ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 ayyasamy ram

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 ayyasamy ram

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 ayyasamy ram

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 பழ.முத்துராமலிங்கம்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

கேரளா சாகித்ய அகாடமி
 ayyasamy ram

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சில்லுன்னு ஒரு சந்திப்பு - விமர்சனம் S

View previous topic View next topic Go down

சில்லுன்னு ஒரு சந்திப்பு - விமர்சனம் S

Post by Powenraj on Thu Feb 21, 2013 3:13 pm

http://soundcameraaction.com/media/k2/items/cache/6938e15e4230502e1c1b14ab45575302_XL.jpg
விமலும், ஓவியாவும் களவாணிக்கு அப்புறம் ஜோடி சேர்றாங்க.. எதாச்சும் இருக்கும்னு போனா.. முதல்ல அவங்க ஜோடியே இல்ல போங்க.
ஊட்டில்ல கான்வென்ட் ஸ்கூல்ல விமலும்,ஓவியாவும் யூனிபார்ம் போட்டுகிட்டு லவ்பண்றாங்க.. (என்னது? ஜோடி இல்லைன்னு சொல்லிட்டு லவ் பண்றாங்கண்ணா என்ன அர்த்தம்னு லாஜிக் கேள்வி கேக்குறீங்கன்னு தெரியுது. உங்களுக்கு பின்னாடி வெளக்கம் இருக்குபாஸ். பொறுமை!) அதாவது விமல் ஓவியாவையே க்ளாஸ்ல பாத்துகிட்டிருப்பார். வாத்தியார் ஏண்டான்னு கேட்டா, 'காதல் சார்.. நான் பாக்குறேன்னு அவளுக்கு எப்படி தெரியும்? அவளும்பாக்குறதால தானே?அவளும் என்ன லவ் பண்றாண்ணு சொல்லச்சொல்லுங்க சார்' என சொல்ல, அந்த வாத்தியார் வேல் முருகனும் மந்தபுத்திகாரராய் யோசிக்க அவருக்கு செய்முறை விளக்கம் கொடுக்கிறேன் என அங்கே வரும் அட்டென்டர் லேடியை நடக்கச்சொல்லி, வாத்தியாரை பார்க்க சொல்ல, அவரும் பார்த்து காதலில் விழுந்துஅந்த லேடியையே கல்யாணம் செய்துகொள்கிறார். ஏண்டா இப்படி மொத்த சீனை வெளக்குறோம்னு நீங்க யோசிக்கலாம். அடுத்து வரப்போற 50 சீன்களும் எப்படி இருக்கும்னு ஒரு சாம்பிளுக்குத்தான்.
-
இப்படி மொக்கையாய் ஆரம்பிக்கும் விமல், ஓவியா காதல், அதே போல இன்னும் சில படு மொக்கையான காட்சிகளில் வளர்ந்து லிப் கிஸ்ஸெல்லாம் வரைபோக, வீட்டுக்கு விசயம் தெரிய ஓவியாவின் அப்பா சென்னைக்கு ட்ரான்ஸ்பர் வாங்க, விடைபெறும் ஓவியாவை விட முடியாமல் ஓடிப் போய் போலிஸ் ஸ்டேசனில் கல்யாணம் பண்ணிவைக்க கேட்க, அந்த உலகக் காதலர்களின் ஆதரவு அதிகாரி, 'இப்படியே லவ் பண்ணிகிட்டு இருங்க.. நீ சென்னைக்கு போய் அவள பாரு..போன்ல பேசிக்கங்க, லெட்டர் போட்டுக்கங்க, 18வயசானதும் நானே கல்யணம் பண்ணி வைக்கிறேன்' என்கிறார்.அதுவரைக்கும் ரெண்டு அப்பா அம்மாவும் இவங்களை டிஸ்டர்ப் பண்ணகூடாதுன்னு அவர்களிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அனுப்புகிறார். (எங்க சார் இருக்காரு? ரொம்பநல்லவர் சார் இவரு. 3, நீ.எ.பொ.வ போன்ற படங்களில் கவிதையாய் பார்த்த பள்ளிக்காதல் இதில் கழுதையாய் மாறிவிட்டதை எண்ணி கண்ணீர் வந்தாலும் ஒரு வேலை டைரக்டருக்கு பள்ளிக்கூட காதல்கதைகளில் அனுபவம், ஈடுபாடுஇல்லை போலன்னு நினைச்சு மன்னிச்சிடலாம்.)
-
அப்புறம் சில வருடங்கள் கழித்து கதை தொடர்கிறது. அமெரிக்காவில் இருக்கும் விமல் 10 வருட கான்ட்ராக்டில் போனதால் பாட்டியையும் உறவினர்களையும் பார்க்காமல் ஏங்கி ஏங்கி தவித்து ஒரு பார்சலில் ஒரு சிடி அனுப்புகிறார். அதில் பாசம்னா என்ன, காண்ட்ராக்ட்னா என்ன.. அப்படின்னுசில விளக்கங்கல்லாம் குடுத்துட்டு, 5 வருசத்துல காண்ட்ராக்ட உடைச்சிட்டு இன்னும் சில நாட்களில் வர்றேன்னு சொல்றார். (சரி கதை எழுதுன டைரக்டருக்கு அமெரிக்கால காண்ட்ராக்ட் லேபர்லாம் இல்லைன்னு தெரியலைன்னு மன்னிச்சிடலாம். ஆனா அமெரிக்கால வேலை பாக்குற ஐ.டி. ஆளு டெய்லி போன்ல, இன்டர்னெட்ல வீடியோல பேசிக்கலாமே.. பாசத்தை மொத்தமா சேத்து வச்சு சிடி பதிவு பண்ணில்லாம்.... சரி அதையும் மன்னிச்சிடுவோம்)
-
ஊருக்கு வர்ற விமல் மூனு பொட்டி நிறைய எதாச்சும் பாட்டில், பர்ப்யூம்னு வாங்கிட்டு வருவாருன்னு நீங்க எதிர்பார்த்தீங்கண்ணா அவரு கேரக்டரையே நீங்கபுரிஞ்சிக்கலைன்னு அர்த்தம். பொட்டி நிறைய பாட்டி எழுதுன லெட்டரையெல்லாம் அப்படியே அடைச்சுதிரும்ப கொண்டுவந்துருக்காரு.ஏன்? பாசம் சார், பாசம்!
அப்புறம் என்ன? அந்த லெட்டரையெல்லாம் பாட்டி எழுதலை..பாட்டி சொல்லச்சொல்ல எழுதுனது ஒரு குட்டி.. ஐ மீன்.. ஒரு அழகான பொண்ணுசாருமதின்னு(தீபாஷா) தெரிந்து அந்த லெட்டருக்குகிஸ் குடுத்து காதல் எபிசோட் ஆரம்பிக்கிறார். இந்தக் காதலையாச்சும் டைரக்டர் கொஞ்சம்ரசிக்கிற மாதிரி காமிச்சிருப்பார்னு எதிர்பாத்தீங்கண்ணா அது உங்க தப்பு. சில பல குறிப்பிட்டுச்சொல்லும் அளவுக்குவொர்த் இல்லாத சீன்களில் இவர்கள் காதலிக்கிறாங்கன்னு புரியுது. அதைஇரண்டு குடும்பமும் தண்ணீர், பாக்டம்பாஸ், எருமைச்சானி இன்னும் பல உரங்கள் போட்டு வளர்க்க, கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணுதானேன்னு விமல் ஒரு கிஸ் அடிக்க.. அந்தப் பொண்ணோ டென்சனாயிடுது. பின்ன.. கலாச்சாரம் என்னாகுறது? நம்பிக்கை இருக்குங்கிறதுக்காக இப்பவே படுத்துகலாமா அப்படி இப்படின்னு இந்துமக்கள் கட்சி பொதுச்செயலாளர் எழுதிக்கொடுத்த மாதிரி சில டயலாக்குகளை பேச..சரி எதுக்கு வம்புண்ணு உரம்போட்டு வளர்த்த குடும்பம் இரண்டும் கல்யாணத்தை பண்ணிவைச்சிட முடிவு பண்ண..
அப்படியே ஒரு பாடலுக்கு போய் கிஸ் பண்றதுக்கே டயலாக் அடிச்ச பொண்ண தாலியை கட்டி தாறுமாறா விமலை வெளையாட விடுறாரு டைரக்டர் (இப்ப என்ன பண்ணுவே? )
-
சாங் முடிஞ்சப்புறம் தான் தெரியுது அது கனவு..இப்பத்தான் நிச்சயதார்த்தம்னு.. அங்கே வந்த பழைய வாத்தியார் விமலின் பள்ளிக்கூட காதல்ப்ளாஸ்பேக்கை இழுத்து விட, நம்ம கலாச்சார காவல்காரியான கதாநாயகி மறுபடி டென்சனாகி. வாட் நான்ஸென்ஸ்.. இஸ்கூல்ல ஒரு பொண்ண லவ் பண்ணிட்டு 10 வருசம் கழிச்சு எப்படி நீ என்ன கல்யாணம் பண்ண நினைக்கலாம்? கல்லாட்டம் கல்லாட்டம்.. கல்யாணம் கேன்சல்என சொல்லவிட..
மறுபடி விமல் அமெரிக்கா போய் வேலை பார்க்கலாம்என விசாவுக்காக சென்னை வர ஒரு டிவிஸ்டு.. ஆமா பழைய இஸ்கூலு காதலி ஓவியாவை பார்க்கிறார். இருவரும் பேசிக்கொள்கிறார்கள். அந்த ஓடிப்போய் கல்யாணத்துக்கு ஸ்டேசன் போய் பிரிந்த சம்பவத்துக்கு பிறகு இருவருக்கும் மறுபடி பேசனும், பார்க்கனும்னு நினைப்பே வரலையாம். ஜஸ்ட் லைக் தட் மறந்துட்டாங்களாம். ஏன்னு நீங்க கேள்வி கேப்பீங்கன்னு தெரியும்.
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: சில்லுன்னு ஒரு சந்திப்பு - விமர்சனம் S

Post by chinnavan on Thu Feb 21, 2013 3:16 pm

எங்கள கொல்லாம விடமாட்டாங்க போல சோகம்
avatar
chinnavan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1812
மதிப்பீடுகள் : 290

View user profile

Back to top Go down

Re: சில்லுன்னு ஒரு சந்திப்பு - விமர்சனம் S

Post by Powenraj on Thu Feb 21, 2013 3:21 pm

அதுக்கும் டைரக்டர் விளக்கம் வச்சிருக்காரே. சும்மாவா. அதாவது என்னன்னா.. ஒரு மனுசனுக்கு 18 வயசுக்கு மேலதான்சுயமா தனக்கு என்ன வேணும்னு சிந்திக்க தெரியுமாம். அதனால அதுக்கு முன்னாடி இஸ்கூலுல நீங்க என்ன ஃபீல் பண்ணாலும் அது ஒன்னுமில்லையாம்.சும்மாகாச்சி..அந்த கிஸ்ஸெல்லாம் கணக்குல வராதாம். அதானால இவங்க ரெண்டு பேரும் பிரிஞ்ச அடுத்த நாள்ளேந்தே நீ யாரோ நான் யாரோண்ணு போயிட்டாங்களாம்.அப்ப நடந்தத நினைச்சு இப்ப ரெண்டு பேரும் சும்மா ஜோக்கா சிரிச்சுப்பாங்களாம். அம்புட்டுத்தான்.இது தெரியாம அந்ததீபா ஷா புள்ள கல்யாணத்தை நிறுத்திடுச்சுல்ல.. அதுக்கு இந்த தத்துவத்தை எப்படி புரிய வைக்கிறாங்கங்கிறதுதான் மீதிக்கதையும் கிளைமாக்ஸும்.
-
விமலுக்கு காசு குடுத்தாங்களா இல்லையான்னே தெரியலை. மனுசன் முதல் காட்சிலேந்து கடைசி வரைக்கும் ஒரு காட்சில கூட நல்லா நடிச்சிருக்காரேன்னு யாரும் பாராட்டிவிட கூடாதுன்னு கவனமாநடிப்பை மூட்டை கட்டிட்டு, ஸ்கூல் ட்ராமலா நடிக்கிற மாதிரி எல்லா சீன்லயும் மழிப்பியிருக்காரு. ஒரு வேளை நாம வேகமா வளர்ந்துகிட்டிருக்கோம்.. அதனால இந்த படத்தை திருஷ்டி பொட்டா நினைச்சிட்டாரோ என்னவோ. நியாயமா பார்த்தா கதையும்காட்சியும் சரியில்லாட்டி விக்ரம் நடிப்பே காமெடியாய் இருக்கும் போது விமல் என்ன பண்ணிவிட முடியும். (சரி மன்னிச்சிடுவோம்)
-
பாவம் ஓவியா. ஆரம்பத்தில் ஸ்கூல் பொண்ணாய் பொருத்தமாய், யூனிபார்மில் கிறக்கம் வர வைத்தாலும்(ஏன் கிறக்கம்னு கேக்குற அளவுக்குஅப்பாவியா நீங்க?) அப்புறம்கானாமல் போய் கடைசியில் ஹீரோ, ஹீரோயினை சேர்த்து வைக்கும் பெருமையாய் சிரிக்கும் பாத்திரம் தான் அவருக்கு. (இந்த அநியாயத்தை மன்னிக்க முடியாது வன்மையாய் கண்டிக்கிறோம்.)
-
தீபா ஷா. கதாநாயகியாய் ப்ரமோஷன். களையான முகமும் எக்ஸ்பரஸன்ஸும். இந்த காரக்டருக்கு பொருத்தமாய் இருக்கிறார்.
ப்ளஸ் பாயிண்ட்னுசொல்லனும்னா.. கதைசாரி.. கதைக்கும் முன்னாடி ஒரு கருவாய், பள்ளிக்காதலில் மெச்சூரிட்டி இல்லை. அது கவிதைக்கு அழகாய்இருக்கலாம். வாழ்க்கைக்கு அதுபத்தாது. இரு மனிதர்களுக்கு இடையே டேஸ்ட், உலக அறிவு, பாலிடிக்ஸ, எக்கனாகிஸ், படிக்கிற புஸ்தகம், பார்க்கிற பார்வைன்னு எல்லாத்துலையும் ஒத்துப்போனாத்தான் கல்யாணம் பண்ணிக்கொண்டு காலம் பூரா வாழ முடியும். இல்லாட்டி இந்த வாழ்க்கை நரகமாகிடைவர்ஸில் தான் முடியும் அப்படிங்கிற ஒரு தெளிவான, ஆழமான கருத்தைத்தான் எடுத்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ரவி லல்லின் அதற்காக அவரை கண்டிப்பாய்பாராட்டலாம். ஆனால் அதை கதையாக, திரைக்கதையாக, காட்சியாக, வசனமாக, எல்வாவற்றையும் ஒருங்கிணைத்து அனுபவமாக்கும் டைரக்சனாக என எல்லா இடங்களிலும் கோட்டைவிட்டுவிட்டார். எதை குறை கூறுவதென நமக்கே புரியவில்லை போங்க. (சரி டைரக்டருக்கு படம் எடுத்து அனுபவம் இல்லை போலன்னு நினைச்சுட்டு மன்னிச்சிடனும்னு எதிர்பாக்குறாங்களோ?)
-
அதுக்கு மேல லாலாலாலாலா என கேப் விடாமல் பின்னணி இசையில் எக்ஸ்ட்ரா டார்ச்சர் வேறு.
ராட்டினம் படத்துல சொன்ன கதை போலத்தான் இதுவும். ஆனால் அந்தப் படத்தில் கூட அந்த பள்ளிக்காதலும், அதையொட்டிய சம்பவங்களும் ஓரளவு நம்பும்படியாய் இயல்பாய் இருந்தது. ஆனால் இதில்...
-
sound camera action
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: சில்லுன்னு ஒரு சந்திப்பு - விமர்சனம் S

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum