ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:17

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

Top posting users this month
ayyasamy ram
எந்த நாட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் Poll_c10எந்த நாட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் Poll_m10எந்த நாட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த நாட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்

Go down

எந்த நாட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் Empty எந்த நாட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்

Post by ayyasamy ram Sun 11 Aug 2019 - 9:30

மேலை நாடுகளுக்கு சுற்றுலா மற்றும் உறவினர் வீடுகளுக்கு
செல்கிறீர்கள். அங்கு, நடைபெறும் திருமண நிகழ்ச்சியில்
கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தால், நீங்கள் போகும்
நாட்டில், என்ன நடைமுறை உள்ளது என, அறிந்து, அதன்படி
நடந்து கொள்வது நல்லது

* நம் நாட்டில், அன்பளிப்புகள் வழங்கும் முன், அதன்
விலையை பலர் கிழித்து விடுவர் அல்லது பேனாவால்
கிறுக்கி, விலை தெரியாதபடி மறைத்து விடுவர்

ஆனால், அமெரிக்காவில் இப்படி செய்வது அநாகரிகம்.
மாறாக, அன்பளிப்பு தருவோர், அதை வாங்கிய கடை
ரசீதுடனேயே தருவர். ஏனெனில், பிடிக்கவில்லை என்றால்,
அதே கடையில் கொடுத்து, மாற்றிக் கொள்ள தான்

* பண்டிகை சமயங்களில், பலர், நண்பர்களுக்கும்,
உறவினர்களுக்கும், அதிகாரிகளுக்கும், அன்பளிப்புகளை
தரும்போது, அந்த பொருள் மீது, 'தீபாவளி வாழ்த்து,
கிறிஸ்துமஸ் வாழ்த்து...' என்று, எழுதி கொடுப்பர்

ஆனால், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அப்படி
இல்லை. மாறாக, 'ஹேப்பி ஹாலிடேஸ்' என, குறிப்பிட்டு
தான் வழங்குவர். குறிப்பிட்ட பண்டிகையை சொல்லி
வழங்குவது, அங்கு, நல்ல பண்பாடாக கருதப்படுவதில்லை

* இந்தியாவில், ஓட்டலுக்கு கூட்டமாக சென்று சாப்பிடும்
போது, யார் அழைத்துச் செல்கிறாரோ அவர் தான்,
'பில்'லுக்குரிய பணத்தை தருவார்

ஆனால், ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் கூட்டாக
சென்றாலும், தனித்தனியாக, 'பில்' போடப்பட்டு, அவரவர்
சாப்பிட்டதற்கு, பணம் செலுத்துவர்.
நைஜீரியா மற்றும் கென்யா போன்ற நாடுகளிலும் இதே
போல தான்

* தென் கொரியாவில், பலர் சேர்ந்து ஓட்டலுக்கு சென்றால்,
யார், 'சீனியரோ' அவர் தான் பணம் கொடுப்பார். நாம்
குறுக்கிட்டு கொடுத்தால், அதை, அவர் ரசிக்க மாட்டார்

* சீனாவிற்கு செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
புத்தாண்டின் போது, அன்பளிப்பாக, பூக்களை வழங்கலாம்.
அதில், ரோஜா, துலிப், கார்னேஷன் ஆர்கிட்ஸ் மற்றும்
செம்பருத்தி போன்ற பூக்களை தரலாம்.

ஆனால், மறந்தும், வெள்ளை நிற பூக்களை தரக்கூடாது;
வெண்மை நிறம், அங்கு, துக்கத்தின் சின்னம்

* சிங்கப்பூரில், அன்பளிப்பாக, கடிகாரம் தருவதை ஏற்க
மாட்டார்கள். காரணம், கடிகாரம் மரணத்தை நினைவு
படுத்துவதாம்

* சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில், திருமணங்களுக்கு
வருவோர், முடிந்த வரை பணமாக கொடுத்து சென்று
விடுவர். பணம் கொடுப்பதிலும் கூட, சில முறைகள்
உள்ளன. பெரிய இடமாக இருந்து, திருமணம்
அமர்க்களமாக நடந்தால், குறைந்தது, 200 சிங்கப்பூர் டாலர்.
இந்திய மதிப்பில், 10 ஆயிரம் ரூபாய். இப்படி தருவது தான்,
கவுரவமாக கருதப்படுகிறது

* வெளிநாடுகளில், நாம் பயணிக்கும், 'லிப்ட்'டில், இடையில்
ஒருவர் வந்து சேர்ந்து கொண்டால், அவரை வரவேற்பது
போல், கையை உயர்த்தி வரவேற்பர். மேலும், பட்டன் அருகில்
யார் இருக்கிறாரோ, அவரிடமே நாம் செல்ல வேண்டிய
தளத்திற்கான பட்டனை அழுத்த சொல்ல வேண்டும்.
நம் நாடாக இருந்தால், எங்கிருந்தோ கையை நீட்டி, நமக்கு
வேண்டிய தளத்தை நாமே அழுத்துவோம். இப்படி செய்வதை,
பல நாடுகளில் அநாகரிகமாக கருதுகின்றனர்

* நம் நாட்டில், நமக்கு தெரிந்த ஒருவரை திடீரென சந்திக்கும்
போது, அவரை விசாரிப்பதுடன், 'அப்பா, அம்மா எப்படி
இருக்காங்க... நலமா...' என்றெல்லாம் கேட்போம். ஆனால்,
அமெரிக்காவில் அப்படி விசாரிப்பதை, அநாகரிகமாக கருதுவர்.
அத்துடன், 'அவங்க என்ன, செத்துக்கிட்டிருக்காங்கன்னு
உங்களுக்கு நினைப்பா...' என்று, சிலர் கோபப்படவும் கூடும்

* இங்கிலாந்தில், காரில் சென்று கொண்டிருக்கிறீர்கள்.
அப்போது, குழந்தையுடன் ஒருவர், சாலையை கடந்து
கொண்டிருக்கிறார். உடனே, நீங்கள் காரை நிறுத்தி, அவரை
செல்ல அனுமதிக்க வேண்டும். மாறாக, 'ஹாரன்' அடித்தால்,
அது, அநாகரிகமாக கொள்ளப்படும். சகட்டுமேனிக்கு,
'ஹாரன்' அடிப்பதையும் தவிர்க்கணும்

* சிங்கப்பூர் போன்ற நாடுகளில், நமக்கு உதவி செய்பவர்களுக்கு,
நன்றி சொல்வது சிறந்த பண்பாடாக கருதப்படும். டாக்சி டிரைவர்,
கதவை திறந்து விடுபவர் மற்றும் ஓட்டல் சப்ளையர்
போன்றவர்களுக்கு, நன்றி சொன்னால், அவர்கள், அகமகிழ்ந்து
போவர்

* அமெரிக்க உணவகங்களில் வேலை செய்வோர், ஒப்பந்த
கூலிகள். அவர்களுக்கு, 'டிப்ஸ்' கொடுத்தால், அதை ரசிப்பர்,
மகிழ்வர். ஆனால், ஜப்பானில், 'டிப்ஸ்' கொடுப்பது அநாகரிகம்

'ஆக, எந்த நாட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று
தெரிந்து, அதன்படி நடந்து கொண்டால், நம் மரியாதை
காப்பாற்றப்படும்...' என்று முடித்தார், நண்பர்.
-
--------------------------------------

அந்துமணி பா.கே.ப.,
நன்றி-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82312
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum