புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_c10யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_m10யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_c10யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_m10யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_c10யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_m10யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_c10 
11 Posts - 4%
prajai
யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_c10யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_m10யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_c10யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_m10யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_c10யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_m10யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_c10யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_m10யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_c10யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_m10யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_c10யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_m10யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_c10யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_m10யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 27, 2013 11:36 pm

தேவாரம் பாடிய மூவருள் சுந்தரர் பதிகங்களைத் திருப்பாட்டு என்பது சைவமரபு. அந்தச் சுந்தரரோ நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என வியந்து சம்பந்தர் இசையில் தோய்ந்திருக்கிறார்.

சம்பந்தரின் பண்சுமந்த பாடல்களை அவரை நிழல்போல் தொடர்ந்து சென்று யாழில் வைத்துப் பாடி வந்தார் இசைவாணர் ஒருவர். அவரால் யாழில் வைத்துப் பாட முடியாத யாழ்மூரிப்பண் என்னும் அதிசயப் பண்ணைச் சம்பந்தர் ஒரு திருத்தலத்தில் அருளியுள்ளார். அந்தத் திருத்தலம் இன்னமும் பலராலும் அறிப்படாத திருத்தருமபுரம் என்னும் சிவத்தலமாகும். இது புதுச்சேரியில் அமைந்துள்ளது.

காரைக்காலம்மையார் தோன்றிய காரைக்காலுக்கு மேற்கே சலசலத்தோடும் வாஞ்சியாற்றின்மேல் பல்லாண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சுக்காரர்களால் கட்டப்பட்ட பாலத்தின் அருகில் தருமபுரம் என்ற திசைகாட்டியைத் தொடர்ந்து ஒரு கிலோ மீட்டர் துரத்தைக் கடந்தால் திருத்தருமபுரத்தை அடையலாம். தருமராஜன் வழிபட்டுப் பேறு பெற்றதால், இவ்வூர்க்குத் தருமபுரம் எனப் பெயர் வந்தது.

திருத்தருமபுரம் திருக்கோயிலைச் சுற்றித் தெருக்கள்; அவற்றில் ஆரவாரம் இல்லாத அழகிய வீடுகள்; ஊரைச் சுற்றிச் செந்நெல் வயல்கள்; மருதம் இங்கே அமைதியாய் ஆட்சி புரிகின்றது.

சம்பந்தர் காலத்தில் கிழக்கே வங்கக் கடலைச் சார்ந்து விரிந்திருந்த தருமபுரம் இன்று கடற்கரையிலிருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவு தள்ளிப் போய்விட்டது. இன்று உப்பங்கழிகளும் இல்லை; மணம் வீசும் மரஞ்செடி, கொடிகள் நிறைந்த சோலைகளும் இல்லை. இன்று மருத நிலமாகத் தருமபுரம் காட்சியளிக்கின்றது.

இன்று தருமபுரத்தின் தொடக்கமே திருக்கோயிலில் இருந்துதான். தருமபுர ஆதீனத்தின் பரிபாலனத்தில் உள்ள இப்பழம் பெருங்கோயிலில் இப்பொழுது திருப்பணி வேலைகள் சீராக நடைபெற்று வருகின்றன; இராஜ கோபுரத்தைக் கும்பிட்டு நந்திபெருமான் வழிகாட்டப் பசுவை நினைத்து விரையும் கன்றாக மூலவரைத் தரிசிக்க விரைகிறோம். மூர்த்திக்கு எல்லாம் முதல்வனைக் கண்டு கசிந்துருகி நிற்கின்றோம். இறைவனது திருநாமம் யாழ்மூரிநாதர். மூரித்தல் என்றால் அதிகரித்து நிற்றல் என்பது பொருள். யாழ் இசைக்கு அடங்காத யாழ்மூரிப்பண்ணால் போற்றப்பட்டவர் யாழ்மூரிநாதர்.
அன்று ஞானசம்பந்தரால் கண்ணாரக் கண்டு, வாயாரத் துதித்து, மெய்யார வணங்கிப் பாடப்பட்ட இத்தலத்துப் பெருமான் யாழ் ஏந்திய திருக்கோலத்தில் தரிசனம் அளிக்கின்றார்.

சம்பந்தர் ஈசன் மீது யாழ்மூரிப்பண் பாடக் காரணம் என்ன?
திருவெருக்கத்தம்புலியூர் என்னும் ஊர் விருத்தாசலத்திற்கு அண்மையில் உள்ளது. அவ்வூரில் பாணர் மரபில் தோன்றியவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். அவர் மனைவி மதங்கசூளாமணி. இருவரும் வாய்ப்பாட்டிலும் யாழ்வாசிப்பிலும் சிவபெருமானையே பாடிப்பரவித் துதிப்பவர்கள்.

பாணர் மதுரை ஆலவாய்ப் பெருமானின் திருவிளையாடல்களை எல்லாம் அற்புதமாகப் பாடி இறைவனின் திருவருளைப் பெற்றுக் கொண்ட பின்னர், தியாகேசப் பெருமானை நினைந்து தம் மனைவியொடு திருவாரூர் சென்றார். வாயிலில் நின்று யாழ் மீட்டி உருகிப் பாடினார். இன்னிசையை இறைவன் கேட்டருளி, அவர்க்கு வேறு வாயிலை வகுத்துக் கொடுத்தான். இருவரும் அவ்வழியே சென்று மூலவரைக் கண்டு கசிந்துருகிப் பாடித் துதித்தனர். ஈசனின் இன்னருளால் அங்கிருந்து புறப்பட்டு, ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தரை வணங்குதல் பொருட்டுச் சீர்காழிக்கு வந்தனர்.

பாணர் தம்பதியர் வருகையை அறிந்த திருஞானசம்பந்தர் எதிரே சென்று அவர்களை வரவேற்றார். வந்தவர்கள் அவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். சம்பந்தர் அவர்களைப் பரிவொடு அழைத்துக் கொண்டு திருத்தோணியப்பர் கோயிலுக்குச் சென்று யாழினை வாசியும் என்றார்.

பாணர், பெருமானைத் துதித்தும் சம்பந்தரை வணங்கியும் கல்லும் கரைந்துருக மனைவியொடு பாடினார். குரலிசையும், யாழிசையும் உலகைக் கடந்து வானையும் தொட்டன; கந்தருவரும், விஞ்சையரும் வியந்தனர்; சம்பந்தரின் அடியார்களும் பெருமகிழ்வுற்றனர்.

அப்பொழுது அடியவர்கள் பாணரிடம் சம்பந்தரின் திருப்பதிகப் பாடற் சிறப்பைப் பற்றிச் சொல்ல, அப்பதிகங்களை உடனே யாழில் வைத்துப் பாணர் பாடிக் காட்டினார். சம்பந்தர் மனம் நெகிழ்ந்தார். பாணரும் சம்பந்தரை வணங்கித் தாங்கள் தலங்கள்தோறும் எம்பெருமானைத் துதித்துப் பாடும் பதிகப் பாடல்களை எல்லாம், அடியேன் யாழில் வைத்துப் பாட ஆசையுற்றேன். ஆதலால் தங்களைப் பிரியாது இருக்க வரம் அருளல் வேண்டும் என வேண்டி நின்றார். சம்பந்தரும் அன்போடு இசைந்தார். அன்று முதற்கொண்டு அவ்விருவரிடையே அன்புப் பிணைப்புப் பிறைபோல நாளும் வளரத் தொடங்கியது.

ஞானசம்பந்தர் தொடர்ந்து தலயாத்திரைக்குப் புறப்பட்டார். அவரைப் பாணர் தம்பதியர் தொடர்ந்தனர். சம்பந்தர் தலங்கள்தோறும் சிவபெருமானின் மீது திருப்பதிகம் பாடியருள, அப்பதிகங்களுக்கு யாழில் இசை கூட்டிப் பாடினார் பாணர். கேட்டார் யாவரும் கண்ணீர் வார்ந்து, களித்துப் பக்திப் பரவசம் ஆயினர். இத்திருப் பணி தொடர்ந்தது.

சம்பந்தர் தமது திருப்பயணத்தில் பல தலங்களையும் தரிசனம் செய்துவிட்டுத் திருவாடுதுறை வந்தார். திருவாடுதுறை இறைவனிடம் எடுக்க எடுக்கக் குறையாத ஆயிரம் பொன் கொண்ட முடிப்பைத் தந்தையார் செய்யும் யாகத்திற்காக வேண்டிப் பெற்றார். அதனைத் தந்தையாரிடம் கொடுத்து வேள்வி செய்யச் சீர்காழிக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து பல தலங்களை வணங்கியபடி பாணர் தம்பதியரோடு திருத்தருமபுரத்தை வந்தடைந்தார்.

திருத்தருமபுர மக்கள் திரண்டு வந்து திருஞானசம்பந்தரையும் பாணர் தம்பதியரையும் வரவேற்றனர். சம்பந்தர் அடியார் சிலரோடு திருமடத்திற்குச் சென்று தங்கினார். திருத்தருமபுரம் யாழ்ப்பாணரின் தாயார் பிறந்து வளர்ந்த ஊராகும். அதனால் பாணரின் உறவினர்கள் பாணரையும் அவர்தம் மனைவியாரையும் அன்போடு தம் இல்லங்களுக்கு அழைத்துச் சென்று உபசரித்தனர்.

பாணர், சம்பந்தரின் திருப்பதிகப் பாடல்களைத் தம் யாழில் மீட்டிப் பாடக்கிடைத்த பெரும் பேற்றினை நினைந்து மகிழ்ந்தவராய் உறவினரிடம் சொன்னார்.

அப்பொழுது உறவினர் சிலர் உண்மையில் உங்கள் யாழிசையின் பெருமையால்தான் சம்பந்தர் பாடல்கள் சிறப்புப் பெற்றன என்று கூறினர். அது கேட்ட பாணர், கைகளால் காதுகளைப் பொத்தி மனம் நடுங்கி, அங்கிருந்து உடனே புறப்பட்டுச் சம்பந்தர் மடத்திற்குச் சென்று பெருமானே! உங்கள் திருப்பதிகத்தின் அளவற்ற பெருமையை என் உறவினர் மட்டும் அல்லாமல், யாவரும் அறிந்து கொள்ளும் பொருட்டுத் தேவரீர் நாளை ஆலயத்தில் ஒரு திருப்பதிகம் பாடியருளினால், அடியேன் அந்தப் பதிகத்தை யாழிலே வைத்து இசைக்க முடியாத இயலாமையை, எல்லார்க்கும் காண்பிக்க இயலும் என்று வேண்டினார்.
மறுநாள் சம்பந்தர், திருக்கோயிலுக்குப் பாணரொடும் மதங்கசூளாமணியாரொடும் அடியாரொடும் சென்றார். கோயிலில் பாணரின் உறவினரும், நட்பினரும், ஊராரும் சூழ்ந்து நின்றனர். அவர்கள் எல்லாரும் பாணரின் இசைப் புலமையைப் பற்றிப் பெருமையுடன் தமக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.

அவ்வேளையில், இறைவன் திருமுன்னர்ச் சம்பந்தர் காதலாகிக் கசிந்துருகி மனிதர் குரல்வளைக்கும், யாழுக்கும், இசை நூல்களில் சொல்லப்பட்ட பண்களுக்கும் புதிரான பண்ணில் பதிகம்பாடத் தொடங்கினார்.
மாதர்ம டப்பிடியும் மட அன்னமு மன்னதோர்
நடை யுடை மலைமகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படைநின் றிசைபாடவும் ஆடுவர்
அவர்படர் சடைந்நெடு முடியதொர் புனலர்
தேவமொ டேழிசைபா டுவ ராழ்கடல் வெண்டிரை
இரைந் நுரைகரை பொரு துவிம்மிநின் றயலே
தாதவிழ் புன்னைதயங் கும லர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில்தருமபு ரம்பதியே”

அப்பொழுது திருநீலகண்ட யாழ்ப்பாணர் அப்பதிகப் பாடலைத் தம் யாழில் வைத்து இசைத்துப் பாடும் திறத்தைச் சுவைக்க அனைவரும் காத்திருந்தனர். பாணரும் வழக்கம்போல் அப்பதிகப் பாடலைத் தம் யாழில்வைத்துப் பாட முற்பட்டார். என்ன வியப்பு! அப்பாடலை யாழில் வைத்துப் பாடப் பாணர் எவ்வளவோ முயன்றும் யாழிசைக்கு அகப்படாமல் அது மூரித்துச் சென்றது.

பாணர் தம் நிலை மறந்தார், பயம் மிகக் கொண்டார். எதிரில் நின்ற சம்பந்தரை வணங்கிப் பதிகம் பாடப் பயன்படாத இந்த யாழ் பாழே என்று சொல்லி அதனைத் தரையில் அடித்து உடைக்கப் போனார்.

உடனே சம்பந்தர் விரைந்து முன்வந்து பாணரைத் தடுத்து யாழினை வாங்கிக்கொண்டு ஐயரே! யாழை உடைக்கக் காரணம் என்ன? சிவபெருமானின் திருவருள் பாட்டெல்லாம் யாழில் அடங்கிவிடுமோ? உங்களால் இயன்ற இசையில் யாழில் வைத்துப் பாடித் தொடர்ந்து இசைப்பணியை ஆற்றுங்கள் என்று அறிவுரை கூறினார்.

இந்தத் தலவரலாற்றை அறிந்துகொண்ட நிறைவோடு ஆலயப் பிரகாரத்தை வலம்வந்து புறம்வந்தால் அன்னை தேனாமிர்தவல்லியைத் தரிசிக்கலாம். இறைவியின் திருநாமம் மதுர மின்னம்மை என்பது. அவள் தென்திசை நோக்கி மந்தகாசப் புன்னகையொடு காட்சி அளிக்கின்றாள்.

வைகாசி மூலத்திருநாளன்று தருமபுரம் விழாக்கோலம் கொண்டுவிடும். அன்றைய தினம் திருநீலகண்ட யாழ்ப்பாணர் முக்தி அடைந்த தினமாகும். வைகாசி மூலம் சம்பந்தர் சிவசோதியில் கலந்த திருநாள் என்று எண்ணத் தோன்றும். உண்மைதான். திருமணநல்லூரில் திருஞானசம்பந்தர் தம் தேவியரோடு மூவுலகிற்கும் ஒளிநிறையும்படியாக நின்றதோர் பெருஞ்சோதியில் புகுந்தபோது, அவருடன் அவரைவிட்டுச் சிறிதும் பிரியாத திருநீலகண்ட யாழ்ப்பாணரும் தம் மனைவியாருடன் அச்சோதியில் நுழைந்தார் என்பது வரலாறு.

எனவே சம்பந்தர் சிவத்தொடு ஐக்கியமான தினமே பாணரின் ஐக்கிய தினமாகும். இவ்வுலக வாழ்வில அல்லாமல் சிவலோக வாழ்விலும் சம்பந்தரோடு பாணரும் அவர்தம் மனைவியும் கலந்துவிட்ட உன்னதச் செயலை உணரும்பொழுது நம் நெஞ்சம் சிலிர்க்கின்றது. எனவே பாணரின் ஐக்கிய தினமாகிய வைகாசி மூலவிழாவின் போது மூலவர்க்குக் கண்பெற்றார் எல்லாம் கண்டு களிக்கும் படியாக அபிஷேக ஆராதனை நடைபெறும்.

பின்னர் அருள்மிகு யாழ்மூரிநாதர் சம்பந்தரொடும், யாழ்ப்பாணரொடும், சூளாமணியாரொடும் வீதியுலா எழுந்தருளி அருள் புரிவார். இவ்வாலயத்தில் 13-&ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று சிதைந்த நிலையில் காணப்படுகின்றது. இராஜகோபுர வாயிலின் தென்புறச் சுவரில் உள்ள அக்கல்வெட்டுப் பிற்காலச் சோழன் மூன்றாம் இராஜராஜன் காலத்தது. அவனது இருபதாவது ஆட்சி ஆண்டுக் காலத்தில் வெளியிடப்பட்டுள்ள அக்கல்வெட்டுப் பின்வரும் செய்தியைச் சொல்கின்றது:- ஆண்டுதோறும் பன்னிரண்டு அமாவாசைத் திருநாள்களில் இறைவன் திருக்கடலாட உலாவாக எழுந்தருளச் செய்யவும், பூமாலைகள் சார்த்தவும், திருவமுது படைக்கவும் கிளிஞலூர்த் தலைவன் அணுக்கன் விழுப்பரையன் என்பவன் நிலத்தானம் தந்தான்.

திருத்தருமபுரத்தில் பிறையையும் பாம்பையும் சடையினில் வைத்து எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானது திருவடிகளை வணங்குவார் சுவர்க்கம் அடைவார்; இவ்வுலகில் துன்பமும் நோயும் பெறமாட்டார் என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு என்பதால், திருவோங்கு தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான உயர்ந்து விளங்கும் யாழ்மூரிநாதர் திருக்கோயிலுக்குச் சென்று ஈசனை அன்னை தேனாமிர்தவல்லியுடன் வழிபட்டு நல்வாழ்வு பெறுவோமாக!

(யாழ்மூரிப்பண் தோன்றிய திருத்தலம் - திருமேனி நாகராசன்- நன்றி-ஓம்சக்தி ஆன்லைன்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக