ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» மர்ம மரம்
by யினியவன் Today at 12:56 am

» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am

» வணக்கம்!
by யினியவன் Today at 12:46 am

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by யினியவன் Today at 12:43 am

» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am

» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am

» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 12:04 am

» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am

» தைராய்டு
by Aathira Yesterday at 11:27 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm

» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm

» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm

» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm

» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm

» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm

» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm

» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm

» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm

» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm

» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm

» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm

» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm

» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm

» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm

» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm

» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm

» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm

» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm

» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm

» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm

» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm

» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm

» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm

» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm

» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm

» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்

View previous topic View next topic Go down

தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்

Post by தாமு on Tue Oct 20, 2009 12:34 pm

தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இவர்கள் ஏன் இப்படிக்கூறுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, Microwave Oven எனப்படும் நுண்ணலை அடுப்புகளின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.




சாதாரண அடுப்பில் சமைக்கும்போது, முதலில் வெப்பம் பாத்திரத்தை அடைந்து, பின்னர் அதனுள்ளிருக்கும் பதார்த்தத்தினுள் நுழைகிறது. அதாவது, சாதாரண வெப்பக்கடத்தல் முறை மூலம் அங்கு சமையல் நடைபெறுகிறது. நுண்ணலை அடுப்பின் அமைப்பு முற்றிலும் வேறுமாதிரியானது. சாதாரண Electric Ovenகளில் வெப்பத்தை உண்டாக்க heaterகள் இருக்கும்.

ஆனால்,அப்படியொரு அமைப்பே இல்லாதபோது Microwave Oven களில் எவ்வாறு வெப்பம் உண்டாக்கப்படுகிறது? இந்த விந்தையை நுண்ணலைதான் செய்கிறது.

மின்சாரத்தின் மூலம் சக்திவாய்ந்த மைக்ரோ அலைகள் Microwave Oven இனுள் உருவாக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் மைக்ரோ அலைகள் சாதாரணமாக, செக்கனுக்கு 45 கோடி அதிர்வுகள் என்ற எண்ணிக்கையில் இருக்கும்.

இந்த நுண்ணலைகள், சூடாக்குவதற்காக உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பதார்த்தத்தின் மூலக்கூறுகளை அசைத்து - அவற்றை அதிர்வுறச் செய்கின்றன. இவ்வாறு ஏற்படும் அதிர்வில் மூலக்கூறுகள் ஒன்றோடொன்று உராய, வெப்பம் பிறப்பிக்கப்படுகிறது. இந்தச் செயற்பாடு பதார்த்தத்தின் சகல பாகங்களிலும் நிகழ்வதால் பதார்த்தம் முழுவதும் ஒரே நேரத்தில் விரைவாகச் சூடேறிவிடுகிறது.

podiyan.com micro மைக்ரோ அலைகளினால் அசைக்கக்கூடிய மூலக்கூறுகளைக்கொண்ட பொருட்களை மட்டுமே Microwave Ovenமூலம் சூடாக்க இயலும். பீங்கான், கண்ணடி போன்றவற்றின் மூலக்கூறுகளை மைக்ரோ - வேவினால் அசைக்க இயலாது.

எனவே இவற்றினால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில்வைத்துச் சமைத்தால் பாத்திரம் சூடேறாது - ஆனால் பதார்த்தம் சமைக்கப்பட்டுவிடும். இதனால் பாத்திரத்தைச் சூடாக்கச் செலவழிக்கப்படவேண்டிய சக்தி மீதமாகிறது. உலோகப் பாத்திரங்களை Microwave Oven இனுள் உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும். ஏனெனில், உலோகம் -- மின்காந்த அலைகளை, அதாவது மைக்ரோவேவை தன்னுள் ஊடுருவ அனுமதிக்காது.

இதெல்லாம் சரி, தண்ணீரை Microwave Oven இல் சூடேற்றினால் அப்படி என்ன தகாத விளைவு நேரும்?

சாதாரண அடுப்பில் தண்ணீரைச் சூடக்கினால், பாத்திரத்தின் அடியில் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாத்திரத்தின் உள்ளே வாயுக் குமிழிகள் உருவாகி, அவை மெல்ல மேலெழுந்து - மேற்பரப்பை அடைந்தவுடன் வெடித்து நீராவியையும் வெளியேற்றும். இந்தச் செயற்பாடு, தண்ணீர் அதிகமாக வெப்பமாவதைத் தடுத்து, தண்ணீரின் கொதி நிலையான 100 செல்ஸியஸ் அளவிலேயே தொடர்ந்து பேண உதவுகிறது.

இவ்வாறான நிகழ்வு Microwave Oven இல் ஏற்படுவதில்லை. Microwave Oven இனுள் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டு தண்ணீர் சூடாகும். ஆனால், வெப்பத்தின் சீர்ப் பரம்பலால் வாயுக் குமிழிகள் ஏற்படுவதில்லை. நீராவி வெளியேறாததால் தண்ணீரின் சூடு அதன் கொதி நிலையான 100 செல்ஸியஸ் அளவையும் கடக்கிறது. இந்த நிலை, Super Heat நிலை என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தூசி போன்ற சிறு பொருள் தண்ணீரில் புகுமானால் அது வாயுக் குமிழிகள் உண்டாகும் வாய்ப்பைத்தோற்றுவித்துவிடும். ஏற்கனவே மைக்ரோ அலைகளின் தூண்டலால் உராய்வுநிலையில் இருக்கும் தண்ணீர் மூலக்கூறுகள் - வாயுக் குமிழிகளை உயர் அழுத்தத்துடன் வெளியேற்ற - அவை வெடித்துச்சிதறி அடர்த்தியான நீராவியை உருவாக்கும். இந்த நிலையில் மின்கசிவு, சடுதியான வெடிப்பு போன்ற விபத்துக்கள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம்.

எனவேதான், Microwave Oven களில் தண்ணீரைச் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!



நன்றி - லதா

தாமு
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13861
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009
மதிப்பீடு: 381

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்

Post by paari on Tue Nov 03, 2009 10:17 am

நல்ல தகவல் ரொம்ப நன்றி தோழரே

paari
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 61
வசிப்பிடம்: kuwait
சேர்ந்தது: 26/09/2009
மதிப்பீடு: 3

Back to top Go down

Re: தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்

Post by தாமு on Tue Nov 03, 2009 11:32 am

நன்றி தோழா....

தாமு
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13861
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009
மதிப்பீடு: 381

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்

Post by மீனு on Tue Nov 03, 2009 12:53 pm

super star.. தகவல் அருமை தாமு..
நிஜம்மாவே தமிழன் அண்ணாவை பாராட்டனும்..அழகு பெயர் சூப்பர் ஸ்டார் கொடுத்து இருக்கார் தாமுவுக்கு ,,

தமிழன் அண்ணா..

மீனு
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141

Back to top Go down

Re: தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்

Post by தாமு on Wed Nov 04, 2009 9:41 am

நன்றி மீனு, தமிழன் அண்ணா ...

தாமு
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13861
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009
மதிப்பீடு: 381

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்

Post by vijaybemech on Sun Feb 14, 2010 11:38 pm

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்தது!

நாம் இயற்கைக்கு எதிரானவர்கள் அல்ல!!
செயற்கைக்கு எதிரானவர்கள் !!!

என்பதை நிருபித்துவிட்டீர்கள் திரு தாமு அவர்களே!
அன்புடன் வ.விஜய்

vijaybemech
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 43
வசிப்பிடம்: perungalur
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்

Post by கலைவேந்தன் on Sun Feb 14, 2010 11:47 pm

பயனுள்ள பதிவு நண்பரே....! நன்றி...!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்

Post by srinihasan on Mon Feb 15, 2010 12:15 am

நடைமுறை அறிவியல் விளக்கம்...நல்லதொரு தகவல்...

இவன்,
தஞ்சை.வாசன்

srinihasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3823
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 53

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum