ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

ஆனந்த விகடன் 24.01.18
 Meeran

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 மூர்த்தி

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

தெரிஞ்சதும் தெரியாததும்
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
மூர்த்தி
 
heezulia
 

Admins Online

தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

View previous topic View next topic Go down

தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

Post by Powenraj on Mon Apr 01, 2013 12:19 pm

ஒரு மாறுதலுக்கு இவ்வார தொல்லை காட்சியில் விஜய் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமே! அடுத்தடுத்த வாரங்களில் வெவ்வேறு டிவி களுக்கு இப்படி ஸ்பெஷல் எடிஷன் வராது கவலை வேண்டாம் புன்னகை
*****
விஜய் டிவியின் பெரும் பலம்: அதன் கேம் ஷோக்கள் தான். குறிப்பாக வார இறுதியில் வரும் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகள் பெரிதும் ரசிக்கப்படுகிறது.ஒவ்வொரு வகையிலும், ஒவ்வொருஸ்லாட்டிலும் தான் தான் நம்பர் 1- ஆக இருக்க வேண்டுமென நினைக்கும் சன்னை கூட வார விடுமுறையில்விஜய் டிவி முந்தி விடும் என்றே தோன்றுகிறது.
-
கேம் ஷோக்கள் அதன் பலம் என்றால் - பயணம், சிறுத்தை, வாகை சூடவா, சாட்டை என 10 படங்களை மட்டுமே மாற்றி மாற்றி ஒவ்வொரு வாரமும் போட்டு ஜல்லியடிப்பது சூர மொக்கை. இந்த விஷயத்தில் ஏன் தான் விஜய் டிவி இப்படி இருக்கோ தெரியலை !
************ நீயா நானாவில் கௌரவ கொலைகள்
பிரகாஷ் ராஜ் கௌரவ கொலைகள் குறித்த தனது புதிய படமான கௌரவம் படத்தின் பாடல் வெளியீட்டை நீயா நானாவில் நடத்த விரும்பி அணுக, அதே தலைப்பில் ஒரு விவாதமும் வைத்து பாடல் வெளியீடு நடந்தது.
-
சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்து உறவினர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட பலரும் வந்திருந்து தங்கள் கதையை கூறினர். குறிப்பாக ஒரு பெண் சாதி விட்டு திருமணம் செய்ததால் தனது கணவர் கொல்லப்பட்டதாகவும், தான் இப்போது குழந்தையுடன் சாப்பாட்டுக்கே வழியின்றி தவிப்பதாகவும் சொன்னது பரிதாபம்.
-
நிகழ்ச்சியில் பேசியர் ஒருவர் சொன்ன தகவல் சிந்திக்கத்தக்கது.
" கி.மு 2000 முதல் சாதி இருந்துள்ளது. ஆனால் தீண்டாமை கி. பி 500 -ல் தான் வந்தது. அதாவது முதலில் சாதி இருந்தது. ஆனால் தீண்டாமை இல்லை. சாதி வந்து 2500 ஆண்டுகளுக்கு பின் தான் தீண்டாமை வந்தது"
" Scheduled Caste என்று சொல்ல எவரும் தயங்க தேவையில்லை; பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லும் போது தான் மேலே, கீழே என ஏற்ற தாழ்வு வருகிறது. Scheduled Bank என்று சொல்வது போல தான் Scheduled Caste.. அரசு இவர்களை குறிப்பிட்ட பட்டியலில் வைத்துள்ளது என்பதை மட்டுமே குறிக்கிறது "
நிற்க. கௌரவம் பட டிரைலர் பெரிதாய் கவரவில்லை. கிராமத்தில் ஒரு கௌரவ கொலை - அதை எதிர்த்து போராடும் கல்லூரி மாணவர்கள் என போகிறது கதை..
-
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி
எடுத்தவுடன் ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்: சூர்யா இருந்த போது இருந்த ஜோஷ் இப்போது சுத்தமாக இல்லை. பிரகாஷ் ராஜ் என்னதான் கலந்து கொள்வோரை எப்போதும்" எக்சலண்ட் " " சூப்பர்ப்" என்கிற சூபர்லேடிவ்களை மட்டுமே வைத்து பாராட்டினாலும் நிகழ்ச்சி நிச்சயம் செல்ப் எடுக்கலை.
http://www3.taazastat.com/movieimage/size_400_290/news-964757832-prakash_raj.jpg
எளிமையாய் சொல்லுணும் என்றால் முன்பெல்லாம் சூர்யா வரும்போது நிகழ்ச்சி தவற விடாமல் பார்க்கணும் என தோன்றும். இப்போது அநேகமாய் பார்ப்பதே இல்லை.
விஜய் டிவி விழித்து கொள்ளாவிட்டால் இதன் TRP அதள பாதாளத்தில் தான் இருக்கும்.
ஒரு லட்சம் வென்ற ஜோடிகள்
ஜேம்ஸ் வசந்தன் நடத்தும் " ஒரு லட்சம் பரிசு போட்டியில் இதுவரை மூவர் தான் - கடைசி லெவல் வரை வென்று ஒரு லட்சம் பரிசு வேன்றுள்ளனராம். மறு ஒளிபரப்பில் அப்படி ஜெயித்த 3 க்ரூப்பையும் காண்பித்தனர். வேணு அரவிந்த்- அபிஷேக், வடிவுக்கரசி- சின்னத்திரை இயக்குனர் ஆனந்த், இரு டிவி சீரியல் நடிகைகள்.
http://www.tamilkey.com/wp-content/uploads/2011/12/Untitled13.jpg
1 லட்சம் ஜெயித்த டிவி சீரியல் நடிகைகள்

கடைசி நிலைகளில் சற்று கடினமான வார்த்தைகள் இருந்தாலும், நிதானமாய் பொறுமையாய் ஆடி ஜெயித்தது ஆச்சரியமாய் இருந்தது.
-
சில நேரம் எதிரணிக்கு மிக கஷ்டமான வார்த்தைகளும் மற்றொரு அணிக்கு சற்று இலகுவான வார்த்தைகளும் வருவதை கவனித்து சரி செய்தால் நன்றாயிருக்கும் !
-
அசத்தும் காம்பியர்கள்
விஜய் டிவியில் மட்டும் எப்படி தான் நல்ல நல்ல காம்பியர் பிடிக்கிறார்களோதெரியவில்லை. சற்று கவனித்து பாருங்கள். மற்ற தமிழ் டிவி காம்பியர்கள் எத்ததனை பேரின் முகமோ, பெயரோ நினைவுக்கு வருகிறது? ஆனால் விஜய் டிவிகாம்பியர்கள் சிலர் சினிமா நட்சத்திர ரேஞ்சுக்கு புகழோடு உலா வருகிறார்கள்.
சந்தானம், சிவகார்த்திகேயன், இன்றிய மா. கா. பா ஆனந்த என பலரும் இங்கு காமெடி அல்லது காம்பியரிங் செய்து பின் பெரிய திரைக்குள் நுழைந்தவர்கள் தான்.
இன்னொரு பக்கம் கோபிநாத் தினம் ஒரு மகளிர் ஷோவும் வார கடைசியில் ரெண்டு ஷோவும் அலுக்காமல் நடத்துகிறார். ஒரு வார்த்தைஒரு லட்சம் நடத்தும் ஜேம்ஸ்வசந்தனாகட்டும், தமிழ் பட்டி மன்றம் நடத்தும் இளைஞர் ஆகட்டும் பெரும்பாலானோர் ரசிக்க வைக்கிறார்கள்
இப்படி சரியான காம்பியர் கிடைப்பது அதிர்ஷ்டமா அல்லது இங்கு யாரோ சரியான ஆள் தேர்வு குழுவில் இருக்கிறாரா தெரியலை !
-
சீரியல் பக்கம் சரவணன் மீனாட்சி
படிக்குற வேலை, சமையல் வேலை எல்லாம் முடிஞ்சு 9 மணிக்குடிவி போடுவோம். அப்படி தான் சூப்பர் சிங்கர் ரொம்ப காலம் பார்த்தது. இப்போ சூப்பர் சிங்கரை ஒன்பதரைக்கு தள்ளிட்டு ஒன்பது மணிக்கு "சரவணன் மீனாட்சி " சீரியல் வருது. மனைவியும் மகளும் பார்ப்பதால் கருமமே என கொஞ்சம் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கு. சரவணன் & மீனாட்சி - தங்கள் பெற்றோரைவிட்டுட்டு அதே ஊரில் தனிக்குடித்தனம் போறாங்க. அந்த கதை தான் சில வாரமா ஓடிகிட்டு இருக்கு.
குயிலி மாதிரி தளுக்கி மினுக்கி எந்த பெண் பேசுறாரோ ? ஓவர் ஆக்டிங்கின் இலக்கணம் இந்த சீரியலில் வரும் குயிலி தான். முடியல !
இந்த மீனாட்சி பொண்ணு இருக்கே.. ரொம்ப நாளா சொல்ல வேணாம்னு பார்த்தேன். சரி இன்னிக்கு சொல்லிடலாம்..
வீட்டில் இருக்கும்போதும் சரி, புருஷனோட தனி அறையில் இருக்கும்போதும் சரி இடுப்பில் துளியூண்டு கூட தெரியாம முழுக்க மறைச்சு புடவை கட்டுது. வீட்டில் கூட - அதுவும் கணவனுடன் தனியறையில் இருக்கும்போதுமா? இது அநியாயத்துக்கு லாஜிக் மீறலா இருக்கு யுவர் ஆனர் !
-
சின்னத்திரையில் இருந்தாலும் அம்மணி அநியாய ஆர்த்தடாக்ஸ் போல..
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

Post by Powenraj on Mon Apr 01, 2013 12:27 pm

புதிய நிகழ்ச்சி - ஜோடி சீசன் - 4
விஜய் டிவி யில் மீண்டும் ஜோடி நம்பர் சீசன் - 4 துவக்கி இருக்கிறார்கள். இப்போதைக்கு சனிக்கிழமை இரவு 7.30 முதல் எட்டரை வரை ஒளிபரப்பாக உள்ளது. ரம்யா கிருஷ்ணன் சரோஜா தேவி ஆகியோர் நடுவர்களாக இருக்க,ஏழெட்டு புது ஜோடிகள் அறிமுக ஆகிறார்கள். மீண்டும் திவ்ய தர்ஷினி தொகுப்பாளினி ஆக வருகிறார்
ரசிக்கும் படி யாரேனும் இருந்தால் அவர் ஆடும்போது எட்டி பார்க்கலாம் மற்றபடி நடுவர்கள் கருத்து சொல்லுபோது சானல் மாற்றிவிடுவது நல்லது.
-
சூப்பர் சிங்கர் பாண்டிச்சேரி விஜயம்
சூப்பர் சிங்கரில் இப்போ டாப் 30 க்கு வந்துள்ளனர். பாடகர்கள் அனைவரையும் வேனில் போட்டு பாண்டிச்சேரி கூட்டி சென்று, எலிமினேஷன் இன்றி ஜாலியாய் பாடவைத்து ஒரு வாரம் ஓட்டினர்.
இந்த டாப் 30-ல் சென்ற சீசனில் இறுதி நிலை வரை வந்த சவுந்தர்யா (சவுண்டு சவுந்தர்யா என்பார் DD ) இருக்கிறார். அவர் அளவுக்குமற்றவர்கள் நிச்சயம் பாடலை.சவுந்தர்யா பைனல் வரை வரவும், பரிசு வெல்லவும் கூட வாய்ப்பு உண்டு
ஆள் ஆளுக்கு தேவனை திட்டுவது அவர் காதில் விழுந்துச்சோ என்னவோ.. இவ்வாரம் பாடியவர்களை அவர் அதிகம் திட்டலை.
இனி ஒவ்வொரு எலிமிநேஷனாக ஆரம்பிப்பார்கள். பத்தரை வரை செல்வதால் தொடர்ந்து பார்க்க முடிவதில்லை
அது இது எது
இவ்வாரம் அது இது ஏதுவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா- டீம் வந்திருந்தது. விமல்,சிவகார்த்திகேயன் மற்றும் பிந்து மாதவி.
http://i1.ytimg.com/vi/hkto2YdhguA/0.jpg
சிவாவுக்கு இது வித்யாச ஹோம் கம்மிங். பல வருடங்கள் இந்நிகழ்ச்சி நடத்தியவர் இன்று அதில் ஒரு போட்டியாளராக... மா. கா. பா - சிவா இருப்பதால் அடக்கி வாசித்து அவரை நிறையவே பேச விட்டார்.
பிந்து மாதவி முடியெல்லாம் வெட்டி கொண்டு பையன் மாதிரிஇருந்தார் அதை வைத்து அவரை நன்றாக ஓட்டி தள்ளி விட்டார் சிவா. விமல் சிவாவுக்கு நேர் எதிர் போலும். மனுஷன் சுத்தமா பேசவே மாட்டேங்கிறார். 3 ரவுண்டிலும் ஜெயித்தது பிந்து மாதவி மட்டுமே ! இவ்வாரம் சிரிச்சா போச்சு ரவுண்டு செம கலக்கல். முடிஞ்சா இணையத்தில் தேடி கண்டு களியுங்கள் !
**********
வீடு திரும்பல் வலைப்பூ
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

Post by balakarthik on Mon Apr 01, 2013 12:42 pm

எல்லாம் சரி பவுன் ராஜ்

இந்த புதிய சீரியலை விட்டுடிங்களே ரொம்ப ஜோரா இருக்கு அதுலையும் இந்த குட்டிக்காகவே மருஒலிபரப்பையும் சேர்த்து பாக்குறேன் ஜாலி ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

Post by அருண் on Mon Apr 01, 2013 12:53 pm

புதுசு புதுசாக நிகழ்ச்சி கொடுப்பது விஜய் டிவி மட்டும் தான்.! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

Post by balakarthik on Mon Apr 01, 2013 12:56 pm

@அருண் wrote:புதுசு புதுசாக நிகழ்ச்சி கொடுப்பது விஜய் டிவி மட்டும் தான்.! சூப்பருங்க
அருண் இவுங்களும் ஆங்கில சேனலில் இருந்துத்தான் சுடுறாங்க புதுசா யோசிக்கிறது இல்லே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

Post by அருண் on Mon Apr 01, 2013 1:08 pm

@balakarthik wrote:
@அருண் wrote:புதுசு புதுசாக நிகழ்ச்சி கொடுப்பது விஜய் டிவி மட்டும் தான்.! சூப்பருங்க
அருண் இவுங்களும் ஆங்கில சேனலில் இருந்துத்தான் சுடுறாங்க புதுசா யோசிக்கிறது இல்லே

இவங்களும் பெரிய அப்பாடக்கர் தானா? சிரி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

Post by ராஜா on Mon Apr 01, 2013 1:10 pm

பகிர்வுக்கு நன்றி powenraj
இப்படி சரியான காம்பியர் கிடைப்பது அதிர்ஷ்டமா அல்லது இங்கு யாரோ சரியான ஆள் தேர்வு குழுவில் இருக்கிறாரா தெரியலை !
உண்மை உண்மை.

விஜய்டிவி நிகழ்சிகளின் தரம் மற்ற தொல்லை!! காட்சிகளின் நிகழ்சிகளை பின்தள்ளிவிட்டு என்றோ முதல் இடத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து வருகிறது.


கட்டுரையில் சொல்லியிருப்பது போல திரைப்படங்களை பார்ப்பதற்கு நேரம் கிடையாது அதனால் அதை பற்றி தெரியாது. அப்புறம் இந்த "சரவணன் மீனாட்சி " இது ஓடும்போது மட்டும் மற்ற தொலைகாட்சிகளை பார்த்துகொண்டிருப்பேன் புன்னகை


ஆபீஸ் (பாலாகார்த்திக் சொல்வதையும் சூப்பருங்க சேர்த்து) மிக நன்றாக போயி கொண்டிருக்கிறது , வாழ்த்துகள்


நீவெஒகோ அநேகமாக அடுத்த கட்ட படபிடிப்பு நடக்குமென நிச்சயமில்லை.
சூர்யா இருந்தபோது , நம் வீட்டு வரவேற்பறையில் உட்கார்ந்து நிகழ்சிகளை அவர் நடத்துவது போல அத்தனை இயல்பாக ரசிக்கும்படி இருக்கும். ஆனால் பிரகாஷ்ராஜ் (உண்மையில் பெரிய திரையில் மிகச்சிறந்த நடிகர் நன்றி ) செயற்கையாக பேசுவது போல உள்ளது.உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

Post by balakarthik on Mon Apr 01, 2013 1:10 pm

@அருண் wrote:இவங்களும் பெரிய அப்பாடக்கர் தானா? சிரி
ஆமாம் ஆமாம் என்ன ஒன்னு இவுங்க காப்பி அடிக்கிறது இவுங்களின் ஆங்கில சேனலிலிருந்து மட்டுமே அது ஓன்னுத்தான் வித்யாசம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

Post by balakarthik on Mon Apr 01, 2013 1:14 pm

இது நீங்களும் வெல்லலாம் ஒருகோடி ஆங்கில நிகழ்ச்சிஇது ஹிந்தியில்இது தமிழில்


இதேபோல் தான் ஜோடி no 1, சூப்பர் சிங்கர் நீயா நானா போன்ற நிகழ்சிகளும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

Post by யினியவன் on Mon Apr 01, 2013 1:15 pm

அநேகமாக அவங்க நிகழ்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது - இந்த படம் போடறப்ப தான் அடுத்த சேனலுக்கு போக முடியுது - அதுனால போட்ட படத்தையே போடட்டும்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

Post by Muthumohamed on Mon Apr 01, 2013 6:18 pm

@balakarthik wrote:
@அருண் wrote:புதுசு புதுசாக நிகழ்ச்சி கொடுப்பது விஜய் டிவி மட்டும் தான்.! சூப்பருங்க
அருண் இவுங்களும் ஆங்கில சேனலில் இருந்துத்தான் சுடுறாங்க புதுசா யோசிக்கிறது இல்லே

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

Post by mbalasaravanan on Mon Apr 01, 2013 6:24 pm

சூப்பருங்க
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

Post by அருண் on Mon Apr 01, 2013 6:51 pm

@ராஜா wrote:
சூர்யா இருந்தபோது , நம் வீட்டு வரவேற்பறையில் உட்கார்ந்து நிகழ்சிகளை அவர் நடத்துவது போல அத்தனை இயல்பாக ரசிக்கும்படி இருக்கும். ஆனால் பிரகாஷ்ராஜ் (உண்மையில் பெரிய திரையில் மிகச்சிறந்த நடிகர் நன்றி ) செயற்கையாக பேசுவது போல உள்ளது.

சரியான கணிப்பு ராஜா அண்ணா! சூர்யா! நடத்தும் போது நிகழ்ச்சி நன்றாக இருந்தது.
பிரகாஷ் ராஜ் நன்றாகவே நடத்தினாலும் முன் போல் பார்க்க தோன்ற வில்லை.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum