ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போடி, நீ தான் லூசு...!
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 T.N.Balasubramanian

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Page 20 of 28 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 24 ... 28  Next

View previous topic View next topic Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by Dr.S.Soundarapandian on Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம் (377)

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 07, 2015 11:13 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (377)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழி மரபில் நிற்கிறோம்!

உஊ  ஒஓ வென்னும் நான்குயிர்
வஎன்  னெழுத்தொடு  வருத லில்லை” (மொழி . 30)

‘உஊ  ஒஓ  என்னும் நான்கு  உயிர்’ – உ , ஊ , ஒ , ஓ  எனும் நான்கு  உயிர் எழுத்துகள்,
‘வஎன்  எழுத்தொடு  வருதல்  இல்லை’ -  ‘வ்’ என்ற மெய்யோடு சேர்ந்து வராது !

அஃதாவது –
வு , வூ , வொ , வோ -  ஆகிய நான்கு  எழுத்துகளும் சொல்லின் முதல் இடத்திலே நில்லா !

இக் கருத்துக்கு  இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் !

1 . வளை
  ‘வ்’வுடன்  ‘அ’ சேர்ந்து மொழிமுதல் ஆனது !

2 . வாளி
  ‘வ்’வுடன்  ‘ஆ’ சேர்ந்து மொழிமுதல் ஆனது !
3 . விளரி
  ‘வ்’வுடன்  ‘இ’ சேர்ந்து மொழிமுதல் ஆனது !
4 . வீடு
  ‘வ்’வுடன்  ‘ஈ’ சேர்ந்து மொழிமுதல் ஆனது !
5 . வெள்ளி
  ‘வ்’வுடன்  ‘எ’ சேர்ந்து மொழிமுதல் ஆனது !
6 . வேர்
  ‘வ்’வுடன்   ‘ஏ’ சேர்ந்து மொழிமுதல் ஆனது !
7 . வையம்
  ‘வ்’வுடன்   ‘ஐ’ சேர்ந்து மொழிமுதல் ஆனது !
8 . வௌவு
  ‘வ்’வுடன்  ‘ஔ’ சேர்ந்து மொழிமுதல் ஆனது !
(வாளி – அம்பு ; விளரி – விளரிப்பண்)

இளம்பூரணர் ‘வேர்’ என்று கூற , நச்சர்  ‘வேட்கை’என்கிறார் ; இளம்பூரணர் ‘வௌவு’ என முன்னிலை ஏவல் சொல்லைக் காட்ட , நச்சர்  ‘வௌவுதல்’ என்ற தொழிற்பெயரை எடுத்துக்காட்டாகக் கூறுகி றார் !

தொல்காப்பியத்தின்படி கீழ்வருமாறு கூறலாம் !-

1 . வுழுந்து ×
    உழுந்து √
2 . வூதல் ×
    ஊதல் √
3 . வொட்டாரம்×
    ஒட்டாரம் √
4 . வோலை×
   ஓலை √
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (378)

Post by Dr.S.Soundarapandian on Wed Jun 10, 2015 6:42 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (378)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் , மொழிக்கு (சொல்லுக்கு) முதலிலே வரும் எழுத்துகளைப் பார்த்து வருகிறோம் !

இப்போது எந்த எழுத்தைப் பற்றித் தொல்காப்பியர் கூறுகிறார் எனக் காண்போம்! –
“ஆஎ  
ஒஎனு  மூவுயிர்  ஞகாரத்  துரிய” (மொழி . 31)

‘ஆ , எ , ஒ , எனும்  மூவுயிர்  ’ – ஆவன்னா , ஏனா , ஓனா ஆகிய மூன்று உயிர் எழுத்துகள்  மட்டும் ,
‘ஞகாரத்து   உரிய’ -  ஞானாவுடன் சேர்ந்து மொழிக்கு முதலிலே வரும் !

கீழ்வருவன இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகள் –
1 . ஞாலம்
    ‘ஞ்’ஞோடு  ‘ஆ’ சேர்ந்து மொழிக்கு முதல் ஆனது .

2 . ஞெகிழி
    ‘ஞ்’ஞோடு  ‘எ’ சேர்ந்து மொழிக்கு முதல் ஆனது .

3 . ஞொள்கிற்று
    ‘ஞ்’ஞோடு  ‘ஒ’ சேர்ந்து மொழிக்கு முதல் ஆனது .

(ஞெகிழி – தீக் கடை கோல் ; ஞொள்கிற்று – மெலிந்தது )

இந்த இடத்தில் இளம்பூரணர் , “ஞழியிற்று  என்றாற் போல்வன விலக்கினவும் வருமா லெனின் , அவை அழி வழக்கென்று மறுக்க ” என்கிறார் !

அஃதாவது , ‘அழிவழக்கு’ என்பதற்கு இரு பொருள்கள் உள்ளன; ஒன்று – விதண்டா வாதம் ; மற்றொன்று – இழிந்தோர் வழக்கு .

நச்சர் உரையைப் பார்த்தால் , அவர் இதே ‘ஞழியிற்று’ என்ற சொல்லைக் குறிப்பிட்டு , “ஞழியிற்று என்றாற் போலவன இழிவழக்கு” என்கிறார் ! ஆதலால் , இளம்பூரணரும் இழிவழக்கையே ‘அழிவழக்கு’ என்று கூறியிருக்கலாம் !

நச்சர் , ‘ஞமலி’ என்ற சொல்லைக் குறிப்பிட்டு ,  அதனைத் திசைச் சொல் என்று எழுதுகிறார் !

நச்சர் வாக்கால் திசைச்சொல் , சற்று இலக்கணம் வழுவியிருக்கலாம் என்ற உண்மை பெறப்படுகிறது !

தமிழ் வட்டார வழக்கு ஆய்வில் (Dialect survey and research)  இது குறிப்பிடத் தக்கது !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (379)

Post by Dr.S.Soundarapandian on Sat Jun 13, 2015 1:37 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (379)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளைப் பார்த்துவருகிறோம் !

இப்போது – யா !

தமிழ்ச் சொல் எதுவானாலும் அதற்கு முதல் எழுத்தாக , யகர  வரிசையில் , ‘யா’ வைத் தவிர  வேறு எதுவும் வராது !

தொல்காப்பியர் ஆணை –
“ஆவோ  டல்லது  யகர முத  லாது”  (மொழி . 32)

‘ஆவோடு அல்லது ’ – ‘ஆ’ என்ற உயிர் எழுத்தோடு சேர்ந்து அல்லாமல்,

‘யகரம் முதலாது’ -  ‘ய்’ என்ற மெய்  , சொல்லுக்கு முதலில் வராது !

இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டு – ‘யான்’

மேலும் எழுதுகிறார் இளம்பூரணர் – “ யவனர் என்றாற் போல்வன விலக்கினவும் வருமாலெனின் , அவை ஆரியச் சிதைவென்று மறுக்க ! ”

அஃதாவது – ‘யவனர் ’ என்ற சொல் , ஏதோ ஒரு வட சொல்லின் திரிபு என்பது இளம்பூரணர் கருத்து.
நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டுகள் –
    1 . யானை
    2 . யாடு
    3 . யாமம்

இந்த எடுத்துக்காட்டுகளைக் காட்டிய நச்சர் , “யவனர் , யுத்தி , யூபம் , யோகம் , யௌவனம் என்பன வடசொல் என மறுக்க !” என்கிறார் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by ஈகரைச்செல்வி on Sat Jun 13, 2015 8:12 pm

நன்றி சிறப்பான பதிவு
avatar
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 501
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by M.Jagadeesan on Sun Jun 14, 2015 8:34 am

ஐயா !


//தமிழ்ச் சொல் எதுவானாலும் அதற்கு முதல் எழுத்தாக , யகர வரிசையில் , ‘யா’ வைத் தவிர வேறு எதுவும் வராது ! //

அப்படிஎன்றால் " யோகா " என்று எழுதுவது தவறா ? அது வடமொழிச் சொல்லா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4636
மதிப்பீடுகள் : 2156

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by Dr.S.Soundarapandian on Thu Jun 18, 2015 7:48 pm

ஈகரைச் செல்வி அவர்களே,
நன்றி !

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by Dr.S.Soundarapandian on Thu Jun 18, 2015 7:59 pm

எம். ஜகதீசன் அவர்களே !
தங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுகள் !

தொல்காப்பிய இலக்கணத்தின் நேர் பொருளைக் கொண்டு கூறினால் ‘யோகம்’ என்று தமிழில் வராதுதான் !
ஆனால் , ‘வடமொழி’ என்றால் என்ன என்பதை நீங்கள் விளங்கிகொள்ளவேண்டுமாயின் எனது ஆய்வுகள் சிலவற்றையாவது படிக்கவேண்டும் ! எனது புராண ஆய்வுகள் பலவற்றில் இந்த விளக்கம் உள்ளது !
சுருக்கமாக, உங்கள் கேள்வியை ஒட்டிக் கூறுகிறேன் !
சில தமிழ்ச் சொற்களுடன் ‘ய்’ சேர்ந்தால் , ‘வடமொழி’ எனப் பலரும் குறிக்கும் சொல் வந்துவிடும் !
‘ஊகம்’ என்ற தமிழ் முன் ‘ய்’ சேருங்கள் - ‘யூகம்’
‘ஊபத் தம்பம்’ என்ற தமிழ் முன் ‘ய்’ சேருங்கள் - ‘யூபத் தம்ப்கம்’
இப்படித்தான் , ‘ஓகம்’ என்ற தமிழ் முன் ‘ய்’ சேருங்கள் - ‘யோகம்’ !

இன்றைக்கு உங்களுக்கு ‘யோகம்’அடித்தது போங்கள் !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (380)

Post by Dr.S.Soundarapandian on Thu Jun 18, 2015 8:07 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (380)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சொல்லுக்கு முதலில் நிற்கும் எழுத்தைத் தொல்காப்பியர் மொழிமுதல் எழுத்து என்கிறார் !

இதனையே மொழிமரபில் நாம் பார்த்துவருகிறோம் !
எந்தெந்த எழுத்துகள் சொல்லுக்கு முதல் இடத்தில் வரலாம் எவை வரக்கூடாது என்று மேலே பார்த்தோம் !

இப்போது , சொல்லுக்கு முதல் இடத்தில் வராத எழுத்துகள் கூடத் தம்மைச் சுட்டும்போது முதல் இடத்தில் வரலாம் என்கிறார் ! –
“முதலா வேன  தம்பெயர் முதலும்”  (மொழி . 33)

‘முதலா ஏன’ – மொழிக்கு முதல் ஆகாத ஏனைய எழுத்துகள்,
‘தம்பெயர் முதலும்’ – தம்மைப் பற்றிக் கூற வேண்டுமாயின் , சொல்லுக்கு முதல் இடத்தில் நிற்கலாம்!

இளம்பூரணர் ‘முதலாயின மெய்’ என்றொரு பட்டியலைத் தருகிறார் ! –
     1 . க
     2 .த
     3 . ந
     4 . ப
      5 . ம
     6 .வ
    7 . ச
   8 .ஞ
   9 . ய

‘முதலாகா மெய்’ என்று இன்னொரு பட்டியலைத் தருகிறார் !-

1 . ங
2. ட
3 .ண
4 . ர
5 .ல
6 . ழ
7 ள
8 .ற
9 . ன

‘ங’  முதல் ‘ண’ வரை எப்போது மொழிக்கு முதலில் வரும் ?

இளம்பூரணர் விடை-
          1 .ஙக்களைந்தார்  (ங – வை நீக்கினார்)
          2 .டப்பெரிது  (ட – என்ற எழுத்து பெரிதாக இருக்கிறது)
         3 . ணந்நன்று (ண – என்ற எழுத்து நன்றாக உளது)
                                                                                       
                                                                  ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (380)

Post by Dr.S.Soundarapandian on Thu Jun 18, 2015 8:08 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (380)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சொல்லுக்கு முதலில் நிற்கும் எழுத்தைத் தொல்காப்பியர் மொழிமுதல் எழுத்து என்கிறார் !

இதனையே மொழிமரபில் நாம் பார்த்துவருகிறோம் !
எந்தெந்த எழுத்துகள் சொல்லுக்கு முதல் இடத்தில் வரலாம் எவை வரக்கூடாது என்று மேலே பார்த்தோம் !

இப்போது , சொல்லுக்கு முதல் இடத்தில் வராத எழுத்துகள் கூடத் தம்மைச் சுட்டும்போது முதல் இடத்தில் வரலாம் என்கிறார் ! –
“முதலா வேன  தம்பெயர் முதலும்”  (மொழி . 33)

‘முதலா ஏன’ – மொழிக்கு முதல் ஆகாத ஏனைய எழுத்துகள்,
‘தம்பெயர் முதலும்’ – தம்மைப் பற்றிக் கூற வேண்டுமாயின் , சொல்லுக்கு முதல் இடத்தில் நிற்கலாம்!

இளம்பூரணர் ‘முதலாயின மெய்’ என்றொரு பட்டியலைத் தருகிறார் ! –
     1 . க
     2 .த
     3 . ந
     4 . ப
      5 . ம
     6 .வ
    7 . ச
   8 .ஞ
   9 . ய

‘முதலாகா மெய்’ என்று இன்னொரு பட்டியலைத் தருகிறார் !-

1 . ங
2. ட
3 .ண
4 . ர
5 .ல
6 . ழ
7 ள
8 .ற
9 . ன

‘ங’  முதல் ‘ண’ வரை எப்போது மொழிக்கு முதலில் வரும் ?

இளம்பூரணர் விடை-
          1 .ஙக்களைந்தார்  (ங – வை நீக்கினார்)
          2 .டப்பெரிது  (ட – என்ற எழுத்து பெரிதாக இருக்கிறது)
         3 . ணந்நன்று (ண – என்ற எழுத்து நன்றாக உளது)
                                                                                       
                                                                  ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (381)

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 21, 2015 3:55 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (381)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழி மரபில் , மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளைப் பார்த்துவருகிறோம் !

இப்போது , சொல்லுக்கு (மொழிக்கு) முதலில் குற்றியலுகரம் வருமா? – என்பதற்கு விடை கூறுகிறார் தொல்காப்பியர்! –

“குற்றிய  லுகர முறைப்பெயர்  மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்  ” (மொழி. 34)

‘குற்றிய  லுகர முறைப்பெயர்  மருங்கின்’ – ‘நுந்தை’ என்ற முறைப்பெயரில் ,
 ‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்  ’ -   முதலில் நிற்கக்கூடிய  ‘நு’விலுள்ள  உகரமாகக் , குற்றியலுகரம் சொல்லுக்கு முதலில் வரும் !

  ‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்  ’ – அஃதாவது , ஒற்றிய நகரம் ‘ந்’; அதன்மேல் என்பது, அதற்கு இடப்புறம்;  அதுவும் ‘ந்’ தான் ; அதன்மிசை என்பது , அதன்மேலாகும் ; ந்+ உ = ‘நு’ஆகும் !  

நுந்தை = உனது தந்தை.

முறைப் பெயர் =  ‘அண்ணன்’ , ‘ தம்பி ’ என்பனபோன்று உறவுமுறைகளைக் குறிக்கும் பெயர்.

இந்த ‘நு’வை , ‘nu’ என்று குற்றொலியாக உச்சரித்தாலும் , இதழ் குவித்து , ‘nuu’ என்று முற்றொலியாக உச்சரித்தாலும் பொருள் மாறுபடாது என்று அடுத்த நூற்பாவில் ஒரு சிறந்த மொழியியல் (Linguistic nuance) நுட்பத்தை  நமக்குக் காட்டுகிறார் ! –

“முற்றிய லுகரமொடு  பொருள்வேறு  படாஅ
தப்பெயர் மருங்கி நிலையிய  லான” (மொழி . 35)

‘முற்றிய லுகரமொடு  பொருள்வேறு  படாஅ’ – மொழிமுதல் ‘நு’வை முற்றியலுகரமாக உச்சரித்தாலும் , பொருளில் மாற்றம் இல்லை ,

‘அப்பெயர் மருங்கின்  நிலையியல்   ஆன’ – ‘நுந்தை’ என்ற சொல்லின் முதல் இடத்திலே நிற்பதால் !
தொல்காப்பியரின் மொழியியல் நுட்பம் இந்த இடத்தில் , உலகையே  வியப்பில் ஆழ்த்துகிறது !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (381)

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 21, 2015 3:56 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (381)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழி மரபில் , மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளைப் பார்த்துவருகிறோம் !

இப்போது , சொல்லுக்கு (மொழிக்கு) முதலில் குற்றியலுகரம் வருமா? – என்பதற்கு விடை கூறுகிறார் தொல்காப்பியர்! –

“குற்றிய  லுகர முறைப்பெயர்  மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்  ” (மொழி. 34)

‘குற்றிய  லுகர முறைப்பெயர்  மருங்கின்’ – ‘நுந்தை’ என்ற முறைப்பெயரில் ,
 ‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்  ’ -   முதலில் நிற்கக்கூடிய  ‘நு’விலுள்ள  உகரமாகக் , குற்றியலுகரம் சொல்லுக்கு முதலில் வரும் !

  ‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்  ’ – அஃதாவது , ஒற்றிய நகரம் ‘ந்’; அதன்மேல் என்பது, அதற்கு இடப்புறம்;  அதுவும் ‘ந்’ தான் ; அதன்மிசை என்பது , அதன்மேலாகும் ; ந்+ உ = ‘நு’ஆகும் !  

நுந்தை = உனது தந்தை.

முறைப் பெயர் =  ‘அண்ணன்’ , ‘ தம்பி ’ என்பனபோன்று உறவுமுறைகளைக் குறிக்கும் பெயர்.

இந்த ‘நு’வை , ‘nu’ என்று குற்றொலியாக உச்சரித்தாலும் , இதழ் குவித்து , ‘nuu’ என்று முற்றொலியாக உச்சரித்தாலும் பொருள் மாறுபடாது என்று அடுத்த நூற்பாவில் ஒரு சிறந்த மொழியியல் (Linguistic nuance) நுட்பத்தை  நமக்குக் காட்டுகிறார் ! –

“முற்றிய லுகரமொடு  பொருள்வேறு  படாஅ
தப்பெயர் மருங்கி நிலையிய  லான” (மொழி . 35)

‘முற்றிய லுகரமொடு  பொருள்வேறு  படாஅ’ – மொழிமுதல் ‘நு’வை முற்றியலுகரமாக உச்சரித்தாலும் , பொருளில் மாற்றம் இல்லை ,

‘அப்பெயர் மருங்கின்  நிலையியல்   ஆன’ – ‘நுந்தை’ என்ற சொல்லின் முதல் இடத்திலே நிற்பதால் !
தொல்காப்பியரின் மொழியியல் நுட்பம் இந்த இடத்தில் , உலகையே  வியப்பில் ஆழ்த்துகிறது !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (381)

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 21, 2015 3:57 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (381)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழி மரபில் , மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளைப் பார்த்துவருகிறோம் !

இப்போது , சொல்லுக்கு (மொழிக்கு) முதலில் குற்றியலுகரம் வருமா? – என்பதற்கு விடை கூறுகிறார் தொல்காப்பியர்! –

“குற்றிய  லுகர முறைப்பெயர்  மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்  ” (மொழி. 34)

‘குற்றிய  லுகர முறைப்பெயர்  மருங்கின்’ – ‘நுந்தை’ என்ற முறைப்பெயரில் ,
 ‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்  ’ -   முதலில் நிற்கக்கூடிய  ‘நு’விலுள்ள  உகரமாகக் , குற்றியலுகரம் சொல்லுக்கு முதலில் வரும் !

  ‘ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்  ’ – அஃதாவது , ஒற்றிய நகரம் ‘ந்’; அதன்மேல் என்பது, அதற்கு இடப்புறம்;  அதுவும் ‘ந்’ தான் ; அதன்மிசை என்பது , அதன்மேலாகும் ; ந்+ உ = ‘நு’ஆகும் !  

நுந்தை = உனது தந்தை.

முறைப் பெயர் =  ‘அண்ணன்’ , ‘ தம்பி ’ என்பனபோன்று உறவுமுறைகளைக் குறிக்கும் பெயர்.

இந்த ‘நு’வை , ‘nu’ என்று குற்றொலியாக உச்சரித்தாலும் , இதழ் குவித்து , ‘nuu’ என்று முற்றொலியாக உச்சரித்தாலும் பொருள் மாறுபடாது என்று அடுத்த நூற்பாவில் ஒரு சிறந்த மொழியியல் (Linguistic nuance) நுட்பத்தை  நமக்குக் காட்டுகிறார் ! –

“முற்றிய லுகரமொடு  பொருள்வேறு  படாஅ
தப்பெயர் மருங்கி நிலையிய  லான” (மொழி . 35)

‘முற்றிய லுகரமொடு  பொருள்வேறு  படாஅ’ – மொழிமுதல் ‘நு’வை முற்றியலுகரமாக உச்சரித்தாலும் , பொருளில் மாற்றம் இல்லை ,

‘அப்பெயர் மருங்கின்  நிலையியல்   ஆன’ – ‘நுந்தை’ என்ற சொல்லின் முதல் இடத்திலே நிற்பதால் !
தொல்காப்பியரின் மொழியியல் நுட்பம் இந்த இடத்தில் , உலகையே  வியப்பில் ஆழ்த்துகிறது !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (382)

Post by Dr.S.Soundarapandian on Thu Jun 25, 2015 6:42 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (382)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் அடுத்தது –
“உயிரௌ வெஞ்சிய இறுதி யாகும்” (மொழி. 36)

‘உயிர் ஔ எஞ்சிய’ – 12 உயிர் எழுத்துகளில் ‘ஔ’ தவிர ஏனைய 11 உயிர் எழுத்துகளும்,
‘இறுதி ஆகும்’ -  சொல்லின் ஈற்றிலே வரும் !

ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ  - இந்த  ஆறு நெடில் உயிர்களும் தனித் தனிச் சொற்கள் ; எனவே இவற்றுக்கு ஈறு இவையே !

ஆ= பசு
ஈ = இது எங்கும் மொய்க்கிறதே ?
ஊ = தசை
ஏ = அம்பு
ஐ = வியப்பு
ஓ= மதகுநீர் தாங்கும் பலகை

1 .ஆஅ -  ‘அ’ எனும் குறில் உயிர் , அளபெடை வகையால் ஈறானது .

2 .ஈஇ -  ‘இ’ எனும் குறில் உயிர், அளபெடை வகையால் ஈறானது .

3 .ஊஉ -  ‘உ’ எனும் குறில் உயிர், அளபெடை வகையால் ஈறானது .

4 .ஏஎ -  ‘எ’ எனும் குறில் உயிர், அளபெடை வகையால் ஈறானது .

5 .ஐஇ -  ‘இ’ எனும் குறில் உயிர், அளபெடை வகையால் ஈறானது .

6 .ஓஒ -  ‘ஒ’ எனும் குறில் உயிர், அளபெடை வகையால் ஈறானது .

இத் தொல்காப்பிய விதி , “உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது” என்பதே இளம்பூரணர் மற்றும் நச்சர்தம் கருத்து.

இதற்கு இணங்க நச்சர் தந்த எடுத்துக்காட்டுகள் –

1 .கா - ‘ஆ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.

2 .தீ - ‘ஈ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.

3 .பூ - ‘ஊ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.

4 .சே - ‘ஏ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.

5 .கை - ‘ஐ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.

6 .கோ - ‘ஓ’ இங்கே ஈறாவதைக் காணலாம்.

கா = சோலை
தீ = நெருப்பு
பூ = ஏமாந்தவர் காதில் வைப்பது.
சே = காளை
கை = உறுப்பாகிய கை
கோ = அரசன்

இனி , குறில் உயிர்கள், உயிர்மெய் வடிவில் , சொல்லின் ஈறாக வரல், நச்சர் காட்டியபடி:

1 .விள- இதில் , ‘அ’எனும்  குறில் உயிர் , ‘ள’ என்ற உயிர்மெய் வடிவில் , சொல்லின் ஈறாகிறது.

2 .கிளி -  இதில் , ‘இ’எனும் குறில் உயிர் , ‘ளி’ என்ற உயிர்மெய் வடிவில் , சொல்லின் ஈறாகிறது.

3 .மழு -  இதில் , ‘உ’எனும் குறில் உயிர் , ‘ழு’ என்ற உயிர்மெய் வடிவில் , சொல்லின் ஈறாகிறது.

                                                                                ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by T.N.Balasubramanian on Thu Jun 25, 2015 7:00 pm

நன்றி ,அய்யா !
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20294
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (383)

Post by Dr.S.Soundarapandian on Mon Jun 29, 2015 1:02 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (383)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் , சொல்லுக்கு ஈறாக வரக்கூடிய எழுத்துகளைக் கூறிவருகிறார் தொல்காப்பியர் !

மேல் நூற்பாவில் ‘ஔ’ சொல்லுக்கு ஈறாக வராது என்றார் தொல்காப்பியர் !

இப்போது , ‘க்’குடனும் ‘வ்’வுடனும் சேர்ந்தால் , ‘ஔ’வும் சொல்லுக்கு ஈற்றிலே நிற்கலாம் என்கிறார் !-
“கவவோ டியையி னௌவு மாகும் ” (மொழி . 37)

‘கவவோடு இயையின்’ -  ‘க்’ , ‘வ்’ ஆகிய எழுத்துகளுடன் சேர்ந்த நிலையில்,

‘ஔவும் ஆகும்’ – ‘ஔ’வும் சொல்லின் ஈறாகும் !

1 . கௌ
இதில் , ‘க்’மீது ‘ஔ’ ஏறிநின்று சொல்லுக்கு ஈற்றிலே நிற்பதைக் காணலாம் !
கௌ = கொள்ளு

2 . வௌ
இதில் , ‘வ்’மீது ‘ஔ’ ஏறிநின்று சொல்லுக்கு ஈற்றிலே நிற்பதைக் காணலாம் !
வௌ = கைப்பற்று

‘ஔ’வானது , ‘க்’ ‘வ்’  ஆகிய மெய்களோடு சேர்ந்த நிலையில் சொல்லின் ஈறாவதை இப்போது பார்த்தோம் !

ஆனால் , இதைப்போல ‘எ’ எனும் உயிரானது எந்த மெய்யோடும் சேர்ந்து சொல்லுக்கு ஈறாகாது என அடுத்துத்  தெளிவுபடுத்துகிறார் தொல்காப்பியர் ! –

“எஎன வருமுயிர் மெய்யீ றாகாது ” (மொழி . 38)

தனி எகரம் , அளபெடைமுறையில் , சொல்லுக்கு ஈறாகும் என்று நூற்பா 36இல் பார்த்தோம் !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (384)

Post by Dr.S.Soundarapandian on Wed Jul 01, 2015 10:03 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (384)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஒ’ ஈறு சொல்லின் ஈற்றில் தனியாக வருவதை முன்பே (மொழி . 36) பார்த்தோம்!

இந்த ‘ஒ’ , வேறு எந்த மெய்யோடு சேர்ந்து சொல்லுக்கு ஈறாக வரும் ?

இதோ நூற்பா! –
“ஒவ்வும்  அற்றே நவ்வலங் கடையே” (மொழி . 39)

‘ந அலங்கடையே’ – ‘ந்’ தைத் தவிர்த்து’
‘ஒவ்வும் அற்றே’ – வேறு எந்த மெய்யோடும் சேர்ந்து ‘ஒ’ , சொல்லுக்கு ஈற்றிலே வராது !

‘ந்’துடன் சேர்ந்து , ‘ஒ’வானது சொல்லின் ஈற்றிலே வருமென்றால் அது எந்தச் சொல் ?

இளம்பூரணர் விடை –
1 . நொ
இங்கே  ‘ந்’ துடன் ‘ஒ’ சேர்ந்து ஒரு தனிச் சொல்லாக வந்துள்ளது !
நொ (பெயர்ச் சொல்) = துன்பம்

அடுத்த  நூற்பா –
 “ஏஓ எனுமுயிர் ஞகாரத் தில்லை” (மொழி . 40)

முன்னே பார்த்தபடி  (மொழி . 36) ‘ஏ’ ,’ஓ’ தனியாக நின்று சொல்லின் ஈறாகும் !

இப்போது கூடுதல் செய்தியாக , ‘ஞே’ , ‘ஞோ’என்ற இரு எழுத்துகளைத்  தவிர , மற்ற மெய்கள் மீது ஏறிய ’ஏ’ , ‘ஓ’ ஆகியன சொல்லின் ஈறாக வரும் என்கிறார் தொல்காப்பியர் !

இந் நூற்பாவிற்கு நச்சர்தான் எடுத்துக்காட்டுகளைக் கூறியுள்ளார் ! அவை !:
1 . உரிஞ
2. உரிஞா
3 .உரிஞி
4. உரிஞீ
5. உரிஞு
6. உரிஞூ

நச்சர் இவ்விடத்தில் , “இவை எச்சமும் வினைப் பெயரும் பற்றி வரும்” என்றார் !

வினைப் பெயர் – தொழிற்பெயர்.

சரசுவதிமகால் வெளியீட்டில் (2007), ‘ உரிஞு தவிர ஏனைய முறையே , ‘செய’ , ‘செய்யா’ ,  ‘செய்து’ ,  ’செய்யூ’ என்னும் வாய்பாட்டின’ எனக் கூறப்பட்டுள்ளது பொருத்தமே !

அஃதாவது –
1 . உரிஞ – ‘செய’ எனும் வாய்பாட்டு வினையெச்சம். (= தேய்க்க)
2 . உரிஞா – ‘செய்யா’ எனும் வாய்பாட்டு வினையெச்சம். (= தேய்க்கா)
3 . உரிஞி – ‘செய்து’ எனும் வாய்பாட்டு வினையெச்சம். (= தேய்த்து)
4 . உரிஞூ – ‘செய்யூ’ எனும் வாய்பாட்டு வினையெச்சம். (= தேய்த்தூ)
4 . உரிஞு – தொழிற்பெயர் (= தேய்த்தல்)
-----------------------------------------------------------------------------
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (385) -முனைவர் சு.சௌந்தரபாண்டியன் மொழிமரபில் , அடுத்து, ‘நு’ , ‘நூ’ , ‘வு’ , ‘வூ’ ஆகியன சொல்லின் ஈற்றிலே வருமா? – என்ற வினாவுக்கு விடை கூறுகிறார் தொல்காப்பியர் ! – “உஊ கார நவவொடு நவிலா” (மொழி. 41) அஃதாவது – நு , நூ , வ

Post by Dr.S.Soundarapandian on Sat Jul 04, 2015 1:00 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (385)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் , அடுத்து, ‘நு’ , ‘நூ’ , ‘வு’ , ‘வூ’ ஆகியன சொல்லின் ஈற்றிலே வருமா? – என்ற   வினாவுக்கு விடை கூறுகிறார் தொல்காப்பியர் ! –

“உஊ  கார  நவவொடு  நவிலா” (மொழி. 41)

அஃதாவது –
நு , நூ  , வு , வூ – இந்த நான்கும் சொல்லுக்கு ஈற்றிலே வாரா !

இங்கே இளம்பூரணர் , “நவிலா  என்றதனால் சிறுபான்மை நொவ்வும் கவ்வும் என வகாரத்தோடு ஈறாதல் கொள்க  என எழுதுகிறார் !”

இதன்படி ,
1 . நொவ்வு – இதில் , ‘வு’ ஈறாகி வருகிறது !
(நொவ்வு  = மெலிவு ) ; நொவ்வு – பெயர்ச்சொல்.

2 . கவ்வு – இதிலும் , ‘வு’ ஈறாகி வருகிறது !
(கவ்வு  = கவட்டை ) ; கவ்வு – பெயர்ச்சொல்.

இவ்வாறு , உரையாசிரியர்கள் , மூலத்திற்கு விதி விலக்காக எழுதுவது எதைக்காட்டுகிறது ?

இடைச் செருகலையா?

அல்ல !

இரண்டு உண்மைகளைக் காட்டுகிறது !-

1 . தொல்காப்பியரின் விதிகள், அவர் காலத்துத் தமிழ்ச் சொற்கள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சேர்த்துப் பார்த்து எழுதப்பட்டவை அல்ல !

கணிப்பொறி வசதிகள் இருக்கும் இந்நாளிலேயே தமிழ்ச் சொற்கள் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்து ஆராய்வது துன்பமாக இருக்கும்போது, 2000 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை எவ்வாறிருக்கும் எனப் பார்த்துக்கொள்ளுங்கள் !

எனவேதான் உரையாசிரிகள் பார்வைக்கு வரும் ‘சிறுபான்மை விதிவிலக்குகளை’ அவர்கள் கூறுகிறார்கள் !

2 . உரையாசிரியர்கள் காலத்தில் புதிதாகச் சேர்ந்த சொற்களை  ஒதுக்காமல், அவற்றையும் தொல்காப்பிய விதிக்குள் அடக்கும் முயற்சியையும் உரையாசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர் !
‘இதை நானாகச் செய்யவில்லை , தொல்காப்பிய நூற்பாவின் இந்தச் சொல்லுக்கு உள்ளே புகுந்துகொண்டு என்னால் இதைக்கூறமுடிகிறது’ எனும் தொனியில், ‘நவிலா என்றதனால்’ என்ற பாங்கில் , தொல்காப்பிய நூற்பாச் சொல் ஒன்றைப் பிடித்துக்கொண்டு , அதில் சிறிது இடம் உண்டாக்கிக் கொண்டு, உரையாசிரியர்கள் காலச் சொற்களுக்கு இலக்கண அமைதி தேடியுள்ளனர் !

உரையாசிரியர்தம் உரைக்கோட்பாடு இது !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (386)

Post by Dr.S.Soundarapandian on Sun Jul 19, 2015 4:35 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (386)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் , அடுத்த நூற்பா :-

“உச்ச கார மிருமொழிக் குறித்தே” (மொழி. 42)

‘உச்சகாரம் ’- சு
‘இருமொழிக் குறித்தே’ – இரு எழுத்துச் சொற்களுக்கு மட்டும் ஈறாக வரும் !

1 . உசு  (உளு எனப்படும் மரப் புழு - Woodworm)

2 . முசு  (குரங்கில் ஒரு வகை)

இவ்விடத்தில் இளம்பூரணர் – “பசு வென்பது  ஆரியச் சிதைவு” என்கிறார் !
‘ஆரியச் சிதைவு’ என்றவுடன் ஆரியர்கள் கொண்டுவந்த சொல் – என எடுத்துக்கொள்ளக் கூடாது !
‘ஆரியம்’ என்பது, தமிழ் மண் தொடர்பானதுதான் !

இதுபற்றி எனது புராண ஆய்வுகளில் நான் ஆய்ந்துள்ளேன் ! அவற்றை மீண்டும் இங்கே விவரிக்க வேண்டியதில்லை !

‘பசு’ என்பது தூய தமிழ்ச்சொல்தான் எனவும் என் முன் நூற்களில் நிறுவியுள்ளேன் !

தொல்காப்பியர் , ஈரெழுத்துச் சொற்களில் மட்டுந்தான் ஈறாகச் ‘சு’ வரும் என்கிறாரே ,  ‘சு’வை ஈற்றிலே கொண்ட தமிழ்ச் சொற்கள் ‘கச்சு’ , ‘குச்சு’ என்றெல்லாம் உள்ளனவே ! – ஐயம் வரலாம் !

நச்சினார்க்கினியர் இதற்கு விடை கூறுகிறார் ! –

“கச்சு , குச்சு என்றாற் போல்வன குற்றுகரம்”

அஃதாவது – ‘கச்சு’ என்ற சொல்லில் உள்ள ஈற்று உகரம்  குற்றியலுகரம் ; எனவே இந்த ஈற்றுகரம் ‘உச்சகாரம்’ என்ற கணக்கில் வராது ! ஈற்றிலே நிற்கும் முற்றியலுகரம் பற்றித்தான் தொல்காப்பியர் பேசுகிறார் !

இங்கே நச்சர் தம் உரையில் கூடுதல் விளக்கம் ஒன்று தருகிறார்! -

அஃதாவது-  ‘ச்’ மீது ஏறிய ‘உ’ (சு) ஈறாக நிற்பதற்குத்தான் ‘இரண்டெழுத்துச் சொல்லாக இருக்கவேண்டும்’ என்ற விதியைத் தொல்காப்பியர் விதித்தார் ! வேறு உயிர்கள் ஏறிய ‘ச்’ ஈறாக வருவதற்கு அவர் விதி கூறவில்லை என்று குறிப்பிட்டுச் சில எடுத்துக்காட்டுகளை நச்சர் தருகிறார் –
1 . கச்சை – இங்கு ‘ஐ’ ஏறிய ‘ச்’ ,  மூன்றெழுத்துச் சொல்லுக்கு ஈறாக வந்துள்ளது !
கச்சை – பெயர்ச் சொல்

2 . துஞ்ச – இங்கு ‘அ’ ஏறிய ‘ச்’ ,  மூன்றெழுத்துச் சொல்லுக்கு ஈறாக வந்துள்ளது !
துஞ்ச – எச்சச் சொல்

3 .எஞ்சா – இங்கு ‘ஆ’ ஏறிய ‘ச்’ ,  மூன்றெழுத்துச் சொல்லுக்கு ஈறாக வந்துள்ளது !
எஞ்சா – எச்சச் சொல்

4 .எஞ்சி – இங்கு ‘இ’ ஏறிய ‘ச்’ ,  மூன்றெழுத்துச் சொல்லுக்கு ஈறாக வந்துள்ளது !
எஞ்சி – எச்சச் சொல்

5 .அச்சோ – இங்கு ‘ஓ’ ஏறிய ‘ச்’ ,  மூன்றெழுத்துச் சொல்லுக்கு ஈறாக வந்துள்ளது !
அச்சோ –  வியப்புச் சொல்

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by M.Jagadeesan on Sun Jul 19, 2015 5:22 pm

" பசு " தூய தமிழ்ச் சொல் என்பது வியப்பைத் தருகிறது .

" ஆ " என்ற சொல்லே திருக்குறளிலும் , சிலப்பதிகாரத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது .

பசு + பால் = பசுப்பால் என்பது சரியா அல்லது
பசு + பால் = பசும்பால் என்பது சரியா ?

ஆ + பால் = ஆப்பால் என்பது சரியா அல்லது
ஆ + பால் = ஆவின்பால் என்பது சரியா ?

விளக்கம் தரவும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4636
மதிப்பீடுகள் : 2156

View user profile

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (387)

Post by Dr.S.Soundarapandian on Sun Jul 26, 2015 9:13 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (387)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சொற்களின் ஈறுகளில் எந்தெந்த எழுத்துகள் வரலாம் என்று மொழிமரபில் கூறிக்கொண்டு வருகிறார் தொல்காப்பியர் !

இப்போது – ‘பு’ :
“உப்ப கார மொன்றென மொழிப
இருவயி னிலையும் பொருட்டா  கும்மே” (மொழி. 43)

‘உப்பகாரம்’ – பு எனும் எழுத்து ,
‘ஒன்று என மொழிப’ – சொல்லின் ஈற்றிலே வருவது ஒரே ஒரு சொல்லில் மட்டும் என்பார்கள் ;
‘இருவயின்  நிலையும் பொருட்டா  கும்மே’- அச் சொல்லானது , தன்வினையிலும் வரும் பிறவினையிலும் வரும் !

இளம்பூரணர் காட்டிய எடுத்துக் காட்டு – ‘தபு’

‘தபு’ – இது தன்வினையில் வரும்போது ‘நீ சா’ என்று பொருளாகும் !

‘தபு’ – இது பிறவினையில் வரும்போது ‘நீ ஒன்றனைச் சாவி’ என்று பொருளாகும் !

இங்கே ‘சாவி’ என்பது ‘பூட்டைத் திறக்கும் சாவி ’அல்ல  !

சாவி = சாகச் செய் ; கொல்லு

சொல் ஒன்று ! பொருள் வேறு !

இளம்பூரணர் உரைப்படி – ‘படுத்துச் சொன்னால்  நீ சா’ என்பது பொருளாகும் !

‘படுத்துச் சொல்வது’ என்றால், பாயை விரித்து அதில் படுத்துக்கொண்டு சொல்வது அல்ல !

மெதுவாக, அடிநிலை ஒலிப்பில் உச்சரித்தால் – அது படுத்துச் சொல்வது !

‘தபு’ – இதனை மெதுவாக, அடிநிலை ஒலிப்பில் உச்சரித்தால் , அப்போது அதன் பொருள் ‘நீ சா’ என்பது பொருள் !

சற்று உரக்க , மேல்நிலை ஒலிப்பில் உச்சரித்தால் – அது எடுத்துச் சொல்வது !

இளம்பூரணர் உரைப்படி , ‘தபு’ என்ற சொல்லை, எடுத்துச் சொன்னால் , ‘சாவி’ என்பது பொருள் !

‘தபு’ என்பதற்கு ‘நீ சா’ என்பது பொருளாகும் போது – அது ‘தன்வினை’ (Active voice).
‘தபு’ என்பதற்குs ‘ சாவி’ என்பது பொருளாகும் போது – அது ‘பிறவினை’ (Passive voice).

எனவே இந்த நமது ஆய்வால் , தொல்காப்பியர், தன்வினை , பிறவினைகளைக் கூறவில்லை என்ற வாதம் அடிபட்டுப் போகிறது !

தொல்காப்பியருக்கு முன்னரே தமிழில் தன்வினை , பிறவினைகள் இருந்துள்ளன என மதிப்பிடவேண்டும் !

சிலர் , ‘தமிழுக்குத் தன்வினை பிறவினைகளைத் தந்ததே ஆங்கிலம்தான்’ என்றுகூட எழுதியுள்ளார்கள் ! முழுத் தவறு அது !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by Dr.S.Soundarapandian on Sun Jul 26, 2015 9:25 pm

எம். ஜெகதீசன் அவர்களே !
தங்களின் ஆய்வு மனம் வரவேற்கத் தக்கது !
நன்றி !
1 .தமிழ்த் தொன்னூல்களில் ஒரு சொல் இடம்பெறவில்லையானால் அதனை ‘வடசொல்’என்று ஒதுக்கிவிடும் போக்கு தீயது ! தவறானது !

2 . ‘பசுப்பால்’ என்பதே , புணர்ச்சி இலக்கணப்படி சரியானது !

3 . ‘பசும்பால்’ என்பது மெலித்தல் விகாரமாக , மக்கள் நாவில் வந்தது ! அதனை நாம் ஏற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை !

4 . ‘ஆப் பால்’ - என்பது புணர்ச்சி இலக்கணப்படி சரியானதுதான் !

5 . ‘ஆவின் பால்’ - என்பதன் நடுவே ‘இன்’ சாரியை சேர்ந்துள்ளது ! இதுவும் இலக்கணப்படி சரியானதுதான் ! மக்கள் நாவில் புழங்க இந்தச் சாரியை தேவைப்பட்டது !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by M.Jagadeesan on Sun Jul 26, 2015 10:11 pm

தங்கள் விளக்கத்திற்கு மிக்கநன்றி !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4636
மதிப்பீடுகள் : 2156

View user profile

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (388)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 09, 2015 7:35 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (388)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் அடுத்தது –
“எஞ்சுதல் எல்லாம் எஞ்சுதல் இலவே” (மொழி. 77)

‘எஞ்சுதல் எல்லாம்’ – சொல்லுக்கு ஈற்றிலே வராது என்று குறிப்பிடப்பட்ட உயிர்மெய்கள் எல்லாம் ,
‘எஞ்சுதல் இலவே’ – அந்த எழுத்துகளைச் சுட்டிச் சொல்லும்போது ஈறாக வருவதற்குத் தடை இல்லை !

சொல்லுக்கு ஈற்றிலே வராது என்று குறிப்பிடப்பட்ட உயிர்மெய்கள் : -
1 . ஙௌ

2 . கெ

3 . கொ

4 . ஞே

5 . ஞோ

6 . நு

7 . நூ

8 . வு

9 . வூ

இளம்பூரணர் உரைப்படி, மேல் எழுத்துகள் தம்மைக் குறிக்கும்போது கீழ்வருமாறு சொல்லுக்கு ஈறாகும் ! –

1 . ஙௌக் களைந்தார்  (= ஙௌ எனும் எழுத்தை நீக்கினார்)

2 . கெக் களைந்தார்  

3 . கொக் களைந்தார்  

4 . ஞேக் களைந்தார்  

5 . ஞோக் களைந்தார்  

6 . நுக் களைந்தார்  

7 . நூக் களைந்தார்  

8 . வுக் களைந்தார்  

9 . வூக் களைந்தார்  

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (389)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 06, 2015 5:09 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (389)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்த நூற்பா , மொழிமரபில் –
“ஞணநம  னயரல வழள  வென்னும்
அப்பதி  னொன்றே புள்ளி யிறுதி ” (மொழி. 45)

‘ஞணநம  னயரல வழள  என்னும்’ – ஞ் , ண் , ந் , ம் , ன் , ய் , ர் , ல் , வ் , ழ் , ள்
‘அப்பதி  னொன்றே ’ - ஆகிய பதினோரு மெய்களும்,
‘புள்ளி யிறுதி’ – புள்ளி எழுத்துகளாய்ச் சொற்களின் ஈற்றிலே வரும் !

இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் –
1 . உரிஞ்

2 . மண்

3 . பொருந்

4 . திரும்

5 . பொன்

6 . வேய்

7 . வேர்

8 . வேல்

9 . தெவ்

10 .வீழ்

11. வேள்

‘பொருந்’ என்ற சொல்லைப் பார்த்தோமல்லவா?

இந்தச் சொல்லோடு ‘வெரிந்’ என்ற சொல்லைச் சேர்த்து ஆக மொத்தம் தமிழில் இந்த இரண்டு சொற்களில் மட்டுமே ‘ந்’ ஈறாக வரும் என்கிறது அடுத்த நூற்பா!-

“உச்ச காரமொடு நகாரஞ் சிவணும்” (மொழி . 46)

மொழி மரபு நூற்பா 42இல், ‘உசு’ , ‘முசு’ ஆகிய இரண்டு தமிழ்ச் சொற்கள் மட்டுமே ‘சு’வை ஈறாகக் கொண்டு தமிழில் வரும் எனப் பார்த்தோம் !அதைத்தான் தொல்காப்பியர் ‘உச்ச காரமொடு’ என்று பேசுகிறார் !

அஃதாவது , ‘சு’ ஈறு எப்படி இருசொற்களில் மட்டும் வருமோ,  அதைப் போலவே ‘ந்’ ஈறும் இரு சொற்களில் மட்டுந்தான் வரும் என்பது கருத்து !

இலட்சக் கணக்கான தமிழ்ச் சொற்கள் இருக்கும்போது இரண்டில்தான் இப்படி வரும் என்று அந்தக் காலத்திலேயே தொல்காப்பியரால் கூறமுடிந்துள்ளது நமக்கு வியப்பைத் தருகிறது !

பழந்தமிழ்க் கல்விமுறையின் சிறப்பை இஃது ஓதுகிறது !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by M.Jagadeesan on Sun Sep 06, 2015 5:18 pm

உசு ,முசு இவற்றுடன் " பசு " என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்ளலாமா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4636
மதிப்பீடுகள் : 2156

View user profile

Back to top Go down

Page 20 of 28 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 24 ... 28  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum