புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_m10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10 
56 Posts - 43%
heezulia
இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_m10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_m10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_m10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_m10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10 
3 Posts - 2%
jairam
இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_m10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10 
2 Posts - 2%
Poomagi
இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_m10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10 
1 Post - 1%
சிவா
இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_m10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_m10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_m10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_m10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_m10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10 
16 Posts - 4%
prajai
இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_m10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_m10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10 
7 Posts - 2%
Jenila
இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_m10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10 
4 Posts - 1%
jairam
இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_m10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_m10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_m10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_m10இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 14, 2013 5:59 pm

இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சி அதற்கான ஏற்பாடுகள் சார்ந்து பல தரப்பினரின் விமர்சனங்களுக்குள்ளாயிற்று. இடமாற்றம், பதிப் பகங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரங்குகளின் பரப்பளவு குறைக்கப்பட்டது முதலான காரணங்களுக்காகப் பதிப்பாளர்களும் வாசகர்களும் ஊடகங்களில் தம் விமர்சனங்களைப் பதிவுசெய்திருந்தனர். எனக்குப் புத்தகச் சந்தைகளின் மேடை நிகழ்வுகள் மீது கடும் விமர்சனங்கள் உண்டு. புத்தகச் சந்தை மேடைகளில் பட்டிமன்றப் பேச்சாளர்கள், சாமியார்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், நடிகர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. கு. ஞானசம்மந்தனும் வைகோவும் நன்றாகப் பேசக்கூடியவர்கள்தாம், சந்தேகமில்லை. வைகோ சில சமயங்களில் எஸ். ராமகிருஷ்ணனைவிடவும் ஜெயமோகனைவிடவும் புத்தகங்களைப் பற்றி நன்றாகப் பேசிவிடக்கூடியவர். பெர்னாட் ஷாவையும் ஷேக்ஸ்பியரையும் கரைத்துக் குடித்த மேதைமை வெளிப்படும் அவரது உரையை மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்களையும் மறந்துவிட்டுக் கேட்க முடியும். என்ன பிரச்சினையென்றால் வைகோவுக்கு இன்னும் முளைத்து மூணு இலைவிடாத கே. என். செந்திலைத் தெரியாது, எஸ். செந்தில் குமாரைத் தெரியாது, மண்குதிரையைத் தெரியாது, என்னைத் தெரியாது.

தெரிந்துகொள்ள வேண்டிய அளவுக்கு நாங்கள் யாரும் அவருக்கு முக்கியமல்ல, ஆனால் வாசகன் பெர்னாட் ஷாவையும் ஷேக்ஸ்பியரையும் கடந்து எங்களையும் தெரிந்துகொள்வது இலக்கியத்தின் வளர்ச்சிக்கு முக்கியமில்லையா? ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் புத்தகக் கண்காட்சியில் அவ்வளவாகப் பிரபலமில்லாத என்னைப் போன்ற கொங்குப் பகுதி எழுத்தாளர்களைக் கூப்பிட்டுப் பொன்னாடை போர்த்தி கூடியிருக்கிற பிரும்மாண்டமான கூட்டத்திடம் நாலு நல்ல வார்த்தைகளாவது சொல்லுவார் அதன் தலைவர் ஸ்டாலின் குணசேகரன். போன வருடம் அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதி, தி.க.சி முதலான ஐந்து மூத்த எழுத்தாளர்களை அழைத்து அவர்களுக்குப் பொற்கிழி வழங்கிக் கௌரவித்தது, புத்தக வெளியீட்டு நிகழ்வுகளுக்குத் தனி அரங்கு ஏற்பாடு செய்தது என ஸ்டாலின் குணசேகரனிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு புத்தகக் கண்காட்சி நடத்தும் மற்ற அமைப்புக்களுக்கு நிறையவே இருக்கின்றன.

ஆனால் புத்தகக் கண்காட்சி என்பது தமிழகத்தின் முக்கியமான பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகியிருக்கிறது. இதற்குச் சென்னைப் புத்தகக் கண்காட்சி பெரும் தூண்டுகோலாக இருந்திருக்கிறது என்பதையும் மறுப்பதிற்கில்லை. ஈரோடு, மதுரை தவிர நெய்வேலி, திருப்பூர், திருநெல்வேலி, பெரம்பலூர் எனத் தமிழகத்தின் வெவ்வேறு சிறு நகரங்களிலும் புத்தகக் கண்காட்சி முக்கியத்துவம் வாய்ந்த வருடாந்திர நிகழ்வுகளாக அடையாளம்பெறத் தொடங்கியிருப்பது உண்மையிலேயே முக்கியமானது. சென்னைப் புத்தகக் கண்காட்சியைத் தொடர்ந்து ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கிய திருப்பூர் புத்தகக் கண்காட்சிக்கும் பிறகு பிப்ரவரி ஒன்றாம்தேதி தொடங்கிய பெரம்பலூர் புத்தகக் கண்காட்சிக்கும் போயிருந்தேன்.

நான் போயிருந்த அன்று திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் வாசகர்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. காலச்சுவடு, உயிர்மை, தமிழினி என இலக்கியப் புத்தகக் கடை அரங்குகளில் தென்பட்ட வாசகர்களின் எண்ணிக்கையைப் பார்த்தபோது இலக்கியத்தைக் கொண்டுகூடப் பிழைத்துக்கொள்ளலாம் எனத் தோன்றியது. பெரம்பலூரில் அந்த மாவட்ட ஆட்சியரே முன்நின்று புத்தகக் கண்காட்சிக்கான முழு ஏற்பாடுகளையும் செய்திருந்தார். அரங்குகள் விசாலமாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது வாசகர்களுக்குச் சௌகரியமாக இருந்திருக்கும். கண்காட்சி நடந்த இடம் பேருந்து நிலையத்தையொட்டியே இருந்தது கூடுதல் வசதி. ஆட்சியர் தரேஸ் அஹமது கேரளத்துக்காரர். மாவட்டத்தின் வளர்ச்சியில் தீவிரமான அக்கறையெடுத்துக் கொள்ளும் ஆட்சியர் புத்தகங்களை நேசிப்பவராக இருப்பது பெரம்பலூர் மக்களின் நற்பேறு. உதயச்சந்திரன் ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மக்கள் சிந்தனைப் பேரவையால் நடத்தப்பட்ட ஈரோடு புத்தகக் கண் காட்சியின் வெற்றிக்குப் பெரும் உறு துணையாக இருந்தார். நூலகங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண் காணித்துவந்த உதயச்சந்திரன் அநேகமாக மாநிலத்தின் எல்லாப் புத்தகக் கண்காட்சி மேடைகளிலும் தென்படுபவராக இப்போதும் விளங்கிக்கொண்டிருக்கிறார். வைகோ போல அல்லாமல் தணிந்த குரலில் நவீன இலக்கியப் போக்குகளைப் பற்றி உரையாற்றும் உதயச்சந்திரன் எழுத்தாளர்களைச் சந்திப்பதிலும் அவர்களோடு உரையாடுவதிலும் தீராத விருப்பமுடையவர். தரேஸ் அஹமது அப்படிப்பட்டவராகவே தென்பட்டார். பிப்ரவரி 5ஆம் தேதி பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி அரங்கில் நடை பெற்ற கூட்டத்திற்கு நான் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தேன். இலக்கிய ஈடுபாடு கொண்ட வட்டாட்சியர் செல்லபாண்டியன் எழுத்தாளர்களிடம் காட்டும் தோழமை வியப்பூட்டும்படி இருந்தது. தோழர் என வாய்நிறைய அழைக்கிறார். மாவட்ட நிர்வாகமே புத்தகக் கண்காட்சி அரங்குகளில் பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தது. கூட்டம் தொடங்குவதற்கு முன் ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

ஜே.ஜே.சில குறிப்புகளை மலையாளத்தில் வாசித்திருப்பதாகச் சொன்னார். தமிழ் வாசகர்களுக்குத் தெரியாத தமிழ் எழுத்தாளர்கள் பலரது பெயர்களும் ஆட்சியருக்குத் தெரிந்திருந்தன. பிறகு என்னை அழைப்பதற்கு வேறென்ன காரணம் இருக்க முடியும்? சும்மா ஒப்புக்காக மேடையில் நிற்கலாம் என நினைத்துக்கொண்டிருந்த எனக்குச் சிறப்பு அழைப்பாளர் என்றதும் கொஞ்சம் உதறலெடுத்தது உண்மை. பேனர்களில் பெரிதாகத் தென்பட்ட பெயர், ஒலிபெருக்கி அறிவிப்புகள், முன்வரிசையில் உட்கார்ந்திருந்த ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் என எனது பதற்றத்தை அதிகரிப்பதற்குப் போதுமான காரணங்கள் நிறையவே இருந்தன. புத்தக வெளியீடு, புத்தகக் கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு என ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குக் கொஞ்சம் வாய்ப்புக் கிடைத்தாலும் எனக்கு முன்னால் பேசிய இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் முதலாவது மாணவராகத் தேர்ச்சிபெற்ற திவ்ய தர்ஷினியின் தன்னம்பிக்கைப் பேச்சு தான் மேடைப்பேச்சுக்கே பழக்கப்படாத எனக்குத் தன்னம்பிக்கையை ஊட்டியது. பிறகு தணிந்த குரலில் தமிழ் நவீன இலக்கியப் போக்குகள் குறித்துப் பேசினேன். வாசிப்புக்கும் ஆளுமை உருவாக்கத்திற்குமிடையேயான தொடர்புகள் குறித்துக் கொஞ்சம் பேசியதாக நினைவு. பேசி முடித்த பிறகு ஆட்சியரும் மற்றவர்களும் கை கொடுத்தபோது அப்பாடா என்றிருந்தது.

“உங்களைப் போன்றவர்கள்தான் தேவை” என்றார் ஆட்சியர் தரேஸ் அஹமது. புத்தகக் கண்காட்சி என்பது வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான ஒரு வெளி, அதில் உரையாற்ற வேண்டியவர்கள் எழுத்தாளர்களே அல்லாமல் பட்டிமன்றப் பேச்சாளர்கள் அல்ல என்பது அவரது பார்வையாக இருக்கலாம். ஏனென்றால் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களில் என்னைத் தவிர சு. வெங்கடேசன், அழகிய பெரியவன், கண்மணி குணசேகரன் ஆகியோரது பெயர்களையும் பார்க்க முடிந்தது.

சென்ற ஆண்டு 50 அரங்குகளுடன் தொடங்கப்பட்ட புத்தகக் கண்காட்சியில் இந்த ஆண்டு நூறு அரங்குகள். மாவட்ட ஆட்சியர் அளித்த ஊக்கம் காரணமாக மாவட்டத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளும் கல்வி நிறுவனங்களும் அதிக அளவில் புத்தகங்களை வாங்கியதாகக் கண்காட்சியில் பங்கேற்ற பதிப்பாளர்கள் சிலர் தெரிவித்தனர். மொத்த விற்பனை ஒரு கோடி என்றார்கள். பெரம்பலூரைத் தொடர்ந்து வேறு சில மாவட்ட ஆட்சியர்களும் தமது மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சி நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்களாம்.

இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் என்பது வெறும் மூட நம்பிக்கை அல்ல என்பதுதான் செய்தி.

- தேவிபாரதி

இலக்கியத்தைக் கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 14, 2013 6:09 pm

நல்ல பகிர்வு நன்றி

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Mar 14, 2013 9:47 pm

சமூகத்தை மேம்படுத்தவல்ல நல்ல இலக்கியங்கள ஆக்கினால் உழைத்துக் கொள்ளலாம்.

இங்கு "பிழைத்துக் கொள்ளலாம்" என்பதற்குப் பதிலாக "உழைத்துக் கொள்ளலாம்" எனப் பதிவு செய்துள்ளேன்.

"பிழைத்தல்" என்பதற்கு இரண்டு பொருள் உண்டு.

பிழைத்தல் - தவறிழைத்தல் அல்லது பிழைவிடுதல்
பிழைத்தல் - வாழ்தல்

"உழைத்துப் பிழையுங்கள்" என்றொரு முதுமொழி உண்டு. அதாவது, உழைத்து வாழுங்கள் எனப் பொருள்படும்.

உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக