ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை)
 ayyasamy ram

இன்பமாய் இருக்கின்றனரே! (சீன நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

நிதானமாக அடித்து ஆடும் ஆஸ்திரேலியா....
 ayyasamy ram

எல்லாம் பிறர்க்காகவே!
 Dr.S.Soundarapandian

இன்னொரு திருமணம் செய்துகொள்கிறார்களே ! (சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பெண் குழந்தை ஒன்றிற்கு பிறந்து 6 நிமிடங்களில் ஆதார் எண் கிடைத்தது
 ayyasamy ram

படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

அழகென்றால் நீதான்! (நேபாளக் காதல் கவிதை)
 Dr.S.Soundarapandian

நேபாளிக் காதல் கவிதை !
 Dr.S.Soundarapandian

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 Dr.S.Soundarapandian

ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
 Dr.S.Soundarapandian

புதிரான போர் - கவிதை
 Dr.S.Soundarapandian

பேதம் இல்லாத காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

ஐந்து கடல்கள் நாடு என்பது எகிப்து - பொ.அ.தகவல்
 Dr.S.Soundarapandian

கூட்டு குடும்பம் - கவிதை
 Dr.S.Soundarapandian

மனைவியுடனே மீண்டும் ஜோடி போடும் வேலு பிரபாகரன்...
 ayyasamy ram

காயாம்பூ நிறம் கறுப்பு - பொ.அ.தகவல்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

காதல் என்பது...
 Dr.S.Soundarapandian

காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

அறிமுகம் சந்திரசேகரன்
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(462)
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 ராஜா

பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
 ayyasamy ram

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
 ayyasamy ram

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
 ayyasamy ram

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கவிதை
 Dr.S.Soundarapandian

நதிக்கரை - கவிதை
 Dr.S.Soundarapandian

மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பின்லாந்தில் எல்லாம் இருக்கிறது ! (பின்லாந்து நாட்டின் இசைப்பாடல்)
 Dr.S.Soundarapandian

மின் நூல்கள்
 aeroboy2000

ஆங்கில நாவல்கள் தமிழில்
 aeroboy2000

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 Dr.S.Soundarapandian

புகைப்படம் - கவிதை
 Dr.S.Soundarapandian

நீ என்ன தேவதை – கவிதை
 Dr.S.Soundarapandian

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
 ayyasamy ram

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தொடத் தொடத் தொல்காப்பியம்(462)

Page 22 of 29 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 25 ... 29  Next

View previous topic View next topic Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(462)

Post by Dr.S.Soundarapandian on Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம் (396)

Post by Dr.S.Soundarapandian on Fri Nov 13, 2015 6:08 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (396)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

       தமிழ் ஒலிகளின் பிறப்பை அற்புதமாகச் சொல்லிவருகிறார் தொல்காப்பியர் !

இப்போது ,  ‘க்’ , ‘ங்’ ஆகிய இரண்டு ஒலிகள் எவ்வாறு பிறக்கின்றன எனக் காட்டுகிறார்  அவர் :-
“ககார  ஙகார முதனா வண்ணம்”  (பிறப் . 7)

அஃதாவது , ‘க்’ , ‘ங்’ ஆகிய இரு மெய் (Consonant) ஒலிகளும் , நாக்கின் அடிப்பகுதியானது பின் அண்ணத்தைத் தொடுவதால் உருவாகிறது !

நாக்கின் அடிப்பகுதியைத்தான் தொல்காப்பியர் ‘முதல் நா’ என்று குறிப்பிடுகிறார் !

‘பின் அண்ணம்’ , சிலரால்  ‘கடை அண்ணம்’ எனவும் எழுதப்படும் !

பின் அண்ணம் – மொழியியலில் Velar எனப்படும்.

‘க்’ – மொழியியலில் தடை ஒலி (Stop) எனப்படுகிறது.
‘ங்’ – மொழியியலில்  மூக்கு ஒலி (Nasal) எனப்படுகிறது.

இங்கே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும் !

‘க்’கும் , ‘ங்’கும் ஒரே இடத்தில் பிறப்பதாகத் தொல்காப்பியர் எழுதியுள்ளார் !

இஃது எப்படி ?

‘க்’கும் ‘ங்’கும் ஒரே இடத்தில்தான் பிறக்கின்றன! ஒலித்துப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும் !

ஆனால் , ‘க்’கை உச்சரிக்கும் போது அந்த ஒலி வாய் வழியாகவும் , ‘ங்’ கை உச்சரிக்கும்போது அந்த ஒலி மூக்கு வழியாகவும் வெளிவரும்!

இதனால்தான் ‘க்’கை நிறுத்தொலி என்றும் , ‘ங்’கை மூக்கொலி என்று கூறுகின்றனர் !

‘க்’ – என உச்சரித்தால் , அடி நாக்கு, அடி அண்ணத்துடன் போய் ஒட்டி நிற்கிறது ! இவ்வாறு     நிற்பதால்தான் அது நிறுத்தொலி !

தொல்காப்பியர் உரைத்தது , ‘க்’கின் பிறப்பு பற்றியே !
அப்படியானால் ‘க’ ?

‘க்’ பிறக்கும் இடத்தில் தொடங்கி வேறு வழியில் முடிகிறது ! அவ்வளவுதான் ! இதைத்தான் மொழியியலில் Velar plosive என்கின்றனர் !

Plosive – வெடிப்பொலி

அஃதாவது , ‘க்’ ஆனது , ‘க’ வாக ஒலிக்கும்போது , வாய்க்காற்றில் ,ஒரு விடுதல் (Release) ஏற்படுகிறது ! இதுதான் ‘வெடிப்பு’ ! ‘வெடிப்பு’ என்றதும் ஏதோ பட்டாசு வெடி என்பதாகக் கருதக் கூடாது !

சிலர், ‘க’வை Fricative என்றும் குறித்துளர் !
Fricative – உரசொலி

நாக்கை உரசிக்கொண்டு செல்வதால் அது ‘உரசொலி’ !

‘ங’ வைப் பொறுத்தவரை , ’ங’வும் மூக்கொலிதான் , ‘ங்’கும் மூக்கொலிதான் ! இரண்டையுமே   பின்னண்ண மூக்கொலி (Velar nasal) என்றுதான் குறிப்பர்.

க் ,க , ங் , ங -  ஆகிய நான்கையும் உச்சரித்தால்  நா வளை (Vocal cord) அதிராது !
அதே நேரத்தில்   ‘ga ’ என்று உச்சரித்துப் பாருங்கள் ! நா வளை சற்று அதிரும் !

இவ்வாறு எந்த எழுத்தை உச்சரிக்கும்போது நாவளை அதிர்கிறதோ அந்த எழுத்தொலியை ‘Voiced’ என்பர் மொழியியலார் ! அதிராதவற்றை ‘Voiceless ’என்பர் !

ஆகவேதான் , க் ,க , ங் , ங -  ஆகிய நான்கையும்   ‘Voiceless sounds’ எனக் குறிக்கின்றனர் !

Voiceless consonants  - அதிர்விலா மெய்யொலிகள் .

Voiceless  consonant-vowels  - அதிர்விலா  உயிர்மெய்யொலிகள் .

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(462)

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 13, 2015 6:48 pm

க்,க,ங,ங் பற்றி பல அறிய அற்பு தகவல்கள் நன்றி ஐயா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 789

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(462)

Post by Dr.S.Soundarapandian on Fri Nov 13, 2015 7:14 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(462)

Post by சசி on Fri Nov 13, 2015 9:57 pm

அருமையான பதிவு ஐயா நன்றி
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(462)

Post by K.Senthil kumar on Fri Nov 13, 2015 10:53 pm

avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 312

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(462)

Post by Aathira on Fri Nov 13, 2015 10:57 pm

இந்தத் திரியைத் தொடர்ந்து படிக்கிறேன் என்பதையும் பயனுடைய பதிவாக எனக்கு உள்ளது என்பதையும் தெரிவிப்பதில் மகிழ்வு அடைகிறேன். இம்முயற்சிக்கு மிக்க நன்றி குறிப்பாக
Voiceless consonants - அதிர்விலா மெய்யொலிகள் .

Voiceless consonant-vowels - அதிர்விலா உயிர்மெய்யொலிகள் இது போன்ற சொல்லாட்சிகளைக் கற்கிறோம்
மீண்டும் நன்றி


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(462)

Post by Dr.S.Soundarapandian on Sat Nov 14, 2015 12:07 am

நன்றி சசி அவர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(462)

Post by Dr.S.Soundarapandian on Sat Nov 14, 2015 12:07 am

நன்றி கே.செந்தில்குமார் அவர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(462)

Post by Dr.S.Soundarapandian on Sat Nov 14, 2015 12:08 am

நன்றி ஆதிரா முல்லை அவர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (397)

Post by Dr.S.Soundarapandian on Sat Nov 14, 2015 2:20 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (397)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பிறப்பியலில் இப்போது ச் , ஞ்  ஆகிய மெய்களின் பிறப்புப் பற்றி உரைக்கிறார் தொல்காப்பியர் !:-
“சகார ஞகார மிடைநா வண்ணம்” (பிறப் . 8)

அஃதாவது -  ச் , ஞ்  ஆகிய இரு மெய்களும் இடை நாக்கு இடை அண்ணத்தைத் தொடப் பிறக்கும் !

‘இடை அண்ணம்’ என்று தொல்காப்பியர் துல்லியமாகக் கூறியதைத்தான் இன்றைய மொழியியலார் ‘ Mid palate’ என்று  கூறுகின்றனர் !

ச் , ஞ் – இரண்டு மெய்களையும் ‘Mid palatal consonants’ என எழுதுகின்றனர் !

இவற்றில் , ‘ச்’சை ,   ‘நடு அண்ண  நிறுத்தொலி ’ (‘Mid palatal stop ’) என்பர்!

‘ச’ வை ‘நடு அண்ண வெடிப்பொலி’ (‘Mid palatal plosive’) என்பர்!

‘ச்’சைக் குறில் (Short) எனவும் , ‘ச்ச்’ சை நெடில் (Long) எனவும் எழுதுவர் !

‘பசி’ என்பதில் , ஒரு ‘ச்’ வருவதையும் , ‘குச்சி’ என்பதில் இரு ‘ச்ச்’சுகள் வருவதையும் காணலாம் !

இவ்வாறே , ‘வலைஞர்’ என்பதில் ஒரு குறில் ‘ஞ்’ நிற்பதையும் , ‘மெய்ஞ்ஞானம்’ என்பதில் இரு ‘ஞ்ஞ்’ வந்து நெடில் ஆவதையும்  பார்க்கலாம் !

ச் , ஞ் – ஆகிய இரு மெய்களின் பிறப்பிடத்தையும் ஒரே இடத்தில் (Position) வைத்துத் தொல்காப்பியர் நவின்றிருப்பதையும் நோக்குக !

இப்படி ஒரே இடத்தில் இவை இரண்டும் பிறந்தாலும் , ‘ச்’ ஆனது  நிறுத்தொலியாகவும் , ‘ஞ்’ஆனது மூக்கொலியாகவும் (Nasal) வெளிவருகின்றன!

‘ஞ்’ என்று உச்சரித்தாலும் , ‘ஞ’ என்று உச்சரித்தாலும் இவை இரண்டுமே  மூக்கொலிகளாகவே வெளிவருகின்றன! எனவே இவை இரண்டுமே ‘Nasal’ என்றே குறிக்கப்பெறும் !

ச் , ஞ் – இரண்டில் , ‘ச்’ சை ஒலிக்கும்போது , குரல்நாண் அதிர்வதில்லை !  ‘ஞ்’ஞை ஒலிக்கும்போது , குரல்நாண் அதிர்கிறது !

எனவே , ‘ச்’ சை அதிர்விலா ஒலி (Voiceless sound) எனவும் , ‘ஞ்’ஞை அதிர்வுடை ஒலி (Voiced sound) எனவும் உரைக்கின்றனர் !

‘மூக்கொலி’ என்று பார்த்தோமல்லவா?

இந்த மூக்கொலி நுட்பம்தான் தமிழிலிருந்து மலையாளத்தைப் பிரித்தது !

எழுத்தொலி வாய்வழியாகப் பிறப்பதுபோன்ற ஒலிப்பு உறுப்புகள் அமையப் பெற்றவர்கள் தமிழர்கள் !
தமிழ் நாட்டிலிருந்து செல்லச் செல்ல , மலைச் சூழல்கள் காரணமாக ,மலையாள நாட்டில்  பிறந்து வளர்ந்தோர்க்கு ஒலிப்பு உறுப்புகள் சற்று வேறு வகையாக மாறுகின்றன ! இந்தக் காரணத்தால் , தமிழர்கள் ‘தேங்காய்’ என்று உச்சரித்தால் , மலையாளிகள் ‘தேங்ஙாய்’ என்று உச்சரித்தனர் !
       
        அவ்வளவுதான் மலையாள மொழி பிறந்துவிட்டது !

        தமிழிலிருந்து திராவிட மொழிகள் அனைத்தும் பிறந்த இரகசியம் (Secret of branching off Dravidian languages from Tamil) இதுதான்!

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(462)

Post by Hari Prasath on Sat Nov 14, 2015 4:48 pm

மிக அருமையான பதிவு ஐயா
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1031
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(462)

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Nov 14, 2015 8:30 pm

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 789

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(462)

Post by Dr.S.Soundarapandian on Tue Nov 17, 2015 7:05 pm

நன்றி ஹரிபிரசாத் அவர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(462)

Post by Dr.S.Soundarapandian on Tue Nov 17, 2015 7:06 pm

நன்றி பழ.முத்துராமலிங்கம் அவர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (398)

Post by Dr.S.Soundarapandian on Tue Nov 17, 2015 7:10 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (398)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது , ‘ட்’ , ‘ண்’ ஆகிய இரு எழுத்தொலிகள் பிறக்கும் வகையைத் தொல்காப்பியர் உரைக்கிறார் ! –
“டகார ணகார நுனிநா வண்ணம்” (பிறப் . 9)
‘டகாரம்  ணகாரம்’ -  ‘ட்’ , ‘ண்’ ஆகிய இரு மெய்களும் ,
‘நுனிநா  அண்ணம்’ – நுனிநாக்கானது , நுனி அண்ணத்தைத் தொடப் பிறக்கும் !

  ‘ட்’ – ஆனது , நுனிநாக்கைச் சற்று மேல் நோக்கி வளைத்து , அண்ணத்தின் நுனிப்பகுதியைத் தொட்டு நிற்கும்போது , ‘ட்’ பிறக்கும் ! வளைந்த நாக்கானது நுனி அண்ணத்தைத்  தொட்டு அங்கே சிறிது நேரம் நிற்பதை நீங்கள் உச்சரித்துத் தெரிந்துகொள்ளுங்கள் ! இதைத்தான் நிறுத்தொலி (Stop) என்கிறார்கள்!

நாக்கு வளைவதால் , ‘நாமடி ஒலி’ (Retroflex) என்று  ‘ட்’டைச் சுட்டுவர்!

‘ட்’ டை உச்சரிக்கும்போது குரல்வளையில்  அதிர்வு (Vibration) எதுவும் ஏற்படாது ! எனவே ‘ட்’டை , அதிர்விலா ஒலி (Voiceless sound) என்பர் !

முன் அண்ணத்தில் ‘ட்’ , ‘ண்’ ஆகியன பிறக்கும் எனத் தொல்காப்பியர் பொதுவாகச் சொன்னாலும் , மொழியியலார் அண்ணத்து இடத்தில் நுட்பமான வேறுபாட்டைச் சொல்லுகின்றனர் !

‘ட்’டானது பிறக்கும் இடத்தை முன் அண்ணம் (Front palate) எனவும் , ‘ண்’ணானது பிறக்கும் இடத்தை அண்ணம் (Palate) எனவும் எழுதுகிறார்கள் !

பல்லிலிருந்து மேல்நோக்கிப் போகும்போது ,
1 . பல்லை ஒட்டிய சதைப் பகுதியைப் ‘பின் பல்’ (Back dental)  எனவும் ,
2 . ‘பின் பல்’ பகுதிக்குச்  சற்று மேலே உள்ள பகுதிக்குக் , ‘கீழ்நுனி அண்ணம்’ ( Alveo palate) எனவும்,
3 . ‘கீழ்நுனி அண்ணம்’  என்ற பகுதிக்குச்  சற்று மேலே உள்ள அண்ணத்திற்கு , ‘முன் அண்ணம்’  ( Front palate) எனவும்,
4 . ‘முன் அண்ண’ப் பகுதிக்குச் சற்று மேலே உள்ள அண்ணத்தை ‘அண்ணம்’ (Palate)எனவும் ,
5 . அண்ணப் பகுதிக்கு மேலே உள்ள பகுதியை நடு அண்ணம் (Mid palate)
எனவும் ,
6 . அண்ணத்தின் பிற்பகுதியைப் (தொண்டைக் குழிக்கு மேலே உள்ள பகுதி) ‘பின் அண்ணம்’ (Velar) எனவும் குறிக்கின்றனர் !

‘ட்’டைக் குறில் (Short) என்றும் , ‘ட்ட்’டை நெடில் என்றும் (Long) கூறும் மரபும் உண்டு !

இவற்றை ஒன்றாகச் சேர்த்து, ‘ட்’டின் பிறப்பை , ‘முன் அண்ண நாமடி அதிர்விலாக் குறில் நிறுத்தொலி ’ (Front palatal voiceless retroflex short stop) என்பர் !

‘ட்ட்’டின் பிறப்பை , ‘முன் அண்ண நாமடி அதிர்விலா நெடில் நிறுத்தொலி ’ (Front palatal voiceless retroflex long stop) என்பர் !

‘ட’வின் பிறப்பை , ‘முன் அண்ண நாமடி அதிர்விலா வெடிப்பொலி ’ (Front palatal voiceless retroflex plosive) என்பர் !

‘ண்’ணைப் பொறுத்தவரை , உச்சரிக்கும்போது காற்றானது மூக்கு வழியாகச் செல்வதால் , இதனை ‘மூக்கொலி’ (Nasal) என்பர் !

‘ண்’ணின் பிறப்பிடம் , அண்ணத்தில் (Palate) ஆகும் !

‘ண்’ணை உச்சரிக்க நாக்கை மேல்நோக்கி வளைக்கவேண்டும் !

‘ண்’ணை உச்சரிக்கும்போது , குரல் நாண்  (Vocal cord)சிறிது அதிர்கிறது (vibrates)!

  ‘ண்’ணைக் குறில் என்றும் ,  ‘ண்ண்’ணை நெடில் என்றும் குறிப்பர் !

 ‘ண்’ணும் மூக்கொலிதான் , ‘ண’வும் மூக்கொலிதான் !

இவற்றை ஒன்றாக்கி , ‘ண்’ணின் பிறப்பை , ‘அண்ண நாமடி அதிர்வுடைக் குறில் மூக்கொலி’ (Palatal voiced retroflex short nasal) என்பர் !

        ‘ண்ண்’ணின் பிறப்பை , ‘அண்ண நாமடி அதிர்வுடை நெடில் மூக்கொலி’ (Palatal voiced retroflex short nasal) என்பர் !

பொதுவாக , ‘ட்’ டுக்கு மேலேதான் ‘ண்’ ஒலிக்கிறது என்பதை நாம் உச்சரித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(462)

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 17, 2015 8:22 pm

தங்களின் பதிவு அருமை நன்றி ஐயா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 789

View user profile

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (399)

Post by Dr.S.Soundarapandian on Sat Nov 28, 2015 3:32 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (399)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தொல்காப்பியத்தின் பிறப்பியலில் நிற்கிறோம் !

சற்று முன்பு , மூன்று வகையான பிறப்பு முறைகளை அவர் சொன்னார் ! –
1 . பின் நாக்குப், பின் அண்ணத்தைத் தொடும்போது பிறப்பன (க் , ங்)
2 . நடு நாக்கு, நடு அண்ணத்தைத் தொடும்போது பிறப்பன (ச் , ஞ்)
3 . நுனி நாக்கு, நுனி அண்ணத்தைத் தொடும்போது பிறப்பன (ட் , ண்)

இவற்றைத் தொகுத்து அடுத்த நூற்பாவை எழுதுகிறார் ! –
“அவ்வா றெழுத்து மூவகைப் பிறப்பின” (பிறப் . 10)

‘அவ் ஆறு எழுத்து’ – அந்த ஆறு எழுத்துகளாகிய  க் , ங் , ச் , ஞ் , ட் , ண் ஆகியன ,  
‘மூவகைப் பிறப்பின’ – மூன்று வகைப் பிறப்பால் வருவன!

மூன்று வகைப் பிறப்பை மேலே பார்த்தோம் !

இப்போது பார்த்த இந்த ஆறு வல்லெழுத்துகளும் பிறக்கும் இடத்தைத்தான் மூன்று வகை என்றார் தொல்காப்பியர் !

இவற்றுக்குக் காரணமான காற்று (வளி) எங்கிருந்து வருகின்றது ?

இதற்கான விடை நாம் பிறப்பியலில் பார்த்த முதல் நூற்பாவில் உள்ளது !

இதன் அடிப்படையில் நெஞ்சில் நிலைபெறும்  வளி, வல்லெழுத்திற்குக் காரணம்  என்பது பெறப்படும் !

இனி , த் , ந் ஆகியவற்றின் பிறப்புப்  பற்றித் தொல்காப்பியர் கூறுவதை நோக்குவோம் !-
“அண்ண நண்ணிய பன்முதன் மருங்கின்
நாநுனி  பரந்து மெய்யுற வொற்றத்
தாமினிது பிறக்குந் தகார நகாரம்”  (பிறப். 11)

‘அண்ணம்  நண்ணிய பல் முதல் மருங்கின்’ -  அண்ணத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் பல்லின் மேற்புறத்தை,
‘நா நுனி  பரந்து மெய்யுற  ஒற்றத்’ – நுனி நாக்கானதுவிரிந்து ஒற்றிநிற்க ,
‘தாம் இனிது பிறக்கும்  தகார நகாரம்’ -  ‘த்’ , ‘ந்’ ஆகியன பிறக்கும் !

மொழியியலாரின் நுணுக்க ஆய்வின்படி , இந்த இரு எழுத்துகளுமே  ‘பின் பல் ஒலி’ (Back dental) எனப்படும் ! Alveolar என்பதும் இதுவே !

‘பின் பல் ஒலி’ என்பதும் ‘அண்பல் ஒலி’ என்பதும் ஒன்றே !

‘த்’தை உச்சரிக்கும்போது குரல் நாண் அதிராது (Voiceless)!

 ‘த்’தை உச்சரிக்கும்போது ஒலியில்  ஒரு நிறுத்தம் (Stop) ஏற்படும் !

‘த’வை உச்சரிக்குபோது ஒலியில்  ஒரு விடுதல் – வெடிப்பு  (Plosive) ஏற்படும் !

‘த்’தைக் குறில் எனவும் , ‘த்த்’தை நெடில் எனவும் குறிப்பர் !

‘பதம்’ எனும்போது ‘த்’வருவதைக் காண்க!

‘புத்தகம்’ எனும்போது ‘த்த்’ வருவது காண்க!

இவற்றின் அடிப்படையில் , ‘த்’தை ,  ‘அண்பல் ஒலிப்பிலா குறில் நிறுத்தொலி’(Back dental voiceless  stop short) எனவும் ,

‘த்த்’தைப்,  ‘அண்பல் ஒலிப்பிலா நெடில் நிறுத்தொலி’(Back dental voiceless  stop long) எனவும் ,
‘த’வைப்  ‘அண்பல் ஒலிப்பிலா குறில் வெடிப்பொலி ’ (Back dental voiceless  short plosive) எனவும் ,
‘தா’வைப்  ‘அண்பல் ஒலிப்பிலா நெடில் வெடிப்பொலி ’ (Back dental voiceless long  plosive) எனவும் , குறிக்கலாம் !

‘ந்’தை உச்சரிக்கும்போது குரல் நாண் அதிரும் (Voiced)!

 ‘ந்’தை உச்சரிக்கும்போது மூக்கு ஒலி (Nasal) ஏற்படுகிறது !

‘ந’வை உச்சரிக்கும்போதும் மூக்கொலியே ஏற்படும் !

‘ந்’தைக் குறில் எனவும் , ‘ந்ந்’தை நெடில் எனவும் குறிப்பர் !

‘நம்’ எனும்போது ‘ந்’வருவதைக் காண்க! (முதலி ‘ந்’ வந்து , பிறகு ‘அ’ சேர்ந்து ‘ந்’ வருகிறது !)

‘இந்நாள்’ எனும்போது ‘ந்ந்’ வருவது காண்க!
       
        இவற்றின் அடிப்படையில் , ‘ந்’தைப் ,  ‘அண்பல் ஒலிப்புடைக்   குறில் மூக்கொலி’(Back dental voiced  nasal short) எனவும் ,

            ‘ந்ந்’தைப்,  ‘அண்பல் ஒலிப்புடை நெடில்  மூக்கொலி’(Back dental voiced   nasal long) எனவும் , கூறலாம்!
       
           த் , த , தா , தி , தீ, து , தூ , தெ , தே , தை , தொ , தோ , தௌ – ஆகிய 13 தகர எழுத்துகளுமே  ‘அண்பல் ’ (Back dental) ஒலியாகவே பிறக்கின்றன !

          ந் ,   ந , நா , நி , நீ , நு , நூ ,  நெ , நே , நை , நொ , நோ ,நௌ  - ஆகிய 13 நகர ஒலிகளுமே  அண்பல் ஒலிகளே !

இவற்றை உச்சரித்துப் பார்த்துச் சரிபார்த்துக் கொள்ளலாம் !

ஒலிப்பைப் பொறுத்தவரை எந்தப் புத்தகத்தையும் விட உங்கள் நாக்கைப் பின்பற்றுங்கள் !

நாம் முன்னே கண்டதுபோல ,தொல்காப்பியரின் கருத்துப்படி, வல்லெழுத்தாகிய  த் , த , தா, தி , தீ , து, தூ ,தெ , தே , தை , தொ , தோ , தௌ ஆகிய  13 வல்லெழுத்துகளுக்குமே காற்றானது , நெஞ்சில் நிலைகொண்ட காற்றே !

தொல்காப்பியரின் கருத்துப்படி, மெல்லெழுத்தாகிய  ந் , ந , நா, நி , நீ , நு, நூ ,நெ , நே , நை , நொ , நோ , நௌ ஆகிய  13  மெல்லெழுத்துகளுக்குமே காற்றானது , மூக்கில் உலாவும் காற்றே !

தொல்காப்பியர் கூறிய அடிப்படை இன்றும் பொருந்திவருவதை நாம் நோக்கவேண்டும் !

இதுவே தொல்காப்பியத்தின் நிலைபேற்று இரகசியம்  (Secret of perpetuality of Tholkappiyam)!

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(462)

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Nov 28, 2015 4:58 pm

த்,ந், ஒலி , இதன் உயிர் மெய் எழுத்தின் ஒலிகள் பற்றி பதிவுக்கு நன்றி ஐயா.
Dr.S.Soundarapandian wrote:
தொல்காப்பியத்தின் பிறப்பியலில் நிற்கிறோம் !
சற்று முன்பு , மூன்று வகையான பிறப்பு முறைகளை அவர் சொன்னார் ! –
1 . பின் நாக்குப், பின் அண்ணத்தைத் தொடும்போது பிறப்பன (க் , ங்)
2 . நடு நாக்கு, நடு அண்ணத்தைத் தொடும்போது பிறப்பன (ச் , ஞ்)
3 . நுனி நாக்கு, நுனி அண்ணத்தைத் தொடும்போது பிறப்பன (ட் , ண்)
[You must be registered and logged in to see this link.]
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 789

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(462)

Post by Dr.S.Soundarapandian on Sun Nov 29, 2015 10:30 am

நன்றி பழ. முத்துராமலிங்கம் அவர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (400)

Post by Dr.S.Soundarapandian on Sun Nov 29, 2015 10:33 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (400)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது ,  ‘ற்’ , ‘ன்’ ! –
“அணரி நுனிநா வண்ண மொற்ற
 றஃகா  னஃகா  னாயிரண்டும் பிறக்கும்” (பிறப் . 12)

‘அணரி நுனிநா வண்ணம்  ஒற்ற’ – மேல் நோக்கிச் சென்று , நாக்கின் நுனியானது கீழ் நுனி அண்ணத்தை ஒட்ட ,
‘றஃகான்  னஃகான்  ஆயிரண்டும் பிறக்கும்’-  ‘ற்’ , ‘ன்’ என்ற இரண்டும் பிறக்கும் !

கீழ் நுனி அண்ணம் – Alveo palate

கீழ் நுனி அண்ணத்தை நுனி நாக்கு சென்று ஒற்றப்  பிறப்பது – Alveo palatal

‘ற்’றை (itr) உச்சரிக்கும் போது , குரல் நாண் அதிர்வதில்லை !
எனவே , ‘ற்’  -  Voiceless

‘ற்’ என்று உச்சரிக்கும் போது அங்கே ஒரு ஒலி நிறுத்தம் ஏற்படுகிறது !
எனவே , ‘ற்’ – Stop

‘ற்’ றைக் குறில் எனவும் , ‘ற்றை’ நெடில் எனவும் கூறுவர் !
எனவே , ‘ற்’ – Short
‘ற்ற்’ – Long

இவற்றை ஒன்றாகச் சேர்த்தால் ‘ற்’றின் பிறப்பு – கீழ்நுனி அண்ண ஒலிப்பிலாக் குறில் நிறுத்தொலி  (Alveo palatal voiceless short stop)

‘ற்’றின் பிறப்பில் ஒரு நுணுக்கம் உள்ளது !

‘இற்’ (itr) – Stop (நிறுத்தொலி) ; அதிர்விலா ஒலி (Voiceless)
 ‘இற்ற்’ (iRR) – Trill (நடுங்கொலி) ; அதிர்வுடை ஒலி (Voiced)

‘ற்’றிலிருந்து ‘ற’வுக்குப் போகும்போது , அது வெடிப்பொலியாகிறது !

எனவே ‘ற’ - கீழ்நுனி அண்ண ஒலிப்பிலாக் குறில் வெடிப்பொலி  (Alveo palatal voiceless short  plosive)

ற , றா , றி , றீ , று , றூ , றெ , றே , றை , றொ , றோ , றௌ – 12 உயிர் மெய்களும் கீழ்நுனி அண்ண ஒலிப்பிலாக் குறில் வெடிப்பொலிகளே   (Alveo palatal voiceless   plosive)!

இப்போது ‘ன்’ !

‘ன்’னை  உச்சரிக்கும் போது , குரல் நாண் அதிர்கிறது !
எனவே , ‘ன்’  -  Voiced

‘ன்’ என்று உச்சரிக்கும் போது அங்கே ஒரு மூக்கொலி  ஏற்படுகிறது !
எனவே , ‘ன்’ – Nasal

‘ன்’னைக் குறில் எனவும் , ‘ன்னை’ நெடில் எனவும் கூறுவர் !
எனவே , ‘ன்’ – Short
‘ன்ன்’ – Long

இவற்றை ஒன்றாகச் சேர்த்தால் ‘ன்’னின் பிறப்பு – கீழ்நுனி அண்ண ஒலிப்புடைக்  குறில் மூக்கொலி  (Alveo palatal voiced short nasal)

ன , னா , னி , னீ , னு , னூ ,னெ , னே , னை , னொ , னோ , னௌ – 12 னகரங்களுமே கீழ்நுனி அண்ண ஒலிப்புடைக்   மூக்கொலிகளே   (Alveo palatal voiced  nasal).

‘ற்’ முதல் ‘றௌ’ வரையான  வல் ஒலிகளைப் பொறுத்தவரை அவற்றை உச்சரித்து வெளிவிடுவதற்கான காற்று நெஞ்சில் நின்றாடும் காற்று என்பது தொல்காப்பியர் கருத்து (பிறப் . 1)!

‘ன்’ முதல் ‘னௌ’ வரையான மெல் ஒலிகளைப் பொறுத்தவரை அவற்றை உச்சரித்து வெளிவிடுவதற்கான காற்று மூக்கில்  நின்றாடும் காற்று என்பது தொல்காப்பியர் கருத்து (பிறப் . 1)!

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(462)

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 29, 2015 11:04 am

தங்களின் உழைப்பு இந்த படைப்பில் தெரிகிறது,நன்றி ஐயா.
Dr.S.Soundarapandian wrote:தொடத் தொடத் தொல்காப்பியம் (400)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘ற்’ முதல் ‘றௌ’ வரையான  வல் ஒலிகளைப் பொறுத்தவரை அவற்றை உச்சரித்து வெளிவிடுவதற்கான காற்று நெஞ்சில் நின்றாடும் காற்று என்பது தொல்காப்பியர் கருத்து (பிறப் . 1)!
‘ன்’ முதல் ‘னௌ’ வரையான மெல் ஒலிகளைப் பொறுத்தவரை அவற்றை உச்சரித்து வெளிவிடுவதற்கான காற்று மூக்கில்  நின்றாடும் காற்று என்பது தொல்காப்பியர் கருத்து (பிறப் . 1)!
[You must be registered and logged in to see this link.]
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 789

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(462)

Post by சசி on Sun Nov 29, 2015 3:03 pm

அருமையான பதிவு. நன்கு ஆழ்ந்து படிக்க புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக தங்கள் பதிவு அமைந்து உள்ளது. நன்றி ஐயா.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(462)

Post by Dr.S.Soundarapandian on Fri Dec 11, 2015 7:01 pm

நன்றி சசி அவர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (401)

Post by Dr.S.Soundarapandian on Fri Dec 11, 2015 7:04 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (401)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பிறப்பியலில் , இப்போது தொல்காப்பியர் , ‘ர்’ , ‘ழ்’ஆகிய எழுத்தொலிகள் பிறக்கும் வகையைச் சொல்லுகிறார் !:-
“நுனிநா  வணரி  யண்ணம் வருட
ரகார ழகார மாயிரண்டும் பிறக்கும்” (பிறப் . 13)

‘நுனி நா அணரி’ – நுனி நாக்கானது மேல் நோக்கிச் சென்று ,
‘அண்ணம் வருட’ – அண்ணத்தை வருடிக் கொடுக்க,
‘ரகாரம் ழகாரம்’ – ‘ர்’ , ‘ழ்’,
‘ஆ  இரண்டும் பிறக்கும்’ – என்ற அந்த இரு எழுத்துகளும் பிறக்கும் !

நாக்கானது அண்ணத்தை வருடும்போது பிறக்கும் ஒலியை , மொழியியலில் , வருடொலி (Flap) என்பர் !

தொல்காப்பியர் இங்கே குறிக்கும் அண்ணத்தை மொழியியலில் , அண்ணம் (Palate ) என்றே சுட்டுகின்றனர் என்பது கவனிக்கத் தக்கது !

தொல்காப்பியர் கூறுவதுபோலவே இன்றைய மொழியியலாரும் , ‘ர்’ , ‘ழ்’ ஆகியவற்றை வருடொலி (Flap) என்றுதான் எழுதுகின்றனர் !

இந்த இரு எழுத்துகளையும் உச்சரித்துப் பார்த்தால் ‘வருடொலி’  என்ன என்பது உங்களுக்குப் புரியும் ; வேறொன்றுமில்லை !

‘ர்’ரின் பிறப்பைக் குறில் (Short) என்பர் !
‘ர்ர்’ரின் பிறப்பை நெடில் (Long) என்பர்!
 ‘கார்’ என்ற சொல்லில் ‘ர்’வருவதைக் காண்க!
‘சுர்ரென்று’ – என்பதில் ‘ர்ர்’ வருவதைக் காண்க!
‘ர்’ பிறக்கும்போது , குரல் நாண் அதிர்வதைக் கவனியுங்கள் !

இதனால் , ‘ர்’ரின் ஒலியை ,  ‘அண்ணஅதிர்வுடை க் குறில் வருடொலி’ (Palatal voiced flap short) எனலாம் !

இதைப் போலவே , ‘ழ்’ பிறக்கும்போதும் குரல் நாண் அதிர்கிறது (Vibrates)!
‘ழ்’ழை உச்சரிக்க வேண்டுமானால் , நாக்கை மேற்புறமாக மடிக்கவேண்டும் !இவ்வாறு மடிப்பதைத்தான் ’நாமடி’ (Retroflex ) என்கின்றனர் !

‘ழ்’ழைக் குறில் எனவும் , ‘ழ்ழ்’ழை நெடில் எனவும் கூறுவர் !
‘வாழ்க்கை’ – இங்கு ‘ழ்’ வருவதைக் காண்க !

எனவே , ‘ழ்’ழை , ’அண்ண அதிர்வுடை நாமடிக் குறில் வருடொலி ‘ (Palatal voiced retroflex  flap short) எனலாம் !
 ‘ழ்ழ்’ழை , ’அண்ண அதிர்வுடை நாமடி நெடில் வருடொலி ‘ (Palatal voiced retroflex  flap long) எனலாம் !

ர் , ர , ரா , ரி , ரீ , ரு , ரூ , ரெ , ரே , ரை , ரொ , ரோ , ரௌ  - ஆகிய 13  ரகர எழுத்துகளுமே ,  

‘அண்ணஅதிர்வுடை  வருடொலி’ (Palatal voiced flap ) யாகப் பிறக்கின்றன எனலாம் !

ழ் , ழ , ழா , ழி , ழீ , ழு , ழூ , ழெ , ழே , ழை , ழொ , ழோ , ழௌ - ஆகிய 13  ழகர எழுத்துகளுமே ,  ‘அண்ணஅதிர்வுடை  நாமடி  வருடொலி’ (Palatal  retroflex voiced flap ) யாகப் பிறக்கின்றன எனலாம் !

13  ரகரங்களுக்கும் உரிய காற்றானது மிடற்றில் (கண்டத்தில்) (Pharynx)நின்றாடும் காற்று என்பது தொல்காப்பியர் கருத்தாகும் (பிறப் . 1) !

இதைப்போன்றே 13 ழகரங்களுக்கு உரிய காற்றானது அதே மிடற்றில் நின்றாடும் காற்றே என்பதும் அவர்  கருத்தாகும் (பிறப் . 1) !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (402)

Post by Dr.S.Soundarapandian on Sun Dec 13, 2015 6:27 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (402)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது , ‘ல்’ , ‘ள்’ ஆகியவற்றின் பிறப்பு !-

“நாவிளிம்பு வீங்கி யண்பன் முதலுற
ஆவயி  னண்ண மொற்றவும் வருடவும்
லகார  ளகார மாயிரண்டும் பிறக்கும்” (பிறப் . 14)

 ‘நாவிளிம்பு வீங்கி அண்பல்  முதல்உற’ -  நுனி நாக்கின் இரு பக்கங்களும் உப்பி , கீழ் நுனி அண்ணத்தைச் சேர்ந்து ,  
‘ஆவயின்   அண்ணம் ஒற்றவும் வருடவும்’ – தொடவும் , வருடிக் கொடுக்கவும்,
‘லகாரம்   ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்’ – ‘ல்’ , ‘ள்’ஆகியன பிறக்கும் !

தொல்காப்பியர் ‘அண்பல்’ என்றதை, நாம் ‘Alveo palatal’ என்கிறோம்  !

தொல்காப்பியர் ‘ஒற்றவும்’ என்பதை, நாம் ‘Lateral continuant’ என்கிறோம் !

‘ல்’லை உச்சரிக்கும்போது , தொண்டையில் உள்ள குரல் நாண்(Vocal cord) அதிர்கிறது ! எனவே , ‘ல்’லை ‘அதிர்வுடை ஒலி’ (Voiced) என்கிறோம் !

‘ல்’ லைக் குறில் என்றும் , ‘ல்ல்’லை நெடில் என்றும் கூறுவர் !

வலை – இதில் உள்ளது குறில் ‘ல்’ !

பல்லி – இதில் உள்ளது நெடில் ‘ல்ல்’ !

இவற்றைத் தொகுத்து , ‘ல்’லின் பிறப்பை ,   அண்பல் அதிர்வுடைக் குறில் தொடர் மருங்கொலி (Alveo palatal voiced short lateral continuant) எனலாம் !

‘ல்ல்’லின் பிறப்பை -    அண்பல் அதிர்வுடைக் நெடில் தொடர் மருங்கொலி (Alveo palatal voiced long lateral continuant) எனலாம் !

ல் , ல , லா ,லி ,லீ , லு , லூ , லெ , லே , லை , லொ , லோ , லௌ – ஆகிய 13 எழுத்துகளுமே அண்பல் அதிர்வுடைக்  தொடர் மருங்கொலியாகவே (Alveo palatal voiced  lateral continuant) பிறக்கின்றன எனலாம் !

தொல்காப்பியர் ‘வருடவும்’ என்பதை, நாம் ‘Flap’ என்கிறோம் !

‘ள்’ளை உச்சரிக்கும்போது , தொண்டையில் உள்ள குரல் நாண்(Vocal cord) அதிர்கிறது ! எனவே , ‘ள்’ளை ‘அதிர்வுடை ஒலி’ (Voiced) என்கிறோம் !

‘ள்’ளை உச்சரிக்கும்போது , நாவானது மேல் நோக்கி மடிகிறது !

எனவே , ‘ள்’ளை ‘நாமடி ஒலி’ (Retroflex sound) என்பர் !

‘ள்’ளைக் குறில் என்றும் , ‘ள்ளை’ளை நெடில் என்றும் கூறுவர் !

வளை – இதில் உள்ளது குறில் ‘ள்’ !

பள்ளி – இதில் உள்ளது நெடில் ‘ள்ள்’ !

இவற்றைத் தொகுத்து , ‘ள்’ளின் பிறப்பை ,   அண்பல் அதிர்வுடை நாமடிக் குறில் வருடொலி (Alveo palatal  retroflex voiced short flap) எனலாம் !

‘ள்ள்’ளின் பிறப்பை -    அண்பல் அதிர்வுடை நாமடி  நெடில்  வருடொலி (Alveo palatal retroflex voiced long flap) எனலாம் !

ள் , ள , ளா ,ளி ,ளீ , ளு ,ளூ , ளெ , ளே , ளை , ளொ , ளோ , ளௌ – ஆகிய 13 எழுத்துகளுமே அண்பல் அதிர்வுடை  வருடொலியாகவே (Alveo palatal retroflex  voiced  flap) பிறக்கின்றன எனலாம் !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Page 22 of 29 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 25 ... 29  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum