புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவுக் களஞ்சியம் Poll_c10பொது அறிவுக் களஞ்சியம் Poll_m10பொது அறிவுக் களஞ்சியம் Poll_c10 
10 Posts - 53%
heezulia
பொது அறிவுக் களஞ்சியம் Poll_c10பொது அறிவுக் களஞ்சியம் Poll_m10பொது அறிவுக் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 47%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவுக் களஞ்சியம் Poll_c10பொது அறிவுக் களஞ்சியம் Poll_m10பொது அறிவுக் களஞ்சியம் Poll_c10 
52 Posts - 60%
heezulia
பொது அறிவுக் களஞ்சியம் Poll_c10பொது அறிவுக் களஞ்சியம் Poll_m10பொது அறிவுக் களஞ்சியம் Poll_c10 
30 Posts - 35%
T.N.Balasubramanian
பொது அறிவுக் களஞ்சியம் Poll_c10பொது அறிவுக் களஞ்சியம் Poll_m10பொது அறிவுக் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பொது அறிவுக் களஞ்சியம் Poll_c10பொது அறிவுக் களஞ்சியம் Poll_m10பொது அறிவுக் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவுக் களஞ்சியம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 5:40 am

• அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் செட்னா.

• வுட் செரல் என்பது இரண்டு வகையான பூ பூக்கும் செடி.

• திருக்குறளில் பயன்படுத்தாத எழுத்து 'ஒள'.

• ஹைகூ என்பது ஜப்பான் நாட்டு கவிதை.

• உலகில் அதிக ஆண்டு வாழும் மனிதர்கள் ஜப்பானியர்கள்.

• மிக நீண்ட நாள் வாழும் உயிரினம் ஆமை.

• சீன நகரங்களில் ஒவ்வொரு வீட்டின் கதவிலும் அந்த வீட்டின் தலைவர் பெயர், மனைவி, மக்கள், பணியாளர், ஆடு, மாடு, நாய், குதிரை இவற்றின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த முறையினால் நகரின் மக்கள் தொகை, கால்நடைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அரசு அலுவலர்கள் எளிதில் கணக்கிடுகின்றனர்.

• ஹாக்கி என்ற சொல் ஹெகோ என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து பிறந்தது. ஹாக்கி விளையாட்டு கி.பி.514இல் தொடங்கப்பட்டது. ஹாக்கி மட்டை இடையர் கைக்கோலைப் பார்த்து உருவாக்கப்பட்டது. ஹாக்கி மைதானம் செவ்வக வடிவமாக இருக்க வேண்டும். அணிக்கு 11 பேர் விளையாடுவார்கள். 1860ம் ஆண்டில் லண்டனில் ஹாக்கி விளையாட்டு விதிகள் உருவாக்கப்பட்டன.

• ஒரு பூவுக்கு மேல் தாங்க வலிமையில்லாததால் காலையில் மலர்ந்து மாலையில் உதிர்ந்து அடுத்த பூவுக்கு இடமளிக்கும் தாவரம் நீலக்கண் புல்.

• வண்ணத் திரைப்படங்களுக்கு 'ஈஸ்ட்மேன் கலர்' என்று பெயர் சூட்டுவதுண்டு. அவ்வாறு சூட்டக் காரணம் என்ன தெரியுமா? 1883ம் ஆண்டில் முதன் முதலாக வண்ண புகைப்பட ஃபிலிம்மை ஈஸ்ட்மேன் என்பவர் கண்டுபிடித்தார். அதன் காரணமாக அவருடைய பெயரை வண்ண பிலிம்களுக்கு சூட்டலாயினர்.

• காக்காய் வலிப்பு நோய் வந்தவர்களை பார்த்திருப்பீர்கள். காக்கைக்கும் வலிப்புக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றும் இல்லை! கால், கை வலிப்பு என்பதுதான் காக்காய் வலிப்பு என பேச்சுவழக்கில் மருவியது.

• யானையின் காது முறம் போல இருக்கும் என்று கூறுவார்கள். யானையின் காதுக்கு செந்தமிழ்ப் பெயர் என்ன தெரியுமா? 'தலாடகம்' என்பது தான்.

• தலாடம் என்றால் என்ன தெரியுமா? ராமன் இலங்கைக்குச் சென்றபோது அணை கட்டினானே அப்போது எந்த சிறுபிராணி உதவியது? அணில் தானே! அணிலுக்கு இன்னொரு பெயர்தான் 'தலாடம்'.
• ஆறுகள், ஏரிகள், குளங்களில் பயணம் செய்ய உதவும் சிறுபடகுக்கு 'நடைச்சலங்கு' என்று பெயர்.

• கன்னியாகுமாரி முதல் மகாராஷ்டிரா வரை விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தோன்றி பாயும் நதிகளின் எண்ணிக்கை 36. இதில் கேரளாவில் மட்டும் 19 நதிகள் பாய்கின்றன. இந்த 19 நதிகளில் பாயும் தண்ணீரில் 85% அரபிக் கடலில் போய் சேர்கிறது.

• சவுதி அரேபியாவிலுள்ள கிங் காலித் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் தான் உலகின் மிகப் பெரிய விமான நிலையம். 236 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது இது.

• பாரீஸ் நகரில் நாய்களுக்கான பொது கழிப்பறை வசதி இருந்தது.

• பைபிள் 349 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

• காகிதத்திலிருந்தே காகிதம் தயாரிப்பதுதான் காகிதம் தயாரிப்பதற்கான மிக எளிய வழியாகும். புன்னகை மூன்று கோடி டன் காகிதக் கூழ் உற்பத்தி செய்ய இரண்டரை கோடி டன் கழிவுக் காகிதம் சேர்க்கப்படுகிறது. எழுதிய காகிதங்களை வீணாக்காமல் ஏழு முறை புதிய காகிதம் தயாரிக்க மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

• பெட்ரோலில் கலக்கும் ஒருவகை ஈயம் 1921ல் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் வாகனங்கள் எளிதாக இயங்கின. ஆனால், ஈயம் கலந்த பெட்ரோல் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்று கருதி அது தவிர்க்கப்பட்டது.
• 1925ம் ஆண்டில் தான் இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடித்து வெளியிடப்பட்டன.

• நாணயத்தில் தனது உருவத்தை பொறித்த முதல் அரசர் அலெக்ஸாண்டர்.

• தவளைகள் பெரும்பாலும் குளம், குட்டைகளில் தான் அதிகம் வசிக்கின்றன. கடல்களில் இவை வசிப்பதில்லை.

• பெரும்பாலும் சிறு விலங்குகளின் இதயத் துடிப்பு அதிகமாகவும், பெரியனவற்றின் துடிப்பு குறைவாகவும் இருக்கிறது. சிறு விலங்குகளின் உடலிலிருந்து அதிக வெப்பம் வெளியேறுவதால் அதை ஈடு செய்கின்ற வகையில் இதயத்துடிப்பும் அதிகரிக்கின்றது.

• பாலூட்டிகளான திமிங்கலங்கள் காற்றை சுவாசிக்க நீர்மட்டத்திற்கு வந்தாக வேண்டும். அவ்வாறு வரும் போது இரண்டே செக்கண்டுகளில் 530 காலன் வரை காற்றை அவை இழுத்துக் கொள்கின்றன.

• தவளை இனத்தை சேர்ந்த தேரைகள் பார்க்க அருவெறுப்பாக தோற்றமளித்தாலும் பூச்சிகளை அழிப்பதில் அவை முக்கிய இடத்தை வகிக்கின்றன. மூன்று மாத காலத்தில் ஒரு தேரை 10000க்கும் மேற்பட்ட பூச்சிகளை உணவாகக் கொள்கிறது.


ஐன்ஸ்டீன் சொல்கிறார்.....


எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிடையாதப்பா. ஆனால் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என மட்டும் எனக்குத் தெரியும்.

அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரே கேள்வி. நான் பைத்தியமா? இல்லை மற்றவர்களா?

அறிவியல் அற்புதமானது தான். ஆனால் அதுவே பிழைப்பாய் இருக்காதவரை.

ரொம்ப முக்கியமானது என்னவென்றால் கேள்வி கேட்பதை நிறுத்த கூடாது.

கடவுள் முன் நாம் எல்லாரும் சம அளவு அறிவாளிகள்,சம அளவு முட்டாள்கள்.

கற்பனாவளம் அறிவைவிட மிக முக்கியமானதாக்கும்.

A-யை வெற்றி யென நான் கொண்டால் என் சூத்திரம் A = X + Y + Z
அதாவது இங்கு X உழைப்பையும் Y விளையாட்டையும் Z வாயை மூடிக்கொண்டு கம்னு இருத்தலையும் குறிக்கும்.

ஒரே நேரத்தில் யாரும் போருக்கும் சமாதானத்துக்கும் தயாராக முடியாது.

மூன்றாவது உலகப்போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமென எனக்கு தெரியாது.ஆனால் நான்காம் உலகப்போரில் கம்புகளும் கல்லுகளும் தான் பயன்படுத்தப்படும்.

ஆகாயமண்டலத்துக்கும் மனிதனின் முட்டாள் தனத்துக்கும் முடிவே இல்லை. முன்னதுக்கு முடிவிருந்தாலும் இருக்கலாம்.

தவறே செய்திராதவர்கள் புதுசாய் எதையும் முயலாதவர்கள் தாம்.

காதலில் விழுதலுக்கெல்லாம் புவி ஈர்ப்புவிசை காரணமாகாதையா.

உலகிலேயே புரிந்து கொள்ள முடியாத ரொம்ப கஷ்டமான ஒன்று இன்கம்டாக்ஸ்.

சிலவை எளிதாயிருக்க வேண்டும் தான். ஆனால் ரொம்ப ரொம்ப எளிதாய் அல்ல.

கடவுள் என்ன நெனைப்பில் இருக்கிறார்னு விளங்கிக்கனும், மற்றவையெல்லாம் விளக்கமாயுள்ளன.

நேரம் என ஒன்றிருக்க காரணம், எல்லாம் ஒரே சமயத்தில் நடக்காததால் தான்.

சூடேறிப்போயிருக்கும் ஓர் அடுப்பில் நீங்கள் ஒரு நிமிடமே கையை வைத்தாலும் அது ஒரு மணிநேரம் போல் தோன்றும். ஆனால் அழகான பெண்ணோடு ஒரு மணிநேரமாய் பேசினாலும் அது ஒரு நிமிடமாய் தான் தோன்றும். அதான் ரிலேடிவிட்டி.

உலகை புரிஞ்சிக்கவே முடியாத காரணம் அதை புரிந்துகொள்ள முடிவதுதான்.

கடவுள் உலகை படைத்த போது அவருக்கு வேறு எதாவது தெரிவு இருந்ததாவென அறிய ஆவல்.

வெற்றிகரமான மனிதனாவதைவிட மதிப்பிற்குரிய மனிதனாதல் வேண்டும்.

உதாரணமாய் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டவேண்டும். அதுவே வழிகாட்ட சிறந்த வழி.

நான் கற்றுக்கொள்ள அதிகம் தொல்லை கொடுப்பது என் கல்வியே.

நிஜம் ஒரு மாயை. ஆனால் பாருங்கள் அதுதான் நிலைத்திருக்கின்றது.

எதிர்காலத்தை பற்றி ரொம்ப யோசிப்பதில்லை. அது சீக்கிரமாய் வந்துவிடுகின்றதே.

-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)



நன்றி கதிர்வேல்

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 26, 2009 11:07 am

இதுவரை விடை தேடிக்கொண்டிருந்த சில புதிரான கேள்விகளுக்கும் இந்த பதிவின் மூலம் விடை கிடைத்தது.


நன்றி தாமு........

நன்றி



பொது அறிவுக் களஞ்சியம் Eegaraitkmkhan
பொது அறிவுக் களஞ்சியம் Logo12
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 11:10 am

நன்றி கான்.... பொது அறிவுக் களஞ்சியம் 154550 பொது அறிவுக் களஞ்சியம் Icon_lol

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 30, 2009 7:40 am

  • ஜெர்மனியிலுள்ள "பிஷப்பிரௌன்" கலங்கரை விளக்கம்தான் உலகின் மிகப்பெரிய கலங்கரை விளக்கமாகும். இது ஒரு லட்சம் மெழுகுவர்த்தியின் ஒளித்திறனுடையது. இது சுமார் 50 கிலோமீட்டர் தொலைவு வரை ஒளி வீசுகிறது.

  • மகாத்மா காந்தியடிகள் நடத்திய யங் இந்தியா எனும் பத்திரிகையில் கடைசி வரை ஒரு விளம்பரம் கூட இடம்பெறவில்லை.

  • சூரியகிரகணத்தின் கால அளவு 7 நிமிடம் 31 வினாடி.

  • தமிழ், ஜப்பான் மொழிகளுக்குப் பொதுவாக ஏறக்குறைய 300 சொற்களும், ஒரே பொருள் தரக்கூடிய 510 சொற்களும் இருக்கின்றன.

  • டெர்மைட் எனும் பூச்சியினமும் எறும்புகளைப் போல் உழைக்கக் கூடியது.

  • மனிதன் முதன்முதலில் பயன்படுத்திய உலோகம் செம்பு.

  • உலகிலேயே அதிகமான மக்கள்தொகை உள்ள நகரம் சீனாவில் உள்ள ஷாங்காய் நகரம்தான்.

  • 100 பூஜ்யங்கள் உடைய எண்ணை ஆங்கிலத்தில் கூகால் என்கின்றனர்.

  • உலகம் முழுவதும் ஏறத்தாழ 5 ஆயிரத்து 800 மொழிகள் உள்ளன.

  • நத்தையால் மணிக்கு 3 மீட்டர் தூரம்தான் செல்ல முடியும்.

  • சிங்கப்பூரில் நாய் வளர்ப்பது சட்டவிரோதச் செயலாம்.

  • இஸ்ரேல் நாட்டில் இருக்கும் டமாஸெக் எனும் வகை மரம் தீப்பிடிப்பதில்லை.

  • அமெரிக்க மலைக்காடுகளில் வசிக்கும் ஒபாஸம் எனும் பிராணிக்கும் கங்காருவைப் போல் அடிவயிற்றில் ஒரு பை இருக்கும்.


  • தாமு
    தாமு
    வழிநடத்துனர்

    பதிவுகள் : 13859
    இணைந்தது : 27/01/2009
    http://azhkadalkalangiyam.blogspot.com

    Postதாமு Fri Oct 30, 2009 7:50 am

  • பகவான் புத்தர் அவதரித்தது, போதிமரத்தடியில் ஞானம் பெற்றது, புத்தர் இந்த உலகை விட்டு மறைந்தது இம்மூன்றும் வைகாசி மாதம் பவுர்ணமி தினத்தில்தான்.

  • உலகிலேயே மிகவும் உயரமுடைய பழங்குடியினர் ருவாண்டா நாட்டில் வசிக்கும் வாட்டுஸி எனும் பழங்குடி மக்கள்தான். இவர்களில் ஆண்கள் சராசரியாக ஆறு அடி ஐந்து அங்குலம் வரையிலும், பெண்கள் சராசரியாக ஐந்து அடி பத்து அங்குலம் வரையிலும் உயரம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

  • உலகிலுள்ள மொத்த எரிமலைகளில் சரிபாதி எரிமலைகள் இன்னும் பொங்கி எரிந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த எரிமலைகள் பெரும்பாலும் பசிபிக் பெருங்கடலின் கரைகளைச் சுற்றியேதான் அமைந்துள்ளன.

  • கரையான்கள் துணிகளையோ, புத்தகங்களையோ நேரிடையாக அரிப்பதில்லை. அங்கு சென்றதும் அவை முட்டையிடுகின்றன. அந்த முட்டைகளிலிருந்து வெளிவரும் புது ஜீவன்கள்தான் சேதம் செய்கின்றன.

  • ஆண்டுதோறும் மழை மூலமும், பனி மூலமும் 97,000 கன் கிலோ லிட்டர் நல்ல தண்ணீர் பூமிக்குக் கிடைக்கிறது. இதில் 1.5 சதவிதம் தண்ணீர்தான் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

  • அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் மிக வேகமாகச் சென்று கலக்கிறது. இந்த வேகத்தால் அமேசான் நதியின் முகத்துவாரத்திலிருந்து கடலினுள் நூற்றிருபது கிலோ மீட்டர் தூரம் வரை இருக்கும் நீர் நல்ல நீராகவே இருக்கிறது.

  • மொசாம்பிக் (Mozambique) நாட்டிற்கு ஒரு சிறப்பு அதன் பெயரில் இருக்கிறது. அதன் ஆங்கிலப் பெயரில் a, e, i,o,u ஐந்து வவ்வல்ஸ் (Vowels) இருக்கிறது.

  • பிரான்ஸ் நாட்டில் 24 மணி நேரத்தைக் காட்டும் கடிகாரங்கள் அதிகமாகப் பயன் படுத்தப்படுகிறது.

  • அச்சடிக்கப்பட்ட முதல் வங்கிக் காசோலை 1763-ஆம் ஆண்டு லண்டனில்தான் அறிமுகமானது. அங்கேயிருந்த ஹோர்சஸ் வங்கிதான் இந்தக் காசோலை முறையை அறிமுகம் செய்தது.

  • ஆசியாவின் மிகச் சிறிய நாடான மாலத்தீவில் இரண்டாயிரம் சிறிய பவளத்தீவுகள் உள்ளன. இந்நாட்டின் பெரும்பாலான ஆண்கள் மீன்பிடிப்பதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.


  • தாமு
    தாமு
    வழிநடத்துனர்

    பதிவுகள் : 13859
    இணைந்தது : 27/01/2009
    http://azhkadalkalangiyam.blogspot.com

    Postதாமு Fri Oct 30, 2009 7:52 am

    வெற்றிலைச் செய்திகள்.
    நம் தமிழர்களிடையே எந்த முக்கியமான வைபவமாக இருந்தாலும் வெற்றிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த வெற்றிலை தமிழ்நாட்டில் கும்பகோணம் பகுதியிலும், தேனி மாவட்டத்தில் பெரியகுளம், சின்னமனூர் பகுதியிலும் அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. இருப்பினும் வெற்றிலை என்றால் கும்பகோணம் தான் என்கிற அளவிற்கு கும்பகோணம் வெற்றிலை பிரசித்தம்.
    வெற்றிலைப் பயிருக்கு பயிர் செய்ய விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டிப் பதியம் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். வெற்றிலையை பயிர் செய்யும் நிலப்பகுதியை கொடிக்கால் என்று அழைக்கின்றனர்.
    (தேனி மாவட்டத்தில் வெற்றிலையை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிர் செய்கிறார்கள். இவர்கள் கொடிக்கால் பிள்ளைமார் என்று அழைக்கப்படுகிறார்கள்.) வெற்றிலையில் கருகருவென்று கரும்பச்சை நிறத்திலிருப்பது ஆண் வெற்றிலை என்றும் இளம்பச்சை நிறத்திலிருப்பது பெண் வெற்றிலை என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள்.
    இந்த வெற்றிலைக்கு பல மருத்துவ குணங்கள் இருப்பதால் சித்த மருத்துவத்தில் இது பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் மட்டுமில்லை வெற்றிலை சில சம்பிரதாயங்களுக்காகவும் பிற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


    • சீனர்கள் வெற்றிலையை இடது கையால் வாங்க மாட்டார்கள். நம் நாட்டிலும் இப் பழக்கம் இருந்து வருகிறது.


    • சுமித்ராவில் மனைவியை விட்டுப் பிரிய விரும்பும் கணவன் வெற்றிலையை அவளிடம் கொடுத்துத் "தலாக்" என்று மூன்று தடவை கூறி விட்டால் விவாகரத்து ஆகிவிட்டதாக அர்த்தம்.


    • தூக்கிலிடுவதற்கு முன்பு குற்றவாளிகளுக்கு வெற்றிலை பாக்கு கொடுக்கும் வழக்கம் மியான்மரில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.


    • சிறையில் அடைபட்டுக் கிடக்கும் கைதிகளுக்கு மலேரியா போன்ற நச்சுக் காய்ச்சல் வராமல் இருக்க அவர்களுக்கு வெற்றிலை கொடுப்பது நெதர்லாந்து நாட்டின் வழக்கம்.


    • சண்டை போட்டுக் கொள்பவர்கள் சமாதானம் அடைய வெற்றிலை மாற்றிக் கொள்வது மலேசியா வழக்கம்.
    கணேஷ் அரவிந்த்.


    தாமு
    தாமு
    வழிநடத்துனர்

    பதிவுகள் : 13859
    இணைந்தது : 27/01/2009
    http://azhkadalkalangiyam.blogspot.com

    Postதாமு Fri Oct 30, 2009 7:54 am


  • பூக்கள் குறித்த சில தகவல்கள்

  • பூக்கள் என்பதற்கான ஆங்கிலச் சொல்லான "ஃபிளவர்ஸ்" க்கு "எந்தப் பொருளிலும் சிறந்தது" என்று கூறுகிறது வெப்ஸ்டர் எனும் ஆங்கில அகராதி.

  • இறைவனை பூக்களைக் கொண்டு அர்ச்சித்து வழிபாடு செய்வதை பூ+செய் என்றார்கள். அதுவே பூஜை என்று மருவி விட்டது.

  • கிறித்துவர்களின் வேத நூலான பைபிளில் லில்லி எனும் மலர் பல இடங்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.

  • இசுலாமியர்களின் புனித நூலான திருக்குர் ஆனில் எந்தப் பூவின் பெயரும் இடம் பெறவில்லை.

  • இறைவனின் வழிபாட்டுக்குரிய பூக்களை எடுத்து நுகர்ந்து பார்த்த குற்றத்திற்காக "கழற்சிங்கன்" எனும் அரசன் தனது பட்டத்து ராணியின் மூக்கையும் கையையும் வெட்டி எறிந்து விட்டான்.

  • எறிபத்த நாயனார் எனும் சிவனடியார் "இறைவனுக்குச் சூட வேண்டிய மலரின் தூய்மை மாசுபட்டு விடும்" என்று கருதி தனது வாயைத் துணியால் கட்டிக் கொண்டுதான் நந்தவனத்தில் பூக்கள் பறிப்பாராம்.

  • காஷ்மீரில் பூக்கும் மலர்களில் 90 சதவிகித மலர்களுக்கு மணம் கிடையாதாம்.

  • பூசனிச் செடியில் காய்க்கும் பூ, காய்க்காத பூ என்று இரு வகையான பூக்கள் பூக்கின்றன.

  • மிக உயர்ந்த பூக்காத தாவரம் ஃபெர்ன் மரம்தான்.

  • காந்தள் மலர்தான் கார்த்திகைப்பூ என்று அழைக்கப்படுகிறது.

  • பன்னீர்ப்பூக்கள் இரவில்தான் மலர்கின்றன.

  • குறிஞ்சி மலர்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூக்கின்றன.

  • பாதிரி என்கிற மலர் நடுப்பகலில் மலரக் கூடியது.
  • கணேஷ் அரவிந்த்.


    தாமு
    தாமு
    வழிநடத்துனர்

    பதிவுகள் : 13859
    இணைந்தது : 27/01/2009
    http://azhkadalkalangiyam.blogspot.com

    Postதாமு Fri Oct 30, 2009 7:59 am


  • மாக்வீஸல் தீவில் வசிக்கும் ஒரு பிரிவினரிடையே திருமணத்திற்கு வந்திருக்கும் ஆண் விருந்தினர்களை வரிசையாகப் படுக்க வைத்து அவர்களின் முதுகின் மீது அடியெடுத்து வைத்து நடந்து மணமகன் மணமேடைக்குச் செல்வான். பின்னர் இதர சடங்குகள் துவங்குமாம்.

  • ஐரோப்பாவிலுள்ள கொலூஸா என்னும் பூர்வ குடிகளிடையே மணப்பெண் மணமகனைச் சொறிவது ஒரு முக்கியச் சடங்கு. இதை மணவாழ்வைத் தொடங்க நல்ல யோகமாக அவர்கள் கருதுகிறார்களாம்.

  • ஜெர்மனியில் வெஸ்ட்பேலியா எனுமிடத்தில் மணத்தம்பதிகளின் வீட்டு வாசலில் வாலிபர்கள் கூடி தகர டப்பாக்களைத் தட்டி சத்தமேற்படுத்துவார்களாம். இதை பேய் பிசாசுகளை ஓட்டுவதற்காக செய்கிறார்களாம். இதுபோல் ஜெர்மனி முழுவதும் திருமண நாளுக்கு முதல் நாள் மணப்பெண் வீட்டு வாசலில் மண்பானைகளைப் போட்டு உடைக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப் படுகிறதாம்.

  • அமெரிக்காவில் திருமண விருந்துக்கு வந்தவர்கள் மணமக்கள் வெளியே செல்லும் போது கோதுமையை அவர்கள் மீது போடுகிறார்களாம்.

  • இந்தியாவில் பஞ்சாப்பில் ஒரு வகுப்பினரிடையே மணமகள் வீட்டுக்கு மணமகன் செல்லும் போது வாசலில் ஒரு சல்லடையைக் கட்டித் தொங்க விடுகிறார்கள். சல்லடையில் துளைகள் இருக்கும் அளவிற்குப் பெண்ணிடம் குறைகள் பல இருந்தாலும் அதை நல்ல குணத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். குறைகளை எல்லாம் தள்ளிப் பெண்ணை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக மணமகன் ஒரு இரும்பு ஆயுதத்தால் அந்த சல்லடையைக் கிழித்து அதன் பின்புதான் மணமகள் வீட்டிற்குள் செல்ல வேண்டுமாம்.

  • இந்தியாவின் இமயமலைச் சாரலில் உள்ள கொடுவா எனும் கிராமத்திலுள்ள மக்களின் சகோதரர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்கள் பஞ்ச பாண்டவர்களை தங்கள் தெய்வமாகக் கருதி வழிபடுகிறார்களாம்.

  • இந்தியாவில் காஷ்மீரில் மணப்பெண் திருமணச் சடங்குகளில் கலந்து கொள்வதில்லை. தனக்குப் பிரதிநிதியாக ஒரு ஒட்டகத்தை அனுப்பி வைக்கும் வழக்கம் அவர்களிடமிருக்கிறது.

  • எத்தியோப்பியாவிலுள்ள கல்லாஸ் எனும் குடிமக்களிடையே திருமணத்தின் போது மணமகன் மணமகளைத் தூக்கி ஒரு பெரிய நீர்த்தொட்டியில் மூழ்கி எழ வேண்டும். அப்போது எவ்வளவுக்கெவ்வளவு சப்தம் எழுகிறதோ அவ்வளவுக்குத் திருமணம் சிறப்பானதாகக் கருதப்படும்.

  • ஜெர்மனியில் ஒரு சிலரிடையே வினோதமான சுயம்வரம் முறை உள்ளது. இதன்படி திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஜோடிகள் இருவருக்குமிடையே ஒரு மரக்கட்டை வைக்கப்படும். இரட்டைக் கைப்பிடியுள்ள ரம்பம் ஒன்றைக் கொடுத்தி அந்த மரக்கட்டையை இரண்டாக அறுக்கச் சொல்வார்கள். இருவரும் ஒரே வேகத்தில் இழுத்தால்தான் அறுப்பது சுலபமாக இருக்கும். ரம்பம் உடையாமல் மரக்கட்டையை வெற்றிகரமாக அறுத்து முடிக்கும் ஜோடிகளுக்கு நல்லப் பொருத்தம் இருப்பதாக கருதி திருமணம் செய்து வைக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப் படுகிறது.

  • பின்லாந்து நாட்டில் திருமணத்திற்கு வருபவர்கள் பரிசு கொடுக்காமல் வந்துவிட முடியாது. வந்தவர்களின் கழுத்தைக் கட்டிக்கொண்டு மணப்பெண் அழத் தொடங்கி விடுவாள். வந்தவர்கள் அழுகை பொறுக்காமல் பரிசுகளை அளிப்பார்களாம்.

  • டியூட்டன் எனும் இன மக்கள் திருமணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒரு மாதம் வரை ஒரே கிண்ணத்தில் தேன் அருந்த வேண்டும் என்பது ஒரு சடங்கு. ஆங்கிலேயர்கள் அந்த நிகழ்ச்சியை "ஹனி மன்த்" என்று அழைத்தனர். இது பின்னால் ஹனிமூன் ஆகிவிட்டது.
  • கணேஷ் அரவிந்த்.


    தாமு
    தாமு
    வழிநடத்துனர்

    பதிவுகள் : 13859
    இணைந்தது : 27/01/2009
    http://azhkadalkalangiyam.blogspot.com

    Postதாமு Fri Oct 30, 2009 8:00 am

  • கேட்பிஷ் என்று ஒருவகை மீன் உள்ளது. ஆண் மீனின் வாயில் பெண் முட்டை இடுகிறது. ஒரு மாத காலம் அது வாயிலேயே வைத்துக் கொண்டிருக்கிறது. குஞ்சு வெளிப்பட்ட பிறகும் இரண்டு வாரம் வாயிலேயே இருக்கும். வாயில் 50 முட்டைகளுக்கு மேல் இருக்கும். எனவே இந்த ஆறு வார காலத்திற்கு அது எதுவுமே சாப்பிடுவதில்லை.

  • பப்பாளியிலிருந்து 100 வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. பப்பாளியின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பாபைன் எனும் மருந்து தோல் வியாதிகளையும் கண் நோய்களையும் குணப்படுத்துகிறதாம்.

  • பெட்ரோலில் நீந்த முடியாது. காரணம், ஒரு கன அடி பெட்ரோலின் எடை 6.3 பவுண்ட் இருக்கும். நீரின் எடையோ ஒரு கன அடிக்கு 8 பவுண்ட். நீரை விட பெட்ரோல் இலேசாக அதாவது அடர்த்தி குறைவாக இருப்பதால் அதில் நீந்த முடியாது.

  • நாம் பற்பசையை அளவோடு உபயோகிக்க வேண்டும். ஒரு வருடம் முழுவதும் 565 கிராம் பசையைத்தான் தேய்க்கலாம் என்று பல் மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படியானால் ஒரு மாதத்திற்கு 50 கிராம் பற்பசை போதுமானது.

  • ஒரு டன் மரத்தையும் ஒரு டன் இரும்பையும் தராசின் இரு தட்டுகளில் வைத்து எடை போட்டால் மரத்தின் எடை இரும்பின் எடையை விட சற்று கூடுதலாக இருக்கும். இதற்குக் காரணம் மரப் பொருள்களின் அளவுகளின் மேல் தாக்கும் காற்றின் அழுத்தமே.

  • இந்தியாவின் திட்ட நேரம் 85 டிகிரியில் அமைந்திருக்கும் அலகாபாத் நேரத்தையொட்டிக் கணக்கிடப்படுகிறது. கிரீன்வீச் நேரத்திற்கு 5.30 மணிகள் முன்னதாக இது கணக்கிடப்பட்டுள்ளது.

  • இந்தியாவில் நாம் சும்மா (இலவசமாய்) கிடைத்ததை ஓசியில் கிடைத்த்து என்கிறோம். இந்த ஓசி என்கிற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா? கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியிலிருந்த இந்தியாவில் அவர்கள் அனுப்பும் தபால்களில் ஓ.சி.எஸ் என்கிற முத்திரை குத்தப்பட்டிருக்கும். ஆன் கம்பெனி சர்வீஸ் என்கிற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமான இந்த ஓ.சி.எஸ் முத்திரை குத்தப்பட்ட தபால்கள் ஸ்டாம்ப் ஒட்டப்படாமல் சென்றதால் ஓசியில் பொகிறது என்று அதனைச் சொல்வார்கள். நாளடைவில் சும்மா கிடைக்கும் அனைத்தும் ஓசியாகி விட்டது.

  • ஹம்மிங் சிட்டு எனப்படும் ஒருவகை பறவை இனத்தில் ஒரு சிட்டுக்கும் மற்றொரு சிட்டுக்கும் சண்டை வந்து விட்டால் பலமுடைய சிட்டு மற்ற சிட்டுவின் நாக்கைப் பிடித்து இழுத்துத் துண்டித்து விடுமாம். நாக்கை இழந்த சிட்டு அதன் பிறகு உணவு உட்கொள்ள முடியாமல் இறந்து விடுமாம்.

  • ஹாலந்திலிருக்கும் விவசாயிகள் டிசம்பர் மாதத்தில் கிணற்றின் மீது நின்று கொம்பு எனும் வாத்தியத்தை வைத்து ஊதுவார்களாம். இப்படிச் செய்தால் தாங்கள் வளர்க்கும் ஆசு, மாடு, கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகள் நோய் வந்து சாகாது என்பது அவர்கள் நம்பிக்கை.

  • ஸ்பானிய மொழியில் மனைவியை எஸ்போஸா என்று குறிப்பிடுகிறார்கள். அந்த மொழியில் கைவிலங்கையும் எஸ்போஸா என்றுதான் சொல்கிறார்கள்.
  • நன்றி கணேஷ் அரவிந்த்.


    மீனு
    மீனு
    வி.ஐ.பி

    வி.ஐ.பி
    பதிவுகள் : 12052
    இணைந்தது : 08/04/2009

    Postமீனு Fri Oct 30, 2009 12:40 pm

    ஒரு பூவுக்கு மேல் தாங்க வலிமையில்லாததால் காலையில் மலர்ந்து மாலையில் உதிர்ந்து அடுத்த பூவுக்கு இடமளிக்கும் தாவரம் நீலக்கண் புல்

    எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிடையாதப்பா. ஆனால் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என மட்டும் எனக்குத் தெரியும். YES YES

    அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரே கேள்வி. நான் பைத்தியமா? இல்லை மற்றவர்களா?YES YES

    அறிவியல் அற்புதமானது தான். ஆனால் அதுவே பிழைப்பாய் இருக்காதவரை. பொது அறிவுக் களஞ்சியம் Icon_eek

    ரொம்ப முக்கியமானது என்னவென்றால் கேள்வி கேட்பதை நிறுத்த கூடாது.YES YES

    கடவுள் முன் நாம் எல்லாரும் சம அளவு அறிவாளிகள்,சம அளவு முட்டாள்கள். பொது அறிவுக் களஞ்சியம் Icon_eek

    கற்பனாவளம் அறிவைவிட மிக முக்கியமானதாக்கும். பொது அறிவுக் களஞ்சியம் 677196



    Sponsored content

    PostSponsored content



    Page 1 of 3 1, 2, 3  Next

    View previous topic View next topic Back to top

    மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

    ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

    உறுப்பினராக பதிவு செய்க

    ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


    பதிவு செய்ய

    உள்நுழைக

    ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


    உள்நுழைக