ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 சிவா

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 SK

ஏர்செல் நிறுவனம் திவால்
 SK

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இலக்கண இன்பம்

View previous topic View next topic Go down

இலக்கண இன்பம்

Post by pon.sellamuththu on Sun May 19, 2013 7:51 pm

< < < < < இலக்கண இன்பம் - 1 > > > > > இந்த புதிய இழையில் இலக்கணம் பற்றி சில பகுதிகளை தமிழ் நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். இந்த முதல் இலக்கணப் பகுதியில் ஒருபொருட் பன்மொழி என்ற சொல்லிலக்கண பகுதியினை அவதானிப்போம். - - - - - ஒருபொருட் பன்மொழி - - - - - இமயமலைத் தொடரானது உயர்ந்து ஓங்கிய மலைத் தொடராகும். இந்த சொற்றொடரில் உயர்ந்து,ஓங்கிய-என்ற இரு சொற்க(மொழி)ளும் உயர்ந்தது என்ற ஒரே பொருளைத்தான் அளிக்கின்றன. இங்ஙனம் செவிக்கு இன்பம் அளிக்கும் பொருட்டு ஒரே பொருளைக் தரும் பலசொற்களுக்கு ஒருபொருட் பன்மொழி என்று பெயர். இதை ஒரு குணம் தழுவிய உரிச் சொல்(கள்) எனவும் விளிக்கலாம். ஒருபொருட்.....பன்மொழி.....சிறப்பின்.....வழாஅ ................................................(நன்னுல் சூத்திரம் - 398) - - - - - ஒருபொருட் பன்மொழி - தொகுப்பு - - - - - 1. இதயம்(இருதயம்),உள்ளம்,நெஞ்சம்,மனம் 2. எண்ணம்,சிந்தனை,நினைவு,ஞாபகம் 3.ஆண்டவன்,இறைவன்,கடவுள்,தெய்வம், . . . தேவன்,பகவான்,சாமி,ஸ்வாமி,வானவர் 4.தூக்கம்,துயில்,உறக்கம்,நித்திரை 5.உலகம்,பார்,புவி,பூமி, அவனி,அகிலம்,மேதினி,ஜெகம் வையகம் 6. காலம், நேரம், சமயம், பொழுது, பருவம், தருணம், கணம் 7. தங்கம், பொன், பவுன், சொர்ணம் 8. தண்ணீர், நீர், ஜலம், பனி, மேகம், முகில் 9. சித்திரம், ஓவியம் 10. சிரிப்பு, புன்னகை 11. திருமணம், கல்யாணம் 12.தென்றல், காற்று, புயல், சூறைக்காற்று 13. நதி, ஆறு 14.கடல், சமுத்திரம் 15. மலர், பூ, புஷ்பம் 16. மதி, நிலவு, சந்திரன், அம்புலி, திங்கள், சந்திரிகை 17. வானம், விண், ஆகாயம் 18. வீடு, குடும்பம், இல்லம், இல்லறம் குடித்தனம் 19. நட்சத்திரம், தாரகை, மீன், மின்மினி 20. சால, உறு, தவ, நனி, கூர், கழி, மிகுதி ( தொடரும் ) அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன். செல்லமுத்து


Last edited by pon.sellamuththu on Sun May 19, 2013 8:02 pm; edited 1 time in total
avatar
pon.sellamuththu
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 74
மதிப்பீடுகள் : 70

View user profile

Back to top Go down

Re: இலக்கண இன்பம்

Post by விஸ்வாஜீ on Sun May 19, 2013 7:57 pm

நல்ல பதிவு நண்பரே
தொடருங்கள்
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1338
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: இலக்கண இன்பம்

Post by யினியவன் on Sun May 19, 2013 8:55 pm

ஒரு பொருட் பன்மொழியா? இல்லை ஒரு பொருட் பல சொற்களா?

பகிருங்கள் நண்பரே - தெரிந்துகொள்கிறோம்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இலக்கண இன்பம்

Post by Muthumohamed on Mon May 20, 2013 1:08 am

உங்களின் இந்த சங்க இலக்கிய பதிவுகள் அருமையிருக்கு தொடருங்கள்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: இலக்கண இன்பம்

Post by pon.sellamuththu on Mon May 20, 2013 1:05 pm

இந்த இழைக்கு ஊக்கமளித்த ஈகரையின் நண்பர்கள்
திரு. யினியவன், திரு.முத்து முஹம்மது, MR. VISHWAJEE (இளையநிலா)
ஆகியோருக்கு அன்பு வணக்கம்.

மொழி, சொல், பதம், கிளவி – ஆகியனவும் ஒரே
பொருளைத் தரும் சொற்களேயாகும்.

நினைவூட்டிய தலைமை நடத்துனர் திரு. யினியவன்
அவர்கட்கு நன்றி

அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன். செல்லமுத்து
avatar
pon.sellamuththu
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 74
மதிப்பீடுகள் : 70

View user profile

Back to top Go down

இலக்கண இன்பம்

Post by Dr.S.Soundarapandian on Thu Jun 06, 2013 9:54 pm

பொன்.செல்லமுத்து அவர்களின் இலக்கண முயற்சி போற்றத்தக்கது ! தொடரவேண்டும் அவர் ! ஒருபொருட் பன்மொழி பற்றிய நன்னூல் நூற்பா சரியானதே; ’உயர்ந்தோங்கிய’என்ற எடுத்துக்காட்டும் சரியானதே; ஆனால் அதன்பிறகு தரப்பட்டுள்ள சொல் வரிசை ஒருபொருட் பன்மொழி ஆகாது ! ஒரே பொருளைத் தரும் பல சொற்களுக்கு ‘ஒரு பொருட் பன்மொழி’ என்று கூறக்கூடாது; “பாடலிலோ உரைநடையிலோ ஒரே பொருள் கொண்ட இரு சொற்கள் , நடைச் சிறப்பிற்காக , ஆளப்பட்டால் அதைப் பிழை என்று ஒதுக்காதீர்கள்; நடை நயம் அது ”என்பதுதான் நன்னூலின் கருத்து. ‘உள்ளம் நெஞ்சம் உள்ளவர்களா அவர்கள் ?’ என ஒருவர் கூறுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் ; அப்போது ‘உள்ளம்நெஞ்சம் - ஒருபொருட் பன்மொழி’ என்று கூறலாம். அகராதியிலுள்ள ஒரே பொருளைக் காட்டும் சொல் தொகுப்பு ‘ஒருபொருட் பன்மொழி’ என்ற இலக்கணத்தில் வராது. கனிவுடன் இதனைத் தெரிவித்துக்கொள்கிறேன் !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4442
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: இலக்கண இன்பம்

Post by pon.sellamuththu on Sun Jun 09, 2013 1:11 pm


ஈகரை நண்பர் மதிப்பிற்குரிய முனைவர்
திரு.சு.சௌந்தரபண்டியன் அவர்கட்கு அன்பு வணக்கம்.


‘’அகராதியிலுள்ள ஒரே பொருளைக் காட்டும் சொல் தொகுப்பு
‘ஒருபொருட் பன்மொழி’ என்ற இலக்கணத்தில் வராது.’’
என்று தாங்கள் சுட்டிகாட்டியதை உணர்ந்தோம்.

நன்றி ஐயா.


அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து
avatar
pon.sellamuththu
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 74
மதிப்பீடுகள் : 70

View user profile

Back to top Go down

Re: இலக்கண இன்பம்

Post by pon.sellamuththu on Sun Jun 09, 2013 1:44 pm

இனங்குறித்தல்


வெற்றிலை மெ(தி)ன்றான்
என்று சொன்னால் வெற்றிலையுடன் தொடர்புடைய ;
பாக்கு,சுண்ணாம்பு ஆகியவற்றையும்
மென்றதாகவே பொருள் படும்.


சந்தைக்குக்சென்று காய் வாங்கினான்
என்று கூறினால் காயுடன் தொடர்புடைய ;
தக்களி-எலுமிக்சை போன்ற பழங்களையும்,
வாழைப்பூ-காலிஃப்ளவர் போன்ற பூக்களையும்,
கொத்துமல்லி-கறிவேப்பிலை போன்றகீரை-தழை
வகைகளையும்,வாழைத்தண்டு-கீரைத்தண்டு
போன்ற தண்டு வகைகளையும்,கருணை-
சேப்பன்-உருளை-பீட்ரூட்-காரட்-வள்ளி-இஞ்சி
போன்ற கிழங்கு வகைகளையும்
வாங்கியதாகவே பொருள் படுகின்றது.


இங்ஙனம் ஒரு சொல்லானது எஞ்சி நின்ற
(பிரிதான) தன இனங்களையும்தழுவிக்கொண்டு
வருவது அல்லது குறிப்பால் உணர்த்துவது
இனங்குறித்தல் எனப்படும்.


இனங்குறித்தல் என்பது வட மொழியில்
உபலட்சணம் எனப்படுகிறது.


அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன்.செல்லமுத்து
avatar
pon.sellamuththu
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 74
மதிப்பீடுகள் : 70

View user profile

Back to top Go down

Re: இலக்கண இன்பம்

Post by சதாசிவம் on Sun Jun 09, 2013 2:53 pm

பயனுள்ள பதிவு, சூப்பருங்க தொடருங்கள்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: இலக்கண இன்பம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum