ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி?

View previous topic View next topic Go down

சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி?

Post by சிவா on Sun May 26, 2013 10:41 amலிசாவுக்கு 24 வயது. சோர்ந்து போய் காணப்பட்டாள்.

“அப்பா, அம்மா என்னை நம்புவதில்லை. சந்தேகப்படுகிறார்கள். என் அக்காளுக்கு திருமணமாகும் வரை நான் எந்த ஆணிடமும் பேசக்கூடாது என்று கட்டளை போடுகிறார்கள்” என்று சொல்லி கண்ணீர் விடத் தொடங்கினாள்.

லிசா இளநிலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறாள்.

“நான் ஆண், பெண்களைக்கொண்ட அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். எனக்கு உயர் அதிகாரியாக இருப்பவர்கள் ஆண்கள். நான் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பின்பும், அலுவல் ரீதியாக சில நேரங்களில் என்னிடம் பேசுவார்கள். அப்போது நாங்கள் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே என் பெற்றோர் கூச்சல் போடுகிறார்கள்..” என்றாள்.

அவளது பெற்றோரைப் பற்றி கேட்டேன். அப்பா வாடகை கார் ஓட்டுனராக உள்ளார். அம்மா, குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார். அவளது அக்காளுக்கு 28 வயது. லிசாவைவிட அவள், அழகில் குறைந்தவள். பிளஸ்-டூ வரையே படித்திருக்கிறாள். தனிப்பட்ட தகுதிகள் எதுவும் இல்லாததால் உண்பது, உறங்குவது என்றே நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு வரன் எதுவும் சரியாக அமையவில்லை.

“என் அக்காளுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. என்னை விட படிப்பில், அழகில் தன்னை குறைவாக மதிப்பிட்டு, என் மீது பொறாமையை வளர்த்துக் கொண்டாள். அவளை பெண் பார்க்க வந்த ஒரு சிலர், ‘தங்கை அழகாக இருக்கிறாளே’ என்று அவள் காதுபடவே பேசிவிட்டார்கள். நான் வேலை பார்த்து சம்பாதிக்கவும் செய்வதால், அவள் தான் என் பெற்றோரிடம் என்னைப் பற்றி தவறான அபிப்பிராயத்தை உருவாக்குகிறாள்” என்றாள்.

“பெற்றோருக்கு உன் மீது நம்பிக்கை குறைவு ஏற்படும் அளவுக்குரிய சம்பவங்கள் ஏதேனும் நடந்திருக்கிறதா?” என்று கேட்டேன்.

சற்று யோசித்துவிட்டு ஒரு சம்பவத்தை சொன்னாள்.

“நான் என் தோழிகளோடு சேர்ந்து சினிமாவிற்கு சென்றேன். அங்கு எங்கள் அலுவலகத்தில் வேலை பார்த்த இன்னொரு இளைஞரும் வந்திருந்தார். படம் முடிந்து திரும்பியதும், பஸ் நிலையம் வரை அவர் என்னை அவரது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். அதை என் தந்தை பார்த்திருக்கிறார். இன்னொரு நாள் அதே நபர் எனக்கு போன் செய்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார். எங்கள் தோழிகள் வட்டம் மற்றும் அலுவலக சூழலைப் பொறுத்தவரையில் அது சகஜமான விஷயம். ஆனால் எங்கள் இருவருக்குள் காதலோ, வேறுவிதமான எந்த தொடர்போ கிடையாது என்று எவ்வளவோ சொல்லிவிட்டேன். ஆனால் என் பெற்றோர் நம்பவில்லை. அவர்கள் தொடர்ந்து என்னை சந்தேக இம்சை செய்வதால், என் பெற்றோரை பழிவாங்கும் விதத்தில் அந்த நபரையே காதலித்து, கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கூட யோசிக்கிறேன்” என்றாள்.

“இந்த மாதிரி நெருக்கடியான நேரங்களில் நீ மனஅழுத்தத்திற்கு உள்ளாகாமல் நிதானமாக முடிவெடுக்க வேண்டும். அந்த நபரை அவசரப்பட்டு நீ திருமணம் செய்து கொண்டால், அது உனது பெற்றோரை பழிவாங்குவதாக அமையாது. மாறாக, உன் வாழ்க்கையை அவசரப்பட்டு பலிகொடுப்பதாக அமைந்துவிடும். நட்பு ரீதியாக உன்னிடம் பழகும் ஒருவரை, எப்படி உன்னால் காதலராக்க முடியும்?

காதல் என்பது இரண்டு பேருக்குள் அன்பால், பாசத்தால், சுயமரியாதை மற்றும் சம உரிமையால் உருவாக வேண்டும். அப்பா சந்தேகப்படுகிறார் என்பதற்காக அடுத்தவரை காதலிக்க முடியாது. அதனால் எழுவது காதல் அல்ல. அந்த வாழ்க்கை நீடிக்கவும் செய்யாது. பெற்றோரால் மனஅழுத்தம் உருவாக்கப்படுவதால், உனக்கு யார் ஆறுதல் சொன்னாலும் அவரை நீ நம்பும் நிலை ஏற்படும். அப்படி நம்பி, யாருடைய காதல் வலையிலும் விழுந்து விடாதே. அது உன் பெற்றோரின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவது போல் ஆகிவிடும்.” என்றேன்.

“நீங்கள் சொல்வது சரிதான். அந்த மாதிரியான காதல் எதிலும் நான் ஈடுபடப்போவதில்லை. ஆனால் என் பெற்றோர் தரும் சந்தேக இம்சையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே” என்றாள், அழுகையோடு!

“நீ அதை தாங்கிக்கொள்ள சில வழிமுறைகளை சொல்கிறேன். முதலில் உன் அக்காளுடன் நெருக்கத்தை உருவாக்கு. அழகு, அறிவு, பணத்தால் நீ அவளைவிட சிறப்பாக இருப்பதாக கருதி அவள் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டிய தேவையில்லை என்று கூறி, அவளை அழகுபடுத்த, அவளுக்கு விரைவில் வரன் கிடைக்க, அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க நீயும் அக்கறையும், ஆர்வமும் கொண்டிருப்பதை வெளிப்படுத்து. தினமும் சிறிது நேரத்தை உன் அக்காவுக்காக ஒதுக்கு. அவளிடம் இருக்கும் சின்னச்சின்ன நல்ல விஷயங்களையும் கண்டுபிடித்து பாராட்டு.

அப்படியே, ‘நான் எல்லாவிதத்திலும் உன் திருமண வாழ்க்கைக்கு துணையாக இருப்பேன். உன் திருமணம் முடிந்த பிறகு, நீதான் எனக்கு வரன் பார்த்து எனது திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்‘ என்று மனப்பூர்வமாக கூறு. அதையே உன் பெற்றோரிடமும் சொல்..” என்றேன்.

அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த அவள், “நீங்கள் சொல்கிறபடி எல்லாம் நான் நடந்தும் அவர்கள் என்னை நம்பாமல் சந்தேகம் கொண்டால் என்ன செய்வது?” என்று கேட்டாள்.

“அவரவரை அந்தந்த இடத்தில் வை. அந்தந்த இடத்தில் வைத்து அவரவருக்கு செய்யவேண்டியதை செய். அவர் அப்படி நினைக்கிறாரே! இவர் இப்படி நினைக்கிறாரே! என்று யாருடைய நினைவுகளையும் தூக்கி சுமந்து தள்ளாடாதே! யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொண்டிருங்கள் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. நான் என் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் வாழ்கிறேன்’ என்று திடமான மனதுடன் முடிவெடுத்து, சுமையான அந்த சிந்தனையில் இருந்து விலகிச் செல்!!’ என்றேன். சரி என்றாள்.

விஜயலட்சுமி பந்தையன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி?

Post by ஜாஹீதாபானு on Sun May 26, 2013 2:36 pm

“அவரவரை அந்தந்த இடத்தில் வை. அந்தந்த இடத்தில் வைத்து அவரவருக்கு செய்யவேண்டியதை செய். அவர் அப்படி நினைக்கிறாரே! இவர் இப்படி நினைக்கிறாரே! என்று யாருடைய நினைவுகளையும் தூக்கி சுமந்து தள்ளாடாதே! யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொண்டிருங்கள் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. நான் என் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் வாழ்கிறேன்’ என்று திடமான மனதுடன் முடிவெடுத்து, சுமையான அந்த சிந்தனையில் இருந்து விலகிச் செல்!!’ என்றேன். சரி என்றாள்.
சூப்பருங்க சூப்பருங்கavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29979
மதிப்பீடுகள் : 6983

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum