புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Poll_c10காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Poll_m10காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Poll_c10 
49 Posts - 60%
heezulia
காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Poll_c10காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Poll_m10காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Poll_c10 
29 Posts - 36%
mohamed nizamudeen
காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Poll_c10காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Poll_m10காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Poll_c10காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Poll_m10காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Poll_c10காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Poll_m10காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Poll_c10 
50 Posts - 34%
mohamed nizamudeen
காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Poll_c10காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Poll_m10காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Poll_c10காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Poll_m10காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 26, 2014 5:30 pm

''ஜனவரி 21-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. அதில் 15 பேரைக் காப்பாற்றினார்கள். அப்போது சொல்லப்பட்ட முக்கிய காரணம்... கருணை மனுவைப் பரிசீலனை செய்வதில் காலதாமதம் என்பதுதான். அதில், 'இறந்துபோன ஒருவனை ஒருமுறைதான் எரிக்கிறார்கள். சிறைக்குள் வந்த ஒவ்வொரு நாளும் கைதி தகனம் செய்யப்படுகிறான். மனதால் எரிந்து போகிறான்’ என்று குறிப்பிட்டு இருந்தார்கள். இப்போது கொடுத்த தீர்ப்பின் சாராம்சமும் அதுதான்'' - உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானம் போன்ற பரபரப்பான சூழ்நிலையில் தீப்பொறிப் பறக்க பேச ஆரம்பித்தார் தோழர் தியாகு.

''உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?''

'' கடந்த ஜனவரி 21-ம் தேதி 15 பேரைத் தூக்கிலிருந்து விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தபோதே, இந்த மூவர் வழக்கிலும் இந்தத் தீர்ப்புதான் வர முடியும் என்று நினைத்து இருந்தோம். அதேபோல், பிப்ரவரி 18-ம் தேதி அதே அடிப்படையில் மூன்று பேருக்கான தூக்குத் தண்டனையைக் குறைத்து இருக்கிறார்கள். மத்திய அரசால் நீதிமன்றங்கள் ஏற்கும்படியான புதிய வாதங்கள் எதையும் வைக்க முடியவில்லை. 'இவர்கள் சிறையில் மகிழ்ச்சியாக இருந்தார்கள். பொது வாழ்க்கை வாழ்ந்தார்கள். நாடகம் நடித்தார்கள். ஆடல், பாடலுடன் இருந்தார்கள். ஓவியக் கண்காட்சி நடத்தினார்கள்’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். அதையெல்லாம் நீதிபதிகள் நிராகரித்துவிட்டார்கள். அந்தத் தீர்ப்பின் கடைசி பத்தியில் மாநில அரசுக்கும் ஒரு செய்தியை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். 'இவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆயுள் தண்டனை என்று சொல்வது ஒரு ஆயுட்கால தண்டனைதான்’ என்று நீதிபதிகளே சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். தண்டனையைக் குறைப்பதற்கும், விடுதலை செய்வதற்கும் சட்டத்தில் இடம் இருக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432, 433ஏ-ன்படி இதனை உரிய அரசு செய்ய முடியும் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அவர்கள் விடுதலை செய்யச்சொல்லி பரிந்துரையும் செய்யவில்லை. விடுதலை செய்யக் கூடாது என்று உத்தரவும் போடவில்லை.''

''சரி, நீதிபதிகள் இந்தத் தீர்ப்பில் ஏன் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்?''

''தண்டனைக் குறைப்புடன் தீர்ப்பு முடிந்து இருக்க வேண்டும் என்பதுதானே உங்கள் கேள்வி? நீதிபதிகளுக்கு அப்படிச் சொல்வதற்கு உரிமை இருக்கிறது. தங்களைச் சுற்றி நடப்பதை அவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சிலர், மரண தண்டனை வேண்டாம் என்று சொல்லிப் போராடுவதையும் அவர்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மரண தண்டனைக்கு பதிலாக சாகும்வரை ஜெயிலில் வைத்துக்கொள்ளலாம் என்றும் சொல்கிறார்கள். ஆனால், மரண தண்டனையும் அதுவும் ஒன்றுதான். சொல்லப்போனால் அதைவிட இது மிகவும் கொடுமையானது. சாகும் வரை கைதியை உள்ளேயே வைத்திருந்தால் எப்படி மறுவாழ்வு தர முடியும்? அதனால்தான் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. மாநில அரசு அதனால்தான் இதனை முன்னெடுக்கிறார்கள். இது முழுக்க முழுக்க சரியானது.''

''முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களையே வெளியே விட்டால், இந்த நாட்டில் என்ன சட்டம் - ஒழுங்கு இருக்கிறது என காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கொடி பிடிக்கிறார்களே?''

''நம் நாட்டின் தண்டனைச் சட்டத்தில் பிரதமர் கொலைக்கு என்று ஒரு தனி தண்டனையும் சாமானியன் கொலைக்கு என்று ஒரு தண்டனையுமா இருக்கிறது? சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதுவும் மனிதக் கொலைக் குற்றம்தான், அதுவும் மனிதக் கொலைக் குற்றம்தான். இது தடா சட்டத்தின்படி என்று வைத்துக்கொண்டாலும்கூட, தடா சட்டத்தைக் கொண்டுவந்ததும் காங்கிரஸ் அரசாங்கம்தான்; அதனை வேண்டாம் என்று கைவிட்டதும் காங்கிரஸ் அரசாங்கம்தான். கைதுசெய்யப்பட்ட மறுநாளே அவர்களை விடுதலை செய்யவில்லையே! எப்படி பிரதமர் கொலை என்பதற்காகப் பிடித்துக்கொண்டுபோய் சுட முடியாதோ... அதேபோல் பிரதமர் கொலை என்பதற்காக 23 ஆண்டுகளுக்குப் பின்னரும் விடுதலை செய்யக் கூடாது என்றெல்லாம் சொல்ல முடியாது. இப்போது திடீரென்று காங்கிரஸ்காரர்கள் குதிப்பதற்கு அர்த்தமே இல்ல.

இவர்களுடைய கோப்புகள் முழுவதும் இருந்தது மத்திய உள்துறை அமைச்சகத்தில். மத்திய உள்துறை அமைச்சகத்தில் யார் இருந்தார்கள்? காங்கிரஸ்காரர்கள்தானே? கால தாமதத்தால்தான் இவர்களுக்கு தண்டனை குறைக்கப்படுகிறது என்று தீர்ப்பிலேயே சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கால தாமதத்துக்கு யார் காரணம் என்று ராகுல் கூப்பிட்டு விசாரிக்கட்டும். யார் யாரின் உருவ பொம்மையையோ எரிக்கும் காங்கிரஸ்காரர்கள், ப.சிதம்பரம், சுசில் குமார் ஷிண்டே உருவ பொம்மையையும் எரிக்கட்டும்.

இங்கே இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். மகாத்மா காந்தி கொல்லப்பட்டது, 1948 ஜனவரி 30. அந்த வழக்கில் நாதுராம் கோட்சேவுக்கும் நாராயண் ஆப்தேவுக்கும் மரண தண்டனை கொடுக்கப்பட்டது. சவார்கர் விடுதலை செய்யப்பட்டார். கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சேவுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தார்கள். நாதுராம் கோட்சே 1948 நவம்பர் 20 சிறையில் அடைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு 1949 நவம்பர் 14 அன்று தூக்கில் போடப்பட்டார். கோபால் கோட்சே சிறையில் ஆயுள் கைதியாக இருந்தார். அவர், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று 1961-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரை விடுதலை செய்ய முடியாது என்று 1961 ஜனவரி 12-ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்படியானால் கோபால் கோட்சே சிறையில் தானே வாழ்நாள் முழுக்க இருந்திருக்க வேண்டும்.? அதுதான் இல்லை!

1964 அக்டோபர் மாதம் 13ம் தேதி கோபால் கோட்சே விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்தவர், அன்றைய மகாராஷ்டிரா காங்கிரஸ் முதலமைச்சர் வசந்தராவ் நாயக். அதாவது காந்தி கொலையாளியை விடுதலை செய்தது காங்கிரஸ் ஆளும் மாநில அரசாங்கம். கோபால் கோட்சே விடுதலையாகி வரும்போது பூனாவில் பெரிதாக வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதற்கு காந்தியவாதிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். காந்தி கொலைகாரர்களுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுக்கலாமா என்ற கேள்விகள் எழ, யார் அப்படி வரவேற்பு கொடுத்தார்கள் என்று கமிஷன் போட்டு விசாரித்தனர். கோபால் கோட்சேவுக்கு வரவேற்பு கொடுத்தது தவறு என்றுதான் குற்றம் சாட்டினார்களே தவிர, கோபால் கோட்சேவை விடுதலை செய்த காங்கிரஸ் முதலமைச்சர் வசந்தராவ் நாயக்கை யாரும் திட்டவில்லை. கொடிபிடித்துப் போராடவில்லை. அப்படி இருக்கும்போது, ராஜீவ் கொலை வழக்கில் மட்டும் 23 ஆண்டுகள் கழித்து, வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடக் கூடாது; விட்டால், அது தேச துரோகம்; நாட்டின் இறையாண்மை மீது தாக்குதல்... என்று சொல்வதில் என்ன நியாயம்? மகாத்மா காந்தி வழக்கில் ஒரு நீதி... ராஜீவ் காந்தி வழக்கில் மட்டும் வேறு நீதியா?'' என்ற கேள்வியுடன் முடிக்கிறார் தியாகு.

விகடன்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Feb 26, 2014 10:30 pm

கடந்த கால உண்மைகளை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 27, 2014 11:11 am

அப்படி போடு ....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக