓசை விரவி வரும் ! அவ்விகரம் கொள்ளற்க ! ” என்று மிகத் தெளிவாக அறைந்துள்ளார் !

‘நாய்’ என்பது ‘நாஇ’ என வரலாம் எனில் , ‘தாய்’ எனப்து ‘தாஇ’ என்றல்லவா வரவேண்டும் ? ‘காய்’ என்பது ‘காஇ’ என்றல்லவா வரவேண்டும் ? ‘தாஇ’ , ‘காஇ’ என்றெல்லாம் வருவதை இவர்கள் ஒத்துக்கொள்வார்களாமா?

நூற்பாவின் கீழே இளம்பூரணர் மிகத் தெளிவாக  “இதுவும் ஓர் போலி யெழுத்து உணர்த்துதல்  நுதலிற்று” என்கிறார் !

அஃதாவது – ‘ய்’ யும் ,  ‘இ’யும் ஒன்றுக்கொன்று உச்சரிப்பில் தடுமாறி வரும் என்பதே  அவர் கூறிய கருத்து !

முன் ஓர் ஆய்வில் நான் கூறியவாறு,  சொல்லின் ஈற்றில் ,  ‘ய்’ யை உச்சரித்தாலும் ‘இ’யை உச்சரித்தாலும் ’ , இரண்டும் ஒன்றுபோலவே காதில் கேட்கும் ! ஆகவே ஒருவர் சொல்ல மற்றவர் சுவடி எழுதுகையில் இதைக் கவனிக்கவேண்டும் ! – இதுவே தொல்காப்பியர் சொல்ல வந்தது !

‘வாய்’ , ‘சேய்’ , ‘பேய்’ , ‘தூய்’ – இற்றையெல்லாம் உச்சரித்துப் பார்த்தால் நமது கருத்து தெளிவாகும் !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (373)

Post by Dr.S.Soundarapandian on Wed May 20, 2015 7:20 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (373)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது நாம் காணப்போவதும் சுவையான நூற்பாதான் ! –

“இகர  யகர  மிறுதி விரவும்” (மொழி . 25)

‘இகரம் யகரம் இறுதி விரவும்’ – சொல்லின் ஈற்றில் ‘இ’யும் ‘ய்’யும் இடம்பெறுவதில் தடுமாற்றம் ஏற்படும் !

‘இறுதி விரவும்’ என்பதற்குப் பலரும் ,‘  ‘இ’ வரலாம் அல்லது ‘ய்’ வரலாம்’ என்பதுபோலப் பொருள் எழுதியுள்ளனர் !

இப்படிப்பொருள் சொன்னவர்கள் , ஒரே ஒரு கல்வெட்டைச் சான்றாகக் காட்டுகின்றனர் ! அக்கல்வெட்டில் , ‘நாய்’ என்பது ‘நாஇ’ என எழுதப்பட்டுள்ளது !

கல்வெட்டில் உள்ளது பிழை வடிவம் ! கல்வெட்டானது எழுத்துப் பிழைகள் நிறைந்தது ! ‘சமுதாய நோக்கில் கல்வெட்டுகள்’ என்று நானே ஒரு நூல் எழுதியுள்ளேன் !
இளம்பூரணர் எடுத்துக்காட்டிலும் இதே  ‘நாய் – நாஇ ’ எடுத்துக்காட்டுகள்தாம் வந்துள்ளன !  ‘இவற்றைக் கொள்ளற்க’ என்பதே இளம்பூரணர் சொல்லவந்தது !

நச்சினார்க்கினியர் உரையால் இது தெளிவாகிறது !

நச்சினார்க்கினியர் , “ இகரமும் யகரமும் ஒரு மொழியின் இறுதிக்கண் ஓசை விரவி வரும் ! அவ்விகரம் கொள்ளற்க ! ” என்று மிகத் தெளிவாக அறைந்துள்ளார் !

‘நாய்’ என்பது ‘நாஇ’ என வரலாம் எனில் , ‘தாய்’ எனப்து ‘தாஇ’ என்றல்லவா வரவேண்டும் ? ‘காய்’ என்பது ‘காஇ’ என்றல்லவா வரவேண்டும் ? ‘தாஇ’ , ‘காஇ’ என்றெல்லாம் வருவதை இவர்கள் ஒத்துக்கொள்வார்களாமா?

நூற்பாவின் கீழே இளம்பூரணர் மிகத் தெளிவாக  “இதுவும் ஓர் போலி யெழுத்து உணர்த்துதல்  நுதலிற்று” என்கிறார் !

அஃதாவது – ‘ய்’ யும் ,  ‘இ’யும் ஒன்றுக்கொன்று உச்சரிப்பில் தடுமாறி வரும் என்பதே  அவர் கூறிய கருத்து !

முன் ஓர் ஆய்வில் நான் கூறியவாறு,  சொல்லின் ஈற்றில் ,  ‘ய்’ யை உச்சரித்தாலும் ‘இ’யை உச்சரித்தாலும் ’ , இரண்டும் ஒன்றுபோலவே காதில் கேட்கும் ! ஆகவே ஒருவர் சொல்ல மற்றவர் சுவடி எழுதுகையில் இதைக் கவனிக்கவேண்டும் ! – இதுவே தொல்காப்பியர் சொல்ல வந்தது !

‘வாய்’ , ‘சேய்’ , ‘பேய்’ , ‘தூய்’ – இற்றையெல்லாம் உச்சரித்துப் பார்த்தால் நமது கருத்து தெளிவாகும் !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Page 19 of 28 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 23 ... 28  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum