புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  Poll_c10உலகச் செய்திகள்!  Poll_m10உலகச் செய்திகள்!  Poll_c10 
19 Posts - 49%
heezulia
உலகச் செய்திகள்!  Poll_c10உலகச் செய்திகள்!  Poll_m10உலகச் செய்திகள்!  Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  Poll_c10உலகச் செய்திகள்!  Poll_m10உலகச் செய்திகள்!  Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
உலகச் செய்திகள்!  Poll_c10உலகச் செய்திகள்!  Poll_m10உலகச் செய்திகள்!  Poll_c10 
1 Post - 3%
Guna.D
உலகச் செய்திகள்!  Poll_c10உலகச் செய்திகள்!  Poll_m10உலகச் செய்திகள்!  Poll_c10 
1 Post - 3%
Shivanya
உலகச் செய்திகள்!  Poll_c10உலகச் செய்திகள்!  Poll_m10உலகச் செய்திகள்!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  Poll_c10உலகச் செய்திகள்!  Poll_m10உலகச் செய்திகள்!  Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  Poll_c10உலகச் செய்திகள்!  Poll_m10உலகச் செய்திகள்!  Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  Poll_c10உலகச் செய்திகள்!  Poll_m10உலகச் செய்திகள்!  Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  Poll_c10உலகச் செய்திகள்!  Poll_m10உலகச் செய்திகள்!  Poll_c10 
10 Posts - 2%
prajai
உலகச் செய்திகள்!  Poll_c10உலகச் செய்திகள்!  Poll_m10உலகச் செய்திகள்!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உலகச் செய்திகள்!  Poll_c10உலகச் செய்திகள்!  Poll_m10உலகச் செய்திகள்!  Poll_c10 
9 Posts - 2%
jairam
உலகச் செய்திகள்!  Poll_c10உலகச் செய்திகள்!  Poll_m10உலகச் செய்திகள்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  Poll_c10உலகச் செய்திகள்!  Poll_m10உலகச் செய்திகள்!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
உலகச் செய்திகள்!  Poll_c10உலகச் செய்திகள்!  Poll_m10உலகச் செய்திகள்!  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகச் செய்திகள்!  Poll_c10உலகச் செய்திகள்!  Poll_m10உலகச் செய்திகள்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 1 of 81 1, 2, 3 ... 41 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:06 pm

சிங்கப்பூரில் அரசு இணையதளத்தை முடக்கிய வாலிபர் கைது

சிங்கப்பூரில் பிரதமர் லீ, ஜனாதிபதி டோனி தான் ஆகியோரின் இணையதளத்தில் ஊடுருவி கடந்த வாரம் முடக்கினர். இந்நிலையில் டவுன் கவுன்சில் இணையதளமும் முடக்கப்பட்டது. இச்சம்பவத்தை யட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஜேம்ஸ் ராஜ்(35) என்பவரை கைது செய்தனர்.

பிறகு அவர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:12 pm

பாக். தீவிரவாத இயக்க தலைவரின் மகன் சுட்டுக்கொலை; இந்திய தூதரக தாக்குதலில் தொடர்புடையவர்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் செயல்படும் ஹக்கானி தீவிரவாத அமைப்பின் தலைவர் ஜலாலுதீன் ஹக்கானி. இவருடைய மூத்த மகன் நசிரூதின் ஹக்கானி நேற்று இரவு இஸ்லாமாபாத் அருகே உள்ள பராகாஹூ என்ற இடத்தில் மசூதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் திடீரென்று அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். ஆனால் போலீசார் இந்த சம்பவத்தை உறுதி செய்ய மறுத்து விட்டனர்.

கொல்லப்பட்ட நசிரூதின் ஹக்கானி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைக்கு எதிராகவும், காபூல் நகரில் இந்திய தூதரகம் தாக்கப்பட்ட சம்பவங்களில் தொடர்புடையவர். மேலும் ஹக்கானி அமைப்பின் முக்கிய பேச்சுவார்த்தை பணிகளில் ஈடுபட்டு வந்தவர். முன்பு வடக்கு வசிரீஸ்தான் பகுதி ஹக்கானி தீவிரவாத இயக்கத்தில் அதிக ஈடுபாடு வைத்திருந்தார். ஏற்கனவே ஜலாலுதீனின் 3 மகன்கள் கொல்லப்பட்டு விட்டனர்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:15 pm

ரூ.15 லட்சத்துக்கு கற்பை விலை பேசும் பெண்

உலகச் செய்திகள்!  Ladies-9re51

ரஷிய ஏல இணையதளம் மூலம் 18 வயது இளம்பெண் ஒருவர் தனது கற்பை ரூ.15 லட்சத்துக்கு (24,600 டாலர்) விலை பேசினார். அவர் தனது பெயரை ஷாதுனிகா என்று குறிப்பிட்டு, பணம் அவசரமாக தேவைப்படுகிறது. அதனால் என்னுடைய உயர் மதிப்பிற்குரிய பொருளை (கன்னித்தன்மை) விற்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

அதோடு தன்னுடைய கன்னித்தன்மை குறித்த சான்றிதழுடன் ஓட்டலில் வந்து சந்திப்பேன் என்று முகவரியும் பதிவு செய்திருக்கிறார்.

இந்த அழைப்பை ஏற்று ஒருவர் ரூ.16 லட்சத்து 70 ஆயிரம் (27,700 டாலர்) தருவதாக பேரமும் பேசி விட்டார்.

இது பற்றி இந்த இளம்பெண் வசிக்கும் பகுதி போலீசார் கூறுகையில், அவர் சட்டத்தை மீறியதாக தெரியவில்லை என்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:17 pm

காரில் சென்ற போது ஈரான் மந்திரி சுட்டுக்கொலை

உலகச் செய்திகள்!  Safdar-Rahmat-1110Abadi

ஈரான் நாட்டில் தொழில்துறை துணை மந்திரியாக இருந்தவர் சப்தார் ரஹ்மத் அபாடி. இவர் நேற்று இரவு தலைநகர் டெஹ்ரானில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் துப்பாக்கியால் அவரை சுட்டுக்கொன்றான். அதில் அவரது தலை, மார்பில் குண்டுகள் துளைக்க அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

உடனே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மந்திரி பயணம் செய்த காருக்குள் 2 குண்டுகளை கண்டெடுத்தனர். மந்திரியுடன் காரில் சென்ற நபரே வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 12, 2013 6:31 pm

உலகச் செய்திகள்!  73LB1mrcS6mD8lXcEKEN+Screen+shot+2013-11-05+at+10.03.44+AM
-
கன்னித்தன்மை ஏலம் அயல்நாட்டில் சகஜமான ஒன்றாகி
விட்டது...!
-
ஏற்கனவே இம்மாதிரி வந்த செய்திகள்:
-
For example, 22-year-old American Natalie Dylan
has netted a $3.7 million offer in 2009 and
an Italian model was selling hers for 1m Euros in 2008.
This 18-year-old girl Lera is making headlines in Russia
right now after she posted these....
-
உலகச் செய்திகள்!  UBI3ovrGTde7cOOZW2QM+lera_01
Read more at http://acidcow.com/girls/13578-russian-girl-wants-to-sell-her-virginity-for-5000.html#50o2eX066kc9OOuB.99


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 12:25 am

கம்போடியாவில் சிவன் கோவில் அருகே உள்ள நிலம்: தாய்லாந்துக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

பாங்காக்: தாய்லாந்து-கம்போடியா நாட்டு எல்லையில் அமைந்துள்ள, 9ம் நூற்றாண்டை சேர்ந்த, சிவன் கோவில் அருகே உள்ள நிலம், கம்போடியா நாட்டுக்கே சொந்தமானது'என, சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கம்போடியா நாட்டில், அங்கோர்வாட் என்ற இடத்தில் மிகப்பெரிய இந்துக்கோவில் உள்ளது. இந்த கோவிலை, "யுனெஸ்கோ' அமைப்பு அங்கீகரித்துள்ளது. இதே போல, கம்போடியாவில், ஐந்து, இந்து கோவில்கள் உள்ளன. தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையில், ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த, சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இரு நாடுகளும் உரிமை கொண்டாடி சண்டையிட்டு கொண்டன. 1962ம் ஆண்டிலிருந்து, இந்த பிரச்னை நீடித்தது.

இதனால், இப்பகுதியிலிருந்து, ஆயிரக்கணக்கான மக்கள், பாதுகாப்பு கருதி வெளியேறி விட்டனர். இருநாட்டு ராணுவமும், கோவிலை சுற்றி பாதுகாப்பில் ஈடுபட்டன. இந்த வழக்கை, சர்வதேச நீதிமன்றம் விசாரித்தது. இரு நாட்டு ராணுவமும், இந்த கோவிலிருந்து வெளியேறும் படி, சர்வதேச நீதிமன்றம், கடந்த ஆண்டு, உத்தரவிட்டது. இதையடுத்து, ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். "இந்த சிவன் கோவில், கம்போடியாவுக்கு தான் சொந்தம்' என, சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை தாய்லாந்து ஏற்றுக்கொண்டது. ஆனால், சிவன் கோவிலையொட்டியுள்ள, 4.6 சதுர கி.மீ.,பரப்பளவுள்ள இடத்துக்கு, தாய்லாந்து தொடர்ந்து உரிமை கோரியது. இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய சர்வதேச நீதிமன்றம், "சர்ச்சைக்குரிய,4.6 சதுர கி.மீ., பரப்பளவுள்ள நிலமும், கம்போடியாவுக்கே சொந்தம்' என, உத்தரவிட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 12:26 am

புயலால் சிறை சேதம்: கைதிகள் தப்பி ஓட்டம்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில், புயலில் சேதமடைந்த சிறையிலிருந்து, கைதிகள் தப்பி ஓடி விட்டனர். பிலிப்பைன்ஸ் நாட்டில், சமீபத்தில் தாக்கிய பயங்கர புயலால், 10 ஆயிரம் பேர் இறந்து விட்டதாக அஞ்சப்படுகிறது. எதிர்பார்த்ததை விட, 350 கி.மீ., வேகத்தில் வீசிய புயல் காற்றால், லெய்டி என்ற மாகாணம், மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாகாண தலைநகர் டக்ளோபானில், உள்ள சிறையும், புயலால் சேதமடைந்தது. இதை பயன்படுத்தி, சிறையில் இருந்த, 600 கைதிகளில், பெரும்பாலானவர்கள் தப்பி ஓடி விட்டனர். தப்பிய கைதிகளை தடுக்கும் முயற்சியில், அங்கிருந்த போலீசார், துப்பாக்கியால் சுட்டும் பலனில்லை. புயல் நிவாரண பணியில் ராணுவத்தினரும், போலீசாரும் ஈடுபட்டுள்ளதால், தப்பிய கைதிகளை தேட முடியாத நிலை உள்ளது. "புயலால் முற்றிலும் சேதமடைந்துள்ள நகரில், தப்பிய கைதிகள் எங்கு சென்று தங்குவார்கள்; எதை சாப்பிடுவார்கள்'என, கவலைப்படுகிறார் சிறை அதிகாரி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 12:27 am

பீர் பாட்டிலில் லட்சுமி, விநாயகர் படம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில், பீர் பாட்டிலில், விநாயகர் மற்றும் லட்சுமி படங்கள் அச்சிடப்பட்டுள்ளதற்கு, அந்நாட்டின், இந்திய சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்து கடவுள்களின் படங்களை, பல்வேறு பொருட்களின் மீது, வெளிநாட்டு நிறுவனங்கள் அச்சிடுவது, அடிக்கடி சர்ச்சை ஏற்படுகிறது. ஏற்கனவே, ஆஸ்திரேலியாவில் நீச்சல் உடையில், லட்சுமி படம் அச்சிடப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, ஆஸ்திரேலியாவின், நியூசவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள, மதுபான நிறுவனம், பீர் பாட்டிலில், விநாயகர் மற்றும் லட்சுமி படங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது. இதற்கு, ஆஸ்திரேலிய இந்தியர் சங்க தலைவர், யாது சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

மலிவான விளம்பர நோக்கோடு, இந்து கடவுள்களின் படங்களை, பீர் கம்பெனி அச்சிட்டுள்ளது கண்டனத்துக்குரியது. இந்து கடவுள்களை கேலிக்குரிய பொருளாக சித்தரிப்பதை ஏற்க முடியாது. பீர் பாட்டிலில் அச்சிடப்பட்டுள்ள இந்த படங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு, யாது சிங் கூறினார். பீர் நிறுவன அதிகாரிகள் குறிப்பிடுகையில், "இந்திய உணவு, சுவை கொண்ட பானம் என்பதால் தான், அந்த நாட்டின் கடவுள்களின் பெயர்களை அச்சிட்டோம்; கடவுள்களை அவமதிக்கும் நோக்கோடு இதை வெளியிடவில்லை' என்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 12:29 am

தமிழர்களின் 6000 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிக்கும் ராணுவ நடவடிக்கையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் தர்ணா

இலங்கையில் நடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போருக்கு பிறகு தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியில் சிங்கள ராணுவத்தினர் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு தமிழர்கள் மிரட்டப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள தமிழர்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் அவர்கள் அபகரித்து வருகின்றனர்.

விடுதலைப்புலிகளின் நடமாட்டம் இல்லாத வேளையில், ராணுவத்தினர் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தோர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு, அந்நாட்டின் முதல் பிரதமராக யாழ்ப்பாணம் பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதை ராணுவத்தினர் நிறுத்தக்கோரி நூற்றுக்கணக்கானோர் யாழ்ப்பாணத்தில் 5 நாள் தர்ணா போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து வடக்கு மாகாண தமிழ் தேசிய கூட்டமைப்பின் கவுன்சிலர் எம்.கே. சிவாஜிலிங்கம் கூறியதாவது:-

யாழ்ப்பாணம் வடக்கு செக்டர் வலிகாமம் பகுதியில் உள்ள தமிழர்களின் 6000 ஏக்கர் நிலங்கள் அரசு கையகப்படுத்த உள்ளது. இதற்காக அப்பகுதிகளில் உள்ள வீடுகளை ராணுவம் இடித்து அழித்து வருகிறது. இப்பகுதியில் தமிழர்களின் நிலங்களை அத்துமீறி ஆக்கிரமிக்கும் ராணுவத்தின் நடவடிக்கையை நிறுத்த வேண்டி நாங்கள் இங்கு 5 நாள் தர்ணா போராட்டம் நடத்துகிறோம். நிலங்களுக்கு சொந்தக்காரர்கள் சிலரும் நீதிமன்றத்தில் இதுகுறித்து முன்னரே வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 81 1, 2, 3 ... 41 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக