ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

முதுமொழிக் காஞ்சி!

View previous topic View next topic Go down

முதுமொழிக் காஞ்சி!

Post by சாமி on Thu Apr 18, 2013 10:42 pm

சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து, அல்ல பத்து, இல்லைப் பத்து, பொய்ப் பத்து, எளிய பத்து, நல்கூர்ந்த பத்து, தண்டாப் பத்து ஆகிய இப்பத்துகள் அனைத்தும் முதுமொழிக் காஞ்சி என்ற நீதி நூலினுள் உள்ளன. இந்நூலை இயற்றியவர் கூடலூர் கிழார். இதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு நீதியும் பழமொழிகளைப் போல அமைந்திருப்பதால் இது முதுமொழிக் காஞ்சி எனப்பட்டது. முதுமொழி என்றால் பழமொழி. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. முதல் பத்தாகிய சிறந்த பத்தில் உள்ள பத்து அடிகளில் சிறந்தன்று என்ற ஒரு சொல் பயின்று வந்ததால் இது சிறந்த பத்தாயிற்று. அப் பத்தைக் காண்போம்!

முதல் பத்து - சிறந்த பத்து

1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை!

கடல் சூழ்ந்த இவ்வுலகத்து மக்கள் அனைவருக்கும் கல்வி கற்றலைவிட ஒழுக்கமுடையவராக இருப்பதே சிறந்ததாகும்.

2. காதலின் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்!
பிறர்க்கு அன்பு காட்டுவதிலும் செயல்களால் அவர் போற்றும்படி உயர்ந்த மதிப்பினைப் பெறுதல்
வேண்டும். அதுவே, அன்பை விட மிக்கச் சிறப்புடையதாகும்.

3. மேதையின் சிறந்தன்று கற்றது மறவாமை!
ஒருவர் அறிவைப் பெற்றிருப்பதைவிட தான் கற்ற கல்வியை மறவாமல் இருப்பதே மிகுந்த சிறப்பை உடையது.

4. வண்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை!
வண்மை என்பது வளம் பொருந்திய செல்வம். வாய்மை என்பது உண்மை, மெய்மை. பலவகைத் தீமைகளை விளைவிக்கக்கூடிய செல்வத்தை ஒருவர் பெற்றிருப்பதைவிட, நன்மையைச் செய்யும் வாய்மை உடையவராக இருப்பதே மிகுந்த சிறப்பை உடையது.

5. இளமையில் சிறந்தன்று மெய்ப்பிணி இன்மை!
ஒருவனுக்கு இளமை இன்பத்தைவிட நோயில்லாத வாழ்க்கையினால் உண்டாகின்ற இன்பமே மிகச்சிறந்த இன்பமாகும்.

6. நலன்உடை மையின் நாணுச் சிறந்தன்று!
நலன் என்பது அழகு; நாணு என்பது நாணம். ஒருவர் அழகுடையவராக இருப்பதைக் காட்டிலும் நாணம் உடையவராக இருப்பதே மிகவும் சிறப்புடையது.

7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று!
குலன் என்பது குடிப்பிறப்பு; கற்பு என்பது கல்வி. ஒருவன் உயர்குடியில் பிறந்தவனாக இருப்பதைவிட, கல்வி உடையவனாக இருப்பதே மிகவும் சிறப்புடையது.

8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று!
ஒன்றைக் கற்றறிவதைவிடக் கற்றறிந்த பெரியோரை அணுகி அவருக்கு வழிபாடு செய்வதே மிகவும்
சிறந்ததாகும்.

9. செற்றாரைச் செறுத்தலின் தன்செய்கை சிறந்தன்று!
செற்றார் என்பவர் பகைவர்; செறுத்தல் என்பது அப்பகைவரை அழித்தல். அரசர்க்குத் தம்முடைய பகைவர்களை அழித்தலைவிட தங்களுடைய நிலையை மேலும் உயர்த்திக் கொள்வதே மிக்க சிறப்பைத் தரும்.

10. முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று!
முன் என்பது முற்காலம் (இளமைக் காலம்); பின் என்பது பிற்காலம் (முதுமைக் காலம்). செல்வமானது இளமையில் பெருகிப் பின்பு குறைவதைவிட, முதுமையில், முன்பு உள்ள நிலையில் குறையாமல் இருப்பதே மிக்க சிறப்புடையது.

(தொடரும்)
(நன்றி-தினமணி)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: முதுமொழிக் காஞ்சி!

Post by Kuzhali on Fri Apr 19, 2013 11:14 am

முதுமொழி காஞ்சி என்று ஒரு நூல் இருப்பதாக பள்ளி காலத்தில் படித்திருகின்றேன்.
அதில் சொல்ல பட்ட விடயங்கள் இது தான் என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன்.

தமிழ் என்றல் அமிழ்து என்பது எவ்வளவு சரி................ நடனம்
avatar
Kuzhali
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 87
மதிப்பீடுகள் : 17

View user profile

Back to top Go down

Re: முதுமொழிக் காஞ்சி!

Post by சாமி on Wed Apr 24, 2013 11:43 pm

முதுமொழிக் காஞ்சி இரண்டாவது - அறிவுப்பத்து

1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப!

ஒலிக்கும் கடல் சூழ்ந்த நிலவுலகில் வாழும் மக்கள் அவர் பிறந்த குலத்தால் அறியப்படுவது இல்லை. அவர், பிற உயிர்களிடத்தில் காட்டும் இரக்க குணத்தினாலேயே அறியப்படுவர்.

2. ஈரம் உடைமை ஈகையின் அறிப!
ஒருவர் இரக்கம் உடையவர் என்பதை, பிறர்க்கு அவர் கொடுக்கும் கொடையினால் அறியலாம்.

3. சோரா நல்நட்பு உதவியின் அறிப!
ஒருவர் செய்யும் உதவியைக் கொண்டு அவர்தம் தளரா நட்பை அறியலாம்.

4. கற்றது உடைமை காட்சியின் அறிப!
ஒருவர் கற்றுள்ளமையை அவருடைய அறிவின் மிகுதியால் - அறிவுப் புலப்பாட்டால் அறியலாம்.

5. ஏற்றம் உடைமை எதிர்கோளின் அறிப!
ஒரு செயலை நன்றாக எண்ணி, செம்மையாகச் செய்து முடிக்கும் சிறப்பை உடையவரை, அதற்கு முன் அவர் கைக்கொண்டு முடித்த செயல்களினால் அறியலாம்.

6. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப!
ஒருவர் தம்மைத்தாமே செருக்குடன் உயர்த்திப் பேசும் தற்பெருமைகளை அளவாகக் கொண்டு அவர் பிறந்த குடியின் சிறுமையை அறியலாம்.

7. சூத்திரம் செய்தலின் கள்வன் ஆதல் அறிப!
ஒருவரின் கள்ளத்தனமான செயல்களைக் கொண்டு அவர் முழுத் திருடர் என்பதை அறியலாம்.

8. சொல்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப!
ஒருவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றாத நாநயம் இன்மையைக் கண்டு அவர் எல்லாவற்றிலும் சோர்ந்து தளர்பவர் என்பதை அறியலாம்.

9. அறிவுசோர்வு உடைமையின் பிறிதுசோர்வும் அறிப!
ஒருவர் அறிவில் குறையுடையவராக இருப்பதைக் கொண்டு, அவர் பிற எல்லாவற்றிலும் குறை உடையவராகவே இருப்பர் என்பதை அறியலாம்.

10. சீருடை ஆண்மை செய்கையின் அறிப!
ஒருவர் மிகச்சிறந்த ஆளுமைத் தன்மை உடையவரா? என்பதை அவருடைய செயல்களால் அறியலாம்.

அடுத்த பத்து... அடுத்த வாரம்...
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: முதுமொழிக் காஞ்சி!

Post by சாமி on Mon May 06, 2013 12:55 pm

முதுமொழிக் காஞ்சி மூன்றாவது - பழியாப்பத்து

1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
யாப்பிலோரை இயல்பு குணம் பழியார்.

ஒலிக்கும் கடல் சூழ்ந்த உலகத்து மக்களுள் ஒரு செய்கையிலும் நிலையில்லாதவருடைய - கட்டுப்பாடு வகுத்துக்கொள்ளாதவருடைய குணங்களை ஒருவரும் பழியார்.

2. மீப்பி லோரை மீக்குணம் பழியார்.
மேன்மை குணம் இல்லாத கீழ்மக்களிடம் மேலோர்க்குரிய குணமும் செய்கையும் இல்லையே என்று எவரும் பழியார்.

3. பெருமை உடையதன் அருமை பழியார்.
ஒருவர் எவ்வளவு பெரிய செயல்களையும் செய்வதற்குத் தாம் மேற்கொள்ளும் அரிதாகிய முயற்சியினைப் பழித்தல் கூடாது.

4. அருமை உடையதன் பெருமை பழியார்.
ஒருவர் தான் எடுத்துக்கொண்ட அரிதாகிய செயல்களைச் செய்து முடிப்பதற்குரிய பெரிதாகிய முயற்சியை எவரும் பழித்தல் கூடாது.

5. நிறையச் செய்யாக் குறைவினை பழியார்.
எச்செயல்களையும் முழுமையாக - நிறைவாக செய்து முடிக்க முடியாதவரின் குறையைக் கண்டு எவரும் பழித்தல் கூடாது.

6. முறையி லரசர்நாட் டிருந்து பழியார்.
நீதியில்லாத கொடுங்கோல் அரசருடைய நாட்டில் வசிப்பவர் அக்கொடுங்கோன்மையைப் பழித்துரைக்க மாட்டார்.

7. செயத்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார்.
தமக்கு உதவி செய்யத்தக்க நல்ல நண்பர்கள் - சுற்றத்தார் இல்லையே என்று பிறரிடம் சொல்லிப் பழியார்.

8. அறியாத தேசத் தாசாரம் பழியார்.
ஒருவர் தான் முன்பின் அறியாத நாட்டுக்குச் சென்றால் அங்குள்ளோர் ஒழுகும் ஒழுக்கத்தைப் பழித்தல் கூடாது.

9. வறியோன் வள்ளியன் அன்மை பழியார்.
வறுமை உடையவனைக் கொடைத்தன்மை இல்லாதவன் என்று பழித்தல் கூடாது. பொருளுடையவன் பொருளில்லார்க்கு ஈயாமையை எல்லோரும் பழிப்பர்; பொருளில்லாதவன் ஈயாமையை ஒருவரும் பழியார்.

10. சிறியோர் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்.
சிறுமை குணம் உடைய சிறியோர்களின் கீழ்மை குணத்தை ஒழுக்கத்தில் சிறந்த பெரியவர்களும் பழியார்.

அடுத்த பத்து... அடுத்த வாரம்...
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: முதுமொழிக் காஞ்சி!

Post by சாமி on Mon May 06, 2013 12:58 pm

முதுமொழிக் காஞ்சி நான்காவது பத்து - துவ்வாப்பத்து

துவ்வாமை என்றால் நீங்காமை - நீங்கியொழியாது, விட்டொழியாது என்று பொருள்.

1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
பழியோர் செல்வம் வறுமையில் துவ்வாது.

ஒலிக்கும் கடல் சூழ்ந்த உலகத்து மக்கள் எல்லோருக்கும் பழியுடையோரின் செல்வம் அறமுடையோரின் வறுமையினின்றும் விட்டொழியாதது ஆகும்.

2. கழி தறுகண்மை பேடியின் துவ்வாது.
இடமும் காலமும் அறியாத ஒருவனுடைய வீரத்தன்மை, பேடியின் வீரத்தன்மையின்றும் நீங்காது. எனவே, ஒருவன் தன்னுடைய வீரத்தை இடமும் காலமும் அறிந்து பகைவரிடத்தில் பயன்படுத்த வேண்டும்.

3. நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது.
ஒருவன் வெட்கங்கெட்டு பிறரிடத்து உண்டு உயிர் வாழ்ந்தால் உண்டாகின்ற துன்பம், பசித்தலால் உண்டாகின்ற துன்பத்தின் வேறானதன்று. வெட்கமின்றி பிறரிடத்து உண்டு வாழ்வதைவிட பசியினால் இறந்தொழிவதே மேலானதாகும்.

4. பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது.
விருப்பத்தோடு கூடிய ஈகையே ஈகை. அன்றி, விருப்பமில்லாத ஈகை ஈயாமையின் வேறாகாது. பிறருடைய கட்டாயத்திற்காக, மனம் வருந்திச் செய்யும் ஈகை சிறப்பில்லாதது ஆகும்.

5. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது.
ஒருவன் ஒரு செயலைத் தொடங்குமுன் செய்யத்தக்க செயலா? செய்யத்தகாத செயலா? என்று பகுத்தறிந்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத்தகாத செயல்களைச் செய்வதாக மேற்கொண்டு தொடங்குவது மூடத்தன்மையின் வேறாகாது.

6. பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது.
விருப்பமில்லாவிட்டாலும் விருப்பமுடையவர் போல் செய்யும் உதவியானது நீசத்தன்மையின் நீங்கியொழியாது. மனப்பூர்வமாய்ச் செய்யாத உதவி கீழ்மையினும் கீழ்மையானது.

7. கொண்டு கண்மாறல் கொடுமையின் துவ்வாது.
ஒருவரை நண்பராகக் கொண்ட பின் அவரைக் கண்ணோட்டமின்றிப் புறக்கணித்தல் கூடாது. அவ்வாறு செய்பவர் அவருக்குக் கொடுமை செய்தவரன்றி வேறாகார்.

8. அறிவிலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது.
அறிவில்லாதவரைத் துணையாகக் கொண்டிருப்பது தனித்திருப்பதற்குச் சமானமேயன்றி வேறாகாது. ஆகவே, அறிவில்லாதவரைத் துணையாகக் கொள்வதைவிட தனிமையில் இருப்பதே சிறப்புடையதாகும்.

9. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது.
இழிவினை உடைய முதுமைப் பருவம் யாவராலும் சினந்து தள்ளப்படுவது ஆகும். அம்முதுமைப் பருவம் பிறருடைய சினத்திலிருந்து நீங்காது.

10. தானோர் இன்புறல் தனிமையின் துவ்வாது.
பிறருக்கு எதுவும் கொடுக்காமல் தான் மட்டுமே உண்டு இன்புற்று வாழும் வாழ்க்கை வறுமையுடைய வாழ்க்கையினின்று நீங்காதது.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: முதுமொழிக் காஞ்சி!

Post by சாமி on Sun May 26, 2013 7:57 am

முதுமொழிக் காஞ்சி ஐந்தாவது பத்து - அல்ல பத்து

1. ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் நீர்அறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள்.
ஒலிக்கும் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் உள்ளவர் அனைவரினுள்ளும் கணவன் இயல்பறிந்து நடக்காதவள் நல்ல மனைவியாக மாட்டாள்.

2. தாரம் மாணாதது வாழ்க்கை அன்று.
மனைவி மாண்புடையவளாக இல்லாத இல்வாழ்க்கை இல்வாழ்க்கை அன்று.

3. ஈரம் இல்லாதது கிளை நட்பு அன்று.
அன்பற்ற தொடர்பு சுற்றமும் நட்பும் அன்று.

4. சோராக் கையன் சொன்மலை அல்லன்.
மற்றவருக்குக் கொடுத்து உதவாத கையினை உடையவன் புகழுக்கு உரியவன் அல்லன். (சோரக் கையன் - என்ற பாடபேதமும் உண்டு).

5. நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன்.
ஒத்த மனத்தை உடைவனாக இல்லாதவன் நல்ல நண்பன் அல்லன்.

6. நேராமல் கற்றது கல்வி அன்று.
கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்கு ஒன்றும் உதவாமல் (குரு காணிக்கை தராமல்) படித்தது கல்வி ஆகாது.

7. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று.
தன் வாழ்வுக்காக அன்றி மற்றவர் வாழ்வுக்காக வருந்துதல் வருத்தமாகாது.

8. அறத்தாற்றின் ஈயாதது ஈகை அன்று.
அறநெறியில் அளிக்காதது ஈகை ஆகாது. அறநெறியில் ஈவதே சிறந்த ஈகையாகும்.

9. திறத்தாற்றின் நோலாதது நோன்பு அன்று.
ஒருவன் தன் திறனறிந்து அதற்கு ஏற்ற வகையில் செய்யாதது தவம் அன்று.

10. மறுபிறப்பு அறியாதது மூப்பு அன்று.
மறுபிறப்பு உண்டு என்பதை அறிந்து அதற்கேற்ப நடவாமல் (நற்செயல்களைச் செய்யாமல்) முதிர்ந்த முதுமை சிறந்த முதுமை ஆகாது.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: முதுமொழிக் காஞ்சி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum