ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போடி, நீ தான் லூசு...!
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 T.N.Balasubramanian

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Page 3 of 28 Previous  1, 2, 3, 4 ... 15 ... 28  Next

View previous topic View next topic Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by Dr.S.Soundarapandian on Mon Dec 31, 2012 10:14 am

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 2:18 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம் (40)

Post by Dr.S.Soundarapandian on Sun Feb 17, 2013 7:10 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (40)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘வினைத் தொகை’ என்றால் நமக்குத் தெரியும் !

பள்ளி நாட்களிலிருந்து இதைச் சொல்லித் தந்திருக்கிறார்கள் ! எடுத்துக்காட்டுக்கு ‘ஊறுகாய்’ என்பதைத்தான் தொட்டுக்கொள்வார்கள் !

ஆனால் ‘பெயர்த் தொகை’ எனவும் ஒன்று இருப்பதை இப்போது காணலாம்!

தொல்காப்பியர் , ‘பெயரினாகிய தொகை’ என்று ‘பெயர்த் தொகை’ பற்றிக் கூறியுள்ளார்! :-

“பெயரி னாகிய தொகையுமா ருளவே
அவ்வும் உரிய அப்பா லான ” (வேற்றுமையியல் 6)

அஃதாவது , தனிப் பெயர்ச் சொல்லைப் போலவே ,கூட்டுப் பெயர்ச் சொற்களும் வேற்றுமை ஏற்கும் என்பதே இதன் கருத்து !

1.‘யானையை விரட்டினர்’ ; ‘யானை’ – தனிப் பெயர் .
‘யானைத் தந்தத்தை அறுத்தனர்’ ; ‘யானைத் தந்தம்’ –பெயர்த் தொகை !


2. ‘கையால் தடவினாள்’ ; ‘கை’ – தனிப் பெயர் .
‘கை விரலால் தடவினாள்’ ; ‘கை விரல்’ – பெயர்த் தொகை !

3.‘வீட்டுக்குத் தந்தான்’ ; ‘வீடு’ – தனிப் பெயர் .
‘வீட்டுச் செலவுக்குத் தந்தான்’ ; ‘வீட்டுச் செலவு’- பெயர்த் தொகை !

4.‘நாட்டின் பாதுகாப்பு’ ; ‘நாடு’ – தனிப் பெயர் .
‘நாட்டு மக்களின் பாதுகாப்பு’ ; ‘நாட்டு மக்கள்’ – பெயர்த் தொகை !

இவ்வாறு எட்டு வேற்றுமைகளுக்கும் ‘பெயர்த் தொகை ’ பொருந்திவரக் காணலாம் !

பெயர்த் தொகையையும் பிற இலக்கணக் கூறுகளையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது !

காட்டாக ,

‘முகப் பளிங்கு’ – உருவகம் .

இச் சொல்லைப் ‘பெயர்த் தொகை’ எனவும் கூறலாம் !

“என்ன சார் ? உருவகம் என்கிறீர்கள் ; பெயர்த் தொகை என்கிறீர்கள் ; ஏதாவது ஒன்றைச் சொல்லுங்கள்!” – என்னாதீர் !

ஒரு சொல்லுக்கு ஓர் இலக்கணக் குறிப்புதான் இருக்கும் என எண்ண வேண்டாம் ! ஒன்றுக்கு மேற்பட்டும் இலக்கணக் குறிப்புகளும் இருக்கலாம் !

மேல் நூற்பாவில் , ‘அவ்வும் உரிய ’ என்று தொல்காப்பியர் எழுதியுள்ளார் !

அவ்வும் = அவையும்

‘அ’ என்ற ‘ஓரெழுத்து ஒரு மொழி’யை ‘அவை’ என்ற பொருள் தோன்ற ஆண்டுள்ளமை நோக்கத் தக்கது !

அ + மூன்றும் = அம்மூன்றும் =அவை மூன்றும் ; இங்கு ‘அ’ என்பதற்கு ‘அவை’ என்ற பொருள் வந்துள்ளது காண்க !

‘ஓரெழுத்து ஒரு மொழி’கள்தான் தமிழின் தோற்றச் சொற்கள் (The very ancient Tamil words)!

......................
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (33)

Post by Dr.S.Soundarapandian on Sun Feb 17, 2013 7:22 am

ச.சந்திரசேகரன் , ஆதிரா ஆகியோர்க்கு என் மனமார்ந்த நன்றி !

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (41)

Post by Dr.S.Soundarapandian on Mon Feb 18, 2013 9:51 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (41)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘எழுவாய் ஏற்கும் பயனிலைகள் ’ என்று தொல்காப்பியர் ஒரு பட்டியலைத் தருகிறார் ! :-

“பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்
வினைநிலை உரைத்தல் வினாவிற்கு ஏற்றல்
பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென்று
அன்றி அனைத்தும் பெயர்ப்பய னிலையே” (வேற்றுமையியல் 5)

‘பயனிலை’ (Predicate) என்பது வேறு ஒன்றும் இல்லை ! ‘பெயர் பற்றியது’தான் ! பெயரின் செயற்பாட்டை அறியப் பயன்படுவதால் அது ‘பயனிலை’ !

பயன் + நிலை = பயனிலை

மேலை நூற்பாவில் தொல்காப்பியர் தந்த பட்டியல் :-

1. பொருண்மை சுட்டல் = ‘நகை உள்ளது’

2. வியங்கொள வருதல் = ‘பெண்ணே வருக’

3. வினைநிலை உரைத்தல் = ‘குதிரை ஓடுகிறது’

4. வினாவிற்கு ஏற்றல் = ‘அங்கே யார் ?’

5. பண்புகொள வருதல் = ‘முகம் சிவப்பு’

6. பெயர்கொள வருதல் = ‘அவள் மைதிலி ’

‘பெயர்ப் பயனிலையே’ என்று தொல்காப்பியர் பெயரின் ஆறுவகைப் பயனிலைகளைக் கூறப், பின் வந்த இலக்கணிகள் ‘பெயர்ப் பயனிலை’ என்று ‘பெயர்கொள வரும் ’பயனிலையை மட்டும் குறிக்கலாயினர் !

மேலை எடுத்துக் காட்டுகளில் ‘மைதிலி’, ‘ பெயர்ப் பயனிலை ’ ஆகும் !

தொல்காப்பியர் வரைந்த இப் பட்டியலின் மகத்துவம் யாதெனில் , இந்த ஆறைத் தவிர நம்மால் வேறு ஒரு பயனிலை வகையைக் கூற முடியாது !

அது மட்டுமல்ல !

உலகத்தில் எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் அதன் ‘பயனிலை’ மேல் ஆறு வகைகளுக்குள்தான் அடங்கிவரும் !......................
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by ச. சந்திரசேகரன் on Mon Feb 18, 2013 11:29 am

40. பெயர்த் தொகை -
41. பயனிலை
என் தமிழாசிரியர் என் நினைவில் வந்ததுபோல்.
மிக உபயோகமான பாடம்.
நன்றிகள் ஐயா.
தொடருங்கள். தொடர்கிறோம்.
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (42)

Post by Dr.S.Soundarapandian on Wed Feb 20, 2013 12:17 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (42)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

மலைக்கும் ,அதனைச் சுற்றியுள்ள மேட்டுப் பாங்கான பகுதிக்கும் ‘குறிஞ்சி’ என்று பெயர் !

இக் குறிஞ்சி நிலத்தில் உள்ள செழிப்பான புல்லைத் தின்று பசுக்கள் கொழுகொழு என்று வளர்ந்தன !

அப் பசுக்கள் ,குறிஞ்சியை அடுத்த மருத நிலத்து அரசன் கண்ணை உறுத்தின !

விடுவானா?

அந்த வேற்றரசன், குறிஞ்சி சென்று பசுக்களைக் கவர்ந்து செல்வதைக் காட்சிவாரியாகத் (Scene by scene) தொல்காப்பியர் தீட்டுகிறார் ! :-

1. ‘படை இயங்கு அரவம்’ – பசுக்களைக் கவர்ந்து வருவதற்காகப் படை ஒன்று புறப்படுகிறது ;அதன் சத்தம் (‘அரவம்’) மட்டும் ஆங்காங்கே கேட்கிறது ; ஆனால் ஆட்கள் யாரும் பேசவில்லை !

இங்கே ‘படை’ என்பது 4000,5000 பேர்கள் கொண்ட போர்ப் படை என எண்ணக் கூடாது ! இருபது பேர்கள் சேர்ந்தாலும் அது ‘படை’தான் !

‘அரவம்’ என்பதற்கு ஆரவாரம் எனப் பொருள் எழுதியுள்ளனர் ; அது தவறு ! பசுக்களை யாரும் அறியாமல் கவர்ந்துசெல்லச் செல்பவர்கள் ஆரவாரிக்க மாட்டார்கள்! மேலும் ‘அர ’ என்ற அடிக்கு ‘மெல்லோசை’ எனும் பொருள் இருப்பதை ‘அரசல் புரசலாக’ என்ற தொடர் காட்டும் !

2. ‘பாக்கத்து விரிச்சி’ – படை புறப்பட்டுச் செல்லும்போதும் , இடையில் தங்கும்போதும் ஆங்காங்கே நற்சொல் (‘விரிச்சி’) கேட்பதைக் கவனித்துக்கொண்டு ,அதனால் ஊக்கம் பெறுகிறார்கள் !

‘பாக்கம்’ – இங்கே கடற்கரைப் பட்டினம் அல்ல ! ‘பக்கம்’ என்பதே ‘பாக்கம்’ ஆனது ! இலக்கணத்தில் இதனை ‘ஆதி நீழல்’ என்பார்கள்.

‘விரிச்சி’ ஆள் முகம் தெரியாமல் பக்கத்திலிருந்து சொல் மட்டும் காதில் படல் !

அரிய சொல் இது! சிலர், ‘குயில்’ என்று பொருள் கூறியுளர் ! அது பொருந்தாது !

‘வி’ என்ற தமிழ் வேருக்குக் ‘கேள்வி’ (Hearing) என்ற பொருள் உண்டு ! மிகப் பழைய இத் தமிழ் வேர், தெலுங்கு சென்று அங்கு காப்பாற்றப்படுகிறது ! ‘வினிக்கிடி’ என்றால் தெலுங்கில் ‘கேள்வி’ என்பதே பொருள் !

3. ‘புடை கெடப் போகி’ – பகைவர் எவரும் அறியாவாறு மெல்லச் செல்கிறார்கள் !

4. ‘புடை கெட ஒற்றினாகிய வேயே’ – பகைவர்கள் ஒற்றர்கள் மூலம் அறிந்தால் அதனை முறியடிக்கும் வகையில் தம் ஒற்றர் மூலம் அறிந்து அதற்கேற்பச் செல்கின்றனர் !

புடை கெட = ஆரவார மின்றி

‘புடை’க்கு ஆரவாரம் என்ற பொருள் இருப்பதைக் கலித்தொகையில் (98) காணலாம் !

வேய் = ஒற்றரால் செய்தி அறிதல் ; மதுரைக் காஞ்சியில் (642) இப் பொருள் உள்ளது !

5. ‘வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்திறை’ – ஒற்றரால் அனைத்தையும் அறிந்தபின், பகைவர் நாட்டு எல்லையில் தங்குகின்றனர் !

புறத்திறை – ஊர் எல்லையில் தங்குதல் .

இறை = இறு + ஐ ; இறுதல் – இறங்குதல் = முகாமிடுதல் .

6. ‘முற்றிய ஊர் கொலை’ – பசுக்களைச் சுற்றி நின்றுகொண்டு மாட்டுக் காவலர்களை விரட்டி அடித்தும் ,கொல்லவும் செய்கிறார்கள் !

7. ‘ஆகோள்’ – பசுக்களைக் கைப்பற்றுகிறார்கள்! .

கொள்’ என்ற வினையே ‘கோள்’ எனப் பெயர்ச்சொல் ஆயிற்று ! மொழியியலில் (Linguistics) , இதனை ‘Transformation of verb into noun’ என்பார்கள் .

8. ‘பூசன் மாற்றே’ – பசுக்களைக் கவரும்போது எதிரிகள் வாளா இருப்பரா ? பதிலுக்கு அவர்கள் அடித்து விரட்டும்போது அவர்களோடு இவர்கள் மோதுகிறார்கள் !

பூசல் + மாற்று = பூசன் மாற்று ; மாற்று = பதிலடி கொடுத்தல்.

9. ‘நோயின்றி உய்த்தல்’ – ஒருவழியாகப் பசுக்களைக் கவர்ந்தாயிற்று ! பிறகு , அப் பசுக்களுக்குத் துன்பம் வராமல் ஓட்டிக்கொண்டு ஊர் திரும்புகிறார்கள் !

உய்த்தல் = சேர்த்தல்

10. ‘நுவலுழித் தோற்றம்’ – ஏராளமான பசுக்களைத் தம் ஊருக்கு ஓட்டி வருகையில் ஊர் மக்கள் திரண்டு அவர்களை வரவேற்கின்றனர் ! அந்த வரவேற்பை மாடுகளைக் கொணர்ந்தோர் பெறுகிறார்கள் !

நுவலுதல் = பாராட்டிக் கூறுதல் .

தோற்றம் = தோன்றுதல் – காணப்படுதல்- சென்று நிற்றல்.

11. ‘தந்து நிறை’ – பிடித்து வந்த பசுக்களை ஓரிடத்தில் அடைத்து வைக்கிறார்கள்!.

நிறை = நிறுத்துதல் .

12. ‘பாதீடு’ – கவர்ந்த பசுக்களை வீரர்கள் மற்றும் படை தொடர்பானவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார்கள் !

பா =பகுப்பு ; கீரைப் ‘பாத்தி’யில் இச் சொல் முளைக்கக் காணலாம் !

பா + த் + ஈடு = பாதீடு ; பா- வேர்ச் சொல் , த்- எழுத்துப் பேறு , ஈடு – சாரியை ; ‘குறுக்கீடு’ என்பதில் இவ்வீற்றைக் காணலாம் !

13. ‘உண்டாட்டு’ – நினைத்தது முடிந்தது ! பிறகென்ன ? வயிறார உண்டு ,கள் குடித்து, ஆடத் தொடங்குகிறார்கள்!

உண்டு + ஆட்டு = உண்டாட்டு.

‘ஆடு’ எனும் வினை ,‘ஆட்டு’ என்ற பெயராயிற்று ! ‘ஆட்டு’ என்பது இங்கு ஏவல் வினை அல்ல ; பெயர்ச் சொல்லாக நிற்கிறது !

14. ‘கொடை’ – இறுதியில் , ஊர் மக்களுக்கு ஆக்களைத் தானமாக அரசன் அளிக்கிறான் !

இவ்வாறு 14 காட்சிகளை நம் மனக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் தொல்காப்பியர் !

ஏன் அவர் இவ்வாறு விளக்கவேண்டும் ?

ஏனென்றால் ‘ஊர்’என்பது இப்போதைய நகரம் (Town) என்பது போல அன்று இல்லை ! வட்டம் மிகக் குறுகியது ! எனவே, ஊர் முழுவதுமே பசுக்கள் கவர்ந்ததில் மகிழ்ச்சி கொள்ளும்! அதைப் போலவே பசுக்களை இழந்த ஊர் முழுவதுமே ஆத்திரத்தில் குமுறும் ! எனவே , ‘ஆநிரை கோடல் ’ என்பது ஒரு சமுதாயப் பதிவாகிவிடுகிறது ! தொல்காப்பியர் பழந்தமிழ்ச் சமுதாயத்தை அணு அணுவாகக் காட்டுதலை நோக்கமாகக் கொண்டவர் !இதுவே அவரது மேலை ஓவியத்திற்குக் காரணம் !

தொல்காப்பியரின் இந்த ஓவியத்தை அவர் மொழியிலேயே காண வேண்டுமா? :-
“படைஇயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி
புடைகெடப் போகிய செலவே புடைகெட
ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம்
முற்றி னாகிய புறத்திறை முற்றிய
ஊர்கொலை ஆகோள் பூசன் மாற்றே
நோயின்று உய்த்தல் நுவலுழித் தோற்றம்
தந்துநிறை பாதீடு உண்டாட்டுக் கொடையென
வந்த ஈரேழ் வகையிற் றாகும்” (புறத்திணையியல் 3)
......................
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (43)

Post by Dr.S.Soundarapandian on Thu Feb 21, 2013 11:24 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (43)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘வீரம் செறிந்த இனம் தமிழினம் ’ என்று அடிக்கடி சொல்கிறோமே அதற்கு ஆதாரமான தொல்காப்பிய நூற்பாவை (புறத்திணையியல் 17) வருமாறு விளக்கலாம் ! :-

1.வேற் படையுடன் போரிட்டான் ஒரு வேந்தன் ! அவனைச் சூழ்ந்துகொண்டன எதிரியின் காலாட்படை (‘தானை’) ,யானைப் படை , குதிரைப் படை மூன்றும் !ஆனால் அவர்களிடமிருந்து தப்பித்துக்கொண்டு ஒரே ஒரு வீரன் மட்டும் வெளியில் வந்து முப்படை வீரர்களையும் வெட்டிச் சாய்ப்பான் !

இதுவே ‘தார் நிலை’ !

2. இரண்டு பக்கத்துப் போர்த் தலைவர்களும் மாண்டுபோயினர்!

இது ‘தபுதிப் பக்கம்’ !

3. தாக்குப் பிடிக்க முடியாமல் சிதறிப் பின்வாங்குகிறது தன் படை ! அந்த நிலையில் ஒரே ஒரு வீரன் மட்டும் பின்வாங்கும் படை நடுவே புகுந்துபோய் எதிரிகளை வெட்டித் தள்ளினான் ! அவனைப் பதிலுக்கு வெட்ட வந்தது எதிரிப் படை ! அந்த எதிரிப் படைக்குப் பெயர் ‘கூழைப் படை’! அக் கூழைப் படையையும் சாய்த்தான் அந்த வீரன் !

இதுதான் ‘எருமை நிலை’!

4. ஒருவனின் உடலில் வேல் பாய்ந்துவிட்டது ! ஆனால் என்ன செய்தான் ? அந்த வேலைத் தானே பிடுங்கிவிட்டுத் தன் உடல் வலிமையால் போரிட்டான் !

இதுதான் ‘பாழி நிலை’!

5. பிளிறிக்கொண்டு ஓடிவரும் ஆண் யானைகளை (களிறுகளை) வெட்டி வீழ்த்தினர் வீரர்கள் !

இதுதான் ‘களிறு எதிர்ந்தோர் பாடு’!

6. போர்க்களத்தில் தனது யானையுடன் தானும் சாய்ந்தான் ஒரு வேந்தன்!அப்போது அவனை வீழ்த்திய வாள் வீரர்கள் ஆடிப் பாடினர் !

இதுதான் ‘அமலை ஆட்டம்’ !

7.போரில் இவனை அவன் வெட்ட , அவனை இவன் வெட்ட என்று தொடர்ந்து போரிட்டதில் கடைசியில் ஒருவருமே மிஞ்சவில்லை !

இதுதான் ‘தொகை நிலை’!

8. போரில் தனது மன்னன் இறந்துவிட்டான் ! அதனைப் பார்த்த ஒரு வீரன் பொங்கினான் ! எதிரிப் படைக்குள் புகுந்து போரிட்டான் ஆவேசத்துடன் !

இதுதான் ‘புகழ்மிகு நிலை’ !

9. ஒரு வீரனின் உக்கிரப் போரால் , எதிரிப் படை முழுவதுமே பின்வாங்கி ஓடியது ! அப்பொது , அவ் வெற்றி வீரன் தன் வாளைச் சுழற்றி ஆடலானான் !

இதுவே நூழிலாட்டு !

இவை தும்பைத் திணைப் போர்க் காட்சிகள் !

ஏன் இவ்வளவு கொடூரம் ?

பிறரது பொருளைக் கைப்பற்றுவதற்கான போரல்ல தும்பைப் போர் !

“நீ பெரியவனா ? நான் பெரியவனா?” என்று வீரம் பேசும் போர் !

இங்கே நாம் ஒன்றைக் காணவேண்டும் ! ‘எதிரிப் படை’ என்று நாம் பேசுகிறோமே ,அவர்களும் தமிழர்கள்தான் ! அவர்கள் சீனர்கள் அல்லர் ! நாம் வசதியாக வெற்றிப் பக்கத்தை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் உணர்ந்தால் நல்லது !......................
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by சதாசிவம் on Sat Feb 23, 2013 5:25 am

தங்களின் சிறந்த தமிழ்பணிக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் அய்யா, தமிழர்கள் அறிய வேண்டிய அற்புத நூலை எளிமையாக தொடர்ந்து வழங்குவதற்கு மிக்க நன்றி...

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
தொடருங்கள்,,,,

தெள்தமிழ் பேசும் தொல்காவியத்தை
நல்வடிவில் வழங்கும் நாவலரை
பல்முறை பாராட்டும் பாருலகம்
கல்வடிவும் கறையும் காவியத்தமிழும்
வில்லும் துள்ளும்மீனும் வீர்புலியும்
நல்லாட்சி செய்த நல்லோர் நாடிது
சொல்லாட்சி செந்தமிழில் சோர்விலா
வல்லமை பெருக வழங்கும் வான்புகழ்
தொல்காப்பியச் சோலையில் தெள்ளமுத
நற்சுவையை நாளும் பருகுவோம்
சொற்சுவை நாவலர் வாழ்க பல்லாண்டு


avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (44)

Post by Dr.S.Soundarapandian on Sat Feb 23, 2013 5:58 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (44)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

தொல்காப்பியர் வஞ்சிப் போர்க்களக் காட்சிகளைப் பதின்மூன்று துறைகளாகத் தருகிறார் ! (துறை - பிரிவு)

1. ‘இயங்கு படை அரவம்’ – வலுவான பெரும் படை புறப்படலும் அதனால் எழும் ஓசையும் !

இயங்கு படை – ‘முன் பின்னாக மாறித் தொக்கது’ ; ‘படை இயங்கு’ என்று படிக்க வேண்டும் !

2. ‘எரி பரந்து எடுத்தல் ’ – பகைவரின் ஊர்களைத் தீ வைத்து எரித்தல் !

3.‘வயங்கல் எய்திய பெருமை’ – தனக்குத் துணையாக வரும் வேறு அரசர்களால் போரிடும் அரசன் பெருமை கொள்ளல் !

4.‘கொடுத்தல் எய்திய கொடைமை’ – வீரர்களுக்கு அரசன் பலவிதமான கொடைகளைத் தரல் !

5. ‘அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றம்’ – பகைவரை வென்று அழித்த வெற்றியில் மகிழ்தல் !

6. ‘மாராயம் பெற்ற நெடுமொழி’ – அரசன் வீரர்களுக்குப் பட்டங்கள் தந்து சிறப்புச் செய்தல் !

நெடு மொழி – புகழ் மொழி (இதுவே ‘மீக்கூற்று’ )

மாராயம் – சிறப்பு

இத் தொல்காப்பியச் சொல்தான் இன்றும் ‘சாராயம் குடிக்கும்போது மாராயமா ?’ என்ற பழமொழியில் வழங்குகிறது !

7. ‘ பொருளின்று உய்த்த பேராண் பக்கம் ’ – பகைவரை ஒரு பொருட்டாக நினையாது அவர்களை அடக்கிய பேராண்மை பேசப்படுதல் !

8. வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை – வெள்ளத்தைத் தடுக்கும் கல்லணை போல தனி ஒருவனாக நின்று பகைப் படையைத் தடுத்தல் !

9. ‘பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை’ - படைஞர்களுக்குப் பேருணவு வழங்குதல் !
மகா பாரதப் போரில் வீரர்களுக்குப் பெருஞ்சோறு அளித்தவன் ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் எனும் தமிழ் மன்னன்’ என்று எழுதியுள்ளார்கள் !

இதனைக் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்; மிகப் பெரிய ஆய்வுகளுக்கு இஃது அடித்தளமாகும் !

10 . ‘வென்றோர் விளக்கம் ’- வெற்றி பெற்ற வீரர்கள் ஒளியுடன் கொண்டாடுதல் !

இதுவே வாண வேடிக்கை , ‘பட்டாசு’ வெடித்தலுக்கு தொன்மைச் சான்று !

11. ‘தோற்றோர் தேய்வு ’- தோற்றவர்கள் களையிழந்து சோர்தல் !

12. ‘குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளை ’ – போர் வெற்றியைக் கொண்டாடும் ‘வள்ளைப் பாட்டு’ப் பாடுதல் !

வள்ளைப் பாட்டு – உலக்கைப் பாட்டு ; உரல் பாட்டு .

13. ‘அழிபடை தட்டோர் தழிஞ்சி’ – பகைவர் ஏவிய ஆயுதங்களைத் தடுத்ததால் புண்பட்டுப்போன வீரர்களைப் பார்த்து நலம் கேட்டல் !

தொல்காப்பியர் கூறிய வரிசையில் மேலைத் துறைகள் தரப்பட்டுள்ளன !

இவற்றைக் கொண்டு வஞ்சிப்போர் எப்படியெல்லாம் நடந்திருக்கும் என்று நாம்தான் ஊகித்துக் கொள்ளவேண்டும் ; ‘நூற்பா’ என்பதே சுருக்கமாகக் கூறுவதுதான் ! :-

“இயங்குபடை அரவம் எரிபரந்து எடுத்தல்
வயங்கல் எய்திய பெருமை யானும்
கொடுத்தல் எய்திய கொடைமை யானும்
அடுத்தூர்ந்து அட்ட கொற்றத் தானும்
மாராயம் பெற்ற நெடுமொழி யானும்
பொருளின்று உய்த்த பேராண் பக்கமும்
வருவிசைப் புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமை யானும்
பிண்டம் மேய பெருஞ் சோற்று நிலையும்
வென்றோர் விளக்கமும் தோற்றோர் தேய்வும்
குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்
அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக்
கழிபெருஞ் சிறப்பின் துறைபதின் மூன்றே ”!
(புறத்திணையியல் 7)

சரி ! எதற்காக வஞ்சிப் போராம் ?

இதற்கு முந்தைய நூற்பாவில் (புறத்திணையியல் 6) காரணம் கூறுகிறார் !

வேறு ஒன்றுமில்லையாம் ! மண்ணாசைதானாம் ! ( ‘எஞ்சா மண்ணசை’ ; மண் + நசை = மண்ணசை ; நசை – விருப்பம்; இச் சொல்தான் தெலுங்கில் ‘நச்சினாடு’, ‘நச்சிந்தி’ என்றெல்லாம் வழங்குகிறது !)

சரி! ஏன் மண்ணாசை ?

வரலாற்று முறையில் ஆராய வேண்டும் !

அரசனின் தனிப்பட்ட பேராசை ஒரு காரணம் !

மற்றொரு காரணம் – அவனது பெருகிவரும் மக்களுக்குக் கூடுதல் நிலப்பரப்பு தேவைப் படுவது !

ஏற்கனவே ஒரு குட்டையில் மீன் பிடித்துவந்தால் ,குடும்பம் பல பெருகும்போது , அந்தக் குட்டை போதாது ! எனவே பக்கத்து ஊர் மீது கண் போகிறது !

எது காரணமோ, போரில் அடிபட்டவனுக்கல்லவா தெரியும் ,அவனுக்கு வலிக்கும் வலி !

> > >
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (40)

Post by Dr.S.Soundarapandian on Sat Feb 23, 2013 6:22 am

சதாசிவம் அவர்களுக்கு என் நன்றி ! தொல்காப்பியம் உங்களைத் தொட அது ஒரு கவிதையைத் தொட்டிருக்கிறது ! மிக்க மகிழ்ச்சி,தங்களின் கவிதைப் பரிசிற்கு !

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (45)

Post by Dr.S.Soundarapandian on Sun Feb 24, 2013 7:08 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (45)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

இது தொல்காப்பியர் காட்டும் கோட்டை மதிற் போர் ! எட்டு நிலைகளை அவர் சுட்டுகிறார் ! :-

1. ‘கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம்’ – பகைவர் நாட்டைக் கவர உறுதி பூணும் செருக்கு !

கொள்ளார் – பகைவர் ; ‘கேளார்’ என்பதுபோல இச் சொல் அமைந்துள்ளது.

‘அவர்கள் இருவருக்கும் கொள்ளாது’ எனில் , ‘அவர்கள் இருவருக்கும் ஆகாது’ என்பது பொருள் !

‘தேஎம்’ –என்ற சொல் நோக்கற் பாலது. ‘தேயம்’ , ‘தேசம்’ முதலிய சொற்களுக்கு எல்லாம் ‘தே’ என்பதே வேர் (Root) என்று நமக்கு அறிவிக்கும் இடம் இது !

‘ குறித்த கொற்றம்’ – என்பதை நம் நடையில் கூறுவதானால் , ‘கங்கணம் கட்டுதல்’ எனலாம்!

‘கங்கணம் கட்டுதல்’ என்பதே ‘சங்கல்பம்’ என்று வடமொழிக்குப் போனது ! மூலம் , தமிழே !

2. ‘உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு’ – நினைத்ததை நினைத்தவாறு செய்து முடிக்கும் அரசனது பெருமை கூறுதல் !


3. ‘தொல்லெயிற்று இவர்தல்’ – பழைமையான சுவற்றின் மீது ஏறுதல்!

4. ‘தோலின் பெருக்கம்’ – சுவர் மீதிருந்து வீரர்கள் எய்யும் அம்புகள் முதலியவற்றைத் தடுக்கும் தோற்படை !

தோல் - கேடயம்

5. ‘அகத்தோன் செல்வம்’ – கோட்டைக்குள் இருக்கும் அரசனது செல்வ வளம் !

இதனைக் கேள்விப்பட்டுத்தான் போருக்கு வேற்றரசன் வருவான் ! இந்தியாவின் செல்வ வளத்தைக் கேள்விப்பட்டுத்தான் வெளிநாட்டவர்கள் இந்தியா மீது பலமுறை படையெடுத்தனர் என்பது வரலாறு !

6. ‘ முரணிய புறத்தோன் அணங்கிய பக்கம் ’ – போருக்கு வந்த புற அரசனைக், கோட்டைக்குள் இருக்கும் அரசன் எதிர்த்துத் தாக்குதல் !

அணங்கிய - வருத்திய

7. ‘ஒரு தான் மண்டிய குறுமை’ - புற அரசன் தன்னந் தனியாகத் தான் ஒருவனே சென்று போரிடல் !

8. ‘உடன்றோர் வருபகை பேணார் ஆர் எயில்’- போருக்கு வந்துள்ள புற அரசனை எதிர்கொள்ளத் தக்க மதிலின் சிறப்பு !

உடன்றோர் – பகை கொண்டோர்.

ஆர் எயில் –அரிய மதிற் சுவர்.

எட்டுதல் இன்மையைத் தருதலால் ‘எயில் ’ஆயிற்று !

எ + ய் +இல் = எயில் ; எ – இவ்வேர்ச் சொல் ‘எட்டுதல்’ எனும் பொருள் கொண்டது ! இதனைக் கொண்டு பிறந்ததே ‘ஏணி’ !
ய் – உடம்படு மெய் ; இல் – பண்பு விகுதி .

தொல்காப்பியர் மேலே பேசிய மதிலானது ‘கற்கோட்டைச் சுவர்தான்’ என எண்ண முடியாது ! மண் கோட்டைச் சுவராகவே இருக்கவேண்டும் ! கி.மு.ஆயிரத்தில் மண் கோட்டைகளே இருந்திருக்கும் என எண்ணலாம் ! கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையே மண் கோட்டைதானே ?

மேலே பார்த்த உழிஞைப் போர் மருத நிலத்தில் நடப்பது ! ஏனெனில் மருத நிலத்தில்தான் கோட்டை கட்டிச் , செல்வங்களை உள் வைத்துப் போற்றி வாழும் நகர் அமையும் ! உழிஞைப் போர் விளக்கும் தரும் நூற்பா :-

“கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும்
உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்
தொல்லெயிற்கு இவர்தலும் தோலின் பெருக்கமும்
அகத்தோன் செல்வமும் அன்றி முரணிய
புரத்தோன் அணங்கிய பக்கமும் திறப்பட
ஒருதான் மண்டிய குறுமையும் உடன்றோர்
வருபகை பேணார் ஆரெயில் உளப்படச்
சொல்லப் பட்ட நாலிரு துறைத்தே ” ! (புறத்திணையியல் 7)

உலகத்துப் போர்க் கலை (Warfare techniques) வரலாற்றில் , தொல்காப்பியரின் போர்ப் பதிவுகள் காலத்தால் முந்தியதாயும் ஆழத்தால் சிறந்ததாயும் இருக்கக் காணலாம் !

 > >
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (46)

Post by Dr.S.Soundarapandian on Tue Feb 26, 2013 11:09 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (46)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘குறைச் சொற்கள் ’என்று பல சொற்கள் தமிழில் வரும் !

இவை எழுதத் தெரியாமல் தவறாக எழுதப்படுபவை அல்ல ! புலவர்களும் பிறரும் அறிந்தே பயன்படுத்துபவை !

குறைச் சொற்கள் பற்றித் தொல்காப்பியர் இரண்டு நூற்பாக்களை யாத்துள்ளார் !

1. “குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி அறிதல் ” (எச்சவியல் 57)

2. “குறைத்தன வாயினும் நிறைப்பெயர் இயல” (எச்சவியல் 58)

“வழிவழியாகச் சில சொற்களைப் புலவர்களும் மற்றவர்களும் எவ்வாறு ‘குறைச் சொற்க’ளாக எழுதுகிறார்களோ அந்த வழியை அறிந்து, ‘குறைச் சொற்கள்’ இன்னவை என்று அறிந்துகொள்ளுங்கள் !” – இதுவே முதல் நூற்பாவின் பொருள் .

“குறைச் சொற்களாகச் சொற்கள் பயின்றாலும் அவை முழுச் சொற்கள் போலவே பொருளால் இயங்கும் !” – இதுவே இரண்டாம் நூற்பாவின் பொருள்.

இவ்வளவுதான் தொல்காப்பியர் கூறியவை !

உரையாசிரியர்கள் மூலம் ‘குறைச் சொற்கள் ’ மூன்று வகைப்படும் என அறியவருகிறோம் !

எடுத்துக் காட்டுகள் மூலம் இவற்றை வருமாறு தரலாம் :-

முழுச் சொல் ----- குறைச் சொல் ---- பெயர்

தாமரை --- மரை --- முதற் குறை
ஓந்தி --- ஓதி --- இடைக் குறை
நீலம் --- நீல் --- கடைக் குறை

இந்த மூன்று எடுத்துக் காட்டுகளைத்தான் இளம்பூரணரிலிருந்து நேற்று நூல் எழுதியவர் வரை காலங்காலமாகக் கூறி வருகின்றனர் !

வேறு எடுத்துக் காட்டுகளையும் நாம் காணலாம் :-

முழுச் சொல் ---- குறைச் சொல் ---- பெயர்

இலங்கை --- லங்கை --- முதற் குறை
தின்ன --- தின --- இடைக் குறை
மான் --- மா --- கடைக் குறை

மேல் நூற்பா இரண்டில், ‘பெயர்’ எனும் சொல் வந்துள்ளது அல்லவா ? அதனைக் கொண்டு ‘குறைச் சொற்கள் எல்லாமே பெயர்ச் சொற்களில்தான் வரும் ’ என்று இளம்பூரணர் கருதினார் .

“அது தவறு ; வினைச் சொற்களிலும் குறைச் சொற்கள் வரும் ; இதனைத் ‘தன்னினம் முடித்தல்’ என்ற உத்தியால் கொள்ளலாம் !” – என முதன் முதலிற் கூறியவர் நச்சினார்க்கினியர் !

நச்சினார்க்கினியர் காட்டிய உதாரணம் -

என்பாரிலர் - என்பிலர் (இடைக் குறை)

மேல் எடுத்துக்காட்டில் ‘தின்ன – தின - இடைக்குறை’ என்றோமல்லவா?அது வினைச்சொல்லில் வந்த குறைச்சொல்தானே? ‘உண்ண’ என்பது ‘உண’ என வரின் , அதுவும் வினைச்சொல்லில் வந்த இடைக்குறை அல்லவா?

இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ‘குறைச்சொற்கள்’ செய்யுளில் மட்டும்தான் வரும் என்றார்கள் .

இதுவும் சரியன்று !

கர்ப்பூரத்தைப் ‘பூரம்’ என்றும் , பெருங்காயத்தைக் ‘காயம்’ என்றும் வழக்கில்தானே கூறுகிறோம் ? இவை ‘முதற்குறை’கள் அல்லவா?

‘குறைச் சொற்கள்’ நமக்கு முன்பு கூறப்பட்டவைகள் மட்டுந்தானா ? நாம் புதிதாக உருவாக்கவே முடியாதா ? – அடுத்த வினாக்கள் !

குறைச் சொற்களை நாம் புதிதாக உருவாக்கலாம் ! தடை ஏதும் இல்லை ! ஆனால் மரபறிந்து உருவாக்க வேண்டும் ! செய்யுளாக இருந்தாலும் பேச்சாக இருந்தாலும் நாம் ஒரு குறைச் சொல்லை உருவாக்கினால் அதனைப் பிறர் சட்டென்று விளங்கிக்கொள்ளவேண்டும் ! அவ்வளவுதான் !
= = =
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (47)

Post by Dr.S.Soundarapandian on Sat Mar 02, 2013 12:35 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (47)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

ஒரு பாடலுக்குப் பொருளை எப்படி விளங்கிக் கொள்வது என்று இலக்கண நூற்கள் விளக்கியுள்ளன !

‘பொருள்கோள்’ என்ற தலைப்பில் இவை நவிலப்படுகின்றன !
தொல்காப்பியர் , அடிமறிப் பொருள்கோள் என்பதனை இரு நூற்பாக்களில் விளக்கியுள்ளார் !


“அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து
சீர்நிலை திரியாது தடுமா றும்மே” (எச்சவியல் 11)

- என்ற தொல்காப்பியர் நூற்பாவுக்குச் சேனாவரையர் காட்டிய “மாறாக் காதலர் மலைமறந் தனரே” என்ற அகவற் பாடலையே நச்சினார்க் கினியர் உட்படப் பலரும் காலங்காலமாக எடுத்துக் காட்டாகத் தந்துள்ளனர் !

ஆனால் , தெய்வச் சிலையார், வேறு ஓர் அகவற் பாடலை எடுத்துக்காட்டாக அளித்துள்ளார் ! :-

“சூரல் பம்பிய சிறுகான் யாறே
சூரர மகளிர் ஆரணங் கினரே
வாரல் எனினே யானஞ் சுவலே
சாரல் நாட நீவர லாறே ” !

இந்த நான்கு அடிகளில் , முதலடியைத் தூக்கி மூன்றாம் அடியில் வைத்துவிட்டு , மூன்றாம் அடியைத் தூக்கி முதல் அடியில் வைத்தாலும் பாடலின் பொருள் மாறாது !

இதுதான் தொல்காப்பியர் மேற் சூத்திரத்தில் காட்டிய அடிமறிப் பொருள்கோள் என்பதன் பொருள் !

ஆனால் அதே நேரத்தில் பாடலின் உள்ளுக்குள்ளே சீர்களை முன்பின்னாக மாற்றிவிடக் கூடாது ! இதைத்தான் , ‘சீர்நிலை திரியாது’ என்றார் தொல்காப்பியர் !

இந்தப் பொருள்கோள் முறையில் பொருள்கொள்ளத் தக்க வகையில் இதோ நமது எளிய சொந்தப் பாடல் ! :-

சென்று தேடுவோம் தமிழ்ச்செல் வத்தை
நன்றே ஆய்வோம் தமிழா ழத்தை
நின்று பரப்புவோம் உலகில் தமிழை
என்றும் உயர்ந்தது இனிய தமிழே !


மேல் இரு எடுத்துக் காட்டுப் பாடல்களும் நான்கடிப் பாடல்களாக இருக்கின்றன !

அப்படியானால் , அடிமறிப் பொருள்கோள் நாலடிப் பாட்டில்தான் செல்லுமா ? –வினா எழுகிறது !

“ஆம்” – என்கின்றனர் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் !

நீண்ட பாடலாயின் அடிகளை முன்பின்னாக மாற்றி வைத்துவிட்டால் குழப்பம்தானே வரும் ?

இன்னொன்று காணவேண்டியது என்னவென்றால் , நான்கு அடிகளிலும் நான்கு தொடர்பற்ற வெவ்வேறு கருத்துகளைப் பாடிவிட்டு ப் , “பார்த்தீர்களா? அடிமறிப் பொருள்கோள்படப் பாடியுள்ளேன் ” என்று கூறக்கூடாது ! நான்கு அடிகளிலும் மொத்தமாக அடிக்கருத்து ஒன்று மட்டும் இருப்பதே நல்லது !

பாடலின் யாப்பு எதுவேண்டுமானாலும் இருக்கலாம் !

‘சூரல் பம்பிய’ என்ற பாடல் அகவல் யாப்பிலும் , ‘சென்று தேடுவோம்’ எனும் பாடல் கலிவிருத்தத்திலும் பாடப்பட்டுள்ளன.

தொல்காப்பியர் இப் பொருள்கோள் தொடர்பாக உரைத்த இரண்டாம் நூற்பா :-

“பொருள்தெரி மருங்கின்
ஈற்றடி இறுசீர் எருத்துவயின் திரியும்
தோற்றமும் வரையார் அடிமறியான” (எச்சவியல் 12)

அஃதாவது , பாட்டின் கடைசி அடியின் இரு சீர்கள் முறை மாறி வந்தாலும் அதுவும் அடிமறிப் பாடல்தான் !

மேலே நாம் கண்ட பாடலில் ஈற்றடியில் ‘இனிய தமிழே’ என இரு சீர்கள் வந்துள்ளன அல்லவா ? இவற்றில் , ‘தமிழே’ என்பது ‘ஈற்றுச் சீர்’ , ‘இனிய’ என்பது ‘எருத்துச் சீர்’! (எருத்து – ஈற்றுக்கு முந்தையது).

தொல்காப்பியர் கருத்துப்படி ,‘இனிய தமிழே’ என்பது ‘தமிழ் இனியதே’ என்றும் வரலாம் ; அப்படி மாற்றிப் படிக்கும் வகையில் பாடல் வரினும் அந்தப் பாடலும் அடிமறிப் பாடல்தான் !

ஒரு பாடலை எப்படியெல்லாம் அலசி ஆராய்ந்துள்ளார்கள் பார்த்தீர்களா ?

தொல்காப்பியம் அளவுக்குத் தொன்மையான காலத்தில் உலகில் வேறு எங்கும் காணக்கிடைக்காத பாட்டியல் (Poetics) ஆய்வு இது !
............................
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (48)

Post by Dr.S.Soundarapandian on Sat Mar 02, 2013 11:09 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (48)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

காதலனும் காதலியும் வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப் போவது என்று முடிவெடுத்துவிட்டனர் !
தோழியும் வேறு வழியில்லாமல் அதற்கு ஒத்துக்கொண்டாள் !

இதோ காதலனும் காதலியும் புறப்படத் தயாராக நிற்கின்றனர்!

அப்போது தோழி என்ன சொன்னாள் ?

தொல்காப்பியர் காட்சிகளை ஓடவிடுகிறார் ! :-

1. ‘தலைவரும் விழும நிலை எடுத்துரைப்பினும்’ - அவர்கள் ஓடிப்போய்த் திருமணம் செய்துகொள்வதால் , வருங்காலத்தில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று விவரிப்பாள் தோழி !
தலைவரும் – இனிமேல் வரும் .
‘தலை + வரும் ’ என்று பிரிக்கக் கூடாது ! (இப்படிப் பிரித்தால் யாருடைய தலை வரும் , யாருடைய தலை உருளும் என்றெல்லாம் கேள்வி வரும் !)
தலைவா + ர் + உம் = தலைவரும் .
தலைவா- பகுதி ; ‘தலைவ’ என ஆனது விகாரம் .
ர் – எழுத்துப் பேறு ; உம் – எச்ச விகுதி .

விழுமம் – துன்பம் . (‘விழுப்பம்’ வேறு , ‘விழுமம்’ வேறு !)

எடுத்துரைப்பினும் = எடுத்துரைப்பு + இன் + உம்
எடுத்துரைப்பு – ‘நடிப்பு’ என்பது போன்ற பெயர்ச் சொல் ! இன் – சாரியை ; உம் – எண்ணும்மை.

2. ‘போக்கற் கண்ணும் ’ – காதலர் இருவரையும் ஓடிப்போக அனுமதிக்கும் போது , “வேறு வழியில்லைதான் ! இப்படிச் செய்யவில்லை எனில் தலைவி இறந்துபோவாளே ?” என்றெல்லாம் பேசுவாள் தோழி !

3. ‘விடுத்தற் கண்ணும்’ – காதலர் இருவரையும் சரியான இடத்திற்கு வரச்சொல்லிச் , “சூதானமாகப் போங்கள் என்று சொல்லவேண்டியவற்றை யெல்லாம் சொல்லி வழி அனுப்புவாள் !

4. ‘நீக்கலில் வந்த தம்முறு விழுமம்’ – தலைவியை இப்படி ஓடிப்போகுமாறு அனுப்பியதால் தோழி தனது குடும்பத்திற்கு வரும் துன்பத்தை நினைத்து வருந்திப் பல கூறுவாள் !

5. ‘வாய்மையும் பொய்ம்மையும் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும்’ - ‘நல்லது கெட்டது’ உணர்ந்த பெரியோர் வாக்குகளை முன்னுதாரணம் காட்டித் ,தலைவியைத் தேடிவந்த தாய்க்காரியைச் சமாதானப் படுத்தி , அவளைத் தடுத்து நிறுத்துமுகத்தான் பல கூறுவாள் தோழி !

‘கண்டோர்ச் சுட்டி’ – இங்கு ஒரு ‘ச்’ உள்ளதே கவனித்தீர்களா? அது தேவை ! அஃது இல்லையாயின் , எழுவாய்த் தொடராகிவிடும் ! ‘ச்’ இருந்தால்தான் வேற்றுமைத் தொடராகும் !

தலைப்பெயர்தல் – மீட்டுக் கொள்ளுதல் ; தாய் , தலைவியைத் தேடி மேலும் செல்லாவாறு தடுத்து அவளை மீட்டு அவள் வீட்டுக்கு அனுப்புதல் !

மேலே ஒரு ‘தலை ’ ! இங்கே ஒரு ‘தலை’ !
இங்கேயும் , ‘தலை + பெயர்த்தல்’ என்று பிரிக்கக் கூடாது !
தலைப்பெயர் + த் + த் + அல் = தலைப்பெயர்த்தல் .
தலைப்பெயர் - பகுதி
த்- சந்தி ; த் – எழுத்துச் சாரியை ; அல் – தொழிற் பெயர் விகுதி .

6.‘நோய்மிகப் பெருகித்தன் ……. வந்ததன் திறத்தோடு ’ – தலைவியின் தாய் , “மகள் இப்படி ஓடிவிட்டாளே !” என்று அழும்போது , “நடந்தது நடந்துவிட்டது ! அதைப் பேசி என்ன பயன் ? இனி ஆகவேண்டியதைப் பார்க்கலாம் !” என்றெல்லாம் தாயின் வருத்தத்தைப் போக்கும் வகையில் பல பேசுவாள் தோழி !

கலுழ்ந்தோள் – தாய் ; வினையாலணையும் பெயர் .
கலுழ்தல் – வருந்துதல் .
வன்புறை நெருங்கி – வற்புறுத்தி .

இதுதான் காதலர் ஓடுகையில் , தோழியின் உரையாடல் பங்கு (Role of dialogue)!

இன்றைய திரைப்பட இயக்குநர்கள் படாத பாடுபட்டு அமைக்கும் காட்சிகளை 3000 ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியர் போகிற போக்கில் சொல்லிவிட்டார் பாருங்கள் ! :-

“தலைவரும் விழும நிலைஎடுத் துரைப்பினும்
போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும்
நீக்கலின் வந்த தம்முறு விழுமமும்
வாய்மையும் பொய்மையும் கண்டோர்ச் சுட்டித்
தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும்
நோய்மிகப் பெருகித்தன் நெஞ்சுகலுழ்ந் தோளை
அழிந்தது கழீஇய ஒழிந்தது கூறி
வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தோடு
என்றிவை யெல்லாம் இயல்புற நாடின்
ஒன்றித் தோன்றும் தோழி மேன ” ! (அகத்திணையியல் 39)

]]]]]]]]]]]]]
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (49)

Post by Dr.S.Soundarapandian on Sun Mar 03, 2013 6:27 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (49)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

தொல்காப்பியர் தீட்டிய சித்திரங்களில் சித்திர வண்ணம் என்பதும் ஒன்று !

அந்த நூற்பா ! :-
“சித்திர வண்ணம்
நெடியவுங் குறியவுங் நேர்ந்துடன் வருமே ” (செய்யுளியல் 222)

நெடியவும் - நெடில் எழுத்துகளும் .

குறியவும் – குறில் எழுத்துகளும் .
நேர்ந்து - கலந்து .
‘கோவிலுக்கு மாட்டை நேர்ந்து விட்டார்கள் ’ - என்றால் , கோயிலோடு , கோயில் சொத்தாகக் கலக்கச் செய்துவிட்டார்கள் என்பது பொருள் ! இந்தச் சொல் ,தொல்காப்பியர் காலச் சொல் என்று இன்று அறியவருகிறோம் !

நெடிலும் குறிலும் கலந்துவரும் பாடலுக்குக் கீழ்வரும் பாட்டை எடுத்துக்காட்டாகத் தருகிறார் நச்சினார்க்கினியர் !:-

“ஊர்வழி யூர்ந்தார் வாசி பேரச்
சேரி சார்வரி தொல்லாதிப்
பீர்தீர் தோழி தோளே ”

“எல்லாப் பாடல்களிலும் நெடில் குறில் வரத்தானே செய்யும் ? இதில் என்ன ‘சித்திர வண்ணம்’ என்று தனியாக ?” - கேள்வி எழலாம் !
மேல் வந்த ‘ஊர்வழி …’ என்ற பாடலைப் பாருங்கள் !

அதில் எல்லா அடிகளிலும் நெடிலும் இருக்கும் , குறிலும் இருக்கும் ! ஓரடியில் குறைந்தது மூன்று நெடிலாவது இருக்கும் ! ‘ ர்வழி யூர்ந்தார் வாசி பேரச் ’ – இதில் ஐந்து நெடில்கள் உள ! மீதிக் குறில்கள் !

அப்படியானால் , நெடில் எழுத்து ஒன்றுகூட வராமல் , வெறும் குறில் எழுத்துகளால் மட்டுமே பாடல் வருமா?
வரும் !

அப்படிக் குறில் எழுத்துகள் மட்டுமே வரக்கூடிய பாடலைக் குறுஞ்சீர் வண்ணம் அமைந்த பாடல் என்பர்!

நச்சினார்க்கினியர் அதற்கும் ஓர் எடுத்துக்காட்டுத் தருகிறார் ! :-

“உறுபெய லெழிலி தொகுபெயல் பொழியச்
சிறுகொடி யவரை பொதிதளை யவிழக்
குறிவரு பருவ மிதுவென மறுகுபு
செறிதொடி நறுநுத லழிய
லறியவை யரிவையவர் கருதிய பொருளே ” !

இந்தப் பாடலில் , ஓரிடத்தில் கூட நெடில் எழுத்து என்பதே கிடையாது !

இதனைப் போன்றே , குறில் எழுத்து ஒன்றுகூட வராமல் , முற்றிலும் நெடில் எழுத்துகளாலேயே எழுதப்பட்ட பாடல் நெடுஞ்சீர் வண்ணம் அமைந்த பாடல் எனப்படும் !

நச்சினார்க்கினியர் இதற்குத் தரும் பாடல் ! : -

“நீரூர் பானா யாறே காடே
நீலூர் காயாம் பூவீ யாதே
யூரூர் பாகா தேரே
பீரூர் தோளாள் சீறூ ராளே”

முதற்கண் பார்த்த ‘சித்திர வண்ணம்’ என்ற பெயரில் வந்த ‘சித்திரம்’ என்ற சொல் விசித்திர மானது !
‘ஓவியம்’ என்ற ஒரு பொருளைத்தான் நமக்குத் தெரியும் !

ஆனால் ‘சித்திரம்’ என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன!

‘சித்திரம் – கலப்பு ; பல வகை ’ என்ற பொருளும் உண்டு ! :-

1.சித்திர வதை – பலவித வதைகள் !
2. சித்திரான்னம் – சர்க்கரை ,புளி, எலுமிச்சைச் சாதங்கள் .
சித்திர + அன்னம் = சித்திரான்னம் ( இப் புணர்ச்சி ‘தீர்க்க சந்தி’)

நெடிலும் குறிலும் கலந்து வந்ததால் , அது சித்திர வண்ணம் !

சரிதானே ?
.....................................
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (50)

Post by Dr.S.Soundarapandian on Sat Mar 09, 2013 5:14 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (50)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘வசந்தியை அழைத்தான் ’ – இத் தொடரில் வசந்தி அருகே ஓர் ‘ஐ’ உள்ளதல்லவா ? இதனைத்தான் இரண்டாம் வேற்றுமை உருபு என்பர்.

இரண்டாம் வேற்றுமை, ‘ஐ வேற்றுமை’ எனவும் அறியப்படும்.

இரண்டாம் வேற்றுமை என்னென்ன பொருள் நிலைகளில் வரும் ?

தொல்காப்பியர் ஒரு பட்டியல் தருகிறார் ! :-

“காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்
ஓப்பின் புகழின் பழியின் என்றா
பெறலின் இழவின் காதலின் வெகுளியின்
செறலின் உவத்தலின் கற்பின் என்றா
அறுத்தலின் குறைத்தலின் தொகுத்தலின் பிரித்தலின்
நிறுத்தலின் அளவின் எண்ணின் என்றா
ஆக்கலின் சார்தலின் செலவின் கன்றலின்
நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின் என்றா
அன்ன பிறவும் அம்முதற் பொருள
என்ன கிளவியும் அதன்பால என்மனார்” (வேற்றுமையியல் 11)

காலங் காலமாகப் புலவர்கள் தரும் எடுத்துக்காட்டுகளைத் தவிர்த்துப் புதிய எடுத்துக்காட்டுகள் மூலம் மேல் பட்டியலை விளக்கலாம் ! :-

1. ‘காப்பு’ – ‘வீட்டைக் காத்தாள் ’ .

இந்த ஓர் எடுத்துக்காட்டை வைத்துக்கொண்டு எல்லோரும் வீட்டையே கட்டிக் கொண்டிருக்கக் கூடாது !
‘பணத்தைக் காத்தான்’ , ‘முட்டையைக் காத்தது கோழி’ , ‘குட்டியைக் காத்தது யானை’ – என்றெல்லாம் எத்தனையோ தொடர்களைக் ‘காப்பு’ப் பொருளில் உருவாக்கிக் கொள்ளலாம் !

பின்வரும் எடுத்துக்காட்டுகளையும் இவ்வாறே ஒட்டிப் பொருள் கொள்ளவேண்டும் !

2. ‘ஒப்பு’ - ‘முகம் சந்திரனை ஒத்தது ’

3. ‘ஊர்தி’ – ‘பேருந்தை ஓட்டினான்’
‘ஊர்தி’ என்ற தொல்காப்பியர் சொல்லை ஏதோ ‘அமரர் ஊர்தி’ என்பது போல எடுத்துக்கொள்ளக் கூடாது !
ஊர்தல் – செலுத்துதல் ; ஓட்டுதல் .
‘தேரூர்ந்த சோழன் கதை’ – என்று ஒரு கதை உண்டு ! ‘தேரை ஓட்டிய சோழன் கதை’ என்பதே பொருள் !

4 . ‘இழை’ - ‘வீட்டை இழைத்தான்’
இழைத்தல் – கட்டுதல் ; வண்டல் இழைத்தல் – வண்டல் மண்ணால் விளையாட்டுக்கு வீடு கட்டுதல் .

5. ‘ஓப்பு’ – ‘அணிலை ஓப்பினான்’
ஓப்புதல் - விரட்டுதல் .

6. ‘புகழ்’ – ‘தலைவனைப் புகழ்ந்தனர்’

7.‘பழி’ – ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’

8. ‘பெறல்’ – ‘விருதைப் பெற்றான்’

9. ‘இழவு’ – ‘புகழை இழந்தான்’ ; இழவு – இழப்பு .

10 . ‘காதல்’ – ‘அவளைக் காதலித்தான்’

11. ‘வெகுளி’ – ‘ பகைவரை வெகுண்டான்’

12. ‘செறல்’ - ‘ கொலைகாரனைச் செற்றனர்’ ; செறல் – கொல்லுதல்

13. ‘உவத்தல்’ – ‘மகனின் படிப்பை நினைத்து உவந்தார் தந்தை’

உவத்தல் - மகிழ்தல்

தொல்காப்பிய உரையாசிரியர்கள் , ‘நட்டாரை உவக்கும் ’ என்று எடுத்துக்காட்டுத் தந்துள்ளனர் !

அஃதாவது , ‘நண்பர்களை மகிழ்வான்’ என்பது பொருள் ! நண்பர்களை எப்படி மகிழமுடியும் ? அப்படியானால் உரையாசிரியர்கள் தந்த உதாரணங்கள் தவறா ?
அல்ல !

உரையாசிரியர்கள் சுருக்கமாகத்தான் கூறுவார்கள் ! நாம்தான் விரித்துப் பொருள் கொள்ளவேண்டும் !

‘நட்டாரை உவக்கும்’ என்பதை , ‘நண்பர்களை எண்ணி மகிழ்வான்’ என்று விரித்துக் கொள்ளவேண்டும் !

இப்படிச் செய்வதால் தொல்காப்பிய விதி எவ்வகையிலும் பிசகாது !

அஃதாவது , ‘உவக்கும்’ என்ற வினையை ஏதாவது ஒரு தொடரில் நீங்கள் பயன்படுத்தினால் , அத் தொடரில் , உவக்கும் என்ற அச் சொல்முன் அல்லது பின் , வெளிப்பட்டோ மறைந்தோ , நிச்சயம் ஓர் ஐவேற்றுமை வந்திருக்கும் !

இந்த இலக்கண நுட்பத்தை நாம் காணும் எல்லா எடுத்துக்காட்டுகளிலும் ஒட்டிக்கொள்க !

14. ‘கற்பு’ – ‘ குறுந்தொகையைக் கற்றான்’

தொல்காப்பியச் சொல்லான ‘கற்பின்’ என்பதைக் , ‘கற்பு + இன் ’ எனப் பிரிக்கவேண்டும் !

கற்பு – கற்றல் ; பெண்ணின் கற்பு அல்ல !

கற்பு – பகுதி ; இன் – சாரியை ; இங்கே ‘இன்’ , எச்ச விகுதி அல்ல ! அசைநிலையும் அல்ல !

சிலர் ‘அசைநிலை’ என்று எழுதியுள்ளார்கள்; அது பொருந்தாது ! மேல் நூற்பாவில் மொத்தம் 28 இடங்களில் ‘இன்’ வந்துள்ளது ! இருபத்தெட்டு இடங்களிலுமே ‘இன்’ சாரியையாகத்தான் வந்துள்ளது ! நூற்பாவில் சீர்கள் அடுத்தடுத்து ஓடவேண்டும் ; அதற்காகத்தான் சாரியை ! அசைநிலை இந்த ஓட்டத்தைத் தராது ! .

15. ‘அறுத்தல்’ – ‘கயிற்றை அறுத்தான் ’ .

16. ‘குறைத்தல்’ – ‘கம்பத்தின் உயரத்தைக் குறைத்தான்’ .

17. ‘தொகுத்தல்’ – ‘ உவமைகளைத் தொகுத்தான்’ .

18. ‘பிரித்தல்’ – ‘கட்டைப் பிரித்தனர்’ .
19 . ‘நிறுத்தல்’ – ‘புளியை நிறுத்தான்’ .

’நிறுத்தல்’ என்ற இத் தொல்காப்பியச் சொல்லால் , நிறுத்தலளவை (Weighing measurement) கி.மு. 1000க்கு முன்பே தமிழகத்தில் இருந்த ஒரு வரலாறு புலனாகிறது !

20. ‘அளவு’ – ‘நெல்லை அளந்தான்’ .

21. ‘எண்’ – ‘பணத்தை எண்ணினான்’ .

22. ‘ஆக்கல்’ – ‘வளத்தை ஆக்கினார்’ .

23. ‘சார்தல்’ – ‘பொறுப்பு மக்களைச் சார்ந்தது’ .

24 . ‘செலவு’ – ‘பாதையைக் கடந்தான்’

இங்கே ‘செலவு’ என்பது வரவு , செலவு அல்ல !

செலவு – செல்லுதல் ; கடத்தல் . ‘செலவு’ என்றால் , ‘சென்றான்’ என்றுதான் தொடரில் வரவேண்டும் என்பதில்லை !

25 . ‘கன்றல்’ – ‘குடியை நினைத்து வருந்துகிறோம்’ .
கன்றல் – வருந்துதல் .

உரையாசிரியர்கள் அனைவரும் ‘கன்றல்’ என்பதற்குச் ‘சூதைக் கன்றும்’ என்றே உதாரணம் தந்துள்ளனர் !
சூதை எப்படி வருந்தமுடியும் ? சூதை நினைத்துத்தானே வருந்தமுடியும் ? அல்லது சூதை விளையாடி வருந்தலாம் ! இல்லையா ? எனவேதான் , நாம் முன்னே பார்த்தபடி , உரையாசிரியரின் சுருக்க எடுத்துக்காட்டைத் தக்கபடி விரித்துப் பொருள்கொள்ள வேண்டும் !

26. ‘நோக்கல்’ – ‘அண்ணலை நோக்கினாள்’ .

27. ‘அஞ்சல்’ – ‘பாம்பைக் கண்டு அஞ்சினான்’ .

உரையாசிரியர்கள் அனைவரும் ‘கள்ளரை அஞ்சும்’ என்று உதாரணம் தந்துள்ளனர்! ‘திருடனை அஞ்சினான்’ என்று எழுதலாமா? தொடர் இலக்கணம் அமையவில்லையே ? ‘திருடனைக் கண்டு அஞ்சினான்’ ‘, ‘திருடனைப் பார்த்து அஞ்சினான்’ என்பன அல்லவா சரியான தொடர்கள் ? அஞ்சுதலாகிய வினை முன் ‘ஐ வேற்றுமை’ வந்ததா இல்லையா ?

28. ‘சிதைப்பு’ – ‘மருமகள் வீட்டைச் சிதைத்துவிட்டாள் ’.

நூற்பாவில், ‘அன்ன பிறவும்’ என்றதனால் மேல் 28ஐப் போல வேறு வினை அல்லது வினைக் குறிப்பு வந்தாலும் அவற்றுக்கு முன்பும் ஐ வேற்றுமை வரும் என்பது பொருள் !

தமிழின் அளவற்ற பரப்பு தொல்காப்பியருக்கு நன்கு தெரிந்துள்ளது ! அதனால்தான் ‘அன்ன பிறவும்’ என்று கவனமாகப் போடுகிறார் !
vvvvvvv
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (51)

Post by Dr.S.Soundarapandian on Sun Mar 17, 2013 10:56 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (51)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘கமலிக்குப் பணம் தந்தான் ’ – இத் தொடரில் கமலி அருகே ஒட்டிக்கொண்டு ஒரு ‘கு’ உள்ளதல்லவா ? இதனைத்தான் நான்காம் வேற்றுமை உருபு என்பர்.

நான்காம் வேற்றுமை உருபு, ‘குவ்வுருபு’ எனவும் அறியப்படும்.

நான்காம் வேற்றுமை என்னென்ன பொருள் நிலைகளில் வரும் ?

தொல்காப்பியர் தரும் பட்டியல் ! :-

“அதற்குவினை உடைமையின் அதற்குடம் படுதலின்
அதற்குப்படு பொருளின் அதுவாகு கிளவியின்
அதற்குயாப் புடைமையின் அதன்பொருட் டாதலின்
நட்பின் பகையின் காதலின் சிறப்பினென்று
அப்பொரொட் கிளவியும் அதன்பால என்மனார்” (வேற்றுமையியல் 15)

புலவர்கள் தரும் ஒரே மாதிரியான எடுத்துக்காட்டுகளைத் தவிர்த்துப் ,புதிய எடுத்துக்காட்டுகள் மூலம் மேல் பட்டியலை விளக்கலாம் ! :-
1. ‘அதற்கு வினை உடைமை’ – ‘காசுக்குத் தேங்காய் உரித்தான்’

ஒரு செயலை (வினையை) எதற்குச் செய்கிறான் என்ற கருத்து தொடரில் வரவேண்டும் ! அவ்வளவுதான் !

2 . ‘அதற்கு உடம்படுதல்’ – ‘ காதலனுக்குக் காதலியை உடம்படுத்தினாள்’ .

இதற்கு எடுத்துக்காட்டாகச், ‘சாத்தற்கு மகளுடம்பட்டார் சான்றோர்’ எனும் தொடரையே கல்லாடனார் (கி.பி. 15 ஆம் நூ.ஆ.) வரை உரையாசிரியர் பலரும் தந்துளர் !

‘சாத்தற்கு மகளுடம்பட்டார் சான்றோர் ’– சாத்தனுக்குத் திருமண வகையால் பெண்மகளைச் சேர்த்துவைத்தனர் சான்றோர்!

‘உடன்படுதல்’ வேறு , ‘உடம்படுதல்’ வேறு !

‘ஆயிரம் ரூபாய் தருவதாக உடன்பட்டான்’ – எனில் , சம்மதித்தான் என்பது பொருள் !

உடன்படுதல் – சம்மதித்தல் .

உடம்படுதல் – சேர்த்துவைத்தல் .

உடம்படு மெய் – இரு உயிர் எழுத்துகளைச் சேர்த்துவைக்கும் மெய் !

தலைவனின் கருத்தோடு தலைவி கருத்தும் சேர்வதே மதியுடம்படுதல் !

3 . ‘அதற்குப் படுபொருள்’ – நில ஆவணங்களில் ‘ இந் நான்கு எல்லைக்கு உட்பட்ட மாவடை மரவடை’ என்று எழுதுவார்கள்!

‘படுபொருள்’ – உட்பட்டபொருள் .

உரையாசிரியர்களின் பழைய எடுத்துக்காட்டு – ‘சாத்தற்குப் படுபொருள் கொற்றன்’ .

என்ன பொருள் ?

‘சாத்தனுக்கு உரிமைப்படுபொருள் கொற்றன்’ என்பது பொருள் ! அஃதாவது , ‘சாத்தனுக்கு உறவினன் அல்லது வேலைக்காரன்’ கொற்றன் என்பது பொருள் ! அவ்வளவுதான் !

4 . ‘அதுவாகு கிளவி’ – ‘மருந்துக்கு வேப்பிலை’ .

அஃதாவது , வேப்பிலையே மருந்தாவதால் , ‘அதுவாதல்’ பொருந்துகிறது !

5 . ‘அதற்கு யாப்புடைமை’ – ‘காலுக்குக் கொலுசு’ .
யாப்பு – பிணிப்பு ; இயைபு .

6 . ‘அதன் பொருட்டாதல்’ - ‘வெயிலுக்கு நிழற் குடை’

பொருட்டு – காரணம் .

அதன் பொருட்டு – அதன் காரணம் .

நிழற்குடையானது என்ன காரணத்திற்காக ?

வெயிலுக்காக ! எனவே , ‘அதன் பொருட்டாதல்’ என்ற வாய்பாடு பொருத்தமாதல் காண்க !

7 ‘நட்பு’ - ‘வ.உ.சி.க்கு நண்பர்’

நண்பர் என்றால் யாருக்காவதுதானே அவர் நண்பர் ? எனவே குவ்வுருபு கட்டாயம் வரும் !

8 . ‘பகை’ – ‘புறாவுக்குப் பகை வல்லூறு’ .

9 . ‘காதலி’ – ‘கோவலனுக்குக் காதலி மாதவி’ .

10 . ‘சிறப்பு’ – ‘மோருக்குச் சிறந்தது’ .

‘மோரைவிடச் சிறந்தது தயிர் ’ என்பது பொருள் .

தொல்காப்பிய நூற்பாவின் ஈற்றில் உள்ள ‘அப்பொருட் கிளவியும்’ என்பதிலுள்ள எச்ச உம்மையால் , இன்னும் இவைபோன்ற வாய்பாடுகளையும் (pattern) நாம் சேர்த்துக்கொள்ளவேண்டும் !

தொல்காப்பியர் 10 வாய்பாடுகளைக் குவ்வுருபுக்குத் தெரிவித்துவிட்டார் !

அஃதாவது , தொல்காப்பியர் காலத்தில் , பெருவழக்காக , அடிக்கடி பயன்பட்டு வந்தனவாக ,இந்தப் பத்து வாய்பாடுகளும் திகழ்ந்தன என்று நாம் விளங்கிக் கொள்ளவேண்டும் !

தொடர்களைக் காலவாரியாக அடுக்கும் மொழியியலாளர்களுக்கு(Linguists) இஃது அரிய குறிப்பு !

10 வாய்பாடுகளைத் தொல்காப்பியர் கூறினாரல்லவா ? இந்தப் பத்து வாய்பாடுகளையும் சேர்த்து ஒரே வாய்பாட்டில் அடக்கி நம்மால் கூறமுடியுமா ?

முடியாது !

ஆனால் தொல்காப்பியர் அடக்கிக் கூறியுள்ளார் !

அந்த வாய்பாடுதான் – ‘எப்பொருளாயினும் கொள்ளல்’ !

இதோ அந்த நூற்பா :-

“ நான்கா குவதே
குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எப்பொரு ளாயினும் கொள்ளும் அதுவே ”
=====
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (52)

Post by Dr.S.Soundarapandian on Sat Mar 23, 2013 12:07 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (52)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

உலகத்துப் பொருட்களைத் தொல்காப்பியர் இரு வகைகளாகப் பகுக்கிறார் ! :-

1 . இயற்கைப் பொருள்

2 . செயற்கைப் பொருள்

1 . இயற்கைப் பொருள்களைக் குறிக்கும்போது , ‘இப்படிப்பட்டது’ என்று எழுதவேண்டும் !

இதனைத் தொல்காப்பியர் ,

“இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல் ” (கிளவியாக்கம் 19)

என்றார் .

இற்று = இத்தன்மைத்து - இப்படிப்பட்டது .

தொல்காப்பியர் கருத்துப்படிக் கீழ்வரும் தொடர்கள் சரியானவை :-

1 . பால் வெண்மையது √
2 . பனை உயர்ந்தது √
3 . வேம்பு கசப்புச் சுவை உடையது √
4 . கடல் நீர் உப்புக் கரிக்கும் √
5 . நிலம் வலியது √

‘சரி ! செயற்கைப் பொருளை எப்படிக் கூறுவது ?

தொல்காப்பியர் சொன்னார் ! :-

“செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்” (கிளவியாக்கம் 20)

செயற்கைப் பொருளாக இருந்தால் , ஆக்கச் சொல் சேர்த்துக் கூறவேண்டும் !

மேல் எடுத்துக்காட்டுகளுக்கே வருவோம் ! :-

1 . பால் வெண்மையானது ×
ஏனெனில் , பாலின் இயற்கைப் பண்பே வெள்ளைதானே ? எனவே , ‘ஆனது’ என்ற சொல் (இதுதான் ஆக்கச் சொல்) சேர்க்கக்கூடாது !

பால் நீலமானது √
ஏனெனில் பாலில் ஏதோ நீலப்பொருள் கலந்து அதை நீலமாக ஆக்கியுள்ளனர் ! இதுதான் செயற்கைப் பொருள் ! இத் தொடரில் ‘ஆனது’ என்ற ஒட்டு உள்ளதல்லவா? இதனைத்தான் தொல்காப்பியர் ‘ஆக்கமொடு கூறுக’ என்றார் !

கூறுல் - கூறுக ( ‘அல்’லீற்று வியங்கோள் விகுதி உடன்பாட்டுப் பொருளில் வந்தது ) .

பால் சூடானது √
ஏனெனில் பாலின் தன்மை சுடுவது அல்ல ! ; பாலைச் சூடாக்கி ஒரு செயற்கைப் பொருளை உருவாக்கியுள்ளோம் ; அதனால் , ஆக்கச் சொல் ‘ஆனது’ என்பதைக் கொடுத்துச் ‘சூடானது’ எனக் கூறவேண்டும் !

2 . பனை உயரமானது ×
ஏனெனில் , பனை அதற்கு முன்பு குட்டையாக இருந்ததுபோலவும் , தற்போது ஏதோ ஒரு காரணத்தால் உயரமாகிவிட்டது போலவும் தொடருக்கு ஒரு பொருள் வருகிறது ! எனவே , இத் தொடரில் ஆக்கச் சொல் தரக்கூடாது !

பனை முறிவானது √
எனெனில் , பனையைச் செயற்கையாக முறித்துள்ளனர் ! அங்கே ஒரு செயற்கைப் பொருள் உருவாகியுள்ளதால் , ஆக்கச் சொல் தேவை !

இதே பாங்கில் கீழ்வரும் தொடர்களைப் பாருங்கள் !:-

வேம்பு கசப்பானது ×
வேம்பு மருந்தானது √

கடல் நீர் உப்புச்சுவையானது ×
கடல் நீர் குடிநீரானது √

நிலம் வலிமையானது ×
நிலம் ஆடுகளமானது √

ஆக்கம் பற்றி மேலும் தொல்காப்பியர் ,

“ஆக்கம் தானே காரணம் முதற்றே” (கிளவியாக்கம் 21) என்றார் !

‘ஆக்கம்’ என்று சொன்னால் அது ஏற்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும் ! – இதுதான் தொல்காப்பியரின் கருத்து !

குத்தூசி கூரானது √

குத்தூசியைத் தட்டிக் கூராக ஆக்கியுள்ளனர் என்பது பொருள் ! காரணமில்லாமல் ஊசி கூராகுமா ?

தங்கம் நகையானது √
எனெனில் தங்கம் அதுவாக நகை ஆகாது ! தங்கத்தைப் பணி செய்து நகை ஆக்கவேண்டும் !

எனவே , ஏதாவது ஒரு காரணத்தை அடிப்படையாக வைத்துத்தான் ‘ஆக்கம்’ தோன்றும் என்பது தொல்காப்பியர் கருத்து ! ஆனால் , அந்தக் காரணத்தைத் தொடரில் எழுதியிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை ! காரணத்தை உய்த்துணரும் படியாகவும் தொடரை எழுதலாம் !

“ ‘நன்கு சப்பிட்டதால் உடல் பருமனானது ’ – இதில் பருமன் என்ற ஆக்கம் , ‘நன்கு சாப்பிட்டது’ என்ற காரணத்தால் நிகழ்ந்தது ; இவ்வாறுதான் காரணத்தை முன்னே சொல்லிப் பின் ஆக்கச் சொல்லை எழுதவேண்டும் ! ” – இவ்வாறு பலர் உரை எழுதியுள்ளனர் !

தவறு இது !

‘உடல் பருமனானது ’ என்றாலே , எதோ ஒரு காரணத்தால்தான் என்பது விளங்கவில்லையா ? அதைத் தொடரில் எழுதத்தான் வேண்டுமென்பதில்லை ! அப்படி எழுதத்தான் வேண்டும் என விதித்தால் நாம் உரைநடையையே எழுதமுடியாதே ?

‘ஆக்கம்’ என்று எதனைக் கூறவேண்டும் ? – என்ற மயக்கம் ஏற்படும்போது , செயலின் பின்னணியில் ஏதாவது காரணம் இருக்கிறதா ? என்று ஒரு கேள்வியை நாம் கேட்கவேண்டும் ! இதுதான் தொல்காப்பியர் கூறவந்தது !

ஆனால் காரணம் இல்லாமலே, தொல்காப்பியருக்கு முன்பே , ஆக்கச் சொல் போட்டுப் பேசும் முறை வந்துவிட்டது !

‘மயில் அழகானது’ , ‘குயிலின் குரல் இனிமையானது’ , ‘அவள் முகம் அழகானது’ – இவையெல்லாம் ஆக்கச் சொல் பெற்ற தொடர்கள் ! ஆனால் , காரணமில்லாமல் வந்தவை !

மயில் இயற்கையிலேயே அழகுதானே ? குயிலின் குரலைப் பயிற்சி மூலமாகவா இனிமையாக்கினார்கள் ? அவளின் முகம் முன்பு குரூரமாக இருந்து இப்போது அழகாகிவிட்டதா ? இல்லையல்லவா? இதனைத்தான் , தொல்காப்பியர் ,

“ஆக்கக் கிளவி காரண மின்றியும்
போக்கின்று என்ப வழக்கி னுள்ளே” (கிளவியாக்கம் 22)

என்றார் !

தமிழில் ,எழுத்து நடைக்கும் பேச்சு நடைக்கும் வேறுபாடு தொல்காப்பியருக்கு மிக முன்பிருந்தே இருந்துவருகிறது ! தொல்காப்பியர் மேலே சொன்ன விதிகள் எழுத்து நடைக்கானவையே ! இம்மாதிரியான விதிகளால்தான் தமிழ் இன்றளவும் தமிழாக இருக்கிறது!

=========
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (53)

Post by Dr.S.Soundarapandian on Sat Mar 23, 2013 1:03 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (53)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33


தொல்காப்பியர் , “கேள்வி கேட்கும்போதும் சரி , பதில் கூறும்போதும் சரி , கவனமாகக் குளறுபடி இல்லாமல் செய்யவேண்டும்” என்று கண்டிப்புடன் எழுதுகிறார் ! :-

“செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” (கிளவியாக்கம் 13)

செப்பு – விடை ; வழாஅல் – வழுவாமல் ; ஓம்பல் – ஓம்புதல் .

‘வினாவுக்கு ஏற்ற விடை ’ – என்பது எளிய கருத்தல்ல !

வினாத் தொடுப்பதும் எளிதல்ல ! விடை கூறுவதும் எளிதல்ல ! பெரியவர்கள்கூட இதில் தவறு செய்கின்றனர் !


நீங்கள் ஒன்றைக் கேட்பீர்கள் , அவர் வேறு ஒன்றைக் கூறுவார் ! அவர் வேண்டுமென்று கூறுகிறாரா , இல்லை தெரிந்தலட்சணம் அவ்வளவுதானா என்று நீங்கள் குழம்புவீர்கள் !

இன்றைய நிலையே இப்படியாயின் 3000 ஆண்டுகளுக்கு முன் ?
அதனால்தான் தொல்காப்பியர் விதி கூறவேண்டிய நிலை ஏற்பட்டது !

நச்சினார்க்கினியர் , இந் நூற்பாவுக்கு உரை எழுதும்போது , இருவகை விடைகள் உள்ளன என்கிறார் ! :-

1 . நேரடி விடை ( ‘செவ்வன் இறை’)
2 . மறைமுக விடை ( ‘இறை பயப்பது’)

சட்டைத்துணி நிறம் பிடித்திருக்கிறதா ? – வினா .

“பிடித்திருக்கிறது” – நேரடி விடை .

“அடுத்த கடையில் பார்க்கலாமே ?” – மறைமுக விடை .

நச்சர் மூன்றுவகை வினாக்கள் உள்ளன என்கிறார் ! : -

1 . அறியான் வினா
2 . ஐய வினா
3 . அறிபொருள் வினா

இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள் !:-

1 . “ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்லவேண்டுமானால் அனுமதி வேண்டுமா ?” – அறியான் வினா .

இங்கே கேட்டவன் அறியா நிலையில் உள்ளான் !

2 . “பப்பாளியைச் , சர்க்கரை நோய் உள்ளவரும் உண்ணலாமாமே , சரியா?” –ஐய வினா .
கேட்டவனுக்குச் செய்தி தெரிந்துள்ளது ; ஆனால் ஐயம் இருக்கிறது !

3 . தற்போதைய பிரதமருக்கு முந்தைய பிரதமர் யார் ? – அறிபொருள் வினா .

கேட்டோன் , கேட்கப்பட்டோனைச் சோதிக்கிறான் அல்லது தன் கருத்தைச் சரிபார்க்கிறான் !
மேல் தொல்காப்பியர் நூற்பாவின்படி , வினாவைப் பொருத்தமாக விடுக்கவேண்டும் !

‘குதிரைக்குக் கொம்பு ஒன்றா இரண்டா ? ’ – என்று கேட்கக் கூடாது !

இதைப்போல , விடையும் பொருத்தமாகக் கூறவேண்டும் என்று தொல்காப்பியர் அதே நூற்பாவில் கூறியுள்ளார்!

“பழனிக்கு எப்படிப் போகவேண்டும் ? ” – எனக் கேட்டால் , “என் மாமியாருக்கு வலது காது கேட்காது” என்று பதில் கூறக்கூடாது !

இன்னும் தொல்காப்பியர் தொடர்கிறார் !:-
1 . “வினாவும் செப்பே வினாஎதிர் வரினே” (கிளவியாக்கம் 14)

“ஹாக்கி விளையாடுவாயா ?” என்று கேட்டால் , “ஏன்? நான் விளையாட மாட்டேனா ?” என்று எதிர்க்கேள்வி கேட்டாலும் அதுவும், தொல்காப்பியர் கருத்துப்படி, ஒரு விடைதான் !

2 . “ செப்பே வழீஇயினும் வரைநிலை இன்றே
அப்பொருள் புணர்ந்த கிளவி யான“ (கிளவியாக்கம் 15)

விடையை நேரடியாகப் பட்டுக் கத்தரித்ததுபோலக் கூறாதுபோயினும் , ஒரு வகையில் பொருளை உணர்த்துகிற வகையில் இருந்தால் அதைக் கணக்கில் சேர்க்கலாம் ; ஆனால் வினாவைத் தவறாகக் கேட்டால் , அதனால் பயனில்லை !

“கம்பராமாயணம் படித்திருக்கிறீர்களா ?” – வினா .

“நேற்றுக்கூட இருபது பக்கம் கம்பராமயணப் பாடல்கள் பற்றிக் கட்டுரை எழுதினேன் ” – விடை .

நேரடி விடை இங்கு இல்லையெனினும் , மறைமுக விடை உள்ளது ! இதை ஒத்துக்கொள்கிறார் தொல்காப்பியர் !

“இளங்கோவடிகள் லண்டன் போனது எப்போ ?” – இம்மாதிரியான வினாவை ஏற்க முடியாது என்கிறார் தொல்காப்பியர் ! சரிதானே ?

(3) கடைசியாகச்,

“செப்பினும் வினாவினும் சினைமுதல் கிளவிக்கு
அப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே” (கிளவியாக்கம் 16)

என்றார் தொல்காப்பியர் !

எடுத்துக்காட்டுகள் மூலமாக இவற்றை விளக்கலாம் !:-

(அ) ‘இவளின் கை விரல்கள் அவளின் விரல்களைவிட அழகானவை ’
உறுப்போடு (சினையோடு) உறுப்பு ஒப்பிடப்பட்டு , வேறுபாடு (உறழ்ச்சி) காட்டிய விடை !

(ஆ) ‘இவள் கண் , அவள் கண்ணைப் போல அழகானது’
உறுப்போடு உறுப்பு ஒப்பிடப்பட்டு , ஒத்திசைவு (துணை) சுட்டிய விடை !
(இ) ‘உங்க கணவர், என் கணவரைப்போலச் சுறுசுறுப்பு உள்ளவரோ ?’
முதலோடு (கணவர் என்ற முழுப்பொருளோடு ) , முதலை (இன்னொரு ஆளை) ஒப்பிட்டு வேறுபடுத்திக் கேட்ட வினா !

(ஈ) ‘அந்தச் சமையல்காரரும் இந்தச் சமையல்காரரைப் போலச் சுறுசுறுப்பு , அப்படித்தானே ?’

முதலையும் முதலையும் ஒப்பிட்டு ஒத்திசைவுபடக் கேட்கும் வினா !

(உ) ‘அவரின் பேச்சு , என் சுண்டுவிரலைப்போல அழகானதா ?’

முதலும் சினையும் ஒப்பிடப்பட்டு வேறுபாடு (உறழ்ச்சி) காட்டிய வினா ! தவறானது !

இவ்வாறு - செப்பு , வினா , முதல் ,உறுப்பு , உறழ்வு , துணை ஆகியன எவ்வாறு பொருந்தச் செல்லவேண்டும் என்று காட்டியவர் தொல்காப்பியர் !

இந்த விரிவான ஆய்வு , நமக்கு ஒரு பேருண்மையைக் காட்டுகிரது !

அஃதாவது , தொல்காப்பியர் இலக்கணம் போதித்த ஒரு தமிழாசிரியர் ! கையில் பனையோலைச் சுவடியை வைத்துக்கொண்டு மாணவர்களுக்குப் பாடம் நடத்தியவர் ! அதனால்தான் மாணவர்களுக்கு வினா – விடை பற்றி இவ்வளவு நுணுக்கமாக எழுதியுள்ளார் ! ஆசிரியர் – மாணவர் என்றால் , வினா – விடை இல்லாமலா ?
===========
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (54)

Post by Dr.S.Soundarapandian on Sun Mar 24, 2013 12:54 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (54)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

குற்றியலுகரம் பற்றிப் பேசிய தொல்காப்பியர் , “அல்வழிப் புணர்ச்சி ஆயினும் சரி , வேற்றுமைப் புணர்ச்சி ஆயினும் சரி , புணர்ச்சியில் ஈடுபட்ட நிலைமொழிச் சொல்லின் ஈற்று உகரமானது முற்றியலுகரமாகவே நிற்கும் ! ” என்று தெளிவுபடுத்துகிறார் ! :-

“அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
எல்லா இறுதியும் உகரம் நிலையும் ” (குற்றியலுகரப் புணரியல் 3)

அல்லது கிளப்பினும் – அல்வழிப் புணர்ச்சியாக இருப்பினும் .

காசு + வந்தது = காசு வந்தது

இஃது அல்வழிப் புணர்ச்சி .

எப்படி ?
காசை வந்தது , காசுக்கு வந்தது , காசால் வந்தது – என்றெல்லாம் வேற்றுமை உருபுகளுக்கு இடம் தராத புணர்ச்சிதானே இது? எனவே , வேற்றுமை அல்லாத வழியில் புணர்ந்துள்ளதால் , இஃது அல்வழிப் புணர்ச்சி !


அல்வழி – அல்லாத வழி (= வேற்றுமை அல்லாத வழி)

வேற்றுமைக் கண்ணும் – வேற்றுமைப் புணர்ச்சிக் கண்ணும் .

காசு + பாட்டு = காசுப் பாட்டு

இது வேற்றுமைப் புணர்ச்சி .

‘காசின் மீதோ , காசுக்காகவோ பாடும் பாட்டு ’ என்று பொருள்பட்டு வேற்றுமைப் பொருள் தந்துள்ளதால் , இது வேற்றுமைப் புணர்ச்சி !

‘காசு வந்தது’ – இதிலுள்ள ‘காசு’ என்பதன் ஈற்று உகரம் முற்றியலுகரமே !அல்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டதால் குற்றியலுகரம் , முற்றியலுகரமாக ஆகிவிட்டது !

இதைப் போன்றே , ‘காசுப் பாட்டு’ என்பதிலுள்ள ‘காசு’ என்பதன் ஈற்று உகரமும் முற்றியலுகரமே ! இங்கே வேற்றுமைப் புணர்ச்சியில் ஈடுபட்டதால் , குற்றியலுகரம் முற்றியலுகரமாக மாறிவிட்டது !

இந்த நூற்பாவுக்கு ஒரு நூற்பாவுக்கு முன்பு , ‘உகரம் குறுகிடன்’ என்று குற்றியலுகரத்தைச் சொன்னார் தொல்காப்பியர் ; இங்கு , ‘உகரம் நிலையும்’ என்கிறார் ! அஃதாவது , குறுகாது , முழுமையாக – முற்றுகரமாக- நிலைக்கும் என்பது கருத்து !

‘காசு’ – என்று தனியாக உச்சரிக்கும்போது , ஈற்றுச் ‘சு’வை முழுமையாக( =‘சூ’ ஒலியில் முக்கால் அளவு ) உச்சரிக்க முடியாது ! எனவேதான் இந்த உகரத்தைக் குற்றியலுகரம் என்கிறோம் !

அதேபோன்று , ‘காசு வந்தது’ (இஃது அல்வழிப் புணர்ச்சி) எனச் சொல்லிப் பாருங்கள்? ‘காஸ் வந்தது’ என்றா சொல்கிறோம்? இப்படிச் சொல்ல முடிந்தால்தான் , ‘சு’விலுள்ள உகரத்தைக் குற்றியலுகரம் எனக் கூறமுடியும் ! ஆனால் , நாம் ‘சு’க்குச் , ‘சூ’வின் முக்கால் பங்கு ஒலியைக் கொடுத்து உகரத்தை முழுமையாக உச்சரிக்கிறோம் ! முழுமையாக உச்சரித்தால் அதுதானே முற்றியலுகரம் ?
குற்றியலுகரப் புணரியலின் முதலிரு நூற்பாக்களில் குற்றியலுகரத்தை ஓதினார் தொல்காப்பியர் ! ஆனால் . இதற்காகப் புணர்ச்சிகளின் இடையே வரும் உகரத்தைக் குற்றியலுகரம் எனக் கருதிவிடாதீர்கள் என்று சொல்லவேண்டிய கட்டாயம் அவருக்கு வந்ததால் , மூன்றாம் நூற்பாவில் மேலைக் கருத்துகளை அமைத்தார் !

‘காசு பெரிது’ (அல்வழிப் புணர்ச்சி)
‘நாட்டு வரும்படி’ (வேற்றுமைப் புணர்ச்சி)

இந்த இரு சொற்றொடர்களையும் உச்சரித்துப் பாருங்கள் ! ‘காஸ் பெரிது’ என்று உச்சரிக்கிறீர்களா? இல்லை , உகரத்தை முழுதாக்கிக் ‘காசு பெரிது’ என்று உச்சரிக்கிறீர்களா ?

நீங்கள் சொல்லும் விடைதான் தொல்காப்பியர் கூறவந்தது !

‘காசு பெரிது’ , ‘நாட்டு வரும்படி’ – இங்கெல்லாம் , ‘சு’ , ‘டு’க்களை முழுமையாகத்தான் உச்சரிக்க வேண்டும் !

உங்களுக்கு இதில் குழப்பம் இருந்தால் மேலும் விளக்கலாம் !

‘வரு ’– இதிலுள்ள உகரம் குற்றியலுகரமா ? முற்றியலுகரமா?

குற்றியலுகரம் !

ஆனால் , இதை விளங்கிக் கொள்ள வேண்டுமானால் மலையாளிகள் பேசும்போது கவனியுங்கள் ! ‘இங்ஙோட்டு வரு’ என்று , ‘ரு’வை ‘ரூ’ வின் முக்கால் பங்கு ஒலியில் உச்சரிப்பார்கள் ! அதுதான் சரியான முற்றியலுகரம் !

மிகப் பழந்தமிழின் எச்சங்களை நாம் மலையாள மொழியில் காணலாம் என்பதற்கு இந்த இடம் ஒரு சான்று !

இந்தத் தெளிவுடன் மேலை ஆய்வைப் பார்த்தால் உங்களுக்கு எல்லாமே விளங்கும் !

================
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by mbalasaravanan on Mon Mar 25, 2013 3:05 am

அருமையிருக்கு
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 739

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by mohu on Tue Mar 26, 2013 3:38 am

அருமையான விளக்கம் அய்யா, அனைத்து தமிழர்களுக்கும் கிடைத்த நல்ல வாய்ப்பு, பயன்படுத்தி கொள்ளுங்கள் .
avatar
mohu
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 125
மதிப்பீடுகள் : 35

View user profile http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Post by mohu on Tue Mar 26, 2013 11:44 pm

சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம் , சிலம்பு + ஆட்டம் = சிலம்பாட்டம் , இந்த வேறுபாடு எவ்வாறு வருகின்றது. இதை தெளிவுப்படுதவும் .
நன்றி .
avatar
mohu
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 125
மதிப்பீடுகள் : 35

View user profile http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (55)

Post by Dr.S.Soundarapandian on Fri Mar 29, 2013 5:20 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (55)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘அவருக்குத் தந்த விருது ’
‘அவருக்கு வந்த கடிதம்’
‘அவரிடம் ஒருவர் வந்தார் ’
‘ அவருக்கு அரசு உதவித் தொகை தந்தது ’
‘என்னிடம் புத்தகம் கொடுத்தான் ’
‘ உன்னிடம் பூமாலை கொடுத்தாள் ’
‘அவளிடம் ஒருவன் வந்தான் ’
‘உன்னிடம் வழக்கறிஞர் சென்றார் ’

-இந்தத் தொடர்களை இன்று எல்லோரும் வழக்கமாக எழுதுகிறோம் !

ஆனால் ,இந்தத் தொடர்கள் யாவுமே பிழையானவை !

நான் சொல்லவில்லை !

தொல்காப்பியர் கூறுகிறார் ! :-


I . “அவற்றுள்
தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த ” (கிளவியாக்கம் 29)

II . “ ஏனை இரண்டும் ஏனை இடத்த ” (கிளவியாக்கம் 30)

இவற்றை விளக்குவோம் !

I . ‘தருசொல் ’ – ஒரு பொருளைத் தருதலைக் குறிக்கும் சொல் .

தந்தான் , தருகிறான் , தருவான் – இவை தருசொற்கள் !

‘வருசொல் ’ – ஒருவரோ ஒன்றோ வருவதைக் குறிக்கும் சொல் !

வந்தான் , வருகிறான் , வருவான் – இவை வருசொற்கள் !

தருசொல்லானாலும் , வருசொல்லானாலும் இவை இரண்டுமே தன்மை (First person)இடத்தும் ,முன்னிலை (Second person)இடத்தும் மட்டுமே வரவேண்டும் ; படர்க்கைக்குச் (Thirdperson)செல்லக் கூடாது !

இந்த விதியினைப் பயன்படுத்தி வருமாறு தொடர்களை எழுதவேண்டும் ! :-

1. ‘என்னிடம் விளக்கைக் கொடுத்தான்’ ×
‘என்னிடம் விளக்கைத் தந்தான் ’ √

2 . ‘என்னிடம் பேச வருவான் ’ √
‘என்னிடம் பேசச் செல்வான் ’ ×

3 . ‘ உங்களிடம் கேட்கப் போவான் ’ ×
‘ உங்களிடம் கேட்க வருவான் ’ √

4 . ‘ உன்னிடம் காசு கொடுப்பான் ’ ×
‘ உன்னிடம் காசு தருவான் ’ √

II . இரண்டாம் நூற்பாவில் , ‘ஏனை இரண்டும்’ என்று தொல்காப்பியர் குறித்தவை , ‘செலவு’ம் , ‘கொடை’யும் ஆகும் !

இதனைச் ,

“செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்
நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும்
தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
அம்மூ விடத்தும் உரிய என்ப ” !

- என்ற நூற்பாவால் அறிகிறோம் !

1 . ‘செலவு’ - செல்லுதல் .
சென்றான் , செல்கிறான் , செல்வான் – என்பவை செலவைக் குறித்தவை !

2 . ‘கொடை ’ – கொடுத்தல் .
கொடுத்தான் , கொடுக்கிறான் , கொடுப்பான் – இவை கொடை குறித்தவை !

செல்லுதலையும் கொடுத்தலையும் படர்க்கை இடத்தில்தான் கூறவேண்டும் என்பது தொல்காப்பியர் விதி !

இவ் விதிப்படி , வருமாறு தொடர்கள் அமைய வேண்டும் ! :-

1. . ‘அவளிடம் ஒருவன் வந்தான் ’ ×
‘ அவளிடம் ஒருவன் சென்றான்’ √

2 . ‘அவனுக்குப் பாலைத் தந்தாள்’ ×
‘அவனுக்குப் பாலைக் கொடுத்தாள்’√

3 . ‘எனக்குப் பால் கொடுத்தாள்’ ×
‘எனக்குப் பல் தந்தாள்’ √

4 . ‘அவரிடம் அவள் சென்றாள்’ √
‘அவரிடம் அவள் வந்தாள்’ ×

மேலே கண்ட இரு விதிகளும் அற்புதமானவை ! தமிழின் சிறப்பைக் காட்ட வல்லவை ! நல்ல காரண காரியத் தொடர்பு (Logic) பெற்றவை !

ஆனால் தமிழறிஞர்கள் இந்தத் தெளிவைக் கைவிட்டுவிட்டார்கள் !

எப்போது கைவிடப்பட்டன ?

நன்னூலார் காலத்திற்கு (கி.பி. 1300) முன்பே , நாம் மேலே பார்த்த தொல்காப்பிய விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டன !

இதற்குக் கீழ்வரும் நன்னூல் நூற்பா சான்று ! :-

“தரல்வரல் கொடைசெலல் சாரும் படர்க்கை” (நன்னூல் 381)

இனிமேலாவது மேலைத் தொல்காப்பிய விதிகளை நாம் பின்பற்றலாம் என்பதே எனது கருத்து !

தமிழ் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் இதனைச் செவிமடுக்க வேண்டும் !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (56)

Post by Dr.S.Soundarapandian on Sat Mar 30, 2013 5:04 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (56)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

வண்ணச் சினைச் சொல் ’ – என்பது , தொல்காப்பியர் காட்டும் ஒரு புதிய இலக்கணக் கலைச் சொல் ( Grammatical technical term) !

‘முரசுக் கால் யானை’ – இஃது ஒரு வண்ணச் சினைச் சொல் !

இதற்குத் தொல்காப்பிய நூற்பா ! :-

“அடைசினை முதலென முறைமூன்றும் மயங்காமை
நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல்” ! (கிளவியாக்கம் 26)

மேல் எடுத்துக் காட்டில் ‘

‘முரசு ’ – அடை (Adjective)
‘கால்’ – சினை (உறுப்பு)
‘யானை’ – முதல் (உறுப்பைக் கொண்டுள்ள உடல் ; முதன்மைச் சொல் ; Head word)

‘முரசுக் கால் ’ – இதுவே வண்ணச் சினைச் சொல் !

‘முரசு’ என்பதில் வண்ணம் எங்கே உள்ளது என்கிறீர்களா ?

‘வண்ணம் ’ எனத் தொல்காப்பியர் கூறியது நிறத்தை மட்டும் அல்ல !

வண்ணம் – குணம் ; பண்பு ; வகை

‘அவ் வண்ணமே கோரும் ’ ; ‘நல்ல வண்ணம் வாழலாம்’ ; ‘கை வண்ணம் அங்குக் கண்டேன்’ – ஆகிய தொடர்களில் ‘வண்ணம்’ என்பதற்கு இப் பொருள்கள் உள்ளதைக் காணலாம் !

நிறத்தைக் குறிக்கும் சொல்லும் அடையாக வரலாம் ; வேறு பண்புளைக் குறிக்கும் சொற்களும் அடையாக வரலாம் !

கருங் குருவி – நிறம் அடையாக வந்தது .
சிட்டுக் குருவி – சிறுமைப் பண்பு அடையாக வந்தது .

‘முரசுக் கால் யானை’யில் வந்துள்ளது போன்றே அடை , சினை , முதல் மூன்றும் இதே வரிசையில் வரவேண்டும் என்பதே தொல்காப்பியர் விதி !

இந்த முறையை ( Sequence ) மாற்றினால் அது பிழை ! :-

யானைக் கால் முரசு ×
கால் முரசு யானை ×
முரசு யானைக் கால் ×

சங்கப் புலவர்களின் பெயர்களை ஆராய்ந்தால் , தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு வண்ணச் சினைச் சொற்கள் தமிழில் நிரம்ப இருந்தமையை அறியலாம் ! :-

பெருந் தலைச் சாத்தனார்
தாமப் பல் கண்ணனார் (தாமப் பல் - ஒழுங்கான வரிசைப் பல்)
குண்டு கட் பாலியாதனார்
கடுந் தோட் கரவீரன்
நெடும் பல் இயத்தை
நெடுங் கழுத்துப் பரணர்
நரை முடி நெட்டையார்

- இப் புலவர்கள் பெயர்களில் வண்ணச் சினைச் சொல் பயின்றுள்ளமையைக் காணலாம் !

இன்றும் கிராமங்களில் கேலியாக ,

ஆந்தைக் கண் மீனா
திக்கு வாய் மணி
சட்டி மண்டை பாலு
கோணக் காலி ராமாயி

- என்றெல்லாம் வண்ணச் சினைச் சொற்களைப் பயன்படுத்தக் காணலாம் !

இதனால் தொல்காப்பியர் விதிகள் கற்பனை உலகுக்கானவை அல்ல ; உண்மைத் தமிழ் உலகுக்கே என்பதை உணரலாம் !

மேலே நாம் கண்ட புலவர் பெயர்களின் ஈற்றில் , ‘ஆர்’ விகுதி வந்துள்ளதல்லவா ? இதனை மரியாதைப் பன்மை விகுதி அல்லது மதிப்புப் பன்மை விகுதி (Honorific suffix) என்பர் !

இத்தகைய மதிப்புப் பன்மை வரலாமே அல்லாமல் , பன்மைப் பொருள்பட ஒருமைப் பெயரை எழுதக் கூடாது ! :-

நக்கீரர் படைத்தார் √
நக்கீரர் படைத்தனர் ×
நக்கீரர் படைத்தார்கள் ×

ஔவையார் படினார் √
ஔவையார் பாடினார்கள் ×
ஔவையார் பாடினர் ×


குதிரை ஓடிற்று √
குதிரை ஓடின ×
குதிரையார் ஓடினார் √

குருவி பறந்தது √
குருவி பறந்தன ×
குருவியார் பறந்தார் ×

இதற்குத் தொல்காப்பியர் விதி ! :-

“ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கினாகிய உயர்சொற் கிளவி
இலக்கண மருங்கின் சொல்லா றல்ல” ! (கிளவியாக்கம் 27)

இதில் , “உயர்வுக்காக ,வழக்கில் , ஒருமையைப் பன்மையாகப் பேசுகிறார்கள் ; நான் அறிவேன் ! ஆனால் , இஃது இலக்கணப்படி தவறு !” என்ற தொல்காப்பியர் குரல் ஒலிக்கிறதல்லவா ?

அதை நாம் காது கொடுத்துக் கேட்டால் என்ன ?

=============
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (54)

Post by Dr.S.Soundarapandian on Sat Mar 30, 2013 5:27 am

மோகு அவர்களுக்கு நன்றி ! நல்ல கேள்வி !
இரும்பு , இருப்பு என்றும் கரும்பு, கருப்பு என்றும் விகாரப்பட்டு வருவது போலவே, முதலில் சிலம்பு, சிலப்பு என விகாரப்பட்டு நிற்கிறது ! அதன் பின் , சிலப்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம் ஆகிறது ! இங்கே விதி- “ உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும் “ என்பதாகும் .
சிலம்பு + ஆட்டம் = சிலம்பாட்டம் என்பதில் , சிலம்பு எந்த விகாரமும் அடையாமல் அப்படியே நிற்கிறது ; அதன் பின் மேலை இலக்கண விதிப்படிச் சிலம்பாட்டம் ஆகிறது !
நாமிருவரும் சிறிது நேரம் தமிழ்ச் சிலம்பாட்டம் ஆடியதில் மகிழ்ச்சிதானே ?
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்.,டிப். (வடமொழி),பி.எச்டி.,
சென்னை-33
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Page 3 of 28 Previous  1, 2, 3, 4 ... 15 ... 28  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum