புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருதத்தின் மாண்பு  Poll_c10மருதத்தின் மாண்பு  Poll_m10மருதத்தின் மாண்பு  Poll_c10 
42 Posts - 63%
heezulia
மருதத்தின் மாண்பு  Poll_c10மருதத்தின் மாண்பு  Poll_m10மருதத்தின் மாண்பு  Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
மருதத்தின் மாண்பு  Poll_c10மருதத்தின் மாண்பு  Poll_m10மருதத்தின் மாண்பு  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
மருதத்தின் மாண்பு  Poll_c10மருதத்தின் மாண்பு  Poll_m10மருதத்தின் மாண்பு  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருதத்தின் மாண்பு


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Apr 27, 2013 4:48 am

உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம் !
வீணில் உண்டு களிப்போரை
நிந்தனை செய்வோம் !
இது பாரதி பாடல் !
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றையவர்
தொழுதுண்டு பின் செல்பவர் !
இது வள்ளுவன் வாக்கு !

உழவன் உழுகிறான் !
அங்கு நெல் மட்டுமா விளைகிறது ?
அவனது உழைப்பும் அல்லவா
விதை போடுகிறது !
மருத நிலம் அவனது கூடு !
வயல்கள் அவனது வீடு !
கயல்விழியார் கடைக்கண்ணுக்கு
காத்திருப்பார் பலர் !
வயல்வெளியே உலகம் என்று
விழித்திருப்பார் உழவர் !
அவன் அதிகாலை விழிக்காவிட்டால்
பலரது இரவு உறக்கம் பாதியிலேயே போய்விடும் !
அவன் விதையை மட்டுமா தூவுகிறான் ?
பலரது வாழ்க்கையின் பாதையை அல்லவா போடுகிறான் !
அவன் பாடும் பாட்டு களைப்பு தீரமட்டும் அல்ல !
பலரது வயிற்றுப்பாட்டையும் அல்லவா பாதுகாக்கிறது !
தலையில் அவன் கட்டும் முண்டாசு !
பலரது தலைவிதியை மாற்றுகிறதோ?
ஒரு மணிநேரம் மின்சாரம் இல்லையென்றால்
நம் வீட்டில் ஏஸி ஓடாது !
அதனால் நமக்கு வேலையும் ஓடாது !
மருத நில மன்னவனோ
வெயிலில் கால்பதித்து காய்கிறான் !
பொழுது சாயும் வரையில்
வயல்வெளியில் நிற்கிறான் !
அவனது கடமையால் தான்
நமது உடைமை உயிர் வாழ்கிறது !
உப்பு குறைவென்று
உணவை கொட்டுகிறோம் !
ஒரு மணி அரிசிக்கு அவன்
ஓராயிரம் தடவை உழுகிறான் !
வள்ளுவப் பெருந்தகை
ஒரு மணி அரிசியைக்கூட வீணாக்காதவராம் !
ஆம் !
அவர் ஊசியால் அரிசியை மட்டும் கோற்கவில்லை !
உழவனது உழைப்பையும் அல்லவா சேர்த்துக் கோற்கிறார் !
பலரது வயிற்றுக்கு பாலை வார்க்கிறான் உழவன் !
அவனது வீட்டிலோ வெறும் கப்பங்கூழுதான் !
அவன் சேற்றில் காலை வைத்தால்தான்
நமக்கு வயிற்றிலே சோறு கிடைக்கும் !
மருத நிலம் நமக்கு மாதா !
உணவு அருந்த மட்டும் அல்ல !
அவளை வணங்கவும் கூடத்தான் !
அதனால் தான் பொய்யாப்புலவன்
தொழுதுண்டு பின்செல்லப் பணித்தான் !
உணவை அருந்தும் முன்
உழவனை தொழவேண்டும் !
உழவன் மழை வேண்டி மன்றாடுகிறான் !
வருண பகவானே பொய்யாமல் பெய்து விடு !
இல்லையென்றால்
உனக்கு உண்ண உணவு (அவி) கிடைக்காது !
பொன்னி நதியே வயலுக்கு வேண்டிய நீரைக்கொடு !
இல்லையென்றால் உனக்கு
பொழுது விடிந்ததும் பூஜை கிடைக்காது !

ஆடிப்பட்டம் வர
தேடி விதை விதைத்து,
பாடிக்கொண்டே பிரித்து நாட்டு நட்டு,
வாடாமல் வளர வாகாக நீர்பாய்ச்சி,
காகம் கழுகையெல்லாம்
கம்பால் விரட்டிவிட்டு,
முதிர்ந்து வருகையிலே
மேலாக அறுப்பறுத்து,
மூட்டை மூட்டையாக
நெற்குவியல் தருகிறானே !
அவனா ?

ஆடிபண்டிகையில்
ஆகாரம் பல உண்டு,
பாடிக்கொண்டு பல பலகாரம்
செய்துவைத்து,
காக்கைக்கு கூட இன்றி
மூக்கை பிடிக்க உண்ணும்
நாமா ?

யார் உயர்ந்தோர் ?
சிறிதேனும் சிந்திப்போம் !

மருதநிலம் மற்றய நிலங்களில் சிறந்தது !
ஏனென்றால் குறிஞ்சி மலைக்கு எப்போதாவதுதான் செல்வோம் !
பாலைக்கும் காலம் உண்டு !
முல்லைகாட்டுக்கு மனம் வந்தபோதுதான் செல்வோம் !
நெய்தல் கடலோ ஓரத்தில்தான் உள்ளது !
ஆனால் மருதமோ வயலும் வயல் சார்ந்த நிலமும் !
அங்கே (உழவன்) நித்தமும் போகாவிட்டால்
நமக்கேது நிதம் சோறு?

அகத்திணையில் மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமும் !
ஊடல் காதலுக்கு உயிர் போன்றது !
உழவன் உயிர் காக்கிறான் !
ஊடல் உணர்வைக் காக்கிறது !

ஒரு உழவன் பட்டணம் சென்றான் !
அங்கு ஒரு உணவகம் சென்றான் !
பக்கத்தில் பகட்டாக பலர் !
உணவு வந்தது !
உழவனுக்கு மிகுந்த பசி !
கையால் பிசைந்து களைப்பாற உண்டான் !
பகட்டான பட்டணத்தார்
பரிகசித்தார் அவன் உண்ணும் பாங்கைக்கண்டு !
பட்டாடை உடுத்தும் பகட்டான அவர்க்கு
வேர்வை தெரியாது !
விதைதூவத் தெரியாது !
காத்திருந்து களைபரிக்கத்தெரியாது !
நீர்பாய்ச்சி நிரவத் தெரியாது !
அறுப்பறுத்து கட்டத்தெரியாது !
ஆனால் தட்டில் விழுந்த உணவை
கைபடாது உண்ணமட்டும் தெரியும் !
அந்த உழவனுக்கோ !
அந்த அரிசியின் தோற்றத்துக்கு வேண்டிய
அனைத்து நிலையும் தெரியும் !
ஆனால் அவனுக்கு அந்த அரிசி உணவை
உண்ண தெரியாதாம் ! பரிகாசம் செய்கிறார் பகட்டுக்காரர் !
உழவன் கணக்குப்பார்த்தால்
உழக்கு கூட மிஞ்சாது என்பது சரிதான் போலும் !
உண்ணும் முன் உழவைத்தொழுங்கள் !
இந்திரனைத் தொழும் மருத நில மன்னவர்கள்
சிந்தனையில் நல்லவர்கள் !
நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை !
நல்லவராய் நாமிருப்போம் !
மருதத்தில் மழை பெய்தால்தான்
விருந்து வைக்கக்கூட வகை பிறக்கும் !
உழவைப்போற்றுவோம் !
உண்மையாய் நடப்போம் !
மருதா நல்லூரில் மருதப்பூங்கா அமைக்கையிலே
மருத நில உழவனுக்கு மனதாற நன்றி சொல்வோம் !
பரிகாசம் செய்யாமல்
பரிசுத்தம் ஆகிடுவோம் !
வாழ்க மருதம் ! வளர்க நெற்பயிர் !




Uploaded with ImageShack.us
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Apr 27, 2013 8:32 am

நல் வளர்ச்சி... கவிதையும் நடையும் வளர்ச்சி பெறுகிறது.... பாராட்டுகள் சூப்பருங்க



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Apr 27, 2013 8:03 pm

ஆடிப்பட்டம் வர
தேடி விதை விதைத்து,
பாடிக்கொண்டே பிரித்து நாட்டு நட்டு,
வாடாமல் வளர வாகாக நீர்பாய்ச்சி,
காகம் கழுகையெல்லாம்
கம்பால் விரட்டிவிட்டு,
முதிர்ந்து வருகையிலே
மேலாக அறுப்பறுத்து,
மூட்டை மூட்டையாக
நெற்குவியல் தருகிறானே !
அவனா ?

மருதம் கண்முன் கொண்டுவந்தது
மருதத்தின் மாண்பு .....

கவிதை அழகு ,அருமை அய்யா ... சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக