|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ரமணியின் கதைகள்by ரமணி Today at 7:20 am
» பிலிப்பைன்ஸ்
by சிவா Today at 3:31 am
» பொது அறிவுத் தகவல்கள்!
by சிவா Today at 3:29 am
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by சிவா Today at 3:25 am
» அரிசி
by சிவா Today at 3:24 am
» தீக்கோழி
by சிவா Today at 3:13 am
» விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!
by சிவா Today at 3:09 am
» கொடியேற்றினால் மட்டும் போதுமா?
by சிவா Today at 3:07 am
» அலெக்ஸாண்டர் பிளெமிங் & வின்ஸ்டன் சர்ச்சில்
by சிவா Today at 3:03 am
» கல்வி பற்றி காந்தியடிகள்
by சிவா Today at 3:00 am
» புற்று - முற்றவிடக் கூடாது!
by சிவா Today at 2:56 am
» பூண்டு ஊறுகாய்
by சிவா Today at 2:54 am
» முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு!
by சிவா Today at 2:34 am
» ஆண்டவன் உத்தரவு!
by சிவா Today at 2:32 am
» பசுஞ்சாணத்திலிருந்து நறுமணப்பொருள்
by சிவா Today at 2:29 am
» சித்தர் வணங்கிய சிவபாலன்
by சிவா Today at 2:28 am
» ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு
by சிவா Today at 2:23 am
» அலுவலகத்தில், ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
by சிவா Today at 2:19 am
» பதவி! - தெனாலிராமன் கதை
by சிவா Today at 2:17 am
» கடவுள் எங்கே?
by சிவா Today at 2:12 am
» அம்மாவுக்குக் குடும்பம் இல்லை.. நாம்தான் அவரின் பிள்ளைகள்!
by சிவா Today at 1:56 am
» 8000 - பதிவுகளைக் கடந்துள்ள முத்துமுகமதுவுக்குப் பாராட்டுக்கள்!
by யினியவன் Today at 1:36 am
» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by Muthumohamed Today at 1:18 am
» நேரம்-திரைப்பட விமர்சனம்...
by Muthumohamed Today at 1:16 am
» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by Muthumohamed Today at 1:08 am
» கிளாஸ் பெயிண்டிங்
by Muthumohamed Today at 1:04 am
» பகத்சிங் நாத்திகரா?
by Muthumohamed Today at 12:58 am
» வேலன்:-சாப்ட்வேர் கீ களை சேமித்து வைக்க
by Muthumohamed Today at 12:57 am
» வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
by Muthumohamed Today at 12:53 am
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Today at 12:51 am
» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by ராஜு சரவணன் Today at 12:01 am
» நான் இப்போது சென்னைவாசி - ச. சந்திரசேகரன்
by யினியவன் Yesterday at 11:34 pm
» ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.
by யினியவன் Yesterday at 10:48 pm
» ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்
by யினியவன் Yesterday at 10:43 pm
» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
by ரா.ரா3275 Yesterday at 10:37 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by ரா.ரா3275 Yesterday at 10:35 pm
» சோட்டா பீம் வீடியோஸ் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே.
by யினியவன் Yesterday at 9:16 pm
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 8:57 pm
» ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப .தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 8:55 pm
» பொதுஅறிவு துளிகள்
by Muthumohamed Yesterday at 8:53 pm
Top posting users this week
| சிவா | ||||
| Muthumohamed | ||||
| அசுரன் | ||||
| யினியவன் | ||||
| ராஜு சரவணன் | ||||
| srisivaerd | ||||
| ரமணி | ||||
| T.N.Balasubramanian | ||||
| positivekarthick |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
திரை விமர்சனம் - சந்தமாமா - சாறு வீணாகிப்போன சக்கை மாமா!
Page 1 of 1 • Share •
திரை விமர்சனம் - சந்தமாமா - சாறு வீணாகிப்போன சக்கை மாமா!

வித்தியாசமான கதை. நல்ல கவிதை வரிகளுடன் பாடல்கள். சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள். நானே நாயகன் என்கிற கருணாஸின் பிடிவாதத்தால், சாறு வீணாகிப் போன "சக்கை மாமா".
சின்ன வயதில் தலையில் அடிபட்டு, முடிவு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலையில் இருக்கும் ஒரே மகனுக்காக, நிலபுலங்களை விற்று பணம் அனுப்பும் கிராமத்து அப்பா (இளவரசு). எழுத்தாளனாகும் வெறியில், எழுதிய குப்பைகளை எல்லாம் புத்தகமாகப் போட்டு, தானே விழா நடத்தி, தனக்கு கவுரவம் தேடிக்கொள்ளும் சந்தமாமா என்கிற சந்தான கிருஷ்ணன் (கருணாஸ்), அவரது ஒரே மகன். பிரபல எழுத்தாளர் ஜே.காந்தன் (வ.ஐ.ச.ஜெயபாலன்), சந்தானத்தின் கண்மூடித்தனமான வெறியைத் தகர்த்து தெளிவாக்குகிறார். அனுபவம் சொல்லும் கதைகளே வெற்றி பெறும் என்கிற உண்மையை உணரும் சந்தானம், தன் மனைவி மேரியையே(சுவேதா பாசு) காதலியாக நடிக்க சொல்லி எழுதும் "கண்ணாடி மல்லிகை" கதைத்தொடர், பெரும் வரவேற்பைப் பெறுகிறது. ஆனால் விபரீத விளையாட்டால், குடும்பம் சிதையும் அபாயம்! சந்தானம் மனைவியை மீட்டாரா? இல்லையா... என்பது க்ளைமாக்ஸ்.
பாடல்கள்... வைரமுத்து. இசை... ஸ்ரீகாந்த் தேவா. "கோயம்பேடு சிலுக்கக்கா..." என்றொரு குத்து, "யாரோடி..." என்கிற மெலடி, "கண்டேன் கண்டேன்..." என்கிற தனிக்குரல் பாடல், என வெரைட்டி தர முயற்சித்திருக்கிறார். கருணாஸ், நாயகனுக்குண்டான சிரத்தையும், வளைந்து நெளிந்து ஆடுகிறார். விஜய் ஸ்டெப்ஸ் போடுகிறார். நமக்குத்தான் சார்லி சாப்ளின் ஆடுவது போலவே இருக்கிறது.
கருணாஸை முன்னிறுத்தும் அத்தனை காட்சிகளிலும், கோடை மழையாக சிலிக்க வைக்கிறார் சுவேதா பாசு. நாடக மேடைப் பாணியில், ஜோக்குகளை உதிர்த்து விடும் ஜால்ரா கூட்டம், மந்திரக்காரனின் தொப்பி முயல் போல, வருவதும், காணாமல் போவதுமா குழப்புகிறது. கருணாஸ்... காமெடியா? குணச்சித்திரமா? என்று குழம்பியதில், தலை வெட்டிய கோழி போல துடித்து அடங்குகிறது படம்.
மொத்தத்தில், "சந்தமாமா" - சாறு வீணாகிப்போன சக்கை மாமா".
தினமலர்

பதிவுகள்: 951947 | உறுப்பினர்கள்: 19720 | தலைப்புகள்: 95545 | புதிய உறுப்பினர்: sudhahar_k
Contact Administrator

சிவா- நிறுவனர்

- பதிவுகள்: 65228
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4896

Re: திரை விமர்சனம் - சந்தமாமா - சாறு வீணாகிப்போன சக்கை மாமா!
கம்பி மேல் நடக்கும் கதை.
கருணாஸின் மனைவியை, அவர் திருமணமானவர் என்பது தெரியாமல் காதலிக்கிறான் ஓர் இளைஞன். அதிர்ந்து போகும் மனைவியிடம் அதை தொடரச் சொல்லி, அவனுடன் பழக விடுகிறார் கணவன். ஏன்? அவர் ஓர் எழுத்தாளர்! அந்த சம்பவங்களை ஒரு தொடர் கதையாக எழுதுகிறார். அப்புறம் என்ன ஆனது? என்பதுதான் “சந்தமாமா’.
கொஞ்சம் அசந்தாலும் கருணாஸின் கேரெக்டர் “மாமா’வாகவே ஆகிவிடும் அபாயம் இருந்தும் க்ளைமாக்ஸால் அது சாதுர்யமாகச் சமாளித்திருக்கிறார்கள்.
தன்னுடைய பர்ஸனாலிட்டி பற்றி நன்றாகப் புரிந்தவர் கருணாஸ். அதனால் படத்திற்கு ஒப்புக் கொள்ளும் போதே, நல்ல சிவப்பாக, கொழுக் மொழுக்கென்று ஒரு கதாநாயகி வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார் போலிருக்கிறது.
க்ளைமாக்ஸில் அவர் மின் கம்பிகளில் சிக்கித் தவிப்பது கலகல. மனைவி எங்கே சென்றாலும் கையில் நோட்டுடன் திரிவது எரிச்சல்.
ஆப்பிளுக்குக் கால் முளைத்த மாதிரி அழகாக இருக்கிறார் ஹீரோயின் ஸ்வேதா. (நன்றி: படத்தில் வரும் வசனம்!) நடிக்கவும் தெரிந்திருக்கிறது.
காதலனாக வரும் ஹரீஷ் களையாக இருக்கிறார்.
“யாரோடி’ பாடல் ஜோரோடி!
சின்ன வயதில் கருணாஸின் தலையில் அடிபட்டதால், எப்போது வேண்டுமானாலும் அவர் இறந்துவிடுவார் என்ற ஃப்ளாஷ்பேக், படத்தின் தொய்வைக் கொஞ்சம் தடுத்து நிறுத்துகிறது. இயக்கம் ராதாகிருஷ்ணன்.
நொந்த மாமா அல்ல்..!
ஆஹா - இடைவேளைக்கு பின்
ஹிஹி - இடைவேளைக்கு முன்
குமுதம் ரேட்டிங் - ஓகே
குமுதம் விமர்சனம்

பதிவுகள்: 951947 | உறுப்பினர்கள்: 19720 | தலைப்புகள்: 95545 | புதிய உறுப்பினர்: sudhahar_k
Contact Administrator

சிவா- நிறுவனர்

- பதிவுகள்: 65228
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4896

Re: திரை விமர்சனம் - சந்தமாமா - சாறு வீணாகிப்போன சக்கை மாமா!
கொஞ்சம் அசந்தாலும் கருணாஸின் கேரெக்டர் “மாமா’வாகவே ஆகிவிடும் அபாயம் இருந்தும் க்ளைமாக்ஸால் அது சாதுர்யமாகச் சமாளித்திருக்கிறார்கள்.

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21449
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

Re: திரை விமர்சனம் - சந்தமாமா - சாறு வீணாகிப்போன சக்கை மாமா!
உங்களுக்கு எது வருமோ? அதுமாதிரி தேர்தெடுத்து நடிப்பது நல்லது கருணாஸ்.!
இப்போ வீணாகிப்போன சக்கை யா ல இருக்கு.!
இப்போ வீணாகிப்போன சக்கை யா ல இருக்கு.!

அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 11247
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 1243
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










