ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 M.Jagadeesan

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 SK

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 krishnanramadurai

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 ayyasamy ram

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Page 27 of 29 Previous  1 ... 15 ... 26, 27, 28, 29  Next

View previous topic View next topic Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Dr.S.Soundarapandian on Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம் (436)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 21, 2016 12:38 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (436)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்


கிளவியாக்கத்தில்  நிற்கிறோம் !

இப்போது  இரட்டைக்  கிளவி !

இரட்டைக்  கிளவிக்குத் தொல்காப்பியர் விதி ! –
“இரட்டைக்  கிளவி  இரட்டிற்பிரிந்  திசையா”  (கிளவி. 48)

‘செய்தி கேட்டு அவள் படபடத்தாள் !’
- இதில் வந்துள்ள  ‘படபட ’  , இரட்டைக் கிளவி !

ஏனெனில் ,  ‘செய்தி கேட்டு அவள் படத்தாள் !’ எனக் கூறமுடியாது !

எனவே , இவ்வாறு இரண்டாக வந்து , தனியாகப் பிரிய இயலாது உள்ளதல்லவா? இதுதான் ‘இரட்டைகிளவி’ க்கு இலக்கணம் !  ‘இரட்டிற்பிரிந்  திசையா”  எனத் தொல்காப்பியர் சொன்னது இதைத்தான் !

இதற்குமேல் தொல்காப்பியர் இலக்கணம் சொல்லவில்லை !

ஆனால் , சேனாவரையர் , மேலும் இலக்கணம் வரைகிறார் !

இசை பற்றியும் , குறிப்பு பற்றியும் , பண்பு பற்றியும் இரட்டித்து வருவதே ‘இரட்டைக் கிளவி’ என்பது சேனாவரையர் இலக்கணம் !

சேனாவரையர் காட்டிய எடுத்துக்காட்டுகளின்படி –

இசை பற்றி வந்த இரட்டைக்கிளவி –
1 . மொடுமொடுத்தது   ( ‘மொடுமொடு’ன்னு  ஏதோ உடையும் ஓசை கேட்கிறதா? இதுதான்  ‘இசை’ பற்றி வந்த இரட்டைக் கிளவி !)

குறிப்புப்  பற்றி வந்த இரட்டைக்கிளவி –
2 . மொறுமொறுத்தார்   ( ‘மொறுமொறு’  என்பதில்  அவரின் சினக் குறிப்புத் தெரிகிறதல்லவா?  இதுதான்  ‘குறிப்பு’ பற்றி வந்த இரட்டைக் கிளவி !)

பண்பு பற்றி வந்த இரட்டைக்கிளவி –

3 . கறுகறுத்தது   ( ‘கறுகறுத்தது’ என்பதில் மேகம் போன்ற ஒன்றின் கரிய பண்பு புலனாகிறதல்லவா?   இதுதான்  ‘பண்பு’ பற்றி வந்த இரட்டைக் கிளவி !)

‘கடகட’  - இஃது இரட்டைக் கிளவிதான் !

ஆனால் , இஃது ஏதாவது ஒரு தொடரில் வரவேண்டும் !

‘கடகட என்று பேசினான்’ ! – இங்கு தொடரில் வந்துள்ளது ! இபோதுதான் ‘கடகட’ என்பதை இரட்டைக் கிளவி எனக்  கூறமுடியும் !

ஏதாவது சொற்கள் இரட்டித்து வந்தால் அது இரட்டைக் கிளவி ஆகாது ! -
1. துன்துன் ×
2 . சூள்சூள் ×
   3 . பணபண ×

மேலு சில எடுத்துக்காட்டுகளை இரட்டைக்கிளவியை விளக்கத் தரலாம் ! –

1 . மிதிவண்டி கடகடக்கிறது √  (இங்கே  ‘இசை’ பற்றி வந்த இரட்டைக் கிளவி      
பயின்றுள்ளது !)
2. ஓலை சலசலக்கிறது √  (இங்கேயும்  ‘இசை’ பற்றி வந்த இரட்டைக் கிளவி      
பயின்றுள்ளது !)

3 . மாலதி சிடுசிடுத்தாள் √  (இங்கே  ‘குறிப்பு’ப்  பற்றி வந்த இரட்டைக் கிளவி      
பயின்றுள்ளது !)
4 . பூங்கொடிக்கு  சில்லுச் சில்லுன்னு  கோபம் வருது √  (இங்கேயும்  ‘குறிப்பு’ப்  பற்றி      
வந்த இரட்டைக் கிளவி  பயின்றுள்ளது !)

5 . மனசு அவளுக்குக்  குறுகுறுக்கிறது √  (இங்கே  ‘பண்பு’ பற்றி வந்த இரட்டைக் கிளவி      
பயின்றுள்ளது !)
6 . கருகரு  என்று கூந்தல் அவளுக்கு  √  (இங்கேயும்  ‘பண்பு’ பற்றி வந்த இரட்டைக்      
கிளவி பயின்றுள்ளது !)

ச.பாலசுந்தரனார் இரு எடுத்துக்காட்டுகளைத் தந்தார் அவரது ஆய்வில் !
1 . வரிவரியாக எழுதினான்
2 . படிப்படியாக முன்னேறினான்  

ஆனால் இவற்றில் இசையோ , குறிப்போ, பண்போ இல்லை என்பது அவரது வாதம் !

  ‘வரிவரி’ – இதை ஏன் இரட்டைக் கிளவி என்கிறோம் ?
‘வரியாக  எழுதினான் ’ எனக் கூறமுடியாது ! ‘வரிவரியாக  எழுதினான் ’ எனக் கூறமுடியும் ! – இதுதான் அளவுகோல் !

‘படியாக முன்னேறினான்’ – கூற முடியாது !
‘படிப்படியாக முன்னேறினான்’ – கூற முடியும் !

எனவே,
படிப்படி – இரட்டைக் கிளவி !

ச.பாலசுந்தரனாரின் இந்த ஆய்வைக் கொண்டு , பிற்கால  இரட்டைக் கிளவிகளில்  , ‘இசை , குறிப்பு, பண்பு  ஆகியவற்றின் அடிப்படையிலேதான் இரட்டைக் கிளவி வரமுடியும்’ என்ற வரையறையைக் கொள்ளமுடியாது என மதிப்பிடுகின்றனர் !

இரட்டைக் கிளவி பற்றி மேலும் சில சிந்திக்கலாம் !
 ‘விழுந்து விழுந்து படித்தான்’ -  இங்கே இரட்டைக் கிளவி வந்துள்ளதா?
ஆம் ! வந்துள்ளது !
‘விழுந்து படித்தான்’ என வர முடியாதல்லவா?

 ‘கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள்’ - இங்கே இரட்டைக் கிளவி வந்துள்ளதா?
இல்லை ! வரவில்லை !
‘கேட்டு  வாங்கிச் சாப்பிட்டாள் ’ என வர முடியுமல்லவா?
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by M.Jagadeesan on Sun Aug 21, 2016 2:25 pm

"இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா " என்கிறது தொல்காப்பியம்.

• மள மளன்னு வேகமாக வேலையை முடி.
• இதில் மள மள என்பது இரட்டைக்கிளவி ஆகும்.
• மள என்பது தனித்துப் பார்த்தால், அச்சொல் பொருள் தராது.


நீர் சலசலவென்று ஓடியது.
இதில் " சலசல " என்பது இரட்டைக்கிளவி . "சலசல " என்பதைப் பிரித்தால் " சல " , " சல " என்று பிரியும்.
" சல " என்ற சொல்லுக்குப் பொருள் இல்லை .

ஆனால்

வரிவரியாக எழுதினான் என்ற தொடரில் " வரிவரி " என்பது இரட்டைக்கிளவி என்கிறார் ச. பாலசுந்தரனார் .
" வரிவரி " என்பதை " வரி ", " வரி " என்று பிரிக்கலாம் . இதில் " வரி " என்ற சொல் தனித்துநின்று பொருள் தருகிறது.எனவே இது இரட்டைக்கிளவி ஆகுமா ?

இதேபோல

" படிப்படி " என்ற சொல்லைப் பிரித்தாலும் " படி " என்ற சொல் தனித்து நின்று பொருள் தருகிறது .எனவே இது இரட்டைக்கிளவி ஆகுமா ?

"விழுந்து விழுந்து படித்தான் " என்பது கொச்சையான வழக்கு . பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளது . அதற்கு இலக்கணம் பார்க்க முடியுமா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5004
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 21, 2016 5:59 pm

நன்றி ஜெகதீசன் அவர்களே !

‘வரி’ என்பது தனித்து நின்று பொருள் தரும்தான் : ஆனால் ‘வரியாகப் படித்தான்’ என்று தனித்து வராதே? இதுதான் நான் விளக்கியது ! ‘படி’க்கும் இதே விளக்கம் கொள்க. பேச்சு வழக்குத் தமிழும் இலக்கணத்திற்கு உட்பட்டதுதான் ! ‘எழுத்தும் வழக்கும் நாடி’ இலக்கணம் செல்வது நல்லதுதானே?
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by M.Jagadeesan on Sun Aug 21, 2016 6:23 pm

ஐயா !

நீங்கள் "வரி " என்ற சொல்லை வாக்கியத்தில் வைத்துப் பார்த்து ( வரியாகப் படித்தான் ) பொருள் தரவில்லை என்று சொல்கிறீர்கள் .இரட்டைக்கிளவி இலக்கணம் அப்படிச் சொல்லவில்லையே !

" இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா " என்பதுதானே இலக்கணம் . " வரி " என்று தனியாகப் பிரித்தால் பொருள் தருவதால் அது இரட்டைக்கிளவி அல்ல என்பது என் கருத்து.

அடிஅடியென்று அடித்தான்.
பிட்டுபிட்டு வைத்தான் .

இவையெல்லாம் இரட்டைக்கிளவி ஆகுமா ?

" விழுந்து விழுந்து " படித்தான் என்பதும் இரட்டைக்கிளவி ஆகாது என்பதே என் கருத்து. ஏனெனில்
" விழுந்து " என்ற சொல் தனித்துப் பொருள் தருவது காண்க .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5004
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (437)

Post by Dr.S.Soundarapandian on Thu Aug 25, 2016 1:12 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (437)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஒரு தோப்பில்  தென்னை மரங்கள் நிறைய  உள்ளன ; ஆனால் இடையிடையே வேறு சில மரங்களும் இருக்கின்றன !

- இப்போது , அத் தோப்பை  எப்படி அழைப்பது ?

  ‘தென்னந் தோப்பு’ என அழைக்கலாமா?

   ‘தென்னந் தோப்பு’ என்றுதான் சுட்டவேண்டும் என்கிகிறார் தொல்காப்பியர் !

     இடையிடையே வேறு சில மரங்கள் இருந்தால் அதுபற்றிக் கவலைப்படாதீர்கள் ! – இது தொல்காப்பியர் வாதம் !

   ஆம் !  ‘பெரும்பான்மை’ (Majority)  என்ற தத்துவத்தை முதலில்  தந்தது அரசியல் அல்ல ! மொழிதான் !

 இதற்குத் தொல்காப்பியத்தின் இந்த இடமே  சான்று!

  ஆகவே , இலக்கண ஆய்வு என்பது சமுதாயத்தைவிட்டு விலகி நிற்பது என்று எவரும் எண்ணவேண்டாம் !  இலக்கண ஆய்வும் சமுதாய ஆய்வே !

சென்னையியில் ஒரு  வட்டாரத்தில்  அதிகாரிகள்  வீடுகள் நிறைய உள்ளன ; அந்தப் பகுதியைத்   தானிக்காரர்கள் (Automen )  , ‘ இது விஐபி  ஏரியாங்க !’ என்கிறார்கள் ! அப்
பகுதியில்  ஏழை எளிய மக்களும் வாழ்கிறார்கள் ! இது அவர்களுக்கும் தெரியும் ! ஆனாலும்  ‘ இது விஐபி  ஏரியாங்க !’ என்கிறார்கள் !

தொல்காப்பியர் கூறும் தமிழ் மரபைத்தான் அவர்கள் பின்பற்றியுள்ளனர் !

இங்கே , அதிகாரிகள் வீடுகள் எண்ணிக்கையில் மற்ற வீடுகளைவிடக் குறைவாகக்கூட இருக்கலாம் ! ஆனாலும் அப்பகுதி ‘விஐபி ஏரியா’தான் !

ஏன்?

மக்களில் தலைமையானவர்கள் அதிகாரிகள் ! (இது சரியா தவறா என்பது வேறு வாதம் !)

   ஆகவே , ‘தலைமைப் பண்பு’ பற்றிப் பார்க்கும்போது ‘விஐபி ஏரியா’ எனக் குறிப்பதுதான் , தொல்காப்பியர் இலக்கணப்படி சரியாகும் !

    தாவரங்களாலும் மக்களானாலும் ஒரு வட்டாரத்தில் உள்ள பெரும்பான்மை அல்லது தலைமைப் பண்பு பற்றித்தான் அப் பகுதி அழைக்கப்பட வேண்டும் !

    இதுதான் தொல்காப்பியர் ஆணை !-
“ஒருபெயர்ப் பொதுச்சொ  லுள்பொரு ளொழியத்
தெரிபுவேறு  கிளத்தல் தலைமையும்  பன்மையும்
உயர்திணை மருங்கினு மஃறிணை மருங்கினும்”  (கிளவி. 49)

‘உயர்திணை மருங்கினும்  அஃறிணை மருங்கினும்’ -  உயர்திணையாக இருந்தாலும் அஃறிணையாக இருந்தாலும் ,
‘தலைமையும்  பன்மையும்’ – தலைமைப் பண்பையும் பெரும்பான்மைப்  பண்பையும் நோக்கி,
‘உள்பொருள் ஒழிய’  - இடையே வேறு வகையின இருப்பினும், அவற்றைக் கருத்திற் கொள்ளாது,
‘ஒருபெயர்ப் பொதுச்சொல்  ’ – ஒரு சொல்லைக்  கொண்டு,
‘கிளத்தல்’ – சொல்லுக!

     இங்கு சேனாவரையர் எழுதிய எடுத்துக்காட்டுகளையும் பார்க்கலாம் ! –
1 .  ‘பிறரும் வாழ்வா ருளரேனும்  பார்ப்பனச் சேரி யென்றல் உயர்திணைக்கண் தலைமை பற்றிய வழக்கு!’

சேனாவரையர் உரைப்படி , பார்ப்பன மக்கள் , பிற இனத்தவரைவிடத் தலைமையானர்கள் அந்நாளில் !

2. ‘எயினர் நாடென்பது  அத் திணைக்கண்  பன்மைபற்றிய வழக்கு’ !

3. ‘பிற புல்லும் மரனும் உளவேனும்  கமுகந் தோட்டம் என்றல் அஃறிணைக்கண் தலைமை பற்றிய வழக்கு’ !
(மரன் - மரம்)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Dr.S.Soundarapandian on Thu Aug 25, 2016 2:24 pm

நன்றி ஜெகதீசன் அவர்களே!

அடிஅடியென்று அடித்தான்.
பிட்டுபிட்டு வைத்தான் .

இவையெல்லாம் இரட்டைக்கிளவி ஆகுமா ?- சரியான கேள்வி !

இவை இரட்டைக் கிளவி ஆகா!

ஏனெனில் , ‘அடி அடித்தான்’ - கூற முடியும் !

‘பிட்டு வைத்தான்’ ‘ - கூறமுடியும்!’

தொல்காப்பியரின், ‘இரட்டிற் பிரிந்திசையா’ என்பதிலுள்ள ‘இசையா’ என்பதைக் கவனிக்கவேண்டும் !

தொடரோடு இசைந்து வரவேண்டும் என்ற கருத்து அதிலுள்ளது !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (438)

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 27, 2016 6:43 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (438)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘தொடியோர் வந்தார்’ -   என்றதும் என்ன நினைக்கிறோம் ?

யாரோ ஒரு பெண் வந்தார் என நினைக்கிறோம் ! இல்லையா?
-
இது சரிதான் !

ஆனால் சிந்தித்துப் பார்த்தால் , ‘தொடி’ என்பது , பெண் மட்டுமே அணியும் வளையலையும் குறிக்கும்; அத்துடன் ஆண்கள் அணியும் காப்பு , தோள் வளையமாகிய கடகத்தையும் குறிக்கும் !
இப்படி இருந்தும் ஏன் பெண்ணை மட்டும் நினைத்தோம் ?

- இதுதான் ‘மரபு ’ என்பது !

மேலே , ‘தொடியோர்’ என்பது பெயர்ச் சொல் ; சரியாகச் சொன்னால் , ‘வினையாலணையும் பெயர்’; உயர்திணைச் சொல்;  இது , பொதுமையிலிருந்து பிரிந்து , பெண்மைக்குரியதாய் வந்தது !

சேனாவரையர் நடையில்  சொல்வதானால் , ‘உயர்திணைக்கண் , பெயரிற் பிரிந்த , ஆணொழி மிகு சொல் ’!

இதைப் போன்றே , ‘கட்டிலேறினார்’ என்றால் , வீட்டுக்கட்டிலில் தூங்குவதற்கு ஏறியதையெல்லாம் குறிக்காது ! அரசன் ஆட்சி அரியணையில் ஏறியதையே குறிக்கும் !
‘கட்டிலேறிதல்’ ஒரு தொழில்தானே? எனவே , சேனாவரையர் நடையில் , இதனை ( ‘கட்டிலேறினார்’என்பதை) , ‘தொழிலில் பிரிந்த பெண்ணொழி மிகு சொல்’ எனல் வேண்டும் !

இவற்றுக்குத் தொல்காப்பிய விதி –
“பெயரினும் தொழிலினும் பிரிபவை யெல்லாம்
மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன” (கிளவி. 50)

மேலும் ஒரு   சேனாவரையர் எடுத்துக்காட்டுக்கு  விளக்கம் ! –
1 .  ‘வாழ்க்கைப் பட்டார்’ !  ஆணும் பெண்ணும் சேர்ந்துதானே வாக்கையில் நுழைகிறார்கள்?  ஆனால்   ‘வாழ்க்கைப் பட்டார்’ என்றதும் நாம் பெண்ணைத்தானே நினைக்கிறோம் ?

இது , ‘தொழில் பிரிந்த ஆணொழி மிகு சொல்!’
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (439)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 04, 2016 9:44 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (439)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

“குமணன் வள்ளி அருணன்
மான் மீன் இவை ஐந்தும் “ -  என்று ஒரு பாடலில் வந்தால் ,
இது சரியா ? தவறா?

குமணன், வள்ளி, அருணன் – உயர்திணைப் பெயர்கள்
மான், மீன் – அஃறிணைப் பெயர்கள்

உயர்திணைச்சொற்களும் அஃறிணைச் சொற்களும் கலந்து வந்து , ‘இவை’ என அஃறிணை முடிவு கொள்ளலாமா?

‘கொள்ளலாம்’  என்கிறார் தொல்காப்பியர் !

‘ஆனால் இது பாட்டுக்கு மட்டும் , பெயர்களை அடுக்கி வரும்போதுமட்டும்தான் பொருந்தும் ‘ என்று அவர் கூறுகிறார் !

தொல்காப்பியர் விதி இதுதான் ! :-
“பலவயி  னானும் எண்ணுத்திணை விரவுப்பெயர்
அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே ”

‘பலவயினானும்’ – பல வகைப் பெயர்களும்,
‘திணை விரவு’ – உயர்திணையும் அஃறிணையும் கலந்து,
‘எண்ணுப் பெயர் ’ – எண்ணிவரும் எண்ணுப் பெயர்களாக வந்தால் ,
‘அஃறிணை முடிபின செய்யுள் உள்ளே’ – பாடலில் , அஃறிணை முடிவைக் கொள்ளலாம் !

இதற்குச் சேனாவரையர் எடுத்துக்காட்டு –

1 . “வடுகர் அருவாளர் வான்கரு  நாடர்
சுடுகாடு பேயெருமை என்றிவை யாறுங்
குறுகா ரறிவுடையார்”

(இப் பாடலில் , வடுகர் , அருவாளர் , கருநாடர் ஆகியன உயர்திணைப் பெயர்ச் சொற்கள் ; சுடுகாடு , பேய் , எருமை ஆகியன அஃறிணைப் பெயர்ச்சொற்கள் ; ஆனால் இந்த ஆறும் , இறுதியில்  ‘என்று இவை’ என அஃறிணை முடிவு கொள்வதைக் கவனியுங்கள் !)

ஆனால் , சிலப்பதிகாரத்தில் , உயர்திணை , அஃறிணை கலந்து (விரவி) வந்து உயர்திணை முடிவே கொள்கிறதே?

இந்த ஐயத்தைப் போக்குகிறார் சேனாவரையர் !-
‘சிறுபான்மை உயர்திணைச் சொற்கொண்டு முடியவும் பெறும்’ என்று கூறி , அச் சிலப்பதிகார அடிகளைக் காட்டுகிறார் சேனாவரையர் ! -

“பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டு” (சிலம்பு- வஞ்சினம்)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by M.Jagadeesan on Mon Sep 05, 2016 12:10 pm

ஐயா ! ஓர் ஐயம்.

காலையில் இராமன் ,ஆடுகளையும் , மாடுகளையும் மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றான் .

மாலையில்

இராமனும் , ஆடுகளும் , மாடுகளும் வீடு திரும்பினர் என்பது சரியா ?

அல்லது

இராமனும் , ஆடுகளும் , மாடுகளும் வீடு திரும்பின என்பது சரியா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5004
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Dr.S.Soundarapandian on Mon Sep 05, 2016 6:48 pm

நன்றி நண்பர் ஜெகதீசன் அவர்களே !

இராமனும் , ஆடுகளும் , மாடுகளும் வீடு திரும்பினர் என்பது சரியா ?-
இதுதான் சரி!

மேலே தொல்காப்பியர் சொன்னது செய்யுளில் , அதுவும் அடுக்கி வரும்போதுதான் பொருந்தும் !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by M.Jagadeesan on Mon Sep 05, 2016 7:21 pm

நன்றி ஐயா !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5004
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (440)

Post by Dr.S.Soundarapandian on Mon Sep 05, 2016 7:27 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (440)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மா – இஃது ஒரு பெயர்ச்சொல்.

      இதற்குக் , குதிரை , விலங்கு, மாமரம் , வண்டு என்றெல்லாம்  பல பொருள்கள் உண்டு !

இவ்வாறு , பல பொருள்களைத் தரக்கூடிய சொல்லைப் ‘பல பொருள் ஒரு சொல்’ என்பர் !

தொல்காப்பியர் இத் தகு ‘பல பொருள் ஒரு சொல்’ பற்றி யாத்துள்ள நூற்பா !-

“வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல்
 வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொலென்று
ஆயிரு வகைய பலபொரு ளொருசொல்”                       (கிளவி.52)


‘பல பொருள் ஒரு சொல்’  இரு வகைப்படும் ! –
     1 . வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல்
      2 . வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல்

1 . வினை வேறு படூஉம் பலபொருள் ஒருசொல் – என்றால் என்ன?
 
‘மாப் பூத்தது’ -  இத் தொடரில், ‘மா’ என்பது மரத்தை மட்டும்தானே குறிக்கிறது? ‘மா’வுக்குப் பல பொருள்கள் உண்டு என்பதை முன்பே பார்த்தோம் ! ஆனாலும் , ‘பூத்தது’ என்ற வினை,  மாமரத்திற்கே பொருந்துவதால் , ‘மா’ என்பது  ’ பலபொரு ளொருசொல்’லாக இருந்தாலும்,
இங்கு மரத்தை மட்டுமே குறிப்பதைக் கவனிக்க!

‘குதிரை பூத்தது’ , ‘விலங்கு பூத்தது’ என்றெல்லாம் வராது என்பதையும் நோக்குக!

‘பூத்தது’ என்ற வினை வேறுபாட்டால் , ‘மா’வுக்குரிய பல பொருள்களிலிருந்து , ‘மரம்’ என்ற ஒரு பொருளை மட்டும் நம்மால் கொள்ள முடிவதால் , ‘மா’வை ‘வினை வேறு படூஉம் பலபொருள் ஒருசொல்’என்கிறோம் !

2 . வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல் – என்றால் என்ன?

மீண்டும் ‘மா’வைப் பிடியுங்கள் !

‘மா’வுக்குக் குதிரை , விலங்கு என்றெல்லாம் பொருள்கள் உண்டு எனப் பார்த்தோமல்லவா? இந்த நிலையில் ,

‘மா வீழ்ந்தது’ என்று சொன்னால் , நமக்குக் குழப்பம் வருகிறது !

வீழ்ந்தது , மரமா? குதிரையா?

இங்கே , வினையைக் கொண்டு வேறுபாட்டை நாம் கொள்ள முடியவில்லை !

சற்று முன்பு ‘பூத்தது’ என்ற வினை கொண்டு சொல் வேறுபாட்டைக் கொள்ள முடிந்தது!

ஆனால் , ‘வீழ்ந்தது’ என்ற வினை கொண்டு சொல் வேறுபாட்டை  இங்கே கொள்ள முடியவில்லை !

இதனால் , ‘மா வீழ்ந்தது’ என்ற தொடரைப் பொறுத்தவரையில் , ‘மா ,  வினை வேறுபடாப் பலபொருள் ஒரு சொல் !

தொடரை வைத்துத்தான் , ஒரு சொல்லானது ‘வினை வேறுபடும் பல பொருள் ஒரு சொல்’ , ‘வினை வேறுபடாத பல பொருள் ஒரு சொல்’ எனத் தீர்மானிக்க இயலும் !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Hari Prasath on Mon Sep 05, 2016 7:33 pm

அருமையான விளக்கம் ஐயா..
"ஆ" என்பதும் இந்த வகையில் சேருமா?
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Dr.S.Soundarapandian on Thu Sep 15, 2016 9:59 pm

நன்றி ஹரிப்ரசாத் அவர்களே !

‘ஆ’ என்பதும் இந்த வரிசையில் சேரும் !
ஏனெனில் ,
ஆ = பசு ; பெண் எருமை , பெண் மான் , விதம் (manner) !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (441)

Post by Dr.S.Soundarapandian on Thu Sep 15, 2016 10:03 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (441)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘வினை வேறுபடும் பலபொருள் ஒருசொல்’ பற்றிச் சற்றுமுன்பு பார்த்தோம் !

வினை வேறுபடுவதோடு , இன்னும் சில அடையாளங்களை வைத்தும் ,  ‘வினை வேறுபடும் பலபொருள் ஒருசொல்’லுக்குப் பொருளை  நாம் தெளிவாக உணரலாம் என்கிறார் அடுத்த நூற்பாவில் தொல்காப்பியர்! –
“அவற்றுள்
வினைவேறு  படூஉம்  பலபொரு ளொருசொல்
வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும்
தேறத் தோன்றும் பொருள்தரி நிலையே”              (கிளவி . 53)

அஃதாவது -
1. வினை வேறுபடுதல்
2. இனத்தைக் காண்டல்
3. சார்பை நோக்கல்
- ஆகிய மூன்றைக் கொண்டு, வினை வேறுபடும் பலபொருள் ஒருசொல்லுக்கு  நாம் பொருளை நன்கு அறிந்துகொள்ளலாம் !

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில் இவற்றை விளக்கலாம் !
1. வினை வேறுபடுதல்
‘மாப் பூத்தது’ -  இங்கே ‘பூத்தது’ என்ற வினை மூலம், நாம் என்ன உணர்கிறோம் ?
‘மா’ என்பது பலபொருள் ஒருசொல்லாயினும் , அது குதிரையையோ, விலங்கையோ, வண்டையோ குறிக்கவில்லை; மாமரத்தை மட்டுமே குறித்தது என உணர்கிறோம் ! ஏனெனில் குதிரையோ , ஏனைய விலங்கோ, வண்டோ பூப்பதில்லை !  

2 .  இனத்தைக் காண்டல்
‘மாவும் மருதும் ஓங்கின’ – இங்கே வந்துள்ள பலபொருள் ஒருசொல்லாகிய ‘மா’வும் மரத்தையே குறிக்கும் என அறிகிறோம் ?

எப்படி?

அருகில் சொல்லைப் பாருங்கள் ; மருது ! மருது , ஒரு மரம் என்பது நமக்குத் தெரியும் ; எனவே அதன் இனமான இன்னொரு மரமாகத்தான் ‘மா’ இருக்கவேண்டும் எனத் தெளிகிறோம் ! மேலும் ‘ஓங்கின’ என்பதும் மரத்திற்கே பொருந்துகிறது !

3 .   சார்பை நோக்கல்
‘கவசம் புக்குநின்று மாக்கொணா’ – இதில் உள்ள ‘மா’ , குதிரையைக் குறிக்கும் .

எப்படி?
கவசத்தை அணிவித்து மாவக் கொண்டுவா என்றால் , ‘மா’ என்பது மரமாகவோ , வண்டாகவோ, ஏனைய விலங்காகவோ இருக்க முடியாதல்லவா?

இதனால் , சார்ந்துவரக்கூடிய கருத்தை ஒட்டி, நாம் பலபொருள் ஒருசொல்லின் பொருளை நாம் தெளியலாம் என ஏற்படுகிறதல்லவா?
சேனாவரையரை ஒட்டி நாம் வேறு சில எடுத்துக்காட்டுகளை நினைக்கலாமே?

1 . வினை வேறுபாடு
 ‘கொடி’ – இது ஒரு பலபொருள் ஒரு சொல் !
தாவரக் கொடி, துணிக் கொடி, துணி காயப்போடும் கம்பி முதலிய சில பொருள்கள் இதற்கு உண்டு !
ஆனால், ‘கொடி கிழிந்தது’ என்றால் ,  ‘கொடி’ என்பது கட்சிக்கொடியையே குறிக்கிறது ; இல்லையா?
இதுதான் வினை வேறுபாட்டால்  தெளிவது !

2 . இனம்
‘கொடி மரத்தைச் சுற்றி மேலேறியது’-  இங்கே , ‘கொடி’ , தாவரக் கொடியைக் குறிக்கிறது ! கொடியாகிய தாவரம் அதன் இனமான மரத்தோடு பேசப்பட்டுள்ளதால் , ‘கொடி’யெனும் பலபொருள் ஒருசொல்லின் பொருள் தெளிவாகிறது !

3 . சார்பு
‘கொடியில் காயப்போட்ட வேட்டியை எடுத்துவா’- இங்கே ‘கொடி’ என்பது , துணிகாயப்போடும் கொடி என்று நமக்குத் தெளிவாகிவிடுகிறது இல்லையா?

இதுதான் ‘சார்பால் பொருள் விளங்குவது’ !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (441)

Post by Dr.S.Soundarapandian on Thu Sep 15, 2016 10:06 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (441)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘வினை வேறுபடும் பலபொருள் ஒருசொல்’ பற்றிச் சற்றுமுன்பு பார்த்தோம் !

வினை வேறுபடுவதோடு , இன்னும் சில அடையாளங்களை வைத்தும் ,  ‘வினை வேறுபடும் பலபொருள் ஒருசொல்’லுக்குப் பொருளை  நாம் தெளிவாக உணரலாம் என்கிறார் அடுத்த நூற்பாவில் தொல்காப்பியர்! –
“அவற்றுள்
வினைவேறு  படூஉம்  பலபொரு ளொருசொல்
வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும்
தேறத் தோன்றும் பொருள்தரி நிலையே”              (கிளவி . 53)

அஃதாவது -
1. வினை வேறுபடுதல்
2. இனத்தைக் காண்டல்
3. சார்பை நோக்கல்
- ஆகிய மூன்றைக் கொண்டு, வினை வேறுபடும் பலபொருள் ஒருசொல்லுக்கு  நாம் பொருளை நன்கு அறிந்துகொள்ளலாம் !

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில் இவற்றை விளக்கலாம் !
1. வினை வேறுபடுதல்
‘மாப் பூத்தது’ -  இங்கே ‘பூத்தது’ என்ற வினை மூலம், நாம் என்ன உணர்கிறோம் ?
‘மா’ என்பது பலபொருள் ஒருசொல்லாயினும் , அது குதிரையையோ, விலங்கையோ, வண்டையோ குறிக்கவில்லை; மாமரத்தை மட்டுமே குறித்தது என உணர்கிறோம் ! ஏனெனில் குதிரையோ , ஏனைய விலங்கோ, வண்டோ பூப்பதில்லை !  

2 .  இனத்தைக் காண்டல்
‘மாவும் மருதும் ஓங்கின’ – இங்கே வந்துள்ள பலபொருள் ஒருசொல்லாகிய ‘மா’வும் மரத்தையே குறிக்கும் என அறிகிறோம் ?

எப்படி?

அருகில் சொல்லைப் பாருங்கள் ; மருது ! மருது , ஒரு மரம் என்பது நமக்குத் தெரியும் ; எனவே அதன் இனமான இன்னொரு மரமாகத்தான் ‘மா’ இருக்கவேண்டும் எனத் தெளிகிறோம் ! மேலும் ‘ஓங்கின’ என்பதும் மரத்திற்கே பொருந்துகிறது !

3 .   சார்பை நோக்கல்
‘கவசம் புக்குநின்று மாக்கொணா’ – இதில் உள்ள ‘மா’ , குதிரையைக் குறிக்கும் .

எப்படி?
கவசத்தை அணிவித்து மாவக் கொண்டுவா என்றால் , ‘மா’ என்பது மரமாகவோ , வண்டாகவோ, ஏனைய விலங்காகவோ இருக்க முடியாதல்லவா?

இதனால் , சார்ந்துவரக்கூடிய கருத்தை ஒட்டி, நாம் பலபொருள் ஒருசொல்லின் பொருளை நாம் தெளியலாம் என ஏற்படுகிறதல்லவா?
சேனாவரையரை ஒட்டி நாம் வேறு சில எடுத்துக்காட்டுகளை நினைக்கலாமே?

1 . வினை வேறுபாடு
 ‘கொடி’ – இது ஒரு பலபொருள் ஒரு சொல் !
தாவரக் கொடி, துணிக் கொடி, துணி காயப்போடும் கம்பி முதலிய சில பொருள்கள் இதற்கு உண்டு !
ஆனால், ‘கொடி கிழிந்தது’ என்றால் ,  ‘கொடி’ என்பது கட்சிக்கொடியையே குறிக்கிறது ; இல்லையா?
இதுதான் வினை வேறுபாட்டால்  தெளிவது !

2 . இனம்
‘கொடி மரத்தைச் சுற்றி மேலேறியது’-  இங்கே , ‘கொடி’ , தாவரக் கொடியைக் குறிக்கிறது ! கொடியாகிய தாவரம் அதன் இனமான மரத்தோடு பேசப்பட்டுள்ளதால் , ‘கொடி’யெனும் பலபொருள் ஒருசொல்லின் பொருள் தெளிவாகிறது !

3 . சார்பு
‘கொடியில் காயப்போட்ட வேட்டியை எடுத்துவா’- இங்கே ‘கொடி’ என்பது , துணிகாயப்போடும் கொடி என்று நமக்குத் தெளிவாகிவிடுகிறது இல்லையா?

இதுதான் ‘சார்பால் பொருள் விளங்குவது’ !
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (442)

Post by Dr.S.Soundarapandian on Sat Sep 17, 2016 1:47 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (442)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘கால்’ – இதுவும் பலபொருள் ஒரு சொல்தான் !

கால் = பந்தல் கால் ; மனிதன் கால் ; ¼

இப்போது , ‘கால் வீழ்ந்தது’ என்றால் , நாம் என்ன விளங்கிக்கொள்ள முடியும் ?
பந்தல் கால் விழுந்ததா? மனிதன் கால் விழுந்ததா?

இந்த மாதிரிக் குழப்பம் வரும்போது , ‘சொல்லும் சொல்லை வெளிப்படையாக இன்னது எனச் சொல்லிவிடுங்கள்’ என்று உத்தரவு போடுகிறார் தொல்காப்பியர் ! –

“ஒன்றுவினை மருங்கி  னொன்றித் தோன்றும்
வினைவே  றுபடாப் பலபொரு ளொருசொல்
நினையுங் காலைக் கிளந்தாங்கு இயலும் ” (கிளவி . 54)

‘ஒன்றுவினை மருங்கின்  ஒன்றித் தோன்றும்
வினை வேறுபடாப் பலபொருள் ஒருசொல் ’  -   ஒரே வினையைக் கொண்டு நடக்கும் பலபொருள் ஒரு சொல்லை ,
‘நினையும் காலைக் கிளந்தாங்கு இயலும்’ -  ஆராய்ந்தால் , வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் !

 ‘கால்’ என்ற சொல்லுக்கு வருவோம் !

 ‘மனிதன் கால் வீழ்ந்தது’ ; ’பந்தல் கால் வீழ்ந்தது ‘-   இப்படி வெளிப்படையாகச் சொல்லிவிட்டால் குழப்பம் இல்லை !

இதைத்தான் மேல் நூற்பாவில் சொன்னார் தொல்காப்பியர்!

சேனாவரையர் எடுத்துக்காட்டுகள் –
1 . ‘மாமரம் வீழ்ந்தது’ ; ‘விலங்குமா வீழ்ந்தது’
 முதல் ‘மா’ = மாமரததைக் குறிக்கும்
இரண்டாம் ‘மா’  = விலங்கினத்தைக்  குறிக்கும்

இதனைத் தொடர்ந்து ஒரு நூற்பாவை எழுதுகிறார் தொல்காப்பியர் ; அதையும் இங்கே பார்ப்போம்  ! –
“குறித்தோன் கூற்றம் தெரித்துமொழி கிளவி” (கிளவி. 55)

அஃதாவது –
பொருள் வேறுபாட்டைக் கூறக் கருதியவன் ( ‘குறித்தோன்’) , அதனைத் தெளிவாக - வெளிப்படையாச் சொல்லவேண்டும் !

சேனாவரையர் எடுத்துக்காட்டை விளக்குவதானால்  –

அரிதாரமும் சந்தனமும் வருமே நீர் -  என்றால் என்ன விளங்குகிறது ?
ஒன்றும் விளங்கவில்லை !

அரிதாரமும் சந்தனமும் தனித்தனியாக நீரில் அடித்து வரப்படுகிறதா?
- தெளிவில்லை !

‘அரிதாரமும் சந்தனமும் கலந்தது போல வருமே நீர்’ – இப்படிச் சொன்னால்,  ‘சரி ! இரண்டும் கலந்தது போல நிறமும் மணமும் கொண்டு வருகிறது நீர்’ என்பது தெளிவாகிவிடுகிறது !

இந்த இரண்டாம் நூற்பா பலபொருள் ஒருசொல் பற்றியதல்ல எனபதைக் கவனிக்க !

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by M.Jagadeesan on Sat Sep 17, 2016 2:13 pm

ஐயா !
எளிதில் தொல்காப்பியம் புரிந்துகொள்ள புலியூர்க்கேசிகன் உரை நன்று என்று சொல்கிறார்களே !
தங்கள் கருத்தென்னவோ ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5004
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Dr.S.Soundarapandian on Sat Sep 17, 2016 6:12 pm

நன்றி ஜெகதீசன் அவர்களே !

தாராளமாகப் புலியூர்க் கேசிகன் உரையைப் படிக்கலாமே ?
ஒவ்வொரு நூலிலும் உங்களுக்குப் புதுச்செய்தி கிடைக்கும் !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (443)

Post by Dr.S.Soundarapandian on Thu Sep 22, 2016 7:28 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (443)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

   குழுக் கூடியது -  என்கிறோம் !

குழுவில் உள்ளோர் உயர்திணையைச் சேர்ந்தவர்கள் ! ஆனால் ‘கூடியது’ என அஃறிணை முடிவு கொடுத்துக் கூறுகிறோம் !

இதற்குத் தொல்காப்பியத்தில் விதி உள்ளதா?
உள்ளது !

அந்த விதியைத்தான் பார்க்கப் போகிறோம் ! –
“குடிமை யாண்மை இளமை மூப்பே
அடிமை வன்மை விருந்தே குழுவே
பெண்மை யரசே மகவே குழவி
தன்மை திரிபெயர் உறுப்பின் கிளவி
காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொ லென்று
ஆவறு மூன்றும் உளப்படத் தொகைஇ
அன்ன பிறவும் அவற்றொடு சிவணி
முன்னத்தி  னுணருங் கிளவி எல்லாம்
உயர்திணை மருங்கின் நிலையின வாயினும்
அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும் ” (கிளவி. 56)

இந்த நூற்பாவில் தொல்காப்பியர்  18 சொற்களைப் பட்டியல் போடுகிறார் ! –
1.குடிமை
2.ஆண்மை
 3. இளமை
4 .மூப்பு
5 . அடிமை
6 . வன்மை
7 . விருந்து
8 . குழு
9 . பெண்மை
10 . அரசு
11 . மகவு
12 .குழவி
13 . தன்மை திரிபெயர்
14 . உறுப்பின் கிளவி
15 . காதல்
16 . சிறப்பு
17 . செறற்சொல்
18 . விறற்சொல்

இந்தப் 18 சொற்களுமே உயர்திணைப் பொருள் மேல் நின்றாலும் , அஃறிணை முடிவு கொள்ளலாம் என்கிறார் தொல்காப்பியர் !

‘உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும்’ – உயர்திணைப் பொருள்மேல் நின்றாலும் ,
‘அஃறிணை மருங்கிற் கிளந்தாங்கு  இயலும்’ – அஃறிணை முடிவு கொடுத்துக் கூறலாம் !

இப் பதினெட்டுக்கும் எடுத்துக்காட்டுகளை , இளம்பூரணர் , நச்சர் , தெய்வச் சிலையார் உரைகளின்படி வருமாறு தரலாம் ! –
1.  ‘அவர்க்குக் குடிமை நன்று’
2. ‘அவர்க்கு ஆண்மை நன்று’
 3.  ‘அவர்க்கு இளமை நன்று’
4 . ‘அவர்க்கு மூப்பு நன்று’
5 . ‘அவர்க்கு அடிமை நன்று’
6 .  ‘அரசன் வன்மை நன்று’
7 .  ‘விருந்து வந்தது’  
8 .  ‘ அக் குழு நன்று “
9 .  ‘பெண்மை நன்று ‘
10 .  ‘அரசு நிலைத்தது’
11 .  ‘மக நலிந்தது’
12 . ‘குழவி அழுதது’
13 .  ‘அலி வந்தது’ – இது தன்மை  திரிபெயர்
14 .  ‘குருடு வந்தது’ – இஃது  உறுப்பின் கிளவி
15 .  ‘ என் பாவை வந்தது’ - காதல்
16 .  ‘என் கண் வந்தது ’ - சிறப்பு
17 .  ‘கெழீஇயிலி வந்தது’ - இது செறற்சொல்
18 .  ‘சிங்கம்  வந்தது’ – இது விறற்சொல்

தன்மை  திரிபெயர் – ஆண் , பெண் தன்மையிலிருந்து திரிந்த பெயர் ; அலி.

கெழீஇயிலி – பிறரோடு பழகுவதற்குத் தகுதியில்லாதவன்.

செறல் – வெகுளி ; கோபம்

செறற்சொல் – சினச் சொல் ; ஏசும் சொல்

விறற்சொல்  – வீரியச் சொல் ; வீரனைச் ‘சிங்கம் வந்தது’ எனல் .

நூற்பாவிலுள்ள ‘முன்னம்’ என்பது ‘குறிப்பு’ என்பதைக் குறிக்கும்.

என்ன குறிப்பு ?

பேசுவோனது குறிப்பு !

அஃதாவது –
‘இளமை’ , ‘மூப்பு’ முதலியன உயர்திணைக்கும் அஃறிணக்கும் பொதுவான சொற்களே !
ஆனால் பேசுவோன் உயர்திணையைக் கருத்தில் கொண்டு பேசும்போது , அச் சொற்களை உயர்திணைப் பண்புள்ளவையாக நாம் கருத வேண்டும்!

மேல் நூற்பாவிலுள்ள 18 சொற்களை மட்டும்தான் அஃறிணை முடிவு கொடுதுக் கூறலாம் என எடுத்துக்கொள்ளக்கூடாது !

சேனாவரையர் வேறு சொற்களையும் எடுத்துக்கொள்வது பற்றி –
“அன்ன பிறவும் என்றதனான்  வேந்து , வேள் , குரிசில் , அமைச்சு , புரோசு என்னும் தொடக்கத்தனவும் கொள்க !”  என்கிறார் !

புரோசு – புரோகிதன்  
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by M.Jagadeesan on Sat Sep 24, 2016 7:23 am

ஐயா !

" ஊர் சிரித்தது "

இதில் " ஊர் " என்னும் சொல் மக்களைக் குறித்தது . " மக்கள் " என்னும் சொல் உயர்திணையைக் குறித்தாலும் " சிரித்தது " என்ற அஃறிணை வினை ஏற்றது . தொல்காப்பியர் கூறிய பட்டியலில் ஊர் ,உலகம் என்ற சொற்கள் இடம்பெறவில்லையே ! விளக்கவும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5004
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Dr.S.Soundarapandian on Sat Oct 01, 2016 10:56 am

நன்றி ஜெகதீசன் அவர்களே !

‘அன்ன பிறவும்’ என்ற நூற்பாச் சொற்களில் ‘ஊர்’ அடங்கும் !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (444)

Post by Dr.S.Soundarapandian on Sat Oct 01, 2016 11:00 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (444)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சென்ற நூற்பாவில் (கிளவி. 56) , பேசுவான் குறிப்பால் உயர்திணையாய் நிற்கும் 18 சொற்களையும், அவை அஃறிணை முடிபு கொள்ளும் வகையையும் கண்டோம் !

அடுத்த நூற்பாவில் நேரடியான உயர்திணைப் பொருளில் வழங்கும் சொற்களைக் கூறி இவையும் அஃறிணை முடிபே கொள்ளும் என்கிறார் தொகாப்பியர் ! –

“காலம் உலகம்  உயிரே உடம்பே
 பால்வரை தெய்வம் வினையே பூதம்
 ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம்
ஆயீ ரைந்தொடு பிறவு மன்ன
ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம்
பால்பிரிந் திசையா உயர்திணை மேன  ” (கிளவி. 57)

அஃதவது , கீழ்வரும் 10 சொற்களும் , இவை போன்ற பிற சொற்களும் , உயர்திணைச் சொற்களானாலும் , அஃறிணை முடிவே , தொடரில் , கொள்ளும் ! :-

1 . காலம்
2 . உலகம்
3 . உயிர்
4 . உடம்பு
5 . பால்வரை தெய்வம்
6 . வினை
7 . பூதம்
8 . ஞாயிறு
9 . திங்கள்
10 . சொல்

இவற்றை,   உரையாசிரியர்தம் எடுத்துக்காட்டுகளுடன் , பார்ப்போம் !
1 .  ‘காலம்’ என்பது காலக் கடவுளை; அஃதாவது கூற்றுவனை (கூற்றுவன் - எமன்)
எனவே , ‘காலம்’ என்பது உயர்திணைச் சொல் ஆகிறது ! ‘எமன்’ , உயர்திணைதானே?
ஆனால் உயர்திணைச் சொல் ஆனாலும், அஃறிணை முடிவு கொடுத்துக் கூறவேண்டும் என்ற மேல் விதிப்படி ,  ‘இவற்குக் காலம் ஆயிற்று’ எனக் கூறவேண்டும் !

 ‘அந்த மருந்தே இவனுக்கு எமனாயிற்று’ , என்று இந்நாளில்  கூறுவதை ஒப்பிட்டால் , ,  ‘இவற்குக் காலம் ஆயிற்று’ என்பது உங்களுக்கு விளங்கும் ; இல்லையேல் விளங்காது !


2 .  ‘உலகு பசித்தது’ -  ‘உலகு’ , என்பது இங்கு உலக உருண்டையை அல்ல! உலகத்து மக்களை ! எனவே , இங்கு ‘உலகு’ என்பது உயர்திணை !

ஆனாலும் , அஃறிணை முடிபு கொடுத்து , ‘உலகு பசித்தது’ எனவேண்டும் !

 உலகு பசித்தார் ×
உலகு பசித்தது √

3.  ‘உயிர் போயிற்று’ – இங்கே ‘உயிர்’ என்பது மனித உயிர் ! மனிதன் , எப்படி உயர்திணையோ அதுபோல , மனித உயிரும் உயர்திணைதான் !

இங்கே , ‘உயிர்’ , உயர்திணையாக இருந்தலும் , அஃறிணை முடிபு  கொடுத்துக் கூறவேண்டும் !

உயிர் போனார் ×
உயிர் போயிற்று √

4 .  ‘உடம்பு நன்று’ -  இங்கே ‘உடம்பு ’ என்பது , மனித உடம்பை ! மேலே சொன்னதுபோல , ’மனிதன்’  உயர்திணைச் சொல்லாதலால், மனித ’உடம்பு’ம் உயர்திணைச் சொல்தான் !

ஆனாலும் , அஃறிணை முடிவைக் கொடுத்தே சொல்லவேண்டும் !
உடம்பு நல்லன் ×
உடம்பு நன்று √

5 .  ‘இவற்குத் தெய்வம் ஆயிற்று’ -  ‘தெய்வம்’ என்பது உயர்திணைச் சொல் !

ஆனால் , அஃறிணை முடிவு கொடுத்து , ‘ஆயிற்று’ என முடிக்கவேண்டும் !
இவற்குத் தெய்வம் ஆனார் ×
இவற்குத் தெய்வம் ஆயிற்று √

‘தெய்வம் ஆனார்’ எனச் சொன்னால், ‘இறந்தார்’ என்ற பிழைப் பொருள் கிடைக்கும் என்பதைக் கவனிக்க !

6 .  ‘இவற்கு வினை நன்று’ -  இங்கே ‘வினை’ , அறத் தெய்வத்தைக் குறிக்கும் ! ( Verb என்ற பொருளை இங்கே எண்ணித் தடுமாறக் கூடாது !)

அறத் தெய்வத்தைக் குறிப்பதால் , ‘வினை’ , உயர்திணை !
ஆனாலும் , அஃறிணை முடிபைக் கொடுத்துத் தொடரை எழுதுக என்பதே தொல்காப்பியர் விதி !
இவற்கு வினை நல்லவர் ×
இவற்கு வினை நன்று √

7 . ‘இவனைப் பூதம் புடைத்தது’ – இங்கே ‘பூதம்’ , ’தெய்வம்’ ஆகும் ! இதனால் , ‘பூதம்’ , உயர்திணை !

ஆனால் , அஃறிணை கொடுத்துத் தொடரைக் கூறவேண்டும் !

பூதம் அடித்தார் ×
பூதம் அடித்தாள்×
பூதம் அடித்தது √

(புடைத்தல் - அடித்தல்)

8 .  ‘ஞாயிறு எழுந்தது’ – இங்கே ‘ஞாயிறு’ ,  ஞாயிற்றுக் கடவுளைக் குறிக்கும் !

ஆயினும் , அஃறிணை முடிவு கொடுத்துத் தொடரை அமைக்கவேண்டும் !
ஞாயிறு எழுந்தார் ×
ஞாயிறு எழுந்தாள் ×
ஞயிறு எழுந்தது √

9 . ‘திங்கள் எழுந்தது’ – திங்கள் – திங்கட் கடவுள் !
திங்கள் எழுந்தார் ×
திங்கள் எழுந்தாள் ×
திங்கள் எழுந்தது √

10. ‘சொல் நன்று’ – இங்கே ‘சொல்’ – சொல் மடந்தை (கல்லாடனார் இப்படித்தன் உரை எழுதுகிறார்; சொல் மடந்தை - சரசுவதி).

‘சொல்’ என்ற உயர்திணைச் சொல்லை, அஃறிணை முடிவு கொடுத்துக் கூறும்போது ,
சொல் நல்லவர் ×
சொல் நல்லவள்×
சொல் நன்று√

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (445)

Post by Dr.S.Soundarapandian on Sat Oct 01, 2016 5:59 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (445)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சென்ற ஆய்வில் , ‘காலம்’ முதலிய 10 சொற்களும் , உயர்திணைச் சொற்களாக இருப்பினும் , அவை , தொடரில் , அஃறிணையாக வரும் எனத் தொல்காப்பியர் கூறியதைப் பார்த்தோம் !

இதற்கு அடுத்த இரு நூற்பாக்களில்  (கிளவி. 58 ,59), நமது  ஐயப்பாடு ஒன்றைக் களைகிறார் தொல்காப்பியர் !

ஐயப்பாடு என்னவெனில் , ‘காலம்’ எனபது , ‘உயர்திணைச்சொல்’ ; சரி ! இது , அஃறிணை முடிபு கொள்ளும் ( ‘காலம் ஆயிர்று’) , சரி ! ஆனால் , ‘காலன்’ என்று வந்தால் ?
இதுதான் நம் ஐயம் !

தொல்காப்பியர் என்ன சொல்கிறார் என்றால் - ’காலம்’ என்பது , ஈறு திரியாது , அப்படியே ‘காலம்’ என்று நின்றால்தான் ‘அஃறிணை முடிவு’ சரியாகும் ! ஈறு திரிந்து , ‘காலன்’ என்று வந்தால் , அப்போது , அஃறிணை முடிவு வராது ; உயர்திணை முடிவுதான் வரும் !

1 . காலன் வந்தது ×
   காலன் வந்தான் √

2 . உலகம்  பசித்தார் ×
    உலகர் பசித்தார் √

3 . உயிர்க்கிழவன்  போயிற்று×
    உயிர்க்கிழவன் போயினான்√

4. நாமகள் நன்று ×
நாமகள் நல்லள் √    (நாமகள் - சொல்)

முன் நூற்பாவில் (கிளவி.56) , ‘குடிமை’ முதலிய சொற்கள் , பேசுவோன் மனத்தில் உயர்திணைக் குறிப்பு இருந்தாலும் , தொடரில் , அஃறிணையாகத்தான் வரும் எனக் கூறியிருந்தார் தொல்காப்பியர் !

அதன்படி , ‘குடிமை நன்று’ என்றுதான் வரும் , ‘குடிமை நல்லர்’ என வராது எனப் பார்த்தோம் !

ஆனால் ,  ‘குடிமை’ என்ற சொல் , இதே வடிவில் நிற்கும்போதுதான் அஃறிணை முடிவு கொள்ளுமே தவிர , சொல் திரிந்து வந்தால் , அஃறிணை முடிபு கொள்ளாது, உயர்திணை முடிவுதான் கொள்ளும் என்று அடுத்துச் சொல்கிறார் !

‘குடிமை’ என்பது ‘குடிமையன்’ என வந்தால் இதுதான் ‘திரிபு’ ! ‘திரிபு’ என்றால் என்னமோ ஏதோ என நினைக்கவேண்டாம் !

5 . குடிமை வந்தான் ×
   குடிமையன் வந்தான் √

6 . குடிமை நன்று √
   குடிமை நல்லன் ×

7 . குடிமையன் நல்லன் √
   குடிமையன் நன்று ×

‘உலகம்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம் !

 இது உயர்திணைச் சொல் ! இருந்தாலும் தொல்காப்பியர் விதிப்படி (கிளவி . 57), தொடரில் வரும்போது , அஃறிணை முடிவுதான் கொள்ளும் இச் சொல் !  எடுத்துக்காட்டு –
உலகம் கலகலத்தார் ×
உலகம் கலகலத்தது √

ஆனால் இதே , ‘உலகம்’ என்ற சொல் திரிந்து , ‘உலகார்’ என ஆகிறது என வைத்துக்கொள்வோம் ! அப்போது –

உலகார் வாடியது ×
உலகார் வாடினர் √     (இங்கு உயர்திணை முடிவு வந்துள்ளதைக் காண்க !)

இப்போது பார்த்த இக் கருத்துகளைச் சொல்பவைதாம் கீழ் வரும் இரு நூற்பாக்கள் !-

“நின்றாங் கிசைத்தல் இவணியல் பின்றே” (கிளவி. 58)

“இசைத்தலு முரிய வேறிடத் தான” (கிளவி .59)

இங்கே ,
‘நின்றாங்கு’ – இயல்பாக ; திரிபு இலாது
‘வேறிடத்தான’ -  திரிபு பெற்ற இடங்களில்
இசைத்தல் – உயர்திணை முடிவு கொள்ளல்

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம் (446)

Post by Dr.S.Soundarapandian on Sat Oct 29, 2016 7:08 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (446)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிளவியாக்கத்தில் நடைபோடுகிறோம் !

கிளவியாக்கம் தொடர் இலக்கணம்  (Grammar of Syntax ) கூறுவது என்பதை நான் இங்கே குறிக்கவேண்டும் !

‘அவன் கண்களால் அழகுள்ளவன்’ என்பதைத் தொல்காப்பியர் கால எழுத்து  உரைநடையில் , ‘அவன் கண் நல்லன்’  என்றனர் !

இங்கே , கண்கள்’ என்றுதானே வரவேண்டும்? ‘கண்’ என ஒருமையில் வரலாமா?

இந்த நம் ஐயத்திற்கு விடையாகத் தொல்காப்பியர் , ‘கண்’ என ஒருமைச் சொல் வந்தால் போதும்; ‘கண்கள்’ என்ற பன்மைச் சொல் கட்டாயமில்லை  என்கிறார் !:-

“கண்ணுந் தோளும் முலையும் பிறவும்
பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி
பன்மை கூறுங் கடப்பா டிலவே
தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே”  (கிளவி. 61)

‘கண்’ , ‘தோள்’ , ‘முலை’ – இவை பன்மைப் பொருளில்தான் வரும் ! இவை ‘இருகண்கள்’ , ‘இருதோள்கள்’ , ‘இருமுலைகள்’  என்றுதான் பொருள்படும் !
- இதுவே  ‘பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி’ என்பதன் பொருள் !

தொடரில் இவை பயிலும்போது  ‘கண்’ என்பதுபோல ஒருமைச் சொல் ஆளப்பட்டுப் பயிலலாம் !

அவன் கண் நல்லன் √
- இங்கே , ’அவன்’ என்பது , ‘முதல்’ !

இந்த முதலுக்கு உரிய வினை ‘நல்லன்’!

அஃதாவது ‘நல்லன்’ என்ற வினை , ‘கண்’ எனும் சினைக்கு உரியதல்ல!  ‘கண்’ எனும் சினைக்கு உரிய வினையாயின் , தொடர் ‘கண் நல்லது’என்றுதான் வரவேண்டும் !

இந்த நுணுக்கம்தான் , ‘தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே’ என்ற அடியில் சுட்டப்படுகிறது !

‘தம் வினைக்கு’ – ‘கண்’ போன்ற உறுப்பின் வினைக்கு,
‘இயலும் எழுத்து அலங்கடையே’ – ஏற்ற வினை கொண்ட ஈற்றெழுத்து  வராத போது !

கண் நல்லன் – இத் தொடரில் ‘அவன்’ , தோன்றா எழுவாய் ! ‘அவன்’ என்பதற்கு ஏற்பவே , பயனிலையாக , ‘நல்லன்’ என்ற ‘ன்’ ஈறு வந்துள்ளது !

கண் நல்லர் - இத் தொடரில் ‘அவர்’ , தோன்றா எழுவாய் ! ‘அவர்’ என்பதற்கு ஏற்பவே , ‘நல்லர்’ என்ற பலர்பால் ஈறாகிய  ‘ர்’  வந்துள்ளது !

‘ன்’ , ‘ர்’ எழுத்துகள், ‘கண்’ போன்ற சினைகளுக்கான வினைச்சொற்கள் பெறும் ஈறுகள் அல்ல!

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(466)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 27 of 29 Previous  1 ... 15 ... 26, 27, 28, 29  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum