ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்!

View previous topic View next topic Go down

வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்!

Post by சிவா on Sat Jan 26, 2013 11:02 amஆடு, மாடு, கோழி போன்ற விலங்கினங்களிடம், இல்லை... இல்லை... மனிதனுக்கு மனிதனிடமே கூட இரக்கம் என்பது எப்போதுமே, தாமரை இலை மேல் உள்ள தண்ணீரைப் போல பட்டும் படாமல் தான் இருந்து வந்துள்ளது. இப்போதும் இருந்து வருகிறது. இரக்கத்தைப் பற்றி வாய் வலிக்க பலவாறு பேசுவார்களே தவிர, அதனை செயல்படுத்துபவர்களை காண்பது அரிதிலும் அரிதுதான்.

வாடிய வள்ளலார்

ஆனால் விலங்குகள், மனிதர்கள் மட்டும் அல்ல, தாவரங்களும் ஒரு உயிர் என்பதை கருத்தில் கொண்டு, வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அவைகளிடமும் தனது இரக்கத்தை வெளிகாட்டியவர் வள்ளலார் என்று வர்ணிக்கப்படும் ராமலிங்க அடிகளார்.

உலக உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய தத்துவத்தை வாழ்க்கையில் கொண்டிருந்தவர் வள்ளலார். உயிர்பலிக் கூடாது என்ற உயர்ந்த கருத்தை உதிர்த்தவர். பெரும் துன்பத்திற்கு காரணமாக இருக்கும் சாதி, மத, இன வேறுபாடு மனிதர்களிடையே இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அனைவருக்கும் வழிகாட்டிய, மருதூர் மாணிக்கம். மனித வாழ்வில் பலர் ஒரு வேளை உணவுகூட இன்றி பசித்து வாழ்கின்றனர் என்பதை அறிந்து, சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமசாலையை தொடங்கி பசித்து வருபவர்களுக்கு மூன்று வேளையும் உணவளிக்கும் திட்டத்தை ஏற்படுத்திய உயர்வுமிக்க உத்தமர்.

மருதூரில் பிறந்தார்

சிதம்பரத்திற்கு வடமேற்கே உள்ளது மருதூர் என்ற ஊர். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராமையாபிள்ளை. இவரது மனைவி சின்னம்மை. ராமையா பிள்ளை, கிராம கணக்கு வேலையும், குழந்தைகளுக்கு பாடல் சொல்லி கொடுக்கும் பணியும் செய்து வந்தார். இவர்களுக்கு சபாபதி, பரசுராமன் என்ற மகன்களும், உண்ணாமலை, சுந்தராம்பாள் என்ற மகள்களும் இருந்தனர்.

ஒரு முறை பசி என்று தனது வீட்டிற்கு வந்த சிவனடியார் ஒருவரை, சின்னம்மை வரவேற்று பசியை போக்கினார். பசி நீங்கிய சிவனடியார், உனக்கு உலகம் போற்றும் உத்தம மகன் பிறப்பான் என்று ஆசி வழங்கிச் சென்றார். அவரது வாக்கின்படி 1823-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந் தேதி ராமையாபிள்ளைக்கும், சின்னம்மைக்கும் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராமலிங்கம் என்று பெயர் சூட்டினர்.

ராமலிங்கத்தின் 6-வது மாதத்தில் ராமையாபிள்ளை இயற்கை எய்தினார். இதையடுத்து சின்னம்மை தனது குழந்தைகளுடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். அங்கு உரையாசிரியர் காஞ்சிபுரம் சபாபதி முதலியார் என்பவரிடம், சபாபதியும், பரசுராமனும் கல்வி பயின்றனர். பின்னர் சபாபதி புராண பிரசங்கம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அண்ணன் சபாபதி, அவரது மனைவி பாப்பாத்தி அம்மாள் ஆகியோரால் ராமலிங்கம் வளர்க்கப்பட்டார்.

படிப்பில் ஆர்வம் இல்லை

ராமலிங்கம் பள்ளியில் சேர்க்கப்பட்டும் அவருக்கு படிப்பின் மேல் நாட்டம் இல்லை. தனது பள்ளி தோழர்களுடன் கந்தக்கோட்டம் கந்தனை காணச் சென்று விடுவார். அவரை துதித்து பாடல்களும் பாடி வந்தார். இதனை கண்டு வருத்தமுற்ற சபாபதி, தனது தம்பியை திருத்தும் வகையில் தனது மனைவியிடம், இனிமேல் அவனுக்கு வீட்டில் உணவோ, உடையோ கொடுக்கக் கூடாது என்று கூறி விட்டார். ஆனால் பெற்ற அன்னையை போன்ற, பாப்பாத்தி அம்மாளுக்கு இது பெரிய வருத்தத்தை கொடுத்தது. அவர் தன் கணவர் இல்லாத நேரத்தில் புறக்கடை வாசலுக்கு ராமலிங்கத்தை வரவழைத்து உணவு, உடை கொடுத்து வந்தார். அப்படி ஒரு முறை உணவு கொடுத்த போது அண்ணியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதை கண்டு காரணம் கேட்டார் ராமலிங்கம். அதற்கு அவர், உங்கள் அண்ணன் சொல்படி படிப்பை தொடர்ந்தால், இப்படி புறக்கடையில் வைத்து சாப்பிடும் நிலை வருமா? இது எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது என்று கூறினார்.

கண்ணாடியை வழிபட்டார்

அண்ணியின் அழுகையை சகிக்காத ராமலிங்கம், எனக்கு வீட்டில் தனி அறை ஒதுக்கி கொடுங்கள். நான் படிப்பை தொடர்கிறேன் என்று கூறிவிட்டார். வீட்டின் மாடியில் ராமலிங்கத்திற்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. அந்த அறையில் திருவிளக்கை ஏற்றி, ஒரு கண்ணாடியை சுவரில் மாட்டி, அந்த கண்ணாடிக்கு மாலை அணிவித்து, நைவேத்தியம் படைத்து, தீபாராதனை காட்டி, கண் இமைக்காமல் அதனையே உற்று நோக்கினார் ராமலிங்கம்.

அப்போது கந்தக்கோட்டம் கந்தக்கடவுள் அவருக்கு காட்சியளித்தார். அன்றுமுதல் அந்த திருவுருவையே தரிசிக்கலானார். கந்தனின் கருணையால், ராமலிங்கத்தின் அனைத்து கலைகளும் தாமாகவே விளங்கின. அண்ணியின் உத்தரவுப்படி, தன் சகோதரியின் மகள் தனக்கோட்டியம்மை என்பவரை ராமலிங்கம் மணந்து இல்லறத்தை நடத்தி வந்தார். பின்னர் திருவாசத்தை படித்துக்காட்டி இல்லறத்தை துறந்து சென்றார்.

திருவொற்றியூர் சென்று பதிகம் பாடினார். சிதம்பரம் நடராஜரை தரிசனம் செய்து பாடித் துதித்தார். 1965-ம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கம் அமைத்தார்.

அருட்ஜோதியானார்

வடலூர் பகுதியில் 1867-ம் ஆண்டு சமரச சுத்த சன் மார்க்க சத்திய தருமசாலை அமைத்து பசி என்று வருபவர்களுக்கு சாதி, மத, இன வேறுபாடின்றி மூன்று வேளை உணவு வழங்க செய்தார். 1872-ல் சத்திய ஞானசபை கட்டினார். 1873-ல் சமரச வேத பாடசாலை அமைத்தார். மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் 1873-ம் ஆண்டு சன்மார்க்க கொடிஏற்றி பேருபதேசம் செய்வித்தார். உலகம் உய்யும் வழியில் திருஅருட்பாவை, ஆறு திருமுறைகளாக்கி உலகிற்கு வழங்கினார். மேட்டுக்குப்பம் சித்தி வளாக மாளிகையில் புணர்பூசமும், பூசமும் இணைந்த நள்ளிரவில் 1874-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி அருட்பெருஞ்ஜோதியானார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்!

Post by சிவா on Sat Jan 26, 2013 11:02 am

வள்ளலாரின் கொள்கைகள்

கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.

புலால் உணவு உண்ணக்கூடாது.

எந்த உயிரையும் கொல்லக்கூடாது.

சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.

இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.

எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.

கருமகாரியம், திதி முதலியவை செய்யக்கூடாது.

சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.

எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்!

Post by சிவா on Sat Jan 26, 2013 11:03 am

வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்

நல்லோர் மனதை நடுங்க செய்யாதே.

தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.

மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.

ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.

பொருளை இச்சித்து பொய் சொல்லாதே.

பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.

இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே.

குருவை வணங்கக் கூசி நிற்காதே.

வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே

தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்!

Post by சிவா on Sat Jan 26, 2013 11:04 am

வள்ளலார் பதிப்பித்தவை

சின்மய தீபிகை
ஒழிவிலொடுக்கம்
தொண்டமண்டல சதகம்

இயற்றிய உரைநடை

மனுமுறை கண்ட வாசகம்
ஜீவகாருண்ய ஒழுக்கம்

வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்

1 . சிறந்த சொற்பொழிவாளர் .

2 . போதகாசிரியர்.

3 . உரையாசிரியர்.

4 . சித்தமருத்துவர்.

5 . பசிப் பிணி போக்கிய அருளாளர் .

6 . பதிப்பாசிரியர்.

7 . நூலாசிரியர்.

8 . இதழாசிரியர்.

9 . இறையன்பர்.

10 . ஞானாசிரியர்.

11 . அருளாசிரியர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்!

Post by சாமி on Sat Jan 26, 2013 11:28 am

பதிவு அருமை சிவா!
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்!

Post by பாலாஜி on Sat Jan 26, 2013 11:31 am

அருமையான பதிவு சூப்பருங்க நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: வழிகாட்டியாக வாழ்ந்தவர் வள்ளலார்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum