ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

திட்டி வாசல்
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 ayyasamy ram

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு!

View previous topic View next topic Go down

முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு!

Post by சிவா on Mon May 20, 2013 2:34 am


சுயம்பு லிங்கங்களை பல்வேறு திருத்தலங்களில் தரிசித்திருக்கலாம். சுயம்பு முருகனை காண்பது அரிது.

அப்படியொரு சுயம்பு வேலவனை வணங்கும் பாக்கியத்தை வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி, நட்சத்திரக் குன்று என்றெல்லாம் அழைக்கப்படும் நட்சத்திரக் கோயிலில் நாம் பெறலாம்.

நட்சத்திரகிரியில் கந்தன் குடி கொண்டது சுவாரஸ்யமான வரலாறு.

முன்னொரு சமயம் இப்பகுதியில் இரண்டு சிவாச்சார்யர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் ஆடிக் கிருத்திகை நாளில் திருத்தணிகை சென்று சுப்ரமணியரை வழிபட்டு வருவது வழக்கம். ஒரு வருடம் அவர்களால் ஆடிக்கிருத்திகையன்று தணிகைமலை செல்ல இயலவில்லை. இதனால் இருவரும் மிகுந்த மன வருத்தம் அடைந்தனர்.

ஒருநாள் அவர்களின் கனவில் தோன்றிய குமரன், “நான் நட்சத்திரகிரி எனும் குன்றின் நடுவில் சுயம்பு வடிவாய் எழுந்துள்ளேன். சூரியன்-சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்களும், நாகமும் நித்தமும் என்னை பூஜிக்கும். நட்சத்திரக் குன்றின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திர புஷ்கரணி சுனையில் இருந்து நாகம் உங்களுக்கு வழிகாட்ட, என்னை வந்து அடையுங்கள்!’ என்று கூறி மறைந்தார்.

திடுக்கிட்டு கண்விழித்த சிவாச்சாரியார்கள், பிரம்ம முகூர்த்த வேளையில் சுனையினை அடைந்தனர். அங்கிருந்து ஒளி பொருந்திய நாகம் ஒன்று வழிகாட்டிட, அதைப் பின்தொடர்ந்தனர் குன்றின் நடுவில் சென்றதும் ஓரிடத்தில் நாகம் மறைந்தது. அங்கே சப்பாத்திக் கள்ளிச் செடிகளுக்கு இடையே சுயம்பு லிங்க வடிவாய் முருகன் காட்சியளித்தார்.

இதைக் கேள்வியுற்ற ஊர் மக்கள் ஒன்று கூடி, சுயம்பு சுப்ரமணியரை வணங்கினர். பின்னர் வள்ளி-தெய்வானை சுமேத முருகன் உருவச் சிலையையும் ஸ்தாபித்து ஆலயம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து பூஜைகள் நடத்தப்பட்டது.

சேயாற்றின் கரையோரமாக சிறு குன்றின் மீது குறைகளையெல்லாம் களையும் குமரன் இனிதே வீற்றிருக்கிறார்.

சுமார் 227 படிகள் ஏறி, முதலில் சித்தி விநாயகரை வணங்குகின்றோம். மூன்று நிலை ராஜகோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இடதுபுறம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், வலப்புறம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதரும் அருள்கின்றனர். கிழக்குப்புறம் பலிபீடம், மயில் வாகனம், கொடிமரம் காணப்படுகிறது.

மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகிய அமைப்பில் சன்னதிகள் அமைந்துள்ளன. கருவறையுள் வள்ளி மற்றும் தெய்வானையுடன் கந்தன் உருவமூர்த்தமாகவும், பீடத்தின் கீழே சுயம்புவாய் அருவுருவ லிங்க வடிவிலும் எழுந்தருளியுள்ளார். முருகனின் தலைக்குப் பின் படம் எடுத்து நிற்கும் நாக வடிவம் உள்ளது. இந்த முருகனை நாகம் அடையாளம் காட்டியதன் நினைவாக நித்தமும் நாகபாசம் பொருத்தப்படுகின்றது.

வேண்டியதையெல்லாம் தருவான் இந்த வேலவன். 27 நட்சத்திரங்களும், கார்த்திகைப் பெண்களும் அனுதினமும் இங்கு ஆறுமுகனை பூஜிப்பதாக ஐதிகம்.

மலைக்கோயிலின் வெளியே மலேசிய பத்துமலை முருகனை நினைவுகூரும் விதத்தில் கந்தன் தங்க நிறத்தில் கம்பீரமாய்த் திகழ்கின்றான்!

மலைக்கு வாகனங்கள் மூலம் செல்ல சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. அடிவாரத்தில் தீர்த்த சுனையும், அனுமன், கணபதி, நவகிரகம் மற்றும் இடும்பன் சன்னதிகளும் அமைந்துள்ளன.

இந்த நட்சத்திரக் குன்று முருகன் மீது முருகதாசரான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் நான்கு பாடல்களைப் பாடிச் சிறப்பித்துள்ளார். மேலும் இந்த முருகன் மீது சிவசுப்ரமணிய மாலை, நட்சத்திரக்குன்ற வழிநடைப்பதம், உடுமலைப் பாமாலை, நட்சத்திரக் குன்ற அருள்மிகு சிவசுப்பிரமணியர் பிள்ளை தமிழ் போன்ற எண்ணற்ற பாமாலைகள் புலவர் பலரால் இயற்றப்பட்டுள்ளது.

சித்திரை வருடப்பிறப்பு பால்குட அபிஷேகம், ஆடிக்கிருத்திகைப் பெருவிழா, கந்தர் சஷ்டி விழா, கார்த்திகை தீபம், தை கிருத்திகை, பங்குனி உத்திர பிரம்மோற்சவம் (அதில் ஏழாம்நாள் திருத்தேர்), வைகாசி விசாகம், மாத கார்த்திகைகள் என விழாக்கள் பற்பல இங்கு கொண்டாடப்படுகின்றன. சஷ்டியில் பெருமான் எலத்தூர் சென்று அன்னை சக்தியிடம் வேல் வாங்கி வந்து, நட்சத்திரக் கோயிலில் சூரசம்ஹாரம் செய்வார். அதன்பின் சேயாற்றின் கரையில் அமைந்துள்ள குருவிமலை கிராமத்திற்குச் சென்று, அங்கே ஆற்றில் தீர்த்தவாரி நடக்கும். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வர்.

தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்திருக்கும் இவ்வாலயத்தில் கிருத்திகைகளில் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்து, சம்பா சாதம் படைத்து, செவ்வரளி மாலை சாற்றி, அன்னதானம் செய்து வழிபடுபவர்களின் நாகதோஷம் புத்திர தோஷம், திருமண தோஷங்கள் அகலும்; புதுவாழ்வு பிறக்கும். பாலபிஷேகம் செய்து, சிவந்த விருட்சி புஷ்பங்களால் அர்ச்சித்து, மாதுளைக் கனி படைத்து வழிபடுவோரின் நட்சத்திர தோஷங்கள் யாவும் விலகும்; நல்லருள் கிட்டும் என்பது நம்பிக்கை!

திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து செங்கம் செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் வில்வாரணி என்னும் ஊரில் அமைந்துள்ளது, நட்சத்திரக்குன்று எனப்படும் நட்சத்திரக்கோயில்.

- எம்.கணேஷ், ஆரணி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு!

Post by ராஜா on Mon May 20, 2013 11:00 am

:வணக்கம்: பகிர்வுக்கு நன்றி தல
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum