ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 ayyasamy ram

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 ayyasamy ram

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 M.Jagadeesan

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 M.Jagadeesan

தமிழர்
 danadjeane

ஜென்
 danadjeane

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருப்புகழ் - பாடல் 1307

View previous topic View next topic Go down

திருப்புகழ் - பாடல் 1307

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Thu Apr 04, 2013 11:38 pmஅகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்

மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.


அகரமுமாகி அதிபனுமாகி அதிகமுமாகி அகமாகி
இகரமுமாகி எவைகளுமாகி இனிமையுமாகி வருவோனேஅகரமும் இகரமும் ஆனவன் முருகன் ஆதியும் அந்தமும் ஆனவன் முருகனே என்கிறது திருப்புகழ் !!

ஆனால் கடவுளோ ஆதியும் அந்தமுமில்லாதவர் துவக்கம் அல்லது முடிவு என்கிற வரையரைகளுக்கு அப்பாற்பட்டவர் !!

படைக்கப்பட்டவைகள் மட்டுமே முதலும் முடிவும் என்ற பரிமாணம் உள்ளவை !!

திருப்புகழ் பொய் சொல்லாதது !

ஏனென்றால் முருகன் அருணகிரியாரின் நாவிலே வேல் கொண்டு எழுதி பாடு என பணித்ததால் அருளில் நிறம்பி பாடப்பட்டவை அதன் முழு அர்த்தம் பாடிய அருணகிரிக்கும் புரிந்திருக்கும் என சொல்லமுடியாது !!

பின் ஏன் முருகன் துவக்கமும் முடிவுமானவன் என்று திருப்புகழ் சொல்லுகிறது ?

இப்பாடலை தொடர்ந்து வாசித்தால் மட்டுமே இந்த புதிரை அவிழ்க்கமுடியும் !!

எவைகளுமாகி -- அதாவது படைக்கப்பட்ட எவைகளுமானவன் என்கிறது !

அதாவது முருகனுக்குள் அனைத்தும் படைக்கப்பட்டுள்ளது

அகமாகி -- அதாவது மனிதர்களின் அகமாக உள்ளே உறைபவன்

ஆகா ஆகா இதைத்தானே நாங்கள் சொல்லிக்கொண்டுள்ளோம் ஞானசூன்ய பக்தர்களே

கடவுள் எனக்குள்ளேதான் உள்ளார் எதற்காக வெளியே தேடி அலைகிறீர்கள் என அத்வைதத்தை அரைகுறையாக புரிந்துகொண்டவர்களும் நாலு சித்தர் பாடல்களை கையிலே வைத்துக்கொண்டு ஆன்மீகவாதிகள் போல காட்டிக்கொள்ளும் நவீனநாத்திகவாதிகளும் கைகொட்டுகிறார்கள்

அதிகமுமாகி -- முருகன் எல்லாமுமானான் அகமாக அவைகளில் உறைகிறான் அப்புறமும் மீந்துபோய் மிச்சம் வெளியேயும் நிற்கிறான் இதுதான் விசிஷ்டாத்வைதம் !! இறைவன் அகத்திலும் புறத்திலும் இருக்கிறான் ! சகலத்திலும் தனித்தும் இருக்கிறான் !

அதிபனுமாகி -- அதாவது படைக்கப்பட்டவைகளுக்கு ஆட்சியாளனும் அவனே

ஆனால் மனிதர்கள் சுயமடைந்து ஆட்சியாளனை விட்டு ஒதுங்கிக்கொள்ள முடியும் அசுர ஆவிகள் மனித உணர்ச்சிகளை சிந்தனையை தூண்டி மனிதர்களை கடவுளோடு ஒப்புறவாக இல்லாதபடி பிரித்துவிடுகின்றன !

அவ்வாறு தன்முனைப்பு கொள்பவர்களால் பூமியில் சண்டைசச்சரவுகள் குழப்பங்கள் உண்டாகி வாழ்வு துக்கமயமாகிறது

அப்போது யார் சற்குருவாகிய முருகனை சரணடைந்து அவனது ஆழுமைக்கு ஒப்புக்கொடுக்கிறார்களோ அவர்களுக்கு முருகனின் ஞானமாகிய வேல் ஒத்தாசை செய்து பக்தி பேரானந்தத்தை அருளுகிறது

அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்

உருவாக்குபவனும் நீயே ! படைப்புகளை கண்கானிக்கிறவனும் நீயே ! காக்கிறவனும் நீயே !

இரு நிலமீதில் எளியனும் வாழ எனதுமுன்னோடி வரவேணும்

மனித ஆத்துமா பிறவியெடுத்துள்ள நிலையில் ஏதோ ஒரு பெயர் சொந்தபந்தம் ஜாதி மதம் மொழி நாடு கவுரவம் அந்தஸ்து என அடையாளத்துடன் வாழ்கிறது அது நிரந்தரம் என்பதாகவும் நம்பிக்கொண்டுள்ளது ! குழு உணர்வு அது வாழ்வதற்கு அவசியமும் கூட ஆனால் இறந்து மறுபிறவி எடுக்கும்போது ஏறுக்குமாறாக பிறந்து தன்னை வேறொரு குழுவாக நினைத்துக்கொள்ளும் போன பிறவியில் தூக்கிவைத்து ஆடிய குழுவுக்கு பதிலாக வெறுத்த குழுவிலேயே கூட கடவுள் ஒரு ஆத்துமாவை பிறக்கவைத்து விடலாம் ! முந்தைய பிறவியின் பாவம் புண்ணியம் ஞானம் மட்டுமே புதுப்பிறவியை வாட்டுமே தவிற முந்தைய பிறவி ஞாபகங்கள் அதற்கு தடைசெய்யப்பட்டு விடுகின்றன !

ஆனால் ஒரு ஆத்துமா இறந்தபிறகும் புதுப்பிறவி கிடைக்கும்வரை அது பூமியின் பாதளத்தில் செயல்பட முடியாமல் ஓய்ந்திருக்கும் அப்போது இறந்த பிறவி ஞாபகங்கள் கடமைகள் உறவுகளை நினைத்து தவிக்கும்

அப்படி யாரேனும் இருந்தால் அவர்களை ஆறுதல் படுத்தவும் அவர்களுக்காக கடவுளை வேண்டவும் திவசம் கொடுப்பதை வழக்கமாக்கினார்கள்

பூமியிலும் புதுபிறவியெடுக்குமுன் பாதாளத்திலும் நான் இருக்கும்போது சற்குருவே நான் நிம்மதியடைய அருள்புரிவீராக என வேண்டுவது நமக்கு அவசியம்

வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே


பக்தி செய்வதற்கும் தியானம் பழகுவதற்கும் நல்வழியில் நடப்பதற்கும் ஏதேனும் சில தகுதி விரதங்கள் அவசியம் என்ற பிரமை அல்லது தாழ்வுமனப்பாண்மை பல நல்லவர்களைக்கூட கடவுளின் பக்கம் வரவிடாமல் தடுத்துவிடுகிறது

ஆனால் சற்குரு முருகன் மூலமாக கடவுளை அண்டுவோர் நாகரீகமே தெரியாத காட்டுவாசியாகவும் தனக்குத்தெரிந்த எதையாவது கடவுளுக்கென்று செய்தாலே போதுமானது ஆறு துர்க்குணங்களும் சீரமைக்கப்படுவதும் வாழ்வில் பக்திப்பேரானந்தம் உண்டாவதும் முருகளால் உறுதி செய்யப்படும் !!

மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே

நற்குணங்கள் அதிகரித்து தெய்வீக இயல்புகள் ஒரு மனிதனிடத்து பெருகும்போது அவன் அசுரர்களுக்கு இடம்கொடாதவனாக அவர்களோடு முறன்பாடுகள் அதிகரிக்கிறது ! ஆன்மீகத்தில் சிறிது வளர்ந்தாலே அசுராஅவிகள் ஒரு மனிதனுக்கு தடங்கல்கள் பிரச்சினைகள் கொண்டுவருகின்றன ! அவனது பலகீனங்களை குறிபார்த்து அடித்து அவனை வீழ்த்துவதில் கவணமாக உள்ளன ! அவைகளோடு முறன்பட்டு தடுமாறி வீழ்ந்து எழுந்து ஒருசாதகன் வளருவதை வலாரிகளுடன் மறுவுதல் என்கிறது திருப்புகழ் ! அவ்வாறு மறுவிமறுவி அவைகளை வெல்லும் பக்குவமும் பயிற்சியும் அடைந்த சாதகன் அசுரர்களை அடக்குகிறவனாக பூமியில் மாறுகிறான் ! அத்தகையோர் மூலமாக பூமியில் பரலோக ராஜ்ஜியம் விரிவு படுத்தப்படுகிறது ! அன்பு சந்தோசம் சமாதானம் பலருக்கும் பெருக்கொடுத்து ஓடுகிறது ! அத்தகைய உபகுருக்கள் மூலமாக பல சாதகர்கள் மேன்மையடையும் வழி -- குரு பார்க்க கோடி பாவம் தீருகின்ற வழி சற்குருவாகிய முருகனாலேயே உபகுருக்கள் உண்டாகின்றனர் ! மகபதியாகி மகிழ்களிகூறும் வடிவினர்களான உபகுருக்கள் மூலமாக முருகனே வெளிப்படுகிறார் !!

திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.

பழமுதிர் சோலை மலையின் மீது வீற்றிருக்கும் முருகனே !! நீயே திருமால் !! திருமால் ஆன பெருமாள் !!

தொல்காப்பியம் தான் இப்போது கிடைக்கும் நூல்களில் மிக மூத்த -- பழமையான நூல் ! சங்ககாலம் என்ற ஆதி நாட்களின் நூல் இது ! தமிழுக்கு இலக்கணம் இந்த நூல் மூலமாகவே வரையறுக்கப்பட்டுள்ளது !இந்த நூலில் தமிழர்களின் வாழ்வுநெறி பண்பாடு வழிபாடு குறித்து பல குறிப்புகள் உள்ளன !!

அதில் பழந்தமிழ் மக்கள் வணங்கிய இரு பெரும் இயற்கைத் தெய்வங்கள் = மாயோன், சேயோன்!
* மாயோன் = பெருமாள் = முல்லைக் கடவுள்
* சேயோன் = முருகன் = குறிஞ்சிக் கடவுள் மட்டுமே என காணப்படுகிறது ! சிவனைப்பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை

மாயோன் மேய காடுறை உலகமும்,
சேயோன் மேய மைவரை உலகமும்,
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்,
வருணன் மேய பெருமணல் உலகமும்,
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே! --- தொல்காப்பியம் !!


ஆதியிலே தமிழர்கள் அருப கடவுளை வழிபட்டவர்களே ! அதை இயற்கை வழிபாடு என திரித்து சொல்லுகிறார்கள் ! அதன் பின்பு மாயோன் என்ற நாராயணன் மூலமாகவும் சேயோன் என்ற முருகன் மூலமாகவும் அதாவது குருவாக வைத்து கடவுளை வழிபட்டனர் ! தொல்காப்பியத்தில் உள்ள ஆதாரம் இங்கு சுட்டப்பட்டுள்ளது ! அப்போது சிவன் வழிபாடு இருக்கவில்லை ! ஆனால் சிவன்தான் சற்குரு மூலமாக மட்டுமே கடவுளை அடையமுடியும் என உலகிற்கு சொன்னார் எனப்தே குருகீதையாகும் !!

சிவன் வழிகாட்டியபடி சற்குருவாக நாராயணனை அல்லது முருகனை வைத்து அரூப கடவுளை வழிபடும் வழக்கம் மட்டுமே ஆதி தமிழர்களிடம் இருந்திருக்கிறது !!

அரூபமான கடவுளிடமிருந்து வந்த முதல் வெளிப்பாடு அவரது சத்தம் ! ஆகுக என்ற அவரது வார்த்தை முதல் வெளிப்பாடு !
நரல் என்றால் சத்தம்
நரல்+ ஆய +நன்= நாராயணன்


அதனால்தான் சங்கை கையில் போட்டார்கள் ஆக்கமும் அழிவும் அவருக்கள்ளிருந்து தோன்றி அவருக்குள் மறைவதால் சக்கரத்தை போட்டார்கள் 1 நாராயணனுக்கு ஒரு உருவத்தை கற்பிக்கும்முன்பு அவர் மாயோன் ! சகலமுமாகி விண்ணிலே மாயமாக இருந்து தாங்குபவர் !

அவர் அவ்வப்போது பூமிக்கு அவதாரமாக இறங்கி வருவார் என்பதே சேயோன் அல்லது மனிதமாக மாறி வருவதால் அவர் முருகன் !

இந்த முருகனுக்கும் ஆதியிலே உருவம் இல்லை ! ஆறுபடை வீடுகளிலும் வேல் மட்டுமே கருவறையில் செதுக்கப்பட்டுள்ளது !பின்னாளில் உருவத்தை கொண்டு ஒட்டிக்கொண்டார்கள் ! சமீபத்தில் மாமல்லபுரம் புலிக்குகை அருகில் பூமியில் புதையுண்டிருந்த ஒரு கோவில் வெளிப்பட்டது ! அது கிரிஸ்துவுக்கும் முன்பு 400 வருடங்களுக்கு முற்பட்டது என கண்டறிந்திருக்கிறார்கள் ! அந்தக்கோவிலில் கருவறையில் வேல் மட்டுமே உள்ளது அது ஒரு பழமையான முருகன் கோவில் 1 உருவம் இல்லை !

ஆக கடவுளால் நாராயணன் படைக்கப்பட்டார் ! அவருக்குள் சகலமும் உற்பத்தியாகி அவருக்குள்ளேயே அழிந்துகொண்டும் உள்ளது ! அவர் பூமியில் மனிதனாக அவதரித்து வந்தால் அவர் முருகன் !

ஆகவே ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளால் படைக்கப்பட்ட நாராயணன் அல்லது முருகனும் ஆதி உள்ளவர்களே ! கடவுள் நாடினால் அந்தமும் உண்டாகலாம் ! ஆகவே திருப்புகழும் முருகன் ஆதியும் அந்தமும் உள்ளவன் என்கிறது !!


ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி !!
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum