ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 M.Jagadeesan

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

பசு மாடு கற்பழிப்பு
 அம்புலிமாமா

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 ayyasamy ram

ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ayyasamy ram

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ayyasamy ram

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 ayyasamy ram

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 சிவனாசான்

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Go down

ஜ பி ல் - 6 மகுடம் யாருக்கு ? [168Vote ]

 • சென்னை சூப்பர் கிங்ஸ்

  12273%
 • டெல்லி டெர் டெவில்ஸ்

  21%
 • சன்ரைசெர்ஸ் ஹைத்ராபாத்

  42%
 • கிங்ஸ் லெவன் பஞ்சாப்

  138%
 • கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  53%
 • மும்பை இந்தியன்ஸ்

  138%
 • புனே வார்ரியர்ஸ்

  00%
 • ராஜஸ்தான் ராயல்ஸ்

  42%
 • ராயல் சேலன்சர்ஸ் பெங்களூர்

  53%

You are not connected. Please login or register

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி on Sat Mar 30, 2013 11:25 am

First topic message reminder :

இப்பொழுது தமிழ் நாட்டில் உள்ள சுழ்நிலையில் இது போல திரி துவங்க கஷ்டமாகத்தான் இருக்கு . என்ன செய்ய .ஐபிஎல் துவங்கிய உடன் ஐ.பி.எல் பற்றி நிறைய திரி துவங்க படும் . அதை தவிர்க்கவே இந்த திரி . ஐபிஎல் பற்றிய உங்கள் கட்டுரைகள் ,விவாதம் அனைத்தும் இந்த திரியில் மட்டும் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் .


குறிப்பு : நிர்வாக குழுவினர் மற்ற பகுதிகளில் பதிய படும் ஐபிஎல் பற்றிய திரிகளை இந்த திரியில் இணைக்கும்மாறு அன்போடு கேட்டுகொள்கின்றோம்.


அட்டவணை

தொலைக்காட்சியில் பார்க்க இயலாதவர்கள் இங்கே ஆன்லைனில் பாருங்கள்:

http://livecricket1.bollym4u.com/

இந்த தளத்தில் அருமையாக இருக்கிறது நேரலை:

http://www.boxtv.com/ipl/

--நன்றி இனியவன்Last edited by பாலாஜி on Fri Apr 12, 2013 11:40 am; edited 6 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down


Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed on Tue Apr 09, 2013 12:02 am

@ராஜா wrote:
@பாலாஜி wrote:
இந்த அணியில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும்
ஜெயித்த உடன் எல்லோரையும் முந்திகிட்டு ஒரே ஓட்டமா எல்லை கோட்டை தாண்டி பஞ்சாப் அணியின் Stand க்கு வந்துடனும் இல்லியா பாலாஜி ,

கண்டிப்பாக வந்துடனும்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி on Tue Apr 09, 2013 12:29 pm

@ராஜா wrote:
@பாலாஜி wrote:
இந்த அணியில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும்
ஜெயித்த உடன் எல்லோரையும் முந்திகிட்டு ஒரே ஓட்டமா எல்லை கோட்டை தாண்டி பஞ்சாப் அணியின் Stand க்கு வந்துடனும் இல்லியா பாலாஜி ,

அதுதானே நடைமுறை வழக்கம் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by ராஜா on Tue Apr 09, 2013 1:08 pm

@பாலாஜி wrote:அதுதானே நடைமுறை வழக்கம் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
கமல் ரசிகரா இருந்துட்டு ()இது கூட செய்யலன்னா அப்புறம் கமல் கோபித்து கொள்வார் இல்லையா தல
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி on Tue Apr 09, 2013 1:19 pm

@ராஜா wrote:
@பாலாஜி wrote:அதுதானே நடைமுறை வழக்கம் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
கமல் ரசிகரா இருந்துட்டு ()இது கூட செய்யலன்னா அப்புறம் கமல் கோபித்து கொள்வார் இல்லையா தல

இதை இப்படியா போட்டு கொடுப்பது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

ஐபிஎல்6: மிக மிக பொறுப்பான ஆட்டம்!! 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!!

Post by Powenraj on Thu Apr 11, 2013 8:04 am

மொகாலி: ஐபிஎல் 6 வது தொடரில் மொகாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னைசூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் இருந்து கற்றுக்கொண்ட பாடத்தால் ரொம்ப ரொம்ப உஷாராக விளையாடி 10விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மொகாலியில் சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள்எதிர்கொண்டு ஆடின. பஞ்சாப் அணி முதல் லீக் ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியை வென்றஉற்சாகத்துடன் களம் இறங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம்நிலையில் வென்றாக வேண்டிய நிலையில் களம் இறங்கியது. முதல் லீக்கில் தோற்றதால் சென்னை அணியில் சில மாற்றங்செய்யப்பட்டு புதிய வியூகத்துடன் களம் இறங்கியது.
http://tamil.thatscricket.com/img/2013/04/10-michael-hussey-m-vijay55-600.jpg
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக மன்தீப் சிங், கேப்டன் கில் கிறிஸ்ட் ஆகியோர் களம் இறங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் ஓவரை நன்னெஸ் வீசினார். முதல் பந்திலேயே மன்தீப் சிங் பவுண்டரி அடித்து உற்சாகமாகஆட்டத்தைத் தொடங்கினார். முதல் ஓவரில் பஞ்சாப் அணி 5 ரன்களை எடுத்திருந்தது.
-
2-வது ஓவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அங்கித் ராஜ்பூட் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் கில்கிறிஸ்ட் தமது முதல் பவுண்டரியை அடித்தார். கடைசி பந்திலும் அவர் பவுண்டரியை விளாசினார். 2-வது ஓவரின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி16ரன்களை எடுத்தது .இந்த ஒரு ஓவரில் மட்டும் 2 பவுண்டரிகள் உட்பட11 ரன்கள்எடுக்கப்பட்டன.
[ஸ்கோர்போர்டு]
தடுமாற வைத்த 3-வது ஓவர்
3வது ஓவரை மீண்டும் நன்னெஸ்வீசினார். இந்த ஓவரில் 3வது பந்தை எதிர்கொண்டு கில்கிறிஸ்ட் அடித்த பந்தை மைஹ் ஹசி அற்புதமாக காட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். கில்கிறிஸ்ட் 6 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இதில் 2 பவுண்டரிகளும் அடங்கும். கில்கிறிஸ்ட் வெளியேறியதைத் தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மனன் வோரா களமிறங்கினார். அவர் முதல் பந்தில் 1 ரன்னை அடித்தார். இதைத் தொடர்ந்து நன்னெஸ் வீசிய பந்தை எதிர்கொண்டார் மன்தீப்சிங்.மன்தீப் சிங் அடித்த பந்தை பிராவோ காட்ச் பிடிக்க 3-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. 2விக்கெட் இழப்புக்கு 20 ரன்களை எடுத்தது அந்த அணி. களத்தில் இருந்த வோராவுடன் டேவிட் ஹசி இணைந்தார்.
-
சுதாரிப்பான ஆட்டம்:
ஆனால் இதன் பினன்ர் சற்றே சுதாரித்தார்போல் ஆடியது பஞ்சாப் அணி. 4-வது ஓவரில் மோரிஸ் பந்துவீச மனன் வோரா 2 பவுண்டரிகளை விளாசினார். 5-வது ஓவரை நன்னெஸ் வீசினார். இந்த ஓவரின் 4வது பந்தில் டேவிட் ஹசி ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார்.. 5வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி. 6வது ஓவரை மீண்டும் மோரிஸ் வீனார். இந்த ஓவரின் 4வது பந்திலும் டேவிட் ஹசி மீண்டும் ஒரு பவுண்டரி எடுத்தார். 6வது ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 43 ரன்களை எடுத்தது. 7வது ஓவரை வீசிய ஜடேஜாவின் 4வது பந்தில் வோரா ஒரு பவுண்டரி அடிக்க பஞ்சாப் அணி 50 ரன்களைத் தொட்டது. ஆனால் 7வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட வோரா பந்து வானில் உயரப் பறந்து அழகாக பவுண்டரி லைன் அருகே மைக் ஹசியின் கைகளில் விழ அவுட் ஆனார் அவர். 11 பந்துகளில் 3பவுண்டரிகளுடன் 16 ரன்களை எடுத்திருந்தார் வோரா. களத்தில் நின்ற டேவிட் ஹசியுடன் கெளர்கிரத் மான் சிங் இணைந்தார்.
-
10 ஓவரில் 73/3
8வது ஓவரை பிராவோ வீசினார். அவரது 2-வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார் டேவிட் ஹசி. 8வது ஓவரின் முடிவில் 3 விக்கெட்இழப்புக்கு 60ரன்களுடன் சற்றே நிம்மதியாக நின்றது கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி. ஆனால் ஓவரில் ஜடேஜாவின் பந்துகளில் முந்தைய ஓவர்களைப் போல பஞ்சாப் அணியால் எடுக்க முடியவில்லை.கூடுதலாக 3 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. 9வது ஓவரை பிராவோவீச முதல் பந்தில் மட்டும் 1 ரன் அடிக்கப்பட்ட நிலையில் டேவிஹசி தொடர்ந்து3 பந்துகளில் ரன் ஏதும் அடிக்காமல் இருந்தார். 5வது பந்தில் இன்றைய போட்டியின் முதல் சிக்சரை பறக்க விட்டுரசிகர்களை துள்ள வைத்தார். 10வது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி. 11வது ஓவரை சென்னையின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் 6 ரன்களை சேர்த்தது பஞ்சாப் அணி. அடுத்த ஓவரில் ஜடேஜா வீசிய 2வது பந்தை பவுண்டரி லைனை நோக்கி அடித்தார் கெளர்கிரத் சிங். ஆனால் அது தடுக்கப்பட்டது.3வது பந்தை பவுண்டரி லைனுக்கே அனுப்பியே வைத்தார். 3 விக்கெட் இழப்புடனேயே 12 ஆவது ஓவர் முடிவில் 88 ரன்களைத் தொட்டது பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி.
-
நிலைத்து ஆடிய ஹசி- கெளர்கித்
13வது ஓவரை மீண்டும் சுழல் அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் 100 ரன்களைத் தொட்டுவிடும் என்ற ஆர்ப்பரிப்பு பஞ்சாப் ரசிகர்களிடம் இருந்தது. இதனை பூர்த்தி செய்வது போல4வது பந்தில் ஹஸி ஒரு பவுண்டரி அடிக்க அணியின் ஸ்கோர் 95 ஆனது. இந்த ஓவரின்முடிவில் 97 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி. ஜடேஜாவீசிய 14வது ஓவரின் முதல் பந்தில் ஹசி ஒரு பவுண்டரி அடிக்க அந்த அணி 101 ரன்னைக் கடந்தது. கெளர்கித் சிங்- டேவிட் ஹசி ஜோடி இணைந்து நிலைத்து ரன்களைக் குவிந்தது. இதனால் இந்த அணியைப் பிரித்தாக சென்னை பந்து வீச்சாளர்கள் போராடவேண்டிய நிலை வந்தது..இந்தப் போராட்டத்துக்குப் பயனும் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே கிடைத்தது.
-
அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழப்பு
15வது ஓவரில் முதல் பந்தில்அஸ்வின் வீசிய பந்தை டேவிட்அழகாக உயரத் தூக்கி அடிக்க அது பிராவோவின் கைகளில் கச்சிதமாக அமர்ந்தது.
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by Powenraj on Thu Apr 11, 2013 8:16 am

ரன்களைக் குவித்த ஒரு ஜோடியை பிரித்த நிம்மதி அவர்கள் முகத்தில் தெரிந்தது. ஹசி 36 பந்துகளில் 41 ரன்களைஎடுத்திருந்தார். இதில் 4 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும். பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களைஎடுத்தது. ஆனால் அடுத்த பந்தை சிங் அடித்து தூக்க பவுண்டரி லைனின் அற்புதமாக தடுக்க முயற்சித்தார் பிராவோ. ஆனால் பலனின்றி பவுண்டரியானது. 16-வது ஓவரின் முதல் பந்தை பிராவோ வீச நன்னெஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் சிங். 5 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி.
138 ரன்களில் ஆல் அவுட்
ஆனால் பின்னர் வந்த பஞ்சாப்வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. 3 ஓவர்களில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது பஞ்சாப். 19வது ஓவரின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை எடுத்திருந்தது பஞ்சாப் அணி. இறுதி ஓவரை நன்னெஸ் வீசினார். 20வது ஓவரின் 5-வது பந்தில் பஞ்சாப் அணியின் பிரவீன்குமாரை ரன் அவுட் செய்தார். அந்த அணி கடைசி ஓவரின் 5வது பந்தில் 138 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.சென்னை அணி வெல்ல 139 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது.
-
முதல் 5 ஓவர்களில் மிக நிதானமாக சென்னை சூப்பர் கிங்ஸ்
பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜய் மற்றும் மைஹ் ஹசி களமிறங்கினர். முதல் ஓவரை பிரவீன் குமார் வீசினார். அவரது 5வது பந்தில் மைஹ் ஹசி ஒரு பவுண்டரி அடிக்க முதல் ஓவரின் முடிவில் சென்னை அணி 6 ரன்களை எடுத்தது. 2வது ஓவரில் ஹாரிஸ் வீசிய பந்துகளில் ரன்களை சென்னை அணியால் எடுக்க முடியவில்லை. கூடுதலாக 3 ரன்கள்தான் எடுக்க முடிந்தது. பிரவீன் வீசிய 3வது ஓவரின் 5வது பந்தில் மைஹ் ஹஸி ஒரு பவுண்டரி அடிக்க ஓவரின் முடிவில்14 ரன்கள்தான் எடுத்திருந்தது. சென்னை அணியில் ரன் குவிப்பு வேகம்சற்றே வேகம் குறைவாக இருந்தது. அதாவது கடந்த போட்டியில் ரன்களைக் குவிக்கப் போய் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்ததை நினைவில் வைத்து ஆடியதைப் போல் இருந்தது.
1000வது ரன்னை எட்டிய ஹஸி
4வது ஓவரை மெஹ்மூத் வீசினார். அவரது கடைசி பந்தைபவுண்டரிக்கு அனுப்பினார் முரளி விஜய். சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 5வது ஓவரில் ஹஸியின் ஒரு பவுண்டரியுடன் சேர்த்து சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 31 ரன்களை எடுத்திருந்தது. 6வது ஓவரில் அவானாவின் 3வதுபந்தில் ஹஸி ஒரு பவுண்டரியைஅடித்தார். அடுத்த பந்தில் மேலும் ஒரு ரன் எடுத்து ஐபிஎல் போட்டிகளில் 1000 வது ரன்னை எட்டினார் மைக் ஹஸி. 7வது ஓவரை மெஹ்மூத் வீசினார். அவரது முதல் பந்தில் ஹசி கிரீஸை எட்டுவதற்குள் ரன் அவுட்டா என குழப்பம் வந்தது. இதனால் மூன்றாவது அம்பயரின் பரிசீலனைக்கு கொண்டு போக சிறிது நேரம் இரு அணிகளும் டென்ஷனில் இருந்தனர். கடைசியாக நாட் அவுட் என அறிவிக்கப்பட்டது.
-
10வது ஓவர் முடிவில் 65 ரன்கள்
சென்னை அணியின் ஆட்டத்தின் போக்கானது முதல் போட்டியில்கற்ற அனுபவத்தின் அடிப்படையில் புதிய வியூகம்வகுத்து ஆடுவதை வெளிப்படுத்துவதாக இருந்தது. 7 வது ஓவர் முடிவில் 42 ரன்களை சென்னை விக்கெட் இழப்பின்றி எட்டியது. 8வது ஓவரை பியூஸ் சாவ்லா வீசினார். 3வது பந்தில் ஹஸி அடித்த பந்தை எளிதாக பிடித்திருக்க வேண்டிய சாவ்லா தவறவிட்டுவிட்டார். பந்து சாவ்லா கைகளில் பட்டு தப்பியது. 8 வது ஓவரின் முடிவில் 46 ரன்கள் எடுத்துரொம்பவே உஷாராக விளையாடுவதாக காட்டிக் கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். அப்போது 72 பந்துகளில்93 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் இருந்தது அந்த அணி.
-
அவானா வீசிய 9வது ஓவரின் 3வது பந்தில் ஹஸி ஒரு பவுண்டரி அடிக்க சென்னை அணி53 ரன்களைத் தொட்டது. அடுத்தபந்தையும் ஹஸி பவுண்டரிக்குஅனுப்ப ஆஹா!சென்னை அணி வேகம்காட்டத் தொடங்கியதோ என்று ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர். இந்த ஓவரில் மட்டும் 13 ரன்களை எடுத்ததுசென்னை அணி அதாவது 9வது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்களை எட்டியது. பியூஸ் சாவ்லா வீசிய 10-வது ஓவரின் முடிவில் 65 ரன்களை எடுத்தது.
ஜோடியை பிரிக்க பஞ்சாப் பெரும் போராட்டம்
11வது ஓவர் முடிவில் ஹசி 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அரைசதத்தை நோக்கிப்பயணித்துக் கொண்டிருந்தார்.முரளி விஜய் 32 பந்துகளில் 24 ரன்களை எடுத்திருந்தார். சென்னை அணிக்கு விக்கெட்டுகள் கைவசம் இருந்தாலும் ஒருவித நெருக்கடியுடனேயே விளையாட வேண்டும் என்று விதித்துக் கொண்டது போலவே அந்த அணி தீர்மானித்து தொடக்க வீரர்களை இறக்கியது போல் தெரிந்தது. இவர்களைப் பிரிக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர்கள் பெரும் போராட்டமே நடத்திப் பார்த்தனர். 12வது ஓவரையும் ஹஸி- முரளி விஜய் ஜோடி 74 ரன்களுடன் நிறைவு செய்து 13ஓவருக்குப் போனது. அந்த ஓவரின் 4வது பந்தில் மைக் ஹஸி ஒரு பவுண்டரி அடித்து அரை சதத்தை 37 பந்துகளில் தொட்டார். இந்த ஓவரில் மட்டும் மொத்தம் 3 பவுண்டரிகளை அடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 14வது ஓவரின் 5வது பந்தில் ஹஸி மற்றொரு பவுண்டரி அடித்தார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி96ரன்களை எட்டியது. இன்னும் 6 ஓவர்கள்தான். அதாவது 36 பந்துகளில்42 ரன்கள் எடுக்கவேண்டும் அதே நேரத்தில் விக்கெட்டுகள் அப்படியே இருந்தால் சென்னை ரசிகர்கள்மிகுந்த ஆவலுடன் இருந்தனர்.
-
ரொம்ப உஷாரா...விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள்!!
15வது ஓவரின் 3வது பந்தில் மெஹ்மூத் வீசிய பந்தில் விஜய் 2 ரன்களை அடிக்க சென்னை சூப்பர்கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை எட்டியது. இருவருமே சிக்சர் எதுவும் அடிக்காமல்விக்கெட்டுகளைப் பாதுகாத்து ரன்களைக் குவிப்பதிலேயே மிகவும் கவனமாக இருந்தனர். 33 பந்துகளில் 39 ரன்கள் தேவை என்ற நிலை அப்போது இருந்தது.
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by Powenraj on Thu Apr 11, 2013 8:21 am

16வது ஓவரில் மட்டும் 16 ரன்கள்!:
ரசிகர்களின் சிக்சர் ஆசையை 16வது ஓவரின் கடைசி பந்தில்முரளி விஜய் நிறைவேற்றி வைத்தார். இதனால் ஆட்டத்தின் போக்கு இப்போது சற்றே மாறியது. 24 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தால் சென்னை அணி வெற்றி என்றானது. சென்னை அணிஒவ்வொரு ஓவரையும் எதிர்கொண்ட விதம் நன்கு திட்டமிட்ட வியூகத்துடனே அவர்கள் களம் இறங்கினர் என்பதையே வெளிப்படுத்தி வந்தது. விக்கெட்டுகளைப் பாதுகாத்து சரியாக ரன்களைக்குவித்து வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடனேஅந்த அணியின் தொடக்க வீரர்கள் விளையாடினர். 16வது ஓவரில் சதீஷ் பந்துவீசியிருந்தார். அந்த ஓவரில்மட்டும் மொத்தம் 16 ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்தது.
-
வெற்றியை உறுதி செய்த சென்னை அணி
17வது ஓவரின் முதல் பந்தில்ஹஸி அற்புதமாக ஒரு பவுண்டரிஅடிக்க 23 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற தலைகீழ் நிலைமை உருவானது. விடவில்லையே... ஹஸி மெஹ்மூத் வீசிய 17வது ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு அனுப்பி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார். 21பந்துகளில் 10 ரன்கள் என்ற நிலைக்கு கொண்டுவந்தார். 17வது ஓவரின் 5வது பந்தில் முரளி விஜய் ஒரு ரன் அடித்து அரைசதத்தை எட்டினார்.
-
அபார வெற்றி:
18 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 18வது ஓவரை விக்கெட் இழப்பின்றி எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸின் ஹசி- முரளி விஜய் ஜோடி. 18வது ஓவரில் இன்னொரு சிகரை ஹசி அடித்து சமன் செய்தார். வின்னிங் ஷாட்டையும் ஹஸியே அடித்தார். சென்னை சூப்பர் கிங்ஸின் முரளி விஜய் 50 பந்துகளில் 50 ரன்களையும் மைக் ஹஸி 54 பந்துகளில் 86 ரன்களையும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை அபாரமாக வீழ்த்தியது!!
-
தட்ஸ்தமிழ்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Apr 11, 2013 9:26 am

நேற்றைய போட்டியில் சென்னை அணியின் பந்து வீச்சும்,பீல்டிங்கும் சிறப்பாக இருந்தது... சூப்பருங்க இறுதி ஓவரில் டோனி எதிர்பார்த்தது போலவே ரன் அவுட் செய்த விதம் அருமை...வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்... அன்பு மலர்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4060
மதிப்பீடுகள் : 918

View user profile

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி on Thu Apr 11, 2013 10:32 am

சென்னை அணிக்கு வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by யினியவன் on Thu Apr 11, 2013 6:10 pm

இந்த தளத்தில் அருமையாக இருக்கிறது நேரலை:

http://www.boxtv.com/ipl/avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by positivekarthick on Thu Apr 11, 2013 9:34 pm

ரொம்ப முக்கியம்.
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by positivekarthick on Thu Apr 11, 2013 9:37 pm

ரொம்ப முக்கியம் .
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by positivekarthick on Thu Apr 11, 2013 9:39 pm

ரொம்ப முக்கியம்.வேற . வேலை ருந்த ஆஹா பாருங்கப்பா
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by ரா.ரா3275 on Thu Apr 11, 2013 10:03 pm

இந்த கிரிக்கெட் கிரேஸ் ஓயவே ஓயாதுப்பா...அது சரி...அரசியல் இல்லாத எதையும் நம்மாளுங்கதான் ஆதரிக்கறது இல்லையே... சோகம்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி on Thu Apr 18, 2013 12:38 pm

மும்பை இந்தியன்ஸ் மகா மோசம்; முதலிடத்தில் ராஜஸ்தான்

மும்பை இண்டியன்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ராஜஸ்தான்.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை ராஜஸ்தான் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.2 ஓவர்களில் 92 ரன்களுக்கு சுருண்டது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ராகுல் திராவிட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் அணியில் ஷேன் வாட்சன்-அஜிங்க்ய ரஹானே ஜோடி, மலிங்கா வீசிய, ஆட்டத்தின் 2-வது ஓவரில் இருந்தே அதிரடியைத் தொடங்கியது. அந்த ஓவரில் ரஹானே 2 பவுண்டரிகளை விரட்ட, ரிஷி தவன் ஓவரில் வாட்சன் ஒரு சிக்ஸரை விளாசினார்.

ஓஜா வீசிய 6-வது ஓவரில் ரஹானே சிக்ஸரை விளாச, மலிங்கா வீசிய அடுத்த ஓவரில் வாட்சன் 3 பவுண்டரிகளை விரட்டினார். இதனால் அந்த ஓவரின் முடிவில் 58 ரன்களை எட்டியது ராஜஸ்தான். அந்த அணி 62 ரன்களை எட்டியபோது போலார்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஷேன் வாட்சன். அவர் 25 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார்

இதையடுத்து திஷந்த் யாக்னிக் களம்புகுந்தார். போலார்ட் வீசிய 10-வது ஓவரில் யாக்னிக் பிரமாண்ட சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாச, அந்த ஓவரின் முடிவில் 88 ரன்களை எட்டியது ராஜஸ்தான். அந்த அணி 115 ரன்களை எட்டியபோது ஹர்பஜன் பந்துவீச்சில் சச்சினிடம் கேட்ச் ஆனார் யாக்னிக். அவர் 24 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தார்.

பின்னர் வந்த ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்களில் ரன் அவுட்டாக, பிராட் ஹோட்ஜ் களம்புகுந்தார். அவர் வந்த வேகத்தில் ஹர்பஜன் பந்துவீச்சில் சிக்ஸர் ஒன்றை விளாசினார். இதனிடையே ரஹானே 46 பந்துகளில் அரைசதம் கண்டார். ஐபிஎல் போட்டியில் அவர் எடுத்த 7-வது அரை சதம் இது. ஜான்சன் வீசிய, ஆட்டத்தின் கடைசி ஓவரில் பிராட் ஹோட்ஜ், ஒரு சிக்ஸரை விளாச, ரஹானே தன் பங்குக்கு 3 பவுண்டரிகளை அடித்தார். இதனால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது மும்பை. ரஹானே 54 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 68, பிராட் ஹோட்ஜ் 15 பந்துகளில் 2 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் முதல் ஓவரிலேயே சச்சின் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மும்பையின் சரிவு தவிர்க்க முடியாததானது.

ரிக்கி பாண்டிங் 4, ரோஹித் சர்மா 2, போலார்ட் 1 ரன்களில் ஆட்டமிழக்க, 4 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்து தடுமாறியது மும்பை.

அந்த அணி 61 ரன்களை எட்டியபோது தினேஷ் கார்த்திக் 30 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பையின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது. பின்னர் வந்த ரிஷி தவன் ரன் ஏதுமின்றியும், ஹர்பஜன் 1, ஜான்சன் 11, அம்பட்டி ராயுடு 27 ரன்களில் வெளியேற, மும்பையின் இன்னிங்ஸில் 92 ரன்களில் முடிவுக்கு வந்தது. இதனால் ராஜஸ்தான் 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.

ராஜஸ்தான் தரப்பில் ஜேம்ஸ் பாக்னெர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஹானே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் போட்டி வரலாற்றில் மும்பை அணி, ரன்கள் அடிப்படையில் கண்ட மிகப்பெரிய தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது ராஜஸ்தான்.

-வெப்துனியா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by யினியவன் on Thu Apr 18, 2013 12:44 pm

நேற்றைய இரண்டு ஆட்டங்களும் அமர்க்களம்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி on Thu Apr 18, 2013 12:48 pm

@யினியவன் wrote:நேற்றைய இரண்டு ஆட்டங்களும் அமர்க்களம்

ஹைதராபாத் அணிக்கு எதோ அதிர்ஷ்டம் அடிக்குது .. குறைவான ரன்கள் எடுத்தாலும் , சிறப்பான பந்துவீச்சில் வெற்றி பெற்று விடுகின்றனர் .

புனே அணியின் அணித்தலைவர் தேர்வு தவறு என்று நினைக்கின்றேன் . மேத்யுஸ் விட சிறந்த அணித்தலைவர் திறமை உடைய வீரர்கள் அந்த அணியில் உண்டு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by யினியவன் on Thu Apr 18, 2013 12:49 pm

@பாலாஜி wrote:
ஹைதராபாத் அணிக்கு எதோ அதிர்ஷ்டம் அடிக்குது .. குறைவான ரன்கள் எடுத்தாலும் , சிறப்பான பந்துவீச்சில் வெற்றி பெற்று விடுகின்றனர் .

புனே அணியின் அணித்தலைவர் தேர்வு தவறு என்று நினைக்கின்றேன் . மேத்யுஸ் விட சிறந்த அணித்தலைவர் திறமை உடைய வீரர்கள் அந்த அணியில் உண்டு
இந்த இரண்டு அணிகளும் தப்பித்தவறி அடுத்த சுற்றுக்கு முன்னேறினால் - எதிர் அணிகளுக்கு ரொம்ப எளிதாகி விடும் பைனல்ஸ் செல்வதற்கு.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி on Thu Apr 18, 2013 12:55 pm

@யினியவன் wrote:
@பாலாஜி wrote:
ஹைதராபாத் அணிக்கு எதோ அதிர்ஷ்டம் அடிக்குது .. குறைவான ரன்கள் எடுத்தாலும் , சிறப்பான பந்துவீச்சில் வெற்றி பெற்று விடுகின்றனர் .

புனே அணியின் அணித்தலைவர் தேர்வு தவறு என்று நினைக்கின்றேன் . மேத்யுஸ் விட சிறந்த அணித்தலைவர் திறமை உடைய வீரர்கள் அந்த அணியில் உண்டு
இந்த இரண்டு அணிகளும் தப்பித்தவறி அடுத்த சுற்றுக்கு முன்னேறினால் - எதிர் அணிகளுக்கு ரொம்ப எளிதாகி விடும் பைனல்ஸ் செல்வதற்கு.

ராஜஸ்தான் , பெங்களூர் , சென்னை இந்த மூன்றில் ஒரு அணிதான் கோப்பையை வெல்லும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி on Tue Apr 23, 2013 11:18 am

ஐபிஎல்6: சென்னையின் செம சூப்பர் சேஸிங்! ராஜஸ்தான் ராயல்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

சென்னை: ஐபிஎல் 6வது தொடரில் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரின் 5வது பந்து வரை அற்புதமாக சேஸ் செய்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் டிராவிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக வாட்சனும் ரஹானேவும் களம் இறங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் ஓவரை மொஹித் சர்மா வீசினார். முதல் பந்தை வாட்சன் அடித்த போது அதை தடுக்காமல் சென்னை வீரர்கள் விட்டதால் அது பவுண்டரி லைனைத் தொட்டது. ஆனால் இதர பந்துகளில் ராஜஸ்தான் அணியால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. முதல் ஓவர் முடிவில் 5 ரன்களை எடுத்தது அந்த அணி. 2வது ஓவரை ஜாசன் ஹோல்டர் வீசினார். இந்த ஓவரிலும் 5 ரன்களை எடுத்தது அந்த அணி. 2 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ரன்களை சேர்த்தது.

ஓவருக்கு 14 ரன்களை அள்ளிக் கொடுத்த சென்னை

ஆனால் 3 வது ஓவரில் மொஹித் சர்மா வீசிய முதல் பந்தை வாட்சன் சிக்சருக்கு அனுப்பி வைத்தார். கடைசி பந்தையும் பவுண்டரிக்கு விளாசினார். இந்த 3வது ஓவரில் மட்டும் 14 ரன்களை வாரிக் கொடுத்தார் மொஹித் சர்மா. 3வது ஓவரின் முடிவில் 24 ரன்களை எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. வாட்சன் 11 பந்துகளில் 18 ரன்களை விளாசியிருந்தார். ரஹானே 7 பந்துகளில் 6 ரன்களை எடுத்திருந்தார். 4வது ஓவரை மீண்டும் ஹோல்டர் வீசினார். இந்த ஓவரிலும் ராஜஸ்தானின் வேட்டை தொடர்ந்து. 3வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் ரஹானே. 4வது ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்களை சேர்த்தது ராஜஸ்தான் அணி. 5வது ஓவரை மோரிஸ் வீசினார். அவரது முதல் பந்தை வழக்கம் போல பவுண்டரிக்குத் தட்டிவிட்டார் வாட்சன்.3வது பந்தை அழகாக தூக்கி அடிக்க அதை கேட்ச் பிடிக்க முயன்றும் தவறவிடப்பட்டது. அடுத்த பந்தை மீண்டும் ஒரு சிக்சருக்கு தூக்கி அடித்தார். 5வது பந்தில் ரன் அவுட் ஆக்கக் கிடைத்த வாய்ப்பையும் கோட்டை விட்டனர் சென்னை வீரர்கள். 6வது பந்தில் 2 ரன்களை அடிக்க 5 ஓவரின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 48 ரன்களைக் குவித்தது.

பவுண்டரிகள், சிக்சர்கள்

6வது ஓவரை அஸ்வின் வீசினார். முதல் பந்தை வாட்சன் வேகமாக அடிக்க ரெய்னா தடுத்தார். 3வது பந்தையும் வாட்சன் அடித்து விளையாட ரெய்னா மீண்டும் அற்புதமாக தடுத்தார். இதில் 4வது பந்தில் ஒரு ரன் அடித்து 50 ரன்களைத் தொட்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஓவரில் ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்படுவதாக நினைத்துக் கொண்டிருந்த சென்னை ரசிகர்களை 5வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்து திகைக்க வைத்தார் வாட்சன். 6வது ஓவர் முடிவில் 55 ரன்களைக் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. வாட்சன் 24 பந்துகளில் 39 ரன்களுடனும் ரஹானே 12 பந்தில் 15 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்த ஜோடி மட்டும் இணைந்து 36 பந்துகளில் 55 ரன்களைக் குவித்தது. 16 ரன்களைக் கொடுத்த ஜடேஜா 7வது ஓவரை ஜடேஜா வீசினார். வாட்சன் - ரஹானே விக்கெட்ட்டை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் இருந்தது. ஆனால் வழக்கம் போல வாட்சன் சென்னையின் பந்து வீச்சைகளை பதம் பார்த்துக் கொண்டிருந்தார். ஜடேஜாவின் 2 வது பந்தில் பவுண்டரி அடித்தார். ஜடேஜாவின் 6வது பந்தையும் சிக்சருக்கு அனுப்பிய வாட்சன் அரை சதத்தைக் கடந்தார். அவர் 29 பந்துகளில் 54 ரன்களை எடுத்தார். 7வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 71 ரன்களைக் குவித்தது. அஸ்வின் வீழ்த்திய 2 விக்கெட்டுகள் 8வது ஓவரை மீண்டும் அஸ்வின் வீசினார். வாட்சன் -ரஹானேவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியாகவேண்டிய நிலையில் அஸ்வின் வீசிய 2-வது பந்தில் ரஹானே அவுட் ஆனார். அவர் 15 பந்துகளில் 16 ரன்களை எடுத்திருந்தார். இதில் 1 பவுண்டரியும் அடங்கும். வாட்சனுடன் யாக்னிக் இணைந்தார். அஸ்வினின் இந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே எடுத்தது ராஜஸ்தான் அணி. 8வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 74 ரன்களை எடுத்தது அந்த அணி. 9வது ஓவரை ஹோல்டர் வீசினார். இவரது 3வது பந்தை யாக்னிக் பவுண்டரிக்கு தூக்கி அடித்தார். 9வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் என்ற நல்ல நிலையில் இருந்தது ராஜஸ்தான் அணி. 10-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 3வது பந்தை யாக்னிக் தூக்கி அடிக்க அதை அஸ்வினே அழகாகப் பிடித்து அவுட் ஆக்கினார். 8 பந்துகளை எதிர்கொண்ட யாக்னிக் 7 ரன்களை எடுத்திருந்தார். அவர் பெவிலியனுக்குத் திரும்ப வாட்சனுடன் கேப்டன் டிராவிட் இணைந்து கொண்டார். 10வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 88 ரன்களை எடுத்தது. 11வது ஓவரை ஹோல்டர் வீச அவரது முதல் பந்தில் தமது 60வது ரன்னை எட்டினார் வாட்சன். இந்த ஓவரின் 5வது பந்தை வாட்சன் தூக்கி அடித்த அதை பிடிக்காமல் கோட்டை விட்டதால் பவுண்டரியைத் தொட்டது அடுத்த பந்தும் பவுண்டரிக்குப் போகவேண்டியதை அழகாகத் தடுத்ததால் 1 ரன் மட்டுமே வாட்சனால் எடுக்க முடிந்தது. 11வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களை எட்டியது ராஜஸ்தான். டிராவிட்டை வீழ்த்திய பிராவோ 12வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் 5 ரன்களை கொடுத்தார் அஸ்வின். 4 ஓவர்களை வீசி 20 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார் அஸ்வின்.

13வது ஓவரில் மோரிஸ் வீசிய முதல் பநதை வாட்சன் சிக்சருக்கு அனுப்பி வைத்து 75 ரன்களை எட்டினார். அவர் 43 பந்துகளில்75 ரன்களை குவித்தார். மோரிஸ் இந்த முறை 9 ரன்களை ராஜஸ்தானுக்குகொடுத்தார். 13வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 112 ரன்களை எட்டியது ராஜஸ்தான் அணி. 14வது ஓவரை பிராவோ வீசினார். பிராவோவின் 2வது பந்தை டிராவிட் தூக்கி அடிக்க விக்கெட் கீப்பர் டோணி அழகாக பிடித்து அவுட் ஆக்கினார். 3 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களை எடுத்தது ராஜஸ்தான் அணி. பிராவோ இன்றைய போட்டியில் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே 1 ரன் மட்டுமே கொடுத்த நிலையில் 1 விக்கெட் எடுத்தார். டிராவில் 9 பந்துகளில் 6 ரன்களை மட்டுமே எடுத்தார். டிராவிட் பெவிலியனுக்குத் திரும்ப களத்தில் மலைபோல் நின்ற வாட்சனுடன் பின்னி இணைந்து கொண்டார். பின்னி, பிராவோவின் 5வது பந்தில் ஒரு பவுண்டரியை விளாசினார். 14வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களை எடுத்தது. 15வது ஓவரை ஜடேஜா வீசினார். ஜடேஜாவின் 5வது பந்தை பவுண்டரிக்கு பின்னி அனுப்ப அது மொஹித் சர்மாவின் கையில் பட்டு தப்பியது. 15வது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை எட்டியது ராஜஸ்தான் அணி. 16வது ஓவரை பிராவோ வீசினார். அவரால் வாட்சனின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை 16வது ஓவர் முடிவில் வாட்சன் 54 பந்துகளில் 84 ரன்களுடன் இருந்தார். பின்னியோ 11 பந்துகளில்18 ரன்கள் எடுத்திருந்தார். இந்த ஓவரின் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களை எடுத்தது. அடுத்தடுத்து சிக்சர்! 17வது ஓவரை ஜடேஜா வீச 2வது பந்தை சிக்சருக்கு அனுப்பி வைத்தார் வாட்சன். அடுத்த பந்து வைட் ஆனதால் திருப்பியும் ஜடேஜா போட்டபந்தை சிக்சருக்கே அனுப்பி வைத்து 96 ரன்களை எட்டினார் வாட்சன். 17வது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களைக் குவித்தது ராஜஸ்தான். முதல் சதமடித்த வாட்சன் 18வது ஓவரை பிராவோ வீசினார். பிராவோவின் 2வது பந்தில் 2 ரன்கள் எடுத்து வாட்சன் 101 ரன்களைத் தொட்டார். அவர் 61 பந்துகளில் 101ரன்களை எடுத்தார்.

நடப்பு ஐபிஎல் 6வது தொடரில் வாட்சன் தான் முதல் முறையாக சதமடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஆனால் அடுத்த பந்திலேயே அவர் ஹசியால் கேட்ச் பிடித்து அவுட் ஆக்கப்பட்டார். 101 ரன்களுடன் வாட்சன் வெளியேறினார். களத்தில் இருந்த பின்னியுடன் ஹோட்ஜ் இணைந்தார். அப்போது ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்திருந்தது. பிராவோவின் 5வது பந்தை ஒரு இமாலய சிக்சருக்கு அனுப்பி வைத்தார் பின்னி. 18வது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்தது ராஜஸ்தான் அணி. ஒருவழியாக 20வது ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை எட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 186 ரன்கள் தேவை என்ற கடினமானஇலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஹசி அபாரம்- ஏமாற்றிய முரளி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜய், மைக் ஹசி களம் இறங்கினர். முதல் ஓவரை ராஜஸ்தானின் சண்டிலா வீசினார். இந்த ஓவரில் 4 ரன்களை மட்டுமே சென்னை அணியால் எடுக்க முடிந்தது.2வது ஓவரை சுக்லா வீசினார். சுக்லாவின் 3, 4வது பந்துகளை அடுத்தடுத்து பவுண்டரிக்கு அனுப்பி சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் மைக் ஹசி. 2வது ஓவர் முடிவில் சென்னை அணி 15 ரன்களை எட்டியது. 3வது ஓவரை சண்டிலா வீச முதல் பந்தை ஹசி சிக்சருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் சண்டிலாவின் 3வது பந்தை முரளி விஜய் அடிக்க அதை சண்டிலாவே காட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். 5 பந்துகளை எதிர்கொண்ட முரளி 3 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். அப்போது சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 22 ரன்களை எடுத்தது. ஹசியுடன் சுரேஷ் ரெய்னா இணைந்து கொண்டார். 3வது ஓவர் முடிவில் 24 ரன்களை சென்னை எடுத்தது. 5ஓவர் முடிவில் 45/1 4வது ஓவரை சுக்லா மீண்டும் வீச அவரது பந்தை வேட்டையாடினார் ஹசி. முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். சுக்லாவின் 3வது பந்தை ரெய்னா பவுண்டரிக்கு அடித்து விரட்டினார். ஹசியும் விடுவதாக இல்லை... சுக்லாவின் கடைசி பந்தை எதிர்கொண்ட அவர் மீண்டும் ஒரு பவுண்டரி தட்டினார். 14 பந்துகளை எதிர்கொண்ட ஹசி 29 ரன்களைக் குவித்தார். 5வது ஓவரை ஃபோள்க்னர் வீசினார். 5வது ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 45 ரன்களை எடுத்தது. 8 ஓவர் முடிவில் 70/1 6வது ஓவரை கூப்பர் வீசினார். அவரது முதல் பந்தில் ரெய்னா அதிரடியாக ஒரு சிக்சர் அனுப்ப சென்னை அணி 50 ரன்களைத் தாண்டியது. இந்த ஓவரிலும் ஹசியின் பவுண்டரி வேட்டை நீடித்தது. கூப்பரின் 4வது பந்தை எதிர்கொண்ட ஹசி அதை பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். 17 பந்துகளில்34 ரன்களை எட்டினார் ஹசி. 7வது ஓவரை மீண்டும் சண்டிலா வீசினார்.இந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே சென்னையால் எடுக்க முடிந்தது. 8வது ஓவரை சித்தார்த் திரிவேதி வீனார். சென்னை அணியின் ரன் குவிப்பு வேகம் சற்றே குறைந்தது போல் காணப்பட்டது. இதை நிர்வர்த்தி செய்யும் வகையில் திரிவேதியின் 5வது பந்தை ரெய்னா பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். 8 ஓவர் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 70 ரன்களை எட்டியது. 72 பந்துகளில்116 ரன்களை எடுத்தாக வேண்டிய நிலையில் இருந்தது சென்னை அணி. ஹசி 23 பந்துகளில் 37 ரன்களைக் குவித்திருந்தார். 10 ஓவர் முடிவில் 92/1 9வது ஓவரை வாட்சன் வீசினார். அவரது முதல் பந்தில் ஒரு சிக்சரை அடித்தார் ரெய்னா. இந்த சிக்சர் மூலம் 21 பந்தில் 34 ரன்களை எட்டினார் ரெய்னா. 9வது ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 81 ரன்களை எட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். 66 பந்துகளில் 105 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது சென்னை அணி. 10வது ஓவரை ராஜஸ்தான் அணியின் திரிவேதி மீண்டும் வீசினார். அவரது 3வது பந்தை எதிர்கொண்ட ஹசி அதனை பவுண்டரிக்கு தட்டிவிட்டார். இந்த ரன் மூலம் 27 பந்துகளில் 44 ரன்களை எட்டினார் ஹசி. 10வது ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 92 ரன்களை எட்டியது சென்னை அணி. அரைசதம் எட்டிய ஹசி-ரெய்னா 11வது ஓவரை கூப்பர் மீண்டும் வீச அவரது முதல் பந்தை ரெய்னா பதம் பார்த்து பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். ஹசியும் ரெய்னாவும் இந்நிலையில் 28 பந்துகளை சந்தித்து தலா 45 ரன்களை எட்டியிருந்தனர். கூப்பரின் 4வது பந்தை பவுண்டரிக்கு தட்டிய ஹசி அடுத்த பந்தில் அரை சதத்தை எட்டினார். 31 பந்துகளில் அவர் அரை சதத்தைத் தொட்டார்.இந்த ஓவரின் முடிவில் 103 ரன்களை சென்னை அணி எடுத்தது. ஹசி- ரெய்னா ஜோடி 51 பந்துகளை சந்தித்து 81 ரன்களைக் குவித்து அபாரத்தை வெளிப்படுத்தினர். 12வது ஓவரை பின்னி வீசினார். இவரது 4வது பந்தை ரெய்னா எதிர்கொண்டு அடித்த போது ரெய்னாவும் அரை சதத்தை எட்டினார். 33 பந்துகளில் ரெய்னா அரை சதமடித்தார். இந்த ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 109 ரன்களை தொட்டது சென்னை அணி. 48 பந்துகளில் 77 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது சென்னை. ரெய்னா அவுட் 13வது ஓவரை ஃபோள்க்னர் வீச அவரது 4வது பந்தில் ரெய்னா எல்பிடபிள்யூவில் அவுட் ஆனார். 35 பந்துகளில் 51 ரன்களை ரெய்னா அடித்தார். இதில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர் அடங்கும். அப்போது சென்னை அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 112 ரன்களாக இருந்தது. களத்தில் நின்ற
ஹசியுடன் கேப்டன் டோணி இணைந்தார்.13வது ஓவரின் முடிவில் 114 ரன்களை எட்டியது சென்னை அணி. இந்த ஓவரில் 5 ரன்களை மட்டுமே கொடுத்து சென்னை அணியின் முக்கிய விக்கெட்டான ரெய்னா வீழ்த்தினார் ஃபோள்க்னர். 14வது ஓவரை பின்னி வீசினார். பின்னியின் 4வது பந்தையும் 5வது பந்தையும் பவுண்டரிகளுக்கு அனுப்பி சென்னை ரசிகர்களை பரவசப்படுத்தினார் ஹசி. இந்த ஓவரின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை எடுத்தது. 36 பந்தில் 58 ரன்களை எடுக்க வேண்டிய நிலையில் 15வது ஓவரை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது. இந்த ஓவரை திரிவேதி வீசினார். திரிவேதியின் 3வது பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டார் ஹசி. அவர் 44 பந்துகளில் 73 ரன்களை எட்டினார். இந்த ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களை எடுத்தது சென்னை அணி. 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருக்கிறது சென்னை அணி. ஒரு ஓவரில் 3 பவுண்டரிகள் 16வது ஓவரை கூப்பர் வீசினார். கூப்பரின் 3வது பந்தையும் 5,6வது பந்துகளையும்ஹசி பதம் பார்த்து பவுண்டரிகளுக்கு தட்டிவிட்டார். இதனால் சென்னை அணிக்கான நெருக்கடி சற்றே குறைந்து வெற்றியை நோக்கி பயணித்தது. 16 வது ஓவரின் முடிவில் செ ன்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை எடுத்தது சென்னை அணி. 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பதால் சென்னையின் வெற்றி உறுதியானது.

17வது ஓவரில் ஃபோள்க்னர். வீசிய பந்தில் ஹசி ரன் அவுட் ஆனார். அவர் 51 பந்துகளில் 88 ரன்களை எடுத்திருந்தார். இதில் 13 பவுண்டர்கள் 1 சிக்சர் அடங்கும். சென்னை அணியின் 2 முக்கிய விக்கெட்டுகளான ரெய்னா, ஹசி ஆகியோரை ஃபோள்க்னர். வீழ்த்தியிருக்கிறார். களத்தில் நின்ற கேப்டன் டோணியுடன் ஜடேஜா கை கோர்த்தார். ஆனால் ஃபோள்க்னர். வீசிய முதல் பந்திலேயே ஜடேஜா அவுட் ஆனார். சென்னை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலையில் டோணியுடன் பிராவோ கை கோர்த்தார். 17வது ஓவர் முடிவில் சென்னை அணி 157 ரன்களை எடுத்திருந்தது. விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில் 18 பந்துகளில் 29 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது சென்னை அணி. இந்த அளவு ஸ்கோரை சேஸ் செய்துவந்த சென்னை அணி எப்படியும் இலக்கை எட்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. 18வது ஓவரை கூப்பர் வீசினார். அவரது 4வது பந்தில் கேப்டன் டோணி பவுண்டரி அடித்தார். இதனால் 14 பந்துகளில் 20 ரன்கள் என்ற டென்சன் நிலைக்கு கொண்டு வந்தார் டோணி. 5வது பந்தில் 2 ரன்களை எடுக்க 13 பந்தில் 18 ரன்கள் என்ற பரபரப்பான கட்டம் உருவானது. டோணியும் விடுவதாக இல்லை.. முடிந்த அளவு ரன்களை எடுத்து விடுவது என்பதாக அவரது ஆட்டம் இருந்தது. இந்த ஓவரின் முடிவில் 12 பந்துகளில் 17 ரன்கள் தேவை.. பரபரப்பான கடைசி 2ஓவர்கள் 19வது ஓவரை ஆபத்தான பவுலரான ஃபோள்க்னரே வீசினார். முதல் பந்தில் ரன் எடுக்க முடியாமல் போனாலும் அடுத்த பந்தில் 2 ரன்களை தட்டினார். இந்த ஓவரின் முடிவில் கடைசி பந்தை டோணி அடிக்க பவுண்டரி லைனில் அது கேட்ச் ஆனது. 16 பந்துகளை எதிர்கொண்ட டோணி 21 ரன்களை எடுத்தார். சென்னை அணியின் ஹசி, ரெய்னா, டோணி ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளுமே ஃபோள்க்னர் ஓவரில்தான் அவுட் ஆயினர். 19வது ஓவரின் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்திருந்தது. கடைசி ஒரு ஓவரில் 11 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலை..

சேஸிங்கின் உச்சகட்டம்!

களத்தில் இருந்த பிராவோவுடன் மோரிஸ் இணைந்தார். இந்த ஓவரை வாட்சன் வீசினார். முதல் பந்தில் 1 ரன் அடிக்கப்பட்டது. 2வது பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. 3வது பந்தில் அற்புதமான ஒரு சிக்ரை தூக்கி அடித்தார் பிராவோ. இதனால் சென்னைக்கு இருந்த நெருக்கடி சற்றே தணிந்தது. 3 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டுவந்தார் பிராவோ. 4 வது பந்தில் 2 ரன்களை எடுத்து 184 ரன்களைத் தொட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.5வது பந்தில் பிராவோ 2 ரன்களை எடுக்க சென்னை அணி வெற்றி இலக்கான 186 ஐ எட்டியது. 19.5வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு186 ரன்களை எடுத்து சென்னை அணி அபார வெற்றியை பெற்றது. பிராவோ 9 பந்துகளில்15 ரன்களுடனும் மோரிஸ் 1 பந்தில் 1 ரன்னுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.


தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by balakarthik on Tue Apr 23, 2013 11:25 am

பா(ல்)லாஜியின் பால் பை பால் கமென்ட்ரி பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி on Tue Apr 23, 2013 11:26 am

@balakarthik wrote:பா(ல்)லாஜியின் பால் பை பால் கமென்ட்ரி பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி ஓமன் கிளை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by ராஜா on Tue Apr 23, 2013 6:34 pm

Gayle புயல் தாக்கியதில் புனே வாரியர் அணி சின்னாபின்னமாகி விட்டது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by யினியவன் on Tue Apr 23, 2013 6:38 pm

மெக்டவல்சின் ஆட்டத்தில் போதையில் கவிழ்ந்தது புனே சூப்பருங்கavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by balakarthik on Tue Apr 23, 2013 6:40 pm

@ராஜா wrote:Gayle புயல் தாக்கியதில் புனே வாரியர் அணி சின்னாபின்னமாகி விட்டது

ஆமாம் ஆமாம் 66 பந்தில் 175 - இந்தாளு ரன் மிஷின்த்தான் போலிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum