ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மனைவியை மதித்து நட!

View previous topic View next topic Go down

மனைவியை மதித்து நட!

Post by சிவா on Wed Apr 17, 2013 2:29 amஒருவனுடைய வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். அது எத்தனை உண்மை என்பதை உலக வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.தோல்வியிலும் துவள்வதும் வெற்றியில் துள்ளிக் குதிப்பதும் நம்மவர்களுக்குக் கைவந்த கலை.ரூபாய் நோட்டுக்கள் புத்தம்புதிதாகப் பளபளவென்று பர்ஸ் நிறையப் பாக்கெட்டில் இருக்க வேண்டும் சிலருக்கு. இல்லாவிட்டால் ஈஸிச்சேரில் படுத்துக் கொண்டு ஆகாசத்தை அளக்க ஆரம்பித்து விடுவார்கள்...

ஏதாவதொரு கிரகத்தை ஃப்ளாட் போட்டு விற்க முடியுமா என்று!மனைவி எதுவும் கேட்கக் கூடாது... பிள்ளைகள் எதுவும் பேசக் கூடாது... ஊசி விழுந்தால் கூட உசுப்பி விடும் அவரது கோபத்தை. எரிந்து எரிந்து விழுவார். மனிதனின் நிலைமை புரியாமல் ஆடுகிறீர்கள் என்று இவர் சாமியாடாதக் குறையாக ஆடித் தீர்த்து விடுவார். குடும்பமே வெலவெலத்துப் போகும். இந்த நிலைமைக்கு யார் காரணம்? இவரல்லவா! நலமைக்கு மீறி செலவு செய்தால் இந்த நிலைமைதானே... நிலை தடுமாறும் நிலைதானே எல்லோருக்கும்?சரி விடுங்கள். மேற்கொண்டு பார்ப்போம்.

குறைந்த ஊதியம். குமாஸ்தா வேலை. அதுவும் திடீரென்று ஒரு நாள் பறிபோனது. கைகளைப் பிசைந்தார் அவர். இக்கட்டில் யாரும் உதவ முன் வரவில்லை. மனம் சோர்ந்தார். கைப் பிடித்த மனைவியோ கைத்தாங்கலாய் நின்றாள். ஆறுதல் சொன்னாள். அடுத்த ஒரு வழியும் கூறினாள் மீண்டு எழ.“போகட்டும் விடுங்கள். பேப்பரும் பேனாவும் எடுங்கள். நாவல் ஒன்று எழுதுங்கள். உங்களால் முடியும் எல்லாம். நாளை உங்களை இந்த நாடே போற்றும். நம்பிக்கையோடு எழுந்து நில்லுங்கள். வெற்றி நிச்சயம்!’ என்றாள்.

சோர்விலிருந்து அவரால் உடனே மீள முடியவில்லை.“சரி... அதுவரை வயிற்றில் ஈரத் துணியையா போட்டுக் கொள்ள முடியும்... சாப்பாட்டிற்கு என்ன வழி...?’ என்றார்.“கவலை வேண்டாம். நீங்கள் இதுவரை கொடுத்ததில் கொஞ்சம் சிக்கனம் பிடித்துச் சேமித்து வைத்திருக்கிறேன். ஆறுமாதங்களுக்கு அது தாராளமாகக் காணும்...’ என்றாள் அவள்.அவரது உற்சாகம் கரைபுரண்டு எழுந்தது. எழுதினார். எழுதினார்... எழுதி எழுதித் தள்ளினார். உலகமே அவரை உற்றுநோக்க ஆரம்பித்தது. அகில உலகமும் பாராட்டும்படியான நாவல் ஒன்று உருவானது. அந்த நாவல் இதுதான். “ஸகார்லட் லெட்டர்’. இந்த நாவலுக்கும் பாராட்டுக்கும் உரிமையாளர் நத்தானியல் ஹாவ்தார்ன்.

இவரது மனைவி மட்டும் அவரை அன்று உற்சாகப்படுத்தவில்லை என்றால் இத்தனைப் புகழுக்குரிய ஒருவரை உலகம் கண்டிருக்குமா சொல்லுங்கள்!“நீ மனைவியை மதித்தால் உன்னை உலகம் மதிக்கும்’ என்பது இதிலிருந்து நமக்குத் தெரிகிறதுதானே!

இன்னொரு எழுத்தாளர். அவர் என்னுடைய நண்பர் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! அவருக்கு ஒரு முறை அவர் எழுதிய ஒரு நூலுக்காகப் பரிசும் பாராட்டும் நிறையக் கிடைத்தது. பிரபல பத்திரிகையிலிருந்து நிருபர் ஒருவர் பேட்டி எடுக்க வந்தார்.“இந்த அளவுக்கு எழுத்துத் துறையில் நீங்கள் பெற்ற மகத்தான உங்கள் வெற்றிக்கு நீங்கள் யாரைக் காரணமென்று கைகாட்டுகிறீர்கள்?’“நிச்சயமாக என் மனைவிதான்!

ஓ! அப்படியா! அவர்கள் உங்களை அடிக்கடி எழுதத் தூண்டுவார்களா?’
“இல்லை...’
“எழுதியதை எடுத்துப் பார்த்துப் படித்து ரசிப்பார்களா?’
“இல்லை.’
“உடன் அமர்ந்து உதவி செய்வார்களா?’
“இல்லை’
“நகல் எடுத்து உதவுவார்களா?’
“இல்லை...’
“நீங்கள் எழுதும்போது இரவு நேரங்களில் உங்களுக்காகக் கண் விழித்துக் காத்திருப்பார்களா?’
“இல்லை...’
“இல்லை இல்லை என்று சொல்கிறீர்களே! அவர்கள் எதுவுமே செய்வதில்லையா?’
“இல்லவே இல்லை’
“பிறகெப்படி உங்கள் வெற்றிக்கு அவர்கள் காரணமாக முடியும்’

“எழுதி எழுதி இதுவரை என்னத்தைக் கிழித்தீர்கள் என்று அவள் என்னை ஏளனம் செய்யாமல் இருந்ததே எனது வெற்றிக்குக் காரணம். உற்சாகமூட்டாவிட்டாலும் உற்சாகம் குறையும் படி குதர்க்கமாக எதுவும் பேசாமல் இருந்ததே எனது இந்த வெற்றிக்குக் காரணம்!’“சதா இதென்ன வேலை’யென்று புலம்பாமல் இருந்ததே எனது வெற்றிக்கு காரணம்!

எழுத்தளர் கூற கூற வாயடைத்து நின்றார் வந்த பத்திரிகை நிருபர்.

பெண்களால் கணவன்மார்களுக்கு இப்படிக்கூட வெற்றி தேடித்தர முடியும் என்று தெரிகிறதல்லவா! மனைவியர் மூலம் கிடைத்த வெற்றிகளைத் தவிர மனைவியராக ஆக்கிக் கொண்டதன் மூலமும் சில வெற்றிகள் நிகழ்ந்திருக்கின்றன. இது ஒரு சாதாரண மனிதரிலிருந்து ஒரு மாமன்னர் வரைக்கும் சாத்தியப்பட்ட ஒன்றுதான்!

உதாரணத்திற்கு ஏதாவது சொல்லுங்கள் என்கிறீர்களா? சொல்லாமல் என்ன! இதோ:

மாமன்னர் அக்பரின் ஆட்சிகாலம் அது. மேவார் பகுதிவாழ் மக்களாலும் ராஜ புத்திரர்களாலும் எப்போது பார்த்தாலும் நாட்டில் தொல்லைகளும் துயரங்களும் நிகழ்ந்து கொண்டே இருந்தன.அவர்களைப் போரின் மூலம் அடக்கி ஆளவோ கைது செய்து சிறையில் அடைக்கவோ மாமன்னர் விரும்பவில்லை. மாறாக நிலைமையைச் சமாளிக்க வித்தியாசமான வழி ஒன்றைச் சிந்தித்தார். கத்தியின்றி இரத்தமின்றி வெற்றி பெற யோசித்தார். யோசனை ஒன்று தோன்றியது. அவரது ராஜதந்திரம் நன்றாக வேலை செய்தது. மேவார் பகுதியிலிருந்து ஒரு பெண்ணை மணம் புரிந்தார். அந்தப் பகுதி கலவரம் கரைந்து காணாமல் போனது. அடுத்து ராஜபுத்திர பெண்ணொருத்தியைத் தனது மனைவியாகக் கரம் பிடித்தார். அப்பகுதியிலிருந்து எழுந்து மூண்ட குழப்பமும் கூச்சலும் அடங்கி அமிழ்ந்தன. அக்பரின் ஆட்சி அதற்கடுத்து அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் நடந்தது.

இப்படிப் பெண்களை வைத்துக் கணவர்மார்களுக்குக் கிடைத்த வெற்றிகளைப் பட்டியலிட்டு எனது மனைவிக்கு நான் கூறி கொண்டிருந்தேன்.“எனக்கும் வரலாறு தெரியும். நானும் அக்பரைப் படித்திருக்கிறேன்’ என்று அவள் பெருமைப்பட்டுக் கொண்டாள். அப்போது பார்த்து தபால்காரர் ஒருவர் ஒரு தபாலைக் கொண்ட வந்து கொடுத்து விட்டுப் போனார். அதைப் படித்த எனது மனைவியில் பளிச்சென்ற முகம் கருமேகங்களால் மூடப்பட்ட நிலவுபோல துயரம் கண்டது. என்ன என்று கேட்டேன். அவளுடைய அண்ணன் எழுதியிருக்கிறான். தன் வீட்டுக்கும் தனது சித்தப்பன் வீட்டிற்கும் அடிக்கடித் தகராறு வெட்டுக்குத்து - அடி உதை என்று இருப்பதாக.

“இதற்கொரு முடிவு நீங்கள் சொல்லக்கூடாதா? நீங்கள் அந்த வீட்டு மருமகன் இல்லையா?’ என்றாள் என் மனைவி.

“இல்லாமல் என்ன, இருக்கிறது! சொல்லட்டுமா’ என்று கேட்க.“சொல்லுங்கள்’ என்றாள்.

“உனது சித்தப்பாவுக்கு கல்யாண வயதில் ஒரு பெண் இருக்கிறாள் இல்லையா!’ “இருக்கிறாள் அதனாலென்ன?’ “நான் அவளை மணந்து கொண்டால்...’

“போதும் போதும் நிறுத்துங்கள்... நன்றாகச் சொன்னீர்கள்.. உங்களுக்கு வேறெப்படி தோன்றுமாம்...’ முகத்தில் கடுகு பொரிந்தது என்னவளுக்கு.என்ன! நான் சொன்னதில் ஏதாவது தவறிருக்கிறது என்று நீங்களே சொல்லுங்கள்! ப்ளீஸ்...

கலவை சண்முகம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவியை மதித்து நட!

Post by krishnaamma on Wed Apr 17, 2013 1:38 pm

//இப்படிப் பெண்களை வைத்துக் கணவர்மார்களுக்குக் கிடைத்த வெற்றிகளைப் பட்டியலிட்டு எனது மனைவிக்கு நான் கூறி கொண்டிருந்தேன்.“எனக்கும் வரலாறு தெரியும். நானும் அக்பரைப் படித்திருக்கிறேன்’ என்று அவள் பெருமைப்பட்டுக் கொண்டாள். அப்போது பார்த்து தபால்காரர் ஒருவர் ஒரு தபாலைக் கொண்ட வந்து கொடுத்து விட்டுப் போனார். அதைப் படித்த எனது மனைவியில் பளிச்சென்ற முகம் கருமேகங்களால் மூடப்பட்ட நிலவுபோல துயரம் கண்டது. என்ன என்று கேட்டேன். அவளுடைய அண்ணன் எழுதியிருக்கிறான். தன் வீட்டுக்கும் தனது சித்தப்பன் வீட்டிற்கும் அடிக்கடித் தகராறு வெட்டுக்குத்து - அடி உதை என்று இருப்பதாக.

“இதற்கொரு முடிவு நீங்கள் சொல்லக்கூடாதா? நீங்கள் அந்த வீட்டு மருமகன் இல்லையா?’ என்றாள் என் மனைவி.

“இல்லாமல் என்ன, இருக்கிறது! சொல்லட்டுமா’ என்று கேட்க.“சொல்லுங்கள்’ என்றாள்.

“உனது சித்தப்பாவுக்கு கல்யாண வயதில் ஒரு பெண் இருக்கிறாள் இல்லையா!’ “இருக்கிறாள் அதனாலென்ன?’ “நான் அவளை மணந்து கொண்டால்...’

“போதும் போதும் நிறுத்துங்கள்... நன்றாகச் சொன்னீர்கள்.. உங்களுக்கு வேறெப்படி தோன்றுமாம்...’ முகத்தில் கடுகு பொரிந்தது என்னவளுக்கு.என்ன! நான் சொன்னதில் ஏதாவது தவறிருக்கிறது என்று நீங்களே சொல்லுங்கள்! ப்ளீஸ்...//


பேஷ்! பேஷ் !! இது ரொம்ப நல்லா இருக்கேபுன்னகை பக்கத்து இலைக்கு பாயசம் என்பார்கள் அது தானா இது சிவா?????????//ஹா ஹா ஹா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மனைவியை மதித்து நட!

Post by balakarthik on Wed Apr 17, 2013 1:47 pm

நல்ல சிந்தனை நடந்திருந்தா அவர் குடும்ப சண்டையும் தீர்ந்திருக்கும் நான் கூட இனி அக்பர் வழி பின்பற்றலாமுனு நினைக்கிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மனைவியை மதித்து நட!

Post by உதயசுதா on Wed Apr 17, 2013 1:56 pm

//. அப்போது பார்த்து தபால்காரர் ஒருவர் ஒரு தபாலைக் கொண்ட வந்து கொடுத்து விட்டுப் போனார். அதைப் படித்த எனது மனைவியில் பளிச்சென்ற முகம் கருமேகங்களால் மூடப்பட்ட நிலவுபோல துயரம் கண்டது. என்ன என்று கேட்டேன். அவளுடைய அண்ணன் எழுதியிருக்கிறான். தன் வீட்டுக்கும் தனது சித்தப்பன் வீட்டிற்கும் அடிக்கடித் தகராறு வெட்டுக்குத்து - அடி உதை என்று இருப்பதாக.

“இதற்கொரு முடிவு நீங்கள் சொல்லக்கூடாதா? நீங்கள் அந்த வீட்டு மருமகன் இல்லையா?’ என்றாள் என் மனைவி.

“இல்லாமல் என்ன, இருக்கிறது! சொல்லட்டுமா’ என்று கேட்க.“சொல்லுங்கள்’ என்றாள்.

“உனது சித்தப்பாவுக்கு கல்யாண வயதில் ஒரு பெண் இருக்கிறாள் இல்லையா!’ “இருக்கிறாள் அதனாலென்ன?’ “நான் அவளை மணந்து கொண்டால்...’//

அந்த சித்தப்பா வீட்டுக்கும் இவருக்கும் அடிதடி, வெட்டு குத்து நடக்கும்.அவ்வளவுதான்.

நல்ல கதை தான். ஆனால் அக்பர் செய்த செயல் தான் சரி இல்லை.
பிரச்சினை நடக்கும் ஒவ்வொரு பகுதில இருந்தும் ஒரு பெண்ணை கட்டினால் எத்தனை பெண்ணை கட்டுவது.

மனைவிய மதிச்சு நடக்காட்டியும் பரவாயில்லை, மிதிக்காம இருந்தா போதும்


Last edited by உதயசுதா on Wed Apr 17, 2013 2:04 pm; edited 1 time in total
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மனைவியை மதித்து நட!

Post by balakarthik on Wed Apr 17, 2013 2:00 pm

@உதயசுதா wrote:பிரச்சினை நடக்கும் ஒவ்வொரு பகுதில இருந்தும் ஒரு பெண்ணை கட்டினால் எத்தனை பெண்ணை கட்டுவது.
ஒருவேளை பிறேச்சனைக்கு காரணமான பெண்களை அங்கேருந்து கல்யாணம் பண்ணி கூட்டிகிட்டு வந்துட்டா பிரெச்சனை தீர்ந்துடுமுனு நினைச்சிருப்பாரோ அப்படின்னு நம்ம இனியவன் அண்ணன் கேக்குறாரு அக்கா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மனைவியை மதித்து நட!

Post by உதயசுதா on Wed Apr 17, 2013 2:11 pm

அழுகை
@balakarthik wrote:
@உதயசுதா wrote:பிரச்சினை நடக்கும் ஒவ்வொரு பகுதில இருந்தும் ஒரு பெண்ணை கட்டினால் எத்தனை பெண்ணை கட்டுவது.
ஒருவேளை பிறேச்சனைக்கு காரணமான பெண்களை அங்கேருந்து கல்யாணம் பண்ணி கூட்டிகிட்டு வந்துட்டா பிரெச்சனை தீர்ந்துடுமுனு நினைச்சிருப்பாரோ அப்படின்னு நம்ம இனியவன் அண்ணன் கேக்குறாரு அக்கா
அதானே எங்கடா குதர்க்கமா கேள்வி கேக்குற பாலா இன்னும் கேக்கலையேன்னு நினைச்சுட்டு இருந்தேன். கேட்டுட்ட. ஆனா எனக்கு இதுக்கு பதில் சொல்ல தெரியலையே
அழுகை அழுகை
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மனைவியை மதித்து நட!

Post by balakarthik on Wed Apr 17, 2013 2:16 pm

@உதயசுதா wrote:அதானே எங்கடா குதர்க்கமா கேள்வி கேக்குற பாலா இன்னும் கேக்கலையேன்னு நினைச்சுட்டு இருந்தேன். கேட்டுட்ட. ஆனா எனக்கு இதுக்கு பதில் சொல்ல தெரியலையே அழுகை அழுகை
இப்பவாவுது புரியுதா கேக்குறது ஈசி பதில் சொல்லுரதுத்தான் ரொம்ப ரொம்ப கஷ்டம் இனிமேலாவது மாமாவை ஏன் எதுக்கு எப்படின்னு கேள்வி கேட்டு கொடையாம இருங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மனைவியை மதித்து நட!

Post by mbalasaravanan on Wed Apr 17, 2013 5:31 pm

கடவுளே சிப்பு வருது
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: மனைவியை மதித்து நட!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum