ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 aeroboy2000

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

வீரக்குமார். ப
 kuloththungan

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 aeroboy2000

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 ayyasamy ram

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 aeroboy2000

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 ayyasamy ram

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2

View previous topic View next topic Go down

ஈகரை உலகை உலுக்கும் சினிமா : தொடர், பாகம்-1

Post by Powenraj on Thu Feb 21, 2013 3:34 pm

http://soundcameraaction.com/media/k2/items/cache/c6cc8653a2d1ab0297db1dc5c83099fb_XL.jpg
வாழ்க்கையில் ஒருமுறை நடந்து முடிந்த நிகழ்ச்சியை நினைவில் மட்டுமேஅரைகுறை தெளிவோடுமக்கள் ஓட்டிப்பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. ஒரு நிகழ்வை கண்முன் திரையில் காட்டமுடியும் என்பது 1880களில் கிட்டத்தட்ட கடவுளின் சக்திக்கு நிகரானசெயல்.
அப்படி எண்ணியிருந்த மக்களின் முன்னிலையில் அந்த அதிசயம் நிகழ்த்திக் காட்டப்பட்ட நாள்தான் உலகை சினிமா உலுக்கிய முதல் நாள். சினிமாவின் ஆரம்பக் காலக்கட்டத்தில் திரையில் குதிரை வண்டி வந்தால் அரங்கில் இருந்த மக்கள் அதிர்ந்துஒதுங்கினார்கள். திரைக்குள் தீப்பிடித்தால் பயந்து நடுங்கினார்கள். கிட்டத்தட்ட சினிமா என்பது அவர்களுக்கு ஒரு மாயாஜால நிகழ்ச்சியாகவே தெரிந்தது. நிஜமல்லாத நிகழ்வுகளை நிஜம்போலவே காட்டி மகிழ்விக்கும், அழவைக்கும், அலறவைக்கும் சினிமா என்ற மெய்நிகர் உலகத்திற்கு தங்களை வேகமாக பழக்கப்படுத்திக் கொண்டதோடு, கொஞ்சமே கொஞ்சமாய் அடிமைப்படுத்தியும் கொண்டார்கள்.
பொதுவாகவே கதை கேட்பதில் மிகுந்த ஆர்வமுள்ள மனித இனத்தின் வரலாற்றில் பல ஆயிரம் வருடங்களாக நாடகங்களும், சிலநூறு வருடங்களாக நாவல்களும் ஏற்படுத்தாத தாக்கத்தை சில ஆண்டுகளிலேயே சினிமாவால் ஏற்படுத்த முடிந்தது. நாடகங்கள் என்னதான் பல ஆயிரம் ஆண்டுகளாகமனிதனை மகிழ்வித்துக் கொண்டிருந்தாலும் அதில் இழையோடும் செயற்கைத்தனம் மனிதனை தொடர்ந்துஉறுத்திக்கொண்டேதான் இருந்தது. எவ்வளவு பெரிய நாடக அரங்காலும் அதை முற்றிலும் தவிர்க்க முடியவில்லை. இது ஒருபுறமிருக்க, நாவல் படிப்பதோ படிப்பவருக்கு நாவலில் உள்ள விஷயங்களை, வர்ணிக்கப்படும் உருவங்களை கற்பனைசெய்துபார்க்கும் ஒரு வேலையைக் கொடுத்தது. அதுமட்டுமல்லாது நாவல்கள் பலநாட்கள் எடுக்கும் 'வளவள' பொழுதுபோக்கு. மேலும் பணக்காரர்களின், படித்தவர்களின் பொழுதுபோக்காகவே நாவல் படிக்கும் பழக்கம் இன்றும் இருக்கிறது. இவ்விரண்டிற்கும் மாற்றாக, "நீ நாற்காலியில் சாய்ந்து சொகுசாகஅமர்ந்துகொள், மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்ற வசதியுடன் அமர்க்களமாக தன்னை மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதுதான் சினிமா!! பொழுதை போக்க நினைப்பவர்கள் எதுவுமே செய்யாமல் அமைதியாக அமர்ந்து திரையைப் பார்த்தால் போதும், பொழுது மின்னல் வேகத்தில் பறக்கும்! கதாப்பாத்திரங்கள் தங்களுக்குள்ளேயே பேசிக்கொள்வார்கள், நிகழ்ச்சிகள்எல்லாம் இயல்பான பின்னணியில் திரையில் நடக்கும். அழுகை, சிரிப்பு, நடனம், காதல் என சகலவிதமான உணர்ச்சிகளையும் உள்ளடக்கிய நூறு சதவிகிதம் ஈடு இணையில்லாத பொழுதுபோக்கு உத்திரவாதம்! இந்த வசதிதான் சினிமாவை வெகுவிரைவாகவே மனிதன் கண்டுபிடித்த பொழுதுபோக்குகளின் அரசனாக மாற்றியது.
சரி! சினிமா எப்படி உலகை உலுக்கும்? டிடிஎஸ், 3டி, ஆரோ3டி என புதிய தொழில்நுட்பங்கள் தினமும் சினிமாரசிகர்களை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் மட்டுமல்ல, 'சினிமா' என்ற சொல் சினிமாவுக்கு சூட்டப்படும் முன்பே, அதாவது உருப்படியான சினிமா கண்டுபிடிக்கப்படும் முன்பே சினிமா உலகை உலுக்கியது. பலரும் நினைப்பதைப் போல சினிமாவைக் கண்டுபிடித்தது ஆல்வா எடிசன் என்று ஒரேடியாக சொல்லிவிடமுடியாது. சினிமா என்னும் பிரம்மாண்ட கண்டுபிடிப்பின் மேல் பலரின் கைரேகைகள் பதிந்திருக்கிறது. அந்த ரேகைக் குவியலில் வெகு முக்கியமானது, 'எட்வர்ட் மய்ப்ரிட்ஜ்' (Eadweard Muybridge) என்ற புகைப்பட நிபுணரின் கைரேகை! சினிமாவுக்கு ஆரம்பபுள்ளி வைத்த ஒரு சுவையான சம்பவத்தை இங்கே கண்டிப்பாக குறிப்பிடவேண்டும்.
ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் நிறுவனர் லெலேண்ட் ஸ்டான்ஃபோர்டு (Leland Stanford) ஒரு குதிரைப் பிரியர். குதிரை வேகமாய் ஓடும்போது எதாவதுஒரு கட்டத்தில் அதன் நான்கு கால்களும் காற்றில் இருக்குமா அல்லதுஎப்போதுமே எதாவதுஒரு காலேனும் தரையில் இருக்குமா என்ற சந்தேகம் அப்போதுமக்களிடையே நிலவியது. இந்த 'மிகப் பெரிய' சந்தேகத்திற்கு விடை காண முடிவுசெய்து அந்த பொறுப்பை மய்பிரிட்ஜிடம் ஒப்படைத்தார் ஸ்டான்ஃபோர்ட். 1872ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி 'உண்மையை' கண்டறியும் சோதனைக்கான நாளாககுறிக்கப்பட்டது.இருபத்தி நான்கு காமிராக்களை 'சேலி கார்ட்னர்' (Sallie Gardner) என்ற குதிரையின் வழித்தடத்தில் வரிசையாகப் பொறுத்தி, அவற்றுக்கான விசைகளை குதிரையின் கால்-பதிவினாலேயே இயங்கச் செய்யும் வகையில்அமைத்தார் மய்பிரிட்ஜ். இப்படித்தான் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருக்கும் ஒரு பண்ணையில், 'சேலி கார்ட்னர்' என்ற குதிரையின் நடிப்பில்(!!), ஸ்டான்ஃபோர்டின் தயாரிப்பில், மய்பிரிட்ஜின் ஒளிப்பதிவு-இயக்கத்தில் உலகின் முதல் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது!
பின் பொதுமக்கள் முன்னிலையில் கண்ணாடித்திரைகளில், சேலி கார்ட்னரின் படங்களை
வரிசையாக ஓட்ட அது குதிரை நின்றஇடத்திலேயே ஓடுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது! மேலும் குதிரை ஓடும் போது, ஒரு கட்டத்தில் அதன் நான்கு கால்களும்காற்றில் இருக்கும் என்ற உண்மையையும் அந்தப் படம் நிரூபித்தது! (புகைப்படங்களை வரிசையாக ஓட்டி அதை திரைப்படம் போல காட்டியதால் இதை சிலர் திரைப்படமாக ஏற்றுக்கொள்வதில்லை. உலகின் முதல்அனிமேசன் படம் எனச் சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்) உலகையேஆட்டிப் படைக்கப்போகும் எப்பேர்ப்பட்ட ஒரு பிரம்மாண்ட தொழிநுட்பத்திற்கான ஆரம்பப்புள்ளியை வைத்திருக்கிறோம் என்பது சில ஆண்டுகள் கழித்துதாமஸ் ஆல்வா எடிசனை சந்திக்கும் வரை மய்பிரிட்ஜிற்குத் தெரியவில்லை.
பின்னர் படிப்படியாக ஒரே நேரத்தில் ஃப்ரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் விஞ்ஞானிகள் முழுமூச்சாக சினிமா தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் முயற்சியில் இறங்க, ஒரு வழியாக ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் சினிமாகண்டுபிடிக்கப்பட்டது!


Last edited by Powenraj on Thu Feb 21, 2013 3:54 pm; edited 1 time in total
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

ஈகரை Re: உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2

Post by Powenraj on Thu Feb 21, 2013 3:42 pm

இதைப்பற்றி பல்வேறு தகவல்கள்நிலவுவதால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகவலான லூயி லா ப்ரின்ஸ் (Louis Le Prince) என்பவரால் எடுக்கப்பட்ட 'ரவுந்தே கார்டன் சீன்' (Roundhay Garden Scene) என்ற 'காட்சி'தான்உலகின் முதல் சினிமா என்பதோடு நம் ஆராய்ச்சியை நிறுத்திக்கொள்வோம். இதில் சுவாரசியமான விசயம் என்னவென்றால் லூயி ப்ரின்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வேலை பார்த்து வந்த ஒரு பிரஞ்சுக்காரர் என்பதுதான்!!!!
அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகளான இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் என பலநாடுகளும் ஆரம்பகால சினிமா போட்டியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் தான் ஐரோப்பிய நாடுகளின் சினிமாகனவில் முதலாம் உலகப் போர் என்னும் பேரிடி விழுந்தது. முளையிலேயே அடிபட்ட குருத்தைப் போல, இன்றளவும் எவ்வளவோ போட்டி போட்டும் ஐரோப்பிய சினிமாக்களால் ஹாலிவுட் சினிமாக்களுடன் போட்டியிட முடியாததற்கு இதுதான் காரணம். முதல் உலகப் போர்ஒருவகையில் அமெரிக்க சினிமா உலகான ஹாலிவுட்டின் அசுர வளர்ச்சிக்கு பெரும் துணை செய்தது.
ஒருவேளை முதலாம் உலகப்போர் ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் 1960களில் ரஷ்யா,அமெரிக்காவினிடையே நிலவிய விண்வெளிப் போட்டி போல ஆரோக்கியமான, ஆக்ரோஷமானதொரு சினிமா போட்டி அமெரிக்க மற்றும்ஐரோப்பிய நாடுகளிடையே நிலவியிருக்கக் கூடும். அமெரிக்காவின் அதிர்ஷ்டமோ, ரசிகர்களின் துரதிர்ஷ்டமோ அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மேலும் அமெரிக்க சினிமாவின் உலகலாவிய வியாபாரத்திற்கு மறைமுகமாக பெரிதும் உதவியதுஉலகெங்கும் ஒரு காலத்தில் பரவியிருந்த இங்கிலாந்தின் காலனி ஆதிக்கம் எனலாம். பல குட்டிகுட்டி நாடுகளுக்குள் புகுந்து ஆதிக்கம் செலுத்தி, ஆங்கிலத்தைப் புகுத்திவிட்ட இங்கிலாந்து, ஆங்கிலம் பேசும் அமெரிக்க சினிமாக்கள் அவ்விடங்களிலெல்லாம் புகுந்து ஆட்சி செய்ய தனக்குத் தெரியாமலேயே பாதைவகுத்துக்கொடுத்தது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, மிகவும் அமைதியாக, மெதுவாக ஆசிய, லத்தின் அமெரிக்கநாடுகளிலும் சினிமா வளர்ந்து கொண்டிருந்தது. ஆக ஓரிடத்தில் மெலிதாக படர ஆரம்பித்து, அரை நூற்றாண்டுக்குள்ளாகவே அசுர வளர்ச்சியடைந்து பூமிப்பந்தை முழுதுமாக கவ்விப் பிடித்திருக்கும் ஒரு ராட்சச ஆக்டோபஸாக நம்முன் நிற்கிறது சினிமா.
பிரியாணி செய்யப்பட்ட பாத்திரத்தைப் பற்றி ஓரளவுக்கு சொல்லியாகிவிட்டது. அடுத்ததாக பிரியாணியை எட்டிப் பார்ப்போம். சினிமாவைப் பற்றிஎவ்வளவு வலிந்து வலிந்து எழுதினாலும் கடலில் ஒரு துளி உப்பை எடுத்தது போலத்தானே இருக்கும்? மனதுக்கு நெருங்கிய சினிமாக்களைப் பற்றி எழுதலாம், உலக சினிமா என்ற பெயரில் ஆப்ரிக்க, ஈரானியசினிமாவின் கதைகளை எழுதலாம்,பிடித்த படைப்பாளிகளைப் பற்றி எழுதலாம். ஆனால் இதெல்லாம் தான் ஏற்கனவே இணையத்தில் கொட்டிக் கிடக்கிறதே? 'சிறந்த உலகப் படங்கள்' என கூகிளில் டைப்பினால் ஆயிரக்கணக்கான தகவல்கள் கண்முன்னே கொட்டுமே! ஆக என்னதான் செய்வது? எனவே இந்த பெருஞ்சிக்கலுக்குத் தீர்வாக, தொடரை ஆரம்பிக்கும் போதே ஒன்றை முடிவு செய்துவிட்டேன். எந்த முடிவும் செய்யாமல் தொடரை போகிறபோக்கில் எழுதுவது என்பதே அது!! அமெரிக்க சினிமாவில் திரும்பி, ஜப்பானிய சினிமாவில் ஓய்வெடுத்து, தமிழ்சினிமாவில் காபி குடிக்கும் ஒரு பரபரக்கும் பைத்தியக்கார சினிமா ரசிகனின் மனதில் இருந்து இதை எழுதிக் கொண்டிருப்பதால் இந்த தொடருக்கு எந்த நேர்வழியும்கிடையாது. அடுத்த பதிவுக்கான முன்னுரையுடன் இப்பதிவை முடித்துவிடுகிறேன்.
1970களின் பிந்தையக் காலத்தில் ஒரு 17வயது சிறுவன் ரயிலில் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். பயணம் முடிவதற்குள் அப்புத்தகத்தை படித்துமுடிக்கும் அளவிற்கு அப்புத்தகம் அவனைக் கட்டிப் போட்டது. தன் கையில் தவழும் அந்தப் புத்தகத்தை திரைப்படமாக எடுக்கவேண்டிய மாபெரும் பொறுப்பு தன்வசம்வரும் என்று அப்போது அந்தச் சிறுவனுக்கு தெரியாது. ஆனால் 2001ல் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது!
-
தொடரும்.

-
நன்றி-Sound camera action


Last edited by Powenraj on Thu Feb 21, 2013 3:56 pm; edited 1 time in total
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

ஈகரை Re: உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2

Post by ராஜா on Thu Feb 21, 2013 3:42 pm

எதற்கு இப்படி முழு பதிவையும் சிகப்பு நிறத்தில் பதிவிட்டுள்ளீர்கள் , படிக்க எரிச்சலாக இருக்கிறது.

எந்த தளத்தில் இருந்து எடுத்தீர்கள் என போட மறக்காதீர்கள் , இல்லையென்றால் பதிவுகள் காணாமல் போய் விடலாம்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2

Post by Powenraj on Thu Feb 21, 2013 3:52 pm

http://soundcameraaction.com/media/k2/items/cache/dc52d5c5f54b7db2dfd2aae465dc6ccd_XL.jpg
J.R.R.டொல்கின், 'லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' நாவலை எழுதி அது உலகப்புகழ் பெற்று இன்றளவும்விற்பனையில் சக்கை போடு போடுவது உலகறிந்தவிசயம். ஆனால் அவரை எழுத வைப்பதற்குள் புத்தக வெளியீட்டாளர்களான ஆலனும், அன்வின்னும் படாதபாடுபட்டார்கள். 1937ல் வெளிவந்த டொல்கினின் முதல்நாவலான 'தி ஹாபிட்' சக்கைபோடு போட,
அதன் தொடர்ச்சியாக ஒருநாவலை எழுதித் தரச் சொல்லி அவரிடன் கேட்கப்பட்டது. டொல்கின் அந்த வாய்ப்பை உடனே ஏற்கவில்லை."நான் ரொம்ப மெதுவா எழுதுவேனே! பரவாயில்லையா?" என எச்சரித்தார். அதற்கு சரியான காரணமும் இருந்தது.
1930ல் தான் எழுதஆரம்பித்திருந்த 'தி ஹாபிட்' நாவலை முடிக்க டொல்கினுக்கு ஏழுவருடங்கள் ஆனது. அதை மனதில் கொண்டே தன் மெதுவாக எழுதும் குணம் குறித்து எச்சரித்தார். ஆனால் ஆலன் -அன்வின் அசரவில்லை, கண்டிப்பாக எழுதவேண்டும் என வற்புறுத்தினார்கள். 'லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' நாவலுடன் ஒப்பிட்டால் 'தி ஹாபிட்' தத்துக்குட்டி நாவல் தான். ஆனால்அதை எழுதவே ஏழு ஆண்டுகள் எடுத்துக்கொண்ட டொல்கின் அதன் தாத்தாவான லார்ட்ஆஃப் தி ரிங்க்ஸைஎழுத எடுத்துக் கொண்டதோ முழுதாக,மொத்தமாக பதினெட்டு ஆண்டுகள்! தனது 45வயதில் எழுத ஆரம்பித்து 63வதுவயதில் முழுதாக முடித்தார்! ஒருவேளை மெதுவாக என்றால் ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என ஆலனும், அன்வின்னும் நினைத்திருக்கலாம்! ஆனால் மனிதர் 18ஆண்டுகள் எடுப்பார் எனத் தெரிந்திருந்தால், "ஆளை விடுப்பா சாமி" என கிளம்பியிருப்பார்களோ என்னவோ!
டொல்கின் சுவாரசியத்தில் அந்த ரயில் பயணத்தில் முழு புத்தகத்தையும் வாசித்து முடித்தசிறுவனை மறந்துவிட்டோமே! அச்சிறுவனின் பெயர் பீட்டர் ஜாக்சன். இனி 'அவர்' என அழைப்பதே சரியாக இருக்கும். ஏற்கனவே சினிமா வெறியனாக இருந்த அவரை இன்னும் உசுப்பேற்றும் விதத்தில் அவர் தந்தையின் நண்பர்அவருக்கு ஒரு வீடியோ காமிராவை பரிசளிக்க, படுவேகமாய் சினிமாவை நோக்கி தன் பயணத்தை தொடங்கினார். இயக்கம் மட்டுமல்லாது திரைக்கதை, ஒளிப்பதிவு, விஷுவல் எஃபக்ட்ஸ் என சினிமா சம்பந்தப்பட்ட சகலத்தையும் தன் விடா முயற்சியால்சுயமாய் கற்றுக்கொண்டார்.ஒன்பது வயதிலேயே,தனக்கு மிகவும் பிடித்த படமான 'கிங் காங்'ஐ தான் உருவாக்கிய ஸ்டாப் மோஷன் (stop motion) பொம்மைகளைக் கொண்டு மீள் -உருவாக்கம் செய்யுமளவிற்கு அவர் ஒரு சினிமா-சுயம்பு!!
வெகுஜன சினிமாவில் நுழைந்த பின் அவர் இயக்கிய படங்கள் எல்லாமே 'ஸ்லாட்டர் மூவீஸ்' எனபடும் ரத்தம்-கொடூரம்-நகைச்சுவை நிறைந்த படங்களாகவே இருந்தன. அவருக்கும் அதுவேபிடித்திருந்தது.ஒருவழியாக 'தி ஃப்ரைட்னர்ஸ்' என்ற படத்திற்கு பின் அவர் புகழ் கொஞ்சம் வெளித்தெரிய ஆரம்பித்தது. ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துக்கொண்டிருந்த குழந்தை, தன் அடுத்த அடியைநிலவில் எடுத்து வைக்க எத்தனித்ததைப் போல, தனது அடுத்த திரைப்படத்துக்கு ஜாக்சன் தேர்ந்தெடுத்த கதை 'தி லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்'!!!
1978ல் இதே கதை அனிமேஷன் படமாக வெளிவந்திருந்தாலும் அரைகுறையாக தான் வந்திருந்தது. பட்ஜட் பிரச்சினையால் இரண்டு பாகங்களாகதிட்டமிடப்பட்டிருந்த படம் ஒரு பாகத்துடன் நின்றுவிட்டது. சில வருடங்கள் கழித்து இரண்டாம்பாகம், தொலைக்காட்சிப் படமாக வெளிவந்ததுதனிக்கதை. ஆக லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் என்ற 'உலகம்' படைக்கப்படாமலே இருப்பதைப் பற்றிபீட்டர் ஜாக்சனுக்கு பெருத்த வருத்தமிருந்தது.ஒருவழியாக 1996ல்ஆரம்பித்த பேச்சுவார்த்தை 1999ல் முடிந்து,லார்ட் ஆஃப் தின்ரிங்க்ஸ் படப்பிடிப்பு தொடங்கியது. 150க்கும் அதிகமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஒரே நேரத்தில் மூன்று பாகங்களுக்குமான படப்பிடிப்பு நடத்தப்பட்டு, ஒருவருட இடைவெளியில் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டது.டொல்கின் மறைந்து25 ஆண்டுகள் கழித்து டொல்கின்உருவாக்கிய பாத்திரங்கள் உயிர்பெற்று நடமாடினார்கள்!
பீட்டர் ஜாக்சனின் இந்த மாபெரும் முயற்சிக்கு உறுதுணையாக இருந்தது அவரது துணைவி (இருவருக்கும் திருமணமாகவில்லை.இணைந்து வாழ்கிறார்கள்) ஃப்ரான் வால்ஷ். பீட்டர் ஜாக்சனுடன் சேர்ந்து திரைக்கதை எழுதியஇவர், ஒரே நேரத்தில் பல இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்புகளில் இயக்குனராகவும் பணியாற்றினார். அதிகபட்சமாக எட்டு இடங்கள் வரை, சாட்டிலைட் மூலம் பீட்டர் ஜாக்சன் மேற்பார்வையிட இப்படப்பிடிப்புகள் நடைபெற்றது.
லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் படப்பிடிப்பால் நேரடியாகவும், மறைமுகமாகவுமநியூசிலாந்து அரசுக்கு கிடைத்தவருமானம் கிட்டத்தட்ட 20கோடி அமெரிக்க
டாலர்கள். (நியூசிலாந்துக்காரரான பீட்டர் ஜாக்சன் முழு படப்பிடிப்பையும் தன் நாட்டில் நடத்துவதையே விரும்பினார், நடத்தினார்) நம்மூர் மதிப்பில் ஏறத்தாழ
1000கோடி ரூபாய்!!தங்கள் மண்ணில் நடக்கும் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் படப்பிடிப்பை எப்படியெல்லாம் பயன்படுத்தி வருமானம் ஈட்டலாம் என 'உட்கார்ந்து யோசித்து' செயல்படுத்த தனியாக ஒரு அமைச்சரையே நியமித்தது நியூசிலாந்து அரசு! லார்ட் ஆஃப்தி ரிங்க்ஸ்- ஃபெல்லோஷிப் ஆஃப்தி ரிங், தி டூ டவர்ஸ், ரிட்டர்ன் ஆஃப் தி கிங் என மொத்தம் மூன்று படங்களுக்கான செலவு 30கோடி அமெரிக்க டாலர்கள். மொத்தம் 17 ஆஸ்கார் விருதுகளை (ரிட்டர்ன் ஆஃப் தி கிங் மட்டுமே 11) அள்ளிய லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் படங்கள், உலகெங்கும் ஈட்டிக் கொடுத்த வருமானமோ ஏறத்தாழ300கோடி அமெரிக்கடாலர்கள். நம்மூர் பணத்தில்மதிப்பிட்டால் அதை எப்படி சொல்வதென்றே நம்மில் பலருக்குதெரியாது, தலை
சுற்றும்!
உலக ஃபாண்டசி படங்களில் ஒரு மிகப்பெரிய மைல் கல் 'லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்' திரைப்படங்கள். எத்தனையோ ஃபாண்டசி படங்கள்வந்திருந்தாலும் லா.ஆ.தி.ரி மூலம் பீட்டர் ஜாக்சன் படைத்தது ஒரு புதிய அத்தியாயத்தை. இந்தப் படத்துக்காகவே பலதொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வேகமாக நகர்ந்து கொண்டிருந்த விஷுவல் எஃபக்ட்ஸ் தொழில்நுட்பம், ஆயிரம் கால்களுடன் பாயத்துவங்கியது இப்படங்களுக்குப் பின்புதான்.
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

ஈகரை Re: உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2

Post by பாலாஜி on Thu Feb 21, 2013 3:54 pm

இதை கொஞ்சம் கவனிங்க பவுன்ராஜ்

http://www.eegarai.net/t96248-1#930180


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

ஈகரை Re: உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2

Post by Powenraj on Thu Feb 21, 2013 4:04 pm

@பாலாஜி wrote:இதை கொஞ்சம் கவனிங்க பவுன்ராஜ்

http://www.eegarai.net/t96248-1#930180
மன்னியுங்கள்,மாற்றிவிட்டேன்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

ஈகரை Re: உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2

Post by Powenraj on Thu Feb 21, 2013 4:05 pm

பீட்டர் ஜாக்சனுக்கு கணிணித்துறையும்,ஆயிரக்கணக்கான தொழில்வல்லுனர்களும் துணை இருந்தார்கள். அவர் கனவுக்கு உயிர் கொடுக்க இராப்பகலாக உழைத்தார்கள். ஆனால் கம்ப்யூட்டர் என்ற வார்த்தை கண்டுபிடிக்கப்பட பல ஆண்டுகளுக்கு முன்பே கம்ப்யூட்டர் போன்ற மூளையுடன் இரு இயக்குனர்கள்இருந்தார்கள். வெறுமனே திரையில்நடிகர்கள் வருவதும், பேசுவதும், போவதும் அவர்களுக்கு போர்அடித்தது. மேடை மாயாஜாலத்தை சினிமாவுக்கு அழைத்து வந்தார்கள். சினிமா இன்னும் வேகமெடுத்தது. இதில் ஒருவர் உலகஃபாண்டசி படங்களின் தந்தை. மற்றொருவர் இந்திய ஃபாண்டசி படங்களின் தந்தை. முன்னவருக்கு அவர் அடுத்த தலைமுறையில் அருமையான சிஷ்யர்கள் கிடைத்தார்கள். பின்னவருக்கோ அப்படி யாருமே கிடைக்கவில்லை. அவர் கனவை நட்டாற்றில் விட்டதோடு மட்டுமல்லாமல், கெடுத்தும் வைத்தார்கள்.
-
தொடரும்
நன்றி:Sound camera action
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

ஈகரை Re: உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2

Post by பாலாஜி on Thu Feb 21, 2013 4:10 pm

சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

ஈகரை Re: உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2

Post by பாலாஜி on Thu Feb 21, 2013 4:11 pm

நன்று பவுன்ராஜ் ...

இதை ஒரே திரியாக தொடர்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

ஈகரை உலகை உலுக்கும் சினிமா பாகம்-3

Post by Powenraj on Thu Feb 21, 2013 4:16 pm

http://soundcameraaction.com/media/k2/items/cache/f2326bd5bdbfc81dee642d9075ea2187_XL.jpg
"இங்கதான் வச்சேன் இப்ப காணோம்","இப்பதான் இங்க இருந்தான், திடீர்னு மறைஞ்சுட்டான்" 'நல்லாதான் படிச்சேன் இப்ப மறந்துருச்சு" என்ற வகையில் பேச்சு எழும் போதெல்லாம், பெரும்பான்மையாக கிடைக்கும் பதில், "இதென்னடா விட்டலாச்சாரியா கதையா இருக்கே!!!"என்பதுதான். ஏறத்தாழ கடந்த அரை நூற்றாண்டுகளாக, (இப்போது கொஞ்சம்மங்கியிருக்கலாம்) மந்திரம், மாயம் என்றாலே தென்னிந்திய மக்களுக்கு நினைவுக்கு வரும்பெயர் விட்டலாச்சாரியா தான்! தாராளமாக இந்தியத் திரைப்படங்களுக்குள் ஃபாண்டசியை முழுமையாக புகுத்தியவர் என்று அவரை அழைக்கலாம்.
ஒரு காட்சியில் ஒருவரை திடீரென மறைய வைப்பது, திடீரென தோன்ற வைப்பது, பறக்க வைப்பது போன்ற சகலவிதமான மாயாஜால வித்தைகளும் அந்தகாலத்தில் 'காமிரா ட்ரிக்' எனப் பட்டது. இன்னும் கூட சில பெரியவர்கள், இந்தக் கால மந்திர தந்திரப் படங்களைப் பார்க்கும் போது 'காமிரா ட்ரிக்' என்று சொல்லக் கேட்கிறோம். கம்ப்யூட்டர், கிராஃபிக்ஸ், மாயா என எதுவுமே இல்லாத காலத்தில், திரையில் மாயாஜாலக் காட்சிகளை புகுத்த இருந்த தொழில்நுட்பங்கள் மிகச் சாதாரணமானவை. பெரிய வீடீயோ காமிரா, கிலோமீட்டர் கணக்கில் ஃபிலிம்சுருள், வெட்டுவதற்கு கத்தரி, ஒட்டுவதற்கு கோந்து, அவ்வளவுதான்!
திரையில் வரவேண்டிய காட்சிகளை முன்பேமுடிவு செய்துகொண்டு அதற்கேற்ப என்னென்ன காட்சிகளை, எந்தெந்த நடிகர்களை எங்கெங்கே நிற்க வைத்து படம்பிடிக்க வேண்டுமென்பதையும் முடிவு செய்துகொண்டு, அதன்படி படப்பிடிப்பை முடித்து, அதற்குபிறகாக கத்தரியை வைத்து கத்தரித்தும், பின் ஒட்டியும் காட்சிகளை அமைக்கவேண்டும். அதன்பின் எடிட்டிங்! கொஞ்சம் எசகுபிசகாக கத்தரித்து விட்டாலோ, ஒட்டி விட்டாலோ திரையில் ஒரு நடிகருக்கு மீது மற்றொருவர் நிற்பது, நின்றபடியே அந்தரத்தில் பறப்பது போன்ற ஏடாகூடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆக விட்டலாச்சார்யா கால கிராஃபிக்ஸிற்கும், இந்தக் காலத்தைய கிராஃபிக்ஸிற்குமான வித்தியாசம்,மேனுவல் (manual)ஆக இருக்கும் விறகடுப்பு சமையலுக்கும், 'ஆட்டோமேட்டிக்'மயம் ஆக்கப்பட்ட 'மைக்ரோவேவ் அவன்'சமையலுக்கும் உள்ள வித்தியாசம்போல்தான். கத்திமேல்நடப்பதுபோன்ற இந்த சாகசங்களை வெற்றிகரமாக செய்து காட்டியதால் தான்இன்னமும் விட்டலாச்சாரியா நினைவுகூறப்படுகிறார்.
விட்டலாச்சாரியாவைப் பற்றி மட்டும் பேசிவிட்டு நம்மூரைச் சேர்ந்த மற்றொரு முக்கியமான 'மந்திர தந்திர' ஜாம்பவானைப் பற்றி சொல்லாமல் விட்டால் அது மகாபாவமாகவே கருதப்படும். ரசிகர்களைக் கட்டிப் போட்ட விட்டலாச்சார்யாவின் ஜெகன்மோகினிவெளியானது 1978ல். ஆனால் அதற்கு இருபது வருடங்களுக்கு முன்பே, முழு கறுப்பு வெள்ளை காலத்தில், 1957ல் வெளிவந்துரசிகர்களை கலக்கியது கத்ரி வெங்கட்ட ரெட்டி இயக்கிய மாயாபஜார்! மகாபாரதக் கதையில் எங்கெல்லாம் அதிகபட்சமாக மந்திரக் காட்சிகளையும், நகைச்சுவையையும் வைக்கமுடியுமோ, அந்த இடங்களை மட்டும் திரைக்கதைக்காக எடுத்துக்கொண்டு அட்டகாசமாக உருவாக்கியதாலேயே இன்னமும் 'கடோத்கஜன்' ரங்காராவையும், சாவித்ரியையும் யாராலும் மறக்க முடியவில்லை.
கல்யாண சமையல் சாதம் பாடலில் தானாகவே ரங்காராவின் வாய்க்குள் புகும் 'லட்டு' ஆகட்டும், அவரை அலேக்காக தூக்கிக்கொண்டு பறக்கும் பாதரட்சைகளாகட்டும், அரக்கன் போல சாவித்ரி மிடுக்காக நடந்துவரும் நடிப்பாகட்டும், மாயாபஜார் படம் இந்திய ஃபாண்டசி ரசிகர்களுக்கு இன்றளவும் ஒரு 'புனிதப் படம்'. எல்லாவற்றுக்கும் மேலாக மாயாஜாலக்காட்சிகளுக்கு நிகராக அந்தப் படத்தில் நகைச்சுவையும் பரவிக்கிடக்கும்.முக்கியமாக கடோத்கஜனின் ஊர் மக்கள் அவரைப் பார்த்து "ஹேய் ஹேய் தலைவா" எனச் சொல்லும் விதத்தைநினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது. மாயாபஜாருக்கு முன்பே பாதாள பைரவி என்ற அட்டகாசமான ஃபாண்டசி படத்தை இயக்கியிருந்தாலும், ஏனோ வெங்கட்ட ரெட்டி தீவிர மாயாஜாலப் படங்கள் எடுப்பதில் பின் கவனம் செலுத்தவில்லை. அவர் விட்ட இடைவெளியில் மிக அழகாக விட்டலாச்சாரி தன்னை நிரப்பிக்கொண்டார். ஒருவேளை இன்னும் நான்கு மாயாஜால படங்களும், விட்டலாச்சாரி போன்ற நீண்ட ஆயுளும் வெங்கட்டரெட்டிக்கு அமைந்திருந்தால் ஒருவேளை மந்திர தந்திர செய்திகளைக் கேட்கும் போதெல்லாம்,"என்னப்பா இது வெங்கட்ட ரெட்டி படம் மாதிரி இருக்கு!" என நம் மக்கள் கூறியிருப்பார்கள்!!
பாதாளபைரவி, ஜகன்மோகினி போன்றபடங்கள் தமிழக மக்களால் பெரிதும் விரும்பப்பட்டாலும், பெரும்பாலும் மொழிமாற்றுப் படங்கள் தான் தமிழர்களுக்குக் கிடைத்தது. (மாயாபஜார் மட்டும் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் எடுக்கப்பட்டது) இந்தியத் திரையுலகில், இந்திக்கு அடுத்து மிகமுக்கியமாக கவனிக்கப்படும் துறை, தமிழ் சினிமாத்துறை. ஆனால் தமிழ்த்திரையுலகின் முதல்தலைமுறைபடைப்பாளிகளில் ஒரு விட்டலாச்சாரியோ,வெங்கட்ட ரெட்டியோ உருவாகவில்லை என்பதுதான் விந்தை!!
சரி! இவர்களுக்கெல்லாம் வாத்தியார் யார்? 1880களில் ஒரு மாணவர், லண்டன் ஹூடினி அரங்கத்தில் 'மேஜிக்' கற்றுக்கொண்டிருந்தார். (உலகத்தின் தலைசிறந்த மந்திரவாதியாக இன்றளவும் அறியப்படுபவர் ஹூடினி)
பிற்காலத்தில் தந்திர வித்தைகளில் நன்கு தேர்ச்சிபெற்ற மந்திரவாதியான அந்த மானவர் தன் சொத்துக்களையெல்லாம் விற்று ஹூடினி அரங்கத்தைவிலைக்கு வாங்கி,மந்திர வித்தைகளைஅரங்கேற்றத் தொடங்கினார். படம் வரைவது, புதிய தந்திரங்களை கண்டுபிடிப்பது என வெகு ஆர்வமாக வித்தைகளை செய்துவந்த அந்த மந்திரவாதி ஒருநாள் ஏதேச்சையாக அவர் திறமைக்கே சவால்விடும் வகையில் ஒரு மந்திரஜாலத்தைக் காண நேர்ந்தது.
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

ஈகரை Re: உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2

Post by Powenraj on Thu Feb 21, 2013 4:25 pm

அதை அரங்கேற்றிவர்கள் 'லூமியே சகோதரர்கள்'. அவர்கள் அரங்கேற்றிய வித்தையின் பெயர்சினிமா! திரையில் சினிமா ஓடியதைப் பார்த்து மெய்மறந்த அந்த 'மந்திரவாதி', அதே இடத்தில் 10000 ஃப்ராங்குகளைக் (அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய தொகை)கொடுத்து அந்த சகோதரர்களிடம் இருந்து ஒரு வீடியோ கேமிராவை வாங்கினார்!! 'ஜியார்ஜ்ஸ் மெலிஸ்' என்னும் உலகின் முதல் ஃபாண்டசி இயக்குனரின் ஆட்டம் அன்றுமுதல் ஆரம்பமானது!
இன்றிருக்கும் அனைத்து மந்திர தந்திர காட்சிகளுக்கும் கடவுளான 'ஸ்டாப் ட்ரிக்' (stop trick) தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தது ஜார்ஜ்ஸ் மெலிஸ் தான். 1890களின் இறுதியில் அவர் கண்டுபிடித்த இந்தத் தொழில்நுட்பத்தை வைத்து ஆர்தர் மார்வின் இயக்கிய30நொடிகள் ஓடக்கூடிய 'Sherlock holmes baffled' (நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில்தோன்றி மறையும் திருடனைப் பற்றியகதை) படத்தை இன்று காணினும் ஆச்சரியம் மேலிடுகிறது!
வரிசையாக 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சின்ன சின்ன ஃபாண்டசி படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார் ஜியார்ஜஸ்மெலிஸ். லாபம் பார்க்க வேண்டுமென்பதோ, சினிமாவை வைத்து மிகப்பெரிய கோடீஸ்வரன் ஆகவேண்டுமென்பதோ அவர் நோக்கமாக இருக்கவில்லை. சினிமா கலையின் மீது, முக்கியமாகஅக்கலையில் தான் கொணர்ந்த மாற்றங்களின் மீது அலாதிபற்றுடன் செயல்பட்டார் மெலிஸ். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் உண்பதை விட அவருக்கு சமையல் பிடித்திருந்தது!உச்சகட்டமாக 1909ல் 68 படங்களை உருவாக்கினார்! மனித முகம்போல தோற்றமளிக்கும் நிலாவின் கண்களில் ஒரு ராக்கட் மோதி ரத்தம் வழிவது, விண்கப்பலை சூரியன் விழுங்குவது போன்ற எண்ணற்ற ஆச்சரியமூட்டும் காட்சியமைப்புகளுடன் (கொஞ்சம் விஞ்ஞான புனைவும்இருப்பதை கவனிக்கலாம்) அவரது திரைப்படங்கள் இருக்கவே, அசுரவளர்ச்சியும், புகழும் தேடி வந்தது.
பின் தாமஸ் ஆல்வாஎடிசன் தோற்றுவித்த திரைப்படம் எடுப்பவர்களுக்கான கூட்டமைப்பு ஏற்படுத்திய புதிய விதிகள், மெலிஸ்க்கு பல சிக்கல்களைக் கொடுத்தது. அதே நேரத்தில் சோதனை மேல் சோதனையாக பேசும் படங்களும்வந்து சேரவே மெலிஸ்ஸின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் குறையத் துவங்கியது. அடுத்தடுத்து வந்த சோதனைகளால்,தான் பலநாட்கள் கண்விழித்து எடுத்த பல படங்களின் ஃபிலிம் சுருள்களை தானே நெருப்பில் போட்டு பொசுக்கும் அளவிற்கு ஒருகட்டத்தில் அவர் விரக்தி அடைந்தார். இதற்குப் பின் முற்றிலும் பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி ஒரு பொம்மை வியாபாரியாக மிகச்சராசரி வாழ்க்கை வாழும் அளவிற்கு தள்ளப்பட்டார் மெலிஸ். பின்பு பலஆண்டுகள் கழித்து, "மெலிஸ் என்று ஒருவர் இருந்தாரே? எங்கேஅவர்?" என சில பத்திரிக்கைக்காரர்கள் தேடத் தொடங்க, கிட்டத்தட்ட சமாதி ஆகியிருந்தமெலிஸின் புகழ் மேலெழும்பத் துவங்கியது. அவரால் எரிக்கப்பட்டது போக மிச்சம் கிடைத்த அவரது சொச்சம் படங்களை
எடுத்து திரையிட்டு மகிழ்ந்தார்கள். மெலிஸை, 'சினிமாவின் முதல் மந்திரவாதி' என சினிமா வல்லுனர்கள் வர்ணிக்கிறார்கள். அவரது பலநூறு படைப்புகளில் இப்போது எஞ்சுவதுசிலநூறு மட்டுமே!
ஜார்ஜ் மெலிஸில் ஆரம்பித்த மேற்கத்திய ஃபாண்டஸி இன்றளவும் மேற்குலகில் காப்பாற்றப்படுகிறது. நம் கண்முன்விரிந்து பிரம்மாண்டமாய் நிற்கும் ஹாலிவுட் அதற்கு மிகச்சிறந்த உதாரணம். ஜேம்ஸ் காமரூன் போன்ற இயக்குனர்கள் தங்கள் கதைகளை திரையில் கொண்டு வருவதற்காக, புதிய-பிரம்மாண்ட தொழில்நுட்பங்களையே கண்டுபிடிக்கும் அளவிற்கு 'மெலிஸ்'சின் கனவைக் காப்பாற்றுபவர்களாக இருக்கிறார்கள்.
சரி! நம்மூர்ப் பக்கம் வருவோம்! விட்டலாச்சாரியாவும், வெங்கட்ட ரெட்டியும் இருந்தார்கள், அதற்குப் பிறகு? இந்த இடத்தில் ஒரு சிறிய, ஆனால் முக்கியமான விசயத்தையும் நாம் கவனிக்கவேண்டும்.மேற்கத்திய நாடுகளைப் பொருத்தவரை அவர்களது கலாச்சாரம் சார்ந்த ஒரே ஒரு ஃபாண்டசி கதை 'பைபிள்' தான். கொஞ்சமேனும் மந்திர தந்திர சம்பவங்கள், அற்புதங்கள் நிறைந்த கதை என்றால் அதையன்றிவேறெதுவுமே அங்கேதேறாது. ஆனால் எத்தனை அமெரிக்க ஃபாண்டசி படங்கள்இயேசு கதையை மையமாக வைத்தோ, பைபிளை மையமாக வைத்தோ வந்திருக்கின்றது? டென் கமாண்ட்மென்ட்ஸ்,பைபிள் என வெகுசில படங்களைச் சொல்லிவிடலாம். ஆனாலும் உலகெங்கும் உள்ள எழுத்தாளர்களின் ஃபாண்டசி புனைவுகளை தேடி எடுத்து திரைப்படங்களாக உருவாக்குகிறார்கள். ஆனால் நம் நாடு இதற்கு முற்றிலும் மாறுபட்டது. எந்தப் பக்கம் பார்த்தாலும் ஆயிரமாயிரம் புராணங்களும், ஃபாண்டசி கதைகளும் கொட்டிக்கிடக்கின்றது. எவ்வளவு அழகாக அதிலிருந்து பிரம்மாண்டமான படைப்புகளை எடுத்திருக்க முடியும்? எவ்வளவு அருமையானஃபாண்டசி படங்களைகொடுத்திருக்க முடியும்?
ஆனால் என்ன ஆனது?நான் இப்படி புலம்ப ஆரம்பித்திருப்பதால் நம்மூரில் ஃபாண்டசி இயக்குனர்களே இல்லை என்றோ, ஃபாண்டசி படங்களேவருவதில்லையென்றோ சொல்லப்போகிறேன் என நினைத்துவிடாதீர்கள்! நாம் காணும்தமிழ், தெலுகு, இந்தி சினிமாக்களில் 90%க்கும் மேல் ஃபாண்டசி சினிமாக்களே என்றஆச்சரியமான தகவலைதான் அடுத்து சொல்லப் போகிறேன்! ஏன்? எப்படி? என்பது அடுத்த வாரம்!
-
நன்றி :Sound camera action
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

ஈகரை Re: உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum