புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:44 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_c10அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_m10அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_c10 
68 Posts - 59%
heezulia
அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_c10அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_m10அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_c10 
41 Posts - 36%
mohamed nizamudeen
அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_c10அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_m10அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_c10அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_m10அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_c10அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_m10அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_c10 
110 Posts - 60%
heezulia
அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_c10அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_m10அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_c10அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_m10அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_c10அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_m10அன்று ராஜீவ், இன்று ராகுல்! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்று ராஜீவ், இன்று ராகுல்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Jan 21, 2013 11:00 am

துணைத் தலைவர்களை நியமிப்பது காங்கிரஸ் கட்சியில் புதிதல்ல. ஆனால், ராகுல் காந்தி துணைத் தலைவராக்கப்பட்டிருப்பது சற்று வித்தியாசமானது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான முன்னோட்டம்தான் இது என்று கொள்ளலாம்.
-
ஜெய்ப்பூரில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் சுய விமர்சன விவாதத்தின் முடிவில், காங்கிரஸ் கட்சியை எதிர்நோக்கியுள்ள இரண்டு பெரிய சவால்களைக் கட்சித் தலைமை திடீரென்று உணர்ந்து,அவற்றை எதிர்கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. அந்த இரண்டு சவால்கள் என்னவெல்லாம் தெரியுமா?
-
இளைஞர்கள் மத்தியில், ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்குப் பங்கில்லை என்பதும், அரசும் நிர்வாகமும் மக்கள் பிரச்னைகளைப் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கிறது என்கிற கோபம் எழுந்திருப்பதும் முதலாவதுசவால். இதற்கு, காங்கிரஸ் தலைமை கண்டுபிடித்திருக்கும் மருந்து, 43 வயது இளைஞர் ராகுல் காந்தியைத் துணைத் தலைவராக்கி முன்னிலைப்படுத்துவதுடன், கட்சியிலும் ஆட்சியிலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது.
-
இரண்டாவது சவால், நகர்ப்புற, நடுத்தர வர்க்கத்தினருக்குக் காங்கிரஸ் கட்சியின் மீதும், ஆளும் அரசியல் வர்க்கத்தின் மீதும் ஏற்பட்டிருக்கும் கோபமும் வெறுப்பும். அதை உணர்ந்திருப்பதாகச் சொல்வதன் மூலம், மத்தியதர வகுப்பினரின் உணர்வுகளைப் பிரதிபலித்து அதனால் அவர்களது ஆதரவைப் பெற்று விடலாம் என்பதுதான் இரண்டாவது சவாலுக்குக் காங்கிரஸ் தலைமை கண்டுபிடித்திருக்கும் தீர்வு.
-
1984-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி, மும்பையில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில், இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின் காங்கிரஸ் தலைவராகப் பதவி ஏற்ற, ராகுல் காந்தியைவிட மூன்று வயது இளையவராகவே இருந்த அவரது தந்தை ராஜீவ் காந்தியும், இதே வசனங்களைத்தான் பேசினார். தலைமுறை மாறி இருக்கிறது. வசனம் மாறவில்லை. நிலைமையும் மாறவில்லை.
-
இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வர வேண்டும் என்கிறகோஷம் சரி. ஆனால், அந்த இளைஞர்கள் அனைவரும் வம்சாவளி வாரிசுகளாக இருந்தால் எப்படி? கட்சியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது சரி. ஆனால், அடிப்படைத் தேர்தல் நடத்தப்படாமல், கட்சியின் கிளைகள் அனைத்துமே நியமன முறையில் செயல்படும்போது கட்சிக்கு உயிர்ப்பும், சுறுசுறுப்பும் ஏற்படுத்துவது எப்படி?
-
120 வயதான ஒரு கட்சி, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தங்களுக்கென்று செல்வாக்குள்ள, மக்கள் மனதில் தங்களது சேவையாலும் தியாகத்தாலும் இடம்பிடித்தஒரு தலைவரைக்கூட வளர விடாமல் இருக்கும்போது, அந்தக் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியம்?
-
கடந்த 2009 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு, இந்தியாவின் நகர்ப்புறவாசிகளின் ஆதரவு அந்தக் கட்சிக்கு அதிகரித்ததுதான் காரணம். இந்தியாவில் சுமார் 200 நகர்ப்புறத் தொகுதிகளில் சரிபாதிக்கும் மேல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அந்த நகர்ப்புற மத்தியதர வகுப்பினருக்குக் காங்கிரஸ் செய்த கைமாறு, விலைவாசி உயர்வும், நிர்வாகக் குளறுபடியும், அவர்களை மயக்கமடையச் செய்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகளும்தான். பணக்காரர்கள்மீது வரி விதிப்பதற்கும், அரசின் நிர்வாகச் செலவினங்களைக் குறைப்பதற்கும் பதிலாக, அத்தியாவசியப் பொருள்களின்விலைகளை உயர்த்தியதுதான் மன்மோகன் சிங் அரசின் சாதனையாக இருந்திருக்கிறது.
-
2004 ஜூன் மாதம் ரூ. 36 ஆக இருந்த பெட்ரோல் விலை இப்போது ரூ. 67.50. டீசல் விலை ரூ. 22.74-இல் இருந்து ரூ. 47.65; எரிவாயு உருளையின் விலை ரூ. 242-இல் இருந்து ரூ. 410. ரூ. 4,960 ஆகஇருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை இப்போது சுமார் ரூ. 23,000. நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கும் இவை பற்றி எல்லாம் கவலைப்படாமல், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்காகக் கவலைப்படும் அரசும் கட்சியும் எப்படி அவர்களது ஆதரவைப் பெற முடியும் என்பது ராகுல் காந்திக்குத்தான் வெளிச்சம்.
-
காங்கிரஸ் கட்சி என்பது அடிமட்டத் தொண்டர்களே இல்லாத, முறையான கட்சி அமைப்பே இல்லாத இயக்கமாக மாறிவிட்டிருக்கிறது. அதற்குத் தேவை அமைப்புரீதியான அடிப்படை மாற்றமே தவிர, தலைமை மாற்றமோ, இளைய தலைவர்களின் அதிகரித்த ஈடுபாடோ அல்ல.
-
இந்தியாவைப் பொறுத்தவரை, தேசத்தின் ஒற்றுமைக்குக் காங்கிரஸ் கட்சி பலவீனப்படுவது நல்லதல்ல. ஆபத்தும்கூட. இந்த நிலையிலும், இந்தியாவில் உள்ள குக்கிராமம்வரை பரவலாக அறியப்படும், மதிக்கப்படும் கட்சி காங்கிரஸ் மட்டுமே. காங்கிரஸ் இல்லையென்றால் தேசம் ஒரே நாடாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.
-
அதேநேரத்தில், வம்சாவளி முறை அரசியலும், உள்கட்சித்தேர்தல் இல்லாத நியமன முறையும் காங்கிரஸில் தொடர்வதும், ஆட்சி அதிகாரத்தில் அது பிரதிபலிப்பதும் இந்திய ஜனநாயகத்தின் மீது மக்கள் அவநம்பிக்கை அடைய முக்கியமான காரணங்கள். 120 வருடக் கட்சியின் பலவீனங்களும் குறைபாடுகளும், இந்தியாவின் ஏனைய தேசியக் கட்சிகளையும், மாநிலக் கட்சிகளையும் பாதித்திருக்கிறது. காங்கிரஸில் இந்த நிலைமை தொடருமானால், மக்களாட்சி முறைக்கே அது ஆபத்தாக அமையும்.
-
நேரு குடும்ப வாரிசு கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்பது என்பது அந்தக் குடும்பத்தின் அடிவருடிகளுக்கும், அடுத்த தேர்தலைச் சந்திக்க வேறு தலைமை இல்லாத நிலையில் கட்சித் தலைவர்களுக்கும் வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்கலாம். அதனால் பயனிருக்குமா என்றால் சந்தேகம்தான்.
காங்கிரஸ் கட்சியின் இன்றைய தேவை டானிக் அல்ல, அறுவைச் சிகிச்சை. தலைமை மாற்றமல்ல, நிலைமை மாற்றம்!
-
தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 21, 2013 11:12 am

நேரு குடும்ப வாரிசு கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்பது என்பது அந்தக் குடும்பத்தின் அடிவருடிகளுக்கும், அடுத்த தேர்தலைச் சந்திக்க வேறு தலைமை இல்லாத நிலையில் கட்சித் தலைவர்களுக்கும் வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்கலாம். அதனால் பயனிருக்குமா என்றால் சந்தேகம்தான்.
சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக