ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
 SK

`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
 SK

சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
 ayyasamy ram

திண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா? நியூட்ரினோ ஆய்வா?
 பழ.முத்துராமலிங்கம்

வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்..!! ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..!!!
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

நலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்
 பழ.முத்துராமலிங்கம்

மரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..!
 பழ.முத்துராமலிங்கம்

`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்!’ - டர்பனுடன் பதவியேற்றார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04
 Raju_007

வருங்காலப் பொறியாளன்
 ayyasamy ram

கற்றுக்கொள்! – கவிதை
 ayyasamy ram

பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது
 ராஜா

வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

கன்னட மொழி படத்தில் சிம்பு!
 ayyasamy ram

கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
 ayyasamy ram

காஜல் அகர்வால் கொந்தளிப்பு!-
 ayyasamy ram

ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
 ayyasamy ram

மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
 ayyasamy ram

மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
 ayyasamy ram

கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
 ayyasamy ram

லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
 ayyasamy ram

மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
 ayyasamy ram

பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
 ayyasamy ram

பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
 ayyasamy ram

இப்படி செய்து பாருங்க... "இட்லி" பஞ்சு போல் இருக்கும்.
 பழ.முத்துராமலிங்கம்

ஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும் - தொடர் பதிவு
 ayyasamy ram

​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு!
 Dr.S.Soundarapandian

பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
 Dr.S.Soundarapandian

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள்
 தமிழ்நேயன் ஏழுமலை

பதவியை ராஜினமா செய்தார் தமிழிசை!? தொண்டர்கள் அதிர்ச்சி!
 பழ.முத்துராமலிங்கம்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
 பழ.முத்துராமலிங்கம்

நானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்
 ayyasamy ram

கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
 பழ.முத்துராமலிங்கம்

அடிபட்டதில் நீலமாகி விட்டதா..?
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..
 பழ.முத்துராமலிங்கம்

ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க!
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்! - அதிர்ச்சி ரிப்போர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

* "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
 ayyasamy ram

எல்லாம் விதி
 Dr.S.Soundarapandian

காமெடி படத்தில் தீபிகா படுகோன்!
 ayyasamy ram

குறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...!!
 Dr.S.Soundarapandian

வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
 பழ.முத்துராமலிங்கம்

கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன
 பழ.முத்துராமலிங்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

அரவிந்தரின் சாவித்திரி
 ayyasamy ram

மகப்பேறு தரும் மகரந்தம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்?

View previous topic View next topic Go down

புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்?

Post by சாமி on Tue Mar 19, 2013 10:34 am

அன்றும் இன்றும்!

அரண்மனையை விட்டு வெளியேறிய சித்தார்த்தன், உலகை உய்விக்க வந்த புத்தராகிப் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது சொந்த ஊரான கபிலவஸ்த்துவுக்கு வருகிறார். அப்போது சித்தார்த்தனின் மனைவி யசோதரையும் மகன் ராகுலனும் புத்தரைச் சந்திக்கிறார்கள்.

"நள்ளிரவில் அரண்மனையைவிட்டுப் போனீர்களே, எங்களை எழுப்பிச் சொல்லிவிட்டுப் போக வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?''

"எழுப்பிச் சொல்லியிருந்தால் நானும் ராகுலும் அழுது உங்கள் பயணத்தைத் தடுத்துவிடுவோம் என்று நினைத்தீர்களா?''

"கட்டிய மனைவியையும் குழந்தையையும் விட்டுவிட்டு நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் அரண்மனையைவிட்டுப் போன உங்களை "கெüதம புத்தர்' என்று கொண்டாடுகிறார்களே, நான் உங்களையும் குழந்தையையும் விட்டுவிட்டு நீங்கள் செய்ததுபோல யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நள்ளிரவில் அரண்மனையை விட்டுப் போயிருந்தால் இந்த உலகம் என்னை என்ன சொல்லியிருக்கும்?''


சித்தார்த்தனின் மனைவி யசோதரை இப்படிக் கேட்டிருந்தால் புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று தெரியவில்லை.

ஆனால், தமிழ் இலக்கியத்தில் இதேபோல சந்தர்ப்பங்களும் அதற்கான பதிலும் காணப்படுகிறது. அப்படி ஒரு பெண்ணை "மணிமேகலை' என்று தமிழ் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை எனும் இரட்டைக் காப்பியங்களும் அந்தப் புத்தத் துறவியைப் போற்றுகின்றன.

இப்போதும் மணிமேகலை என்று தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். நாம் இடித்துக் கொண்டாலும் வாசல்நிலை இடித்துவிட்டது என்று சொல்கிறோம்; வழியில் தடுக்கி விழுந்தாலும் கல் தடுக்கிவிட்டது என்று காரணம் சொல்கிறோம்; குழந்தை வளர்ந்ததைச் சொல்லாமல் சட்டை சிறிதாகிவிட்டது என்கிறோம். மற்றவற்றின் மீது காரணத்தைச் சுமத்தித் தப்பித்துக் கொள்கிறோம்.

சுமத்துவதும் தப்பிப்பதும் சுயநலத்தின் பலவீனம்; நடந்ததற்கு வருந்துவது நல்ல மனதின் அடையாளம்; மன்னிப்புக் கேட்பது பெருந்தன்மையின் வெளிப்பாடு; தண்டனைக்கு உட்படுவது பண்பாட்டின் உச்சம்.

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமும், மனதைக் கொள்ளை கொள்ளும் மணிமேகலையும் பண்பாட்டின் உச்சமாக வெளிப்படுகின்றன...

சிலப்பதிகாரக் கானல்வரியில்,
திங்கள் மாலை வெண்குடையான்,
சென்னிச் செங்கோல் - அது ஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி!''

என்று கோவலன் பாடுகிறான்.

"சோழனுக்குக் காவிரி மனைவியாக இருந்தபோதும் கங்கையைச் சேர்த்துக்கொள்கிறான். அதற்காக ஊடல் கொள்ளாத காவிரி வாழ்க' என்று கோவலன் பாடியதும், மாதவி பதில் பாட்டுப் பாடுகிறாள்,

தம்முடைய தண்ணளியும், தாமும் தன்மான்தேரும்;
எம்மை நினையாது; விட்டாரோ? விட்டகல்க,
அம்மென் இரை அடும்புகாள்! அன்னங்காள்!
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்!''


தமது அன்பினை மறந்து வேறொரு மங்கையிடம் அவன் மனம் விரும்பிப் போகிறது என்று நினைத்த மாதவி, காவிரியைப்போல் ஊடல் கொள்ளாமல் இருக்க நான் தயாரில்லை என்பதை அறிவிக்கிறாள்.

"எனது அன்பை நினைக்காமல் என்னை விட்டுப்போக நினைத்தால் போகட்டும்; என்னைவிட்டு அகல்க'' என்று பாடுகிறாள்.

கோபம்கொண்டு புறப்பட்டுப் போகிற கோவலன், மாதவியை, ""மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள்; சலம் புணர்க்கொள்கை சலதி'' என்றெல்லாம் திட்டுகிறான்.

கோவலன் கண்ணகியோடு பூம்புகாரை விட்டுப்போனது அறிந்த மாதவி மனம் வருந்தி ஒரு கடிதம் எழுதிக் கோசிகனிடம் கொடுத்து அனுப்புகிறாள். கடிதத்தைக் கோவலன் படிக்கிறான்.

அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்;
வடியாக் கிளவி மனம்கொளல் வேண்டும்;
குரவர்பணி அன்றியும் குலப்பிறப்பாட்டியோடு;
இரவிடைக் கழிதற்கு, என் பிழைப்பு அறியாது;
கையறு நெஞ்சம் கடிதல் வேண்டும்;
பொய்தீர்க் காட்சிப் புரையோய், போற்றி!'

இரவில், கண்ணகியோடு பூம்புகாரைவிட்டுப் புறப்பட்டுப் போனதற்கு நான் காரணமாகிவிட்டேனே என்று செய்யாத குற்றத்திற்குப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்கிறாள் மாதவி.

கடிதத்தைப் படித்த கோவலன், மாதவி தவறு செய்யவில்லை; நான்தான் தவறு செய்துவிட்டேன் என்று, ""தன்தீதிலள் எனத் தளர்ச்சி நீங்கி என்தீது என்றே எய்தியது'' உணர்ந்து வருத்தம் தெரிவிக்கிறான்.

கோவலன் கொலை செய்யப்பட்டதும் கண்ணகி, பொங்கி எழுந்து, பாண்டியன் அரண்மனைக்குச் சென்று வழக்குரைக்கிறாள். பாண்டியன் தவறு நடந்துவிட்டதை உணர்கிறான். ""பொன் செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன் யானே கள்வன்'' என்று கூறி உயிர்விடுகிறான். இவ்வளவுக்கும், என் தேவியின் கால் சிலம்பு ""கன்றிய கள்வன் கையதாகில் கொன்று அச்சிலம்பு கொணர்க'' என்றுதான் சொல்லி இருக்கிறான்.

அரசியின் காற்சிலம்பு அவன் கையில் இருந்தால்தான் கொல்லச் சொல்லி இருக்கிறான். சிலம்பு அரசியுடையதுதானா என்பதை உறுதி செய்யாமலேயே, கோவலன் கொல்லப்படுகிறான். ஆனாலும் கூட, பாண்டியன், கோவலன் கொல்லப்பட்டதற்குத் தான் பொறுப்பில்லை என்று கூறித் தப்பிக்க முயற்சி செய்யாமல் தனது ஆட்சியில் நடந்துவிட்ட தவறுக்குத் தானே பொறுப்பேற்று உயிர்விடுகிறான்.

கண்ணகியின் கோபம் தணியவில்லை. ""பட்டாங்குயானுமோர் பத்தினியேயாமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும்'' என்று வஞ்சினம் கூறி ஊரையும் மக்களையும் எரிக்கிறாள்.

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் எழுப்பிய பின்னர், புத்தமதத் துறவி மணிமேகலை, கண்ணகியையும் கோவலனையும் பார்க்க, பத்தினிக் கோட்டம் வருகிறாள். வணங்குகிறாள்.

மனதில் நெருடிக் கொண்டிருக்கும் கேள்வியோடு தெய்வச் சிலையாக இருக்கும் கண்ணகியைப் பார்க்கிறாள். சிலையோடும் உரையாடும் ஆற்றல் மணிமேகலைக்கு இருந்திருக்கிறது. கேள்வி அவளை விடவில்லை; கேட்டு விடுகிறாள்.

அன்புக் கடன் நில்லாது நற்றவம்படராது
கற்புக் கடன் பூண்டு நும்கடன்
முடித்தது அருளல் வேண்டும்''


என்று அழுது முன்நிற்கிறாள்.

அன்பு காட்டாமல் நல்ல நெறியில் நடக்காமல் ஊரையும் மக்களையும் எரித்தது ஏன் என்று கேட்கிறாள்.

தவறு செய்தது பாண்டிய மன்னரின் காவலர்கள். பாண்டியனும் தவறுக்குப் பொறுப்பேற்று உயிர் துறக்கிறான். பிறகும் ஏன் வெஞ்சினம் கொண்டு அப்பாவி மக்களை, மதுரை மாநகரைக் கண்ணகி தீக்கிரையாக்க வேண்டும்?

"ஆம் மகளே! தவறு செய்துவிட்டேன். கோபத்தில் செழுமையான நகரை எரித்துச் சிதைத்து விட்டேன். அந்தப் பாவம் என்னைவிடாது. எப்படியும் அதற்கான தண்டனையைப் பெறத்தான் போகிறேன்.'' என்று தான் செய்தது தவறுதான் என்பதை ஏற்றுக் கொள்கிறாள் கண்ணகி.

"சீற்றம் கொண்டு செழுநகர் சிதைத்தேன்.....அடுசினப்பாவம் எவ்வகையானும் எய்துதல் ஒழியாது!''

தண்டனைக்கு உட்படத்தான் போகிறேன் என்று கண்ணகி கூறியதாக மணிமேகலைக் காப்பியம் சொல்கிறது. மற்றவர்களே காரணம் என்று பழி சுமத்தாமல் தாமே உணர்ந்து வருந்துவதையும், ஆட்சியில் இருந்ததால் பொறுப்பேற்று உயிர்விடுவதையும், தப்பிக்க நினைக்காமல் தண்டனைக்கு உட்படுவதையும் சிலம்பும் மணிமேகலையும் காட்டுகின்றன. இவை மானுடப் பண்பாட்டின் சிகரங்கள்.

கண்ணகி எரித்த இடத்தில் மதுரை இப்போதும் இருக்கிறது. ஆனாலும் மாநகர்கள் தொடர்ந்து எரிக்கப்படுகின்றன. மக்கள் கொல்லப்படுகிறார்கள்; குழந்தைகளும் சிறுவர்களும் கூடக் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள்.

கேள்வி கேட்கத்தான் மணிமேகலை போல புத்தமதத் துறவிகள் இல்லை. ஆனாலும் கேள்வி இருக்கிறது. மணிமேகலை என்கிற புத்தமதத் துறவியின் கேள்வியை இப்போது உலகம் கேட்கிறது!

ம. இராசேந்திரன் - கட்டுரையாளர்: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்.-நன்றி-தினமணி


Last edited by சாமி on Tue Mar 19, 2013 10:56 am; edited 1 time in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்?

Post by ராஜா on Tue Mar 19, 2013 10:49 am

என்ன சொல்லியிருப்பார் என்று தெரியல, ஆனா அப்பாவி தமிழர்களை கொன்று குவியுங்கள் என்று மட்டும் சொல்லியிருக்கமாட்டார் என நினைக்கிறேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30909
மதிப்பீடுகள் : 5595

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்?

Post by mbalasaravanan on Tue Mar 19, 2013 1:28 pm

தெரிந்த காப்பியங்கள் தெரியாத விஷயங்கள் நன்றி paகிர்வுக்கு
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்?

Post by mohu on Tue Mar 26, 2013 2:23 pm

பகிர்வுக்கு நன்றி
avatar
mohu
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 125
மதிப்பீடுகள் : 35

View user profile http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

Re: புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum