ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

பசு மாடு கற்பழிப்பு
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .

View previous topic View next topic Go down

பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .

Post by eraeravi on Sat Mar 16, 2013 1:14 pm

பரதேசி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
இயக்கம் பாலா .

பாலா படம் என்றால் ஒரு எதிர்பார்ப்பு அதனால் முதல் நாளே திரையரங்கம் சென்று பார்த்தேன் .இயக்குனர் இமயம் பாரதிராஜாவிற்கு பிறகு காட்சிகளில் நேர்த்தி வைப்பவர் இயக்குனர் பாலா .சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆங்கிலேயர்கள் ,தேயிலைத் தோட்டத்திற்கு கொத்தடிமையாக மக்களை கங்காணி மூலம் கடத்தி வந்து மனிதாபிமானமற்ற முறையில் வேலை வாங்கி இன்னல் படுத்தும் கதை .முதல் பாதி சிறு சிறு நகைச்சுவையுடன் படம் செல்கின்றது .சாகித்ய அகதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வசனம் கிராமிய மணம் கலந்து படத்திற்கு சுவை கூட்டி உள்ளது .இசை ஜி வி .பிரகாஷ் பின்னணி இசை மிக நன்று. .படம் தொடங்கும் போது கிராமத்தை காட்டும் போது ஒருவர் கூட பார்க்காமல் அவரவர் அவர் வேலையை பார்பதுப்போல படம் பிடித்து படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விடுகிறார் .பாலா .மிகச் சிறப்பான ஒளிப்பதிவு .
கதாநாயகனாக நடித்துள்ள அதர்வா மிக நன்றாக நடித்துள்ளார் ".புலிக்குப் பிறந்தது பூனையாகாது" என்ற பொன்மொழியை மெய்ப்படுத்தும் விதமாக அவரது தந்தை முரளியை மிஞ்சும் விதமாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார் .தேசிய விருது உறுதி .ஊர் மக்களுக்கு தமுக்கு அடித்து செய்தி சொல்லும் அதர்வா.தேயிலைத் தோட்டத்து கொத்தடிமையாக பின் போகிறார் .தேயிலைத் தோட்டத்து கொடுமையில் இருந்து தப்பித்து ஓட முயற்சி செய்தபோது காவலர்களிடம் பிடிபட்டதும் தண்டனையாக குதிங்கால்
நரம்பை விட்டி விடும் காட்சி மிகவும் கொடுமை .மிக நன்றாக நடித்துள்ளார் .

அதர்வாவை ஊர் அழைக்கும் பெயர் ஒட்டுப்பொறுக்கி ஆனால் அவர் வைத்துக் கொண்ட பெயர் ராசா .ஊருக்கு உழைக்கும் அப்பாவியாக வருகிறார் .மெல்லிய காதல் .காதலியின்
அம்மா எதிர்ப்பு .என் மகளை மறந்து விட்டேன் நினைக்க மாட்டேன் என்று ஊர் முன்னிலையில் சூடம் அணைத்து சத்தியம் கேட்கும் போது ,உடன் அதர்வா பாட்டி வந்து சூடம் அணைத்து பேரனை காப்பாற்றுகிறார் .பாட்டி பாத்திரம் மிக நன்று .தாடி வைத்து பெரியப்பாவாக வருபவர் .ஊர் மக்கள் ,தேயிலைத் தோட்டத்தில் மருத்துவம் படிக்காமல் மருத்துவராக நடிப்பவர் .கங்காணி மற்றும் ஆங்லேயர்கள் என்று அனைவரும் அவரவர் பாத்திரத்தில் மிக நன்றாக நடித்துள்ளனர் .அனைவரிடம் பாலா நன்கு வேலை வாங்கி உள்ளார் .பாராட்டுக்கள் .

படம் முடிந்து வெளியே வரும்போது இனம் புரியாத சோகம் மனதை தொற்றிக் கொள்கிறது சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு .நடந்த உண்மை கதையை இப்போது படம் எடுக்க துணிவு வேண்டும் .படம் முழுவதும் கதை நடந்த காலத்தை கடை பிடிக்க மிகவும் சிரமப்பட்டுள்ளனர் .பழைய காலத்து கார் ,பழைய காலத்து முறையில் தலைமுடி ஊர் மக்கள் அனைவருக்கும் உள்ளது .படம் முழுவதும் படம் பார்ப்பதுபோல இல்லாமல் கண் முன்னே நிஜ நிகழ்வை பார்பதுப்போன்ற உணர்வை ஏற்படுத்தி இயக்குனர் பாலா வெற்றி பெறுகின்றார் .
.
தேயிலைத் தொழிலாளர்களின் வேதனையை சிரமத்தை நன்கு படமாக்கி உள்ளார் .பாலாவின் வெற்றிக்குக் காரணம் அவரது படத்தில் சினிமாத்தனம் இல்லாமல் மிக இயல்பாக இருக்கும் .இந்தப் படத்திலும் மிக இயல்பு உள்ளது .வழக்கமான திரைப்படங்களில் கோழையாக இருக்கும் கதாநாயகன் வீரனாக மாறி வில்லனை கதை முடிப்பான் .ஆனால் இந்தப்படத்தில் வில்லன் சாக வில்லை வழக்கமான முடிவு இல்லை .மசாலாப்படம் பார்த்து வளர்ந்த ரசிகர்களை மற்றொரு உயர்ந்த தளத்திற்கு அழைத்து செல்லும் முயற்சி இது .

அன்று நம் மக்கள் வெள்ளையர்களிடம் எப்படி அடிமைப்பட்டு இருந்தனர் என்பதை விளக்கி எத்தனையோ படங்கள் வந்து இருந்தாலும் .இந்தப்படம் வேறு மாதிரி .புது மாதிரி .
கதாநாயகியும் மிக நன்றாக நடித்து உள்ளார் .பிம்பங்களை உடைத்து பாத்திரமாகவே அனைவரும் மாறி உள்ளனர் .

இயக்குனர் பாலாவின் வெற்றிப்பட வரிசையில் இந்தப்படமும் இடம் பெரும் .கதையே இன்றி நடிகையின் சதையையும் ,நடிகரின் நம்ப முடியாத சண்டையையும் மட்டும் நம்பி படம் எடுக்கும் மசாலா இயக்குனர்கள் பார்த்து திருந்த வேண்டிய நல்ல படம் .

உலகத் தரத்தில் வந்துள்ளது .உலகப்பட விழாவில் இடம் பெற்றால் வெற்றி பெறும் .உண்மை நிகழ்வுகளின் வலியை வெண்திரையில் உணர்த்தும் படம் .
தினம் பல முறை தேநீர் அருந்துகிறோம் .ஆனால் தேயிலைத்தோட்டது தொழிலாளர்களின் உழைப்பை உணர வைக்கும் படம் .
அன்று நமை ஆண்ட வெள்ளையர்கள் மனிதாபிமானமற்ற முறையில், விலங்கு போல நடந்து கொண்ட முறையையும் .,ஆதிக்க மனப்பான்மையும் நன்கு காட்சிப்படுத்தி உள்ளார் .பாலா .அன்று இருந்த வெள்ளையர் ஆதிக்கம் ஒழிக்கப்படாலும் .இன்று வேறு வடிவில் வெள்ளையர் ஆதிக்கம் வந்துகொண்டுதான் இருக்கிறது .என்பதை உணர முடிந்தது .
மூட நம்பிக்கைகள் மிகுந்த தமிழ்த் திரைப்படத்துறையில் பரதேசி என்று பெயர் வைத்த பாலாவின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் .
மதுரையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டார் பாலா .


.

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


Last edited by eraeravi on Sat Mar 16, 2013 3:38 pm; edited 1 time in total
avatar
eraeravi
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1684
மதிப்பீடுகள் : 177

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

Re: பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .

Post by சிவா on Sat Mar 16, 2013 2:59 pm

மதுரையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டார் பாலா .

இதுதான் அனைவரின் கருத்தாகவும் உள்ளது. படம் பார்த்துத்தான் உண்மை நிலவரம் அறிய முடியும். விமர்சனத்திற்கு நன்றி அண்ணா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .

Post by eraeravi on Sat Mar 16, 2013 3:39 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1684
மதிப்பீடுகள் : 177

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

Re: பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .

Post by பூவன் on Sat Mar 16, 2013 8:42 pm

விமர்சனம் அருமை , படம் பார்க்க தூண்டுகிறது சூப்பருங்க
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .

Post by ரா.ரமேஷ்குமார் on Sat Mar 16, 2013 11:00 pm

அருமையிருக்கு அருமையான விமர்சனம் வழங்கியமைக்கு மிக்க நன்றிகள் ஐயா... நன்றி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4055
மதிப்பீடுகள் : 913

View user profile

Back to top Go down

Re: பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .

Post by ராஜு சரவணன் on Sun Mar 17, 2013 8:47 am

நேற்று தான் பார்தேன் நல்ல படம் . என்னை பொறுத்தவரை இப்படத்திற்கு 100 க்கு 70 மதிப்பெண்கள் தரலாம்.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .

Post by eraeravi on Sun Mar 17, 2013 2:37 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1684
மதிப்பீடுகள் : 177

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

Re: பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .

Post by றினா on Sun Mar 17, 2013 7:37 pm

இன்னும் பார்க்கவில்லை, விமர்சனத்தைப் பார்த்தால் அருமையாக இருக்கும்போல் தெரிகிறது.

நன்றிகள்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .

Post by eraeravi on Sun Mar 17, 2013 8:27 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1684
மதிப்பீடுகள் : 177

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

Re: பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .

Post by பிளேடு பக்கிரி on Mon Mar 18, 2013 1:23 am

பார்க்கணும் சீக்கிரம் சூப்பருங்கavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .

Post by உமா on Mon Mar 18, 2013 4:34 pm

படம் ரொம்ப நல்லா இருக்கு....ஆனால், இறுதி வரை ஒரு விடியலே இல்லாமல் முடிந்துவிட்டது... மிகவும் யதார்த்தமான நடிப்பு நாயகனுக்கு - அருமையான படம்.
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .

Post by ஹர்ஷித் on Mon Mar 18, 2013 4:46 pm

@உமா wrote:படம் ரொம்ப நல்லா இருக்கு....ஆனால், இறுதி வரை ஒரு விடியலே இல்லாமல் முடிந்துவிட்டது... மிகவும் யதார்த்தமான நடிப்பு நாயகனுக்கு - அருமையான படம்.
சூப்பருங்க
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .

Post by eraeravi on Tue Mar 19, 2013 8:04 am

அன்று நடந்த உண்மை .விடுதலை கிடைத்தப் பின்புதான் விடியல் வந்தது .விடுதலைக்கு முன்பு நடந்தது .
avatar
eraeravi
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1684
மதிப்பீடுகள் : 177

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

Re: பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum