ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

சின்னச் சின்ன சிந்தனைகள்
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 gayathri gopal

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 SK

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

கடவுள் தந்த இருமலர்கள்...
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அம்மா-மகள் நட்பு

View previous topic View next topic Go down

அம்மா-மகள் நட்பு

Post by Powenraj on Sun Apr 21, 2013 4:50 pm

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Apr/c2255c9d-cd71-4d8b-a055-9973e4cd12c5_S_secvpf.gif
* அம்மா-மகள் உறவு எப்படி இருக்க வேண்டும்?
* அது எப்படி இருந்தால் மகளுடைய எதிர்காலம் சிறக்கும்?
* அம்மாவின் எதிர்பார்ப்புகளை மகள் எப்படி பூர்த்தி செய்ய முடியும்?
இப்படி பல கேள்விகளுக்கும் விடை, தாய்-மகள் இருவரும் காட்டும் பாசத்தில், அந்த அன்யோன்யத்தில் தான் இருக்கிறது. தாயின் கடுமையான கண்டிப்பு தான் ஒரு பெண்ணை சரியாக வழிநடத்தும் என்பதில் ஒரு மிலிட்டரி கட்டுப்பாடு தான் எட்டிப் பார்க்கும். அனுபவரீதியாக பார்த்தால் அந்த கண்டிப்பு பெரும்பாலும் தோல்வியில் தான் முடிந்திருக்கும்.
ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கு பிறகு பெண்களுக்கு அறிவுரை பிடிக்காது. கண்டிப்பும் பிடிக்காது. பின் எப்படித்தான் வழி நடத்துவது? தாயானவள் தன் மகளிடம் காட்டும் உன்னத நட்பின் மூலமாகத் தான் இதைசாதிக்க முடியும். தாய்-மகளின் உறவு சிநேகிதி அந்தஸ்தை அடையும்போது கண்டிப்பான அறிவுரை கூட மகளால் நல்ல ஆலோசனையாக எடுத்துக் கொள்ளப்பட்டு விடும்.
'வயசுப் பெண்ணை வீட்டில் வைத்திருப்பது மடியில் நெருப்பை கட்டிக்கொண்டிருப்பது போல'என்ற உதாரணத்தை இன்றைக்கும் கிராமங்களில்கேட்க முடியும். மடி சுமந்த பிள்ளை எப்போது உங்கள் கைமீறியது? எதனால் மீறியது? யோசித்துப் பார்த்தால் நீங்கள் எப்போது கண்டிப்பு என்ற அஸ்திரத்தை அளவுக்கு மீறி பிரயோகிக்க ஆரம்பித்தீர்களோ, அப்போது முதல் தான் அந்த கெட்ட ஆட்டம் ஆரம்பித்திருக்கும்.
எப்போதும் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு தொட்டதற்கெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருப்பது. தேவையற்ற சந்தேகங்களை மனதில் ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் போகும் இடமெல்லாம் தொடர்வது இதெல்லாம் உங்கள் பெண்ணின் மனதில் உங்களை தரம் தாழ்த்தி விடும். இதுவே தொடரும்போது ஒரு கட்டத்தில் இம்மாதிரியான வதந்தியை உண்மையாக்கினால்தான் என்ன என்கிற அளவுக்குக் கூட அவர்கள் போய்விடும் அபாயம் உண்டு.
கண்ணாடியில் முகம் பார்க்கிறீர்கள். சோர்வாக இருந்தால் கண்ணாடி உடனே காட்டிக் கொடுத்து விடும்.உடனே சிற்சில ஒப்பனைகள் மூலம் சோர்வை சரி செய்து விடலாம். ஆனால் உங்கள் மனக்கண்ணாடி தான் உங்கள் பெண். அதில் சந்தேகம் என்ற கல்லை எடுத்து தேவையில்லாமல் கீறல் விழுந்து போகும் காரியத்தை செய்து விடாதீர்கள்.
இதனால் உங்கள் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, நாளடைவில் பலவிதமான வியாதிகளுக்கு ஆட்பட்டு விடு வார்கள். பெண் குழந்தைகளைப் பற்றிய தேவையற்ற சிந்தனைகளை தூரம் தள்ளுங்கள். அவர்கள்எதிர்காலம் என்னாகும் என்ற பயத்தை அப்பு றப்படுத்துங்கள். நல்ல சிநேகிதியாக எப்போதும் அவர்களிடம் கலகலப்பாக மனம் விட்டுப் பேசுங்கள்.
நாளடைவில் அவர்களும் ஒரு நல்ல தோழியாக உங்களை நேசிக்க துவங்குவார்கள். இந்த நேசம் உங் களுக்குள் ஒரு நெருக்கமான பிணைப்பை உருவாக்கும். அந்த பிணைப்பு அவர்களை உங்களிடம் வெளிப்படையாக நடக்கத் தூண்டும். பிறகு அவர்களுடைய வாழ்க்கையில் ஒளிவு மறைவே இருக்காது. பின் அவர்களைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமும் நேராது.
உங்கள் வாழ்க்கையில் நடந்த ஏதேனும் ஒரு விஷயம் உங்களை வெகுவாக பாதித்திருந்தால் அதனை அவர்களிடம் மனம் விட்டு பேசலாம். அது அவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். அனுபவங்களே ஒருவருடைய அறிவை விசாலமாக்கும். இளையபருவத்தில் உங்களுக்கு எதிர்பாராமல் ஒரு கசப்பான அனுபவம் கிடைத்திருக்கலாம்.
நேர்ந்த அந்த பாதிப்பை மட்டும் தவிர்த்து, 'நல்லவேளை அந்த நேரத்தில் தெய்வாதீனமாக தப்ப முடிந்தது' என்பதாக சொல்லிஅவர்களை அலர்ட்டாக இருக்க செய்யலாம். இம்மாதிரியான ஆலோசனைகள் அவர்களுக்கு பிரச்சினைகளை சமாளிக்கும்மனப் பக்குவத்தைக் கொடுக்கும். ஒரேநாளில் மொத்த அனுபவங்களையும் அவர்களிடம் புகுத்த முயற்சிக்காதீர்கள்.
அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலைக்கு தக்க அனுபவங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது அவர்களுடைய நம்பிக்கை பலப்படும். பெண்கள் சில சமயம் மனதில் எதையாவது மறைத்து தனக்குத் தானே தீர்வு தேடிக் கொள்ள விரும்புவார்கள். அந்த நேரத்தில் முறையான பகிர்தல் இருந்தால் பிரச்சினைகளை எளிமையாக்கிக் கொள்ளலாம்.
உதாரணத்துக்கு உங்கள் பெண் பள்ளிக்கோ கல்லூரிக்கோ போகும் நேரத்தில் டென்ஷனை ஏற்படுத்துகிற அளவுக்கு ஒரு இளைஞன் ஒருதலை ராகத்துடன் தொடரலாம். ஆனால் அதை பெற்றோர் எப்படிஎடுத்துக் கொள்வார்களோ என்ற எண்ணத்தில் சில பெண்கள் அதை பெற்றோரிடம் சொல்லாமல் தவிர்க்கலாம். தாய், மகள் நட்பு என்பது எப்போதும் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பைத் தருவது.
ஒரு பெண் வீட்டுக்குள் எப்படி இருக்கிறாள் என்பது எளிதில் தெரிந்துவிடும். ஆனால் வெளியில் போய் என்ன செய்கிறாள், யார் யாருடன் பழகுகிறாள், எங்கெங்கே செல்கிறாள் என்று அவளுடைய செயல்பாடுகளை கவனித்துக் கொண்டிருக்க முடியாது. இதையெல்லாம் தாயிடம் பகிர்ந்துக் கொள்ளும் மனப்பக்குவம் வந்தால் தான் அவர்களே இளைஞன் பின்தொடரும் விஷயம்வரை அம்மாவிடம் மனம் விட்டு பேசத் தொடங்கி விடுவார்கள்.
அப்புறம் பிரச்சினை ஏது? பின்தொடருதல் ஏது? ஒருவேளை வயதுக்கேற்ற குறும்பில் பாய்பிரண்ட் போன்ற கலாசாரங்களில் சிக்கி, தவறான பாதைக்குள் சில பெண்களின் பயணம் தொடரத் தலைப்பட்டால், அவர்களை பாதுகாத்து வழிநடத்த இந்த 'அம்மா நட்பு' துணையாக இருக்கும். உண்மையான அன்பும், நேசமும், துளியும் சந்தேகத்திற்கு இடம் கொடுக்காது.
சந்தேகம் என்பது நல்ல நட்பை பிளவு படுத்தும் ஆயுதம். இந்த ஆயுதத்தை எப்போதும் நாம் பிரயோகப்படுத்தக் கூடாது. அது மனதளவிலும் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். நன்மை, தீமைகளை பகுத்தறிந்து உணரும் ஆற்றலை நாம் அவர்களுக்கு கொடுத்தால் மட்டும் போதுமானது. சில தவறுகள் எந்த வகையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தக்க உதாரணங்களோடு நாம் அவர்களுக்கு விளக்கி அவர்களை தவறுகளிலிருந்து பாதுகாத்திட வேண்டும்.
வெளிப்படையான நட்பு பல பிரச்சினைகளுக்கு அப்போதேஉரிய தீர்வை சொல்லி விடுகிறது.
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: அம்மா-மகள் நட்பு

Post by kannammak62 on Sun Apr 21, 2013 4:57 pm

நன்றி
avatar
kannammak62
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 114
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: அம்மா-மகள் நட்பு

Post by ஜாஹீதாபானு on Sun Apr 21, 2013 6:25 pm

பெண் குழந்தைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் பயனுள்ள பகிர்வு நன்றி

நானும் என் மகளிடம் தோழி போல் தான் பழகுகிறேன்...avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30090
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: அம்மா-மகள் நட்பு

Post by யினியவன் on Sun Apr 21, 2013 6:28 pm

@ஜாஹீதாபானு wrote:நானும் என் மகளிடம் தோழி போல் தான் பழகுகிறேன்...
வடை மட்டும் பண்ணிடாதீங்க - எதிரியா ஆயிடுவாங்க புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அம்மா-மகள் நட்பு

Post by யினியவன் on Sun Apr 21, 2013 6:28 pm

நல்ல பகிர்வு பவுன்ராஜ்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அம்மா-மகள் நட்பு

Post by ஜாஹீதாபானு on Sun Apr 21, 2013 6:39 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:நானும் என் மகளிடம் தோழி போல் தான் பழகுகிறேன்...
வடை மட்டும் பண்ணிடாதீங்க - எதிரியா ஆயிடுவாங்க புன்னகை

சும்மாவே என் சமையல நக்கல் பண்ணுவா நீங்க வேற எடுத்துக் குடுக்குறிங்களாக்கும்...avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30090
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: அம்மா-மகள் நட்பு

Post by பாலாஜி on Mon Apr 22, 2013 12:34 pm

@ஜாஹீதாபானு wrote:
@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:நானும் என் மகளிடம் தோழி போல் தான் பழகுகிறேன்...
வடை மட்டும் பண்ணிடாதீங்க - எதிரியா ஆயிடுவாங்க புன்னகை

சும்மாவே என் சமையல நக்கல் பண்ணுவா நீங்க வேற எடுத்துக் குடுக்குறிங்களாக்கும்...

இல்லையான மட்டும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அம்மா-மகள் நட்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Apr 22, 2013 12:39 pm

பானுவுக்கும் வடைக்கும் என்ன அப்படி ஒரு தொடர்பு ?!!
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: அம்மா-மகள் நட்பு

Post by பாலாஜி on Mon Apr 22, 2013 12:40 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பானுவுக்கும் வடைக்கும் என்ன அப்படி ஒரு தொடர்பு ?!!

இது ஒரு பெரிய கதை ... ஒரு திரியே உள்ளது ... அதை நீங்க பார்க்கவில்லையா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அம்மா-மகள் நட்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Apr 22, 2013 12:43 pm

இல்லையே பாலாஜி ....நான் பானு என்றால் பிரியாணியைத்தான் நினைத்தேன்...அதிலும் ஆம்பூர் பிரியாணி. இந்த வடை சமாச்சாரம் எனக்கு முழுமையாகத் தெரியவில்லை...அந்த லிங்க் கொஞ்சம் கொடுங்களேன் புன்னகை
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: அம்மா-மகள் நட்பு

Post by ஜாஹீதாபானு on Mon Apr 22, 2013 12:48 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இல்லையே பாலாஜி ....நான் பானு என்றால் பிரியாணியைத்தான் நினைத்தேன்...அதிலும் ஆம்பூர் பிரியாணி. இந்த வடை சமாச்சாரம் எனக்கு முழுமையாகத் தெரியவில்லை...அந்த லிங்க் கொஞ்சம் கொடுங்களேன் புன்னகை

http://www.eegarai.net/t83108-topic

இந்தாங்க படிச்சிட்டு எனக்கு ஆதரவா யினியவன் அண்ணாவுக்கு எதிரா பின்னூட்டம் போடுன்ங்கavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30090
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: அம்மா-மகள் நட்பு

Post by யினியவன் on Mon Apr 22, 2013 12:50 pm

சுய விளம்பரப் பதிவுகள் அதுவும் தங்களின் பெருமையை
பறை சாற்றும் பதிவுகளுக்கு இங்கே அனுமதி இல்லை பானு சிரிப்புavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அம்மா-மகள் நட்பு

Post by ஜாஹீதாபானு on Mon Apr 22, 2013 12:51 pm

@பாலாஜி wrote:
@ஜாஹீதாபானு wrote:
@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:நானும் என் மகளிடம் தோழி போல் தான் பழகுகிறேன்...
வடை மட்டும் பண்ணிடாதீங்க - எதிரியா ஆயிடுவாங்க புன்னகை

சும்மாவே என் சமையல நக்கல் பண்ணுவா நீங்க வேற எடுத்துக் குடுக்குறிங்களாக்கும்...

இல்லையான மட்டும்

சோகம்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30090
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: அம்மா-மகள் நட்பு

Post by பாலாஜி on Mon Apr 22, 2013 12:52 pm

@யினியவன் wrote:சுய விளம்பரப் பதிவுகள் அதுவும் தங்களின் பெருமையை
பறை சாற்றும் பதிவுகளுக்கு இங்கே அனுமதி இல்லை பானு சிரிப்பு

ஆமாம் சூப்பருங்க
http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அம்மா-மகள் நட்பு

Post by ஜாஹீதாபானு on Mon Apr 22, 2013 12:53 pm

@யினியவன் wrote:சுய விளம்பரப் பதிவுகள் அதுவும் தங்களின் பெருமையை
பறை சாற்றும் பதிவுகளுக்கு இங்கே அனுமதி இல்லை பானு சிரிப்பு

என் வியாபாரத்தை கெடுக்காதிங்கண்ணா என்ன கொடுமை சார் இதுavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30090
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: அம்மா-மகள் நட்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum