ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 பழ.முத்துராமலிங்கம்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 ayyasamy ram

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 ayyasamy ram

தமிழரின் தொன்மை
 krishnanramadurai

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 ayyasamy ram

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 ayyasamy ram

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 krishnanramadurai

புதிய சமயங்கள்
 krishnanramadurai

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 ayyasamy ram

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 ayyasamy ram

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 ayyasamy ram

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருப்புகழ் பாடல் 100

View previous topic View next topic Go down

திருப்புகழ் பாடல் 100

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Mon Jan 14, 2013 4:18 pmவிந்ததி னூறி வந்தது காயம்
வெந்தது கோடி ...... யினிமேலோ


உடற்கூறால் நாதமும் விந்தும் கலந்து கரு உண்டாகிறது ! அந்த கரு உடலாய் பரிணமிக்கிறது !

ஆனாலும் இணப்பெருக்கத்திற்கு உத்வேகத்தை உண்டாக்குவது விந்து அதிகமாக சுரப்பதாலேயாகும் ! நாதமோ பூமியைப்போல பொறுமையும் ஆதாரமுமாய் இருப்பது ! அது துடிப்பதில்லை !!

அப்படி உருவாகும் உடலில் வந்து தங்கி எனது ஆத்துமா பிறவியெடுக்கிறது . பிறவிகள் தோறும் எண்ணற்ற உடல்களையும் உருவாக்குகிறது உடல் முதிர்ந்து வயோதிகத்தால் உடல் அழிந்துபோனதும் மீண்டும் ஒரு புதிய உடலில் பிறவியெடுக்கிறது !

நான் பிறவியெடுத்த உடல்கள் அழிந்து போனது ஒரு கோடியாவது இருக்குமா ?

ஆத்ம உணர்வு வரப்பெற்ற ஒரு மனிதன் பிறவாப்பெரு நிலைக்கு எற்ற பரிபக்குவம் அடைந்து விட்டான் என்றே எடுத்துக்கொள்ளலாம் ! உடலை மட்டுமே நான் என கருதும் மனிதன் பல பிறவிகளில் பரிபக்குவம் அடைகிறான் உடல் நானல்ல அதில் உறையும் ஆத்துமாவே நான் என்ற ஆத்ம உணர்வு உள்விளைந்த அணுப ஞானத்தால் உண்டாகிறது இன்னும் எத்தனை எத்தனை பிறவியெடுத்து இளைப்பது என்ற ஏக்கம் சாகாக்கல்வி - நித்தியஜீவன் - பிறவாப்பெரு நிலையை நாட செய்கிறது உலகவாழ்வின் இன்பங்கள் அந்த ஆத்துமாக்களை உருத்துவதாக இல்லை ! அரண்மனை சுகபோகங்கள் சித்தார்த்தனை கட்டி வைக்க இயலவில்லை ! அந்த ஆத்ம தாகம் வெந்துபோன கோடிக்கணக்கான தனது சரீரங்களை எண்ணி திகட்டி விட்டது !

விண்டுவி டாம லுன்பத மேவு
விஞ்சையர் போல ...... அடியேனும்


ஆத்ம உள்ளுணர்வு கிடைக்கபெற்றவுடன் ஒரு மனிதன் உடனடியாக உலக வாழ்வியலின் ஈர்ப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டு விடமுடியுமா ? மாயை - உலக ஈர்ப்பு அவ்வளவு எளிதில் விட்டுவிடுமா ?

எந்த மனிதனும் முதலில் வாயளவு தான் சொல்லிக்கொண்டிருப்பான் ! தியானம் செய்யவேண்டும் தன்னை உணரவேண்டும் ! ஆசையை கட்டுபடுத்த வேண்டும் ஞானம் பெற வேண்டும் என்று ! ஆனாலும் உலகம் ஈர்த்தவுடன் மனம் அதன் பின்னால் ஓடிவிடும் !

ஆனாலும் அப்படி பலமுறை சறுக்கி சறுக்கி விழுந்துதான் பக்குவம் உண்டாகும் ! அதற்கு வாயிலேயாவது சொல்லிக்கொண்டிருப்பதும் ஒரு முன்னேற்றமே !

அதனால் தான் ஓது என்றார்கள் !


ஓதிவிட்டு விட்டுவிடுவதும் சில நாளோ சில பிறவியோ இருக்கும் ! அப்படியில்லாமல் அநுபூதி உண்டாகி ஆன்மீக வாழ்வில் முன்னேறுகிற ஆத்துமாக்களுக்கு அந்தந்த சூழ்நிலைக்கேற்ற உபகுருவின் தொடர்பும் தூக்கிவிடுவதும் உண்டாகும் இப்படி பற்பலகுரு பாரம்பரிய தொடர்பு சாதகனுக்கு உண்டாகும் ! ஒரு குறிப்பிட்ட இலக்கு வரை மட்டுமே குருவை தேடிப்போக வேண்டும் ! இந்த குருவா அந்த குருவா என அலசி ஆராய வேண்டுவதுகூட இல்லை ! நாம் கடவுளுக்கான லட்சியத்துடன் ஒரு மோசமான குருவுக்குகூட குருபக்தியோடு கற்றுக்கொள்வோமானால் கடவுளே நம்மை சரியான குருவிடத்து இணைத்து விடுவார் குருவை நாம் தேடிப்போகவேண்டுவதே இல்லை - அவர்களே நம்மிடம் வருவார்கள் ஆனால் எங்கிருந்தேனும் கற்றுக்கொள்கிற மன நிலையில் நாம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் ! யார்யார் மூலமாகவோ நம்மை வழி நடத்துகிற தேவகுரு ஒருவர் - சற்குருவானவர் உண்டு என்கிற உணர்த்துதல் - தொடர்பு உண்டாகும் ! அவரே மனித குருக்களை நம்மிடம் அணுப்புகிறார் படிபடியாய் நம்மை உயர்த்துகிறார் ! அந்த சற்குருவானவர் மூலமாக மட்டுமே ஒரு ஆத்மா கடவுளை அடையமுடியும் !

இந்த சற்குருவையே முருகன் என லெமூரியாக்கண்டத்து தமிழர்கள் - ஆதிமனித சமுதாயம் அழைத்தது ! உலகின் மூத்த நூலான தொல்காப்பியத்திலேயே இந்த முருகன் - சற்குருவின் மூலமாக கடவுளை வழிபடுவது உள்ளது ! முருகனுக்கு உருவம் கற்பிக்கும் முன்பே இருந்த முருகன் ! ஆதிமனிதனான சிவன் பார்வதிக்கு இந்த குருவின் மூலமாக மட்டுமே கடவுளை மனித குலம் அடைய முடியும் என உபதேசித்தது `` குருகீதை`` என ஸ்கந்தபுராணத்தில் உள்ளது ! இந்த கெளமார வழிபாட்டு முறைக்கு பின்புதான் சைவம் வைணவம் வந்தது ! சைவத்திற்கும் முற்பட்டது கெளமாரம் என்பதை மீண்டும் கவணத்தோடு கணக்கில் கொள்க ! மூத்த முணிவரான அகத்தியருக்கு தமிழையும் ஞானத்தையும் கற்றுத்தந்த குரு முருகன் ! மூத்தகுரு - சற்குரு முருகனே ! அந்த முருகன் அரூபமானவர் ! இன்றும் அவரே சற்குரு ! அவரே வைணவத்தில் அரூப நிலையில் உள்ள பெருமாள் - விஷ்ணு !!

வந்துவி நாச முன்கலி தீர
வன்பத மேறி யென்களை யாற
வந்தருள் பாத ...... மலர்தாராய்


நன்றும் தீதும் பிறர்தர வாரா ! நம் ஆத்துமாவில் என்ன பாவப்பதிவுகள் முற்பிறப்புகளால் உள்ளதோ அதன் தொடர்பில்லாத துன்பங்கள் துயறங்கள் நம்மை அணுகுவதில்லை ! பாவங்கள் பிறவிகள்தோறும் தொடர்ந்து கூடவோ குறையவோ செய்கின்றன ! இந்த தொடர்வினைகள் தீர சற்குருவை கண்டுணர்ந்து அவரின் அன்பாகிய அருள் ஞானத்தில் நாம் தேரவேண்டும் !அப்போது மட்டுமே நமக்குள் உள்ள களையாகிய தீய எண்ணங்களிலிருந்து விடுபட்டு பரிசுத்தம் அடையமுடியும் ! பிறவாப்பெரு நிலைக்கு தயாராக முடியும் ! அதற்கு சற்குருவின் பாதமலர் நம்மில் பதியவேண்டும் !

வந்துவி நாச முன்கலி தீர
வண்சிவ ஞான ...... வடிவாகி


தனி மனிதனுக்குள் இப்படியென்றால் ஒட்டுமொத்த உலகில் இதன் பாதிப்பு வேறு மாதிரியாக இருக்கிறது ! யுகங்கள் தோறும் ஆரம்பத்தில் ஒழுங்கில் ஆரம்பிக்கும் சமூக மதிப்பீடுகள் சீரழிந்து தீமைகள் - அதர்மம் பெருகுகிறது ! மனித மதிப்ப்பீடுகள் - தர்மம் வீழ்ச்சி அடைந்து கலாச்சார சீர்கேடுகள் உச்சம் அடைகின்றன ! இதற்கு தனிமனிதர்கள் மட்டுமே காரணமில்லை ! மனிதனின் சுயத்தை - ஆணவம் கண்மம் மாயைகளை தூண்டிவிடுகிற அசுர சக்திகளும் காரணம் !

பூமிக்கு மேலே கடவுளின் மண்டலத்திற்கு கீழாக ஆவிமண்டல சக்திகள் உள்ளன ! மனிதனுக்கு முன்பு படைக்கபட்ட தேவர்கள் அல்லது வாணவர்கள் !

எவ்வளவு சக்தி இருந்தாலும் கடவுளின் கட்டளையை மட்டும் செய்கிற தேவதூதர்கள் ! இவர்கள் தாங்களாக எதையும் செய்யமாட்டார்கள் ! மனிதர்கள் அழைத்தாலும் பிரியப்படுத்தினாலும் அவர்கள் பதில் செய்யமாட்டார்கள் ! ஆனால் கடவுள் சொல்வதை மட்டும் ஏன் செய்யவேண்டும் ; எங்களுக்கும் சக்தி இருக்கிறது அதைக்கொண்டு நாங்களும் செய்வோம் என சுயம் அடைந்து கலகம் செய்து பிரிந்த ஒரு கூட்டம் - அதுவே அசுரர்கள் ! ஆதி தமிழ் நூல்களில் இந்த அசுரர்கள் பற்றிய குறிப்புகள் அதிகம் ! முருகனது சிறப்பே அவர் அசுரர்களின் மாயைகளை அழிக்கிறவர் என்பதே !

இந்த அசுர சக்திகள் மனித சிந்தனைகளை ஆளுமை செய்து அவனை மாயைகளால் மறைக்கிறது ! தீமைகளின் பக்கம் அவனை ஊக்குவிக்கிறது ! மனிதனுக்குள் என்ன என்ன தீயபதிவுகள் இருக்கிறது என்பது அவனுக்கே தெரியாது ஆனால் அசுரர்களுக்கு தெரியும் அதனால் அவன் அதில் வீழும்படியாக சந்தர்ப்ப சூழ்னிலைகளை நபர்களை கொண்டுவந்து சேர்ப்பார்கள் ! அப்படி வீழ்ந்தவுடன் அவர்களை குற்றவாளிகள் என எள்ளி நகையாடவும் குற்றப்படுத்தி பாவ சுரணை அற்றுப்போய் தைரியமாக பாவம் செய்ய வைக்கவும் செய்வார்கள் !

அப்படி பாவசுரணை அற்றவர்கள் அல்லது உள்ளார்ந்த இறைஅச்சம் இல்லாதவர்களே கடவுளின் வட்ட்த்தை விட்டு விலகி கொடூரர்களாக மாறி விடுகின்றனர் !

பாவசுரணை , இறைஅச்சம் இருந்தால் போதுமானது பலகீனத்தால் பாவத்தை விடமுடியாமல் தத்தளித்து உள்ளத்தில் போராடி போராடி ஆயிரம் முறை வீழ்ந்தாலும் கடவுள் நம்மை கைவிடுவதில்லை ! நாம் அதைவிட்டு கடறும் பக்குவத்தை பெறும்வரை பொறுமையாகவே இருப்பார் ! சிட்சைக்கும் தண்டனைக்கும் வித்தியாசம் உள்ளது ! இறைஅச்சமே சிறந்த ஆயுதம் ! அதைக்கைக்கொண்டு கடவுளிடம் பொறுத்துக்கொள்ளும்படியாக வேண்டிக்கொண்டே தவறுகளுடன் போராடலாம் வழுக்கி விழுந்து எழலாம் !


ஆனால் பாவ சுரணை அற்றவர்கள் அதிகரிக்கும்போது தீமைகள் தலைவிரித்தாடும்போது அதர்மத்தை அழிக்க அந்த சற்குருவாணவர் மனிதனாக அவதரித்து தீமையை அழிப்பார் !

வைணவத்தில் இந்த சற்குருவையே அரூப நிலையில் உள்ள விஷ்ணு அல்லது தேவதூதர்களின் தலைவன் பெருமாள் என்றார்கள் கெளமாரத்தில் தேவசேணாதிபதி என்றார்கள் ! திருமால் மருகி முருகனாக அறியப்படுவதால் மால்மருகோனே என்றார்கள் ! முருகன் அருணகிரியாரின் நாவிலே வேல் கொண்டு எழுதியதால் பாடப்பட்ட திருப்புகழும் பெருமாளே பெருமாளே என்றுதான் அவரை அழைப்பதை கவணித்தீர்களானால் இது புரியும் ! சைவம் தோன்றுமுன்னரே வந்த முருகனே அதை விஞ்சி சைவம் பிரபலமடைந்தவுடன் மீண்டும் அதை வெற்றிகொண்ட வைணவமாக அதே முருகன் வெளிப்பட்டார் !

சிவன் என்றால் சரீரம் என்றுதான் பொருள் ! அரூப சற்குருவின் மூலமாக கடவுளை வழிபடுதல் என்று ஆதி சமூகத்தில் இருந்தது ! ஆதிமனிதனான சிவன் பார்வதிக்கு இந்த சற்குருவின் மூலமாக வழிபடுவதை குருகீதையாக ஸ்கந்தபுராணத்தில் அறிவித்தார் ஆனாலும் அந்த ஆதிமனிதனையே குலதெய்வமாகி வழிபடும் முறையாக நடுகல் வழிபாடு பிரபலமடைந்து சைவமாக பிரபலமடைந்தது ! ஞானிகள் மகான்கள் அடங்கிய இடங்களிலெல்லாம் ஒரு லிங்கத்தை வைத்து அந்த நபரின்பெயரால் அகத்தீஸ்வரர் கும்பேஸ்வரர் என்று ஆலயங்களை அமைத்தார்கள் ! அதற்கு மாறுபாடாக கடவுளையும் கடவுள் யார் மூலமாக பூமியை படைத்தாரோ அந்த விஷ்ணுவையும் வழிபடுமுறையாக வைணவம் வந்தது !

கடவுள் ஒருவர் ஒரு கோடு அவருக்கு இணையானவர் விஷ்ணு ஒரு கோடு ! இதுவே நாமத்தின் அர்த்தம் ! உலகில் மிக நீண்ட நாள் நடந்த மதச்சண்டையே சைவத்திற்கும் வைணவத்திற்கும் இடையிலானது !

சைவமரபில் சித்திகள் பெற்று அரசர்களாய் வல்லமையுள்ளவர்களாய் விளங்கிய ராவனேசுரனை திரேத யுகத்தில் ராமராக விஷ்ணு அவதரித்து அழித்து வைணவத்தை நிலைனாட்டினார் ! அதுபோல கம்சனை அழித்தார் கிருஷ்ணர் ! மனிதர்களை தூண்டி நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் மாற்றுவதால் அவர்களுக்குள் வருகிற யுத்தத்தில் கீதையை உபதேசித்து அருளினார் ! கலியுகத்தில் இயேசுவாக வந்து மனம்திரும்புதலை உபதேசித்தார் ! ஒட்டுமொத்த பூமியின் பாவத்திற்காய் பூமி யார் மூலமாக படைக்கபட்டதோ அந்த விஷ்ணுவே பிரயசித்தம் செய்தார் ! பூமியிலுள்ளோர் விஷ்ணு மூலமாக மட்டுமே கடவுளை அடையமுடியும் ! ஆதியிலே விஷ்ணுவுக்கும் உருவமில்லை !

அரூப விஷ்ணு யுகங்கள் தோறும் அவதரித்து பூமிக்குவரும்போது மனிதனாய் சரீரத்தில் வருவதால் அவர் ``சிவபாலன் `` வல்லமையுள்ள மனிதனாக - வண்சிவனாக வந்தாலும் வேதத்தை - ஞானத்தை உபதேசிப்பதால் வண்சிவஞான வடிவானவர் ! தசரதகுமாரன் - வசுதேவகுமாரன் - மனுஷகுமாரனாகவே பூமிக்கு வந்தார் ! இயேசுவை இறைமைந்தன் என கிருஷ்தவர்கள் சொன்னாலும் அவர் பூமியில் இருந்த நாளெல்லாம் தன்னை மனுஷகுமாரன் அதாவது சிவபாலன் என்றுதான் அழைத்துக்கொண்டார்

சரீரத்திலே அவர்கள் சிவபாலர்கள் ! ஆனால் ஆதியிலே அல்லது அரூபத்திலே விஷ்ணு ! இந்த உண்மையை ``வைணவம் தான் சரியான மார்க்கம் என்று ஆதிசங்கரரும் நிலைனாட்டினார் !

எந்தனு ளேக செஞ்சுட ராகி
யென்கணி லாடு ...... தழல்வேணி


அப்படி சரீரத்திலே அவதரித்து உபதேசித்தவைகளை ஒரு மனிதன் உணரத்தொடங்கி ஆத்மஞானம் பெறும்போது அவனுக்குள் ஞானஒளி வீசும் உள்ளொளியாக திளைத்து அவனது பிறப்பு இறப்பு சக்கரமாகிய கணிதத்தில் பாவத்தை அழிக்கும் தழலாக - வேணலாக சற்குரு பிரகாசிக்க தொடங்குகிறார் !

எந்தையர் தேடு மன்பர்ச காயன்
எங்கள் சுவாமி ...... யருள்பாலா

இவரையே ஆதிமனித சமூகமான லெமூரியாக்கண்டத்து தமிழர்கள் தேடி அதனால் சகாயத்தை பெற்றனர் ! எங்கள் மீதும் அருளைப்பொழிவாயாக !

சுந்தர ஞான மென்குற மாது
தன்றிரு மார்பி ...... லணைவோனே


அவ்வாறு அவனைத்தேடுவோர்கள் பல தவறுகளுக்கு இடம் கொடுத்தவர்களாக இருந்தாலும் அவர்களுள் ஞானம் விளைய விளைய பரிசுத்தம் உள்ளவர்களாக மாற்றி அவர்கள் மீது தீராத அன்பு செலுத்துபவன் நீ !

சுந்தர மான செந்திலில் மேவு
கந்தசு ரேசர் ...... பெருமாளே.


பாவத்தை மேவி சுத்தமாக்கி அவர்களை ரட்சிக்கிறவன் நீ ! பூமியிலே மனுக்குலத்தின் ரட்சகன் - கந்தன் நீயே ! அதேவேளையில் வாண்மண்டலத்தில் தேவர்களின் தலைவன் பெருமாளும் நீயே ! தேவசேணாபதி நீயே !

தேவதூதர்களின் தலைவனை ஆபிரகாமிய வேதங்கள் -- ( யூதர்களின் தவ்ராத் , கிருஷ்தவர்களின் பைபிள் , முஸ்லீம்களின் குரான் ) காப்ரியேல் என அழைக்கின்றன ! அவரே இந்தியாவில் பெருமாள் அல்லது முருகன் !

கடவுள் நமது மனக்கண்ணை திறந்தருளுவாராக !!
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum