ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 T.N.Balasubramanian

ஆனி திருமஞ்சன மகாஉத்சவம்
 ayyasamy ram

படிக்கணும் நாமும் படிக்கணும்
 ayyasamy ram

சீற்றம் – கவிதை
 ayyasamy ram

நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
 ayyasamy ram

ஆறு வித்தியாசம்…
 ayyasamy ram

ரேஷன் கார்டு கதைகள்…!
 ayyasamy ram

டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
 ayyasamy ram

தமிழ்நேசன் அவர்களுக்கு
 balakama

அமெரிக்காவில் இந்த வாரம் - 6
 மூர்த்தி

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 ராஜா

ரமதான் -நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள் ! 
 M.Jagadeesan

காக்கைச் சிறகினிலே
 ayyasamy ram

முதல் பார்வை: வனமகன் – வசீகரிக்கிறான்!
 ayyasamy ram

விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
 சரவணன்

திரிபலா சூரணம்!
 ayyasamy ram

பொண்டாட்டியே உதைப்பா...!
 ayyasamy ram

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 ayyasamy ram

பார்லி மழைகால கூட்டத்தொடர் ஜூலை 17 ல் துவங்குகிறது
 ayyasamy ram

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 M.Jagadeesan

பட்டாம் பூச்சியின் மரணம்
 ayyasamy ram

நிலா…மழை…குழந்தை
 ayyasamy ram

புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
 ayyasamy ram

நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
 ayyasamy ram

எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
 ayyasamy ram

கடன் பாட்டு…!!
 ayyasamy ram

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

லூயி பாஸ்டர்
 ayyasamy ram

மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
 ayyasamy ram

பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
 ayyasamy ram

புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
 ayyasamy ram

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
 ayyasamy ram

ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
 ayyasamy ram

நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
 ayyasamy ram

arimugam
 T.N.Balasubramanian

சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்
 T.N.Balasubramanian

ஹைக்கூ கவிதைகள்
 M.Jagadeesan

சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
 ayyasamy ram

துன்ப காலங்களில் கடவுள்
 T.N.Balasubramanian

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
 ayyasamy ram

ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
 ayyasamy ram

பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
 ayyasamy ram

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
 anuradhamv

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
 T.N.Balasubramanian

அறமற்ற அறிவியல்
 sugumaran

வேலன்:- குறிப்பிட்ட நேரத்தில் கணிணி ரீஸ்டார்ட் ஆகவும் நின்றுவிடவும் செய்திட
 velang

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் !
 T.N.Balasubramanian

#அபிஷேகத்தின்ஆற்றல்அறிவோம் !!!
 T.N.Balasubramanian

ஏன் பிறந்தநாள் ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாட வேண்டும்?
 T.N.Balasubramanian

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."
 T.N.Balasubramanian

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
 SARATHI NEGAMAM

நாடி அடிப்படையில் திருமண காலங்கள்
 SARATHI NEGAMAM

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன
 soplangi

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Thamaraimanalan

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது
 T.N.Balasubramanian

உலக யோகா தினம்
 சரவணன்

வேலன்:- வால்பேப்பர் கேலரி.
 velang

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
 ayyasamy ram

தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
 ayyasamy ram

உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஒரு கையால் வெற்றி ஓசை!

View previous topic View next topic Go down

ஒரு கையால் வெற்றி ஓசை!

Post by Powenraj on Fri Jan 18, 2013 5:58 pm

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதே தனது கனவு என்கிறார் சென்னையின் இளம் டென்னிஸ் வீராங்கனையான சாய் சமிதா. 5 வயதில் டென்னிஸ் மீது காதல்வயப்பட்ட சாய் சமிதா, பல்வேறு ஜூனியர் டென்னிஸ் போட்டிகளில் பதக்கங்களை குவித்திருக்கிறார்.
:-
இவர், ஒரு கையின் (சிங்கிள்ஹேண்ட்) பலத்தில் பந்தைத் திருப்புவதில் கைதேர்ந்தவர். அதுதான் இவரின் பலமும்கூட (வெற்றியை"ஒரு கை' பார்க்காமல் விடமாட்டார்!). தற்போது சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவ கல்லூரியில் முதலாமாண்டு பி.காம். படித்து வரும் இவர், விரைவில் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலடி எடுத்து வைக்கக் காத்திருக்கிறார். வியர்வை வடிய சென்னை நேரு பார்க்கில் பயிற்சி மேற்கொண்டிருந்த அவரை ஒரு மாலை வேளையில் சந்தித்தோம்.இதோ அவரின் பதில்கள்:
:-
டென்னிஸ் மீது எப்படி ஆர்வம் ஏற்
பட்டது?
அப்பா டென்னிஸ் வீரர் என்பதால், நானும் டென்னிஸை தேர்ந்தெடுத்தேன். பயிற்சியாளர் ஹிடென் ஜோஷிதான் என்னை ஒரு நல்ல வீராங்கனையாக செதுக்கியவர்.2004-ல் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற மாநில ரேங்கிங் போட்டியில் 12 மற்றும் 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் பட்டம் வென்றேன். அதுதான் மாநில அளவிலான போட்டிகளில் நான் வென்ற முதல் பட்டம். 2008-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற சூப்பர் சீரிஸ் டென்னிஸ், 2009-ல் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் டென்னிஸ் போட்டிகளில் பட்டம் வென்றேன். அதைத்தொடர்ந்து இந்தோனேசியாவில் நடைபெற்ற உலக ஜூனியர் டென்னிஸ் தனிநபர் ஒற்றையர் பிரிவில் 5-வது இடத்தைப் பிடித்தேன்.
:-
மறக்க முடியாத போட்டி ஏதாவது?
அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டோருக்கானபோட்டியில் ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளிலும் பட்டம் வென்றேன். அதில் ஒற்றையர் இறுதிச்சுற்றின் முதல் செட்டை 1-6 என்ற கணக்கில் ஜெர்மனியின் அன் கிறிஸ்டியானிடம் இழந்தேன். எனினும் கடுமையாகப் போராடி அடுத்த இரு செட்களையும் 6-0, 7-6 (6) என்ற கணக்கில் கைப்பற்றி அவரை வீழ்த்தினேன். அந்த வெற்றியை எப்போதுமே மறக்க முடியாது.
:-
உங்களின் ரோல் மாடல் யார்?
அமெரிக்க வீராங்கனை செரீனாவில்லியம்ஸ்தான் எனது ரோல் மாடல். அவருடைய அதிரடியான சர்வீஸ்களும், "பேக் ஹேண்ட்'ஷாட்களும் எனக்குப் பிடிக்கும். நானும் "பேக் ஹேண்ட்' வீராங்கனைதான். லியாண்டர் பயûஸயும் எனக்குப் பிடிக்கும்.
:-
டென்னிஸில் தங்களின் இலக்கு...
அடுத்த ஆண்டு இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்ட ஐடிஎஃப் டென்னிஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் சிறப்பாக ஆடி பட்டம் வெல்ல வேண்டும். அதன்பிறகு சர்வதேச அளவிலான சீனியர் போட்டிகளில் காலடி எடுத்து வைக்க வேண்டும். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க வேண்டும்.
:-
நீங்கள் சந்திக்க நினைக்கும் டென்னிஸ் பிரபலம்?
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 17 சாம்பியன் பட்டங்களை வென்றவரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை சந்திக்க விரும்புகிறேன். அவர் களத்தில் நிற்கும்போது புன்னைகையோடு இருப்பார். பரபரப்பான ஆட்டங்களில்கூட பதற்றப்படாமல் விளையாடக்கூடியவர்.
:-
சென்னையில் டென்னிஸ் போட்டிக்கான உள்கட்டமைப்புவசதிகள் எப்படியுள்ளன?
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி ஸ்பெயின், மலேசியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கும் சென்று விளையாடியிருக்கிறேன். நம்முடைய சென்னையில் ஓரளவு உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தாலும், ஸ்பெயின் அளவுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் இங்கு "பிட்னஸ்' மையங்கள் பெரிய அளவில் இல்லை. அந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டால் நன்றாகஇருக்கும்.
:-
வெளிநாடுகளில் உடற்தகுதிக்கு என்றே தனியாக பயிற்சியாளர்களை வைத்திருக்கிறார்கள். அதுபோல் இங்கு இல்லை. அப்படி இங்கும் பயிற்சியாளர்கள் இருந்தால், காயம் உள்ளிட்ட பிரச்னைகள் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள முடியும்.
:-
பயிற்சி பற்றி சொல்லுங்களேன்?
தினந்தோறும் காலை, மாலை என இரு வேளையிலும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நேரு பார்க்கில் பயிற்சியில் ஈடுபடுகிறேன். அதற்கு கல்லூரியும் எனக்கு உதவி வருகிறது.
:-
தினமணி
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2087
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: ஒரு கையால் வெற்றி ஓசை!

Post by கரூர் கவியன்பன் on Fri Jan 18, 2013 8:39 pm

அப்பெண்மணி சர்வதேச அளவில் சிறந்து விளங்க எனது வாழ்த்துகள் சூப்பருங்க
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 697

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum